Search This Blog

13.6.14

காவிரி நடுவர் மன்றம்-ஊன்றிப் படியுங்கள்! உண்மையைப் பரப்புங்கள்!!


ஊன்றிப் படியுங்கள்; உண்மையைப் பரப்புங்கள்!
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும்
எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு
  • மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
  • கழகம் உரிய போராட்டத்தில் ஈடுபடும்
தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறியும் அவற்றிற்குக் கட்டுப்பட மறுத்துவருகிறது கருநாடக மாநில அரசு - இந்த நிலையில், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? உரிய போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

 1. காவிரி நீர்ப் பிரச்சினை என்பது என்ன?

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையானாலும் உண்மையிலேயே பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாவது என்னவோ தமிழ்நாடுதான்.

1924 இல் போடப்பட்ட ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குத் தான்; அதற்கு மேல் ஒப்பந்தம் முறிந்துவிட்டது என்று குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் கூட சொன்னதுண்டு. அவரை எதிர்த்துக் கறுப்புக் கொடி காட்டி கைதானவர்கள் திராவிடர் கழகத்தினர் (9.11.1991).

கடந்த 40 ஆண்டுகாலமாகக் காவிரி நீர்ப் பிரச்சினை யில் தமிழ்நாடு கருநாடகத்தோடு போராட வேண்டியி ருந்தது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (19.12.1980) இதனை நாம் வலியுறுத்தினோம்.

காவிரி நீர்ப் பங்கீட்டுக்கென அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதிநீர்ப் பங்கீடு குறித்து அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதிப்பள்ளத்தாக்கு ஆணையம்  (TENNESSEE  Valley Authority TVA) போன்ற ஒன்றை நிரந்தரத் தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தவேண்டும் என்ற ஆலோசனையை அக்கூட்டத் தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வைத்தோம்.

என்றாலும், சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோதுதான், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முயற்சியாலும், மூன்று உறுப்பினர் களைக் கொண்ட காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது (2.6.1990).

நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பாக தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் அளிக்கப்படவேண்டும் என்று கூறியது (25.6.1991). அந்த இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது (1991, டிசம்பர் 11).

ஆனால், அதனைச் செயல்படுத்தவில்லை - கருநாடக அரசு. மாறாக கருநாடகத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பெருங்கலவரம் தூண்டப்பட்டது. 162 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 71 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர்; தமிழர்களின் 300 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகள் நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேறினர்.

கருநாடக முதலமைச்சராகவிருந்த பங்காரப்பா அவசரச் சட்டம் ஒன்றை இயற்றி காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பைச் செல்லாததாக்க முயன்றார். உச்சநீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

1995 இல் கருநாடகத்தில் பருவக் காற்று மழை மோச மான அளவில் பொய்த்துப் போனதால், தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை கருநாடகத்தால் ஏற்க முடியவில்லை என்று கூறப்பட்டது. 3000 கோடி கனஅடி தண்ணீராவது உடனே திறந்துவிடவேண்டும் என்று கோரி தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்சநீதிமன்றம், இது பற்றி தீர்ப்பாயத்தை அணுகுமாறு கூறியது. 

அக்கோரிக்கையைப் பரிசீலித்த தீர்ப்பாயம் 1100 கோடி கன அடிநீரை விடுவிக் கும்படி கருநாடக அரசுக்குக் கூறியது. அது இயலாது என்று கருநாடகா கூறியது. உச்சநீதிமன்றத்துக்குச் சென்ற தமிழ்நாடு தீர்ப்பாயத்தின் உத்தரவை கருநாடகா நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரியது. இம்முறை உச்ச நீதிமன்றம் அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவை  இவ்விவகாரத்தில் தலையிட்டு, தீர்வு ஒன்றைக் காணுமாறு கேட்டுக்கொண்டது. இரு மாநில முதல்வர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டிய பிரதமர்   கேட்டுக் கொண்டார்.  கருநாடக மாநிலமோ வெறும் 700 கோடி கன அடி நீரைத்தான் திறந்துவிட்டது.

காவிரி நதி அதிகார அமைப்பு உருவாக்கம்

தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், அதில் தவறுகள் நிறைந்து உள்ளன என்றே தொடர்ந்து கூறி வந்தது கர்நாடகம்.  1995-1996 இல் பிரதமரின் முடிவின்படி செயல்பட்டதைத் தவிர, தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை கருநாடக மாநிலம் எப்போதுமே நிறைவேற்றிய தில்லை. இந்த விவகாரத்தை மேலும் சிக்கல் நிறைந்ததாக ஆக்கியது எதுவென்றால், மழை பொய்த்துப் போகும் காலங்களில் நதி நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நடைமுறை எதனையும்  இந்த இடைக்காலத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று கூறியது.


தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக,  காவிரி நதி அதிகார அமைப்பு ஒன்றை உருவாக்க 1997 இல் மத்திய அரசு தீர்மானித்தது. இடைக்காலத் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லையென்றால், அணைகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதிகாரமும் அந்த அமைப்புக்கு அளிக்கப் பட்ட அதிகாரங்களுள் அடங்கும்.  இந்தப் புதிய திட்டத்தின் கீழ் இரண்டு புதிய அமைப்புகளை அரசு உருவாக்கியது. காவிரி நதி அதிகார அமைப்பு ஒன்று;  காவிரி கண்காணிப்புக் குழு மற்றொன்று. டில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த காவிரி நதி அதிகார அமைப்பில் பிரதமரும், கருநாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களின் முதலமைச்சர்களும் இருப்பார்கள். ஆனால் காவிரி கண்காணிப்புக் குழு என்பது பொறி யாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இதர அலுவ லர்களைக் கொண்ட நிபுணர் குழுவேயாகும். களத்தில் நிலவும் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அரசுக்கு இந்த குழு அறிக்கை அளிக்கும்.


2002 இல் வெடித்த கலவரமும், நடத்தப்பட்ட நாடகமும்

2002 ஆம் ஆண்டில் மறுபடியும் ஒருமுறை கருநாடகத் திலும், தமிழ்நாட்டிலும்  பருவமழை பொய்த்துப் போன போது, இரண்டு மாநிலங்களிலும் இருந்த அணைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவி லேயே நீர் இருந்தது. இரு மாநிலங்களிலும் கோபதாபங்கள் வெடித்தன. மழை பொய்த்துப் போகும் காலங்களில் உள்ள குறைந்த அளவு நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது இடைக்காலத் தீர்ப்பில் குறிப்பாகச் சொல்லப்பட வில்லை. தனக்கு சேர வேண்டிய தண்ணீரை விடவேண் டும் என்று தமிழ்நாடு கோரியது. தனக்கே போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தண்ணீர் எதனையும் திறந்துவிட முடியாது என்று கருநாடகா மறுத்தது.

காவிரி நதி அதிகார அமைப்பு கூட்டமும்- உச்சநீதிமன்ற ஆணையும்

காவிரி நதி அதிகார அமைப்பின் கூட்டம் ஆகஸ்ட் 27 அன்று கூட்டப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி  ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய் தார். காவிரி நதி அதிகார அமைப்பு வேறு விதமாக ஆணையிட்டால் ஒழிய, ஒவ்வொரு நாளும் 125 கோடி கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடும்படி கரு நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற ஆணை யின் பக்கம் இப்போது கவனம் திரும்பியது. அவ்வாறு தண்ணீரைவிடத் தொடங்கிய கருநாடகா காவிரி நதி அதிகார அமைப்பின் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று கோரியது. செப்டம்பர் 8ஆம் தேதி கூட்டப்பட்ட இக் கூட்டத்திலும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, போதிய முன்னறிவிப்பு அளிக்கவில்லை என்று காரணம் கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். என்றாலும் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து ஓர் அமைச்சர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.  உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை யில் குறிப்பிட்டிருந்த 125 கோடி கனஅடி நீர் என்பதை காவிரி நதி அதிகார அமைப்பு 80 கோடி கனஅடி நீர் என்று குறைத்தது.

என்றாலும், இந்த முறை கருநாடகா காவிரி நதி அதிகார அமைப்பின் ஆணையை வெளிப்படையாக எதிர்த்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரே திறந்து விடமுடியாது என்று  மறுத்துவிட்டது. காவிரி பாயும் மாவட்டங்களில் பெரும் அளவிலான போராட்டங்கள் வெடித்ததே இதன் காரணம். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மறுபடியும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அப்போது ஒரு சில நாட் களுக்கு கருநாடகா தண்ணீரைத் திறந்துவிட்டது. என் றாலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு விவசாயி நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் போராட்டம் ஒரு அபாயமான நிலைக்குத் திரும்பியதால்,  செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டது.

மத்திய அரசு இப்போது தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடும்படி கேட்டது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அணைகளில் உள்ள நீர் நிலை மற்றும் திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு பற்றிய விவரங்களை காவிரி நதி அதிகார அமைப்பிடமிருந்து கேட்டது. கருநாடகத்தில் உள்ள அணைகளை இந்த அமைப்பு பார்வையிட்ட போதி லும்,  தமிழ் நாட்டிலுள்ள அணைகளைப் பார்வையிட இந்த அமைப்புக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு செப்டம்பர் 23 அன்று ஒரேயடியாக மறுத்துவிட்டது. தமிழ்நாடு முதல்வரின் இந்த நடவடிக்கையுடன், முன்னர் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்ததும், கூட்டத் தைப் புறக்கணித்ததும் சேர்ந்து கொண்டு, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கடுமையான விமர் சனங்கள் எழுந்தன. காவிரி நதி அதிகார அமைப்புடன் ஒத்துழைக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று ஆணையிட்டது; தமிழ்நாடும் அதற்குக் கட்டுப்பட்டது.
இரு மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் - போராட்டங் கள் ஒருபுறம் - உச்சநீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுவது, இன் னொரு புறம் என்று பிரச்சினையின் நெருப்பு ஆறாம லேயே கனன்று கொண்டிருந்தன என்றாலும், தமிழ்நாட்டு விவசாயம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
ஒரு வழியாக காவிரி நடுவர்  மன்றம்தான் இறுதித் தீர்ப்பை அளித்தது (2007, பிப்ரவரி 5).


2007 இல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அந்தத் தீர்ப்பு அரசிதழில் பதிவு செய்யப்பட ஆறு ஆண்டுகள் தேவைப் பட்டன. அதுவும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த பிறகே அது விதித்த கெடுவின் கடைசி நாளன்று (20.2.2013) அரசிதழில் பதிவு செய்யப்பட்டது.

2. இறுதித் தீர்ப்பின் அம்சங்கள் என்ன?

காவிரி நதியில் இருந்து கிடைக்கும் மொத்த நீர் அளவு 740 டிஎம்சி ஆகும். அதில் கேரளத்துக்கு 30 டிஎம்சி, கர் நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என மொத்தம் 726 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும்.

கையிருப்பு நீர் அளவு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 10 டிஎம்சியும், கடலில் கலக்கும்போது தவிர்க்க முடியாத வகையில் செல்லும் உபரி நீருக்காக 4 டிஎம்சி நீரும் ஒதுக்க வேண்டும்.

கேரளம்: கேரளத்துக்கு ஒதுக்கப்படும் 30 டிஎம்சி நீரில் கபினி துணை ஆற்றில் 21 டிஎம்சி, பவானி துணை ஆற்றில் 6 டிஎம்சி, பம்பாறு துணை ஆற்றில் 3 டிஎம்சி செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

காவிரி நதியில் இடர்ப்பாடு காலங்களில் நீர்வரத்து குறைவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப நீரின் அளவை கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே குறைத்துக் கொள்ளலாம்.

நீர் அளவைக் கணக்கிடும் பகுதி: கேரளம்-கர்நாட கம் இடையே ஓடும் நீரை கபினி நீர்த்தேக்கத்தை வைத்தும், கேரளம்- தமிழ்நாடு இடையே ஓடும் நீரை பவானி துணை ஆறு பகுதியில் உள்ள சாவடியூர் நீர் அளவை மய்யத்தை வைத்தும், பம்பாறு துணை ஆறு பகுதியில் அமராவதி நீர்த் தேக்கத்தை வைத்தும் நீர் அளவை கணக்கிட வேண்டும்.

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே ஓடும் நீரை, பில்லிகுண்டுலு நீர் அளவை மய்யம் அல்லது இரு மாநில எல்லைப் பகுதியில் வேறு ஏதேனும் பொதுவான மய் யத்தை வைத்து கணக்கிட வேண்டும். தமிழ்நாடு-புதுச்சேரி இடையே ஓடும் நீரை கணக்கிட ஏற்கெனவே ஏழு பகுதிகளில் மய்யங்கள் உள்ளன.
மாதாந்திர அளவு: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிடவேண்டிய நீரின் அளவு (அடைப்புக் குறியில் டிஎம்சி அளவில்):
ஜூன் (10), ஜூலை (34), ஆகஸ்ட் (50), செப்டம்பர் (40), அக்டோபர் (22), நவம்பர் (15), டிசம்பர் (8), ஜனவரி (3), பிப்ரவரி (2.5), மார்ச் (2.5), ஏப்ரல் (2.5), மே (2.5) என்றவாறு காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரில் இருந்து 182 டிஎம்சி நீர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட 10 டிஎம்சி நீர் ஆகியவற்றை சேர்த்து மேற்கண்ட மொத்த நீரின் அளவான 192 டிஎம்சி நீர் கணக்கிடப்படுகிறது.

மாதந்தோறும் திறந்து விடப்படும் நீரின் அளவை 10 நாள்கள் இடைவெளி விட்டு தமிழ்நாட்டுக்கு ஒழுங்கு முறை அமைப்பு திறந்துவிட வேண்டும்.
நீர் சரியாக திறந்து விடப்படுகிறதா என்பதை மத்திய நீர் ஆணைய உதவியுடன் அய்ந்து ஆண்டுகள்வரை (புதிதாக உருவாக்கப்படவிருக்கும்) காவிரி ஒழுங்குமுறை ஆணை யம் கண்காணிக்க வேண்டும் (CMB).
தண்ணீரை திறந்து விடுவதில், நீர் ஆதார மாநிலம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நீர் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் தேவைக்காக காவிரி நீர் தேக்கி வைக்கப்படும் நிலை ஏற்பட நேர்ந்தால், அதனால் நீர் பெறும் மாநிலங்களின் தேவை பாதிக்கப்படக்கூடாது.


காவிரியில் இருந்து திறக்கப்படும் நீர் அல்லது நீர்த்தேக் கம் அல்லது அணையில் இருந்து திறக்கப்படும் நீரில் இருந்து குடிநீருக்காகவும் நகராட்சி தண்ணீர் தேவைக் காகவும் 20 சதவீதத்தை பயன்படுத்தலாம். தொழிற்சாலை தேவைக்காக 2.5 சதவீத நதி நீரை பயன்படுத்தலாம். ஒதுக்கப்பட்ட நீரை மாநிலங்கள் பயன்படுத்த தவறினாலோ அல்லது பெற முடியாமல் போனாலோ அதை, அடுத்து வரும் நீர் ஆண்டில் கோர முடியாது.
பருவ காலம் எவை?: காவிரி நதியிலிருந்து கிடைக்கும் 740 டிஎம்சி நீர் அளவைக் கொண்டு சாதாரண பருவ ஆண்டு என்பதை கணக்கிட வேண்டும்.
தண்ணீர் பருவ ஆண்டு என்பதை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி முடிவடையும் நாள் வரை கணக்கிட வேண்டும்.

நீர்ப்பாசன காலம் என்பதை ஜூன் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வரை கணக்கிட வேண்டும்.

காவிரி நதி என்பதை மாநிலங்களில் ஓடும் காவிரி நீரையும், காவிரியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கலக் கும் நீரையும் சேர்த்து கருத வேண்டும் என்று அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட் டுக்கு காவிரி நதியில் இருந்து மொத்தம் 419 டிஎம்சி நீர் பங்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதில் 192 டிஎம்சி நீரைத்தான் கர்நாடகம் தமிழ்நாட் டுக்கு திறந்துவிட வேண்டும். மீதமுள்ள 227 டிஎம்சி நீரில், தமிழக எல்லைக்குள் ஓடும் காவிரியில் தானாகச் சென்று கொண்டிருக்கும் தண்ணீரும், நொய்யல், பவானி, கொள் ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து காவிரியில் கலக்கும் தண்ணீரும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) ஒன்றை அமைக்கவேண்டும். அதன் கட்டுப்பாட்டில் கருநாடகத்தில் கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளையும் தமிழ்நாட்டின் மேட்டூர், பவானிசாகர், அமராவதி ஆகிய மூன்று அணை களையும், கேரளத்தின் பாணாசுர சாகர் அணையையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடப்படவேண்டும்.
பத்து நாட்களுக்கொருமுறை  இதனை ஆய்வு செய்யவேண்டும். மேலாண்மை வாரியம் தனது பணிகளை நிறைவேற்றிட காவிரி ஒழுங்கு முறைக் குழுவை (Cauvery Regulatory Commitee)  ஏற்படுத்திட வேண்டும் என்று நடுவர் மன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

அத்தோடு நிற்கவில்லை காவிரி நடுவர் மன்றம். மேலும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

1991 இல் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புப்படி தண்ணீரைப் பெற்றிட ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டியி ருந்தது என்பதை ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. ஒவ்வொரு முறையும் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, கருநாடகம் தட்டிக் கழித்தது என்பதையும் அறிய முடிகிறது. எனவே, இப்பொழுது அளிக்கும் தீர்ப்பைச் செயல்படுத்த உருப்படியான செயல்முறைகளை உருவாக் காமல் போனால், இத்தீர்ப்பு வெற்றுக் காகிதமாக இருக் கும் என்று (நடுவர் மன்ற தீர்ப்பின் தீர்ப்பு அறிக்கை தொகுதி-5, பக்கம் 216) கூறியுள்ளது. இதன்மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது நடுவர் மன்றம்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் இருப்பதால்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கக் கூடாது என்று இப்பொழுது கருநாடகத்தின் தரப்பில் முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் கூறுவது திட்டமிட்ட திசை திருப்பும் வேலை ஆகும்.

தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்டு விட்டால், அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணை யானது என்று மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6(2) கூறுகிறது. கிருஷ்ணா ஆற்று நீர்ப் பகிர்வுக் குறித்து எழுந்த சட்ட சிக்கலின் விளைவாக 2002 ஆம் ஆண்டுத் தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6 இல் இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி உருவாக்கப்பட்டதே 6(2) என்ற உட்பிரிவாகும். இது 6.8.2002 முதல் அமலுக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்திற்கு இணையான தீர்ப்பு வந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படக்கூடாது என்பது புரியாத்தனம் அல்லது அடாவடித்தனம் ஆகும்.
கெசட்டில் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களே முடிவுக்கு வந்து புதிய சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் 262 ஆம் பிரிவின் நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங் களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Interstate Water Dispute Act) (1956) 33 of (1956) என் பதில் உள்ள 11 ஆவது செக்ஷன் நதிநீர்ப் பங்கீடு வழக்கு களை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற உச்ச நீதிமன்றத்திற்கே கூட அதிகாரம் கிடையாது. உச்சநீதிமன் றம் ஏழு முறை பல தீர்ப்புகளையும், ஆணைகளையும் பிறப்பித்தும், அவற்றுள் எதையும் செயல்படுத்தவில்லை கருநாடகா.

4. தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

1892 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கும், மைசூருக்கும் (கருநாடகத்துக்கும்) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி காவிரி, கபினி, ஹேமாவதி உள்ளிட்ட முக்கிய நதிகளில் மதராஸ் மாநில ஆட்சியாளர்களின் அனுமதி யின்றி புதிதாகப் பாசனத்திற்கான நீர்த்தேக்கங்களையோ, அணைகளையோ கட்டக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கருநாடகாவில் கபினி, ஹேமாவதி நதிகளில் எந்தவித முன் அனுமதியுமின்றி சொந்த செலவில் அணை களைக் கட்டத் தொடங்கின. அதேநேரத்தில் 1971 இல் கரு நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த போது சட்ட விரோதமாக அணைகளைக் கட்டிக்கொள்ள ரூபாய் எட்டரைக் கோடியை  மத்திய அரசு கொடுத்து உதவியது.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி கருநாடக மாநிலத்தில் விவசாயப் பாசனப் பரப்பை 10 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்குமேல் விரிவுபடுத்தக் கூடாது. ஆனால், 19 லட்சம் ஏக்கர் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக கருநாடக அமைச்சரே அறிவித்தார். இது அல்லாமல் மேலும் 6 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவுப்படுத்திட ரூ.5,500 கோடியைக் கருநாடக அரசு ஒதுக்கியது.  ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? மேட்டூர் அணை உருவாக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 28 லட்சம் ஏக்கராகும். 2000 ஆம் ஆண்டில் அது பதினேழரை லட்சம் ஏக்கராகக் குறைந்தது. 2005 இல் 16 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர். இந்த நிலை தொடருமேயானால், 30 விழுக்காடு பாசனப் பரப்பு காணாமற் போய்விடும் என்கின்றனர் வல்லுநர்கள். இப் பொழுது வேகவேகமாக வயல்கள் எல்லாம் வீட்டுமனை களாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 34 சதவிகிதம் காவிரி சமவெளியில் தான் உள்ளது. ஆனால், கருநாடகமோ 18 சதவிகித நிலப்பரப்பில்தான் காவிரியை நம்பி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், காவிரி நீர் யாருக்கு அதிகம் பயன்படவேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

5. தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டாமா?

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்துள்ள நிலையில், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்கில் முதலமைச்சர் பதில் சொல்லுவது சரியல்ல.

இந்தப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியான கருத்தினைக் கொண்டுள்ளதால், தனியாக அதற்கென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் பதில் சொல்லுவது நியாயந்தானா?

தமிழ்நாட்டைவிட அனைத்துக் கட்சிகளும் கருநாடகத் தில்தான் சற்றும் சுருதி பேதம் இல்லாமல் ஓங்கி ஒரு குரல் கொடுத்து நிற்கின்றனர் என்றாலும், அம்மாநில முதலமைச் சர்  அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத் தவறவில்லை.

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா டில்லி செல்லுகிறார். கருநாடகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறார் - அவ்வமைச்சர்கள் புடைசூழ பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கின்றனர். எக்காரணத்தை முன்னிட்டும் காவிரி மேலாண்மை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறார். அப்படி அமைக்கும் உச்தேசம் ஏதும் இப்பொழுது இல்லை என்று பிரதமர் கூறியதாகச் சொல்கிறார்.

பிரதமர் இந்தக் கருத்தைச் சொல்லுவதற்கு முன்ன தாகவே கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார். அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் கூறுகிறார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடும், இரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா  மட்டுமல்ல, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான வீரப்ப மொய்லி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்) எல்லோரும் ஒரே குரலில் பேசுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் காவிரி நீர்ப் பிரச்சினைபற்றி அ.இ.அ.தி.மு.க. மக்களவைத் தலைவர் தம்பிதுரை அங்கே பேசும்பொழுது, கருநாடகத்தைச் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களும், அமைச்சர்களும் உள்பட எதிர்க்குரல் கொடுக்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் என்றால் எல்லா மாநிலங்க ளுக்கும் பொதுவானவர்கள் என்பதுதானே சட்டத்தின் நிலை? ஆனால், கருநாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச் சர்கள் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து கருநாடகத் துக்கு மட்டுமே மத்திய அமைச்சர்கள் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். இதில் தேசியம் எங்கு வாழ்கிறது?


நியாயமற்ற கோரிக்கை என்றாலும், அவர்கள் மாநிலப் பிரச்சினை என்று வரும்பொழுது கட்சி வண்ணங்களை எறிந்து, ஒரே எண்ணமுடையவர்களாக ஒன்று சேர்கின்றனர்.

அந்த நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கவேண்டியது தமிழக முதலமைச்சரின் கடமையல்லவா? அதற்கு மாறாக ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் சூடான சொற்களால் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது சரியானதுதானா? பிரச்சினையின்மீதுள்ள முக்கியத்துவத்தைவிட எதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது தமிழ்நாட்டுக்குக் கேடாக முடியும்; எனவே, இதில் முதலமைச்சர் இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.


நியாயத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படை யிலும், நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையிலும் நாம் வலு வாக இருக்கும்பொழுது முதலமைச்சரின் அணுகுமுறை யால் கெட்டது என்ற கெட்ட பெயர் வாங்கவேண்டாம் என்பதே நமது எதிர்பார்ப்பு.

6. மத்திய அரசின் நிலைப்பாடுகளுக்குக் காரணம் அரசியல்தானா?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்பொழுது கருநாடக மாநிலத்திற்குச் சாதகமான வகையில் நடந்து கொண்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு எந்தவித பலமும் இல்லாத நிலையில், வாய்ப்புள்ள மாநிலத்தையாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டாமா என்பது காங்கிரசின் அணுகுமுறையாக இருந்தது. அதே நிலையில்தான் பி.ஜே.பி.யும் இப்பொழுது இருக்கிறது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி.,க்குச் செல்வாக்கு இல்லை. கருநாடகத்தைப் பொறுத்தவரை செல்வாக்குண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அந்தச் செல்வாக்கை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. ஆட்சி நினைக்கிறது என்பதுதானே உண்மை. இது அரசியல் பார்வை அல்லவா? மக்கள் நலம் பொதுமை நலம்; சட்டத்தின் நிலைப் பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் பார்வை ஆதிக்கம் செலுத்துவது சரியானதுதானா?


பிரபல சட்ட நிபுணர் முன்னாள் கூடுதல் அட்டார்னி  ஜெனரல் திரு. மோகன் பராசரன் அவர்கள் கருத்து கூறுகையில்: வழக்கு நிலுவையில் இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதும் தவறு. காவிரி நடுவர் மன்ற உத்தரவுக்கு இதுவரை எந்தத் தடையும் பிறப்பிக்கப் படவில்லை. எனவே, அந்த உத்தரவு இப்போதும் பொருந்தும். வாக்கு வங்கி அரசியலுக்காக கர்நாடகா வேண்டுமென்றே இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறது.
புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு சட்டப்படி நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளது.

7. கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

காவிரி டெல்டா பகுதிகளில் தீவிரப் சுற்றுப்பயணப் பிரச்சாரம் மேற்கொண்டு அடுத்தகட்டப் போராட்டங்களில் ஈடுபடுவது என்று திராவிடர் கழகம் முடிவு செய்கிறது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கழகத் தோழர்களே, விவசாயப் பெருங்குடி மக்களே, தயாராவீர்! தயாராவீர்!!
-----------------கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம். சென்னை  13.6.2014

24 comments:

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு

2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி

3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்

4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.

5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.

6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்

7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்

8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது

9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்

10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்

11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி

12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது

13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு

14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க

15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்

16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்

17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்

18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்

19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்

20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி

21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே

22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது

23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது

24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு

25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு

- குடிஅரசு 23.2.1930

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTNEPXz

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை - அறியாமை -இவற்றின் விளைவாக ஏற்படுகிற சுடுகாட்டு அமைதியை விட, சுய சிந்தனை - பகுத்தறிவு - இவற்றின் விளைவாக ஏற்படுகிற கடும் புயலை யும், கோடை இடியையும்தான் நான் விரும்புகிறேன்.

-இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTXnwpF

தமிழ் ஓவியா said...


பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?


ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் - ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார்; (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்?) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்; பொறாமை அடைந்த காயீன் ஆபேலைக் கொன்று விட்டான்.

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்; பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன்.

காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார், இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர், அவர்களின் பிள்ளைகள் இருவர்; ஆக மொத்தம் நாலே பேர்; அதிலும் ஒருவன் இறந்து விட்டான்; பாக்கி இருப்பது மூன்றே பேர்; அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: ச.ராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZTeraAY

தமிழ் ஓவியா said...


இந்துமதம் - சங்கரமடங்கள் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண்


ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவது இல்லை.

ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்கு கள், அனுஷ்டானங்கள். கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன.

படு பயங்கரமான சிக்கலாகக் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தை பிணைத்து வைத் திருப்பது. அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொரு ளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது இதுவே ஆகும்.

இந்தநாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து பட்டுக் கிடக்கும் எண்ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின் றன? பச்சையான சுரண்டல்களாக வும் அல்லவா இருக்கின்றன?

இந்து மதத்தின் உச்சக்கட்ட உறைவிடங்களான சங்கர பீடங் களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர்களில் குறைந்த பட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்கவில்லையா? இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன்னால் அவமானத்துக் குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள் ளத்தக்கது. நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்.

நமது சமுதாயம் சீரழிந்து கொண் டிருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண் டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதை சுத்தப் படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZTyauQb

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாத வனைத் தொடுவதும் அவனை மோட்சத் திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா என்று கேட்கிறேன். ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும் கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும், செத்தபிறகு அனுபவிப்பதான மோட்சமும் வேண்டுமா என்று கேட்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZU6yKLJ

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி. அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியவில்லையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.

குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரை யாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUFejKP

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZVD44QV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? விநாயகரின் சிறப்புத் தலங்கள்பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகர் முதற் கடவுளாக இருப்பார். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு என்றே அமைந்த சிறப்பு வாய்ந்த தலங்கள் சில தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

கற்பக விநாயகர் கோயில் - பிள்ளையார் பட்டி, பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம் பயம், பொல்லாப்பிள்ளை யார் - திருநாரையூர், முக்குறுணி விநாயகர் - மதுரை, ராஜகணபதி - சேலம், ஈச்சநாரி விநாயகர் - பொள்ளாச்சி, மணக்குள விநாயகர் - புதுச்சேரி, இரட்டை விநாயகர் - தாடிக்கொம்பு, லட்சுமி கணபதி - குன்றக்குடி முருகன் கோவில் என் கிறது ஓர் ஆன்மீக இதழ். கடவுள் உருவமற்றவர் - வழி பாட்டுக்காகத்தான் உருவச்சிலைகள் என்று சமாதானம் கூறும் ஆன்மீகச் சிரோன்மணிகள், இப்படி சில ஊர்களின் பெயர்களைச் சொல்லி அந்த ஊர்களில் உள்ள உருவச்சிலைதான் (கடவுள்தான்) பிரசித்தம் என்பது முரண்பாடு அல்லவா?

Read more: http://viduthalai.in/e-paper/82066.html#ixzz34ZVQR0Lm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!
சாமி கும்பிடுவதற்காக வந்த 4 பேர் பலி

தலைவாசல், ஜூன்.13- சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அம்பாயிர அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடு வதற்காக கோவை பி.என்.புதூரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மாதேஸ் என்பவர் தனது உறவினர்களுடன் 2 வேன் களில் நேற்று ஆறகளூர் வந்தார்.

காலையில் அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து அங்கேயே சாப் பிட்டனர். இவர்களுடன் வந்த ராஜி என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13), சேகர் என்பவரின் மகன் செந்தில் (16) ஆகிய 2 பேரும் பி.என்.புதூரில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ஆம் வகுப்பும், பிளஸ் 1-ம் படித்து வந் தனர். முருகன் என்ப வரின் மகன் விவேக் (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். மதியம் 2 மணியளவில் இவர்கள் 3 பேரும் விளை யாடுவதற்காக வசிஷ்ட நதிக்கு சென்றனர்.

கடந்த சில நாட் களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து ஏற் பட்டு ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதைப் பார்த்த 3 பேருக்கும் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார் கள். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரி யாததால் அவர்கள் தண் ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடி னார்கள். இதைப்பார்த்த செந்திலின் தந்தை சேகர் தண்ணீரில் இறங்கி அவர் களை காப்பாற்ற முயன் றார். ஆனால், அவரால் முடியவில்லை. மாறாக அவரும் ஆழமான பகு திக்கு சென்றதால் தண் ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல் பரிசோத னைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82065.html#ixzz34ZVYzpXA

தமிழ் ஓவியா said...


உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண் பாலியல் வன்முறை

காவல் ஆய்வாளர் கைது இருவர் தலைமறைவு

லக்னோ,ஜுன்13-_- உத்தரப்பிரதேசத்தில் நள்ளிரவில் கணவனை மீட்கச் சென்ற பெண் காவல்நிலைய வளாகத் திலேயே காவல்துறை யினரால் பாலியல் வன் முறைக்கு ஆளானார்.

ஹமீர்பூர் மாவட் டத்தில் சுமெர்பூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறி ஒருவர் கடந்த 9ஆம் தேதி அன்று விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட் டார். காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட கணவன் மறுநாளிலும் இரவுவரையிலும் எதிர் பார்த்து காத்திருந்து வீடு திரும்பாததால், கணவர் மீது உள்ள வழக்கு குறித்து அறிந்துகொள்ளவும், தன் கணவரை மீட்பதற்காகவும் காவல்நிலையத்துக்கு அவரது மனைவி சென் றுள்ளார். 10ஆம் தேதி அன்று நள்ளிரவில் சுமார் 20 நிமிடங்களாகக் காக்கவைக்கப்பட்டார். அதன்பிறகு காவல்நிலைய வளாகத்திலேயே காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் காவ லர்கள் கூட்டாக சேர்ந்து அந்த பெண்ணை பாலி யல் வன்முறைக்கு ஆளாக் கினார்கள். இரண்டு மணிநேர பாலியல் வன் முறைக்குப்பிறகு, அதி காலை மூன்று மணிவரை யிலும் அவர்களுக்கு இரையாகி, பின்னர் தன் கணவரை மீட்டு சென் றுள்ளார். அவருடைய கணவர்மீது வழக்கு எது வும் பதிவு செய்யப்பட வில்லை. பாலியல் வன் முறை குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், சொன்னால் அவர் கணவர்மீது வழக்குபதிவு செய்வதாகவும் மிரட்டி உள்ளனர்.

ஆனால், அந்தப்பெண் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத் தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரும் தலை மறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரேந்திர ஷேகர் கூறும் போது, சுமர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்முறைகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தப்பி ஓடியுள்ள மற்றவர்களையும் பிடிப் பதற்கு அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/82063.html#ixzz34ZVrSKsT

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.
(விடுதலை,5.4.1961)

Read more: http://viduthalai.in/page-2/82067.html#ixzz34ZW3Glge

தமிழ் ஓவியா said...


கருநாடகத்தில் ஒரு சேரன்மாதேவி!உடுப்பி கிருஷ்ண மடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பிடும் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு சாப்பிடும் இடமும் இடம் பெறுகின்றன. இதற்குப் பங்கி பேதா என்று பெயராம்!

இந்தப் பிறவி வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளதானது - பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இதுகுறித்து அக்கட்சியின் கருநாடக மாநில செயலாளர் ஜி.வி. ராம (ரெட்டி) கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யவும் வேண்டும் - மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர் கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பிராமணரல்லாத வர்கள் படுத்தும் புரளும் மடஸ்நானா என்னும் இழிவான நடைமுறைக்கு கருநாடக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களாவது, சூத்திரர்களாவது - எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? அதெல்லாம் முடிந்து பல காலம் ஆகி விட்டது என்று பேசும் மேதாவிகள் நாட்டில் உண்டு.

அத்தகையவர்கள் இந்த யதார்த்த நடப்புகளை கவனிக்க வேண்டும்; கவலைப்படுவதோடு நின்று விடக்கூடாது; அவற்றின்மீது ஆழமான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த போதே 1924இல் சேரன் மாதேவியில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத மாணவர்களையும் தனித் தனியாக அமர வைத்து உணவுப் பரிமாறப்பட்டதை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினார்.

டாக்டர் பி. வரதராஜலு நாயுடு திருவிக போன்றவர்கள் தந்தை பெரியார் தலைமையில் அந்த வேறுபாட்டை ஒதுக்கவில்லையா? கடைசியில் அந்தக் குருகுலமே இழுத்து மூடப்பட்டதே.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மன்னர் கல்லூரியில்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று மாணவர்கள் மத்தியில் வேறுபாடு காட்டப் பட்டதை ஒழித்தது நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்த - அன்றைய மாவட்டக் கழகத் தலைவர் (District Board president)சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அல்லவா!

வைக்கம் கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை கடை வீதிகளில் இலை ஒன்று அரையணாவுக்கு விற்கப்பட்டதுண்டு.

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிட்டால் வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கிய மாகி விடும் என்றும் சந்தானம் இல்லாதவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு)ச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாதாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, ரூ.500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி, பூசை செய்து அந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாவம் போய் விடும் என்று நம்பும் படியாக செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல (குடிஅரசு 9.8.1925).

என்று தந்தை பெரியார் குடிஅரசில் குறிப்பிட் டிருந்தது உண்மைதான் என்றாலும், இன்று அத்தகைய காட்சிகள் தமிழ்நாட்டில் காண்பது அரிது - அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் இயக்கம் விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டது.

கருநாடக மாநிலத்தில் அந்தக் கொடுமைகள் இன்றும் தலை விரித்தாடுகின்றன என்றால் அது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா பகுத்தறிவு சிந்தனையாளர் சாம்ராட் நகருக்குச் சென்று வந்தால் அந்த முதலமைச்சர் பதவி விலகுவார் என்று நம்பிக்கை உண்டு. அதனை முறியடித்த முதல் அமைச்சர்தான் சித்தாராமையா.

இந்த நிலையில் பங்கி பேதாக்களையும் மடஸ் நானாக்களையும் அவர் கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம் - முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/82068.html#ixzz34ZWC1LKB

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

பார்ப்பனத்தனம்

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள். ஆனால் இன்னம்பர் என்ற திருத்தலத்தில் இறைவனே எழுத்தறிவிக்கிறான். திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் எண்ணும் எழுத்தும் கொல் ஆனாய் போற்றி என்று ஈசனை போற்றுகிறார்.

தமிழ் இலக்கணத்தில் சிறப்புற்று திகழ்ந்தவர் குறுமுனி அகத்தியர். ஆனால் அந்த அகத்தியருக்கே தமிழ் இலக்கணத்தை எடுத் துரைத்தவர் திரு இன்னம் பரில் எழுந்தருளியிருக்கும் ஈசனாம்.

அகத்தியர் கதை இருக் கட்டும்; அந்த அகத்திய ருக்கே தமிழ் இலக்க ணத்தைச் சொல்லிக் கொடுத்தவர். இன்னம் பரில் வீற்றிருக்கும் ஈசன் என்பது உண்மையானால் தமிழில் அர்ச்சனை செய் தால் அந்த ஈசன் தீட்டுப் பட்டுப் போய்விடுவான் என்பது அசல் பார்ப்பனத் தனம் தானே?

Read more: http://viduthalai.in/e-paper/82132.html#ixzz34fHFT35x

தமிழ் ஓவியா said...


எடுத்துக்காட்டாகிய புனே மக்கள்


பூனா தொழில்நுட்ப பணியாளர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஹடாப்சர் பகுதியில் உள்ள சைய்யது நகரில் குடியிருக்கும் இந்துக்களின் வீடுகள் எதுவும் தாக்கப் படாத வண்ணம் அங்குள்ள முஸ்லீம் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக ரோந்து மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் பூனா தொழில்நுட்பப் பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார். பலியான மொசின்மீது சிவசேனா தலைவர் பால் தாக்கரேயையும், மராட்டிய மன்னர் சிவாஜியையும் தரக்குறைவாக விமர்சித்து 'பேஸ்புக்' இணையதளத்தில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சமூகவலைதளமான முகநூலில் கருத்து வெளியிட்டதற்காக வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டது பூனா நகரில் பதற்றத்தை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை, முகநூலில் இணையதளத்தில் யாரோ, மோசமாக சித்தரித்துள்ளதாக பரவிய தகவலால் பல இடங்களில், தலித் அமைப்பினர் வன்முறையில் இறங்கி, பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கினர். இந்நிலையில் பூனாவில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது.

ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியில் வசித்து வரும் பண்டிட் டாலரே என்ற 60 வயது முதியவர் கூறுகையில், அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யாரும் மற்றவர்களைப் பார்த்து பயப்படக் கூடிய சூழல் இங்கில்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லீம் வாலிபர் மொசின் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார். கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் பாதுகாப்பை மிகவும் உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பகுதி மக்கள் மதங்களைக் கடந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகக் கொண்டாடி வருவதே தங்களது ஒற்றுமைக்கு சாட்சி என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உண்மையிலேயே இது ஓர் எடுத்துக்காட்டான முயற்சியாகும். இந்த வகையில் மற்ற மற்ற பகுதிகளுக்கும் பூனா வழிகாட்டுகிறது. மனிதனை இணைக்கத்தான் ஏற்பாடுகள் தேவையே தவிர பிரிப்பதற்கும், பிளப்பதற்கும் அல்ல.

புனே பகுதியில் முஸ்லிம் பெரு மக்கள் மேற்கொண்ட அணுகுமுறை அதற்கு ஒத்துழைத்த அனைத்துக் கட்சிப் பொது மக்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

தழைக்கட்டும் மனித தர்மம்! தகரட்டும் - மனுதர்மம்

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/82136.html#ixzz34fHgYdFk

தமிழ் ஓவியா said...


வீழ்ந்துவிடும்


பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.

- (விடுதலை,20.9.1964)

Read more: http://viduthalai.in/page-2/82133.html#ixzz34fHt5rhj

தமிழ் ஓவியா said...


மணம் பரப்பும் பாலைப்பூக்கள்!

ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டிற்குச் சென்று ஒரு நாள் - இடைவெளியில் - தங்கி, சென்னை திரும்பினோம் ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் (8.6.2014) ஓமான் கடலை நினைத்தால் இன்னமும் மறக்கவே முடியாத வேதனை எம் நெஞ்சத்தில்!

அதுவென்னவென்று கேட் கிறீர்களா? (இளம் நண்பர்களுக் காக) 1940-இல் இலண்டன் பெரும் பொறுப்பு - பதவியேற்கச் சென்ற திராவிடர் தளபதி என்று தந்தை பெரியார் அவர்களால் அன் பொழுக அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் ஹனி பால் என்ற விமானத்தில் சென்ற போது அதனையே விழுங்கிய கடல் ஓமான் கடல் என்பதே அந்த மறக்க முடியாத வேதனை!

ஆனால் சிறிய அழகான, இயற்கை எழில் கொஞ்சும் நாடு, நெய்தல் (கடலும் கடல் சார்ந்த பகுதி), குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த பகுதி), பாலையும் மூன்றும் இணைந்த இயற்கைத்தாயின் முக்கூட்டு நாடு அது!

அதன் இயற்கை அழகைக் கண்டு வியந்தோம் அங்கு நமது குடும்ப நண்பர் அதிகாரியாக பணி புரியும் தி.வெங்கடேஷ் - அவரது வாழ்விணையர் சாமுண்டேசுவரி அவர்களும் எங்களை வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அன்பு உபசரிப்பால் திணற வைத்த அவர்கள், அங்குள்ள தமிழ் உறவுகளில் முக்கிய பொறுப்பாளராகவும், பல்வேறு துறை ஆற்றலாளராகவும், உள்ளவர் களையும் அவர்களது இல்லத்திற்கு அழைத்து ஒரு சிறு கலந்துரையாடல் நடத்தினார்கள்.

பல நூற்றுக்கணக்கான இளம் தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ்ச் சொல்லித்தரும் பள்ளிப்பணி முதல் தமிழ்ச் சங்கம் வரை மிக அருமையாக அந்தந்த தமிழர்கள் தொண்டறம் புரிகிறார்கள்.

நம் தமிழர்கள் பலரும் பல்வேறு தொழிலதிபர் களாகவும், அதி காரிகளாகவும், பொறியாளர்களாக வும், மேலாண்மை பொறுப்பாளர் களும் உள்ளனர் என்பது நமது காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது!

அங்கு தமிழ்ச்சங்கத்தை மிகவும் திறம்பட நடத்திவரும் ஜானகி ராமன் தமிழ் இலக்கிய கழகத்தை அமைத்து தவறாமல் சந்தித்து நடத்தி வரும் (குமரி மாவட்டம்) பஷீர் அவர்கள் தலைசிறந்த கவிஞர் இலக்கியப் படைப்பாளியாக உள்ளார் என்பது அவர் தந்த பாலைப்பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் உலகிற்கே பறை சாற்றுகிறது!

தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் என்பது தமிழ்த் தொண்டை விட மிகச்சிறப்பானது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ் மண்ணை மறக்காதது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் தமிழர்களை கட்சி, ஜாதி, மத பேதமின்றி வரவேற்று வாழ்த்திடவும் தவறாததே. இலக்கிய தமிழ்ப்பண்ணையையும் அங்கே உருவாக்கி, ஒற்றுமை உழைப்பு என்கிற உரமிட்டு உழவாரப் பணிகளையும் செய்திட முன்னணியில் உள்ளனர்.

பாலைவனத்தில் கூட தமிழ்ப்பூக்கள் - பாக்கள் - பூத்துக்குலுங்கும் - புதுமணம் பரப்பும் - புகழ்முடி சேர்க்கும் என்பதற்கு பாகவி பஷீர் அவர்களின் பாலைப்பூக்களே சான்று பகருவதாக உள்ளன. படித்தேன், சுவைத்தேன், கீழே வைக்காமல் படித்து முடித்தேன், எல்லாம் தெவிட்டாத தேன் தான்.

இதோ ஒரு சில பூக்கள் அந்த பூங்கொத்தி லிருந்து - சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன.

கருப்பு நிறம் கொண்ட காகத்தைப்பற்றிய கவிதை வரிகள் சில

காகம் கரைகிறது; கேட்போமா? (பக்கம் 18-19) (ஒரு பகுதி)

...என் மேனியின்
வண்ணத்தால் ஒதுக்கப்படுகிறேன்
தப்பேதான்!
இங்கே!
வர்ணங்களால் பிரிப்பது
வாடிக்கைதானே!
அடுத்து வரம் தருவாய் என்ற தலைப்பில் (பக்கம் 38)

தேய்கின்ற நிலவுக்கு சேதாரம் அகற்று - தருவாய்
பௌர்ணமியில் புல்வெளியில்
பாயிரம் பாடக் காற்று!
வீதியினில் திரிகின்ற
மதயானைகள் மதிபெறட்டும்-அது
வெறி கொண்டால் இரும்புத்
தளை கொண்டு அடங்கட்டும்!
சாதியின் பிரிவினையை
சம்மட்டியால் உடை - அருள்
சோதியின் வடிவே மனிதன் என்போரை
உபசரிக்கட்டும் வாசல் நடை!

இதுபோன்ற கருத்தாழம் மிக்க கவிதை வரிகளில் நல்ல மனித நேயம் மலர்ந்த பாலைப்பூக்கள் என்ற கரு பசுஞ்சோலைப்பாக்கள்! படித்துப் பயன் பெறுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/82139.html#ixzz34fI9hDPx

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு


தமிழ்நாடு பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களுக்கும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங் களுக்கும், திரு. கீர்த்திவாசய்யர் நாம் குடிஅரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதினவைகளில்தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத்திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்ப தற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப்பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொருவர்களுடைய மறுப்புகளோ, எதிர்ப்புகளோ, கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகிவிட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலா மென்பதே நமது கருத்தாகும்.

ஆனால் ஒரு விஷயம் இப்போதே எழுதவேண்டியது அவசரமென தோன்றுகின்றது. அதாவது திரு. கீர்த்தி வாசய்யர் ரயில் சார்ஜ்க்குப் பணம் நம்மிடம் வாங்கவில்லை யென்று எழுதி யிருப் பதில் அவர் அந்தப்படி எழுதுவதற்கு நாம் ஆச்சரியப் பட வில்லையானாலும் பொதுஜனங்கள் உண்மையை அறியவேண்டி மறுபடியும் ஒரு தடவை நாம் கீர்த்திவாசய்யருக்கு ரயில் சார்ஜ் கொடுத்தது உண்டு என்று எழுதுகின்றோம்.

அதுவும் நாம் சென்னையில் குடிஅரசு ஆபீசின் முன் கொட்டியிருந்த மணல் மேட்டில் இருக்கும் போது இந்தக் கேசு விசாரணைக்கு மிகச்சமீபத்திய முந்திய நாள் கேசு வாய்தாவைச் சொல்லி ஈரோட்டுக்குப் போக வேண்டுமென்று கேட்டு நாம் 5ரூ. நோட்டாக ஒன்று எடுத்துக் கொடுத்தோம் என்று உறுதியாகச் சொல்லுகின் றோம்.

இந்தத் தடவையும் அவர் மறுப்பாரானால் அதுசமயம் திரு. கீர்த்திவாசய்யருடன்கூட வந்த மற்றொரு அய்யரு டையவும் அவர் கேட்டு வாங்கிக்கொண்டு போகும்போது நம்முடன்கூட இருந்த அய்யர் அல்லாதவர் களுடையவும் பெயர்களையும் வெளிப்படுத்துகின்றோம். அப்பொழுதும் இல்லை யென்று சொல்லுவாரானால் பிறகு பொதுஜனங்கள் எதை வேண்டுமானாலும் நம்ப உரிமையுடையவர் களாவார்கள்.

தவிர, இதுசம்பந்தமாக சில நிருபங்களும் சில கண்டனக் கூட்ட நடவடிக்கைகளும் பிரசுரிக்க சற்று தாமத மேற் படுவதற்கு ஆக நேயர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக திருச்சி, மதுரை நிருபர்களுக்கு இவ் விஷயத்தில் நன்றி செலுத்துகிறோமாயினும் அவர்களின் ஆத்திரத்தின் உணர்ச்சியில் காட்டியிருக்கும் மிதமிஞ்சிய வேகத்தை ஆதரிக்க முடியாததற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு-செய்திவிளக்கக் குறிப்பு -16.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82156.html#ixzz34fJma4BF

தமிழ் ஓவியா said...


தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்


தஞ்சை ஜில்லாபோர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறக்கூடும் என்று தெரிய வருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுயமரியாதை இயக்க சங்கத்தின் உபதலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க் கின்றோம்.

ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந்தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக் கின்றோம்.

ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொது மக்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பாக பார்ப்பனரல் லாதார் நன்மை யைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத் தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லாபோர்டுக்கு இதுசமயம் மறு படியும் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட வேண்டியது அவசியமான தென்பதே நமது அபிப்பிராய மாகும்.

அன்றியும், இந்த அபிப்பிராயத்தையே தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட சில செல்வந்தர்களும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கொண்டுள்ளார்கள்.

தவிர, பார்ப்பனரல்லாத சமுகப் பிரமுகர்களில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட்ட பொறுப்பும் நாணயமும் அற்ற சிலர் தங்கள் சுயநலம் காரணமாக ஒருவரை ஒருவர் கெடுக்க எண்ணியதும் அதனால் ஒருவருக்கொருவர் தற்காப்பிற்குப் பத்திரங்கள் தேடிக்கொள்ள ஏற்பட்டதுமான காரியங்களால் இனி தென்னாட்டில் நடந்தேறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் நியமனங் களிலும் இவ்விதமான எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதைக் குறித்து நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை.

அன்றியும் இந்நிலைமை காரணமாக பார்ப்பன ஆதிக்கத்தை மறுபடியும் வளர்க்க ஒருவருக் கொருவர் போட்டி போடுவதைப் பார்த்து நாம் வெட்கப்படாம லிருக்கவும் முடியவில்லை.

நெல்லூர் மகாநாடானது எப்படியோ நமக்கு இந்நிலை மையை அளித்து விட்டது. நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாத சமுகத்திற்குள் ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களிட மிருந்தாவது, அதற்குள் ஏற்பட்ட உள்கட்சியாகிய ஒழுங்கு முறைக்கு உட்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் என்பவரிடமிருந்தாவது,

மந்திரி கட்சியாரிடமிருந்தாவது மற்றும் இவைகளின் சார்புக் கட்சியாரிட மிருந்தாவது அவரவர்கள் கட்சிக் கொள்கைகள் முழுமையுமோ, அல்லது, அதிலுள்ளவர்களின் நடத் தைகள் முழுவதையுமோ அடி யோடு ஒப்புக்கொண்டு நாம் அதில் கலந்திருக்கவில்லை என்பதையும் அல்லது வேறு எந்த விதமான சுயநல லட்சியத்தைக் கொண்டோ அல்லது யாருக்காவது பயந்தோ நாம் அவற்றை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆனால், நமது சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மற்ற கட்சியார் மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவைகளை விட இவைகள் எத்தனையோ மடங்கு மேலானது என்பதாகவும், வசதியுள்ளது என்பதாகவும் கருதி நமது இயக்கத்தின் நன்மையை உத்தேசித்தே நாம் அவற்றில் களங்கமறக் கலந்திருந்ததுடன் கூடுமானவரை ஒத்துழைத்தும் வந்தோம்.

எனவே, இந்த முறையில்தான் தஞ்சை ஜில்லாபோர்டு தலைமைப் பதவியானது திரு பன்னீர் செல்வம் கையை விட்டுப் போக நேருமானால் கண்டிப்பாய் அது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே அல்லாமல் மற்றப்படி அதற்கு இடையில் வேறு இடமில்லை என்று கருதுவதுடன் திரு. பன்னீர் செல்வம் தோல்வியானது பார்ப்பனரல்லாத மக்கள் தோல்வியாகுமென்றும் கருது கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 19.01.1930

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fJvgDxl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக் கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள்.

ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம் தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண் டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82159.html#ixzz34fK4WdgS

தமிழ் ஓவியா said...


கடவுள், மதம், வேதம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்க்கிய இந்திய சங்கத்தாரின் வரவேற்பு

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற்பும், உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றி பேசிய புகழ் வார்த்தைகளும், தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்துதான் மிகுதியும் வெட்கமடை வதாயும் இவைகளில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந் தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மலாய் நாட்டுப் பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டி ருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரதாபங்களைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும், ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே அடியோடு மறைபட்டு தனது கொள் கைகளுக்கும்,

தொண்டுக்கும் முன்னிலும் அதிகமான உறுதியும், ஊக்கமும் ஏற்பட்டு விட்டதென்றும், யோக்கிய மான எவ்வித அரசியல் காரர்களும், மத இயல்புக் காரர்களும், சமுக இயல்புக் காரர்களும், அரசாங்கத்தார்களும் தன்னைக் கண்டு பயப்படவேண்டியதில்லை என்றும் சுயமரியாதையும், சமத்துவமும், அறிவு வளர்ச்சியுமே தனது தொண்டின் லட்சிய மென்றும், ஆதலால் தன்னால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் வந்துவிடா தென்றுதான் உறுதியாய்க் கருதி இருப்பதாயும் சொல்லி முடித்தார்.

நாங்கள் இங்கு எந்தக் கோவிலையும் இடிக்க வரவில்லையென்றும் எந்த மதத்திற்கும் ஆபத்தையோ, ஆதரவையோ உண்டாக்க வரவில்லையென்றும், மற்றவர் களைப்போல் பணம் வசூல் செய்து மூட்டை கட்டிப்போக வரவில்லையென்றும்,

உங்கள் அறிவையும் ஆற்றலையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்ப வந்து இருக்கிறோ மென்றும் அதற்குத் தக்க உதாரணங்கள் காட்டிப் பேசினார். கடவுள், மதம், வேதம் ஒன்று இருக்குமானால் அது தன்னால் அழிந்து போகுமோ அல்லது மறைந்து போகுமோ என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82160.html#ixzz34fKCwsWU

தமிழ் ஓவியா said...


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப் பட்டவர்கள் எனப்படும் பட்டிய லினத்தவருக்கு எதிரான கொடுமை களைத் தடுப்பதற்காகவும், அச் சமூகத்தினருக்கு எதிரான கொடு மைகள், வன்முறைகள், துன்புறுத் தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடி யுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழங்குடியின மக்களுக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 1989இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995இல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் வன்முறை தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட் டத்தைக் காவல்துறையினர் தங் களுக்கு எதிரானதாகவே நினைத் தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page4/82179.html#ixzz34fLoArhU

தமிழ் ஓவியா said...


பொய்ம்மையும் வாய்மை இடத்து


ஆங்கிலேயர் ஆட்சிக் காலம். இந்தியர்களுக்குப் பெரியம்மை தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது (1804). ஆனால், அன்றைய மக்கள் அதனை ஏற்கவில்லை. அவர்களைச் சரிக்கட்ட எல்லீசு துரை ஒரு புனித மோசடி செய்தார். அம்மை குத்திக் கொள்வதன் அவசியம் பற்றி வடமொழியில் அவர் தானே ஒரு கவிதை இயற்றி, அதனை ஒரு பழைய தாளில் எழுதிப் பழம் பாடல் என நம்ப வைத்தார். அம்மருந்து புனிதப் பசுவிலிருந்து பெறப்பட்டது என அப்பாடலில் குறிப்பிட்டார். எனவே, மக்கள் அம்மருந்தை ஏற்றனர்.

பி.கு. எல்லீசு துரை திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். அதனால் பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்த்த, நன்னை பயக்கும் மெனின் என்ற திருக்குறள் அவர் நினைவுக்கு வந்திருக்கலாம்.

Read more: http://viduthalai.in/page6/82184.html#ixzz34fNMgnUC

தமிழ் ஓவியா said...


சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) என்று கூறி குழந்தைகளிடையே மூடத்தனத்தை வளர்ப்பதா?


செல்டென்ஹாம் அறிவியல் திருவிழாவில் நாத்திகத் தலைவரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பங்கேற்றார். அவர் பேசும்போது, இயற்கையை மீறிய சக்தியால் (கடவுளால்) உலகம் இயக்கப்பட்டுவருவதாக கூறுவதன்மூலம் குழந்தைகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுபோலவே சாந்தாகிளாஸ் (கிறிஸ் துமஸ் தாத்தா) என்கிற கதையால், இல் லாத ஒன்றை இருப்பதாக குழந்தைகளை நம்பவைக்கலாமா? என்று டாக்கின்ஸ் கேட்டார். மதக்கருத்துக்களை குழந்தை களிடம் திணிப்பதுகூட குழந்தைகள் மீதான வன்முறையாகும் என்றார். தற்காலத்தில் நிகழ்ந்துவரும் குழந்தை கள்மீதான அளவுகடந்த பாலியல் வன்முறைகள்குறித்த குற்றச்சாட்டுகள் பரவிவருவதற்கு காரணமாகவும் உள்ளன.

விளையாட்டாக புனையப்படும் கதைகள், கிறிஸ்துமஸை நம்புகின்ற பெற்றோர் களால் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மாறுபட்ட கருத்து களைக் கொண்டுள்ளவரும், உயிரியல் வல்லுநராகிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் அறிவியல் விழாவில் பங்கேற்ற பார்வை யாளர்களைநோக்கி, குழந்தைகளிடம் மூடத்தனமான நம்பிக்கைகளை உண்டாக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இயற்கையை மீறிய சக்தி (கடவுள்) யால்தான் உலகம் இயக்கப் பட்டு வருகிறது என்று குழந்தைகளிடம் கூறுவதன்மூலம் அவர்களுக்கு கடும்தீங்கிழைக்கிறார்கள் என்று தீப்பிழம்பாகி எச்சரிக்கிறார். விளையாட் டான, பழங்கதைகளை மதத்தின்பேரால் குழந்தைகளிடம் கூறி அவர்களை நம்பவைப்பது என்பது நாம் நினைப் பதைக் காட்டிலும் அவர்களுக்கே அதிகத் தீங்கு நேர்ந்துவிடும். இல்லாத கிறிஸ் துமஸ் தாத்தா இருப்பதாகக் கூறி, நம்பவைக்கலாமா? என்றும் கேட்கிறார். விண்வெளி வண்ணமயமானது என்று யார் அறிவார்கள்? 10 ஆண்டு களில் 10ஆயிரம் அதிசயித்தக்க படங் களை தொலைநோக்கிமூலம் பெற்று பார்க்கிறோம்.


தமிழ் ஓவியா said...

குழந்தைகள் முகநூலைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர்கள் 13 வயதுக்குமேல் சமூக வலைதளங்களைப் பார்க்கட்டும் என்று திட்டமிடுகிறார்கள். இது சரியே. குழந்தைகளின் புதுமையான விருப்பங்களைப் புரிந்து இணைந்து இருப்பதுபோல், குழந்தைகளிடம் (கடவுள் நம்பிக்கையில்/நம்பிக்கையின் மையில்) உண்மை அறியும் அறிவை, சிந்தனையை அவர்கள் விருப்பத்துக்கு வளரவிடுகிறோமா? என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் பார்வையாளர்களிடம் கேள்வியை எழுப்பினார். தன்னுடைய அனுபவமாகக் கூறும்போது, ஆப்பிரிக் காவில் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தன்னுடைய எட்டு வயதில் கதைகளில் வரும் மாயாஜாலங்களை நம்பி, அதுபோன்ற அதிசயங்களைக் காண முயன்று தேடி யதாகவும் கூறினார்.

நாம் நினைப்பது போலன்றி கதைகளாகக் குழந்தைகளிடம் கூறப்படுவது, அவர்களிடம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். கிறிஸ் துவின் தந்தை, கிறிஸ்துமஸ் என்று எல் லாவற்றையும் குழந்தைகள் நம்புவதற்கு விடலாமா? கடவுள் என்கிற கருத்தை சிறிதுசிறிதாக குழந்தைகளிடம் திணிப்பது குழந்தைகளுக்கு தீங்கிழைப்பது ஆகாதா?

விவிலியத்தில் குழந்தைகளின் அறிவை வலிமையாகவே கெடுக்கும்படியாகத்தான் உள்ளது. எதையாவது குழந்தைகளிடம் சொல்லி அதைப் பின்பற்றாவிட்டால், நரகத்தில் வறுக்கப்படுவார்கள் என்பதும் கூட ஒரு வழியில் குழந்தைகளைக் கெடுப்பதுதான். மதத்தைத் திணிப்பது என்பது குழந்தைகளிடம் அதிக அளவில் கெடுதலை விளைவிக்கக் கூடியதாகும். எந்தவிதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது என்று மதத்தைத் திணிப்பதைவிட மோசமான செயல் வேறில்லை.

சிந்திப் பதற்கு இடமின்றி மதத்தை புகுத்துவது என்பது மூளைக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஏற்க வலியுறுத்துவதாகும். கடவுள்தான் படைப்பதாக சொல்லுவது பகுத்தறிவுக்கு முரணானது. சமுதாயத் துக்கு கேடானதுமாகும் என்று டாக் கின்ஸ் கூறுகிறார். கத்தாரிலிருந்து ஒளி பரப்பாகிவரும் அல்-ஜசீரா தொலைக் காட்சியில் ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஒரு பெண் தன்னுடைய நண்பன் இறந்தபின் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான் என்று தன்னிடம் பாதிரியார் ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகக் கூறியதால் அதிர்ச்சிக்குள்ளானார் என்றார். மேலும் அவர், பாலியல் வன்முறை என்பது கொடுமையானது என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. கத்தோலிக் கனாக(மதவாதியாக) ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது உளவியல்ரீதியாக காலம்முழுவதும் மதத்துக்கு அடிமை யாக்குதுவது என்பது அதைவிட கொடுமையானதாகும் என்று கூறினார். அவரே 1976இல் எழுதிய நூலில் பல்வேறு நம்பிக்கைகள் வேண்டும் என்று கூறியிருந்தார். பின்னர் கடவுள் ஒரு பொய்க்கதை நூலை எழுதியுள்ளார். பள்ளிப்பருவத்தில் வெற்றுக் கூச்சலிடு பவர்களையும், எதையும் கவனத்தில் கொள்ளாத பொறுப்பற்றவர்களையும், காயங்கள் ஏற்படும்படியாக தாக்கிக் கொள்பவர்களையும் கண்டுள்ளதாக கூறுகிறார். மதவாதிகள் என்பவர்கள் அனுபவத்தில் மிக மோசமானவர் களாகவே இருந்துள்ளார்கள் என்றும் டாக்கின்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது,மதத்தால்எந்தவிதத்திலும் நன்மை கிடையாது என்று பள்ளிப் பருவத்தில் கூறியபோது, பிரம்படி வாங்கினேன். பெரிதாக இல்லை என் றாலும், நாகரிகக் குறைவு உள்ள மக்க ளாக வாழ்ந்து கொண்டு புண்படுத்திய மோசமான நிலையை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்றார்.

_- -டெய்லி மெயில், இலண்டன், 4-_6_-2014

Read more: http://viduthalai.in/page8/82188.html#ixzz34fPHTAMO