Search This Blog

16.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 4


(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)பால காண்டம்

அய்ந்தாம் அத்தியாயம்
விசுவாமித்திர முனிவனும் அரசகுமார ரும் வழிநடந்து கங்கைக்கரையை யடைந்து அங்கிருந்த முனிவர்களால் நல்வரவேற்கப் பெற்று அவர்களோடு ஓரிரவைக் கழித்து, தோணியேறி ஆற்றைக்கடந்து தென்கரையைச் சேர்ந்து மெல்ல மெல்ல நடந்து போனார்கள்.  அங்கே மனித வாழ்வற்ற ஓர் கொடிய காடு குறுக்கிட்டது.  அதுகண்டு இராமன் அக்காடு ஏன் அவ்வாறிருந்ததென முனிவனைக் கேட் டான்.  அதற்கு மறுமொழியாக விசுவாமித்திரன் விருத்தி ராசுரனைக் கொன்றதால் இந்திரனுக்கு நேர்ந்த பெரும் பழியை இவ்விடம் நீக்கியதால் மிகவும் செழிப்பான நாடாக இருந்தது.  தாடகை என்னும் இயக்கப்பெண் இவ்விடத்தில் வந்து இங்கு வாழ்பவர்களையெல்லாம் துன்புறுத்துகிறாள்.  அதனாலேயே இவ்விடம் இவ்வாறு பாழாயிற்று.  அவள் இங்கேதான் வாழ்கின்றாள்.  அவள் புத்திமானான சுந்தனுக்கு மனைவியானாள்.  அவள் நினைத்தபடியே ரூபங் கொள்ள வல்லவளும் ஆயிரம் யானை பலமுள்ளவளுமாய்ப் பிறந்தாள்.  அவளுக்கு மாரீசன் என்னும் இராக்கதப் பிள்ளை பிறந்தான்.  மாரீசன் இந்திரனை நிகர்த்த வலிமையுள்ளவன்.  அவனும் மனிதர் களைத் துன்பப் படுத்துகிறான் என்று கூறினன்.

தாடகை யின் வரலாற்றை விவரமாகக் கூறும்படி இராமன் கேட்க மறுபடியும் முனிவன் சுகேது என்ற பெயரையுடைய ஒரு பெரிய இயக்கன் இருந்தான்.  அவன் நல்லொழுக்க முள்ளவன், அவனுக்கு குழந்தையில்லாமல் பெருந்தவம் புரிந்து நான்முகனுடைய வரத்தால் இப்பெண் தாடகை பிறந்தனள்.  அவளைச் சுந்தனென்பவன் மணந்தான்.  அவர்களுக்கு மாரீசன் பிறந்தான்.  சுந்தன் அகத்திய முனிவரால் சபிக்கப் பெற்றிறந்தான்.  அவரைக் கொல்வ தற்காகத் தாடகை மாரீசனை யழைத்துக் கொண்டு வந்தாள்.  அவள் ஓடி வருவது கண்டு அகத்தியர் மிகச் சினந்து அவள் மனிதனைத் தின்பவளாய் விகார ரூப முடையவளாய் இந்த உரு ஒழிந்து கோரமான உரு உடையவளாக வேண்டும் என்று வெவ்வுரை கூறினார்.  உடனே அவள் அவ்வாறே ஆகி இந்த காட்டைப் பாழ் செய்கின்றாள்.  இயக்கர்களுக்கு இயல்பில் பலமில்லை யானாலும் வரத்தால் பலம் பெற்ற இக்கொடியவளாகிய தாடகையை நீயே கொல்லவேண்டும்.  பெண்ணைக் கொல்ல வேண்டுமென்று நீ அருவருப்புக் கொள்ள வேண்டாம்.  முன்பொருகாலம் விரோசநனென்பவனு டைய மகளாகிய மந்தரை கெட்டவளாயிருந்ததால் அவளை இந்திரன் கொன்றான்.  மற்றொரு காலத்தில் பிருகுவுக்கு மனைவியும் சுக்கிரனுக்கு தாயுமான ஒரு பெண்ணை அவள் உலகில் இந்திரனை இல்லாமற் செய்துவிட வேண்டுமென்று எண்ணினதால் திருமாலே கொன்றார்.  இப்படியே நல்லோரனேகர் தீநெறி யொழு கும் பெண்களைக் கொன்றிருக்கின்றனர்.  ஆதலின் நீ இவளைக் கட்டாயம் கொன்று விட வேண்டும்" என்று கூறினார்.  இராமனும் அக்கொலையைச் செய்ய வுடன் பட்டனன்.  உடனே அவன் வில்லை நாணேற்றி ஆரவாரஞ் செய்தனன்.  அவ்வாரவாரத்தைக் கேட்ட தாடகை அங்கே வந்தனள்.  இராமன் தம்பியைப் பார்த்து இலக்குவ!  இவளைப் பார்த்தாயா, இவளைக் கண்டு அஞ்சா நெஞ்சினரும் கலங்குவர். வெல்ல முடியாதவளா யுள்ள இவளை இப்போது காதையும், நுனி மூக்கையும் அறுத்துத் துரத்தி விடுகிறேன் பார்.  இவள் பெண்ணா யிருந்ததால் இவளைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை.  ஆதலால் இவளைக் கைகால்களை முறித்து பலமில்லாமற் செய்ய நினைக்கிறேன் என்றனன்.  தாடகை கல்லெறிந்து சண்டை செய்தாள்.  இராமன் அவள் கைகளை அறுத்துத்தள்ளினன்.  அப்போது இலக்குவன் அவளது காதுகளையும் மூக்கு நுனியையும் அறுத்து விட்டனன்.  பின் இராமன் ஓர் அம்பெய்து அவளைக் கொன்றனன்.  (இவ்வரலாறு வால்மீகி - பாலகாண்டம் இருபத்தாறாம் சருக்கத்திலுள்ளது)

அன்றிரவு அவர்கள் அங்கே தங்கி மறுநாள் அங்கி ருந்து புறப்பட்டு விசுவாமித்திரனுடைய ஆசிரமத்தை அடைந்தனர்.  அங்கே போனவுடன் இராமன் அவ்வா சிரம வரலாற்றை வினவ விசுவாமித்திரன் கூறுகிறான்.  திருமால் இவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது விரோசனனுடைய மகன் பலி என்னும் அரசன் இந்திரனை வென்று மூவுலகங்களும் போற்ற ஆண்டனன்.  அச்சக்ரவர்த்தி ஒரு பெரிய யாகம் செய்யத் தொடங்கினன்.  தன்னிடம் வந்து யாசிக்கிறவர்களுக் கெல்லாம் அவரவர்கள் கேட்டது கேட்டபடி கொடுத் தான்.  இச்செய்தியை தேவர்களோடு இந்திரன் திருமா லிடம் கூறி, மகாபலியைக் கொல்லவேண்டினன்.  திருமால் அதற்கிசைந்து தாம் பிறக்கும் படி தம்மிடம் வரம் பெற்றிருந்த காசியப முனிவனுக்கும் அதிதிக்கும் பிள்ளையாகப் பிறந்து குள்ள உருவத்தோடு பலியிடம் சென்று மானத்தை விட்டு மூவடியிரந்து பெற்றுக் கொண்டு, பலிச்சக்ரவர்த்தியை யடக்கினார்.  அவ்வா மனர் தங்கிய ஆசிரமம் இது.  இதில் நான் வாழ்கிறே னென்றனன்.  (இவ்வரலாறு வால்மீகி பாலகாண்டம் இருபத்தொன்பதாவது சருக்கத்திலுள்ளது)

கோசிக முனி யாகம் தொடங்கினன்.  அய்ந்து நாட்கள் சென்றன.  ஆறாம் நாள் சுபாகுவும் மாரீசனும் யாகத்தைக் கெடுக்க வந்தனர்.  அவர்களில் மாரீசனை ஒரு கணையால் கடலிலே தள்ளும்படி செய்தான் இராமன்.  மற்றொரு கணையால் சுபாகு மாண்டனன்.  யாகம் இனிது நிறைவேறிற்று.  பின் முனிவன் இராம இலக்குவரை யழைத்துக் கொண்டு மிதிலையை நோக்கி நடந்தனன்.


மேலே காணப்படும் வரலாற்றை சிறிது ஆராய்வோம்.  தாடகை ஒரு பெண்.  இவளுடைய மகனே மாரீசன்.  அவன் இராவணனுக்கு மாமன் முறை.  இராவணன் பிறந்து வரம்பெற்று இலங்கையில் அரசாளத் தொடங்கிய போது கிழவனாகிய மாரீசன் அவனை அடைந்து அவனுடைய ஆதரவைப் பெற்று முனிவர்கள் செய்த யாகங்களை சுபாகு என்பவனோடு கூடி அழித்து வந்தான்.  ஆதலின் இராவணன் வயதளவாவது அவனுக்கு ஆகியிருக்கவேண்டும்.  இராவணன் முக் கோடி ஆண்டு வாழ்நாள் வரம் பெற்றவன்.  அவன் தாடகை பிறந்த பதினான்காவது ஆண்டில் இறக்கிறா னெனத் தெரிவதால் அப்போது இராவணன் பிறந்து கிட்டத்தட்ட மூன்று கோடி ஆண்டுகள் ஆயின, ஆதலின் மாரீசனுக்கும் அப்போது மூன்றுகோடி ஆண்டு களுக்கு அதிகமாகவே ஆகியிருக்க வேண்டும்.  அவனு டைய தாயாகிய தாடகையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

இராவணன் தான் பெற்ற வரத்தின் மகிமையால் அவ்வளவு காலம் வாழ்ந்து வந்தனன்.  மாரீசன் யாரிடம் இவ்வளவு காலம் வாழ வரம் பெற்றானோ தெரிய வில்லை.  இதற்கும் மேலாக அவன் தாய் தாடகை யாரிடம் நீண்ட வாழ் நாள் பெற்றனளோ?  மாரீசனும் தாடகையும் இவ்வளவு காலம் வாழ வரம்பெற்ற வரலா றொன்றும் காணப்படவில்லை.  ஆதலின் இவர்களுடைய இல்வாழ்க்கையும் அழிவும் அறிவுக்கு உடன் படுமா றில்லை.  இருந்தாலும் இவை புலவர்களால் எழுதி வைக்கப்பெற்றுள்ளன.  இதன் காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.


தாடகையின் தந்தையாகிய சுகேது மிகவும் நல்லவன் என்று வால்மீகி முனிவர் கூறுகிறார்.  கம்பரும் அவ்வாறே சுகேது வென்றுளனோர் தூய்மையான் என்று கூறுகிறார்.  இவன் தவங்கிடந்து பெற்ற பெண்ணே தாடகை.  இவளைப் புத்திமானான சுந்தனுக்கு வாழ்க்கைத் துணைவியாக சுகேது தருகிறான்.  சுந்தன் ஒரு இயக்கத் தலைவன்.  இயக்கர்கள் பொதுவாக பலமற்றவர்கள்.  சுந்தனைச் சிறந்த அறிவாளியென வால்மீகி கூறுகிறார்.  இவன் அகத்திய முனிவர் சாபத்தால் இறக்கிறானென் பதால் அவருடைய சாபம் பெறுவதற்கு அவருக்கு அவன் பெருந் தீங்கு செய்திருக்க வேண்டும்.  ஆனால் வால்மீகி அதுபற்றி ஒன்றும் கூறுகின்றிலர்.  அவர் சபித்தார் இவன் இறந்தான் என்று மட்டுமே கூறுகிறார்.

சுந்தன் சிறந்த புத்திமானானதால், முனிவர் சாபத்தைப் பெறுமாறு அவருக்கு அவன் என்ன கெடுதியைச் செய்திருக்கக்கூடும்?  மேலும், அவனோ இயற்கையில் பலமில்லாதவன்.  நல்லொழுக்கமுடையவனாகிய சுகேது வின் மாப்பிள்ளை.  கம்பரோ சுந்தனுடைய குணத்தை மாற்றி அவனைக் காய்சினத்தரக்கன் என்கிறார்.  மேலும், இவன் அகத்தியரால் இறப்பதற்கு ஒரு காரணமும் கூறுகிறார்.  அதாவது, சுந்தன் அகத்தியர் வாழ்விட மடைந்து அங்கிருந்த மரங்களையெல்லாம் பறித்து வீசினான்; அதனால் சினமிகக் கொண்டு முனிவர் தழலெழ விழித்தனர் சாம்பராயினன் என்பதே.  இவ் வரலாற்றால் அகத்தியர் அற்பக் குணமுடையவராகக் காட்டப்படுகிறார்.  புத்திமானான சுந்தன் என்று முதலில் கூறிய வால்மீகி, அதற்கு மாறாக அவனை அறிவில்லாத வனாகக் கூறாமல் காட்டுகிறார்.  ஒரு காரணமும் கூறாது அவனை அகத்தியர் கொல்வதாகக் கூறி, அகத்தியருக்கு ஒரு பெருங் குணக்கேட்டை யேற்றுகிறார்.  அகத்தியரோ தமிழ் முனிவர்.  இவரே சிவ பெருமான் திருவருளைப் பெற்றுத் தமிழுக்கு முதன்முதல் இலக்கணம் இயற்றியவர்.  ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர் முதலிய சிறந்த தமிழ்ப் புலவர்களுக்கு ஆசிரியர்! இந்தத் தமிழ் முனி யைக் குணக்கேடராக அறிவுடையவருக்குக் காட்டவே, ஆரியராகிய வால்மீகி இவ்வாறு எழுதினார் போலும்.  கம்பர் வால்மீகி கூறாத காரணத்தைக் கூறுகிறார்.  அதுவும் வியப்பாகவே இருக்கிறது.  மரங்களை முறித்தெறிந்த தற்காக ஒருவனை விழித்துச் சாம்பராக்குவதென்றால், அவர் தம் பெருந்தன்மையும் பெருந்தவமும் இருந்த வாறென்னே!  ஈதெல்லாம் பெருந்தமிழ்ப் புலவராகிய அகத்தியனார் பாலிருந்த அழுக்காற்றால், ஆரியர் கட்டிய கதையென்றே தள்ளுதல் வேண்டும்.

தாடகைக்கு ஒரே மகன்; அவன் மாரீசன்.  சுபாகு என்பவன் வேறோர் அரக்கன்.  அவன் மாரீசனோடு கூடி, இராவணன் ஆணையால் வேள்விகளைக் கெடுத்து வந்தான்.  இவனைக் கம்பர் தாடகையின் மகன் என்றார்.  இது வால்மீகிக் கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.  சுந்தன் இறந்தது தெரிந்து, தாடகை ஓடி வருகிறாள்.  அகத்தியரைக் கொல்ல மாரீசனும் உடன் வருகிறான்.  அதுகண்டு அகத்தியர், இயல்பில் பலமில்லா இயக்க னாகிய அவனை, மிகுந்த பலமுள்ள அரக்கனாகுமாறு சபிக்கிறார்.  அவ்வாறே இயல்பில் ஆயிரம் யானைப் பல முடைய தாடகையை மிகுந்த பலமுள்ள அரக்கியாகு மாறு சபிக்கிறார்.  எதிரிக்குப் பலமழியுமாறு சபிப்பதே அறிவுடையார் செய்கை.  மிகுபலம் வாய்க்குமாறு அகத்தியர் சபித்தாரென்பது, அறிவுடையார் ஒப்பு மாறில்லை.  இது வேண்டுமென்றே அவர் மீது அறியாமை யையேற்றச் செய்ததாகும்.  மேலும், மரங்களை முறித்தெறிந்த ஒருவனைச் சாம்பராக்கிக் கொன்ற முனிவர், தம்மையே கொல்ல வந்தவர்களைக் கொல்லாது விடுகிறார் என்பதும் வியப்பே.  அகத்தியர் சாபத்தால் மிக்க பலம் பெற்ற தாடகை, அகத்தியர் வாழ்ந்த வனத்தில் அதுமுதல் வாழ்ந்து, அதனைப் பாழாக்கி வந்தாளென வால்மீகி கூறுகிறார்.  இதனால் தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட அகத்தியர் அவ்விடம் விட்டு வேறிடம் புகுந்தவராதல் வேண்டும்.  என்னே ஆரியக்கூத்து!  இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் என்ற சீரிய கொள்கையுடைய தமிழ் மக்களிற்றலைசிறந்த முனிவ ராகிய அகத்தியனாரா இவ்வாறு நடந்திருப்பார்?  பெரும் புளுகே இது.  நிற்க,

மூன்று கோடி ஆண்டுகளுக்கு மேலாகவே வாழ்ந்திருந்த மிக்க கிழவியாகிய தாடகையைப் பதினாறு வயது வாலிபனாகிய இராமன் வென்றான்.  முதலில் கைகளை வெட்டினன் இராமனென்றும், இலக்குவன் அவளுடைய காதுகளையும், மூக்கையும் வெட்டின னென்றும் பின்னர் இராமன் அவளைக் கொன்றன னென்றும் கூறுகின்றார் வால்மீகி.  இவ்விரு வீரரின் வீரந்தான் யாதோ?  என்ன விந்தை?  மிகப் பழுத்த கிழவி யாகிய தாடகையை இரண்டு வாலிபர் கூடிக் கொல்வது மிகப் பெரிய வீரமன்றோ?  அதிலும் அவள் பெண்பால்.  இதனாலேயே பெரும் புலவராகிய கம்பரும் தமது அபிப்பிராயத்தைக் கூனிவாக்காக அயோத்தியா காண்டத்திலே பின் வருமாறு கூறுகின்றார்.

 ஆடவர் நகையுற ஆண்மை மாசுறத்
தாடகை யெனும்பெயர்த் தைய லாள்படக்
கோடிய வரிசிலை இராமன்.
இலக்குவனது இழிந்த செயலைக் கம்பர் கூறுகின்றனர்.  மேலும் விசுவாமித்திர முனிவன் இராமனை நோக்கிப் பெண்ணாயிற்றென்று பாராதே,  முன்னர் இந்திரனொரு பெண்ணைக் கொன்றான்,
---------------------------------------- தொடரும்.... "விடுதலை”13-06-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


மந்திர மகத்துவம்

மகாவிஷ்ணுவின் நெஞ்சில் நிலைத்திருக் கும் அருள் பெற்ற மகா லட்சுமியைப் பூஜித்து வழிபடாதவர்கள் எவரும் இருக்க முடியாது. திருப் பாற்கடலில் தோன்றிய இந்த தேவியானவள், செல்வத்திற்கு அதிபதி யாவாள்.

சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் திருப்பாற்கடலில் மகா லட்சுமியை, மகாவிஷ்ணு பூஜிப்பதாக அய்தீகம் கூறப்படுகிறது. அனைத் துச் செல்வ வளங்களும் வழங்கும் மகாலட்சுமி யின் காயத்திரி மந்தி ரத்தை உச்சரித்தால் நன்மைகள் பெருகுமாம்.

இந்தக் கதைகளை ஸ்மார்த்தர்களிடம் (சிவனை வழிபடுபவர் களிடம்) சொல்லிப் பாருங்கள்; முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். இவை யெல்லாம் தங்கள் தங்கள் கடவுள்களைப் பெரு மைப்படுத்தும் பேர் வழிகளின் அறிவுக்குப் பொருத்தமற்ற சரடுகள் என்பது விளங்கவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82239.html#ixzz34l7L2PSe

தமிழ் ஓவியா said...


மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலை தடுக்க அம்பேத்கரின் சாதி ஒழிப்பு பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூல்களை பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்


சென்னை பல்கலை. இதழியல் துறைத் தலைவர் பேச்சு

சென்னை, ஜூன் 15- மனித கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலைத் தடை செய்ய அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற நூலும் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக் கழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை பல்கலைக் கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந்திரன் கூறினார். "கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ் வுக்கான சட்டம் 2013 மற்றும் அதற்கான விதிகள்' என்ற தலைப்பிலான பயி லரங்கம் சென்னை பல் கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடை பெற்றது.

இதில் ஆர். தாண்டவன் பேசியதாவது:

நாட்டில் பல்வேறு சட் டங்களும், மசோதாக்களும் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டு வருகின்றன. ஆனால், அவை குறித்தும், இயற்றப் படும் சட்டங்களில் உள்ள சரத்துக்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மக்கள் அறிவதில்லை. இதனால் சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

இது குறித்து பல் கலைக்கழகத்தின் பொருளா தார கல்விக்கான டாக்டர் அம்பேத்கர் மய்யமும், இளைஞர் மேம்பாட்டுக் கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகள் மேற் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

புதுடில்லி சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங் கிணைப்பாளர் பெஸ் வாடா வில்சன்: கழிவு களை அகற்றும் தொழி லில் ஈடுபடும் சமூகத்தின ரின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 4,500 கோடி திட்ட நிதியை ஒதுக் கியுள்ளது. மேலும், வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கழிவுகளை கையால் அள்ளும் சூழலே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வரு கிறது.

மேலும் அண்மையில் இயற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தில், கழிவுகளை கையால் அகற்றும் தொழி லில் ஈடுபடுபவர்களின் மறுவாழ்வுக்காகவும், இந்த தொழிலில் ஊழியர்களை கட்டாயமாக ஈடுபடுத்து பவர்களுக்கான தண்டனை களும் இடம் பெற்றுள்ளன. தேசிய குற்றப் பதிவு அமைப்பில், நாடு முழு வதும் நடைபெறும் வாகன விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவ ரம் உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் பதிவு செய் யப்பட்டிருக்கும் நிலையில், சாக்கடை மற்றும் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்தவர்கள் குறித்த விவ ரங்கள் இடம் பெறவில்லை.

எனவே, முதலில் நாம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் எத்தனை பேர் இறந்துள்ளனர், இந்தத் தொழிலில் எவ்வளவு பேர் இப்போது ஈடுபட்டு வரு கின்றனர் என்பது குறித்த முழுமையான தகவலை முறைப்படி சேகரிக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த புள்ளி விவரத்தைத் தயாரித்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர் ரவீந் திரன் கூறியதாவது: கழிவு களை கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமை யாகத் தடை கொண்டுவர வேண்டுமானால், முதலில் ஜாதியற்ற சமூகம் உரு வாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே, இந்த தொழில் தொடருவதற்கு காரணமாகக் கருதப்படு கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்ட மேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும், தந்தை பெரியா ரின் பெண் ஏன் அடிமை யானாள் என்ற நூலும் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், பல் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித் துறை மற்றும் புத்தர் கல்வித் துறை என்ற இரண்டு புதிய துறைகள் உருவாக்கப் பட வேண்டும்.

இந்த இரு கருத்துகளை யும் ஏற்றுக்கொண்ட பல் கலைக்கழக துணைவேந் தர், விரைவில் இந்த இரு கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார் என்றார்.

பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணைச் செயலர் சஞ்சீவ் குமார், 1993-இல் இயற்றப் பட்ட சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் இயற்றப்பட் டது ஏன் என்பது குறித்து விளக்கிக் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82233.html#ixzz34l7XnVyj

தமிழ் ஓவியா said...


இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பார்த்தால் காந்தியாரை கொன்ற கோட்சேவிற்கு பாரத ரத்னா விருது கிடைத்துவிடும் போலிருக்கிறது நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி கர்ஜனை


புதுடில்லி, ஜூன் 15-_முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முஸ் லிம்கள் அறிஞர்கள் தங் களது சொற்பொழிவு களில் பேசி வந்த கர் ஜனைகளை அய்தராபாத் எம்.பி அசத்துன் உவைசி அவர்கள் (11.6.2014) அன்று நாடாளுமன்றத் தில் மோடி மற்றும் நூற் றுக்கணக்கான பா.ஜ.க எம்பிக்களுக்கு முன்னால் பேசி நாடாளுமன்றத் தையே ஆச்சரிப்பட வைத்துவிட்டார்.

அவர் கேட்கும் ஒவ் வொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத பி.ஜே.பி எம்.பிக்கள் இடையில் அவரை மறித்து கூச்சலிட்டனர். இருந்த போதிலும் அவர் களைச் சமாளித்து அசத்து உவைசி பேசியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பி.ஜே.பி எம்.பி ஒருவர் அவரது பேச்சை நிறுத்தச் சொல்லும் போது உன் தம்பிக்கு போய் சொல் லிக்கொடு என்ன பேசனும் ன்னு; எனக்கு நீ சொல்லாதே; எதுவா இருந்தாலும் சபாநாயகர் கிட்ட சொல்லு; எனக்கு நான் என்ன பேசுறேன்னு தெரியும் என்றார்.

அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு: இந் தியாவில் நான்கு சம் பவங்கள், இந்த நாட்டின் அடித்தளத்தை ஆட்டும் அளவிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. முத லாவது காந்தியார் படு கொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங் களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதத்தன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்த்தால், காந்தியை கொன்ற கோட் சேவிற்கு பாரத ரத்னா அல்லது வீர் சக்ர விருது கிடைத்து விடும் போலி ருக்கிறது. மோடியின் வெற்றி ஒரு சோககரமான வெற்றி. இந்திய அரசி யலமைப்பை காப்பாற்ற உறுதியெடுத்து, நாட்டு மக்களின் மேம்பாடு பற்றி அனைத்து எம்.பி க்களும் பேசுகின்றார்கள். நாட்டு மக்கள் என்பது அனைவரையும், அனைத்து சமுதாயத்தை யும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

உங் களது (மோடியை பார்த்து) அமைச்சர் முதல் நாளிலேயே முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லை, பார்சிகள் மட் டும்தான் சிறுபான்மை யினர் என்கிறார், என்பதா யிரம் பார்சிகளுக்காகவா ஒரு மத்திய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்கள், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் நிலை என்ன? நாலரை சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த அரசின் நிலை என்ன? பிரதமர் மோடி சமபங்கு, சம உரிமை என பேசு கிறார்.

அக்ஷாதம் விஷ யத்தில், உச்சநீதிமன்றம் தற்போதைய பிரதமரும், அன்று குஜராத்தின் முதல்வருமாக இருந்த மோடி அமைச்சகத்தை விமர்சித்துள்ளது. இதற்கு இந்த மோடி அரசு மன்னிப்பு கேட்குமா? நான் இங்கு பாதிக்கப் பட்டவர்களின் சொந் தக்காரனாக, பேச முடி யாதவர்களின் குரலாக கேட்கிறேன், அநீதி இழைக்கப்பட்டோருக் கும், குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.

மோடி அரசு வந்ததும் இந்த நாட்டில் என்ன நடக்கிறது? புனே உட் பட நாட்டில் கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படு கிறது. இதற்கு காரண மான இயக்கங்களையும், அபினவ் பாரத் உட்பட அனைத்து இயக்கங்களை யும் தடை செய்ய வேண் டும் என்று கர்ஜித்த குர லில், பல இடைமறியல் களுக்கு மத்தியில் சலிக்கா மல் சமாளித்து பதில் கொடுத்து நாடாளுமன் றத்தில் பேசியுள்ளார் அசத்துன் உவைசி!

Read more: http://viduthalai.in/page-2/82230.html#ixzz34l7rJtnW

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர்கள் பட்டினி!

ஆந்திர மாநிலம் தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள கோயில் - ராமன் கடவுளுக்குப் பூஜைகள் செய்யும் போது ஸ்ரீ ராமச்சந்திர நமஹ என்று பாராயணம் செய்யாமல் ஸ்ரீராம நாராயண நமஹ என்று அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி வருகிறார்கள். இதனைச் செவியுற்ற பக்தர்கள் இதுபோல் சொல்லக் கூடாது என்றார்கள் அர்ச்சகர்கள் இதனை ஏற்கவில்லை. கோயில் அதிகாரிகளிடம் பிரச்சினை சென்றது.

இனிமேல் ஸ்ரீ நாராயண நமஹ என்ற மந்திரத்தைச் சொல்லக் கூடாது; ஸ்ரீராமச்சந்திர நமஹ என்று தான் கூற வேண்டும் என்று அர்ச்ச கர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

இதனை அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டு வரும் மந்திர வாசகத்தை மாற்ற முடியாது என்று கூறி பட்டினி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. ஆனால் கடவுளை எப்படித் துதிப்பது என்பதில் குஸ்தி நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வளவுக்கும் ராமன் யார் என்றால் நாராயணனின் (விஷ்ணுவின்) அவதாரம் தானாம் - இதில் நாராயணப் பெயரைச் சொன்னால் குடியா மூழ்கிப் போகும். வைணவர்களுக்குள் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்று நீதிமன்றம் செல்லவில்லையா? சரி... அந்த இராமச்சந்திரமூர்த்தியாவது இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று பக்தர்கள் கனவிலும், அர்ச்சகர் கனவிலும், அதிகாரிகளின் கனவிலும்தான் சொல்லித் தொலைக்கக் கூடாதா? அது என்ன செய்யும்? அதுதான் குத்துக் கல்லாயிற்றே! அதனால் என்ன செய்ய முடியும்? மறைந்த கணபதி ஸ்தபதி சொன்னாரே - கடவுளை யார் கண்டது? நாங்கள் வடித்து வைத்தது தானே என்று சொல்லவில்லையா!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oC7gzmd

தமிழ் ஓவியா said...

சபாஷ் சரியான முயற்சி!

பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்க்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் (என்.எல்.சி.) கல்வித் துறை சார்பில் கட்டாய தற்காப்புக் கலை கடந்த ஆறு மாதமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது என்பது நல்லதோர் தகவலாகும். ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் கட்டாய தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படுகிறது. பெரியார் கல்வி நிறு வனங்களிலும் பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது.

கோலம் போடுதல், கும்மியடித்தல் போன்றவை களைப் பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குஸ்தி, கைக் குத்து போன்றவற்றைச் சொல்லித் தர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு சொன்னதை இன்று நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இல்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oCEsAp1

தமிழ் ஓவியா said...

ஆட்சித் தலைவர் ஆகும் பார்வையற்ற பெண்

சென்னை அண்ணா சாலை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் படித்த பெனோ ஷெபைன் என்ற பெண் அய்.ஏ.எஸ். தேர்வில் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் என்னும் நிலைக்கு உயர்கிறார்! பாராட்டுகள் - வாழ்த்துக்கள். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அது எவ்வளவுத் துல்லியமானது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கண் பார்வையற்றவர் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பிறவி ஊனத்தைக் கர்மப் பலன் என்று நெஞ்சில் இரக்கமின்றிக் கூறி வரும் கருத்துக் குருடர்களுக்கும் இது ஓர் மரண அடியே!

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் நெல்சன் பிரியதர்சினி வெற்றிக்கும் நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oCKEvct

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பஞ்சகவ்யம்

பஞ்ச என்றால் ஐந்து, கவ்ய(ம்) என்றால் பசுவிடமி ருந்து அல்லது பசுவினுடை யது என்று பொருள். பசுவிலிருந்து கிடைக்கப்படும் ஐந்து பொருட்களை சரியான விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவை பஞ்சகவ்யம் எனப்படும். பால், தயிர், நெய், கோமி யம், கோமயம் (பசுஞ் சாணம்) ஆகியன பசு விடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட் களாகும். இந்த ஐந்து பொருட் களுக்கும் பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றைச் சுத்தி செய்யும் திறன் உள்ளது. பால் ஆகா சத்தைச் சுத்தி செய்யும். தயிர் வாயுவைச் சுத்தி செய்யும். நெய் அக்னி யைச் சுத்தி செய்யும். கோமியம் ஜலத்தைச் சுத்தி செய்யும். கோமயம் ப்ருதிவியைச் சுத்தி செய்யும். மனித சரீரம் பஞ்ச பூதங்களால் உருவான படியால் மேற் கூறியபடி, பால், சோர்வடைந்த ஆத்ம (பிராண) சக்தியைச் சீர் செய்யும். தயிர், சீர்கெட்டுப் போன வாயுவை சரி செய்யும். நெய், உஷ்ணச் சீர் கேட்டைச் சரி செய்யும். கோமூத்திரம், நீர்க்கட்டு சம்பந்தப்பட்ட உபாதைகளைச் சரி செய்யும். கோமயம், உடம்பில் உள்ள அசுத்த மலங்களை நீக்கும்.

பஞ்சகவ்யத்தை உட் கொள்வதால் ஆத்ம சுத்தியும், சரீர சுத்தியும் அடைய முடியும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பஞ்சகவ்யத்தை உட்கொள்வதால் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி வலு வடைகிறது என்ற நம்பிக்கை யும் நிலவி வருகிறது. செடி களுக்கும் பயிர்களுக்கும் செயற்கையான நச்சுப் பொருட்கள் அடங்கிய உரங் களைத் தவிர்த்து, பஞ்சகவ் யத்தை உரமாக உபயோகிப்ப தன் மூலம் இயற்கை விவசாய மும் வெற்றிகரமாக நடக்கிறது. - தி தமிழ் இந்து

மாட்டின் கழிவுப் பொருள்களான சாணியையும், மூத்திரத்தையும் உணவுப் பொருள் களான பால், தயிர், நெய் யோடு கலப்பது என்பது முத லில் கலப்படக் குற்றம்.

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதும் மாட் டுச் சாணியைத் தின்னச் சொல்வதும்தான் ஆன்மிகமா? இந்தக் கலவையை சோதனைச் சாலையில் பரி சோதிக்கச் செய்தால் அதன் முடிவு எதுவாக இருக்கும்? பக்தி வந்தால் புத்தி போகும் என்பது இது தானோ!

Read more: http://viduthalai.in/e-paper/82261.html#ixzz34oCSwE9J

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்வயிற்றெரிச்சல்

செய்தி: எம்.பி.பி.எஸ். கட் ஆஃப் மார்க் மொத்தம் - 132 பேர் 200-க்கு 200 வாங்கி யிருக்காங்களாம்! நீங்க வேணா பாருங்க, வரப் போற வருஷங்கள்ல இது 200-க்கு 205, 210,215.. ன்னு அதிகரிச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை...!
- தினமணி 16.6.2014

சிந்தனை: 200-க்கு 150, 155, 160 என்று வாங்கி இருந்தால் இவாளுக்குச் சந்தோஷமா இருந்திருக்கும். சூத்ராள் பஞ்சமா எல்லாம் 200-க்கு 200 வாங்கிட்டாளே... வயிறு எரியாதா இலாளுக்கு!)?

ராஜநாகம்

செய்தி: செங்கம் அனுபாம் பிகை ஷபேஸ்வரர் கோயில் பூஜையின் போது அம்பாள் சன்னதியில் ராஜநாகம் புகுந்து படம் எடுத்தது - தீயணைப்பு துறையினர் வந்து பிடித்துச் சென்றனர்.

சிந்தனை: சன்னதியில் புகுந்தது சாதாரணமா? அதைப் பிடித்துச் சென்றது தெய்வ குற்றம் என்று ஏன் யாரும் சொல்லவில்லை? ஓ, பாம்பு என்றால்தான் படை யும் நடுங்குமே!

Read more: http://viduthalai.in/e-paper/82266.html#ixzz34oCg6kC4

தமிழ் ஓவியா said...


நெஞ்சு பொறுக்கு தில்லையே!நாள் தோறும் ஏடுகளைப் புரட்டும் போது தவறாமல் ஒரு செய்தி மட்டும் வெளி வந்து கொண்டேதான் இருக்கிறது. அதுதான் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்படுவதாகும்.

மத்தியப் பிரதேசத்தில் கணவனே தனது கூட்டாளி களை ஏவி, தன் மனைவியைச் சீரழித்ததுடன் நிர்வாண மாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றான் என்பதும் அந்தவூரில் உள்ள எந்த ஒரு மனிதரும் அவனைத் தடுக்கவில்லை என்பதும் நாம் நாகரிக உலகத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை நள்ளிரவில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றெல்லாம் செய்தி வருகிறது. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் சூறையாடப்பட்டார் என்ற போது தலை நகரமாம் டில்லியே கொந்தளித்து எழுந்தது.

இதுபோன்ற பிரச்சினைகள் நடக்கும்பொழுது அது பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிக்க வேண்டுமா? ஏன் அமைதியாக இருந்து விடக் கூடாது? நம் பெண்களின் கவுரவத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கிறோம் என்று இதோபதேசம் செய்கிறார் பிரதமர் மோடி அவர்கள். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்து, பெரிய கொந்தளிப்புத் தீயை விசிறி விட்டதில் பிஜேபிக்குப் பங்கு இல்லையா?

டில்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு பிஜேபி சங்பரிவார், ஆம்ஆத்மி அமைப்புகள் டில்லியையே ஸ்தம்பிக்கச் செய்தனரே!

இன்றைக்கு பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கணவனே தன் மனைவியைச் சீரழித்து நிர்வாண ஊர்வலம் நடந்திருக்கிறது என்றவுடன் பிரதமர் வேறு குரலில் பேசுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பான்வாரி என்ற சமூக சேவகி - குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் என்பதற்காக உயர் ஜாதியினர் அந்தப் பெண்ணைச் சூறையாடினர். அப்பொழுதும் அங்கு நடந்தது பிஜேபி ஆட்சிதான். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனை செய்து உரிய நேரத்தில் சான்று கொடுப்பதற்கு மருத்துவரும் முன்வரவில்லை.

கடைசியில் நீதிமன்றம் என்ன தீர்ப்புக் கூறியது தெரியுமா? உயர் ஜாதி பிராமணர்கள் கீழ் ஜாதிப் பெண்ணைக் கற்பழித்து இருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்? என்று நீதிபதிகளே தீர்ப்பில் சொல்லவில்லையா? மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது தானே இது!

மத்தியப் பிரதேசத்தில் இப்பொழுதுதான் இந்தக் காட்டு விலங்காண்டித்தனம் நடைபெறுவதாக யாரும் கருதத் தேவையில்லை. 1998 செப்டம்பர் 25இல் நடந்த குரூரம் அது! ஜாபுலா கிராமத்தில் கிறித்தவர்கள் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வந்தார்கள். நள்ளிரவில் கதவைத் தட்டி மருத்துவமனையில் புகுந்த சங்பரிவார்க் கும்பல் நான்கு கன்னிகாஸ்திரிகளை கதறக் கதற பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார்கள்.

அதைவிட வன்கொடுமை எது தெரியுமா? தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளைஞர்களின் கோபம் என்று அதனை வருணித் தவர் பி.ஜே.பி.யின் முன்னாள் மக்களவை உறுப்பினர் வைகுந்தலால் சர்மா.

இவற்றையெல்லாம் பார்த்துதான் மேற்குவங்க அன்றைய முதல் அமைச்சரும் மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிபாசு ஹிஸீநீவீஸ்வீறீவீமீபீ ஙிக்ஷீமீயீஷீக்ஷீநீமீ (அநாகரிகமான காட்டுமிராண்டிக் கும்பல்) என்று மிகச் சரியாகவே சொன்னார். இப்பொழுதுள்ள பிரதமரோ பெண்கள் மீதான இத்தகு வன்கொடுமைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்து அவர்களின் கவுரவத்துடன் விளையாட வேண்டாம் என்று கூறுகிறார்.

மக்கள் மன்றத்தில் பெண்கள்மீதான இந்தப் பிரச் சினை விவாதிக்கப்பட்டே தீர வேண்டும். இதற்கொரு தீர்வைக் கண்டே ஆக வேண்டும். இதுபோன்ற குற்றங் களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகள், வழமையான முறையில் காலங் கடத்தாமல் உடனுக்குடன் நீதி வழங்கப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டாக வேண்டும்; பெண்களும் தற்காப்பு பயிற்சிகளையும் சட்டத்திற்குட்பட்ட ஆயுதங்களையும் கைவசம் வைத் திருக்க வேண்டும். நாலு இடத்தில் உதைப்பட்டார்கள் கயவர்கள் என்றால் பரிகாரம் தானாகக் கிடைக்கும் - ஈரோட்டு மருந்தே சரியான தீர்வாக இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/82269.html#ixzz34oD0C2OH

தமிழ் ஓவியா said...


திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும். - (விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/82268.html#ixzz34oD6q5qu

தமிழ் ஓவியா said...


திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனையடுத்து மகத்தான மனிதநேயம்!


மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது

சென்னை, ஜூன் 17_ காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் பொறி யியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிவந் தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரு டைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் கொடை யாகக் கொடுக்க முடி வெடுத்தனர். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் பொறியாளர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்ப வரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப் பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இரு தயக் கொடை பெறுவதற் காக அவருடைய குடும்பத் தினர் எதிர்நோக்கியிருந் தனர்.

லோகநாதனின் இருத யத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இரு தயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருடன் ஆலோ சனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவ மனையில் பிரித்து எடுக்கப் பட்டன. இதில் 20 மருத் துவர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித் தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அள வில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம் புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் போக்கு வரத்து காவல்துறையினர் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தைச் சீர்படுத் தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 விநாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு மருத் துவர் குழுவினர் இத யத்தை அறுவைச் சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண் கள் எழும்பூர் கண் மருத் துவமனைக்கும், 2 சிறுநீர கங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல் லீரல் வேலூர் அரசு மருத் துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் கொடையாக கொடுக்கப் பட்டன. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கண்ணீரு டன் கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று மருத் துவர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காண முடியும் என்று கருதினேன். எனவே அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந் தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும் என்றார்.

2008 ஆ-ம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத் தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன் மூலம் தமிழகத்தில் இது வரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரை யீரல்கள், ஒரு கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் ஒரு தோல் ஆகியவை கொடை யாகப் பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இத யங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் கொடை யாக பெறப்பட்டவை என் பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் கொடைய ளிப்பதில் முதலிடத்தில் உள்ளது.

குறிப்பு: 2008இல் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் மகனான ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்குப் பொருத் தப்பட்டது தெரிந்ததே!

Read more: http://viduthalai.in/e-paper/82326.html#ixzz34wWRbVUV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்! தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம்.

ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ்வொரு வரும் ஒரு குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள்!

குடிஅரசு வருட சந்தா 3-0-0
பகுத்தறிவு வருட சந்தா 1-0-0
மேற்படி இரண்டும் சேர்த்து
வரவழைப்பவர்க்கு 3-8-0
விடுதலை வாரம் இருமுறைக்கு வருடம் 1-க்கு 3-10-0

இப்பத்திரிகைகளைப் படித்தால்தான் அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள் வேண்டுமென்றே செய்யும் பொய்யான விஷமப் பிரச்சாரத்தின் யோக்கியதையை அறியக்கூடும். - (விடுதலை 18.4.1937 பக்.22)

இதனைப் படிக்கும் பொழுதே - பலருக்கும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலை மனதிற் கொண்டு சொல்லப்பட்டதாகக் கூடத் தோன்றக் கூடும்.

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றபோது தந்தை பெரியார் சொன்னவை -16ஆவது மக்களவைத் தேர்தலில் நீதிக்கட்சியின் வழி வந்த திமுக தோல்வியடைந்துள்ள இந்த நிலையில் மிகச் சரியாகவே பொருந்துவதைக் கவனிக்கத் தவறாதீர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பார்ப்பன ஊடகங்கள் எப்படி நடந்தனவோ, அதுபோலவே 1937ஆம் ஆண்டிலேயே இந்தப் பார்ப்பன ஊடகங்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டுள்ளன என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அவர்கள் எப்பொழுதுமே நமக்கு எதிர்ப் பக்கம்தான்!

அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள் என்று 77 ஆண்டு களுக்குமுன் தந்தை பெரியார் கூறினார்.

இன்று அதே நோக்குக்காக விடுதலைக்குச் சந்தா சேர்ப்பீர் என்ற வேண்டுகோளைத் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ளார்.

தோழர்களே! விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் இறங்கி விட்டீர்களா? உங்கள் மாவட்டத்துக்குள்ள இலக்குகளை நிறைவேற்றுவதில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

இம்மாத இறுதிக்குள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பீர்! முடிப்பீர்! உதவாதினி ஒரு தாமதம் - உடனே புறப்படுவீர் மானமிகு தோழர்களே!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/82337.html#ixzz34wXbCaR8

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுவதும் மது விலக்காம்

இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நல்லது; மத்திய அரசு பிஜேபி கையில் தானே இருக்கிறது - இந்தியா முழுவதும் மது விலக்கைச் செயல்படுத்தும் வகையில் பொது சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே - யார் தடுத்தது? முதற்கட்டமாக பிஜேபி ஆளும் மாநிலங் களில் கொண்டு வந்து காட்டி, முன் மாதிரி நாங்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள்தான் என்று மார் தட்டலாமே!

ஒரு சேதி தெரியுமா? 2014 ஏப்ரல் 30ஆம் தேதி ஏடுகளில் வெளி வந்ததுதான்.

மோடி முதல் அமைச்சராக இருந்த போது குஜராத்தில் 23 லட்சம் மதுப் பாட்டில்கள் பறி முதல் என்பது தான் அந்தச் செய்தி. இதன் பொருள் என்ன? காந்தி பிறந்த மாநிலத்தில், மோடி ஆண்ட மாநிலத்தில்தான் இந்த லட் சணம்! இந்த நிலையில் இராம.கோபாலன்வாள் இப்படி யெல்லாம் பேட்டி கொடுக்கிறார். அவாள் பேட்டி கொடுத்தால் அப்படியே வெளியிடக் கூடிய அவாள் ஊடகங்களும், தொங்கு சதைகளான நம்மவாள் ஊடகங் களும்தான் இருக்கின்றனவே. இந்த நிலையில் அவாள் கொட்டாவி விட்டாலும் சேதியாக நான்கு பத்தி செய்தியாக வெளிவரும்தான்.Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYLaCmb

தமிழ் ஓவியா said...

டாஸ்மாக் பிரச்சனை

இன்னொரு முக்கிய தகவல் நாள்தோறும் ஏடுகளில்; டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் நடத்தும் போராட்டம்தான் அது. பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாடும் முக்கிய கடை வீதிப்பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இருப்பது பெரும் தொல்லையாக இருக்கின்றன. பெண்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடிய வில்லை. ஆங்காங்கே குடித்து விட்டுக் கலாட்டா செய்கின்றனர். எனவே கடைகளை ஊருக்கு வெளியே வைக்க வேண்டும் என்பது தான் பெண்களின் கோரிக்கை, பெண்கள் மத் தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

டாஸ்மாக் கடையை எங்கே வைப்பது என்பது குறித்து தெளிவான வழிமுறைகள் கூறப்பட்டு இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி அனுமதி வழங்குவது யார்?
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதி கரிப்பதற்குக் காரணம் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான், எனவே நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

விதிகளும், ஆணைகளும் வெறும் காகிதக் குப்பைகள்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYYAxm8

தமிழ் ஓவியா said...

பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப் பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடற் கரையில் அவர்களுக்கே உரிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான காவல்துறை அனுமதியைப் பெறவில்லை. இந்த நிலையில் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து சென் னையைச் சேர்ந்த சங்பரிவார்க் கூட்டமும், பிஜேபியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள் ளனர். பழனி உள்ளிட்ட வேறு சில இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பொது இடத்தில் இது போன்ற பயிற்சி களைச் செய்யக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கைகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி என்றாலே அது வன்முறைக்கான பயிற்சி தான். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட! இந்த நிலையில் காவல்துறை தன் கட மையைச் செய்துள்ளது. இதனைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்த்துப் போராடுவது எப்படி சரி? மத்தியில் ஆட்சிக்கு வந்து விட் டார்கள் அல்லவா? அந்தத் தைரியம் தான்!

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYiDLfJ

தமிழ் ஓவியா said...


தமிழைப் புறக்கணித்த மெட்ரிக் பள்ளிகள்


தமிழைக் கட்டாயமாக்கும் கல்வித் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார். 2006 ஆம் ஆண்டில் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 2006-2007ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் பகுதி ஒன்று மொழிப் பிரிவில் தமிழ்க்கட்டாயம் என்பது சட்டத்தின் நிலை.

அதற்கடுத்து முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் தமிழ்க் கட்டாயம். இவ்வாறு படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழ்க் கட்டாயமாக்கப்படும். அதன் மூலம் 2015-2016ஆம் கல்வியாண்டின் போது பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.) மொழித் தேர்வில் பகுதி ஒன்றில் தமிழ்க் கட்டாயமாக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

இந்த சட்டத்தில் எந்தவித குழப்பத்திற்கும் இடம் இல்லை. மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.

அரசின் இந்தச் சட்டத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வராத சில தனியார்ப் பள்ளிகள் சிக்கலுக்குள் விழி பிதுங்கி நிற்கின்றன.

அரசின் சட்டப்படி தமிழை மொழிப் பிரிவில் கற்பிக்காத பள்ளிகளின் மாணவர்கள் 2015-2016 கல்வியாண்டின்போது தமிழ்க் கட்டாயத் தேர்வு என்று வரும் பொழுது திண்டாட வேண்டிய நிலையாகும்.

இந்த நிலைக்குக் காரணம் மாணவர்கள் அல்லர் - பள்ளி நிருவாகிகள்தான்; அரசின் சட்டத்தை அலட்சியமாகக் கருதி தமிழைப் போதிக்காதவர்கள் இப்பொழுது பெரும் அச்சத்துக்கு ஆளாகி விட்டனர். 2015-2016 ஆம் ஆண்டில் தமிழ்த் தேர்வை மாணவர்கள் எழுதியாக வேண்டுமே. இவ்வளவுக்கும் அரசின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு தமிழ்க் கற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தவர்கள்தான் இவர்கள்; சொன்னபடி நடந்து கொள்ளாமல் வேறு மொழிகளைக் கற்பித்து வந்தனர்.

இதிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் சென்றுள்ளனர்.

மாணவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; பெற்றோர்கள் சும்மா விடுவார்களா? அதற்காகத்தான் இந்த நீதிமன்றப் பிரவேசம். 2006ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியபோதே - இந்தத் தனியார் கல்வி நிறுவ னத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்குச் சென்று முட்டி மோதிப் பார்த்தவர்கள்தான்.

அவ்விரு நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசின் சட்டம் சரியானதே என்று ஆணி அடித்ததுபோல் தீர்ப்பு வழங்கிய பிறகும், இவர்கள் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு, தமிழுக்குப் பதிலாக வேற்று மொழிகளைப் பயிற்றுவித்தனர் இது. நீதிமன்ற அவ மதிப்பு மட்டுமல்ல; மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கச் செய்யக் கூடிய அபாயகரமான செயலாகும்.

2015 - 2016 பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கோரி தனியார் பள்ளி நிருவாகிகள் சார்பில் இப்பொழுது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதில் நீதிமன்றம் தெளிவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் 2006ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கூறிய பிறகு - அதற்கு மாறாக நீதிமன்றம் நடந்து கொள்ள முடியாதல்லவா?

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். கலைஞர் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதற்காக வழக்கினை ஏனோதானோ என்று நடத்திடக் கூடாது.

அதே நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? பள்ளி நிருவாகம் செய்த தவறுக்கு மாணவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்?

இரு தலைக்கொள்ளி எறும்பு என்பார்களே - அந்த நிலைதான் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் இதற்கொரு தீர்வு காண வேண்டும். வேறு பிரச்சினையாக இருந்தால்கூட கொஞ்சம் அலட்சியமாக இருந்து விடலாம்; இது மாணவர்களின் கல்விப் பிரச்சினையாயிற்றே!

ஒன்று மட்டும் உண்மை. அரசின் சட்டத்தையும் நீதிமன்றங்களின் தீர்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு, இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களே, மாணவர் களின் கல்வியிலும் விளையாடி இருக்கிறார்களே - இது மன்னிக்கப்படவே முடியாத ஒன்றாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/82346.html#ixzz34wZ5sCST

தமிழ் ஓவியா said...


குற்றால அருவியிலே குளிப்பதுபோல் இருக்குது!முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பதின்வயதில் பங்கேற்ற நினைவு! ஒருநாள் இருநாள் அல்ல. ஒரு வாரகால பெரியாரியல் பயிற்சிப்பட்டறை!.

கழகத்தலைவர் தமிழர்தலைவர், துணைத்தலைவர் கவிஞர், பெரியார் பேருரையாளர்கள் இராமநாதன், இறை யனார், ஆசான், துரைச்சக்கரவர்த்தி, மற் றும் துரைசந்திரசேகரன் என நீண்ட பயிற் சியாளர்களைக் கொண்ட களம் அது.
முப்பத்தேழு ஆண்டுகளைக்கடந்து பொன்விழாவை நோக்கி இதோ முப்பத்தி எட்டாவது ஆண்டில். திராவிடர் கழகத் தின் சார்பில் அதே குற்றாலத்தில் வருகிற 26.6.2014ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் என விடுதலை செய்தி வெளியிட்டிருக்கிறது.

கேரள அரசுக்குச்சொந்தமான பயணி யர் மாளிகையில் தான் பெரும்பாலும் அப்போது பயிற்சிவகுப்புகள் நடக்கும். பயிற்சி முடிந்த அன்றே அடுத்த ஆண்டுக்கான தேதியை கழகப் பொறுப் பாளர்கள் முன்பதிவு செய்து விடுவார்கள் வெப்பந்தணிக்கும் உயர்ந்த கட்ட டம்.அதையும் தாண்டி நம்மை சூடேற்றும் வரலாற்று வகுப்புகள். பாடங்கள் அனைத்தும் இன்றும் பசுமையாய் .உங் களில் எத்தனை பேர் அனுபவித்திருக் கிறீர்கள்? எவ்வளவு பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்திருக் கிறீர்கள்?

மானமும் அறிவும் ஊட்டி நம்மை தலைநிமிரச்செய்த தத்துவத்தலைவர் பெரியாரை, ஆண்டாண்டுகாலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழ்ச்சமூகத்தின் அடிமை விலங்கொடித்த அற்புத இயக் கத்தின் ஆற்றல் மிகு செயல்பாட்டை, நம்மை சூழ்ந்து கிடக்கும் காவிஇருள் சூழலை நம் பிள்ளைகள், இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண் டாமா? இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப் பல்லவா?

குற்றாலக் குளியலோடு கலந்த கொள்கைப் பாடக் குவியல்! பாட்டி வடை சுட்ட கதைகள் பரிணாமவளர்ச்சி அடை யலாம். பரங்கிக்காரனை வாஞ்சிப் பார்ப்பான் சுட்ட கதையை திரிக்க விடலாமா? ஆஷ்துரையை வாஞ்சி அய்யர் சுட்டதன் நோக்கம் என்ன? நாடார் இனப்பெண்கள் தோள்சீலை அணியவே தடை! நாடகக் கொட்டகை யிலும், பேருந்திலும் தாழ்த்தப்பட்டவர் கள் அனுமதி மறுப்பு! இப்படி எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகள். அன்றைக்கு இவற்றை எந்தப் புத்தகத்தில் படித்தோம்? நம் பகுத்தறிவுப் பேராசிரி யர்கள் பயிற்றுவித்தப் பாடங்கள் தான் இன்றும் பசுமரத்தாணிபோல் மனதில் பொதிந்து கிடக்கின்றன.

அடடா அரிய வாய்ப்பு! கறுப்புடை தரித்து பயிற்சிக்களம் காண புறப்படுங்கள்! குற்றாலத்தில் சந்திப்போம்!.

இடம்: வீ.கே.என் மாளிகை, குற்றாலம்.

- கி.தளபதிராஜ்

Read more: http://www.viduthalai.in/page-2/82359.html#ixzz34wZJWvMY

தமிழ் ஓவியா said...

முக நூல் ஜோக்!

தேர்தல் முடிந்தும் கூட, மோடி குறித்த தேர்தல் பிரச்சாரத் தகவல்கள் பறிமாறப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது மாத தேர்தல் புனித யாத்திரையில், அவர் மூன்று லட்சம் கிலோ மீட்டர் தொலைவு அயராது பயணம் செய்திருக்கிறார்; 440 கூட்டங்கள் உட்பட 5187 நிகழ்ச்சி களில் பங்கேற்றிருக்கிறார். இவையெல்லாம் இன்றும் ஊடகங்களில் தொடரும் அம்சங்கள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முகநூலில் அண்மையில் வெளி வந்திருக்கும் ஜோக்: மோடி பதவி ஏற்றார். முதல் நாளிலேயே அவர் ரஷ்யாவை விலைக்கு வாங்கி விட்டார். உக்ரேன் நெருக்கடி தீர்ந்தது. சிறுமிகளைப் பிடித்துச் சென்ற போக்கோ பயங்கரவாதிகள் சிறுமிகளைத் திருப்பித் தந்து விட்டு, அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து விட்டனர். கதைகளில் வரும் கதாநாயகர்கள் போன்று மோடியின் தோற்றமும் மாறி வருகிறது. ரஜனிகாந்த் போன்று மோடியும் ஒரு கதாநாயகனாக மாறி வருகிறாரோ என்னவோ?

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்கு போராடிய ரோசா லக்சம்பர்க்


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமை களில் ஒருவர் ரோசா லக்சம்பர்க். அவர் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் மூன்று புரட்சிகளில் பங்கேற்றவர். சிந்தனையாளர். புரட்சியாளர். எழுத்தாளர்!

1871இல், ரஷ்ய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்தில் பிறந்தார் ரோசா. 5 வயதில் இடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருடைய காலில் ஊனம் நிரந்தரமானது. பள்ளியில் படிக்கும்போதே நிறைய விஷயங்களை ஆர்வத்தோடு அறிந்துகொண்டார். நிறைய சிந்தித்தார். எதையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார்.

1889இல், லியோ ஜோகித்சே நட்பு கிடைத்தது. இருவரும் நிறையப் பேசினார்கள். விவாதித்தார்கள். 1893இல், ரோசாவும் ஜோகித்சேவும் சேர்ந்து தொழிலாளர் குரல் பத்திரிகையை ஆரம்பித்தனர். போலந்தில் இருந்த சோசலிசக் கட்சியின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து எழுதினார் ரோசா.

1898இல், ஜெர்மனைச் சேர்ந்த குஸ்தாவ் லூபெக்கைத் திருமணம் செய்துகொண்டு, ஜெர்மனியில் குடியுரிமை பெற்றார் ரோசா. அங்கு, சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து வேலை செய்தார். இந்தக் காலகட்டத்தில் ரோசா உலக அளவில் மார்க்சிஸ்ட் சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டார்.

1905இல், ரஷ்யா சென்ற ரோசா, அங்கு நடைபெற்று வரும் புரட்சியை நேரில் கண்டார். லெனினைச் சந்தித்தார். போலந்திலும் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. வார்சா திரும்பியவர் தன் கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைத்தார். அரசாங்கம் ரோசாவைச் சிறையில் அடைத்தது.

முதல் உலகப் போருக்கான ஆயத்தங்கள் ஜெர்மனியில் நடைபெற்று வந்தன. பாட்டாளி மக்கள் உலகப் போரை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ரோசா போராடிக் கொண்டிருந்தார். 1919இல், கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பர்க் தலை மையில் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

ஜெர்மனியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. 1919 ஜனவரி 15 அன்று ரோசாவையும் கார்ல் லீப்னெக்ட்டையும் ஃப்ரிகோர்ப்ஸ் என்ற ராணுவம் கைது செய்தது. ஓட்டோ ரூஞ்ச் என்ற ராணுவ வீரன் ரோசாவை துப்பாக்கியால் அடித்து கீழே தள்ளினான். ஹெர்மன் சூக்கோன் சுட்டுக் கொன்றான். அவரது உடல் லாண்ட்வெர் கால்வாயில் வீசப்பட்டது.

கார்ல் லீப்னெக்ட்டும் சுட்டுக் கொல்லப் பட்டார். 47 வயது வரையே வாழ்ந்தாலும் தெளிவான சிந்தனை, துணிச்சல் மிக்க போராட்டங்கள் மூலம் பாட்டாளி மக்களின் விடிவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் ரோசா லக்சம்பர்க். அவருடைய பெயரில் லக்சம்பர்க் தத்துவம் இருக்கிறது. இன்று பெண் விடுதலையின் அடையாளமாக ரோசா உலகம் முழுவதும் அறியப்படுகிறார்!

Read more: http://www.viduthalai.in/page-7/82314.html#ixzz34waicHgu

தமிழ் ஓவியா said...

இன்னும் எழுகிறேன்

என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்
புழுதியில் போட்டு மிதித்தாலும்
அணுத்துகள் போல் எழுகிறேன்
இன்னும் மேலேமேலே

உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?
என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?
எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை?

உலவும் நிலவாக
உதிக்கும் சூரியனாக
உறுதி அலைகளாக
உயர்கின்றன என் நம்பிக்கைகள்
அதனால்
எந்நிலையிலும் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே...

உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து
கண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய
ஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்க
என் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?
மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்
என் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை
வெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்
அந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை?

சொற்களால் என்னைச் சுட்டு விடலாம்
கண்களால் என்னைப் பிளந்து விடலாம்
வெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்
ஆனாலும் காற்றாய் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே!

என் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்துக் கொண்டு
நான் ஆடுவதுபோல் திகைக்கிறீர்களா?

வரலாற்றின் அவமானக் குடிசையிலிருந்து
நான் எழுகிறேன்
கடந்த கால வலியின் ஆழத்திலிருந்து
நான் எழுகிறேன்

நான் கருங்கடல்
திகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு
இன்பமும் எழுச்சியும் ஏந்திய
அகன்று குதிக்கும் அலைகளாய்
நான் எழுகிறேன்
களங்கமில்லாத விடியலை நோக்கி
நான் எழுகிறேன்
அடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக
என் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...

தமிழில்: அருள்பேரொளி

தமிழ் ஓவியா said...

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கையாம்


- மயிலாடன்

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மெய்ம்மறந்துகிடந்தோம்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

ஒருவர் பந்து வீசுவார்; இன்னொருவர் அடிப்பார். மற்றொருவர் பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார். எல்லைக்கோட்டருகில் நிற்பவர்களோ ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கால் பந்தாட்டமோ, ஹாக்கியோ அத்தகையதல்ல; ஒவ்வொரு நொடியிலும் இரு அணிகளைச் சேர்ந்த 22 பேர்களும் சுறுசுறுப்புடன் அதிவேகத்துடன், பரபரப்பாகத் தயார் நிலையில் இருந்து தீரவேண்டியவர்கள்.

ஆனால், மூடநம்பிக்கை மற்ற போட்டிகளில் முட்டி மோதுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் உண்டு. கானா அணிக்கும், உருகுவே அணிக்கும் நடைபெற்ற போட்டியின்போது கானா அணியைச் சேர்ந்த ஒருவர் அடித்த பந்து கோல் நோக்கிப் பறந்தது. அந்த நேரத்தில் உருகுவே நாட்டு அணியின் லூயிஸ் சாரஸ் என்பவர், அந்தப் பந்தைக் கோலுக்குள் போகாமல் கையால் தடுத்துவிட்டார் (கோல் கீப்பரைத் தவிர மற்றவர்கள் கையில் தடுத்தால் அது குற்றமாகும்). செய்த குற்றத்துக்காக நடுவரால் சாரஸ் வெளியேற்றப்-பட்டார் என்றாலும், இதுகுறித்து சாரஸ் என்ன கூறினார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அந்தப் பந்தைக் கையால் நான் தடுத்தது குற்றம்தான். அப்படிச் செய்திராவிட்டால், அந்தப் பந்து எங்கள் கோலுக்குள் போயிருக்கும். நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். எனவே, அந்தப் பந்தை என் கைதான் தடுத்தது என்றாலும், அது என் கையல்ல, கடவுளின் கை! அதுதான் தடுத்தது என்று சமாதானம் கூறினார்.

பொதுவாக, தவறு செய்பவர்கள் அதற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்காமல் கடவுளின்மீது பழி போடுவது பொறுப்பற்ற வாடிக்கைதான். அந்தக் குற்றத்தைத்தான் உருகுவே ஆட்டக்காரரான சாரசும் செய்தார்.

ஒரு கேள்வி, கையால் பந்தைத் தடுத்தது குற்றம் என்பது அவருக்கே தெரியும். தெரிந்திருந்தும், பந்தைத் தடுத்தது கடவுள் கை என்றால், தவறுக்குத் துணை போகக்கூடியவர் கடவுள் என்று விளங்கவில்லையா? விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுக்கம் தேவையில்லையா?

சரி, அவர் கைதான் கடவுள் கையாயிற்றே, அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? அவர் அணி அடுத்த போட்டியில் ஏன் தோற்றது? கடவுள் சக்தி அவ்வளவுதானா? அட, பரிதாபத்திற்குரிய கடவுளே, பக்தர்களே உங்களை நினைத்தால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

ஸ்பெயின் 5_1 என்ற கோல்களில் டென்மார்க்கை வென்றது. இங்கிலாந்து பராகுவேயையும், பிரேசில் போலந்தையும் வீழ்த்தின. மேற்கு ஜெர்மனி 1_0 என்ற கோலில் மொரோக்கோவையும், மெக்சிகோ பல்கேரியாவையும் வீழ்த்தின. காலிறுதியில் பிரான்ஸ் பிரேசிலை வீழ்த்தியது. பெல்ஜியம் ஸ்பெயினை வெளியேற்றியது. மேற்கு ஜெர்மனி மெக்சிகோவை வெளியேற்றியது. அர்ஜென்டினா 2-_1 என்ற கோல்களில் இங்கிலாந்தை வென்றது. அர்ஜென்டினாவின் முதல் கோல் கடவுளின் கை போட்ட கோல் என்று பின்னால் மரடோனாவால் வர்ணிக்கப்பட்டது. தனியாக வானில் வந்த பந்தைப்பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷெல்டனும், அதைத் தன்வசப்படுத்த மரடோனாவும் வானில் தாவினர். ஆனால் மரடோனா அந்தப் பந்தை தனது கையால் குத்திக் கோலாக்கினார். நடுவரும் லைன்ஸ்மேன்களும் அதைக் கவனிக்கவில்லை. அடுத்து மரடோனா அடித்த கோல் அபாரமான கோலாகும். உலகின் சிறந்த கால்பந்து வீரரான மரடோனா கடைசி வரை இந்தக் கோலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. அரை இறுதியில் மேற்கு ஜெர்மனி 2_-0 என்ற கோல்களில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 2-_0 என்ற கோல்களில் பெல்ஜியத்தை வென்றது. இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா 3_-2 என்ற கோல்களில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஃபிபா கோப்பையைக் கைப்பற்றியது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் என்ற உணர்வு தவறு செய்வதைத் தடுக்கவில்லை; மாறாக தவறு செய்பவர்கள் தப்பிக்கத் துணைப் போகிறது. இதன் மூலம் ஒழுக்கக்கேட்டுக்கு அரணாகத்தானே இருக்கிறது. இதுகுறித்து எந்த ஆன்மிகவாதிகளும் வாய்திறப்பதில்லையே _ ஏன்?

குறிப்பு: 2014-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டம் ஜூன் 13 அன்று தொடங்குகிறது

தமிழ் ஓவியா said...

பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்

பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதவிக்கும் பாபநாசம்

தாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா?

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.

இதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்!
வரலாற்றுப் பாட நூல்களைத்
திரிக்கும் அவலம்

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும்.

பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) அனுப்பியதன் மூலம் கணக்கைத் தொடங்கியுள்ளார் தினநாத் பத்ரா என்பவர். இதையடுத்து அந்த நிறுவனம் அதனுடைய பல்வேறு நூல்களை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. இவற்றுள் கல்வியாளர் மேகா குமார் எழுதியுள்ள 1969லிருந்து அகமதாபாத்தில் நடக்கும் மதவாதம் மற்றும் பாலியல் வன்முறை என்ற நூலும் மறு ஆய்வு செய்யப்படும் நூல்களின் பட்டியலில் இருப்பதாக ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் அவருக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. இந்த நூல் 1969, 1985 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது முஸ்லிம் மதப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த கல்வியியலாளரான தனக்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட மாறுதல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் மேகா குமார்.

சரி, யாரிந்த தினநாத் பத்ரா?

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யபாரதி கல்வி குழுமங்களின் பொதுச் செயலாளராக இருந்தவர் தினநாத் பத்ரா. தற்போது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். வித்யபாரதி பயன்படுத்தும் பாடநூல்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், குழந்தைத் திருமணம், சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இந்தியக் கலாச்சாரம் என்பது போலவும் இன்னமும் பல மூடநம்பிக்கை களைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியவர் தினநாத் பத்ரா.

வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் உள்ள தகவல்களை எதிர்த்து (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) எதிராக 2006ஆ-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவரும் இவரே! அவ்வழக்கு பழங்காலத்தில் ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள் என்று பாடநூலில் இருப்பதை எதிர்த்து பதியப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கருத்தைப் பாடநூலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆ-ம் ஆண்டு அன்றைய மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தினநாத் பத்ராவின் அறிவுரைப்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து பாலியல் கல்வியை நீக்கினார். மேலும், பாலியல் கல்வியைப் போதித்தால் சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி டெல்லி பள்ளி ஆசிரியர்களுக்குக் கடிதம் அனுப்பியது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி.

2008ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ராமாயணம் தொடர்பான ராமானுஜனின் கட்டுரையை நீக்க வழக்குத் தொடர்ந்தவர்களில் தினநாத் பத்ராவும் ஒருவர்.

2010ஆம் ஆண்டு, இந்துக்கள் தொடர்பான வரலாற்று நூலை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்து ராஷ்டிரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்ட பிரான்ட்லைன் ஆசிரியர் இந்து ராமுக்கு எதிராகவும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார் தினநாத் பத்ரா.

இப்படித் தொடரும் செயல்களுக்கு மத்தியில் இப்போது நவீன இந்திய வரலாறு குறித்து சேகர் பந்தோபாத்யாய எழுதி ஓரியன்ட் பிளாக்ஸ்வான் வெளியிடும் நூலுக்கு எதிராகவும் தினநாத் பத்ரா கிளம்பியுள்ளார். சேகர் பந்தோபாத்யாய எழுதியுள்ள நவீன இந்திய வரலாறு குறித்த நூல் மிகச் சிறந்த வரலாற்று நூல், அந்த நூலைத் தடை செய்ய யாராவது முயன்றால், அது இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக அமையும். தினநாத் பத்ராவுக்கு அந்த நூலில் பிரச்சினை இருந்தால் அந்த நூலைத் தடை செய்வதற்குப் பதிலாக அந்த நூலுக்கு மறுப்பாக ஒரு நூலை எழுதட்டும் என்று கூறியுள்ளார் பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா.

தினநாத் பத்ராவின் சட்ட அறிவிக்கையை அடுத்து தனது பல நூல்களை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் மறுஆய்வு செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது எண்ணற்ற வரலாற்று, சமூக சிந்தனை யாளர்களைக் கவலையடைய வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டல்களின் மூலமாக வரலாற்றைத் திரிக்க முயலும் மதவாத அமைப்பினரின் செயல்கள், ராமச்சந்திர குகா சொல்லியுள்ளது போல, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாகவே அமையும்.

- திராவிடப் புரட்சி

தமிழ் ஓவியா said...

விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்!


எச்சரிக்கைக் குரல் எழுப்பிய
திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு


திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப நிலைதான்.

நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கிய புரா திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்தக் கருத்தின் அடிப் படையில் தான் தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள 67 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ஆசிரியர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் ஆய்வு செய்து அங்கும் புரா திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீடு, நீர் சேமிப்பு, விவசாயிகளுக்கான இழப்பீடு, மானியம் முறையாகச் சென்றடைதல் உள்ளிட்ட தீர்மானங்களுடன் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைதல், ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு முதியோர் காப்பகங்கள் போன்ற இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான 12 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்று விவசாயத்தை வாழ வைக்க வேண்டும்; அல்லது விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை வாயாரப் புகழ்ந்துவிட்டு அவர்களது வாழ்வை உறிஞ்சக் கூடாது என்று ஒலித்த குரல் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சி பேசும் அத்தனைப் பேருக்குமான எச்சரிக்கையும் அறைகூவலும் ஆகும். திருவாரூர் மாநாடு பெரியார் பார்வையில் புதிய அணுகுமுறையில் விவசாயிகளைப் பார்த்திருக்கிறது; இனி வழிகாட்டும்.