Search This Blog

5.6.14

பார்ப்பானாவது தமிழனாவது என்று மேதாவித்தனமாக பேசுவோர் சிந்தனைக்கு...


 

29.5.2014 அன்று சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மை யார் அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கார்டுவெல் 200ஆம் ஆண்டு  விழா வும், எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர் களின் 106ஆம் ஆண்டு விழாவும் திராவிடர் கழ கத்தின் சார்பில் நடை பெற்றன.

அவ்விழாவில் பேசிய முகம் ஆசிரியர் மாமணி அவர்கள் கூறிய ஒரு தகவல் முக்கியமானது - சுவையானதும் கூட!

நாரண துரைக்கண்ணன் அவர்கள் 8ஆம் வகுப்பு வரைதான் படித்தார்; குடும்பச் சூழல் அதற்குமேல் அவரால் படிக்க முடியவில்லை. ஆனால், தமிழ் ஆர்வம், இலக்கிய ஆர்வம் சிறு வயதிலேயே அவரை ஆட்கொண்டன. ஏதாவது ஒரு வேலையைத் தேடித் தீர வேண்டிய பொருளதார நெருக்கடி.

அந்த நிலையில் சென்னை கிருஷ்ணாம் பேட்டையில் ஓர் அச்சகத்தில் பிழை திருத்துபவ ராகச் சேர்ந்தார் அந்த நேரத்தில் தமிழ்த் தாத்தா என்று மெச்சப்படும் உ.வே. சாமிநாதய்யரின் நூல் ஒன்று அச்சாகிக் கொண்டு இருந்தது. நாராண. துரைக் கண்ணன் அந்த நூலில் இடம் பெற்ற ஒரு தவறைக் கண்டுபிடித்துத் திருத்தி மறுபடியும் அச்சடிக்கச் செய்தார்.

தமிழ்த் தாத்தா நூலிலேயே தவறா? அதை இவர் கண்டுபிடித்தாரா? பலரும் புருவத்தை உயர்த்தினர். அதன் பிறகு அங்கு வந்த உ.வே.சா.விடம் நடந்ததைச் சொன்னபொழுது, பையன் சொல்லுவது சரி தான்! என்று பாராட்டினார்.

உனக்கு என்ன உதவி வேண்டும்? என்று கேட்ட போது, சாமி, எனக்குத் தமிழ் இலக்கியங்களை தாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பார்க்கலாம் என்று சொல்லி விட்டுச் சென்றவர்தான் - பதிலே இல்லை.
உ.வே.சா.வின் உதவியாளரிடம் என்ன எந்தவித தகவலும் வரவில்லையே? என்று கேட்டபோது, அந்த உதவியாளர் என்ன சொன்னார் தெரியுமா? அது தான் முக்கியம்.

அவர் (உ.வே.சா) சூத்திரன் மகாவித்துவான்  மீனாட்சி சுந்தரத்திடம் பாடம் படித்துக் கொள்ளலாம். ஆனால் இவரோ அப்பிராமணனுக்குச் (சூத்திரனுக்குச்) சொல்லிக் கொடுக்க மாட்டாராம்! என்று கொந்தளித்தார் உ.வே.சாவின் உதவியாளர்.

நாரண. துரைக் கண்ணனுக்கு முதல் அடி விழுந்தது இதயத்தில்! என்றார் முகம் மாமணி.

பார்ப்பானாவது தமிழனாவது என்று மேதாவித் தனமாக பேசும் பேர் வழிகள் சிந்திப்பார்களாக!

------------------ மயிலாடன் அவர்கள் 5-6-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...


ஜெர்மனியில் தமிழர் தலைவர்: விமான நிலையத்தில் வரவேற்பு


ஜூன் 2ஆம் தேதி காலை சென்னை யில் புறப்பட்ட தமிழர் தலைவரும், பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் கி. வீரமணி, துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகிய இருவரும் ஓமான் விமானம் மூலம் மஸ்கட் வழியாக மாலை 6.30 மணிக்கு (ஜெர்மானிய நேரம்) பிராங்க்பர்ட் பன்னாட்டு விமான நிலை யத்திற்கு வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரித் நித்லஸ், (பேராசிரியர் மற்றும் தலைவர் தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய இந்தியயியல் மற்றும் தமிழ் உயராய்வு நிறுவனம்) மற்றும் இத்துறையில் பணி யாற்றும் சுவன் ஓர்ட்மான் ஆகிய இருவரும் வந்து வரவேற்று தங்கள் வருகை வருங்காலத்தில் பல நல்ல பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக அமையுமெனக் கூறி மகிழ்ந்தனர்.

பின்னர் பிராங்பர்ட்டிலிருந்து 250 கி.மீ. தொலைவில் இருக்கும் கொலோன் நகருக்கு ஜெர்மானியில் இயங்கும் அதி வேக ரயில் மூலம் (அய்ம்பது நிமிடங்களில்) அழைத்துச் செல்லப்பட்டார்கள். மேலும் இந்த நிகழ்வு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் கொலோன் பல்கலைக் கழகமும் 2012ல் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

பின்னர் கொலோனில் உள்ள இபிஸ் என்ற (Hotel IBIS) தங்கும் விடுதியில் தங்கி மற்ற பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

- என்னார்சி

Read more: http://viduthalai.in/e-paper/81573.html#ixzz33ojMKRzA

தமிழ் ஓவியா said...


23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை! மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி


பூனாவில் மதவெறி வன்முறையாட்டங்களில் முதற்பலி

23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை!

மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி

பூனா, ஜுன் 5- மோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை முகநூலில் தக வல் தொழில்நுட்ப பட்ட தாரி வாலிபரான 23 வய துள்ள மொஹ்சின் சாதிக் ஷேக் என்பவர் பதிவு செய்ததாக (எந்தவித ஆதா ரமும் இல்லை) குற்றம் சுமத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா மத வெறியர்களால் பூனா வின் பல்வேறு பகுதி களிலும் வன்முறை வெறி யாட்டங்கள் அரங்கேற்றப் பட்டன. இந்த வன்முறை வெறியாட்டங்களில் சிவ சேனைக்கட்சி, பாஜக, ஹிந்து ராஷ்டிர சேனா உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டனர். தர்மவீர் சிதை சாம்பாஜி மகராஜ் என்ற பெயரில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளது (31.5.2014).

வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு ஷேக் உயிரி ழந்ததை அடுத்து, முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது என்கிற குறுஞ்செய்தியை இந்துத்துவாவாதிகள் 25பேர் முதலில் அலை பேசிகள்மூலமாக பரப்பி உள்ளனர் என்று பூனாவின் காவல்துறை இணை ஆணையர் சஞ்சய்குமார் கூறுகிறார்.

குறுந்தாடியுடன் பச்சை நிற பதானி குர்தா அணிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஷேக்கை வழிமறித்து பூனா வுக்கு வெளியே ஹடாப்சர் பகுதியில் இருசக்கர வண் டியிலிருந்து கீழே தள்ளி விட்டு ஹாக்கி விளை யாட்டுத் தடியால் ஷேக்கின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர்மீது கல் எறிந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பதற்றமான அந்த பகுதியில் 12 மணி நேரத்துக் கும் மேலாக காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக் உடனிருந்த உறவி னர் ஒருவர் காயமின்றி தப்பியோடி மேலும் இருவரை அழைத்து வந்து ஷேக்கைக் காப்பாற்ற முயன்றுள்ளார். காப்பாற்ற வந்த அமீன் ஷேக்(30), இஜாஸ் யூசூப் பக்வான்(25) ஆகிய அவர்களும் தாக் கப்பட்டு காயமடைந்தனர்.

சிவாஜியின் சிலை சேதமானதாக ஏற்பட்ட வதந்தியை அடுத்து, ஹிந்து பெண் முசுலீம் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் வதந்தி பரவியதைத் தொடர்ந்து வன்முறைக் கும்பல் ஒன்று சேர்ந்து பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது. கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில், கைது செய்யப்பட்ட 13 பேரில் ஏழுபேர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களில் ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவரான தனஞ்செய் தேசாய்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தாக் கியவர்களின் இரு சக்கர வண்டிகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள் ளனர். வண்டிகளின் ஆவ ணங்களின்படி மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். பூனா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அனைவரை யும் ஜுன் 9ஆம் தேதிவரை காவலில் அடைக்க உத்தர வானது. கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக பூனா வைச்சுற்றி உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ராஷ்டிர சேனாவின் தலை வரான தேசாய்மீது பல் வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

கல வரங்களில், வன்முறையில் ஈடுபட்டு பணம்பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற் றங்களின் பின்னணியைக் கொண்டுள்ளவர் ராஷ்டிர சேனாவின் தலைவரான தேசாய் ஆவார்.

குறிப்பு: சமூகக் கல வரம் நடைபெற வேண் டும் என்ற தீய நோக்கத் தோடுதான் இந்த முகநூல் பதிவு நடந்துள்ளதுஎன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும். (கலவரம் பற்றிய விரிவான தகவல்கள் 2ஆம் பக்கத்தில் காண்க).

Read more: http://viduthalai.in/e-paper/81570.html#ixzz33ojZnChy

தமிழ் ஓவியா said...


முயல வேண்டும்தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க் கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயல வேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/81581.html#ixzz33ok3R1tI

தமிழ் ஓவியா said...


அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்


- குடந்தை கருணா

முக நூலில் மராட்டிய மன்னன் சிவாஜி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குறித்து கேலி செய்து சித்திரங்கள் வெளிவந்ததை எதிர்த்து, புனேயில், சிவசேனா மற்றும் ஹிந்து ராஷ்டிர சேனா என்கிற அமைப்பும் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை யில் கல் எறிந்து கலவரம் செய்ததில் 250 பேருந்துகள் நொறுக்கப்பட்டன; மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர். காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முகநூல் செய்தியை வெளியிட்டது யார் என ஆரம்பத்தில் தெரியாத நிலையில், குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் தான் என திட்டமிட்டு, மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர், ஹிந்து ராஷ்டிரா சேனா எனும் வன்முறைக் கும்பலால் தாக் கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

சமூகக் கலவரம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த முக நூல் பதிவே நடந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை கருத்து கூறி உள்ளது. இந்த முகநூல் 2013-இல் துவக்கப் பட்டுள்ளது.

பொய்யான முகவரியை உருவாக்கி, ஆரம்பத்தில், பொது வான செய்திகளை வெளியிட்டு, பலரையும் விருப்பம் உடையவர் களாக ஆக்கி, இறுதியாக, இந்த பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்றுதான், உத்தரபிரதே சத்தில், பொதுத்தேர்தல் நடைபெறு வதற்கு சில மாதங்களுக்கு முன், முசாபர்நகர் கலவரம் உருவாக்கப் பட்டது; போலியான வீடியோ தயாரிக்கப்பட்டு, அதில் இரு சிறு வர்களை, ஒரு வன்முறைக் கும்பல் அடிப்பது போன்று தயாரித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்; கலவரம் உரு வாயிற்று. உண்மை என்னவென்றால் அந்த வீடியோ காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ் தானில் நடைபெற்ற ஒரு கலவரத்தின் வீடியோ என பின்னர் தெரிந்தது. ஆனால், அதற்குள், கலவரம் நடை பெற்று, சிறுபான்மையினர், வீட்டை துறந்து, முகாம்களில் தங்கினர்; வாக்கு அறுவடையை யார் பெற் றனர் என அனைவருக்கும் தெரியும்.

அஸ்ஸாமிலும், மியான்மரிலும், இஸ்லாமியர்கள் மீதான தாக் குதலைக் கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில், ஆகஸ்டு, 2012-இல் நடத்தப்பட்ட பேரணி, கலவரமாக மாறியது. இருவர் இறந்தனர். இதன் காரணமாக, தாங்கள் தாக்கப்படு வோம் என பயந்து, தென்னிந்தியா வில், குறிப்பாக, கர்நாடகாவில் வேலை பார்த்து வந்த வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து, ஆயிரக்கணக்கில் அஸ்ஸா மிற்கும், பிற பகுதிக்கும் சென்றனர். தற்போது, பொதுத் தேர்தலில், முதல் முறையாக பாஜக, அஸ்ஸாமில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற் றுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மகாராஷ்டிரா மாநிலத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகளை, சங் பரிவார் தொடங்கிவிட்டது. இதன் பாதிப்பு, அடுத்து, பீகார், ஜம்மு காஷ்மீர் என தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக் கும் செல்லும் என்பது உறுதி.

அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்.

எது திட்டமிட்டு நடந்ததோ, அது நன்றாகவே திட்டமிட்டு நடந்தது.

எது திட்டமிடப்பட்டு நடக்கி றதோ, அது நன்றாகவே, திட்ட மிடப்பட்டு நடக்கிறது.

எது திட்டமிடப்பட்டு நடக்க இருக்கிறதோ, அதுவும், திட்டமிடப் பட்டு நன்றாகவே நடக்கும் - எச்சரிக்கை.

Read more: http://viduthalai.in/page-2/81592.html#ixzz33okBUdAw

தமிழ் ஓவியா said...

சின்ன சேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனாம்சின்னசேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினராம்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் குரும்பர் தெருவில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரபத்ரசாமியை குல தெய்வமாக வணங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊரணி பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

அப்போது, அவர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து வீரபத்ரசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாம்
அதன்படி நேற்று வீரபத்ரசாமிக்கு ஊரணி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, வீரபத்ரசாமியை மலர்களால் அலங் கரித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து, தோட்டப்பாடி காட்டுப்பகுதியி லிருந்து இன்னிசை மேள தாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நிகழ்ச்சி கோவில் வளாகத்தை வந்த டைந்தது. பின்னர், தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வரிசையாக அமர்ந்தனர். அப்போது கோவில் பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி னாராம்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33om5uziw

தமிழ் ஓவியா said...

பொம்மிடி அருகே இரு சக்கர வாகனம்மீது காட்டுப்பன்றி மோதி கோவில் புரோகிதர் சாவுதருமபுரியில் இரு சக்கர வாகனம்மீது காட்டுப் பன்றி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கோவில் புரோகிதர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கொண்ட காரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60) கோவிலில் புரோகிதராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை புது வீடு திறப்பு விழாவிற்காக ராமமூர்த்தியை பொம்மிடியிலிருந்து முத்தம்பட்டிக்கு வீட்டு உரிமையாளர்களான நஞ்சப்பன், பழனி ஆகி யோர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மங்கலம் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும்போது காட்டுப்பன்றிக் கூட்டம் சாலையின் குறுக்கே வேகமாக வந்ததாம்.

காட்டுப்பன்றிக் கூட்டத்தின்மீது மோதாமல் இருக்க, இரு சக்கர வண்டியை திருப்பிச் செலுத்தி யுள்ளனர்.

மூர்க்கமாக இருந்த பன்றிக் கூட்டம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மூவரையும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாம்.

இதில் படுகாயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் கோவில் அர்ச்சகர் புரோகிதர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.

பன்றி மோதி உயிரிழந்த கோவில் அர்ச்சகப் புரோகிதரை கடவுள் காப்பாற்றவில்லையே என அனைவரும் புலம்பிக் கொண்டே சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33omBAfuI

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

இன்று உலகு சுற்றுச் சூழல் நாள். (ஜூன் 5). அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் உட்பட பகிரங் கமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறதே இது எப்படி!?

Read more: http://viduthalai.in/e-paper/81577.html#ixzz33omTQ43t

தமிழ் ஓவியா said...


கடவுள் அப்பீல் தள்ளுபடி


கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ublZC4K

தமிழ் ஓவியா said...


கடவுள் அப்பீல் தள்ளுபடி


கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ublZC4K

தமிழ் ஓவியா said...

புத்தரின் வாக்கியம்

1. ஒரு விஷயத்தை நல்லதென்றாவது கெட்ட தென்றாவது கேள்வி மாத் திரத்திலேயே நம்பி விடாதே

2. உண்மையாக நடந் திருக்காவிட்டால் எழுதியி ருப்பார்களா என்கிற காரணத் தினாலாயே ஒன்றை உண்மை யானது என்று நம்பிவிடாதே.

3. அநேக இடங்களில் வழங்கப்பட்டு பாரம்பரியமாக நடந்து வருகிற அய்தீகம் என்கிற காணத்திற்காக ஒன்றை நம்பி விடாதே.

4. அநேகர் நம்பி அதன்படி நடக்கிறார்களே என்கிற காரணத்திற்காக உண்மை என்று நம்பி விடாதே.

5. ஒரு மகாத்மாவால் வரையப்பட்ட கதை என்று காட்டப்பட்டதினாலேயே நம்பி விடாதே

6. நமக்கு ஒன்று ஆச்சரியமாய் தோன்றப் படுவதி னாலேயே இது தேவனாலோ அல்லது அற்புதமான ஒருவனாலோ ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு விடாதே.

7.பெரியோர்களாலும் குருமார்களாலும் சொல்லப் பட்டது என்கிற காரணத்தினாலேயே நம்பி விடாதே.

8. ஒவ்வொரு விஷயங்களையும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி செய்து சகலருக்கும் நன்மை தரத்தக்கதா யிருந்தால் அப்பொழுது அதை ஒத்துக் கொள், ஒத்துக் கொண்டபடியே நட.

- குடிஅரசு - 3.7.1927

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ubyY8Vx

தமிழ் ஓவியா said...


பள்ளியில் நடந்த கதை


நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறி னாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33uc9PEHv

தமிழ் ஓவியா said...விதி விதி என்று கூறி வீண்பொழுது கழிப்பார்கள், கேவல மான அடிமை உள் ளம் உடையவர்கள். முயற்சி செய்: முனைந்து உழை; ஓயாது பணியாற்று; வெற்றி நிச்சயம்.

-எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucGWplp

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் ஏழையா?

1-4-1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சங்கராச்சாரி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது திருமதி. அனந்தநாயகி குறுக்கிட்டு சங்கராச்சாரியார் கால்நடையாகச் சென்று பக்தியை பரப்பி வருகிறார். அவரைப்பற்றி கணக்குப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று கேட்டார்.

அதற்கு அமைச்சராக இருந்த திரு. மு.கண்ணப்பன் அளித்த பதிலாவது:- சங்கராச்சாரியார் கால்நடையாகப் போகிறார் என்பதால் அவர் ஏழை என்று அர்த்தம் அல்ல. அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 3/4 லட்சம் ரூபாய் வருகிறது. மேலும் கால்நடையாகப் போவதற்கும் கணக்கு வைப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucLtEpD

தமிழ் ஓவியா said...

சர்க்கார் ஆட்சேபிக்காது!

ராமாயணம் வெறும் கட்டுக்கதை - பொய்: ராமன் கடவுள் அல்ல என்றெல்லாம் எவர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் தடையில்லை..

நம் நாட்டில் தொன்று தொட்டு மத சம்பந்தமாக எவ்வளவோ வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஒப்புக் கொண்டவர் சிலர்; ஆட்சேபித்தவர்கள் சிலர்; அதனால் மதத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை சர்க்கார் ஆட்சேபிக்க வில்லை.

- நிதி அமைச்சர், 9-12-1954, (சென்னை சட்டசபையில்)

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucRTXkF

தமிழ் ஓவியா said...


விசித்திரமான நம்பிக்கை!


மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81640.html#ixzz33ucYqBOn

தமிழ் ஓவியா said...

அடடே!

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை வைத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரபல கேரள ஜோதிடர் கூறியுள்ளாராம்; அப்புறம் என்ன அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான்.

எச்சரிக்கை!

நொறுக்குத் தீனிகளை சதா தின்று கொண்டே இருக்க குழந்தைகளை அனுமதியாதீர். அதுபோல மென் பானங்களைக் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்காதீர்!

இதனால் சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நாம் செயல்படுவோம்! என்ற இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81647.html#ixzz33ucqf5hW

தமிழ் ஓவியா said...


மனிதன்பலவிதக் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
- _ (விடுதலை,9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/81651.html#ixzz33udE8B00

தமிழ் ஓவியா said...


மனித நேயம் மரித்துவிட்டதா?


நவிமும்பை ஜூன் 6 நவிமும்பை யில் உள்ள கலம்போலியில் இருந்து டோம்பிலிவிக்கு மகராஷ்டிரா மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது, அந்தப்பேருந்தில் சோனாலிப் பாட்டில் என்ற பெண் நடத்துநர் வழிநடத்திக்கொண்டு வந்தார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக நெரிசல் இல்லாமல் இருந்தது. அப்போது மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆலைத்தொழிலாளி பேருந்தில் ஏறி வாசலிலேயே நின்று இருக்கிறார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக பேர் ஏறுவார்கள் ஆகையால் அந்த நபரை சோனாலி பாட்டில் படிகட்டின் மீது நிற்காமல் மேலே ஏறக்கூறினார். பல முறைகூறியும் மேலே ஏறாமல் இருக்கவே அவரைக் கண்டித்தார். உடனே கோபமடைந்த அந்த நபர் பெண் நடத்துநர் என்றும் பாராமல் அவரைத் தாக்கத் தொடங்கினார். இது அத்தனையும் அந்த பேருந்தின் பல பயணிகள் முன்பு நடந்துகொண்டு இருந்தது, இதனிடையே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், அந்த நடத்துநரைக் பேருந்தை விட்டு கீழே தள்ளி அவரது ஆடையை கிழித்து உதைத்துள்ளார். பேருந்தை நிறுத்தி விட்டு காப்பாற்றச்சென்ற ஓட்டுநரை யும் பொதுமக்கள் அருகில் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். சம்பவம் நடந்துகொண்டு இருந்த போது மற் றோரு அரசுப்பேருந்தும் அந்த இடத் தைக் கடந்து சென்றது.

இந்த நிலையில் நடத்துநர் அருகில் சென்ற வேறு ஒரு அரசுப் பேருந்தை நிறுத்தி சம்பவத்தைக் கூறியதும், அந்த பேருந்தின் ஓட்டுநரும் பெண் நடத்துநரும் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தனர். பிறகு அவரை டோம்பிலி மான் பாடா காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர். தாக்குதலுக்கு இலக்கான பெண் நடத்துநர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அந்த பெண் நடத்து நர் முதலுதவிக்குப் பிறகு மருத்துவ மனையில் இருந்து வீடு சென்று விட் டார். அபிசேக் சிங் மீது இபிகோ 353 பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி யது, இபிகோ 323 கொலைமுயற்சி, இபிகோ 506 மற்றும் 427 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம், கல்யாண் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றக்காவலில் வைக்க ஆணையிட்டார் இதன் படி அவர் கல்யாணில் உள்ள அந்தர்வாடி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 பேருந்து பயணிகள் முன் பாக ஒரு பெண் நடத்துநர் தாக்கப்பட்ட போதும் யாரும் தடுக்க முன்வராதது நாட்டில் மனித நேயம் செத்துவிட்ட தாகவே கருதவேண்டி இருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/81654.html#ixzz33udYQIjA

தமிழ் ஓவியா said...


இப்படியும் நடக்கிறதே!


மகாராட்டிரத்தில் பூனாவுக்கு அருகில் உள்ள கர்ஜத் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றுவரும் குழந்தைகள் இல்லத்தில் மனிதக் கழிவுகளை உண்ணச்செய்து பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளதாக அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்ஜத் பகுதியில் சந்திரபிரபா அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் இல்லத்தை அஜித் தபோல்கர் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இவரின் உதவியாளர் லலிதா டாண்டே என்பவர் ஆவார். குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளில் 5வயதிலிருந்து 15வயதுவரை உள்ளவர்களில் சிலர்மீது பாலியல் வக்கிரக் கொடுமைகள் செய்துள்ளனர். அத்துடன் நிற்காமல் பசியால் வாடிய குழந்தைகளை மனிதக் கழிவுகளை உண்ணச்செய்துள்ள கொடுமையையும் செய்துள்ளனர்.

இவை அனைத்தையும் படமும் பிடித்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகளுக்கான சமூக ஆர்வலர்கள் தகவல் கிடைத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பூனா மற்றும் ராய்காட் குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் (Child Line)
தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏறத்தாழ ஒரு மாதமாக இந்த விவகாரம்குறித்து ரகசியமாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. அந்த குழந்தைகள் இல்லத்தில் வறுமையான குடும்பத்திலிருந்து மொத்தம் 30குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூன்று குழந்தைகள் மட்டுமே தற்போது இல்லத்தில் உள்ளனர். மற்றவர்கள் கோடை விடுமுறைக்கு சென்றுவிட்டனர். தன் குழந்தையை அந்த இல்லத்தில் சேர்த்துள்ள ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அப்பெண் வீட்டுவேலை செய்வதால் குழந்தையை இல்லத்தில் சேர்த்துள்ளார்.

அவர் வேலைசெய்துவரும் வீட்டில் இதுகுறித்து தெரிவித்து எழுத்துமூலம் புகாராகக் கொடுத்துள்ளார். இதனையடுத்தே குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதேபோல் ஆறு குழந்தைகள் எழுத்துமூலமாக புகாரை அளித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நிர்வாகியும் உதவியாளரும் அலிபாக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் இல்ல விவகாரத்தை அடுத்து, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து காப்பகங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page5/81758.html#ixzz346DGKhcO

தமிழ் ஓவியா said...


பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கை


பாம்புகள் பழிக்குப் பழியாக பழி வாங்கும்னு சொல்றது உண்மையா?

(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. பொதுவா பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இதமான இருப்பிடம் தேடித்தான் எதிர்பாராம வீட்டுக்குள்ள புகுந்துடுது. அப்புறம் இயற்கையான அதோட வாழ்விடங்களை மனுசங்க குடியிருப்புப் பகுதியா மாத்திட்டு வர்றாங்க. அதுவும் ஒரு காரணம்.

எதிரிகளை எத்தனை வருசமானாலும் நினைவில் வைத்து- பாதிக்கப்பட்ட நல்ல பாம்பு பழி வாங்கும்னு சொல்றதும்; கொம்பேரி மூக்கன் பாம்பு... பழி வாங்கிட்டு சுடுகாடு வரை போய் பார்க்கும்னு சொல்றதும்கூட கட்டுக் கதைகள்தான்

அது சரி... பச்சைப் பாம்பை தொட்டவர்களின் சமையல் ருசிக்கும் என்பது?

இதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான்! இது உண்மையா இருந்தா கேட்டரிங் படிப்பே தேவையில்லையே? ஒரு பச்சைப் பாம்பை மட்டும் வெச்சுக்கிட்டு எல்லோருக்கும் கை ருசியான சமையல் கலையை கத்துக் கொடுத்திடலாமே!

இந்தவகைப் பாம்பு கண்ணை குறி வெச்சுத் தாக்கும்கிறதுகூட தவறானதுதான். நம்மளோட கண்களை வண்டு என்று தவறாக நினைத்துதான் சிலநேரம் கொத்துவதுண்டு

(20,000 பாம்புகளை இதுவரை பிடித்த பூனம் சந்த் அளித்த பேட்டி (ராணி - 8.6.2014)

Read more: http://viduthalai.in/page6/81760.html#ixzz346DyvSkT

தமிழ் ஓவியா said...


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


2006ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோய் தாக்கியபோது தமிழகப் பொது சுகாதாரத்துறை ஓர் ஆய்வினை மேற்கொண்டது. கருநீலம், கரும்பச்சை, கருப்பு போன்ற வண்ண உடைகள் கொசுக்களை ஈர்ப்பதால் அம்மாதிரி உடை அணிபவர்கள் கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதாகக் கண்டறிந்தோம். ஒரு சிலரை மட்டும் சிக்குன்குனியா தாக்குவது ஏன் என்ற கேள்ளிக்கு விடை கிடைத்தது என்கிறார் அப்போது அத்துறைக்கு இயக்கு நராக இருந்த டாக்டர் இளங்கோ.இரவில் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இந்திய பொது சுகாதார அமைப்பு IPHA - Indian Public Health Association- Tamilnadu பரிந்துரைக்கிறது. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த புளியந்தோப்பு, அண்ணா நகர், முகப்பேர், போரூர், அடையார், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 100 பேர்களைத் தேர்ந்தெடுத்து 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 பிப்ரவரி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உறங்கச் செல்வ தற்கு முன் ஒரு குளியல் போட வேண்டும். பூண்டு சாப்பிட்டவர் களை நெருங்க பிற மனிதர்களுக்கு மட்டு மல்ல, கொசுக்களுக்கும் தயக்கம் இருக் கிறது. இரவுஉணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை அவை நெருங்குவ தில்லை. அதே சமயம், ஆல்கஹால் உட் கொள்பவர்களைக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தோலில் உள்ள நுண்ணுயிர்கள் பலவிதமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை வியர்வையுடன் கலந்து உருவாக்கும் ஒருவித மணம் கொசுக்களை ஈர்க்கிறது. படுப்பதற்கு முன் குளியல், உணவில் பூண்டு சேர்ப்பது, ஆல்கஹால் உட் கொள்வது போன்றவை இந்த மணத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களே கொசுக்களை ஈர்ப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்கிறது மேற்கண்ட ஆய்வு.

(ஆதாரம்: 2014 மார்ச் 26 தேதியிட்டஆங்கில இந்து நாளிதழில் திருமிகு செரீனா ஜோசஃபைன் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page8/81763.html#ixzz346F1cKEI

தமிழ் ஓவியா said...


கோககோலா, பெப்சி - எச்சரிக்கை!


உலக சுற்றுச்சூழலை கோக கோலா, பெப்சி உள்ளிட்ட 10 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்திக் கெடுத்து வருகின்றன என்று ஆஸ்பாம் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

உலகம் முழுவதும் இப்போதுகாற்று, தண்ணீர் போன்ற சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபட்டு விட்டது. சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைப்பது அரிதாகி விட்டது. முன்பு இலவசமாக கிடைத்து வந்த சுத்தமான குடிநீரை தற்போது மக்கள் பணம்கொடுத்து வாங்கிக் குடித்து வருகிறார்கள். சுற்றுசூழல் மாசு இப்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க உலக நாடுகள் தங்கள் வழியில் தீவிரமாக முயன்று வருகின்றன.இந்த சூழ்நிலையில் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ஆஸ்பாம் உலக சுற்றுச்சூழல் கெடுவதற்கு 10 பெரிய நிறுவனங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து ஆஸ்பாம் அமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளர் எரிச்சகான் கூறியதாவது:- உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை அசோசியேட் பிரிட்டிஷ் புட்ஸ், கோக கோலா, பெப்சிகோ, டெனேன்,நெட்ஸ்லே, ஜெனரல் மில்ஸ், கெல்லோக், மார்ஸ், யுனிலீவர், மான்ட்லெஸ் ஆகிய 10 பெரிய நிறுவனங்கள் கெடுத்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் நிறுவனங்களை விட தனி மனிதர்கள் பங்குமிக முக்கியமானது. நமது பூமியைபாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க தவறினால் வருகிற 15 ஆண்டுகளில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 44 சதவிகிதம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page8/81764.html#ixzz346F8bvae

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


முடி காணிக்கை எதற்காக?

இறைவனைத் தரிசிக்கும்போது எனது அகங்காரம் நீங்க வேண் டும். அதற்காக அழகுடன் நான் பராமரிக்கும் முடியை அர்ப்பணிக் கிறேன் என்பது அதன் தத்துவம்.

முகத்துக்கு அழகு மூக்கும் முழியும் தானே! அவற்றைக் காணிக் கையாக அளித்தால் அகங்காரம் மட்டுமல்ல; மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) ஒட்டு மொத்தமாக அகலாதா?

Read more: http://viduthalai.in/page1/81726.html#ixzz346FWNTdI

தமிழ் ஓவியா said...


எச்சரிக்கை!தமிழ்நாட்டில் கடந்த சனவரி முதல் ஏப்ரல் வரை யில் சாலை விபத்துகளில் 5078 பேர் பலியாகியுள் ளனர். இதில் சென்னையில் மட்டுமே 366 பேர்களாம்.
சாலை விதியைப் பின் பற்றா விட்டால் சாவைத் தான் அழைக்க நேரிடும் குறைந்தபட்சம் தலைக் கவசம் (ஹெல்மட்) அணியக் கூடாதா?

Read more: http://viduthalai.in/page1/81725.html#ixzz346Fg5uVJ

தமிழ் ஓவியா said...


குழந்தை திருமணமா?


சென்னை அரும்பாக்கத்தில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்த நமது காவல்துறை பாராட்டுக்குரியதே.

தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் எனக்குத் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனக்குத் திருமண வயது இன்னும் வரவில்லை; என்னைக் காப்பாற்றவும் என்று காவல்துறைக்குக் குறுந்தகவல் அனுப்பினார். தகவல் அறிந்த அமைந்த கரை காவல் துறையினர் அந்த வீட்டுக்குச் சென்றனர். திருவேற்காடு கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடைபெறவிருந்ததை உறுதி செய்தனர்.

சிறுமியைப் பெற்றோர்களிடமிருந்து மீட்டு சென்னை ஷெனாய் நகரில் உள்ள இந்தியக் கவுன்சில் ஆஃப் சைல்டு வெல்பர் பொறுப்பாளரிடம் ஒப்படைத் தனர் பள்ளிப் படிப்பைத் தொடர உதவுவதாகக் காப்பகப் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இது ஏதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கவனத்திற்கு வராமலேயே பெற்றோர்களின் அழுத்தத்தால் திருமண வயதை அடையாத பெண்களுக்குத் திருமணம் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இது மாதிரி திருமணத்தை நடத்தத் துடிக்கும் பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை இருந்தால்தான் - இதுபோன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட முடியும்; இல்லா விட்டால் வேறு மாதிரியான எண்ணம்தான் பெற்றோர்களுக்கு ஏற்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிதம்பரத்தில் தீட்சதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம்.

சிதம்பரம் நடராஜன் கோயில் திரண்ட சொத்துக்கள் தீட்சதர்களின் ஆதிக்கத்தில்தானே இருந்து வருகிறது. அந்தச் சொத்துகள் வெளியில் போகக் கூடாது என்பதற்காகவே குழந்தைத் திருமணங்களைத் தங்களுக்குள் செய்து முடித்துக் கொள்கிறார்கள் இது ஊரறிந்த ரகசியம் என்றாலும் காவல்துறை அந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பதே கிடையாது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் என்பது சர்வ சாதாரணம். இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்துகொண்டதுகூட பால்ய திருமணம் என்றுதானே சொல்கிறார்கள் (குற்றந்தானே!)

அவர்கள் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பதால் பால்ய திருமணம் செய்வது இந்து சாஸ்திரப்படி சரியானது என்று முழுமையாக நம்புகிறார்கள்.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இந்தியாவில் கொண்டு வந்தபோது பார்ப்பனர்கள் அலறினார்களே.

ருதுவாகும் முன் கல்யாணத்தை நடத்த வேண்டும்; அப்படி நடத்தா விட்டால் ரௌரவாதி நரகத்திற்குப் போக நேரிடும் என்று பராசஸ்மிருதி கூறுகிறது.

குழந்தைத் திருமணத்தை நடத்தினால் ஜெயிலுக் குப் போக வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

நாங்கள் சட்டத்தை எதிர்த்து சிறைக்குச் சென்றாலும் சொல்லுவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நடந்து கொள்ள மாட்டோம் என்று பார்ப்பனர்கள் அலறி னார்கள். வெள்ளையர் ஆட்சி சாரதா சட்டம் கொண்டு வந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று பார்த்தார். சிறு வயதில் திருமணம் செய்யப் பட்டதால் குறைந்த வயதிலேயே பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் கொடுமையான காட்சிகளை எல்லாம் பார்த்து கண்ணீர் விட்டார் அவர் எழுதிய மதர் இந்தியா என்ற நூலில் விவரித்துள்ளார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படியோ நடந் திருக்கலாம் - வளர்ந்த இந்தக் கால கட்டத்திலும் சிறுமி களுக்குக் கட்டாய திருமணம் என்பது அநாகரிக மானது.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கச் செய்யும் இதுபோன்றவற்றைத் தடுப்பதில் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page1/81728.html#ixzz346FzvoBH

தமிழ் ஓவியா said...


மனிதனாக...


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/81727.html#ixzz346GcNvcO

தமிழ் ஓவியா said...

கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதி யானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக்கலாம்.இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்க பட்டவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346Hb8HJK

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கை களையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலை வராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான் கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப் பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HsaMeJ

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.

அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HzH8T8

தமிழ் ஓவியா said...


ஜூன் 8: உலக கடல் தினம் மாறிவரும் கடல் நீரோட்டத்தால் குறையும் ஆக்சிஜன்

நாளை (ஜூன் 8) உலக கடல் தினம்: கடல் தான் நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி, அழகிய நீலவண்ண வானம் தெரிவதற்குக் காரணமே கடல் தான். அதை விட மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில் பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானதாகும். 1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

அதுவும் மிகவும் விரை வாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம். இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம் நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும் ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.

இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின் பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள் மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் துவங்கிவிட்டது. உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை விடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.

இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.

அய்.நா. சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு மாநாட்டின் கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம் செலுத்தி வருகின்றனர்.

ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை தூய்மைப்படுத்தவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக் கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் ஆண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத் துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ நிலையை மாற்றிவிடும்.

வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற ஆபத்துகளை நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும். பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் செல்வோம்.

Read more: http://viduthalai.in/page1/81704.html#ixzz346I6xrsN