Search This Blog

22.6.14

இந்திப் பிரச்சினை

இந்திப் பிரச்சினை

மொழிப் பிரச்சினையைப் பாரதீய ஜனதா ஆட்சி கிளப்பி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரகம் எடுத்த முடிவு இது. இதன்படி மத்திய அரசு அதிகாரிகள் இந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும். இனி சமூக வலைத் தளங்களில் இந்திதான் பயன்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் இந்தி, மற்றும் ஆங்கிலத்தைத் தான் பயன்படுத்திட வேண்டும். அதே நேரத்தில் பயன்படுத்துவதில் இந்திக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ள நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளிக்க முயன்றுள்ளார்.

இந்தி நமது அலுவல் மொழி என்பதால், பொது வாழ்விலும், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் இந்தியில் தகவல் பரிமாற்றங்களை செய்யும்படி அதிகாரிகள் ஊக்குவிக்கப்படு வார்கள். இதற்கு மத்திய அரசு அதிக ஊக்கம் அளிக்கும். அதே நேரத்தில் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும். இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்தும்படி மத்திய அரசு அலுவலகங்கள் கேட்டுக்  கொள்ளப்படுவதால் மற்ற மொழிகளை மத்திய அரசு குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதக் கூடாது.

நமது அடையாளம், பண்பாடு, மொழி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றுடன் நாம் முன்னேற வேண்டும். அதனால் இந்தியை ஊக்கு விப்பது,  மற்ற மொழிகளை அலட்சியப்படுத்து வதாகக் கருதக் கூடாது. இந்தி தேசிய மொழி என்பதால் அதை அரசு ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

உள்துறை இணை அமைச்சரின் இந்தப் பேட்டி நாம்  காணும் குற்றச்சாற்றை உறுதிப்படுத்தவே உதவும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த 22இல் ஒன்றுதான் இந்தி. அப்படி இருக்கும் பொழுது இந்தி மட்டும்தான் அசல் அக்மார்க் நெய்யில் பொரிக்கப்பட்டதா என்ற கேள்வி எழாதா?

மற்ற மொழிகளை அலட்சியப்படுத்துவதாகக் கருதக் கூடாது என்று சொல்லுவது உண்மையானால் நல்லெண்ணத்தின் அறிகுறியாக முதலில் ஒன்றைச் செய்யட்டுமே!

தி.மு.க. ஆட்சியின் போது தமிழ்மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாவது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதே - அதற்கு உகந்த முறையில் அனுமதியை முதலில் வழங்கட்டுமே!

தமிழையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று திராவிடர் கழகமும், தி.மு.க.வும் மாநாடுகளில் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளனவே - முதலில் அதற்குப் பச்சைக் கொடி காட்டட்டுமே பார்க்கலாம்.

அவற்றையெல்லாம் செய்யாமல், கிடந்ததெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்று இந்திக்கு முடிசூட்டுவது என்றால் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர்.

1926ஆம் ஆண்டிலேயே தமிழிற்கு துரோகமும், இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் தந்தை பெரியார். (குடிஅரசு 7.3.1926).
பல்வேறு கால கட்டங்களிலும் இந்தியை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்தியது தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் வழி வந்த இயக்கங்களும் தலைவர்களும்தான்.


உச்சக் கட்டமாக, இந்தியை எதிர்த்துத் தேசியக் கொடியைக் கொளுத்தும் (1.8.1955) போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். பிரதமர் நேருவின் சார்பாக முதல் அமைச்சர் காமராசர் இந்தி திணிப்பு இல்லை என்று  அறிக்கை கொடுத்ததால் போராட் டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று மிகவும் விழிப்பாக அறிவித்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட் டுகிறோம்.

மத்திய அரசு அதிகாரிகள் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இந்தி பேசும் மாநிலங்களோடு, அதன் எல்லையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் பணியாற்றும் இந்தி தெரியாத அதிகாரிகளின் நிலை என்னாவது? இந்தி தெரியாத காரணத்தால், அவர்களை இரண்டாந் தரப் பட்டியலில் வைக்கப் போகிறார்களா?

மத்திய பிஜேபி என்று வரும் பொழுது, அவர்களின் அடிப்படைக் கொள்கை என்பது, இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதே.

இந்தி என்பது சமஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது; அந்த உள்நோக்கமும் இதன் பின்னணியில் இருக்க வாய்ப்புண்டு.
இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதி காக்கும் பொழுது தமிழ்நாடு மற்றும் ஏன் சிலிர்த்து எழுகிறது என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது;  இது தந்தை பெரியார் பிறந்த மண். திராவிட இயக்க சித்தாந்தம் ஊட்டப்பட்ட மண் - எச்சரிக்கை!

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட பொலிவியாவில் 37 மொழிகள் அலுவலக மொழிகளாக இருக்கும் பொழுது இந்தியாவின் 22  மொழிகளை ஏன் ஆட்சி மொழியாக ஆக்கக் கூடாது? இந்தியா வேண்டுமா? இந்தி வேண்டுமா? தீர்மானித்துக் கொள்க!

                        ----------------------------"விடுதலை” தலையங்கம் 21-06-2014

42 comments:

தமிழ் ஓவியா said...பிஜேபி அரசு பின்பற்றுவது பழைய காங்கிரஸ் கொள்கைகளைத்தானா?

22 மொழிகளுள் இந்திக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்?

சமஸ்கிருதத்தின் நுழைவு வாயிலா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும் எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு

பழைய காங்கிரசின் கொள்கையைப் பின்பற்றுவது தான் பிஜேபி அரசின் கொள்கையா? தேசிய மொழிகள் 22 இருக்கும் பொழுது இந்திக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? சமஸ்கிருதத்தை நுழைக்கவா என்ற வினாக்களைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிக்கேற்ப, பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் உள்ள மத்திய அரசு, கடந்த ஒரு மாதத்தில், பழைய அரசு என்னென்ன செய்ததோ, அதற்கான எதிர்க் குரல் கொடுத்து, குற்றப் பத்திரிக்கையை பா.ஜ.க.வினர் எதிர்க் கட்சியாக இருந்து வன்மையாக கண்டனங்களைத் தெரிவித்தனரோ, அதே பாணியில் - அதே பாதையில்தான் இப்பொழுதும் செயல்பட்டு வருகின்றது!

காங்கிரஸ் கொள்கைதானா?

1) உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சுணக்கம்.

2) பெட்ரோலியப் பொருள் விலை தவணை முறையில் ஏற்றப்படுவது,

3) ரயில் கட்டண உயர்வு,

4) பதவிக்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்ட - ஆளுநர்களை வீட்டுக்கனுப்புதல் இப்படிப் பலப்பல.

5) இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைப்பிடிக்கப்படும் அவலம், 6) பாகிஸ்தான் பிரதமரை முந்தைய அரசு அழைத்த போது பிரியாணி சாப்பிட வருகிறாரா? என்ற கேலியான விமர்சனம்; இன்று வந்ததும் வராததுமான அதே நிலைப்பாட்டால் விமர்சன முறையை எதிர்கொள்ளும் நிலை - இப்படிப் பலப்பல!

எந்த வகையில் வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசைவிட இவர்கள் வித்தியாசமானவர்கள்?

சமஸ்கிருதத்தின் நுழைவு வாயிலா?

இதற்கிடையில், மிகவும் உணர்ச்சியைக் கிளறக்கூடிய மொழிப் பிரச்சினையாக மீண்டும் இந்தித் திணிப்பை - (மறைமுகமாகத்தான் என்றாலும்) வலைதளம் என்ற ஒரு சாக்கில் (Feeler விட்டுப் பார்ப்பதுபோல்) செய்துள்ள அவசரம் ஏனோ?

ஆர்.எஸ்.எஸ்.சின் சமஸ்கிருத மயமாக்கும் ஒரே மொழி அதுதான் என்ற முடிவுடன், அதற்கு நுழைவு வாயிலாக இப்படி ஒரு முயற்சியா என்ற கேள்வி, கண்டனக் குரல் தமிழகத்திலிருந்து அத்துணைக் கட்சி தலைவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் முதலில் அறிக்கை விட்டார்; பிறகு தமிழக முதல் அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்கள் - கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டவுடன், இதற்குச் சில போலி விளக்கங்களை மத்திய அமைச்சர்கள் சிலரும், துறையினரும் தரத் துவங்கியுள்ளனர்!

1. இந்தி பேசும் 8 மாநிலங்களுக்கான சுற்றறிக்கை அது என்றும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அல்ல என்றும் கூறுவது விசித்திரமாக உள்ளது.

இந்தி பேசும் மாநிலத்திற்கு அதைப் பேசி கற்க இணைய தளத்தில் முன்வந்தால், கூடுதல் சம்பள உயர்வு என்று அறிவிக்க வேண்டியது அவசியமா? இல்லையே! தென்னை மரத்தில் ஏறியவரை உரியவர் கண்டுபிடித்தவுடன், புல் பிடுங்கத்தான் ஏறினேன் என்ற கூறிய கதைபோல் இல்லையா இது?

2. ஏற்கெனவே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (U.P.A) அனுப்பியது தான் என்றால் அதை இப்போது உடனடியாக கவனிக்காமல் அனுப்பியவர் யார்? அந்த அதிகார வர்க்கத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

முந்தைய அரசினைத் தோற்கடித்து, மக்கள் இவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ள நிலையில், அதைப் பின்பற்றத்தான் இப்படி நடந்தது என்று ஒரு சமாதானம் கூறினால் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழைய பழமொழி.
இப்போது அரசர்கள் (ஆளுபவர்கள்) இப்படி ஊதிக்கெடுக்கலாமா?

மூளைச் சாயம் பூசவே!

இன்னொரு முக்கிய செய்தி; இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போதுள்ள 22 மொழிகளுள் சமஸ்கிருதம் - ஹிந்தி உட்பட குறிப்பிடப் பட்டுள்ளது; எதற்கும் தனித்த ஒரு தகுதி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை.

ஆட்சி மொழி ஹிந்தி (Official Language) என்றாலும் கூட இந்தி மொழி பேசாத மக்கள்மீது இப்படி மறைமுகத் திணிப்புக்கு இடம் அரசியல் சட்டத்தில் இல்லையே?

வலைதளம் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் சாயம் பூசவே இந்தப் புதிய ஏற்பாடோ என்ற அய்யம் ஏற்படுகிறது. இப்போது தலையை உள்ளுக்கிழுத்துக் கொண்டாலும், விழிப்புத் தேவை நமக்கு; மறவாதீர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.6.2014

Read more: http://viduthalai.in/e-paper/82608.html#ixzz35K4yYJ95

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

தண்டனையா?

ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.

முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.

முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.

திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.

இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.

கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9

தமிழ் ஓவியா said...

குஜராத்தும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 2011-இல் 0.42 சதவீதம் ஆகும்.

1981ஆம் ஆண்டிலோ 0.98; படிப்படியாகக் குறைந் துள்ளது - இப்பொழுது எண்ணிக்கை 17,351.

வளர்ச்சி வளர்ச்சி என்று தம்பட்டம் அடிக்கும் குஜராத்திலோ குழந்தைத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 687.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5ituj6

தமிழ் ஓவியா said...

தலைக் கவசமும் மதமும்

மத சம்பிரதாயம் காரண மாக சீக்கியப் பெண்கள் தலைக் கவசம் அணியத் தேவையில்லை என்ற உத்தரவு போல, இஸ்லாமி யப் பெண்களுக்கும் மத சம்பிரதாயத்தின் அடிப் படையில் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை டில்லி ஆளுநரி டம் வைக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5rdqnd

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 சதவீதம்தான்!- இது சென்சஸ் கணக்கு


புதுடில்லி, ஜூன் 21_ பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!

இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45 சதவீதம் பேர்.

அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப் பதிவு செய்திருந்தனர்.

மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம், இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின் கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.

26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79 லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி, மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல் உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.

குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர் என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர் அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார் இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.

Read more: http://viduthalai.in/page-2/82623.html#ixzz35K6QcpeU

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!


அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குமரியில் பதற்றம்

அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V

தமிழ் ஓவியா said...

கழகப் பேச்சாளர்கள், பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

கழகப் பரப்புரை கூட்டங்கள், திருமணங்கள், இல்லத்திறப்பு, படத்திறப்புகளுக்கு கலந்து கொள்ள ஒப்புதல் அளித்து தேதி கொடுக்கும் கழகப் பேச்சாளர்கள், இது தொடர்பாக மாவட்ட, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு தங்கள் வருகையினை அருள்கூர்ந்து, அஞ்சல் அட்டை மூலமாகவோ, தொலைப்பேசி வாயி லாகவோ தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.

மேலும், மேற்கண்ட நிகழ்ச்சிகளை நகல் பிரதி எடுத்து அனுப்பாமல் துண்டறிக்கைககள் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள் நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற தகுந்த ஏற்பாட்டினை செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தமிழர் தலைவரின் தலைமையில் தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்! - செல்வம், சண்முகம், நெய்வேலி வெ.ஞானசேகரன்
மாநில அமைப்புச் செயலாளர்கள்

Read more: http://viduthalai.in/page-4/82638.html#ixzz35K7EfKWt

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது


சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.

சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்

இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

- குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டி யிருக்கின்றது.ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன்.

எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன் மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7wElnl

தமிழ் ஓவியா said...

5 ரூபாய் இனாம் -சித்திரபுத்திரன் -

திரு. காந்தியின் கடைசிப்போர் என்னும் உப்புச் சத்தியாகிரகக் கிளர்ச்சியில் தென்னிந்தியாவில் எங்கு பார்த் தாலும் பெரிதும் பார்ப்பனர்களே கலந்து அவர்களே முழுதும் தலைவர்களாக வேண்டிய காரணமென்ன?

திரு. காந்தி இந்த சத்தியாகிரகப் போருக்குப் பணமே வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தும், திரு. ராஜகோ பாலாச்சாரியார் பணம் வேண்டும் மென்று கேட்பதின் இரகசியமென்ன? அப்படி கேட்கப்படும் பணத்தையும் திருவாளர்கள் மைலாப்பூர் வக்கீல் பாஷ்யம் அய்யங்கார், திருச்சி டாக்டர். ராஜன், மதுரை வக்கீல் வைத்தியநாதய்யர் ஆகிய பார்ப்பனர்களுக்கே அனுப்பும்படி சொல்வதின் சூழ்ச்சி என்ன?

இந்த சத்தியாக்கிரகப் போருக்குப் பிரசாரகர்களாக மாத்திரம் சம்பளம் கொடுத்துப் பார்ப்பனரல்லாதார் களையே ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யச் செய்திருப்பதின் தந்திரமென்ன? இக்கேள்விகளுக்கு முதலில் கிடைக்கும்படி தக்கக் காரணங்களுடன் சரியான விடையளிப்பவர்களுக்கு 5 ரூபாயும் இரண்டாவது கிடைக்கும்படி விடையளிப்பவர் களுக்கு குடிஅரசு பத்திரிகை ஒரு வருஷத்திற்கு இனா மாகவும் அளிக்கப்படும்.

குறிப்பு : - முதலில் அல்லது இரண்டாவதாக எது வந்து சேர்ந்தது என்பதற்கும் சரியான விடை எது என்பதை நிர்ணயிப்பதற்கும் நானேதான் ஜட்ஜு எனக்குமேல் அப்பிலோ கேள்வியோ கிடையாது.

- குடிஅரசு - அறிவிப்பு - 30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K8Gbv1c

தமிழ் ஓவியா said...


த.பெ.தி.க. தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தமிழர் தலைவர் முன்னிலையில் தோழர்களுடன் கழகத்தில் இணைந்தார்!

சென்னை, ஜூன் 21- தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், இன்று (21.6.2014) சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து, திராவிடர் கழகத்தில் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட தோழர்கள் ஓரணியில் இணைந்து பணியாற்றும் நோக்கில், திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களுடன் த.பெ.தி.க. தோழர்கள் சொ.அன்பு (வடசென்னை மாவட்டத் தலைவர்), வி.ஜனார்த்தனன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), கண்ணதாசன் (காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்), ரகுநாத் (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), ஜெய்சங்கர் (திருவல்லிக்கேணி துணை அமைப்பாளர்), எருக்கஞ்சேரி தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், வழக்குரைஞர் காண்டீபன், பாட்சா உள்ளிட்ட த.பெ.தி.க. தோழர்கள் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரமும், விடுதலை சந்தாவுக்கான நன்கொடையும் அளித்தார். தோழர் வி.ஜனார்த்தனன் ஈராண்டு விடுதலை சந்தா வழங்கினார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/82578.html#ixzz35K917aBe

தமிழ் ஓவியா said...


மாட்டுச் சாணத்தில் இருந்து குடிநீர்


மாட்டு சாணத்தில் இருந்து குடிநீர் தயாரிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு, மெக் லானஹன் நியூட்ரியண்ட் செப்ப ரேஷன் சிஸ்டம் என பெயரிடப்பட் டுள்ளது. எதிர்காலத்தில், ஏற்பட வுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன், சாணத்தில் இருந்து சுத்தமான, சுகாதாரமான நீரை தயாரித்து குடிநீராக பயன்படுத்த லாமாம். இந்த தொழில்நுட்பத்தை, மிக்சிகன் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/82559.html#ixzz35K9XV4QV

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் எடுத்துக்காட்டான தொண்டறம்!


பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம் - போடிநாயக்கனூர்

போடிநாயக்கனூர் நகராட்சி பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானம் தேனி மாவட்டம் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மானமிகு ச. இரகுநாகநாதன் மற்றும் நமது கழகத் தோழர்களின் முயற்சியால் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

போடி நகரில் 20 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சேவை மய்யம் அறக்கட்டளை துவங்கப்பட்டது. முதலில் ஏழைக் குழுந்தைகளுக்குப் புத்தகம், நோட்டு கொடுப்பதிலிருந்து பள்ளி கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைத்து கொண்டி ருந்தனர்.

தொடர்ந்து BSRB வங்கித் தேர்வு லிமிசி வேலை வாய்ப்புக்காக இலவச வகுப்புகள் ஒரு ஆண்டில் மூன்று மாத காலம் நடத்தியதுடன், தொடர்ந்து அய்ந்தாண்டு காலம் நடத்தி பலர் பயன் பெற்று இன்று வங்கிகளிலும் LIC நிறுவனத்திலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 28.09.1997ல் போடி நகருக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்கள்.

கருத்துரை

அருமையான எடுத்துக்காட்டான பொது நலப் பணியாகும் இது. உள் பகுதியாகிய இவ்வூரில் உள்ள இருபால் இளைஞர்கள் இதனால் நல்ல பயன் பெற்று, வாழ்க்கையில் வளம் கண்டால் கண்களில் குளம் காணும் நிலை தவிர்க் கப்படுகிறது. சிறப்பான தொண்டறம் தொடரட்டும். நடத்தும் நமது தோழர் களுக்கு உளபூர்வ பாராட்டுகள்

ஒப்பம் கி.வீரமணி 28.7.1997

பெரியார் குருதிக் கொடைக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்த நாளான மனிதநேய நாளில் இரத்த தான முகாம் தொடர்ச்சியாக 11 ஆண்டு காலம் நடத்தி வருகின்றார்கள். மேலும் போடியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் தமிழ்நாடு முழுவதும் அவசர தேவைக்காக இரத்தத் தேவைக்கு இவர்களை அணுகியவுடன் உடனுக்குடன் இரத்தம் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றி வருவதனா லேயே இவ்வாண்டு போடி அரிமா சங்கத்தினர் இவர்களைப் பாராட்டி சேவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி உள்ளார்கள்.

பிரேத குளிர்சாதனப் பெட்டி போடிநகரில் கிடைக்காததினால் வெளியூரிலிருந்து அதிக செலவு செய்து கொண்டு வந்து மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதை கவனித்த பெரியார் சேவை மய்யம் புதிதாக குளிர்சாதனப் பெட்டியை வாங்கி பராமரிப்பு செலவிற்காக மட்டும் ரூ.600/- பெற்றுக் கொண்டு மக்களின் பயன்பாட்டிற்காகக் கொடுத்து வருகிறது.

26.11.2008ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் போடியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்களையும், மற்றும் ஏலக்காய் வியாபாரிகள் சங்கம், வர்த்தகர்கள் சங்கம் போன்ற அமைப்புகளையும் அழைத்து நவீன தகன மேடையை ரூ.8 லட்சத்து அய்ம்பதினாயிரம் வரை செலவு செய்து, முடிக்கப்படாமலிருந்த சில வேலை களையும் முடித்து, அதன்பிறகு பராமரித்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவுடன், வந்திருந்த அத்தனை அமைப்பினர்களும் சுடு காட்டு பிரச்சினையை எடுத்து செய்ய எங்களால் முடியாது என்று கூறி விட்டு சென்று விட்டனர்.

அன்றைய சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ். லட்சுமணன் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் திராவிடர் கழகம், நுகர்வோர் பாதுகாப்புக்குழு நகர் நலக் குழுமம், பெரியார் சேவை மய்யம் என்ற அமைப் புகள் மூலம் தொண்டாற்றி வருகின்ற தாங்கள் தான் இதனை எடுத்து செயல் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ் ஓவியா said...

8 லட்சத்து 50 ஆயிரம் என்பது எங்களுக்குப் பெரிய தொகை அவ்வளவு செலவு செய்திட வசதி இல்லை என்று கூறியதும். மக்களிடம் நீங்கள் சென்று கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் எனக் கூறியதும், யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்; நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்ற தமிழர் தலைவரின் நம்பிக்கையூட்டும் வரிகளை நினைத்து சம்மதித்தோம்.

அதன் பின் நாம் இந்தக் காரியத்தை எடுத்து செய்யப் போகின்றோம் என்ற செய்தி அறிந்து போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்வி வள்ளல் ஏ.எஸ். சுப்புராஜ் அவர்கள் பேரனும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.எஸ். சீனிவாசன் அவர்களது மக னுமாகிய ஆனந்த் அவர்கள் சார்பில் தளத்திற்கு கல் பதிக்க ரூ.1 லட்சம் நன் கொடை வழங்கினார்கள். அதன்பின் பல்வேறு கொடையுள்ளம் கொண்ட பொது மக்களின் உதவியோடு முடிக்க படாமலிருந்த வேலைகளைச் செய்து முடித்தோம்.

15.09.2009 நகர் மன்றக் கூட்டத்தில் போடிநாயக்கனூர் பெரியார் சேவை மய்யம் மின்மயான அறக்கட்டளை பெரியார் சமத்துவம் என்ற அறக் கட்டளை மூலம் பராமரிக்க அதன் நிறுவனர் திரு ச. இரகுநாகநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அதன் எரிவாயு தகன மயானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஈரோடு, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய் தோம். பல்வேறு தடைகள் இடையூறு களைத் தாண்டி, 20.2.2012இல் பெரியார் சமத்துவத்திற்கான ஆம்புலன்ஸ் புதிதாக வாங்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி அவர்கள் பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானத்தை நேரில் பார்வையிட்டு நம்மைப் பாராட் டியதுடன் நல்ல ஆலோசனைகளையும் வழங்கிச் சென்றார்கள்.

12.12.2012-இல் மேற்படி தகன மயானத்தை தலைவர் மானமிகு ச. இரகுநாகநாதன் செயலாளர் மானமிகு பு. பேபிசாந்தாதேவி, பொருளாளர் மானமிகு பெரியார் லெனின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி நாகஜோதி, ம. சுருளிராசு, பி. கண்ணன் ஆகியோர் வசம், நகர் மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் ஆணையாளர் எஸ். சசிகலா, பொறி யாளர் திருமலை வாசகர் ஆகியோர்கள் ஒப்படைத்தார்கள். அதன்பின் இன்று வரை மிகச் சிறப்பாக எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படு கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. மேற்படி மயானத்தில் சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு, அதில் மரக் கன்றுகளுக்கு நன்கொடையாளர்களின் பெயர் பொறிக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது.

மேற்படி பெரியார் சமத்துவத்தை பார்வையிட்ட திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் பாராட்டி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்றார்கள்.

திருப்பூர் மயானம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுவதைப் போல பராமரிக்கப்படுகிறது. தந்தை பெரியார் காண விரும்பிய ஜாதி ஒழிந்த இடமாக இந்த பெரியார் சமத்துவம் அமைந் துள்ளது நமது கொள்கைக்கு வெற்றி. இதற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி! தொண்டாற்றும் நமது தோழர் களுக்கு வாழ்த்துகள்! என்று குறிப் பிட்டுள்ளார்.

26.02.2014 போடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா வில் பொதுக் கூட்டத்தில் உரையாற் றும் போது போடி நகரில் செயல்பட்டு வரும் பெரியார் சமத்துவம் எரிவாயு தகன மயானத்தை நிர்வாகித்து வரும் கழகத் தோழர்களையும், எரிவாயு பணியாளர்களையும் பாராட்டி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். இது போன்ற பொது நல சேவைகளில் மற்ற ஊர் தோழர்களும் பின்பற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

- ச. இரகுநாகநாதன் போடிநாயக்கனூர்

Read more: http://viduthalai.in/page5/82563.html#ixzz35KAkF41L

தமிழ் ஓவியா said...


ஷராபுதீன் கொலை வழக்கு: விசாரணையில் மோடி, அமித்ஷா தலையீடு ஜி.எல்.சிங்கால் ஒப்புதல் வாக்குமூலம்


குஜராத் மாநிலத்தில் போலி என்கவுண்டரில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட ஜி.எல்.சிங்கால் என்ப வரை தற்போது குஜராத் மாநில அரசு மீண்டும் அரசு உயர் பதவியில் நியமித் துள்ளது. போலி என்கவுண்டர் வழக் கில் மோடி, அமித்ஷா தொடர்புகள் குறித்து மத்திய புலனாய்வு விசார ணையில் ஜி.எல்.சிங்கால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஷராபுதின் கொலை வழக்கு, அவர் மனைவி காவ்சர்பி கொலை வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளிலும் நீதித் துறையில் மோடி, அமித்ஷா இருவரின் தலையீடு குறித்து ஜி.எல்.சிங்கால் மத்தியப் புலனாய்வுக் குழுவின் விசா ரணையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஷராபுதின் என்பவர் மோடியைக் கொல்லப் போவதாகக் கிடைத்த தவறான தகவலையொட்டி 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாளில் குஜராத் காவல்துறை ஷராபுதினைக் கொன்றுள்ளது. அதேபோல 2005 நவம்பர் 29இல் அவர் மனைவி காவ் சர்பியை, சவ்பே என்னும் காவல் அதிகாரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதற்குப் பின்னர் வன்சாரா, என்.கே.அமித் மற்றும் சிலர் தீவைத்து உயிருடன் கொளுத்தி உள்ளனர்.


தமிழ் ஓவியா said...

மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா 25-.7-.2010 அன்று இந்த இரு கொலை வழக்கிலும் தொடர்பை யொட்டி மத்திய புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

17_-4_2013 அன்று ஜி.எல்.சிங்கால் மத் தியப் புலனாய்வுக் குழு விசாரணையில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தில் குஜராத் மாநிலத்தின் முன் னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நரேந்திர மோடி ஆகிய இருவரும் புப் ரேந்திரசின்ஹ் சுதசாமா என்பவர்மூலம் சிங்காலிடம், ரமன்பாய்படேல், தஷ்ரத்பாய் படேல் ஆகிய இரண்டு சாட்சிகளை அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்களை மாற்றிவிட்டு முன்பு சொன்னதை மறுத்துக்கூறவும் ஏற்பாடு செய்யுமாறு கோரி உள்ளனர்.

ஷராபுதினின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் ஆகஸ்டு 2010இல் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரான அமித் ஷா மத்திய புல னாய்வுத்துறை விசாரணையை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறைக்காவ லில் இருந்தார். அகமதாபாத் சபர்மதி சிறையில் இருந்தபோது, ஏராளமான முறை சந்திப்பதற்காக என்னை அழைப்பார். அதைத்தொடர்ந்து நான் சிறைக்கு சென்று சந்திப்பேன். அவருடைய செல்வாக்காலும், நானும் ஒரு காவல்துறையில் எஸ்பி என்ப தாலும் பார்வையாளர்கள் ஏட்டில் கையொப்பமிடாமலே சென்று சந்தித்துவந்துள்ளேன். கட்டடப் பணிகளில் புகழ்பெற்ற ரமன்பாய் படேல், தஷ்ரத்பாய் படேல் ஆகிய இருவரும் அவருக்கு எதிரான முக்கிய சாட்சிகளாக இருப்பதால் அவர்களை சரிகட்டச்சொல்லி அதற்கு உதவுமாறு அமித் ஷா என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அவர் சொன்னது போலவே, அந்த இரு சகோதரர் களையும் குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், ஆளும் பாஜகவின் மூத்த உறுப்பினருமாகிய புபேந்தர்சின்ஹ் சுதசாமாவுடன் சென்று சந்தித்தேன். இந்த சந்திப்பு ஆகஸ்ட் 2010இல் காந்திநகரில் உள்ள ஜில்லா பஞ்சாயத்து பயணியர் மாளிகையில் நடைபெற்றது. அவருடைய முயற்சியால் முதல்வர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி அந்த இரு சாட்சிகளும், பிறழ் சாட்சிகளாயின.

அந்த இடத்தில் அவர்களுக்கு போதிய பாதுகாப்புக்கும், அவர்கள்மீது சந்தேகம் வராதபடி பார்த்துக் கொள் வதாக உத்தரவாதமும் அளிக்கப்பட் டது. ரமன்பாய் படேல், தஷ்ரத்பாய் படேலிடமும் புபேந்தர்சிங் சுதாசாமா கூறும்போது முதல்வரிடம் தொலை பேசிமூலம் பேசுமாறு கூறினார். அப்போது சாட்சிகள் இருவரும் வெலவெலத்து வியர்த்துப்போனதுடன், எந்த சலுகையும் வேண்டாமென்று மோடியுடன் பேசவும் மறுத்துவிட் டனர்.

ரமன்பாய் படேல், தஷ்ரத்பாய் படேல் ஆகிய இருவரும் ஷராபுதின் மற்றும் துள்சி ப்ரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகளில் முக்கிய சாட்சிகள் ஆவார்கள். என் மன சாட்சிக்கு விரோதமாக இதுபோன்ற செயல்களை மத்திய புலனாய்வு விசா ரணைகளில் ரகசியமாக மத்தியஸ்தம் செய்துவந்துள்ளேன்.

இது போன்ற செயல்கள் மூலமாகத் தான் இந்தியாவின் பிரதமர் பதவியை மோடி பெற்றுள்ளார். காவல்துறையில் உள்ள பல்வேறு தரப்பட்ட அதி காரிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித் துள்ளதால் போலி என்கவுண்டர்கள் வெளி உலகுக்கு தெரிய வந்தன. நீதியின் விசாரணைகளிலும் தலையீடுகளும் வெளிவந்துள்ளன.

17_-4_-2013அன்று அய்பிஎஸ் அதிகாரி கிரீஷ் லஷ்மண் சிங்கால் (48) அளித் துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து மேற்கண்ட தகவல்கள் வெளி யாகி உள்ளன.

www.truthofgujarat.com குஜராத் உண்மைகள் இணையத்திலிருந்து....

Read more: http://viduthalai.in/page6/82567.html#ixzz35KAzi8pf

தமிழ் ஓவியா said...


மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச் சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக் கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங் கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது?

உண்மையில், பாஜகவின் அணுகு முறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிட மிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றுதான் அவர்கள் கூறி வந்தனர்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு, அன்று ஆட்சியிலிருந்த கலைஞர் நவம்பர் 28,2000 தேதியிட்ட கடிதம் ஒன்றை பார்க்கலாம். தே.ஜ.கூட்டணி சார்பாக அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அவர் கடிதம் எழுதினார். அதற்கு டிசம்பர் 22, 2000 தேதியிட்டு எழுதிய பதில் கடிதத்தில் வாஜ்பாயும் இனி மீனவர் படுகொலை நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால், நடந்தது என்ன?

வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரம் கடக்கவில்லை, 2 மீனவர்கள் ஜனவரி 29, 2001 அன்று 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அதோடு மட்டுமல்ல, பாஜக ஆட்சிகாலத்திலும் மீனவர்கள் கொல் லப்பட்டனர். பாஜகவும் கண்டிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. 2014 தேர்தலின்போது, கீழ்க்காணும் பட்டியலை மறைத்தபடியே பிரச்சாரம் செய்தனர், பாஜக அணியினர்.

8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,

19.02.1999 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,

10.05.2000 அன்று RMS 1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,

19.06.2001 அன்று TU 328 என்ற படகில் சென்ற பாபு, 16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற் முருகன், 03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கோட்டை, முனீஸ்வரன், 18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு, 09.09.2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பல மீனவர்கள் இலங்கை கடற்படை யால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாம் பட்டியலைக் காட்டி வாதிட்டால், ஏதோ சில கொலைகள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்தது தான். ஆனால், தற்போது, வந்திருக் கின்ற பிரதமர் மிகவும் ஆண்மையான பிரதமர். ஆகவே, இலங்கை பயப்படும், சீனா அஞ்சும் என்று சவடால் அடிக் கின்றனர்.

தமிழ் ஓவியா said...


உண்மை வெகுதூரத்தில் இல்லை. தற்போது பிரதமராக உள்ள, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மோடியால் தன் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் படுகொலையைக்கூட தடுக்க முடிந்ததில்லை.

ஜனவரி 27,2014 அன்று வந்த செய்தி குறிப்பின்படி,

நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இந்த குறிப்பிட்ட மீன்பிடி காலத்தில் மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், 32 படகுகள் முடக்கப்பட்டதும் நடந்திருக்கின்றது. இதற்கு எந்த அரசும் நிரந்தரத் தீர்வு தரும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்று மோடியிடம் கோரிக்கை வைக்கச் சென்ற குழுவில் இடம்பெற்ற பரத்மோடி என்னும் மீனவர் சங்க பிரதிநிதி கூறியிருக் கின்றார்.

மேலும், இலங்கையோடு பேச்சு வார்த்தை நடத்த முடியுமென்றால், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல்? நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரச்சினையை நடுவண் அரசுக்கு எடுத்துக் கூறி, உரிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். சிறிய கால இடைவெளிக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு மீனவர்களை விடு வித்தாலும், படகுகளை திரும்பத் தருவ தில்லை. தோராயமாக அது திரும்ப தர வேண்டிய படகுகளின் எண்ணிக்கை மட்டும் 815 என்று அவர் கோரியிருக் கின்றார்.

பிப்ரவரி 27,2014 ஆம் தேதி 30 குஜ ராத்தி மீனவர்களை பாகிஸ்தான் கப்பற்படை கைது செய்திருக்கின்றது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் 240 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருப்பதாக செய்திகள் சொல் கின்றன. அதில் நவாஸ் ஷெரீபின் வருகையை ஒட்டி 150 மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.

14 அக்டோபர், 2013 அன்று பாகிஸ் தான் Marine ஒரு மீனவனை சுட்டுக் கொன்றிருக்கின்றது. இதுவரைக்கும் பாகிஸ்தானிய சிறைகளில் 14 மீன வர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மோடியினுடைய ஆட்சி இருக்கும் பொழுதே, அவரது மாநிலத்தின் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொல்லுவதும், கைது செய்வதும் தொடர்கதையாகத்தான் இருந்தது, இப்போதும் தொடர்கிறது.

ஆனால் தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஷ் ஷெரிப்பை அழைத்த மோடி இதுகுறித்து பேசிய தாக செய்திகள் இல்லை. மாறாக, இந்திய வர்த்தக நிறுவனங்களின் நலன் களை மய்யப்படுத்தியும், தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருக்கிறார்.

அண்டை நாட்டுக்கு எதிராக போர் தொடுப்பதோ, வலிமையைக் காட்டு வதோ மீனவர்களை பாதுகாக்காது. ஆனால், ஒரு அரசு தனது மீனவர் பாது காப்பையும், நலனையும் முதன்மைக் கவனமாகக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசானாலும், பாஜக அரசானாலும் பெரும் நிறுவனங்களின் வர்த்தக நலனே முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது. அதனால்தான், புதிதாக ஆட்சியமைத்திருக்கும் பாஜக அரசு மீனவர் கோரிக்கைகளை மையமாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், மீனவர்களுக்கு தனியாக ஒரு அமைச்சகம் அமைத்து மீனவர் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டு மென்ற கோரிக்கையும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஆட்சி மாறினாலும், மாநிலங்கள் மாறினாலும் மீனவர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியாளர்களுக்கும், மீனவர்களின் அவல நிலையை மாற்றும் அக்கறை இல்லை.நம்மிடம் இருக்கும் ஒரே வழி, மக்கள் நலன்களை மய்யப்படுத்திய உறவை அண்டை நாடுகளோடு பரா மரிக்கும் அரசுகள்தான். அப்படிப்பட்ட அரசை ஏற்படுத்த, எந்த அவதாரமும் மண்ணில் பிறப்பெடுக்காது. நமக்கான அரசை நோக்கிய பயணத்தை நாமே நடத்தி முடிக்க வேண்டும். நாளை நமதே, நாளை உழைக்கும் மக்களாகிய நம்முடையதே!.

- மகிழ்நன்

நன்றி: Maatru.com

Read more: http://viduthalai.in/page6/82572.html#ixzz35KBJ5bPV

தமிழ் ஓவியா said...


மத(யானை) அட்டகாசம்!


மோதல்கள் போதுமடா! - மதங்களின்
மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)
வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி
வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!
சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்
சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .
(மோதல்கள்)
1. இந்துநாடா இசுலாம் நாடா - இது
எந்தநாடு சொல்லவா?
இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா
ஏழைநாடு அல்லவா?
தானமே வேண்டும் இன்றும் - சமா
தானமே வேண்டும் என்றும்! . . .
(மோதல்கள்)
2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய
கரங்களுக்கு தேவையா?
கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்
கடவுளுக்குத் தேவையா?
புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு
பக்தி வந்தால் புத்திபோகும்! . . .
(மோதல்கள்)

- குபேரன்

Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND

தமிழ் ஓவியா said...


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தில்


- முனைவர் பட்டம் பெற்ற சாதனைப் பெண்

முனைவர் சி.செந்தாமரை இவர் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில் வரலாற் றுத்துறையின் உதவி பேரா சிரியராகப் பணிபுரிந்து வரு கிறார். பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகத் தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல் பெண் மாணவராவார்.

சமூக முன்னேற்றத்தில் பெரி யாரின் பன்முகச் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச் சியாக ஆய்வு மேற்கொண்டு 2013ஆம் ஆண்டில் தன்னுடைய ஆய்வை முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

முன்னதாக அழகப்பா பல்கலைக் கழகத்தில் பெரியாரின் பெண் விடுதலைப் போராட்டம் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். அப்போதுதான் தந்தை பெரியார் ஆற்றிய பணிகளை அறிந்து வியந்துள்ளார். அதே ஆய்வை நூலாகவும் வெளிக்கொணர்ந்துள்ளார். விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவர் திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி நூலை வெளியிட்டுப் பாராட்டி உள்ளார். மேலும்,கவிதை நூல்களாக புதிய விடியலே வருவாய் இதயத்தின் ஈரம் ஆகிய இரு நூல் களை எழுதி உள்ளார். மகளிர் குழுக் களில் இணைந்து செயல்பட்டு வந்துள் ளார். கடந்த 5 ஆண்டுகளாக பெண் கள் நல சங்கத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். 52வயது உள்ள சி.செந்தாமரை தொடக்கத்தில் திருமணத்துக்கு முன் பாக சேலத்தில் பி.எஸ்சி (தாவரவியல்) படித்தவரான இவர் திருமணத்துக்குப் பின்பு பத்து ஆண்டுகளில் பி.ஏ., எம்ஏ., எம்.ஃபில் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளவர். இவை அனைத்துமே தொலைதூரக் கல்விமூலமே பெற்றுள் ளார். குடும்பத்தலைவியாக மட்டுமே இருந்துவந்த அவர், தன் இணையரின் ஊக்கத்தால் தொடர்ந்து படித்து சாத னைகளை படைத்துள்ளார். தற்போது கல்லூரியில் உதவிப் பேராசியராக, முனைவர் பட்டம் பெற்றுள்ளவராக உள்ளார். ஆன்மீகத்தில் ஊறிப்போன குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும், அவர் பேச்சில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வீச்சு எரிகணைகளாகப் பாய்ந்து வருகின்றன. பெண்ணுக்கு உரிமை என்று வரும் போது, ஆணுக்கு உள்ள அத்துணையும் பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்னும் தந்தை பெரியார் கருத்தை அழுத்தமாகக் கூறுகிறார்.


தமிழ் ஓவியா said...

இன்றைய தலைமுறைக்கு கல்வி, வாழ்வியலுடன் இணைந்த தொழில்நுட்பமே பயன் விளைவிக்கும். ஒழுக்கத்துக்கே முதலி டம் என்று மாணவர்களிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறுகிறார். அவர் தர்மபுரி மாவட்டத் தில் பாலக்கோடு கிராமத்தை அடுத்துள்ள கருக்கம்பட்டி என்கிற கருக்கனஹள்ளி கிராமத்தைச்சேர்ந்தவர் ஆவார். அவர் தந்தை கே.சி. மாறன் ராஜம் டிரான்ஸ் போர்ட் என்கிற பயணிகள் பேருந்து நிறுவனத்தின் உரிமையாள ராக இருப்பவர். தாய் ராஜம் அம் மாள். இவருடைய குடும்பத்தில் இவர் மட்டுமே முனைவர் பட்டம்பெறும் அளவில் கல்வியில் உயர்ந்துள்ளார். சகோதரர்களில் மூத்தவர் பியூசி படித்துள்ளார். தம்பிகளில் ஒருவர் பத்தாம் வகுப்பும், கடைசித் தம்பி பொறியியல் கல்வியும் முடித்துள்ளனர். சர்க்கரை ஆலையில் மூத்த நிலை மேலாளராக பணியாற்றிய சின்னராஜ் இவரின் இணையராவார்.

பிரதீபா என்னும் மகள் எம்.எஸ் படித்துள்ளார். ரித்திக் சான்றோன் என்னும் மகன் எம்இ படித்துள்ளார். அஷ்வின் கணேஷ்ராஜா பிஇ படித்துள்ளார். முனைவர் செந்தாமரை கூறும்போது, பெண்களிலும் கல்வி பெற்றுள்ளவர்கள் கூட முட்டாளாகத்தான் இருக்கிறார் கள். ஜாதி, மதம் ஆகிய தளைகளி லிருந்து வெளியே வர மறுக்கிறார்கள். சமூகம் மேம்பாடு அடைய வேண்டு மானால், வாழ்வியல் சிந்தனையுடன் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி தேவை. பகுத்தறிவு இல்லாமல் படித்து விடுவ தால் மட்டும் பயன்விளைவதில்லை. ஆகவே, பகுத்தறிவு பரப்பும் பணியே முதன்மையானது என்று கூறுவேன். இதுதான் பெரியாரிடமிருந்து நான் கற்றது. தனிப்பட்டமுறையில் ஒவ்வொரு வரும் பெரியாரின் பகுத்தறிவால் பயன்பெற்று வருகிறார்கள். சமூகத்தின் போலியான மூடநம்பிக்கைகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள். பெண்கள் கோயிலுக்கு செல்வது என்பது ஆண் கள் உல்லாசமாக வெளியே செல்வது போன்றுதான். பக்தி என்றெல்லாம் ஒன்று இல்லை. தன்னை அலங்காரம் செய்து கொண்டு விதவிதமான ஆடை களை உடுத்தி எங்கு செல்வது என்று கோயிலுக்கு செல்கிறார்கள். புதுமையை தங்கள் வாழ்வில் முழுமையாக ஏற்கமுடியாமல் உள்ளனர். அதேநேரத்தில் பழமைகளையும் முற்றாக விட மறுத்துவருகிறார்கள். இது தான் இன்றைய பெண்கள் நிலையாக உள்ளது. தங்கள் சிந்தனைகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.

தங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளவற்றை உடைக்க வேண்டியது பெண்கள்தான். பெண்கள் சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். பெயரில் கூடமூடநம்பிக் கைளை வைத்துள்ளார்கள். பகுத்தறி வுடன் சிந்திப்பதால்மட்டுமே விடிவு ஏற்படும் என்று முனைவர் சி.செந்தா மரை கூறினார்.

Read more: http://viduthalai.in/page8/82581.html#ixzz35KDBajQ6

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

எந்த வகை?

பிறர் காதில் விழும்படி பிரார்த்தனை செய்வது வாசிகம் இது ஒரு மடங்கு பலன் தரும். தன் காதில் விழும்படி செய்வது உபாம்சு ஆகும் - இது நூறு மடங்கு பலன்தரும். ஆனால் மனதில் மட்டும் பிரார்த்தனை சொல்லு வது உபாம்சு - 100 மடங்கு பலன் தருமாம்.

சரி. காந்தியார் பிரார்த் தனை செய்யும் பொழுது தானே சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அது எந்த வகைப் பலனோ?

Read more: http://viduthalai.in/e-paper/82691.html#ixzz35PvS3zei

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம் சலூன் கடைக்காரரை தாக்கிய ஆதிக்க ஜாதியினர் கர்நாடகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்


பெங்களூரு, ஜூன் 22- கர்நாடக மாநிலம் பெல் லாரியில் தாழ்த்தப்பட் டோருக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க ஜாதியினர் சலூன் கடைக் காரர்களை மிரட்டியுள் ளனர். இதை மீறி தாழ்த் தப்பட்டவர்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப் பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் பெல் லாரி மாவட்டம், தாலூர் பகுதியில் ஜாதி பாகு பாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்ன மும் தொடர்கின்றன. தாலூ ரில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு சலூன் கடை களில் சுழல் நாற்காலி யில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்து கொள் ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்து தான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை ஜாதி இந்துக்களுக்கு பயன் படுத்தக் கூடாது. மீறி னால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங் கப்படுவது காலங்கால மாக உள்ளது என்கிறார் கள் அப்பகுதி மக்கள்.

தாலூரில் தற்போது 5 சலூன் கடைகள் உள் ளன. கடந்த சில வாரங் களுக்கு முன் இங்கு வந்த ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. மீறினால் உங்கள் கடையும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது என்று மிரட்டியதாக மஞ்சுநாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள் ளார்.

மிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து முடி திருத்தி வந்துள்ளனர். இதை யறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளை யும் அடித்து நொறுக்கி யுள்ளனர். இது தொடர் பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.

தொடர்ந்து ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட் டவர்கள் முடிவெட்டிய கடையில் இனி முடி வெட்ட மாட்டோம் என தங்களுடைய ஜாதி சங்கங் களில் கடந்த செவ்வாய்க் கிழமை தீர்மானமும் போட்டதாக தெரிகிறது. அன்று முதல் ஆதிக்க ஜாதியினர் யாரும் எங்கள் கடைகளுக்கு வருவ தில்லை. பக்கத்து ஊருக் குச் செல்கின்றனர். இதன ல் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சலூன் கடைக் காரர்கள் சார்பில் மாநில சமூகநலத் துறையில் கடந்த புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனே விசாரணை நடத் துமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச் சர் ஆஞ்சநேயா உத்தர விட்டார். இதையடுத்து தாலூரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சலூன் கடைக் காரர்கள் மிரட்டப்பட் டதும், தாக்கப்பட்டதும் உண்மை தான் என சமூக நலத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து 5 சலூன் கடைக்காரர்களையும் வெள்ளிக்கிழமை பெங் களூருக்கு வரவழைத்த அமைச்சர் ஆஞ்சநேயா, ஆதிக்க ஜாதியினர் புறக் கணிப்பால் நஷ்டம் அடைந்த 7 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

மேலும் தாழ்த்தப்பட் டவர்களுக்கு தொடர்ந்து முடித்திருத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சலூன் கடைக் காரர்கள் மீதான தாக் குதல் தொடர்பாக நட வடிக்கை எடுக்குமாறு பெல் லாரி காவல் துறையின ருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/82694.html#ixzz35PvnVWGv

தமிழ் ஓவியா said...


புக்கர் விருதை அடுத்து பின்டர் விருதை வென்றார் சல்மான் ருஷ்டி


இலண்டன், ஜூன் 22- சாத்தானின் கவிதைகள் என்கிற புகழ்பெற்ற நூலின் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1989ஆம் ஆண்டில் அந்த நூலை எழுதியபோது இசு லாமிய அடிப்படைவாதி களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். நாடு கடத் தல்கள், ஈரானின் ஹயதுல்லா கொமேனியின் ஃபத்வா (மரண) தண்டனை அறி விப்பு என்று பல சவால் களை எதிர்கொண்டவர் சல்மான்ருஷ்டி. 67வயதான சல்மான் ருஷ்டி 2007ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளவர்.

ருஷ்டியின் நள்ளிரவில் குழந்தைகள் என்கிற நாவ லுக்காக 2008ஆம் ஆண்டில் சிறந்த புக்கர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட் டார். தற்போது எழுத்தாளர் ஹரோல்டு பின்டர் நினை வாக அளிக்கப்படும் பென் பின்டர் விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த விருது நாடக எழுத்தாளர் ஹரோல்டு பின் டரை கவுரவப்படுத்துவதற் காக 2009ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யும் குழுவின் இடம் பெற்றுள்ளவராகிய மவ்ரீன் ஃப்ரீலி என்பவர் கூறுகை யில், இந்த பரிசு ஆங்கில எழுத்தாளர்களின் வழியில், சல்மான்ருஷ்டிக்கு புத்தகங் களை எழுதியவர் என்பதற்கு மட்டுமின்றி, அவர் கருத்துச் சுதந்திரத்துக்காக பல ஆண் டுகள் பேசிவருவதற்கும், அவருடைய எண்ணிலடங் காத தனிப்பட்ட அன்பான செயல்களுக்காகவும் அவ ருக்கு நன்றி கூறும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் ருஷ்டி குறித்து அவர் கூறும் போது, எழுத் தாளர்களை முறையின்றி எதிர்ப்பது, கைது செய்வது, கட்டாயமாக நாடு கடத் துவது என்று உலகின் எந்த மூலையில் எழுத்தாளர் களுக்கு எதிராக இருந்தாலும், சல்மான் ருஷ்டி தாமாகவே முன்வந்து அக்கறையுடன் குரல் கொடுப்பார். கவன முள்ள எழுத்தாளர் உறங்கு வதில்லை என்கிற வரி களுக்கு ஹரோல்டு பின் டரையடுத்து ருஷ்டி முதல் நபராக இருப்பதாக நான் எண்ணுகிறேன் என்று கூறினார்.

இந்த விருது வழங்கப் பட உள்ளது குறித்து ருஷ்டி கூறும்போது, என் நண்பர் ஹரோல்டு பின்டர் பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெரிதும் ஆவ லாக உள்ளேன். எழுத்தாளர் கள் டோனி ஹாரிசன், டேவிட் ஹேரி, கரோல் ஆன் டஃப்பி மற்றும் டாம் ஸ்டாப்பர்டு ஆகியோரின் வழியில் பின்டரின் இலக்கிய அறிவு, சமூகநீதியில் உணர்ச் சியுடன் பொருந்தியிருந்தது.

எழுத்தாளர் பணி என்பது உலகின் இலக்கிய வளர்ச் சிக்கு மட்டுமின்றி, சுதந்திர மனித உரிமைப் பறிப்பை எதிர்க்க வேண்டியது மிக வும் முக்கியமானதாகும். அதில் இங்கிலாந்திலும், அமெரிக்க அய்க்கிய நாடு களிலும் என்னுடைய பங் களிப்பும் உள்ளது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ருஷ்டி கூறினார்.

இலண்டனில் அக்டோ பர் 7ஆம் தேதி அன்று நியூயார்க்கிலில் உள்ள எழுத் தாளர் விருது வழங்கும் விழாவில் ருஷ்டிக்கு பிரிட் டிஷ் நூலகத்தில் வழங்க உள்ளார். சர்வதேச எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ருஷ்டி யால் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் ஒருவருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப் படும் என்று ஆங்கில எழுத் தாளர் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82688.html#ixzz35Pw1RVxi

தமிழ் ஓவியா said...


மன்னார்குடி அய்யருக்கு எவ்வளவு பெரிய வக்காலத்து!

டில்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 31. இதில் ஜஸ்டீஸ் எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஜஸ்டீஸ் பி. சதாசிவத்திற்குப் பின் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் எவரும் இன்றும் இல்லை; சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆனபின்பும்கூட.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களில் இன்றும் 31 பேரில் ஒருவர்கூட நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் இல்லை.

ஒரு ஜஸ்டீஸ் வரதராஜன், ஜஸ்டீஸ் ராமசாமி இருவர் தான் (S.C.) சமூகத்திலிருந்து சென்று ஓய்வு பெற்றவர்கள்.

இவ்விருவரின் சமூக மக்கள் எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் - இருந்தும் இந்த புண்ணிய பூமியில் பஞ்சம, சூத்திரர்களுக்கு அங்கே இடமில்லை. அத்துணை நீதிபதிகளும் உயர் ஜாதிக்காரர்களே; மக்கள் எண்ணிக்கையில் அவர்கள் 10 விழுக்காட்டினரே முன்னேறிய ஜாதிகளைச் (F.C.) சேர்த்தாலும்கூட!

அப்படியிருந்தும் அவாள் ஆதிக்கமே இன்று வரை! இப்போது காலியான பதவிகளில் 3 நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப, தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் இரு பார்ப்பனர்களோடு மேலும் இரு பிரபல சட்ட நிபுணர்கள் வழக்குரைஞர் களாக இருந்தவர்கள் பெயரை முந்தைய தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த கொலிஜியம் பரிந் துரைத்தது!

பிரபல சட்ட நிபுணரான பார்சி வழக்குரைஞருடன் முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மன்னார்குடி பார்ப்பனர் கோபால் சுப்பிரமணியத்தையும் பரிந்துரை செய்திருந்தனர்.


தமிழ் ஓவியா said...

மத்திய அரசு அவர் பெயரை நிராகரித்து மற்ற மூவரை (இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்; ஒரு சட்ட நிபுணரான பார்சி மூத்த வழக்குரைஞர்) மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்!

அது கண்டு இனமலர், இந்து போன்ற ஏடுகள் கொதித்து எழுந்து தங்களது துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன!

எதற்கு இவரை (கோபால் சுப்ரமணிய அய்யரை) ஏற்க முடியவில்லை என்பதற்கு ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த நபர் (மன்னார்குடி அய்யர்) அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர்; தன்மீது சாமி வருவதாகச் சொல்வார்; இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களை அப்பதவியில் அமர்த்தக் கூடாது என்று, நோட்டில் (Notes) சொல்லியுள்ளார்களாம்!

நியாயமான காரணம் தானே? ஆனால் பார்ப்பன ஏடுகள் வேறு ஏதோ காரணம் குஜராத் வழக்கு என்று கூறி மோடி அரசை அச்சுறுத்திப் பார்க்க முன் வந்துள்ளனர்?

(இன்றைய இனமலர் ஏட்டில் - டில்லி உஷ் பக்கம் 7)

தமிழருக்கு நீதிபதி மறுப்பு ஏன்?

(மன்னார்குடியைச் சேர்ந்தவர், உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சுப்ரமணியத்தை நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய குழு, சிபாரிசு செய்தது.

ஆனால், மோடி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் சிபாரிசை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று, பைலை திருப்பி அனுப்பிவிட்டது.'2ஜி' விவகாரம் மற்றும் நீரா ராடியாவின், தொலைபேசி விஷயங்களில் சுப்ரமணியத்திற்கு தொடர்பு எனவே தான், இவரை நீதிபதியாக்க அரசு மறுக்கிறது என்று செய்திகள் வெளியாயின. ஆனால், முக்கிய காரணம், சொராபுதீன் என்பவரையும், அவரது மனைவியையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய வழக்கில், குஜராத் அரசு மற்றும் மோடியின் வலது கரமான, அமித் ஷா மீது கடுமையாக குற்றம் சாட்டி, சி.பி.அய்., விசாரணைக்கு உத்தரவிட,

இந்த வழக்கில் கோர்ட்டிற்கு உதவும் வழக்கறிஞராக இருந்தவர் கோபால் சுப்ரமணியம், இதனால் தான், இவரை எதிர்க்கிறது மோடி அரசு. மேலும், எதற்கு இவரை நீதிபதியாக்கக் கூடாது என்று, ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர் கோபால். தன் மீது சாமி வருவதாக சொல்வார். இப்படி மனநிலை உள்ளவர்களை பதவியில் அமர்த்தக் கூடாது என்று, அந்த நோட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.இதனால், தற்போது, '2ஜி' வழக்கில், சி.பி.அய்., வழக்கறிஞராக உள்ள, உதய் லலித் என்பவரை நீதிபதியாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.)

என்னே திடீர் தமிழர் பற்று பார்த்தீர்களா?

தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.

காஷ்மீரத்திலுள்ள பார்ப்பனருக்கு ஜூரம் வந்தால் கன்னியாகுமரி பார்ப்பனருக்கு நெறி கட்டும் என்று!

அது எவ்வளவு சரியானது என்பது இப்போது புரியவில்லையா?

ஆங்கில ஹிந்து நாளேட்டில் (11.6.2014) ராஜகோபால் என்ற செய்தியாளர் இதற்காக வரிந்து கட்டி டெல்லியை - மோடி அரசை மிரட்டிச் செய்திகளை இரண்டு பக்கங்களில் தனித்தனியே வெளியிட்டு முயற்சித்தார்!

என்றாலும் பிள்ளை பிழைக்கவில்லை; வெறும் எண்ணெய்ச் செலவுதான்!

இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி முதல் மூத்த நீதிபதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (பெண் நீதிபதிகள் உட்பட) பலர் இருந்தும் அதுபற்றி - சமூகநீதிக்கான போராட்டத்தில் - எழுத பேச நாதியேயில்லை.

மேலும் ஒரு பூணூல் திருமேனிக்கு இடமில்லை என்றவுடன், அக்கிரகாரத்தில் பூகம்பமே வெடிக்கிறது; அட, வீபிடணத் திராவிடர்களே, உங்களுக்கு இத்தகைய உணர்வு எப்போதுதான் வரும்? அவாளைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/82686.html#ixzz35PwBeOVo

தமிழ் ஓவியா said...


அப்பட்டமான பண்பாட்டுப் படையெடுப்பு!


- கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத்தலைவர், திராவிடர் கழகம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா தத்துவத்தை மறைமுகமாக திணிக்க முயற்சி செய்கிறது. இந்தி சமஸ்கிருதம் சார்ந்த மொழியாகும்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தோற்றுநரான எம்.எஸ்.கோல்வால்கர் சமஸ்கிருதத்தை இந்நாட்டின் ஆட்சிமொழியாக்கவேண்டும் என்றார்.

1937இல் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றிய ராஜகோபாலாச்சாரியார், "சமஸ்கிருத கலாச்சாரத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு இந்தியே முதல்படி" என்று பேசினார்.

ஒவ்வொருமுறையும் டில்லி இந்தியை திணிக்க முயலும்போதும் தமிழ்நாடு அதை எதிர்த்துப் போராடியே வந்துள்ளது. 1927இல் தந்தை பெரியார் எதிர்த்து எழுதினார். 1937, 1948 என தொடர்ந்தது. 1960இல் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.

தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1.8.1955). அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்கள் பிரதமர் நேருவின் சார்பில் "பிற மொழி பேசும் மாநிலங்களில் இந்தி திணிக்கப் படமாட்டாது" என்கிற ஒரு உறுதிமொழியை அளித்தார். போராட்டத்தைப் பெரியார் ஒத்தி வைத்தார்.

பெரியாருக்கு அன்று ஏற்பட்ட அய்யம் உண்மை என்பதையே இன்று மோடி நிரூபித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும், இந்தி மொழி பேசும் இந்துத்துவா வாக் காளர்களையும் குளிர்விக்கவே பாஜக அரசு இதை செய்திருக்கிறது. அரசியல் சாசன 8ஆவது பிரிவில் பல மொழிகள் இருக்க இந்திக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? நேருவின் உறுதி மொழி எங்கே போயிற்று?

இந்தியா ஒரு நாடு அல்ல! பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் துணைக்கண்டம். ஒரு மொழியையோ அல்லது கலாச்சாரத் தையோ பிறமொழி பேசும், பிற கலாச்சார மக்களிடம் எப்படி திணிக்க முடியும்? அப்படி திணிக்க நினைப்பவர்கள் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

முக்தர் அபாஸ் நக்வி இந்தி பேசும் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றால் அதற்கு அங்கே தீர்வுகாணாமல் பிறமக்களிடம் அரசு இந்தியை திணிக்க முயலக்கூடாது. தமிழ் மக்களிடையே எழுந்த இந்தி எதிர்ப்புணர்ச்சி வலுவிழந்துவிட்டதாக அரசு கருதுமானால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி எந்தவித போராட்டத்துக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள் என்பதை உணரவேண்டும்.

இந்தி திணிப்பிற்காண முதல் எதிர்ப்புக் குரல் - இப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியிருப்பது தமிழர்களின் இந்தி எதிர்ப்புணர்ச்சித் தணல் இன்னும் தணியவில்லை என்பதையே காட்டுகிறது.

வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்கள் தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள்? பிறகு ஏன் எங்கள் மீது மட்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள்?

(தமிழில்: அருவி தளபதிராஜ்)
டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு அளித்த பேட்டி 21.6.2014.

Read more: http://viduthalai.in/page-2/82684.html#ixzz35PwsGhM6

தமிழ் ஓவியா said...


இது என்ன கொடுமை?இலங்கை அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு!


சென்னை, ஜூன் 22_ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப் பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக் காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990- ஆம் ஆண்டு இலங்கையிலி ருந்து வந்த 164 குடும்பங் களைச் சேர்ந்த 523 தமி ழர்கள் இங்கு தங்கியுள்ள னர். இவர்களில், பெயிண் டிங் தொழிலாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று.

தனது தாய் ரூபா வதி மற்றும் மூன்று தம்பி களுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகா மைச் சேர்ந்த அல்லிமலருக் கும் கடந்த 1995- ஆம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி யில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற் றுள்ளார்.

தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந் தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்காக விண்ணப் பித்தார். அவரது விண்ணப் பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந் தாய்வில் பங்கேற்க அவ ருக்கு அழைப்புக் கடிதம் வரவில்லை. 197.50 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் களுக்கு இன்று (21- ஆம் தேதி) மருத்துவக் கலந் தாய்வு நடக்கவுள்ள நிலை யில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.

இதுகுறித்து நந்தினி கூறியதாவது: மருத்துவக் கலந்தாய் வுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண் டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும், எனக்கு கிடைத்தன.

ஆனால், எனது கட்ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய் வுக்கான அழைப்புக் கடித மும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய்வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறை யிட உள்ளேன் என்றார்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனை வருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகு தியான விண்ணப்பதாரர் கள் பெயர் மட்டும், புர விஷனல் பட்டியலில் வெளியிடுவோம்.

தமிழ கத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடி யுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதி கள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந் தாய்வில் பங்கேற்க முடி யாது என்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/82666.html#ixzz35PxoSoiS

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

விளக்கு

மோகனூர் சிவன் கோவிலில் கருவறை விளக்குச் சுடர் எவ்வளவுக் காற்றடித்தாலும் அணையாது எரியும். இங்குள்ள இறைவனுடைய பெயர் அசலதீபேஸ்வரர். இதன் பொருள் அணையாத விளக்குச் சுடராம்.

சவாலை சந்திக்கத் தயார் என்றால் சோதனை செய்ய நாங்கள் தயார்! கொசுறு ஒன் றுண்டு; எண்ணெய் இல்லாமல் அந்த விளக்கு எரியுமா? எண்ணெய்த் தீர்ந்து போன பிறகும் அணையாமல் எரியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82717.html#ixzz35W0JnGzc

தமிழ் ஓவியா said...


புதிய ஞானோதயமோ!பொருளாதாரம் வளர்ச்சி பெற கசப்பு மருந்து சாப்பிடுங்கள்! வெங்கய்யா புலம்பல்

அய்தராபாத், ஜூன் 23-_ -ரயில் கட்டணம் கடுமை யாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அரசியல் கட்சிகள் கடுமை யாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய கசப்பு மருந்தை சாப்பிடத்தான் வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள் ளார்.

அய்தராபாத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய் தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகை யில், கடந்த 10 ஆண்டு களாக அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசு தவறான ஆட்சியை நடத்தி யுள்ளது. அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையால் இந்த ரயில் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார். மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ள ஒரு மாதத்திற்குள்ளாகவே மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை துவங்கி யுள்ளது. ரயில் கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர்கள் நியாயப் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கசப்பு மருந்து` சாப்பிடுங்கள் என்று மக்களுக்கு அறி வுரை கூறியுள்ள வெங் கய்யா நாயுடு, தற்போதைய ரயில்வே பட்ஜெட்டிற்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப் படுகிறது. ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு பொருளாதாரத்தை தடம்புரளச்செய்து விட் டது என்றும் பொருளா தாரம் மீண்டும் சரியான பாதைக்கு வர வேண்டும் என்றால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண் டும் என்றும் கூறினார். இதுபோன்ற உறுதியான முடிவுகளை எடுப்பதில் மோடி அரசு தயக்கம் காட்டாது என்றும் அவர் மக்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

முன்னதாக, உலகத் தரத்திலான ரயில் சேவை தேவையென்றால் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ரயில் கட்டண உயர்வு குறித்தமுடிவு கடினமானது என்றாலும், தற்போதுள்ள சூழலில் சரியான முடிவு என்றும் அவர் கூறினார். ரயில்வேயில் சிறந்த வசதிகள் செய்ய அதைப் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்தலாம் என்றும் அவர் நியாயப்படுத்தினார்.

பிருந்தா காரத் கண்டனம்

ரயில்கட்டண உயர்வை மோடி அரசின் அமைச்சர் கள் நியாயப்படுத்தி வருவது நகைப்புக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார். ஏற்கெனவே விலை வாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு மோசமான முடிவு. ஆனால்இது வளர்ச்சிக்கு உதவும் என்று அருண்ஜெட்லியும், அமைச் சர்களும் கூறுவது நகைப் புக்குரியது. தேர்தல் பிரச் சாரத்தின் போது, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதே கொள்கைகளை, அதே முடிவுகளை நாங்களும் தொடர்வோம் என்று இவர்கள் ஒருபோதும் சொல்லவில்லையே என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82722.html#ixzz35W0cKJ50

தமிழ் ஓவியா said...


தாக்குப் பிடிக்குமா மத்திய அரசு?


எனது பெயர் கெடலாம் - என்னை மக்கள் வெறுக்கவும் செய்யலாம் என்று சில நாட்களுக்கு முன் பீடிகை போட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்படி ஏன் சொன்னார் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படவில்லை. இந்தக் குறுகிய காலத்தில் மத்தியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியின் அறிவிப்புகள், முடிவுகள் நிச்சயமாகக் கெட்ட பெயரைக் கெட்டியாக சம்பாதித்துக் கொடுப்பவைதான் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும், முன்பு எப்பொழுதையும்விட இப்பொ ழுது மிக அதிகமாக அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடியை வெகு துச்சமாகக் கருதுகிறார், சுண்டைக் காய்த் தீவான இலங்கை அதிபர் என்பதும் நிரூபணமாகி விட்டது.

எந்த விலைவாசியைக் காரணமாகப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்தி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி மத்தியில் அமைந்ததோ, அதே காரணங்களை அட்சரம் பிறழாமல் எதிர்க்கட்சிகள் இன்றைய ஆளும் கட்சியை நோக்கித் திருப்பிச் சொல்லும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஆனால், இவ்வளவுச் சீக்கிரம் மக்களின் அதிருப் தியை இந்த ஆட்சி வாங்கிக் கட்டிக் கொள்ளும் என்று யாரும் எதிர்ப் பார்த்திருக்கவே முடியாது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணம் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள்தான். இந்த அத்யாவசியமான பொருள்களின் விலையைக்கூட நிர்ணயிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுத்தது டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சி.

அதனைக் குற்றங்கூறி, சாட்டையை எடுத்துச் சுழற்றியது இதே பி.ஜே.பி.தான்; இப்பொழுது என்ன வாழ்கிறதாம்?

அதே தனியார் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் என்று மோடி ஆட்சியும் கூறி விட்டதே! அதோடு நின்றாலும் பரவாயில்லை.

இரண்டு நாட்களுக்குமுன் மத்திய அரசு வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா? சமையல் எரிவாயு விலை மாதந்தோறும் ரூபாய் 10 உயருமாம். இதன் மூலம் குடும்பத் தலைவிகளின் மொத்து தயாராகி விட்டது என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து மிக முக்கியமான மரண அடி, சாதாரண மக்களும் அதிகம் பயன்படுத்துவது இரயில்தான். அந்த இரயில் கட்டணத்தை இதுவரை என்றும் கேள்விப் பட்டிராத - நடந்திராத வகையில் 14.2 சதவீத உயர்வு என்றால், கேட்கும் போதே தலையைச் சுற்ற வில்லையா? சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட் டுள்ளது (6.5 சதவீதம்) இதன் மூலமும் விலைவாசிகள் உயர்வு எகிறிப் பாயப் போகிறது.

ஏற்கெனவே பண வீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நிலையின் இடுப்பையும், முதுகையும் ஒரே நேரத்தில் பிளப்பது என்று மத்திய பிஜேபி அரசு முடிவு கட்டி விட்டதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் கட்டுக்கடங்காமல் கொந்தளித்து எழுந்துள்ளது. குறிப்பாக டில்லி, உ.பி., பீகார் போன்ற வட மாநிலங்கள் உக்கிரமாகக் கிளர்ந்துள்ளன. இந்தத் தீ எளிதில் அணைந்து விடப் போவதில்லை; எல்லா மாநிலங்களிலும் காட்டுத் தீயாகப் பரவத் தான் செய்யும்.

இரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கட்டண உயர்வுக்கு நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காரணம் சொல்லுகிறார்: சர்வதேச தரத்துக்கு இந்திய இரயில்வேயை உயர்த்திட இது தவிர்க்க முடியாதாம். இவர் இப்படி சொல்கிறார்; பிரதமர் மோடி என்ன சொல்லுகிறார்? இரயில்வே துறையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறுகிறார்.

இது என்ன முரண்பாடு? புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் உலகத் தரத்துக்கு இந்திய ரயில்வேயை எப்படி உயர்த்துவார்களாம்?

சர்வதேசத் தரத்திற்கு இரயில்வே மட்டும்தான் உயர வேண்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ துறைகளில் நமது தரம் சர்வதேச தரத்தை எட்ட வில்லையே, அதற்காக அவற்றின்மீது வரிகளை விதிக்கலாமா?

நாட்டின் பொருளாதாரத்தைப் படிப்படியாக வளர்ப்பதன் மூலம்தான் அந்த நேர்த்தியான அணுகுமுறைகள் மூலம்தான் முறையாக அந்தச் சர்வதேசத் தகுதி எல்லையை எட்டிப் பிடிக்க வேண்டுமே தவிர, அகலக் கால் வைத்து அவதிப்படக் கூடாது. இன்னொரு காரணத்தையும் சொல்ல ஆரம்பித்துள்ளனர். பழைய காங்கிரஸ் ஆட்சியின் போதே மேற்கொள்ளப்பட்ட முடிவுதான் இரயில் கட்டண உயர்வு - நாங்களாகச் செய்த முடிவல்ல என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்லித் தப்பி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். பழைய ஆட்சி செய்த தவறுக்காகத் தானே அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, பி.ஜே.பி.யை அந்த இடத்தில் உட்கார வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது இத்தகு காரணத்தை இந்த ஆட்சி சொல்லலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்? (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியே செயல்படுத்தவில்லை).

இந்தப் போக்குத் தொடருமேயானால் அய்ந் தாண்டைக் கடப்பது கூடக் கடினம்தான் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/82728.html#ixzz35W18t0MZ

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page-2/82727.html#ixzz35W1JZ1qg

தமிழ் ஓவியா said...


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:
சமூக நீதிக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி

-குடந்தை கருணா

அய்.அய்.டி கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் யிணிணி தேர்வினை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதி, அதில் 27000 தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அய்.அய்.டியில் 9784 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தரப்பட்ட நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு 2641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, நடத்தப்பட்ட தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 4085 பேர், பொதுப்போட்டியிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6726 மாணவர் கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முந்தைய அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டு, அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு அளித்திடும் மசோ தாவை நிறைவேற்றினார். அது உச்ச நீதிமன்றத்தில், பார்ப்பனர் களால் தடை பெற்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து 2008 முதல், அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப் பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதி, திறமை குறைந்துவிடும் என பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் JEE தேர்வில், பொதுப்போட்டியில், பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளி, 4085 மாணவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்பது சமூக நீதிக்கும், பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Read more: http://viduthalai.in/page-2/82733.html#ixzz35W1TGb6Z

தமிழ் ஓவியா said...


கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்

இந்தியா பெரும்பகுதி கிராமப்புறங்கள் நிறைந்த நாடாகும். அதே போன்று கருநாடக மாநிலத்திலும் கிராமங்கள் நிறைந்துள்ளன. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா கிராமப்புற மக்களுக்கும் சரி நிலையில் சென்றடை யாமல் உள்ளன. அந்த வகையில் முதலும் தலைமையானதுமான கழிப்பிட வசதியை எல்லாக் கிராமப் புற மக்களுக்கும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணியை தீவிர சிறப்புத் திட்டமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படவேண்டும்.

மனிதநேய மிக்க செயல்பாடுகளில் முக்கியம் கருதி செயல்படும் கருநாடக மாநில முதலமைச்சர் அவர்கள் இன்றி யமையாத எல்லா வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தினை செயல்வடிவம் கொடுத்து இரண்டு நிதியாண்டிற்குள் முடித் திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேணுமாய் முதலமைச்சர் அவர் களை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிராமப்புற பெண்கள் கழிவறைகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துகின்ற விழிப்புணர்வை தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக முக்கியத்துவம் பணிகளைச் செய்வதில் இந்தியாவிலேயே கருநாடகம், முதன்மை யாதென்ற செயலிலும், முதன்மையான தென்றே வரலாற்றுச் சுவடினை உரு வாக்கிட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல், சமூகச் சீர்திருத்தங்களை கிராமப் புறங்களில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் எல்லா கிராமபுறங்களிலுள்ள வீடு களுக்கு கழிவறைகளும், தாலுக்கா தலை மையிடங்களில் பொதுக் கழிவறைகளை அமைக்க வேணுமாய் மிகுந்த அக்கறை யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page-2/82732.html#ixzz35W1gcBTD

தமிழ் ஓவியா said...


உடலை சீராக வைத்திருக்கும் புரோட்டீன் உணவுகள்


ஆரோக்கியம் தரும் பருப்பு வகை சமையல்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட் டீன்கள் நிறைய உணவு வகைகளில் உள்ளன.

அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன் றவை உள்ளது. ஆனால், சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள் ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. அது ஓவ்வொன்றும் பல சத்துக்களை கொண் டுள்ளது. அவற்றில் பொதுவான ஓன்று என்றால் அதில் குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்,.

மேலும் இதனை தொடர்ச்சியாகவும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் பருப்புகளின் வகைகளையும் அவற்றின் பயன் களையும் அறிவோம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நிறைந்த அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டா சியம், அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்ப தற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டு மல்லாமல் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சைபயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன் கால்சியம், பொட்டாசியம் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் உணவுகள் எளிதில் செரிமானமடைவதோடு உடல் எடை மறறும் கொலஸ்ட் ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புசத்து, காப்பர், மாங்கனீசு, போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டக்கடலையின் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புசத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சினை களையும், ரத்தசோகை பிரச்சினைகளையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட் மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலைவிட இரு மடங்கு அதிக புரோட்டீனை கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வைட்மின்கள் பி6, இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டைபயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்கமுடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதயநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டா சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந் துள்ளது. இதனால் தசைச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும் தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமசத்துகளும், வைட்ட மின்களும் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடலாம்..

Read more: http://viduthalai.in/page-7/82743.html#ixzz35W2h8WJR

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

Read more: http://viduthalai.in/page-7/82749.html#ixzz35W2txaFP

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

Read more: http://viduthalai.in/page-7/82749.html#ixzz35W2txaFP

தமிழ் ஓவியா said...


சாய்பாபா கடவுளா? கிடையாது! அவருக்கு கோயில் கட்டக் கூடாது! சங்கராச்சாரியார் எதிர்ப்பு!

மும்பை, ஜூன், 24-_ சாய்பாபா அவதாரமும் கிடையாது, கடவுளும் கிடையாது, அவருக்குக் கோயில் கட்டக் கூடாது என்று துவாரகாபீட சங்கராச்சாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக் குரிய கருத்தினைக் கூறி யுள்ளார். சாயிபாபாவைக் கடவுளாக வழிபடுபவர்கள் ஏராளமானோர் உள்ள னர். நாடுமுழுவதும் அவருக்கு பல நகரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியார் கருத்தினை கூறியுள்ளார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும்வகையில் சாய்பாபா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்துக்களுக்கு சாய்பாபா தேவையில்லை என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சனாதன தர்மத்தில் கடவுள் விஷ் ணுவின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாய்பாபா கண் டிப்பாக கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவர் மாமி சம் சாப்பிடமாட்டார். அவரை குருவாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சங்கராச்சாரியாருக்கு கோவில் கட்டுவது அவசி யமற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சாய் பாபா பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

பகவான் சாயி என்று கூறப்பட்டு வந்தார்; அற்புதங்களைச் செய்யும் மகாசித்தி பெற்றவர் என்றும் சாயிபாபாபற்றி பரப்பி வந்தார்கள். ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. பக்தர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர் அவர் மரணித்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக் கத்தைகள் லாரிகளில் கடத்தப் பட்டன. அலமாரிகளில் பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகளும் (Hand Bags) நிரம்பிக் கிடந்தன என்ற விவரங்கள் தெரிந்ததே.

Read more: http://viduthalai.in/e-paper/82775.html#ixzz35boZzOzB

தமிழ் ஓவியா said...


அவசியம்கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/82785.html#ixzz35c56IR7g

தமிழ் ஓவியா said...


முதியோர்களே, காலத்தைக் கட்டி அணையுங்கள்!

முதியோரின் ஆயுள் - வாழ்வு வளருகிறது; காரணம் மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி - அரிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் மருந்து வகைகள்.

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வளர்ச்சியே அறிவியலோடு தொழில் நுட்பமும் இணைந்து கொண்டதுதான்! அதனால் புதுப்புது மருத்துவக் கருவிகள் உண்டாக்கப்பட்டு எளிதில் கிடைக்கிறது! மனித வாழ்வு நீளுகிறது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், ஒரு சிப் போன்ற ஒன்று எளிதில் - கணினியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அணியும் காலணி (ஷூ Shoes)யிலோ அல்லது கழுத்தில் கட்டப்படும் டையிலோ சொருகி வைத்தவுடன், அதை அணிந்துள்ள வர்களது இதயத் துடிப்பு சீரின்மை யானாலோ, ரத்தக் கொதிப்பு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ ஆனாலோ இந்த சிப் மூலம் அவரது குடும்ப டாக்டருக்கு உடனே தகவல் சென்று விடுமாம்! உடனடியாக டாக்டர் விரைந்து வருவாராம்! சிகிச்சை தொடங்கப்படுமாம்!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் இன்சுலின் அளவு எவ்வளவு தேவை என்பதை ஒரு புதுக்கருவி, ஊசியேற்றுகையில் அவருக்குத் தகவல் தெரிவித்து, தேவையான அளவு (Optimum) போட்டுக் கொள்ள உதவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழில் நுட்பம் (Technology) மூலம் பெறும் பயன் அல்லவா?

இதுபோல தொழில் நுட்பத்தினால் நமக்கு நடக்கும் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சைகளை படுத்துக் கொண்டுள்ள மேசையிலிருந்தே, மயக்க ஊசி மூலம் மயக்கம் ஏறுகிற வரையில் பார்த்துக் கொள்ளலாமே! (எனக்கேகூட சில ஆண்டுகளுக்குமுன் அந்த இனிய வாய்ப்பு - பார்த்த வாய்ப்பு கிடைத்தது!)

முதியவர்களுக்கு மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் வரை, எந்த அறுவை சிகிச்சையையும் செய்திட மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தயங்குவதே இல்லை.

தந்தை பெரியார் அவர்களுக்கு அவர்தம் 90ஆம் ஆண்டு - 91ஆம் ஆண்டில் வேலூரில் டாக்டர் H.S. (Bhatt) பட் அவர்கள் குழுவினரால் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து அதற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் வாழ்ந்தாரே! (அவ ரது 5 ஆண்டு என்பது மற்றவர்களின் 15 ஆண்டு வாழ்வு நீட்டத்திற்குச் சமம் ஆகும்).

எனவே வாழ்வு நீட்டப்படுவது அதி சயம் அல்ல; அவர்கள் மகிழ்ச்சியாக வாழு கிறார்களா? என்பதுதான் முக்கிய கேள்வியாகும்!

அது உடலைப் பொறுத்தது அல்ல; உள்ளத்தைப் பொறுத்தது; மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது! அவரவர் மனநிலை சுற்றுச்சூழல் உரு வாக்கம் - சுறுசுறுப்பு, உழைப்பு இவைக ளைப் பொறுத்தது!

1. வெறும் குடும்பத்து உறுப்பினர்களை மட்டும் நம்பிக் கொண்டு வாழாமல், தங்களுடைய பொருளாதாரச் சுதந்தி ரத்தை இறுதி வரை தக்க வைத்தாலே மற்றவைகள் தானே சரியாகி விடும்! நாம் பிறர் கையை எதிர்பார்க்காமல், எளிமை, சிக்கன வாழ்வினால் ஏற்பட்ட சேமிப்பு நமக்கு என்றும் துணைவனாக நிற்கும் என்பது உறுதி. இறுதி நிகழ்ச்சிகள்கூட செலவின்றி முடிப்பதோடு அதனால் சமூக நற்பயன் விளையவும் கூடுமே! எப்படி என்கிறீர்களா?

அருகில் உள்ள மருத்துவக் கல் லூரிக்கு உங்கள் உடலைத் தந்துவிட உயில் - மரண சாசனம் எழுதி பதிவு செய்து விடுங்கள். அதன்மூலம் சுதந்திர மாக வாழ்ந்த மனிதன்; சுதந்திரமாகவே எவர் தயவுமின்றி இறுதிப் பயணத்தை மருத்துவக் கல்லூரியின் சவக் கிடங்கை நோக்கியே செல்லக் கூடும்! எந்தச் செலவும் இல்லை. கண்ணாடிப் பெட்டிச் செலவுதான் - அதுவும்கூட உயர் ஜாதியினால் தவிர்க்கப்படுகிறது. (மூங்கில் பாடைதான் சம்பிரதாயம்)

2. நல்ல நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டு காலை, மாலை நடைப்பயிற்சியின்போதோ அல்லது வசதியான நேரத்திலோ அவர் களோடு கலந்துரையாடி உறவாடும் நிலை எய்தினால், யாருக்கும் சுமை இல்லை; சுகம் உண்டு!

3. நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் அல்லவா? அவற்றை வாசித்து சுவாசிக்கலாமே!

காசு கொடுத்து வாங்க வேண்டாம். நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

4. கைத் தொலைபேசி, அய்-பேட் (i-pad) போன்றவை இருப்பின் உலகத்தையே அழைத்து, உலகச் செய்தி முதல் உள்ளூர் செய்திவரை, எந்த தகவல் பற்றித் தெரியவில்லை என்றாலும் கூகுள் போன்றவற்றைத் தட்டினால் உடனே கிடைக்குமே!

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்! என்பதற்கு புதுப்பொருள் கண்டு மகிழ்வுடன் மற்றவர்களுக்குக் குடும்பப் பாரமாய் இருக்காமல், சுதந்திர தாத்தாக்களாக, பாட்டிகளாக, அப்பா, அம்மாக்களாக வாழ்ந்து காட்டலாமே!

நம் சுயமரியாதை எப்போதும் நம் கையிலேயே இருக்குமே! இல்லையா?- ஆசிரியர் கி.வீரமணிRead more: http://viduthalai.in/page-2/82790.html#ixzz35c5Er3PV

தமிழ் ஓவியா said...


தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள்


1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.

அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.

கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார்.

1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார்.

சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/82797.html#ixzz35c6l57MY