Search This Blog

18.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 5


("இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.")

பால காண்டம்

அய்ந்தாம் அத்தியாயம் தொடர்ச்சி...

திருமால் ஒரு பெண்ணைக் கொன்றார் ஆதலின் நீயும் இவளைக் கொல் எனக்கூறியதைத் தாடகை தோன்றுவதன் முன் கூறுகிறார்.  ஆனால் கம்பரோ இச்செய்தியைக் குமர னாகிய இராமனுக்கும், கிழவியாகிய தாடகைக்கும் நடந்த போர் நடுவில் கூறியதாகக் கூறுகிறார்.  பெண்ணைக் கொல்ல ஏவும் விசுவாமித்திரன் இழிந்த அறிவுதானென்னே?


விசுவாமித்திரன் வேள்வி தொடங்கியபோது சுபாகு, மாரீசர் பல அரக்கரோடு வந்து தடுத்தனர்.  தாடகையும் வேள்வியை முனிவர் செய்யும்போது தடுத்துவந்தனனெனத் தெரிகிறது.  ஆரியர் மிலேச்சரென்கிறது நிகண்டு, ஆதியில் ஆரியர், குதிரை, கழுதை, நாய் முதலிய மிருகங்களை அடித்துத் தின்று வந்தனர்.  பின்னர் அவர்கள் தம் தெய்வத்துக்குப் பிரீதி என்று சொல்லி வேள்வி என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆடு மாடுகளைத் தின்று வந்தனர்.  இந்த இராம கதையிலும்கூட தசரதன் செய்த பரி வேள்வியில் பல பசுக்களையும், குதிரையையும், பாம்பு, ஆமை முதலிய அற்பமான உயிர்ப் பிராணிகளையும் தின்றனரென்றும், சோமரசமாகிய கள்ளைப் பருகினரென்றும் தெளிவாக அறிகின்றோம்.


தமிழ் மக்களோ கொல்லா விரதமே குவலயமெல்லாம் ஓங்க வேண்டுமென்னும் சீலமிகவுடையோர்.  தம்முயிர் நீப்பினும் தாம் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை புரியார்.  பசுக்கொலை புரிந்து ஆயிரம் வேள்வியைச் செய்தலினும் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று எனக் கொல்லா நோன்பு ஆற்றுபவர்.  நன்னயஞ் செய்தலையே தமக்குத் தீமை செய்தோரை ஒறுக்கும் வழியாகக் கொண்டொழுகுபவர்.  ஆதலின் இவர்களுக்கு ஆரியர் செய்துவந்த பசுக்கொலை வேள்வி எவ்வாறு உடன்பாடாகும்?  தமிழ் மக்கள் ஆரியர் வேள்வி செய்த இடந்தோறும் சென்று தடுத்தனர்.  கொலை வேள்விகளைத் தடுப்பதில் தம்முயிர் போயினும்  பெரிதென மதியாது தமிழ் மக்கள் தடுத்து வந்தனர்.  மற்ற வேளைகளில் ஆரியருக்கு அவர்கள் யாதொரு கெடுதியும் புரியார்.  விசுவாமித்திர முனிவன் செய்த வேள்வியிலும், மாரீசன் சாதாரணக் கிரியைகள் நிகழ்ந்த அய்ந்துநாளும் வராமல், கொலை புரிந்து அவிசொரியும் ஆறாம் நாளே வந்து கொலையைத் தடுக்கிறான்.  இதனாலேயே மாரீசன், இராவணன், தாடகை முதலியோரை ஆரியர் கேவலமாகக் கூறி வந்தனர்.  அதனை வால்மீகியும் எழுதினார்.  இதனை இராவணனைப்பற்றி வரும்போது விவரமாக ஆராய்வோம்.


தாடகை என்ற பெயருடைய ஓர் உத்தமி தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகின்றனள்.  அவ்வம்மை மிகவும் அன்பு பூண்டு கடவுளை வழிபட்டு வந்தனள்.  அவ்விடம், இப்போது, திருப்பனந்தாள் என்று கூறப்படுகிறது.  ஒருநாள் இவ்வம்மை சுவாமிக்குச் சாற்றுவதற்காகப் பூமாலையை இரண்டு கைகளிலும் தாங்கிப் போடப் போகும்போது, உடை சற்று நெகிழ, மானங்காத்தற்காக ஆடையை இரண்டு கைகளினாலேயும் இறுக்கினள்;  அப்போது பெருமான் தலை குனிந்து அம்மையின் கையிலிருந்த மாலை தமது கழுத்தில் விழும்படி சாய்ந்தனர் என்றால், இவ்வம்மையின் பெருமைதா னென்னே!  இத்தாடகைப் பிராட்டியாரையே இழிகுணமுடைய வராகக் காட்டினர் வால்மீகி முனிவர்.  ஆரியர் இழி செயல்தானென்னே!
ஒரு கிழப் பெண்ணைக் கொல்லுமாறு ஏவிய ஆரிய முனிவன் விசுவாமித்திரனின் பெருந்தன்மைதானென்னே!  ஆரியர் தாய்க்கொலை சால்புடைத்தென்பர் போலும்!  நாய் வாலைக் களவாடித் தின்று உலகமெல்லாம் இகழப்பட்டவ னன்றோ இக்கோசிகன்?  நிற்க, மகாபலிச் சக்ரவர்த்தி வரலாற்றை ஆராய்வோம்.


மகாபலிச் சக்ரவர்த்தி மிகவும் உத்தமன்.  இந்திரன் முதலிய தேவர்களையெல்லாம் வென்று மூவுலகங்களையும் ஆண்டு வந்தான்.  யார் யார் எதை எதைக் கேட்டபோதிலும், இல்லை என்று சொல்லாமல் கொடுத்துவரும் சிறந்த அறத்தைப் புரிந்து வந்தான்.  அவனுடைய பெருமையால் அழுக்காறுற்ற தேவர்கள், பலியின் தங்கையைக் கொன்று, பெண் கொலைப் பாவியாகிய இந்திரனோடு திருமாலையடைந்து, பின்வருமாறு கூறியதாக வால்மீகி முனிவர் கூறுகிறார்.


ஓ திருமாலே!  விரோசனனுடைய பிள்ளையாகிய பலிச்சக்ரவர்த்தி ஒரு யாகம் செய்கிறான்.  அதில் தன்னிடம் வந்து யாசிக்கிற வர்களுக்கெல்லாம் அவரவர்கள் கேட்டது கேட்டபடி தானங் கொடுக்கிறான்.  ஆதலின், அவனைக் கொல்ல வேண்டும்  (பாலகாண்டம் இருபத்தொன்பதாவது சருக்கம்).  அவ்வாறே திருமால் வாமனனாகிய அவனிடம் மூன்றடி மண் இரந்து அவனைக் கொல்கின்றனன்.  இவ்விழிந்த செயலை உண்மையில் இழிந்ததெனக் கண்ட வால்மீகி முனிவர், திருமால் மானத்தை விட்டு மூவடி இரந்தனர் என்கின்றனர்.  மகாபலி செய்த குற்றமாவது, யாசிப்பவர்கள் எதைக் கேட்டாலும் இல்லையென்னாமல் கொடுத்த வள்ளல் தன்மையே.  இதற்காக அவன் திருமாலால் கொல்லப்பட்டா னெனில், ஆரியர் தமது தெய்வமாகிய திருமாலிடம் எவ்வளவு பெருந் தன்மையை ஏற்றுகின்றனர் என்பது புலனாகும்.  அவர்களின் தெய்வத்தைப் பற்றிய அறிவுதானென்னே!
கம்பரோ, இம்மகாபலி வரலாற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறுகின்றார்.  அவர் உண்மையான அன்பனாகிய மகாபலியின் குணத்தைக் கண்டு மிகவும் வியப்புடையவராகி, இவ்விடத்து மிகவும் பாராட்டத் தகுந்த பாடல்களைப் பாடியிருக்கிறார்.  பின் வருவது கம்பர் கூறும் வரலாறு.  திருமால் வாமனனாகி மகாபலியை அடைந்தபோது, அவனுடைய குருவாகிய சுக்கிராச்சாரியார், இவன் வஞ்சத் திருமால், ஆதலின் மூன்றடி மண் தந்து ஏமாறாதே, உன் உயிர் போய் விடும் என்று தடுத்தனர்.  அதனைக் கேட்டு மகாபலி,

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவ தல்லால்
எள்ளுவ வென்சில இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்.
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயா
தேந்திய கைகொ டிரந்தவ ரெந்தாய்
வீய்ந்தவ ரென்பவர் வீய்ந்தவ ரேனும்
ஈய்ந்தவ ரல்ல திருந்தவர் யாரே
எடுத்து ஒருவர்க்கு ஈதலின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ தகவுஇல் வெள்ளி
கொடுப்பது விலக்குகொடி யோயுனது சுற்றம்
உடுப்பதுவு முண்பதுவு மின்றி விடுகின்றாய்
எனக் கூறிச் சினந்து மூவடிமண் தருகின்றான்.


வஞ்சகத் தன்மையரான திருமால் அவ்வுத்தமோத்தமனைக் கொன்றார்.  இவர் முன் சுக்கிரனுடைய தாயையும் கொன்று பெண் பழி பூண்டார்.  பெண் கொலை புரிந்தொழுகும் பொறாமையனான இந்திரனுக்காகப் பெண் கொலை புரிந்து ஒழுகும் வஞ்சகரான திருமால் மகாபலியைக் கொன்றது வியப்பாகாது.  என்னே ஆரியர்தம் தெய்வங்களுக்கேற்றும் இழிகுணம்!  பொறாமை, கொலை, வஞ்சகம் இவற்றை அவர்கள் தீக்குணமென உணர்ந்திலர் போலும்.  நிற்க, இனிமேல் செல்லுதும்.


மிதிலையை நோக்கிச் சென்ற கோசிக முனிவனும் அரசகுமாரரும் சோணா நதிக்கரையை யடைந்தனர்.  இராமன் அந்தத் தேசம் யாருடையதெனக் கேட்டனன்.  முனிவன் கூறுவன்:  நான்முகன் மகன் குசன், வைதாபி என்ற தனது மனைவியிடம் குசாம்பன், குசநாபன், ஆதூர்த்தாஜஸ், வசு என்னும் நான்கு பிள்ளைகளைப் பெற்றான்.  இவர்களில் வசு என்பவனுடையது இத்தேசம்.  வசுவின் அண்ணனாகிய குசநாபன் நூறு பெண்மணிகளைப் பெற்றான்.  பேரழகு பெற்ற அப்பெண்களை ஒரு நாள் வாயு பகவான் கண்டு மோகித்து, நீங்கள் என்னைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் மானிடரை விரும்பாது என்னை விரும்பினால், உங்களுக்கு யவ்வனமும் ஆயுளும் நீடித்து நிற்கும் என்றனன்.


அப்பெண்கள் அச்சொல்லைக் கேட்டுச் சிரித்து, நீர் தேவரிற் சிறந்தவர்.  நீர் ஏன் எங்களை அவமானப்படுத்து கின்றீர்?  உம்மை அதிகாரத்திலிருந்து நீக்குவிக்க யாங்கள் வல்லவர்கள்; ஆனால், எங்களுடைய தவத்தைக் காக்க விரும்பி உம்மை அவ்வாறு செய்யாதிருக்கின்றோம்.  புத்தி கெட்டவரே, எங்கள் தகப்பனார் உமக்கு மிருத்தியுவாக வேண்டும்; சத்தியவாதியாயுள்ள அவரை அவமதியாதேயும்.  எங்கள் தந்தை எங்களை யாருக்குக் கொடுக்கிறாரோ அவரே எங்கள் கணவராவர் என்று கூறினர்.


அது கேட்ட வாயு பகவான் கோபங்கொண்டு, அவர்கள் உடலெங்கும் புகுந்து முறித்து முடமாக்கிவிட்டான்.  கண்ணுங் கண்ணீருமாக வந்த அப்பெண்களிடத்தில் நடந்ததை உணர்ந்த குசநாபன், அயோக் கியத்தனமாக நடந்த வாயுபகவானின் செயலால் சினமடையாது, பெண்களே!  உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன்.  எல்லோரும் பெருந்தன்மையாக நடந்து, எனது குலத்தைப் பெருமைப் படுத்தினீர்கள் எனப் பொறுமையோடு புகன்றான்.  சோமதை என்ற கந்தருவப் பெண், சூலி முனியை அடைந்து, தன்னைக் கலந்து ஒரு பிள்ளையைத் தனக்குத் தர வேண்டப் பிறந்த பிரமதத்தன் என்பவனை அந்த நூறு பெண்களும் மணந்தனர்.  அவன் அவர்களைத் தொட்டவுடன் அவர்கள் முடம் நீங்கிற்று.  இத்திருமணத்தின் பின் குசநாபருக்குக் காதி என்ற மகன் பிறந்தனன்.  "அந்தக் காதியின் மக்களே நானும், கவுசிகி என்ற பெண்ணும், கவுசிகி நதியாயினள்; அக்கவுசிகிக் கரையிலேயே நான் வாழ்வேன்.  இந்த யாகம் செய்யவே சித்தாச்சிரமம் வந்தேன் என்று கூறினன்.  விடியற் காலமானபோது முனிவன், இராமா!  எழுந்திரு!  விடியற்காலமாய்விட்டது என்று எழுப்பினன்.  யாவரும் வழிநடந்து நண்பகலில் கங்கைக் கரையை அடைந்தனர்.


மேலே கண்ட வரலாற்றில் வாயுபகவான் செய்த அக்கிரமத்தைப் பாருங்கள்.  இவனை ஒரு தேவனென்று எவ்வாறு கூறுவது?  யாதொரு பாபமுமறியாத கன்னிகை களைக் கற்பழிக்கத் துணிந்து முயல்கின்றனன்.  அப்பெண்கள் உத்தமிகளாதலால், அவனுடைய கூடா ஒழுக்கத்திற்கு இசைந்திலர்.  அதற்காக அவன் அவர்களுடைய உடலிற்புகுந்து ஊனமுண்டாக்கினனென்றால், அவ்வாயு பகவானின் அற்பக் குணமும், மிகவும் கேவலமான ஒழுக்கமும் இருந்தவா றென்னே!  இத்தகைய இழிகுணர்களையே ஆரியர்கள் தங்கள் தெய்வங்களாகக் கொண்டுள்ளனர்.  திருமால் பெண் கொலை துணிந்து புரிகின்றனன்.  திருமகளைப் பகல் வேளையிலேயே புணர்கின்றனன்.  புணர்ச்சி வேளையில் யாராவது வந்தால், இலச்சை இன்றி விலகுதலுமில்லாமல் பேசுகின்றனன்.  ஒருவன் மாள, அவனுடலிற் புகுந்து அவன் மனைவியைக் கூடிக் கூடாவொழுக்கம் புரிகின்றனன்.  அவள் உண்மை தெரிந்து தீயிற் குதித்தால், அச்சாம்பலிற்கிடந்து அறிவிலார் போல் புரண்டு புலம்புகின்றனன்.  இந்திரனோ, பெண் கொலை புரிய அஞ்சுகின்றிலன்.  அவனுடைய கூடா வொழுக்கமும் கொலைத் தொழிலும் பின்னர் வருமிடங்களில் விளங்கும்.  வாயுதேவனோ, கூடாவொழுக்கத்தில் முயன்று தோற்றுத் தீத்தொழில் புரிகின்றனன்.  என்னே இவ்வாரியர் தம் தெய்வங்களின் வெறுக்கத் தகுந்த செயல்கள்!


இவ்வரலாற்றைக் கம்பர் இவ்விடத்திற் கூறுகின்றனர்.  முனிவன் வேள்வி செய்யத் தொடங்குமுன்னரே கூறுகின்றார்.  அங்கும் மெல்ல வால்மீகி பாலகாண்டத்தில் 32, 33, 34 ஆம் சருக்கங்களில் 75 ஆம் சுலோகங்களில் விவரமாகக் கூறிய வரலாற்றை வேள்விப் படலத்தில் ஒரு பகுதியாகிய பத்துப் பாடல்களில் அவர் சுருக்கமாகக் கூறுகிறார்.  அதிலும் வாயு செய்த கூடாவொழுக்க வரலாற்றை முப்பத்திரண்டு முப்பத்து மூன்றாவது சருக்கங்களிலே 52 சுலோகங்களில் விவரமாக வால்மீகி கூறுகின்றார்.  அதனைக் கம்பர் 4- பாடல்களில் சுருக்கிக் கூறுகின்றார்.  தமிழ் மகனாதலின், இவ்வெறுக்கத் தகுந்த வரலாற்றை அவர் சுருங்க உரைத்தனர்போலும்.  ஆனால், அவர் இவ்வரலாற்றைக் கூறவேண்டிய இடத்தை விடுத்து வேறோர் இடத்திற் கூறினர்.


நூறு பெண்கள் ஒருவனை மணந்தனரெனத் தெரிய வருவதால், ஒருவன் பலரை மணஞ் செய்வது ஆரியர் வழக்கம் போலும்.  பாரதத்தில் திரவுபதை, தருமர் முதலிய அய்வரை மணந்தனளெனத் தெரியவருவதால், ஆரியப் பெண்ணொருத்தி பல ஆடவரை மணந்துவந்த வழக்கமும் புலனாகிறது.  இதனால் ஒருவன் பல பெண்களையும் ஒருத்தி பல ஆடவர்களையும் மணத்தல் ஆரியர் வழக்கமென்பது அங்கையின் நெல்லிக்கனிபோல் விளங்குகிறது.


கோசிக முனிவன் விடிந்தவுடன் இராமனையும் அவன் தம்பியையும் தட்டி எழுப்புகிறான்.  இதுபோலவே அவன் எழுப்பும்வரை அப்பிள்ளைகள் தூங்கிய செய்தி முன்னோரிடத்திலும் கூறப் பெற்றது.  இதனால் அப்பிள்ளைகள் அரச குமாரராதலால், அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கத்தைக் கொண்டில்லாத வராய்ப் பிறர் எழுப்பிய பின்னரே எழுந்திருக்கும் வழக்கமுடையவர் போலும்.  மேலும் காடு மேடுகளில் அலைந்த அலுப்பும் அவர்களை பற்றியிருக்குமல்லவா?  நிற்கக் கங்கைக் கரையை யடைந்தபின் நிகழ்ந்த நிகழ்ச்சியை இனிக் காண்போம்.

               --------------------------"விடுதலை” 17-06-2014

42 comments:

தமிழ் ஓவியா said...


திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனையடுத்து மகத்தான மனிதநேயம்!


மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது

சென்னை, ஜூன் 17_ காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழையனூரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கிராம சுகாதார செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகநாதன் (வயது 27). இவர் பொறி யியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிவந் தார். வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்காக ஓட்டுநர் வேலை செய்து வந்தார்.

கடந்த 11 ஆம் தேதி லோகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டாளம் என்ற பகுதியில் டேங்கர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவர் செங்கல் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நேற்று காலை 6.55 மணிக்கு லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரு டைய உடல் உறுப்புகளை குடும்பத்தினர் கொடை யாகக் கொடுக்க முடி வெடுத்தனர். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் பொறியாளர் அஸ்பி வினோகர் நேம்ஜி என்ப வரின் மகள் ஹவோபியா (21) சில ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப் பட்டு அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஹவோபியாவிற்கு இரு தயக் கொடை பெறுவதற் காக அவருடைய குடும்பத் தினர் எதிர்நோக்கியிருந் தனர்.

லோகநாதனின் இருத யத்தை ஹவோபியாவிற்கு வழங்க முடிவானது. இரு தயத்தை விரைவாக கொண்டு செல்வது குறித்து மருத்துவர்கள் காவல் துறையினருடன் ஆலோ சனை நடத்தினர். பின்னர் நேற்று மதியம் 2 மணிக்கு லோகநாதனின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவ மனையில் பிரித்து எடுக்கப் பட்டன. இதில் 20 மருத் துவர்கள் ஈடுபட்டனர். மாலை 5.35 மணி அளவில் லோகநாதனின் உடலில் இருந்து இருதயம் பிரித் தெடுக்கப்பட்டது.

மாலை 5.45 மணி அள வில் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மின்னல் வேகத்தில் இருதயம் ஆம் புலன்சு மூலம் அடையாறு மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் போக்கு வரத்து காவல்துறையினர் நின்று வயர்லெஸ் மூலம் போக்குவரத்தைச் சீர்படுத் தினர்.

ஆம்புலன்சு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சரியாக 13 நிமிடம் 22 விநாடிகளில் மலர் மருத்துவமனையை அடைந்தது. அங்கு மருத் துவர் குழுவினர் இத யத்தை அறுவைச் சிகிச்சை மூலம் ஹவோபியாவிற்கு பொருத்தினர்.

லோகநாதனின் 2 கண் கள் எழும்பூர் கண் மருத் துவமனைக்கும், 2 சிறுநீர கங்கள் அடையாறு மலர் மருத்துவமனைக்கும், கல் லீரல் வேலூர் அரசு மருத் துவமனைக்கும், தோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ரைட் மருத்துவமனைக்கும் கொடையாக கொடுக்கப் பட்டன. லோகநாதன் உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மீண்டும் மறுவாழ்வு பெற முடியும்.

லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கண்ணீரு டன் கூறும்போது, "என் மகனை காப்பாற்ற முடியாது என்று மருத் துவர்கள் கூறியதும் இடி விழுந்தது போல் இருந்தது. அவன் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் அவனை நேரில் காண முடியும் என்று கருதினேன். எனவே அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன்வந் தேன். என்னுடைய மகன் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் உயிர்வாழ வேண்டும் என்றார்.

2008 ஆ-ம் ஆண்டு மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத் தினை தமிழக அரசு செயல்படுத்தியது. இதன் மூலம் தமிழகத்தில் இது வரை 76 இருதயங்கள், 861 சிறுநீரகங்கள், 37 நுரை யீரல்கள், ஒரு கணையம், 500 இதய வால்வுகள், 730 கண்கள் மற்றும் ஒரு தோல் ஆகியவை கொடை யாகப் பெறப்பட்டுள்ளன.

இதில் 611 சிறுநீரகங்கள், 378 கல்லீரல்கள், 66 இத யங்கள், 28 நுரையீரல்கள் சென்னையில் கொடை யாக பெறப்பட்டவை என் பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் தான் உடல் உறுப்புகள் கொடைய ளிப்பதில் முதலிடத்தில் உள்ளது.

குறிப்பு: 2008இல் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் மகனான ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுக்குப் பொருத் தப்பட்டது தெரிந்ததே!

Read more: http://viduthalai.in/e-paper/82326.html#ixzz34wWRbVUV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்! தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம்.

ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ்வொரு வரும் ஒரு குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள்!

குடிஅரசு வருட சந்தா 3-0-0
பகுத்தறிவு வருட சந்தா 1-0-0
மேற்படி இரண்டும் சேர்த்து
வரவழைப்பவர்க்கு 3-8-0
விடுதலை வாரம் இருமுறைக்கு வருடம் 1-க்கு 3-10-0

இப்பத்திரிகைகளைப் படித்தால்தான் அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள் வேண்டுமென்றே செய்யும் பொய்யான விஷமப் பிரச்சாரத்தின் யோக்கியதையை அறியக்கூடும். - (விடுதலை 18.4.1937 பக்.22)

இதனைப் படிக்கும் பொழுதே - பலருக்கும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலை மனதிற் கொண்டு சொல்லப்பட்டதாகக் கூடத் தோன்றக் கூடும்.

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றபோது தந்தை பெரியார் சொன்னவை -16ஆவது மக்களவைத் தேர்தலில் நீதிக்கட்சியின் வழி வந்த திமுக தோல்வியடைந்துள்ள இந்த நிலையில் மிகச் சரியாகவே பொருந்துவதைக் கவனிக்கத் தவறாதீர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பார்ப்பன ஊடகங்கள் எப்படி நடந்தனவோ, அதுபோலவே 1937ஆம் ஆண்டிலேயே இந்தப் பார்ப்பன ஊடகங்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டுள்ளன என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அவர்கள் எப்பொழுதுமே நமக்கு எதிர்ப் பக்கம்தான்!

அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள் என்று 77 ஆண்டு களுக்குமுன் தந்தை பெரியார் கூறினார்.

இன்று அதே நோக்குக்காக விடுதலைக்குச் சந்தா சேர்ப்பீர் என்ற வேண்டுகோளைத் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ளார்.

தோழர்களே! விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் இறங்கி விட்டீர்களா? உங்கள் மாவட்டத்துக்குள்ள இலக்குகளை நிறைவேற்றுவதில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

இம்மாத இறுதிக்குள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பீர்! முடிப்பீர்! உதவாதினி ஒரு தாமதம் - உடனே புறப்படுவீர் மானமிகு தோழர்களே!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/82337.html#ixzz34wXbCaR8

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுவதும் மது விலக்காம்

இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நல்லது; மத்திய அரசு பிஜேபி கையில் தானே இருக்கிறது - இந்தியா முழுவதும் மது விலக்கைச் செயல்படுத்தும் வகையில் பொது சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே - யார் தடுத்தது? முதற்கட்டமாக பிஜேபி ஆளும் மாநிலங் களில் கொண்டு வந்து காட்டி, முன் மாதிரி நாங்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள்தான் என்று மார் தட்டலாமே!

ஒரு சேதி தெரியுமா? 2014 ஏப்ரல் 30ஆம் தேதி ஏடுகளில் வெளி வந்ததுதான்.

மோடி முதல் அமைச்சராக இருந்த போது குஜராத்தில் 23 லட்சம் மதுப் பாட்டில்கள் பறி முதல் என்பது தான் அந்தச் செய்தி. இதன் பொருள் என்ன? காந்தி பிறந்த மாநிலத்தில், மோடி ஆண்ட மாநிலத்தில்தான் இந்த லட் சணம்! இந்த நிலையில் இராம.கோபாலன்வாள் இப்படி யெல்லாம் பேட்டி கொடுக்கிறார். அவாள் பேட்டி கொடுத்தால் அப்படியே வெளியிடக் கூடிய அவாள் ஊடகங்களும், தொங்கு சதைகளான நம்மவாள் ஊடகங் களும்தான் இருக்கின்றனவே. இந்த நிலையில் அவாள் கொட்டாவி விட்டாலும் சேதியாக நான்கு பத்தி செய்தியாக வெளிவரும்தான்.Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYLaCmb

தமிழ் ஓவியா said...

டாஸ்மாக் பிரச்சனை

இன்னொரு முக்கிய தகவல் நாள்தோறும் ஏடுகளில்; டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் நடத்தும் போராட்டம்தான் அது. பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாடும் முக்கிய கடை வீதிப்பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இருப்பது பெரும் தொல்லையாக இருக்கின்றன. பெண்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடிய வில்லை. ஆங்காங்கே குடித்து விட்டுக் கலாட்டா செய்கின்றனர். எனவே கடைகளை ஊருக்கு வெளியே வைக்க வேண்டும் என்பது தான் பெண்களின் கோரிக்கை, பெண்கள் மத் தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

டாஸ்மாக் கடையை எங்கே வைப்பது என்பது குறித்து தெளிவான வழிமுறைகள் கூறப்பட்டு இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி அனுமதி வழங்குவது யார்?
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதி கரிப்பதற்குக் காரணம் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான், எனவே நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

விதிகளும், ஆணைகளும் வெறும் காகிதக் குப்பைகள்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYYAxm8

தமிழ் ஓவியா said...


குற்றால அருவியிலே குளிப்பதுபோல் இருக்குது!முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பதின்வயதில் பங்கேற்ற நினைவு! ஒருநாள் இருநாள் அல்ல. ஒரு வாரகால பெரியாரியல் பயிற்சிப்பட்டறை!.

கழகத்தலைவர் தமிழர்தலைவர், துணைத்தலைவர் கவிஞர், பெரியார் பேருரையாளர்கள் இராமநாதன், இறை யனார், ஆசான், துரைச்சக்கரவர்த்தி, மற் றும் துரைசந்திரசேகரன் என நீண்ட பயிற் சியாளர்களைக் கொண்ட களம் அது.
முப்பத்தேழு ஆண்டுகளைக்கடந்து பொன்விழாவை நோக்கி இதோ முப்பத்தி எட்டாவது ஆண்டில். திராவிடர் கழகத் தின் சார்பில் அதே குற்றாலத்தில் வருகிற 26.6.2014ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் என விடுதலை செய்தி வெளியிட்டிருக்கிறது.

கேரள அரசுக்குச்சொந்தமான பயணி யர் மாளிகையில் தான் பெரும்பாலும் அப்போது பயிற்சிவகுப்புகள் நடக்கும். பயிற்சி முடிந்த அன்றே அடுத்த ஆண்டுக்கான தேதியை கழகப் பொறுப் பாளர்கள் முன்பதிவு செய்து விடுவார்கள் வெப்பந்தணிக்கும் உயர்ந்த கட்ட டம்.அதையும் தாண்டி நம்மை சூடேற்றும் வரலாற்று வகுப்புகள். பாடங்கள் அனைத்தும் இன்றும் பசுமையாய் .உங் களில் எத்தனை பேர் அனுபவித்திருக் கிறீர்கள்? எவ்வளவு பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்திருக் கிறீர்கள்?

மானமும் அறிவும் ஊட்டி நம்மை தலைநிமிரச்செய்த தத்துவத்தலைவர் பெரியாரை, ஆண்டாண்டுகாலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழ்ச்சமூகத்தின் அடிமை விலங்கொடித்த அற்புத இயக் கத்தின் ஆற்றல் மிகு செயல்பாட்டை, நம்மை சூழ்ந்து கிடக்கும் காவிஇருள் சூழலை நம் பிள்ளைகள், இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண் டாமா? இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப் பல்லவா?

குற்றாலக் குளியலோடு கலந்த கொள்கைப் பாடக் குவியல்! பாட்டி வடை சுட்ட கதைகள் பரிணாமவளர்ச்சி அடை யலாம். பரங்கிக்காரனை வாஞ்சிப் பார்ப்பான் சுட்ட கதையை திரிக்க விடலாமா? ஆஷ்துரையை வாஞ்சி அய்யர் சுட்டதன் நோக்கம் என்ன? நாடார் இனப்பெண்கள் தோள்சீலை அணியவே தடை! நாடகக் கொட்டகை யிலும், பேருந்திலும் தாழ்த்தப்பட்டவர் கள் அனுமதி மறுப்பு! இப்படி எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகள். அன்றைக்கு இவற்றை எந்தப் புத்தகத்தில் படித்தோம்? நம் பகுத்தறிவுப் பேராசிரி யர்கள் பயிற்றுவித்தப் பாடங்கள் தான் இன்றும் பசுமரத்தாணிபோல் மனதில் பொதிந்து கிடக்கின்றன.

அடடா அரிய வாய்ப்பு! கறுப்புடை தரித்து பயிற்சிக்களம் காண புறப்படுங்கள்! குற்றாலத்தில் சந்திப்போம்!.

இடம்: வீ.கே.என் மாளிகை, குற்றாலம்.

- கி.தளபதிராஜ்

Read more: http://www.viduthalai.in/page-2/82359.html#ixzz34wZJWvMY

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

மதிப்பிற்குரிய வீரமணி அய்யா அவர்களுக்கு,

நினைவில் வாழும் திருவனந்தபுரம் என். நயினார் அவர்களின் மூத்த புதல்வன் என். சுந்தரம் எழுதிக் கொண்டது.

எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (14.6.2014) விடுதலை வளர்ச்சி நிதிக்காகவும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்குமாக சேர்ந்து ரூபாய் 300/அய் இந்தியன் வங்கி சென்னையில் மாற்ற தகுந்த (ரூபாய் 300/-) காசோலையை இத்துடன் அனுப்பியுள்ளேன் (No.619290 Date: 10.6.2014)

இதை எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் நன்கொடையாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- என்.சுந்தரம், திருவனந்தபுரம்
தங்களின் உணர்வுக்கு மிக்க நன்றி.

- ஆசிரியர்

Read more: http://www.viduthalai.in/page-2/82358.html#ixzz34wZXPKZO

தமிழ் ஓவியா said...

மோடி புராணம் உருவான கதை

பிற ஏடுகளிலிருந்து...

ராமா லக்ஷ்மி


மோடி புராணம் உருவான கதை

16வது மக்களவை தேர்தல் பிரச் சாரத்தின்போது, நரேந்திர மோடி குறித்து நாடு முழுவதும் உருவாக்கப் பட்ட பொய்த் தோற்றம், அதற்காக பிஜேபி கடைப் பிடித்த தந்திரங்கள் குறித்த விவாதமே இது.

மூன்று பிரச்சனைகள்!

இதற்கு முன்பு நடைபெற்ற சில தேர்தல்கள் மின் சாரம் - சாலைகள் - தண்ணீர் ஆகிய மூன்று பிரச்சனை களை மையப்படுத்தியே நடந்திருக்கின்றன. வளர்ச் சியைத் தரும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஆனால், 2014 தேர்தல்களில் மேற்கண்ட மூன்று பிரச்சனைகளுமே வேறு வடிவத்தில் வெளிப் பட்டன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு என்ன செய்தனர் அல்லது என்ன செய்யத் தவறினர் என்பன இம்முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. அதற்குப் பதிலாக, தொலை தூரத்தில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் நடப்பது தங்கள் மாநிலத்திலும் நடக்க வேண்டும் என்ற ஆசை வாக் காளர்கள் மனதில் உருவாகும் வகையில் கவர்ச்சிகர மான பிரச்சாரம் முன் நிறுத்தப்பட்டது.

பூலோக சொர்க்கமாம்!

குஜராத் மாநிலத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்றும், அது ஒரு பூலோக சொர்க்கம் என்றும் சித்தரிக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு வருக்கும் வேலை நிச்சயம், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கிறது, மானியங்கள் எதுவுமில்லாமலேயே விவசாயிகள் சுபிட்சமாக வாழ்கின்றனர், உலகத்தி லேயே மிகச் சிறந்த சாலைகள் குஜராத் முழுவதும் இருக்கின்றன, ஊழலின் நிழல் கூட படியாத அரசியல் நிர்வாகம் நடைபெறுகிறது என்றெல்லாம் கட்டுக் கதைகள் திரிக்கப்பட்டன. நான் பேட்டி கண்ட மோடி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், குஜராத் மாநிலத்தில் மோடிஜி என்னவெல்லாம் செய்திருக் கிறார் பார்த்தீர்களா? என்று சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...


ஆனால், அவர்களில் பலர் குஜராத்திற்கு போனதே யில்லை. எனினும், குஜராத்திற்குப் போனவர்கள் அவர்களிடம் கூறியதாகவும், அல்லது அது குறித்து எங்கோ படித்ததாகவும் சொன்னார்கள். இத்தகைய ஒரு தோற்றத்தினை உருவாக்குவதற்காக பல புனை கதைகள் உருவாக்கப்பட்டன. புராணங்கள், புனை கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை நாம் நேரில் பார்த்ததில்லை. எனினும், அவற்றை மீண்டும் மீண்டும் கேட்பதனால், அவை நமது நம்பிக்கையில் படிந்து விடுகின்றன அல்லவா, அதுபோலத்தான் மோடி மற்றும் குஜராத் குறித்த புனைவுகளும். நாடாளு மன்றத் தேர்தல்கள் தொடங்கும் முன்னரே தன்னைப் பற்றியும் குஜராத் பற்றியும் ஒரு தோற்றத்தினை உருவாக்கும் முயற்சியில் மோடி இறங்கி விட்டார். குஜராத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டாமா? வாருங்கள், பாருங்கள், கவர்ந்திழுக்கப்படுங்கள் என்று நடிகர் அமிதாப் பச்சனை வைத்து, அரசாங்கச் செல வில் மோடி விளம்பரங்களைச் செய்யத் தொடங் கினார். இவ்வாறு அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் குஜராத் குறித்த ஒரு பிரமையினை மோடி திட்ட மிட்டு ஏற்படுத்தினார்.

தமிழ் ஓவியா said...

பெண்களிடம்...

குஜராத் மாநிலத்தில் பெண்கள் தங்கள் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு திருடர்கள் குறித்த பயம் எதுவுமின்றி சபர்மதி ஆற்றின் கரையில் இரவு நேரத்தில் உலவிடுகின்றனர்... பெண்களை கண்டக்டர்களாகக் கொண்ட பேருந்துகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகப் பயணம் செய்கின்றனர்... இவையெல்லாம், வடக்கு தில்லியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த மோடி கட்சியினர், நடுத்தர வர்க்கப் பெண்கள் மத்தி யில் கூறியவையாகும்.

முதியவர்களிடம்..

அதே நேரத்தில் முதியவர்களிடம் தங்களது பிரச்சாரத்தைக் கொண்டு செல்லும்போது, தங்களது ஆன்ட்ராய்ட் கைப்பேசிகளில் உள்ள முகநூல் பக்கங் களில் இருந்து 21ம் நூற்றாண்டில் இரட்சகர் ஒருவர் வரப்போகிறார் எனக் கட்டியம் கூறும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை வாசித்துக் காட் டினர். அந்த இரட்சகராக மோடி இருந்திடக் கூடும் என்றும் அந்த வாக்காளர்களிடம் தெரிவித் தனர்.

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கை போன்றே...

தில்லி நகரில் எங்கேனும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்களை அல்லது உடல் உழைப்புத் தொழிலாளர்களைப் பார்த்திருக்கிறீர்களா? என்று மோடி ஆதரவாளர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்டார். ஆனால் என்னிடமிருந்து பதில் எதனையும் அவர் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. அவரைப் பொறுத்த அளவில் அது அவருக்கு ஒரு பிரச்சாரக் கேள்வி மட்டுமே. இண்டர்நெட், விளம்பரங்கள், அரசியல் உரைகள், தொண்டர்களின் வாய்மொழிப் பிரச்சாரம் என பல வழிகளில் அவர்களது பிரச்சாரங்கள் அமைந்திருந்தன. குஜராத்தையே பார்த்திராத அவர்களில் பலர், குஜராத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் நிதானமாக, நீண்ட நெடிய விவாதங்களை என்னுடன் நடத்தினர். குஜராத் குறித்த அவர்களது ஆழமான நம்பிக்கை ஏறக்குறைய மத நம்பிக்கை போன்றிருந்தது. அத்துடன் தொடர்ந்து எழுப்பப்பட்ட ஹர ஹர மோடி கோஷம் அந்த மத நம்பிக்கையினை மேலும் ஆழப்படுத்தியது.

மாற்றப்பட்ட தந்திரங்கள்!

2004 தேர்தல்களை எடுத்துக் கொண்டோ மேயானால், அப்போது ஒளிரும் இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து எல்லாம் நன்றாக இருப்பதனை போன்ற தோற்றத்தை பிஜேபி முன்வைத்தது. ஆனால், மக்கள் இதனை ஏற்கவில்லை. எனவே, இம்முறை அத்தகையதொரு தவறை பாஜக செய்திடவில்லை. அதற்குப் பதிலாக ஒளிர்கிற குஜராத் தில் நீங்கள் இல்லை என்றாலும், குஜராத்தைப் போல் ஒளிர்கிற இந்தியாவாக நாட்டை மாற்றிடலாம். ஆனால், மோடியின் கைப்பிடித்துதான் அத்தகையதொரு இந்தியா விற்கு நாம் சென்றிட முடியும் என்றனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜே.பி என்ன கூறியது? அயோத்தியில் ராமர் கோவில் கட்டி, ராம ராஜ்யம் அமைப்போம் எனக் கூறினர். இந்தப் புராண காலப் பொய்த் தோற்றத்தினை மக்கள் ஏற்கவில்லை. எனவே, இம்முறை அயோத்தி - ராமர் என்பதை மாற்றி அந்த இடத்தில் குஜராத் - மோடி என்ற இன்றைய எதார்த்தத்தினை முன் வைத்தது. குஜராத்தையே ஒரு புண்ணிய பூமியாகக் காண்பித்து மோடியை ஒரு மனிதக் கடவுளாகவும் சித்தரித்தது. மக்களின் அபிலாஷைகளும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அலையும் ஒன்றிணைந்தது இவ்வாறு தான்.

தொடரும் புனைவுகள்!

மோடி குறித்த புனைவுகளுக்கு எல்லை கிடை யாது. அவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த மனிதரைப் பாருங்கள்! இவரது மார்பளவு 56 அங் குலம். இவர் மிகக் குறைவாகவே உணவு அருந்துவார். 5 மணி நேரத்திற்கு மேல் தூங்க மாட்டார். காலை 5 மணிக்கே எழுந்து விடுவார். எழுந்ததுமே யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட்டு விடுவார். மோடி குறித்த இந்த நடைமுறைச் செய்திகளைத் தாண்டி, பல கதைகளும் உலவ விடப்பட்டன.அவர் சிறுவனாக இருக்கும் போதே, ஆற்றில் பிரிந்து விட்ட தாய் முதலையையும் அதன் குட்டியையும் ஒன்று சேர்த்து வைத்தார். காற்றில் பரந்த பட்டக் கயிற்றுக்குள் சிக்கிக் கொண்ட பறவை ஒன்றினை அதிலிருந்து விடுவித்துக் காப்பாற்றினார். விடுபட்டவுடன் அந்தப் பறவை அவரை நன்றியுடன் கனிவாகப் பார்த்த்து. இப்படிப் போகின்றன பல கதைகள்.

மறுமுனையில் காங்கிரஸ்!

நம்மை எல்லாம் காப்பாற்ற இரட்சகர் ஒரு வர் வெள்ளைக் குதிரையின் மீது ஏறி வருவார் என்று நம்பி காத்திருக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி கூறினார். இதையே பயன்படுத்திக் கொண்ட மோடி, இமயமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு வெள்ளைக் குதிரையில் சென்று அதை நாடு முழுவதும் பரபரப்புச் செய்தியாக மாற்றினார். இளவயதில் மோடி தேநீர் விற்றவர் என்று கூறியதையும், தாய் - மகன் பரம்பரை ஆட்சியை வீழ்த்துவதற்கு மோடி நன்கு பயன்படுத்திக் கொண்டார். நாளேடுகள், தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள் என்று அனைத்துத் தளங்களிலும் மோடிக்கான பிரச்சார வேலைகள் நடைபெற்றன. இவ்வாறு புனைவுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட பிஜேபியின் பிரச்சாரத்தின் பின்னணியில், காங்கிரஸ் பிரச்சாரம் எடுபடவில்லை. கல்வியின் கீழ் நிலை, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், நிலம் கையகப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் என்று குஜராத் குறித்து காங்கிரஸ் முன்வத்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மிக உயர்ந்த செயற்கைத் தோற்றத்துடன் நின்ற மோடியின் முன்பு, இந்தக் குற்றச்சாட்டுக்கள் சாரமிழந்து போய் விட்டன.

நன்றி: தீக்கதிர், 14.05.2014

ஏ.பி.பி லைவ், தமிழில் - எம் கிரிஜா

தமிழ் ஓவியா said...

முக நூல் ஜோக்!

தேர்தல் முடிந்தும் கூட, மோடி குறித்த தேர்தல் பிரச்சாரத் தகவல்கள் பறிமாறப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது மாத தேர்தல் புனித யாத்திரையில், அவர் மூன்று லட்சம் கிலோ மீட்டர் தொலைவு அயராது பயணம் செய்திருக்கிறார்; 440 கூட்டங்கள் உட்பட 5187 நிகழ்ச்சி களில் பங்கேற்றிருக்கிறார். இவையெல்லாம் இன்றும் ஊடகங்களில் தொடரும் அம்சங்கள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முகநூலில் அண்மையில் வெளி வந்திருக்கும் ஜோக்: மோடி பதவி ஏற்றார். முதல் நாளிலேயே அவர் ரஷ்யாவை விலைக்கு வாங்கி விட்டார். உக்ரேன் நெருக்கடி தீர்ந்தது. சிறுமிகளைப் பிடித்துச் சென்ற போக்கோ பயங்கரவாதிகள் சிறுமிகளைத் திருப்பித் தந்து விட்டு, அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து விட்டனர். கதைகளில் வரும் கதாநாயகர்கள் போன்று மோடியின் தோற்றமும் மாறி வருகிறது. ரஜனிகாந்த் போன்று மோடியும் ஒரு கதாநாயகனாக மாறி வருகிறாரோ என்னவோ?

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்கு போராடிய ரோசா லக்சம்பர்க்


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமை களில் ஒருவர் ரோசா லக்சம்பர்க். அவர் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் மூன்று புரட்சிகளில் பங்கேற்றவர். சிந்தனையாளர். புரட்சியாளர். எழுத்தாளர்!

1871இல், ரஷ்ய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்தில் பிறந்தார் ரோசா. 5 வயதில் இடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருடைய காலில் ஊனம் நிரந்தரமானது. பள்ளியில் படிக்கும்போதே நிறைய விஷயங்களை ஆர்வத்தோடு அறிந்துகொண்டார். நிறைய சிந்தித்தார். எதையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார்.

1889இல், லியோ ஜோகித்சே நட்பு கிடைத்தது. இருவரும் நிறையப் பேசினார்கள். விவாதித்தார்கள். 1893இல், ரோசாவும் ஜோகித்சேவும் சேர்ந்து தொழிலாளர் குரல் பத்திரிகையை ஆரம்பித்தனர். போலந்தில் இருந்த சோசலிசக் கட்சியின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து எழுதினார் ரோசா.

1898இல், ஜெர்மனைச் சேர்ந்த குஸ்தாவ் லூபெக்கைத் திருமணம் செய்துகொண்டு, ஜெர்மனியில் குடியுரிமை பெற்றார் ரோசா. அங்கு, சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து வேலை செய்தார். இந்தக் காலகட்டத்தில் ரோசா உலக அளவில் மார்க்சிஸ்ட் சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டார்.

1905இல், ரஷ்யா சென்ற ரோசா, அங்கு நடைபெற்று வரும் புரட்சியை நேரில் கண்டார். லெனினைச் சந்தித்தார். போலந்திலும் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. வார்சா திரும்பியவர் தன் கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைத்தார். அரசாங்கம் ரோசாவைச் சிறையில் அடைத்தது.

முதல் உலகப் போருக்கான ஆயத்தங்கள் ஜெர்மனியில் நடைபெற்று வந்தன. பாட்டாளி மக்கள் உலகப் போரை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ரோசா போராடிக் கொண்டிருந்தார். 1919இல், கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பர்க் தலை மையில் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

ஜெர்மனியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. 1919 ஜனவரி 15 அன்று ரோசாவையும் கார்ல் லீப்னெக்ட்டையும் ஃப்ரிகோர்ப்ஸ் என்ற ராணுவம் கைது செய்தது. ஓட்டோ ரூஞ்ச் என்ற ராணுவ வீரன் ரோசாவை துப்பாக்கியால் அடித்து கீழே தள்ளினான். ஹெர்மன் சூக்கோன் சுட்டுக் கொன்றான். அவரது உடல் லாண்ட்வெர் கால்வாயில் வீசப்பட்டது.

கார்ல் லீப்னெக்ட்டும் சுட்டுக் கொல்லப் பட்டார். 47 வயது வரையே வாழ்ந்தாலும் தெளிவான சிந்தனை, துணிச்சல் மிக்க போராட்டங்கள் மூலம் பாட்டாளி மக்களின் விடிவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் ரோசா லக்சம்பர்க். அவருடைய பெயரில் லக்சம்பர்க் தத்துவம் இருக்கிறது. இன்று பெண் விடுதலையின் அடையாளமாக ரோசா உலகம் முழுவதும் அறியப்படுகிறார்!

Read more: http://www.viduthalai.in/page-7/82314.html#ixzz34waicHgu

தமிழ் ஓவியா said...

ஆதிசங்கரன் X விவேகானந்தர் (2)


- சார்வாகன்

இவர்தான் விவேகானந்தர்

உலகின் எல்லா மதங்களிலும் உலகம் சார்ந்த செயல்கள் (கர்ம காண்டம்) மெய்ப்பொருள் சார்ந்த செயல்கள் (ஞான காண்டம்) என்று இரு பகுதிகள் உண்டு. மக்களுக்கான பிரச்சினை இருப்பது உலகு சார்ந்தவை பற்றியே தவிர, மெய்ப்பொருள் சார்ந்த விசயங்களில் அல்ல. கொச்சையாகச் சொன்னால், அன்ன விசாரமே பெரும் விசாரம். தத்துவ விசாரம் பண்டாரப் பரதேசிகளுக்கானது. அவர்களைப் பற்றிய விவேகானந்தரின் கருத்து துல்லியமானது. (கருத்துகள் தொகுதி 8, பக்கம் 290).

கெட்டவர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் வேதங்களின் சாரம் என்றும் இந்து மதத்தின் சாரம் என்று கூறிப் பிதற்றுகிறார்கள். இந்தப் போக்கில் இப்புரோகிதர்களும் அவர்களின் அப்பன், பாட்டனும்கூட, கடந்த 400 தலைமுறைகளாக வேதத்தின் சிறு பகுதியைக் கூடப் பார்த்ததில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடித்து மிகக் கீழான இழிநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். இந்த யுகத்தில் பார்ப்பனர் உருவில் இருக்கும் அரக்கர்களான இவர்களிடமிருந்து மக்களையும் நாட்டையும் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் என்றே கடுஞ்சொற்களால் திட்டித்தீர்த்து இருக்கிறார்.

Rascally and Wily Priests â¡Aø£˜. All Sorts of Mummery and Tomfoolery Gist of Vedas â¡Aø£˜. Rascals of Priests என்கிறார்.

என்னே பொருத்தமான அடைமொழிகள்!

தமிழ் ஓவியா said...

இந்து மதத்திற்கு அவர் தரும் நற்சான்றிதழ்களைப் பாருங்கள்: No Religion on Earth Treads upon the Necks of the Poor and the Low in such a Fashion as the Hinduism (உலகில் எந்த ஒரு மதமும் இந்து மதத்தைப் போல, அம்மதத்தைச் சார்ந்த ஏழைகளையும் கீழ்நிலையில் இருப்பவர்களையும் கழுத்தைப் போட்டு மிதிப்பதில்லை) (தொகுப்பு 5, பக்கம் 15).

உதைக்க வேண்டும்

இந்துமதக் கொடுமைகளைப் போக்கிட வழியும் கூறியுள்ளார் விவேகானந்தர். வாருங்கள், மனிதர்களாகுங்கள். எந்தவித முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ள புரோகிதர்களை உதைத்துக் துரத்துங்கள். அவர்கள் மனது என்றைக்கும் விரிவு அடையாது. பல நூற்றாண்டுக்கால மூடநம்பிக்கைகளின் வழித் தோன்றல்கள். கொடுங்கோன்மையின் வாரிசுகள். புரோகித முறையை ஒழித்துக் கட்டுவோம் வாருங்கள்! என்று அறைகூவல் விடுத்தார். எத்தனைப் பேர் கேட்டார்கள்? (தொகுப்பு 5, பக்கம் 10).

முளைக்கும் புது மதம்

நமது மதத்தில் உள்ள புரோகித முறையை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள். அப்போது உலகிலேயே சிறந்த புதிய மதம் ஒன்று உங்களுக்குக் கிடைக்கும் என்றே சொல்லிப் பார்த்தார். எத்தனைப் பேர் முன்வந்தனர்? (தொகுப்பு 4 பக்கம் 368).

இந்து மதத்தைப் பற்றிப் பெருமையாக உலக மதங்களின் மாநாட்டில் (சிகாகோ நகரில்) பேசினார் என்பார்கள். அந்தச் சிறப்பு அம்மதத்தில் இருக்குமானால், அதற்குக் காரணமானவர்கள் பார்ப்பனர்கள் அல்ல என்றார் விவேகானந்தர்.

தமிழ் ஓவியா said...


சத்திரியர்கள் மட்டுமே காரணர் என்கிறார். உபநிஷத்களை எழுதியோர் யார்? ராமன் யார்? கிருஷ்ணன் யார்? கவுதம புத்தர் யார்? சமண தீர்த்தங்கரர்கள் யார்? சத்திரியர்கள் போதித்தவை எல்லாம் அனைத்து மக்களுக்குமானவை. பார்ப்பனர்கள் எதைப்பற்றி எப்போது எழுதினாலும் (அது அவாளுக்கு மட்டுமே) அவற்றை மற்றவர்களுக்கு மறுத்தார்கள் என்கிறார் விவேகானந்தர். (தொகுதி 4, பக்கம் 359).

விவேகானந்தர் பவுத்தர்

புத்தரே எனது இஷ்ட தெய்வம். (Ishta God) நான் பவுத்த மதத்தவனல்ல. ஆனாலும் நான் ஒரு பவுத்தன். (I am not a Buddhist and Yet I am) என்றே அவர் அமெரிக்காவில் பிரகடனப்படுத்தினார். (தொகுதி 1, பக்கம் 21).

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் வேதாந்தம் எதிர்கால மதமா? எனும் தலைப்பில் பேசிய போது, எல்லா மதங்களும் இறுதிநிலை பற்றிய கருத்தை (வேதாந்தத்தை) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். இந்துமதக் குழப்பக் குப்பைக் கொள்கையான வேதாந்தத்தை அல்ல. (தொகுதி 8).

தமிழ் ஓவியா said...

கடவுளை ஒழியுங்கள்

மூடநம்பிக்கைகள் எல்லாம் ஒழியட்டும். ஆசார்யர்களோ, தரும நூல்களோ, தெய்வங்களோ கிடையாது. கோயில்களை, அர்ச்சகர்களை, தேவதைகளை, அவதாரங்களை, கடைசியாகக் கடவுள்களையும் ஒழித்துக் கட்டுங்கள். அறிஞர்களே எழுமின். பயம் கொள்ள வேண்டாம். கடவுளைப் பற்றிப் பேசுவதை நிறுத்துங்கள். மூடநம்பிக்கைகள் பற்றிப் பரப்புரைக்காதீர்கள். உண்மைதான் வெல்லும். என் மனதில் கடவுள் தோன்றும். நான்தான் அதனைத் தோற்றுவிக்கிறேன். மற்றைய மூடநம்பிக்கைகளைப் புறந் தள்ளுங்கள்... என்றாரே! (தொகுதி 1, பக்கம் 502).

இத்தனையையும் தெளிவாகப் பேசிய விவேகானந்தரை மறைத்து அவரை வீரத்துறவியாக்கி இந்துமதத்துக்குச் சொந்தம் என்றாக்கி விட்டார்களே! அணைத்து அழித்தல் என்பது இதுதான்!

அவர்கள் இந்து அல்ல

விவேகானந்தர் இந்து அல்ல. அவரின் குரு ராமகிருஷ்ணன் என்பவரும்கூட இந்து அல்ல. வங்காளப் பார்ப்பனராகப் பிறந்தார். எனினும் தம் பூணூலையும் புழுதி மண்ணையும் சமமாகக் கருதினார். மண்ணை ஆற்றில் வீசியதைப் போலவே பூணூலையும் ஆற்றில் வீசி எறிந்தார். மனிதன் ஆனார். அத்வைதியாக இருந்தவர் பின் இசுலாம் பற்றிப் படித்து அறிந்து கொண்டார். கிறித்துவ நெறியையும் பற்றித் தெரிந்துகொண்டு போற்றினார். இசுலாமியரைப் போலவும் கிறித்துவரைப் போலவும் ஆடை உடுத்திக் கொண்டார். அக்கொள்கைகளைச் சார்ந்தவர்களின் இல்லங்களில் அவர்கள் சமைத்த உணவை உண்டார். மதக்கட்டுகள் அற்று உலகை நேசிப்பவராக மாறினார். அவரது பெயரால் செயல்படும் தொண்டு நிறுவனம்கூட இந்துமதம் சார்ந்த நிறுவனம் அல்ல. எம்மதமும் சாராத மும்மதம் சார்ந்த நிறுவனம்தான். எனவே சிறுபான்மையரின் நிறுவனம் எனும் தகுதிகோரி நீதிமன்றம் மூலம் ஆணை பெற்றுள்ளனர்.

ஆனால் ஒரு மயக்கத்தை உண்டுபண்ணி இந்து மதத்தைப் போல, தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றுகிறார்கள். விவேகானந்தரையும் இந்துமதச் சிமிழுக்குள் அடைக்க முயல்கிறார்கள்.

நால்வர்ணம் நாட்டில் இல்லை. இருப்பது பார்ப்பனர், சூத்திரர் என்ற இரண்டே வர்ணம் மட்டுமே! என்றார் விவேகானந்தர். இதே கருத்தைத் தந்தை பெரியாரும் சொன்னார். பார்ப்பனரும் சூத்திரரும் மட்டுமே வாழும் நாட்டில் வசிக்கக் கூடாது என்று இந்துமத சாத்திரங்கள் கூறும் நிலையில், பார்ப்பனர்கள் இந்த நாட்டை விட்டுத் தொலைந்து போகட்டும் என்றவர் விவேகானந்தர். பார்ப்பனர்கள் மிலேச்சர்களின் உணவை உண்கிறார்கள். அதற்கான தண்டனை / கழுவாய் என்று சாத்திரம் குறிப்பிடும் முறை என்ன தெரியுமா? அவர்கள் தங்கள் கையால் தங்களுக்குத் தாங்களே நெருப்பு வைத்துப் பற்றி எரிந்து சாக வேண்டும். அதைப்போல செய்துகொள்வீர்களா? என்று கேட்கிறார். (கருத்துகள் தொகுப்பு 3, பக்கம் 339).

ஆக, இராமகிருஷ்ணனையும் விவேகானந்தரையும் இந்தக் கொடிய படுபாதக இந்துமதப் பார்ப்பனர்களின், புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இன்னும் எழுகிறேன்

என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்
புழுதியில் போட்டு மிதித்தாலும்
அணுத்துகள் போல் எழுகிறேன்
இன்னும் மேலேமேலே

உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?
என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?
எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை?

உலவும் நிலவாக
உதிக்கும் சூரியனாக
உறுதி அலைகளாக
உயர்கின்றன என் நம்பிக்கைகள்
அதனால்
எந்நிலையிலும் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே...

உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து
கண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய
ஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்க
என் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?
மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்
என் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை
வெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்
அந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை?

சொற்களால் என்னைச் சுட்டு விடலாம்
கண்களால் என்னைப் பிளந்து விடலாம்
வெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்
ஆனாலும் காற்றாய் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே!

என் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்துக் கொண்டு
நான் ஆடுவதுபோல் திகைக்கிறீர்களா?

வரலாற்றின் அவமானக் குடிசையிலிருந்து
நான் எழுகிறேன்
கடந்த கால வலியின் ஆழத்திலிருந்து
நான் எழுகிறேன்

நான் கருங்கடல்
திகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு
இன்பமும் எழுச்சியும் ஏந்திய
அகன்று குதிக்கும் அலைகளாய்
நான் எழுகிறேன்
களங்கமில்லாத விடியலை நோக்கி
நான் எழுகிறேன்
அடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக
என் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...

தமிழில்: அருள்பேரொளி

தமிழ் ஓவியா said...

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கையாம்


- மயிலாடன்

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மெய்ம்மறந்துகிடந்தோம்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

ஒருவர் பந்து வீசுவார்; இன்னொருவர் அடிப்பார். மற்றொருவர் பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார். எல்லைக்கோட்டருகில் நிற்பவர்களோ ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கால் பந்தாட்டமோ, ஹாக்கியோ அத்தகையதல்ல; ஒவ்வொரு நொடியிலும் இரு அணிகளைச் சேர்ந்த 22 பேர்களும் சுறுசுறுப்புடன் அதிவேகத்துடன், பரபரப்பாகத் தயார் நிலையில் இருந்து தீரவேண்டியவர்கள்.

ஆனால், மூடநம்பிக்கை மற்ற போட்டிகளில் முட்டி மோதுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் உண்டு. கானா அணிக்கும், உருகுவே அணிக்கும் நடைபெற்ற போட்டியின்போது கானா அணியைச் சேர்ந்த ஒருவர் அடித்த பந்து கோல் நோக்கிப் பறந்தது. அந்த நேரத்தில் உருகுவே நாட்டு அணியின் லூயிஸ் சாரஸ் என்பவர், அந்தப் பந்தைக் கோலுக்குள் போகாமல் கையால் தடுத்துவிட்டார் (கோல் கீப்பரைத் தவிர மற்றவர்கள் கையில் தடுத்தால் அது குற்றமாகும்). செய்த குற்றத்துக்காக நடுவரால் சாரஸ் வெளியேற்றப்-பட்டார் என்றாலும், இதுகுறித்து சாரஸ் என்ன கூறினார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அந்தப் பந்தைக் கையால் நான் தடுத்தது குற்றம்தான். அப்படிச் செய்திராவிட்டால், அந்தப் பந்து எங்கள் கோலுக்குள் போயிருக்கும். நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். எனவே, அந்தப் பந்தை என் கைதான் தடுத்தது என்றாலும், அது என் கையல்ல, கடவுளின் கை! அதுதான் தடுத்தது என்று சமாதானம் கூறினார்.

பொதுவாக, தவறு செய்பவர்கள் அதற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்காமல் கடவுளின்மீது பழி போடுவது பொறுப்பற்ற வாடிக்கைதான். அந்தக் குற்றத்தைத்தான் உருகுவே ஆட்டக்காரரான சாரசும் செய்தார்.

ஒரு கேள்வி, கையால் பந்தைத் தடுத்தது குற்றம் என்பது அவருக்கே தெரியும். தெரிந்திருந்தும், பந்தைத் தடுத்தது கடவுள் கை என்றால், தவறுக்குத் துணை போகக்கூடியவர் கடவுள் என்று விளங்கவில்லையா? விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுக்கம் தேவையில்லையா?

சரி, அவர் கைதான் கடவுள் கையாயிற்றே, அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? அவர் அணி அடுத்த போட்டியில் ஏன் தோற்றது? கடவுள் சக்தி அவ்வளவுதானா? அட, பரிதாபத்திற்குரிய கடவுளே, பக்தர்களே உங்களை நினைத்தால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

ஸ்பெயின் 5_1 என்ற கோல்களில் டென்மார்க்கை வென்றது. இங்கிலாந்து பராகுவேயையும், பிரேசில் போலந்தையும் வீழ்த்தின. மேற்கு ஜெர்மனி 1_0 என்ற கோலில் மொரோக்கோவையும், மெக்சிகோ பல்கேரியாவையும் வீழ்த்தின. காலிறுதியில் பிரான்ஸ் பிரேசிலை வீழ்த்தியது. பெல்ஜியம் ஸ்பெயினை வெளியேற்றியது. மேற்கு ஜெர்மனி மெக்சிகோவை வெளியேற்றியது. அர்ஜென்டினா 2-_1 என்ற கோல்களில் இங்கிலாந்தை வென்றது. அர்ஜென்டினாவின் முதல் கோல் கடவுளின் கை போட்ட கோல் என்று பின்னால் மரடோனாவால் வர்ணிக்கப்பட்டது. தனியாக வானில் வந்த பந்தைப்பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷெல்டனும், அதைத் தன்வசப்படுத்த மரடோனாவும் வானில் தாவினர். ஆனால் மரடோனா அந்தப் பந்தை தனது கையால் குத்திக் கோலாக்கினார். நடுவரும் லைன்ஸ்மேன்களும் அதைக் கவனிக்கவில்லை. அடுத்து மரடோனா அடித்த கோல் அபாரமான கோலாகும். உலகின் சிறந்த கால்பந்து வீரரான மரடோனா கடைசி வரை இந்தக் கோலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. அரை இறுதியில் மேற்கு ஜெர்மனி 2_-0 என்ற கோல்களில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 2-_0 என்ற கோல்களில் பெல்ஜியத்தை வென்றது. இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா 3_-2 என்ற கோல்களில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஃபிபா கோப்பையைக் கைப்பற்றியது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் என்ற உணர்வு தவறு செய்வதைத் தடுக்கவில்லை; மாறாக தவறு செய்பவர்கள் தப்பிக்கத் துணைப் போகிறது. இதன் மூலம் ஒழுக்கக்கேட்டுக்கு அரணாகத்தானே இருக்கிறது. இதுகுறித்து எந்த ஆன்மிகவாதிகளும் வாய்திறப்பதில்லையே _ ஏன்?

குறிப்பு: 2014-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டம் ஜூன் 13 அன்று தொடங்குகிறது

தமிழ் ஓவியா said...

பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்

பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதவிக்கும் பாபநாசம்

தாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா?

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.

இதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை


கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப் பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்? மேலும், மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை மேல் என்று பெருமை பேசுவதற்கு பள்ளிகளின் பெயர்களும், அவர்களும் கட்டியிருக்கும் தொகையும் தேவையாயிருக்கிறதென்று பெற்றோர்களும் நினைக்கிறார்களாமே! இதுதான் சாக்கென்று, இத்தனை நாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வந்தவர்கள் அதனினும் சிறப்பான சமச்சீர் கல்வி வந்தபிறகு, இரண்டும் இல்லாமல் சி.பி.எஸ்.இ-க்குப் போகிறார்கள் என்று ஆங்காங்கிருந்து தகவல்கள் வரத் தொடங்கின.

அது குறித்த தகவல்களை விசாரித்த போது தான், நடப்பது சிறிய அளவில் அல்ல என்பது புரிந்தது. மாநில அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொத்துக் கொத்தாக சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதை அறிய முடிந்தது. சி.பி.எஸ்.இ (மத்திய பள்ளிக்கல்வி வாரியம்) பாடத்திட்டத்திற்கு மாறுவது என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல. மாறாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்தே விலகிச் செல்லுதல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகள் தவிர எதன் மீதும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குக் கட்டுப்பாடு இருக்காது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஆபத்தின் பரிமாணம் விளங்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மாநில அரசின் கையில் இருக்கும் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவை சத்தமில்லாமல் மத்திய அரசின் கைக்குப் போய்விடும்.

இந்திய அரசியலமைப்பின் தொடக்க காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் அவசர கால நிலையின் போது மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடக்குமுறைக் காலத்தில் பெரிதாக எழ முடியாத எதிர்ப்பு, பின்னாளில் கிளம்பியபோதும், பொதுப் பட்டியலிலிருந்து அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அதிகார வர்க்கம் தயாராக இல்லை. மேலும், தன்னுடைய கரங்களை கல்வித் துறையை நோக்கி நீட்டி, அதனை கபளீகரம் செய்யவே முயன்றது. இதன் மூலம் மாநில உரிமைகளை நசுக்குவதுடன், இந்தித் திணிப்பிலும் எதிர்ப்பின்றி வெற்றி கண்டுவிடலாம். பாடத்திட்டத்தில் மாநிலங்களின் பண்பாடு, இனம், மொழி குறித்தவையெல்லாம் கிஞ்சிற்றும் இடம்பெறாது. இப்போது பொறுப்பேற்றுள்ள பி.ஜே.பி. அரசு ஒரு பாடத்திட்டத்தில் திருத்தம் செய்தாலே போதுமானது, வெகு எளிதில் நாடுமுழுக்க காவி விதைகளை பிஞ்சு மனதில் தூவி விடலாம்.

இத்தகைய ஆபத்தான போக்கை முளையிலேயே கெல்லி எறியாவிட்டால், மாநில சுயாட்சிக்கு அல்ல; மாநிலங்களின் அடிப்படை உரிமைகளுக்கே மீண்டும் சுழியத்திலிருந்து தான் போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். மாநில அரசுகள் என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும்; பல்வேறு பண்பாடுகள் என்ற அடையாளங்களை அழித்துவிட்டு ஒரே அகன்ற பாரதம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மோடியின் அரசுக்கு இத்தகைய வாய்ப்புகளெல்லாம் தானாகக் கனிந்த மரங்கள் போல! மறைமுகமாக நடைபெறும் இந்தப் பிரச்சினையில் போதுமான அளவு இன்னும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்தாமல் இருக்க, 09.05.2014 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இப்பிரச்சினை குறித்த தொடக்க அடியினை எடுத்து வைத்துள்ளது.

தமிழ் ஓவியா said...

மேல்நிலைப் பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வித் திட்ட முறையைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறையிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்ற இந்தத் தீர்மானம் திராவிடர் கழகம் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றாகும். இந்நிலையில் இந்தப் பிரச்சினையின் முழுப் பரிமாணத்தையும் விளக்க கல்வியாளர்களை அணுகினோம். சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் கூறும் போது, சமச்சீர் கல்வியை நோக்கிய முதல் அடியாக விளங்குவது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இது தமிழ்நாட்டில் அதுவரை இருந்து வந்த நான்கு வகையான பாடத்திட்டங்களை (எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல்) ஒன்றிணைத்து உருவாக்கிய பாடத்திட்டமாகும். இது தரமற்றதாக உள்ளது என்னும் குற்றச்சாட்டு தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சமச்சீர் கல்வி என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது. சில பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.இ.க்கு மாறக் காரணம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் அல்ல. அப்பள்ளிகளின் வணிக நோக்கமே என்று குற்றம் சாட்டினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திற்காக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், பொதுப் பள்ளிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, அவர் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாற்றிலிருந்து தொடங்கினார்.

தமிழ்நாட்டில் அரசினுடைய பாடத் திட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. இருந்த காலகட்டத்தில், பல்கலைக் கழகப் பாடத் திட்டமாக மெட்ரிகுலேசனும், ஆங்கிலோ இண்டியனும் பாடத்திட்டமாக இருந்தது. இவையிரண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யைவிட உயர்ந்தவை; இதனைப் படித்தால், பல்கலைக் கழத்திற்குச் செல்ல முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இது திட்டமிட்டு காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும்.

இந்தியா விடுதலை பெற்று ஒரு குடியரசாக ஆன பிறகு, தன்னுடைய பாடத் திட்டங்களை உருவாக்கி, எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டது.

அதனுடைய விளைவாக, 1970களில் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், இனி நாங்கள் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் உயர்கல்வியைத் துறையை எடுத்துக் கொள்கிறோம்; பள்ளிக் கல்வியை அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்றது. இதற்குமுன் மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால், அன்றைய அரசு இவர்களை மாநிலப் பாடத்திட்டத்தோடு இணைப்பதற்குப் பதிலாக,- மெட்ரிக்குலேசன் வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் எல்லா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களையும் உறுப்பினர்களாக்கி, அதற்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்து மெட்ரிக் பள்ளிகள் சுயநிதி ஆங்கில வழிப் பிரிவுகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அதில் படிப்பதற்கும் ஆங்கிலோ இண்டியன்கள் இல்லை. அவற்றுக்கென்று தனித்த சிறப்பான பாடத்திட்டமும் எதுவும் இல்லை.

அரசு உருவாக்கிய முத்துக்குமரன் குழு மேற்கொண்ட ஆய்வில், நான்கு பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருப்பதும், தனித்தனியான இந்தப் பெயர்களால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் என்பது சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் புதுப் பாடத்திட்டமான சமச்சீர் கல்வி என்று நாம் கூறும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று விளக்கினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் சிறந்ததா?

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் எனபது மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் வசதிக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். அவை இந்தியா முழுவதும் உள்ள பொதுக்கல்விக்கான பாடத்திட்டம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால் வளமான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்னும் மக்களின் அறியாமை இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. எனவே, ஏழை மக்களை ஈர்க்கவே இந்தப் பள்ளிகள் தற்போது இந்த மாற்றத்தை விரும்புகின்றன. பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள சூழலில் அவர்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்ற பேராசிரியர் கருணானந்தத்தின் குற்றச்சாட்டைத் தான் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழிமொழிகிறார்.

பள்ளி நிர்வாகத்தினுடைய பார்வையைப் பொறுத்தவரைக்கும், எஸ்.எஸ்.எல்.சி. என்ற ஒரு பாடப்பிரிவு இருந்த காலகட்டத்தில், மெட்ரிக் பள்ளிப் படிப்பு உயர்ந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடிந்தது; இப்பொழுது இரண்டிற்கும் ஒரே பாடத் திட்டம் என்றால், நாங்கள் ஏன் கூடுதலாகப் பணம் செலுத்தவேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வந்து, இரண்டு, மூன்று தேர்வுகள் நடைபெற்றதும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெற்றதைப் பார்த்தனர்.

பிறகு, ஏன் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, தங்களுடைய சந்தை போய்விடுமோ என்கிற காரணத்தினால், சி.பி.எஸ்.இ.க்கு மாறிவிடுகிறார்களே தவிர, இவர்கள் பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ. தான் சிறந்த பாடத் திட்டம் என்று நிரூபித்து அதற்கு மாறவில்லை.

சி.பி.எஸ்.இ.-க்கு மாறவேண்டும் என்றால், 2005 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.டி. புதிய கல்வித் திட்டத்தைக் கொடுத்தவுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அப்பொழுதே சி.பி.எஸ்.இ.க்குச் சென்றிருக்கலாமே! என்றும் கேள்வியெழுப்புகிறார்.

பெற்றோர் விரும்புவதால்தான் இப்படி பாடத்திட்டங்களை மாற்றுவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கேட்டபோது, இல்லை என்று ஆதாரத்தோடு மறுக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சென்னை வேப்பேரியில் ஒரு மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 175ஆண்டுகள் பாரம்பரியமான ஒரு பள்ளி அது. அந்தப் பள்ளி மெட்ரிக் பள்ளியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளி அய்.சி.அய்.சி. பள்ளியாக மாறுவதற்காக முயற்சி செய்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. உடனே பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கமாக உருவாக்கி, அந்தச் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு ஒரு நோட்டீசைக் கொடுத்தார்கள்.

அந்த நோட்டீசில், நீங்கள் எந்த வகையில் இந்தப் பாடத்திட்டம் என்பது சி.பி.எஸ்.இ., அய்.சி.அய்.சி. பாடத்திட்டத்தைவிட குறைந்தது என்று சொல்ல வருகிறீர்கள். உங்களிடம் அதற்கான ஒப்பாய்வு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த ஒப்பாய்வினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தாமல், நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்தில், பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே கொடுத்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பினார்கள்.

தமிழ் ஓவியா said...

அப்படிச் செய்த பிறகு, மறைமுகமாகப் பெற்றோர்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அய்.சி.அய்.சி.யில் சேர வைத்திருக்கிறார்கள்.

உடனே, நடந்தவற்றை விளக்கி அந்தப் பெற்றோர் சங்கம், பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ஒரு மனு கொடுத்தது. ஒரே பள்ளி வளாகத்தில் இன்னொரு சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்குவதோ, அல்லது அய்.சி.அய்.சி. பள்ளி தொடங்குவதோ அல்லது இருக்கிற பள்ளியை அய்.சி.அய்.சி.யாக மாற்றுவதோ எங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. எனவே, அரசு இதற்கு என்.ஓ.சி. கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரியவருகின்றன.

ஒன்று, பெற்றோர்கள் விரும்பி மாறுகிறார்கள் என்பது தவறு என்பதற்கு இது ஒரு சான்று.

இரண்டாவது, நிர்வாகத்திடம் எந்தவிதமான ஒப்பாய்வு அறிக்கையும் கிடையாது. இவர்கள் பாடத் திட்டத்தையெல்லாம் ஆய்வு செய்யவில்லை. ஒரு வணிக நோக்கத்திற்காகத்தான் மாறுகிறார்கள் என்பதற்கும் இதுவே சான்று என்றும் போட்டுடைத்தார்.

வணிகம் என்பதைத் தாண்டி இதனால் பள்ளி நிர்வாகங்களுக்கு வேறு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் நமக்கு இல்லாமலில்லை.

தமிழ் ஓவியா said...

மக்கள்தொகை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அரசு ஏராளமான பொதுப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு உருவாக்கவில்லை. அந்தப் பணிகளை தனியார் பள்ளிகளிடம் தாரை வார்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ தமிழ்நாட்டிற்குள் உள்ள பொதுப் பாடத்திட்டத்திலிருந்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடவே இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் பேராசிரியர் அ.கருணானந்தம். இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரின்ஸ் கஜேந்திரபாபு தரும் தகவல்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு தென்மண்டல அலுவலர்தான் இருக்கிறார். தென் மண்டலம் என்று சொன்னால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் இவை அனைத்தும் சேர்ந்தது தென்மண்டலம். இதற்கு ஒரு மண்டல அலுவலர்தான். இவருடைய அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.

இவருடைய பணி என்னவென்றால், பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்களா என பார்ப்பது, சுற்றிக்கைகளைக் கொடுப்பது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்றவைதான். அவருடைய பணியாகும். நாள்தோறும் நடைபெறும் நிர்வாக நடவடிக்கையில் அவர் தலையிடமாட்டார். மாநில அரசுதான் தலையிட வேண்டும். ஆனால், மாநில அரசும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தில் தலையிடவில்லை. தங்களுடைய கட்டுப்பாட்டில் அதனை வைத்துக்கொள்ளவில்லை.

தமிழ் ஓவியா said...

எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டால், யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது ஒரு காரணமாகும்.

இரண்டாவதாக, தமிழ் மொழி இல்லாமல் படித்து முடித்துவிடலாம்; இதனைத் தாண்டி மாநில அளவில் கல்விக் கட்டணத்திற்கென்று அளவுகோல் உண்டு. கண்காணிக்க அதிகாரிகள் உண்டு. கட்டமைப்பு உண்டு. இவை எதுவும் அங்கு கிடையாது. யாரும் அதற்காக முறையிடவுமில்லை; மாநில அரசும் தலையிடவில்லை. இதெல்லாம் பள்ளி நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்.

இப்படி தனது கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதைத் தடுத்து பள்ளிக் கல்வித் துறையை மாநில அரசு காக்க முடியாதா? தமிழ்நாடு அரசு ஆங்கிலவழியில் கல்வி கொண்டுவருவதாக சொன்னதுகூட மெட்ரிக் பள்ளிகளின் மாற்றத்துக்குக் காரணமாக இருக்குமா?

இல்லை. ஏனென்றால், அரசு ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவதாக அறிவிக்கும் முன்பும் பின்பும் கூட தடையின்மை சான்று கோரி பல பள்ளிகளின் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள். பல பள்ளிகளுக்குத் தடையின்மை சான்றும் வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு சி.பி.எஸ்.இ. சார்பில் தடையின்மை சான்று தேவை இல்லை என்று திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். எனினும் திருத்தப்பட்ட விதிகளின்படி மாநில அரசு அல்லது யாராவது ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்களானால், அப்போதுதான் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, மாநில அரசு இந்தப் பள்ளிகளின் வணிக நோக்கத்தையோ, ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு பாடத்திட்டங்கள் கூடாது என்பதையோ எடுத்துக்காட்டி அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டினால், திருத்தப்பட்ட விதிகளுக்குப்பிறகுகூட சி.பி.எஸ்.இ.யால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் பிரின்ஸ். இது குறித்து பேரா.கருணானந்தம் குறிப்பிடும் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் முன்பு இருந்ததைப் போல் ஆறாம் வகுப்பு முதல்தான் தொடங்க முடியும். அதுவும் மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடங்கப்பட முடியும் என்ற விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இதையெல்லாம் தடுக்க முயற்சிகள் எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு தனியார் கல்வி நிர்வாகங்களுக்குத் துணைபோகவே விரும்புகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுபேருக்குமே உரிமை இருக்கிறது. பொறுப்பும் இருக்கிறது. ஒரே பொருளில் இரண்டு பேரும் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு கொண்டுவரும் சட்டம்தான் செல்லும். அதே நேரம் பொதுப்பட்டியலில் இருந்தால் மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லமுடியாது. மேலும், கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. எனவே, ஒரு மொழிவாரி மாநிலம் என்கிற அடிப்படையில் ஒரு இனத்தினுடைய பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் கல்வியை பண்பாட்டுடைய ஒரு கூறாகப் பார்த்து அவர்கள் தங்களுடைய உரிமைகளையும், தாங்கள் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

73 நாடுகளைக் கொண்ட பிசா அறிக்கையில், எந்தெந்த நாட்டிலெல்லாம் அரசினுடைய பொறுப்பிலும், செலவிலும் கல்வி கொடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் குழந்தைகளினுடைய கற்றல் திறமை அதிகமாக இருக்கிறது; எந்த நாட்டிலெல்லாம் தனியார் பள்ளிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே குழந்தைகளின் கற்றல் திறமை குறைவாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

உலகெங்கும் கல்வியாளர்கள் சொல்லும் இந்தக் கருத்து நம் மக்கள் காதில் விழாத வண்ணம் தடுத்துநிற்கும் போலி கவுரவப் போக்குகளும் மாற வேண்டும் என்பதும் உண்மையே!

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தளவில், பந்து இப்போது தமிழக அரசின் கையில் இருக்கிறது. தன்னிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறை பறிபோய்விடும் என்ற உண்மையாவது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பொதுப் பள்ளிகளையும், அருகமைப் பள்ளிகளையும் அதிகப்படுத்துவதும், பாடத்திட்டத்தைச் செழுமையாக்குவதில் மேலும் கவனம் செலுத்துவதும், மக்களிடம் தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகத்தைச் சரி செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை விரிவாக்கி, ஆங்கில வழிப் பாடம் என்பதை விட மொழியாக இங்கிலீசிற்கு தனியிடம் தந்து பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழிக் கல்வி மூலமே உலக அரங்கை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவதிலும்தான் சரியான கல்விக்கான பாதை இருக்கிறது.

- சமா.இளவரசன்

உதவி : வை.கலையரசன், ச.பாஸ்கர்

தமிழ் ஓவியா said...

தொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்!
வரலாற்றுப் பாட நூல்களைத்
திரிக்கும் அவலம்

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும்.

பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) அனுப்பியதன் மூலம் கணக்கைத் தொடங்கியுள்ளார் தினநாத் பத்ரா என்பவர். இதையடுத்து அந்த நிறுவனம் அதனுடைய பல்வேறு நூல்களை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. இவற்றுள் கல்வியாளர் மேகா குமார் எழுதியுள்ள 1969லிருந்து அகமதாபாத்தில் நடக்கும் மதவாதம் மற்றும் பாலியல் வன்முறை என்ற நூலும் மறு ஆய்வு செய்யப்படும் நூல்களின் பட்டியலில் இருப்பதாக ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் அவருக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. இந்த நூல் 1969, 1985 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது முஸ்லிம் மதப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த கல்வியியலாளரான தனக்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட மாறுதல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் மேகா குமார்.

சரி, யாரிந்த தினநாத் பத்ரா?

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யபாரதி கல்வி குழுமங்களின் பொதுச் செயலாளராக இருந்தவர் தினநாத் பத்ரா. தற்போது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். வித்யபாரதி பயன்படுத்தும் பாடநூல்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், குழந்தைத் திருமணம், சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இந்தியக் கலாச்சாரம் என்பது போலவும் இன்னமும் பல மூடநம்பிக்கை களைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியவர் தினநாத் பத்ரா.

வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் உள்ள தகவல்களை எதிர்த்து (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) எதிராக 2006ஆ-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவரும் இவரே! அவ்வழக்கு பழங்காலத்தில் ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள் என்று பாடநூலில் இருப்பதை எதிர்த்து பதியப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கருத்தைப் பாடநூலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆ-ம் ஆண்டு அன்றைய மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தினநாத் பத்ராவின் அறிவுரைப்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து பாலியல் கல்வியை நீக்கினார். மேலும், பாலியல் கல்வியைப் போதித்தால் சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி டெல்லி பள்ளி ஆசிரியர்களுக்குக் கடிதம் அனுப்பியது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி.

2008ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ராமாயணம் தொடர்பான ராமானுஜனின் கட்டுரையை நீக்க வழக்குத் தொடர்ந்தவர்களில் தினநாத் பத்ராவும் ஒருவர்.

2010ஆம் ஆண்டு, இந்துக்கள் தொடர்பான வரலாற்று நூலை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்து ராஷ்டிரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்ட பிரான்ட்லைன் ஆசிரியர் இந்து ராமுக்கு எதிராகவும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார் தினநாத் பத்ரா.

இப்படித் தொடரும் செயல்களுக்கு மத்தியில் இப்போது நவீன இந்திய வரலாறு குறித்து சேகர் பந்தோபாத்யாய எழுதி ஓரியன்ட் பிளாக்ஸ்வான் வெளியிடும் நூலுக்கு எதிராகவும் தினநாத் பத்ரா கிளம்பியுள்ளார். சேகர் பந்தோபாத்யாய எழுதியுள்ள நவீன இந்திய வரலாறு குறித்த நூல் மிகச் சிறந்த வரலாற்று நூல், அந்த நூலைத் தடை செய்ய யாராவது முயன்றால், அது இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக அமையும். தினநாத் பத்ராவுக்கு அந்த நூலில் பிரச்சினை இருந்தால் அந்த நூலைத் தடை செய்வதற்குப் பதிலாக அந்த நூலுக்கு மறுப்பாக ஒரு நூலை எழுதட்டும் என்று கூறியுள்ளார் பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா.

தினநாத் பத்ராவின் சட்ட அறிவிக்கையை அடுத்து தனது பல நூல்களை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் மறுஆய்வு செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது எண்ணற்ற வரலாற்று, சமூக சிந்தனை யாளர்களைக் கவலையடைய வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டல்களின் மூலமாக வரலாற்றைத் திரிக்க முயலும் மதவாத அமைப்பினரின் செயல்கள், ராமச்சந்திர குகா சொல்லியுள்ளது போல, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாகவே அமையும்.

- திராவிடப் புரட்சி

தமிழ் ஓவியா said...

மாயா ஏஞ்சலோ ஒரு கூண்டுப் பறவையின் விடுதலை


பிறப்பு: ஏப்ரல் 4, 1928 | இறப்பு: மே 28, 2014

அழுகுரலும், ஓலங்களும் நிறைந்த ஒரு ஓலைக் குடிசையில் இருந்து உலகை வெல்லும் ஓங்காரமான விடுதலைக் குரலை வழங்கி விடுவது ஒன்றும் அத்தனை எளிதான செயலல்ல. ஆனால், அப்படி ஒரு குரலைத் தனது சொற்களால் கட்டமைத்து புவிப்பந்தெங்கும் வழிய விட்ட ஒரு கவிதையை நாம் இழந்து விட்டோம். இனி புதிதாக விடுதலை குறித்துச் சொல்வதற்கு அவரது பேனா முனைகள் இயங்கப் போவதில்லை. ஆனால், மாயா ஏஞ்சலோவின் பழைய இயக்கத்தில் உருவான சொற்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பயணிக்கலாம்.

தமிழ் ஓவியா said...

அவரது சொற்களில் படிந்திருக்கும் அறச்சீற்றம் முழுக்க முழுக்க அவரது சொந்த வாழ்க்கையின் துயரங்களில் இருந்து பெறப்பட்டது. வெள்ளைக்காரக் குடும்பம் ஒன்றுக்கு அடிமையாய் இருந்த பாட்டி, அதே குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்; கருத்தரிக்கிறார்; குழந்தை பெறுகிறார். பிறகு அதே குழந்தை இன்னொரு பார்த்திராத மனிதருக்குப் பிறந்தது என்று எழுதிக் கையெழுத்திடுகிறார்.

பாட்டியின் உடலும், உள்ளமும் கேட்பாரற்றுச் சீரழிக்கப்பட்ட கதைகளைக் கேட்டபடியே வளர்கிறார். தன்னுடைய ஏழு வயதில் அதே போன்றதொரு கதை தனக்கு நிகழும் போது ஒரு பாமரக் கறுப்பினப் பெண்ணாக அவர் எல்லாவற்றையும் இழந்து மனதளவில் ஒடுங்கி இருத்தலுக்கான பயணத்தைச் செய்திருந்தால் இந்த உலகம் ஒப்பற்ற ஒரு கவிதைக்காரியை இழந்திருக்கும்.

தனது ஏழு வயதில் தாயின் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான போது குடும்பத்தினருடன் அழுகுரலோடு பகிர்ந்து கொண்டார் அந்தப் பெண். அடுத்த நான்கு நாட்களில் தாயின் காதலன் படுகொலை செய்யப்பட்டான், நியாயமாய் மகிழ வேண்டிய அந்தக் குட்டிப் பெண், அழுது புரண்டாள், தனது குரல் ஒரு மனிதனைக் கொன்று விட்டதை அவரால் சகிக்க முடியவில்லை, சக மனித உயிரைக் குடிக்கும் அளவுக்கு எனது குரலுக்கு வலிமையிருக்குமென்றால் நான் இனிக் குரல் எழுப்பவே விரும்பவில்லை என்று ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் தன்னுடைய சொற்களைப் புதைத்து விட்டார்.

ஆனால், காலமோ பல்வேறு வெவ்வேறு மனிதர்களின் சொற்களைத் தோண்டி எடுத்து அவர் கைகளில் கொடுத்தது. ஆம், அமைதியாய் இருந்த அந்த ஆறு ஆண்டுகளில் தீவிரமாகப் படித்தார், மிகப்பெரிய தேடலுடன் படிக்கத் தொடங்கிய அந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்கு சொற்கள் மனித குலத்தின் ஆன்மம் என்பது விளங்கத் தொடங்கியது. அநீதிக்கு எதிராக சொற்களைக் கொண்டே போர் தொடுக்க வேண்டும் என்கிற உண்மையை அவர் உணர்ந்து கொண்டபோது அவருக்கு வயது பதினான்கு.

அந்த ஆறு ஆண்டுகால அமைதியும், வாசிப்பும் பதினேழு வயதில் உலகின் மனசாட்சியைப் புரட்டிப் போடுகிற ஒரு நூலை எழுதும் அளவுக்கு அவரை முதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

“I Know Why the Caged Bird Sings” வன்கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட கறுப்பினப் பெண்களின் குரலாக அந்தப் பெண்ணின் தன் வரலாறாக 1969இல் வெளியான போது உலகம் சினம் கொண்டது, ஆர்ப்பரித்தது. ஆனால், அவரோ அமைதியாகச் சொன்னார், நான் வன்முறையையும், அடக்குமுறையையும், வன்கொடுமைகளையும் இலக்கியத்தால் எப்படி எதிர் கொள்ள முடியும் என்று எழுதிப் பார்த்தேன் என்றார்.

தமிழ் ஓவியா said...


ஒரு பெண் விடுதலைக் கவிஞராகவே அவரை இலக்கியம் எனக்கு அறிமுகம் செய்தது. ஆனால், அது தவறென்று அவர் தனது சொற்களால் எனக்கு உணர்த்தினார். “I Know Why the Caged Bird Sings” நூலின் ஒற்றை வரி எனது இரும்பாலான இதயத்தின் சுவர்களைச் சுரண்டி வலி உண்டாக்கியது. அது பெண்ணுக்கான குரல் இல்லை, உலகெங்கும் ஒடுக்கப்படும் எந்த ஒரு உயிருக்குமான குரல் என்பதை நான் விரைவில் உணர்ந்து கொண்டேன். குறுகிய கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டாலும், கீழ்வானத்தில் எனது சிறகுகள் மிதக்கப் போவதில்லை என்பதை அறிந்தாலும், நான் எனது அலகைத் திறந்து பாட முயற்சிக்கிறேன். கூண்டுப் பறவை தான் என்றாலும் தான் பாட மறப்பதில்லை என்று மெல்லிய சோகம் இழைந்தோட அவரது உயிர் தடவிய அந்தச் சொற்களில் இருந்து மரணம் கூட என்னைப் பிரித்துவிட முடியாது. உலகின் ஆற்றல் மிகுந்த மனிதரெனச் சொல்லப்படுகிற அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா இப்படிச் சொல்கிறார்:

தமிழ் ஓவியா said...

தனது எழுச்சி மிகுந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பயணத்தில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன.

ஒவ்வொரு விடுதலைக்குப் போராடுகிற ஒடுக்கப்பட்ட பெண்ணின், மனிதனின், உயிர்களின் குரலில் மாயாவின் சொற்கள் கலந்திருக்கின்றன. உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மெல்லிய இழையாய் தனது சொற்களின் மூலம் தொடர்ந்து கடைசி வரை சொல்லிக் கொண்டே இருந்தார் மாயா. இன்றைய நவீன உலகில் பெண்ணின் உடல் மற்றுமொரு முதலாளித்துவப் பண்டமாய் மாற்றப்பட்டிருக்கிறது, பொருட்களை விற்கவும், வாங்கவும் பெண்களின் உடல் காட்சிப்படுத்தப்படுகிறது என்பதை எல்லாம் ஒரு தீவிரப் போராட்ட வழியில்லாமல் நெகிழ்வாக சொற்களின் மூலம் உணர்த்துகிற இலக்கியப் போராட்டத்தையே அவர் செய்தார்

பெண் தனக்கான வாழ்க்கையை வாழ இவ்வுலகில் இன்று வரையில் மறுக்கப்படுகிறது, ஏனைய மனிதர்களின் வாழ்க்கையை வாழும்படியோ, ஏனைய மனிதர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கத் தன்னால் ஆன தியாகங்களைச் செய்யும்படியோ பெண்களை ஆண்களால் ஆளப்படுகிற இவ்வுலகம் தொடர்ந்து வற்புறுத்துகிறது.

பெண்ணின் உடல் ஒரு உணவுப் பண்டத்தைப் போல நுகரப்பட்டு உமிழப்படுகிறது. பெண்களின் உடல் சேவைகளைச் செய்யப் படைக்கப்பட்டிருக்கும் ஒரு பருப்பொருளைப் போலவே நோக்கப்படுகிறது, ஒரு நீரோடையைப் போல நகர வேண்டிய பெண்ணுடலின் ஆசைகளை பல்வேறு குறியீடுகளின் மூலம் ஒடுக்கித் தேங்கிய குட்டையைப் போல மாற்றி வைத்திருப்பதில் நம் அனைவருக்கும் அளப்பரிய பங்கிருக்கிறது என்று சமூகத்தை விட்டும், குடும்பங்களை விட்டும் விலகாமல் அதே வீரியத்துடன் இலக்கியத்தின் மூலம் சொல்வது என்பது அனேகமாக மாயாவுக்கு மிகப் பிடித்த வேலையாக இருந்திருக்கக் கூடும்.

மாயாவின் சில கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆணாகக் குற்ற உணர்வு பீறிடுவதைத் தடுக்க இயலவில்லை, நகர வாழ்க்கையில் கொஞ்சமாய் வண்ணங்கள் பூசப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் பெண் உடலுக்கு எதிரான இந்தச் சமூக மனநிலை ஊரகப் பகுதிகளில் எந்த வண்ணங்களும் இன்றி நிலைத்த உண்மையாகச் சுடுகிறது என்பதைப் பல இடங்களில், மாயா தனது தீப்பிழம்பான சொற்களால் அல்லது பனிக்கட்டி போன்ற சொற்களால் உணர்த்துவார்.

உலகெங்கும் இடைவிடாது ஒலிக்கும் பெண்களின் ஓலத்தை சிற்சில சொற்களில் அடைத்து வந்து வாசிப்பவனின் இதயத் துளிகளுக்குள் ஒரு நாகப்பாம்பின் பிளவுற்ற நாவைச் செருகி வதை செய்வது உன்னதமான ஒரு நிகழ்வு. ஆண்களின் உலகில் விழுதுகளைப் போலவும், தூண்களைப் போலவும் நிலைத்திருக்கும் சமநீதிக்கு எதிரான குறிகளாய் மண்டிக் கிடக்கும் அடையாளங்களை இலக்கியம் என்கிற வெகு நுட்பமான கருவியின் மூலம் மாயா எப்போதும் வெட்டி எறிந்து கொண்டே இருந்தார். வெட்டுப்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்து வெளிக்கிளம்பும் ஒவ்வொரு ஆணின் ஆற்றாமையும், குற்ற உணர்வும் புற உலகின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது என்பது தான் அவரது கவிதைகளின் தனிச் சிறப்பு.

இதுவரை பார்த்திராத ஒரு மனிதரின் மரணம் முதன் முறையாக சொல்ல முடியாத துயரத்தைத் தருகிறது, இருப்பினும் அவர் உடலின் சுமையில் இருந்து விடுபட்டுத்தான் ஆக வேண்டும். குட் பை மாயா. உங்கள் கவிதைகளும், சொற்களும் உலகமிருக்கும் வரை விடுதலை குறித்த கனவுகளை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

- கை.அறிவழகன்

தமிழ் ஓவியா said...

விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்!


எச்சரிக்கைக் குரல் எழுப்பிய
திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு


திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப நிலைதான்.

நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கிய புரா திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்தக் கருத்தின் அடிப் படையில் தான் தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள 67 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ஆசிரியர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் ஆய்வு செய்து அங்கும் புரா திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீடு, நீர் சேமிப்பு, விவசாயிகளுக்கான இழப்பீடு, மானியம் முறையாகச் சென்றடைதல் உள்ளிட்ட தீர்மானங்களுடன் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைதல், ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு முதியோர் காப்பகங்கள் போன்ற இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான 12 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்று விவசாயத்தை வாழ வைக்க வேண்டும்; அல்லது விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை வாயாரப் புகழ்ந்துவிட்டு அவர்களது வாழ்வை உறிஞ்சக் கூடாது என்று ஒலித்த குரல் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சி பேசும் அத்தனைப் பேருக்குமான எச்சரிக்கையும் அறைகூவலும் ஆகும். திருவாரூர் மாநாடு பெரியார் பார்வையில் புதிய அணுகுமுறையில் விவசாயிகளைப் பார்த்திருக்கிறது; இனி வழிகாட்டும்.

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பஞ்சகவ்யம் என்றால் பால், தயிர், மாட்டு மூத்திரம் (கோமியம்), சாணி, நெய் இவற்றின் கலவைதானே! இதனைப் பக்தியின் பெயரால் தட்சணை கொடுத்து மனிதன் குடிக்கிறானே- இந்து மதத்தில் என்று நாம் கேள்வி கேட்டால், அதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் தெரியுமா?

பாலில் - சந்திரன்

தயிரில் - வாயு பகவான்

மாட்டு மூத்திரத்தில் - வருணதேவன்

சாணியில் - அக்னி பகவான்

நெய்யில் - சூரிய பகவான் இருப்பதாகக் கதை அளக் கிறார்களே, விஞ்ஞான ரீதியாக இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் சங்கராச் சாரியார் இந்தப் பஞ்ச கவ்யத்தைக் குடிப்பாரா?

சரி, மாட்டு சாணிக்கே இவ்வளவு சக்தி என்றால், மனித சாணிக்கு...?

Read more: http://viduthalai.in/e-paper/82379.html#ixzz352kUnUlB

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!


தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!

தேவிப்பட்டினத்தில் கோயிலில் பெண்ணுக்கு நிர்வாணப் பூஜையாம்!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பது உண்மைதானே!

ராமநாதபுரம், ஜூன் 18_ பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர் வாணப்படுத்தி பாலியல் குறும்புகள் செய்த, தேவி பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய் தனர்.

ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந் தவர் கணேசமூர்த்தி (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். தேவிபட்டினம், நவ பாஷாண கோயிலுக்கு வரு வோரை அணுகி தோஷம் கழிக்கப் பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொப்புள்கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயி லுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக் குள் கணேசமூர்த்தி தனி யாக அழைத்துச் சென் றுள்ளார். பூஜையின்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந் திருந்த அந்தப் பெண் ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது.

இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த பெண்ணை நிர் வாணமாக்கியுள்ளார். சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, பாலியல் குறும்புகளில் ஈடுபட்டுள்ளார். கணேச மூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்குச் சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார்.

தேவிபட்டினத்தைச் சேர்ந்த சுற்றுலா வழி காட்டி கற்பூரசுந்தரம் என் பவர்தான் பரிகார பூஜைக் காக கணேசமூர்த்தியை சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் ணின் உறவினர்கள் கற் பூரசுந்தரத்திடம் தெரிவித் துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேசமூர்த் தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திர மடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமை யாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளார்.

இதையடுத்து கற்பூர சுந்தரம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பெண் களை இரவில் தேவிபட்டி னம் கோயிலுக்கு அழைத் துச் சென்று நிர்வாணப் படுத்தி, பாலியல் குறும்பு கள் செய்து வந்த விவரத் தையும் விரிவாக தெரிவித் துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில் கணேசமூர்த்தியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பெண்களிடம் பாலியல் குறும்புகள் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

எப்போது வரும் தடை?

வெளியூரைச் சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது பாலியல் குறும்புகளை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டு களாகவே பெண் பக்தர் களை குறி வைத்து இந்தப் பரிகார பூஜைகளை செய் துள்ளார்.

இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்யவேண்டும் என்பா ராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற ஏமாற்று மனிதர்கள் ஏராளமா னோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என பொது மக்கள் கடவுளிடம் சொல் லாமல் காவல்துறையினரி டம் கூறியுள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82376.html#ixzz352kgIPCv

தமிழ் ஓவியா said...


அளவுக்கு மீறிய உற்சாகம்


உற்சாகமாக இரு, தைரியமாக இரு என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்துவிடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம். - (குடிஅரசு, 29.9.1945)

Read more: http://www.viduthalai.in/page-2/82385.html#ixzz352pVCGDu

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......பஞ்ச மூலிகை

துளசி - பக்தியை வளர்க்கும்

சங்குப்பூ - பெருஞ்செல்வம் கிட்டும்

விருட்சிப்பூ - நோய் தீர்க்கும்

குவளைப்பூ - குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆவாரம்பூ - கடன் தொல்லை தீரும்

ஓர் ஆன்மீக இதழ் இவ்வாறு கூறுகிறது.

இதனைப் பார்த்தால், அரசு தேவையில்லை, மருத்துவமனை தேவை யில்லை, வாங்கிய கட னைத் தீர்க்க உழைக்கத் தேவையில்லை, மூடத் தனம் + சோம்பேறித்தனம் தான் ஆன்மீகமா?

Read more: http://viduthalai.in/e-paper/82451.html#ixzz358GdpIN9

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள்?


விமர்சனங்கள் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று மதுரை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. மதம் மனி தனை மடையர்களாக ஆக்கிவிட்டதை இன்றைய அறிவுலகம் அடையாளம் காட்டிவிட்டது. இதற்கு விலையாக தனது இன்னு யிர் நல்கியவர்கள் 18 ஆம் நூற்றாண் டின் கலிலியோ, கோபர் நிகஸ் போன் றோர் என்பதை உலகறியும். இருப் பினும் இன்றும் நீதி மன்றங்கள் மத போதனை மனிதனின் மனதை மாய்த் திடும் தண்டனைக்கு உரிய செயலைச் செய்வதாக அறிவித்திட தயங்குகின் றன. இல்லாததை இருப்பதாக நம்பிடச் செய்வதற்கு மடமும் கோயிலும் கொடி யும் கதையும் பொய்யுரையும் சம் பிராதயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கொள்கையில் அகப்பட்டோர் இல்லாததை இல்லை என்று சொல்வதைக் கேட்பது பாவம் என்ற கொள்கையில் வாடுகின்றனர். மனம் புண்படுவதாக நீதி மன்றம் நாடுகின்றனர். நீதிமன்றங்களோ இல்லாததை இருப்பதாக சாதிப்போரது சொல்லும் செயலும் உண்மையின்பால் பற்று கொண்ட மனித மனங்களை புண் படுத்துவதை உணரும் உள்ளமில்லா தவர்களை நீதியாளர்களாகக் கொண் டுள்ளது. அதாவது நாத்திகர் மனது ஆத் திகம் பேசி வேள்வி காத்திடும் கயமை கண்டு கண்கலங்குகிறது. வேள்வி யாத்திடும் பார்ப்பன வித்தகர்கள் என்றும் தங்களது கைப்பணம் செல விட்டு மதத்தினை மதக்கொள்கையை அல்லது கடவுளைக் காப்பதில்லை.

அத்தகைய செயலுக்கு மண்ணின் மைந்தனது பொருளும் வரிப்பணமும் அவர்களது ஏமாற்று வேள்விக்கு அவிஸ் ஆவது கண்டிக்கத் தக்க தன்றோ? இத்தகைய இழி செயலை செய்வதற்கு இந்து மதம் என்ற போர் வையில் கடவுளின் முகத்தில் உதித்த வர்களாகிய பார்ப்பனர்கள் மட்டுமே உரிமை கொண்டவர்கள் என்ற சனா தன தர்மத்தை மண்ணின் மைந்தர்கள் மீது திணிப்பது கண்டிக்கத் தக்க தன்றோ? இதற்கு இந்து மதம் காத்திடும் சாதிக் கொள்கையை உயர்த்திப் பிடித்திட இப்படிப்பட்ட பிராமணாள் காபி கிளப் என்றும் சங்கர மடம் என்றும் ஜன் கல் யாண ஜன் ஜாக்ரத் என்றும் இந்த பார்ப்பனர் கூட்டம் கரவு மனத்தோடு திராவிட இனத்தை வேட்டையாடு வதை என்ன சொல்ல? ஆரிய கலாச் சாரத்தில் திராவிட சமுதாயம் தனது அறிவை அறிதலை இழந்துவிட்டதை யார் அறிவார்? காக்கும் கடவுள் பூணூல் அணிந்து கொண்டால் அது யாரை காப்பாற்றும்? என்ற கேள்வியை வள்ளலார் எழுப்பினார். மனிதனின் கால் மற்றவரின் காலில் தவறாகப் பட்டுவிட்டால் துடிதுடித்து போகிறான். மன்னியுங்கள் என்கிறான். காரணம் மனிதனை மனிதன் மதிப்ப தால் அவனது மனது கொண்ட அன்பு இப்படிப்பட்ட நிலையைத் தருகிறது. ஆனால் பூணூல் அணிந்த நடராசப் பெருமான் திராவிட இனத்தானை தனது காலடியில் போட்டு மிதிப்பதில் இன்பம் கண்டால் அவன் யாருக்கு அருள் தருவான் என்ற கேள்வி இன் றைய திராவிட இனத்திற்கும் இல்லா மல் போனதற்கு வழி வகுப்பது இது போன்ற சாதியப் பிரகடனங்களால் வரும் பயன்பாடன்றோ? மனிதனை காலில் போட்டு மிதித்திடும் சாமி சிலைகளை திராவிடன் கை எடுத்து கும்பிட்டு நிற்பது வேதனையன்றோ? சாதி ஒழிய வேண்டும் என்பது சட்ட மாகியுள்ள நிலையில் பிராமணாள் கிளப் என்று நிறுவனப் பெயர் நாட்டு வது சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து இன்றைய மண்ணின் மைந் தர்களை அசுரர்களாக சூத்திரர்களாக சித்தரித்திட துடித்திடும் சங்கரர்களின் சதிச் செயலன்றோ? எனவே நாத்திகனின் சொல்லும் செயலும் ஆத்திகனது மனத்தைப் பண் படுத்துகிறது என்பது ஒரு மன நோயா ளியின் உணர்வு என்பதை நீதிமன் றங்கள் உணரவேண்டும். உண் மையில் பார்ப்பனர்களின் சொல்லும் செயலும் வேள்வியில் அழி பொரு ளாகும் நெய்யும் பாலும் உடையும் பொருளும் மண்ணின் மைந்தர்களின் உயிர் காத்திடும் உயர் பொருள் என் பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். நீதிமன்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பது தண்டணைக்கு உரிய செயலன்று என்பதை நீதிமன்றங் களுக்கு உணர்த்த வேண்டும்.

காரணம் 2ஜி போன்ற கொள்கை முடிவுகளைக்கூட தண்டனை முறைச் சட்டத்திற்கு உட்படுத்தியது கண்டிக்கத் தக்கச் செயல். அதுபோன்றே இந்து சமய அறநிலையத்தின் துணையோடு ஆகமம் நியதி என்ற பெயரில் அன் றாடம் சிலைகளுக்கு பால் அபிஷே கம், நெய் அபிஷேகம் என்று மனித உயிர் காக்கும் பொருட்களை வீணடிப் பது தண்டனைக்கு உரிய செயல் என் பதை இன்றைய நீதிமன்றங்கள் உணர்ந் திட வேண்டும். வேறு எந்த மதத்திலும் இப்படிப்பட்ட அழி செயல்களை ஆக மம் நியதி என்று மதிப்பது உண்டா? திராவிட இனம் தனிப்பெரும் குணம் கொண்ட சங்கத் தமிழ் இனம். அது இன்று பார்ப்பனர்களது கைப்பாவை யாகி விட்டது. அது இலவசத்திற்கு (ஒரு சில கோடிகளுக்கு) ஏங்கும் திராவிடக் கோழைகளாகிவிட்டது. குனிந்து நின்று கும்பிடு போடும் மந்திரிகளாகிவிட்டது

- கவிஞர் சீனிபழனி, வருமானவரி அதிகாரி (ஓய்வு)
கொளத்தூர், சென்னை-99.

Read more: http://viduthalai.in/page-2/82472.html#ixzz358HcBOkO

தமிழ் ஓவியா said...

இந்திதான் தொடர்பு மொழியா? உள்துறை முடிவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 19-_ தொடர்பு மொழியாக இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய உள்துறையின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-_

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரி மைப்படி வெளியிடப்படும் ஆணை -_ சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு (தி எகானமிக் டைம்ஸ்) 17.-6.-2014 அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-.5-.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாய மாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால், இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “Face Book”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பின் தொடக்கமே!

ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசா ணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப்பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டுமென்றும்; நல்ல நாட்டுப்பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடி மக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது என்றும்; மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை. 4.-3.-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க. வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமானஅடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம் என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

தமிழ் ஓவியா said...

பண்டித நேருவின் வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப் பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம்நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் .இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும்நிலைப்பாடாகும்.

வேண்டாம் அவசரம்!

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப் பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொருளா தார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/82475.html#ixzz358HqGlqU

தமிழ் ஓவியா said...


குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு


சென்னை, ஜூன் 19- குடும்ப அட்டை பெறு வதில் பிரச்சினைகள் ஏதே னும் இருந்தால் அவை குறித்து செல்பேசியில் புகார்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை பெறு வதற்கு விண்ணப்பித்த பிறகு அதன் நிலைமை குறித்து செல்பேசி குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ் சல் மூலம் விண்ணப்ப தாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் அமைச்சர் இரா.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த அலுவ லகங்களில்தான் மக்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நடை பெறுகின்றன.

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர் களுக்கு, 60 நாள்களுக்குள் உரிய ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், மனுக்களை நிராகரிக்கும் போது அவற்றின் விவரங் களை மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப் படுத்த வேண்டும் எனவும், செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண் டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டனர்.

எஸ்.எம்.எஸ்.-மின் னஞ்சல்: விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அல்லது மின்னஞ்சல் மூலமாக தவறாமல் வழங்க வேண் டும். குறிப்பிட்ட காலக்கெ டுவுக்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் வடக்கு அல்லது தெற்கு அல்லது மண்டல உதவி ஆணையர் கள் ஆகியோரின் செல்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகள் அனுப்பியும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறும் தகவல்கள் கிடைக்காவிட்டால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை ஆணையா ளரின் அலுவலக மின்னஞ் சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். அலுவலர் களின் செல் பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் இணையத ளத்தில் அளிக்கப்பட் டுள்ளது.

தொலைபேசி எண்கள்: நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்க ளது புகார்களைத் தெரி விக்க, சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணை யாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆணையாளர் அலுவலகத் தில் செயல் படும் புகார் பிரிவையும், தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஏழு தொலை பேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறுஞ் செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள்:

94454 64748, 72999 98002, 86800 18002, 72000 18001. புகார்களைத் தெரி விக்க தொலைபேசி எண் கள்: 72990 08002, 86800 28003, 72000 48002.

Read more: http://viduthalai.in/page-5/82449.html#ixzz358IgMcX8

தமிழ் ஓவியா said...


இலங்கையில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்

சென்னை, ஜூலை 19- இலங்கையில் இஸ் லாமியர்கள்மீது சிங்களவர்கள் வன்முறை வெறியாட்டம் போடுவதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறு பான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப் பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவ தற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள வெறியர் கள், கடந்த சில நாள்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார் கள். 2012 ஆம் ஆண்டு மியான்மா நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட் டனர்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக வும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் திடீரென வன் முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள். நூற்றிற் கும் மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார் கள்.

மேலும் பள்ளிவாசல்களும், முஸ்லீம் களுக்குச் சொந்தமான வீடுகளும், கடை களும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லுரி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்த வர்கள், அவரைத் தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கல்லுரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

பின்னர் காவலர்கள் வந்து ஒரு மணிநேரத் துக்குப் பின் அவரை மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக் குக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள் ளது. வேறு பல நாடுகளும் கண்டனம் தெரி வித்துள்ளன. தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத் திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.

இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப் படுகொலை நடத்தி முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப் படுகின்ற நிலையில், அவர்களைப் பாது காக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/82483.html#ixzz358JEupLK