Search This Blog

6.6.14

பார்ப்பனரை ஒதுக்குவதுமட்டுமின்றி நாள், நட்சத்திரம் என்று அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்

பார்ப்பனரை ஒதுக்குவதுமட்டுமின்றி நாள், நட்சத்திரம் என்று அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்

சு.கரிகாலன் - ஜெயஞானப்பிரியா இணை ஏற்பு விழா
பார்ப்பனரை ஒதுக்குவதுமட்டுமின்றி நாள், நட்சத்திரம் என்று அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்
விழுப்புரம் சுயமரியாதைத் திருமணவிழாவில் தமிழர் தலைவர்  சிறப்புரை
விழுப்புரம், ஜூன் 3- விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் ப.சுப்பராயன்-விழுப்புரம் மாவட்ட சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் ப.செல்வி இணையரின் மகன் சு.கரிகாலன்-சென்னை ஞானேசுவரி ஜெயராமன் மகள் ஜெயஞானப்பிரியா இணை ஏற்பு விழாவை 1.6.2014 அன்று நடத்திவைத்து தமிழர் தலைவர்  சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்விற்குத் திராவிடர் கழக செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன் வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், விழுப்புரம் நகர திமுக அவைத்தலைவர் இரா.சக்கரை ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சு.கரிகாலன்-ஜெயஞானப்பிரியா வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்திவைத்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

ஜெர்மன் பல்கலை.யில் பேச அழைப்பு

ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கு அன்பான அழைப்புக்கிடையே,  இயக்கக் குடும்பம்,  நம் கொள்கை உறவு  என்பதால் இந்த விழாவில் கலந்துகொள்கிறோம். இந்த மேடையில் இருக்கும் இந்த நிமிடம்வரை சுப்பராயன் என்ன ஜாதி என்று தெரியாது.

சுப்பராயன் பணியாற்றும்போதே பொறுப்பில் இருந்தார். திராவிடர்கழகத் தோழர்கள் கடமை தவறாதவர்கள். அதிக கட்டுப்பாடு, ஒழுக்கம் நிறைந்தவர்கள். நாங்கள்கூட மாணவப் பருவத்தில் பார்ப்பன ஆசிரியர்கள் இருக்கும்போதுகூட எங்கள் அடையாளத்தை மறைக்காமல் வெளிப்படுத்தினோம். மணமகன் பெயர் கரிகாலன். தமிழ்ப்பெயர். நம்முடைய நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள், பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாம்களில் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகளின் பெயர்கள் தமிழில் இல்லாமல் இருப்பதைக் காணலாம். பிஞ்சுகளிடம் தாத்தா என்ற உரிமையில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

இராஜராஜனைப்போல் பார்ப்பன அடிமை வேறு எவரும் இல்லை

சோழர்கள் வரலாற்றில் உருப்படியான செயலை செய்தவன் கரிகாலன். இராஜஇராஜசோழன் போன்ற பார்ப்பன அடிமை வேறு எவரும் இல்லை.
மாட்டு சிலைக்கு வாழைப்பழத்தை பூசி, அது வளர்கிறது என்கிறார்கள்.
கற்சிலை வளருமா? சிற்பம் என்று பாராட்டும்படி இருக்கிறது எனலாமே ஒழிய வளருமா? தாசிமுறை என்பதை ஏற்படுத்தி பார்ப்பனர்களுக்கு நிலங்களை கொடுத்தது இராஜஇராஜன். ஆனால், கரிகாலன் கல்லணை கட்டியதால் விவசாயம் பயன்பெற்றுள்ளது.

முதல் தலைமுறையாக படித்தவரான, சுப்பராயன் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்துள்ளார். மணமகள் எம்.இ. படித்துள்ளார். படித்துவிட்டு மத்திய அரசுப்பணிக்கு,  அமெரிக்காவுக்கு செல்லும் நிலையும் உண்டு. சமுதாய மாற்றம் எதிர்நீச்சலானது

சமுதாயத்தில் மாற்றம் என்னும்போது அரசியல் மாற்றம் அடிக்கடி மாறிவிடும். எதிர்நீச்சலானது சமுதாய மாற்றம்தான். சுபமுகூர்த்தம், விவாக சுப முகூர்த்தம், தாரா முகூர்த்தம் இதெல்லாம் மாறி இப்போது வாழ்க்கை இணை நல ஏற்பு விழா என்கிறோம். சூது, அரசியல் இரண்டும் ஒன்றுதான். ஆசை, விட்டதைப்பிடிக்கும் ஆசை உள்ளதாகும். அய்ந்தில் ஒரு பங்கு மட்டுமே உரிமை உள்ள தருமன் துரோபதையை முழுமையாக சூதாட்டத்தில் வைத்து தோற்கிறான். அதிலேயே நியாயம் இல்லை. பெண்ணை பொருளாக வைத்து சூதாடுகிறான். மனித ஜீவனாக நினைக்கவில்லை. கிருஷ்ணன் அப்படியே சேலை கொடுத்துக்கொண்டே இருந்தான் என்றால் இப்போது எங்கே போனான்? இராமன், சீதையை வணங்குபவர்களில் யாராவது சந்தேகம் என்று சொல்லி தீயில் இறங்க சொன்னால் ஏற்பார்களா?  உடல் உறுப்புகள்போல் ஆண் பெண் சமமாக இருக்க வேண்டும்.

மூளை விலங்கை உடைக்கும் சம்மட்டி பெரியார் கொள்கை

சுயமரியாதை திருமணம் செய்வதில் குறிப்பாக மணமகள் இல்லத்தார் பாராட்டுக்குரியவர்கள். சென்னை நகரில் உள்ளதுபோல நெடுஞ்சாலையில்கூட போக்குவரத்து நெரிசல். காரணம் முகூர்த்த நாள் என்கிறார்கள். மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாள் என்று சொல்லிவிட்டு மார்கழியை ஒதுக்கலாமா? மாதங்களில் மார்கழி என்று பாடவில்லையா?  பார்ப்பனர்கள் மார்கழி, ஆடி மாதங்களில் அவர்கள் விழாவை வைத்துக்கொள்கிறார்கள்.


அந்த நாட்களில்  அவர்களுக்கும் பிழைப்பு கெடாது என்று அவர்களுடைய வேலைகளை செய்துகொள்கிறார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்றுதானே கூறுகிறோம். மூளையில் இருக்கும் விலங்கை உடைக்கும் சம்மட்டியாக பெரியார் கொள்கைகள் உள்ளன. பார்ப்பனரை ஒதுக்குவதுமட்டுமின்றி நாள், நட்சத்திரம் என்று அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். வடநாட்டில் இரவில் திருமணம் செய்கிறார்கள்.

சிக்கனம் கடைபிடிக்கும்போது முன்னேற்றம் ஏற்படும். எளிமை இருக்க வேண்டும்.  பிறருக்கு உதவுதல் வேண்டும். பிறருக்கு உதவுவதில்தான் இன்பம். பெரியார் சொல்வார்கள், இல்லறம்  தொண்டறமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவருக்கு விட்டுக்கொடுத்துப் பழகுங்கள்.
பேரறிஞர் அண்ணா சொல்வார்கள் விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை இப்போதுள்ள பிள்ளைகள் நன்கு படித்துவிட்டு நிறைய சம்பாதிக்கிறீர்கள்.

அந்த வளர்ச்சிக்கு காரணமான பெற்றோரிடம் அன்பு, பாசம், மரியாதை,நட்பு செலுத்துங்கள். பிறருக்கு உதவுங்கள்.

தந்தை பெரியாரால் இந்த சுயமரியாதை திருமண முறை கொண்டுவரப்பட்டது.திமுக அரசில் 1967இல் அண்ணா சட்டப்படி செல்லும் என்று சட்டம்போட்டு, அந்த அரசையே பெரியாருக்குக் காணிக்கை ஆக்கினார். தலைவர்களின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். -இவ்வாறு தமிழர் தலைவர் உரைஆற்றினார்.
                            ------------------------"விடுதலை” 3-6-2014

27 comments:

தமிழ் ஓவியா said...


பூனாவில் நடந்தது என்ன!


பூனா, ஜுன் 5- வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார்.

இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது. சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிரோதிகள் வாகனங்கள்மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.

130 அரசு பேருந்துகள், 21 தனியார் வாகனங்கள் சேதமாயின. மேலும், ஒரு பேருந்து, டெம்போ, மோட்டர் பைக் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. எதிர்ப்பா ளர்கள் இந்த கலவரத்தில் வகுப்பு பேதங்களையும் காட்டி, மதத்துக்குரிய இடங்களையும் தாக்கிக் கலவரங்களில் ஈடுபட்டனர். போப்கெல் பகுதிக்கு அருகில் உள்ள கணேஷ்நகர், போசாரியில் உள்ள லேந்தவாடி, லோஹோகான், ஹடாப்சார் பகுதியை அடுத்த சையத் நகர் மற்றும் புர்சங்கி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவாக காவிக்கொடிகளுடன் மோட் டர் பைக்குகளில் ஊர்வலமாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியவாறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். கடை களை அடைக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது, அமெரிக்காவிலிருந்து இயங்கக்கூடிய சமூக வலை தளத்தி லிருந்து பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்றுமாறு கோரினர். அதே பதிவுகள் மற்றொரு சமூக வலைதளத்திலும் 1-6-2014அன்று பதிவாகி உள்ளது. பின் அகற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...

காவல்துறை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சஞ்சய் குமார் கூறும்போது, முதற்கட்டமாக பலமணிநேரத்துக்குப்பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. முகநூலில் பிரச்சினைக்குரிய பதிவு இடப்பட்டுள்ளதை விசாரணை செய்து வருகிறோம்.

117 பேர் கைது!

1-6-2014 அன்று மாலையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்காண தொடர்ந்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகி றோம். வன்முறைச்சம்பவங்கள் 52 இடங்களில் நடைபெற்றுள்ளன. 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் சேதத்தில் போசாரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. நூர் மொஹல்லாஹ் பகுதியில் 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இருசக்கர வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295-ஏவின் கீழ்(பிரிவினைவாதம் மற்றும் தீங்கி ழைத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதம் மற்றும் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத் தின்கீழும் கோத்ருட் மற்றும் ஹிஞ் ஜெவாடி காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாதவர்கள்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தர்மவீர் சிறீ சாம்பாஜி மகராஜ் என்கிற பெயரில் முகநூலில் சனிக் கிழமை (31-5-2014) இரவு சத்ரபதி சிவாஜி, பால் தாக்கரே, கணேஷ் கடவுள் (வினாயகன் படம்) மற்றும் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆகிய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் பதிவிடப் பட்டுள்ளன. அதனால், உடனடியாக எதிர்வினைகள் ஏற்பட்டு, காவல்துறை யிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சாபேகர் சவ்க் பகுதியில் இரவு 9.30 மணிக்கு 12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாட்ஸ் அப் எனும் இணைய இயங்குதளம்மூலமாக காட்டுத்தீயாக முகநூல் பதிவு பரவியது. வதந்தி பரப்புவர்களும் பதட்டத்தை ஏற்படுத்தும்வகையில் உண்மைக்கு மாறானவற்றை பரப்பினர்.

அதிகாலை 2 மணிவரையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று காவல்துறையின் உயர் அதிகாரி கூறுகிறார். பாதிப்புக் குள்ளான பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட் டனர். கலவர தடுப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் தலைமையகத்திலிருந்து மேன்மேலும் ஆயிரக்கணக்கிலான காவல் படைகள் குவிக்கப்பட்டன.

தமிழ் ஓவியா said...

1-6-2014 அன்று கலவரங்களில், கல்வீச்சில் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருந்தாலும், 12பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு சாசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

முகநூலில் பதியவிட்டவர் கடுமை யாகத் தாக்கப்பட்டதால் சுயநினை விழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ளார். சாசூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மாஷ்கே கூறும்போது, அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் தீவிர மாக அவர்நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.

- பூனா மிர்ரர், 2-6-2014இந்த கேலிச் சித்திரங்களை வெளி யிட்டது யார் என்று உறுதி செய்யப் படாத தொடக்க நிலையிலேயே குறிப்பிட்ட சிறுபான்மையினர் தான் இதனைச் செய்துள்ளனர் என்று புரளி யைக் கிளப்பி மென்பொருள் நிறுவ னத்தில் பணியாற்றிய பொறியாளர் கொல்லப்பட்டுள்ளார்!

அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் மாநிலங்களில் இதே பாணி தொடரப் படலாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/81585.html#ixzz33ojjKhEB

தமிழ் ஓவியா said...


அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்


- குடந்தை கருணா

முக நூலில் மராட்டிய மன்னன் சிவாஜி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குறித்து கேலி செய்து சித்திரங்கள் வெளிவந்ததை எதிர்த்து, புனேயில், சிவசேனா மற்றும் ஹிந்து ராஷ்டிர சேனா என்கிற அமைப்பும் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை யில் கல் எறிந்து கலவரம் செய்ததில் 250 பேருந்துகள் நொறுக்கப்பட்டன; மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர். காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முகநூல் செய்தியை வெளியிட்டது யார் என ஆரம்பத்தில் தெரியாத நிலையில், குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் தான் என திட்டமிட்டு, மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர், ஹிந்து ராஷ்டிரா சேனா எனும் வன்முறைக் கும்பலால் தாக் கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

சமூகக் கலவரம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த முக நூல் பதிவே நடந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை கருத்து கூறி உள்ளது. இந்த முகநூல் 2013-இல் துவக்கப் பட்டுள்ளது.

பொய்யான முகவரியை உருவாக்கி, ஆரம்பத்தில், பொது வான செய்திகளை வெளியிட்டு, பலரையும் விருப்பம் உடையவர் களாக ஆக்கி, இறுதியாக, இந்த பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்றுதான், உத்தரபிரதே சத்தில், பொதுத்தேர்தல் நடைபெறு வதற்கு சில மாதங்களுக்கு முன், முசாபர்நகர் கலவரம் உருவாக்கப் பட்டது; போலியான வீடியோ தயாரிக்கப்பட்டு, அதில் இரு சிறு வர்களை, ஒரு வன்முறைக் கும்பல் அடிப்பது போன்று தயாரித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்; கலவரம் உரு வாயிற்று. உண்மை என்னவென்றால் அந்த வீடியோ காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ் தானில் நடைபெற்ற ஒரு கலவரத்தின் வீடியோ என பின்னர் தெரிந்தது. ஆனால், அதற்குள், கலவரம் நடை பெற்று, சிறுபான்மையினர், வீட்டை துறந்து, முகாம்களில் தங்கினர்; வாக்கு அறுவடையை யார் பெற் றனர் என அனைவருக்கும் தெரியும்.

அஸ்ஸாமிலும், மியான்மரிலும், இஸ்லாமியர்கள் மீதான தாக் குதலைக் கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில், ஆகஸ்டு, 2012-இல் நடத்தப்பட்ட பேரணி, கலவரமாக மாறியது. இருவர் இறந்தனர். இதன் காரணமாக, தாங்கள் தாக்கப்படு வோம் என பயந்து, தென்னிந்தியா வில், குறிப்பாக, கர்நாடகாவில் வேலை பார்த்து வந்த வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து, ஆயிரக்கணக்கில் அஸ்ஸா மிற்கும், பிற பகுதிக்கும் சென்றனர். தற்போது, பொதுத் தேர்தலில், முதல் முறையாக பாஜக, அஸ்ஸாமில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற் றுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மகாராஷ்டிரா மாநிலத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகளை, சங் பரிவார் தொடங்கிவிட்டது. இதன் பாதிப்பு, அடுத்து, பீகார், ஜம்மு காஷ்மீர் என தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக் கும் செல்லும் என்பது உறுதி.

அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்.

எது திட்டமிட்டு நடந்ததோ, அது நன்றாகவே திட்டமிட்டு நடந்தது.

எது திட்டமிடப்பட்டு நடக்கி றதோ, அது நன்றாகவே, திட்ட மிடப்பட்டு நடக்கிறது.

எது திட்டமிடப்பட்டு நடக்க இருக்கிறதோ, அதுவும், திட்டமிடப் பட்டு நன்றாகவே நடக்கும் - எச்சரிக்கை.

Read more: http://viduthalai.in/page-2/81592.html#ixzz33okBUdAw

தமிழ் ஓவியா said...

வெள்ளியாக மாறப்போகும் பூமி


சூன் 5: உலகச் சுற்றுச்சூழல் தினம்

வெள்ளியாக
மாறப்போகும் பூமி


வெள்ளி - ஆங்கிலத்தில் வீனஸ் என்று அழைக் கப்படும் கோள் ஒன்று சூரியனுக்கு அடுத்த இரண்டா வது இடத்தில் உள்ளது. சுமார் 300 கோடி ஆண்டுக ளுக்கு முன்பு நமது பூமியைப்போன்றே இக்கோளும் மிகவும் அழகான நீலக்கடல் சூழ்ந்த ஒரு கோள்தான். அதன் வெப்பநிலை கிட்டத்தட்ட பூமியைப்போன்று இருந்தது. பூமியில் உள்ளது போலவே பெரிய மலைத்தொடர்கள் இருந்ததன.

இதனடிப்படையில் அங்கு பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். அப்படி ஏற்பட்டிருந்தால் அங்கு மழை பெய்யவாய்ப்பிருந்திருக்கும், மழை பெய்து இருந்தால் அங்கு பசும்புல், செடிகொடிகள், மரங்கள் அடர்ந்த அடங்கிய வனம் இருந்திருக்கும்., வனங்கள் இருந்து இருக்கும் என்றால் கட்டாயம் அங்கு உயிரினம் இருந்திருக்கவேண்டும். உயிரினம் என்றால் மனிதனும் இருந்திருக்க வாய்ப்புண்டு. நமக்கு இதற்கான முழுமையான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் உண்மை. அதாவது! வெள்ளிக்கோள் ஒரு காலத்தில் பூமியை போன்றே அழகிய உயிரோட்டம் நிறைந்த கோளாக இருந்திருக்கிறது!

புவியின் குணத்தை ஒத்து இருப்பதாலோ என்னவே நாம் வெள்ளிக்கோளை புவியின் தங்கை என்று அழைக்கிறோம்.

வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் லோபடே சமவெளியும் 70 சதவீதம் எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவுக் கொண்ட வடக்குக் கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான எஸ்தரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்கு கண்டம் அப்ரோடைட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நமது பூமிக்கு இணையான கண்டங்கள் அங்கு இருந்தது, என்று நமக்கு தெரிகிறது. ஆனால் என்ன ஆயிற்று? வெள்ளி கோள் இன்று எரிமலைக்கடல்கள் நிறைந்த கொடூரமான கோளாக ஏன் மாறியது. காரணம் இதுதான் அங்கு மனிதர்கள் வாழ்ந்தார்களா இல்லையா என்று உறுதிபடக்கூற முடியவில்லை, அதே நேரத்தில் வாழவில்லை என்றும் கூறவாய்ப்பில்லை.

தமிழ் ஓவியா said...

அது ஆய்விற்குரியது. ஆனால் இன்று நாம் சுற்றுப்புறச்சூழலை எந்த அளவிற்கு நாசமாக்கிக்கொண்டு இருக்கிறோம் தெரியுமா? இதே நிலை இன்னும் 100 வருடம் தொடர்ந்தால் வெள்ளியைப்போல் நமது பூமியும் எரிமலைகடல்கள் நிறைந்த ஒரு கோளாகி விடும் அதற்கு முன்பு மனித இனம் மாத்திரம் அல்ல, இந்த பூமியின் அனைத்து உயிரினமும் அதனுடன் சேர்ந்து இந்த பூமியும் செத்துப்போகும். பூமியைப்போன்ற தோற்றம் கொண்ட வெள்ளி ஏன் இந்த நிலைக்கு மாறிவிட்டது? ஏதோ ஒரு காரணத்தினால் வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் கார்பன் டை ஆக்ஸைடு என்னும் கரிம வாயு சிறிது சிறிதாக சேரத்துவங்கியது. ஆம் இது இன்று நாம் நமது வசதிக்காக பயன்படுத்தும் நவீன உபகரணங்களின் மூலம் எண்ணற்ற கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தில் வெளிவிடுகிறோமே, அதே கார்பன் டை ஆக்ஸைடு ஆக்ஸைடு தான் வெள்ளியின் மேற் பரப்பில் மெல்ல மெல்லப் பரவியது. சரி கார்பன் டை ஆக்ஸைடு கோள்களின் மேற் பரப்பில் பரவுவதால் என்ன பாதிப்பு? சூரியனிட மிருந்து வரும் வெப்பத்தை காற்று மண்டலத்தில் உள்ள ஓசோன் மற்றும் இதர வாயுக்கள் மீண்டும் வானவெளியில் திருப்பி விட்டு விடுகின்றன. இதனால் நமது பூமி இதுநாள் வரை வெப்பமில்லாமல் இருந்தது. இதே போல் தான் வெள்ளியிலும் ஒரு காலத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் மற்றும் இதர வாயுக்கள் பெருகி இருந்தது. ஆனால் அவை அனைத்தையும் விழுங்கிவிட்டு கார்பன் டை ஆக்ஸைடு அந்த இடத்தை பிடித்துவிட்டது. இதன் காரணமாக சூரிய வெப்பத்தை தனக்குள் வாங்கி வெளியே விடாமல் வெள்ளியின் தரைத்தளத்திற்கு தொடர்ந்து அனுப்ப அனுப்ப மெல்ல மெல்ல கடல் நீர் ஆவியாகிவிட்டது. தொடர்ந்து வந்த வெப்பத்தின் காரணமாக வெள்ளி யின் தரைப்பரப்பு உருகத்துவங்கியது. அதுதான் இன்று நாம் காணும் வெள்ளி. இன்று நமது பூமியின் நாமும் கட்டுப்பாடில்லாமல் கார்பன் டை ஆக்ஸைடை தொழிற்ச்சாலை இதர நவீன உபகரணங்கள் தயாரிப்பின் மூலம் வெளி யேற்றிக்கொண்டு இருக்கிறோம். இதன் விளைவாக நமது பூமி மெல்ல மெல்ல சூடேறிக்கொண்டு இருக்கிறது, இன்னும் 50 ஆண்டுகளில் தாய்லாந்தில் உள்ளதீவுகள், மாலத்தீவு, இந்தோனேசியாவில் உள்ள தீவுகள் மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகள் கடலுக்கு அடியில் மூழ்விடும். பூமியின் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் தற்போது நமது கற்பனைக்கும் எட்டாத அளவில் உருகத்துவங்கிவிட்டது. இது தொடர்ந்தால் பூமியின் பருவநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் ஆரம்பத்தில் கடுமையான் புயல் வெள்ளம் மழை போன்றவற்றை உருவாக்கும். அதன் பிறகு மெல்ல கடுமையான வரட்சியை கொடுத்து பிறகு புல் பூண்டுகூட முளைக்க இயலாத தரைத்தளத்தை உருவாக்கி விடும். இறுதியில் வெள்ளிக்கோள் போன்று எரிமலை கடல்கள் நிறைந்த ஒரு கோளாக பூமி மாறிவிடும். இது பயமுறுத்தும் கட்டுரையல்ல, உண்மையான ஒன்று இந்த பெருவெளியில்(பிரபஞ்சத்தில்) இதுவரை நம்மைப்போன்ற அறிவார்ந்த உயிரிணம் வாழ்வ தற்கான அடையாளம் நமக்குத்தெரியவில்லை. ஆகையால் தற்போது இந்தப் மிகப்பெரிய பெருவெளியில் நாம் மாத்திரம் தான் அறிவுள்ள உயிரிணம் என்று பெருமிதம் கொள்ளலாம். நமது அறிவைப்பயண்படுத்தி பூமி வெப்பமாவதைக் தடுப்போம்.

இல்லை யென்றால் வெள்ளியைப்போன்ற கொடுநெருப்பு சூழ்ந்த ஒரு கோளாக பூமி மாறுவதை நாம் தடுக்க முடியாது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page-4/81617.html#ixzz33okrGmzc

தமிழ் ஓவியா said...

தெரியுமா உங்களுக்கு?

வெள்ளி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன் உச்சப்பிரகாசத்தை அடைகிறது. இதனால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தை கொண்ட கோள் வெள்ளியாகும்.

இது அதிகரித்த பச்சை வீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையை கொண்டுள்ளது. இது புவியை போல கற்கோளத்தை கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டதட்ட புவியினுடையதை ஒத்து போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம் 12092 கீலோ மீட்டர் நீளத்தை கொண்டது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது.

சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் 3 ஆக சுருங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் பார்ப்பதற்கு பிரகாசமாக இருப்பதுடன் சூரியனும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.

வெள்ளி கோள் பரப்பின் சூழல் தற்போது மனிதன் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளி கோள் பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் மேல் உள்ள வளிமண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரஜனை பெற்றுள்ளது.

அதனால் வெள்ளியின் வானில் மனிதர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது. காற்றினும் எடை குறைந்து மிதக்கும் நகரங்களை உருவாக்கி அதில் நிரந்தர குடியேற்றங்களை அமைக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33olXkJsj

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கோளில் இமயமலையை விட 2 மடங்கு பெரிய எரிமலை


செவ்வாய் கோளில் ஏராளமான எரிமலைகள் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய எரிமலை ஒன்று செவ்வாய் கோளின் வடபகுதியில் இருப்பதை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த எரிமலை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட 2 மடங்கு பெரிதானது என்று அவர்கள் கூறியுள்ளனர். நமது சூரிய குடும்பத்திலேயே இதுதான் பெரிய எரிமலையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலை இருக்கும் பகுதியை சுற்றி முழுவதும் எரிமலை சாம்பல் குழம்புகள் நிரம்பி இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33oldWFnr

தமிழ் ஓவியா said...

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் சாவுவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி

தாராபுரம் அருகே பேருந்துமீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் இறந்தனர். கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது நடந்த இந்த விபத்து சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள பகலையூரை சேர்ந்த ராமசாமியின் மகன் தனபால் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி(21). இவர்களுடைய 4 மாத குழந் தைக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று பெயர் சூட்ட திட்டமிட்டனர்.

இதற்காக கடந்த ஒன்றாம் தேதி பகலையூரில் இருந்து தனபால் தனது மனைவி அபிராமி (21), அம்மா சாந்தா (55) மற்றும் அண்ணன் திருமூர்த்தி (35), அண்ணி சிவசங்கரி (25), அண்ணன் மகள் ஹரிணி (7), சித்தி மகன் சந்தோஷ் (17) ஆகியோருடன் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டு சென்றனராம்.

அந்த வேனை ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய கவுண்டன் வலசு முல்லை நகரை சேர்ந்த தனக்கொடி யின் மகன் வெள்ளியங்கிரி(25) ஓட்டிச் சென்றார். திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற அவர்கள் அங்கு தனபாலின் 4 மாத குழந்தைக்கு ஹரீஷ் என பெயர் சூட்டி னார்கள்.

பின்னர் அவர்கள் இரவு திருச்செந்தூரில் இருந்து வேனில் புறப்பட்டு பகலையூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் மோட்டல் அருகே வேன் வந்தது. அப்போது திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை செங்கோட்டையைச் சேர்ந்த வேலுசாமி (45) ஓட்டினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த வேன் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் வேன் பேருந்தின் அடிப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்தவர் கள் அலறினார்கள். பேருந்தில் இருந்து இறங்கிய பய ணிகள் வேனில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய வர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். பேருந்துக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டதால் யாரையும் வெளியே எடுக்க முடியவில்லை. பின்னர் கிரேன் எந்திரம் மூலம் வேனை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். அப் போது வேன் அப்பளம் போல் நொறுங்கி இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்களை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வேனின் கதவுகளை இரும்பு கம்பி மூலம் பெயர்த்து எடுத்து அதன்பிறகு வேனுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் அடைந்ததால் தனபால், குழந்தை ஹரீஷ், சாந்தா, சந்தோஷ் மற்றும் ஓட்டுநர் வெள்ளியங்கிரி ஆகிய 5 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ் பழனியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்க சேர்ந்து இருந்தான்.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருமூர்த்தி, அபிராமி, ஹரிணி மற்றும் சிவசங்கரி ஆகி யோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதில் ஓட்டுநர் வெள்ளியங்கிரி தவிர மற்ற 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயம் அடைந்த அபிராமி, ஹரிணி, சிவசங்கரி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olyVW2a

தமிழ் ஓவியா said...

பொம்மிடி அருகே இரு சக்கர வாகனம்மீது காட்டுப்பன்றி மோதி கோவில் புரோகிதர் சாவுதருமபுரியில் இரு சக்கர வாகனம்மீது காட்டுப் பன்றி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கோவில் புரோகிதர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கொண்ட காரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60) கோவிலில் புரோகிதராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை புது வீடு திறப்பு விழாவிற்காக ராமமூர்த்தியை பொம்மிடியிலிருந்து முத்தம்பட்டிக்கு வீட்டு உரிமையாளர்களான நஞ்சப்பன், பழனி ஆகி யோர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மங்கலம் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும்போது காட்டுப்பன்றிக் கூட்டம் சாலையின் குறுக்கே வேகமாக வந்ததாம்.

காட்டுப்பன்றிக் கூட்டத்தின்மீது மோதாமல் இருக்க, இரு சக்கர வண்டியை திருப்பிச் செலுத்தி யுள்ளனர்.

மூர்க்கமாக இருந்த பன்றிக் கூட்டம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மூவரையும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாம்.

இதில் படுகாயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் கோவில் அர்ச்சகர் புரோகிதர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.

பன்றி மோதி உயிரிழந்த கோவில் அர்ச்சகப் புரோகிதரை கடவுள் காப்பாற்றவில்லையே என அனைவரும் புலம்பிக் கொண்டே சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33omBAfuI

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

இன்று உலகு சுற்றுச் சூழல் நாள். (ஜூன் 5). அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் உட்பட பகிரங் கமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறதே இது எப்படி!?

Read more: http://viduthalai.in/e-paper/81577.html#ixzz33omTQ43t

தமிழ் ஓவியா said...


கடவுள் அப்பீல் தள்ளுபடி


கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ublZC4K

தமிழ் ஓவியா said...


பள்ளியில் நடந்த கதை


நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறி னாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33uc9PEHv

தமிழ் ஓவியா said...விதி விதி என்று கூறி வீண்பொழுது கழிப்பார்கள், கேவல மான அடிமை உள் ளம் உடையவர்கள். முயற்சி செய்: முனைந்து உழை; ஓயாது பணியாற்று; வெற்றி நிச்சயம்.

-எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucGWplp

தமிழ் ஓவியா said...

சர்க்கார் ஆட்சேபிக்காது!

ராமாயணம் வெறும் கட்டுக்கதை - பொய்: ராமன் கடவுள் அல்ல என்றெல்லாம் எவர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் தடையில்லை..

நம் நாட்டில் தொன்று தொட்டு மத சம்பந்தமாக எவ்வளவோ வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஒப்புக் கொண்டவர் சிலர்; ஆட்சேபித்தவர்கள் சிலர்; அதனால் மதத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை சர்க்கார் ஆட்சேபிக்க வில்லை.

- நிதி அமைச்சர், 9-12-1954, (சென்னை சட்டசபையில்)

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucRTXkF

தமிழ் ஓவியா said...


விசித்திரமான நம்பிக்கை!


மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81640.html#ixzz33ucYqBOn

தமிழ் ஓவியா said...

அடடே!

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை வைத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரபல கேரள ஜோதிடர் கூறியுள்ளாராம்; அப்புறம் என்ன அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான்.

எச்சரிக்கை!

நொறுக்குத் தீனிகளை சதா தின்று கொண்டே இருக்க குழந்தைகளை அனுமதியாதீர். அதுபோல மென் பானங்களைக் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்காதீர்!

இதனால் சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நாம் செயல்படுவோம்! என்ற இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81647.html#ixzz33ucqf5hW

தமிழ் ஓவியா said...


சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதா?

பிரதமராக ஆவதற்கு முன்னதாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற நரேந்திரமோடி அவர்கள் வங்காளத்துத் தேசத்தில் இருந்து இங்கே வந்துள்ளவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்; காளியை வழிபடாதவர்களுக்கு இங்கு வேலையில்லை என்று பேசினார்.

இப்பொழுது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில் அஸ்ஸாமில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. எம்.பி.க்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் தன்மையில் வங்காளத்திலிருந்து இங்கு ஊடுருவியவர்கள் உடனே வெளியேறிட வேண்டும்; 15 நாட்கள்தான் கெடு! என்று கூறியுள்ளனர். வீட்டுக்கு வீடு வந்து சோதிப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை என்பது ஒன்று; அந்தச் சட்டத்தையே கையில் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்வது என்பது வேறு.

நியாயமான பிரச்சினையாக இருந்தால்கூட அதனை நேரிடையாகத் தீர்வு காண்பது என்ற முறையில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள எந்தக் குடிமகனுக்கும் உரிமை கிடையாது. அப்படி அவரவர்களும் சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம் பித்தால் அங்கு ஆட்சி இருக்காது - அராஜகம்தான் தாண்டவமாடும்.

பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதுபற்றி ஆச்சரியம் ஏற்படாது. காரணம் வன்முறை என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும் - அவ்வாறே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் - தயாரிக்கப் படுகிறார்கள்.

தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் தொகாடியா என்ன பேசினார்? குஜராத்தில் பாவ்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற பகுதிகள் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும்.

அத்தகைய இடத்தில் இங்கு சில இஸ்லாமியர் குடும்பங்கள் குடியிருப்பது தெரிய வருகிறது. 48 மணி நேரத்துக்குள் இவர்கள் வீடுகளைக் காலி செய்யா விட்டால், கற்களையும் டயர்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். டயர்களைக் கொளுத்தி முஸ்லிம்களின் வீடுகள் மீதும், வியாபார நிறுவனங்கள் மீதும் தூக்கி எறிய வேண்டும்; கற்களை வீச வேண்டும் என்று பேசிடவில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.4.2014 பக்கம் 9).

மகாராட்டிரத்தில்என்ன நடந்தது? மகாராட்டிரத்தில் குடியேறியிருக்கும் பிகாரிகள் வெளியேறிட வேண்டும் என்று சிவசேனா கூறவில்லையா? இந்தியாவுக் குள்ளேயே வெளி மாநிலத்தவர் எங்கள் மாநிலத் திற்குள் நுழைய கூடாது என்பவர்கள் வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் சும்மா விடுவார்களா?

பி.ஜே.பி. 16ஆம் மக்களவை தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடர் ஏற்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக பி.ஜே.பி. அரசு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதே!

வெளி நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் அல்லாத முசுலிம்கள் இல்லையா? கிறித்தவர்கள் இல்லையா?

எடுத்துக்காட்டாக இந்தியாவைச் சேர்ந்த முசுலிம் கள் சிங்கப்பூர், மலேசிய, துபாய் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் பணி நிமித்தம் சென்றுள்ளார்களே - அவர்களுக்கு இடையூறுகள் என்றால் மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுமா?

பி.ஜே.பி. தேர்தலில் வென்று விட்டது என்ப தாலேயே அதன் இந்துத்துவா கொள்கைகளை அரசின் கொள்கையாக மாற்ற முடியுமா? வீட்டில்தான் அமைச்சர்கள் இந்துக்களே தவிர, வெளியில் வந்தால் அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி மதச் சார்பற்றவர்கள்தானே.

அரசுக்கு மதம் கிடையாது என்றுதான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. அப்படி இருக்கும் பொழுது தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி. எப்படி அப்படியொரு உறுதிமொழியைக் கூறுவது சரியாக இருக்க முடியும்?

தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றிருந்தால் அப்பொழுதே கூட இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

ஆட்சிவேறு, கட்சி வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல், மத்திய அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தினால் தேவையில்லாத வகையில் சட்டச் சிக்கல் ஏற்படும். அதனால் ஆட்சிக்கேகூட இடையூறு ஏற்படலாம். ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்பட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/81652.html#ixzz33ud6FBdW

தமிழ் ஓவியா said...


மனித நேயம் மரித்துவிட்டதா?


நவிமும்பை ஜூன் 6 நவிமும்பை யில் உள்ள கலம்போலியில் இருந்து டோம்பிலிவிக்கு மகராஷ்டிரா மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது, அந்தப்பேருந்தில் சோனாலிப் பாட்டில் என்ற பெண் நடத்துநர் வழிநடத்திக்கொண்டு வந்தார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக நெரிசல் இல்லாமல் இருந்தது. அப்போது மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆலைத்தொழிலாளி பேருந்தில் ஏறி வாசலிலேயே நின்று இருக்கிறார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக பேர் ஏறுவார்கள் ஆகையால் அந்த நபரை சோனாலி பாட்டில் படிகட்டின் மீது நிற்காமல் மேலே ஏறக்கூறினார். பல முறைகூறியும் மேலே ஏறாமல் இருக்கவே அவரைக் கண்டித்தார். உடனே கோபமடைந்த அந்த நபர் பெண் நடத்துநர் என்றும் பாராமல் அவரைத் தாக்கத் தொடங்கினார். இது அத்தனையும் அந்த பேருந்தின் பல பயணிகள் முன்பு நடந்துகொண்டு இருந்தது, இதனிடையே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், அந்த நடத்துநரைக் பேருந்தை விட்டு கீழே தள்ளி அவரது ஆடையை கிழித்து உதைத்துள்ளார். பேருந்தை நிறுத்தி விட்டு காப்பாற்றச்சென்ற ஓட்டுநரை யும் பொதுமக்கள் அருகில் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். சம்பவம் நடந்துகொண்டு இருந்த போது மற் றோரு அரசுப்பேருந்தும் அந்த இடத் தைக் கடந்து சென்றது.

இந்த நிலையில் நடத்துநர் அருகில் சென்ற வேறு ஒரு அரசுப் பேருந்தை நிறுத்தி சம்பவத்தைக் கூறியதும், அந்த பேருந்தின் ஓட்டுநரும் பெண் நடத்துநரும் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தனர். பிறகு அவரை டோம்பிலி மான் பாடா காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர். தாக்குதலுக்கு இலக்கான பெண் நடத்துநர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அந்த பெண் நடத்து நர் முதலுதவிக்குப் பிறகு மருத்துவ மனையில் இருந்து வீடு சென்று விட் டார். அபிசேக் சிங் மீது இபிகோ 353 பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி யது, இபிகோ 323 கொலைமுயற்சி, இபிகோ 506 மற்றும் 427 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம், கல்யாண் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றக்காவலில் வைக்க ஆணையிட்டார் இதன் படி அவர் கல்யாணில் உள்ள அந்தர்வாடி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 பேருந்து பயணிகள் முன் பாக ஒரு பெண் நடத்துநர் தாக்கப்பட்ட போதும் யாரும் தடுக்க முன்வராதது நாட்டில் மனித நேயம் செத்துவிட்ட தாகவே கருதவேண்டி இருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/81654.html#ixzz33udYQIjA

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகமயமாக்கல் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவங்கியது

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.

கொலோன் (ஜெர்மனி) ஜூன் 8- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங் கப்பட்டது.

ஜெர்மனி, கொலோன் மாநகரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்திய வாரம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் 3ஆம் தேதி மாலை, பொது மக்களுக்கு திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் தத்துவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தி எதிர்ப்பு இயக்கம்

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாய்ன்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியயியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் தன்மான இயக்கமான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் அடைந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தனர்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) வின் வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்தும் தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கைகளை அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைக்க, தன் பணியை செய்யும் என பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் செய லாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங் களை வழங்கியும் பாராட்டினார்கள்.

பெரியாரின் ஜெர்மன் பயணம்

இந்நிகழ்வு இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் 1932-இல் ஜெர்மனி பயணம், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் 2014-இல் கொலோன் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.

இவைகளை உற்று நோக் கும்போது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதும் இதுவே பெரியார் உலக மயமாக்கப்பட வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை எடுத்துச் செல்லும் தமிழர் தலைவருக்கும், பெரியார் பெருந் தொண் டர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் கொள்கை.

Read more: http://viduthalai.in/e-paper/81773.html#ixzz346Aj7Jpr

தமிழ் ஓவியா said...


பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கை


பாம்புகள் பழிக்குப் பழியாக பழி வாங்கும்னு சொல்றது உண்மையா?

(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. பொதுவா பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இதமான இருப்பிடம் தேடித்தான் எதிர்பாராம வீட்டுக்குள்ள புகுந்துடுது. அப்புறம் இயற்கையான அதோட வாழ்விடங்களை மனுசங்க குடியிருப்புப் பகுதியா மாத்திட்டு வர்றாங்க. அதுவும் ஒரு காரணம்.

எதிரிகளை எத்தனை வருசமானாலும் நினைவில் வைத்து- பாதிக்கப்பட்ட நல்ல பாம்பு பழி வாங்கும்னு சொல்றதும்; கொம்பேரி மூக்கன் பாம்பு... பழி வாங்கிட்டு சுடுகாடு வரை போய் பார்க்கும்னு சொல்றதும்கூட கட்டுக் கதைகள்தான்

அது சரி... பச்சைப் பாம்பை தொட்டவர்களின் சமையல் ருசிக்கும் என்பது?

இதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான்! இது உண்மையா இருந்தா கேட்டரிங் படிப்பே தேவையில்லையே? ஒரு பச்சைப் பாம்பை மட்டும் வெச்சுக்கிட்டு எல்லோருக்கும் கை ருசியான சமையல் கலையை கத்துக் கொடுத்திடலாமே!

இந்தவகைப் பாம்பு கண்ணை குறி வெச்சுத் தாக்கும்கிறதுகூட தவறானதுதான். நம்மளோட கண்களை வண்டு என்று தவறாக நினைத்துதான் சிலநேரம் கொத்துவதுண்டு

(20,000 பாம்புகளை இதுவரை பிடித்த பூனம் சந்த் அளித்த பேட்டி (ராணி - 8.6.2014)

Read more: http://viduthalai.in/page6/81760.html#ixzz346DyvSkT

தமிழ் ஓவியா said...


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


2006ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோய் தாக்கியபோது தமிழகப் பொது சுகாதாரத்துறை ஓர் ஆய்வினை மேற்கொண்டது. கருநீலம், கரும்பச்சை, கருப்பு போன்ற வண்ண உடைகள் கொசுக்களை ஈர்ப்பதால் அம்மாதிரி உடை அணிபவர்கள் கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதாகக் கண்டறிந்தோம். ஒரு சிலரை மட்டும் சிக்குன்குனியா தாக்குவது ஏன் என்ற கேள்ளிக்கு விடை கிடைத்தது என்கிறார் அப்போது அத்துறைக்கு இயக்கு நராக இருந்த டாக்டர் இளங்கோ.இரவில் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இந்திய பொது சுகாதார அமைப்பு IPHA - Indian Public Health Association- Tamilnadu பரிந்துரைக்கிறது. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த புளியந்தோப்பு, அண்ணா நகர், முகப்பேர், போரூர், அடையார், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 100 பேர்களைத் தேர்ந்தெடுத்து 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 பிப்ரவரி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உறங்கச் செல்வ தற்கு முன் ஒரு குளியல் போட வேண்டும். பூண்டு சாப்பிட்டவர் களை நெருங்க பிற மனிதர்களுக்கு மட்டு மல்ல, கொசுக்களுக்கும் தயக்கம் இருக் கிறது. இரவுஉணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை அவை நெருங்குவ தில்லை. அதே சமயம், ஆல்கஹால் உட் கொள்பவர்களைக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தோலில் உள்ள நுண்ணுயிர்கள் பலவிதமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை வியர்வையுடன் கலந்து உருவாக்கும் ஒருவித மணம் கொசுக்களை ஈர்க்கிறது. படுப்பதற்கு முன் குளியல், உணவில் பூண்டு சேர்ப்பது, ஆல்கஹால் உட் கொள்வது போன்றவை இந்த மணத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களே கொசுக்களை ஈர்ப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்கிறது மேற்கண்ட ஆய்வு.

(ஆதாரம்: 2014 மார்ச் 26 தேதியிட்டஆங்கில இந்து நாளிதழில் திருமிகு செரீனா ஜோசஃபைன் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page8/81763.html#ixzz346F1cKEI

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


முடி காணிக்கை எதற்காக?

இறைவனைத் தரிசிக்கும்போது எனது அகங்காரம் நீங்க வேண் டும். அதற்காக அழகுடன் நான் பராமரிக்கும் முடியை அர்ப்பணிக் கிறேன் என்பது அதன் தத்துவம்.

முகத்துக்கு அழகு மூக்கும் முழியும் தானே! அவற்றைக் காணிக் கையாக அளித்தால் அகங்காரம் மட்டுமல்ல; மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) ஒட்டு மொத்தமாக அகலாதா?

Read more: http://viduthalai.in/page1/81726.html#ixzz346FWNTdI

தமிழ் ஓவியா said...


மனிதனாக...


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/81727.html#ixzz346GcNvcO

தமிழ் ஓவியா said...


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!


திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.

தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கி டாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 24.11.1929 (தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர் வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346HK2Bhw

தமிழ் ஓவியா said...


திரு.குருசாமி - குஞ்சிதம் திருமணம்


சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ஆம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ரிவோல்ட் உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங் களைவிடச் சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை.

முதலாவதாக, இது ஒரு காதல் மணம், மணமகனும் மண மகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர் களாகையால் அவ் விருவரும் ஒருவரையொருவர் காதலித்துச் செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம்.

இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மண மகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத்தின் சிறப்பைக் கூறுமுன் மணமகனது ஜாதியாராகிய முதலி யார் எனப்படுவோர்கள் இவ்விதக் காதல் மணங்களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என் பதைப் பற்றிச் சிறிது கூறாமல் இருக்க முடியவில்லை.

திருமணத்தின் முதல் நாளன்று அவரது தங்கையார் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், இன்னும் இது போன்ற பலவாறான பொய்த் தந்திகளையனுப்பிய தோடும் ஜாதியை விட்டு விலக்கி விடுவதாகவும் பல பய முறுத்தல் கடிதங்களையும் எழுதினார்களென்றால், இந்த சீர்திருத்த உலகத்தில் இந்த வகுப்பாரது மனப்பான்மை எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலையிலிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளும்படி விட்டு விடு கின்றோம்.

ஆனால், இந்த சமூகத்திலுங்கூட முற்போக்கான அபிப்பிராயங்களைக் கொண்ட சில பிரமுகர்களைக் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக, இந்தத் திருமணத்தை ஆதரித்து வாழ்த்துச் செய்திகளனுப்பிய திருவாளர்கள் சீர்காழி சிதம்பரநாத முதலியார், பி.டி.ராஜன், கனம் மந்திரி முத்தையா முதலியார், திருநெல் வேலி சிதம்பரநாத முதலியார் போன்றவைகளின் ஆதரவானது நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதோடு அந்தச் சமூகத்திற்கே முற்போக்கடையும்படியான சந்தர்ப்பமும் கிட்டியிருக்கிறது என்று உறுதியாய்க் கூறுவோம்.

இரண்டாவதாக, மணமகள் செல்வி குஞ்சிதம் அவர்களின் கல்வி அறிவையும், அவர்களது சீர்திருத்த கொள்கைகளையும், அவர்கள் ரிவோல்ட்டில் ஆங்காங்கு எழுதி வந்திருக்கின்ற கட்டுரைக ளிலிருந்து இனிதறியலாம்.

மேலும், குஞ்சிதம் அவர்கள் திருமணத்தன்றைய தினமே மாலையில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் மேடையின் மீதே முதன்முதலாக செய்தஆங்கிலப் பிரசங்கமே எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு அவர்களது பிற்கால ஆற்றலைப் பற்றி நாம் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கக் கூடிய வர்களாயிருக்கிறோம்.

மேலும் மணமகள் தெலுங்கிலும் சொற்பொழி வாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றிருப்பதால் நமது சுயமரி யாதை இயக்கம் தெலுங்கு நாடு களிலும் பரவவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்து விட்டதற்காக நாம் பெருமகிழ்ச்சி யடைகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் கல்வியின் உயர்வை நன் குணர்ந்து மணமகளை உயர்ந்த கல்வி பயிற்றுவித்த அவரது பெற்றோர்களை வாழ்த்தாம லிருக்க முடியவில்லை.

இதர தாய் தந்தைமார்களும் இவர்களைப் பின்பற்றி தங்கள் பெண்களையும் பல துறைகளிலும் தேர்ச்சிபெறக் கூடிய கல்விகளைப் போதிப்பார்களானால், இத்தகைய காதல் மணங்கள் நம் நாட்டில் பெருகும் என்பதற்கு அய்யமில்லை. மணமகனும் மணமகளும்,

சுயமரியாதை இயக்கத்துக்குத் தக்க ஊன்று கோலாக இருந்து தங்களது - சந்தோஷமான வாழ்க்கையாலும் நடத்தையாலும் பிற்போக்குள்ள மக்களுக்கு ஒருவழி காட்டிகளாக இருந்து இத்தகைய திருமணங்கள் நமது நாட்டில் பெருகி மக்களது அறிவும் வளர்ச்சி பெற்று, தங்களைப் போலவே பிறரும் கலக்கமற்றவாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவார்களென்று நம்புகிறோம்.

இளைஞர் உலகத்துக்கு ஒரு பேரூக்கம் அளிக்கத்தக்க செயலை தம் மணவினையால் நிகழ்த்திக் காண்பித்த திரு.குருசாமி அவர்களையும் திருமதி. குஞ்சிதம் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 15-12-1929

Read more: http://viduthalai.in/page1/81718.html#ixzz346HitVYM

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கை களையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலை வராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான் கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப் பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HsaMeJ