Search This Blog

9.6.14

கணவர்களைத் திருத்துங்கள்- ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா? - பெரியார் விளக்கம்

கணவர்களைத் திருத்துங்கள்

தலைவரவர்களே! தாய்மார்களே!

இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட் டில் உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட் டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.

சென்னையைப் பற்றி...

இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும் என நான் நினைக்கவில்லை. சென்னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப் பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிட மானது என்று நான் சொல்லுவதுண்டு.

இதை நான் அடிக் கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக் கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் மூடநம்பிக்கையை விடுங்கள். பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள், நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்றும், அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள் வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார் களே என்றும், உங்களை இழித்துக் கூறி உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பலதடவை கேட்டிருக்கிறேன்.
ஆனதால் தான் வெளி ஜில்லாக்களைப்போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள்கைகள் அவ்வளவு அதிகமாக பரவ வில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால், இன்று இப் பெண்கள் மாநாட்டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும், இங்கு நடந்த உபன் யாசங்களையும் தீர்மானங் களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது, சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விட எந்த வகையிலும் பின்னடைந்தவர் களல்லர் என்பதைக் காட்டுகிறது.

ஆச்சாரி யாருக்கு நன்றி

இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கிறேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச் சத்தையும், தைரியத்தையும் கொடுக் கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டதற்கு முக்கிய ஆதாரம் எனது பழம்பெரும் தோழராகிய கனம் ஆச் சாரியாருடைய பெருங் கருணையேதான்.

இதற்காக அவருக்கு என் உள்ளம் நிறைந்த நன்றி செலுத்துகிறேன். பின்னும் இக்கிளர்ச் சியும் உணர்ச்சியும் மேலும் மேலும் வளர வேண்டுமானால், இன்றைய அடக்கு முறை ஆட்சியை இதுபோலவே குறைந் தது இன்னும் ஒரு வருஷத்திற்காவது நடத்தி உதவ வேண்டுமென்று எனது அருமைத் தோழர் ஆச்சாரியாரை மற்று மொருமுறை வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
உண்மையில் இன்றைய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதி நிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள் கூடியிருக்கிறீர்கள். பல அருமையான தீர்மானங்களையும் செய்தீர்கள்.

சூழ்ச்சி மகாநாடு

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக் கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்கள் அபிப்ராயத் துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள் பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப் படுத்தியிருக்கின்றன.

அது எதற்காகச் செய்யப்பட்டது என்றால், இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம் மாநாட்டுத் தீர்மானங்கள் அரட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய் யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிநிதித் துவம் பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற் காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர் களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை அறியாத இரண்டு பெண்களைக் கொண்டு நம்மைக் கேலி செய்யவும், தாழ்வாக நினைக்கவும் இடம் உண்டாக்கப் பார்க்கிறார்கள்.

வடமொழிச் சார்புடையது - ஆரியக் கலைகளுக்காக இருக்கிறது என்றும், அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தி என்கின்ற ஒரு மொழியை நம் குழந்தைகளுக்கும் புகட்டி, நம்மக்கள்தம் மானத்தை மாசுபடுத்தும் ஒரு சூழ்ச்சியை எதிர்ப்பதற்காக நாம் இங்கு கூடினோம். நம்மில் பல கருத்துக்காரர்களிருக்கலாம்.

சைவ, வைணவ மதக்காரர்களிருக்க லாம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இருக் கலாம், மேல்ஜாதி கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களி ருக்கலாம். எந்த மதத்தை யும், ஜாதியையும் நம்பாதவர்களுமிருக்க லாம்.

எனவே, நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள் கைக்காக நாம் ஒன்றுசேர்ந்து பாடு படவேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரண மாகவே நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம்.

உண்மை யிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மை யில் ஏற்படுமானால் - அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும்.

மேலும், அவர் கடினமான அடக்கு முறை களைக் கையாளுவாரானால், அதனால் தமிழர்கள் மனங்கொதிப்படையுமானால் அது எங்குபோய் நிற்கும் என்பதைச் சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத் திலும் ஏன் இட்லருணர்ச்சியை உண்டாக் காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?

பெண்கள் பாராட்டு

இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம் நிறைவேற்றிய போது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே!

ஆண்கள் சென்றதைப் பற்றி நீங்கள் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப்பெண் மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?  நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோயில் பிரவேச விஷயத்தில் திருவி தாங்கூர் ராஜாவைப் பாராட்டிவிட்டு, தோழர் எம்.சி. ராஜாவை ஏமாற்றிவிட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து, தான் சிறைக்குப் போகத் தயார் என்றார். அந்தப் பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
ஆனால், அது நாளைக்குத் தெரியப் போகிறது. அக்காலம் - அதாவது தமிழ்ப் பெண்களை சிறை செய்யும் காலம் வந்தால் தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி னார். நான்கூட அப் போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருந்தோமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார்.

ஆனால், பழம் பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவது போல்தானே இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர் கள் கடமையைப் பற்றியும் பேசினால் தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மை யடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக் கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவை கட் கெல்லாம் - பெண்கள் முன்னேற்றத் திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழி காட்டிவிட்டது.

பார்ப்பனர்கள், ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்து, தங்களைப் பற்றியே தங்களுக்குத் தெரியாத பெண்களைப் பிடித்தும் படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம், பதவி வாங்கிக் கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக உள்ள, நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில் இருக்கின்றார்கள். ஆனால், நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கின் றனர்.

நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக் கும், கனம் சுப்பராயனுக்கும் பல ஊர் களில் எத்தனையோ பார்ப்பனப் பெண் கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறை கூறினார்கள்? பெண்களா கிய நீங்கள் தலைநிமிர்ந்து எங்கள் உரி மையில் தலையிட்டால் நாங்கள் சும்மா யிரோம் என்றால் என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன் இருக்கிறது?

ஆணுடன், பெண்களும் ஒத்துழைத்துப் போராட முன்வரவேண்டும். போராட்டத் தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே, ஆண்களைப் போல் பெண்களும் தமிழ்ப் போராட்டத்தில் இறங்கினால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.

கணவர்களைத் திருத்துங்கள்

நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிரப்பக்கூடாது? சிறை என் றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவ தில்லை. எந்தச் சட்டத்தையும் மீறவேண் டியதில்லை. காங்கிரஸ் பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் வாழ்க! என்றால் சிறை பிடிப் பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால் போதும்.

உடனே ஆச்சாரியார், சிறைக்கு வா என அழைத்துக்கொள் வார். (கைத்தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால், எங்கே அவர் பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால் பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல் லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது - நாட் டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக் கும் இடம் பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனு மதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும்.
இதேபோல் அநேக நாடு களில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்திய தாகச் சரித்திரம் கூறுகின்றது. அனேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படு கிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவ தொரு ஊருக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின்வந்து விடு வார்கள். நம்மில் ஜாதிமத உயர்வுகளையும், சுயநலத்தையும், மறக்க வேண்டும்.

இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை), ராமசாமி நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப்பட்டவனா யிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத்தானே நீங்கள் ஆலோ சிக்க வேண்டும்.

இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால், நாஸ்திகன் என்று சாமான் வாங்க மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில்தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. ஏனெ னில், இது சில காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி. அதைக் கேட்டு சில சோணகிரிகள் ஏமாற லாம்.

இழி குணமில்லை

இன்று தேசிய மகாசபை என்று கூறப் படும் காங்கிரஸ் தலைவராக, ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவகர்லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல் லிக்கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கை யில்லையென்பதாகக் கூறி, கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூற மறுத் திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப் பற்றி சூரர், தீரர் என்று பாராட்டுகிறார் களே ஒழிய, எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவகர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால், எங் களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.

ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன செய்தால் வாழமுடியும் என்பதை யோசிக்க வேண் டும். காடு வா வா என்கிறது. எனக்கு மட்டி லும் இதிலென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன்; பார்ப்பனர்கள் நாள்தோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப் பேசுகிறார் கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்தி ரிகை, தோழர் சண்முகம் செட்டியாரைப் பற்றி செக்கு போட்டு - செக்கு ஆட்டுகிற மாதிரி படம்போட்டு இழிவுபடுத்திற்று.

நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் சோற்றுக்காரர்களென்றும் கூறி வருகிறது. இதைப் பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந் நிலையில் வீணே தமிழ்நாடு தமிழனுக்கு என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம், காப்பாற்றப்பட - நாடு வளர வேண்டுமா னால் பெண்மணிகளாகிய நீங்கள் துணிந்து முன்வரவேண்டும்.

இதைக்கருதியே இம் மாநாட்டைக் கூட்டினீர்கள், பல தீர்மானங் கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மையில் வீரமுடையவர்கள்தான். நினைத் ததை முடிக்கும் ஆற்றலுடைய வர்கள் தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால், சிறைக்குச் செல்லும் ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது, நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைத்தட்டல்)

---------------------------13-11-1938 ஆம் தேதி அன்று சென் னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தலைவர் ஈ.வெ.ரா. பேசியது.
"குடிஅரசு' - சொற்பொழிவு - 27-11-1938

58 comments:

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகமயமாக்கல் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவங்கியது

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.

கொலோன் (ஜெர்மனி) ஜூன் 8- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங் கப்பட்டது.

ஜெர்மனி, கொலோன் மாநகரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்திய வாரம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் 3ஆம் தேதி மாலை, பொது மக்களுக்கு திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் தத்துவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தி எதிர்ப்பு இயக்கம்

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாய்ன்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியயியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் தன்மான இயக்கமான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் அடைந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தனர்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) வின் வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்தும் தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கைகளை அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைக்க, தன் பணியை செய்யும் என பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் செய லாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங் களை வழங்கியும் பாராட்டினார்கள்.

பெரியாரின் ஜெர்மன் பயணம்

இந்நிகழ்வு இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் 1932-இல் ஜெர்மனி பயணம், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் 2014-இல் கொலோன் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.

இவைகளை உற்று நோக் கும்போது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதும் இதுவே பெரியார் உலக மயமாக்கப்பட வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை எடுத்துச் செல்லும் தமிழர் தலைவருக்கும், பெரியார் பெருந் தொண் டர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் கொள்கை.

Read more: http://viduthalai.in/e-paper/81773.html#ixzz346Aj7Jpr

தமிழ் ஓவியா said...


பாபர் மசூதி இடிப்பு திடுக்கிடும் விபத்தா? திட்டமிட்ட சதியா?


டிசம்பர் 6 1992. இந்திய வரலாற்றில் ஒர் கருப்பு பக்கம். ராமஜன்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரை மட்டமாக்க பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனதிலிருக்கிறது. கர சேவைக்காக போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சி மிக்க பேச்சுகளால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சி வசப்பட்டு அந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்கு விசாரனைகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றப் பட்ட சதி என்கிறது.

கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புல னாய்வு இணையப் பத்திரிகை. (டெஹ்ல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர் கேஆஷிஷ், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகச் சொல்லி , 23 முக்கிய தலைவர்களைப் பேட்டி எடுத் துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வினய் கட்டியார், உமா பாரதி, கல்யாண் சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க., சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட் டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சிபிஅய் தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித் துள்ளது. ஆப்ரேஷன் ஜென்மபூமி என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச்செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மை களை வெளியிட்டிருக்கும் 'கோப்ரா போஸ்ட்'டின் டிவிடியை டில்லி பத்திரிகை யாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கியிருக்கிறார்.. இதில் சொல்லப் படும் விஷயங்களின் ஹைலைட்கள்:


தமிழ் ஓவியா said...

பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனாவால் நடத்தப்பட்ட திட்டமிடப் பட்ட சதிச் செயல் என்றும், இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர் களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பலிதானி ஜாதா எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக் கப்படதாகவும் கூறப்பட்டுள்ளளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்க பட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப் படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவரை உடைப்பது போன்ற பயிற்சி கள் தரப்பட்டன. இந்த படைக்கு லக்ஷ்மண சேனை என்று பெயர்.

மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபாதலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளிமனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில் 5 பேர்கள் ராம பக்தர்களானார்கள் நாங்கள் கோவிலைக் காப்போம் என ராமர் மேல் சத்தியம் செய்து கொண்டு பணியைத் துவக்கினர்கள்.

சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தி யல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கபட்டு தயார் நிலையில் வைக்க திட்டமிட்டவர் உமா பாரதி. என்றும் பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள். கட்டிடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட் டிருக்கிறது. ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்து தகர்க்க இரண்டுதற்கொலை படை யினர் உடலில் கட்டிய குண்டுகளுடன் பிளான் பி யாக தயாராக. இருந்தனர் என்றும் பேட்டிக ளில் பதிவாகயிருக்கிறது.

மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச். டால்மியா, மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசிய கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி.சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது. இந்த நாசவேலை குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்க்கும், பிரதமர் நரசிம்மராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருப்பமில்லாத கல்யாண்சிங் டிச 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர் எஸ் எஸ் வீரர்களால் சிறைப்பிடிக்கப் பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதை தடுக்கும் விதத்தில் 'கோப்ரா போஸ்ட்' திட்டமிட்டு காங்கிரஸின் உதவி யுடன் சதி செய்வதாகவும், இது தொடர் பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் செய்தது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது..

தமிழ் ஓவியா said...

செய்தியை தடை செய்யவேண்டும் என்று சொல்லும் பிஜேபி அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங் களை மறுக்க வில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.

இது எங்களது இரண்டாண்டு புல னாய்வு. அத்தனைக்கும் பதிவு செய்யபட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளை சந்திக்கதயார் என சவால் விடுகிறது கோப்ராபோஸ்ட். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை சட்டவிதி களுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது பிஜேபி.

- கல்கி - 20 ஏப்ரல் 2014

Read more: http://viduthalai.in/page5/81757.html#ixzz346D0jAKe

தமிழ் ஓவியா said...


கேபினட் அமைச்சர், இணை அமைச்சர் வேறுபாடு என்ன?


மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. இவையல்லாமல் துணை அமைச்சர் என்ற தகுதியில் சிலரை நியமிக்கவும் சட்டம் இடம் தருகிறது. ஆனாலும் பெரும்பாலும் இந்தியாவில் அப்படி நியமிப்பதில்லை.

கேபினட் என்பது, 'மத்திய அரசுக்குள் ஒரு குட்டி அரசு' என்று சொல்லத்தக்க வகையில் சக்திவாய்ந்த உயர் அதிகார அமைப்பாகும். கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்த வர்களாகவும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் வாய்க்கப் பெற்றவர் களாகவும் இருப்பார்கள். அரசி யல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை ஆகியவற்றில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்களு டைய துறை பெரியதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக்கொள்வார்கள்.

இணை அமைச்சர்களில் தனிப் பொறுப்பு' உள்ளவர்களும் உண்டு. குறிப் பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப் பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண் டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப் பாக ஒரு இணை அமைச்சரிடம் தருவது உண்டு.


தமிழ் ஓவியா said...

கேபினட் அமைச்சர்கள் சில வேளை களில், அவர்களுக்கென்று ஒதுக்கிய துறை போக, பிரதமரின் வேண்டுகோளின்பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக வகிப்பதும் உண்டு. சக கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ இப்படி கூடுதல் பொறுப்பை வகிப் பார்கள். அமைச்சரவையிலிருந்து யாராவது விலக நேர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அந்தத் துறையை இன்னொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாகவும் தருவார்கள்.
கேபினட்டில் இடம் பெற்ற அமைச் சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு கூடுதலாக அழைக்கப் படுவார்கள்.

கேபினட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அந்தந்தத் துறைக்கு உரிய அமைச்சர்கள் மட்டுமின்றி இதர அமைச் சர்களும் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். கேபினட் கூட்டத்தில் நடக்கும் விவாதங் களும் எடுக்கப்படும் முடிவுகளும் முறை யாகப் பதிவு செய்யப்படும்.

இணை அமைச்சர்களில் தனிப் பொறுப்பு என்று அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர் கள் செயல்படுவார்கள்.

தமிழ் ஓவியா said...

தனிப்பொறுப்பல்லாத இணை அமைச் சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டலின்படி தங் களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை 'அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்' என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வார்கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தாங்கள் உட்கார மேஜை, நாற்காலிகூட இல்லை என்று கேபினட் அமைச்சர்களிடமே முறையிட்டதும் உண்டு.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர் அவைக்கு வர முடி யாத சந்தர்ப்பங்களில், இணை அமைச்சர் கள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உண்டு. அரசியல் காரணத்துக்காக ஒருவ ருக்கு கேபினட் தகுதி தரப்படுவதும் அவருக்காக அந்தத் துறையின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச் சரே மேற்கொள்வதும் சமீபத்தில்கூட நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் பொறுப்பை கேபினட் அமைச்சருக்குப் பதிலாக இணை அமைச்சரே சொல்ல நேர்ந்திருக்கிறது.

இணை அமைச்சர்கள் துறைக்கும் கேபினட் அமைச்சருக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். நாடாளு மன்றப் பணிகளிலும் அவருக்கு உதவுவார் கள். அதன் மூலம் அவர்களும் நிர்வாகப் பயிற்சியைப் பெறுவார்கள்.

இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர் களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள்.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற இணையமைச்சர் தகுதியில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சி யிலும் இப்படியொரு இணையமைச்சர் இருந்தார்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் களில் (மக்களவை, மாநிலங்களவை) சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவை இருக்கலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயம் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச்சர்கள் இருக்க லாம் என்றெல்லாம் அது பரிந்துரைக்க வில்லை. இவை அனைத்தும் பிரதமரின் விருப்ப அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் உள்பட்டவை.

கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களுக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறை வாகவே இருக்கக்கூடும். கேபினட் அமைச் சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதி களும் அதிகமாகவே இருக்கும். அரசியல் ரீதியாகவும் கேபினட் அமைச்சர் களுக்கு செல்வாக்கு அதிகம். இருப்பினும் இணை அமைச்சர்கள் நாடாளுமன்ற ஜன நாயகத் தின் இன்றியமையாத அம்சமாகி விட் டார்கள். கேபினட் அமைச் சர்களை அணுக முடியாதவர்கள் இணை அமைச்சர்களை எளிதில் அணுக முடியும்.

Read more: http://viduthalai.in/page7/81761.html#ixzz346DQ9zog

தமிழ் ஓவியா said...


குடியரசுக்கருவூலம்...


பாரத தேசம்

சாதாரணமாக, இந்த நாட்டை பாரத தேசம் என்று சொல்வதுகூட யோக்கியமான பெயராகாது.

பரதன் என்கின்றவன் ஆண்டதால் பாரத தேசம் என்று சொல்லப்படுமானால் அதற்கு முன் ஆண்டவர்கள் பெயர் ஏன் சொல்லக் கூடாது? அதற்குப்பின் ஆண்டவர்கள் ஆளுகின்றவர்கள் பெயர்கள் என்ன கதியாவது?

எந்த தேசத்துக்காவது எப்பவோ ஒரு காலத்தில் ஆண்டவன் பெயர் சொல்லப் படுகிறதா? இந்தப் பெயர் ஆரிய ஆதிக் கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை.

அக்காலத்திய அரசர்களை நாம் மதிப்பதாகவோ, பாராட்டுவதாகவோ சொல்லுவதும், பழங்கால அரசர்கள் ஆட்சி போன்ற அரசியல் முறை வேண்டுமென்று சொல்லுவதும் பெரிதும், சுயமரியாதை அற்றதும், முட்டாள் தனமானதுமான காரியமாகும். பழங்கால அரசர்களின் ராஜ விசாரணை, ராஜநீதி என்பவை என்ன என்பதற்கு அக்கால ஆதாரங்கள், சரித்திரங்கள் அல்லாமல், அவர்களைப் போல் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தாலும் நன்றாய் விளங்கும். உதாரணமாக, ஒரு அரசன் ராஜசபைக்கு வந்த உடனே மந்திரியை என்ன கேட்கின்றான்.

பிராமணர்களுக்கு மான்யம், அன்ன சத்திரம், வேதபாடசாலை, (இலவசப் படிப்பு) ஆகியவை தாராளமாய் வழங்கி இருக்கிறாயா, அவர்கள் மனம் நோகாமல் சந்தோஷத்தோடு வாழ உதவி செய்து வருகிறாயா என்று கேட்டு விட்டு, மற்ற வகுப்பார் பிராமணர்களுக்கு அடங்கி அவரவர்களுக்கு இட்ட கருமப்படி நடந்து வருகிறார்களா என்றுதான் கேட்கின்றானே ஒழிய, வேறு என்ன?

அதாவது வருணா சிரம ராஜ்ஜியபாரம் தானே இதுவரை நடந்து வந்திருக்கிறதே ஒழிய வேறு என்ன?

- குடிஅரசு தொகுதி 19 104ஆம் பக்கம்

சமுதாய இழிவு

இந்த இயக்கம் ஆரம்பிப்பதற்கு முன் நம் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது?

அடேய் என்று அழைக்கும்படியான இழிவான வேலைகள் எல்லாம் நமக்குத் தான்.
இன்றைக்கும் அந்த வேலைகளை நம்மவர்கள்தான் செய்து கொண்டு வருகின்றனர். பெரும் உத்தியோகங்கள் -எஜமான் என்று அழைக்கக்கூடிய உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பான் போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றானே!
நம் இயக்கம் தோன்றிய பின் இன்று நம்மவனும் உயர்ந்த உத்தியோகத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதோடு தீண்டப்படாதவன் என்று ஒதுக்கித் தள்ளி வைக்கப்பட்டிருந்தவனும் உயர்ந்த உத்தியோகங்கள் பார்க்கும்படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


நம் மக்கள் தங்களுக்குப் பதவி உத்தி யோகம் கிடைத்தால் அதையே பெருமை என்று கருதித் தங்கள் வாழ்வை வளப் படுத்திக் கொள்கின்றனரே தவிர, நம் சமுதாயத்திலிருக்கிற இழிவு ஒழிய வேண் டும், அதற்காக நம்மாலானதைச் செய்ய வேண்டுமென்று கருதுவது கிடையாது.

இந்த நாட்டுக்கு ஒரு பகுத்தறிவாளர் ஆட்சி வர 2000 காந்தியாலே முடியாதே - 1000 காமராஜராலே முடியாதே!

பதினாயிரக்கணக்கான கோயில்கள், குட்டிச்சுவர்கள், பல கோடிக்கணக்கான மடையர்கள் இருக்கிற நாட்டிலே பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்ததென்றால், அதற்குக் காரணம் நம் இயக்கம்.

பிரச்சாரம்தானே - நம் மக்கள் இந்த அளவிற்குப் பக்குவப்பட்டிருப்பது நம் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியால் தானே! இயற்கையிலேயே நாம் இன்று புரட்சிகரமான காலத்தில் இருக்கிறோம்.

புரட்சி என்றால் சாதாரண புரட்சியல்ல! கடவுள் - மதம் - சாஸ்திரம் - சாதி ஒழிக்கப் பட வேண்டும் என்கின்ற கொள்கை உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கின்றோம்.
(பெரியார் களஞ்சியம் தொகுதி 18 203ஆம் பக்கத்தில் இருப்பது)

இலட்சியம்

பெரியார் அவர்களுடன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அந்த திராவிடர் இயக்கம், யாருக்காகப் பணியாற்ற வேண் டும் என்று எண்ணிப் பார்த்து உருவாக்கப் பட்டது என்பதை நீங்கள் ஒரு கணம் சிந்திப்பீர்களேயானால், இந்த நாட்டி னுடைய அடித்தள மக்களுக்காக - மூடநம்பிக்கையினாலே பலியிடப்பட்ட மக்களுக்காக - இன்னும் சொல்லப் போனால் வெவ்வேறு வகையில் பிறரால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காக - வஞ்சிக்கப் பட்ட மக்களுக்காக - வாழ்விழந்த மக்க ளுக்காக - அறிந்தோ அறியாமலோ அடிமைத்தனத்திற்கு ஆளாகி விட்ட மக்களுக்காக - அதைப் புரிந்து கொள்ள ஆற்றலற்றவர்களுக்காக - தேரையாக, புழுவாக, பூச்சியாக, சமுதாயத்திலே தாழ்ந்து கிடந்த மக்களுக்காக பெரியார் அவர்கள் அந்த பெரிய இயக்கத்தை இன்றைக்குத் தோற்றுவித்தார்கள் என்று சொன்னால், அன்றைக்கும் அந்தக் கொள்கையோடு அந்த இலட்சியத்தின் பணியை நாம் எந்த முகாமிலே இருந்தாலும், எந்த இடத்திலே இருந்தாலும் அந்த இலட்சியத்தோடு பொதுப் பணியை நிறைவேற்ற வேண்டி யவர்களாக இருக்கிறோம்.

தேசிய இயக்கப் பாரம்பரியத்திலே இடம் பெற்ற தந்தை பெரியார் அவர்கள் - நாட்டு விடுதலைக்காக தேசிய இயக்க முன்னணியிலே நின்ற மிகப் பெரிய தியாக சீலராக விளங்கிய பெரியார் அவர்கள் நாட்டிற்காக இந்த இயக்கம் ஏற்றுக் கொண் டாலும், சமுதாயத்திற்காகத் தோற்றுவித்த அந்த இயக்கத்திலேதான் இன்றைக்கு மேடையிலே இருக்கின்ற பெரும்பாலான தோழர்கள் இருக்கிறார்கள்.

எனவே, பெரியாருடைய இலட்சியம் பல்வேறு முகாமிலே முழங்கப்படுகிற அந்த நிலையைத்தான் இன்றைக்கு நாம் காண முடியும். எனவே திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பைத் தவிர, வேறு சில அமைப்புகள் அந்த இலட்சியத்தை ஓரளவு தாங்கிய அமைப்புகளாக இருக்கிற காரணத்தாலே, இன்றைக்கு பெரியாருடைய இலட்சியம் விழுதுகள் விட்டிருக்கின்ற மிகப் பெரிய ஆலமரத்தைப் போல பரவி இருக்கிறது.

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 4 243ஆம் பக்கத்தில்

ஓய்வு - போகம்

என் உடல் நலனைப்பற்றி எப்போதுமே நான் கவலை எடுத்துக் கொண்டவனல்ல; வாழ்வில் எந்தக் காரியத்திலும் அதுவைப் பற்றியும் சிந்தித்தவனல்ல; அனுபவத்தை யும் மதித்துநடந்து கொண்டவனல்ல; ஓய்வு என்பதை ஒரு நோய் என்றே கருதி வந்திருப்பதோடு ஓய்வில் இருக்கப்பட்ட காலத்தையெல்லாம் பதைபதைப்பும், சஞ்சலமும் கொண்ட காலமாகவே கருதி வந்திருக்கின்றேன். மேலும் ஓய்வு என்பதை மனிதன் அடையும் போக யோக்கியங்களில் ஒன்று என்றே கருதி வந்திருக்கின்றேன்.

தமிழ் ஓவியா said...

உணவு விஷயத்தில் வாய் ருசியைத்தான் முக்கியமாகக் கருதி வந்திருக்கிறேனே தவிர, அதனால் ஏற்படும் பலனைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பலனைக் கருதி திருத்திக் கொள்ள வசதியுமில்லை.

வாயும், மூக்கும் தடுக்கவில்லையானால் கெட்டுப் போன பண்டம் என்று எதையும் தள்ளுவதில்லை. தூக்கத்தைப்பற்றியும், சவுகரியத்தைப் பற்றியும் கவலைப்பட்ட தில்லை. குளிப்பது பற்றியும் நானாகக் குளிக்க வேண்டும் என்று கருதிக் குளித்த தில்லை. மற்றவர்களின் தொல்லைக்கு ஆக இணங்கியிருப்பேன்.

உடல் நலத்திற்கு என்று ஒரு போதும் நடந்தறியேன். ஒரு நாளும் தேகாப்பியாசம் செய்தறியேன். உடம்பில் நோய் ஏற்பட்ட காலத்திலும், சகிக்க முடியாத நிலை ஏற்பட் டால்தான் டாக்டர் இடம் செல்லுவேன் என்பதோடு அதை, அந்த நோயை வெளியிலேயே சொல்லுவேன். மேலும் சகிக்க முடியாத நிலை ஏற்பட் டால்தான் அதை நானே நோய் என்று கருதுவேன்.

- பெரியார் களஞ்சியம் தொகுதி 17 91ஆம் பக்கத்தில் இருப்பது;

வலங்கைமான் தேசியம்

அண்ணாமலை சர்வகலா சங்க உபஅத்யட்கர் தோழர் வலங்கைமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரைத் தென்னாடு நன்கறியும். அரசியலில் மிதவாதி எனக் கூறிக் கொண்டு சாதாரண காலங்களில் காங்கிரசை தாக்குவதும், தேர்தல் காலங் களில் காங்கிரஸ்காரரை ஆதரித்துப் பிர சாரம் செய்வதும் அவரது பிறவிக் குணம்.

மிதவாதியான அவர் காங்கிரஸை ஆதரிக்க காரணம் என்ன? காங்கிரசு ஆதிக்கம் பார்ப்பனர் முன்னேற்றத்துக்கு உதவி புரியக் கூடியதாயிருப்பதினாலேயே அவர் காங்கிரசை ஆதரித்து வருகிறார்.

மேலும் ஜஸ்டிஸ் கட்சி என்றால் அவருக்குப் பெரிய வெறுப்பு. ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சியாம். எனவே, ஜஸ்டிஸ் கட்சி ஒழிய வேண்டுமாம். இவ்வாறு கூறும் தேசியப் புலியான வலங்கைமான் சாஸ்திரியார் அண்ணா மலை சர்வகலா சங்கத்தில் நடத்தும் திருவிளையாடல், அவரது வகுப்பு வாதத்தை நன்கு விளக்கக் கூடியதா யிருக்கிறது.

அண்ணாமலை சர்வ கலா சங்கத்தைப் பார்ப்பன மயமாக்குவதே அவரது நோக் கமாயிருந்து வருவதுபோல் தோன்றுகிறது.

தமிழ் ஓவியா said...

அதற்குச் சமீபத்தில் அங்கு நடைபெற்ற நியமனங்களே, அத்தாட்சி. மகாமகோ பத்தியாய குப்புசாமி சாஸ்திரியார் கவுரவ சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப் பட்டிருக்கிறாராம். ஆனால், அவர் செய்யும் கவுரவ வேலைக்காக அவருக்குப் பிரதிபலன் வழங்கப்படுமா?

வழங்கப்பட்டால் எவ்வளவு என்பன போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. அப்பால் டாக்டர் அசுவத நாராயண ராவ் கெமிஸ்ட்ரி புரோபஸராக நியமிக்கப்பட் டிருக்கிறாராம். இந்த இரண்டு உத்தி யோகங்களிலும் இதற்கு முன்பிருந்த வர்கள் பார்ப்பனரல்லாதாரே! இப்பொ ழுது பார்ப்பனர்களைத் தேடிப்பிடித்து நியமிக்கக் காரணம் என்ன?

குடிஅரசு தொகுதி 20 185ஆம் பக்கத்தில்..

ரயில் பயணம்

அதன் பின்னர் தலைமை உரையில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் முத்தாய்ப்பாக, இதற்கு முன்மாதிரிகள் இருந்ததாக நண்பர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்கள்.

(தமிழ்நாட்டில் சில மருத்துவமனைகள் தலைவர்கள் பெயரில் இருப்பதை)

முன்மாதிரி இல்லாமலே இருந்தால் கூட இதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பெயர் சூட்டப்படுவது இனி வருகிற வர்களுக்கு முன் மாதிரியாக அமையும் என்ற உறுதியான முடிவின் காரணமாகவே இந்த பெயர் வைப்பதில் பெருமகிழ்ச்சி யான கடமையாக கருதுகிறேன் என்று பலத்த கைதட்டலுக்கிடையே அறிவிப்புச் செய்தார்கள்!

தமிழ் ஓவியா said...

மாணவப் பருவம் முதலே பிரச்சாரத் திற்குச் சென்று (ரயிலில், பஸ்ஸில், சைக் கிளில் - பிறர் ஓட்ட நான் அமர்ந்ததுதான்!) பல மைல்கள் நடந்தும் பிரச்சாரம் செய்வது வாடிக்கையாக வழமையாக ஆகி விட்டது என்றாலும் இந்த நிகழ்ச்சி எனது பொது வாழ்க்கை - சுற்றுப் பயணத்தில் மறக்க முடியாததொரு அனுபவத்தை ஏற்படுத்தியது.

அன்னையார் திருச்சியிலிருந்து ஈரோட் டிற்கு இரண்டு நாள் முன்பே வந்து விட்டார்கள். எஸ்டேட் நிர்வாகத்தைக் கவனிக்க வரி கட்டுவதற்கும் வாடகை வசூல் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யவும் அம்மா அவர்கள் 2 நாள் முன்பே சென்றார்கள். என்னை ஈரோடு வரும்படி ஆணையிட்டார்கள்.

நான் கோவை செல்லும் இரவு ரயிலில் ஏறி ஈரோடு செல்லுவதற்கு ரயிலில் ஏறி பயணம் செய்தபோது (30.8.1974) இரவு அசந்து தூங்கி விட்டேன்.

விழித்துப் பார்த்தால் ஈரோடு ஸ்டே ஷன் தாண்டி விட்டது! மேலே (மூன்றாம் வகுப்புப் பெட்டி பயணம்) ஏறி படுத்திருந்ததால் இப்படி தூங்கி விட்டேன். ஈரோட்டில் வந்தவர்கள் தேடிப் பார்த்து வரவில்லை என்று சிலர் திரும்பி அம்மாவிடம் சொன்னார்கள்.

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 4 55ஆம் பக்கத்தில் இருப்பது
கடவுள் ஒழிப்பு

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன்.

அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். ஜாதிஅமைப்பு என்பது கடவுள், மதம் மற்றும் அவை சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண் டும் என்று கருதி அவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள்.

கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் உண்டாக் கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல, நம்மைச் சபிக்கவும் கூடியதாகும்.

ஆகையால் சபிக்கப்பட்டும் வருகின் றேன். சபிக்கும் மக்களோ கடவுளை சர்வ சக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்கா விட்டாலும் கடவுள் என்னை சும்மா விட்டுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.

நானோ என் பிரச்சாரத்தில், கடவுளோ இல்லை என்று சொல்வதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்திச் செய் கையாலும் காட்டிக் கொண்டே நடந்து கொண்டே வருபவன்.

இந்த நிலையில், எனது 92ஆவது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை யில்பட்டது என்பதை நல்ல வண்ணம் மக்களுக்கு விளங்கும்படிக் கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன்.

இந்த நிலையில் எனது 92வது வாழ்நாள் முடிந்து 93வது வாழ்நாள் தோன்றி விட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா?

விட்டுக் கொண்டு இருப்பானா? என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும் கடவுளாவது வெங்காய மாவது என்று கருதி, பெரியார் களஞ்சியம் தொகுதி 20 264ஆம் பக்கத்தில் இருப்பது...

- க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page7/81759.html#ixzz346Df0fqe

தமிழ் ஓவியா said...


பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கை


பாம்புகள் பழிக்குப் பழியாக பழி வாங்கும்னு சொல்றது உண்மையா?

(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. பொதுவா பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இதமான இருப்பிடம் தேடித்தான் எதிர்பாராம வீட்டுக்குள்ள புகுந்துடுது. அப்புறம் இயற்கையான அதோட வாழ்விடங்களை மனுசங்க குடியிருப்புப் பகுதியா மாத்திட்டு வர்றாங்க. அதுவும் ஒரு காரணம்.

எதிரிகளை எத்தனை வருசமானாலும் நினைவில் வைத்து- பாதிக்கப்பட்ட நல்ல பாம்பு பழி வாங்கும்னு சொல்றதும்; கொம்பேரி மூக்கன் பாம்பு... பழி வாங்கிட்டு சுடுகாடு வரை போய் பார்க்கும்னு சொல்றதும்கூட கட்டுக் கதைகள்தான்

அது சரி... பச்சைப் பாம்பை தொட்டவர்களின் சமையல் ருசிக்கும் என்பது?

இதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான்! இது உண்மையா இருந்தா கேட்டரிங் படிப்பே தேவையில்லையே? ஒரு பச்சைப் பாம்பை மட்டும் வெச்சுக்கிட்டு எல்லோருக்கும் கை ருசியான சமையல் கலையை கத்துக் கொடுத்திடலாமே!

இந்தவகைப் பாம்பு கண்ணை குறி வெச்சுத் தாக்கும்கிறதுகூட தவறானதுதான். நம்மளோட கண்களை வண்டு என்று தவறாக நினைத்துதான் சிலநேரம் கொத்துவதுண்டு

(20,000 பாம்புகளை இதுவரை பிடித்த பூனம் சந்த் அளித்த பேட்டி (ராணி - 8.6.2014)

Read more: http://viduthalai.in/page6/81760.html#ixzz346DyvSkT

தமிழ் ஓவியா said...


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


2006ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோய் தாக்கியபோது தமிழகப் பொது சுகாதாரத்துறை ஓர் ஆய்வினை மேற்கொண்டது. கருநீலம், கரும்பச்சை, கருப்பு போன்ற வண்ண உடைகள் கொசுக்களை ஈர்ப்பதால் அம்மாதிரி உடை அணிபவர்கள் கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதாகக் கண்டறிந்தோம். ஒரு சிலரை மட்டும் சிக்குன்குனியா தாக்குவது ஏன் என்ற கேள்ளிக்கு விடை கிடைத்தது என்கிறார் அப்போது அத்துறைக்கு இயக்கு நராக இருந்த டாக்டர் இளங்கோ.இரவில் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இந்திய பொது சுகாதார அமைப்பு IPHA - Indian Public Health Association- Tamilnadu பரிந்துரைக்கிறது. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த புளியந்தோப்பு, அண்ணா நகர், முகப்பேர், போரூர், அடையார், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 100 பேர்களைத் தேர்ந்தெடுத்து 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 பிப்ரவரி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உறங்கச் செல்வ தற்கு முன் ஒரு குளியல் போட வேண்டும். பூண்டு சாப்பிட்டவர் களை நெருங்க பிற மனிதர்களுக்கு மட்டு மல்ல, கொசுக்களுக்கும் தயக்கம் இருக் கிறது. இரவுஉணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை அவை நெருங்குவ தில்லை. அதே சமயம், ஆல்கஹால் உட் கொள்பவர்களைக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தோலில் உள்ள நுண்ணுயிர்கள் பலவிதமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை வியர்வையுடன் கலந்து உருவாக்கும் ஒருவித மணம் கொசுக்களை ஈர்க்கிறது. படுப்பதற்கு முன் குளியல், உணவில் பூண்டு சேர்ப்பது, ஆல்கஹால் உட் கொள்வது போன்றவை இந்த மணத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களே கொசுக்களை ஈர்ப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்கிறது மேற்கண்ட ஆய்வு.

(ஆதாரம்: 2014 மார்ச் 26 தேதியிட்டஆங்கில இந்து நாளிதழில் திருமிகு செரீனா ஜோசஃபைன் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page8/81763.html#ixzz346F1cKEI

தமிழ் ஓவியா said...


கோககோலா, பெப்சி - எச்சரிக்கை!


உலக சுற்றுச்சூழலை கோக கோலா, பெப்சி உள்ளிட்ட 10 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்திக் கெடுத்து வருகின்றன என்று ஆஸ்பாம் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

உலகம் முழுவதும் இப்போதுகாற்று, தண்ணீர் போன்ற சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபட்டு விட்டது. சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைப்பது அரிதாகி விட்டது. முன்பு இலவசமாக கிடைத்து வந்த சுத்தமான குடிநீரை தற்போது மக்கள் பணம்கொடுத்து வாங்கிக் குடித்து வருகிறார்கள். சுற்றுசூழல் மாசு இப்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க உலக நாடுகள் தங்கள் வழியில் தீவிரமாக முயன்று வருகின்றன.இந்த சூழ்நிலையில் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ஆஸ்பாம் உலக சுற்றுச்சூழல் கெடுவதற்கு 10 பெரிய நிறுவனங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து ஆஸ்பாம் அமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளர் எரிச்சகான் கூறியதாவது:- உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை அசோசியேட் பிரிட்டிஷ் புட்ஸ், கோக கோலா, பெப்சிகோ, டெனேன்,நெட்ஸ்லே, ஜெனரல் மில்ஸ், கெல்லோக், மார்ஸ், யுனிலீவர், மான்ட்லெஸ் ஆகிய 10 பெரிய நிறுவனங்கள் கெடுத்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் நிறுவனங்களை விட தனி மனிதர்கள் பங்குமிக முக்கியமானது. நமது பூமியைபாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க தவறினால் வருகிற 15 ஆண்டுகளில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 44 சதவிகிதம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page8/81764.html#ixzz346F8bvae

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியில் - திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை


ஜெர்மனி பல்கலைக் கழகங்களின் அழைப்புகளையேற்று

திராவிட இயக்கமும் - தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கி கருத்துரை

ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார்

ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் உரையாற்றுகிறார்

கொலோன் (ஜெர்மனி) ஜூன் 7- ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறு வனங்களின் அழைப்பையேற்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஜெர்மனி கொலோன் மய்யப் பகுதியில் உள்ள நியூமார்க்கெட் ஜோய்ஸ்ட் அருங் காட்சியகத்தில் பொது மக்களிடையே, பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்கள் முன்னேற்றம், மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்த தன்னுடைய சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஜெர்மனி, கொலோனில் இந்திய வார விழா நிகழ்ச்சிகளில் இவ்வாண்டு கொலோன் பல்கலைக் கழகம், கொலோன் மாநகர நிர்வாகம், இந்தியர் நலச் சங்கம் கொலோன் இணைந்து பங்கேற்று நடத்திய இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களைக் கொண்டு பல்கலைக் கழகத்தில், மற்றும் பொது இடங்களான அருங்காட்சியகங்களில் இந்த வாரம் முழுமைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு சிறப்பு உயராய்வுக் கல்வி மய்யங்களில் ஒன்றான தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய, இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு நிறுவனத்தால் ஏற்பாடு செய்திருந்த பொது மக்களுக்கான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி இரவு 7 மணியளவில் கொலோன் மாநகரின் மய்யப் பகுதியான நியூ மார்க்கெட் என்னும் பகுதியில் அமைந்திருக்கும் ராட்டன்ஸ்ராட்ச் ஜோய்ஸ்ட் அருங்காட்சியகத்தில் பொது மக்களுக்கு, ஆங்கிலத்தில் “The Dravidian Movement and Periyar’s ideology of Rationalism”
அதாவது, திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தத்துவ கொள்கைகளும் என்ற தலைப்பில் உரையாற்ற சிறப்புமிகு ஏற்பாட்டினை இப்பல்கலைக் கழகம் மற்றும் மேலே குறிப்பிட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெரியார் மணியம்மை பல்கலை. வேந்தர் கி.வீரமணி அவர்களை ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப் பாளர் திருமதி ருத்இ.ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சி சரியாக இரவு 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணியளவில் முடிவுற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஜெர்மனி - இந்திய நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர் திருமதி ருத்இ ஹீப், இந்தியர் நலச் சங்க பொதுச் செயலாளரும், கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் வரவேற்று உரை நிகழ்த்தும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் திருமதி ருத்இ ஹீப் அவர்கள் வரவேற்புரை ஆற்ற பேராசிரியர் யுல்ரிக் நித்லஸ் திராவிட இயக்கத்தைப் பற்றியும் தமிழர் தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தையும், அவர் தம் குறிப்புகளையும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். இராமச்சந்திரனையும் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தனித் தன்மைகளைப் பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்கள் அறிவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க பேரா. நல். இராமச்சந்திரன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைப் பற்றியான ஒரு விளக்க உரையை 15 நிமிடங்களில் அவையோர் புரிந்து கொள்ளுமளவிற்கு, பல்கலைக் கழகத்தைப் பற்றியும், அதன் தனித் தன்மைகளையும் விளக்கிப் பேசினார்.

பெரியார் புத்தகங்கள் விற்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன்

தமிழ் ஓவியா said...

இதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர் தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தனக்களித்த தலைப்பில் கணினி மூலம் 26 பவர் பாய்ண்ட் பக்கங்களை பயன்படுத்தி படங்கள், சொற்றொடர்கள் மூலமாக மிகச் சிறப்பான உரையை 60 நிமிடங்களில் தனது சிறப்பான உரையை ஆற்றினார்கள். தமிழர் தலைவர் உரைக்கு அவ்வப்போது அரங்கில் கரவொலியும், வரவேற்பும் பெற்றன. சிந்தனைகளைத் தூண்டும் வண்ணம் திராவிட இயக்கத்தைப் பற்றியும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந் தனைகள், பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றியும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மையை பெரியார் பொது மக்களுக்கு எடுத்துச் சென்ற விதங்கள், மத, சாதியின் தாக்கங்கள், சமூக ரீதியில் அறவழி மூலமாக பெற்ற வெற்றிகள், பல அரசியல் தலைவர்கள், தந்தை பெரியாரின் வெளி நாட்டுப் பயணங்கள் குறிப்பாக அய்ரோப்பிய பயணம் ஆகிய மய்யக் கருத்துக்களை உள்ளடக்கி தன்னுடைய சிறப்பான உரையை நிறைவு செய்தார்.

இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் பல்வேறு சந்தேகங் களை, அவர்களின் வினாக்கள் மூலமாக வும் விடையளித்து வந்திருந்தவர்களின் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கெடுத்த அனை வருமே இதுகாரும் நாங்கள் எண்ணி யிருந்த பல தவறான கருத்துக்கள் இன்று முதல் எங்களில் இருந்து விடுபட்டு விடுதலையை அடைந்திருக்கிறோம் என்று தங்கள் மகிழ்ச்சிகளை தெரி வித்தனர்.

பல்கலைக் கழக வேந்தருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொலோன் பல்கலைக் கழக மாணவர்கள்.

இந்திய வார விழாவாக இவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரிக் நித்லஸ் அவர்களுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

Read more: http://viduthalai.in/page1/81720.html#ixzz346FP2DUP

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


முடி காணிக்கை எதற்காக?

இறைவனைத் தரிசிக்கும்போது எனது அகங்காரம் நீங்க வேண் டும். அதற்காக அழகுடன் நான் பராமரிக்கும் முடியை அர்ப்பணிக் கிறேன் என்பது அதன் தத்துவம்.

முகத்துக்கு அழகு மூக்கும் முழியும் தானே! அவற்றைக் காணிக் கையாக அளித்தால் அகங்காரம் மட்டுமல்ல; மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) ஒட்டு மொத்தமாக அகலாதா?

Read more: http://viduthalai.in/page1/81726.html#ixzz346FWNTdI

தமிழ் ஓவியா said...


குழந்தை திருமணமா?


சென்னை அரும்பாக்கத்தில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்த நமது காவல்துறை பாராட்டுக்குரியதே.

தனது விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் எனக்குத் திருமணம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனக்குத் திருமண வயது இன்னும் வரவில்லை; என்னைக் காப்பாற்றவும் என்று காவல்துறைக்குக் குறுந்தகவல் அனுப்பினார். தகவல் அறிந்த அமைந்த கரை காவல் துறையினர் அந்த வீட்டுக்குச் சென்றனர். திருவேற்காடு கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடைபெறவிருந்ததை உறுதி செய்தனர்.

சிறுமியைப் பெற்றோர்களிடமிருந்து மீட்டு சென்னை ஷெனாய் நகரில் உள்ள இந்தியக் கவுன்சில் ஆஃப் சைல்டு வெல்பர் பொறுப்பாளரிடம் ஒப்படைத் தனர் பள்ளிப் படிப்பைத் தொடர உதவுவதாகக் காப்பகப் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

இது ஏதோ வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கவனத்திற்கு வராமலேயே பெற்றோர்களின் அழுத்தத்தால் திருமண வயதை அடையாத பெண்களுக்குத் திருமணம் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இது மாதிரி திருமணத்தை நடத்தத் துடிக்கும் பெற்றோர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை இருந்தால்தான் - இதுபோன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட முடியும்; இல்லா விட்டால் வேறு மாதிரியான எண்ணம்தான் பெற்றோர்களுக்கு ஏற்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சிதம்பரத்தில் தீட்சதர் குடும்பங்களில் குழந்தைத் திருமணம் என்பது சர்வ சாதாரணம்.


தமிழ் ஓவியா said...

சிதம்பரம் நடராஜன் கோயில் திரண்ட சொத்துக்கள் தீட்சதர்களின் ஆதிக்கத்தில்தானே இருந்து வருகிறது. அந்தச் சொத்துகள் வெளியில் போகக் கூடாது என்பதற்காகவே குழந்தைத் திருமணங்களைத் தங்களுக்குள் செய்து முடித்துக் கொள்கிறார்கள் இது ஊரறிந்த ரகசியம் என்றாலும் காவல்துறை அந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பதே கிடையாது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைகள் திருமணம் என்பது சர்வ சாதாரணம். இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்துகொண்டதுகூட பால்ய திருமணம் என்றுதானே சொல்கிறார்கள் (குற்றந்தானே!)

அவர்கள் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பதால் பால்ய திருமணம் செய்வது இந்து சாஸ்திரப்படி சரியானது என்று முழுமையாக நம்புகிறார்கள்.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இந்தியாவில் கொண்டு வந்தபோது பார்ப்பனர்கள் அலறினார்களே.

ருதுவாகும் முன் கல்யாணத்தை நடத்த வேண்டும்; அப்படி நடத்தா விட்டால் ரௌரவாதி நரகத்திற்குப் போக நேரிடும் என்று பராசஸ்மிருதி கூறுகிறது.

குழந்தைத் திருமணத்தை நடத்தினால் ஜெயிலுக் குப் போக வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

நாங்கள் சட்டத்தை எதிர்த்து சிறைக்குச் சென்றாலும் சொல்லுவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நடந்து கொள்ள மாட்டோம் என்று பார்ப்பனர்கள் அலறி னார்கள். வெள்ளையர் ஆட்சி சாரதா சட்டம் கொண்டு வந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

மிஸ்மேயோ என்ற அமெரிக்க மாது இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று பார்த்தார். சிறு வயதில் திருமணம் செய்யப் பட்டதால் குறைந்த வயதிலேயே பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் கொடுமையான காட்சிகளை எல்லாம் பார்த்து கண்ணீர் விட்டார் அவர் எழுதிய மதர் இந்தியா என்ற நூலில் விவரித்துள்ளார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படியோ நடந் திருக்கலாம் - வளர்ந்த இந்தக் கால கட்டத்திலும் சிறுமி களுக்குக் கட்டாய திருமணம் என்பது அநாகரிக மானது.

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கச் செய்யும் இதுபோன்றவற்றைத் தடுப்பதில் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதில் அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

Read more: http://viduthalai.in/page1/81728.html#ixzz346FzvoBH

தமிழ் ஓவியா said...
எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியின் அரிய படைப்பு

கோபம், பெருவிருப்பம், அச்சம்

நரேந்திரமோடி ஒரு மாபெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்றாலும் நாட்டில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற் படும் என்பதற்கான அறிகுறிகளை அவரது அரசியல் ஏற்றம் காட்டுவதாக இல்லை.

நரேந்திரமோடியை அடுத்த பிரதமராக முன்னிறுத்திக் காட்டுவது என்ற பேராவலில், ஏதோ இதற்கு முன் இல்லாதது போல் 2014 மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது போன்று ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்து வந்தன. பழக்கம் காரணமாக எதனையும் மிகைப் படுத்திக் கூறும் ஊடகங்கள் ஒன்றை மறந்து விட்டன. இதற்கு முன்பும் பல முறை மிகமிக முக்கியமான முடிவுகளை கடந்த காலத் தேர்தல்களும் வெளிப்படுத்தியுள்ளன என்பதுதான் அது. நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தேர்தலில் தோற் கடிக்கப்பட்டதால் 1967 இல் காங்கிரஸ் கட்சி ஆற்றல் இழந்து வந்ததும், 1998 இல் முதல் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிகா ரத்துக்கு வந்ததும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவையே. அது போலவே 2014 மக்களைத் தேர்தலும் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கத் தகுந்ததே. என்றாலும், 30 ஆண்டுகாலத்துக்குப் பின் மக்களவையில் பா.ஜ, கட்சி தனியாக அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவுக்கு அக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதன் காரணம் நரேந்திர மோடி இக்கூட்டணியை வழிந டத்திச் சென்றதல்ல.

பணம் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற மோடி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு வந்துள்ளார். அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே வைத்திருப்பது, சர்வாதிகார மனப்போக்கு, அவர் முதல்வராக இருந்த போது குஜராத்தில் நடைபெற்ற மிகமிக மோசமான மதக்கலவரங்கள் போன்ற எதிர்மறை செய்திகளை மறைத்துவிட்டு, முன்னேற்றம், முன்மாதிரியான குஜராத், திறமையான ஆட்சி, திடமாக முடிவு எடுத் தல் போன்ற ஆக்கபூர்வமான திறமைகள் நரேந்திர மோடியிடம் மலிந்து கிடப்பது போன்று அவருக்கு ஒரு தனிப்பட்ட தோற்றத்தை இத்தேர்தலின்போது உரு வாக்கிக் காட்டுவதற்காக அனைத்துலக பொதுத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து விளம்பர ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு நடந்த தேர்தல் இது. மாபெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்த குஜராத் அரசின் முதலமைச்சர் கட்டி விட்ட கதைகள், அளித்த வாக்குறுதிகள் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்களில் பெரும் பாலானவை நரேந்திரமோடியை ஒரே ஒரு பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைத்த தேர்தல் இது. விளம்பரத்திற்காக மட்டுமே பா.ஜ.கட்சியினால் 5000 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிடப்பட்டுள்ளது என்று சுதந்திரமான நடுநிலையாளர்கள் மதிப்பிட் டுள்ளனர். இந்தியரின் சராசரி வருவாயைப் போன்று 30 மடங்கு வருவாய் கொண்ட மக்கள் வாழும் அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமா செய்த செலவை விட சற்றே குறைவானதுதான் இந்த பா.ஜ.க.யின் செலவும். தேர்தல் செலவுக்காக பெரும் அளவு நிதி திரட்டி வைத்திருந்த பா.ஜ.கட்சியினால் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே விலைக்கு வாங் கப்பட்ட ஊடகங்கள் மோடியின் சாதனை களைப் பற்றியோ அல்லது அவர் அளித்த எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றியோ எந்த விதக் கேள்வியும் கேட்காமல், 2002 குஜராத் மதக் கலவரங்களைப் பற்றி மக்கள் அனைவரும் மறந்து போகும் அளவுக்கு, சற்றும் மனச்சான்றோ, மன உறுத்தலோ இன்றி மோடியைப் போற்றித் தூக்கிப் பிடித்துப் பரப்புரை செய்து வந்த தேர்தல் இது. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தேர்தலுக்காக எந்த வித சிறு நிதி உதவியும் செய்யாத நிலையில், மோடியின் பிரசாரத் துக்காக மக்களை ஒன்று திரட்டவும், தேர்தல் பணியாற்ற உந்துதல் அளிக்கவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வை யிடவும், திரட்டப்பட்ட மாபெரும் தேர்தல் நிதி பயன்படுத்தப்பட்ட தேர்தல் இது. நியாயப்படுத்த இயன்ற முறையில் சற்று மிகைப் படுத்திக் கூறுவதானால், வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பெரும் வணிக நிறுவ னங்கள் அடித்த கொள்ளை என்று அழைக் கத் தக்க அளவில் நடைபெற்ற தேர்தல் இது.

தமிழ் ஓவியா said...


காங்கிரசின் மோசமான நிலைப்பாடுகள்

இவ்வாறு கூறுவதால், தேர்தலில் பா.ஜ. கட்சிக்கு வெற்றி பெற உதவிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - குறிப்பாக காங்கிரஸ் கட்சி - செய்த ஊழல்கள், தவ றுகள், செய்யத் தவறிய செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று நாம் கூற முன்வரவில்லை. ஊழல் மலிந்த அரசுக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சி இன்று முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு குடும்பத்தின் சொத்தாகவே ஆகிவிட்டது. ராணுவ ரீதியிலான பா.ஜ. கட்சியின் தேர்தல் பரப்புரையை எதிர் கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு சற்றும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அந்த அரசு செய்த - இயற்றிய சில உரிமைகள் அளிக்கும் சட்டங்கள், செய்த சில மனிதவள மேம்பாட்டுச் செயல்கள், நிறைவேற்றிய சில சமூக பாதுகாப்பு சட்டங்கள் என்பது போன்ற ஒரு சில சாதனைகளையும் - பணவீக்கத் தையும், வேலையில்லாத் திண்டாட்டத்தை யும் கட்டுப் படுத்தத் தவறிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயலற்ற தன்மை மக்கள் காண இயலாதபடி மறைத்து விட்டது. எப்படி இருந்தாலும், காங்கிரஸ் அர சின் சாதனைகள் அனைத்தும் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம் அளித்த வாக்குறுதிகள் முன் காணாமல் போயின. அய்க்கிய முன்னேற்றக் கூட்டணி அரசின் ஊழல் வழக்குகள் குறித்து கோப மும், சலிப்பும் அடைந்திருந்த வாக்காளர் களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன், முன்னேற்றம் என்ற செய்தியின் அடிப்படையிலேயே மோடியின் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டது.

ஆனால் இந்த முன்னேற்றம் என்ற செய்தி வெறும் புனுகுப் பூச்சு போன்ற வாய்ச் சவடால்தான். என்றாலும் அவர் களால் எப்போதுமே முகமூடியை அணிந்து கொண்டிருக்க இயலவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நரேந்திரமோடி பயன்படுத்திய கடுமையான குற்றச்சாட்டு களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவ்வப்போது இந்து வாக்கு வங்கிக்கு அவர் அவ்வப்போது தெரிவித்த செய்தியைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். பங்களா தேசத்தி லிருந்து வந்து குடியேறியவர்களைத் திருப்பி அனுப்புவது, மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்வதால் லாபம் பெறுவது யார் என்று கேட்பது, மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டும் என்ற பேச்சு ஆகியவை பிரதமராக ஆவதற்கு விரும்பும் மோடி ஒரு மிதவாதி அல்ல என்பதைக் காட்டுகிறது. தான் பிரதமராக வருவது பற்றி சிறுபான்மை மக்கள் தவறான கருத்து கொண்டிருந்தால், அதனைப் போக்கும் விதத்தில் பேசுவதற்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு முறை கூட அவர் முயற்சி செய்யவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். அத்துடன், மக்களவையில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.கட்சி உறுப்பினர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பதை பார்க்கும்போது, மோடியின் தலைமையின் கீழ் இந்திய நாடு பன்முகத்தன்மை கொண்டதாக எப்படி விளங்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படுவதற்குப் போதிய காரணங்கள் உள்ளன.

ஏமாற்றமே அளிக்கும்

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது மனித நல முன்னேற்றப் புள்ளிகளில் சராசரியை விட அதிக அளவில் எந்த சாதனையும் செய்யப்படவில்லை என்ப தைப் பார்க்கும்போது, பிரதமராக அவர் காலத்தில் எத்தகைய முன்னேற்றம் ஏற்படும் என்று சிந்திப்பது வாக்காளர்களுக்கு ஏமாற்றமே அளிக்கும். இதன் பின்னணியில் இந்துத்வா தனது கொடிய முகத்தினை வெளிப்படுத்தும் ஆபத்து எப்போதுமே இருக்கத்தான் செய்யும். மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர் ஆவார். என்றாலும் அவரது அமைப்பு சொல்வது அனைத்தை யும் செய்பவராக அவர் எப்போதும் இருந்த தில்லை. என்றாலும், அவருக்கும் அவரது அமைப்புக்கும் இடையே ஒரு புதிய நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, ஆர். எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்கள் ராமர் கோயில் கட்டுவது பற்றியும், பொது சிவில் சட்டத்தைப் பற்றியும் பேசத் தொடங்கி யுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

மோடியின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியபோது, எண்ணற்ற அரசியல் தரகர்களுக்கும், அறிவு ஜீவி களுக்கும் பா.ஜ.கட்சியின் பிரதமர் வேட் பாளர் ஏற்றுக் கொள்ளத் தக்கவராக ஆகிவரத் தொடங்கினார். காந்தி நகர் நரேந்திரமோடியை டில்லி பக்குவப்படுத்தி விடும் என்று விஷயம் அறிந்த சிலர் கூறினர். மோடி முயற்சி செய்தாலும் கூட, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாட்டில் மக்களாட்சி நடைமுறைக்கு எந்தவிதத் தீங்கும் இழைத்துவிட முடியாது என்பதே அவர்களது வாதம். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், கணக்குத் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற சுயஅதி காரம் படைத்த அமைப்புகள் பலமுறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட இயன்றவர்கள் தாங்கள் என்பதை மெய்ப்பித்துக் காட்டியுள் ளனர். இந்திய மக்களாட்சி முறையில் ஒரு ஆபத்து நிறைந்த சக்தியுடன் போரிட விரும்பாமல் தங்களது பதவிகளைத் துறக்க இந்த அமைப்புகளின் தலைவர்கள் தயாராக இருப்பார்கள் என்பதைப் போல , மணலில் தலையைப் புதைத்துக் கொண்டால் யாரும் பார்க்கமுடியாது என்ற கருத்தை அதிக அளவில் ஆதரிக்க இடம் இல்லை என்பது கவலை அளிக்கும் செய்தியாக இருக்காது.

நீதித்துறையும் விலக்கல்ல!

தமிழ் ஓவியா said...

இந்தியா குடியரசு நாடாக ஆகி 60 ஆண்டு காலம் கழிந்த பிறகும், உடைந்து போகும் அளவுக்கும், கைப்பற்றிக் கொள்ள இடம் கொடுக்கும் அளவுக்கும் இந்திய மக்களாட்சி அமைப்புகள் பல நிலைகளில் பலவீனமானவையாக இருக்கின்றன. பஞ்சாயத்து ராஜ், தொடக்க நிலை நீதித் துறை, மாவட்ட நிர்வாகம் முதற்கொண்டு மேலே டில்லி வரை உள்ள அமைப்புகள் தங்களுக்கென்று ஒரு பார்வையும், நோக்கமும் கொண்டு செயலாற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற சக்திகளால் கைப்பற்றிக் கொள்ளப்படுவதற்கு ஏற்றதாக பாதுகாப்பு அற்றதாகவும், சீரழிக்கத் தக்கதாகவும் உள்ளன. அமைப்பு ரீதியில் ஆற்றல் நிறைந்த ஒரு சக்தியை எதிர்த்து நிற்க வேண்டிய நிலை வரும்போது, தங்க ளது தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் சுயஅதிகாரம் பெற்ற மக்களாட்சி அமைப் புகள் எவ்வாறு விரைவாக கைவிட்டுவிடு கின்றன என்பதையும் நாம் பார்த்து வரு கிறோம். மோடிக்கு ஆதரவு பெருகுகிறது என்பதை வாசனை பிடித்த பிறகு, தாங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஊடகங்கள் தங்களது நடு நிலைத்தன்மையையும், சுதந்திரத்தையும் கைவிட்டுவிட்டதை நாம் காணவில்லையா? உயர்நீதித் துறையும் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அதன் சுதந்திரமும், அதிகாரமும் அண்மையில் சில ஆண்டு களாக வலுவிழந்த நிர்வாகத்துக்கு இணை யாக இருந்தது என்றாலும், 1971-76 இல் இந்திரா காந்தி ஆட்சியின்போது இருந்த தைப் போன்ற ஒரு பலமான நிர்வாகம் இருந்தால், தங்கள் விருப்பத்துக்கு உச்ச நீதிமன்றத்தையும் கூட வளைக்க முடியும் என்பது மெய்ப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. எழுபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஏற்ப இந்திய அரசியலை மறுவடிவமைப்பதற்கான தெளி வான வாய்ப்பு ஒன்று சங் பரிவாரத்துக்கு இப்போது அளிக்கப்பட்டு உள்ளது என்பது தான் நமது மிகப் பெரிய கவலையாகும். மக்களவையில் தங்களுக்கு உள்ள அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.கட்சி நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும்; அதே நேரத்தில் எதிர் கட்சிகள் வலுவிழந்து போவதை ஓர் ஆக்கபூர்வமான முன்னேற்றமாகக் காணமுடியாது என்பதால் அதனை அச்சத் துடன்தான் காணவேண்டும். அடல் பிகாரி வாஜ்பேயியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு சிறிய அளவு பெரும் பான்மையை மட் டுமே அரசு பெற்றிருந்தது என்பதால் இந் துத்துவ செயல்திட்டத்தை அந்த அரசினால் அதிக அளவில் நடைமுறைப்படுத்த இயல வில்லை.

பிராந்தியக் கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்டியுள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் நீங்கலாக மற்ற மாநிலங்களில் நடந்த தேர்தல் நரேந்திரமோடியைப் பற்றி நடைபெற்ற தேர்தலாகவே அமைந்தது. தனது உறுதிமொழிகள் மற்றும் மக்களி டையே பிரிவினையை ஏற்படுத்தும் திற மையை வைத்துக் கொண்டு இத் தேர்தலை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் திறமையின்மையைப் பற்றிய ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பா கவே மோடி வெகு எளிதாக மாற்றிவிட்டார். எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பிரதமராக வருவதற்கு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இயன்ற, மக்களை மத அடிப் படையில் பிளவு படுத்த இயன்ற ஒருவரே பொருத்தமானவர் என்பதன் அடிப் படையில் இந்தியாவின் எதிர்காலம் இருக் கும். ஆனால் அரசியல் கட்சிகள் வாக்காளர் களுக்கு அளிக்கும் திடமான செயல்திட்டத் தின் அடிப்படையிலேயே நமது எதிர்கால அரசியல் இயங்கவேண்டும். கடந்த காலத்தை விட இப்போது அத்தகைய செயல் திட்டங்கள் எதுவுமில்லாத நிலையில் இந்திய மக்கள் முன் முக்கிய அரசியல் கட்சிகள் எத்தகைய செயல்திட்டங்களை வைக்க முடியும் என்பதைப் பற்றி கலந்துரையாடல் களும், விவாதங்களும் மட்டுமே மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அதற்கு மாறாக, ஆட்சி மாற்றத்தை ஆவலுடன் விரும்பும் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் ஒரு பிரச்சாரத்தைத்தான் இன்று நாம் காண் கிறோம். அனைத்து சமூகத்தினர், பிரிவினர் பற்றி கவலையோ, மரியாதையோ அற்ற முறையில் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தும் இப்பிரச்சாரம்தான் மேற்கொள்ளப் பட்டது. மிகப் பெரிய சவால்!

செய்தி எதனையேனும் 2014 தேர்தல் தெரிவிப்பதாக இருந்தால், இந்தியா மாற்றம் பெற்று வருகிறது என்பதுதான் அந்தச் செய்தி. ஆதரவுக் குரல் அற்றவர்கள் பால் சகிப்புத் தன்மையோ பரிவோ இல்லாமல் ஆதரவுக் குரல் உள்ளவர்கள் நடந்து கொள்ளும் ஒரு சமூகமாக நமது சமூகம் மாறி வருகிறது. தங்களது கருத்தினை, உணர்வினைத் தீவிரமாக வெளிப்படுத்த மதத்தையும் தேசியத்தையும் கலக்கும் ஒரு தீவிரமான சூழ்நிலைதான் இது. அதனால், 2014 தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட, மக் களாட்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி கவ லைப்படும் தனிப்பட்ட மக்கள், ஆர்வலர்கள், குழுக்கள் மற்றும் கட்சிகளுக்கு இது ஒரு மாபெரும் சவாலாக விளங்குவதாகும். அனைத்து மக்களின் நலன்களுக்கும் மத்திய அரசே பொறுப்பாக இருக்கும் அமைதி நிறைந்த எதிர்காலத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட இந்தியா எதிர் பார்க்கும் அளவுக்கு, நாட்டு நடப்புகளைக் கண்காணித்து, ஒருங்கிணைத்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் மீது அவர்கள் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி அறிவித் துள்ள புதிய யுகம் ஏதோ நம்பிக்கையுடன் எதிர்பார்க்க இயன்ற ஒன்றல்ல; ஆனால் அது அய்யத்துடனும், அச்சத்துடனும் எதிர்நோக் கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும்.

(எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி 24.5.2014)

Read more: http://viduthalai.in/page1/81730.html#ixzz346GGyvlJ

தமிழ் ஓவியா said...


மனிதனாக...


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/81727.html#ixzz346GcNvcO

தமிழ் ஓவியா said...


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!


திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.

தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கி டாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 24.11.1929 (தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர் வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346HK2Bhw

தமிழ் ஓவியா said...

கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதி யானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக்கலாம்.இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்க பட்டவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346Hb8HJK

தமிழ் ஓவியா said...


திரு.குருசாமி - குஞ்சிதம் திருமணம்


சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ஆம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ரிவோல்ட் உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங் களைவிடச் சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை.

முதலாவதாக, இது ஒரு காதல் மணம், மணமகனும் மண மகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர் களாகையால் அவ் விருவரும் ஒருவரையொருவர் காதலித்துச் செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம்.

இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மண மகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத்தின் சிறப்பைக் கூறுமுன் மணமகனது ஜாதியாராகிய முதலி யார் எனப்படுவோர்கள் இவ்விதக் காதல் மணங்களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என் பதைப் பற்றிச் சிறிது கூறாமல் இருக்க முடியவில்லை.

திருமணத்தின் முதல் நாளன்று அவரது தங்கையார் கிணற்றில் விழுந்து விட்டதாகவும், இன்னும் இது போன்ற பலவாறான பொய்த் தந்திகளையனுப்பிய தோடும் ஜாதியை விட்டு விலக்கி விடுவதாகவும் பல பய முறுத்தல் கடிதங்களையும் எழுதினார்களென்றால், இந்த சீர்திருத்த உலகத்தில் இந்த வகுப்பாரது மனப்பான்மை எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலையிலிருக்கிறது என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளும்படி விட்டு விடு கின்றோம்.

ஆனால், இந்த சமூகத்திலுங்கூட முற்போக்கான அபிப்பிராயங்களைக் கொண்ட சில பிரமுகர்களைக் குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. உதாரணமாக, இந்தத் திருமணத்தை ஆதரித்து வாழ்த்துச் செய்திகளனுப்பிய திருவாளர்கள் சீர்காழி சிதம்பரநாத முதலியார், பி.டி.ராஜன், கனம் மந்திரி முத்தையா முதலியார், திருநெல் வேலி சிதம்பரநாத முதலியார் போன்றவைகளின் ஆதரவானது நமக்கு பெரிய ஊக்கத்தைக் கொடுப்பதோடு அந்தச் சமூகத்திற்கே முற்போக்கடையும்படியான சந்தர்ப்பமும் கிட்டியிருக்கிறது என்று உறுதியாய்க் கூறுவோம்.

இரண்டாவதாக, மணமகள் செல்வி குஞ்சிதம் அவர்களின் கல்வி அறிவையும், அவர்களது சீர்திருத்த கொள்கைகளையும், அவர்கள் ரிவோல்ட்டில் ஆங்காங்கு எழுதி வந்திருக்கின்ற கட்டுரைக ளிலிருந்து இனிதறியலாம்.

மேலும், குஞ்சிதம் அவர்கள் திருமணத்தன்றைய தினமே மாலையில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் மேடையின் மீதே முதன்முதலாக செய்தஆங்கிலப் பிரசங்கமே எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு அவர்களது பிற்கால ஆற்றலைப் பற்றி நாம் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கக் கூடிய வர்களாயிருக்கிறோம்.

மேலும் மணமகள் தெலுங்கிலும் சொற்பொழி வாற்றக்கூடிய தேர்ச்சி பெற்றிருப்பதால் நமது சுயமரி யாதை இயக்கம் தெலுங்கு நாடு களிலும் பரவவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்து விட்டதற்காக நாம் பெருமகிழ்ச்சி யடைகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் கல்வியின் உயர்வை நன் குணர்ந்து மணமகளை உயர்ந்த கல்வி பயிற்றுவித்த அவரது பெற்றோர்களை வாழ்த்தாம லிருக்க முடியவில்லை.

இதர தாய் தந்தைமார்களும் இவர்களைப் பின்பற்றி தங்கள் பெண்களையும் பல துறைகளிலும் தேர்ச்சிபெறக் கூடிய கல்விகளைப் போதிப்பார்களானால், இத்தகைய காதல் மணங்கள் நம் நாட்டில் பெருகும் என்பதற்கு அய்யமில்லை. மணமகனும் மணமகளும்,

சுயமரியாதை இயக்கத்துக்குத் தக்க ஊன்று கோலாக இருந்து தங்களது - சந்தோஷமான வாழ்க்கையாலும் நடத்தையாலும் பிற்போக்குள்ள மக்களுக்கு ஒருவழி காட்டிகளாக இருந்து இத்தகைய திருமணங்கள் நமது நாட்டில் பெருகி மக்களது அறிவும் வளர்ச்சி பெற்று, தங்களைப் போலவே பிறரும் கலக்கமற்றவாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவார்களென்று நம்புகிறோம்.

இளைஞர் உலகத்துக்கு ஒரு பேரூக்கம் அளிக்கத்தக்க செயலை தம் மணவினையால் நிகழ்த்திக் காண்பித்த திரு.குருசாமி அவர்களையும் திருமதி. குஞ்சிதம் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 15-12-1929

Read more: http://viduthalai.in/page1/81718.html#ixzz346HitVYM

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கை களையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலை வராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான் கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப் பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HsaMeJ

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.

அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HzH8T8

தமிழ் ஓவியா said...


ஜூன் 8: உலக கடல் தினம் மாறிவரும் கடல் நீரோட்டத்தால் குறையும் ஆக்சிஜன்

நாளை (ஜூன் 8) உலக கடல் தினம்: கடல் தான் நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி, அழகிய நீலவண்ண வானம் தெரிவதற்குக் காரணமே கடல் தான். அதை விட மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில் பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானதாகும். 1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

அதுவும் மிகவும் விரை வாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம். இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம் நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும் ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.

இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின் பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள் மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் துவங்கிவிட்டது. உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை விடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.

இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.

அய்.நா. சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு மாநாட்டின் கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம் செலுத்தி வருகின்றனர்.

ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை தூய்மைப்படுத்தவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக் கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் ஆண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத் துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ நிலையை மாற்றிவிடும்.

வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற ஆபத்துகளை நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும். பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் செல்வோம்.

Read more: http://viduthalai.in/page1/81704.html#ixzz346I6xrsN

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


தியானம்

ஆன்மீகப் பயிற்சி யில் தீவிரமாக ஈடுபட் டிருந்த ஒரு சாதகன் ரமண மகரிஷியிடம் சென்று சுவாமி, நான் 18 வருஷங்களாக ஏக நிஷ்டையில் தியானம் செய்து வருகிறேன். இன்னும் எனக்குச் சித்தி கிடைக்கவில்லை இன் னும் எத்தனைக் காலம் தியானம் செய்ய வேண் டும்? என்று கேட்டான்.

அப்பொழுது ரமண மகரிஷி அட பைத்தியக் காரா! தியானம் செய்கி றோம் என்பதை மறந்து போகும் வரை செய்ய வேண்டும் என்று கூறி னாராம்.

ஆமாம் ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த ரமண மகரிஷி அப்படி யெல்லாம் தியானம் செய்து கண்ட பலன் என்ன? புற்றுநோய் கண்டு தானே படாதபாடுபட்டு மரணம் அடைந்தாரே

Read more: http://viduthalai.in/e-paper/81846.html#ixzz34C68NGtj

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைபுதுடில்லி, ஜூன் 9- நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி, மக்க ளவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றுச் சென்றனர். குடியரசுத் தலைவர் உரை முக்கிய அம்சங்கள்:

பணவீக்கத்தை கட்டுப் படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.

நாட்டில் வறுமை ஒழிக்கப்படும்.

அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.

இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங் கும்.

உணவுப் பொருட்களை பதுக் குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் அய்.அய்.டி, அய்.அய்.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

அனைவருக்கும் சுத்தமான தண் ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.

விளையாட்டுத் துறை ஊக்கு விக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மய்யம் அமைக் கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன் முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.

மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங் களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நட வடிக்கை எடுக்கும்.

அனைத்து சிறுபான்மை சமு தாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.
கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்

மதரஸாக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.

பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக் கும் வகையில் 'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந் நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.

நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.

அதிவேக விரைவு ரயில் திட் டத்தை மேம்படுத்த 'வைர நாற் கரம்' திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத் தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள் ளும்.

பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.

வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

என குடியரசுத் தலைவர் உரையில் தெரிவித்துள்ளார்.


Read more: http://viduthalai.in/e-paper/81848.html#ixzz34C6gySzd

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் நிலை: ஆட்சி மாற்றம் - காட்சி மாறவில்லையே!


தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு என்றுதான் முடிவோ? - என்ற கேள்விக் குறி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

1983ஆம் ஆண்டுக்கு பிறகு இது அனேகமாக அன்றாடப் பிரச்சினையாகி இருக்கிறது; எத்தனைத் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற புள்ளி விவரம்கூட சரியாகக் கிடைக்க முடியாத அளவுக்குச் சிங்கள இனவெறி தலை விரித்துத் தாண்டவம் ஆடி வந்திருக்கிறது - வருகிறது.

ஆட்சி மாறும் - காட்சி மாறும் என்று பேசியவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டுள்ளனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது; அவர் பிரதமராக பதவிப் பொறுப்பு ஏற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக் சேயும் அழைக்கப்பட்டார் - கடும் எதிர்ப்புக்கிடையே; டில்லி வந்த இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தையெல்லாம் நடத்தி இருந்திருக்கிறார்.

இது நல்லெண்ண சமிக்ஞை என்றெல்லாம் தூக்கிப் பேசப்பட்டது. ஆனால், நிலைமை என்ன? அவர் டில்லி யிலிருந்து கொழும்பு சென்ற ஈரம் காய்வதற்கு முன்ன தாகவே சிங்களக் கடற்படை தனது கோர முகத்தைக் கோணங்கிதனமாகக் காட்ட ஆரம்பித்து விட்டதே!

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் முதற்கட்டமாக 33 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு கடந்த 7ஆம் தேதி இராமேசுவரத்திலிருந்து 10 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை மீண்டும் சிறைப் பிடித்தனர்; அதே போல புதுக்கோட்டை மாவட்டம் செகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள், இராமநாதபுரத்திலிருந்து சென்ற எட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 82 தமிழக மீனவர் கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 8 விசைப் படகுகள் முடக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 77 முறை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வழக்கம் போல தமிழக முதல் அமைச்சர் பிரதம ருக்குக் கடிதம் எழுதுவது, இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற சம்பிரதாய நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

தமிழ் ஓவியா said...


வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லையா!? 8.12.1999க்கும் 18.10.2003க்கும் இடையே பிஜேபி ஆட்சிக் காலத்தில் எட்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வழி விட்டான், செல்ல பாண்டியன், முனீஸ்வரன், பாபு, முருகன், சரவணன், கோட்டை, நாகநாதன் ஆகியோர் அப்படிப் படுகொலை செய்யப்பட்டவர்களே!

இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே. அவர்களை அவரால் மீட்க முடிந்ததா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. குஜராத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் இந்த மீன் பிடி காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 படகுகள் முடக்கப்பட் டுள்ளன; இதன்மீது எந்தவித உருப்படியான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லையே!

இன்றைய நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மொத்த குஜராத் மீனவர்களின் எண்ணிக்கை 240. இதுவரை குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைச் சாலைகளில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திரமோடி தானே இருந்தார். இந்த வகையில் அவர் சாதித்தது என்ன?

பிஜேபியின் 16ஆம் மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து எந்த ஒரு சொல்லாடலும் கிடையாதே!

கேட்டால் வெளிநாட்டுக் கொள்கைகள் - நயந்து தான் போக வேண்டும். பக்குவமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பார்கள். கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தப் பாதையில் பயணித்ததோ, அதே பாதையில்தான் அட்சரம் பிறழா மல் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நடைபோட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் அடிப்படையில் எந்தவித வேறுபாடும் கிடையாது; ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று சொல்லி வந்துள்ளதை மோடி தலைமையிலான இன்றைய அரசு நாளும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறது.

மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமேதான் மிச்சம்.

கடிதம் எழுதினால் போதுமா என்று அன்றைய முதல்வர் கலைஞரைப் பார்த்துக் கேள்வி எழுப்பி வந்த அதிமுக பொதுச் செயலாளர் இப்பொ ழுது முதல் அமைச்ச ராக இருக்கும் நிலையில், கடிதம் தான் பிரதமருக்கு எழுதிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க!

Read more: http://viduthalai.in/page-2/81856.html#ixzz34C72WMbI

தமிழ் ஓவியா said...


பட்டை கிராம்பு ஏலக்காய்


அன்றாடச் சமையலில் நாம் உபயோகிக்கிற கடுகு, பெருங்காயத்தில் தொடங்கி, அரிதாக உபயோகிக் கிற பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் வரை அனைத்துக்கும் மாபெரும் மருத்துவ குணங் களும் உண்டு. சில வகையான மசாலா பொருள்களுக்கு பசியைத் தூண்டும் சக்தியும் உண்டு. இன்னும் சில வகைப் பொருள்கள் நம் குடலை சுத்தப்படுத்தக் கூடியவை.

பட்டை மசாலா பொருள்களின் ராணி என்று பார்த்தால் பட்டை எனலாம். அதற்கொரு ஆழமான மணமும், மருத்துவக் குணங்களும் அதிகம். பட்டையை லேசாக வறுத்துப் பொடித்து, அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

பூஞ்சைத் தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பட்டைப் பொடியை வெளிப்பூச்சாகத் தடவினால் குணம் தெரியும். பெரும்பாலான மருத்துவர்கள், பிரியாணி வகையறாக்களை நிறுத்தச் சொல்லியோ, குறைக்கச் சொல்லியோ அட்வைஸ் செய்வார்கள். காரணம், அதிலுள்ள அதிகபட்ச கொழுப்பு.

சுவையின் காரணமாக அளவுக்கு மீறியும் உட்கொள்கிறோம். தவிர்க்க முடியாமல் இப்படி கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள நேர்ந்தால், உடனே மேலே சொன்னபடி பட்டைக் கஷாயம் குடித்தால், உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு அதிகமாகி, உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கிராம்பு சமையலுக்கு சுவையையும் அதைவிட, அதிகமாக மணத்தையும் கொடுக்கக்கூடியது. பல்வலிக்கு கிராம்பு பிரமாதமான மருந்து. சளி, தொண்டை வலி போன்ற பல உடல் உபாதைகளுக்கும் கிராம்பு தைலம் கலந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால், உடனடி நிவாரணம் தெரியும். தசைப் பிடிப்பை நீக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

இந்த எண்ணெய் கலந்து மசாஜ் செய்கிறபோது பலனை உணரலாம். ஏலக்காய் சுவையும், மணமும் கொண்ட ஏலக்காய்க்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் சக்தி உண்டாம். இதில் அளவுக்கதிகமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. வாய் துர்நாற்றத்தை விரட்டும்.

மன அழுத்தத்தை விரட்டும். பெருங்காயம் இந்தியச் சமையலின் பிரத்தியேக மணத் துக்கும் சுவைக்கும் முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படுகிற பெருங்காயம். பெருங்காயம் என்பது ஒரு மரத்தின் பிசின். இது செரிமானத்துக்கு உதவக்கூடியது.புரதச்சத்து அதிக முள்ள உணவுகளில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81832.html#ixzz34CAXNIS3

தமிழ் ஓவியா said...


நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது.

கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக் கூடிய பொருள்கள் உள்ளன.

பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடி யது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும். நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடு வதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும்.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப் படும் ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கி யமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்துக் காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டி ருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவ னாய்ட்ஸ் காணப்படுகிறது. மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கிய மாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAfGym0

தமிழ் ஓவியா said...

டான்சில்ஸ்

டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்பக்கத்தில் உள்ளது. அடினாய்டு என்பது மூக்கின் பின்புறம், தொண்டையின் மேல் அண்ணப் பகுதியில் உள்ளது. காற்று உள்ளே புகுந்து செல்கிற பாதையில் அமைந்திருப்பவை இவை இரண்டும். அதனால் நோய் தொற்று ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இவற்றினால் வடிகட்டப்படும். நோயை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும், இந்த டான்சில்ஸ் பகுதியிலேயே சில நேரங்களில் இன்ஃபெக்ஷன் உண்டாகி வீக்கமடையும்.

இந்தப் பிரச்சினை குழந்தைகளை அதிகம் பாதிக்கக் காரணம், பெரியவர்களைப் போல அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது முழுமையடைந்திருக்காததே. சுகாதாரமின்மை யும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ள யாருக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். நீரிழிவு பாதித்த பெரியவர் களுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கிற காரணத்தினால் இது பாதிக்கலாம்.

இதை தடுக்கும் முறைகள் வருமாறு: ஒவ்வொரு முறையும் சாப்பிடும் முன்பும், சாப் பிட்ட பிறகும் தரமான சானிட்டைசர் உபயோகித்து கைகளைக் கழுவும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளச் சொல்லித் தர வேண்டும். மூக்கைத் துடைக்க எப்போதும் சுத்தமான கைக்குட்டை அல்லது டிஷ்யூ உபயோகிக்கப் பழக்க வேண்டும். டான்சில்ஸ் என்பது நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாட்டின் விளைவு என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிற உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAmExbr

தமிழ் ஓவியா said...

இயற்கை தரும் மருத்துவம்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக் கும் தன்மை மிளகுக்கு உண்டு.

சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப் படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.

வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAtE6Lk

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியத்திற்கு 6 உணவுகள்


ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன.

நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான எச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்சினையைச் சரி செய்வ துடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப் போகும் பிரச்சினையைத் தவிர்க்கும். ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.

சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச் சினையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின் என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81834.html#ixzz34CB2FpAM

தமிழ் ஓவியா said...


மோடி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும்? சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மய்யக் கருத்து


லண்டன், ஜூன் 9--இந்தியத் தேர்தல்களில் கடந்த 30 ஆண்டுகளில் 1984 ஆண்டிற்குப்பிறகு யாரும் பெறாத அளவில் 545 உறுப்பினர்களில் 282 நாடாளுமன்ற உறுப் பினர்களை தனிக்கட்சி பெரும்பான்மையுடன் மக்களவைக்கு பாஜக பெற்றுள்ளது. அதன் கூட்டணியுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற் றுள்ளது.

மோடி இதுவரை யாரும் பெற்றிராத அள வில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது முரண் பாடானவராக பார்க்கப் பட்ட அரசியல்வாதி, மோடி வணிக நட்பில் அதிக நாட்டத்துடன் உள்ளதால், வரும் அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் அதிகாரத்தை தக்க வைத் துக் கொள்வார்.

அவரு டைய நிர்வாகம் என்பது தேனிலவுக்கு ஒப்பாக மகிழ்வாக எண்ணமுடி யாது. அய்க்கியப் பேரர சின் சர்வதேச அமைப் பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு அமைப்பு ஜுன் 5 ஆம் நாளில் வெளியிட் டுள்ள சிறப்பு அறிக்கை யில் இவ்வாறு கூறி உள்ளது.

அந்த ஆய்வு அறிக் கையின்படி,

தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சரிபாதி அளவினர் நாட்டில் உள்ள மாநிலக்கட்சி களைச் சார்ந்தவர்கள். மாநில அளவில் ஆட்சி செய்பவர்களும் ஆவார் கள். கொள்கை முடிவு களில் சுயேச்சையாக தீவிரத்தன்மையுடன் முடி வுகளை எப்படி வேண்டு மானாலும் எடுப்பார்கள். 2003-2008 இல் இருந் ததைவிட தற்போது 5 விழுக்காடு அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

வாக்காளர்கள் தூய்மை யான அரசு நிர்வாகத்தை யும், அரசின் சேவைகளில் முன்னேற்றத்தையும், நல்ல திட்டங்கள், பணிகள் எப்போதுமே உயர்ந்த அளவில் இருக்கவேண் டும் என்று எதிர்பார்க் கின்றனர்.

மோடியின் அயலுறவுக் கொள்கை சம அளவில் இருக்குமா என் பது அய்யத்துக்கிடமா கவே உள்ளது. சீனாவுடன் சுமுக உறவு, ஆஃப்கானிஸ்தானி லிருந்து நேட்டோ படை திரும்பப் பெறுதல், அருகாமை நாடுகளிடம் வளர்ந்து வரும் பாதுகாப் பின்மை உணர்வு, இவற்றை மேற்கத்திய நாடுகள் விரும்புவது போல் நடுநிலையில் இருந்து செயலாற்றும் பாங்கு இவை அனைத் தையும் பிரதமர் என்கிற முறையில் கவனத்தில் கொள்ள வேண்டி உள் ளது.

மோடியின் தலை மைப் பண்புகுறித்து ஆரா யும்போது, இந்தியாவின் முக்கியமான பங்கு வணிகத்தவருடன் உள்ள உறவை ஒட்டியே கொள் கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை உள்ளது என்று ஆய் வறிக்கையில் குறிப்பபிடப் பட்டுள்ளது.

மேலும், இராணுவத்துக்கான செலவினக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றிற்கு தாராள பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகிய வற்றின்மூலம் அமைதி யின்மை ஏற்படும் அபா யம் உள்ளதாக ஆக்ஸ் ஃபோர்டு ஆய்வு எச் சரிக்கிறது. பொருளாதார ஒருங்கிணைப்பை அரசு இடைக்கால இலக்காகக் கொண்டுள்ளது.

வருவாய் தேவை அதிகரிப்பு சவா லாக இருப்பதுடன், நிலச் சீர்திருத்தங்களை எண் ணும்போது முடியாத ஒன்றாகவே இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81847.html#ixzz34CBGsGiV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!


aarthi anbalagan

Jun 9 (2 days ago)

to me

Hello sir,

Your newspaper ((Viduthalai) containing lot of useful information. Particularly Employment news very useful for me because I am looking for job. But this news fully based on government jobs. most of the people are not interested in government jobs. so, this is my request, try to publish private jobs also sir.
thank you

நமது இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பில்லாத தோழர்கள்கூட ஒவ்வொரு கோணத்தில் விடுதலையின் பலனைத் துய்த்து வருகிறார்கள் - வரவேற்கிறார்கள். எனவே விடுதலை சந்தா சேகரிப்பில் இறங்குங்கள் நல்லாதரவு நிச்சயம் கிட்டும்.

மறவாதீர்! இம்மாத இறுதிக்குள் 12 ஆயிரம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் நமது இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81904.html#ixzz34F9qeXky

தமிழ் ஓவியா said...


பசுமலை - சிறுமலை

திராவிடர் கழகத்தின் சார்பில் களப்பணி முகாம்கள் கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்து வருகின்றன. கடந்த மாதம் புதுச்சேரியில் நேர்த்தியாகத் தொடங்கப் பட்டது. கடலூர், சிதம்பரம் மாவட்டக் கழகத் தோழர்களுக்கு வடலூரில் முகாம் நடத்தப்பட்டது.

கடந்த சனியன்று மதுரை பசுமலையிலும், ஞாயிறன்று திண்டுக்கல் சிறுமலையிலும், முறையே மதுரை, புறநகர், விருதுநகர், திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்குக் களப் பணி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.


கழகப் பொறுப்பாளர்களுக்கு மட்டுமான பட்டறை இது; கழக அமைப்புப் பணிகள், பதிவேடுகள், ஆண்டு ஒன்றுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்துரையாடல்கள், பிரச்சாரக் கூட்டங்கள், ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், உறுப்பினர் சேர்த்தல், புத்தகச் சந்தை நடத்துதல் மற்றும் தொண்டறப் பணிகள்பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

பகுத்தறிவுத் தகவல் பலகை, பெரியார் வாசகர் வட்டம் சுவர் எழுத்து, வாயிற் கூட்டங்கள், துண்டறிக்கை விநியோகம் குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்கள் என்று இலக்குகள் வரையறுக்கப்பட்டு கழகப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தோழர் களும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கருத்துக்களையும், திட்டங்களையும் கவனமுடன் கேட்டனர். அவர்களின் அய்யப்பாடுகளையும் தெரி வித்தனர். அவற்றிற்கெல்லாம் கழகப் பொறுப்பாளர்கள் உரிய முறையில் விளக்கங்களைஅளித்தனர்.

பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சூழலில் சமூகப் புரட்சி இயக்கமான கழகம் எந்தெந்த வகைகளில் எல்லாம் மதச் சார்பற்ற கொள்கைகளையும், சமூக நீதியையும், முன்னெடுத்துச் செல்லுவது என்பதற்கான கருத்துகளும், திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

சமூகநீதியில் இன்றைய கால கட்டத்தில் பெறப் பட்டுள்ள உரிமைகளின் அளவு, பெற வேண்டிய இலக் குகள்பற்றி தக்க புள்ளி விவரங்களுடன் விவாதிக்கப் பட்டன.

மத்திய அரசுத் துறைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி உரிமை உடையது என்றாலும் இதில் இன்னும் ஏழு சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்று நினைக்கும் பொழுது, இத்திசையில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதைச் சிந்திக்க வேண்டும்.

திராவிடர் இயக்கத்தின் சித்தாந்தம், கொள்கைக் கோட்பாடுகள், சாதனைகள் புதிய தலைமுறையின ரிடத்தில் சென்றடையவில்லை. இந்த நிலையில் அவர்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்லுவது கட்டாயமாகும்.

மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை, முகாமைப்படுத்தி வலுப் பெறச் செய்து, அவர்கள் மூலமே இந்தச் சாதனையை நிகழ்த்த இயலும் என்பதால் இத்திசையில் கழகப் பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த மாத இலக்காக 12,000 விடுதலை சந்தாக்கள் சேர்ப்பதில் கழகத் தோழர்கள் கடமையாற்ற வேண்டும். கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆக வேண்டும். அதே போல ஒவ்வொரு கழகத் தோழரும் இரண்டு விடுதலை சந்தாக்கள் திரட்டுவது என்ற முறையில் பணியாற்றினால் ஒரே வாரத்தில் இந்த பணியை நிறைவேற்றி முடிக்கலாம்.

நாம் எவ்வளவுப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினாலும் நாள்தோறும் வெளிவரும் விடுதலை அதிக எண்ணிக்கையில் பரவினால் தான் நமது கருத் துக்கள் போய்ச் சேர முடியும். களத்தில் பணியாற்றும் கழகத் தோழர்களும் அன்றாடம் கழகத் தலைவரின் கருத்துகள், நிலைப்பாடுகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்றாற்போல பணிகளை ஆற்ற முடியும்; மக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இலகுவாக ஏதுவாகும்.

ஒரு பக்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை, இன்னொரு பக்கத்தில் களப் பணி முகாம்கள் இரண்டும் இணையும் பொழுதுதான் உரிய பலன்கள் கிடைத்திட முடியும்.

இயக்க இளைஞர்கள் கணினிப் பயிற்சி பெறு வதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது, இன்றைக்கு முகநூல் மூலம் சண்டமாருதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் களத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கைப்பேசி மூலம் குறுஞ் செய்திகளை அனுப்பலாம்; கருத்துக்களைப் பரப்பலாம்.


தமிழ் ஓவியா said...

அஞ்ஞான கருத்துக்களை விஞ்ஞானக் கருவிகள் மூலம் பரப்பிக் கொண்டுள்ள நிலையில், விஞ்ஞான சிந்தனையின் கூர் முனைக் கருத்துக்களைக் கொள்கை யாகக் கொண்ட நாம் தொழில் நுட்ப சாதனங்களைக் கையாள வேண்டாமா?

எனவே, தோழர்களே! எப்பொழுதும் தொடர்போடே இருங்கள் - எதிர் நிலையாளர்களின் செயல்பாடுகளை யும் கணித்து வாருங்கள். நாம் நமது இலட்சிய பயணத் தில் பயணிக்கும் போதே எதிர்வரும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் ஈர்ப்பை நாம் தட்டிச் சென்றாக வேண்டும்.

மற்றொரு முக்கிய கருத்து: இயக்கம் அவ்வப்பொழுது வெளியிட்டுக் கொண்டே இருக்கும் வெளியீடுகளை, நூல்களைப் படிக்கத் தவறாதீர்! வணிக நிறுவனங்களை நடத்தும் தோழர்கள் நமது இயக்க நூல்களையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டலாமே!

சால்வைகளுக்குப் பதில் சந்தாக்கள் - திருமணப் பரிசாக பணம் அளிக்காமல் சந்தாக்களை பதிவு செய்வீர்! முக்கியமான கால கட்டம் இது. முகிழ்த் தெழும் ஒளிக்கற்றையாக ஓங்கி எழுவீர் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81911.html#ixzz34FALEyYj

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்

சிவகாசி பார்ப்பனர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை, ஜூன்.10--_ பார்ப்பனர்களுக்கு எதி ராக திராவிடர் கழகம் பேசுவதாகவும் அவ்வாறு பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சிவகாசி வக்கீல் பார்ப் பனர் கார்த்திகேயன் என் பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக் குத் தொடுத்துள்ளார்.

செய்தி வருமாறு: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், வழக்குரை ஞர் இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திராவிடர் கழக தலை வர் வீரமணி பிராமணர் சமூகத்துக்கு எதிராகவும், பிராமணர்களை அவ தூறாகவும் தொடர்ந்து பேசி வருகின்றார். 2012ஆ-ம் ஆண்டு திருவானைக்காவலில் நடந்த பொதுக்கூட்டத் தில் வர்ணாசிரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும், வர்ணாசிரமத் துக்கு எதிரான போராட்டம் வன்முறை அல்லாத ஒன்றாக இருக்காது என்றும் கி.வீரமணி பேசி உள்ளார்.

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தின் பெயரில் கடை கள், பள்ளிகள் போன்ற வற்றை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பிராமணாள் கபே என்று இருப்பதில் என்ன தவறு உள்ளது?.

அகத்தியர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுப்பிரமணிய பாரதி, ராமானுஜர் போன் றவர்கள் பிராமண சமூ கத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள், ஜாதி வேறுபாடு களை களையவும், சமூக சீர்திருத்தங்களுக் காகவும் பாடுபட்டு உள் ளனர்.

தனிமனித சுதந்திரத்துக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் திராவிடர் கழகம், பிராமணர் சமூகத்தினரை தொடர்ந்து அவ தூறாக பேசி வருவது நியாயமற்றது.

எனவே, கி.வீரமணி, மீது நடவ டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பிராமணர் களுக்கு எதிராகவும், அவதூறாகவும் திராவிடர் கழகம் பேச தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகி யோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை நாளை (11-ஆம் தேதி)-க்கு தள்ளி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/81903.html#ixzz34FB5MPj5

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


விளம்பர யுக்தி

திருப்பதி - லட்டு, பழனி - பஞ்சாமிர்தம், திருவில்லாலை - பாயசம், அழகர்கோயில் - தோசை, காஞ்சிபுரம் - குடலை இட்லி, உப்பிலியப்பன் கோயில் - உப்பில்லாத பிரசாதங்கள், சிதம்பரம் - களி, வைத்தீஸ்வரன் கோயில் - தினைமாவு, குணசீலம் - தேங்காய்ப்பூ, பிள்ளையார்ப்பட்டி - பிடி கொழுக்கட்டை, குருவாயூர் -நல்லெண்ணெய், சபரி மலை - நெய், சங்கரன் கோயில் - புற்றுமண், இவையெல்லாம்தான் பிரசித்த பெற்ற கோவில் பிரசாதங்களாம்.

கடவு ளுக்கு உருவங்களும் அவற்றுக்காகக் கோயில் களும் கட்டப்பட்ட நிலை யில் அவற்றை நிலை நிறுத்தவும் ஏதோ ஒரு வகையில் வசீகரித்து மக்களை ஈர்க்கவும், வணிகத் தன்மையுடன் இத்தகைய விளம்பர யுக்திகளைக் கை யாளுகிறார்கள் என்பது புரியவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/81900.html#ixzz34FBGzkS2

தமிழ் ஓவியா said...


ஜூன் 10 குமிழ்முனைப் பேனா தினம்


எழுதுகோல் சுமேரிய நாகரிகத்தில் இருந்து நாணல் முனைக்கொண்டு எழுத ஆரம்பித்தது. அதுதான் உலகின் முதல் எழுதுகோல் என்று அறியப்படுகிறது, அப்படி ஒரு நாணல் எழுதுகோல் இன்றும் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதற்கு முன்பும் கற்கால மனிதர்கள் கரிக்கட்டைகளைக்கொண்டு சித்திரங்கள் வரைந்திருக்கின்றார்கள்.

கிருஸ்துவிற்கு முன்பே அலெக் சாண்டர் காலத்தில் எழுதுவதின் மதிப்பு உலகிற்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. தாவர சாற்றில் செய்யப்பட்ட மசி(மை)யில் இருந்து மயிலிறகு, அன்ன இறகு, சில வகை மரக்குச்சிகள் கொண்டு எழுத ஆரம்பித்தனர். எழுதுகோலைப் பொறுத்தவரை சீனர்கள் தான் இதிலும் முதலிடம் வகிக்கிறார்கள். கிமு 7-ஆம் நூற்றாண்டில் சிறிய மூங்கில் தண்டில் மை ஊற்றி அதன் முனையை மிகவும் சிறிதாக துளையிட்டு அதில் மை வடிவதுபோல் செய்து எழுதத் துவங்கினர். இது பட்டுப் பாதை என்ற புகழ்பெற்ற Silk Route மூலம் அய்ரோப் பாவிற்கு சென்றது. கிருஸ்து பிறந்த போதே மூங்கில் குழாய் முனை வெங்கலமாக மாற்றப்பட்டு எழுதுகோலாகிவிட்டது என்று உறுதியற்ற தகவல் தெரிகிறது.

ஆனாலும் கிருஸ்து பிறந்து 79 ஆண்டுகளுக்கு பிறகு வெங் கல எழுதுகோல் உபயோகத்தில் இருந்தது பற்றிய பல தகவல்கள் கிடைத்துள்ளன. நமது நாட்டில் எழுதுகோல் மரக் கட்டைகளில் இரும்பு ஆணிகளைக் பதித்து எழுதும் முறை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உள்ளது. தூய சவேரியார் வந்த 16-ஆம் நூற்றாண்டில் தான் இரும்பு உருளை முனை எழுது கோல் (pen) உபயோகம் இந்தியாவில் வந்தது. மை ஊற்றி எழுதப்படும் எழுதுகோலி னால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. நீண்ட காலமாக இதற்கு நிவாரணம் தேடினார்கள். பிரபல வானியல் அறிஞர் கலிலியோ தான் நமது பால்பாய்ண்ட் பேனாவின் தொழில் நுட்பம் பற்றிக் கூறினார். அதன் பிறகு ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார். இதில் சிறப்பு என்னவென்றால் இவர் காகிதத்தில் எழுத பேனாவை உருவாக்கவில்லை. தோல் பொருட்களில் அடையாளம் இட இந்தபேனாவைப் பயன்படுத்தினார்.

அதன் பிறகு பல்வேறு நபர்களால் வடிவமைக்கப்பட்டாலும் தோல்வி யையே தழுவினர். 1943-ஆம் ஆண்டு லாஸ்லூ மற்றும் ஜார்ஜ் லாஸ்லூ போன்றோர் அனைத்து பாதங்களையும் நீக்கி ஜூன் 10-ஆம் தேதி இன்று பயன்படுத்தும் பால்பாயிண்ட் பேனாவை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து பேனா விரும்பிகளால் இந்த நாள் The ballpoint pen day) குமிழ் முனைப்பேனா தினம் என அறிவிக்கப் பட்டு பேனாவின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து அறிஞர்களையும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்து கிறார்கள்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/81912.html#ixzz34FBoh4Iy

தமிழ் ஓவியா said...


பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் பிடுங்கி எறியப்படும்!....

ஆசிரியருக்குக் கடிதம்
பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் பிடுங்கி எறியப்படும்!....

நூலகங்கள் பொது மக்களின் வரிப் பணத்தில் இயங்குபவை. ஆனால், அங்கு கிடைப்பதோ பார்ப்பனீய ஏடுகளும் பக்தி வார, மாத இதழ்களுமே! இப்பொழு தெல்லாம், நூலகங்கள் பஜனை மடங் களாகவும், ஆளுங் கட்சிக்கு ஜால்ரா போடும், ஏடுகளின் கூடாரமாகவும் மாறிக் கொண்டிருப்பது, வேதனைக்குரிய செய்தியே!

இதில், தற்செயலாக துக்ளக் என்ற வார இதழும் கண்ணில் பட்டது. அதன் அட்டைப் படத்தில் முத்தமிழறிஞர் கலைஞர். உடம்பில் பல கட்டுகளோடு படுக்கையில் இருப்பது போலவும், தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள், அவருக்கு ஆறுதல் சொல்வது போலவும் ஒரு கேலிச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.

தி.மு.க. மக்களவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பை இழந்தது. மக்களாட்சியில் இப்படி நடைபெறுவது இயல்பு. ஏன்? பர்கூர் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்டுத் தொகை யையே இழந்தவர்தானே, ஜெயலலிதா. அவர் மீண்டும் முதல்வராக வரவில்லையா? பேரறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர் தங்களது சொந்த ஊரிலேயே தோற்கவில்லையா? பிறகு அவர்களே, நாட்டின் முதல்வர்களாக வரவில்லையா?

ஆனால், மனிதநேயமே சிறிதுமில்லாத பார்ப்பனியம் மட்டும், அவாள் தோற்றால், அதற்கு பிறர் மேல் பழி போடும்! சூழ்ச்சி, வஞ்சகம், அடுத்துக் கெடுத்தல் செய்து பெற்ற வெற்றியாக இருந்தாலும் அதற்கும் மாற்றாரை மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலியும், கிண்டலும் செய்யும்.

தனது இலட்சியப் பயணத்தில், தி.க.வும், தி.மு.க.வும் பேரறிஞர் அண்ணா, தலைவர் அய்யா காலத்திலிருந்தே இதுபோன்ற எத்தனையோ சோதனைகளை வெற்றிகர மாகக் கடந்தே பயணித்து சாதனைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஜாதி வெறியும், ஆணவமுமே தவிரவேறல்ல!

தமிழனத்தை எதிலுமே தலையெடுக்க ஒட்டாமல் தடுப்பதே, அவாளின் தலையாயக் கடமையாக இதுவரை இருந்து வருகிறது! தமிழினத்தின் அறியாமையும், ஒற்றுமை இன்மையுமே அவர்களது பலம். அதனால்தான் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. எளிதாக தமிழர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சவும் முடிகிறது. இது நிரந்தரமானது அல்ல என்றாலும், இந்நிலை தமிழர்க்குத் தலை குனிவுதானே? இது தேவை தானா என்பதை இனியேனும் பார்ப்பனியத்துக்கு துணை போவோர் சிந்திக்க வேண்டும்!

இத்தகைய சூழ்நிலையில்தான், துக்ளக் ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும். திருவாரூரிலிருந்து தொலைபேசியின் வாயிலாக (26.5.2014) அவர் விரைவில் உடல் நலம் பெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்! இது அய்யாவின் வழி வந்த திராவிட மரபுக்கே உரித்தான உயரிய பண்பு!.. பேரறிஞர் அண்ணாவும், முத் தமிழறிஞர் கலைஞரும் இதே வழியில் நடைபோட்டு வந்ததால்... வருவதால்தான்... திராவிடப் பண்பாடு இன்னமும் பட்டுப் போகாமல் இருக்கிறது! இது, தொடர வேண்டுமானால் பார்ப்பனீயம் தன் னுடைய ஜாதிவெறியை, ஆணவப் போக்கைக் கைவிட வேண்டும். மனித நேயத்தை மதித்துப் போற்றவேண்டும்!

இன்றேல், பார்ப்பனீயத்தின் நச்சுப்பல் விரைவில் தமிழ்நாட்டில், பிடுங்கி எறியப் படும்!! எழுச்சிமிக்க இளைஞர்களால்!!

- நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

Read more: http://viduthalai.in/page-2/81916.html#ixzz34FBwZKme

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்காக உழைத்த கடம்பினி


1861 ஜூலை 18... பீகாரில் உள்ள பகல்பூரில் பிறந்தார் கடம்பினி. அப்பா பிரஜ கிஷோர் பாசு... பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சீர்திருத்த கொள்கைகளில் அதிக நாட்டம் கொண்ட அவர், அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து பகல்பூர் மகிள சமிதி என்ற பெண்கள் அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பெண் விடுதலைக்காக உரு வாக்கப்பட்ட முதல் இயக்கம் இதுதான்!

பள்ளிப் படிப்பை முடித்த கடம்பினி, 17 வயதில் கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். இதன் மூலம் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.

கடம்பினியின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் பெத்தூன் கல்லூரி யில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த சந்திரமுகி பாசுவும், கடம்பினியும் முதல் பெண் பட்டதாரிகளாக வெளிவந்தனர்!

1883இல் சீர்திருத்தவாதியும் பெண் விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்குலியை மணம் செய்துகொண்டார் கடம்பினி. இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களுக்கு பணி சீர்திருத்தம் கொண்டு வர இருவரும் பாடுபட்டனர்.

8 குழந்தைகளுக்கு தாயானார் கடம்பினி. மருத்துவம் படிக்க விரும்பி, கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் கடம்பினி. பெண்களின் படிப்பு கொண்டாடப்படாத அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

1886இல் கடம்பினியும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்திய மருத்துவர் களாக வெளிவந்தனர். மருத்துவராகப் பணியை ஆரம்பித்த கடம்பினிக்கு, உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

1892இல் இங்கிலாந்து சென்றார். 3 துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மருத்துவராகச் சிறிது காலம் வேலை செய்தார். பிறகு சொந்தமாக மருத்துவப் பயிற்சியில் இறங்கினார். கடைசி காலம் வரை, பெண்கள் படிக்கவும் சுயமாகச் சிந்திக்கவும் வழிகாட்டிய கடம்பினி, 1923இல் மறைந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81925.html#ixzz34FCVHzXG

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 10_தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. ஒரு நாளில் மட்டும் 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட் டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களையும் சிறை பிடித்ததோடு, அவர்களின் மீன் பிடிக்கும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை அதிபரை தன்னுடைய பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து, இந்தியப் பிரதமர் பெருமைப் படுத்தினார். அவரும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்ததோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. இந்திய சிறையில் இருந்த இலங்கை மீனவர்களை மத்திய அரசும் விடுதலை செய்தது.

மேலும் இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டி யடிப்பது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக் கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெய லலிதா கடந்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடித்ததும் கடிதம் எழுது வதைப் போல அல்லாமல், இந்த முறை சற்று மாறு தலாக எழுதியிருக்கிறார்.

கடந்த முறை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது, பிரதமருக்கு இவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரதமர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டதால், அனைத்து மீனவர்களும் இலங்கையில் நீண்ட நாட் களுக்கு சிறை வைக்கப்படாமல், உடனடியாக விடுவிக் கப்பட்டதற்காக முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்கெனவே 2 முறை 2 நாட்டு மீனவர் பிரதி நிதிகள் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகாவது, மீனவர்கள் கைது படலம் நிற்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, நீடித்துக் கொண்டே போகிறது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக முன் வர வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81909.html#ixzz34FD1vDrN

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!


- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

கால்நடைகள் குடைக்கு மிரளுவது ஏன்?


மாடுகள், விரிந்த குடையைக் கண்டால் மிரளும். இதுபோல வேறுசில பிராணிகளும் பயம் கொள்ளும். இது ஏன் தெரியுமா?

ஏராளமான மிருகங்களுக்கு நிறத்தை அறிய முடியாது. ஒருசில பிராணிகள், சில வண்ணங்களை மட்டுமே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவை. உதாரணமாக தேனீக்களுக்கு சிவப்பு வண்ணம் மட்டுமே தெரியும். ஆனால் அதுவும் சிவப்பாகத் தெரியாது,

கருப்பும் பழுப்பும் கலந்த நிறமாகத் தோன்றுமாம். இதுபோலவே கால்நடைகளுக்கு நிறம் அறியும் திறன் இல்லை. இருந்தாலும், குடையைக் கண்டவுடன் கால்நடைகள் மிரள்கிறது என்றால் சட்டென்று விரியும் குடை இயக்கத்தைப் பார்த்துதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழ் ஓவியா said...

அன்பு மடல்


செவ்வாய்க்குப் போன இந்திய ராக்கெட்


மங்கள்யான் விண்கலம்

பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,

என்ன நலமா? நீங்கள்தான் எவ்வளவு வாய்ப்புப் பெற்றவர்கள்! அவ்வளவு வசதிகளும், கண்டுபிடிப்புகளும், உங்களது அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் உதவிட எத்தனை எத்தனை புதுமையான நவீன அறிவியல் கருவிகள் விஞ்ஞான தொழில்நுட்பப் பெருவளர்ச்சிக் காலமான இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது; கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

முன்னொரு காலத்தில் தொலைப்பேசி என்றால் என்னவென்று தெரியுமா?

வீடியோ காட்சிகள் என்றால் விளங்குமா?

மாயாஜால வித்தைகளையும், கதைகளையும் தானே எங்கள் பாட்டி, தாத்தாமார்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

ஆனால், இப்போ... அப்படியா?

நீங்கதானே எங்களுக்கு எப்படியெல்லாம் கைத்தொலைப்பேசிகளை (செல்போன்களை) அழுத்தி, எதை எதைப் பேசுவது என்று கற்றுத் தருகிறீர்கள்!

இப்போதெல்லாம் தாத்தாக்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது போக, பேரக் குழந்தைகள் அல்லவா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள், தொழில்நுட்பம் அடங்கிய பல செய்திகளை!

எனவே, இக்காலமும், இனி வரக்கூடிய காலமும் குமர-குருபரர்கள் ஆன உங்களது பொற்காலங்கள்தான்!

நம் தங்கத் தாத்தா பெரியார் தாத்தா அவர்கள்,

இனிவரும் உலகம் என்ற ஒரு பேச்சு (அது புத்தகமாகவும் வந்துள்ளதே) அதில் இப்போது வந்துள்ள கைத்தொலைப்பேசி காணொளிக் காட்சிகள் (வீடியோ கான்பரன்சிங் - video Conferencing) பற்றியெல்லாம் சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லிவிட்டார்களே!

என்ன ஆச்சரியம்!

இப்போது நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாள்; நல்ல நேரம்; என்றெல்லாம் பார்த்து (புரட்டர்கள் பிழைக்க இது ஒரு வழி) நமது நேரத்தில் முக்கியமான பகுதியை வீணடிக்கிறார்கள்!

உழைக்கும் மக்களுக்கு எந்த மணித்துளியும் முக்கியமல்லவா? நேரத்தை - காலத்தை வீணடிக்கலாமா?


செவ்வாய் கிரகம்

செவ்வாய் என்றால் வெறும் வாய் அந்த நாளில் எந்தப் பணியைச் செய்தாலும் விளங்காது; வெற்றி பெறாது என்று சொல்லி நம்மை ஏமாற்றினார்கள், காலங்காலமாய்!

இப்போது அது வெறும் டூப்பு என்பது புரிந்துவிடவில்லையா குழந்தைகளே!

செவ்வாய்க்கோள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளதே! அதற்கே ஒரு விண்கலத்தை _- ராக்கெட்டை _- நமது விஞ்ஞானிகள் ஆயிரம் பேர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகரமாக செலுத்திவிட்டார்களே!

அமெரிக்காகூட நமக்குப் பின்னால் நாசாவிலிருந்து தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது!

இதுவரை 2 லட்சம் மைல்கள் பயணம் செய்து போய்க்கொண்டே இருக்கிறது. (இதை எழுதும்வரை) அடுத்த டிசம்பர் ஒன்றாம் தேதி அங்கே போய்ச் சேருமாம்!

என்னே அற்புதச் சாதனை!

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம்பற்றி சுவையான தகவல்கள் இதோ!


மார்ஸ் ஓபிடெர் மிஷன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான் விண்கலம் 450 கோடி இந்திய ரூபா செலவில் மார்ஸ் ஓபிடெர் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும். மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தக் காலத்திலும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, யாரோ சாமியார் கூறியதாகக் கூறி, தங்கவேட்டைப் புதையலை _- உத்தரப்பிரதேசம் உன்னா (Unno) என்ற இடத்தில் செய்து உலக அளவில் அவமானப்பட்டதுதான் மிச்சம்!

உலகமே நமது மத்திய அரசினைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது.

ஆனால், மங்கள்யானைச் செலுத்தியுள்ளதன் மூலம் அறிவியலின் வெற்றியை _ அறிவியலின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அன்புடன்,
உங்கள் தாத்தா
கி. வீரமணி

தமிழ் ஓவியா said...

டென்னிஸ் (Tennis)

அணிக்கு ஒருவர் என்று இருவரோ, அணிக்கு இருவர் என 4 பேரோ டென்னிஸ் விளையாட்டினை விளையாடுவர். இது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என்றழைக்கப்படுகிறது. சல்லடை மட்டையால் (ராக்கெட்) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி அரங்கத்திற்குள் விழுமாறு பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டே டென்னிஸ்.

முதலில், கைகளால் பந்தினைத் தட்டி விளையாடியுள்ளனர். டென்னிஸ் மட்டையினைப் பிரான்ஸ் நாட்டினர் அறிமுகப்படுத்தினர். டென்னிஸ் என்பது பிரான்ஸ் சொல்லாகும்.

உலகில் மிக அதிக ரசிகர்களையும், வீரர்களையும் கொண்ட விளையாட்டுகளுள் டென்னிசும் ஒன்றாகும். இதன் விதிமுறைகள் 1875ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டன.

ஆடுகளம்

புல்வெளி, களிமண், செம்மண், கற்காரை(கான்கிரீட்), செயற்கைப் புல், மரப்பலகை என்ற இவற்றுள் ஒன்றால் தளம் அமைக்கப்பட்டிருக்கும். ஆடுகளத்தின் நீளம் 36 அடி (10.97 மீட்டர்), அகலம் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடி (23.77 மீட்டர்), ஒற்றையர் ஆட்டத்திற்குப் போடப்பட்ட கோட்டின் இருபுறமும் 14 மீட்டர் (4.5அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்குக் கோடு போடப்படும். ஆடுகளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீட்டர் (3அடி) உயரத்தில் நடுவலை அமைந்திருக்கும்.

பந்து

மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும் பந்தின் உட்புறம் காலியாக இருக்கும் ரப்பர் பந்து பயன்படுத்தப்படுகிறது. பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் கொண்டதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளைக்கோடு போட்ட பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சல்லடை மட்டை


ரோஜர் பெடரர்

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை மட்டைகளுக்கு இல்லை. எனினும், போட்டிகளில் 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும் 31.8செ.மீ (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் உள்ள மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டையின் தலைப்பகுதி (வலைப் பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும் 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் எடைக்கு வரையறை இல்லை.

சிறப்புப் போட்டிகள்


சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆகியன சிறப்புப் போட்டிகளாகும். 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் என்னும் இடத்தில் முதன்முதலில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ட்லைட் எப் டேவிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் நமது சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விலங்குகளும் விசித்திர உறக்கமும்!


மனிதன், தண்டுவடம் தரையில் படும்படி (அல்லது மெத்தையில் படும்படி) வைத்து மல்லாந்த நிலையில் தூங்குகிறான். சிலர் குப்புறக் கவிழ்ந்தும், சிலர் ஒரு பக்கம் சாய்ந்தும் உறங்குவார்கள்.

நம்மைப்போலவே பிராணிகள் ஒவ்வொன்றும் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. நாய், பூனை, மாடுகள் தூங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் கண்டு ரசிக்க முடியாத வினோதம் கொண்ட பிராணிகள் பல உள்ளன. அவைபற்றி இங்கே...

பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும், ஆனால், உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.

மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்து கொள்ளும்.

வாத்து தரையில் நின்று கொண்டும், நீரில் நீந்திக் கொண்டும் உறங்கும் ஆற்றல் பெற்றது.

யானைகளும் குதிரைகளும் நின்று கொண்டேதான் உறங்கும்.

இவை எல்லாவற்றையும்விட விசித்திர தூங்கும் பழக்கம் கொண்டன எறும்புகள். மண்ணில் அழகான மணல் மெத்தைகளை உருவாக்கி, மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டி வைத்து ஒய்யாரமாய் உறங்கும். சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.

- தகவல்: இ.ப.இனநலம், 9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்

தமிழ் ஓவியா said...

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்...?


“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

“சூதாடிய குற்றத்துக்காகவா?

கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?

கொள்ளைக் குற்றத்துக்காகவா?

கொலைக் குற்றத்துக்காகவா?

மோசடிக் குற்றத்துக்காகவா?

பல வந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?

பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?

சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?

என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்!

மறியல் செய்தேன்!

சிறை சென்றேன்!

சர்க்கார் கண் விழிக்கவில்ல.

ஆகவே,

சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது

இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா,

என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ?

எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால்,

இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண்டாமா?

‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’

என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை,

வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும்

உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

– பெரியார், (விடுதலை 09-11-1957)