Search This Blog

7.6.14

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?தமிழ்தேசியம் பேசுவோர் சிந்தனைக்கு...


இந்நாள் தமிழர்கள் வரலாற்றில், தமிழ்மொழி வரலாற்றில் முக்கியமான நாள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனித்த முயற்சினால் இந்நாளில் தான் (6.6.2004) தமிழ் செம்மொழியாக அதிகாரப் பூர்வமாக குடியரசு தலைவரால் அறி விக்கப்பட்டது.

கலைஞர் அவர்கள் தலைவராக இருக்கும் திமுகவின் முன்னோடிக் கட்சியான நீதிக்கட்சியின் மாநாட்டிலேயே தமி ழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தீர் மானம் நிறை வேற்றப்பட்டது என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

1918 மார்ச்சு 30, 31 ஆகிய நாள்களில் தஞ் சாவூர், திருச்சிராப்பள்ளி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டதீர்மானம்.

8 (ஆ) எல்லாப் பழமையான மொழிகளைப் போல பழமையான, வள மான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பல தரப்பட்ட இலக்கியங் களைக் கொண்டது தமிழ் மொழி.

இது பல்கலைக் கழகத்தால் பாரசீக  அரேபிய, சமஸ்கிருத மொழி களுக்கு ஈடாக மதிக் கப்பட்டுச் செம் மொழியென ஏற்றுக் கொள்ளப்பட வேண் டும் இதுதான் அந்தத் தீர்மானம். இதனை முன்மொழிந்தவர். திரு ஜே.பி. நல்லுசாமி பிள்ளை, பி.ஏ., பி.எல். மதுரை வழிமொழிந்தவர்: ந.மு. வேங்கடசாமி நாட் டார் தமிழ்ப் பண்டிதர், எஸ்பிஜி கல்லூரி திருச்சி ராப்பள்ளி, ஆதரித்தவர். திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று மொட்டையாகப் பேசும் தமிழ்த் தேசிய அன்பர்கள் இந்த வரலாறு களைத் தெரிந்து கொள் வார்களாக!

தமிழ் செம்மொழியா னால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமா (தினமலர் வார மலர் 13.6.2004) எனும் தினமலரோடு சேர்ந்து கொண்டு பாடிடும் தமிழன்பர்கள் சிந்திப்பார்களாக!

கலைஞர் அவர்கள் காரணமாக இருந்தார் என்பதற்காகவே கோவை செம்மொழி மாநாட்டிற்கு பின் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட பாரதிதாசன் நூலகம் சின்னாபின்னம் ஆக்கப்பட்டது; செம்மொழி பூங்கா என்ற பெயரையே கறுப்பு அடித்ததோடு, அந்தப்பூங்காவையே உருக்குலைத்து விட்டதே நடைபெறும் ஆரிய ஆட்சி!

தமிழ் செம்மொழியாக குடியரசு தலைவ ரால் அறிவிக்கப்பட்ட இந்நாளில் தமிழர் களுக்கு தேவை உரத்த சிந்தனையும், கனத்த இனநலமும்!

---------------------- மயிலாடன் அவர்கள் 6-6-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

29 comments:

தமிழ் ஓவியா said...

புத்தரின் வாக்கியம்

1. ஒரு விஷயத்தை நல்லதென்றாவது கெட்ட தென்றாவது கேள்வி மாத் திரத்திலேயே நம்பி விடாதே

2. உண்மையாக நடந் திருக்காவிட்டால் எழுதியி ருப்பார்களா என்கிற காரணத் தினாலாயே ஒன்றை உண்மை யானது என்று நம்பிவிடாதே.

3. அநேக இடங்களில் வழங்கப்பட்டு பாரம்பரியமாக நடந்து வருகிற அய்தீகம் என்கிற காணத்திற்காக ஒன்றை நம்பி விடாதே.

4. அநேகர் நம்பி அதன்படி நடக்கிறார்களே என்கிற காரணத்திற்காக உண்மை என்று நம்பி விடாதே.

5. ஒரு மகாத்மாவால் வரையப்பட்ட கதை என்று காட்டப்பட்டதினாலேயே நம்பி விடாதே

6. நமக்கு ஒன்று ஆச்சரியமாய் தோன்றப் படுவதி னாலேயே இது தேவனாலோ அல்லது அற்புதமான ஒருவனாலோ ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு விடாதே.

7.பெரியோர்களாலும் குருமார்களாலும் சொல்லப் பட்டது என்கிற காரணத்தினாலேயே நம்பி விடாதே.

8. ஒவ்வொரு விஷயங்களையும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி செய்து சகலருக்கும் நன்மை தரத்தக்கதா யிருந்தால் அப்பொழுது அதை ஒத்துக் கொள், ஒத்துக் கொண்டபடியே நட.

- குடிஅரசு - 3.7.1927

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ubyY8Vx

தமிழ் ஓவியா said...


பள்ளியில் நடந்த கதை


நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறி னாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33uc9PEHv

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் ஏழையா?

1-4-1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சங்கராச்சாரி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது திருமதி. அனந்தநாயகி குறுக்கிட்டு சங்கராச்சாரியார் கால்நடையாகச் சென்று பக்தியை பரப்பி வருகிறார். அவரைப்பற்றி கணக்குப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று கேட்டார்.

அதற்கு அமைச்சராக இருந்த திரு. மு.கண்ணப்பன் அளித்த பதிலாவது:- சங்கராச்சாரியார் கால்நடையாகப் போகிறார் என்பதால் அவர் ஏழை என்று அர்த்தம் அல்ல. அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 3/4 லட்சம் ரூபாய் வருகிறது. மேலும் கால்நடையாகப் போவதற்கும் கணக்கு வைப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucLtEpD

தமிழ் ஓவியா said...

சர்க்கார் ஆட்சேபிக்காது!

ராமாயணம் வெறும் கட்டுக்கதை - பொய்: ராமன் கடவுள் அல்ல என்றெல்லாம் எவர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் தடையில்லை..

நம் நாட்டில் தொன்று தொட்டு மத சம்பந்தமாக எவ்வளவோ வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஒப்புக் கொண்டவர் சிலர்; ஆட்சேபித்தவர்கள் சிலர்; அதனால் மதத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை சர்க்கார் ஆட்சேபிக்க வில்லை.

- நிதி அமைச்சர், 9-12-1954, (சென்னை சட்டசபையில்)

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucRTXkF

தமிழ் ஓவியா said...


விசித்திரமான நம்பிக்கை!


மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81640.html#ixzz33ucYqBOn

தமிழ் ஓவியா said...

அடடே!

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை வைத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரபல கேரள ஜோதிடர் கூறியுள்ளாராம்; அப்புறம் என்ன அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான்.

எச்சரிக்கை!

நொறுக்குத் தீனிகளை சதா தின்று கொண்டே இருக்க குழந்தைகளை அனுமதியாதீர். அதுபோல மென் பானங்களைக் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்காதீர்!

இதனால் சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நாம் செயல்படுவோம்! என்ற இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81647.html#ixzz33ucqf5hW

தமிழ் ஓவியா said...


சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதா?

பிரதமராக ஆவதற்கு முன்னதாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற நரேந்திரமோடி அவர்கள் வங்காளத்துத் தேசத்தில் இருந்து இங்கே வந்துள்ளவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்; காளியை வழிபடாதவர்களுக்கு இங்கு வேலையில்லை என்று பேசினார்.

இப்பொழுது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில் அஸ்ஸாமில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. எம்.பி.க்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் தன்மையில் வங்காளத்திலிருந்து இங்கு ஊடுருவியவர்கள் உடனே வெளியேறிட வேண்டும்; 15 நாட்கள்தான் கெடு! என்று கூறியுள்ளனர். வீட்டுக்கு வீடு வந்து சோதிப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை என்பது ஒன்று; அந்தச் சட்டத்தையே கையில் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்வது என்பது வேறு.

நியாயமான பிரச்சினையாக இருந்தால்கூட அதனை நேரிடையாகத் தீர்வு காண்பது என்ற முறையில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள எந்தக் குடிமகனுக்கும் உரிமை கிடையாது. அப்படி அவரவர்களும் சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம் பித்தால் அங்கு ஆட்சி இருக்காது - அராஜகம்தான் தாண்டவமாடும்.

பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதுபற்றி ஆச்சரியம் ஏற்படாது. காரணம் வன்முறை என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும் - அவ்வாறே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் - தயாரிக்கப் படுகிறார்கள்.

தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் தொகாடியா என்ன பேசினார்? குஜராத்தில் பாவ்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற பகுதிகள் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும்.

அத்தகைய இடத்தில் இங்கு சில இஸ்லாமியர் குடும்பங்கள் குடியிருப்பது தெரிய வருகிறது. 48 மணி நேரத்துக்குள் இவர்கள் வீடுகளைக் காலி செய்யா விட்டால், கற்களையும் டயர்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். டயர்களைக் கொளுத்தி முஸ்லிம்களின் வீடுகள் மீதும், வியாபார நிறுவனங்கள் மீதும் தூக்கி எறிய வேண்டும்; கற்களை வீச வேண்டும் என்று பேசிடவில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.4.2014 பக்கம் 9).

மகாராட்டிரத்தில்என்ன நடந்தது? மகாராட்டிரத்தில் குடியேறியிருக்கும் பிகாரிகள் வெளியேறிட வேண்டும் என்று சிவசேனா கூறவில்லையா? இந்தியாவுக் குள்ளேயே வெளி மாநிலத்தவர் எங்கள் மாநிலத் திற்குள் நுழைய கூடாது என்பவர்கள் வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் சும்மா விடுவார்களா?

பி.ஜே.பி. 16ஆம் மக்களவை தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடர் ஏற்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக பி.ஜே.பி. அரசு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதே!

வெளி நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் அல்லாத முசுலிம்கள் இல்லையா? கிறித்தவர்கள் இல்லையா?

எடுத்துக்காட்டாக இந்தியாவைச் சேர்ந்த முசுலிம் கள் சிங்கப்பூர், மலேசிய, துபாய் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் பணி நிமித்தம் சென்றுள்ளார்களே - அவர்களுக்கு இடையூறுகள் என்றால் மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுமா?

பி.ஜே.பி. தேர்தலில் வென்று விட்டது என்ப தாலேயே அதன் இந்துத்துவா கொள்கைகளை அரசின் கொள்கையாக மாற்ற முடியுமா? வீட்டில்தான் அமைச்சர்கள் இந்துக்களே தவிர, வெளியில் வந்தால் அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி மதச் சார்பற்றவர்கள்தானே.

அரசுக்கு மதம் கிடையாது என்றுதான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. அப்படி இருக்கும் பொழுது தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி. எப்படி அப்படியொரு உறுதிமொழியைக் கூறுவது சரியாக இருக்க முடியும்?

தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றிருந்தால் அப்பொழுதே கூட இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

ஆட்சிவேறு, கட்சி வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல், மத்திய அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தினால் தேவையில்லாத வகையில் சட்டச் சிக்கல் ஏற்படும். அதனால் ஆட்சிக்கேகூட இடையூறு ஏற்படலாம். ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்பட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/81652.html#ixzz33ud6FBdW

தமிழ் ஓவியா said...


மனிதன்பலவிதக் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
- _ (விடுதலை,9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/81651.html#ixzz33udE8B00

தமிழ் ஓவியா said...


மனித நேயம் மரித்துவிட்டதா?


நவிமும்பை ஜூன் 6 நவிமும்பை யில் உள்ள கலம்போலியில் இருந்து டோம்பிலிவிக்கு மகராஷ்டிரா மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது, அந்தப்பேருந்தில் சோனாலிப் பாட்டில் என்ற பெண் நடத்துநர் வழிநடத்திக்கொண்டு வந்தார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக நெரிசல் இல்லாமல் இருந்தது. அப்போது மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆலைத்தொழிலாளி பேருந்தில் ஏறி வாசலிலேயே நின்று இருக்கிறார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக பேர் ஏறுவார்கள் ஆகையால் அந்த நபரை சோனாலி பாட்டில் படிகட்டின் மீது நிற்காமல் மேலே ஏறக்கூறினார். பல முறைகூறியும் மேலே ஏறாமல் இருக்கவே அவரைக் கண்டித்தார். உடனே கோபமடைந்த அந்த நபர் பெண் நடத்துநர் என்றும் பாராமல் அவரைத் தாக்கத் தொடங்கினார். இது அத்தனையும் அந்த பேருந்தின் பல பயணிகள் முன்பு நடந்துகொண்டு இருந்தது, இதனிடையே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், அந்த நடத்துநரைக் பேருந்தை விட்டு கீழே தள்ளி அவரது ஆடையை கிழித்து உதைத்துள்ளார். பேருந்தை நிறுத்தி விட்டு காப்பாற்றச்சென்ற ஓட்டுநரை யும் பொதுமக்கள் அருகில் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். சம்பவம் நடந்துகொண்டு இருந்த போது மற் றோரு அரசுப்பேருந்தும் அந்த இடத் தைக் கடந்து சென்றது.

இந்த நிலையில் நடத்துநர் அருகில் சென்ற வேறு ஒரு அரசுப் பேருந்தை நிறுத்தி சம்பவத்தைக் கூறியதும், அந்த பேருந்தின் ஓட்டுநரும் பெண் நடத்துநரும் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தனர். பிறகு அவரை டோம்பிலி மான் பாடா காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர். தாக்குதலுக்கு இலக்கான பெண் நடத்துநர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அந்த பெண் நடத்து நர் முதலுதவிக்குப் பிறகு மருத்துவ மனையில் இருந்து வீடு சென்று விட் டார். அபிசேக் சிங் மீது இபிகோ 353 பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி யது, இபிகோ 323 கொலைமுயற்சி, இபிகோ 506 மற்றும் 427 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம், கல்யாண் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றக்காவலில் வைக்க ஆணையிட்டார் இதன் படி அவர் கல்யாணில் உள்ள அந்தர்வாடி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 பேருந்து பயணிகள் முன் பாக ஒரு பெண் நடத்துநர் தாக்கப்பட்ட போதும் யாரும் தடுக்க முன்வராதது நாட்டில் மனித நேயம் செத்துவிட்ட தாகவே கருதவேண்டி இருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/81654.html#ixzz33udYQIjA

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உலகமயமாக்கல் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவங்கியது

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பின் தலைவர் பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் திரு. சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் உள்ளனர்.

கொலோன் (ஜெர்மனி) ஜூன் 8- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங் கப்பட்டது.

ஜெர்மனி, கொலோன் மாநகரில் ஜூன் மாதம் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை இந்திய வாரம் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. பல்வேறு நிகழ்ச்சிகளில், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக தமிழர் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் 3ஆம் தேதி மாலை, பொது மக்களுக்கு திராவிட இயக்கமும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் தத்துவமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இந்தி எதிர்ப்பு இயக்கம்

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாய்ன்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியயியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் தன்மான இயக்கமான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்தார்கள்.

இப்படி பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் அடைந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தனர்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா. டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக திரு. சுவன்வோர்ட், செயலாளராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட் டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) வின் வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்தும் தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கைகளை அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைக்க, தன் பணியை செய்யும் என பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத் தலைவர் மற்றும் செய லாளர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங் களை வழங்கியும் பாராட்டினார்கள்.

பெரியாரின் ஜெர்மன் பயணம்

இந்நிகழ்வு இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் 1932-இல் ஜெர்மனி பயணம், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் 2014-இல் கொலோன் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது.

இவைகளை உற்று நோக் கும்போது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதும் இதுவே பெரியார் உலக மயமாக்கப்பட வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை எடுத்துச் செல்லும் தமிழர் தலைவருக்கும், பெரியார் பெருந் தொண் டர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பெரியார்! வளர்க அவர் தம் கொள்கை.

Read more: http://viduthalai.in/e-paper/81773.html#ixzz346Aj7Jpr

தமிழ் ஓவியா said...


பாம்பைப் பற்றிய மூடநம்பிக்கை


பாம்புகள் பழிக்குப் பழியாக பழி வாங்கும்னு சொல்றது உண்மையா?

(பலமாக சிரிக்கிறார்) அப்படியெல்லாம் கிடையாது. பொதுவா பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. இதமான இருப்பிடம் தேடித்தான் எதிர்பாராம வீட்டுக்குள்ள புகுந்துடுது. அப்புறம் இயற்கையான அதோட வாழ்விடங்களை மனுசங்க குடியிருப்புப் பகுதியா மாத்திட்டு வர்றாங்க. அதுவும் ஒரு காரணம்.

எதிரிகளை எத்தனை வருசமானாலும் நினைவில் வைத்து- பாதிக்கப்பட்ட நல்ல பாம்பு பழி வாங்கும்னு சொல்றதும்; கொம்பேரி மூக்கன் பாம்பு... பழி வாங்கிட்டு சுடுகாடு வரை போய் பார்க்கும்னு சொல்றதும்கூட கட்டுக் கதைகள்தான்

அது சரி... பச்சைப் பாம்பை தொட்டவர்களின் சமையல் ருசிக்கும் என்பது?

இதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான்! இது உண்மையா இருந்தா கேட்டரிங் படிப்பே தேவையில்லையே? ஒரு பச்சைப் பாம்பை மட்டும் வெச்சுக்கிட்டு எல்லோருக்கும் கை ருசியான சமையல் கலையை கத்துக் கொடுத்திடலாமே!

இந்தவகைப் பாம்பு கண்ணை குறி வெச்சுத் தாக்கும்கிறதுகூட தவறானதுதான். நம்மளோட கண்களை வண்டு என்று தவறாக நினைத்துதான் சிலநேரம் கொத்துவதுண்டு

(20,000 பாம்புகளை இதுவரை பிடித்த பூனம் சந்த் அளித்த பேட்டி (ராணி - 8.6.2014)

Read more: http://viduthalai.in/page6/81760.html#ixzz346DyvSkT

தமிழ் ஓவியா said...


கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


2006ஆம் ஆண்டில் சிக்குன்குனியா நோய் தாக்கியபோது தமிழகப் பொது சுகாதாரத்துறை ஓர் ஆய்வினை மேற்கொண்டது. கருநீலம், கரும்பச்சை, கருப்பு போன்ற வண்ண உடைகள் கொசுக்களை ஈர்ப்பதால் அம்மாதிரி உடை அணிபவர்கள் கொசுக்கடிக்கு அதிகம் ஆளாவதாகக் கண்டறிந்தோம். ஒரு சிலரை மட்டும் சிக்குன்குனியா தாக்குவது ஏன் என்ற கேள்ளிக்கு விடை கிடைத்தது என்கிறார் அப்போது அத்துறைக்கு இயக்கு நராக இருந்த டாக்டர் இளங்கோ.இரவில் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இந்திய பொது சுகாதார அமைப்பு IPHA - Indian Public Health Association- Tamilnadu பரிந்துரைக்கிறது. சென்னை மாநகரத்தைச் சேர்ந்த புளியந்தோப்பு, அண்ணா நகர், முகப்பேர், போரூர், அடையார், தேனாம்பேட்டை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 100 பேர்களைத் தேர்ந்தெடுத்து 2013 செப்டம்பரில் தொடங்கி 2014 பிப்ரவரி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உறங்கச் செல்வ தற்கு முன் ஒரு குளியல் போட வேண்டும். பூண்டு சாப்பிட்டவர் களை நெருங்க பிற மனிதர்களுக்கு மட்டு மல்ல, கொசுக்களுக்கும் தயக்கம் இருக் கிறது. இரவுஉணவில் பூண்டு சேர்த்துக் கொள்பவர்களை அவை நெருங்குவ தில்லை. அதே சமயம், ஆல்கஹால் உட் கொள்பவர்களைக் கொசுக்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. தோலில் உள்ள நுண்ணுயிர்கள் பலவிதமான வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை வியர்வையுடன் கலந்து உருவாக்கும் ஒருவித மணம் கொசுக்களை ஈர்க்கிறது. படுப்பதற்கு முன் குளியல், உணவில் பூண்டு சேர்ப்பது, ஆல்கஹால் உட் கொள்வது போன்றவை இந்த மணத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களே கொசுக்களை ஈர்ப்பதிலும் மாற்றங்களை ஏற்படுத்து கின்றன என்கிறது மேற்கண்ட ஆய்வு.

(ஆதாரம்: 2014 மார்ச் 26 தேதியிட்டஆங்கில இந்து நாளிதழில் திருமிகு செரீனா ஜோசஃபைன் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page8/81763.html#ixzz346F1cKEI

தமிழ் ஓவியா said...


கோககோலா, பெப்சி - எச்சரிக்கை!


உலக சுற்றுச்சூழலை கோக கோலா, பெப்சி உள்ளிட்ட 10 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்திக் கெடுத்து வருகின்றன என்று ஆஸ்பாம் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

உலகம் முழுவதும் இப்போதுகாற்று, தண்ணீர் போன்ற சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபட்டு விட்டது. சுத்தமான காற்றும், சுத்தமான குடிநீரும் கிடைப்பது அரிதாகி விட்டது. முன்பு இலவசமாக கிடைத்து வந்த சுத்தமான குடிநீரை தற்போது மக்கள் பணம்கொடுத்து வாங்கிக் குடித்து வருகிறார்கள். சுற்றுசூழல் மாசு இப்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க உலக நாடுகள் தங்கள் வழியில் தீவிரமாக முயன்று வருகின்றன.இந்த சூழ்நிலையில் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ஆஸ்பாம் உலக சுற்றுச்சூழல் கெடுவதற்கு 10 பெரிய நிறுவனங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து ஆஸ்பாம் அமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளர் எரிச்சகான் கூறியதாவது:- உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை அசோசியேட் பிரிட்டிஷ் புட்ஸ், கோக கோலா, பெப்சிகோ, டெனேன்,நெட்ஸ்லே, ஜெனரல் மில்ஸ், கெல்லோக், மார்ஸ், யுனிலீவர், மான்ட்லெஸ் ஆகிய 10 பெரிய நிறுவனங்கள் கெடுத்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு மற்றும் நிறுவனங்களை விட தனி மனிதர்கள் பங்குமிக முக்கியமானது. நமது பூமியைபாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க தவறினால் வருகிற 15 ஆண்டுகளில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 44 சதவிகிதம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page8/81764.html#ixzz346F8bvae

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


முடி காணிக்கை எதற்காக?

இறைவனைத் தரிசிக்கும்போது எனது அகங்காரம் நீங்க வேண் டும். அதற்காக அழகுடன் நான் பராமரிக்கும் முடியை அர்ப்பணிக் கிறேன் என்பது அதன் தத்துவம்.

முகத்துக்கு அழகு மூக்கும் முழியும் தானே! அவற்றைக் காணிக் கையாக அளித்தால் அகங்காரம் மட்டுமல்ல; மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) ஒட்டு மொத்தமாக அகலாதா?

Read more: http://viduthalai.in/page1/81726.html#ixzz346FWNTdI

தமிழ் ஓவியா said...


மனிதனாக...


மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page1/81727.html#ixzz346GcNvcO

தமிழ் ஓவியா said...


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!


திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.

தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கி டாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

- குடிஅரசு - கட்டுரை - 24.11.1929 (தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர் வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)Read more: http://viduthalai.in/page1/81717.html#ixzz346HK2Bhw

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதிமத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கை களையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷக ராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவ ராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலை வராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான் கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப் பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HsaMeJ

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.

அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/81719.html#ixzz346HzH8T8

தமிழ் ஓவியா said...


ஜூன் 8: உலக கடல் தினம் மாறிவரும் கடல் நீரோட்டத்தால் குறையும் ஆக்சிஜன்

நாளை (ஜூன் 8) உலக கடல் தினம்: கடல் தான் நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி, அழகிய நீலவண்ண வானம் தெரிவதற்குக் காரணமே கடல் தான். அதை விட மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில் பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானதாகும். 1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

அதுவும் மிகவும் விரை வாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம். இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம் நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும் ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.

இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின் பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள் மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள் பெரிதும் பரவத் துவங்கிவிட்டது. உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை விடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.

இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.

அய்.நா. சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு மாநாட்டின் கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம் செலுத்தி வருகின்றனர்.

ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை தூய்மைப்படுத்தவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக் கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் ஆண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத் துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ நிலையை மாற்றிவிடும்.

வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும். இதுபோன்ற ஆபத்துகளை நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும். பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் செல்வோம்.

Read more: http://viduthalai.in/page1/81704.html#ixzz346I6xrsN

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


தியானம்

ஆன்மீகப் பயிற்சி யில் தீவிரமாக ஈடுபட் டிருந்த ஒரு சாதகன் ரமண மகரிஷியிடம் சென்று சுவாமி, நான் 18 வருஷங்களாக ஏக நிஷ்டையில் தியானம் செய்து வருகிறேன். இன்னும் எனக்குச் சித்தி கிடைக்கவில்லை இன் னும் எத்தனைக் காலம் தியானம் செய்ய வேண் டும்? என்று கேட்டான்.

அப்பொழுது ரமண மகரிஷி அட பைத்தியக் காரா! தியானம் செய்கி றோம் என்பதை மறந்து போகும் வரை செய்ய வேண்டும் என்று கூறி னாராம்.

ஆமாம் ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த ரமண மகரிஷி அப்படி யெல்லாம் தியானம் செய்து கண்ட பலன் என்ன? புற்றுநோய் கண்டு தானே படாதபாடுபட்டு மரணம் அடைந்தாரே

Read more: http://viduthalai.in/e-paper/81846.html#ixzz34C68NGtj

தமிழ் ஓவியா said...


மீண்டும் அம்பேத்கர் குறித்து ஆட்சேபணைக்குரிய படம்: மகாராஷ்டிரத்தில் மீண்டும் வன்முறை


புனே, ஜூன் 9 முக நூலில் அம்பேத்கர் குறித்த ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் பரப்பிய தால், மகாராஷ்டிரத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி ராவ் மற்றும் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே ஆகியோரை இழிவுப் படுத்தும் விதமாக முக நூலில் (ஃபேஸ்புக்கில்) சில படங்கள் கசிய விடப் பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அங்கு இந்து ராஷ்ட்ர சேனை அமைப்பினர் மேற் கொண்ட வன்முறைச் சம் பவத்தில் மொசின் ஷேக் என்ற தொழில் நுட்ப வல் லுநர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் முகநூலில் அம் பேத்கர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் வெளியிடப்பட் டன. இதனை தொடர்ந்து புனே, சோலாப்பூர், அவு ரங்காபாத் ஆகிய இடங் களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம் பவங்கள் நடந்தன. இதில் அரசு பேருந்துகள் பலத்த சேதமடைந்தன.

முகநூலில் அவதூறாக பதிவேற்றம் செய்யப்பட்ட கணினியில் அய்.பி எண் குறித்த தகவலை தரும்படி, மகாராஷ்டிர காவல்துறை ஆணையம் முகநூல் நிறுவனத்தை தொடர்புக் கொண்டுள்ளது. மகாராஷ் டிராவில் தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறை குறித்து விசா ரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81849.html#ixzz34C6SbZbD

தமிழ் ஓவியா said...


பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைபுதுடில்லி, ஜூன் 9- நாடாளு மன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை யாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணை தலைவர் ஹமீது அன்சாரி, மக்க ளவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றுச் சென்றனர். குடியரசுத் தலைவர் உரை முக்கிய அம்சங்கள்:

பணவீக்கத்தை கட்டுப் படுத்த அரசு முக்கியத்துவம் அளிக்கும்.

பொது விநியோகத் திட்டத்தில் மறு சீரமைப்பு கொண்டு வரப்படும்.

நாட்டில் வறுமை ஒழிக்கப்படும்.

அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும்.

இந்திய எல்லையில் ஊடுருவலை தடுக்க அரசு முன்னுரிமை வழங் கும்.

உணவுப் பொருட்களை பதுக் குவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் அய்.அய்.டி, அய்.அய்.எம். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

அனைவருக்கும் சுத்தமான தண் ணீர் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.

ஆந்திரா, தெலுங்கானா மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வேண்டிய உதவிகளை செய்யும்.

விளையாட்டுத் துறை ஊக்கு விக்கப்படும். தேசிய விளையாட்டு திறன் கண்டறியும் மய்யம் அமைக் கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன் முறையை அரசு பொறுத்துக் கொள்ளாது. பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க அரசு வழிவகை செய்யும்.

மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங் களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க அரசு நட வடிக்கை எடுக்கும்.

அனைத்து சிறுபான்மை சமு தாயத்தினரையும் அரசு சரிசமமாக நடத்தும்.
கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும்

மதரஸாக்களை நவீனப்படுத்தும் திட்டத்தை அரசு மேற்கொள்ளும்.

பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக் கும் வகையில் 'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுடனான நல்லுறவு மேலும் பலப்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கடினமான சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந் நிலையில், பொருளாதாரத்தை சீர் படுத்துவதே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை.

நாட்டில் ஊழல் ஒழிக்கப்படும். வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்படும்.

அதிவேக விரைவு ரயில் திட் டத்தை மேம்படுத்த 'வைர நாற் கரம்' திட்டம் செயல்படுத்தப்படும்.

சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத் தும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அந்நிய முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள் ளும்.

பாதுகாப்புத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும்.

அணுமின் நிலைய திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

ஜப்பான், சீனாவுடனான நட்புறவு வலுப்படுத்தப்படும்.

வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கப்படும்.

என குடியரசுத் தலைவர் உரையில் தெரிவித்துள்ளார்.


Read more: http://viduthalai.in/e-paper/81848.html#ixzz34C6gySzd

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் நிலை: ஆட்சி மாற்றம் - காட்சி மாறவில்லையே!


தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு என்றுதான் முடிவோ? - என்ற கேள்விக் குறி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

1983ஆம் ஆண்டுக்கு பிறகு இது அனேகமாக அன்றாடப் பிரச்சினையாகி இருக்கிறது; எத்தனைத் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற புள்ளி விவரம்கூட சரியாகக் கிடைக்க முடியாத அளவுக்குச் சிங்கள இனவெறி தலை விரித்துத் தாண்டவம் ஆடி வந்திருக்கிறது - வருகிறது.

ஆட்சி மாறும் - காட்சி மாறும் என்று பேசியவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டுள்ளனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது; அவர் பிரதமராக பதவிப் பொறுப்பு ஏற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக் சேயும் அழைக்கப்பட்டார் - கடும் எதிர்ப்புக்கிடையே; டில்லி வந்த இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தையெல்லாம் நடத்தி இருந்திருக்கிறார்.

இது நல்லெண்ண சமிக்ஞை என்றெல்லாம் தூக்கிப் பேசப்பட்டது. ஆனால், நிலைமை என்ன? அவர் டில்லி யிலிருந்து கொழும்பு சென்ற ஈரம் காய்வதற்கு முன்ன தாகவே சிங்களக் கடற்படை தனது கோர முகத்தைக் கோணங்கிதனமாகக் காட்ட ஆரம்பித்து விட்டதே!

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் முதற்கட்டமாக 33 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு கடந்த 7ஆம் தேதி இராமேசுவரத்திலிருந்து 10 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை மீண்டும் சிறைப் பிடித்தனர்; அதே போல புதுக்கோட்டை மாவட்டம் செகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள், இராமநாதபுரத்திலிருந்து சென்ற எட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 82 தமிழக மீனவர் கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 8 விசைப் படகுகள் முடக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 77 முறை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வழக்கம் போல தமிழக முதல் அமைச்சர் பிரதம ருக்குக் கடிதம் எழுதுவது, இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற சம்பிரதாய நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லையா!? 8.12.1999க்கும் 18.10.2003க்கும் இடையே பிஜேபி ஆட்சிக் காலத்தில் எட்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வழி விட்டான், செல்ல பாண்டியன், முனீஸ்வரன், பாபு, முருகன், சரவணன், கோட்டை, நாகநாதன் ஆகியோர் அப்படிப் படுகொலை செய்யப்பட்டவர்களே!

இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே. அவர்களை அவரால் மீட்க முடிந்ததா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. குஜராத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் இந்த மீன் பிடி காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 படகுகள் முடக்கப்பட் டுள்ளன; இதன்மீது எந்தவித உருப்படியான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லையே!

தமிழ் ஓவியா said...


இன்றைய நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மொத்த குஜராத் மீனவர்களின் எண்ணிக்கை 240. இதுவரை குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைச் சாலைகளில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திரமோடி தானே இருந்தார். இந்த வகையில் அவர் சாதித்தது என்ன?

பிஜேபியின் 16ஆம் மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து எந்த ஒரு சொல்லாடலும் கிடையாதே!

கேட்டால் வெளிநாட்டுக் கொள்கைகள் - நயந்து தான் போக வேண்டும். பக்குவமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பார்கள். கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தப் பாதையில் பயணித்ததோ, அதே பாதையில்தான் அட்சரம் பிறழா மல் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நடைபோட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் அடிப்படையில் எந்தவித வேறுபாடும் கிடையாது; ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று சொல்லி வந்துள்ளதை மோடி தலைமையிலான இன்றைய அரசு நாளும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறது.

மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமேதான் மிச்சம்.

கடிதம் எழுதினால் போதுமா என்று அன்றைய முதல்வர் கலைஞரைப் பார்த்துக் கேள்வி எழுப்பி வந்த அதிமுக பொதுச் செயலாளர் இப்பொ ழுது முதல் அமைச்ச ராக இருக்கும் நிலையில், கடிதம் தான் பிரதமருக்கு எழுதிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க!

Read more: http://viduthalai.in/page-2/81856.html#ixzz34C72WMbI

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப் படியான பொருள்களுக்கு அதிபதி யாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. (விடுதலை, 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/81855.html#ixzz34C7a52QE

தமிழ் ஓவியா said...


நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது.

கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக் கூடிய பொருள்கள் உள்ளன.

பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடி யது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும். நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடு வதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும்.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப் படும் ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கி யமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்துக் காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டி ருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவ னாய்ட்ஸ் காணப்படுகிறது. மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கிய மாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAfGym0

தமிழ் ஓவியா said...

இயற்கை தரும் மருத்துவம்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக் கும் தன்மை மிளகுக்கு உண்டு.

சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப் படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.

வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAtE6Lk

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியத்திற்கு 6 உணவுகள்


ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன.

நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான எச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்சினையைச் சரி செய்வ துடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப் போகும் பிரச்சினையைத் தவிர்க்கும். ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.

சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச் சினையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின் என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81834.html#ixzz34CB2FpAM

தமிழ் ஓவியா said...


மோடி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும்? சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மய்யக் கருத்து


லண்டன், ஜூன் 9--இந்தியத் தேர்தல்களில் கடந்த 30 ஆண்டுகளில் 1984 ஆண்டிற்குப்பிறகு யாரும் பெறாத அளவில் 545 உறுப்பினர்களில் 282 நாடாளுமன்ற உறுப் பினர்களை தனிக்கட்சி பெரும்பான்மையுடன் மக்களவைக்கு பாஜக பெற்றுள்ளது. அதன் கூட்டணியுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற் றுள்ளது.

மோடி இதுவரை யாரும் பெற்றிராத அள வில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது முரண் பாடானவராக பார்க்கப் பட்ட அரசியல்வாதி, மோடி வணிக நட்பில் அதிக நாட்டத்துடன் உள்ளதால், வரும் அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் அதிகாரத்தை தக்க வைத் துக் கொள்வார்.

அவரு டைய நிர்வாகம் என்பது தேனிலவுக்கு ஒப்பாக மகிழ்வாக எண்ணமுடி யாது. அய்க்கியப் பேரர சின் சர்வதேச அமைப் பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு அமைப்பு ஜுன் 5 ஆம் நாளில் வெளியிட் டுள்ள சிறப்பு அறிக்கை யில் இவ்வாறு கூறி உள்ளது.

அந்த ஆய்வு அறிக் கையின்படி,

தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சரிபாதி அளவினர் நாட்டில் உள்ள மாநிலக்கட்சி களைச் சார்ந்தவர்கள். மாநில அளவில் ஆட்சி செய்பவர்களும் ஆவார் கள். கொள்கை முடிவு களில் சுயேச்சையாக தீவிரத்தன்மையுடன் முடி வுகளை எப்படி வேண்டு மானாலும் எடுப்பார்கள். 2003-2008 இல் இருந் ததைவிட தற்போது 5 விழுக்காடு அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

வாக்காளர்கள் தூய்மை யான அரசு நிர்வாகத்தை யும், அரசின் சேவைகளில் முன்னேற்றத்தையும், நல்ல திட்டங்கள், பணிகள் எப்போதுமே உயர்ந்த அளவில் இருக்கவேண் டும் என்று எதிர்பார்க் கின்றனர்.

மோடியின் அயலுறவுக் கொள்கை சம அளவில் இருக்குமா என் பது அய்யத்துக்கிடமா கவே உள்ளது. சீனாவுடன் சுமுக உறவு, ஆஃப்கானிஸ்தானி லிருந்து நேட்டோ படை திரும்பப் பெறுதல், அருகாமை நாடுகளிடம் வளர்ந்து வரும் பாதுகாப் பின்மை உணர்வு, இவற்றை மேற்கத்திய நாடுகள் விரும்புவது போல் நடுநிலையில் இருந்து செயலாற்றும் பாங்கு இவை அனைத் தையும் பிரதமர் என்கிற முறையில் கவனத்தில் கொள்ள வேண்டி உள் ளது.

மோடியின் தலை மைப் பண்புகுறித்து ஆரா யும்போது, இந்தியாவின் முக்கியமான பங்கு வணிகத்தவருடன் உள்ள உறவை ஒட்டியே கொள் கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை உள்ளது என்று ஆய் வறிக்கையில் குறிப்பபிடப் பட்டுள்ளது.

மேலும், இராணுவத்துக்கான செலவினக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றிற்கு தாராள பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகிய வற்றின்மூலம் அமைதி யின்மை ஏற்படும் அபா யம் உள்ளதாக ஆக்ஸ் ஃபோர்டு ஆய்வு எச் சரிக்கிறது. பொருளாதார ஒருங்கிணைப்பை அரசு இடைக்கால இலக்காகக் கொண்டுள்ளது.

வருவாய் தேவை அதிகரிப்பு சவா லாக இருப்பதுடன், நிலச் சீர்திருத்தங்களை எண் ணும்போது முடியாத ஒன்றாகவே இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81847.html#ixzz34CBGsGiV