Search This Blog

4.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 1


இதுதான் வால்மீகி இராமாயணம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முகத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை.
வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன).
இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.பால காண்டம்

முதல் அத்தியாயம்
ராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப் பெற்று உள்ளது. அவையாவன: பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்திர காண்டம். இவற்றில் முதலாவதாகிய பால காண்டத்தை முதலில் ஆராய்வோம்.
இராவணனால் துன்பமடைந்த தேவர்கள் அனைவரும், இந்திரனோடு பிரம்மாவின் உலகை அடைந்து தங்கள் குறையைத்  தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே பிரம்மாவும் தேவர்களும் அவரை பூமியில் மனிதனாகப் பிறக்க வேண்டிக் கொண்டனர். அவ் வேண்டுதளுக்குத் தாமும் இசைந்து, அவர்களை நோக்கித் திருமால், தசரத மன்னருக்கு பிறந்து இராவணனைக் கொன்று 11,000 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் இங்கே வருவேன் என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம்.

1. ஒருமுறை திருமால் பிருகு முனிவருடைய மனைவி யைக் கொன்றுவிட்டார்.அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப்பிறந்து  மனைவியை இழந்து வருந்தும் படிச் சபித்து விட்டார். இது முதற் காரணம். இது வால்மீகி இராமாயண உத்திர காண்டம் 51-ஆம் சருக்கத்தில் உள்ளது. அங்கே விவரமாக ஆராய்வோம். அதே செய்தி, மகா ஸ்காந்த புராணம் உபதேச காண்டம், 64 -ஆம் அத்தியாயத்திலும் கூறப்பெற்றுள்ளது.


2. சலந்தராசுரனுக்கு மனைவியாகிய பிருந்தையைச் சேர வேண்டும் என்னும் காதல் மிகக்கொண்ட திருமால், அவ்வ சுரன் இறந்தமைக் கண்டு அவனுடலில் நுழைந்து கொண்டு, ஆவலுடன் கூடிக்கொண்டு வந்தான், சில நாட்களில் அக்கற்ப்புக்கரசி கூடுவது திருமால் என்று அறிந்து மாயை யினால் என்னோடு கூடி அதனால் பிறர் மனையாளைப்  புணர்ந்த திருமாலே! உன் மனைவிய பகைவன் வஞ்சனை யால் கவர்ந்து போக கடவு. என் கணவன் உடம்பினைக் குரங்குகளால் நீ கொண்டு வந்ததனாலே நீயும் குரங்கு களோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய் என்று சபித்தாள். பின்னர் உடனே அவள் தீக்குளித்துக் கேட்ட தன் உடம்பைச் சாம்பலாக்கினாள். இச்செய்தி மகா ஸ்காந்த புராணம் தக்க காண்டம் 23 - ஆம் அத்தியாயத்தில் உள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்தது புரண்டான். அதன் பின் அச்சாம்பலில் முளைத்த துளசியை அணிந்து மயக்கம் தீர்ந்தான் என்பது இரண்டாவது காரணம்.

3. ஒரு பிரதோஷ வேலையில் திருமால் மனித உடம் போடு திருமகளைப் புணர்ந்து கொண்டிருந்தார். அப் பொழுது சோதிக்கச் சென்ற அர்ப்புதாக்கன் எனும் சிவ கணத் தலைவன் அவரை நோக்கி, நீ யாரடா ? என்று கேட்டான். அதற்க்கு கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல், திருமால், அவள் மேலிருந்த வண்ணமாக " கேட்பது யாரடா ? என்றார். இவ் வெறுக்கத்தக்க செயலைக் கண்டு மீண்டும் அத்தலை வன் இச்செய்தியை நந்தியிடம் தெரிவித்தான். உடனே நந்தி தேவர் அத்திருமாளைப் பூமியில் இராமனைப்பிறந்து மனை வியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார்.


 இச்செய்தி சிவரகசி யத்து 3 -ஆம் அம்சத்து 2 - ஆம் காண்டம் 43 - ஆம் சருக்கத்தில் காண்க. அச்செய்யுள் வருமாறு :-

அவனை நீ யாவனடா வென்று கேட்டேன்
அம்புயப் பெண் நைத்தழுவ னீ ங்க கில்லான்
யவ்வனமா துடன்கூடி யிலச்சை இன்றி
யென்னைநீ யாவனடா வென்று கேட்டேன்.
கவனமுறு மிவன்தூர்த்த னென்று கண்டேன்
கருத்திலவன் ரனைத்தளள்ள  வல்லே னெம்மான்
சிவனருள்சே ருந்தாணை குறித்து மீண்டேன்
தேவரீ ரிதொரு புதுமை யவன்பாற் கண்டேன்.  மன்னவன் றன்  மைந்தனா மிராமனாகி
வந்து பிறந் திடக் கடவ நாகுமன்றே

இது மூன்றாவது காரணம்.

இது போன்றதொரு செய்தி சிவ ரகசியம் 3 -ஆம் அம்சம், 2 -ஆம் காண்டம், 4 - ஆம் சருக்கத்திலும் காணப்படுகிறது.

அதாவது வைகுண்டத்தில் திருமால் பிரதோஷ வேளையா கிய மாலைக் காலத்திலே திருமகளைப் புணர்ந்து கொண் டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றார். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் திருமகளைக்கூடிய படியே கை காட்டித் தடுத்திருக்கிறார். உடனே பிருகு முனிவர்.

என்னளும்  இனியவந் திவேளை தன்னில்
ஏந்திழையைப் புணர்வாரோ ? உனக்கிப் புத்தி
சொன்னார்ஆர் உன்மத்தமுண்டோ வென்று
தூயமா தவன் தான்மா தவனை நோக்கிப்
பண்ணலும் பிரதோடந் தனில்உன் னாமம்
பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர்
துன்னாத நிரயத்தில் புகுவாரென்று
சூழ் கோப்பைத் தால்சாபம் சொல்லிப் போனான்
மேற்கண்ட சாபங்கள் பலிக்கும் காலம் வர, திருமால் தேவர் களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார்.

இரண்டாம் அத்தியாயம்

யோத்தியா புரியிலே சூரியகுல மன்னனாகிய தசரதன் அரசு புரிந்து வந்தான். அவன் வசிஷ்ட முனிவரின் நல்லுரை யாலும், அமைச்சராகிய சுமந்திரனுடைய நன் மந்திரத்தாலும் செம்மையாக அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தான். இவனுக்குக் கவுசலை, கைகேயி, சுமத்திரை என்றபட்டப் பெண்கள் மூவரும், வேறு அறுபதினாயிரம் பெண்களும் மனைவியர். இவர்கள் ஒருவருக்காவது குழந்தை உண்டாக வில்லை. அதனால் மிகவும் கவலையடைந்த தசரதன், தனது குல குருவோடும் மந்திரிகளோடும் ஒரு நாள் பலவாறு சிந் தித்துப் பிள்ளைப்பேற்றுக்காக அசுவமேத யாகம் செய்வ தாகத் தீர்மானத்தனன். குல குருக்களின் அனுமதிபெற்ற அரசன் தனது மந்திரிகளை நோக்கிக் குருக்களின் அனுமதி பெற்ற அரசன் தனது மந்திரிகளை நோக்கிக் குருக்களின் ஆணைப்படி வேண்டும் பொருள்களைத் தயாரிக்கும்படி கட்டளையிட்டனன். அச்செய்தி கேட்ட அவன் மனைவியர் மகிழ்ந்தனர்.

அப்போது சுமந்திரன் அரசனை ஏகாந்தத்தில் பார்த்துப் பின்வருமாறு சொல்லலுற்றான்.

முன்னர் முக்கால ஞானியாகிய சநத்குமாரர் சொன்னவற் றைச் சொல்லுகிறேன். காசியப முனிக்கு விபண்டகரென்ற மகனிருக்கிறார். அவருக்கு ருசிய சிருங்கரென்ற ஒரு மகன் பிறப்பான். அந்தக் காலத்தில் அங்க தேசத்திலே ரோமபாத ரென்னும் அரசர் தோன்றுவரர். அவர் நாட்டில் தீராத பஞ்ச முண்டாக, அதனை நீக்குவதற்காக அம்மன்னர் ஆலோசித்து தாசிகளால் அம்முனி மகனை அழைத்து வந்து தமது மகள் சாந்தையை மணஞ்செய்து கொடுப்பார். அம்முனி மகன் வந்தால் மழை பெய்து பஞ்சம் நீங்கும். அவரை அழைத்து வந்து தசரதர் யாகம் செய்து மகப்பேறடைவார். இவ்விதமாக அம்முனிவர் சொல்லியிருக்கிறபடியால் ருசியசிருங்கரை அழைத்து வந்து தாங்கள் அந்த யாகத்தைச் செய்ய வேண்டும்.

இவ்வாறு சுமந்திரன் சொன்ன மொழியைக் கேட்ட தசரதன் ருசியசிருங்கரை ரோமபாத மன்னர் எவ்வாறு தமது நாட்டுக்கு அழைத்து வந்தார் என்று கேட்டனன். அந்த வரலாற்றைச் சுமந்திரன் கூறினான். அவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் ஒன்பதாவது, பத்தாவது சருக்கங்களில் உள்ளன.

(இவ்வாராய்ச்சியில் நாம் குறிப்பனவெல்லாம் நமது சொந்த மொழிகளென எண்ணுதல் கூடாது. வால்மீகி முனிவர் இராமாயணத்தைத் தமிழில் பண்டித நடேச சாஸ்திரி யாரும், பண்டித அநந்தாச் சாரியாரும் மொழி பெயர்த்து அச்சிட்டிருக்கின்றனர். பண்டித அநந்தாச் சாரியாரும் மொழி பெயர்த்து அச்சிட்டிருக்கின்றனர். பண்டித தத்தர் என்பவர் ஆங்கில மொழி பெயர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடைய சொற்களின் போக்கையே நாம் எடுத்துள் ளோம். இவ்வாராய்ச்சியினால் வால்மீகி இராமாயணம் படியாதவர் மயக்கம் ஒருவாறு நீங்குமென்பது நமது நம்பிக்கை.)

ருசியசிருங்கர் வரலாற்றை ஆராய்வோம்.

உரோமபாதரென்னும் அங்க மன்னர் சில புரோகிதர் களை யழைத்து ருசியசிருங்கரை அழைத்து வருமாறு ஏவினர். ஆனால் அவர்கள் மன்னரை நோக்கி நாங்கள் போகமாட்டோம், பாலியராகிய அவரை எங்களால் வசப்படுத்த முடியாது. மாந்தர் மனதைக் கவரச் செய்யும் இனிய சிற்றின்பங்களால் அவரை மயக்கி வசப்படுத்த வேண்டும். நல்ல அழகுள்ள தாசிகளை நல்ல அலங்காரங் களைச் செய்து கொண்டு அவரிடம் அனுப்பி, பலவித உபாயங்களைக் கொண்டு அவரை அன்பு கூரச்செய்து வசப்படுத்தி அழைத்து வரச் செய்யவேண்டும். என்றனர். அதன்படி பல அழகு மிக்க தாசிகள் அனுப்பப் பெற்றனர். அத்தாசிகள் ருசியசிருங்கரைக் கண்டனர். அம்முனி மகன் தாம் ஆசைப்படும்படியான அழகுடையர்களா அம்மாதர் கள் இருப்பதைக் கண்டு அவர்களிடம் அன்பு கொண்டனன். அப்பெண்கள் அவனை நன்றாக ஆலிங்கனம் பண்ணிக் கொண்டுமகிழ்ச்சியோடு அவனுக்குக் கொழுக்கட்டை முதலிய பலகாரங்களை ஊட்டினர். அம்முனைவனுடைய ஆச்சிரமத்தில் இவ்வாறு ஆலிங்கனம் செய்து அவரை மயக்கி விட்டு அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றார்கள். அவர்கள் பிரிந்ததும் அவன் மனங்கலங்கி ஓரிடத்திலுமிராமல் மயங்கித் திரிந்து கொண்டிருந்தான். மறுநாள் அவர்களிடம் சென்ற மனதைத் திரும்ப முடியாதவனாய் அவன் மனமருட்டும் அம்மங்கையரிருந்த இடத்திற்குச் சென்றனன். அவர்களும் அவனைப் பலவாறு மயக்கி நீர் எங்களோடு வந்தால் உமக்கு இதைப்போல் இன்பம் அதிகமாகக் கிடைக்கும் என்றனர். உடனே அவன் தனது தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை யெல்லாம் மறந்து அவரிடம் சொல்லாமல் அப்பெண்க ளோடு புறப்பட்டுச் சென்றான். பின் அங்கதேசத்தை அடைந்து அம்முடின மகன் அரசன் மகள் நாந்தையை மணந்து காம இன்பம் நுகர்ந்து கொண்டு அரண்மனையி லேயே இனிதிருந்தான்.
உடனே மழை பொழிந்து நாடு செழித்தது.இவ்வரலாற்றைக் கவனித்துப் பார்த்தால், தனது தந்தைக்குச் செய்யும் பணிவிடையை மறந்து, அவரிடம் சொல்லாமல் காம வசப்பட்டு, தாசிகளோடு காட்டிலிருந்து ஓடி வந்து நாடு புகுந்து ஒரு பெண்ணைக் கலியாணஞ் செய்துகொண்ட ஒருவன், கால் வைத்த புண்ணியத்தால் மழை பெய்வது என்றால், அத்தெய்வத்தின் தெய்வத் தன்மை தானென்னே! தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமையினும், வேசையர் காம வசப்பட்டிருத்தலே மேன்மையான புண் ணியம் போலும்! இத்தகைய மகாநுபாவரையே, பிள்ளைப் பேறு கருதி யாகஞ்செய்யத் தொடங்கும் தசரதன், யாக கர்த்தாவாக அழைத்து வருகின்றனன். ருசியசிருங்கர் வரவைக் கண்டு மழை பொழிந்தவன் இந்திரன். இந்திரனின் மகிமைகளைப் பின்னர் ஆராய்வோம். பலதாரகமனப் பிரியனாகிய இந்திரன், வேசையர் லோலனாகிய ருசியசிருங் கனைக் கண்டு மகிழாமல் வேறு யாது செய்திருப்பான்?இந்த ருசியசிருங்கன் வரலாற்றைக் கம்பர் எவ்வாறு கூறு கிறாரென்று கவனிப்போம். தசரதன் வசிட்ட முனிவரிடம் தன் பிள்ளையில்லாக்குறையைச் சொன்னதாகவும், அம் முனிவர் திருமால் அவனுக்குப் பிள்ளையாகப் பிறக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறதாகவும், அதனால் கலைக் கோட்டு முனிவரை (ருசியசிருங்கரை) அழைத்து வந்து அசுவமேத யாகஞ் செய்தால் திருமால் வந்து பிறப்பார் என்றும் சொன்னதாக எழுதுகிறார். இது வால்மீகி வரலாற் றுக்கு மாறுபட்டது. தசரதனுக்குத் தன்னிடம் திருமால் வந்து பிறக்கப் போவதாகத் தெரியாது. அவனிடம் ஒருவரும் சொல்லவில்லை. சுமந்திரன் கூட இதை உணர்ந்தவனு மல்லன். தசரதனிடம் சொன்னவனுமல்லன். கம்பரே உண் மையை மாற்றி, வசிட்டர் திருமால் பிறப்பைத் தசரதனிடம் சொன்னதாக எழுதுகிறார்.மேலும் கம்பர் தமது நூலில், ரோமபாத மன்னன் புரோகிதரை நோக்கிக் கலைக்கோட்டு முனிவரை அழைத்து வரவேண்டியது என்றதும், அவர்கள் தம்மாலாகாது. மனிதருடைய மனத்தைக் கவரும் இனிய சிற்றின்பத்தால் தான் அவரை மயக்கி அழைத்து வர வேண்டும் என்று கூறியதும் ஆகிய வரலாற்றைக் கூறாது மறைத்து விட்டார். அப்பெண்களைச் சோதி நுதற் கருநெடுங்கட் டுவரிதழ் வாய்த் தவளநகைத் துணை மென்கொங்கை மாதர் என்றும், பனிப்பிறையைப் பழித்த நுதற்பணைத்தவேய்த்தோள் ஏங்குமிடையே தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவச் செவ்வாய்ப் பூங்கொடியீர் என்றும் வருணித்த கம்பர், அவர்கள் வனஞ் சென்று தவசிகளைப் போல இருந்தார்கள் என்றார். இதுவும் வால்மீகர் கூறாதது. பின் அவர்கள் கலைக் கோட்டு முனியை ஆலிங்கனம் செய்ததை யும் கம்பர் மறைத்தார்.அம் மாதர்கள் அந்த ருசியசிருங்கர் ஆசைப்படும்படி யான அழகுடையவர்களாய் (வால்மீகி இராமாயணம் பத்தாவது சருக்கம்) என வருவதையும், மற்றும் நாம் மேலே வால்மீகி கூறியதாக எடுத்தக் காட்டியுள்ள வரலாற்றையும் மறைத்துக் கம்பர் ருசியசிருங்கரை மிகவும் உத்தமராகக் காட்டுகிறார்!


பின் சுமந்திரனுரைத்த மொழிப்படி தசரதன், புத்திர ருண்டாகச் செய்ய வல்லவராகிய சாந்தையின் கணவரான ருசியசிருங்கரை அழைத்து வரும் பொருட்டுத் தானே அங்க நாடு சென்றான். அங்கே ரோமபாத மன்னரால் உபசரிக் கப்பட்டுச் சின்னாளிருந்து பின் கலைக்கோட்டு முனிவரைச் சாந்தையோடு அழைத்துக் கொண்டு அயோத்தியை வந்த டைந்தான். அதன்பின் தசரத மன்னன் பிள்ளைப் பேற்றுக் காக அசுவமேதயாகஞ் செய்யத் தொடங்கினான்.

                                 ----------------------" விடுதலை” 3-6-2014

Read more: http://www.viduthalai.in/page-3/81497.html#ixzz33d534ttG

24 comments:

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் தன்மானம் உள்ள தமிழர்களாக வாழவேண்டும்! - கலைஞர் பேட்டி -


சென்னை, ஜூன் 4- தமி ழர்கள் தன்மானம் உள்ள வர்களாக வாழவேண்டும் - இதுதான் தனது பிறந்த நாள் செய்தி என்றார் கலைஞர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தமது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் நினைவிடங் களுக்குச் சென்று மரி யாதை செலுத்திய பின்னர், அண்ணா அறிவாலயத்திற் குப் புறப்பட்டார்.

அப்போது செய்தியா ளர்களுக்கு தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:- பிறந்தநாள் செய்தி

செய்தியாளர்: 91 ஆவது பிறந்தநாள் காணும் தாங்கள், தங்கள் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக தெரி விக்க விரும்புவது என்ன? கலைஞர்: தமிழர்கள் தன்மானம் உள்ளவர் களாக, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதே தமிழர்களுக்கு நான் வழங்கு கின்ற பிறந்தநாள் செய்தி.

இன்னும் தொடர்கிறது

செய்தியாளர்: 91 ஆவது வயதில் இன்று நீங்கள் அடியெ டுத்து வைக்கிறீர்கள். உங்களுடைய கனவு, நீங்கள் கண்ட கனவு, அரசியல் வாழ்க்கையில் நிறைவேறியதாக நினைக்கிறீர்களா?
கலைஞர்: என்னுடைய கனவு என்பது, இன்னும் தொடர்கிறது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81519.html#ixzz33ilWtQaw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் - அவன் பாராத போதும் மெல்லப் பார்க்கவேண்டும்.

- ஒரு சினிமா பாடல் முருகன்தான் ஆறு முகன் ஆயிற்றே!
எந்த முகத்தைப் பார்ப்பதுவோ

Read more: http://www.viduthalai.in/e-paper/81518.html#ixzz33ilguBdv

தமிழ் ஓவியா said...


இது நாடா? காடா? பெண் நீதிபதிமீதே பாலியல் வன்முறை

லக்னோ, ஜூன் 4- உ.பி. யில் பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமாறி நீதிபதி களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்துள்ளன.

படானில் இரண்டு தாழ்த் தப்பட்ட சிறுமி கொடூர கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு மரத் தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் நாடு முழு வதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன் முறை சம்பவங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் அலிகாரில் பங்கஜ் குப்தா, கோபால் குப்தா ஆகிய இருவர், பெண் நீதிபதியை பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவரைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ள னர் என்று காவல்துறை யினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். பெண் நீதிபதி தனது அரசு வீட்டில் கடந்த திங்கள் கிழமை அன்று நினைவின்றி பலத்த காயத்துடன் காணப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக அம் மாநில காவல்துறை அதி காரி நிதின் திவாரி செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், பாதிக்கப் பட்ட பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகா ரின்படி பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது வரையில் எந்த மருத்துவப் பரிசோதனையும் நடத்தப் படவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட பெண் ணின் சாட்சியத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி அங்குள்ள மருத் துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்ற வாளிகளை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81520.html#ixzz33ilqLKNC

தமிழ் ஓவியா said...


பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

பிசினஸ் லைன் ஏடு அம்பலப்படுத்துகிறது

புதுடில்லி, ஜூன் 4- பிரத மர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.

இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணி யாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் சோச லிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த் திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பது தான்.

ஆனால், பிரதமர் அலு வலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணைய தளத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்த இணையதளத்தில் தனது சித்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: சங் அமைப்பின் சித் தாந்தம் என்பது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூல மாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய் வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற் றுவதே. இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணி யாற்றுவதற்கான வழி முறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

பிரதமர் அலுவல கத்தில் புதிய இணைய தளத் தில், முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப் பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புட னான தனிப்பட்ட நபர் களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ் வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.

அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வந்தது. உதா ரணத்திற்கு, 2001 ஆகஸ்ட் டில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம் தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச்செய லாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக் கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப் பட்ட நிகழ்ச்சி என்ற அளவி லேயே இருந்தது. அந்த நிகழ்ச்சி தொடர் பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலை வர் இனாம்தார் தொடர் பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தக வலும் உண்டு. இனாம் தாரை, வழக்குரைஞர் சாகேப் என்றும் குறிப்பிடு வார்கள்.

அவரைப்பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ் சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதா நாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப் பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அது தொடர்பு டைய ஆர்எஸ்எஸ் ஊழியர் களை பாதுகாப்பதற்கும் இதே வழக்குரைஞர் சாகேப் தான் வாதாடினார் என்பது தனிக் கதை.

நன்றி: தீக்கதிர், 31.5.2014

Read more: http://www.viduthalai.in/e-paper/81515.html#ixzz33im29qkj

தமிழ் ஓவியா said...


புரட்சியின் நோக்கம்


எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணரவேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.

_ (குடிஅரசு, 23.12.1944)

Read more: http://www.viduthalai.in/page-2/81522.html#ixzz33imFIFih

தமிழ் ஓவியா said...

பிறந்த நாளா? புத்துணர்வு பிறந்த நாளா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை - இலட்சக்கணக்கானவர்கள் நிரம்பி வழிய நடைபெற்றது.

தேர்தலில் கடுந்தோல்வியைச் சந்தித்த ஒரு கட்சி, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளை மய்யப்படுத்திக் கிளர்ந்து எழுந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்தப் பிறந்த நாள் விழா அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இயல்பாக வேறு எங்கும் காண முடியாத அதிசயம்தான் இது.

வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே தி.மு.க. இருந்திருந்தால், அரசியல் லாபம் கிடைக்கும் கட்சிகளின் மடிகளில் போய் விழுந்திருப்பார்கள். காற்றடிக்கும் பக்கம் பறந்தே போயிருப்பார்கள்.

தி.மு.க.வில் ஏனிந்த நிலை ஏற்படவில்லை என்பதற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனார் அவர்கள் அக்கூட்டத்தில் சொன்ன அந்தக் கருத்துத்தான் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் அரசியல் கட்சி என்பதையும் கடந்து சமுதாய கொள்கைகள் இதற்கு இருப்பதே காரணமாக இருக்க முடியும்; தானும், கலைஞர் அவர்களும் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், அவற்றில் இந்த வயதிலும் உறுதியாக இருக்கிறோம்; அந்தத் தத்துவம் மேலும் தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்ததும், அதனை வழிமொழிகின்ற வகையில் கலைஞர் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்துப் பேசியதும் இராயப்பேட்டைக் கூட்டத்தின் தனி முத்திரையாகும். இலட்சக்கணக்கான அளவில் கூடிய அந்தக் கூட்டத் தில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை. இரு தலைவர் களும் எடுத்து வைத்த அந்தக் கருத்துகள், அந்த இளை ஞர்களைப் பெரிய அளவில் பாதித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க. நடத்தும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் இந்த அடிப்படை இலட்சியக் கோட்பாடுகள் எடுத்துச் சொல்ல சொல்லத்தான் தி.மு.க.வுக்கு அப்பாற்பட்ட தமிழின இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

இன்றுள்ள சிக்கலோ இந்த அடிப்படை கருத்துகள் சமூகநீதித் தகவல்கள் இளைஞர்களிடத்தில் போதிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

சமூகநீதிச் சித்தாந்தத்தின் அடிநீரோட்டத்தை அவர்கள் தெரிந்திருந்தால், நீயா, நானா? நிகழ்ச்சிகளில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முதலில் ஒழியவேண்டும்? என்று பேசுவார்களா?

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சி ஒரு சட்டம் கொண்டு வருகிறது; அந்த ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது; அந்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் புராண மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் வருஷங்களை அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு; இதுபற்றிய சரியான புரிதல் நம் இன மக்களுக்கு, இளைஞர்களுக்கு இருந்திருக்குமேயானால், எவ்வளவுப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளம்பி இருக்கவேண்டும்? பார்ப்பனீய சிந்தனையோடு ரத்து செய்த ஆட்சிக்கு வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பித் திருக்கவேண்டுமே! அது நடக்கவில்லை என்கிறபோது, திராவிடர் இயக்கத்தின் பகுத்தறிவு, இனமானக் கருத்துகள் இந்தப் புதிய வரவு வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லுவதுபற்றித்தானே சிந்திப்பது சரியாக இருக்க முடியும்!

தமிழ் ஓவியா said...

தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இத்திசைக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

இராயப்பேட்டைக் கூட்டத்தில் விழா நாயகர் கலைஞர் அவர்கள் நமது நாட்டு ஊடகங்கள்பற்றி எடுத்துச் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.

ஏடுகள் ஒரு சார்பு நிலையை ஏன் எடுக்கவேண்டும்? வெளிப்படுத்தவேண்டிய தகவல்களை ஏன் இருட்டடிக்கவேண்டும்? என்ற நியாயமான வினாவை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் கேட்கிறேன் என்று கலைஞர் கேட்டாரே - இதற்கு நேர்மையான பதில் அளிக்கும் அறிவு நாணயம் நம் நாட்டு ஊடகங் களில் கிடையாது என்பது வெட்கக்கேடே!

ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சுவது, விளம்பர வருமானத்திற்குத் தாள் பணிவது என்று ஆகிவிட்டால், பத்திரிகைகளின் நோக்கம் என்பதே - அதன் ஆளுமை என்பதே அறவே அறுபட்டு விழுந்த பட்டமாகிவிட்டது என்றே பொருள்!

மூன்றாவதாக தி.மு.க. தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்து கட்சி அமைப்பு முறையில் மாற்றங்கள் வரும் - கூர்தீட்டப்படும் - புதுப் பொலிவோடு புதுப் புனலாகப் பொங்கி வரும் என்பதாகும்.

எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பு, சீரமைப்பு, தேவைப்பட்டால் களை எடுப்பு என்பதெல்லாம் - வேளாண்மையில் கடைப்பிடிக்கும் யுக்தி போன்றவையே!

சுருக்கமாகச் சொன்னால், மக்களவைத் தேர்தல் தோல்வி என்பது தி.மு.க. தீரத்துடன் போர் வீரனாக முகிழ்த்து எழுவதற்குக் காரணமாகிவிட்டது என்று கருத இடம் இருக்கிறது.

இதற்குக் கட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாள் அமைந்தது - வேறு எந்த கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதே!
தொடரட்டும் நன்முயற்சிகள்!

Read more: http://www.viduthalai.in/page-2/81523.html#ixzz33imSMIHc

தமிழ் ஓவியா said...


சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?


ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். அய்ந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்ல வல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந் தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல் களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத் தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இன அழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர் வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காகப் போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும். இதனால் தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசிய தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார். எமது அரசியல் போரை முன்னெ டுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லை யேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? அய்ந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீ காரத்தைப் பெற முடியாதது, சர்வதேசத் தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பை யும், அதிலும் மேலாக இவர்கள் திறமை யையும் எமக்கு எடுத்துக் காட்ட வில்லையா? இந்த அங்கீகாரம்; பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதி வாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாள்களில், எம் உறவுகளுக்காக; கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள் மீது நாம் கொண்ட அன்பும், பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையா னால், வலிமைமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மய்யமாகக் கொண்டு, தேசிய தலைவரின் இலட்சியப் பாதை யில் பயணிக்கவல்ல ஓர் அணி, தகுதி வாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக் கும் விதத்தில், உருவாக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், ஒரு இராப் போசனமும் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டு, அய்.நா. மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர்கள் செல் வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம் பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய் வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத் துக்கும் முதலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புது அணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்த சங்கரி அபகரித்து தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழி னம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில் லையா? அறவழிப்போராட்டத்தை வழிநடத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு சென்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவ காரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் த்லைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க வல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வி யும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க தொ.இ: கனடா 416 829 1362.

sivalingham@sympatico.ca

Read more: http://www.viduthalai.in/page-2/81524.html#ixzz33imrKoeW

தமிழ் ஓவியா said...


முயல வேண்டும்தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க் கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயல வேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/81581.html#ixzz33ok3R1tI

தமிழ் ஓவியா said...

தெரியுமா உங்களுக்கு?

வெள்ளி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன் உச்சப்பிரகாசத்தை அடைகிறது. இதனால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தை கொண்ட கோள் வெள்ளியாகும்.

இது அதிகரித்த பச்சை வீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையை கொண்டுள்ளது. இது புவியை போல கற்கோளத்தை கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டதட்ட புவியினுடையதை ஒத்து போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம் 12092 கீலோ மீட்டர் நீளத்தை கொண்டது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது.

சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் 3 ஆக சுருங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் பார்ப்பதற்கு பிரகாசமாக இருப்பதுடன் சூரியனும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.

வெள்ளி கோள் பரப்பின் சூழல் தற்போது மனிதன் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளி கோள் பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் மேல் உள்ள வளிமண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரஜனை பெற்றுள்ளது.

அதனால் வெள்ளியின் வானில் மனிதர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது. காற்றினும் எடை குறைந்து மிதக்கும் நகரங்களை உருவாக்கி அதில் நிரந்தர குடியேற்றங்களை அமைக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33olXkJsj

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கோளில் இமயமலையை விட 2 மடங்கு பெரிய எரிமலை


செவ்வாய் கோளில் ஏராளமான எரிமலைகள் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய எரிமலை ஒன்று செவ்வாய் கோளின் வடபகுதியில் இருப்பதை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த எரிமலை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட 2 மடங்கு பெரிதானது என்று அவர்கள் கூறியுள்ளனர். நமது சூரிய குடும்பத்திலேயே இதுதான் பெரிய எரிமலையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலை இருக்கும் பகுதியை சுற்றி முழுவதும் எரிமலை சாம்பல் குழம்புகள் நிரம்பி இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33oldWFnr

தமிழ் ஓவியா said...


கோவில் - பக்திச் சமாச்சாரங்கள் கத்திக்குத்து - சாலை விபத்து - உயிரிழப்பு... இத்தியாதி... இத்தியாதி...


சென்னை, ஜூன் 5- மூட நம்பிக்கை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும், தகராறும் அன்றாடம் நடைபெறும் வழக்கமாகி விட்டது. அவற்றை தொகுத்து இங்கே கொடுக்கப் பட்டிருக்கிறது.

கோவில் விழாவில் தகராறு 4 பேருக்கு கத்திகுத்து 3 பேர் கைது

வாடிப்பட்டி அருகே கோவில் விழாவில் சாமி பெட்டி எடுத்து வருவதில் நடைபெற்ற தகராறில் 4 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி. இங்கு சடையாண்டி, காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் சாமி பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் சடையாண்டி கோவில் தெரு வைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பவர் வீட்டில் இருந்து சாமி பெட்டி கொண்டு வருவது வழக்கமாம்.

இந்த ஆண்டும் அவரது வீட்டில் இருந் சாமி பெட்டியை எடுத்து வந்தனராம். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் நீ சாமி பெட்டியை எடுத்து கொண்டு வந்து கொடுத்ததோடு விட்டுவிடு, நாங்கள் தான் சாமிபெட்டியை தூக்கி செல்வோம் என்று கூறினாராம்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துகிருஷ்ணன் அவரோடு வந்த முத்துமனோகரன், பாலமுருகன், முத்துராஜா, அழகர், முத்துகுமார் மற்றும் அடையாளம் தெரிந்த 4 பேர்களும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனராம்.

அந்த மோதலில் ராஜேந்திரன் அவரது உறவினர் களான முத்துகண்ணன், பிரபாகரன், கோபி ஆகியோரை முத்துக்கிருஷ்ணன் தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இதில் ராஜேந்திரனுக்கு கையி லும், முத்துகண்ணனுக்கு வயிற்றிலும், பிரபாகரனுக்கு மார்பிலும், கோபி என்பவருக்கு வலது மார்பு மற்றும் இடுப்பு பகுதியிலும் கத்திகுத்து காயம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன், முத்துராஜா, அழகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olqoGJ6

தமிழ் ஓவியா said...

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் சாவுவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி

தாராபுரம் அருகே பேருந்துமீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் இறந்தனர். கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது நடந்த இந்த விபத்து சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள பகலையூரை சேர்ந்த ராமசாமியின் மகன் தனபால் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி(21). இவர்களுடைய 4 மாத குழந் தைக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று பெயர் சூட்ட திட்டமிட்டனர்.

இதற்காக கடந்த ஒன்றாம் தேதி பகலையூரில் இருந்து தனபால் தனது மனைவி அபிராமி (21), அம்மா சாந்தா (55) மற்றும் அண்ணன் திருமூர்த்தி (35), அண்ணி சிவசங்கரி (25), அண்ணன் மகள் ஹரிணி (7), சித்தி மகன் சந்தோஷ் (17) ஆகியோருடன் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டு சென்றனராம்.

அந்த வேனை ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய கவுண்டன் வலசு முல்லை நகரை சேர்ந்த தனக்கொடி யின் மகன் வெள்ளியங்கிரி(25) ஓட்டிச் சென்றார். திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற அவர்கள் அங்கு தனபாலின் 4 மாத குழந்தைக்கு ஹரீஷ் என பெயர் சூட்டி னார்கள்.

பின்னர் அவர்கள் இரவு திருச்செந்தூரில் இருந்து வேனில் புறப்பட்டு பகலையூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் மோட்டல் அருகே வேன் வந்தது. அப்போது திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை செங்கோட்டையைச் சேர்ந்த வேலுசாமி (45) ஓட்டினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த வேன் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் வேன் பேருந்தின் அடிப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்தவர் கள் அலறினார்கள். பேருந்தில் இருந்து இறங்கிய பய ணிகள் வேனில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய வர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். பேருந்துக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டதால் யாரையும் வெளியே எடுக்க முடியவில்லை. பின்னர் கிரேன் எந்திரம் மூலம் வேனை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். அப் போது வேன் அப்பளம் போல் நொறுங்கி இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்களை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வேனின் கதவுகளை இரும்பு கம்பி மூலம் பெயர்த்து எடுத்து அதன்பிறகு வேனுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் அடைந்ததால் தனபால், குழந்தை ஹரீஷ், சாந்தா, சந்தோஷ் மற்றும் ஓட்டுநர் வெள்ளியங்கிரி ஆகிய 5 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ் பழனியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்க சேர்ந்து இருந்தான்.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருமூர்த்தி, அபிராமி, ஹரிணி மற்றும் சிவசங்கரி ஆகி யோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதில் ஓட்டுநர் வெள்ளியங்கிரி தவிர மற்ற 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயம் அடைந்த அபிராமி, ஹரிணி, சிவசங்கரி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olyVW2a

தமிழ் ஓவியா said...

சின்ன சேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனாம்சின்னசேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினராம்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் குரும்பர் தெருவில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரபத்ரசாமியை குல தெய்வமாக வணங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊரணி பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

அப்போது, அவர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து வீரபத்ரசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாம்
அதன்படி நேற்று வீரபத்ரசாமிக்கு ஊரணி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, வீரபத்ரசாமியை மலர்களால் அலங் கரித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து, தோட்டப்பாடி காட்டுப்பகுதியி லிருந்து இன்னிசை மேள தாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நிகழ்ச்சி கோவில் வளாகத்தை வந்த டைந்தது. பின்னர், தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வரிசையாக அமர்ந்தனர். அப்போது கோவில் பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி னாராம்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33om5uziw

தமிழ் ஓவியா said...

பொம்மிடி அருகே இரு சக்கர வாகனம்மீது காட்டுப்பன்றி மோதி கோவில் புரோகிதர் சாவுதருமபுரியில் இரு சக்கர வாகனம்மீது காட்டுப் பன்றி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கோவில் புரோகிதர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கொண்ட காரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60) கோவிலில் புரோகிதராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை புது வீடு திறப்பு விழாவிற்காக ராமமூர்த்தியை பொம்மிடியிலிருந்து முத்தம்பட்டிக்கு வீட்டு உரிமையாளர்களான நஞ்சப்பன், பழனி ஆகி யோர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மங்கலம் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும்போது காட்டுப்பன்றிக் கூட்டம் சாலையின் குறுக்கே வேகமாக வந்ததாம்.

காட்டுப்பன்றிக் கூட்டத்தின்மீது மோதாமல் இருக்க, இரு சக்கர வண்டியை திருப்பிச் செலுத்தி யுள்ளனர்.

மூர்க்கமாக இருந்த பன்றிக் கூட்டம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மூவரையும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாம்.

இதில் படுகாயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் கோவில் அர்ச்சகர் புரோகிதர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.

பன்றி மோதி உயிரிழந்த கோவில் அர்ச்சகப் புரோகிதரை கடவுள் காப்பாற்றவில்லையே என அனைவரும் புலம்பிக் கொண்டே சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33omBAfuI

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

இன்று உலகு சுற்றுச் சூழல் நாள். (ஜூன் 5). அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் உட்பட பகிரங் கமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறதே இது எப்படி!?

Read more: http://viduthalai.in/e-paper/81577.html#ixzz33omTQ43t

தமிழ் ஓவியா said...


கடவுள் அப்பீல் தள்ளுபடி


கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ublZC4K

தமிழ் ஓவியா said...


பள்ளியில் நடந்த கதை


நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறி னாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33uc9PEHv

தமிழ் ஓவியா said...விதி விதி என்று கூறி வீண்பொழுது கழிப்பார்கள், கேவல மான அடிமை உள் ளம் உடையவர்கள். முயற்சி செய்: முனைந்து உழை; ஓயாது பணியாற்று; வெற்றி நிச்சயம்.

-எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucGWplp

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் ஏழையா?

1-4-1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சங்கராச்சாரி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது திருமதி. அனந்தநாயகி குறுக்கிட்டு சங்கராச்சாரியார் கால்நடையாகச் சென்று பக்தியை பரப்பி வருகிறார். அவரைப்பற்றி கணக்குப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று கேட்டார்.

அதற்கு அமைச்சராக இருந்த திரு. மு.கண்ணப்பன் அளித்த பதிலாவது:- சங்கராச்சாரியார் கால்நடையாகப் போகிறார் என்பதால் அவர் ஏழை என்று அர்த்தம் அல்ல. அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 3/4 லட்சம் ரூபாய் வருகிறது. மேலும் கால்நடையாகப் போவதற்கும் கணக்கு வைப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucLtEpD

தமிழ் ஓவியா said...

சர்க்கார் ஆட்சேபிக்காது!

ராமாயணம் வெறும் கட்டுக்கதை - பொய்: ராமன் கடவுள் அல்ல என்றெல்லாம் எவர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் தடையில்லை..

நம் நாட்டில் தொன்று தொட்டு மத சம்பந்தமாக எவ்வளவோ வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஒப்புக் கொண்டவர் சிலர்; ஆட்சேபித்தவர்கள் சிலர்; அதனால் மதத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை சர்க்கார் ஆட்சேபிக்க வில்லை.

- நிதி அமைச்சர், 9-12-1954, (சென்னை சட்டசபையில்)

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucRTXkF

தமிழ் ஓவியா said...


விசித்திரமான நம்பிக்கை!


மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81640.html#ixzz33ucYqBOn

தமிழ் ஓவியா said...

அடடே!

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை வைத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரபல கேரள ஜோதிடர் கூறியுள்ளாராம்; அப்புறம் என்ன அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான்.

எச்சரிக்கை!

நொறுக்குத் தீனிகளை சதா தின்று கொண்டே இருக்க குழந்தைகளை அனுமதியாதீர். அதுபோல மென் பானங்களைக் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்காதீர்!

இதனால் சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நாம் செயல்படுவோம்! என்ற இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81647.html#ixzz33ucqf5hW

தமிழ் ஓவியா said...


மனிதன்பலவிதக் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
- _ (விடுதலை,9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/81651.html#ixzz33udE8B00