Search This Blog

20.6.14

மதமாச்சரியங்களுக்குத் துளியும் இடமின்றி!குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்!

குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்!

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை என்பவை அன்றாட வானிலை அறிக்கை போல ஆகிவிட்டன. இந்தப் பிரச்சினையில் அரசும், காவல்துறையும் ஏன் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.

இந்து முன்னணிப் பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடிய வன்முறை வெறியாட்டம் கண்டனத்துக்குரியதே.

கிறித்தவர்கள் தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது. போதகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் - அவர் உயிர் தப்பித்தது அதிசயமாகக் கருதப்படுகிறது.
இந்து முன்னணி பிரமுகர் படுகொலைக்கும் தங்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாத பொது மக்களும், வணிக நிறுவனங்களும் கடுமையான வகையில் தாக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் கல்லடிக்கு ஆளாகின. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மணி நேரம் ஒரு யுத்தக் களமே  நடந்திருக்கிறது.

காவல்துறை கண்டு கொள்ளவேயில்லை என்று வியாபாரிகளும், பொது மக்களும் தெரிவித்த கருத்துகளை தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நேற்று பிற்பகல் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வரவில்லை. எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், நாங்கள் எப்படிப் பேருந்துகளை இயக்க முடியும்என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் நடைபெற்ற வன்முறைகளைக் கண்டித்து, தனித்தனியே  இன்று பட்டினிப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மதமாச்சரியங்களுக்குத் துளியும் இடமின்றி, இணக்கம்மிகுந்த மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் இதனைச் சீர்குலைக்க முயலுபவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே!

அதே நேரத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட் டார் என்பதை மய்யப்படுத்தி அப்பாவி மக்களையும், வணிக நிறுவனங்களையும், மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் பேருந்துகளையும் உடைப்பது எந்த வகை யில் நியாயம்?

மத்தியில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது என்ற மிதப்பில், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள சங்பரிவார்ப் பிரிவினர் - பிஜேபியினர் மனப்பால் குடிப் பார்களேயானால், அதனைக் கையாள வேண்டியது அரசையும், குறிப்பாக காவல்துறையையும் சார்ந்ததே!

மக்களிடையே மாச்சரியங்களை உண்டாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி, அதனைக் கலவரமாக மாற்றி, அரசியல் ஆதாய மீன் பிடிக்கும் வேலையில் குஜராத்தில் வெற்றி பெற்று இருக்கலாம்.

அதனை முன்னுதாரணமாகக் கொண்டு, (குஜராத் மாடல் என்பது இதுதானோ!) பிற மாநிலங்களிலும் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று அவர்கள் திட்டமிடலாம்.

அந்த நிலையை அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதியாளர்களும், பகுத்தறிவாளர்களும், முற் போக்குச் சக்திகளும், நாட்டில் அமைதிப் பேணப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறவர்களும் இதில் கவனம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.

முக்கியமாக ஊடகங்களும் இதில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் அரசியல் பார்வை தேவையில்லை.

பாபர் மசூதி, 1992இல் இடிக்கப்பட்டபோது கூட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வன்முறை வெடித் துக் கிளம்பிய சூழலில், தமிழ்ப் பூமி அமைதிகாத்து இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது. அந்தப் பெருமைக்குரிய மரபினை மண் மூடச் செய்து விடலாம் என்ற நினைப்பைத் தொடக்கத் திலேயே துடைத்தெறிந்திட வேண்டும்.
ஏதோ ஒரு தப்பான கணக்குப் போட்டு மாற்றம் மாற்றம் என்று கருதி, ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கும் இளைஞர்களும், இதில் தெளிவான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

நேற்று நடைபெற்ற வன்முறைகளில் ஈடுபட்ட 29 பேர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சரியான நடவடிக்கையே! கண் துடைப்பாக இது இல்லாமல் நடைமுறையில் குற்றஞ் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வகையில், வழக்கினைச் சரியாக நடத்த வேண்டும் என்பதே வெகு மக்களின் பரவலான எதிர்ப்பார்ப்பாகும்.

அதேபோல இந்து முன்னணிப் பிரமுகர் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் வேகமாக இருக்கட்டும்!

                     --------------------------"விடுதலை” தலையங்கம் 20-06-2014

26 comments:

தமிழ் ஓவியா said...


காரவன் கேள்வி


காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-

கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?

இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.

இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.

தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.

அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o

தமிழ் ஓவியா said...


மோட்சம் வேண்டுமா?


இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருத வில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந் தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா?

அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தாங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்து கிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே.

அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத்திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?

- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/82549.html#ixzz35EY40haq

தமிழ் ஓவியா said...


திருப்பதியில் தகிடுதத்தம்!


25.5.1978 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பக்தர்கள் எழுதியுள்ள வாசகருக்கு கடிதங்கள் வருமாறு:-

ருப்பதி திருமலையை பூகோள வைகுண்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத்தான் அது நரகம் என்பது தெரியவரும்.

எங்கும் லஞ்சம், ஊழல்!

திருப்பதி திருமலையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் லஞ்சம் ஊழல் நெளிகிறது. பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்குவதிலிருந்து ஏழுமலை யானைத் தரிசனம் செய்வது வரை எங்கும் லஞ்சமும், ஊழலும்தான் நடமாடுகிறது.

தங்குவதற்கும் சரியான வசதி கிடையாது. தங்குவதற்கு காட்டேஜ் வாடகை பிடிப்பதற்கு நீண்டதூரம் வரிசையில் கால்கடுக்க அவதிப்பட வேண்டியுள்ளது.

கடைநிலை ஊழியரிலிருந்து நடுநிலை ஊழியர்கள், உயர் அதி காரிகள் வரை மிகவும் மோசமாக வும், அராஜகமாகவும், பக்தர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்.

சுகாதாரம் இல்லை

தங்கும் விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. படுக்கை விரிப்புகள் தினசரி மாற்றப்படுவ தில்லை; குடி தண்ணீர் கிடைப்ப தில்லை. மேஜை, நாற்காலிகள், கட்டில்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை. மருத்துவமனை வசதி போதுமானதாக இல்லை. சுகாதார நிலையோ மிகவும் அருவருக்கதக்கதாக உள்ளது.

ரேட் இருந்தும்

ஏழுமலையானை தனியாக தரிசனம் செய்ய 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் தரும தரிசனம் செய்யும் பக்தர்களுடனேயே ஏழுமலை யானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

புரோக்கர்கள் கமிஷன்

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அதிகார பூர்வமற்ற புரோக்கர்கள் பலர் பக்தர்களிடம் தலைக்கு ரூ.5 லிருந்து ரூ.20 வரை வசூலித்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரால் கர்ப்பக்கிரக வாசலில் நிற்கும் ஆண் காவலாளிகள் வேண்டுமென்றே பெண்களின் மீது கைகளை வைத்து தள்ளுகின்றனர்.

நாளுக்குநாள் திருப்பதி கோயில் வியாபார நிலைய மாகிக் கொண்டு வருகிறது. அது காய்கறி கடைகளைத் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - மேற்கண்டவாறு சுலோசனா என்ற பக்தை எழுதியிருக்கிறார்.

இன்னொரு பக்தர்

ஜெகந்நாதன் என்ற மற்றொரு பக்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மலைமீது நாங்கள் காரில் சென்றால் பாதி வழியில் ரேடியேட் டருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. வழியில் ரேடியேட்டருக்கான தண்ணீர் கிடைக்கும் என்ற போர்டு கள் மட்டும் இருக்கின்றன. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.

ஆனால், சிலர் பானை தண்ணீர் 25 பைசா என்று கூறி விற்கிறார்கள். அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

பக்தைகளை கட்டுப்படுத்த ஆண்களா?

பெண் பக்தைகளைக் கட்டுப் படுத்த பெண் ஊழியர்கள் இல்லை. ஆண் ஊழியர்கள் தான் கூட்டத்தில் புகுந்து கட்டுப்படுத்துகிறார்கள். கூட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.

சேவா தரிசனத்திற்கு சிறப்பு சீட்டு வாங்கினால் கூட அவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அந்த பக்தர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYCP4zA

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.

மனிதனால் - எண்ணப் படும், பேசப்படும், செய்யப்படும் காரியங் களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYKWb6E

தமிழ் ஓவியா said...


பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி

நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!

தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.

பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.

பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!

அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!

எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.

பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!

1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.

2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.

3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.

4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.

5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.

6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.

இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!

அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw

தமிழ் ஓவியா said...
இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:

கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்

அய்.நா. குற்றச்சாற்று

இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u

தமிழ் ஓவியா said...


இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பரிசு தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பாம்!


சென்னை, ஜூன் 20: இலங்கையில் குழந்தை பெறும் சிங்கள பெண்க ளுக்கு பரிசு கொடுத்து அந்நாட்டு அரசு கவுரவப் படுத்துகிறது. அதே சமயம் தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பு செய்கிறது. இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள், காணொ லிக்காட்சி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

இலங்கையில் நடை பெறும் சிங்கள குடியேற் றம், தமிழ் பெண்கள் கரு கலைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, புதிதாக மத்தி யில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு, இலங்கை பிரச் சினையை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கை வைக்கும் வகையிலும் காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களி டம் கலந்துரையாடலுக்கு திரைப்பட இயக்குநர் கவுத மன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் இருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தனர்.

இதில் கனடா நாட்டில் வாழும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், டென்மார்க்கை சேர்ந்த தமிழ் இளையோர் அமைப்பின் நிர்வாகி சுகுநேந்திரன், டென் மார்கை சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன் வீராஜ் மென் டிஸ், டென்மார்க்கை சேர்ந்த நிர்மானுசன் பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிர்மானுசன் பாலசுப்ரமணியன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையில் ஈழ தமிழர் பகுதிகளில் ராஜ பக்சே அரசு கட்டாய சிங்களர் குடியேற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் சிங்களர்களை குடி யேற்றியுள்ளனர்.

மேலும், தமிழர்கள் பகுதிகளில் உள்ள பெண் களை பாலியல் வன் கொடுமையை சிங்கள ராணுவம் செய்து வருகிறது. ராஜபக்சே அரசு, சிங்கள பெண்கள் குழந்தை பெற் றால் பரிசுகள் வழங்கு கிறது. ஆனால் தமிழ் பெண்களின் கருக்களை மட்டும் திட்டமிட்டு கலைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண் டும். தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசு தமிழ் ஈழம் அமைவது, தமிழர் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82507.html#ixzz35EZB01wU

தமிழ் ஓவியா said...


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.

- இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk

தமிழ் ஓவியா said...பிஜேபி அரசு பின்பற்றுவது பழைய காங்கிரஸ் கொள்கைகளைத்தானா?

22 மொழிகளுள் இந்திக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்?

சமஸ்கிருதத்தின் நுழைவு வாயிலா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும் எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு

பழைய காங்கிரசின் கொள்கையைப் பின்பற்றுவது தான் பிஜேபி அரசின் கொள்கையா? தேசிய மொழிகள் 22 இருக்கும் பொழுது இந்திக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? சமஸ்கிருதத்தை நுழைக்கவா என்ற வினாக்களைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்; அறிக்கை வருமாறு:

கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை என்ற பழமொழிக்கேற்ப, பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் உள்ள மத்திய அரசு, கடந்த ஒரு மாதத்தில், பழைய அரசு என்னென்ன செய்ததோ, அதற்கான எதிர்க் குரல் கொடுத்து, குற்றப் பத்திரிக்கையை பா.ஜ.க.வினர் எதிர்க் கட்சியாக இருந்து வன்மையாக கண்டனங்களைத் தெரிவித்தனரோ, அதே பாணியில் - அதே பாதையில்தான் இப்பொழுதும் செயல்பட்டு வருகின்றது!

காங்கிரஸ் கொள்கைதானா?

1) உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சுணக்கம்.

2) பெட்ரோலியப் பொருள் விலை தவணை முறையில் ஏற்றப்படுவது,

3) ரயில் கட்டண உயர்வு,

4) பதவிக்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்ட - ஆளுநர்களை வீட்டுக்கனுப்புதல் இப்படிப் பலப்பல.

5) இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைப்பிடிக்கப்படும் அவலம், 6) பாகிஸ்தான் பிரதமரை முந்தைய அரசு அழைத்த போது பிரியாணி சாப்பிட வருகிறாரா? என்ற கேலியான விமர்சனம்; இன்று வந்ததும் வராததுமான அதே நிலைப்பாட்டால் விமர்சன முறையை எதிர்கொள்ளும் நிலை - இப்படிப் பலப்பல!

எந்த வகையில் வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசைவிட இவர்கள் வித்தியாசமானவர்கள்?

சமஸ்கிருதத்தின் நுழைவு வாயிலா?

இதற்கிடையில், மிகவும் உணர்ச்சியைக் கிளறக்கூடிய மொழிப் பிரச்சினையாக மீண்டும் இந்தித் திணிப்பை - (மறைமுகமாகத்தான் என்றாலும்) வலைதளம் என்ற ஒரு சாக்கில் (Feeler விட்டுப் பார்ப்பதுபோல்) செய்துள்ள அவசரம் ஏனோ?

ஆர்.எஸ்.எஸ்.சின் சமஸ்கிருத மயமாக்கும் ஒரே மொழி அதுதான் என்ற முடிவுடன், அதற்கு நுழைவு வாயிலாக இப்படி ஒரு முயற்சியா என்ற கேள்வி, கண்டனக் குரல் தமிழகத்திலிருந்து அத்துணைக் கட்சி தலைவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கலைஞர் முதலில் அறிக்கை விட்டார்; பிறகு தமிழக முதல் அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்கள் - கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டவுடன், இதற்குச் சில போலி விளக்கங்களை மத்திய அமைச்சர்கள் சிலரும், துறையினரும் தரத் துவங்கியுள்ளனர்!

1. இந்தி பேசும் 8 மாநிலங்களுக்கான சுற்றறிக்கை அது என்றும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அல்ல என்றும் கூறுவது விசித்திரமாக உள்ளது.

இந்தி பேசும் மாநிலத்திற்கு அதைப் பேசி கற்க இணைய தளத்தில் முன்வந்தால், கூடுதல் சம்பள உயர்வு என்று அறிவிக்க வேண்டியது அவசியமா? இல்லையே! தென்னை மரத்தில் ஏறியவரை உரியவர் கண்டுபிடித்தவுடன், புல் பிடுங்கத்தான் ஏறினேன் என்ற கூறிய கதைபோல் இல்லையா இது?

2. ஏற்கெனவே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (U.P.A) அனுப்பியது தான் என்றால் அதை இப்போது உடனடியாக கவனிக்காமல் அனுப்பியவர் யார்? அந்த அதிகார வர்க்கத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

முந்தைய அரசினைத் தோற்கடித்து, மக்கள் இவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ள நிலையில், அதைப் பின்பற்றத்தான் இப்படி நடந்தது என்று ஒரு சமாதானம் கூறினால் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழைய பழமொழி.
இப்போது அரசர்கள் (ஆளுபவர்கள்) இப்படி ஊதிக்கெடுக்கலாமா?

மூளைச் சாயம் பூசவே!

இன்னொரு முக்கிய செய்தி; இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போதுள்ள 22 மொழிகளுள் சமஸ்கிருதம் - ஹிந்தி உட்பட குறிப்பிடப் பட்டுள்ளது; எதற்கும் தனித்த ஒரு தகுதி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை.

ஆட்சி மொழி ஹிந்தி (Official Language) என்றாலும் கூட இந்தி மொழி பேசாத மக்கள்மீது இப்படி மறைமுகத் திணிப்புக்கு இடம் அரசியல் சட்டத்தில் இல்லையே?

வலைதளம் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் சாயம் பூசவே இந்தப் புதிய ஏற்பாடோ என்ற அய்யம் ஏற்படுகிறது. இப்போது தலையை உள்ளுக்கிழுத்துக் கொண்டாலும், விழிப்புத் தேவை நமக்கு; மறவாதீர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
21.6.2014

Read more: http://viduthalai.in/e-paper/82608.html#ixzz35K4yYJ95

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......

தண்டனையா?

ஒருமுறை மும் மூர்த்திகளில் யாருக்கு சத்வ குணம் அதிகம் இருக்கும்? என்ற எண் ணம் பிருகு முனிவருக்கு ஏற்பட்டது.

இதை சோதிக்க ஒவ்வொரு மூர்த்தியையும் நேரில் சந்திக்கச் சென்றார் முனிவர். பெருமாளே சத்வ குணம் படைத்தவர் என்று அறிந்தார்.

முனிவர். திருமகள் உறையும் பெருமாளின் மார்பில் உதைத்தபோதுகூட திருமால் கோபம் கொள்ளாது.

முனிவரின் கால்கள் நோகக் கூடாதே என்று கவலை கொண்டானாம். ஆனால் முனிவரின் செய்கையால் கோபம் கொண்ட திருமகள் திரு மாலைப் பிரிந்து பூலோகம் சென்றாள்.

திருமால் தேவியைத் தேடிச் சென்ற போது, சுவர்ண முகி நதிக்கரை யில் ஒரு தடாகம் ஏற் படுத்தி அதன் கரையில் தவமியற்றுக என்று ஒரு அசரீரி கேட்டது. பெரு மாளும் அதன்படி 12 ஆண்டு காலம் தவம் செய்தார்.

இறுதியில் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச திதியில் வெள்ளிக் கிழமை உத்திராட நட்சத்திரத்தில் மைத்திரம் என்ற முகூர்த்த நேரத்தில் திருமகள் பொற்றாமரை மலரில் தோன்றி திருமா லுக்கு மாலையிட்டாளாம்.

கடவுளுக்கே சாபம் - தண்டனையா? அப்படி என்றால் அந்தக் கடவுள் எப்படி சர்வ சக்தி வாய்ந்தவர் ஆவார்? பக்தரைப் பகவான் சோதிப்பார் என்பார்கள்; இங்குப் பகவானைப் பக்தர் சோதிப்பது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/82602.html#ixzz35K5E6fi9

தமிழ் ஓவியா said...

குஜராத்தும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் 2011-இல் 0.42 சதவீதம் ஆகும்.

1981ஆம் ஆண்டிலோ 0.98; படிப்படியாகக் குறைந் துள்ளது - இப்பொழுது எண்ணிக்கை 17,351.

வளர்ச்சி வளர்ச்சி என்று தம்பட்டம் அடிக்கும் குஜராத்திலோ குழந்தைத் தொழிலாளர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 687.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5ituj6

தமிழ் ஓவியா said...

தலைக் கவசமும் மதமும்

மத சம்பிரதாயம் காரண மாக சீக்கியப் பெண்கள் தலைக் கவசம் அணியத் தேவையில்லை என்ற உத்தரவு போல, இஸ்லாமி யப் பெண்களுக்கும் மத சம்பிரதாயத்தின் அடிப் படையில் தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை டில்லி ஆளுநரி டம் வைக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82604.html#ixzz35K5rdqnd

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம். - (விடுதலை, 28.8.1963)

Read more: http://viduthalai.in/page-2/82620.html#ixzz35K65dmt5

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் மோதல் கைதான இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு!


அம்பத்தூர், ஜூன் 21- இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி நேற்று பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 16 அரசு பேருந்து கண்ணாடிகள், 3 கார், லாரி உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும் சுரேஷ்குமார் உடலை மண்ணூர் பேட்டை சிடிஎச் சாலை சந்திப்பில் இந்து முன்னணி தொண்டர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டை பேருந்து நிலையம் வழியாக ஊர்வல மாக வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். அந்த வழியில் மசூதி இருப்பதால் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 10_க்கு மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர். பலர் சிதறி ஓடினர். மேலும் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டதில் 3 காவல் துறையினர் காய மடைந்தனர். இதையடுத்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையினர் 52 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

பின்னர் 52 பேரில் 39 பேரை விடுதலை செய்தனர். 13 பேர் மீது பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தது, கற்கள் கம்புகளை வைத்து தாக்குதல் நடத்தியது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வழக்குகளின் கீழ் கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குமரியில் பதற்றம்

அம்பத்தூரில் வெட்டி கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் உடல் குமரிக்கு கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர் வலத்தின் போது திடீரென வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/82634.html#ixzz35K6pbv7V

தமிழ் ஓவியா said...


மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்


கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு

சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர்கள் செய்யும் ஏமாற்றையும் வஞ்சகத்தையும் பற்றியும், ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்றும், உதாரணமாக சென்னையில் உள்ள ராம கிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லையென்றும்,

அங்கு புழங்கும் பணம் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பார்ப்பனரல்லா தாருடையதென்றும், வருஷம் 20, 30 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றதென்றும் இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலைவருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில்கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும்,

ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக்கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமையாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொதுமக்கள் பணத்தை வசூல் செய்து, கொடுக்கின்றார்கள் என்றும், இங்கும் அதுபோல் இருக்கக்கூடாதென்று ஆசைப்படுவ தாகவும், விவேகானந்தர் அமெரிக்காவுக்கு இந்துமதப் பிரதி நிதியாய் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான பிரதிநிதியாய் இல்லாமல் இந்து மதத்திற்கு ஒரு வக்கீலாய் போய் கேசை ஜெயித்துக்கொண்டு வந்தாரென்றும்,

ஆகையால் அதனாலேயே இந்துமதம் என்பதற்கு யோக்கியதை வந்து விடாதென்றும், அவர் இந்தியாவையும் இந்துக்களையும் பற்றி இந்தியாவில் பேசி இருப்பதைப் பாருங்கள் என்றும், பார்ப்பனர்களைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்பதும், வருணாசிரமம், ஜாதி வித்தியாசம் ஆகியவைகளைப் பற்றி கண்டித்துச் சொல்லி இருப்ப தையும்,

இந்து அரசாங்கமாகிய மலையாளத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும், அவர் விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது அவை பாமர மக்களுக்கு வேண்டி ஏற்பட்டதே ஒழிய மற்றவர்களுக்கு அல்ல என்றுதான் சொன்னாரென்றும்,

ஆனால், இப்போதைய விக்கிரகங்களை பாமர மக்களுக்கு உபயோகப்படாமலும், கண்ணில் பார்க்கக்கூட இடம் தராமலும், பண்டிதர்கள் பிரமஞானம் உடையவர்கள் கடவுளாலேயே அறிவாளிகளாய் பிறப்பிக்கப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும், அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும்தான் சாதனமாயிருக்கின்ற தென்றும்,

மற்றும் தென்இந்தியாவுக்கு வேண்டியதெல்லாம் உண்மையான சுயமரியாதையே என்று அவர் சொல்லி இருக்கின்றார் என்றும் மற்றும் இப்படி அவர் சொன்ன அனேக விஷயங்களைப் புத்தகத்தைப் பார்த்தே எடுத்துச் சொல்லி 2 மணி நேரம் கூட்டத்தையே ஆச்சரியப்படும்படி செய்து விட்டார்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 09. 02. 1930

Read more: http://viduthalai.in/page-7/82600.html#ixzz35K7aVtOo

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாட்டில் பேசியது


சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக்கை யைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடையவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக் கப்பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அரசாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப் புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடுகளில் தங்கள் உத்தியோகத்திற் கேற்ற பல தீர்மானங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போட வேண்டும், வரி குறைக்க வேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத் தம் என்னும் பேரால் கொழுத்த சம்பளமுள்ள சில உத்தியோகங் களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக்கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்த படி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதி காரங்களும் மற்றும் தொல்லை களும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்பட வில்லை.

சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சி களும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், ஸ்தாபனங்களில் முக்கியஸ்தர்களாயிருக் கின்றவர்கள் அதனால் ஏற்படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு ஸ்தா பனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களா வதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப்படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமூக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், ஸ்தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதிலுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சி யாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும் படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும்.

அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுய மரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப்பிராயம்

இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்று படுத்திக் கொண்டா லொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப்போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளைவித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமியாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

- குடிஅரசு -சொற்பொழிவு - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82599.html#ixzz35K7mgszo

தமிழ் ஓவியா said...


செங்கல்பட்டு ஜில்லாபோர்டு தேர்தல்


செங்கல்பட்டு ஜில்லாபோர்டுக்கு 30 - 01 - 1929 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டதாக ஒரு சேதியும், தேர்தல் நடந்து ராவ்சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத்திருக்கின்றது.

எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம்.கே.ரெட்டியாருக் காவது அல்லது திரு. ராவ்சாகிப் சி. ஜெயராம் நாயுடு காருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளியாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதே நமது ஆசை.

இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க, நாம் கொஞ்ச காலத்திற்கு முன் பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலி களும், அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளி யாக அடங்கிப் போய்விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்படவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களைக் கண்டே பார்ப்பனர்களும், அடிமைகளும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், ஜாண் நீட்டினால் முழம் கத்தரிக்க நமக்குச் சக்தி உண்டு. பழைய ஆயுதங்கள் எண்ணெய் இட்டு உறையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விடவில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை!

- குடிஅரசு - கட்டுரை - 02.02.1930

Read more: http://viduthalai.in/page-7/82601.html#ixzz35K83xhpp

தமிழ் ஓவியா said...


மாட்டுச் சாணத்தில் இருந்து குடிநீர்


மாட்டு சாணத்தில் இருந்து குடிநீர் தயாரிக்க முடியும் என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்திற்கு, மெக் லானஹன் நியூட்ரியண்ட் செப்ப ரேஷன் சிஸ்டம் என பெயரிடப்பட் டுள்ளது. எதிர்காலத்தில், ஏற்பட வுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு, இந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன், சாணத்தில் இருந்து சுத்தமான, சுகாதாரமான நீரை தயாரித்து குடிநீராக பயன்படுத்த லாமாம். இந்த தொழில்நுட்பத்தை, மிக்சிகன் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page2/82559.html#ixzz35K9XV4QV

தமிழ் ஓவியா said...


மத(யானை) அட்டகாசம்!


மோதல்கள் போதுமடா! - மதங்களின்
மோதல்கள் போதுமடா! . . . (மோதல்கள்)
வாதங்கள் ஆயிரம் பக்கம் - பக்தி
வாழ்க்கையில் செத்தபின் சொர்க்கம்!
சேதங்கள் எதற்கு மீண்டும்? - மக்கள்
சிந்தித்துத் தெளிந்திட வேண்டும்! . . .
(மோதல்கள்)
1. இந்துநாடா இசுலாம் நாடா - இது
எந்தநாடு சொல்லவா?
இந்து அல்ல இசுலாம் அல்ல - இந்தியா
ஏழைநாடு அல்லவா?
தானமே வேண்டும் இன்றும் - சமா
தானமே வேண்டும் என்றும்! . . .
(மோதல்கள்)
2 கடப்பாறை சூலம் வெடிகுண்டு - வலிய
கரங்களுக்கு தேவையா?
கடல்போல குருதி வெள்ளம் - அன்புக்
கடவுளுக்குத் தேவையா?
புத்திவந்தால் பக்திபோகும் - உனக்கு
பக்தி வந்தால் புத்திபோகும்! . . .
(மோதல்கள்)

- குபேரன்

Read more: http://viduthalai.in/page6/82574.html#ixzz35KBQ76ND

தமிழ் ஓவியா said...


மலேரியாவை ஒழிக்க கொசுக்களே!


கொசுக்கள் மூலம் மலேரியா ஒழிப்பு நட வடிக்கையை மேற்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டியுள்ளனர். மலேரியா நோய், கொசுக்கள் மூலம் பரவுகின்றது. இது அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற் கொண்டனர்.

அதன்படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக் களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உரு வாக்கினர். அதன் மூலம் மலேரி யாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர். இதன் மூலம் மலேரியா கிருமிகளை உரு வாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என விஞ் ஞானிகள் நம்புகின்றனர்.

Read more: http://viduthalai.in/page6/82576.html#ixzz35KBg8oLa

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

எந்த வகை?

பிறர் காதில் விழும்படி பிரார்த்தனை செய்வது வாசிகம் இது ஒரு மடங்கு பலன் தரும். தன் காதில் விழும்படி செய்வது உபாம்சு ஆகும் - இது நூறு மடங்கு பலன்தரும். ஆனால் மனதில் மட்டும் பிரார்த்தனை சொல்லு வது உபாம்சு - 100 மடங்கு பலன் தருமாம்.

சரி. காந்தியார் பிரார்த் தனை செய்யும் பொழுது தானே சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அது எந்த வகைப் பலனோ?

Read more: http://viduthalai.in/e-paper/82691.html#ixzz35PvS3zei

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம் சலூன் கடைக்காரரை தாக்கிய ஆதிக்க ஜாதியினர் கர்நாடகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்


பெங்களூரு, ஜூன் 22- கர்நாடக மாநிலம் பெல் லாரியில் தாழ்த்தப்பட் டோருக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க ஜாதியினர் சலூன் கடைக் காரர்களை மிரட்டியுள் ளனர். இதை மீறி தாழ்த் தப்பட்டவர்களுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப் பட்ட சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் பெல் லாரி மாவட்டம், தாலூர் பகுதியில் ஜாதி பாகு பாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்ன மும் தொடர்கின்றன. தாலூ ரில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு சலூன் கடை களில் சுழல் நாற்காலி யில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்து கொள் ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்து தான் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை ஜாதி இந்துக்களுக்கு பயன் படுத்தக் கூடாது. மீறி னால் ஊர் பஞ்சாயத்தால் கடும் தண்டனை வழங் கப்படுவது காலங்கால மாக உள்ளது என்கிறார் கள் அப்பகுதி மக்கள்.

தாலூரில் தற்போது 5 சலூன் கடைகள் உள் ளன. கடந்த சில வாரங் களுக்கு முன் இங்கு வந்த ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீங்கள் முடி வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. மீறினால் உங்கள் கடையும் இருக்காது. உங்கள் கையும் இருக்காது என்று மிரட்டியதாக மஞ்சுநாத் என்ற முடி திருத்தும் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள் ளார்.

மிரட்டலை மீறி 5 சலூன் கடைக்காரர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து முடி திருத்தி வந்துள்ளனர். இதை யறிந்த ஆதிக்க சாதியினர் கடந்த சில தினங்களுக்கு முன் 5 சலூன் கடைகளை யும் அடித்து நொறுக்கி யுள்ளனர். இது தொடர் பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்கின்றனர்.

தொடர்ந்து ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட் டவர்கள் முடிவெட்டிய கடையில் இனி முடி வெட்ட மாட்டோம் என தங்களுடைய ஜாதி சங்கங் களில் கடந்த செவ்வாய்க் கிழமை தீர்மானமும் போட்டதாக தெரிகிறது. அன்று முதல் ஆதிக்க ஜாதியினர் யாரும் எங்கள் கடைகளுக்கு வருவ தில்லை. பக்கத்து ஊருக் குச் செல்கின்றனர். இதன ல் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று சலூன் கடைக் காரர்கள் சார்பில் மாநில சமூகநலத் துறையில் கடந்த புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனே விசாரணை நடத் துமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை அமைச் சர் ஆஞ்சநேயா உத்தர விட்டார். இதையடுத்து தாலூரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சலூன் கடைக் காரர்கள் மிரட்டப்பட் டதும், தாக்கப்பட்டதும் உண்மை தான் என சமூக நலத்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து 5 சலூன் கடைக்காரர்களையும் வெள்ளிக்கிழமை பெங் களூருக்கு வரவழைத்த அமைச்சர் ஆஞ்சநேயா, ஆதிக்க ஜாதியினர் புறக் கணிப்பால் நஷ்டம் அடைந்த 7 முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

மேலும் தாழ்த்தப்பட் டவர்களுக்கு தொடர்ந்து முடித்திருத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சலூன் கடைக் காரர்கள் மீதான தாக் குதல் தொடர்பாக நட வடிக்கை எடுக்குமாறு பெல் லாரி காவல் துறையின ருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/82694.html#ixzz35PvnVWGv

தமிழ் ஓவியா said...


புக்கர் விருதை அடுத்து பின்டர் விருதை வென்றார் சல்மான் ருஷ்டி


இலண்டன், ஜூன் 22- சாத்தானின் கவிதைகள் என்கிற புகழ்பெற்ற நூலின் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1989ஆம் ஆண்டில் அந்த நூலை எழுதியபோது இசு லாமிய அடிப்படைவாதி களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். நாடு கடத் தல்கள், ஈரானின் ஹயதுல்லா கொமேனியின் ஃபத்வா (மரண) தண்டனை அறி விப்பு என்று பல சவால் களை எதிர்கொண்டவர் சல்மான்ருஷ்டி. 67வயதான சல்மான் ருஷ்டி 2007ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளவர்.

ருஷ்டியின் நள்ளிரவில் குழந்தைகள் என்கிற நாவ லுக்காக 2008ஆம் ஆண்டில் சிறந்த புக்கர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட் டார். தற்போது எழுத்தாளர் ஹரோல்டு பின்டர் நினை வாக அளிக்கப்படும் பென் பின்டர் விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த விருது நாடக எழுத்தாளர் ஹரோல்டு பின் டரை கவுரவப்படுத்துவதற் காக 2009ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் அமைப்பு மூலம் தொடங்கப்பட்டது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யும் குழுவின் இடம் பெற்றுள்ளவராகிய மவ்ரீன் ஃப்ரீலி என்பவர் கூறுகை யில், இந்த பரிசு ஆங்கில எழுத்தாளர்களின் வழியில், சல்மான்ருஷ்டிக்கு புத்தகங் களை எழுதியவர் என்பதற்கு மட்டுமின்றி, அவர் கருத்துச் சுதந்திரத்துக்காக பல ஆண் டுகள் பேசிவருவதற்கும், அவருடைய எண்ணிலடங் காத தனிப்பட்ட அன்பான செயல்களுக்காகவும் அவ ருக்கு நன்றி கூறும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் ருஷ்டி குறித்து அவர் கூறும் போது, எழுத் தாளர்களை முறையின்றி எதிர்ப்பது, கைது செய்வது, கட்டாயமாக நாடு கடத் துவது என்று உலகின் எந்த மூலையில் எழுத்தாளர் களுக்கு எதிராக இருந்தாலும், சல்மான் ருஷ்டி தாமாகவே முன்வந்து அக்கறையுடன் குரல் கொடுப்பார். கவன முள்ள எழுத்தாளர் உறங்கு வதில்லை என்கிற வரி களுக்கு ஹரோல்டு பின் டரையடுத்து ருஷ்டி முதல் நபராக இருப்பதாக நான் எண்ணுகிறேன் என்று கூறினார்.

இந்த விருது வழங்கப் பட உள்ளது குறித்து ருஷ்டி கூறும்போது, என் நண்பர் ஹரோல்டு பின்டர் பெயரில் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெரிதும் ஆவ லாக உள்ளேன். எழுத்தாளர் கள் டோனி ஹாரிசன், டேவிட் ஹேரி, கரோல் ஆன் டஃப்பி மற்றும் டாம் ஸ்டாப்பர்டு ஆகியோரின் வழியில் பின்டரின் இலக்கிய அறிவு, சமூகநீதியில் உணர்ச் சியுடன் பொருந்தியிருந்தது.

எழுத்தாளர் பணி என்பது உலகின் இலக்கிய வளர்ச் சிக்கு மட்டுமின்றி, சுதந்திர மனித உரிமைப் பறிப்பை எதிர்க்க வேண்டியது மிக வும் முக்கியமானதாகும். அதில் இங்கிலாந்திலும், அமெரிக்க அய்க்கிய நாடு களிலும் என்னுடைய பங் களிப்பும் உள்ளது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ருஷ்டி கூறினார்.

இலண்டனில் அக்டோ பர் 7ஆம் தேதி அன்று நியூயார்க்கிலில் உள்ள எழுத் தாளர் விருது வழங்கும் விழாவில் ருஷ்டிக்கு பிரிட் டிஷ் நூலகத்தில் வழங்க உள்ளார். சர்வதேச எழுத் தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. ருஷ்டி யால் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் ஒருவருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப் படும் என்று ஆங்கில எழுத் தாளர் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82688.html#ixzz35Pw1RVxi

தமிழ் ஓவியா said...


மன்னார்குடி அய்யருக்கு எவ்வளவு பெரிய வக்காலத்து!

டில்லி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 31. இதில் ஜஸ்டீஸ் எஸ். ரத்தினவேல் பாண்டியன், ஜஸ்டீஸ் பி. சதாசிவத்திற்குப் பின் பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் எவரும் இன்றும் இல்லை; சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆனபின்பும்கூட.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களில் இன்றும் 31 பேரில் ஒருவர்கூட நீதிபதியாக உச்சநீதிமன்றத்தில் இல்லை.

ஒரு ஜஸ்டீஸ் வரதராஜன், ஜஸ்டீஸ் ராமசாமி இருவர் தான் (S.C.) சமூகத்திலிருந்து சென்று ஓய்வு பெற்றவர்கள்.

இவ்விருவரின் சமூக மக்கள் எண்ணிக்கையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு மேல் - இருந்தும் இந்த புண்ணிய பூமியில் பஞ்சம, சூத்திரர்களுக்கு அங்கே இடமில்லை. அத்துணை நீதிபதிகளும் உயர் ஜாதிக்காரர்களே; மக்கள் எண்ணிக்கையில் அவர்கள் 10 விழுக்காட்டினரே முன்னேறிய ஜாதிகளைச் (F.C.) சேர்த்தாலும்கூட!

அப்படியிருந்தும் அவாள் ஆதிக்கமே இன்று வரை! இப்போது காலியான பதவிகளில் 3 நீதிபதிகளின் பதவிகளை நிரப்ப, தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும் இரு பார்ப்பனர்களோடு மேலும் இரு பிரபல சட்ட நிபுணர்கள் வழக்குரைஞர் களாக இருந்தவர்கள் பெயரை முந்தைய தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த கொலிஜியம் பரிந் துரைத்தது!

பிரபல சட்ட நிபுணரான பார்சி வழக்குரைஞருடன் முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மன்னார்குடி பார்ப்பனர் கோபால் சுப்பிரமணியத்தையும் பரிந்துரை செய்திருந்தனர்.

மத்திய அரசு அவர் பெயரை நிராகரித்து மற்ற மூவரை (இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்; ஒரு சட்ட நிபுணரான பார்சி மூத்த வழக்குரைஞர்) மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளதாம்!

அது கண்டு இனமலர், இந்து போன்ற ஏடுகள் கொதித்து எழுந்து தங்களது துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன!

எதற்கு இவரை (கோபால் சுப்ரமணிய அய்யரை) ஏற்க முடியவில்லை என்பதற்கு ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த நபர் (மன்னார்குடி அய்யர்) அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர்; தன்மீது சாமி வருவதாகச் சொல்வார்; இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களை அப்பதவியில் அமர்த்தக் கூடாது என்று, நோட்டில் (Notes) சொல்லியுள்ளார்களாம்!

நியாயமான காரணம் தானே? ஆனால் பார்ப்பன ஏடுகள் வேறு ஏதோ காரணம் குஜராத் வழக்கு என்று கூறி மோடி அரசை அச்சுறுத்திப் பார்க்க முன் வந்துள்ளனர்?

(இன்றைய இனமலர் ஏட்டில் - டில்லி உஷ் பக்கம் 7)

தமிழருக்கு நீதிபதி மறுப்பு ஏன்?

(மன்னார்குடியைச் சேர்ந்தவர், உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சுப்ரமணியத்தை நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய குழு, சிபாரிசு செய்தது.

ஆனால், மோடி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உங்கள் சிபாரிசை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று, பைலை திருப்பி அனுப்பிவிட்டது.'2ஜி' விவகாரம் மற்றும் நீரா ராடியாவின், தொலைபேசி விஷயங்களில் சுப்ரமணியத்திற்கு தொடர்பு எனவே தான், இவரை நீதிபதியாக்க அரசு மறுக்கிறது என்று செய்திகள் வெளியாயின. ஆனால், முக்கிய காரணம், சொராபுதீன் என்பவரையும், அவரது மனைவியையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளிய வழக்கில், குஜராத் அரசு மற்றும் மோடியின் வலது கரமான, அமித் ஷா மீது கடுமையாக குற்றம் சாட்டி, சி.பி.அய்., விசாரணைக்கு உத்தரவிட,

தமிழ் ஓவியா said...


இந்த வழக்கில் கோர்ட்டிற்கு உதவும் வழக்கறிஞராக இருந்தவர் கோபால் சுப்ரமணியம், இதனால் தான், இவரை எதிர்க்கிறது மோடி அரசு. மேலும், எதற்கு இவரை நீதிபதியாக்கக் கூடாது என்று, ஒரு ரகசிய நோட் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அதீத பக்தி, பூஜை புனஸ்காரம் என்றிருப்பவர் கோபால். தன் மீது சாமி வருவதாக சொல்வார். இப்படி மனநிலை உள்ளவர்களை பதவியில் அமர்த்தக் கூடாது என்று, அந்த நோட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.இதனால், தற்போது, '2ஜி' வழக்கில், சி.பி.அய்., வழக்கறிஞராக உள்ள, உதய் லலித் என்பவரை நீதிபதியாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.)

என்னே திடீர் தமிழர் பற்று பார்த்தீர்களா?

தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.

காஷ்மீரத்திலுள்ள பார்ப்பனருக்கு ஜூரம் வந்தால் கன்னியாகுமரி பார்ப்பனருக்கு நெறி கட்டும் என்று!

அது எவ்வளவு சரியானது என்பது இப்போது புரியவில்லையா?

ஆங்கில ஹிந்து நாளேட்டில் (11.6.2014) ராஜகோபால் என்ற செய்தியாளர் இதற்காக வரிந்து கட்டி டெல்லியை - மோடி அரசை மிரட்டிச் செய்திகளை இரண்டு பக்கங்களில் தனித்தனியே வெளியிட்டு முயற்சித்தார்!

என்றாலும் பிள்ளை பிழைக்கவில்லை; வெறும் எண்ணெய்ச் செலவுதான்!

இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி முதல் மூத்த நீதிபதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (பெண் நீதிபதிகள் உட்பட) பலர் இருந்தும் அதுபற்றி - சமூகநீதிக்கான போராட்டத்தில் - எழுத பேச நாதியேயில்லை.

மேலும் ஒரு பூணூல் திருமேனிக்கு இடமில்லை என்றவுடன், அக்கிரகாரத்தில் பூகம்பமே வெடிக்கிறது; அட, வீபிடணத் திராவிடர்களே, உங்களுக்கு இத்தகைய உணர்வு எப்போதுதான் வரும்? அவாளைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?

Read more: http://viduthalai.in/e-paper/82686.html#ixzz35PwBeOVo

தமிழ் ஓவியா said...


அப்பட்டமான பண்பாட்டுப் படையெடுப்பு!


- கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத்தலைவர், திராவிடர் கழகம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா தத்துவத்தை மறைமுகமாக திணிக்க முயற்சி செய்கிறது. இந்தி சமஸ்கிருதம் சார்ந்த மொழியாகும்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தோற்றுநரான எம்.எஸ்.கோல்வால்கர் சமஸ்கிருதத்தை இந்நாட்டின் ஆட்சிமொழியாக்கவேண்டும் என்றார்.

1937இல் சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றிய ராஜகோபாலாச்சாரியார், "சமஸ்கிருத கலாச்சாரத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு இந்தியே முதல்படி" என்று பேசினார்.

ஒவ்வொருமுறையும் டில்லி இந்தியை திணிக்க முயலும்போதும் தமிழ்நாடு அதை எதிர்த்துப் போராடியே வந்துள்ளது. 1927இல் தந்தை பெரியார் எதிர்த்து எழுதினார். 1937, 1948 என தொடர்ந்தது. 1960இல் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.

தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1.8.1955). அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராசர் அவர்கள் பிரதமர் நேருவின் சார்பில் "பிற மொழி பேசும் மாநிலங்களில் இந்தி திணிக்கப் படமாட்டாது" என்கிற ஒரு உறுதிமொழியை அளித்தார். போராட்டத்தைப் பெரியார் ஒத்தி வைத்தார்.

பெரியாருக்கு அன்று ஏற்பட்ட அய்யம் உண்மை என்பதையே இன்று மோடி நிரூபித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும், இந்தி மொழி பேசும் இந்துத்துவா வாக் காளர்களையும் குளிர்விக்கவே பாஜக அரசு இதை செய்திருக்கிறது. அரசியல் சாசன 8ஆவது பிரிவில் பல மொழிகள் இருக்க இந்திக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? நேருவின் உறுதி மொழி எங்கே போயிற்று?

இந்தியா ஒரு நாடு அல்ல! பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும், மதங்களையும் கொண்ட மக்கள் வாழும் துணைக்கண்டம். ஒரு மொழியையோ அல்லது கலாச்சாரத் தையோ பிறமொழி பேசும், பிற கலாச்சார மக்களிடம் எப்படி திணிக்க முடியும்? அப்படி திணிக்க நினைப்பவர்கள் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

முக்தர் அபாஸ் நக்வி இந்தி பேசும் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றால் அதற்கு அங்கே தீர்வுகாணாமல் பிறமக்களிடம் அரசு இந்தியை திணிக்க முயலக்கூடாது. தமிழ் மக்களிடையே எழுந்த இந்தி எதிர்ப்புணர்ச்சி வலுவிழந்துவிட்டதாக அரசு கருதுமானால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி எந்தவித போராட்டத்துக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ள தயங்கமாட்டார்கள் என்பதை உணரவேண்டும்.

இந்தி திணிப்பிற்காண முதல் எதிர்ப்புக் குரல் - இப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியிருப்பது தமிழர்களின் இந்தி எதிர்ப்புணர்ச்சித் தணல் இன்னும் தணியவில்லை என்பதையே காட்டுகிறது.

வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருபவர்கள் தமிழ் கற்றுக்கொண்டா வருகிறார்கள்? பிறகு ஏன் எங்கள் மீது மட்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறீர்கள்?

(தமிழில்: அருவி தளபதிராஜ்)
டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு அளித்த பேட்டி 21.6.2014.

Read more: http://viduthalai.in/page-2/82684.html#ixzz35PwsGhM6