Search This Blog

9.6.14

பார்ப்பனர்களுக்கு கால்டுவெல் மீது ஏன் கோபம்? இந்து என்ற வார்த்தை தமிழ் சொல்லா?

பார்ப்பனர்களுக்கு கால்டுவெல் மீது ஏன் கோபம்?
காளையைக் குதிரையாக மாற்றியவர்களாயிற்றே!
கால்டுவெல் 200ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜூன் 6- அறிஞர் கால்டுவெல் மீது பார்ப்பன ஏடுகள் சேறுவாரி ஏன் இறைக்கின்றன என்பதற்கான காரணத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

29.5.2014 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கால்டுவெல் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் நாரண.துரைக் கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய அறிவார்ந்த நிகழ்ச்சியாக அமைந்திருக்கக்கூடிய இருபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறப்புக்குரிய நிகழ்வாக அமைந்திருக்கின்ற இந்த நிகழ்விற்கு, இங்கே வருகை தந்து சிறப்பாக வரவேற்புரையாற்றி அமர்ந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, இங்கே வந்துள்ள நம்முடைய பாராட்டுதலுக்கும், பெருமைக்குரிய இருபெரும் திராவிட சமுதாயத்து நாயகர்கள் என்று நாம் பெருமையோடு அழைக்கக்கூடிய டாக்டர் கால்டுவெல் அவர்களுடைய 200 ஆம் ஆண்டு விழா; அதுபோலவே, சிறந்த தமிழ் எழுத் தாளர்களின் முன்னோடி, பல தமிழ் எழுத்தாளர்களை உரு வாக்கிய பட்டறை என்று சொல்லக்கூடிய பெருமைக்குரிய பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண.துரைக்கண்ணன் அவர் களின் நூற்றாண்டு விழா ஏற்கெனவே கொண்டாடப்பட்டி ருக்கிறது என்று இங்கே கவிஞர் சொன்னார்கள். இந்த விழா விற்கு வந்து சிறப்பான கருத்துகளை எடுத்து வைத்துள்ள அன்பிற்குரிய முகம் பத்திரிகையின் ஆசிரியர் அன்பிற்குரிய சிறப்பான, சுதந்திர சுயமரியாதைக் கருத்தாளர் மாமணி அவர்களே,

பேராசிரியர் முனைவர் ராசகோபாலன் அவர்களே, பேராசிரியர் கருணானந்தம் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மயிலை நா. கிருஷ்ணன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கின்ற வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே, இந்த அரங்கத்திற்கு வந்திருக்கக்கூடிய சிறந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், பெருமைக்குரிய சான்றோர்கள், திராவிட இயக்கத்தினுடைய தலைசிறந்த சிந்தனையாளர்கள் ஆகிய பெரியோர்களே, அய்யா நாரண.துரைக்கண்ணன் அவர்களுடைய அன்பு மகள் அம்மையார் அவர்களே, அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்சூல் என்று சொல்லக்கூடிய ஒரு சிறு குளிகையில், மாத்திரையில் அடக்கித் தருவதைப்போல,...

சிறப்பான உரைகளை மூன்று பேர் இங்கே நிகழ்த்தி யிருக்கிறார்கள். நேரத்தின் நெருக்கடியைக் கருதி, மிகப் பெரிய ஆய்வு சொற்பொழிவுகளாக நடத்த வேண்டியவை களை, ஒரு கேப்சூல் என்று சொல்லக்கூடிய ஒரு சிறு குளிகையில், மாத்திரையில் அடக்கித் தருவதைப்போல, அவர்கள் எடுத்திருக்கின்ற குறிப்புகள் எல்லாம் ஏராளம். ஆனால், நேரம் நெருக்கிய காரணத்தினால், அய்யா முகம் மாமணி அவர்களாக இருந்தாலும், பேராசிரியர் கருணா னந்தம் அவர்களானாலும், அதேபோல, பேராசிரியர் ராச கோபாலன் அவர்களானாலும் சுருக்கிக் கொண்டிருக் கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் என்னுடைய முதற்கண் வேண்டுகோள் என்னவென்றால், நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் தயாரித்த குறிப்புகளையெல்லாம் ஒரு நூலாகக் கொண்டு வாருங்கள்; தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த் துங்கள்; நீங்கள் அப்படி நூலாகக் கொண்டுவரும்பொழுது, அதை நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். அதைப் பரப்புவது இந்தக் காலகட்டத்திலே அவர்கள் சொன்ன தைப்போல, மிகமிக அவசியமானதாகும்.

பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் சிரமமானது!

முதலில் கால்டுவெல் அவர்களுடைய 200 ஆம் நூற்றாண்டு விழாவை கொண்டாடவேண்டும் என்று நினைத்த நேரத்தில், நாரண.துரைக்கண்ணன் அவர்களு டைய நூற்றாண்டு விழாவை நடத்தவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டதற்கு, அடிப்படை உண்மை காரணம் என்னவென்றால், எப்பொழுது அவருடைய நூற்றாண்டு என்று நமக்கு சரியாக நினைவூட்டப்படாத சூழ்நிலையில், அய்யா முகம் மாமணி அவர்களுடைய இதழை வாரம் தவறாமல் படித்தவிடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கக் கூடிய நிலையில், அந்த இதழைப் பார்த்தோம். எவ்வளவோ சங்கடங்களுக்கிடையே இதழ் நடத்துவது என்பது, அதுவும் 32 ஆண்டுகளாக இதழ் நடத்துவது என்பதற்கே அவருக்கு ஒரு தனிப் பரிசு ஒன்று கொடுக்கவேண்டும். ஏனென்றால், பத்திரிகை நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

பெரியாரே மடிக்கின்றார், நாம் உட்கார்ந்து ஒரு பத்து பத்திரிகையை மடித்துவிட்டுச் செல்வோம் 

குடியரசு ஏடு நடத்தும்பொழுது, அய்யா சொல்வார், வியாழக்கிழமை அன்று அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சந்தா அனுப்புவதற்கு நிறைய பேர் தேவைப்படுவார்கள்; அவ்வளவு பேரை வேலைக்கு வைக்க முடியாது என்ற காரணத்தினால், ஈரோட்டில், நானே உட்கார்ந்து பத்திரிகை மடிப்பேன்; ஏன் நீங்கள் உட்கார்ந்து சந்தா போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். நான் உட்கார்ந்து மடித்தால்தான், என்னைப் பார்க்க வருகின்றவர்களும் மடிப்பார்கள். அது மிகவும் சுலபமானது; என்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் பத்திரிகையை மடியுங்கள் என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. பெரியாரே மடிக்கின்றார், நாம் உட்கார்ந்து ஒரு பத்து பத்திரிகையை மடித்துவிட்டுச் செல்வோம் என்று நினைப்பார்கள். அதனால், எனக்குப் பணமும் மிச்சம், செலவும் மிச்சம் என்று அய்யா சொல்வார்.

அந்த முகம் பத்திரிகையில் வருகின்ற செய்திகளை ஒரு வரிவிடாமல் படிப்பேன்.

இங்கே பேசும்பொழுது ஒரு கருத்தினை சொன்னார்,  எல்லாம் மணிக்கொடி, அந்த மணிக்கொடியிலிருந்துதான் ஒரு பெரிய யுகப் பிரளயமே ஏற்பட்டது; அப்புறம்தான்  புரட்சியே ஏற்பட்டது என்று சொல்லி, பார்ப்பனர்களாக இருந்தால், அன்று தொட்டு இன்றுவரையில், மிகப்பெரிய அளவிற்கு ஒருவரை ஒருவர் தூக்குவது, அதன்மூலமாக இவர் வந்தார், அவர் வந்தார் என்று சொல்வது. நம்மாட்கள் அதைவிட பெரிய பணி செய்திருந்தால்கூட, அதனை விளம்பரப்படுத்துவது இல்லை. அதுதான் மிக முக்கியம்.

நூற்றாண்டு விழாவினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!

எத்தனை ஆண்டுகளாக - 32 ஆண்டுகளாக பத்திரிகை நடத்துவதைப்பற்றி கவலைப்படாமல், 8 ஆண்டுகள் அவர் எத்தனை வேலை செய்திருக்கிறார் என்பதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கின்றார். அப்பொழுதுதான் எனக்குக் கோபம் வந்து, கவிஞருக்குத் தொலைபேசியில் அழைத்து, நாரண.துரைக்கண்ணன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்; அதில் முகம் மாமணி அவர்களே வந்து, நாரண.துரைக்கண்ணன் பற்றி பல தகவல்களை தெரியப்படுத்தி உரையாற்ற வேண்டும் என்று நாங்கள் தெளிவாக இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தோம்.
அய்யா தந்தை பெரியார் அவர்களிடத்தில், மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

இங்கே பல செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்; நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்புகளுக்காக சொல்கிறேன்.

இங்கே நம்முடைய நண்பர் சொன்னார் அல்லவா, நாரண.துரைக்கண்ணன் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், அதற்கு தன்னுடைய பங்கை தமிழ் அறிஞர்கள் கொடுத்தார்கள். உணர்வாளர்களாக இருந்தார்கள்.

இந்தி போர் முரசு என்ற நூலாக....

அதில், 17.7.1948 இல் சென்னை மெமோரியல் ஹால், செயின்ட் மேரீஸ் ஹால் என்று சொல்லக்கூடிய அந்த அரங்கத்தில், பெருந்தலைவர்களையெல்லாம் அழைத்து ஒரு மாநாடு நடத்தினார்.

இந்தி போர் முரசு என்று தலைப்பிட்டு நூலாக வந்திருக்கிறது.
தந்தை பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க. அறிஞர் அண்ணா அந்த வரிசையில், அய்ந்தாவதாக நாரண.துரைக் கண்ணன். அவருடைய உரை இந்தி போர் முரசு என்ற நூலாக, பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.
1948 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்து, பிறகு மூன்றாம் பதிப்பாக 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதேபோல், பல்வேறு செய்திகள் மிகத் தெளிவாக வந் திருக்கிறது. அந்த வரிசையில், ஆறாவதாக ம.பொ.சி., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, அருள்தங் கைய்யா, அப்துல் மதீஸ் எம்.எல்.ஏ., வி.பி.எஸ்.மணியார், மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற மிகப்பெரிய அளவில், இந்த வாய்ப்புகள் அத்தனையும் இதில் குறிப்பிடத் தகுந்த அளவில் இருக்கிறது.

எதற்காக இதனை சுட்டிக்காட்டுகிறோம் என்று சொன்னால், இந்த உணர்வு என்பதிருக்கிறதே, அது இன்றைக்கும் தேவைப்படுகிறது; இன்னுங்கேட்டால், இன்றைக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது. நாளைக்கு இதைவிடத் தேவை அதிகமாக இருக்கும். இது ஒரு அறைகூவல்; ஒரு திருப்புமுனையில் இருக்கக்கூடிய நிலையில், மிகத் தெளிவாக இருக்கிறது.

அவர்களுக்கு யார் வில்லனோ, அவர்கள்தான் நமக்கு நாயகர்கள்!
நாம் சரியாக எதைச் செய்கிறோமா, இல்லையா? என்பதற்கு அடையாளம்; அழகாகச் சொன்னார் பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், அவர்களுக்கு யார் வில்லனோ, அவர்கள்தான் நமக்கு நாயகர்கள் என்று சொன்னார்கள். அது மிக அற்புதமான ஒரு செய்தியாகும்.

தந்தை பெரியார் அவர்கள், இங்கே உள்ள பாதிப் பேர்களுக்கு இந்தச் செய்தி தெரியும். இருந்தாலும், நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆசிரியராக 50 ஆண்டுகளைத் தாண்டி நான் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்

நான் விடுதலைப் பொறுப்புக்கு வந்தபொழுது, விடுதலை ஆசிரியர் குருசாமி அவர்கள், பாரம்பரியமாக நல்ல எழுத்தாளர், அதிலேயே நீண்டகாலம் இருந்தவர். நான் மாணவன் பருவந்தொட்டு இயக்கத்தில் இருந்தவன் என்று சொன்னாலும், எழுத்துத் துறையில் குருசாமி அவர்கள் விலகிய நேரத்தில், அய்யா அவர்கள் என்னை அழைத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்னார்கள்.

பெரியார் என்ன கட்டளையிட்டாலும், அதனை ஏற்றுக் கொள்ள ஒரு பெரியார் தொண்டன், தொண்டர்களுக்குத் தொண்டன். அந்த முறையில், மறுப்புச் சொல்லாமல், அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, ஆசிரியராக 50 ஆண்டுகளைத் தாண்டி நான் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன்.
அந்த நேரத்தில், அய்யாவிடம் ஒன்று கேட்டேன், அய்யா இது நாளிதழ்; இதில் கருத்துக்கள், தலையங்கம் எழுதவேண்டும்; விடுதலையை தோழர்கள் வாங்கியதும் முதலில் படிப்பது தலையங்கத்தைத்தான். இது கொள்கை ஏடு; வெறும் செய்தி ஏடு அல்ல. கொள்கை ரீதியாக நமக்கு என்ன வழிகாட்டுதல்; நான் எப்படி எழுதவேண்டும்; நடந்துகொள்ளவேண்டும் என்று நான் கேட்டபொழுது,

இந்துப் பத்திரிகைக்கு நேர் எதிராக எழுதுங்கள்!

அய்யா அவர்கள், மிகவும் சுருக்கமான ஒரு கருத்தைச் சொன்னார்,
உங்களுக்குத்தான் இங்கிலீஷ் தெரியும் அல்லவா, இந்துப் பத்திரிகையைப் பாருங்கள்; அவன் என்ன தலையங்கத்தை எழுதுகிறானோ, அதற்கு நேர் எதிராக எழுதுங்கள்; அது சரியாக இருக்கும் என்றார்.

அவர்கள் யாரைப் பாராட்டுகிறார்களோ, அவர்கள் நம் இன எதிரிகள் என்று அர்த்தம்; யாரை அவர்கள் இகழ்கிறார்களோ, அவர்கள் இந்த இனத்தின் பாதுகாவலர்கள் என்று பொருள்.

இப்பொழுதுகூட, இவ்வளவு பெரிய உணர்வுகள் இங்கே வந்திருக்கிறது. உணர்வுகள் வந்த நிலையில், மிகத் தெளிவாக உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டுமானால், இதோ என் கையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வார பத்திரிகை. அவர்கள் இப்பொழுதும் வாரப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; இது பல பேருக்குத் தெரியாது.

ஏன் அவர்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறது?

இதில், கால்டுவெல், மைனஸ் முகமூடி என்று தலைப் பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

கால்டுவெல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்; இந்த நாட்டுக்காரன் செய்யத் தவறிய, இந்த இனத்திற்கு ஒரு பெரிய அடையாளத்தைக் கொடுத்து, பண்பாடு, நாகரிகம் இதை அத்தனையும் செய்துகொடுத்த ஒருவருக்கு சிறப்பு செய்வது என்றால், அதுவும் ஒப்பியல் மொழி இலக்கணம் என்றால், சாதாரண விஷயமல்ல. ஏன் அவர்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறது? அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இரண்டொரு செய்தியை மட்டும் எடுத்துச் சொல்கிறேன்;
நம்முடைய புலவர் கோவிந்தன் அவர்கள்கூட, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 1, 2, 3, 4 பாகங்கள் என்று தமிழில், கோவிந்தன் அவர்கள் ரத்தினம் அவர்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒரு பழைய பதிப்பு நூல்.

ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் வாரப் பத்திரி கையில் வெளியிட்டுள்ள செய்தியைப் பாருங்கள்

சிந்துவெளி நாகரிகத்தை சரசுவதி ஆறு ஆக்குகிறார்கள். சரசுவதி என்கிற ஒரு ஆறே கிடையாது. சரசுவதி வீட்டில் இருப்பார்கள்; அல்லது படத்தில் இருப்பார்களே தவிர, கல்விக் கடவுளாகப் பல இடங்களில் படத்தினை மாட்டியிருப்பார்களே தவிர, சரசுவதி என்கிற ஆறு எங்கேயும் கிடையாது. கேட்டால், அங்கே ஓடுகிறது, இங்கே ஓடுகிறது என்று சொல்கிறார்கள். அந்த சரசுவதி கலாச்சாரம், சரசு என்று சொல்லி, சிந்துவெளி நாகரிகத்தை மாற்றினார்கள் திட்டமிட்டு.

காளை மாட்டையே குதிரையாக மாற்றினார்கள்!

முரளிமனோகர் ஜோஷி அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வெள்ளைக்காரனை ஒரு கூலியாகப் பிடித்து, அந்தக் காளை மாட்டையே குதிரையாக மாற்றினார்கள். காளை மாட்டை - திராவிட இனம், சிந்துவெளி நாகரிகம், அரப்பா - மொகஞ்சாதாரோ நாகரிகத்தை திட்டமிட்டு மாற்றினார்கள்.

கால்டுவெல்மேல் அவர்களுக்கு அளவுக்கு மீறிய கோபம் ஏன் வருகிறது? விஜயபாரதம் இதழில் கால்டுவெல் அட்டைப் படக் கட்டுரையாகப் போட்டிருக்கிறார்கள்.

இந்து சமுதாயத்தைக் கூறுபோட்ட அன்னிய மிஷன ரிக்குச் சிலை;
நோயாளியை போய் வைத்தியன் என்கிறான்; வைத் தியனை நோயாளி என்கிறான்.

இவன் கூறுபோட்ட இந்திய சமுதாயத்திற்கு, அவர்தான் படிப்பின்மூலம் ஒன்றுபடுத்திய மனித குலத்தினுடைய மாமேதை.

                            ---------------------தொடரும்..."விடுதலை” 6-6-2014
*********************************************************************************

தி.மு.க.விற்கு ஒன்று என்றால், துணையாக நிற்கக் கூடியது திராவிடர் கழகம்தான்! - கி.வீரமணி


தி.மு.க.விற்கு ஒன்று என்றால்,  துணையாக நிற்கக் கூடியது திராவிடர் கழகம்தான்!
கால்டுவெல்- நாரண.துரைக்கண்ணன் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஜூன் 7- தி.மு.க.விற்கு ஒன்று என்றால், உடனே பக்கத்தில் நிற்கக்கூடியது திராவிடர் கழகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
29.5.2014 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கால்டுவெல் அவர்களின் 200 ஆம் ஆண்டு விழா - நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நாரண.துரைக்கண்ணன் அவர்களை நான் சந்தித் திருக்கிறேன். விடுதலை அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவருடைய கட்டுரையை வெளியிட்டிருக்கிறோம். மிக எளிமையானவர். மீரான்சாகிப் தெருவில் அய்யாவின் வீட்டில், அய்யாவை வந்து சந்திப்பார் அவர்.
அவரைப்பற்றி விடுதலையில் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். செய்திகளை வெளியிட்டிருக்கிறோம்.

இங்கே உரையாற்றிய அய்யா முகம் மாமணி அவர்கள் சொன்னார் பாருங்கள்; கள்ளுக்கடை ஒழிப்பைப்பற்றி காமராசரிடம் சொன்னார் என்று, லேசாக ஒரு வரியை வெளியிட்டார் பாருங்கள்; அதிலிருந்துதான் நாங்கள் அவர் இந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்கிற யூகத்திற்கு வந்தோம்.

ராமகோபாலனுக்கு மு.வ. மேல் எப்பொழுது அக்கறை வந்தது தெரியுமா?
ராபர்ட்டீன் ஒபிலி முதல் ராபர்ட் கால்டுவெல் வரையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் மற்றும் சிலரும் தமிழ்மொழியைக் கடத்தி, அதன் இந்து அடையாளத்தை அழித்து, தமிழ் மண்ணின் கலாச்சாரத்தை ஒழித்து, தமிழ் மக்களை கிறித்துவர்களாக மதம் மாற்றி, இறுதியாக தமிழகம் மற்றும் வடகிழக்கு இலங்கையைச் சார்ந்த ஒரு தமிழ்க் கிறித்துவ தேசத்தை சாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கினர்; இயங்கி வருகின்றனர் என்று எழுதியுள்ளனர்.


அதுமட்டுமல்ல, உண்மையான தமிழறிஞர்களுக்கு மரியாதை செலுத்துங்கள்! மு.வ., அவ்வை துரைசாமி, உ.வே.சா. வையாபுரி பிள்ளை, புலியூர் கேசிகன் போன்றவர்களை எல்லாம் எழுதி, அண்மையில் அறிக்கை ஒன்றில், இந்து முன்னணி ராமகோபாலன் எழுதியிருக்கிறார்.

ராமகோபாலனுக்கு மு.வ. மேல் எப்பொழுது அக்கறை வந்தது தெரியுமா? நாம் கால்டுவெல் சிலைக்கு மாலை போட்ட பிறகுதான், மு.வ.வைப் பற்றி அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது.

அவர்கள் யாரை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பாருங்கள். அவர்களுக்கு நபர்கள் முக்கியமல்ல; இந்த முறைகள்தான் முக்கியம்.
அவர்கள் தங்களுடைய மதத்தைக் காப்பாற்றுவது மட்டு மல்ல; அவர்களுடைய உணர்வை நினைக்கக்கூடியவர்கள்.

நாரண.துரைக்கண்ணன் அவர்களாலேயே உருவாக் கப்பட்டு, அவர்களாலேயே உயர்வு பெற்று, அவர் எத்தனை ஆண்டுகாலம், எவ்வளவு பேரை தூக்கிவிட்டிருப்பார்; ஏணி மாதிரி, தோணி மாதிரி. அப்பேர்ப்பட்டவரைப்பற்றி அவர்கள் சொல்வதற்குக்கூட தயாராக இல்லை என்றால் என்ன அர்த்தம்?
இத்தனைக்கும் அவர் காங்கிரஸ்காரர்; கதர் உடை அணிந்திருப்பார். தந்தை பெரியார் அவர்களிடத்தில் ஏன் அவர்களுக்கு மிகப்பெரிய அளவிற்கு ஈர்ப்பு வந்தது என்பதற்கு எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

இது ஒரு நிலைத்த வெற்றி என்று யாரும் தயவுசெய்து நினைக்காதீர்கள்!
ஆனால், அவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கிறது; அந்த உணர்வு நமக்கு இருக்கவேண்டாமா? இதுதான் இன்றைக்குக் கேள்வி.
அந்த உணர்வு இருந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை உருவாகியிருக்குமா? ஆனால், இது ஒரு நிலைத்த வெற்றி என்று யாரும் தயவுசெய்து நினைக்காதீர்கள். இந்தப் போராட்டம் ஒரு இனப் போராட்டமாகும்.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், இந்த நாட்டில் அரசியல் போராட்டமே நடந்ததில்லை. முழுக்க முழுக்க இனப்போராட்டம்தான் என்று.
கால்டுவெல்லைப்பற்றி சொல்லும்பொழுது, இவன் அடுத்த ஆளை தூக்கிப் பிடிக்கிறான். அதுவும் சாமர்த்தியமாக, நம்மாள்களில் ஒரு நான்கு பேரை போட்டு மு.வ., அவ்வை துரைசாமி, வையாபுரி பிள்ளை, புலியூர் கேசிகன் என்று சொல்லிவிட்டு, நடுவில் உ.வே.சா.வை சொல்லவேண்டும்; இதுதான் அவர்களுக்கு மிக முக்கியம்.

எங்கே காயம் இருக்கிறதோ, அங்கே நான் மருந்து போடுகிறேன்!
நான் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வேன். சில நேரங்களில் கூட்டங்களில் கேட்பார்கள் என்னை பார்த்து:

நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தைத் தாக்கமாட்டேன் என் கிறீர்கள்; கிறிஸ்தவ மதத்தைத் தாக்கமாட்டேன் என்கிறீர்கள். வெறும் இந்து மதத்தை மட்டும்தான் தாக்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.
நம்மாள்களில் சில அரைகுறை இருக்கிறார்கள் பாருங்கள், அவர்களுக்கும் இந்தக் குழப்பம் உண்டு.

நான் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டேன்; ஏன் அய்யா, என் வீட்டில் எங்கே குப்பை இருக்கிறதோ அதனை நான் எடுத்துப் போடுகிறேன். எனக்கு எங்கே காயம் இருக்கிறதோ, அங்கே நான் மருந்து போடுகிறேன்; எங்கே அரிப்பு ஏற்படுகிறதோ, அங்கே நான் சொறிந்து கொள்கிறேன். நீ உடனே எதிர்த்த வீட்டில் குப்பை இருக்கிறதே, தெருவில் குப்பை இருக்கிறதே என்று கேட்டால்,  என்ன அர்த்தம்.
என் வீட்டிலுள்ள குப்பையைத்தானே நான் முதலில் சுத்தம் செய்யவேண்டும். நாங்கள் எங்கள் வீட்டை சுத்தம் செய்கிறோம் அல்லவா, அதுபோல், நீங்கள் அங்கே இருக்கின்ற குப்பையை அகற்றுங்கள்.

நமக்குள் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்வோம்.
நாங்கள் கால்டுவெல் அவர்களுக்கு விழா எடுக்கிறோம்; அதுபோல் நீங்களும் எடுங்கள். நமக்கு ஒரு எதிர்ப்புரட்சிபோல் ஒரு கருத்தை சொல்லவேண்டும்.
திராவிட இயக்கம் வீழ்ந்துவிடவில்லை; திராவிட இயக்கம் தாழ்ந்துவிடவில்லை!

இப்பொழுது அவர்களுடைய நிலை எவ்வளவு பரி தாபமாகிவிட்டது, பெரியார் எப்படி வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், அதற்குக்கூட நான்கு தமிழன் பெயரைச் சொல்லி விட்டுதான், ஒரு அய்யர் பெயரைச் சொல்லவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், திராவிட இயக்கம் வீழ்ந்துவிடவில்லை; திராவிட இயக்கம் தாழ்ந்துவிடவில்லை என்பதுதான் மிகமிக முக்கியமான ஒன்று.
கால்டுவெல் அவர்களைப்பற்றிச் சொல்கின்ற நேரத்தில், ஏன் அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள்?

திராவிட கவுரிய இனத்தவர் அனைவரும் உள்ளிட்ட இன்றைய இந்தியர்களுள் பெரும்பகுதியினரைக் குறிக்கும் பொதுப் பெயராக விளங்கும் சூத்திரர் என்ற சொல், பண்டு, சிந்துநதிக் கரையில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்களை மட்டுமே குறிக்க வழங்கிய சொல்லாகத் தெரிகிறது என்று சொல்லக் கூடிய அளவிற்கு, சூத்திரர்கள் இதைப்பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் பெரும்பாலானோர்கள் காலப் போக்கில் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டு, வடமொழி இந்திய அடிமைகளும், ஆரிய இனத்திற்குப் புறம்பான இனத்தவர்கள் ஆவார்கள் என்று கருத்துடையவர்கள் ஆகவே காணப்படு கின்றனர்.

இங்கே உரையாற்றிய பேராசிரியர் ராசகோபாலன் அவர்கள் ஒன்றை சொன்னார், மற்ற நாட்டு மக்களைத்தானே அடிமைப்படுத்தினான்; அவன் நாட்டு மக்களை அடிமைப் படுத்தவில்லை என்று சொன்னார்.  அடிமையாக இருக் கிறானே, அவனும் பொறுத்துக்கொண்டு. அடிமையாக இருப்பதுகூட குற்றமில்லை. அடிமைத்தனத்தை ருசித்து இருக்கிறான் பாருங்கள்; அதுதான் கொடுமையாக இருக்கிறது. அடிமையாக இருக்கிறோம் என்பதைப் பெருமையாகக் கருதுகிறான்.

இதைத்தான் அய்யா அவர்கள் கேட்டார். அய்யா அவர்கள் செவியில் அறைந்ததுபோல் கேட்டதினால்தான் இன்றைக்கு இந்த அளவிற்காவது இருக்கிறது.

நம்மாள் சூத்திரப் பட்டத்தினை ஒழிப்பதற்காகப் பெரியார் பாடுபட்ட நேரத்தில், அதில் ஒரு பிரிவு, மட்டத்தில் உயர்ந்தது மாதிரி; அவாள்ளாம் சூத்திராள்; நாங்கள் எல்லாம் சற்சூத்திராள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
சற்சூத்திராள் என்கிற வார்த்தை கவர்ன்ட்மெண்ட் ரெக்கார்டில் இருக்கிறது. பல பேருக்கு இது தெரியாது. சூத்திரர்கள் என்பதும் ரெக்கார்டில் இருக்கிறது. 1928 ஆம் ஆண்டுவரையில், நம் அடையாளத்திற்கு இருந்தது.
அதற்குப் பிறகு திராவிட இயக்கம் - நம்முடைய இயக்கம் தீர்மானம் போட்டு அதனை ஒழித்தோம்.

அப்பொழுதுதான் அய்யா அவர்கள், பச்சையாக, சில நேரங்களில் பெரியார் அய்யா உரையாற்றும்பொழுது கேட்பதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த அடி அடித்தால்தான் நம்மாள் நகர்வான் என்று சொல்வார்.

நல்ல தேவடியாள் மகன் என்று எழுதுவதா? என்று பெரியார் கேட்பார்!
சூத்திரன் என்றாலே, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்; தேவடியாள் மகன் என்று எழுதியிருக்கிறான். அசிங்கமாக இருக்கிறது; அந்தப் பெயரை மாற்றவேண்டும்; நம் தாய்மார் களுக்கு இருக்கின்ற அவமானத்தை நாம் போக்கவேண்டும்; அதற்காக நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில், இன்னொருத்தன் அங்கே வந்து, அவனைவிட நான் உயர்ந்தவன்; அவன் சூத்திரன்; நான் சற்சூத்திரன் என்றால், என்ன அர்த்தம்?
நல்ல தேவடியாள் மகன் என்று எழுதுவதா? என்று கேட்டார் தந்தை பெரியார் அவர்கள். பிறகுதான், அந்த வார்த்தையை யாரும் சொல்லவில்லை.
ஏனென்றால், பல நேரங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் தேவை. மிக முக்கியமாக!

திராவிட இனம், திராவிட மொழி, திராவிட கலாச்சாரம், திராவிட பண்பாடு இவைகளைப்பற்றி யார் எழுதினாலும், அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது; அவர்கள் எந்தக் கட்சி என்பதைப்பற்றி கவலையில்லை.
நாரண.துரைக்கண்ணன் முதுகில் பூணூல் இல்லை
நாரண.துரைக்கண்ணன் அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவரா? அவர் தேசியத்திற்குப் புறம்பானவரா? இல்லையே!
எழுத்தாளர் உலகத்தில், இலக்கிய உலகத்தில் அவருக் குரிய பெருமை கிடைக்கவில்லை! காரணம் அவருடைய முதுகில் பூணூல் இல்லை - இதுதானே தவிர, வேறொன்று மில்லை.

ஆகவே, எத்தனையோ செய்திகள் இருக்கிறது; நான் நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் முடியக்கூடிய கூட்டம் இது.
இன்னமும் திராவிட இயக்கத்தை அழிக்கவேண்டும்; திராவிட உணர்வை அழிக்கவேண்டும்; திராவிட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் ஆற்றல் உள்ளவர்களாக எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்களை அழிக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள்.
ஆனந்தவிகடன் - ஆரியம்; பிரசண்ட விகடன் - திராவிடம்
தந்தை பெரியாருடைய அந்த வெற்றி, அவரை எவ்வளவு வியக்க வைத்தது. அதனைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அதனைப்பற்றி பக்கம் பக்கமாகச் சொல்லலாம்; புத்தகமாகப் போட்டுச் சொல்லலாம்.
ஆனந்தவிகடனுக்குப் போட்டியாக வந்ததுதான் பிரசண்ட விகடன்; ஆனந்தவிகடன் - ஆரியம்; பிரசண்ட விகடன் - திராவிடம்.

இந்த ஆரிய - திராவிட போராட்டம் இருக்கிறது பாருங்கள், ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு ரூபத்தில் வரும். அதுதான் மிக முக்கியம்.
அதனால், நாகவேடு முனுசாமி முதலியார் வந்து, அவரை அழைத்து, அவரைப் பெருமைப்படுத்தி, ஒவ்வொரு துறையில் உள்ளவர்களைப் பெருமைப்படுத்தி, எவ்வளவு பேரை - பண்ணையில் உற்பத்தி செய்வதுபோல், செய்திருக்கிறார்கள்.

அதனால், யாரெல்லாம் திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்களோ, இந்தி மொழியை அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் ஏன் எதிர்த்தார்கள்? அதற்கு என்ன காரணம்?

நாரண.துரைக்கண்ணன் அவர்கள் 1948 ஆம் ஆண்டு  செயின்ட்மேரீஸ் ஹாலில் நடைபெற்ற மாநாட்டில்  வரவேற்புரையாற்றும்பொழுது மிக அழகாக ஒரு கருத்தைச் சொல்கிறார்.

இலக்கிய வளமோ, இலக்கண அமைதியோ இல்லாத இந்தியை எப்படி பொது மொழி ஆக்க முடியும் என்று.
நிர்ப்பந்தங்களைத் தாங்காமல்தான், கல்வி அமைச்சர் இரண்டாவது உத்தரவினை போட்டார்
மிகப்பெரிய அளவிற்கு, காங்கிரஸ் அமைச்சர்களுடைய இந்த அந்தரங்கக் கருத்தைக்கூட தெரிந்து, சில பத்திரிகை களும், முத்துரங்க முதலியார் போன்ற பிரமுகர்களும், யாரோ சிலர் எழுதுகிறார்கள் என்பதற்காக இப்படி குழப்பம் அடையக்கூடாது. இந்தியைக் கட்டாயமாகப் படித்துத்தான் ஆகவேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவேண்டும் என்று நிர்ப்பந்திக்கலாயினர். இந்த நிர்ப்பந்தங்களைத் தாங்காமல்தான், கல்வி அமைச்சர் இரண்டாவது உத்தரவினை போட்டார். தமிழ்நாட்டில்  இரண்டாவது மொழியாக, இந் தியையோ, சமஸ்கிருத மொழியையோ கட்டாயமாக எடுத்துப் படிக்கவேண்டியதில்லை என்று முதல் உத்தரவில் குறிப்பிட்ட அதே கல்வி அமைச்சர், பிரதேச மொழியை முதல் மொழி யாகவும், ஆங்கிலத்தை மூன்றாவது மொழியாகவும் படிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதம் போன்றவைகளில் ஒன்று இரண்டாவது மொழியாக கட்டாயம் படிக்கவேண்டும் என்று, இரண்டாவது உத்தரவில் வற்புறுத்துவதற்கு இதைத்தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும் என்று மிகத் தெளிவான கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.


நாரண.துரைக்கண்ணன், மறைமலையடிகள் போன்றவர் கள் மிகத் தெளிவாகவே இந்தக் கருத்தை மிக ஆழமாக எடுத்துச் சொன்னார்கள் என்று சொல்லும்பொழுது, மிகவும் சிந்திக்கவேண்டிய செய்தியாகும்.
அந்த உணர்வு இன்றைக்கு மட்டுமல்ல, நாளைக்கும் மாறாது. இந்தப் போராட்டம் தேவாசுரப் போராட்டம் என்று ஆரம்பித்த போராட்டம் - ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
இப்பொழுதுகூட பாருங்கள், நண்பர்கள் என்னிடம் காட்டினார்கள். நம்முடைய தோல்விகளில் அவர்கள் வெற்றியடைகிறார்கள் என்று சொல்கின்ற நேரத்தில்,விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் டாக்டரின் முக்கிய கடமைஒரே செய்தியை சொல்கிறேன்.


இப்பொழுது வந்த துக்ளக் அட்டைப் பட செய்தியில்,தி.மு.க. மிகவும் அடிபட்டு, மருத்துவமனையில் இருக்கு. நான் சொல்கிற மாதிரி,
இந்த விபத்திலே உங்களுக்கு கை, கால், தலை, முதுகெலும்பு, இடுப்பு எலும்பு பலத்த காயத்திற்கு உள்ளாகி, மூளை, இதயம், சிறுகுடல், பெருகுடல், கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், இதையே அறைகூவலாக எடுத்துக்கொண்டு அவசரமாக எழுந்து நிற்கவேண்டும். நான் சொல்றது காதில் விழுகிறதா என்று கேட்கிறமாதிரி போட்டிருக்கிறார்கள்.


பொதுவாக, நோயாளிக்குப் பக்கத்தில் இவ்வளவு தைரியம் சொல்கிறவர் டாக்டராகத்தான் இருப்பார். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
டாக்டருடைய தொழிலே என்னவென்று சொன்னால், எப்பேர்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் காப்பாற்ற வேண்டியதுதான் டாக்டரின் முக்கிய கடமையாகும். அந்த வேலையில் நாங்கள் இருக்கிறோம் என்று  மிகப் பெருமையாக சொன்ன சோவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
தி.மு.க.விற்கு ஒன்று என்றால்,  உடனே பக்கத்தில் நிற்கக்கூடியது திராவிடர் கழகம்தான்!

அதுமட்டுமல்ல, எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும், விபத்தைத் தாண்டி, அறைகூவலுக்குரிய மனப்பான்மையும், மனத் திடச் சித்தமும் உடையது தி.மு.க. என்பதை உணர்ந்த டாக்டர் இவர் என்பதற்கு அடையாளம் சொல்லியிருக் கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், பார்ப்பானுக்குப் பின்புத்திதானே தவிர, முன்புத்தி கிடையாது என்று சொல்வார்.

திராவிடர் கழகம்தான், தி.மு.க.விற்கு ஒன்று என்றால்,  உடனே பக்கத்தில் நிற்கக்கூடியது என்று சொல்லியிருக் கிறார்கள்.
இதற்கு முன்பு அவர்கள் ஒன்றை சொல்லியிருக்கிறார்கள், ஜெயிக்கின்ற கட்சிக்குத்தான் இவர்கள் போவார்கள்; தோல்வியுறுகின்ற கட்சியின் பக்கம் போகமாட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்கள்; இப்பொழுது இந்தக் கருத்தை சொல்லியிருப்பதன்மூலம் அந்தக் குற்றச்சாட்டையும் அவர்களே மறுத்திருக்கிறார்கள்.
அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறவில்லையே...!
தி.மு.க.வை நீங்கள் ஒரு கட்சியாக நினைக்கக்கூடாது;   ஒரு இனம்; அந்த இனத்தினுடைய எழுச்சி; அது வீழ்ச்சியடைகிறது என்றால், இவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் பாருங்கள்; அவர்கள் பிழைக்கவே கூடாது; அவர்கள் வரவே கூடாது என்று நினைக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறவில் லையே, அதுதானே மிக முக்கியம்.
ஆகவே, நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். கால்டுவெல் அவர்களுக்கு 200 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடினாலும், நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினாலும், அதற்கு அடிப்படை என்பது, அவர்களுடைய இன உணர்வு, மொழி உணர்வு, யாருக்கும் குறையாத ஆற்றல், அதுதான் மிக முக்கியம்; நம்மவர்கள் என்பதால், அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் ஆற்றலை மற்றவர்களோடு ஒப்பிட்டால், சிறப்பாக இருக்கும் என்ற அளவில்தான் நாங்கள் இப்படிப்பட்ட விழாக்களை எடுக்கிறோம்.
எங்களுடைய கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆகவே, நேரத்தின் நெருக்கடியைக் கருதி, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவினை ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், இங்கே வந்திருக்கின்றவர்களுக்கும் வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்து, நம்முடைய விழாவிற்கு வந்திருந்த அருமை அம்மா பிரசண்டன விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களுடைய செல்வி அம்மையார் அவர்களுக்கும், அவருடைய வாழ்விணையருக்கும், குடும்பத்தவர்களுக்கும், மற்ற தோழர்களும் நன்றியைத் தெரிவித்து,
அதேபோல, அய்யா க.வேழவேந்தன் அவர்களும், நம்முடைய பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கும் எங்களுடைய கனிந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

வணக்கம்! நன்றி!!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

                  -------------------------------”விடுதலை” 7-6-2014

இந்து என்ற வார்த்தை தமிழ் சொல்லா?
இந்து என்ற வார்த்தை தமிழ் சொல்லா? அந்த மதத்திற்கான சொல்லா? கிடையவே கிடையாது? சமஸ்கிருத மொழியும் கிடையாது. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், மைக்கேல் வெர்சஸ் வெங்கடேசுவரன் என்கிற ஒரு வழக்கு இருக்கிறது; அதில் தலைசிறந்த தலைமை நீதிபதி என்கிற வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஜஸ்டீஸ் பி.வி.ராஜமன்னார் எழுதியிருக்கிறார்.
The Word Hindu is not Indian in Orgin.

மேற்சொன்னவை அவர் தீர்ப்பில் சொன்னதாகும்.
அந்த இந்து என்கிற வார்த்தை, இந்திய மொழியே கிடையாது. முதலில் 14 மொழியாக்கி, 1650 மொழி வட்டார, அங்கங்கே இருக்கின்ற எழுத்தில்லா மொழிகள்கூட இந்தியாவில், 16 மொழி என்று 8 ஆவது மொழி என்று அட்டவணையில் வைத்தார்கள்; இப்பொழுது 22 மொழிகள் உள்ளன.
இதுவரையில் நம்மில் பல பேர் தவறாக அதனைப் பயன்படுத்தும்பொழுது, சட்டத்தில்கூட, தேசிய மொழியாக அங்கீரிக்கப்பட்டிருக்கின்ற மொழிகள் என்று சொல்லியிருக்கிறோம். அந்த வார்த்தையே தவறான கருத்து.
ஒரே கருத்தினை திரும்பத் திரும்பச் சொல்லியதால், எல்லோரும் அதையே சொன்னார்கள்.

அரசியல் சட்டத்தினுடைய 8 ஆவது அட்டவணையை நீங்கள் தயவு செய்து பாருங்கள்:

மொழிகள் என்று மட்டும்தான் இருக்குமே தவிர, தேசிய மொழிகள் என்கிற வார்த்தையே கிடையாது. இந்தி மொழிக்கு என்ன தகுதி என்றால், தேவநகரி எழுத்துகளைக் கொண்டது என்பதுதான்.

காந்தியாருக்கும், அவர்களுக்குமே தகராறு ஏற்பட்டது. காந்தியார் இந்துஸ்தானி, உருது என்று போடவேண்டும்தான் என்று எழுதினார். அப்பேற்பட்ட அந்த சூழ்நிலைகளில் இந்து என்பது சமஸ்கிருத வார்த்தையும் கிடையாது. 22 மொழிகளிலும் அது கிடையாது.

வெளியில் இருந்து வந்தார்கள் பாருங்கள், அரேபியன் போன்றவர்கள், இவர்கள் மேல் இருக்கின்ற எரிச்சலில், யாரோ திருட்டுப்பயல்கள் என்கிற மாதிரியான வார்த்தையைப் போட்டு, அவன் வெறுப்பாக சொன்ன பாரசீக மொழியில் இருக்கின்ற வார்த்தையாகும்.

நீதிபதி ராஜமன்னார் அவர்களின் தீர்ப்பில் இருந்து எடுத்துச் சொன்னோம்.
அதனை ஒப்புக்கொள்ளாதவர்களுக்கு சந்தேகம் என்றால், தெய்வத்தின் குரல் சாதாரண குரல் அல்ல; மனிதனுடைய குரல் அல்ல; தெய்வத்தின் குரல் - சங்கராச்சாரியார் - ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்த சங்கராச்சாரியார் அல்ல; இவருக்கு குருநாதராக இருந்த சங்கராச்சாரியார்; சந்திரசேகரேந்திர சரசுவதி. இவர் எழுதிய புத்தகம்தான் தெய்வத்தின் குரல்.
அதில் அவர், இந்து மதம் என்பது இதற்கு ஆதிகாலத்தில் பெயர் கிடையாது. இது சனாதன மதம் என்றுதான் பெயர். இதற்குப் பிறகுதான் இந்து என்று பிறகு அழைக்கலாயினர்.


இந்து அடையாளமே எப்பொழுது ஏற்பட்டது; அதுவே ஒரு பித்தலாட்டத்திற்கு வட்டி போட்டி பித்தலாட்டமாகும். சாதாரணமானதல்ல. எனவே, நண்பர்களே நீங்கள் இதனை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

 7-6-2014
**************************************************************************************
Read more: http://viduthalai.in/page1/81752.html#ixzz346GzSdyP

24 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


தியானம்

ஆன்மீகப் பயிற்சி யில் தீவிரமாக ஈடுபட் டிருந்த ஒரு சாதகன் ரமண மகரிஷியிடம் சென்று சுவாமி, நான் 18 வருஷங்களாக ஏக நிஷ்டையில் தியானம் செய்து வருகிறேன். இன்னும் எனக்குச் சித்தி கிடைக்கவில்லை இன் னும் எத்தனைக் காலம் தியானம் செய்ய வேண் டும்? என்று கேட்டான்.

அப்பொழுது ரமண மகரிஷி அட பைத்தியக் காரா! தியானம் செய்கி றோம் என்பதை மறந்து போகும் வரை செய்ய வேண்டும் என்று கூறி னாராம்.

ஆமாம் ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த ரமண மகரிஷி அப்படி யெல்லாம் தியானம் செய்து கண்ட பலன் என்ன? புற்றுநோய் கண்டு தானே படாதபாடுபட்டு மரணம் அடைந்தாரே

Read more: http://viduthalai.in/e-paper/81846.html#ixzz34C68NGtj

தமிழ் ஓவியா said...


மீண்டும் அம்பேத்கர் குறித்து ஆட்சேபணைக்குரிய படம்: மகாராஷ்டிரத்தில் மீண்டும் வன்முறை


புனே, ஜூன் 9 முக நூலில் அம்பேத்கர் குறித்த ஆட்சேபணைக்குரிய படங்களை சிலர் பரப்பிய தால், மகாராஷ்டிரத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் மராட்டிய மன்னர் சிவாஜி ராவ் மற்றும் சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே ஆகியோரை இழிவுப் படுத்தும் விதமாக முக நூலில் (ஃபேஸ்புக்கில்) சில படங்கள் கசிய விடப் பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அங்கு இந்து ராஷ்ட்ர சேனை அமைப்பினர் மேற் கொண்ட வன்முறைச் சம் பவத்தில் மொசின் ஷேக் என்ற தொழில் நுட்ப வல் லுநர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் முகநூலில் அம் பேத்கர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக சில படங்கள் வெளியிடப்பட் டன. இதனை தொடர்ந்து புனே, சோலாப்பூர், அவு ரங்காபாத் ஆகிய இடங் களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம் பவங்கள் நடந்தன. இதில் அரசு பேருந்துகள் பலத்த சேதமடைந்தன.

முகநூலில் அவதூறாக பதிவேற்றம் செய்யப்பட்ட கணினியில் அய்.பி எண் குறித்த தகவலை தரும்படி, மகாராஷ்டிர காவல்துறை ஆணையம் முகநூல் நிறுவனத்தை தொடர்புக் கொண்டுள்ளது. மகாராஷ் டிராவில் தொடர்ந்து நடைபெறும் வகுப்புவாத வன்முறை குறித்து விசா ரணை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81849.html#ixzz34C6SbZbD

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் நிலை: ஆட்சி மாற்றம் - காட்சி மாறவில்லையே!


தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு என்றுதான் முடிவோ? - என்ற கேள்விக் குறி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

1983ஆம் ஆண்டுக்கு பிறகு இது அனேகமாக அன்றாடப் பிரச்சினையாகி இருக்கிறது; எத்தனைத் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற புள்ளி விவரம்கூட சரியாகக் கிடைக்க முடியாத அளவுக்குச் சிங்கள இனவெறி தலை விரித்துத் தாண்டவம் ஆடி வந்திருக்கிறது - வருகிறது.

ஆட்சி மாறும் - காட்சி மாறும் என்று பேசியவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டுள்ளனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது; அவர் பிரதமராக பதவிப் பொறுப்பு ஏற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக் சேயும் அழைக்கப்பட்டார் - கடும் எதிர்ப்புக்கிடையே; டில்லி வந்த இலங்கை அதிபரிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு வார்த்தையெல்லாம் நடத்தி இருந்திருக்கிறார்.

இது நல்லெண்ண சமிக்ஞை என்றெல்லாம் தூக்கிப் பேசப்பட்டது. ஆனால், நிலைமை என்ன? அவர் டில்லி யிலிருந்து கொழும்பு சென்ற ஈரம் காய்வதற்கு முன்ன தாகவே சிங்களக் கடற்படை தனது கோர முகத்தைக் கோணங்கிதனமாகக் காட்ட ஆரம்பித்து விட்டதே!

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் முதற்கட்டமாக 33 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு கடந்த 7ஆம் தேதி இராமேசுவரத்திலிருந்து 10 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை மீண்டும் சிறைப் பிடித்தனர்; அதே போல புதுக்கோட்டை மாவட்டம் செகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள், இராமநாதபுரத்திலிருந்து சென்ற எட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 82 தமிழக மீனவர் கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 8 விசைப் படகுகள் முடக்கப்பட்டன.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 77 முறை இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கியுள்ளனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்தும், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வழக்கம் போல தமிழக முதல் அமைச்சர் பிரதம ருக்குக் கடிதம் எழுதுவது, இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் என்ற சம்பிரதாய நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படவில்லையா!? 8.12.1999க்கும் 18.10.2003க்கும் இடையே பிஜேபி ஆட்சிக் காலத்தில் எட்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வழி விட்டான், செல்ல பாண்டியன், முனீஸ்வரன், பாபு, முருகன், சரவணன், கோட்டை, நாகநாதன் ஆகியோர் அப்படிப் படுகொலை செய்யப்பட்டவர்களே!

இதில் வேடிக்கை என்னவென்றால் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பது ஒருபுறம் இருக்கட்டும்; குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனரே. அவர்களை அவரால் மீட்க முடிந்ததா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. குஜராத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் இந்த மீன் பிடி காலத்தில் மட்டும் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 படகுகள் முடக்கப்பட் டுள்ளன; இதன்மீது எந்தவித உருப்படியான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லையே!

இன்றைய நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் இருக்கும் மொத்த குஜராத் மீனவர்களின் எண்ணிக்கை 240. இதுவரை குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைச் சாலைகளில் 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். குஜராத் மாநில முதல் அமைச்சராக நரேந்திரமோடி தானே இருந்தார். இந்த வகையில் அவர் சாதித்தது என்ன?

பிஜேபியின் 16ஆம் மக்களவைக்கான தேர்தல் அறிக்கையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து எந்த ஒரு சொல்லாடலும் கிடையாதே!

தமிழ் ஓவியா said...

கேட்டால் வெளிநாட்டுக் கொள்கைகள் - நயந்து தான் போக வேண்டும். பக்குவமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பார்கள். கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தப் பாதையில் பயணித்ததோ, அதே பாதையில்தான் அட்சரம் பிறழா மல் இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் நடைபோட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாகவே எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் அடிப்படையில் எந்தவித வேறுபாடும் கிடையாது; ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று சொல்லி வந்துள்ளதை மோடி தலைமையிலான இன்றைய அரசு நாளும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறது.

மாற்றம் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமேதான் மிச்சம்.

கடிதம் எழுதினால் போதுமா என்று அன்றைய முதல்வர் கலைஞரைப் பார்த்துக் கேள்வி எழுப்பி வந்த அதிமுக பொதுச் செயலாளர் இப்பொ ழுது முதல் அமைச்ச ராக இருக்கும் நிலையில், கடிதம் தான் பிரதமருக்கு எழுதிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்க!

Read more: http://viduthalai.in/page-2/81856.html#ixzz34C72WMbI

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!


பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப் படியான பொருள்களுக்கு அதிபதி யாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. (விடுதலை, 22.6.1973)

Read more: http://viduthalai.in/page-2/81855.html#ixzz34C7a52QE

தமிழ் ஓவியா said...


நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது.

கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக் கூடிய பொருள்கள் உள்ளன.

பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடி யது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும். நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடு வதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும்.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப் படும் ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கி யமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்துக் காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டி ருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவ னாய்ட்ஸ் காணப்படுகிறது. மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கிய மாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAfGym0

தமிழ் ஓவியா said...

டான்சில்ஸ்

டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்பக்கத்தில் உள்ளது. அடினாய்டு என்பது மூக்கின் பின்புறம், தொண்டையின் மேல் அண்ணப் பகுதியில் உள்ளது. காற்று உள்ளே புகுந்து செல்கிற பாதையில் அமைந்திருப்பவை இவை இரண்டும். அதனால் நோய் தொற்று ஏற்படுத்தக் கூடிய கிருமிகள் இவற்றினால் வடிகட்டப்படும். நோயை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும், இந்த டான்சில்ஸ் பகுதியிலேயே சில நேரங்களில் இன்ஃபெக்ஷன் உண்டாகி வீக்கமடையும்.

இந்தப் பிரச்சினை குழந்தைகளை அதிகம் பாதிக்கக் காரணம், பெரியவர்களைப் போல அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது முழுமையடைந்திருக்காததே. சுகாதாரமின்மை யும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ள யாருக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். நீரிழிவு பாதித்த பெரியவர் களுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கிற காரணத்தினால் இது பாதிக்கலாம்.

இதை தடுக்கும் முறைகள் வருமாறு: ஒவ்வொரு முறையும் சாப்பிடும் முன்பும், சாப் பிட்ட பிறகும் தரமான சானிட்டைசர் உபயோகித்து கைகளைக் கழுவும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளச் சொல்லித் தர வேண்டும். மூக்கைத் துடைக்க எப்போதும் சுத்தமான கைக்குட்டை அல்லது டிஷ்யூ உபயோகிக்கப் பழக்க வேண்டும். டான்சில்ஸ் என்பது நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாட்டின் விளைவு என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிற உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAmExbr

தமிழ் ஓவியா said...

இயற்கை தரும் மருத்துவம்

தேன்: சக்தியை கொடுக்கும், இதயத்தை பலப்படுத்தும், இருமலை குணப்படுத்தும், ஹிமோகுளோபினை அதிகப் படுத்தும்.

வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக் கும் தன்மை மிளகுக்கு உண்டு.

சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப் படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.

வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81833.html#ixzz34CAtE6Lk

தமிழ் ஓவியா said...


ஆரோக்கியத்திற்கு 6 உணவுகள்


ஆப்பிள்: அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர். ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள் திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. பாதாம்: வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக அளவில் உள்ளன.

நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம் மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை: தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல கொழுப்பான எச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம் அடையும் பிரச்சினையைச் சரி செய்வ துடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு: நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்: குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப் போகும் பிரச்சினையைத் தவிர்க்கும். ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. இதில் உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளதால் ரத்தசோகை பிரச்சினை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம்.

சோயாபீன்: சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச் சினையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின் என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/81834.html#ixzz34CB2FpAM

தமிழ் ஓவியா said...


மோடி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும்? சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மய்யக் கருத்து


லண்டன், ஜூன் 9--இந்தியத் தேர்தல்களில் கடந்த 30 ஆண்டுகளில் 1984 ஆண்டிற்குப்பிறகு யாரும் பெறாத அளவில் 545 உறுப்பினர்களில் 282 நாடாளுமன்ற உறுப் பினர்களை தனிக்கட்சி பெரும்பான்மையுடன் மக்களவைக்கு பாஜக பெற்றுள்ளது. அதன் கூட்டணியுடன் சேர்ந்து 336 இடங்களைப் பெற் றுள்ளது.

மோடி இதுவரை யாரும் பெற்றிராத அள வில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது முரண் பாடானவராக பார்க்கப் பட்ட அரசியல்வாதி, மோடி வணிக நட்பில் அதிக நாட்டத்துடன் உள்ளதால், வரும் அய்ந்து ஆண்டுகளில் டில்லியில் அதிகாரத்தை தக்க வைத் துக் கொள்வார்.

அவரு டைய நிர்வாகம் என்பது தேனிலவுக்கு ஒப்பாக மகிழ்வாக எண்ணமுடி யாது. அய்க்கியப் பேரர சின் சர்வதேச அமைப் பான ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு அமைப்பு ஜுன் 5 ஆம் நாளில் வெளியிட் டுள்ள சிறப்பு அறிக்கை யில் இவ்வாறு கூறி உள்ளது.

அந்த ஆய்வு அறிக் கையின்படி,

தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சரிபாதி அளவினர் நாட்டில் உள்ள மாநிலக்கட்சி களைச் சார்ந்தவர்கள். மாநில அளவில் ஆட்சி செய்பவர்களும் ஆவார் கள். கொள்கை முடிவு களில் சுயேச்சையாக தீவிரத்தன்மையுடன் முடி வுகளை எப்படி வேண்டு மானாலும் எடுப்பார்கள். 2003-2008 இல் இருந் ததைவிட தற்போது 5 விழுக்காடு அளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.

வாக்காளர்கள் தூய்மை யான அரசு நிர்வாகத்தை யும், அரசின் சேவைகளில் முன்னேற்றத்தையும், நல்ல திட்டங்கள், பணிகள் எப்போதுமே உயர்ந்த அளவில் இருக்கவேண் டும் என்று எதிர்பார்க் கின்றனர்.

மோடியின் அயலுறவுக் கொள்கை சம அளவில் இருக்குமா என் பது அய்யத்துக்கிடமா கவே உள்ளது. சீனாவுடன் சுமுக உறவு, ஆஃப்கானிஸ்தானி லிருந்து நேட்டோ படை திரும்பப் பெறுதல், அருகாமை நாடுகளிடம் வளர்ந்து வரும் பாதுகாப் பின்மை உணர்வு, இவற்றை மேற்கத்திய நாடுகள் விரும்புவது போல் நடுநிலையில் இருந்து செயலாற்றும் பாங்கு இவை அனைத் தையும் பிரதமர் என்கிற முறையில் கவனத்தில் கொள்ள வேண்டி உள் ளது.

மோடியின் தலை மைப் பண்புகுறித்து ஆரா யும்போது, இந்தியாவின் முக்கியமான பங்கு வணிகத்தவருடன் உள்ள உறவை ஒட்டியே கொள் கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலை உள்ளது என்று ஆய் வறிக்கையில் குறிப்பபிடப் பட்டுள்ளது.

மேலும், இராணுவத்துக்கான செலவினக் கொள்கை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றிற்கு தாராள பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகிய வற்றின்மூலம் அமைதி யின்மை ஏற்படும் அபா யம் உள்ளதாக ஆக்ஸ் ஃபோர்டு ஆய்வு எச் சரிக்கிறது. பொருளாதார ஒருங்கிணைப்பை அரசு இடைக்கால இலக்காகக் கொண்டுள்ளது.

வருவாய் தேவை அதிகரிப்பு சவா லாக இருப்பதுடன், நிலச் சீர்திருத்தங்களை எண் ணும்போது முடியாத ஒன்றாகவே இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81847.html#ixzz34CBGsGiV

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!


aarthi anbalagan

Jun 9 (2 days ago)

to me

Hello sir,

Your newspaper ((Viduthalai) containing lot of useful information. Particularly Employment news very useful for me because I am looking for job. But this news fully based on government jobs. most of the people are not interested in government jobs. so, this is my request, try to publish private jobs also sir.
thank you

நமது இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பில்லாத தோழர்கள்கூட ஒவ்வொரு கோணத்தில் விடுதலையின் பலனைத் துய்த்து வருகிறார்கள் - வரவேற்கிறார்கள். எனவே விடுதலை சந்தா சேகரிப்பில் இறங்குங்கள் நல்லாதரவு நிச்சயம் கிட்டும்.

மறவாதீர்! இம்மாத இறுதிக்குள் 12 ஆயிரம் விடுதலை ஆண்டு சந்தாக்கள் நமது இலக்கு என்பதை மறந்து விடாதீர்கள்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/81904.html#ixzz34F9qeXky

தமிழ் ஓவியா said...


பசுமலை - சிறுமலை

திராவிடர் கழகத்தின் சார்பில் களப்பணி முகாம்கள் கழகத் தலைவர் வழிகாட்டுதல்படி நடந்து வருகின்றன. கடந்த மாதம் புதுச்சேரியில் நேர்த்தியாகத் தொடங்கப் பட்டது. கடலூர், சிதம்பரம் மாவட்டக் கழகத் தோழர்களுக்கு வடலூரில் முகாம் நடத்தப்பட்டது.

கடந்த சனியன்று மதுரை பசுமலையிலும், ஞாயிறன்று திண்டுக்கல் சிறுமலையிலும், முறையே மதுரை, புறநகர், விருதுநகர், திண்டுக்கல், பழனி, தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்குக் களப் பணி முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.


கழகப் பொறுப்பாளர்களுக்கு மட்டுமான பட்டறை இது; கழக அமைப்புப் பணிகள், பதிவேடுகள், ஆண்டு ஒன்றுக்கு நடத்தப்பட வேண்டிய கலந்துரையாடல்கள், பிரச்சாரக் கூட்டங்கள், ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், உறுப்பினர் சேர்த்தல், புத்தகச் சந்தை நடத்துதல் மற்றும் தொண்டறப் பணிகள்பற்றி எடுத்துரைக்கப்பட்டன.

பகுத்தறிவுத் தகவல் பலகை, பெரியார் வாசகர் வட்டம் சுவர் எழுத்து, வாயிற் கூட்டங்கள், துண்டறிக்கை விநியோகம் குடும்பக் கலந்துரையாடல் கூட்டங்கள் என்று இலக்குகள் வரையறுக்கப்பட்டு கழகப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. தோழர் களும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கருத்துக்களையும், திட்டங்களையும் கவனமுடன் கேட்டனர். அவர்களின் அய்யப்பாடுகளையும் தெரி வித்தனர். அவற்றிற்கெல்லாம் கழகப் பொறுப்பாளர்கள் உரிய முறையில் விளக்கங்களைஅளித்தனர்.


தமிழ் ஓவியா said...

பிற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சூழலில் சமூகப் புரட்சி இயக்கமான கழகம் எந்தெந்த வகைகளில் எல்லாம் மதச் சார்பற்ற கொள்கைகளையும், சமூக நீதியையும், முன்னெடுத்துச் செல்லுவது என்பதற்கான கருத்துகளும், திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

சமூகநீதியில் இன்றைய கால கட்டத்தில் பெறப் பட்டுள்ள உரிமைகளின் அளவு, பெற வேண்டிய இலக் குகள்பற்றி தக்க புள்ளி விவரங்களுடன் விவாதிக்கப் பட்டன.

மத்திய அரசுத் துறைகளில் 27 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி உரிமை உடையது என்றாலும் இதில் இன்னும் ஏழு சதவீதத்தைக்கூட எட்டவில்லை என்று நினைக்கும் பொழுது, இத்திசையில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு எவ்வளவு என்பதைச் சிந்திக்க வேண்டும்.

திராவிடர் இயக்கத்தின் சித்தாந்தம், கொள்கைக் கோட்பாடுகள், சாதனைகள் புதிய தலைமுறையின ரிடத்தில் சென்றடையவில்லை. இந்த நிலையில் அவர்கள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்லுவது கட்டாயமாகும்.

மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை, முகாமைப்படுத்தி வலுப் பெறச் செய்து, அவர்கள் மூலமே இந்தச் சாதனையை நிகழ்த்த இயலும் என்பதால் இத்திசையில் கழகப் பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த மாத இலக்காக 12,000 விடுதலை சந்தாக்கள் சேர்ப்பதில் கழகத் தோழர்கள் கடமையாற்ற வேண்டும். கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆக வேண்டும். அதே போல ஒவ்வொரு கழகத் தோழரும் இரண்டு விடுதலை சந்தாக்கள் திரட்டுவது என்ற முறையில் பணியாற்றினால் ஒரே வாரத்தில் இந்த பணியை நிறைவேற்றி முடிக்கலாம்.

நாம் எவ்வளவுப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினாலும் நாள்தோறும் வெளிவரும் விடுதலை அதிக எண்ணிக்கையில் பரவினால் தான் நமது கருத் துக்கள் போய்ச் சேர முடியும். களத்தில் பணியாற்றும் கழகத் தோழர்களும் அன்றாடம் கழகத் தலைவரின் கருத்துகள், நிலைப்பாடுகளை உடனுக்குடன் அறிந்து அதற்கேற்றாற்போல பணிகளை ஆற்ற முடியும்; மக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் இலகுவாக ஏதுவாகும்.

ஒரு பக்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை, இன்னொரு பக்கத்தில் களப் பணி முகாம்கள் இரண்டும் இணையும் பொழுதுதான் உரிய பலன்கள் கிடைத்திட முடியும்.

இயக்க இளைஞர்கள் கணினிப் பயிற்சி பெறு வதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது, இன்றைக்கு முகநூல் மூலம் சண்டமாருதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் களத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கைப்பேசி மூலம் குறுஞ் செய்திகளை அனுப்பலாம்; கருத்துக்களைப் பரப்பலாம்.

அஞ்ஞான கருத்துக்களை விஞ்ஞானக் கருவிகள் மூலம் பரப்பிக் கொண்டுள்ள நிலையில், விஞ்ஞான சிந்தனையின் கூர் முனைக் கருத்துக்களைக் கொள்கை யாகக் கொண்ட நாம் தொழில் நுட்ப சாதனங்களைக் கையாள வேண்டாமா?

எனவே, தோழர்களே! எப்பொழுதும் தொடர்போடே இருங்கள் - எதிர் நிலையாளர்களின் செயல்பாடுகளை யும் கணித்து வாருங்கள். நாம் நமது இலட்சிய பயணத் தில் பயணிக்கும் போதே எதிர்வரும் சவால்களுக்கு முகம் கொடுத்து, இளைஞர் பட்டாளத்தின் ஈர்ப்பை நாம் தட்டிச் சென்றாக வேண்டும்.

மற்றொரு முக்கிய கருத்து: இயக்கம் அவ்வப்பொழுது வெளியிட்டுக் கொண்டே இருக்கும் வெளியீடுகளை, நூல்களைப் படிக்கத் தவறாதீர்! வணிக நிறுவனங்களை நடத்தும் தோழர்கள் நமது இயக்க நூல்களையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டலாமே!

சால்வைகளுக்குப் பதில் சந்தாக்கள் - திருமணப் பரிசாக பணம் அளிக்காமல் சந்தாக்களை பதிவு செய்வீர்! முக்கியமான கால கட்டம் இது. முகிழ்த் தெழும் ஒளிக்கற்றையாக ஓங்கி எழுவீர் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/81911.html#ixzz34FALEyYj

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்


பார்ப்பனர்களுக்கு எதிராக திராவிடர் கழகம் பேசுகிறதாம் பேச தடை விதிக்க வேண்டுமாம்

சிவகாசி பார்ப்பனர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை, ஜூன்.10--_ பார்ப்பனர்களுக்கு எதி ராக திராவிடர் கழகம் பேசுவதாகவும் அவ்வாறு பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சிவகாசி வக்கீல் பார்ப் பனர் கார்த்திகேயன் என் பவர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக் குத் தொடுத்துள்ளார்.

செய்தி வருமாறு: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், வழக்குரை ஞர் இவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திராவிடர் கழக தலை வர் வீரமணி பிராமணர் சமூகத்துக்கு எதிராகவும், பிராமணர்களை அவ தூறாகவும் தொடர்ந்து பேசி வருகின்றார். 2012ஆ-ம் ஆண்டு திருவானைக்காவலில் நடந்த பொதுக்கூட்டத் தில் வர்ணாசிரமத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும், வர்ணாசிரமத் துக்கு எதிரான போராட்டம் வன்முறை அல்லாத ஒன்றாக இருக்காது என்றும் கி.வீரமணி பேசி உள்ளார்.

பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது சமூகத்தின் பெயரில் கடை கள், பள்ளிகள் போன்ற வற்றை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பிராமணாள் கபே என்று இருப்பதில் என்ன தவறு உள்ளது?.

அகத்தியர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுப்பிரமணிய பாரதி, ராமானுஜர் போன் றவர்கள் பிராமண சமூ கத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள், ஜாதி வேறுபாடு களை களையவும், சமூக சீர்திருத்தங்களுக் காகவும் பாடுபட்டு உள் ளனர்.

தனிமனித சுதந்திரத்துக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் திராவிடர் கழகம், பிராமணர் சமூகத்தினரை தொடர்ந்து அவ தூறாக பேசி வருவது நியாயமற்றது.

எனவே, கி.வீரமணி, மீது நடவ டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பிராமணர் களுக்கு எதிராகவும், அவதூறாகவும் திராவிடர் கழகம் பேச தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனு வில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகி யோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை நாளை (11-ஆம் தேதி)-க்கு தள்ளி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/81903.html#ixzz34FB5MPj5

தமிழ் ஓவியா said...


அபவ்ருஷம்வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்ப தற்காகவே அது அனாதி என்றும், மனிதனால் சொல்லப்படாத அபவ் ருஷம் என்றும் சொல்லப்படுகிறது.
(விடுதலை, 8.3.1953)

Read more: http://viduthalai.in/page-2/81908.html#ixzz34FBfM65G

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்காக உழைத்த கடம்பினி


1861 ஜூலை 18... பீகாரில் உள்ள பகல்பூரில் பிறந்தார் கடம்பினி. அப்பா பிரஜ கிஷோர் பாசு... பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சீர்திருத்த கொள்கைகளில் அதிக நாட்டம் கொண்ட அவர், அபய் சரண் மாலிக் என்பவருடன் இணைந்து பகல்பூர் மகிள சமிதி என்ற பெண்கள் அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பெண் விடுதலைக்காக உரு வாக்கப்பட்ட முதல் இயக்கம் இதுதான்!

பள்ளிப் படிப்பை முடித்த கடம்பினி, 17 வயதில் கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். இதன் மூலம் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார்.

கடம்பினியின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் பெத்தூன் கல்லூரி யில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த சந்திரமுகி பாசுவும், கடம்பினியும் முதல் பெண் பட்டதாரிகளாக வெளிவந்தனர்!

1883இல் சீர்திருத்தவாதியும் பெண் விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்குலியை மணம் செய்துகொண்டார் கடம்பினி. இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களுக்கு பணி சீர்திருத்தம் கொண்டு வர இருவரும் பாடுபட்டனர்.

8 குழந்தைகளுக்கு தாயானார் கடம்பினி. மருத்துவம் படிக்க விரும்பி, கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் கடம்பினி. பெண்களின் படிப்பு கொண்டாடப்படாத அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது.

1886இல் கடம்பினியும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்திய மருத்துவர் களாக வெளிவந்தனர். மருத்துவராகப் பணியை ஆரம்பித்த கடம்பினிக்கு, உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

1892இல் இங்கிலாந்து சென்றார். 3 துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மருத்துவராகச் சிறிது காலம் வேலை செய்தார். பிறகு சொந்தமாக மருத்துவப் பயிற்சியில் இறங்கினார். கடைசி காலம் வரை, பெண்கள் படிக்கவும் சுயமாகச் சிந்திக்கவும் வழிகாட்டிய கடம்பினி, 1923இல் மறைந்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81925.html#ixzz34FCVHzXG

தமிழ் ஓவியா said...


கணித மேதை ஆன கவிஞர் மகள் அகஸ்டா அடா பைரன்

1815 டிசம்பர் 10... லண்டனில் பிறந்தார் அகஸ்டா அடா பைரன். அவரது அப்பா புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன். அம்மா அன்னபெல்லா மில்பேங்க். அடாவுக்கு 8 வயதானபோது பைரன் இறந்து போனார். அப்பாவும் இல்லை... அம்மாவிடமும் நெருக்கம் இல்லை... அடா பாட்டி வீட்டில் வளர்ந்தார்.

அதனால், அப்பாவைப் பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் அடாவுக்குச் சொல்லப்படவில்லை! 8 வயதில் அடாவுக்குத் தீராத தலைவலியும் பார்வைக் கோளாறும் ஏற்பட்டன. அதில் இருந்து மீண்ட பிறகு, அவருக்குக் கணிதமும் இசையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார் அம்மா. ஆர்வமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அடா படிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டார்.

12 வயதில் கணினியின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார் அடா. சார்லஸுக்கு அடாவின் புத்திசாலித் தனம் மிகவும் பிடித்துப்போனது. பறவையைப் போல மனிதனும் பறக்கும் முயற்சிகளைப் பற்றிப் பேசினார். அந்த விஷயம் அடாவுக்குப் பிடித்துப் போனது. 1828ல், அதன் முதல் படியாக இறக்கைகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

காகிதம், இறக்கைகள், பட்டுத்துணி போன்றவற்றில் பல்வேறு அளவுகளில் இறக்கைகளை உருவாக்கினார். பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆய்வு செய்தார். தான் கண்டறிந்த விஷயங்களை ஃப்ளையாலஜி என்ற பெயரில் ஓவியங்கள் நிறைந்த புத்தகமாக்கினார். இதோடு, பறக்கும் இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்தார் அடா.

20 வயதில் வில்லியம் கிங் என்ற அரசரைத் திருமணம் செய்துகொண்டார் அடா. காலரா, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறு என்று அடாவின் உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கணவர், குழந்தைகளோடு, நோயையும் சமாளித்துக்கொண்டு, தன்னுடைய ஆய்வையும் தொடர்ந்துகொண்டிருந்தார் அடா.

சார்லஸ் பாபேஜ் கணிதச் சமன்பாடுகளுக்கான ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்திருந்தார். அது முழுமை அடைவதற்குள் அனாலிடிக்கல் இன்ஜின் என்ற புதுக் கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அவருடைய புதிய திட்டத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கவில்லை.

அனாலிடிக்கல் இன்ஜின் பற்றிய கட்டுரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பு அடாவுக்குக் கிடைத்தது. பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு அடா மொழி பெயர்த்த அந்தக் கட்டுரையில், அவருடைய கருத்துகளும் சேர்ந்து இடம்பெற்றன. 1843இல் அறிவியல் பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.

பல்வேறு கணித ஆய்வுகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அடா, அனாலிடிக்கல் இன்ஜி னுக்கான அல்கோரிதங்களை எழுதினார்.

அதனால் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என்று போற்றப் படுகிறார் அடா! வாழ்க்கை முழுவதும் நோய்களின் தாக்கத்தில் இருந்தாலும் கணிதவியலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், கவிஞர் மட்டுமல்ல... நடனம், குதிரையேற்றம் போன்ற வற்றிலும் சிறந்து விளங்கினார் அடா. கருப்பை புற்றுநோயால் மிகுந்த வேதனைக்கு உள்ளான அடா, 36 வயதில் இறந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/81930.html#ixzz34FCktBjw

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜூன் 10_தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்யும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது என்பது தொடர் கதையாக நீண்டு கொண்டே போகிறது. ஒரு நாளில் மட்டும் 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட் டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களையும் சிறை பிடித்ததோடு, அவர்களின் மீன் பிடிக்கும் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை அதிபரை தன்னுடைய பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து, இந்தியப் பிரதமர் பெருமைப் படுத்தினார். அவரும் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வந்ததோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிற்கவில்லை. இந்திய சிறையில் இருந்த இலங்கை மீனவர்களை மத்திய அரசும் விடுதலை செய்தது.

மேலும் இலங்கைக் கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டி யடிப்பது, மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக் கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெய லலிதா கடந்த காலத்தில் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை சிறை பிடித்ததும் கடிதம் எழுது வதைப் போல அல்லாமல், இந்த முறை சற்று மாறு தலாக எழுதியிருக்கிறார்.

கடந்த முறை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது, பிரதமருக்கு இவர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து பிரதமர் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டதால், அனைத்து மீனவர்களும் இலங்கையில் நீண்ட நாட் களுக்கு சிறை வைக்கப்படாமல், உடனடியாக விடுவிக் கப்பட்டதற்காக முதலில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவருடைய வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டு எழுதியிருக்கிறார்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்கெனவே 2 முறை 2 நாட்டு மீனவர் பிரதி நிதிகள் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியும் எந்த முடிவும் காணப்படவில்லை. மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகாவது, மீனவர்கள் கைது படலம் நிற்குமென்று எதிர்பார்த்ததற்கு மாறாக, நீடித்துக் கொண்டே போகிறது.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களின் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக முன் வர வேண்டும்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81909.html#ixzz34FD1vDrN

தமிழ் ஓவியா said...

முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!


- சிகரம்

முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.

சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!

100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!

ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?

இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?

படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.

40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.

மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?

பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!

நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!

பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.

தன் எதிர்காலத் திட்டத்திற்கு - இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.

முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?

அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?

கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.

ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.

விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.

98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?

98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?

தமிழ் ஓவியா said...

கால்நடைகள் குடைக்கு மிரளுவது ஏன்?


மாடுகள், விரிந்த குடையைக் கண்டால் மிரளும். இதுபோல வேறுசில பிராணிகளும் பயம் கொள்ளும். இது ஏன் தெரியுமா?

ஏராளமான மிருகங்களுக்கு நிறத்தை அறிய முடியாது. ஒருசில பிராணிகள், சில வண்ணங்களை மட்டுமே அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவை. உதாரணமாக தேனீக்களுக்கு சிவப்பு வண்ணம் மட்டுமே தெரியும். ஆனால் அதுவும் சிவப்பாகத் தெரியாது,

கருப்பும் பழுப்பும் கலந்த நிறமாகத் தோன்றுமாம். இதுபோலவே கால்நடைகளுக்கு நிறம் அறியும் திறன் இல்லை. இருந்தாலும், குடையைக் கண்டவுடன் கால்நடைகள் மிரள்கிறது என்றால் சட்டென்று விரியும் குடை இயக்கத்தைப் பார்த்துதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழ் ஓவியா said...

அன்பு மடல்


செவ்வாய்க்குப் போன இந்திய ராக்கெட்


மங்கள்யான் விண்கலம்

பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,

என்ன நலமா? நீங்கள்தான் எவ்வளவு வாய்ப்புப் பெற்றவர்கள்! அவ்வளவு வசதிகளும், கண்டுபிடிப்புகளும், உங்களது அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் உதவிட எத்தனை எத்தனை புதுமையான நவீன அறிவியல் கருவிகள் விஞ்ஞான தொழில்நுட்பப் பெருவளர்ச்சிக் காலமான இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது; கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

முன்னொரு காலத்தில் தொலைப்பேசி என்றால் என்னவென்று தெரியுமா?

வீடியோ காட்சிகள் என்றால் விளங்குமா?

மாயாஜால வித்தைகளையும், கதைகளையும் தானே எங்கள் பாட்டி, தாத்தாமார்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...

ஆனால், இப்போ... அப்படியா?

நீங்கதானே எங்களுக்கு எப்படியெல்லாம் கைத்தொலைப்பேசிகளை (செல்போன்களை) அழுத்தி, எதை எதைப் பேசுவது என்று கற்றுத் தருகிறீர்கள்!

இப்போதெல்லாம் தாத்தாக்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது போக, பேரக் குழந்தைகள் அல்லவா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள், தொழில்நுட்பம் அடங்கிய பல செய்திகளை!

எனவே, இக்காலமும், இனி வரக்கூடிய காலமும் குமர-குருபரர்கள் ஆன உங்களது பொற்காலங்கள்தான்!

நம் தங்கத் தாத்தா பெரியார் தாத்தா அவர்கள்,

இனிவரும் உலகம் என்ற ஒரு பேச்சு (அது புத்தகமாகவும் வந்துள்ளதே) அதில் இப்போது வந்துள்ள கைத்தொலைப்பேசி காணொளிக் காட்சிகள் (வீடியோ கான்பரன்சிங் - video Conferencing) பற்றியெல்லாம் சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லிவிட்டார்களே!

என்ன ஆச்சரியம்!

இப்போது நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாள்; நல்ல நேரம்; என்றெல்லாம் பார்த்து (புரட்டர்கள் பிழைக்க இது ஒரு வழி) நமது நேரத்தில் முக்கியமான பகுதியை வீணடிக்கிறார்கள்!

உழைக்கும் மக்களுக்கு எந்த மணித்துளியும் முக்கியமல்லவா? நேரத்தை - காலத்தை வீணடிக்கலாமா?


செவ்வாய் கிரகம்

செவ்வாய் என்றால் வெறும் வாய் அந்த நாளில் எந்தப் பணியைச் செய்தாலும் விளங்காது; வெற்றி பெறாது என்று சொல்லி நம்மை ஏமாற்றினார்கள், காலங்காலமாய்!

இப்போது அது வெறும் டூப்பு என்பது புரிந்துவிடவில்லையா குழந்தைகளே!

செவ்வாய்க்கோள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளதே! அதற்கே ஒரு விண்கலத்தை _- ராக்கெட்டை _- நமது விஞ்ஞானிகள் ஆயிரம் பேர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகரமாக செலுத்திவிட்டார்களே!

அமெரிக்காகூட நமக்குப் பின்னால் நாசாவிலிருந்து தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது!

இதுவரை 2 லட்சம் மைல்கள் பயணம் செய்து போய்க்கொண்டே இருக்கிறது. (இதை எழுதும்வரை) அடுத்த டிசம்பர் ஒன்றாம் தேதி அங்கே போய்ச் சேருமாம்!

என்னே அற்புதச் சாதனை!

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம்பற்றி சுவையான தகவல்கள் இதோ!


மார்ஸ் ஓபிடெர் மிஷன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான் விண்கலம் 450 கோடி இந்திய ரூபா செலவில் மார்ஸ் ஓபிடெர் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும். மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்தக் காலத்திலும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, யாரோ சாமியார் கூறியதாகக் கூறி, தங்கவேட்டைப் புதையலை _- உத்தரப்பிரதேசம் உன்னா (Unno) என்ற இடத்தில் செய்து உலக அளவில் அவமானப்பட்டதுதான் மிச்சம்!

உலகமே நமது மத்திய அரசினைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது.

ஆனால், மங்கள்யானைச் செலுத்தியுள்ளதன் மூலம் அறிவியலின் வெற்றியை _ அறிவியலின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அன்புடன்,
உங்கள் தாத்தா
கி. வீரமணி

தமிழ் ஓவியா said...

டென்னிஸ் (Tennis)

அணிக்கு ஒருவர் என்று இருவரோ, அணிக்கு இருவர் என 4 பேரோ டென்னிஸ் விளையாட்டினை விளையாடுவர். இது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என்றழைக்கப்படுகிறது. சல்லடை மட்டையால் (ராக்கெட்) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி அரங்கத்திற்குள் விழுமாறு பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டே டென்னிஸ்.

முதலில், கைகளால் பந்தினைத் தட்டி விளையாடியுள்ளனர். டென்னிஸ் மட்டையினைப் பிரான்ஸ் நாட்டினர் அறிமுகப்படுத்தினர். டென்னிஸ் என்பது பிரான்ஸ் சொல்லாகும்.

உலகில் மிக அதிக ரசிகர்களையும், வீரர்களையும் கொண்ட விளையாட்டுகளுள் டென்னிசும் ஒன்றாகும். இதன் விதிமுறைகள் 1875ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டன.

ஆடுகளம்

புல்வெளி, களிமண், செம்மண், கற்காரை(கான்கிரீட்), செயற்கைப் புல், மரப்பலகை என்ற இவற்றுள் ஒன்றால் தளம் அமைக்கப்பட்டிருக்கும். ஆடுகளத்தின் நீளம் 36 அடி (10.97 மீட்டர்), அகலம் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடி (23.77 மீட்டர்), ஒற்றையர் ஆட்டத்திற்குப் போடப்பட்ட கோட்டின் இருபுறமும் 14 மீட்டர் (4.5அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்குக் கோடு போடப்படும். ஆடுகளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீட்டர் (3அடி) உயரத்தில் நடுவலை அமைந்திருக்கும்.

பந்து

மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும் பந்தின் உட்புறம் காலியாக இருக்கும் ரப்பர் பந்து பயன்படுத்தப்படுகிறது. பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் கொண்டதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளைக்கோடு போட்ட பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சல்லடை மட்டை


ரோஜர் பெடரர்

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை மட்டைகளுக்கு இல்லை. எனினும், போட்டிகளில் 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும் 31.8செ.மீ (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் உள்ள மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டையின் தலைப்பகுதி (வலைப் பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும் 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் எடைக்கு வரையறை இல்லை.

சிறப்புப் போட்டிகள்


சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆகியன சிறப்புப் போட்டிகளாகும். 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் என்னும் இடத்தில் முதன்முதலில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ட்லைட் எப் டேவிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் நமது சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.

தமிழ் ஓவியா said...

விலங்குகளும் விசித்திர உறக்கமும்!


மனிதன், தண்டுவடம் தரையில் படும்படி (அல்லது மெத்தையில் படும்படி) வைத்து மல்லாந்த நிலையில் தூங்குகிறான். சிலர் குப்புறக் கவிழ்ந்தும், சிலர் ஒரு பக்கம் சாய்ந்தும் உறங்குவார்கள்.

நம்மைப்போலவே பிராணிகள் ஒவ்வொன்றும் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. நாய், பூனை, மாடுகள் தூங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், நாம் கண்டு ரசிக்க முடியாத வினோதம் கொண்ட பிராணிகள் பல உள்ளன. அவைபற்றி இங்கே...

பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும், ஆனால், உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.

மான்கள் நின்று கொண்டும், படுத்த நிலையிலும் உறங்கும். சில வகை மான்கள், தூங்கும்போது சுவாசத்தின் மூலமே எதிரிகள் நெருங்குவதை அறிந்து கொள்ளும்.

வாத்து தரையில் நின்று கொண்டும், நீரில் நீந்திக் கொண்டும் உறங்கும் ஆற்றல் பெற்றது.

யானைகளும் குதிரைகளும் நின்று கொண்டேதான் உறங்கும்.

இவை எல்லாவற்றையும்விட விசித்திர தூங்கும் பழக்கம் கொண்டன எறும்புகள். மண்ணில் அழகான மணல் மெத்தைகளை உருவாக்கி, மல்லாந்த நிலையில் உடலோடு கால்களை ஒட்டி வைத்து ஒய்யாரமாய் உறங்கும். சுறுசுறுப்பான எறும்புகள் சுமார் 3 மணி நேரம் ஓய்வெடுக்கும்.

- தகவல்: இ.ப.இனநலம், 9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்

தமிழ் ஓவியா said...

“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்...?


“நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?

“சூதாடிய குற்றத்துக்காகவா?

கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்கா கவா?

கொள்ளைக் குற்றத்துக்காகவா?

கொலைக் குற்றத்துக்காகவா?

மோசடிக் குற்றத்துக்காகவா?

பல வந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?

பதுக்கல் – கலப்படம் குற்றத்துக்காகவா?

சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?

என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்!

மறியல் செய்தேன்!

சிறை சென்றேன்!

சர்க்கார் கண் விழிக்கவில்ல.

ஆகவே,

சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது

இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா,

என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா ?

எந்தப்பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால்,

இதை நான் மகிழ்ச் சியுடன் வரவேற்க வேண்டாமா?

‘சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ்செய்தான்’

என்பதைவிடப் பெரும்பேறு, முக்கியக் கடமை,

வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும்

உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

– பெரியார், (விடுதலை 09-11-1957)