Search This Blog

12.6.14

கொள்கை இல்லாதவர்களுக்கு வெற்றி-பெரியார்

( 1934 ஆண்டு பெரியார் எழுதிய இக்கட்டுரை 2014 ஆம் ஆண்டிலும் ஒருசிலவற்றைத் தவிர அப்படியே பொருந்துகிறது என்பதால் இங்கு பதிவு செய்கிறோம்.படியுங்கள்!தெளிவடையுங்கள்!!------தமிழ் ஓவியா)

இந்திய சட்டசபைத் தேர்தல் இந்தியா முழுவதிலும் அனேகமாக நடந்தாகிவிட்டது.

இவற்றுள் சென்னையே பார்ப்பனர்களுக்குப் பெருமித வெற்றி அளித்து எங்கு பார்த்தாலும் பார்ப்பன வெற்றிக் கொண்டாட்டத் திருநாள்கள் நடைபெறச் செய்திருக்கிறது. இத்திருநாள்களைப் புராணத்திருநாள்கள் அதாவது நரகாசூரன் தோற்ற நாள் (அல்லது) நரகாசூரனைக் கொன்ற நாள் என்று தீபாவளி கொண்டாடுவது போல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோற்ற நாள் (அல்லது) ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைத்த நாள் என்று இப் போது ஊர் ஊராய்க் கொண்டாடப் புறப்பட்டுவிட்டார்கள் நம் பார்ப்பனர்கள்,

இத்திருநாள் இனி வருஷா வருஷம் (காந்தி ஜயந்தி முதலியவை போல்) கொண்டாடப்படலாம். இதில் பார்ப்பனரல்லாதாரும் பெருமிதமாய் கலந்து கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்து புதுவேஷ்டி அணிந்து பலகாரம் செய்து சாப்பிடலாம் என்றாலும்,

இத்திருநாள் கொண்டாட்டத்தின் பயனாய் ஏற்பட்ட லாபம் என்ன என்று பார்ப்போமானால் தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜ அய்யங்கார் இன்னும் ஏதோ இரண்டொரு சாஸ்திரியார்கள், ராவுஜீக்கள் ஆகியவர்கள் சேர்ந்து ஊர்ஊராய்ச் செல்வதும், இவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் இவர்களைக் காப்பாற்ற ஆங்காங்கு சில ரெட்டியார், முதலியார், கவுண்டர், செட்டியார், பிள்ளை, சாயபு ஆகிய கூட்டத்தைச் சேர்ந்த ஆசாமிகள் ராமர் பின்னால் அனுமார்கள் (குரங்குகள்) சென்றன என்பது போல் பயபக்தியுடன் சென்று காவல் காப்பதும்,

இந்த அய்யர், ஆச்சாரியார், அய்யங்கார், சாஸ்திரி, ராவுஜி ஆகிய கூட்டங்கள் மேடை களிலும், பத்திரிகைகளிலும் கொடுங்கோலரக்கன் சண் முகம் இமயமலை போல் வீழ்ந்தான், கொடிய இராட்சதன், பொப்பிலி ஒழிந்தான், அடிமைக் குலாம் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி வெட்டிப் புதைக்கப்பட்டுவிட்டது வெற்றி கொண்டாட்டம் கொண்டாடுவோம் வாருங்கள் வாருங்கள் என்று கூவுவதற்கு தைரியம் ஏற்பட்டு விட்டதேயாகும்.

நமது மாகாணத்தில் எங்கெங்கு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இல்லையோ அங்கும், எங்கு பார்ப்பன ஆதிக்கம் அதிகமோ அங்கும், எங்கு முழு மூடர்களும், துரோகிகளும் மலிந்திருக்கிறார்களோ அங்கும், பார்ப்பனர்களையே தேர்தல்களுக்கு நிறுத்து வதும், எங்கு பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இருக்கின்ற தோ அங்கெல்லாம் முதல்தர சோணகிரிகளாகவும், பிறவி அடிமைகள் என்று மதிக்கக் கூடியவர்களாகவும், தங்கள் சுயநலத்துக்கு எதையும் விற்கக் கூடியவர்களாகவும் பார்த்து பார்ப்பனரல்லாதார்களை நிறுத்துவதும்,

அவர் களை வெற்றி பெறச் செய்வதும், பிறகு அவர்களைப் பின்னால் இழுத்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி வெட்டி புதைக்கப்பட்டது குலாம்கள் ஒழிந்தார்கள் என்று கூப் பாடு போடுவதும் ஆகிய காரியம்தான் இன்றைய காங்கிரஸ் வெற்றியாய் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லலாம்.

பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச் சியும், பகுத்தறிவும் இல்லை யென்றால், பார்ப்பனர்கள் இவ்வித வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதிலும் பார்ப்பனரல்லாதார் கட்சியை வெட்டிப் புதைத்து விட்டோம் என்று அவர்கள் பறை அடிப்பதிலும் யாதொரு குற்றமும் இல்லை.

மடையர்கள் சுமக்க வேண்டியதும், தந்திரக்காரர்கள் ஏறிச் சவாரிச் செய்ய வேண்டியதும் இயற்கையேயாகும். அந்த இயற்கை தத்துவத்தின்படிதான் இன்று இந்த நாட்டில் 100-க்கு 97 மக்களாய் இருக்கக் கூடிய ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், முதலாளிமார்கள், பண்டிதர்கள், சகல காரியத்துக்கும் பாடுபடும் பாட்டாளி மக்கள் ஆகிய கூட்டத்தார்கள் தீண்டக் கூடாதாராய், பறையராய், சக்கிலியராய், சூத்திரராய், கீழ் ஜாதியராய், பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாய், அடிமைகளாய்,

பார்ப்பனர்கள் காலைக்கழுவிக் குடிப்பவர்களாய் தாசிகளாய் தாசி மக்களாய் இருந்து வருவதும் 100-க்கு மூன்றே பேராய் இருந்து வரும் மக்கள் பிச்சை எடுத்து வாழும் மக்கள், உலகிலுள்ள சகல இழிதொழிலுக்கும் வாங்கும் மக்களா யிருந்தாலும் அவர்கள் இன்று பூதேவர்களாயும், பிராமணர் களாயும், ஆச்சாரிமார்களாயும், சுவாமிகளாயும், அய்யர் களாயும், மண்வெட்டியும் கோடாலியும் கையில் தொடுவது தோஷம் என்று சொல்லிக் கொண்டு ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழுகாமலும், ஒரு கடுகளவு கவலையோ விசாரமோ கைமுதலோ இல்லாமல் வாழ்வு நடத்தக் கூடியவர்களாயுமிருந்து ஆதிக்கங்கள் செலுத்தப் பட்டு வருகின்றன.

இதே இயற்கைத் தத்துவம் தான், இந்தியாவில் உள்ள 35கோடி மக்களையும், இவ்வளவு விஸ்தீரணமுள்ள நாட்டையும் ஆயிரத்துக்கு ஒன்று வீதமுள்ள எண்ணிக்கை கூட இல்லாத அளவு வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு சர்க்கஸ்காரன் மிருகங்களை நடத்து வது போல் நடத்தி ஆட்சி புரிந்து வர முடிகின்றது.

மற்றும் இந்த இயற்கை தத்துவம்தான் உழைக்கின்ற மக்கள் வயிற்றுக்கும், வயித்தியத்துக்கும்கூட போறாமல் பட்டினியினாலும், நோயினாலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு கஷ்டப்படுவதும், பாடுபடாத சோம்பேறிகள் அப்பாட்டின் பலனையெல்லாம் தாங்களே அனுபவிப்பதும், மீதியை தாறுமாறாய் பாழ்படுத்தி வருவதுமான கேடுகள் நடந்து வருகின்றன.

இந்த இயற்கைத் தத்துவம்தான், இன்றும் 20ஆம் நூற்றாண்டு மக்களைக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்கு கொண்டு போக முனைந்து நிற்கிறவரும், முதலாளிமார் களுடையவும், சோம்பேறி வாழ்க்கைக்காரர்களுடையவும், அடிமையுமான காந்தியாரை மகாத்துமாவாக்கியதுமாகும்.

இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் உள்ள பார்ப்பனர் கள் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தைக் குலைத்து அவர்களது ஸ்தாபனத்தை வெட்டிப் புதைத்து விட் டோம் என்று சொல்லுவதில் இயற்கைக்கு விரோதமோ, அதிசயமோ ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.

பார்ப்பனருக்கு ஆட்கள் கிடைக்கின்றன பணங்கள் கிடைக்கின்றன. ஏனென்றால் பார்ப்பனரல்லாத மடையர் களே ஏழைகளை வருத்தி சித்திரவதை செய்து கொள்ளை கொண்ட பணத்தை மானம், வெட்கம், அறிவு சிறிதும் இல்லாமல் மோட்சத்தின் பேரால், புண்ணியத்தின் பேரால், தேசத்தின் பேரால்,

தேசாபிமானத்தின் பேரால், கதரின் பேரால், தீண்டாமை விலக்கின் பேரால் கொட்டிக் கொட்டிக் கொடுத்துப் பார்ப்பனர்கள் பையை நிரப்பினால், பின்பு அவர்களுக்கு வேலை செய்ய - உழைக்க - மானத்தையும் மரியாதையையும் விற்க, சமுகத்துரோகத்தைச் செய்ய ஏன் ஆட்கள் கிடைக்காது என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

வெறிகொண்ட மிருகங்கள் நீக்குப் போக்கு இல்லாமல் குலைப்பதுபோலும், கடிப்பது போலும் தோழர்கள் சண்முகம், வரதராஜுலு, ஏ. ராமசாமி ஆகியவர்கள் மீது பாய்ந்து அவர்களை ஒரு கூட்டம் வைகின்றது. இந்த வசவுகளையே பார்ப்பனர்களிடம் கூலி பெற்றுக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களே கூட சிலர் வைகிறார்கள், எழுதுகிறார்கள் என்றால் பார்ப்பனரல்லாத சமுகம் ஏன் அழியாது? அல்லது ஏன் இன்னமும் இழிவான நிலைக்குப் போகாது? அல்லது பார்ப்பனரல்லாதார் சூத்திரர் என்றும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றும் எழுதிவைத்த சாஸ்திரங்களை மாற்றி இன்றைய தினம் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும்,

அவனது பெண்டு பிள்ளைகளைக் கொண்டு வந்து பார்ப்பனருக்குத் தங்கள் செலவில் விட்டுப்போகவில்லையானால் அவன் நரகத்துக்குப் போவதோடு பெரியதொரு தேசத்துரோகியாகவும், சர்க்கார் குலாமாகவும் மதிக்கப்படுபவன் என்று கூட ஏன் எழுதி வைக்கமாட்டார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். பார்ப்பனர்கள் முன்காலத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கும், இப்போது நடந்து கொள்கின்ற மாதிரிக்கும் கடுகளவாவது மானம், வெட்கம் இருந்தால் அவர்கள் பின் வைப்பாட்டி மக்கள் போல் திரிய யாருக்காவது எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது மனம் வருமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதவர்க்கு இனியாவது மானம் ரோஷம் வந்து தங்கள் சமுக நலனுக்குழைக்க வேண்டும் என்று தான் நாம் இந்தப்படி எழுதுகின்றோமேயொழிய துவேஷத் துக்காக அல்ல.

பார்ப்பனரல்லாதார் அல்லது தோழர்கள் சண்முகம், வரதராஜுலு, ஏ. ராமசாமி முதலியார் ஆகியவர்கள் தேசத்துக்கு, அல்லது தனிப்பட்ட நபருக்குச் செய்த மோசம், துரோகம் அல்லது இழிவான காரியம் என்ன என்று எந்தப் பார்ப்பனரல்லாதாராவது சொல்ல முன் வரட்டும்.

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுடைய யோக்கி யதையை விட தோழர்கள் ராஜன், ராஜகோபாலாச்சாரி ஆகியவர்களுடைய யோக்கியதையைவிட, சண்முகம், வரதராஜுலு, ராமசாமி முதலியார் ஆகியவர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

தோழர்கள் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலாச்சாரி யாரும் என்றைக்காவது தங்கள் ஜாதி அபிமானத்தை விட்டுக்கொடுத்து நடந்திருக்கிறார்களா?

தோழர் சத்தியமூர்த்தியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் உடலில் பார்ப்பனரல்லாதார் ரத்தமோ அல்லது நாணயம் ஒழுக்கம் என்கின்ற தத்துவமோ கடுகளவு இருக்கின்றது என்று சொல்லிக்கொள்ள அருகதை உடையவர்களாயிருந்தால் தோழர்கள் சண்முகம், வரதராஜுலு, ராமசாமி முதலியார் இவர்களைவிட தோழர் சத்தியமூர்த்தி எந்தவிதத்தில் யோக்கியர் என்பதை மெய்ப்பிக்கட்டும் என்று கேட்கின் றோம்.

எதற்கும் ஒரு அளவு உண்டு, அளவுக்கு மீறுவது என்றால் அதை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டிய நிலை என்றுதான் சொல்வதோடு வைவதும், காலித்தனம் செய்வதும், பார்ப்பனர்க்கும் காங்கிரசின் பெயரால் பிழைக்கின்றவர்களும் தான் ஏகபோக உரிமை என்பதை, எப்படியாவது ஒழித்தாக வேண்டிய நிலை என்றுதான் சொல்லுவோம்.

காங்கிரசுக்கும், கதருக்கும் சம்பந்தமில்லையென்று கதரின் பெயரால் வசூலித்த பணம், தேர்தல்களுக்குச் செலவு செய்யப்பட்டதை யாரும் அறியார்களா? கதரின் பெயரால் மாதம் 100, 200 பணம் வாங்கிபிழைக்கும் ஆட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கவில் லையா? தீண்டாமைவிலக்கின் பேரால் வசூலித்த பணத் தில் ம்தம் 40, 50, 100 சம்பளமாகவும் வேறு எடுபிடிச் செலவுக்காகவும் என்று வாங்கி பிழைக்கும் ஆட்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லையா? இதெல்லாம் நாணயமான, யோக்கியமான காரியமா என்று கேட்கின்றோம்.

இந்திய சட்டசபையில் கோவில் பிரவேச மசோதா கொண்டுவரச் செய்து ஜனங்களைத் தீண்டாமை விலக்கின் பேரால் ஏமாற்றி பார்ப்பனரல்லதாரிடம் ஏராளமாய் பணம் வசூல் செய்து கொண்டபிறகு அந்த மசோதாவை வாபீஸ் பெறும்படி செய்துவிட்டு இந்திய சட்டசபைத் தேர்தல்களின்போது இனிமேல் அந்த மாதிரியான மசோதா கொண்டுவருவதில்லை யென்றும் வேறு யாராவதும் கொண்டுவருவதாய் இருந்தாலும் ஓட்டு கொடுப்பதில்லை என்றும் சொல்லி பார்ப்பனர்களுக்கு வாக்குக் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுவிட்டு மானமில்லாமல் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதென்றால் இதற்கு எதைச் சமானமாக சொல்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

வெற்றிக் கொண்டாட்டம் என்று சொல்வதெல்லாம் காங்கிரசின் நாணயக் குறைவும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் ஜெயித்துவிட்டது என்று சொல்வதை விட வேறு என்ன என்று கேட்கின்றோம்.

தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதை நமக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு அவரைத் தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றவர்கள் இந்தக் கும்மாளம் போடுகின்றார்களா? அல்லது தெரியும் என்று நினைத்துக் கொண்டே பசி வெட்கம் அறியாது என்பது போல் கூலிக்காசைப்பட்டு இம்மாதிரி அவர்களைப் புகழ்கின்றார்களா என்றும் கேட்கின்றோம்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் இதுவரை நடந்து வந்ததும் அவரது உள் எண்ணமும் இந்தியா பூரா வும் உள்ள அறிஞர்கள் அவரைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும் நமக்குத் தெரியாது என்று இவர்கள் கருது கின்றார்களா என்று கேட்கின்றோம். தோழர் ராஜன் அவர் களின் யோக்கியதைதான் என்ன? இவர்கள் எல்லோரும் வருணாசிரம ராஜாபகதூரை விட எந்த விதத்தில் மேலான வர்கள் என்று பார்ப்பனக் கூலிகளையே கேட்கின்றோம்.

குருகுலப் போராட்டம் வந்த காலத்தில் தோழர் வரதரா ஜுலு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த துடன் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிய சீர்திருத்தக்காரர்கள் தான் என்பதை உலகம் அறியாது என்று கருதிக்கொண்டிருக் கிறார்களா என்று கேட்பதோடு, இந்தச் சீர்திருத்தவாதிகள் இரவும் பகலும் புராணப் பிரசங்கம் செய்துகொண்டு எப்படி எப்படி பார்ப்பனரல்லாதார் குடியைக் கெடுப்பது என்று பிளான் போட்டுக் கொண்டு இருக்கிறதேயல்லாமல் இவர்கள் தேசத்துக்கும் சமுகத்துக்கும் நாளது வரை செய்த ஒரு காரியமோ, பயனோ இன்னது என்று எடுத்துக் காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.

தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார்தான் ஆகட் டும் எதைச் சாதித்தவராய் இருப்பார்? அல்லது சண்மு கத்துக்கு மேலாக இவர் எத்தனை தடவை ஜெயிலுக்குப் போயிருப்பார்? கைப்பிசகாய் இவருடைய பெயர் ஓட்டர் லிடில் பதிக்கப்பட்டுவிட்டது என்பதைத் தவிர இவர் உண் மையிலேயே அந்தத் தொகுதி ஓட்டருக்கு லாயக்குள்ள வரா? என்றும் கேட்கின்றோம்.

செத்துப்போனவர்கள் எத்தனைப் பேர் எழுந்து வந்து தோழர் சாமி வெங்கிடாசலபதிக்கு ஓட்டு போட்டுவிட்டு போனார்கள் என்பதைக் கவனிக்கப்போனால் எலக்ஷன் நிலைக்குமா? என்று கேட்கின்றோம்.

மற்றும் சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கட்சியை தொங்கிக் கொண்டிருந்ததும் அபேட்சகராய் தெரிந்தெடுக்கப்படும் வரையில் காங்கிரசையே வைத்து கொண்டிருந்ததும் யாருக்கும் தெரியாதா என்று கேட்கின்றோம். இவை எப்படியோ போகட்டுமென்றாலும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அவர்களுக்கு உழைத்த வீரர்களுக்கும் வெற்றியின் பேரால் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் வீரர்களுக்கும் என்ன கொள்கையிருக்கிறது?

சட்டசபையில் போய் இவர் கள் செய்யப்போகும் காரியம்தான் என்ன? என்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம், ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொள்கை யில்லை என்று சொல்லும் இவர்களை (காங்கிரசுக்காரர் களை) உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்லக் கூடும்?

எலெக்ஷனில் யாதொரு கொள்கை யையும் சொல்லாமல் காந்தியாருக்கு ஓட்டு போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதும், காந்திக்கும் காங்கிரசுக்கும் எதற்காக ஓட்டுப் போடுவது என்று கேட்டால், ஜெயிலுக்குப் போனதற்கா கவும், அடிபட்டதற்காகவும் ஓட்டுப் போடுங்கள் என்று சொல் வதும், ஜெயிலுக்குப் போனதினாலும், அடிபட்டதி னாலும் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்டால், ஜெயி லுக்குப் போனதும் அடிபட்டதும் முட்டாள்தனம் என்று கண்டுபிடிக் கப்பட்டு இப்போது சட்டசபைக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோமே அதுதான் என்று சொன்னதும் அல்லாமல் - வேறு என்ன கொள்கை யென்று இப்போதும் கேட்கின்றோம்.

வெள்ளை அறிக்கையை நிராகரிக்கப் போகின்றோம் என்று சொன்ன சிலர்களை வெள்ளை அறிக்கையை நிராகரிக்க முயற்சித்து தீர்மானம் தோல்வி அடைந்த பின்போ அல்லது வெற்றிபெற்ற பின்போ அப்புறம் என்ன செய்யப்போகின்றீர்கள் என்றும் நீங்கள் செய்த தீர்மானத் திற்கு எவ்வளவு யோக்கியதை உண்டு என்றும் கேட்ட கேள்விக்கு நாளது வரை என்ன பதில் சொல்லப்பட்டது என்று கேட்கின்றோம்.

யாதொரு கொள்கையும் இல்லாமல் மக்களின் முட்டாள் தனத்தையே முதலாக வைத்து செய்த ஏமாற்று வியாபாரத் தில் வெற்றி பெற்றுவிட்டதால் அதற்கு ஆக இம்மாதிரி குடிகாரன் வெறிகாரன் போல் எல்லோரையும் வாயில் வந்தபடி கீழ்மக்கள் போல் வைது கொண்டுதான் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதா என்று கேட்கின்றோம். இது எதை நிரூபிக்கின்றது என்றால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியிலிருந்து இந்திய மக்களை விடுவிக்க வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான காரியம் என்பதையும் பாமர மக்களுக்குத் தனித் தொகுதியே அவசியமான தென்பதையும் நிரூபிக்கின்றது என்று தான் சொல்லு வோம்.

தகப்பன் வீட்டுப் பெருமையைத் தமையனிடம் சொல் லும் தங்கச்சி போல் பஞ்சத்துக்காக வந்து காங்கிரசிற்குள் புகுந்து கொண்ட இந்த பச்சகானா கூட்டம் தோழர் வரத ராஜுலு நாயுடுவுக்கும், சர். சண்முகத்துக்கும் காங்கிரஸ் பெருமையைப் பற்றி போதிப்பதென்றால் அதில் எவ்வளவு ஞானம் இருக்கின்றது என்றுதான் கேட்கின்றோம்.

ஏறக்குறைய இந்த 15 வருஷ அனுபோகத்தில் யார் யார் காங்கிரசை விட்டு வெளியில் போனால் தாங்கள் சொந்தத் தில் வாழ முடியுமோ பிழைக்க முடியுமோ அவர்கள் எல்லோ ருமே சற்றேறக்குறைய காங்கிரசைவிட்டு வெளியேறித் தான் இருக்கிறார்கள். மற்றும் சிலரும் வெளியேறிப் பார்த்து அங்கும் வாழ்வுக்கு வழியில்லாமல் போனதினாலேயே திரும்பவும் போய் புகுந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின் றோம். ஜீவனத்துக்கு வேறு எந்த வழியும் இல்லாத ஆட்கள் பலர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துக்கொண்டு சமாதானத் துக்குப் பங்கம் ஏற்படும்படியாகவும், காதில் கேட்பதற்கே அசிங்கமாயிருக்கும்படியாகவும் பலர் கத்துவது நம் காதுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான ஆட்கள் சிலரைப் பிடித்து அவரது ஜீவிதம் எப்படி நடக்கின்றது என்று விசாரித்தால் நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் வாங்க வேண்டியதைத் தவிர வேறு ஒன்றுமே செய்யவழி இருக்காது.

ஆனால் அப்படிப்பட்ட பலர் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகாரிகள் ஜாதி அபிமானம் காரணமாக விட்டுக் கொண்டிருக் கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த யோக்கியதையில் உள்ள காங்கிரசுதான் நீதியும், சத்தியமும், அகிம்சையும் கொண்ட முறையில் சுயராஜ்யம் பெறுவது என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றதாம்! என்ன பித்தலாட்டம், எவ்வளவு நாணயக் குறைவு என்று பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

வெகுகாலமாகவே நாம் காங்கிரசுக்காரர்கள் கூட்டத் தில் சென்று யாரும் கலகம் செய்யக் கூடாது என்றும் சொல்லி வந்ததானது காலித்தனத்தைக் காங்கிரசுக்கே சொந்தமாக்கிவிட்டது போல் காணுகின்றது.

காங்கிரசுக்காரர்கள் தடபுடலையும் அவர்களது வசவை யும், காலித்தனத்தையும் கண்ட பலர் பயந்து கொண்டு மெல்ல மெல்ல காங்கிரஸ் கூட்டத்தோடு தங்களைக் கலக்கிக் கொள்ள பலர் ஆசைப்படுவதைப் பார்க்க நமக்குச் சிரிப்பாக இருக்கின்றது. இருந்தாலும் இப்படிப்பட்ட கூட்டத்தார் மறுபடியும் 8 நாளில் கண்டிப்பாய் திரும்பவும் ஓடிவந்துவிடப் போகிறார்கள் என்று இப்போதே ஜோசியம் கூறுவோம்.
----------------------------- தந்தைபெரியார் - ”பகுத்தறிவு” - 25.11.1934

20 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......


வால்மீகி ராமாயணத் தில் பாலகாண்டம் 18 ஆவது சர்க்கத்தில் இராமன் பிறந்த நாள்,

நட்சத்திரம் அப்போதி ருந்த கிரக நிலைகள் ஆகியவற்றைக் குறிப் பிட்டு ஜாதகம் கணித் திருக்கிறார் வால்மீகி.

சித்திரை மாதம் வளர் பிறை நவமியில் ஆதித்ய வாரத்தில், மாத்யானிக வேளையில், புனர் வஸு நட்சத்திரம் 4 ஆம் பாதம் சந்திரன் ஆட்சியி லும், குரு உச்சத்திலும் அமைந்த கடக ராசியில், கடக லக்னத்தில் ஸ்ரீராமன் ஜனனம்.

கிரஹமாலிகா ஜாத கம், குரு, சந்திர யோகம், சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி உச்சம், இத் தகைய ஜாதகர்கள் மனி தருள் தெய்வமாக மதிக் கப்படுவார்கள் என்று பிர ஹத் ஜாதகம் கூறுகிறது.

- சக்தி, விண்மணி,

இந்த ஜாதகப்படி இராமன் தெய்வமாக மதிக்கப்படுவார் என்று கூறுவது உண்மை என் றால், இராமன் ஏன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றான்? சராயு நதி யில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்?

Read more: http://viduthalai.in/e-paper/81950.html#ixzz34Nn4cgPc

தமிழ் ஓவியா said...


தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11_ அடுத்த கல்வியாண்டில் (2015_20-16) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலி யுறுத்தினர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் சார்பில் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கட்டாய மொழிப்பாடமாக தமிழ் என்ற தலைப்பில் கருத்த ரங்கம் சென்னையில் திங் கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக பத்தாம் வகுப்புத் தேர்வில் எழுதச் செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு உறுதியுடன் எதிர் கொண்டு வரும் 2015--_2016-ஆம் ஆண்டில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக பயிலுவதையும், தேர்வு எழுதுவதையும் உறுதி செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத் துக்குமரன் பேசியதாவது: தமிழகத்தில் வசிப்பவர் கள் தமிழ் படிக்க வேண் டும் என்று சொல்வதற்கு நீதிமன்றமோ, சட்டமோ தேவையில்லை.

அடுத்ததாக, தமிழ் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால் ஒரு மொழியின் இலக்கியத் தைப் படித்தால்தான் அந்த மக்களைப் புரிந்துகொள்ள முடியும். தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்ளவேண்டு மானால் தமிழ் இலக்கியங் களைப் படிக்கவேண்டும்.

நம்மை நாம் புரிந்து கொள்வதற்கும், இங்கு வாழ்வதற்கும் தமிழ் படிக்க வேண்டியது அவசியம்.

இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற ஆங்கிலம் மட்டும் தெரிந் தால் போதாது. ஆங்கிலேய பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருந் தால்தான் குடியுரிமையைப் பெற முடியும்.

தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருப்பதை உறுதிசெய்யக் கோரி இந்தக் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை நாம் மீண்டும், மீண்டும் வலி யுறுத்த வேண்டும் என்றார் அவர்.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பொற்கோ: பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்திய தால்தான் தமிழ் கட்டாய மொழிச் சட்டம் இயற்றப் பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான துணிச்சல் தனியார் பள்ளிகளுக்கு எங்கிருந்து வந்தது? தமிழ் பயிற்றுமொழிதான் நமது இலக்கு. தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்தவேண்டும். இத்தனை ஆண்டுகாலம் போராடியும் தமிழ் கட் டாய மொழி சட்டம் மட் டுமே இயற்ற முடிந்துள் ளது. அதையும் எதிர்ப் பதை எப்படி அனுமதிக்க முடியும் என்றார் அவர்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:

தமிழ் கட்டாய மொழிப் பாட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுத்துள்ள வழக் கில் கருநாடகத்துக்கு எதி ராக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட் டியுள்ளனர். அந்த வழக்கு பயிற்று மொழி தொடர் பான வழக்கு. இது கட் டாய மொழிப்பாடம் தொடர்பானது. அந்த வழக்கில் அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டு பயிற்று மொழி முடிவு அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இங்கு தமிழ் கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்கிற சட்டம் 2006-இல் நிறை வேற்றப்பட்டு, அதற்கான செயல்வழிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு வகுப் பாக எட்டு ஆண்டுகளில் இந்தச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத் தப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண் டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தச் சட்டம் அமல் செய்யப்பட உள்ள நிலையில், இப் போது இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள் ளது.

இதுவரை இந்தச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/e-paper/81951.html#ixzz34NnCmQs2

தமிழ் ஓவியா said...


பொதுவுடைமை- பொதுவுரிமை


பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- (குடிஅரசு, 25.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/81958.html#ixzz34NnOi5Gx

தமிழ் ஓவியா said...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கூடாதா?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தி யாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படும் பட்டியலினத்த வருக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறை கள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ஆய்வு செய்ய இளையபெருமாள் என்பவரது தலைமையில் ஒரு குழுவை நாடாளுமன்றம் அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1989 இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995 இல்தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.

இவ்வளவுக் காலதாமதமாக இந்தச் சட்டம் நடை முறைக்கு வந்தபோதிலும் இன்றும் இதனை நடைமுறைப் படுத்துவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கும் தாழ்த்தப்பட்டோர், அதிக எண்ணிக்கையில் இருக்கும் உயர்ஜாதியினரின் கொடுமைகளைப்பற்றி புகார் கொடுக்கும்போதுகூட அதை தங்களது ஜாதிக்கு எதிரானதாக புகார் பெறும் அதிகாரிகள் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு தளங்களில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் வெளியுலகிற்கு வராம லேயே போகின்றன. நேர்மையான அதிகாரிகளை நியமித் தாலும் அரசியல் தலையீடு அந்த அதிகாரிகளைத் தங் களின் பணிகளைச் சரிவர செய்ய அனுமதிப்பதில்லை.

கிராமங்களில் மட்டுமா? மதுரை அரசு மருத்துவ மனையில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவப் பேராசிரியர், சக மருத்துவர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானதை டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் மே 30 ஆம் தேதி செய்தியாக வெளியிட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கர்ணன் அவர்களே, தான் அவமதிக்கப்படுவது குறித்து கூற வில்லையா?

தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - எந்த வடிவில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் (17 ஆவது பிரிவு).

இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன. இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு கண்ணாடித் தம்ளர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஒரு பள்ளியின் கல்வெட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பெயர் இருந்ததால், ஆத்திரப்பட்ட உயர்ஜாதி ஆணவக்காரர்கள் அந்தப் பெயரைத் தார் கொண்டு அழித்திருக்கின்றனர்.

இந்தியா முழுமையும் எடுத்துக்கொண்டால்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தீண்டாமைக் கொடுமைபற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் 8061, ராஜஸ்தானில் 5235, மத்தியப் பிரதேசத்தில் 4503, தமிழ்நாட்டில் 3505, ஆந்திரப்பிரதேசத்தில் 2088, குஜராத்தில் 1452, கருநாடகாவில் 1409, ஒரிசாவில் 1100, பிகாரில் 955, மகராஷ்டிராவில் 573, அரியானா 243.

தமிழ் ஓவியா said...


இவை 2011-2012 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் - எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டுள்ளோம்.

உண்மைகள் நிதர்சனமாக இவ்வாறு இருக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதன் நோக்க மென்ன?

இந்தச் சட்டம் சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படு வதாகக் கூறப்பட்டுள்ளது; எந்தச் சட்டத்தையும் இந்த வகையில் பயன்படுத்தலாம். கொலைக்கே சம்பந்த மில்லாதவர்களைக்கூட பழிவாங்கும் நோக்கத்தோடு சாட்சிகளைப் புனைந்து வழக்குத் தொடுக்கப்படுவது கிடையாதா?

தந்தை பெரியார் அவர்களாலும், அவர் கண்ட இயக்கத்தாலும் விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட தமிழ் மண்ணில்கூட, தருமபுரிகள் நடந்திருக்கின்றன. தாழ்த் தப்பட்ட ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதற்காக ஒரு கிராமமே எரிக்கப்படவில்லையா?

உண்மையிலேயே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த - தேவையில்லாத அளவுக்கு மக்களிடத்தில் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை ஆக்க ரீதியான செயல்பாடுகளை முன்னிறுத்துவதுதான் முற்போக்கான சிந்தனையாக, தீர்வாக இருக்க முடியும்.

அதை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனம் ஆகாது.

இன்னும் தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப் பட்டவர்களும் சரி, பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரும் சரி நம் நாட்டுக் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியுமா? இது இன்னொரு வகை தீண்டாமை அல்லவா?

மிகவும் அவசியமான இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தீண்டாமையை விசிறிவிடும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

Read more: http://viduthalai.in/page-2/81960.html#ixzz34NnYGQr9

தமிழ் ஓவியா said...


மருத்துவர்களுக்கு பிறகு நோயாளிகளை பாதுகாப்பது செவிலியர்கள்தான் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி தமிழர் தலைவர் பாராட்டு


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, ஜூன் 11_ திருச்சி திருவெறும்பூரில் தந்தை பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்ட இடத்தில் பெரியார் படிப்பகமும், பெரியார் மருத்துவமனையும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் கீழ் செவி லியர்களுக்கான மருத்துவ பயிற்சி வகுப்புகள் நடை பெற்று வருகின்றன.

ஓராண்டு பயிற்சிக் கான 2013-_2014 கல்வி ஆண் டில் 40 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 29 பயிற்சி முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன்.10) பெரியார் மருத்துவமனை யில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கி உரையாற்றும் போது: செவிலியர் பணி என் பது நோயாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்கள் கூட அவ ரது பணிகளை முடித்து விட்டு சென்றுவிடுவார் கள்.

ஆனால், செவிலியர் கள் அந்த நோயாளிக ளுக்கு அனைத்து உதவி களை செய்துகடைசி வரை உதவி வருபவர்கள் செவிலியர்கள் தான். பெரி யார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர் கள் மலர்ந்த மலர்களாகி யிருக்கிறார்கள்.

செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

செவிலி யர்கள் பயிற்சி பெற்றது டன் நமது மருத்துவமனை யில் தொண்டாற்றியது டன் பொதுமக்களுக்கும் சிறந்த சேவை செய்ய வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் கடவுளை மற! மனிதனை நினை! என்று. அவர் செய்த தொண்டின் மிக முக்கியமானது மனித தொண்டு. இம்மனித தொண்டினை சிறப்பாக செய்து வரும் உங்களை பாராட்டுகிறேன் என்று பேசினார்.

முன்னதாக இப்பயிற்சி வகுப்பில் பயின்று சான் றிதழ் பெறும் மாணவிகள் சார்பில் மருத்துவமனை வளாகத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அருள்மொழி மாலை அணிவித்தார்.

இதில் மருத் துவர் ஜான்போஸ்கோ, பெரியார் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பா ளர் பேரா.ப.சுப்ரமணியன், மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் உள்பட அனை வரும கலந்து கொண்ட னர்.

இந்நிகழ்ச்சியில் மண் டல தலைவர் ஞா.ஆரோக் கியரார், பெல் தி.தொ.க. தலைவர் ம.ஆறுமுகம், செல்வம், சிங்கராஜ், விடுதலை கிருட்டிணன், காமராஜ், கனகராஜ், சங்கிலிமுத்து, பழனிவேல், தங்கப்பன், கருத்தகண்ணு, கருணாநிதி, கென்னடி, பாஸ்கர், பன்னீர்செல்வம், அசோகன், பால்சாமி, ஆசைத்தம்பி, திருவரங்கம் நகரத் தலைவர் மோகன் தாஸ், இளைஞரணி தோழர்கள் சண்முகம், தமிழ்ச்செல்வம், இளந் தமிழன், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மருத்துவ மனை ஊழியர்கள் புவ னேஸ்வரி, செல்வி,விமலா ஆகியோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் செவி லியர் படிப்பில் பயிற்சி பெற்று முதல் மதிப்பெண் களை பெற்ற கழகத் தோழர் ஜெயில்பேட்டை தமிழ்மணியின் சகோதரி இளையராணி ஆவார்.

அவர் இம்மதிப்பெண் பெற்றமைக்காக நாகம்மை குழந்தை இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

Read more: http://viduthalai.in/page-8/81991.html#ixzz34NoU76Gz

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு விழித்துக் கொள்ளுமா? காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாட்டுக்கு எதிராக அம்மாநிலத்தவர்கள் ஒன்றுபட்டுக் குரல்!

புதுடில்லி,- ஜூன் 11-_ பாராளுமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசிய போது, கர்நாடக எம்.பி.க்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தம்பிதுரை பேச்சுக்கு எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் நேற்று (10.6.2014) குடியர சுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பிதுரை எழுந்து பேசுகையில், காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறி யதுமே கர்நாடக மாநிலத் தைச் சேர்ந்த உறுப்பினர் கள் எழுந்து அவரது பேச் சுக்கு எதிராக கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் இருக்கும் இந்த விவகாரம் பற்றி சபையில் பேசக்கூடாது என்று அவர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். உடனே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து தங் கள் எதிர்ப்பை தெரிவித் தார்கள்.

அமைச்சர் அனந்தகுமார்

அப்போது குறுக்கிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த வரான மத்திய உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் அனந்த குமார், காவிரி நடுவர் மன்ற தீர்ப் புக்கு எதிராக கர்நாடக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்றும், எனவே அது குறித்து இப்போது மக்கள வையில் விவாதிக்கக் கூடாது என்றும் கூறினார்.

அதற்கு தம்பிதுரை, தான் விவாதம் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் அதை பொருட்படுத்தாத கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம். பி.க்களும் ஒன்றாக குர லெழுப்பி அவரை பேச விடாமல் செய்தனர். இத னால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

முல்லைப்பெரியாறு பிரச்சினை

இதேபோல், முல்லைப் பெரியாறு அணை பிரச் சினை பற்றி தம்பிதுரை பேசுகையில், அணையின் நீர் மட்டத்தை 142 அடி யாக உயர்த்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், கேரள அரசு இதற்கு ஒத்துழைக்க மறுக் கிறது என்று கூறி தொடர்ந்து பேச முயன்றார். உடனே கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடு பட்டு அவரை பேசவிடா மல் தடுத்தனர்.

முன்னதாக தம்பிதுரை தனது பேச்சின் போது, தமிழ் நாட்டில் முதல்அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை பட்டிய லிட்டார். இதன்மூலம் நாட்டுக்கே அவர் முன் னோடியாக விளங்குவதாக வும் கூறினார்.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்க ளுக்கு உள்ளது என்றும், மீனவர்கள் தாக்கப்படு வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண் டார்.

மைத்ரேயன்

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (10.6.2014) பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் மைத் ரேயனும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது: எந்த வித மான அரசியல் நிர்ப்பந் தங்களும், பாகுபாடுகளும் இன்றி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும். முல் லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பங்கீடு குறித்த விஷயங்களில் தமிழ்நாட் டுக்கு மத்திய அரசு சலுகை ஏதும் காட்ட வேண்டாம்.

எங்களுடைய உரிமை களை எங்களுக்கு கிடைக்க வழிவகை செய்தாலே போதும். உச்சநீதிமன்றத் தின் உத்தரவில் குறிப் பிட்டு உள்ள விஷயங் களை நிறைவேற்றினாலே போதும்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையின ரால் அடிக்கடி சிறைப் பிடித்துச் செல்லப்படுவது பற்றி முதல்அமைச்சர் ஜெயலலிதா முன்னாள் பிரதமருக்கு (மன்மோகன் சிங்) பலமுறை கடிதங்கள் எழுதி உள்ளார். ஆனால் அப்போதைய அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை.

தமிழ் ஓவியா said...

ஆனால் இப்போது இரு சந்தர்ப்பங்களில் மீன வர்கள் சிறைபிடிக்கப்பட் டது பற்றி நரேந்திர மோடி அரசுக்கு அவர் எழுதிய கடிதங்களுக்கு உரிய பதில் கிடைத்துள்ளது. மீனவர் கள் விடுவிக்கப்பட்டு இருக் கிறார்கள். இந்த பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். கடந்த அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண் டும்.

கூடங்குளத்தில் உற்பத் தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத் துக்கு முழுமையாக அளிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள்

குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை தமி ழர்கள் பிரச்சினை பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. அது ஏன் என்று புரியவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள் பற்றி பேசு வது அல்லது அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவது யாருக்கும் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது.

வெளியுறவு கொள்கைகள் குறித்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங் களின் ஆலோசனையை மத்திய அரசு பெற்று செயல்படும் என்று தேர் தல் பிரசார கூட்டங்களில் நரேந்திர மோடி கூறினார். இன்று அவர் நம்முடைய பிரதமர். நம்முடைய பிரதமர் தேர்தல் நேரத்தில் பேசியதை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.

கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்பட வேண் டும். இவ்வாறு டாக்டர் மைத்ரேயன் கூறினார்.

குலாம் நபி ஆசாத்

முன்னதாக விவாதத் தின் போது பேசிய எதிர்க் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), குடிய ரசுத் தலைவர் உரையில் இடம் பெற்றுள்ள பெரும் பாலான திட்டங்கள் அய்க் கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவை என்று குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/81989.html#ixzz34Np2y0Mh

தமிழ் ஓவியா said...

திருவவதாரம்

வைகையாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலி ருந்து ஏழு கி.மீ. தொலை வில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத் தில் இறைவன் வாதபுரீசு வரர் என்னும் திருநாமத் தோடு எழுந்தருளியுள் ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிற ழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர்.

அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என் பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகி வரும் நாளில் தென்னாட்டில் புறச் சமய மாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறை வன் திருவருளால் இவ்விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்கவும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு திருவாதவூரர் என்னும் திருப்பெயர்ச் சூட்டினாராம்.

மத மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளில் கூட கடவுள் தலையிடு வாரோ!

மதத்தைத் தாண்டி கடவுள் இல்லை என்கிறபோது கடவுள் மதத்தின் கைக்கருவி ஆகி விடவில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/82012.html#ixzz34TarP8u0

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு

2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி

3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்

4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.

5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.

6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்

7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்

8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது

9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்

10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்

11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி

12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது

13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு

14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க

15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்

16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்

17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்

18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்

19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்

20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி

21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே

22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது

23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது

24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு

25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு

- குடிஅரசு 23.2.1930

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTNEPXz

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை - அறியாமை -இவற்றின் விளைவாக ஏற்படுகிற சுடுகாட்டு அமைதியை விட, சுய சிந்தனை - பகுத்தறிவு - இவற்றின் விளைவாக ஏற்படுகிற கடும் புயலை யும், கோடை இடியையும்தான் நான் விரும்புகிறேன்.

-இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/82104.html#ixzz34ZTXnwpF

தமிழ் ஓவியா said...


இந்துமதம் - சங்கரமடங்கள் பற்றி ஜெயப்பிரகாஷ் நாராயண்


ஒரு இந்துவை இனம் குறிப்பது வேதாந்தம் அல்ல. ஒரு அமெரிக்கர், ஒரு ரஷ்யர் அல்லது ஒரு ஜெர்மானியர் வேதாந்தியாக இருக்கலாம். ஆனால், அவர்களை இந்துக்கள் என்று யாரும் கருதுவது இல்லை.

ஜாதியும், தீண்டாமையும் மட்டுமே ஒரு இந்துவை இனம் காட்டுபவை அல்ல. ஆனால், வழக்கங்கள், சடங்கு கள், அனுஷ்டானங்கள். கற்களை, மரங்களை, மிருகங் களை நாம் வழிபடுவது, கர்ம காண்டம் என்பது - ஆகியவைகளே ஒரு இந்துவை இனம் காட்டுகின்றன.

படு பயங்கரமான சிக்கலாகக் சிக்கிக் கிடக்கும் இந்த வலைதான் இந்து சமுதாயத்தை பிணைத்து வைத் திருப்பது. அத்துடன் இந்து சமுதாயத்தின் தார்மீக, பொரு ளாதார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பது இதுவே ஆகும்.

இந்தநாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து பட்டுக் கிடக்கும் எண்ணற்ற சங்கர மடங்களைப் பாருங்கள். அவை குருட்டுப் பழைமை வாதத்தின் குகைகளாக மட்டுமா இருக்கின் றன? பச்சையான சுரண்டல்களாக வும் அல்லவா இருக்கின்றன?

இந்து மதத்தின் உச்சக்கட்ட உறைவிடங்களான சங்கர பீடங் களையே எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கே பதவி வகித்துக் கொண்டிருப்பவர்களில் குறைந்த பட்சம் ஒரு சங்கராச்சாரியாவது (பூரி) குருட்டுப் பழைமை வாதத்துக்கும், வெறிபிடித்த ஆச்சாரத்துக்கும் முன் மாதிரியாக விளங்கவில்லையா? இந்த டில்லிப் பட்டணத்தையே சில ஆண்டுகளுக்கு முன்னால் அவமானத்துக் குள்ளாக்கிய பசுவதைத் தடை போராட்டத்துக்குப் பின்னால் இருந்து தூண்டிவிட்ட சக்திகளில் இவரும் ஒருவர் என்பது நினைவில் கொள் ளத்தக்கது. நம்முள்ளே நாம் திறந்த உள்ளத்துடன் இருப்போம்.

நமது சமுதாயம் சீரழிந்து கொண் டிருக்கும் ஒரு சமுதாயம். நமது சமுதாயத்தைப் பிடித்துக் கொண் டிருக்கும் ஒட்டடைகளிலிருந்து அதை விடுவிக்கவும், அதை சுத்தப் படுத்தவும் ஒரு புதிய புத்தனே தேவைப்படுகிறான் என்பதை மனம் திறந்து ஒப்புக் கொள்ளுவோம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ், 20.9.1972)

Read more: http://viduthalai.in/page-7/82102.html#ixzz34ZTyauQb

தமிழ் ஓவியா said...


பால்ய விவாகம்!


குழந்தை: என்னடி அம்மா! நேற்று என் கழுத்தில் போட்டிருந்த நகையைக் காணோமே! அதை யார் எடுத்தார்கள்?

தாய்: அடிப்பாவி! அது நகையல்ல; தாலி. அதை ராத்திரி அறுத்தாய்விட்டது.

குழந்தை: எனக்குத் தெரியவில்லையே!

தாய்: ராத்திரி 11 மணி இருக்கும்; நீ அப்போது தூங்கி விழுந்து கொண்டிருந்தாய்; ஆதலால் உனக்குத் தெரிய வில்லை.

குழந்தை: அதை ஏன் அறுத்தார்கள்?

தாய்: அத்தாலியைக் கட்டின உன் புருஷன் இறந்து விட்டானல்லவா? அதனால் அறுத்து விட்டார்கள்!

குழந்தை: அவன் போனால் போகட்டுமே! வேறு யாரை யாவது கட்டச் சொல்றதுதானே! அதை ஏன் எனக்குத் தெரியாமல் கழட்டிக் கொண்டாய்? அதை மறுபடியும் என் கழுத்தில் போட்டால் தான் சாப்பிடுவேன் ஊ! ஊ!! ஊ!!!

குடிஅரசு, 1-4-1928

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUFejKP

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப்பட்டி ருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக்கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார்.

அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆண்டவனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

Read more: http://viduthalai.in/page-7/82103.html#ixzz34ZUOOw5F

தமிழ் ஓவியா said...

அண்ணா அறைகிறார்!

குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமை நயம்

Read more: http://viduthalai.in/page-7/82101.html#ixzz34ZVD44QV

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? விநாயகரின் சிறப்புத் தலங்கள்பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் விநாயகர் முதற் கடவுளாக இருப்பார். ஆனால் விநாயகர் வழிபாட்டுக்கு என்றே அமைந்த சிறப்பு வாய்ந்த தலங்கள் சில தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

கற்பக விநாயகர் கோயில் - பிள்ளையார் பட்டி, பிரளயம் காத்த விநாயகர் - திருப்புறம் பயம், பொல்லாப்பிள்ளை யார் - திருநாரையூர், முக்குறுணி விநாயகர் - மதுரை, ராஜகணபதி - சேலம், ஈச்சநாரி விநாயகர் - பொள்ளாச்சி, மணக்குள விநாயகர் - புதுச்சேரி, இரட்டை விநாயகர் - தாடிக்கொம்பு, லட்சுமி கணபதி - குன்றக்குடி முருகன் கோவில் என் கிறது ஓர் ஆன்மீக இதழ். கடவுள் உருவமற்றவர் - வழி பாட்டுக்காகத்தான் உருவச்சிலைகள் என்று சமாதானம் கூறும் ஆன்மீகச் சிரோன்மணிகள், இப்படி சில ஊர்களின் பெயர்களைச் சொல்லி அந்த ஊர்களில் உள்ள உருவச்சிலைதான் (கடவுள்தான்) பிரசித்தம் என்பது முரண்பாடு அல்லவா?

Read more: http://viduthalai.in/e-paper/82066.html#ixzz34ZVQR0Lm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!
சாமி கும்பிடுவதற்காக வந்த 4 பேர் பலி

தலைவாசல், ஜூன்.13- சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள ஆறகளூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் அம்பாயிர அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி கும்பிடு வதற்காக கோவை பி.என்.புதூரை சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மாதேஸ் என்பவர் தனது உறவினர்களுடன் 2 வேன் களில் நேற்று ஆறகளூர் வந்தார்.

காலையில் அவர்கள் கோவிலில் பொங்கல் வைத்து அங்கேயே சாப் பிட்டனர். இவர்களுடன் வந்த ராஜி என்பவரின் மகன் சஞ்சய் (வயது 13), சேகர் என்பவரின் மகன் செந்தில் (16) ஆகிய 2 பேரும் பி.என்.புதூரில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 9-ஆம் வகுப்பும், பிளஸ் 1-ம் படித்து வந் தனர். முருகன் என்ப வரின் மகன் விவேக் (19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். மதியம் 2 மணியளவில் இவர்கள் 3 பேரும் விளை யாடுவதற்காக வசிஷ்ட நதிக்கு சென்றனர்.

கடந்த சில நாட் களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வசிஷ்ட நதியில் நீர்வரத்து ஏற் பட்டு ஆங்காங்கே தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதைப் பார்த்த 3 பேருக்கும் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கினார் கள். சிறிது நேரத்தில் 3 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விட்டதாக தெரிகிறது. நீச்சல் தெரி யாததால் அவர்கள் தண் ணீரில் மூழ்கினார்கள்.

தண்ணீரில் தத்தளித்த படி உயிருக்கு போராடி னார்கள். இதைப்பார்த்த செந்திலின் தந்தை சேகர் தண்ணீரில் இறங்கி அவர் களை காப்பாற்ற முயன் றார். ஆனால், அவரால் முடியவில்லை. மாறாக அவரும் ஆழமான பகு திக்கு சென்றதால் தண் ணீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரி ழந்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு உடல் பரிசோத னைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/82065.html#ixzz34ZVYzpXA

தமிழ் ஓவியா said...


உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண் பாலியல் வன்முறை

காவல் ஆய்வாளர் கைது இருவர் தலைமறைவு

லக்னோ,ஜுன்13-_- உத்தரப்பிரதேசத்தில் நள்ளிரவில் கணவனை மீட்கச் சென்ற பெண் காவல்நிலைய வளாகத் திலேயே காவல்துறை யினரால் பாலியல் வன் முறைக்கு ஆளானார்.

ஹமீர்பூர் மாவட் டத்தில் சுமெர்பூர் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்துள்ளதாகக் கூறி ஒருவர் கடந்த 9ஆம் தேதி அன்று விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட் டார். காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட கணவன் மறுநாளிலும் இரவுவரையிலும் எதிர் பார்த்து காத்திருந்து வீடு திரும்பாததால், கணவர் மீது உள்ள வழக்கு குறித்து அறிந்துகொள்ளவும், தன் கணவரை மீட்பதற்காகவும் காவல்நிலையத்துக்கு அவரது மனைவி சென் றுள்ளார். 10ஆம் தேதி அன்று நள்ளிரவில் சுமார் 20 நிமிடங்களாகக் காக்கவைக்கப்பட்டார். அதன்பிறகு காவல்நிலைய வளாகத்திலேயே காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியான காவல் ஆய்வாளர் மற்றும் காவ லர்கள் கூட்டாக சேர்ந்து அந்த பெண்ணை பாலி யல் வன்முறைக்கு ஆளாக் கினார்கள். இரண்டு மணிநேர பாலியல் வன் முறைக்குப்பிறகு, அதி காலை மூன்று மணிவரை யிலும் அவர்களுக்கு இரையாகி, பின்னர் தன் கணவரை மீட்டு சென் றுள்ளார். அவருடைய கணவர்மீது வழக்கு எது வும் பதிவு செய்யப்பட வில்லை. பாலியல் வன் முறை குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும், சொன்னால் அவர் கணவர்மீது வழக்குபதிவு செய்வதாகவும் மிரட்டி உள்ளனர்.

ஆனால், அந்தப்பெண் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத் தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப் பட்டு, காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரும் தலை மறைவாகிவிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீரேந்திர ஷேகர் கூறும் போது, சுமர்பூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்முறைகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தப்பி ஓடியுள்ள மற்றவர்களையும் பிடிப் பதற்கு அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/82063.html#ixzz34ZVrSKsT

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.
(விடுதலை,5.4.1961)

Read more: http://viduthalai.in/page-2/82067.html#ixzz34ZW3Glge

தமிழ் ஓவியா said...


கருநாடகத்தில் ஒரு சேரன்மாதேவி!உடுப்பி கிருஷ்ண மடத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி சாப்பிடும் இடமும், பார்ப்பனர் அல்லாதாருக்கு வேறு சாப்பிடும் இடமும் இடம் பெறுகின்றன. இதற்குப் பங்கி பேதா என்று பெயராம்!

இந்தப் பிறவி வருணாசிரமக் கொடுமையை எதிர்த்து மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளதானது - பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இதுகுறித்து அக்கட்சியின் கருநாடக மாநில செயலாளர் ஜி.வி. ராம (ரெட்டி) கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யவும் வேண்டும் - மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர் கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பிராமணரல்லாத வர்கள் படுத்தும் புரளும் மடஸ்நானா என்னும் இழிவான நடைமுறைக்கு கருநாடக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.

பார்ப்பனர்களாவது, சூத்திரர்களாவது - எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? அதெல்லாம் முடிந்து பல காலம் ஆகி விட்டது என்று பேசும் மேதாவிகள் நாட்டில் உண்டு.

அத்தகையவர்கள் இந்த யதார்த்த நடப்புகளை கவனிக்க வேண்டும்; கவலைப்படுவதோடு நின்று விடக்கூடாது; அவற்றின்மீது ஆழமான சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த போதே 1924இல் சேரன் மாதேவியில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத மாணவர்களையும் தனித் தனியாக அமர வைத்து உணவுப் பரிமாறப்பட்டதை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கினார்.

டாக்டர் பி. வரதராஜலு நாயுடு திருவிக போன்றவர்கள் தந்தை பெரியார் தலைமையில் அந்த வேறுபாட்டை ஒதுக்கவில்லையா? கடைசியில் அந்தக் குருகுலமே இழுத்து மூடப்பட்டதே.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மன்னர் கல்லூரியில்கூட பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று மாணவர்கள் மத்தியில் வேறுபாடு காட்டப் பட்டதை ஒழித்தது நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்த - அன்றைய மாவட்டக் கழகத் தலைவர் (District Board president)சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அல்லவா!

வைக்கம் கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை கடை வீதிகளில் இலை ஒன்று அரையணாவுக்கு விற்கப்பட்டதுண்டு.

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் சாப்பிட்டால் வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கிய மாகி விடும் என்றும் சந்தானம் இல்லாதவர்களுக்கு (குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு)ச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாதாருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, ரூ.500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி, பூசை செய்து அந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாவம் போய் விடும் என்று நம்பும் படியாக செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல (குடிஅரசு 9.8.1925).

என்று தந்தை பெரியார் குடிஅரசில் குறிப்பிட் டிருந்தது உண்மைதான் என்றாலும், இன்று அத்தகைய காட்சிகள் தமிழ்நாட்டில் காண்பது அரிது - அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் இயக்கம் விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டது.

கருநாடக மாநிலத்தில் அந்தக் கொடுமைகள் இன்றும் தலை விரித்தாடுகின்றன என்றால் அது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா பகுத்தறிவு சிந்தனையாளர் சாம்ராட் நகருக்குச் சென்று வந்தால் அந்த முதலமைச்சர் பதவி விலகுவார் என்று நம்பிக்கை உண்டு. அதனை முறியடித்த முதல் அமைச்சர்தான் சித்தாராமையா.

இந்த நிலையில் பங்கி பேதாக்களையும் மடஸ் நானாக்களையும் அவர் கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கிறோம் - முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/82068.html#ixzz34ZWC1LKB