Search This Blog

5.6.14

சும்மா ஆடுமா தினமணிக் குடுமி?


நம் நாட்டு இளைஞர்களிடம் தற்போது ஒரு விஷயம் பரவலாகக் காணப்படுகிறது.

அது பிற நாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசை மேதைகள், நடிகர்கள் போன்றவர்களின் படம் அல்லது பெயர் தாங்கிய டி-ஷர்ட்டை பெருமை யாக அணிந்துகொள்ளும் போக்கு.

குறிப்பாக சேகுவாரா எனப்படும் அர்ஜென்டினா நாட்டில் பிறந்த மார்க்சிய புரட்சியாளர். இவர் பெயர் கூட பலருக்குச் சரியாகத் தெரியாது.
ஆனால், இவரைப் போன்ற அயல் நாடுகளில் போற்றப்படும் சில தலைவர்களின் படங்களும், பெயர்களும் இங்கு பனியன்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றை நமது இளைஞர்கள் விரும்பி வாங்கி அணி கின்றனர்.

"நம் நாட்டு இளைஞர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத் துரை, வாஞ்சிநாதன், பூலித்தேவன், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், வீரசாவார்க்கர், பகத்சிங் போன்ற எண்ணி லடங்கா சுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம்பற்றி ஒன்றும் தெரிய வில்லையா? அல்லது இதிலும் வெளிநாட்டு மோகமா? என்று எதையோ எழுத வந்த தினமணி சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் ஒரு வேலையைச் செய்தி ருக்கிறது."

                                       ---------------(தினமணி, 2.6.2014, நமது பெருமை அறிவோம் எனும் கட் டுரை, பக்கம் 8).

மற்றவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்; வீரர்களின் பட்டியலில் வீரசாவார்க்கர் எங்கு வந்தார்?

வீர வாஞ்சி எங்கு வந்து குதித்தார்? ஒருக்கால் பெயரில் வீர என்ற சொல் ஒட்டியிருப் பதால் வீரர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டாரோ!

அந்தமான் சிறையிலி ருந்து இந்த வீர சாவார்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் எத்தனை! எத்தனை!!

இன்றைக்கு இந்துத்துவா, இந்துத்துவா என்று கூச்சல் போடுகிறார்கள் அல்லவா, அதன் உற்பத்தி மூளை சாவார்க்கர்தானே!

இஸ்லாமியராகிய நீங்கள் எங்களை (இந் துக்களை) கொன்றீர்கள்.
எங்களின் வழிபாட்டுச் சிலைகளை உடைத்தீர்கள். எங்கள் பெண்களைக் கடத்திச் சென்றீர்கள். உங் களின் அநீதியான நடை முறைகள் எங்களுக்கு வலி யைத் தந்துள்ளது.

நாங்கள் இப்படியே எப்பொழுதும் வாழ முடியாது. எனவே, நாங்கள் சொல்கிறோம்.

இந்துஸ்தான் இந்துக்களின் தாய் நாடு.

எனவே, இந் துக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பது இந் துக்களின் கடமையாகும். இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா அல்ல - அவர்கள் துருக்கியையும், அரேபியாவையும் தங்கள் நாடாகக் கருதுகின்றனர். அவர்கள் இதயம் இந்தியாவில் இல்லை என்று சொன்னவர்தான் தினமணி தூக்கிப் பிடிக்கும் சாவார்க்கர்.

இப்பொழுது புரி கிறதா?  சும்மா ஆடுமா தினமணிக் குடுமி?

----------------------- மயிலாடன்  அவர்கள் 4-6-2014 “விடுதலை” யில் ழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...


தமிழர்கள் தன்மானம் உள்ள தமிழர்களாக வாழவேண்டும்! - கலைஞர் பேட்டி -


சென்னை, ஜூன் 4- தமி ழர்கள் தன்மானம் உள்ள வர்களாக வாழவேண்டும் - இதுதான் தனது பிறந்த நாள் செய்தி என்றார் கலைஞர்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தமது பிறந்தநாளில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் நினைவிடங் களுக்குச் சென்று மரி யாதை செலுத்திய பின்னர், அண்ணா அறிவாலயத்திற் குப் புறப்பட்டார்.

அப்போது செய்தியா ளர்களுக்கு தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:- பிறந்தநாள் செய்தி

செய்தியாளர்: 91 ஆவது பிறந்தநாள் காணும் தாங்கள், தங்கள் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக தெரி விக்க விரும்புவது என்ன? கலைஞர்: தமிழர்கள் தன்மானம் உள்ளவர் களாக, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதே தமிழர்களுக்கு நான் வழங்கு கின்ற பிறந்தநாள் செய்தி.

இன்னும் தொடர்கிறது

செய்தியாளர்: 91 ஆவது வயதில் இன்று நீங்கள் அடியெ டுத்து வைக்கிறீர்கள். உங்களுடைய கனவு, நீங்கள் கண்ட கனவு, அரசியல் வாழ்க்கையில் நிறைவேறியதாக நினைக்கிறீர்களா?
கலைஞர்: என்னுடைய கனவு என்பது, இன்னும் தொடர்கிறது.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81519.html#ixzz33ilWtQaw

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பார்த்தால் முருகன் முகம் பார்க்கவேண்டும் - அவன் பாராத போதும் மெல்லப் பார்க்கவேண்டும்.

- ஒரு சினிமா பாடல் முருகன்தான் ஆறு முகன் ஆயிற்றே!
எந்த முகத்தைப் பார்ப்பதுவோ

Read more: http://www.viduthalai.in/e-paper/81518.html#ixzz33ilguBdv

தமிழ் ஓவியா said...


இது நாடா? காடா? பெண் நீதிபதிமீதே பாலியல் வன்முறை

லக்னோ, ஜூன் 4- உ.பி. யில் பொதுமக்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமாறி நீதிபதி களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்துள்ளன.

படானில் இரண்டு தாழ்த் தப்பட்ட சிறுமி கொடூர கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு மரத் தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் நாடு முழு வதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாலியல் வன் முறை சம்பவங்கள் நடை பெற்ற வண்ணம் உள்ளன. இந்நிலையில் அலிகாரில் பங்கஜ் குப்தா, கோபால் குப்தா ஆகிய இருவர், பெண் நீதிபதியை பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவரைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ள னர் என்று காவல்துறை யினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர். பெண் நீதிபதி தனது அரசு வீட்டில் கடந்த திங்கள் கிழமை அன்று நினைவின்றி பலத்த காயத்துடன் காணப்பட் டுள்ளார்.

இது தொடர்பாக அம் மாநில காவல்துறை அதி காரி நிதின் திவாரி செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில், பாதிக்கப் பட்ட பெண் நீதிபதியின் சகோதரர் கொடுத்த புகா ரின்படி பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது வரையில் எந்த மருத்துவப் பரிசோதனையும் நடத்தப் படவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட பெண் ணின் சாட்சியத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி அங்குள்ள மருத் துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்ற வாளிகளை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81520.html#ixzz33ilqLKNC

தமிழ் ஓவியா said...

பிறந்த நாளா? புத்துணர்வு பிறந்த நாளா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை - இலட்சக்கணக்கானவர்கள் நிரம்பி வழிய நடைபெற்றது.

தேர்தலில் கடுந்தோல்வியைச் சந்தித்த ஒரு கட்சி, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளை மய்யப்படுத்திக் கிளர்ந்து எழுந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்தப் பிறந்த நாள் விழா அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இயல்பாக வேறு எங்கும் காண முடியாத அதிசயம்தான் இது.

வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே தி.மு.க. இருந்திருந்தால், அரசியல் லாபம் கிடைக்கும் கட்சிகளின் மடிகளில் போய் விழுந்திருப்பார்கள். காற்றடிக்கும் பக்கம் பறந்தே போயிருப்பார்கள்.

தி.மு.க.வில் ஏனிந்த நிலை ஏற்படவில்லை என்பதற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனார் அவர்கள் அக்கூட்டத்தில் சொன்ன அந்தக் கருத்துத்தான் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் அரசியல் கட்சி என்பதையும் கடந்து சமுதாய கொள்கைகள் இதற்கு இருப்பதே காரணமாக இருக்க முடியும்; தானும், கலைஞர் அவர்களும் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், அவற்றில் இந்த வயதிலும் உறுதியாக இருக்கிறோம்; அந்தத் தத்துவம் மேலும் தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்ததும், அதனை வழிமொழிகின்ற வகையில் கலைஞர் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்துப் பேசியதும் இராயப்பேட்டைக் கூட்டத்தின் தனி முத்திரையாகும். இலட்சக்கணக்கான அளவில் கூடிய அந்தக் கூட்டத் தில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை. இரு தலைவர் களும் எடுத்து வைத்த அந்தக் கருத்துகள், அந்த இளை ஞர்களைப் பெரிய அளவில் பாதித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க. நடத்தும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் இந்த அடிப்படை இலட்சியக் கோட்பாடுகள் எடுத்துச் சொல்ல சொல்லத்தான் தி.மு.க.வுக்கு அப்பாற்பட்ட தமிழின இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

இன்றுள்ள சிக்கலோ இந்த அடிப்படை கருத்துகள் சமூகநீதித் தகவல்கள் இளைஞர்களிடத்தில் போதிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

தமிழ் ஓவியா said...

சமூகநீதிச் சித்தாந்தத்தின் அடிநீரோட்டத்தை அவர்கள் தெரிந்திருந்தால், நீயா, நானா? நிகழ்ச்சிகளில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முதலில் ஒழியவேண்டும்? என்று பேசுவார்களா?

தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சி ஒரு சட்டம் கொண்டு வருகிறது; அந்த ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது; அந்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் புராண மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் வருஷங்களை அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு; இதுபற்றிய சரியான புரிதல் நம் இன மக்களுக்கு, இளைஞர்களுக்கு இருந்திருக்குமேயானால், எவ்வளவுப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளம்பி இருக்கவேண்டும்? பார்ப்பனீய சிந்தனையோடு ரத்து செய்த ஆட்சிக்கு வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பித் திருக்கவேண்டுமே! அது நடக்கவில்லை என்கிறபோது, திராவிடர் இயக்கத்தின் பகுத்தறிவு, இனமானக் கருத்துகள் இந்தப் புதிய வரவு வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லுவதுபற்றித்தானே சிந்திப்பது சரியாக இருக்க முடியும்!

தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இத்திசைக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

இராயப்பேட்டைக் கூட்டத்தில் விழா நாயகர் கலைஞர் அவர்கள் நமது நாட்டு ஊடகங்கள்பற்றி எடுத்துச் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.

ஏடுகள் ஒரு சார்பு நிலையை ஏன் எடுக்கவேண்டும்? வெளிப்படுத்தவேண்டிய தகவல்களை ஏன் இருட்டடிக்கவேண்டும்? என்ற நியாயமான வினாவை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் கேட்கிறேன் என்று கலைஞர் கேட்டாரே - இதற்கு நேர்மையான பதில் அளிக்கும் அறிவு நாணயம் நம் நாட்டு ஊடகங் களில் கிடையாது என்பது வெட்கக்கேடே!

ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சுவது, விளம்பர வருமானத்திற்குத் தாள் பணிவது என்று ஆகிவிட்டால், பத்திரிகைகளின் நோக்கம் என்பதே - அதன் ஆளுமை என்பதே அறவே அறுபட்டு விழுந்த பட்டமாகிவிட்டது என்றே பொருள்!

மூன்றாவதாக தி.மு.க. தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்து கட்சி அமைப்பு முறையில் மாற்றங்கள் வரும் - கூர்தீட்டப்படும் - புதுப் பொலிவோடு புதுப் புனலாகப் பொங்கி வரும் என்பதாகும்.

எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பு, சீரமைப்பு, தேவைப்பட்டால் களை எடுப்பு என்பதெல்லாம் - வேளாண்மையில் கடைப்பிடிக்கும் யுக்தி போன்றவையே!

சுருக்கமாகச் சொன்னால், மக்களவைத் தேர்தல் தோல்வி என்பது தி.மு.க. தீரத்துடன் போர் வீரனாக முகிழ்த்து எழுவதற்குக் காரணமாகிவிட்டது என்று கருத இடம் இருக்கிறது.

இதற்குக் கட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாள் அமைந்தது - வேறு எந்த கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதே!
தொடரட்டும் நன்முயற்சிகள்!

Read more: http://www.viduthalai.in/page-2/81523.html#ixzz33imSMIHc

தமிழ் ஓவியா said...


சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?


ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். அய்ந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்ல வல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந் தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல் களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத் தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இன அழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர் வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காகப் போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும். இதனால் தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசிய தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார். எமது அரசியல் போரை முன்னெ டுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லை யேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? அய்ந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீ காரத்தைப் பெற முடியாதது, சர்வதேசத் தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பை யும், அதிலும் மேலாக இவர்கள் திறமை யையும் எமக்கு எடுத்துக் காட்ட வில்லையா? இந்த அங்கீகாரம்; பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதி வாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாள்களில், எம் உறவுகளுக்காக; கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள் மீது நாம் கொண்ட அன்பும், பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையா னால், வலிமைமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மய்யமாகக் கொண்டு, தேசிய தலைவரின் இலட்சியப் பாதை யில் பயணிக்கவல்ல ஓர் அணி, தகுதி வாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக் கும் விதத்தில், உருவாக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், ஒரு இராப் போசனமும் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டு, அய்.நா. மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர்கள் செல் வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம் பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய் வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத் துக்கும் முதலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புது அணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்த சங்கரி அபகரித்து தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழி னம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில் லையா? அறவழிப்போராட்டத்தை வழிநடத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு சென்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவ காரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் த்லைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க வல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வி யும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க தொ.இ: கனடா 416 829 1362.

sivalingham@sympatico.ca

Read more: http://www.viduthalai.in/page-2/81524.html#ixzz33imrKoeW

தமிழ் ஓவியா said...


விரைவில் கட்சி அமைப்பில் மாற்றங்கள் வரும் - கலைஞர் முழக்கம்


சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு உணர்வு, திராவிட இன உணர்வுகளிலிருந்து எங்களைப் பிரிக்கமுடியாது!

விரைவில் கட்சி அமைப்பில் மாற்றங்கள் வரும்

சென்னை பிறந்த நாள் விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முழக்கம்

சென்னை, ஜூன் 4- சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிடர் இன உணர்வுகளிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது தந்தை பெரியார் அவர்களையும், அறிஞர் அண்ணா அவர்களையும் நாங்கள் மறக்கவும் முடியாது என்றார் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தென்சென்னை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை - இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (3.6.2014) மாலை எழிலும் பிரம்மாண்டமும் நிறைந்ததாய் நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் ஏற்புரை வருமாறு :-

இந்த விழாவை எண்ணும்போதும், இங்கே நம்முடைய தலைவர்கள் வழங்கிய சொற்பொழிவுகளைக் கேட்கும் போதும் பிறந்த நாள் என்ற பெயரால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை விளக்கங்களை எடுத்துச் சொல்ல நான் ஒரு வாய்ப்பாக இருக்கிறேன் என்கிற உண்மை உங்களுக்கும் தெரிந்தது, எனக்கும் தெரிந்தது.

இளமையில் எங்களுள் தோன்றிய இன உணர்வு இன்றும் தொடர்கிறது!

இங்கே நம்முடைய பேராசிரியர் அவர்கள் உரையாற்றும் போது இளமைப் பருவத்திலே தோன்றிய உணர்வு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு உணர்வு, திராவிட இன உணர்வு எங்கள் இருவருக்கும் இன்றளவும் தொடர்கிறது என்று மிக அழகாகக் குறிப்பிட்டார்கள். உருக்கமாகக் குறிப்பிட்டார்கள். உண்மையாகக் குறிப்பிட்டார்கள். அதை எண்ணியெண்ணி நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஏனென்றால், அவரை நான் சந்தித்ததும், அவர் என்னைச் சந்தித்ததும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி. அவரை திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக நான் அழைத்து, அவர் எந்த ரயிலில் வருகிறார் என்பதை நான் அறிந்து, அந்த ரயிலில் அவர் வந்திருக்கிறாரா என்று எப்படி அவரைக் கண்டுபிடிப்பது; ஏனென்றால் அவரை அடையாளம் தெரியாமல் அதுவரை யில் அவரைப் பார்த்திராமல் இருந்த நான் எப்படி ரயிலடி யில் சென்று சந்திப்பது என்று எண்ணிக் கொண்டு ரயிலடிக் குச் சென்றால், அவரும் நம்மை அழைப்பவர் கருணாநிதி என்ற மாணவர் ஆயிற்றே, அவரை எப்படிக் கண்டு பிடிப்பது என்ற ஆதங்கத்தோடு அவரும் திருவாரூர் ரயிலடியில் வந்து இறங்க, எப்படியோ இருவரும் ஒருவரையொருவர் சந்தித் துக் கொண்டு, நான்தான் கருணாநிதி என்று நான் சொல்ல, நான்தான் நீங்கள் அழைத்த அன்பழகன் என்று அவர் சொல்ல, இவ்வாறு இருவரும் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த மகிழ்ச்சிகரமான சம்பவமும் இன்றளவும் எனக்கு நினைவிலே இருக்கிறது.

என்னையும் பேராசிரியரையும் - எந்தக் காலத்திலும் யாராலும் பிரிக்க முடியாது!

நினைவிலே இருக்கிற காரணத்தால்தான் அவரை நான் பேராசிரியர் பெருந்தகை என்று அழைப்பதும், அவர் என்னை கலைஞர் கருணாநிதி என்று கூறுவதும் இருவருடைய உள்ளத்திற்கும் இதமான சொற்றொடர்களாக அமைந்து இருக்கின்றன. அத்தகைய இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இன்றைக்கு இருக்கிறோம் என்றால், ஒரு காலத்திலே இந்த நிலையை எண்ணிப் பார்த்தது கிடையாது. ஆனால் இன்றைக்கு அவர் என்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டும், நான் அவரைப் பொதுச் செயலாள ராக ஏற்றுக் கொண்டும் இருவரும் ஏறத்தாழ ஒரு நாற்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த இயக்கத் தோணியைச் செலுத்தி வருகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்த பலம் எங்களுக்கு எப்படி வந்தது, இந்த வலிமை எப்படி வாய்த்தது, இந்தத் திறன் யாரால் ஏற்பட்டது என்பதை நினைத்து நினைத்து மகிழ்கின்ற நேரத்தில், எங்களை ஆளாக்கிய அண்ணா அவர்களையும், அந்த அண்ணாவை உருவாக்கி தமிழகத்திற்குத் தந்த பெரியார் அவர்களையும் நாங்கள் மறந்திட முடியாது. அப்படிப்பட்ட இருபெரும் தலைவர்கள் எங்களை ஆளாக்கினார்கள், உருவாக்கினார்கள். அவர்களுடைய கொள்கைகளை, அவர்களால் உருவாக்கப்பட்ட அந்தக் கொள்கைகளை, அவர்களால் பரப்பப்பட்ட அந்த இலட்சியங் களை நாங்கள் மறந்து விட்டால், அவர்களையே மறந்து விட்டோம் என்ற குற்றத்திற்கு ஆளாவோம் என்பதை அறியாதவர்கள் அல்ல நாங்கள். எனவேதான், இன்றைக்கும் எங்களை யாரும் பிரிக்க முடியாது; இயற்கை ஒன்றைத் தவிர, இயற்கை ஒன்றால் தான் எங்களை பிரிக்க முடியுமே தவிர வேறு யாராலும் எந்த இயக்கத்தாலும், எந்தக் கட்சித் தலைவர்களாலும், எந்த நிலைமைகளாலும் என்னையும் பேராசிரியரையும் பிரிக்க முடியாது என்பதை (பலத்த கைதட்டல்) இந்த 91 -- 93 என்ற இரண்டு வயதுகளுக்குச் சொந்தக்காரர் களான கருணாநிதியும் பேராசிரியர் அன்பழக னும் இந்தக் கூட்டத்திலே ஒரு உறுதிமொழியாக, சத்திய வாக்காக சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கின்றோம்.

தமிழ் ஓவியா said...


பத்திரிகை உலகை முன்னேற்றும் இயக்கம்
தி.மு.க. என்பதை உணர்ந்திடுங்கள்!

நம்முடைய தோல்விக்குப் பிறகு; இந்த நாட்டில் ஜனநாயகத்தை வாழ வைப்பதற்காக இருக்கின்ற கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற அ.தி.மு.க. ஆனாலும், அல்லது அந்தக் கட்சியை ஆதரித்து நிற்கின்ற சில வேறு வேறு கட்சிகளானாலும் அல்லது எந்தக் கட்சியானாலும் அது திராவிட இயக்கத்திற்கு எதிரான கட்சியானாலும் அதை நாங்கள் தூக்கி விடத்தான் செய்வோம் என்று முயன்று, முட்டி முட்டிப் பார்க்கின்ற தமிழ் நாட்டிலே உள்ள ஏடுகளானாலும் அவர்களுக் கெல்லாம் நான் எச்சரிக்கையாக அல்ல, அன்பான வேண்டுகோளாக ஒன்றைச் சொல்லுவேன். பத்திரிகை உலகத்திற்கும் எங்களுக்கும் ஒன்றும் விரோதம் கிடையாது. ஏனென்றால் நான் முரசொலி என்ற பத்திரி கையை நடத்திக் கொண்டு இருந்தவன். நம்முடைய பேராசிரி யரும் ஒரு பத்திரிகையாளர்தான். திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கின்ற முக்கியமான தலைவர்கள் எல்லாம் பத்திரிகை உலகத்திலே அனுபவம் பெற்றவர்கள்தான். எனக்கு உள்ள ஆதங்கம் எல்லாம் இப்படி பத்திரிகை உலக அனுபவத்தைப் பெற்று, பத்திரிகைகளுக்காகவே, அதனு டைய ஜனநாயகத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்தை நசுக்கி விட வேண்டும் என்று எண்ணுகின்ற எதிர் தரப்புக்கு இன்றைய பத்திரிகை உலகம் இரையாகி விடுகிறதே, இது நியாயமா என்று நாங்கள் கேட்கத்தான் வேண்டி யிருக்கிறது.

இந்தப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்தில் இந்த விழா மூலமாக நான் பத்திரிகைகாரர் களுக்கெல்லாம் விடுக்கின்ற வேண்டுகோள்; நாங்கள், ஜனநாயக ரீதியிலே பாடுபடுகின்றவர்கள். உங்களுக்கு ஒன்று என்றால், உங்களுக்கு ஒரு தீது என்றால் பத்திரிகைகளினு டைய உரிமை பறிக்கப்படுகிறது என்றால் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் களும், தொண்டர்களும், நிர்வாகி களும். எனவே, நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல என்பதை நினைவிலே கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்காலத்திலே பத்திரிகை உலகத்தை தூக்கி விடக் கூடிய, பத்திரிகை உலகத்தை முன்னேற்றக் கூடிய ஒரு இயக்கம்தான் என்ற அந்த எண்ணத்தோடு, எதிர்பார்ப் போடு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப் பைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சட்டம் ஒழுங்கு - விலைவாசி!

கழக ஆட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்!

இங்கே வீற்றிருக்கின்ற நீங்கள் நாங்கள் வாக்களிக்க வில்லையே என்று சொல்லக் கூடும். உங்களிலே சிலர் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் வாக்களித்த மக்கள் இந்த பொருளாதாரத் திட்டத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்று எண்ணித்தான், அந்தப் பிரச்சாரத்தை நம்பித்தான் வாக்களித்தார்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சிதான் இப்படி ஆயிற்று என்றால், சமுதாயத்திலே வளர்ச்சியாவது ஒழுங்காக இருக்கிறதா இல்லை அதுவும் வீழ்ச்சியாகி விட்டதா என்று அந்தக் கணக்கைப் பார்த்தால் அது ஒன்றும் நாம் சொல்லக் கூடிய அளவிற்கு பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாட்டிலே சட்டம் ஒழுங்கு என்ற தலைப் பில் கொலை - கொள்ளைகளை மாத்திரம் எண்ணிப் பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சி பதவியேற்ற மே திங்கள் 2011ஆம் ஆண்டிலிருந்து 31-5-2014 வரை கொலைகள் மாத்திரம் 3432 இந்த ஆட்சியிலே. 3432 பேர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். நம்முடைய திருச்சி மாவட்டத்தி னுடைய செயலாளர் தம்பி நேருவினுடைய தம்பி ராமஜெயம் உட்பட 3432 கொலைகள் அந்தக் கொலைகளை யெல்லாம் கண்டுபிடித்ததாகத் தெரிய வில்லை. யார் இந்தக் கொலைகளைச் செய்கிறார்கள் என்பதை யாரும் அறிவிக் கவும் இல்லை. எந்தப் போலீஸ் அதிகாரியும் அதைப் பற்றிக் கூறவும் இல்லை. திருவரங்கப் பெருமாளுக்குத்தான் வெளிச்சம்.

தமிழ் ஓவியா said...

அதுமாத்திரமல்ல, கொள்ளைகள்- 1368 கொள்ளைகள் இந்த நான்காண்டு காலத்திற்குள் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றன. செயின் திருட் டுக்கள் 988 - இந்த ஆட்சியில். வழிப்பறி மோசடிகள் 975. இவ்வளவும் செய்து விட்டு எங்களுடைய ஆட்சி யிலே விலைவாசிகளைக் குறைத்திருக்கிறோம், விலை வாசிகளைக் குறைத்திருக் கிறோம் என்பதற்குத்தான் அம்மா உணவகங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அம்மா பெயரால் இன்னும் என்னென்ன வருமோ என்று சொல்ல முடியாது. வரட்டும். தமிழ்நாட்டு மக்கள் இவைகளை எல்லாம் சுவைத்து, அனுபவித்து ரசித்து மகிழட்டும். ஆனால் கழக ஆட்சியிலே அப்பொழுது விலைவாசி யினுடைய நிலை என்ன? தற்பொழுது விலைவாசி யினுடைய நிலை என்ன என்பதை வாக்களித்த நீங்கள் எண்ணிப் பார்ப்பது தேவையல்லவா?

சொத்துக் குவிப்பு வழக்கு: செய்தி வெளியிட்டால் தலை தப்பாது எனும் நிலை!

ஒரு கிலோ துவரம் பருப்பு கழக ஆட்சியில் 60 ரூபாய். இப்பொழுது குறைத்து விட்டோம் என்கிறார்களே விலைவாசியை; 84 ரூபாய். கடலை பருப்பு ஒரு கிலோ கழக ஆட்சியில் 34 ரூபாய். இப்பொழுது குறைத்து விட்டார்கள் என்று சொல்கிறவர்கள் ஆட்சியில் 46 ரூபாய். பயத்தம் பருப்பு கழக ஆட்சியிலே அப்பொழுது 80 ரூபாய், ரொம்ப குறைத்து விட்டார்கள் 100 ரூபாய். மிளகாய் ஒரு கிலோ விலை 120 ரூபாய், இப்பொழுது 160 ரூபாய். தனியா கழக ஆட்சியிலே 80 ரூபாய். இப்பொழுது 116 ரூபாய். புழுங்கல் அரிசி கழக ஆட்சியில் 40 ரூபாய். இப்பொழுது 50 ரூபாய். பொன்னி பச்சரிசி கழக ஆட்சியில் 45 ரூபாய். இப்பொழுது 52 ரூபாய். மிளகு - அந்த மிளகிற்கு வந்த வாழ்வைப் பாருங்களேன். கழக ஆட்சியில் 600 ரூபாய். இப்பொழுது 740 ரூபாய். வெந்தயம் தி.மு.க. ஆட்சியில் கிலோ 50 ரூபாய். இப்பொழுது 100 ரூபாய். நல்லெண்ணெய் தி.மு.க. ஆட்சியில் 64 ரூபாய். இப்பொழுது 220 ரூபாய். இவையெல்லாம் சொல்வதற்குக் காரணம் நாம் வாக்களித்து மாற்றத்தைச் செய்த காரணத்தால், உண்மையிலே மாற்றம் ஏற்பட்டிருக் கிறதா, வாங்கிச் சாப் பிட்ட மக்களுக்கு ஏமாற்றம் வந்திருக் கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காக த்தான் இந்தப் புள்ளி விவரங்களைச் சொல்லுகின்றேன். தமிழ்நாட்டில் மிக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று - பெங்களூரில் தற்போது நடை பெற்றுக் கொண் டிருக்கின்ற சொத்துக் குவிப்பு வழக்கு. அந்த வழக்கின் இன்றைய நிலை என்ன? நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இப்போது கவலைப் படுகிறார்களா, இல்லையா? தமிழ் நாட்டு மக்கள் அதைத் தெரிந்து கொள்ளவாவது முடிகிறதா என்றால் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு ஆங்கில ஏடுகளில், இந்து போன்ற, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகளில் வெளி வருகின்ற ஒரு கல செய்தியே தவிர, ஒரு நாள் முழுவதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூண்டிலே இருக்க வேண்டுமென்று ஜெயலலிதாவின் உற்ற நண்பர்களான குற்றம் சாட்டப்பட்டவர்களை பெங்களூர் நீதிமன்றத்திலே நிறுத்தி வைத்தார்களே, இந்தச் செய்தியை எந்தப் பத்திரிகையாவது விரிவாக வெளியிட்டதா என்றால் இல்லை. வராது. வந்தால் அந்தச் செய்தியை வெளியிட்டவர்களின் தலை தப்பாது. செய்தியை வெளியிட்டவர்களின் தலை தப்பாது என்றால், நீங்கள் அதை வன்முறைப் பொருளிலே எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டுமோ, எப்படி அவர்களைத் துன்புறுத்த வேண்டுமோ, அப்படித் துன்புறுத்துகின்ற ஆயுதம் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் கையிலே இருக்கிறது. அவர்கள் கையிலே இல்லா விட்டாலும், இந்த ஆட்சியாளர் களின் அடிமைகளாக இருக்கின்றஒரு சில அதிகாரிகளின் கைகளிலே இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

ஆகவேதான் இப்படிப்பட்ட செய்திகளை யெல்லாம் கூட அந்தப் பத்திரிகைகளில் வெளியிடு வதில்லை. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் புத்தகம் ஒன்று - ஆங்கிலப் புத்தகம் ஒன்று - என்று பெங்களுர் நீதி மன்றத்திலே நடைபெறுகின்ற இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியும், முன்னுக்குப் பின் முரணாக நடைபெறு கின்ற பல நிகழ்ச்சிகள் பற்றியும், இந்த வழக்கின் உண்மை யான தாத்பரியம் என்ன என்பது பற்றியும் நான் தொடர்ந்து எழுதிய உடன்பிறப்புக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளி வந்திருக்கின்றன.

ஆங்கிலப் புத்தகமானாலும், தமிழ்ப் புத்தகமானாலும் 50 ரூபாய் தான் விலை. அதை நீங்கள் வாங்கிப் படித்தால், பெங்க ளூர் ன்றத்தில் என்ன தான் நடைபெறுகிறது என்ற விவரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு மிக மோசமாகவும், மிக மிக அருவருக்கத் தக்க வகையிலும், நீதி மன்ற நடவடிக்கை களைக் கூட சீர்குலைக்கக் கூடிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தப் புத்தகங்களைப் படித்தால் நீங்கள் புரிந்து கொள்ள முடியும். எனவே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கு மாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு அருமை யான புத்தகம் - அவ்வளவு விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கக் கூடிய புத்தகங்கள். தமிழ் நாட்டுப் பத்திரிகைக்காரர்கள் வெளியிடாவிட்டாலும், அந்தப் புத்தகங்களுக்கு மதிப்புரையாவது எழுத மாட்டார்களா என்ற அந்த அற்ப ஆசையுடன்தான் இதைக் கூறுகிறேன்.

அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து, தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் - என்னென்ன புத்தகங்களுக்கோ நேரம் செலவழித்து மதிப்புரை எழுதுகிறார்களே, அதைப் போல இந்தப் புத்தகத்திற் காகவும் செய்ய வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...


இந்தப் புத்தகம் பரவினால் யாரை நாம் இன்றைக்குப் புனிதவதி என்றும், பொற்பாவை என்றும், எந்த மாசுமருவும் அற்றவர் என்றும், நம்முடைய மாதா என்றும், நம்முடைய அன்னை என்றெல்லாம் கருதிக் கொண்டிருக்கிறோமோ, அவரை அன்னை என்ற பொருளிலே அல்ல, அம்மை என்ற பொருளிலே சொல்கின்ற ஒரு கருத்துத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனவே பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி வெளி வந்துள்ள ஆங்கில, தமிழ்ப் புத்தகங் களை வாங்கி நீங்கள் படிக்க வேண்டும். தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களும் அவற்றை வாங்கிப் படித்தால், பல உண்மைகள், ஓ அப்படியா என்று வியக்கத் தக்க உண்மை கள் எல்லாம் அந்தப் புத்தகம் மூலமாக வெளி வரும். அவைகள் வெளி வந்தால், விரைவில் வெளிவர விருக்கின்ற நீதி மன்றத் தீர்ப்புக்கு, அது வழிகாட்டு வதாக இருக்கும். அது ஒரு அடையாளச் சின்னமாக இருக்கும். ஆகவே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

பத்திரிகையாளர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்!

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நீதி வழுவாமல் அரசர்கள் ஆண்ட நாடு தமிழ்நாடு. நீதி பிறழாத மன்னர் கள் ஆண்ட நாடு தமிழ்நாடு. நீதி தவறியது என்பதற்காக, தன்னுடைய மகனையே தேர்க்காலிலே இட்டுக் கொன்றான் மனு நீதிச் சோழன் என்று சொல்கின்ற பெருமைக்குரிய நாடு தமிழ்நாடு. அப்படிப் பட்ட தமிழ் நாட்டில் நீதி தவறுவது வாடிக்கையாக ஆகிவிட்ட ஒன்று. யாரும் தடுத்து உரைக்கக் கூடாத ஒன்று என்று பாராட்டப்படக் கூடிய நிலைமைக்கு நீதி போய்க் கொண்டிருக்கிறது. அந்த நீதியைக் காப்பாற்று வதற்காகவாவது, அந்த நீதியை மோசம் போகாமல் தடுத்து நிறுத்துவதற்காகவாவது நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இது நம்முடைய கட்சித் தோழர்களுக்கு மாத்திர மல்ல; நம்முடைய தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்தப் புத்தகங்களை படித்துப் பார்த்து, அவர்களுடைய கட்சிக்காரர்கள், உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அந்த நூல்களையெல்லாம் பரப்பிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பல விழாக் களிலே ஒரு விழாவாக இன்று நடைபெறுகிறது என்றில்லா மல், பிறந்த நாள் விழா என்று கருதிடாமல், நாம் தேர்தலிலே தோற்றாலும், அதை வெற்றியாகக் கொண்டாடுகிறோம், அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலம். ஏன் அப்படிக் கொண்டாடுகிறோம் என்றால், அண்ணா அவர்கள் பதினைந்து பேராக சட்ட மன்றத்திற்குள் சென்ற போது, ஏகடியம் செய்த ஆளுங் கட்சிக்காரர்கள் தலை குனிகின்ற அளவுக்கு, தன்னு டைய கழகத்தை நடத்திக் காட்டினார், வெற்றி பெற வைத்தார். அதைப் போலவே ஒரேயொரு ஆள் தான், துறைமுகம் தொகுதியிலே நான் வெற்றி பெறுகின்ற அளவுக்கு ஒரு சட்டமன்றத் தேர்தலிலே முடிவு ஏற்பட்டது. நான் ஒருவன் மட்டும்தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனேன். அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் ஆட்சி ஏற்படுகின்ற அளவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றிருக் கிறோம். ஆகவே நாம் தோல்வியிலும் வெற்றி காணுபவர்கள். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://www.viduthalai.in/page-4/81552.html#ixzz33inObF7A

vijayan said...

நெருக்கடி நிலையின் பொது எண்ணற்ற தி.மு.காவினரை மிதி மிதியென மிதித்த இந்திராவின் காலில் விழுந்த கருணாநிதி தன்மானத்தைபற்றி பேசலாமா?

தமிழ் ஓவியா said...


ஜெர்மனியில் தமிழர் தலைவர்: விமான நிலையத்தில் வரவேற்பு


ஜூன் 2ஆம் தேதி காலை சென்னை யில் புறப்பட்ட தமிழர் தலைவரும், பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் கி. வீரமணி, துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகிய இருவரும் ஓமான் விமானம் மூலம் மஸ்கட் வழியாக மாலை 6.30 மணிக்கு (ஜெர்மானிய நேரம்) பிராங்க்பர்ட் பன்னாட்டு விமான நிலை யத்திற்கு வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரித் நித்லஸ், (பேராசிரியர் மற்றும் தலைவர் தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய இந்தியயியல் மற்றும் தமிழ் உயராய்வு நிறுவனம்) மற்றும் இத்துறையில் பணி யாற்றும் சுவன் ஓர்ட்மான் ஆகிய இருவரும் வந்து வரவேற்று தங்கள் வருகை வருங்காலத்தில் பல நல்ல பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக அமையுமெனக் கூறி மகிழ்ந்தனர்.

பின்னர் பிராங்பர்ட்டிலிருந்து 250 கி.மீ. தொலைவில் இருக்கும் கொலோன் நகருக்கு ஜெர்மானியில் இயங்கும் அதி வேக ரயில் மூலம் (அய்ம்பது நிமிடங்களில்) அழைத்துச் செல்லப்பட்டார்கள். மேலும் இந்த நிகழ்வு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் கொலோன் பல்கலைக் கழகமும் 2012ல் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

பின்னர் கொலோனில் உள்ள இபிஸ் என்ற (Hotel IBIS) தங்கும் விடுதியில் தங்கி மற்ற பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

- என்னார்சி

Read more: http://viduthalai.in/e-paper/81573.html#ixzz33ojMKRzA

தமிழ் ஓவியா said...


23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை! மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி


பூனாவில் மதவெறி வன்முறையாட்டங்களில் முதற்பலி

23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை!

மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி

பூனா, ஜுன் 5- மோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை முகநூலில் தக வல் தொழில்நுட்ப பட்ட தாரி வாலிபரான 23 வய துள்ள மொஹ்சின் சாதிக் ஷேக் என்பவர் பதிவு செய்ததாக (எந்தவித ஆதா ரமும் இல்லை) குற்றம் சுமத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா மத வெறியர்களால் பூனா வின் பல்வேறு பகுதி களிலும் வன்முறை வெறி யாட்டங்கள் அரங்கேற்றப் பட்டன. இந்த வன்முறை வெறியாட்டங்களில் சிவ சேனைக்கட்சி, பாஜக, ஹிந்து ராஷ்டிர சேனா உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டனர். தர்மவீர் சிதை சாம்பாஜி மகராஜ் என்ற பெயரில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளது (31.5.2014).

வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு ஷேக் உயிரி ழந்ததை அடுத்து, முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது என்கிற குறுஞ்செய்தியை இந்துத்துவாவாதிகள் 25பேர் முதலில் அலை பேசிகள்மூலமாக பரப்பி உள்ளனர் என்று பூனாவின் காவல்துறை இணை ஆணையர் சஞ்சய்குமார் கூறுகிறார்.

குறுந்தாடியுடன் பச்சை நிற பதானி குர்தா அணிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஷேக்கை வழிமறித்து பூனா வுக்கு வெளியே ஹடாப்சர் பகுதியில் இருசக்கர வண் டியிலிருந்து கீழே தள்ளி விட்டு ஹாக்கி விளை யாட்டுத் தடியால் ஷேக்கின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர்மீது கல் எறிந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பதற்றமான அந்த பகுதியில் 12 மணி நேரத்துக் கும் மேலாக காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக் உடனிருந்த உறவி னர் ஒருவர் காயமின்றி தப்பியோடி மேலும் இருவரை அழைத்து வந்து ஷேக்கைக் காப்பாற்ற முயன்றுள்ளார். காப்பாற்ற வந்த அமீன் ஷேக்(30), இஜாஸ் யூசூப் பக்வான்(25) ஆகிய அவர்களும் தாக் கப்பட்டு காயமடைந்தனர்.

சிவாஜியின் சிலை சேதமானதாக ஏற்பட்ட வதந்தியை அடுத்து, ஹிந்து பெண் முசுலீம் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் வதந்தி பரவியதைத் தொடர்ந்து வன்முறைக் கும்பல் ஒன்று சேர்ந்து பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது. கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில், கைது செய்யப்பட்ட 13 பேரில் ஏழுபேர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களில் ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவரான தனஞ்செய் தேசாய்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தாக் கியவர்களின் இரு சக்கர வண்டிகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள் ளனர். வண்டிகளின் ஆவ ணங்களின்படி மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். பூனா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அனைவரை யும் ஜுன் 9ஆம் தேதிவரை காவலில் அடைக்க உத்தர வானது. கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக பூனா வைச்சுற்றி உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ராஷ்டிர சேனாவின் தலை வரான தேசாய்மீது பல் வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

கல வரங்களில், வன்முறையில் ஈடுபட்டு பணம்பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற் றங்களின் பின்னணியைக் கொண்டுள்ளவர் ராஷ்டிர சேனாவின் தலைவரான தேசாய் ஆவார்.

குறிப்பு: சமூகக் கல வரம் நடைபெற வேண் டும் என்ற தீய நோக்கத் தோடுதான் இந்த முகநூல் பதிவு நடந்துள்ளதுஎன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும். (கலவரம் பற்றிய விரிவான தகவல்கள் 2ஆம் பக்கத்தில் காண்க).

Read more: http://viduthalai.in/e-paper/81570.html#ixzz33ojZnChy

தமிழ் ஓவியா said...


முயல வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க் கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயல வேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/81581.html#ixzz33ok3R1tI

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் உண்மை முகம்!

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்து விட்டது என்றாலும், அதன் சிந்தனைகள் - செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை.

குறிப்பாக, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளும், செயல் முறைகளும் அப்படியே நகல் எடுக்கப்பட்டது போலத்தான் உள்ளன என்கிற ஒரு கருத்து, இவ்வளவு சீக்கிரத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற நிகழ்விலிருந்தே அது தொடங்கி விட்டது. வெளி நாட்டுப் பிரதமர்களை அதிபர்களைத் தம் பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததுகூட பழைய காலத்து மன்னர்களின் மனப்பான்மை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்ற பேரில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்தது - பலரும் எதிர்பாராதது!

பி..ஜே.பி.யை ஆதரித்தவர்களேகூட, மோடிதான் அடுத்த பிரதமர் என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் அனல் கக்கியவர்கள்கூட பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

வெளிநாட்டுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை இவைகளில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது என்று பல நேரங்களிலும் சொல்லப்பட்டு வந்தது உண்மை என்றாகி விட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை அயல் உறவுத் துறைகளில் ஆக்ரமித்துக் கொண்டுள்ள பார்ப்பனர் களும், மலையாளிகளும் ஈழத் தமிழர்ப்பிரச்சினையில் சிங்களவர்களுக்கு அண்ணன்மார்களாகத்தான் நடந்து கொண்டு வருகிறார்கள் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டே வந்திருக்கிறது.

அண்டை நாடுகளுடன் உறவு என்ற தேன் தடவப்பட்ட சொற்கள் கேட்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில், இந்தியா எப்படித் தான் நெளிவு சுளிவுகளுடன் நடந்து கொண்டாலும் அல்லது அவர்கள் மொழியில் நளினமாக நடந்து கொண்டாலும் சரி, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எந்த வகையிலும் இணக்கமாக இருந்ததில்லை.

உலகின் வல்லரசு ஆகத் துடிக்கும் 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை சுண்டைக்காய் இலங்கை இளக்காரமாகத்தான் பார்க்கிறது.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக முறித்துக் கொண்டதே - இதுதான் இந்தியாவை இலங்கை மதிக்கும் இலட்சணமா?

இந்தியாவுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றியுள்ளது? விரல் விட்டு சொல்லட்டுமே பார்க்கலாம்.

மனித உரிமைக் கவுன்சிலின் முன் போர்க் குற்றவாளியாக நிற்கும் ரத்த வெறி கொண்ட ஓநாயை மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தது - மனித உரிமையின் மீதோ, மனிதநேயத்தின் மீதோ அக்கறை உள்ளவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல.

காங்கிரசின்மீது அதிருப்தி இருந்தாலும்கூட மன்மோகன்சிங் பதவியேற்ற தருணத்தில்கூட ராஜபக்சே அழைக்கப்படவில்லையே!

அது ஒரு பக்கம் இருக்கட்டும்; ராஜபக்சே டில்லி வந்து சென்ற சில நாள்களிலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் - சிறைபிடிக்கப்படுகிறார்கள் என்றால் இதுதான் ராஜபக்சே மோடிக்குக் காட்டும் முதல் மரியாதையா!?

மோடி வந்தால் புது அத்தியாயம் பூக்கும் என்று முண்டா தட்டியவர்களின் முகமெல்லாம் இப்பொழுது கறுத்துப் போய் விட்டதே!

இது ஒரு பக்கம் என்றால், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் என்ன வாழ்கிறது? இந்தியப் பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு என்ற அபாய அறிவிப்பு வந்துள்ளது. முந்தைய அரசு பாக்கி வைத்து விட்டு சென்ற துறைகளை எல்லாம் இந்த அரசு பூர்த்தி செய்யத் தொடங்கி விட்டதோ!

பாதுகாப்புத்துறை என்பது எவ்வளவு முக்கிய மானது! இரகசிய கொள்கைகளும், திட்டங்களும் கொண்டது. கப்பலில் ஓட்டை விட்டுக் கொண்டு பயணம் செய்வது போல இத்துறையிலும் அந்நிய முதலீடு என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத்துறையை விற்பதற்கென்றே ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டது (Disinvestment Dept) அருண்ஷோரி தான் அதற்கு அமைச்சராகவும் இருந்தார்.

அதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த வகையில் முந்தைய அரசை முந்திக் கொண்டு ஓடி முதல் பரிசைத் தட்டிச் செல்லும் என்பதில் அய்யமில்லை.

வெகு சீக்கிரத்தில் பிஜேபி தன் முழு முகத்தைக் காட்டத் தொடங்கி விடும். (இலகான் ஆர்.எஸ்.எஸிடம் தானே உள்ளது) நாடு இதைப் பார்க்கத்தானே போகிறது!

Read more: http://viduthalai.in/page-2/81583.html#ixzz33okLAU41

தமிழ் ஓவியா said...

தெரியுமா உங்களுக்கு?

வெள்ளி, சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும் சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன் உச்சப்பிரகாசத்தை அடைகிறது. இதனால் அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தை கொண்ட கோள் வெள்ளியாகும்.

இது அதிகரித்த பச்சை வீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையை கொண்டுள்ளது. இது புவியை போல கற்கோளத்தை கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டதட்ட புவியினுடையதை ஒத்து போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம் 12092 கீலோ மீட்டர் நீளத்தை கொண்டது. வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது.

சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் 3 ஆக சுருங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் பார்ப்பதற்கு பிரகாசமாக இருப்பதுடன் சூரியனும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக்கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.

வெள்ளி கோள் பரப்பின் சூழல் தற்போது மனிதன் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளி கோள் பரப்பில் இருந்து 50 கிலோ மீட்டர் மேல் உள்ள வளிமண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரஜனை பெற்றுள்ளது.

அதனால் வெள்ளியின் வானில் மனிதர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது. காற்றினும் எடை குறைந்து மிதக்கும் நகரங்களை உருவாக்கி அதில் நிரந்தர குடியேற்றங்களை அமைக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33olXkJsj

தமிழ் ஓவியா said...


கோவில் - பக்திச் சமாச்சாரங்கள் கத்திக்குத்து - சாலை விபத்து - உயிரிழப்பு... இத்தியாதி... இத்தியாதி...


சென்னை, ஜூன் 5- மூட நம்பிக்கை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும், தகராறும் அன்றாடம் நடைபெறும் வழக்கமாகி விட்டது. அவற்றை தொகுத்து இங்கே கொடுக்கப் பட்டிருக்கிறது.

கோவில் விழாவில் தகராறு 4 பேருக்கு கத்திகுத்து 3 பேர் கைது

வாடிப்பட்டி அருகே கோவில் விழாவில் சாமி பெட்டி எடுத்து வருவதில் நடைபெற்ற தகராறில் 4 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி. இங்கு சடையாண்டி, காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் சாமி பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் சடையாண்டி கோவில் தெரு வைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பவர் வீட்டில் இருந்து சாமி பெட்டி கொண்டு வருவது வழக்கமாம்.

இந்த ஆண்டும் அவரது வீட்டில் இருந் சாமி பெட்டியை எடுத்து வந்தனராம். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் நீ சாமி பெட்டியை எடுத்து கொண்டு வந்து கொடுத்ததோடு விட்டுவிடு, நாங்கள் தான் சாமிபெட்டியை தூக்கி செல்வோம் என்று கூறினாராம்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துகிருஷ்ணன் அவரோடு வந்த முத்துமனோகரன், பாலமுருகன், முத்துராஜா, அழகர், முத்துகுமார் மற்றும் அடையாளம் தெரிந்த 4 பேர்களும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனராம்.

அந்த மோதலில் ராஜேந்திரன் அவரது உறவினர் களான முத்துகண்ணன், பிரபாகரன், கோபி ஆகியோரை முத்துக்கிருஷ்ணன் தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இதில் ராஜேந்திரனுக்கு கையி லும், முத்துகண்ணனுக்கு வயிற்றிலும், பிரபாகரனுக்கு மார்பிலும், கோபி என்பவருக்கு வலது மார்பு மற்றும் இடுப்பு பகுதியிலும் கத்திகுத்து காயம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன், முத்துராஜா, அழகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olqoGJ6

தமிழ் ஓவியா said...

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் சாவு



விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி

தாராபுரம் அருகே பேருந்துமீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் இறந்தனர். கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிய போது நடந்த இந்த விபத்து சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள பகலையூரை சேர்ந்த ராமசாமியின் மகன் தனபால் (வயது 33). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி அபிராமி(21). இவர்களுடைய 4 மாத குழந் தைக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று பெயர் சூட்ட திட்டமிட்டனர்.

இதற்காக கடந்த ஒன்றாம் தேதி பகலையூரில் இருந்து தனபால் தனது மனைவி அபிராமி (21), அம்மா சாந்தா (55) மற்றும் அண்ணன் திருமூர்த்தி (35), அண்ணி சிவசங்கரி (25), அண்ணன் மகள் ஹரிணி (7), சித்தி மகன் சந்தோஷ் (17) ஆகியோருடன் ஒரு வேனை வாடகைக்கு எடுத்து திருச்செந்தூருக்குப் புறப்பட்டு சென்றனராம்.

அந்த வேனை ஈரோடு மாவட்டம் சுப்பிரமணிய கவுண்டன் வலசு முல்லை நகரை சேர்ந்த தனக்கொடி யின் மகன் வெள்ளியங்கிரி(25) ஓட்டிச் சென்றார். திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற அவர்கள் அங்கு தனபாலின் 4 மாத குழந்தைக்கு ஹரீஷ் என பெயர் சூட்டி னார்கள்.

பின்னர் அவர்கள் இரவு திருச்செந்தூரில் இருந்து வேனில் புறப்பட்டு பகலையூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் மோட்டல் அருகே வேன் வந்தது. அப்போது திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை செங்கோட்டையைச் சேர்ந்த வேலுசாமி (45) ஓட்டினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த வேன் எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் வேன் பேருந்தின் அடிப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்தவர் கள் அலறினார்கள். பேருந்தில் இருந்து இறங்கிய பய ணிகள் வேனில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய வர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேனில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். பேருந்துக்கு அடியில் வேன் சிக்கிக்கொண்டதால் யாரையும் வெளியே எடுக்க முடியவில்லை. பின்னர் கிரேன் எந்திரம் மூலம் வேனை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். அப் போது வேன் அப்பளம் போல் நொறுங்கி இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்களை வெளியே கொண்டு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வேனின் கதவுகளை இரும்பு கம்பி மூலம் பெயர்த்து எடுத்து அதன்பிறகு வேனுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரையும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் அடைந்ததால் தனபால், குழந்தை ஹரீஷ், சாந்தா, சந்தோஷ் மற்றும் ஓட்டுநர் வெள்ளியங்கிரி ஆகிய 5 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ் பழனியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்க சேர்ந்து இருந்தான்.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருமூர்த்தி, அபிராமி, ஹரிணி மற்றும் சிவசங்கரி ஆகி யோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி திருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதில் ஓட்டுநர் வெள்ளியங்கிரி தவிர மற்ற 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயம் அடைந்த அபிராமி, ஹரிணி, சிவசங்கரி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olyVW2a

தமிழ் ஓவியா said...

சின்ன சேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனாம்



சின்னசேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினராம்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் குரும்பர் தெருவில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரபத்ரசாமியை குல தெய்வமாக வணங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊரணி பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

அப்போது, அவர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து வீரபத்ரசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாம்
அதன்படி நேற்று வீரபத்ரசாமிக்கு ஊரணி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, வீரபத்ரசாமியை மலர்களால் அலங் கரித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து, தோட்டப்பாடி காட்டுப்பகுதியி லிருந்து இன்னிசை மேள தாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நிகழ்ச்சி கோவில் வளாகத்தை வந்த டைந்தது. பின்னர், தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வரிசையாக அமர்ந்தனர். அப்போது கோவில் பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி னாராம்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33om5uziw

தமிழ் ஓவியா said...

பொம்மிடி அருகே இரு சக்கர வாகனம்மீது காட்டுப்பன்றி மோதி கோவில் புரோகிதர் சாவு



தருமபுரியில் இரு சக்கர வாகனம்மீது காட்டுப் பன்றி மோதி நிலை தடுமாறி கீழே விழுந்த கோவில் புரோகிதர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கொண்ட காரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60) கோவிலில் புரோகிதராக பணியாற்றி வந்தார். திங்கள்கிழமை புது வீடு திறப்பு விழாவிற்காக ராமமூர்த்தியை பொம்மிடியிலிருந்து முத்தம்பட்டிக்கு வீட்டு உரிமையாளர்களான நஞ்சப்பன், பழனி ஆகி யோர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மங்கலம் கொட்டாய் என்ற இடத்தில் செல்லும்போது காட்டுப்பன்றிக் கூட்டம் சாலையின் குறுக்கே வேகமாக வந்ததாம்.

காட்டுப்பன்றிக் கூட்டத்தின்மீது மோதாமல் இருக்க, இரு சக்கர வண்டியை திருப்பிச் செலுத்தி யுள்ளனர்.

மூர்க்கமாக இருந்த பன்றிக் கூட்டம், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மூவரையும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாம்.

இதில் படுகாயமடைந்த அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் கோவில் அர்ச்சகர் புரோகிதர் ராமமூர்த்தி உயிரிழந்தார்.

பன்றி மோதி உயிரிழந்த கோவில் அர்ச்சகப் புரோகிதரை கடவுள் காப்பாற்றவில்லையே என அனைவரும் புலம்பிக் கொண்டே சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33omBAfuI

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

இன்று உலகு சுற்றுச் சூழல் நாள். (ஜூன் 5). அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் உட்பட பகிரங் கமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறதே இது எப்படி!?

Read more: http://viduthalai.in/e-paper/81577.html#ixzz33omTQ43t

தமிழ் ஓவியா said...


கடவுள் அப்பீல் தள்ளுபடி


கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/page-7/81637.html#ixzz33ublZC4K

தமிழ் ஓவியா said...


பள்ளியில் நடந்த கதை


நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறி னாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33uc9PEHv

தமிழ் ஓவியா said...



விதி விதி என்று கூறி வீண்பொழுது கழிப்பார்கள், கேவல மான அடிமை உள் ளம் உடையவர்கள். முயற்சி செய்: முனைந்து உழை; ஓயாது பணியாற்று; வெற்றி நிச்சயம்.

-எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucGWplp

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியார் ஏழையா?

1-4-1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சங்கராச்சாரி பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது திருமதி. அனந்தநாயகி குறுக்கிட்டு சங்கராச்சாரியார் கால்நடையாகச் சென்று பக்தியை பரப்பி வருகிறார். அவரைப்பற்றி கணக்குப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று கேட்டார்.

அதற்கு அமைச்சராக இருந்த திரு. மு.கண்ணப்பன் அளித்த பதிலாவது:- சங்கராச்சாரியார் கால்நடையாகப் போகிறார் என்பதால் அவர் ஏழை என்று அர்த்தம் அல்ல. அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 3/4 லட்சம் ரூபாய் வருகிறது. மேலும் கால்நடையாகப் போவதற்கும் கணக்கு வைப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucLtEpD

தமிழ் ஓவியா said...

சர்க்கார் ஆட்சேபிக்காது!

ராமாயணம் வெறும் கட்டுக்கதை - பொய்: ராமன் கடவுள் அல்ல என்றெல்லாம் எவர் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் தடையில்லை..

நம் நாட்டில் தொன்று தொட்டு மத சம்பந்தமாக எவ்வளவோ வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன. ஒப்புக் கொண்டவர் சிலர்; ஆட்சேபித்தவர்கள் சிலர்; அதனால் மதத்தைப் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை சர்க்கார் ஆட்சேபிக்க வில்லை.

- நிதி அமைச்சர், 9-12-1954, (சென்னை சட்டசபையில்)

Read more: http://viduthalai.in/page-7/81639.html#ixzz33ucRTXkF

தமிழ் ஓவியா said...

அடடே!

சத்தியமூர்த்தி பவனில் காமராசருக்கு சிலை வைத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பிரபல கேரள ஜோதிடர் கூறியுள்ளாராம்; அப்புறம் என்ன அடுத்த ஆட்சி காங்கிரஸ்தான்.

எச்சரிக்கை!

நொறுக்குத் தீனிகளை சதா தின்று கொண்டே இருக்க குழந்தைகளை அனுமதியாதீர். அதுபோல மென் பானங்களைக் குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளாக்காதீர்!

இதனால் சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நாம் செயல்படுவோம்! என்ற இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தொடங்கப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81647.html#ixzz33ucqf5hW

தமிழ் ஓவியா said...


சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதா?

பிரதமராக ஆவதற்கு முன்னதாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்ற நரேந்திரமோடி அவர்கள் வங்காளத்துத் தேசத்தில் இருந்து இங்கே வந்துள்ளவர்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்; காளியை வழிபடாதவர்களுக்கு இங்கு வேலையில்லை என்று பேசினார்.

இப்பொழுது ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில் அஸ்ஸாமில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. எம்.பி.க்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் தன்மையில் வங்காளத்திலிருந்து இங்கு ஊடுருவியவர்கள் உடனே வெளியேறிட வேண்டும்; 15 நாட்கள்தான் கெடு! என்று கூறியுள்ளனர். வீட்டுக்கு வீடு வந்து சோதிப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை என்பது ஒன்று; அந்தச் சட்டத்தையே கையில் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்வது என்பது வேறு.

நியாயமான பிரச்சினையாக இருந்தால்கூட அதனை நேரிடையாகத் தீர்வு காண்பது என்ற முறையில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள எந்தக் குடிமகனுக்கும் உரிமை கிடையாது. அப்படி அவரவர்களும் சட்டத்தைக் கையில் எடுக்க ஆரம் பித்தால் அங்கு ஆட்சி இருக்காது - அராஜகம்தான் தாண்டவமாடும்.

பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் பற்றித் தெரிந்தவர்களுக்கு இதுபற்றி ஆச்சரியம் ஏற்படாது. காரணம் வன்முறை என்பது அவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும் - அவ்வாறே பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் - தயாரிக்கப் படுகிறார்கள்.

தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் தொகாடியா என்ன பேசினார்? குஜராத்தில் பாவ்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற பகுதிகள் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளாகும்.

அத்தகைய இடத்தில் இங்கு சில இஸ்லாமியர் குடும்பங்கள் குடியிருப்பது தெரிய வருகிறது. 48 மணி நேரத்துக்குள் இவர்கள் வீடுகளைக் காலி செய்யா விட்டால், கற்களையும் டயர்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். டயர்களைக் கொளுத்தி முஸ்லிம்களின் வீடுகள் மீதும், வியாபார நிறுவனங்கள் மீதும் தூக்கி எறிய வேண்டும்; கற்களை வீச வேண்டும் என்று பேசிடவில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 21.4.2014 பக்கம் 9).

மகாராட்டிரத்தில்என்ன நடந்தது? மகாராட்டிரத்தில் குடியேறியிருக்கும் பிகாரிகள் வெளியேறிட வேண்டும் என்று சிவசேனா கூறவில்லையா? இந்தியாவுக் குள்ளேயே வெளி மாநிலத்தவர் எங்கள் மாநிலத் திற்குள் நுழைய கூடாது என்பவர்கள் வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் சும்மா விடுவார்களா?

பி.ஜே.பி. 16ஆம் மக்களவை தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வாழும் இந்துக்களுக்கு இடர் ஏற்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக பி.ஜே.பி. அரசு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதே!

வெளி நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டும்தான் இருக்கிறார்களா? இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் அல்லாத முசுலிம்கள் இல்லையா? கிறித்தவர்கள் இல்லையா?

எடுத்துக்காட்டாக இந்தியாவைச் சேர்ந்த முசுலிம் கள் சிங்கப்பூர், மலேசிய, துபாய் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் பணி நிமித்தம் சென்றுள்ளார்களே - அவர்களுக்கு இடையூறுகள் என்றால் மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு கண்டு கொள்ளாமல் கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுமா?

பி.ஜே.பி. தேர்தலில் வென்று விட்டது என்ப தாலேயே அதன் இந்துத்துவா கொள்கைகளை அரசின் கொள்கையாக மாற்ற முடியுமா? வீட்டில்தான் அமைச்சர்கள் இந்துக்களே தவிர, வெளியில் வந்தால் அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி மதச் சார்பற்றவர்கள்தானே.

அரசுக்கு மதம் கிடையாது என்றுதான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. அப்படி இருக்கும் பொழுது தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி. எப்படி அப்படியொரு உறுதிமொழியைக் கூறுவது சரியாக இருக்க முடியும்?

தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு அதனைக் கொண்டு சென்றிருந்தால் அப்பொழுதே கூட இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

ஆட்சிவேறு, கட்சி வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல், மத்திய அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தினால் தேவையில்லாத வகையில் சட்டச் சிக்கல் ஏற்படும். அதனால் ஆட்சிக்கேகூட இடையூறு ஏற்படலாம். ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்பட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

Read more: http://viduthalai.in/page-2/81652.html#ixzz33ud6FBdW

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துக்களையும், நிகழ்ச்சிகளையும் பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக் கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
- _ (விடுதலை,9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/81651.html#ixzz33udE8B00

தமிழ் ஓவியா said...


மனித நேயம் மரித்துவிட்டதா?


நவிமும்பை ஜூன் 6 நவிமும்பை யில் உள்ள கலம்போலியில் இருந்து டோம்பிலிவிக்கு மகராஷ்டிரா மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது, அந்தப்பேருந்தில் சோனாலிப் பாட்டில் என்ற பெண் நடத்துநர் வழிநடத்திக்கொண்டு வந்தார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக நெரிசல் இல்லாமல் இருந்தது. அப்போது மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆலைத்தொழிலாளி பேருந்தில் ஏறி வாசலிலேயே நின்று இருக்கிறார். காலை நேரமாதலால் பேருந்தில் அதிக பேர் ஏறுவார்கள் ஆகையால் அந்த நபரை சோனாலி பாட்டில் படிகட்டின் மீது நிற்காமல் மேலே ஏறக்கூறினார். பல முறைகூறியும் மேலே ஏறாமல் இருக்கவே அவரைக் கண்டித்தார். உடனே கோபமடைந்த அந்த நபர் பெண் நடத்துநர் என்றும் பாராமல் அவரைத் தாக்கத் தொடங்கினார். இது அத்தனையும் அந்த பேருந்தின் பல பயணிகள் முன்பு நடந்துகொண்டு இருந்தது, இதனிடையே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன், அந்த நடத்துநரைக் பேருந்தை விட்டு கீழே தள்ளி அவரது ஆடையை கிழித்து உதைத்துள்ளார். பேருந்தை நிறுத்தி விட்டு காப்பாற்றச்சென்ற ஓட்டுநரை யும் பொதுமக்கள் அருகில் செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். சம்பவம் நடந்துகொண்டு இருந்த போது மற் றோரு அரசுப்பேருந்தும் அந்த இடத் தைக் கடந்து சென்றது.

இந்த நிலையில் நடத்துநர் அருகில் சென்ற வேறு ஒரு அரசுப் பேருந்தை நிறுத்தி சம்பவத்தைக் கூறியதும், அந்த பேருந்தின் ஓட்டுநரும் பெண் நடத்துநரும் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தனர். பிறகு அவரை டோம்பிலி மான் பாடா காவல்நிலையத்தில் ஒப்படைத் தனர். தாக்குதலுக்கு இலக்கான பெண் நடத்துநர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் அந்த பெண் நடத்து நர் முதலுதவிக்குப் பிறகு மருத்துவ மனையில் இருந்து வீடு சென்று விட் டார். அபிசேக் சிங் மீது இபிகோ 353 பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி யது, இபிகோ 323 கொலைமுயற்சி, இபிகோ 506 மற்றும் 427 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம், கல்யாண் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்றக்காவலில் வைக்க ஆணையிட்டார் இதன் படி அவர் கல்யாணில் உள்ள அந்தர்வாடி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 பேருந்து பயணிகள் முன் பாக ஒரு பெண் நடத்துநர் தாக்கப்பட்ட போதும் யாரும் தடுக்க முன்வராதது நாட்டில் மனித நேயம் செத்துவிட்ட தாகவே கருதவேண்டி இருக்கிறது

Read more: http://viduthalai.in/page-2/81654.html#ixzz33udYQIjA