Search This Blog

25.6.14

இராசி? ..ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது!




அது டெல்லி மாநில அரசுக்குச் சொந்தமான பங்களா; அதன் மதிப்பு ரூ.பல கோடி! ஆனாலும் அதில் குடியேற அமைச்சர்களும், அதிகாரிகளும் அஞ்சுகிறார்களாம்; கார ணம் அது இராசியில்லாத மாளிகையாம்!

சரி.. என்ன செய்யலாம்? விருந்தினர் மாளிகையாக மாற்றலாம் என்று முடிவு செய்துள் ளனராம்.


21ஆம் நூற்றாண்டில் - 2014இல் இப்படி ஒரு கூத்து! கல்வி வளர்ந்து என்ன பயன்? அறிவு வளரவில்லையே! நம் நாட்டுப் படிப்ப
ு வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சு என்று சொன்னாரே - பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அது தான் நினைவிற்கு வருகிறது.

ஒரு தகவலை நினைவூட்டினால் பொருத்தமாக இருக்கும். இவர் மெத்த படித்தவராயிற்றே! பெரிய பதவியை அலங்கரித்தவராயிற்றே. இவர் கூடவா இப்படி நடந்து கொண்டார் என்றுகூட மூக்கின் மேல் விரலை வைத்தாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை.


ஆனாலும் இவர் ஒரு இந்துத்துவாவாதி!


அவர் வேறு யாருமில்லை; முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிதான் அந்தப் பெரிய மனுஷர்!


முன்னாள் பிரதமர் என்ற முறையில் புதுடில்லியில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது.


ஆனா லும் அதில் குடியேற வாஜ்பேயி மறுத்து விட்டார். காரணம் அந்த வீட்டின் இலக்கம் எட்டு; எட்டாம் எண் அவருக்கு இராசியில்லையாம். என்ன செய்தார்கள் புத்திசாலியான அதிகாரிகள்? அவ்வளவு தானே? எட்டு என்பதற்குப் பதிலாக 6ஏ என்று மாற்றி விட்டார்கள். வேறு பங்களா என்று நினைக்காதீர்கள். அதே பங்களா தான் - எண் மட்டும் மாற்றம்.


சரி ஓகே என்று உள்ளே புகுந்து விட்டார் வாஜ்பேயி.


இவராவது ஓர் அரசியல்வாதி - இன்னொருவர் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பெயர் ஏ.என். குரோவர். அவரை திறந்த நீதிமன்றத்தில் கத்தியால் குத்தி விட்டார் ஒருவர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண் விழித்துப் பார்த்தார் - அது அறை எண் 13.

அய்யய்யோ என்று அலறினார்! வயிற்று வலியா ஏன்? இப்படி அலறுகிறார்?


அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது. 13ஆம் எண் அவருக்கு இராசியில்லாததாம். 13ஆம் தேதி அந்த வழக்கு; வழக்கின் எண்ணோ 13 அந்த வழக்கை விசாரிக்கும் பொழுதுதான் அவன் இவரைக் குத்தினானாம்.


சரி என்ன செய்தார்கள்? சுலபம்தான் 13 என்பதற்குப் பதிலாக 12A என்று மாற்றி விட்டார்கள் (அதே அறை தான்). சென்னை மாநகராட் சியில்கூட வீட்டு இலக் கம் 13 என்று குறிப்பிட மாட்டார்கள் - எல்லாம் இந்த மூடத்தனம்தான்.


ஆனால் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அடையாறு எண் மட்டும் 13 என்று இருந்தது.


மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவதென்றோ உயர்வ தென்றோ நானறியேன் என்றாரே புரட்சிக் கவி ஞர் பாரதிதாசன் - சும்மாவா?


------------------------ மயிலாடன் அவர்கள் 24-02-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

13 comments:

தமிழ் ஓவியா said...


சாய்பாபா கடவுளா? கிடையாது! அவருக்கு கோயில் கட்டக் கூடாது! சங்கராச்சாரியார் எதிர்ப்பு!

மும்பை, ஜூன், 24-_ சாய்பாபா அவதாரமும் கிடையாது, கடவுளும் கிடையாது, அவருக்குக் கோயில் கட்டக் கூடாது என்று துவாரகாபீட சங்கராச்சாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக் குரிய கருத்தினைக் கூறி யுள்ளார். சாயிபாபாவைக் கடவுளாக வழிபடுபவர்கள் ஏராளமானோர் உள்ள னர். நாடுமுழுவதும் அவருக்கு பல நகரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியார் கருத்தினை கூறியுள்ளார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும்வகையில் சாய்பாபா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்துக்களுக்கு சாய்பாபா தேவையில்லை என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சனாதன தர்மத்தில் கடவுள் விஷ் ணுவின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாய்பாபா கண் டிப்பாக கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவர் மாமி சம் சாப்பிடமாட்டார். அவரை குருவாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சங்கராச்சாரியாருக்கு கோவில் கட்டுவது அவசி யமற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சாய் பாபா பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

பகவான் சாயி என்று கூறப்பட்டு வந்தார்; அற்புதங்களைச் செய்யும் மகாசித்தி பெற்றவர் என்றும் சாயிபாபாபற்றி பரப்பி வந்தார்கள். ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. பக்தர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர் அவர் மரணித்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக் கத்தைகள் லாரிகளில் கடத்தப் பட்டன. அலமாரிகளில் பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகளும் (Hand Bags) நிரம்பிக் கிடந்தன என்ற விவரங்கள் தெரிந்ததே.

Read more: http://viduthalai.in/e-paper/82775.html#ixzz35boZzOzB

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


லூட்டி

செய்தி: சுவிட்சர்லாந்து கறுப்புப் பணப் பட்டியலை இதுவரை ஏதும் தரவில்லை. - நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்

சிந்தனை: சுவிட்சர்லாந்து பட்டியலைக் கொடுத்து விட்டது - நாளைக்கோ மறு நாளோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக நமது நாட்டு ஊடகங்கள் அடித்த லூட்டி அடேயப்பா கொஞ்சமா, நஞ்சமா?

Read more: http://viduthalai.in/e-paper/82781.html#ixzz35c4jYp3n

தமிழ் ஓவியா said...

சரியான திசையில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம்


மத்திய அரசின் சமூகநீதி அமைச்சரகத்தின் அங்கமான மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசு துறை, மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பொறுப்பு அதிகாரிகளைச் சந்தித்து, ஓபிசி ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், கொடுக்கப்படு கின்றனவா? என்று விசாரணை நடத்தி, விரைந்து எல்லா சலுகைகளும் ஓபிசி.களுக்கு கால தாமதம் செய்யாமல் வழங்க வலியுறுத்தியும், அவ்வாறு செய்யாமல் கால தாமதம் செய்யும் நிறுவனங்களை விரைந்து உரிமைகளை நடைமுறைபடுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 20ஆம் தேதி மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம், சிண்டிகேட் வங்கியையும் ஆய்வு செய்தார்கள். மத்திய நிதி அமைச்சரகம் தனது நவம்பர் 2013ஆம் ஆணையில் ஓபிசி நலச் சங்கத்தோடு வங்கி நிர்வாகம் ஆண்டிற்கு இரண்டு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஓபிசி நலச்சங்கம் செயல்பட இடம் வழங்கவேண்டும் என்றும், நலச்சங்கத்தின் இரண்டு நிர்வாகிகளுக்கு ஓபிசி ஊழியர்களின் குறைகளை அன்றாடம் கவனிக்கும் பணியில் ஈடுபடுத்த அனுமதிப்பது என ஓபிசி ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை வெளியிட்டது. மத்திய அரசின் ஓபிசி நலத்திட்டங்கள் சரியாக செயல்படுத்த படுகின்றனவா என்று விசாரணை செய்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஈஸ்வர், உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் சிண்டிகேட் வங்கியின் மண்டல அதிகாரிகளை சந்தித்து மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஈஸ்வர், கார்வேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சரியான முயற்சியாகும் இது. இந்த அமைப்புக்கு அரசமைப்புச் சட்டத் தகுதி கொடுக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக் கையாகும். இதுவரை அந்த வாய்ப்புக் கிட்டிய பாடில்லை. அப்படி ஓர் அதிகாரம் கிடைத்திருக்கு மேயானால், நேரடியாகவே துறைத் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியும்; தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும் வாய்ப்பும் ஏற்படும். அந்த நிலை கிட்டாத வரை ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டு தான் இருக்க முடியும். பிற்படுத்தப்பட்டவர்களுக்குக்கான வேலை வாய்ப்பு மத்திய அரசுத் துறைகளில் நியாயமாக அரசமைப்புச் சட்டம் செயல்படத் தொடங்கிய குடிஅரசு நாளிலிருந்தே (26.1.1950) கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பார்ப்பன அதிகாரம் தந்திரமாக அதனைச் செயல்படுத்தவில்லை. எவ்வளவோ தடைகளுக்குப் பிறகு சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக வந்த நிலையில்தான் திராவிடர் கழகத் தலைவரின் கடும் முயற்சியினால் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்ற வாசற் கதவைத் திறந்து விட்டார் 1990ஆம் ஆண்டு முதல்.

தமிழ் ஓவியா said...

அதனையும் உடனடியாக செயல்படுத்த விட்டார் களா உயர் ஜாதி ஆதிக்கவாதிகள்? உச்சநீதிமன்றம் சென்று முடக்கினார்கள்! 1992இல் தான் நடைமுறைக்கு வரும் சூழல் ஏற்பட்டது. அதிலும் கல்வியில் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வில்லை.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக அர்ஜூன்சிங் இருந்தபோது தான் கல்வியில் இடஒதுக்கீடுக்கு வகை செய்யப்பட்டது. அதுவும் எப்படி? ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அடிப்படையில் மூன்றாண்டுக்குள் 27 சதவீதம் என்றனர்; அதன் பின்னர் அது அய்ந்தாண் டாயிற்று. இவ்வளவு நடந்தும் நடைமுறையில் உள்ளது என்ன? மத்திய அரசுத் துறைகளில் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்து விட்டதா?

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரத்தில் உச்சிக் கொம்பில் இருக்கக் கூடிய செயலாளர்கள் 102 இல் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் கிடையாது.

கூடுதல் செயலாளர்களில்கூட ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டோர் கிடையாது.

முதல் பிரிவு (குரூப் ஏ) பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு இதுவரை கிடைத்துள்ள இடம் 6.9 சதவீதம் தான். இரண்டாம் பிரிவில் (குரூப் பி) அவர்களுக்குக் கிடைத்துள்ள இடம் 7.3 சதவீதம் மூன்றாம் பிரிவில் (குரூப் சி) பிற்படுத்தப்பட்டோர் 15.6 சதவீதம்தான் ஒட்டு மொத்தமாக 1 முதல் 4 வரை பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ள சதவீதம் 14.8 தான்.

இதற்கு என்ன காரணம்? எந்த இடத்தில் முட்டுக்கட்டை? திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருந்த போது இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாத அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண் டனை குறித்துப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

அந்தப் பரிந்துரை மட்டும் நடைமுறைக்கு வந்திருந் தால் பிற்படுத்தப்பட்டோருக்குச் சட்டப்படி கிடைத் திருக்க வேண்டிய விகிதாசாரம் நிச்சயம் கிடைத் திருக்கும்.

காலந் தாழ்ந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கான அரசமைப்பின் சட்ட அங்கீகாரம் அளித்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/82786.html#ixzz35c4xA3At

தமிழ் ஓவியா said...


அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



சென்னை, ஜூன் 24- தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரி கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை. இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்பு வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக் கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத் திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண் டும் என உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-இன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய் யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தர விட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தர விட்டுள்ளார்.

கருணை அடிப்படையில் வழங் கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம் பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த வேண்டும்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/82798.html#ixzz35c5PiCI9

தமிழ் ஓவியா said...


தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள்


1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது.

அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.

கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார்.

1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார்.

சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-3/82797.html#ixzz35c6l57MY

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் பட்டாசு வெடித்து இரண்டு பேர் பலி


கள்ளக்குறிச்சி, ஜூன் 25_ விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்தில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமி வீதி உலாவின்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காண அப் பகுதியைச் சேர்ந்த ஏரா ளமானோர் திரண்டிருந் தனர். அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் வாண வெடி களை வெடித்து கொண் டிருந்தார்.

அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அருகில் சாக்கு மூட்டையில் மொத்தமாக வைத்திருந்த பட்டாசு குவியலில் விழுந் தது. இதனால் அனைத்து வெடிகளும் ஒரே நேரத் தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

இந்த வெடி விபத்தில் சிக்கி சப்பாணியும், வாண வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பித்தன் (40) ஆகிய இருவரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ரதி (29), இவரது மகள் சந்தியா (4) மற்றும் தீபா (15), கோமதி (15), கோகிலா (13), பழனி யம்மாள் (32), சித்ரா (29), லட்சுமி (50), சுப்பிர மணியன் (45) உள்பட 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம்பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. குணசேகரன் கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்துக்குச் சென்று நேரில் விசா ரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read more: http://viduthalai.in/e-paper/82845.html#ixzz35hA1oUov

தமிழ் ஓவியா said...


உடல் ஒன்று - உயிர் மூன்று


ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும் _ உடல் மூன்றுமாயிருக்கின்றன.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/82848.html#ixzz35hAMTOGC

தமிழ் ஓவியா said...


சீச்... சீ... இந்தப் பழம் புளிக்கும்




உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஏற்க மறுக்கப்பட்ட மன்னார்குடி கோபால் சுப்ரமணிய அய்யர் வாபஸ் கேட்கிறார்!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், அவர் நீதிபதிகள் நியமன பட்டியலில் இருந்து தன் பெயரை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 4 பேர் பெயரை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அவற்றில், கோபால் சுப்பிரமணி யத்தை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல், பரிந்துரையை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தலைமை நீதிபதி லோதாவுக்கு கோபால் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் நீதிபதி நியமனத்துக்கான பட்டியலில் இருந்து என் பெயரை நான் விலக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/82904.html#ixzz35nMtZ1A9

தமிழ் ஓவியா said...


ஒரு மாத கால பிஜேபி ஆட்சி

முந்தைய மன்மோகன்சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகம் எங்கும் தேக்கமடைந்த பொருளாதார சரிவு போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வில் விலைவாசி உயர்வு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பல பொய்களைக் கூறி பெரும் அறுவடை செய்து பா.ஜ.க. அரசு பதவிக் கட்டிலில் அமர்ந்தது.

பிரச்சாரம் முதலே விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, சமமான கல்வி போன்றவை தான் முக்கியமாக இருந்தது. இந்த மூன்றுமே மக்களின் அடிப்படை தேவைகள் ஆகையால் எளிதில் நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சியினரையும் பின் வாங்க வைத்து விட்டார் மோடி.

ஆனால் நடந்தது என்ன?

இதோ 30 நாட்கள் அரசின் நடவடிக்கை குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாத்திரமே மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து நல்லாட்சி என்று கூறியுள்ளனர். மற்ற 75 விழுக்காடு மக்கள் மோடியின் ஆட்சியை வசைபாடித் தாக்கியுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சினையை மய்யமாகக் கொண்டு மோடியின் ஆட்சியை வெறுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் விலைவாசி மற்றும் சிக்கலான நடவடிக்கைகளில் கை வைப்பார்கள். ஆனால் மோடியோ ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே தனது பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் விலைவாசி உயர்விற்கு சமிக்ஞை காட்டி விட்டார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் வரவு செலவு அறிக்கையில் மானியங்கள் குறைக் கப்படும் என்ற அபாய அறிவிப்பு வேறு வந்துள்ளது.

இது வட மாநிலங்கள் முழுவதிலும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது அரசு விவசாயிகளுக்குத்தான் அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. அப்படி மானியம் குறைக்கப்படும் போது விவசாயப் பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மராட்டியம் குஜராத் மத்தியப் பிரதேசம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில் மானியம் குறைக்கப்படுமேயானால் அரசே தற்கொலைக்கு தள்ளி விடும் நிலை உருவாகி விடும்.

தமிழகத்திலும் மோடி அரசு குறித்த வெறுப்பலை அதிகமாகவே வீசுகிறது. முக்கியமாக இதுவரை எந்த அரசும் மாநில அரசின் மொழிக் கொள்கையில் தலையிடாமல் இருக்கும்போது, தடாலடியாக இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பை துவங்கியுள்ளது. இது தமிழகம் மாத்திரமில்லாமல் பல மாநிலங்களிலும் பெரிதும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சிற்காக ஒரு அறிக்கையை விட்டு இந்தி திணிப்பை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறினாலும், உள்ளூர் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்தி வழக்கு மொழி அல்லாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்களை மெல்ல மெல்ல தலைமைப் பதவிக்கு அமர்த்தும் வேலை நடக்கிறது. இது அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ரயில்வே மற்றும் மத்திய வெகுசன அலுவலகங் களான பாஸ்போர்ட், கனரக தொழிற்சாலை, வங்கிகள் போன்றவற்றில் இந்த மாற்றம் வெகுவாக நடந்து வருகிறது.

ரயில்வே தேர்வில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாத்திரமல்லாமல் இந்தி பேசும் மாநிலத்த வர்களை அதிகம் தென் மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது.

30 நாட்களில் மோடியின் அரசு மோசமான அரசாக அமைந்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிஜேபியினர் என்னென்னவெல்லாம் பேசினார்கள்! ஆளும் கட்சியான நிலையில் வேறு குரலில் பேசுவதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.

நாடாளுமன்ற கூட்டம் நடத்திட சில நாள்களே உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள் ளனர் - இப்படி செய்வது கொல்லைப் புறவழியில் கொள்ளையடிப்பது என்று கூறினவர்கள்தான் - பட்ஜெட் கூட்டத்துக்கு முன் ரயில் கட்டணத்தை இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/82910.html#ixzz35nNagx3c

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில் தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

Read more: http://viduthalai.in/page-2/82909.html#ixzz35nNlzQq1

தமிழ் ஓவியா said...


புனித நீர்: கங்கை நீரால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம்



அய்தராபாத், ஜூன் 26 அய்தராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்ப மேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

*கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றபின் தெரிவித் திருந்தார். ஆயினும், இதில் எதிர் பார்க்கப்படுவதைவிட அதிக நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே உண்மை நிலவரமாகும்.

*பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந் ததாக சோதனை மய்யத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோ மியம் அத் தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக் கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசி எம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறு களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்று ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

*கங்கையில் சேரும் இந்த அசுத்தங்கள் கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளின் மூலமாகவே கலப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில் நுட் பம் கங்கையில் பயன் படுத்தப் படவேண்டும்என்றும் அவர் கூறி னார். இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன்மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பதாக இவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/82912.html#ixzz35nNuWxuA

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள்

சர்வதேசத் தொழில் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்த பிறகு 22 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த மகாராஷ்டிரா மாநில தொழில்துறை வளர்ச்சி 2008 முதல் வெகுவேகமாக சரிவை நோக்கி சென்றது.

பொருளாதார நிபுணர் களுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால் வெகுவிரைவிலேயே ஒரு உண்மை தெரிந்தது. உதிரி பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு வெகுவேகமாக சரியத்துவங்கியது. இதன் சங்கிலித்தொடர் பாதிப்பு இந்தியப் பொருளா தாரத்தையே புரட்டிப்போட்டது.

காரணம் குட்கா என்னும் போதைப்பொருள் 9 வயதில் இருந்து 27 வயதிற்குள்ளானவர்களை பாதித்தது, இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 23 விழுக்காடு இளம் தலைமுறையினர் அடிமையானார்கள். 2012 மாத்திரம் மராட்டிய மாநில சுகாதாரத்துறை புகையிலை போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடிகளை செலவு செய்தது. உடனடியாக ஆபத்துகால நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர மாநிலம் குட்கா என்னும் போதைப்பொருளைத் தடை செய்தது மட்டுமல்லாமல் விற்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்கு அனுப்பியது. இதனை அடுத்து மிகவும் அபாயகரமான இந்த போதைப்பொருளின் ஆபத்தை உணர்ந்த பல மாநிலங்கள் தடைசெய்தது.

இன்றும் போதைப்பொருள் இந்திய பொருளாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தும் பொருளாகவே திகழ்கிறது, இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் போதை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு அய்.நா தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் உபயோகிப்பவர்களாக உள்ளனர் என்று அய்.நா அறிக்கையில் கூறுகிறது. போதை என்றாலே பொரும்பாலானோர் மது மற்றும் புகையிலைத்தொடர்பானவைகள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அநேகமாக நடக்கிறது, எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருட்கள் கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் ஊக்க மருந்து ஒயிட்னர் மற்றும் சிலவகைப் பெயிண்டுகள் கூட போதை வஸ்துக்களாக பயன்படுத்தப்படுகின்ற்ன. இவை உடல்மனது இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் கேடாக அமைந்து விடுகிறது,

அறியாமை விரக்தி உளவியல் குறைபாடுகள் பொழுதுபோக்கு தற்காலிக உற்சாகம் தேவைப் பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது, இதுவே பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவருமே போதைப்பொருள் உபயோகித்து வருகின்றனர். . ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகிறது ஒரு ஆயுதம் போதைப் பொருளாகும். உலகில் வர்த்தகத்தில் இராணுவத் தளவாடம் மற்றும் எரிஎண்ணெய் வர்த்தகத்திற்கு இணையாக போதைப்பொருள் வணிகம் உள்ளது. மற்ற இரண்டும் சட்டரீதியாக என்றால் போதைப்பொருள் சட்டவிரோத வணிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது, ஆகவே போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். விற்பனையை தடைசெய்தால் மாத்திரமே இதனைத் தடுக்கமுடியும்.

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985_இன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ஆம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல் படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-3/82927.html#ixzz35nOUQ2nl