Search This Blog

23.6.14

கடவுள் தர்பாரில்! - தந்தை பெரியார்


இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.

பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்தினம்.
காலம்: ஊழிக் காலம்


கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம், இன்றைய கணக்கென்ன?

சித்திரபுத்திரன்: சர்வலோகப் பிரபு! சர்வஞானப்பிரபு! சர்வவல்லப! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞை யையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்ஞை செய்கிறான்.)

யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண் டேன் என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.


சித்திரபுத்திரன்: (கடவுளை நோக்கி) இன்றைய கணக்குப்படி இவ்விரு மானிடர்களும் விசாரிக்கப்பட வேண் டியவர்கள்.

கடவுள்: சரி, விசாரி

சித்திரபுத்திரன்: (ஞானசாகரனை நோக்கி) இப்படி வா, உன் நாம தேயமென்ன?

ஞானசாகரன்: என் நாமமும், தேயமும் தங்கள் கணக்கில் இருக்குமே.

சித்திரபுத்திரன்: சீ! கேட்ட கேள்விக்கு பதிலிறு. இது பூலோக கோர்ட்டல்ல என்பதை ஞாபகத்தில் வை.
 
ஞானசாகரன்: இது பூலோக கோர்ட்டாயிருந்தால் என் நாமதேயத்தை சொல்லித்தான் தீர வேண்டும். ஆனால் தங்கள் சமூகத்திற்கு முற்காலம், தற்காலம், பிற்காலம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.
சித்திரபுத்திரன்: சீ! அதிகப்பிரசங்கி! வாயை மூடு. கேட்ட கேள்விக்குப் பதில் சொல். இல்லாவிட்டால் பார் அங்கே (யமனைச் சுட்டிக் காண்பிக்கிறார். யமன் உதட்டை மடக்கி நாக்கைக் கடித்துக்கொண்டு கதாயுதத்தை எடுத்து கழற்றிக்காட்டிஞானசாகரனைப் பயமுறுத்துகிறான்)

சித்திரபுத்திரன்: (மறுபடியும்) உன் நாமதேயமென்ன?

ஞானசாகரன்: என் பெயர் ஞானசாகரன்.

சித்திரபுத்திரன்: எந்த தேசம்?

ஞானசாகரன்: ஆப்கானிஸ்தானத் திற்கும், பெல்ஜிஸ்தானத்திற்கும் மேற்கேயுள்ள இந்துஸ்தானத்திற்கு தெற்கேயிருக்கும் ஆராய்ச்சி ஸ்தானம் என் தேயம்.

சித்திரபுத்திரன்: உன் ஊர் எது?

ஞான: ஞான புரி

சித்தி: உன் மதம் என்ன?

ஞான: சுயமரியாதை

சித்தி: அதன் கொள்கைகள் என்ன?

ஞான: எவனும் தன்னை மற்றவனை விட பிறவியில் தாழ்ந்தவனென்றோ, உயர்ந்தவனென்றோ மதிக்கக்கூடாது. தன்னைத் தாழ்ந்தவனென்று நினைத் தால் தன்னைத்தானே இழிவுப்படுத்திக் கொள்வதாகும். மற்றவனைவிட தன்னை உயர்ந்தவனென்று நினைத்தால் பிறரை இழிவுபடுத்துவதாகும். அதாவது சமத்துவம், சகல சொத்தும் எல்லோ ருக்கும், சமசுதந்திரம், உண்மை விளக்கல், அனைத்துயிர் ஒன்றென்றெண்ணல், அரும்பசியெவருக்கும் ஆற்றல், மனத்துள்ளே பேதாபேதம், வஞ்சம், பொய், சூது, சினம் ஆகியவற்றைத் தவிர்த்தல்.

சித்தி: உன் மதத்தின் கடைசி லட்சியம் யாது?

ஞான: மக்களில் எந்த ஜீவனுக்கும் யாதொரு கெடுதியும் செய்யக்கூடாது. எல்லா ஜீவன்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

கடவுள்: அப்படியா சமாச்சாரம் (ஞானசாகரனை மேலும் கீழும் பார்த்து) இருக்கட்டும் உன் காலட்சேபம் எப்படி?

ஞான: உடலைக் கொண்டு மனதார உழைத்து நல்வழியில் சம்பாதிப்பது. அதை நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமாய் உண்டு ஆனந்த மாயிருப்பது

கடவுள்: உன் வாழ்க்கைக் கடனை யெல்லாம் கிரமப்படி நடத்தி வந்தி ருக்கிறாயா?
ஞான: என் வாழ்க்கையில் நான் கடன் படவில்லை.

கடவுள்: எப்போதாவது திருடின துண்டா? பொய் சொன்ன துண்டா? பொய்க் கையெழுத்திட்ட துண்டா?

ஞான: இல்லை! இல்லை! இல்லவே இல்லை!கடவுள்: சிரார்த்தம் முதலிய சடங்குகளையும், வருணாசிரம தருமங்களையும் அனுசரித்து வந்தாயா?ஞான: அதைப்பற்றி நான் ஒரு சிறிதும் கவலை கொண்டதே இல்லை.


கடவுள்: அப்படியா! நீ அவைகளைக் கிரமமாய்ச் செய்யவில்லையா?ஞான: ஒரு நாளாவது அதைப் பற்றி நினைத்ததேயில்லை.


கடவுள்: எம்மிடத்திலாவது சரியாய் பக்தி செலுத்தி அபிஷேகம், பூஜை, உற்சவம் ஆகியவைகளை சரியாய்ச் செய்து வந்தாயா?

ஞான: அதுவும் இல்லை. உங்களைப்பற்றி எண்ணவே எனக்கு நேரமில்லை. கஷ்டப்படவும், சம்பாதிக் கவும், அவைகளை ஏழைகளுக்கு உதவவும், மீதி நேரங்களில் மற்ற ஜீவன்களுக்கு உழைக்கவுமே சரியாய் இருந்தது என் வாழ்நாள்

கடவுள்: அப்படிப்பட்டவனா நீ! சடங்கு செய்யவில்லை! வருணாசிரம தர்மப்படி நடக்கவில்லை! எமக்கும் பக்தி பூசை முதலியவை செய்யவில்லை! சண்டாளனாகிவிட்டாய்! எமதர்மா! இவனை மீளாநரகில் தள்ளு.


கடவுள்: (மற்றொருவனைப் பார்த்து) ஹே! நரனே! உன் பெயரென்ன?

நரன்: பக்தரத்னம்

கடவுள்: உன்மதமென்ன?

பக்த: கடவுள் சர்வ வல்லமையுள் ளவர், கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதோடு சதா சர்வகாலம் கடவுளை நினைத்துக் கொண்டு அவருக்கு பூஜை உற்சவம் செய்வது.

கடவுள்: சந்தோஷம்! உன் தொழில் என்ன?

பக்த: என்ன வேலையாவது செய்து பணம் சம்பாதிப்பது,

கடவுள்: அப்படி என்னென்ன வேலை செய்தாய்?

பக்த: நன்றாய்த் திருடினேன், போலீசு உத்தியோகம் செய்து லஞ்சம் வாங் கினேன், வேலை போய்விட்டது என் றாலும் பிறகு வக்கீல் வேலை செய்தேன். வியாபாரம் செய்து வியாபாரத்தில் மக்களை ஏமாற்றிக் கொள்ளை யடித்தேன். லேவாதேவி செய்து, கொள்ளை வட்டி வாங்கி பொய்க் கணக்கெழுதி ஊரார் பொருள்களை நன்றாய் அபகரித்தேன்.

கடவுள்: அப்படி எவ்வளவு சம் பாதித்தாய்?

பக்த: லட்சக்கணக்கிலிருக்கும்

கடவுள்: பணத்துடன் இன்னும் ஏதா வது சம்பாதித்ததுண்டா?

பக்த: பக்கத்து வீட்டான் பெண் டாட்டியையும் நான் அடித்துக் கொண்டு வந்து என் சுவாதீனத்தில் வைத்துக் கொண்டிருந்தேன். அதனாலும் எனக்கு வரும்படி யுண்டு.

கடவுள்: உனக்கு சொந்த மனைவி மக்கள் இல்லையா?

பக்தன் ஆம் உண்டு.
கடவுள்: நீ அவர்களைக் கைவிட்டு விட்டால் அவர்களுக்கு யார் துணை?

பக்தன்: அவர்களை நான் கைவிட வில்லை, அவர்களைக் கொண்டு தான் நான் உத்தியோகம் பெற்றது. அவர்களை உபயோகித்துத்தான் பணமும் சம் பாதித்தேன்.


கடவுள்: அந்தப் பணத்தையெல்லாம் என்ன செய்தாய்?

பக்தன்: காசிக்குப் போனேன், கங்கையில் மூழ்கினேன், ஆயிரம் பிராமணருக்கு அன்னதானம் செய்தேன், லிங்கப் பிரதிஷ்டை செய்தேன், கடவுளுக்கு லக்ஷ்தீபம் ஏற்றி வைத்தேன். பிதுர்க்கள் சடங்கு முதலியவைகளை கிரமமாய்ச் செய்து வந்தேன். என் வரு ணப்படி நான் உயர்ந்த ஜாதியானாகவே இருந்து வந்தேன், யாரையும் தொட மாட்டேன், கீழ் ஜாதியான் சாவதாயி ருந்தாலும் ஒரு மடக்குத் தண்ணீர் கொடுத்துப் பாவியாகமாட்டேன. சதா தங்கள் ஞாபகமே.


கடவுள்: ஓ! எம்மைத் துதித்தாய்! எம்மை நம்பினாய்! எனக்கு பக்தி செலுத்தினாய்! மிகச் சந்தோஷம்! முதலையுண்டபாலனை அழைத்தது, குதிரையைக் கூடிப்பாயசம் பருகிய கௌசலையின் கர்ப்பத்துக்குள் யாம் புகுந்து குழந்தையாய் (ராமனாய்) பிறந்தது, இறந்துபோன ஜலந்தரா சூரன் சவத்துக்குள் புகுந்து அவன் பத்தினியை ஏமாற்றிப் புணர்ந்தது முதலிய எமது திருவிளையாடல்கள் உனக்குத் தெரியாதா?


பக்தன்: ஆம் பிரபு நன்றாய்த் தெரியும். தங்களிடம் என் நம்பிக்கையையும், இன்னும் அதிகமான பக்தியையும் காட்ட இவைகளை விட இன்னும் பெரிய புராணங்கள் இல்லையே என்று வருத்தமும் பட்டேன்.

கடவுள்: மெச்சினோம்! மெச்சினோம்! ஹே! சித்திரபுத்திரா! இந்த பக்தனை நமது சொர்க்கத்திலேயே இருத்தி அப்ஸரஸ்திரீகளைக் கொண்டு வந்து விடு, சுகமாய் இந்த மோக்ஷ்த்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும், அவன் ஆசை தீர்ந்த பிறகு மறுபடியும் நரனாப்பிறந்து மேற்கண்ட நற்கருமங் களைச் செய்து இதுபோல் நம்மை வந்தடையட்டும்.
                      ------------------------------------------தந்தை பெரியார்- குடிஅரசு 1-10-1949

16 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

விளக்கு

மோகனூர் சிவன் கோவிலில் கருவறை விளக்குச் சுடர் எவ்வளவுக் காற்றடித்தாலும் அணையாது எரியும். இங்குள்ள இறைவனுடைய பெயர் அசலதீபேஸ்வரர். இதன் பொருள் அணையாத விளக்குச் சுடராம்.

சவாலை சந்திக்கத் தயார் என்றால் சோதனை செய்ய நாங்கள் தயார்! கொசுறு ஒன் றுண்டு; எண்ணெய் இல்லாமல் அந்த விளக்கு எரியுமா? எண்ணெய்த் தீர்ந்து போன பிறகும் அணையாமல் எரியுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82717.html#ixzz35W0JnGzc

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்


பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

Read more: http://viduthalai.in/page-2/82727.html#ixzz35W1JZ1qg

தமிழ் ஓவியா said...


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:


அய்.அய்.டி. அனுமதிக்கான தேர்வில், பிற்படுத்தப்பட்டோர் சாதனை:
சமூக நீதிக்கும் - பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி

-குடந்தை கருணா

அய்.அய்.டி கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் யிணிணி தேர்வினை சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் எழுதி, அதில் 27000 தேர்வு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அய்.அய்.டியில் 9784 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு தரப்பட்ட நிலையில், ஓபிசி மாணவர்களுக்கு 2641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, நடத்தப்பட்ட தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் 4085 பேர், பொதுப்போட்டியிலும் வெற்றி பெற்று, மொத்தம் 6726 மாணவர் கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

முந்தைய அய்க்கிய முற்போக்கு முன்னணி அரசில் 2005 ஆம் ஆண்டு, அன்றைய கல்வி அமைச்சர் அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு அளித்திடும் மசோ தாவை நிறைவேற்றினார். அது உச்ச நீதிமன்றத்தில், பார்ப்பனர் களால் தடை பெற்று, பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து 2008 முதல், அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப் பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதி, திறமை குறைந்துவிடும் என பார்ப்பனர்கள் கூறி வந்த நிலையில், தற்போது, இந்தியாவில் மிகக் கடினமான தேர்வாக கருதப்படும் JEE தேர்வில், பொதுப்போட்டியில், பார்ப்பனர்களை பின்னுக்கு தள்ளி, 4085 மாணவர்கள் தேர்வு பெற் றுள்ளனர் என்பது சமூக நீதிக்கும், பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

Read more: http://viduthalai.in/page-2/82733.html#ixzz35W1TGb6Z

தமிழ் ஓவியா said...


கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

கருநாடக முதல்வருக்கு வேண்டுகோள்

இந்தியா பெரும்பகுதி கிராமப்புறங்கள் நிறைந்த நாடாகும். அதே போன்று கருநாடக மாநிலத்திலும் கிராமங்கள் நிறைந்துள்ளன. மேலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா கிராமப்புற மக்களுக்கும் சரி நிலையில் சென்றடை யாமல் உள்ளன. அந்த வகையில் முதலும் தலைமையானதுமான கழிப்பிட வசதியை எல்லாக் கிராமப் புற மக்களுக்கும் செய்து தர வேண்டும். கிராமப்புறங்களிலுள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணியை தீவிர சிறப்புத் திட்டமாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்படவேண்டும்.

மனிதநேய மிக்க செயல்பாடுகளில் முக்கியம் கருதி செயல்படும் கருநாடக மாநில முதலமைச்சர் அவர்கள் இன்றி யமையாத எல்லா வீடுகளுக்கும் கழிவறை கட்டும் திட்டத்தினை செயல்வடிவம் கொடுத்து இரண்டு நிதியாண்டிற்குள் முடித் திடும் வகையில் பணிகளை மேற்கொண்டு முடித்திட வேணுமாய் முதலமைச்சர் அவர் களை மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கிராமப்புற பெண்கள் கழிவறைகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்துகின்ற விழிப்புணர்வை தொண்டு நிறுவனங்களின் மூலம் ஏற்படுத்த வேண்டும். சமூக முக்கியத்துவம் பணிகளைச் செய்வதில் இந்தியாவிலேயே கருநாடகம், முதன்மை யாதென்ற செயலிலும், முதன்மையான தென்றே வரலாற்றுச் சுவடினை உரு வாக்கிட வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறியது போல், சமூகச் சீர்திருத்தங்களை கிராமப் புறங்களில் இருந்து முதலில் தொடங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படை யில் எல்லா கிராமபுறங்களிலுள்ள வீடு களுக்கு கழிவறைகளும், தாலுக்கா தலை மையிடங்களில் பொதுக் கழிவறைகளை அமைக்க வேணுமாய் மிகுந்த அக்கறை யுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

- எம். ஜானகிராமன், தலைவர், கர்நாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு

Read more: http://viduthalai.in/page-2/82732.html#ixzz35W1gcBTD

தமிழ் ஓவியா said...


உடலை சீராக வைத்திருக்கும் புரோட்டீன் உணவுகள்


ஆரோக்கியம் தரும் பருப்பு வகை சமையல்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றிமையாதது. அத்தகைய புரோட் டீன்கள் நிறைய உணவு வகைகளில் உள்ளன.

அதிலும் அசைவ பிரியர்களுக்கு இறைச்சி, முட்டை, போன் றவை உள்ளது. ஆனால், சைவத்தை சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மட்டுமின்றி வேறு சில ஊட்டச்சத்துகளும் நிறைந்துள் ளன. அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் பருப்புகளிலேயே பல வகைகள் உள்ளன. அது ஓவ்வொன்றும் பல சத்துக்களை கொண் டுள்ளது. அவற்றில் பொதுவான ஓன்று என்றால் அதில் குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம்,.

மேலும் இதனை தொடர்ச்சியாகவும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். நாம் பருப்புகளின் வகைகளையும் அவற்றின் பயன் களையும் அறிவோம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நிறைந்த அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டா சியம், அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்ப தற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டு மல்லாமல் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தால் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சைபயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன் கால்சியம், பொட்டாசியம் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் உணவுகள் எளிதில் செரிமானமடைவதோடு உடல் எடை மறறும் கொலஸ்ட் ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புசத்து, காப்பர், மாங்கனீசு, போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டக்கடலையின் ஒரு வகை தான் இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புசத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சினை களையும், ரத்தசோகை பிரச்சினைகளையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட் மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலைவிட இரு மடங்கு அதிக புரோட்டீனை கொண்டுள்ளதால் இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டறிந்துள்ளனர்.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துகள் அடங்கியுள்ளது. மேலும் வைட்மின்கள் பி6, இரும்புசத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய் கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டைபயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்கமுடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இதயநோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டா சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந் துள்ளது. இதனால் தசைச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்கும்.

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும் தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன், நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமசத்துகளும், வைட்ட மின்களும் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இறைச்சிக்கு பதிலாக இதை சாப்பிடலாம்..

Read more: http://viduthalai.in/page-7/82743.html#ixzz35W2h8WJR

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவர இலையே மருத்துவப் பயனுடையது, கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல், தாகம் தணித்தல் ஆகிய பண்பு களைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும், செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்ணவோ, சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்து வத்தில் ஆரைக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் ரத்தம் போதல் ஆகிய பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம், கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்றப் பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.

Read more: http://viduthalai.in/page-7/82749.html#ixzz35W2txaFP

தமிழ் ஓவியா said...


சாய்பாபா கடவுளா? கிடையாது! அவருக்கு கோயில் கட்டக் கூடாது! சங்கராச்சாரியார் எதிர்ப்பு!

மும்பை, ஜூன், 24-_ சாய்பாபா அவதாரமும் கிடையாது, கடவுளும் கிடையாது, அவருக்குக் கோயில் கட்டக் கூடாது என்று துவாரகாபீட சங்கராச்சாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா கடவுள் அவதாரமல்ல... அவர் மனிதர்தான், எனவே அவருக்கு கோவில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று துவாரகாபீட சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சர்ச்சைக் குரிய கருத்தினைக் கூறி யுள்ளார். சாயிபாபாவைக் கடவுளாக வழிபடுபவர்கள் ஏராளமானோர் உள்ள னர். நாடுமுழுவதும் அவருக்கு பல நகரங்களில் ஆலயங்கள் அமைக்கப்பட் டுள்ளன. அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் சங்கராச்சாரியார் கருத்தினை கூறியுள்ளார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும்வகையில் சாய்பாபா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி யுள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்துக்களுக்கு சாய்பாபா தேவையில்லை என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சனாதன தர்மத்தில் கடவுள் விஷ் ணுவின் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாய்பாபா கண் டிப்பாக கடவுள் அவதாரம் கிடையாது என்றும் கூறியுள்ளார். அவர் மாமி சம் சாப்பிடமாட்டார். அவரை குருவாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கடவுளாக கொண்டாடக்கூடாது என்றும் சங்கராச்சாரியார் கூறியுள்ளார். சங்கராச்சாரியாருக்கு கோவில் கட்டுவது அவசி யமற்ற ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சாய் பாபா பக்தர்களிடையை சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

பகவான் சாயி என்று கூறப்பட்டு வந்தார்; அற்புதங்களைச் செய்யும் மகாசித்தி பெற்றவர் என்றும் சாயிபாபாபற்றி பரப்பி வந்தார்கள். ஊடகங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. பக்தர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர் அவர் மரணித்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுக் கத்தைகள் லாரிகளில் கடத்தப் பட்டன. அலமாரிகளில் பட்டுப் புடவைகளும், பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகளும் (Hand Bags) நிரம்பிக் கிடந்தன என்ற விவரங்கள் தெரிந்ததே.

Read more: http://viduthalai.in/e-paper/82775.html#ixzz35boZzOzB

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ராமகீதை

விருப்பங்கள் நம்மை விட்டு நீங்கட்டும். வெறுப் புகள் நம்மை விட்டுப் போகட்டும். இன்பங்களால், நமக்கு பிறப்பற்ற நிலை பறி போனது; துன்பங்கள் நம்மை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கின. இவற்றில் இருந்து விடுபடுபவனே இறைவனை முழுமையாக அடைய முடியும்.

இந்த அளவுகோல்படி குறைந்த பட்சம் சங்கராச் சாரியாராவது தேறுவாரா?

Read more: http://viduthalai.in/e-paper/82782.html#ixzz35bokOmze

தமிழ் ஓவியா said...


அல்லா கிறித்தவர்கள் பயன்படுத்தலாமா?


கோலாலம்பூர், ஜூன் 24- "அல்லா" என்ற வார்த் தையை முஸ்லிம் கட வுளைக் குறிக்க மட்டுமே என்று மலேசிய உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. மலேசியாவில் சிறுபான் மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தை யைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந் நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக அந்நாட் டின் கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4பேரில் 3பேர் ஏற்காமல் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். மலேசியாவில் 2007_லிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், கத் தோலிக்கத் திருச்சபையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத் துக்குக் கொண்டு செல்லப் பட்டது. முதல் கிழமை நீதிமன்றத்தில் கத் தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால், அத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிராக ரித்தது. பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஹெரால்ட் பத்திரிகையின் மலாய் மொழிப் பதிப்பில், முதலில் அல்லா என்ற சொல் கடவுளைக் குறிக் கப் பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து எழுந்த சர்ச் சையை அடுத்து, அரசால் இந்தச் சொல் கிறித்த வர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, தங்களது கடவுளைக் குறிக்கப் பல நூற்றாண்டு களாகவே தாங்கள் பயன் படுத்தி வருவதாகக் கிறித்த வர்கள் வாதிட்டனர். இந்த வார்த்தையை மலாய் மொழியில் கடவுளர் களைக் குறிக்க அனைத்து மதத்தினரும் பயன்படுத் துகின்றனர். ஆனால், இந்த வார்த் தையைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவது முஸ்லீம் களைக் குழப்பிவிடும் என்றும், சில முஸ்லீம்கள் மதம் மாறவும் அது வழி செய்யும் என்றும் அரசு கூறியது. இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற் றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருள்தந்தை லாரான்ச் ஆண்ட்ரூ கூறினார். இது சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பற்றி எதுவும் கூறவில்லை என்றும் அவர் தெரி வித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த முஸ்லீம் ஆர்வலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு வழக்குகள் முடி வடைவதைக் குறிப்பதாகக் கூறிய திருச்சபைக்காக வாதாடிய வழக்குரைஞர் எஸ்.செல்வராஜா, முஸ்லீம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ஒட்டுமொத்தத் தடையை இது விதிப்பதாகக் கூறி னார். இந்தத் தீர்ப்பை மறு ஆய்வ செய்ய திருச்சபை கோரக்கூடும் என்று சில மலேசிய இதழ்களில் வெளி வந்திருக்கும் செய் திகள் கூறுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/82778.html#ixzz35c4TfW00

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


லூட்டி

செய்தி: சுவிட்சர்லாந்து கறுப்புப் பணப் பட்டியலை இதுவரை ஏதும் தரவில்லை. - நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்

சிந்தனை: சுவிட்சர்லாந்து பட்டியலைக் கொடுத்து விட்டது - நாளைக்கோ மறு நாளோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக நமது நாட்டு ஊடகங்கள் அடித்த லூட்டி அடேயப்பா கொஞ்சமா, நஞ்சமா?

Read more: http://viduthalai.in/e-paper/82781.html#ixzz35c4jYp3n

தமிழ் ஓவியா said...


அவசியம்கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும்.
(விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/82785.html#ixzz35c56IR7g

தமிழ் ஓவியா said...


அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுசென்னை, ஜூன் 24- தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரி கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை. இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்பு வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக் கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத் திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண் டும் என உச்சநீதிமன்றம் தெரிவித் துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை. எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-இன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய் யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தர விட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தர விட்டுள்ளார்.

கருணை அடிப்படையில் வழங் கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம் பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப் படுத்த வேண்டும்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.

தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/82798.html#ixzz35c5PiCI9

தமிழ் ஓவியா said...


வி.பி.சிங்


சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்!(1931)

எத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்?

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.

அந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.

இந்த ஆணையைப் பிறப்பித்த காரணத்தால், வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள அரசுக்கு ஆதரவு அளித்து வந்த பி.ஜே.பி. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, அதன்மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது.

கொஞ்சம்கூட களை இழந்துவிடவில்லை அவர் - முகமலர்ச்சியுடன் ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.

ஆட்சிக் கவிழ்க்கப்படு முன் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தோற்போம் என்று தெரிந்திருந்தும், அதற்கு வழிவகுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அருமை, அரு மையிலும் அருமையானது!

சமூகநீதியில் யார் எந் தப் பக்கம் என்பது இதன் மூலம் நாட்டிற்கு அடை யாளம் காட்டிடப் பயன் படுமே என்றார். (தமிழ்நாட் டின் அதிமுக உறுப்பினர் கள் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கைதூக்கினர்).

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைக் காணும்பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சிப் பெறு கிறேன் என்று வாயார - மனமாரப் புகழ்ந்தவர்.

சொட்டு நீர்கூட அருந் தாமல் மும்பையில் அவர் இருந்த பட்டினிப் போராட்டம், அவரது சிறுநீரகத்தைப் பாதித்தது. கடைசி வரை அதிலிருந்து அவர் மீள வில்லை.

அவருக்குச் சிறுநீரகம் அளிக்க நான், நீ! என்று முந்திக்கொண்டு கருஞ்சட்டை இளைஞரணித் தோழர்கள் சிறுநீரகம் கொடையளிக்க முன்வந்த துண்டு - நெகிழ்ந்து போனார் அந்த மன்னர் குல வழிவந்த மாண்பாளர்!

வாழ்க வி.பி.சிங்!

வளர்க அவர் நட்டு வித்த சமூகநீதிச் செடி! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82839.html#ixzz35h9ssTtO

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் பட்டாசு வெடித்து இரண்டு பேர் பலி


கள்ளக்குறிச்சி, ஜூன் 25_ விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்தில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமி வீதி உலாவின்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காண அப் பகுதியைச் சேர்ந்த ஏரா ளமானோர் திரண்டிருந் தனர். அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் வாண வெடி களை வெடித்து கொண் டிருந்தார்.

அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அருகில் சாக்கு மூட்டையில் மொத்தமாக வைத்திருந்த பட்டாசு குவியலில் விழுந் தது. இதனால் அனைத்து வெடிகளும் ஒரே நேரத் தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

இந்த வெடி விபத்தில் சிக்கி சப்பாணியும், வாண வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பித்தன் (40) ஆகிய இருவரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ரதி (29), இவரது மகள் சந்தியா (4) மற்றும் தீபா (15), கோமதி (15), கோகிலா (13), பழனி யம்மாள் (32), சித்ரா (29), லட்சுமி (50), சுப்பிர மணியன் (45) உள்பட 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம்பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. குணசேகரன் கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்துக்குச் சென்று நேரில் விசா ரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read more: http://viduthalai.in/e-paper/82845.html#ixzz35hA1oUov

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


மருத்துவம்

கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறார் களாம்?

தூய உள்ளம் - தேங் காய்ப் பருப்பு

மும்மலம் - மூன்று கண்கள்

குற்றங்கள் - நார்

தேங்காய் ஓடு உடைந் தால் வெள்ளையான தேங் காய்ப் பருப்பு வெளிப்படு கிறது. அதுபோல ஆண வம், கன்மம், மாயை என் னும் மும்மலக் கோட்டை நகர்ந்ததும் வெள்ளை உள்ளம் வெளிப்படும். இந்தத் தத்துவங்களை உணர்த்தவே இறை வனுக்குத் தேங்காய் உடைக்கப்படுகிறதாம்.

அது சரி, தேங்காயை உடைத்து பெரிய மூடியை தான் எடுத்துக் கொண்டு, சின்ன மூடியை, பக்தருக்குக் கொடுப்பதில் உள்ள சுரண்டல் தத்துவம் பற்றி ஏதும் இல்லையா ஆன்மீகத்தில்?

இந்தத் தத்துவங்களை யெல்லாம் சொன்னது யார்?

கடவுளா? உஞ்சி விருத்திப் பார்ப்பானா?

கற்பனை வளம் ததும் பும் கவிஞர்களா?

Read more: http://viduthalai.in/e-paper/82847.html#ixzz35hA9hU7L

தமிழ் ஓவியா said...


உடல் ஒன்று - உயிர் மூன்று


ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும் _ உடல் மூன்றுமாயிருக்கின்றன.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/82848.html#ixzz35hAMTOGC