Search This Blog

25.6.14

பார்ப்பனராவது தமிழராவது என்று பிதற்றுபவர்களின் சிந்தனைக்கு...

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!


கேள்வி: மாகாணங்களுக்குப் போலீஸ் அதிகாரம் வழங்கவேண்டும் என்ற நரேந்திர மோடியின் கோரிக்கையை, இலங்கை அரசு நிராகரித்துள்ளது பற்றி...?

பதில்: இது இப்போது திடீர் என்று நிராகரிக் கப்பட்ட விஷயம் அல்ல. போலீஸ் அதிகாரத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில் இலங்கை அரசுக்குத் தயக்கம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இதில் அவர்களுக்கு ஒரு வசதி என்ன வென்றால், தமிழ்ப் பகுதிகளுக்கு மட்டுமில்லை, எந்த மாகாணத்திற்குமே போலீஸ் அதிகாரம் இல்லை என்றுதானே நாங்கள் சொல்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம். அதே சமயத்தில், இதற்கு ஒரு அவசியமும் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இன்னும் முழுமையாக ஒடுக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள் எங்கெங்கே ஆயுதங் களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும், கண்ணி வெடிகளை எங்கெங்கே புதைத்து வைத்திருக் கிறார்கள் என்பதையும் அவ்வளவு துல்லியமாகக் கணித்துவிட முடியாது.
ஆகையால், வருங்காலத் தில் அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து, வெளிநாடு களிலிருந்து வரும் நிதியை வைத்துக்கொண்டு எந்தவிதமான அராஜக முறையை யோசிக் கிறார்கள் என்பதை இலங்கை அரசு எளிதில் கண்டுபிடித்துவிடாது. இப்படிப்பட்ட நேரத்தில், போலீஸ் அதிகாரங்களை தமிழ்மாகாணங் களுடன் பகிர்ந்துகொண்டால், அதன் விளைவு விபரீதமாகக் கூட இருக்கலாம்.

என்று இன்று (2.7.2014) வெளிவந்த துக்ளக் வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து அய்ந் தாண்டுகள் கழிந்துவிட்டன. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இதே ஊடகங்கள் எல்லாம் பறைசாற்றின.

மாகாண தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமைந்துவிட்டது என்றாலும், அந்த ஆட்சிக்குரிய அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை. பேருக்குத்தான் அரசு என்ற நிலை இருந்து வருகிறது.

காவல்துறை அதிகாரம் இல்லாவிட்டால், ஓர் ஆட்சி எப்படி செயல்பட முடியும்? என்பது நியாயமான கேள்வியாகும்.

உண்மையைச் சொல்லப்போனால் இலங்கை இராணுவம்தான் தமிழ்ப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

ஓர் இராணுவ ஆட்சிதான் அங்கு நடைபெறு கிறதோ என்ற தோற்றத்தையும் அளிக்கிறது.

எவ்வளவு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் இராணுவத்தை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் அதிபர் ராஜபக்சே.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பனர்களும், அவர்களின் ஏடுகளும் விடு தலைப்புலிகளைக் கற்பனையாக நினைவூட்டிக் கொண்டிருப்பதும், மாநில அரசுக்குக் காவல்துறை அதிகாரம் கொடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்று பசப்புகிறார்கள்.

ஆயுதங்களை விடுதலைப்புலிகள் எங்கெங்கோ புதைத்து வைத்து இருப்பார்களாம். விடுதலைப் புலிகள் ஒன்று சேர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொண்டு அராஜகங்களில் ஈடுபடுவார்களாம்.
இலங்கையில் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது உலகத்திற்கே தெரியுமே!

உலக நாடுகள் மத்தியில் குற்றவாளிகள் கூண்டில் ராஜபக்சே நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும்கூட இன்னும் ராஜபக்சேக்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் ஆசாமிகள் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

போர் நடக்காத இடம் என்று சொல்லி அங்கே மக்களை வரச் சொல்லி, கொத்துக் குண்டுகளைப் போட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை - நிராயுதபாணிகளைக் கொன்று குவித்தது குற்ற மில்லை என்று கருதுகிறார்களா? அப்படிக் கருது பவர்கள் யாராகவிருந்தாலும் அவர்கள் ராஜபக் சேக்களைவிட மிகவும் கொடியவர்களே ஆவார்கள்.

காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகளாகிய பார்ப் பனர்கள் வெளியேறியதற்கு வக்காலத்துப் போட்டு எழுதக் கூடிய சோ ராமசாமிகள், ஈழத் தமிழர்கள் விடயத்தில் இந்தக் கோணத்தில் எழுதுகிறார்கள் என்றால், இதற்குக் காரணம் தமிழர்கள் மீது பார்ப்பனர்கள் கொண்ட தீராப் பகையே!

இலங்கை அரசால் லங்கா ரத்னா விருது பெற்ற கூட்டமாயிற்றே! அவர்களின் பேனா இப்படித்தானே சுழலும்!

பார்ப்பனராவது தமிழராவது என்று பிதற்றும் தமிழகத்து மேதாவிலாசங்கள் பார்ப்பனர்களின் ஈழத் தமிழர் மீதான வெறுப்பைத் தெரிந்துகொண்ட பிறகாவது புரிந்துகொள்ளட்டும்!

           -------------------------”விடுதலை” தலையங்கம் 25.06-2014

17 comments:

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் பட்டாசு வெடித்து இரண்டு பேர் பலி


கள்ளக்குறிச்சி, ஜூன் 25_ விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்தில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமி வீதி உலாவின்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காண அப் பகுதியைச் சேர்ந்த ஏரா ளமானோர் திரண்டிருந் தனர். அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் வாண வெடி களை வெடித்து கொண் டிருந்தார்.

அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அருகில் சாக்கு மூட்டையில் மொத்தமாக வைத்திருந்த பட்டாசு குவியலில் விழுந் தது. இதனால் அனைத்து வெடிகளும் ஒரே நேரத் தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

இந்த வெடி விபத்தில் சிக்கி சப்பாணியும், வாண வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பித்தன் (40) ஆகிய இருவரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ரதி (29), இவரது மகள் சந்தியா (4) மற்றும் தீபா (15), கோமதி (15), கோகிலா (13), பழனி யம்மாள் (32), சித்ரா (29), லட்சுமி (50), சுப்பிர மணியன் (45) உள்பட 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம்பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. குணசேகரன் கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்துக்குச் சென்று நேரில் விசா ரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read more: http://viduthalai.in/e-paper/82845.html#ixzz35hA1oUov

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


மருத்துவம்

கோவில்களில் ஏன் தேங்காய் உடைக்கிறார் களாம்?

தூய உள்ளம் - தேங் காய்ப் பருப்பு

மும்மலம் - மூன்று கண்கள்

குற்றங்கள் - நார்

தேங்காய் ஓடு உடைந் தால் வெள்ளையான தேங் காய்ப் பருப்பு வெளிப்படு கிறது. அதுபோல ஆண வம், கன்மம், மாயை என் னும் மும்மலக் கோட்டை நகர்ந்ததும் வெள்ளை உள்ளம் வெளிப்படும். இந்தத் தத்துவங்களை உணர்த்தவே இறை வனுக்குத் தேங்காய் உடைக்கப்படுகிறதாம்.

அது சரி, தேங்காயை உடைத்து பெரிய மூடியை தான் எடுத்துக் கொண்டு, சின்ன மூடியை, பக்தருக்குக் கொடுப்பதில் உள்ள சுரண்டல் தத்துவம் பற்றி ஏதும் இல்லையா ஆன்மீகத்தில்?

இந்தத் தத்துவங்களை யெல்லாம் சொன்னது யார்?

கடவுளா? உஞ்சி விருத்திப் பார்ப்பானா?

கற்பனை வளம் ததும் பும் கவிஞர்களா?

Read more: http://viduthalai.in/e-paper/82847.html#ixzz35hA9hU7L

தமிழ் ஓவியா said...


உடல் ஒன்று - உயிர் மூன்று


ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும் _ உடல் மூன்றுமாயிருக்கின்றன.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/82848.html#ixzz35hAMTOGC

தமிழ் ஓவியா said...


ஒரு மாத கால பிஜேபி ஆட்சி

முந்தைய மன்மோகன்சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகம் எங்கும் தேக்கமடைந்த பொருளாதார சரிவு போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வில் விலைவாசி உயர்வு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பல பொய்களைக் கூறி பெரும் அறுவடை செய்து பா.ஜ.க. அரசு பதவிக் கட்டிலில் அமர்ந்தது.

பிரச்சாரம் முதலே விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, சமமான கல்வி போன்றவை தான் முக்கியமாக இருந்தது. இந்த மூன்றுமே மக்களின் அடிப்படை தேவைகள் ஆகையால் எளிதில் நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சியினரையும் பின் வாங்க வைத்து விட்டார் மோடி.

ஆனால் நடந்தது என்ன?

இதோ 30 நாட்கள் அரசின் நடவடிக்கை குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாத்திரமே மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து நல்லாட்சி என்று கூறியுள்ளனர். மற்ற 75 விழுக்காடு மக்கள் மோடியின் ஆட்சியை வசைபாடித் தாக்கியுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சினையை மய்யமாகக் கொண்டு மோடியின் ஆட்சியை வெறுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் விலைவாசி மற்றும் சிக்கலான நடவடிக்கைகளில் கை வைப்பார்கள். ஆனால் மோடியோ ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே தனது பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் விலைவாசி உயர்விற்கு சமிக்ஞை காட்டி விட்டார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் வரவு செலவு அறிக்கையில் மானியங்கள் குறைக் கப்படும் என்ற அபாய அறிவிப்பு வேறு வந்துள்ளது.

இது வட மாநிலங்கள் முழுவதிலும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது அரசு விவசாயிகளுக்குத்தான் அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. அப்படி மானியம் குறைக்கப்படும் போது விவசாயப் பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மராட்டியம் குஜராத் மத்தியப் பிரதேசம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில் மானியம் குறைக்கப்படுமேயானால் அரசே தற்கொலைக்கு தள்ளி விடும் நிலை உருவாகி விடும்.

தமிழகத்திலும் மோடி அரசு குறித்த வெறுப்பலை அதிகமாகவே வீசுகிறது. முக்கியமாக இதுவரை எந்த அரசும் மாநில அரசின் மொழிக் கொள்கையில் தலையிடாமல் இருக்கும்போது, தடாலடியாக இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பை துவங்கியுள்ளது. இது தமிழகம் மாத்திரமில்லாமல் பல மாநிலங்களிலும் பெரிதும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சிற்காக ஒரு அறிக்கையை விட்டு இந்தி திணிப்பை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறினாலும், உள்ளூர் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்தி வழக்கு மொழி அல்லாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்களை மெல்ல மெல்ல தலைமைப் பதவிக்கு அமர்த்தும் வேலை நடக்கிறது. இது அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ரயில்வே மற்றும் மத்திய வெகுசன அலுவலகங் களான பாஸ்போர்ட், கனரக தொழிற்சாலை, வங்கிகள் போன்றவற்றில் இந்த மாற்றம் வெகுவாக நடந்து வருகிறது.

ரயில்வே தேர்வில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாத்திரமல்லாமல் இந்தி பேசும் மாநிலத்த வர்களை அதிகம் தென் மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது.

30 நாட்களில் மோடியின் அரசு மோசமான அரசாக அமைந்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிஜேபியினர் என்னென்னவெல்லாம் பேசினார்கள்! ஆளும் கட்சியான நிலையில் வேறு குரலில் பேசுவதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.

நாடாளுமன்ற கூட்டம் நடத்திட சில நாள்களே உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள் ளனர் - இப்படி செய்வது கொல்லைப் புறவழியில் கொள்ளையடிப்பது என்று கூறினவர்கள்தான் - பட்ஜெட் கூட்டத்துக்கு முன் ரயில் கட்டணத்தை இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/82910.html#ixzz35nNagx3c

தமிழ் ஓவியா said...


புனித நீர்: கங்கை நீரால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம்அய்தராபாத், ஜூன் 26 அய்தராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்ப மேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

*கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றபின் தெரிவித் திருந்தார். ஆயினும், இதில் எதிர் பார்க்கப்படுவதைவிட அதிக நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே உண்மை நிலவரமாகும்.

*பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந் ததாக சோதனை மய்யத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோ மியம் அத் தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக் கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசி எம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறு களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்று ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

*கங்கையில் சேரும் இந்த அசுத்தங்கள் கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளின் மூலமாகவே கலப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில் நுட் பம் கங்கையில் பயன் படுத்தப் படவேண்டும்என்றும் அவர் கூறி னார். இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன்மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பதாக இவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/82912.html#ixzz35nNuWxuA

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள்

சர்வதேசத் தொழில் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்த பிறகு 22 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த மகாராஷ்டிரா மாநில தொழில்துறை வளர்ச்சி 2008 முதல் வெகுவேகமாக சரிவை நோக்கி சென்றது.

பொருளாதார நிபுணர் களுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால் வெகுவிரைவிலேயே ஒரு உண்மை தெரிந்தது. உதிரி பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு வெகுவேகமாக சரியத்துவங்கியது. இதன் சங்கிலித்தொடர் பாதிப்பு இந்தியப் பொருளா தாரத்தையே புரட்டிப்போட்டது.

காரணம் குட்கா என்னும் போதைப்பொருள் 9 வயதில் இருந்து 27 வயதிற்குள்ளானவர்களை பாதித்தது, இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 23 விழுக்காடு இளம் தலைமுறையினர் அடிமையானார்கள். 2012 மாத்திரம் மராட்டிய மாநில சுகாதாரத்துறை புகையிலை போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடிகளை செலவு செய்தது. உடனடியாக ஆபத்துகால நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர மாநிலம் குட்கா என்னும் போதைப்பொருளைத் தடை செய்தது மட்டுமல்லாமல் விற்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்கு அனுப்பியது. இதனை அடுத்து மிகவும் அபாயகரமான இந்த போதைப்பொருளின் ஆபத்தை உணர்ந்த பல மாநிலங்கள் தடைசெய்தது.

இன்றும் போதைப்பொருள் இந்திய பொருளாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தும் பொருளாகவே திகழ்கிறது, இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் போதை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு அய்.நா தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் உபயோகிப்பவர்களாக உள்ளனர் என்று அய்.நா அறிக்கையில் கூறுகிறது. போதை என்றாலே பொரும்பாலானோர் மது மற்றும் புகையிலைத்தொடர்பானவைகள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அநேகமாக நடக்கிறது, எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருட்கள் கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் ஊக்க மருந்து ஒயிட்னர் மற்றும் சிலவகைப் பெயிண்டுகள் கூட போதை வஸ்துக்களாக பயன்படுத்தப்படுகின்ற்ன. இவை உடல்மனது இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் கேடாக அமைந்து விடுகிறது,

அறியாமை விரக்தி உளவியல் குறைபாடுகள் பொழுதுபோக்கு தற்காலிக உற்சாகம் தேவைப் பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது, இதுவே பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவருமே போதைப்பொருள் உபயோகித்து வருகின்றனர். . ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகிறது ஒரு ஆயுதம் போதைப் பொருளாகும். உலகில் வர்த்தகத்தில் இராணுவத் தளவாடம் மற்றும் எரிஎண்ணெய் வர்த்தகத்திற்கு இணையாக போதைப்பொருள் வணிகம் உள்ளது. மற்ற இரண்டும் சட்டரீதியாக என்றால் போதைப்பொருள் சட்டவிரோத வணிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது, ஆகவே போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். விற்பனையை தடைசெய்தால் மாத்திரமே இதனைத் தடுக்கமுடியும்.

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985_இன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ஆம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல் படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-3/82927.html#ixzz35nOUQ2nl

தமிழ் ஓவியா said...


கத்திரி வெயில் எனும் மூடநம்பிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் குறித்த அச்சமூட்டுதலும், செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இது அறிவியல் உண்மை இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் விளக்கம் அளித்திருக்கிறார்.

கத்திரி வெயில் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை எனவும், அப்படியொரு கருத்தாக்கம் தவறானது என்றும் ஆய்வாளர்கள் விளக்கு கின்றனர்.

கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ். ஆர்.ரமணன் கூறியதாவது:

கத்திரி வெயில் என்பது 100 சதவீதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. மேஷ ராசியில் சூரியன் நுழைவதை கத்திரி வெயில் என்பார்கள். வானிலை துறை ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான்.

இது ஆண்டு தோறும் நிகழும் இயல்பான செயல். எனவே கத்திரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெயில் என தனியாக தலைப்பிட்டு ஊடகங்களும் செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதுமில்லை.

Read more: http://viduthalai.in/page-7/82939.html#ixzz35nPZdv00

தமிழ் ஓவியா said...


மாணவிகள், இளம் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

சென்னை, ஜூன் 27_ வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள மாணவிகள், இளம் பெண்களுக்கான விடுதிகளில் மேற் கொள் ளப்பட வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறை களை தமிழக அரசு அறி வித்துள்ளது.

* பொதுவாக, வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங் கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். இந்த கட்ட டங்கள் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக இருக்க வேண் டும்.

* பெண் விடுதிகளில் பொறுப்பாளர்களாக பெண்கள் மட்டுமே நிய மிக்கப்பட வேண்டும்.

* 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளர் இருக்க வேண்டும்.

* 24 மணி நேரமும் அனைத்து வாயில்களிலும் பாதுகாவலர்கள் நியமிக் கப்பட வேண்டும்.

* 50_க்கு மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர்கள் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* பாதுகாவலர்கள் பெண்கள் தங்கியுள்ள விடுதி கட்டடங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது.

* விடுதிகளில் நான்கு புறமும் சுற்றுச்சுவர் இருக்க வேண்டும். வாயில்களில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும்.

* விடுதியை விட்டு வெளி யில் செல்லும் நேரம், திரும்பும் நேரத்தை விடுதி காப்பாளர் பதிவு செய்ய வேண்டும்.

* விடுதியில் தங்கி இருப் பவர்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களை மட்டு மே அனுமதிக்க வேண்டும்.

* சிறு வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் விடுமுறை நாட்களில் வீட் டிற்கு அனுப்பும்போது, பெற்றோர், பாதுகாப்பாள ருடன் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

* பெற்றோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாது காப்பளர்களுக்கும் புகைப் படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்கப் பட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களது தொலைப்பேசி எண் மற்றும் முகவரியை காப்ப கத்தின் முன்வாயிலில் எளிதில் காணக் கூடிய வகை யில் வைக்கபட வேண்டும்.

* விடுதிக் காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களை உள்ளூர் காவல் துறை யிடமிருந்து அனுமதி பெற்று, முழுமையான பரிசீலனைக்குப் பின்னரே நியமனம் செய்ய வேண்டும்.

* தொற்று நோய் உள் ளவர்களை நியமிப்பதை தவிர்க்க, உள்ளூர் அரசு மருத்துவமனையால் சான்ற ளிக்கப்பட வேண்டும்.

* அரசு அல்லாத நிறுவனங்களால் நடத் தப்படும் காப்பகங்களில் நியமிக்கப்படும் விடுதி காப்பாளர் மற்றும் பாது காவலர்களுக்கு போதுமான அளவு ஊதியம் வழங் கப்பட வேண்டும்.

* அனைத்து விடுதி களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* பதிவு செய்யப்பட்ட விடுதிகள் குறித்த பட்டியல் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். காவல் துறையினர் இரவு நேரங்களில் விடுதிகளை கண்காணிக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை ரோந்து பணி பதிவேடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

* குழந்தைகள் உதவி எண் 1098அய் பயன் படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த விளம் பரம் செய்ய வேண்டும்.

* பாலியல் வன்முறை யை முற்றிலும் தடுக்க அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நடை முறைப்படுத்த விடுதிகளின் உரிமையாளர்களும், பெற் றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண் டும்.
இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/82975.html#ixzz35tG6PGuU

தமிழ் ஓவியா said...


உங்கள் எதிரிகளை அழிக்க இதோ ஒரு வேடிக்கையான வழி!நம்மில் பலரும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மிக மிக வேகமாக, அளவுக்கு அதிகமான - ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்காக ஏதோ ஒரு பி.எச்.டி., (Ph.D.) ஆய்வே செய்வது போல் முடிவு எடுத்து, மாதக் கணக்கில் நேரம், நினைப்பு, உழைப்பு, (பணம்) நிதி முதலியவைகளை தேவைக்கு அதிகமாகவே செலவழிப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, தங்களது பிள்ளை உயர்நிலை மேனிலைப்பள்ளி மட்டத்தில் படிப்பை, முடித்து (அதற்கும் Graduation) பட்டம் பெறுதல் என்பது போன்ற நிகழ்ச்சி வைத்துத்தான் அமெரிக்காவில் பள்ளிகளிலிருந்து வெளியே (பாஸ் செய்த பிறகு) செல் லும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் முன்னி லையில் நடத்திடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடுத்து பிள்ளைகளை எந்த மேல் படிப்பு கல்லூரிக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் என்று முடிவு எடுப்ப தற்குள் தலையைப் பிய்த்துக் கொள் ளுவது அங்கே சர்வ சாதாரணம்! (பெற்றோருக்கு பொறுப்பு இருப்பதால் தான் அந்தக் கவலை; மற்றும் நிதிச் சுமைப் பொறுப்பும் உள்ளதே) அதற்காக பல மாத இடைவெளியில் ஊண் - உறக்கம் இன்றிக்கூட பலரையும் அணுகி அறிவுரை - ஆலோசனை கேட்பார்கள். நம் நாட்டில் அவ்வளவு தூரம் ஆராய் வார்களா என்றால் அதில் சில பெற்றோர்கள் 75 அல்லது 80 விழுக்காடு கவலை எடுத்துக் கொள்ளும் நிலை உண்டு.

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரத்தான் என்பது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டதே தவிர வேறில்லை!

அதே போன்று நம் நாட்டில் பெண் பார்ப்பதற்கு - மகளிர் பலர் புடவை, நகைக் கடைகளில் சென்று பொருள் வாங்கு வதிலும் சரி, ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - கேள்வி மேல் கேள்வி, பல புடவைகளை சளைக்காமல் சர்வே செய்தல் இவைகள் எல்லாம் உண்டு; காரணம் பணம் அதிகம் கொடுத்து வாங்கும்போது; கவலையோடு ஆராய வேண்டாமா?

(மருந்துகளை டாக்டர்கள் பரிந் துரைத்த நிலையில் அவசரமாகச் சீட்டைக் கொடுத்து வாங்கிடும் இவர்கள் அதன் காலக் கெடுவைப்பற்றிக்கூட (Expiry Date)
கவனித்து ஆராய்வதில்லை. சில நேரங்களில் காலாவதியான மருந்து களைக்கூட கவனிக்காமலே உட் கொள் ளவும் செய்கின்றனர்!)

அதிக தகவல்களைச் சேர்த்து, மாய்ந்து மாய்ந்து அதன் பிறகே இறுதி முடிவு என்று செயல்படும் வழமை உள்ளவர்கள் மனோ தத்துவ ரீதியில் ‘Information Bias’ தகவல் தேடிடும் சார்பு நிலை மையாளர் என்றே பெயரிடப்பட்டுள்ளனர்!

தேவைக்கு அதிகமான - களைப்பும், சோர்வும் அடையும் அளவு மண்டை யைக் குடைந்து கொள்ளுதல் பற்றி உளவியலாளர்கள் கூறும்போது,

உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம்; மிக அதிகமான தகவல்களை அவர்களுக் குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் குழப்பத்தில் ஊறியே அவர்கள் தோற்று விடுவார்கள் என்று வேடிக்கை யாகச் சொல்கிறார்கள். அதற்குத்தான் சதா தகவல் தேடும் சார்பாளர்களாக அவர்கள் அமர்ந்து எளிதில் முடிவு எடுக்க வேண்டிய முடிவுகளைக்கூட, மண்டை பிளந்து, ‘Cerebral Hemorrhage’ மூளையே ரத்தக் கொதிப்பின் உச்சத் திற்குச் சென்று, மூளை வெடித்தது மாதிரி ரத்தம் வழியும் அவலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று பரிதாபப்பட்டுக் கூறுகிறார்கள்!

எனவே, எண்ணித் துணியுங்கள்; என்பதன் முழுப் பொருள் புரிகிறதா?

தேவைக்கேற்ற (ஓரளவு) தகவல் களை வைத்தே முடிவுக்கு வாருங்கள் - பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு காணுங்கள்.

அதற்காக அளவு மிஞ்சிய தகவல் திரட்டி பயனற்றுப் போகாதீர்கள் என்பது நல்ல உளவியல் சார்ந்த அறிவுரைதானே!

என்ன பின்பற்றுவீர்களா? எதிரி களை அடக்க ஏராள தகவல் களைத் தீனியாகத் தந்தால் அது செரிக்குமா? செரிமான மாகாமல் வயிற்றில் புரட்சி உண்டாக்கி சோதனைக்கும் சோர்வுக் கும் ஆளாக்கும் அல்லவா அது போலத் தான்.

அளவுக்கு அதிகமானால் அமிர்த மும் நஞ்சு - என்பதற்கு இதனையும் ஒரு புது விளக்கமாக - உளவியல் ரீதியில் எடுத்துக்கொண்டு, ஒரு குறிப் பிட்ட அளவிலேயே தெளிவான, குழப்பமில்லாத முடிவு எடுங்கள் - வெற்றி நிச்சயம்!


- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/e-paper/82964.html#ixzz35tGUue4m

தமிழ் ஓவியா said...


குடியரசு தலைவரின் இந்துமதப் பிரச்சாரம்


இந்தியப் பாரம்பரிய ஆராய்ச்சி அமைப்பை தோற்றுவித்த அவ்வமைப்பின் தலைவரான சுவாமி சிவானந்த சரஸ்வதி என்சைக்ளோ பீடியா ஆஃப் இந்துயிசம் என்ற இந்து மதக் கலைக் களஞ்சிய நூலை வெளியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வேலை, திறமை, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஆகிய நான்கையும் கொண்ட முழுமையான நிலை, தர்மம், அன்பு, மோட்சம் ஆகிய நான்கும்தான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்பதை இந்து மதத் தத்துவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மனித செயல்பாட்டின் நடுநிலையான போக்குதான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் விளக்குகிறது.

இந்து மதம் என்பது பின்பற்றப்படும் ஒரு வழிமுறை மட்டுமல்ல; மெய்யறிவின் கூட்டமைப்பு. அதை விவரிக்க முடியாது; அனுபவிக்க மட்டும்தான் முடியும் என முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனை வருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், புத்தொளி கிடைக்க வேண்டும்; யாரும் துன்பப்படவோ, வேதனையடை யவோ கூடாது என்பதுதான் இந்து மதத்தின் உயரிய தத்துவம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடில்லியில் பேசியுள்ளார் (தினமலர் 24.6.2014).

ஓர் இந்து மதக்காரர் என்கிற முறையிலும் அதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் என்ற முறையிலும் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைத் தாண்டி பெரும் பொருள் இருப்பதாகக் கருதுவதற்கு இடம் இல்லை. அவர் நிதி அமைச்சராக நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் அளிக்கும் போதேகூட பல இந்து மதக் கடவுள்களை அழைத்தது உண்டு. இதில் மதச் சார்பற்ற தன்மையை அவர் கடைப் பிடித்ததில்லை. முதலில் ஒரு கருத்து முக்கியமானது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; அதற்கென்று ஒரு நிறுவனர்; அதற்கென்று தனித்த ஒரு வேத நூல். அதன் தோற்றம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஏதும் இருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றில் முரண் பாடுகளுக்கோ பஞ்சமில்லை. முரண்பாடுகளை பலகீனமாக எடுத்துக் கொள்வ தற்குப் பதிலாக முரண்பாடுகளையும்கூட சிறப்பு அம்சமாகக் கொள்ளும் மனப்பான்மை இந்து மதவாதிகளுக்கு உண்டு. காரணம் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை - இதனை ஒரு வகையில் சாமர்த்தியமாகவே கருதுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தன்னுரையில் எந்த ஓர் இடத்திலும் இந்து மதத்தின் கொள்கையில் சமத்துவத் துக்கு இடம் உண்டு என்று குறிப்பிடாதவரை மகிழ்ச்சி தான்.

குறிப்பாக இந்து மதத்தில் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று பொருளாகாது; அப்படி என்றால் வேத மறுப்புதான் இங்கு நாத்திகம்.

இத்தகைய நாத்திகர்களுக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்று வைத்திருப்பதானது எந்த வகையில் சரி?

வேதங்களை மறுத்து விட்டால் இந்து மதம் எங்கே இருக்க முடியும்? இதுபற்றி எல்லாம் மெத்த படித்தவர் களும், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களும் ஏன் சிந்திக்கவில்லை?

பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தை ஏற்படுத்தி விட்டு - ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு வகை தர்மம் என்று அறுதியிட்டு விட்டு, அந்தத் தர்மத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்று கோடு கிழித்துக் காட்டி விட்டு, அதற்குப் பிறகு அம்மதத்தில் நடு நிலைப் போக்கு என்று எப்படி சொல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

அரசனுடைய கடமையே வருண தர்மத்தைக் காப் பாற்றுவதுதான் - வருண தர்மத்தை மீறினால் அரசன் தண்டத்தை (வன்முறையை) பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு மதம் எப்படி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய முடியும்?

தலை எழுத்தின்படி நடந்து கொள்! அதில் திருப்தி அடை! அப்படி நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் மோட்சம் நம்பு - என்பது ஒரு மதமா? சுரண்டலுக்கான ஒரு வகை தந்திர அமைப்பு முறையா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தீண்டாமை என்பதேகூட க்ஷேமகரமானது என்று சொல்லக் கூடியவர் தான் இந்து மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய லோகக் குரு என்று போற்றக் கூடிய சங்கராச்சாரியார். அந்த சங்கராச்சாரியார்களைத் தண்டனிட்டுப் போற்றக் கூடியவர்கள்தாம் இந்நாட்டுப் பெரிய பதவிக்காரர்கள்! (காசியில் கங்கை நீரால் சங்கராச்சாரியாரின் காலைக் கழுவிக் குடிக்கவில்லையா அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்?)

குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய நூலை வெளியிடுவது கூட வேண்டாத ஒன்றுதான் - வேலியே பயிரை மேயலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/82963.html#ixzz35tGtS7Dx

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தை புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/e-paper/82962.html#ixzz35tH7kZ64

தமிழ் ஓவியா said...


எங்க மகேசனைப் பார்த்தீங்களா - அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!


இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண் டிருக்கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங்களிலே.... கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா?

சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ரமணியன் போஸ் கிடைத்ததா?

தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா?

வள்ளியோடு பள்ளிகொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா கிளிக் ஆகவில்லை!

கூரான கற்கள் படிந்த புழுதி களையும், மணல் மேடுகளையும் தான் வைக்கிங் படம்பிடிக்க முடிந் ததா?

அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்று கூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே?

வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் முகவெட்டை இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா?

வாயைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டியவனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்புகிறோம்; எங்களை ஆற்றுவாரில்லையா? தேற்றுவாரில்லையா?

பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக்கிறீர்கள்? சொல்லித் தொலை யுங்களேன்! அங்கேயாவது அமெரிக் காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.

- விடுதலை, 22.7.1976 (சென்சாரால் வெட்டப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHcpegl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கி றவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டி யவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லு வதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHoOPf9

தமிழ் ஓவியா said...

ராமனின் மிருகத்தனம்

சீதை நெருப்பில் இறங்கி வந்தும்கூட, ராமனுக்கு அவள் மீதுள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக, கதையின் முடி வானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.

இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்கவில்லை. உலக ஒப்புதலுக்காகச் செய் யப்பட்டது என்றாலும், இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதைப் பார்க்கின்றபோது அதாவது, தனது மனைவி யை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டு வரும்படிச் செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படிச்செய்ததும் ஓர் ஆச்சரியமென்று சொல்லமுடியாது.

ஆகவே, ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்ரீவன், விபீசணன் நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது முதலியவையும் தக்க அத்தாட்சிகளாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHunLY5

தமிழ் ஓவியா said...


அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்


மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டு போகின்றது, அம்மன் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டு போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை, மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது, அச்சு ஒடிகின்றது.

இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் இந்த விக்கிரகங்களில் புனிதத் தன்மை அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா! தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோட்டீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் - பாப்பராய் போகிறான் என்பதை பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.

இன்னும் ஒன்றுதான் - அப்புறம் ஒன்றுமில்லலை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதுண்ணு நினைக் கின்றீர்கள்.

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தை படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.

பதில்: சரி. அப்படியானால் அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர்: கடவுளை படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.

பதில்: அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்.

பதில்: சரி.நல்ல காரியமாச்சு. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

-சித்திரபுத்திரன், குடிஅரசு (4.1.1931)

Read more: http://viduthalai.in/e-paper/82995.html#ixzz35tI6dfGi

தமிழ் ஓவியா said...


பைபிளில் ஜாதி வெறி!


அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIIjl6B

தமிழ் ஓவியா said...

குட்டி கல்லுச் சாமி!

ஒரு கிழவர் தன் பேரனான சிறுவனுடன் கோவில் ஒன்றுக்குச் சென்றார். அந்தப் பையனிடம் கற்சிலையைக் காட்டி, அதைக் கும்பிடும்படி கேட்டுக் கொண்டார். சுட்டிப்பயல் உடனே, கல்லை எதற்குத் தாத்தா கும்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான்.

உடனே கிழவர், இது கல் இல்லை. கடவுளின் சிலை. இதைக் கும்பிடு என்று கூறினார். பையனும் கைகூப்பிக் கும்பிட்டான் - அந்தக் கற்சிலையை. சாமி தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த ஓட்டலுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார்கள்.

சோற்றில் சிறு கல் ஒன்றைப் பார்த்துவிட்ட அந்தப் பையன் உற்சாக மிகுதியால், தாத்தா! தாத்தா!! குட்டி சாமி இதோ என்று கும்பிட ஆரம்பித்து விட்டான். உடனே கிழவர் செய்வதறியாது, உடனிருந்தவர் களுடன் கூடி தானும் சிரித்து விட்டார்.

நன்றி: மலையாள மனோரமா, (1979 - மே 3-ஆம் வாரம்) தமிழாக்கம்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIRGuma