Search This Blog

26.6.14

இதுதான் வால்மீகி இராமாயணம் -6(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


பால காண்டம்

ஆறாம் அத்தியாயம் 
ஸ்வாமித்திரன் இராமனை நோக்கிக் கங்கையின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினான்.  இமயமலை அரசனுக்குக் கங்கையென்றும் உமை என்றும் இரண்டு பெண்கள் பிறந்தனர்.  ஒரு நாள் தேவர்கள் வந்து மலையர சனிடம், அவனுடைய மூத்த பெண் கங்கை மூவுலகங்களிலும் ஓடும் ஆறாக வேண்டுமென்று வேண்ட, அவனும் இசைந்தான்.  தேவர்கள் பின் கங்கை விண் சென்று ஆகாய கங்கை எனப் பெயர் பெற்றாள்.  சிவபெருமான் உமையைக் கலியாணம் செய்து கொண்டு ஆவலோடு சம்போகிக்கத் தொடங்கினார்.  அவ்வாறு அவர் நூறு தேவ ஆண்டு சம்போகித்தும் அவருக்கு அந்தப் பார்வதியினிடத்தில் பிள்ளையுண் டாகவில்லை. பிறகு பிரம்மா முதலான தேவர்கள் இந்தப் பார்வதியினிடத்தில் ஒரு பிள்ளை பிறந்தால், அந்தப் பிள்ளையை எவன் பொறுப்பான் என்று பயந்தவர்களாய்ச் சிவபெருமானைக் கும்பிட்டு, தேவாதி தேவா!  உமது வீரியத்திலுண்டாகும் பிள்ளையை உலகங்கள் தாங்கமாட்டா; ஆகையால், இதை விட்டு நீர் உமது மனைவி யோடும் தவம் செய்ய வேண்டும்.  மூவுலகங்கட்கும் நன்மை யுண்டாக வேண்டி நீர் உமது வீரியத்தை உமதொளி பொருந்திய உடம்பிலேயே தரிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.  அதற்குச் சிவபெருமான், அவ்வாறே ஆகட்டும்; இப்போது வெளியான வீரியத்தை எவன் தரிப்பான்? என்று கேட்டனர்.  அவர்கள், பூமி தரிப்பாள் என்று கூற, அவர் பூமியில் விட்டனர்.  அந்த வீரியத்தால் மலைகளும் காடுகளுமாகிய பூமியெல்லாம் நிரம்பி விட்டது.

அதைக் கண்ட தேவர்கள் அக்கினி பகவா னைப் பார்த்து, நீர் வாயு பகவானோடு சிவபெருமானுடைய வலிய வீரியத்தினுட் புகுதல் வேண்டும் என்று சொல்லினர்.  அந்த வீரியமானது அக்கினியால் வியாபிக்கப்பட்டு வெள்ளி மலையாகவும், நாணற் காடாகவும் ஆயிற்று.  அந்த நாணற்காட்டிற்றான் அக்கினி தேவனுக்கும் கார்த்திகைப் பெண்களுக்கும் மகனாய் ஆறுமுகக் கடவுள் தோன்றினார்.  பின்பு பார்வதிதேவி தேவர்களைப் பார்த்து, பிள்ளையுண்டாகக் கோரி நான் செய்து கொண்டிருந்த சம்போகத்திற்கு நீங்கள் இடையூறு செய்ததனால், உங்கள் மனைவியரிடம் நீங்கள் பிள்ளையைப் பெற மாட்டீர்கள் என்று வெஞ் சொல்லுரைத்து, பூமியைப் பார்த்து புத்தி கெட்ட பூமியே!  எனக்குப் பிள்ளை யுண்டாவதைக் கோராததனாலும், கோபத்தை விளைவித்த தனாலும் நீ அநேக ரூபமுடையவளும், பலருக்கு மனைவியு மாயிருந்து, பிள்ளையுண்டாவதனால் வரும் மகிழ்ச்சியையும் நீ அடையாதிருக்க என்று சபித்து விட்டாள்.  வானவர் வேந்த ராகிய சிவபெருமானானவர் அவ்வாறு பார்வதியினிடத்துச் சாபம் பெற்று வெட்கங்கொண்டு நிற்கும் தேவர்களைப் பார்த்துக் கவலைப்பட்டு, வருணன் பாதுகாக்கும் மேற்றிசையை அடைந்து தமது மனைவியோடு இமயமலையின் வடபாகத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.  இனி கங்கையின் வரலாற்றைக் கேள் என்று கூறிப் பின்னரும் கோசிக முனிவர் இராமனை நோக்கிக் கூறுவாராயினர்.  (இதுவரை கதை வால்மீகி பாலகாண்டம் முப்பத்தாறாம் சருக்கம்.)

இராமா!  சிவபெருமான் இவ்வாறு தவஞ் செய்து கொண்டி ருக்கையில், வானவர் தமக்கொரு படை மன்னர் உண்டாக்கக் கருதினர்.  அக்கினி, இந்திரனோடும் தேவரோடும் கூடி நான் முகனையடைந்து, நமது படை மன்னர் உமாதேவியிடம் கூடித் தவஞ் செய்வதால், வேறு படை மன்னரைப் பெறத் தந்திரம் சொல்லும் என்றனர்.  நான்முகன், உங்களுக்கு உங்கள் மனைவியிடம் பிள்ளையுண்டாகாதென உமை சொன்ன சொல் வீணாகாது, இது உண்மை; அய்யமில்லை.  அக்கினிபகவான் படை மன்னரை இக்கங்கையிடம் உண்டு பண்ணுவான்.  கங்கையும் பிள்ளையுண்டாக உடன்படுவாள்.  அது பார்வதிக் கும் சம்மதமாயிருக்கும் என்றனன்.
தேவர்களனைவரும் கைலாய மலையை அடைந்து, அக்கினி பகவானைப் பார்த்து, சுவாமி!  முன்னே நீர் தரித்துக் கொண்டிருக்கும் சிவபிரானது வீரியத்தைக் கங்கையினிடத்தில் விட வேண்டும் என்று தூண்டினர்.  அதுகேட்ட அக்கினியும் கங்கையினிடம் வந்து, கங்காதேவி சிவபெருமானது வீரியத்தை வாங்கிக் கொண்டு நீ கர்ப்பந் தரிக்க வேண்டும் என்றனன்.  கங்கை பெண்ணுருத் தாங்கினாள்.  அக்கினி பகவானும் தமது எல்லாச் சரீரத்தி னின்றும் சிவபெருமானது வீரியத்தை அவளிடத்தில் நிரம்பப் பொழிந்தான்.  கங்கை அத்தீயினால் வெதுப்பப் பெற்று மனத்தில் மிக வருத்தம் கொண்டு தீயைப் பார்த்து, நீர் மேலும் மேலும் விடும் இச்சிவ வீரியத்தை நான் தரிக்க வல்லவளல்லேன் எனலும், தீ, அப்படியாயின் இக்கருவை இமயமலையின் இச்சிறிய குன்றில் விடு என்றனன்.  உடனே கங்கை அந்தக் கருவை வெள்ளத்தினின்றும் எடுத்து வெளியில் விட்டு விட்டாள்.  அந்த வீரியத்தினின்றும் பொன், வெள்ளி முதலிய உலோகங்களெல்லாம் உண்டாயின.  கங்கையின் கர்ப்பத்தி லிருந்து சுப்பிரமணியசாமி உண்டாகவே, வானவர் கார்த்திகைப் பெண்களை நோக்கி, அப்பிள்ளையை வளர்க்கச் சொல்லினர்.  அப்பெண்கள் நழுவிய கர்ப்பத்திலுண்டாகி விளங்கும் அக் குழந்தையைக் குளிப்பாட்டினார்கள்.  நழுவிய கர்ப்பத்திலுண்டா னதால் ஸ்கந்தர் என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால், கார்த்திகேயர் என்றும் தேவர்கள் அப்பிள்ளையை அழைத்தார்கள்.  அப்பெண்கள் அறுவரின் முலைப்பாலையும் அப்பிள்ளை ஆறுமுகமுடையவராய்க் குடித்தார்.  பிறகு வானவர் அப்பிள்ளையைத் தமக்குச் சேனைத் தலைவராக்கிக் கொண்டனர்.  பின்னரும் விஸ்வாமித்திர முனிவர் அக்கங்கை யின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.  (இதுவரை கூறினது முப்பத்தேழாவது சருக்கம்.)

மேலே கண்ட வரலாற்றை ஆராய்வோம்.  இவ்வரலாறு கேட்பதற்கு வெறுப்பை மிகவும் தருவதாக உள்ளது.  தேவர் களுக்கெல்லாம் தலைவராகிய சிவபெருமான், உமையோடு நூறு தேவ ஆண்டுகள் புணர்ந்தும் இந்திரியம் வெளிப்பட வில்லையென்றும், அப்புணர்ச்சியூடே பிரமன் முதலிய தேவர்கள் அவர்களைக் கண்டு புணர்ச்சியிலிருந்து நீங்க வேண்டினரெனவும், அவ்வேண்டுகோளுக்குச் சிவபெருமான் இசைந்தனரெனவும், ஆனால் பார்வதி மட்டும் சினங்கொண்டு தேவர்களைச் சபித்தனளெனவும் கதை வருகிறது.  இது வியப்பாகவே இருக்கிறது.  இந்நூல் வைணவ நூலாதலின் சைவத்துக்கு இழுக்குக் கூற இவ்வரலாற்றைக் கூறியிருக்க வேண்டும்.  இல்லையாயின், ஆரியர் கொள்கைகளே இவ்வாறு ஆபாசமாக இருந்திருக்க வேண்டும்.  இதனை முன்னரே கண் டோம்.  இவ்வித ஆபாசமான வரலாறுகளை எழுதுவதற்கு அவர்கள் மனம் துணிந்துள்ளதாதலின், இதனால் அவர் களுடைய இழிந்த ஒழுக்கம் புலனாகிறது.

மேலும் நூறு தேவ ஆண்டு புணர்ந்தும் சிவபெருமானுக்கு வெளிப்படாத வீரியம், தேவர்கள் வந்து தடுத்ததும் வெளிப் பட்டதாகவும், அதை அவர் விண்ணவர் கூறியபடி பூமியில் விட்டதாகவும், பின்பு அதில் அக்கினித் தேவனும், வாயு தேவனும் கூடி உட்புகுந்து தமது உடலில் ஆக்கிக் கொண்டன ரென்றும் தெரிகிறது.  இதுவும் வியப்பாகவே இருக்கிறது.  தீயும் காற்றும் கூடி யாது செய்தன என்பது தெரியவில்லை.  வீரியத்துட் புகுதலாவதென்ன?  ஒரு வேளை அதையவர்கள் உண்டு தம்முடலில் சேர்த்துக் கொண்டனர்போலும்!
தீக்கடவுள் நாணற்காட்டில் கார்த்திகைப் பெண்கள் அறுவரோடுகூடி ஆறுமுகக் கடவுளைப் பெற்றான் என்று 36 ஆம் சருக்கமும், அவன் கங்கையோடுகூடித் தான் வைத்திருந்த சிவபெருமானுடைய வீரியத்தை அவளிடம் பெய்து ஆறுமுகனைப் பெற்றான் என 37 ஆம் சருக்கமும் கூறுகின்றன.  இவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட செய்திகளே.  37 ஆம் சருக்கம் கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த் தனரென்றும் கூறுகிறது.  மேலும், சிவபெருமானுடைய வீரியத்தைத் தீக்கடவுளும் வாயு பகவானும் கூடி உண்டிருக்க, தீக்கடவுள் அவ்வீரியத்தை வெளியிட்ட செய்தி மட்டும் கேட்கப்படுகிறது.  வாயு கொண்ட வீரியம் என்னவாயிற்றோ தெரியவில்லை.  அதைப் பற்றிய வரலாறு ஒன்றும் நூலில் இல்லை.  இன்னும் கங்கைகொண்ட கரு நழுவி விழுந்து விட்டதாகவும், அதிலிருந்துதான் முருகன் தோன்றின னென்றும் கதை போகிறது.  இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால், வேடிக்கையாகவே இருக்கிறது.  இந்த வரலாற்றின் ஆபாசத்தையுணர்ந்த பண்டித நடேச சாஸ்திரியார், தமது மொழிபெயர்ப்பில் இதனை மொழிபெயர்க்காது விட்டு விட்டு, விருப்பமுடையோர் மூலத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று எழுதுகிறார்.  இது முன்னுக்குப் பின் முரணான வரலாறாக இருக்கிறது.  மற்றும் வேண்டுமென்றே குறும்புக்காக எழுதியது போலவும் தோன்றுகிறது.  முருகன் வரலாற்றைக் கூறுவதான கந்தபுராணம் இதுபற்றி யாது கூறுகிறதெனப் பார்ப்போம்.

சிவபெருமான் மலைமகளை மணந்தபின், யோகு செய்திருந்தார்.  அப்போது சூரனாதியாராலே துன்புறுத்தப் பெற்ற வானவர் அவரையடைந்து தமது பகையை வெல்ல ஒரு திருமகனைத் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்ள, அவர் ஆறு முகங்களோடும் விளங்கினார்.  ஒவ்வொரு முகத்தி லிருந்து ஒவ்வொரு பொறியாக ஆறு தீப்பொறிகள் தோன்றின.  அவருடைய ஆணைப்படி அக்கினிதேவனும் வாயுவும் அவற்றைச் சுமந்து கங்கையில் விட்டனர்.  கங்கை சரவணப் பொய்கையில் அவற்றைச் சேர்க்க, அவை ஆறும் ஆறு முகங்களோடும் கூடிய ஒரு பிள்ளையாக ஆயின.  அப்பிள் ளையைக் கார்த்திகைப் பெண்கள் அறுவரும் வளர்த்தனர்.  இதுவே அவ்வரலாறு, இதில் வால்மீகி முனிவர் வரலாற்றைப் போல் ஆபாசமான செய்தி யொன்றும் காணப்படவில்லை.  இவ்வரலாற்றையே வால்மீகி மாற்றி ஆபாசமாகக் காட்டியிருக்கிறார்.

மேலும், வால்மீகி முப்பத்தேழாம் சருக்கத்திலே அக்கினி தேவனும் ஏனைய தேவரும் பிரமனிடம் சென்று வேண்டலும், அவன், அக்கினித் தேவன் அந்நிய மாதாகிய கங்கையோடுகூடி ஒரு பிள்ளையைத் தருவான் என்று கூறியதாகவும், அதுகேட்ட தேவர்கள், கயிலாய மலையையடைந்து அக்கினியை வேண்ட, அவன் கங்கையை யடைந்து தன்னோடு சேர - வேண்டிய தாகவும், அவளுமிசைந்து பெண்ணுருவோடு வந்ததாகவும் எழுதுகிறார்.  இது முன்னுக்குப் பின் மாறாக இருக்கிறது.  தன்முன் நிற்கும் அக்கினியை விட்டுவிட்டுத் தேவர்களிடம் தீ, பிள்ளையைப் பெறுவான் என்று நான்முகன் கூறியதாகவும், தங்கள் முன் நின்ற தீயை விட்டுவிட்டுத் தேவர்கள் கைலாய மடைந்து அங்கு அக்கினியை வேண்டியதாகவும் கூறும் கதை அறிவுடையரால் ஒப்புக் கொள்ளும் தன்மையதா?  இதை அறிஞரே தீர்மானித்தல் வேண்டும்.  இக்கதையைப் பார்த்தால் ஒன்று, அக்கினியும் நான்முகனையடைந்தான் என்ற வாக்கியம் பொய்யாக வேண்டும்.  அதனால் ஆரியர் தம் தெய்வத்தைப் பற்றிக் கூறும் வரலாறுகளெல்லாம் அறிவுடைய மக்களால் அரு வருத்துத் தள்ளத்தக்கனவாக இருக்கின்றன.  இவ்வாறு அருவருப்புகளைத் தரும் வரலாறுகளையெல்லாம் உண்மைத் தமிழ் மகனாம் கம்பர் விட்டு விட்டு முருகபிரான் பிறப்பைப் பற்றி ஒரே பாடல் கூறுகிறார்.
அது வருமாறு:

ஆய திவ்விட மவ்விடம் அவிர்மதி யணிந்த
தூய வன் றனக்கரி வையிற் தோன்றிய தொல்லை
வாயு வும் புனற் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய்வ ளர்ந்தருள் சரவண மென்பதும் தெரித்தான்
(இதன் பொருள்): மதியணிந்த பரிசுத்தமானவனாகிய சிவபெருமானுக்குப் பார்வதியிடம் தோன்றியவரும், வாயுவாலும் கங்கையாலும் பொறுக்க முடியாத பலத்தை யுடையவருமாகிய முருகக் கடவுள், வளர்ந்தருள் சரவணம் அவ்விடம், என்பதையும் கூறினான்  என்பது.  இதனால் இவர் அக்கினியைப் பற்றிய பேச்சைக் கூறாதவராவர்.

மேலும், வாயு தூக்கி வந்து போட அதனைக் கங்கை சுமக்க மாட்டாதவ ளானாள் என்பதாகிய கந்தபுராண வரலாற்றையே இவர் ஒப்புக் கொண்டவராவர்.  தீக்கடவுள் கங்கையைக் கூடிய ஆபாச வரலாறுகளை யெல்லாம் கம்பர் மறைத்து விட்டனர்.  இது போலவே அஸ்வமேதயாக ஆபாசங்களை யெல்லாம் கூறாது, மறைத்துவிட்டமை முன்னரே தெளிவாகப் பார்த்தோம்.  கங்கை வரலாறு கூறிவந்த வால்மீகி கங்கையில் ஆறுமுகக் கடவுள் தோன்றினார் என்று கூற வந்தவர் இவ்வெறுப்பைத் தரும் வரலாற்றைக் கூறினார்.  இனி மேற்செல்லுதும், ஆறுமுகக் கடவுள் தோற்ற வரலாற்றைக் கங்கைக் கரையிற் கூறியதாக வால்மீகி கூறுகிறார்.  கம்பரோ சோனை நதிக்கரையிலுள்ள சோலையில் வைத்துக் கூறியதாகக் கூறுகிறார்.
                                 --------------------------"விடுதலை” 20-06-2014
Read more: http://viduthalai.in/readers-choice/120-2011-10-14-09-17-21/82529-2014-06-20-10-23-44.html#ixzz35c5sLYRA


42 comments:

தமிழ் ஓவியா said...


வி.பி.சிங்


சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர் களின் பிறந்த பொன்னாள் இந்நாள்!(1931)

எத்தனையோ பிரதமர்கள் வந்தார்கள், போனார்கள் - இருந்தார்கள் - விடை பெற்றார்கள். ஆனால், வி.பி.சிங் போல காலத்தால் அழிக்கப்பட முடியாத நினைவுச் சின்னமாக இருப்பவர்கள் யார்?

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களுக்குச் சமூகநீதி வழங்கிய சாத னைச் சரித்திரம் அவர். மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்தவர். அதன் காரண மாகத்தான் ஆட்சியையும் இழந்தார் - இன்னும் சரி யாகச் சொல்லப்போனால், அந்தப் பதவி இழப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி என்னும் குன்றாப் பரிசை நல்கியவர்.

அந்த சமூக நீதிப் பிரகடனத்தை அவர் நாடாளுமன்றத்தில் வெளி யிட்டபோது தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம்மனோகர் லோகியா ஆகியவர்களின் கனவு நனவாகிறது என்ற சரித்திரச் சொல்லாடல் களைப் பதிவு செய்தவர்.

இந்த ஆணையைப் பிறப்பித்த காரணத்தால், வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள அரசுக்கு ஆதரவு அளித்து வந்த பி.ஜே.பி. தனது ஆதரவை விலக்கிக் கொண்டு, அதன்மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது.

கொஞ்சம்கூட களை இழந்துவிடவில்லை அவர் - முகமலர்ச்சியுடன் ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.

ஆட்சிக் கவிழ்க்கப்படு முன் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தோற்போம் என்று தெரிந்திருந்தும், அதற்கு வழிவகுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அருமை, அரு மையிலும் அருமையானது!

சமூகநீதியில் யார் எந் தப் பக்கம் என்பது இதன் மூலம் நாட்டிற்கு அடை யாளம் காட்டிடப் பயன் படுமே என்றார். (தமிழ்நாட் டின் அதிமுக உறுப்பினர் கள் ஆட்சிக் கவிழ்ப்புக்குக் கைதூக்கினர்).

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைக் காணும்பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சிப் பெறு கிறேன் என்று வாயார - மனமாரப் புகழ்ந்தவர்.

சொட்டு நீர்கூட அருந் தாமல் மும்பையில் அவர் இருந்த பட்டினிப் போராட்டம், அவரது சிறுநீரகத்தைப் பாதித்தது. கடைசி வரை அதிலிருந்து அவர் மீள வில்லை.

அவருக்குச் சிறுநீரகம் அளிக்க நான், நீ! என்று முந்திக்கொண்டு கருஞ்சட்டை இளைஞரணித் தோழர்கள் சிறுநீரகம் கொடையளிக்க முன்வந்த துண்டு - நெகிழ்ந்து போனார் அந்த மன்னர் குல வழிவந்த மாண்பாளர்!

வாழ்க வி.பி.சிங்!

வளர்க அவர் நட்டு வித்த சமூகநீதிச் செடி! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82839.html#ixzz35h9ssTtO

தமிழ் ஓவியா said...


கோவில் விழாவில் பட்டாசு வெடித்து இரண்டு பேர் பலி


கள்ளக்குறிச்சி, ஜூன் 25_ விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்தில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சாமி வீதி உலாவின்போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை காண அப் பகுதியைச் சேர்ந்த ஏரா ளமானோர் திரண்டிருந் தனர். அதே பகுதியைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் வாண வெடி களை வெடித்து கொண் டிருந்தார்.

அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அருகில் சாக்கு மூட்டையில் மொத்தமாக வைத்திருந்த பட்டாசு குவியலில் விழுந் தது. இதனால் அனைத்து வெடிகளும் ஒரே நேரத் தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்தது.

இந்த வெடி விபத்தில் சிக்கி சப்பாணியும், வாண வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பித்தன் (40) ஆகிய இருவரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மனைவி ரதி (29), இவரது மகள் சந்தியா (4) மற்றும் தீபா (15), கோமதி (15), கோகிலா (13), பழனி யம்மாள் (32), சித்ரா (29), லட்சுமி (50), சுப்பிர மணியன் (45) உள்பட 30 பேர் படுகாயம் அடைந் தனர்.

அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம்பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. குணசேகரன் கிளாக்காடு பெருமா நத்தம் கிராமத்துக்குச் சென்று நேரில் விசா ரணை நடத்தி வருகிறார்.

கோவில் விழாவில் பட்டாசு விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Read more: http://viduthalai.in/e-paper/82845.html#ixzz35hA1oUov

தமிழ் ஓவியா said...


உடல் ஒன்று - உயிர் மூன்று


ஆட்சி, பிரபுத்துவம், ஜாதி உயர்வு இவை மூன்றும், உயிர் ஒன்றும் _ உடல் மூன்றுமாயிருக்கின்றன.

- (குடிஅரசு, 3.11.1929)

Read more: http://viduthalai.in/page-2/82848.html#ixzz35hAMTOGC

தமிழ் ஓவியா said...


மருத்துவர்களின் கவனக்குறைவால் காவல்துறையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு.


மும்பை, ஜூன் 25_ மருத்துவர் களின் கவனக்குறைவால் 25 வயது இளம் தாயாகிய பெண்காவலர் உயிரிழந்துள்ளார். மேகா ஆரோட் இவர் போக்குவரத்துப் பிரிவில் காவலராக வடாலா பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். இளம் தாயான அவர் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். சிறு பரி சோதனைமூலம் அவர் மார்பகத்தில் சீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. மயக்க மருந்து சிறப்பு மருத்து வராக இருக்கும் மருத்துவர் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் மருந்தை தவறுதலாகக் கொடுத் துள்ளார். சலைன்-_4 இல் அந்த மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனால், அந்தப் பெண் அதிகப் படியான ரத்த அழுத்தத்துக்கு ஆளாகி, ஒரு மணிநேரத்தில் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். பிறகு அவருடைய உயிரும் பிரிந்தது. விசாரணையில்(saline IV bottle injected with Noradrenaline) நோரோட்ரெனாலின் மருந்தை சலைனில் வேறொரு நோயாளிக்கு உள்ளதை, அந்தப் பெண்ணுக்கு செலுத்திய விவரம் தெரிய வந்தது. இரு மயக்கப்பிரிவு சிறப்பு மருத் துவர்களிடையே இதுகுறித்து ஏற் பட்ட சர்ச்சையில் அவர்களுக்குள் குற்றம் சுமத்தியபடி உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


சலைன்-4 நோயாளியின் ரத்த அழுத்தத்தைப் பாதிக்காமல் மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதற் காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் கூறப் படுகிறது. அதேநேரத்தில் அந்தப் பெண் நீண்ட நேரமாக உண வருந்தாமலும் இருந்துள்ளார் என்று தெரிகிறது. அறுவை (ஆபரேசன் தியேட்டர்) அரங்குக்கு அந்தப் பெண்ணைக் கொண்டு வரும் போதே குறைவான ரத்த அழுத்தத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். ரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவே அந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக அந்த மருந்து கலந்த பாட்டில் பயன்படுத்தப் படாமலேயே அரங்கின் பின்புறமாக இருந்துள்ளது. மயக்க மருந்து மருத்துவர் சாதாரண சலைனைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வேறொன்றைப் பயன்படுத்தி உள் ளார். அதனால், அம்மருந்தை செலுத்தியபின் 30 நிமிடங்களுக் குள்ளாகவே ரத்த அழுத்த அளவு 210 ஆக உயர்ந்துள்ளது. இதயத் துடிப்பும் அளவுக்கு அதிகமாக இருந்துள்ளது. அவர் உடனடியாக மற்ற மருத்துவர்களை அழைத் துள்ளார். உடனடியாக சலைனை யும் (4 திரவம்) நிறுத்தி உள்ளார். காற்றோட்டத்துக்காக அவரை வெளியே கிடத்தியபோது, உற வினர்கள் கூட்டம் சூழ்ந்து கொண் டதால், சுவாசிக்க முடியாமல், ரத்த நாளங்களும் இறுகிவிட்டன. ரத்த ஓட்டங்கள் தடைபட்ட தால் உடலின் பிற உறுப்புகளுக்கு செல்லவேண்டிய ரத்தம் செல் லாமல் கோமா நிலையை அடைந்து விட்டார். இந்தத் தகவலை அப் பெண்ணைக் காப்பாற்ற முயன்ற மருத்துவர் தெரிவித்துள்ளார். மயக் கத்திலிருந்து மீட்க மருத்துவக்குழு கடுமையாக முயன்றது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நாள் முழுவதும் போராடியது. மயக்க நிலையிலிருந்த அப்பெண் மயக்க நிலையிலிருந்து மீளாமலே இதயம் செயலிழந்தது. திங்கட்கிழமை (2.6.2014) மருத்துவமனைக்கு சென்ற பெண் புதன்கிழமை (4.6.2014) அன்று மருத்துவமனையில் உயிரி ழந்தார்.

தமிழ் ஓவியா said...

இரு மயக்க மருந்து மருத்துவர் களும் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொள்கின்றனர். முதல் குழுவில் இருந்த மருத்துவர்கள் திரவம்-4 என்று பாட்டிலில் லேபிளை ஒட்டியிருக்க வேண்டும். அடுத்தக் குழுவினர் லேபிள் இல்லாத பாட்டிலைப் பயன்படுத் தாமல் வேறு புதிய பாட்டிலைப் பயன்படுத்தி இருக்கவேண்டும்.

கெம் (KEM) மருத்துவமனையின் தலைவர் (DEAN) மருத்துவர் சுபாங்கி பார்க்கர் இந்த சம்பவங் களை உறுதி செய்துள்ளார். இரு மருத்துவர்களைப்பற்றிக் கூற மறுத்துவிட்டார். அப்பெண்ணின் இறப்பை போய்வடா காவல் துறையினர் விபத்து மரணமாகப் பதிவு செய்துள்ளனர். உடல் பரி சோதனைக்குப்பிறகு, கலீனா தடய ஆய்வகத்துக்கு அப்பெண்ணின் உடற்பாகங்கள் ஆய்வுக்கு அனுப் பப்பட்டுள்ளன. அப்பெண் தன் கணவருடன் காவலர் குடியிருப்பில் வசித்துள்ளார். அவர் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்று கிறார். அவர்களுக்கு 18 மாத பெண் குழந்தை உள்ளது. 2007ஆம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது போக்குவரத்துப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். அப்பெண்ணின் கணவர் பிரகாஷ் கூறும்போது, அறுவைக்கு முன்பாக எல்லா வித ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அனைத்து முடிவு களும் சரியாகவே இருந்தன. மேகா மிக உறுதியான பெண். அவர் அறுவை அரங்குக்குச் செல்லும் முன்பாக பயப்பட வேண்டாம். ஒரு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன் என்று மிக உறுதியாக சொன்னார். ஆனால், மேகாவுக்கு மருத்துவம் அளித்ததில் கோளாறாகி கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக என்னிடம் கூறினார்கள் என்றார்.

மருத்துவர் பணியிடை நீக்கம்

கெம் மருத்துவமனைக்குள்ளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் குப்தா என்கிற மருத்துவர் தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

மேகா ஆரோட்டின் கணவர் இது போதாது. வரும் ஜூன் 26ஆம் தேதி அன்று எங்களுக்கு நான் காமாண்டு திருமண நாள்வருகிறது. யாரோ ஒருவருடைய கவனக் குறைவால் நான் என் மனைவியை இழந்துள்ளேன். என் 18 மாத குழந்தை தாயை இழந்துள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/82850.html#ixzz35hAX0jMH

தமிழ் ஓவியா said...


சீச்... சீ... இந்தப் பழம் புளிக்கும்
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஏற்க மறுக்கப்பட்ட மன்னார்குடி கோபால் சுப்ரமணிய அய்யர் வாபஸ் கேட்கிறார்!

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்து விட்டதால், அவர் நீதிபதிகள் நியமன பட்டியலில் இருந்து தன் பெயரை விலக்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 4 பேர் பெயரை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அவற்றில், கோபால் சுப்பிரமணி யத்தை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல், பரிந்துரையை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தலைமை நீதிபதி லோதாவுக்கு கோபால் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் நீதிபதி நியமனத்துக்கான பட்டியலில் இருந்து என் பெயரை நான் விலக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/82904.html#ixzz35nMtZ1A9

தமிழ் ஓவியா said...


ஒரு மாத கால பிஜேபி ஆட்சி

முந்தைய மன்மோகன்சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் உலகம் எங்கும் தேக்கமடைந்த பொருளாதார சரிவு போன்றவை கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்வில் விலைவாசி உயர்வு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக பல பொய்களைக் கூறி பெரும் அறுவடை செய்து பா.ஜ.க. அரசு பதவிக் கட்டிலில் அமர்ந்தது.

பிரச்சாரம் முதலே விலைவாசி கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, சமமான கல்வி போன்றவை தான் முக்கியமாக இருந்தது. இந்த மூன்றுமே மக்களின் அடிப்படை தேவைகள் ஆகையால் எளிதில் நடுத்தர மக்களின் வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சியினரையும் பின் வாங்க வைத்து விட்டார் மோடி.

ஆனால் நடந்தது என்ன?

இதோ 30 நாட்கள் அரசின் நடவடிக்கை குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாத்திரமே மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து நல்லாட்சி என்று கூறியுள்ளனர். மற்ற 75 விழுக்காடு மக்கள் மோடியின் ஆட்சியை வசைபாடித் தாக்கியுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சினையை மய்யமாகக் கொண்டு மோடியின் ஆட்சியை வெறுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான் விலைவாசி மற்றும் சிக்கலான நடவடிக்கைகளில் கை வைப்பார்கள். ஆனால் மோடியோ ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே தனது பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் விலைவாசி உயர்விற்கு சமிக்ஞை காட்டி விட்டார்.

விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் வரவு செலவு அறிக்கையில் மானியங்கள் குறைக் கப்படும் என்ற அபாய அறிவிப்பு வேறு வந்துள்ளது.

இது வட மாநிலங்கள் முழுவதிலும் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியுள்ளது. மானியம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தற்போது அரசு விவசாயிகளுக்குத்தான் அதிக அளவில் மானியம் கொடுத்து வருகிறது. அப்படி மானியம் குறைக்கப்படும் போது விவசாயப் பொருட்களின் விலை அனைத்தும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மராட்டியம் குஜராத் மத்தியப் பிரதேசம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில் மானியம் குறைக்கப்படுமேயானால் அரசே தற்கொலைக்கு தள்ளி விடும் நிலை உருவாகி விடும்.

தமிழகத்திலும் மோடி அரசு குறித்த வெறுப்பலை அதிகமாகவே வீசுகிறது. முக்கியமாக இதுவரை எந்த அரசும் மாநில அரசின் மொழிக் கொள்கையில் தலையிடாமல் இருக்கும்போது, தடாலடியாக இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தித் திணிப்பை துவங்கியுள்ளது. இது தமிழகம் மாத்திரமில்லாமல் பல மாநிலங்களிலும் பெரிதும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் பேச்சிற்காக ஒரு அறிக்கையை விட்டு இந்தி திணிப்பை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கூறினாலும், உள்ளூர் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. முக்கியமாக இந்தி வழக்கு மொழி அல்லாத மாநிலங்களில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் இந்தி பேசும் மாநிலத்தவர்களை மெல்ல மெல்ல தலைமைப் பதவிக்கு அமர்த்தும் வேலை நடக்கிறது. இது அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

ரயில்வே மற்றும் மத்திய வெகுசன அலுவலகங் களான பாஸ்போர்ட், கனரக தொழிற்சாலை, வங்கிகள் போன்றவற்றில் இந்த மாற்றம் வெகுவாக நடந்து வருகிறது.

ரயில்வே தேர்வில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாத்திரமல்லாமல் இந்தி பேசும் மாநிலத்த வர்களை அதிகம் தென் மாநிலங்களுக்கு பணி மாற்றம் செய்து அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது.

30 நாட்களில் மோடியின் அரசு மோசமான அரசாக அமைந்து விட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிஜேபியினர் என்னென்னவெல்லாம் பேசினார்கள்! ஆளும் கட்சியான நிலையில் வேறு குரலில் பேசுவதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளத்தான் செய்வார்கள்.

நாடாளுமன்ற கூட்டம் நடத்திட சில நாள்களே உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியுள் ளனர் - இப்படி செய்வது கொல்லைப் புறவழியில் கொள்ளையடிப்பது என்று கூறினவர்கள்தான் - பட்ஜெட் கூட்டத்துக்கு முன் ரயில் கட்டணத்தை இதுவரை கண்டிராத அளவுக்கு உயர்த்தியுள்ளார்கள் என்பதைப் பொது மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

Read more: http://viduthalai.in/page-2/82910.html#ixzz35nNagx3c

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில் தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)

Read more: http://viduthalai.in/page-2/82909.html#ixzz35nNlzQq1

தமிழ் ஓவியா said...


புனித நீர்: கங்கை நீரால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம்அய்தராபாத், ஜூன் 26 அய்தராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மய்யத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மய்யம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்ப மேளாத் திருவிழாவின் போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

*கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றபின் தெரிவித் திருந்தார். ஆயினும், இதில் எதிர் பார்க்கப்படுவதைவிட அதிக நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே உண்மை நிலவரமாகும்.

*பக்தர்கள் பூஜைக்காக சேகரித்த தண்ணீரில் குரோமியம் 6 கலந்திருந் ததாக சோதனை மய்யத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. குரோ மியம் அத் தியாவசியமானது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையும் கொண்டதாகும். நச்சுத்தன்மை நிறைந்த குரோமிய வகை இந்தத் தண்ணீரில் அனுமதிக் கப்பட்ட அளவிற்கு மேல் 50 மடங்கு அதிகமாக இருந்தது என்று என்சிசி எம் தலைவரான டாக்டர் சுனில் ஜெய்குமார் தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் காணப்படும் இந்த நச்சுத்தன்மையானது புற்றுநோய் உட்பட பல உடல்நலக் கோளாறு களை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது என்று ஜெய்குமார் குறிப்பிடுகின்றார்.

*கங்கையில் சேரும் இந்த அசுத்தங்கள் கான்பூரில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகளின் மூலமாகவே கலப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே இத்தகைய அசுத்தங்களையும் நீக்கக்கூடிய அளவில் சுத்திகரிப்பு தொழில் நுட் பம் கங்கையில் பயன் படுத்தப் படவேண்டும்என்றும் அவர் கூறி னார். இதுமட்டுமின்றி நீரில் உள்ள ஃபுளோரைட் தன்மையைக் கண்டறிய உதவும் சோதனைக் கருவிகளும் இவர்களால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனைக்கும் கிடைப்பதாக இவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-2/82912.html#ixzz35nNuWxuA

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு நாள்

சர்வதேசத் தொழில் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்த பிறகு 22 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த மகாராஷ்டிரா மாநில தொழில்துறை வளர்ச்சி 2008 முதல் வெகுவேகமாக சரிவை நோக்கி சென்றது.

பொருளாதார நிபுணர் களுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால் வெகுவிரைவிலேயே ஒரு உண்மை தெரிந்தது. உதிரி பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மனித உழைப்பு வெகுவேகமாக சரியத்துவங்கியது. இதன் சங்கிலித்தொடர் பாதிப்பு இந்தியப் பொருளா தாரத்தையே புரட்டிப்போட்டது.

காரணம் குட்கா என்னும் போதைப்பொருள் 9 வயதில் இருந்து 27 வயதிற்குள்ளானவர்களை பாதித்தது, இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 23 விழுக்காடு இளம் தலைமுறையினர் அடிமையானார்கள். 2012 மாத்திரம் மராட்டிய மாநில சுகாதாரத்துறை புகையிலை போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க பல கோடிகளை செலவு செய்தது. உடனடியாக ஆபத்துகால நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிர மாநிலம் குட்கா என்னும் போதைப்பொருளைத் தடை செய்தது மட்டுமல்லாமல் விற்பவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்கு அனுப்பியது. இதனை அடுத்து மிகவும் அபாயகரமான இந்த போதைப்பொருளின் ஆபத்தை உணர்ந்த பல மாநிலங்கள் தடைசெய்தது.

இன்றும் போதைப்பொருள் இந்திய பொருளாதாரத்திற்கு ஓர் அச்சுறுத்தும் பொருளாகவே திகழ்கிறது, இப்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடும் போதை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1987-ஆம் ஆண்டு அய்.நா தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் சுமார் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் உபயோகிப்பவர்களாக உள்ளனர் என்று அய்.நா அறிக்கையில் கூறுகிறது. போதை என்றாலே பொரும்பாலானோர் மது மற்றும் புகையிலைத்தொடர்பானவைகள் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதையும் தாண்டி உலகம் முழுவதும் மற்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, கடத்தல் அநேகமாக நடக்கிறது, எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்தி வாய்ந்த போதைப்பொருட்கள் கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் ஊக்க மருந்து ஒயிட்னர் மற்றும் சிலவகைப் பெயிண்டுகள் கூட போதை வஸ்துக்களாக பயன்படுத்தப்படுகின்ற்ன. இவை உடல்மனது இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் கேடாக அமைந்து விடுகிறது,

அறியாமை விரக்தி உளவியல் குறைபாடுகள் பொழுதுபோக்கு தற்காலிக உற்சாகம் தேவைப் பாடுகள் முதலிய காரணிகளாலேயே போதைப் பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது, இதுவே பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்ற தன்மையை ஏற்படுத்தி விடுகிறது. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவருமே போதைப்பொருள் உபயோகித்து வருகின்றனர். . ஒரு தேசத்தை அல்லது ஒரு சமுதாயத்தை தனிநபரை திட்டமிட்டு நசுக்கிவிட ஏவப்படுகிறது ஒரு ஆயுதம் போதைப் பொருளாகும். உலகில் வர்த்தகத்தில் இராணுவத் தளவாடம் மற்றும் எரிஎண்ணெய் வர்த்தகத்திற்கு இணையாக போதைப்பொருள் வணிகம் உள்ளது. மற்ற இரண்டும் சட்டரீதியாக என்றால் போதைப்பொருள் சட்டவிரோத வணிகமாக உள்ளது. போதைப்பொருள் கடத்துதல் விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு வகையில் முயற்சிக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை, தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் கடத்தல் நடக்கிறது, ஆகவே போதைக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். விற்பனையை தடைசெய்தால் மாத்திரமே இதனைத் தடுக்கமுடியும்.

இந்தியாவின் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985_இன் படி, போதைப்பொருள் தடுப்பு ஆணையம், 1986, மார்ச் 17ஆம் தேதி, தொடங்கப்பட்டது. இது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் டில்லி. மண்டல அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா உள்ளிட்ட 12 நகரங்களில் செயல் படுகிறது. மருத்துவ விதிமுறைகளுக்கு உட்படாத போதைப்பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை, பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல், பதுக்குதல் ஆகியவை குற்றம் என இந்த சட்டம் சொல்கிறது. இதனை மீறுபவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராத தொகை விதிக்கப்படுகிறது. குற்றங்களின் தன்மையை பொறுத்து மரண தண்டனையும் வழங்கப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-3/82927.html#ixzz35nOUQ2nl

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஏன் காக்கவில்லை?

தனது காலை முதலை பிடித்தவுடன் கஜேந் திரன் (யானை) கண்களில் நீர் மல்க ஆதி மூலமே! என்று அலறி அழைத்த வுடன் விஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந் தோடி வந்து சக்ராயுதத் தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்ததோடு மட்டும் அல்லாமல் முதலை வடிவில் இருந்த ஹு ஹு என்ற கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித் தான். இதுபோல மனித னாகிய நாம் ராம நாமத்தை சொல்லி அழைத்தால் நம் இடர் தீர்க்க நாராயணன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

- திருச்சி கல்யாணராமன் உபந்நியாசம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அதன் மேலாளர் சங்கர் ராமன் கொலை செய்யப் பட்டபோது (அதுவும் கடவுள் சன்னதியி லேயே) ஏன் ஓடி வந்து காக்கவில்லை?

Read more: http://viduthalai.in/e-paper/82960.html#ixzz35tF8R4l2

தமிழ் ஓவியா said...


உங்கள் எதிரிகளை அழிக்க இதோ ஒரு வேடிக்கையான வழி!நம்மில் பலரும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மிக மிக வேகமாக, அளவுக்கு அதிகமான - ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்காக ஏதோ ஒரு பி.எச்.டி., (Ph.D.) ஆய்வே செய்வது போல் முடிவு எடுத்து, மாதக் கணக்கில் நேரம், நினைப்பு, உழைப்பு, (பணம்) நிதி முதலியவைகளை தேவைக்கு அதிகமாகவே செலவழிப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, தங்களது பிள்ளை உயர்நிலை மேனிலைப்பள்ளி மட்டத்தில் படிப்பை, முடித்து (அதற்கும் Graduation) பட்டம் பெறுதல் என்பது போன்ற நிகழ்ச்சி வைத்துத்தான் அமெரிக்காவில் பள்ளிகளிலிருந்து வெளியே (பாஸ் செய்த பிறகு) செல் லும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் முன்னி லையில் நடத்திடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடுத்து பிள்ளைகளை எந்த மேல் படிப்பு கல்லூரிக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் என்று முடிவு எடுப்ப தற்குள் தலையைப் பிய்த்துக் கொள் ளுவது அங்கே சர்வ சாதாரணம்! (பெற்றோருக்கு பொறுப்பு இருப்பதால் தான் அந்தக் கவலை; மற்றும் நிதிச் சுமைப் பொறுப்பும் உள்ளதே) அதற்காக பல மாத இடைவெளியில் ஊண் - உறக்கம் இன்றிக்கூட பலரையும் அணுகி அறிவுரை - ஆலோசனை கேட்பார்கள். நம் நாட்டில் அவ்வளவு தூரம் ஆராய் வார்களா என்றால் அதில் சில பெற்றோர்கள் 75 அல்லது 80 விழுக்காடு கவலை எடுத்துக் கொள்ளும் நிலை உண்டு.

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரத்தான் என்பது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டதே தவிர வேறில்லை!

அதே போன்று நம் நாட்டில் பெண் பார்ப்பதற்கு - மகளிர் பலர் புடவை, நகைக் கடைகளில் சென்று பொருள் வாங்கு வதிலும் சரி, ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - கேள்வி மேல் கேள்வி, பல புடவைகளை சளைக்காமல் சர்வே செய்தல் இவைகள் எல்லாம் உண்டு; காரணம் பணம் அதிகம் கொடுத்து வாங்கும்போது; கவலையோடு ஆராய வேண்டாமா?

(மருந்துகளை டாக்டர்கள் பரிந் துரைத்த நிலையில் அவசரமாகச் சீட்டைக் கொடுத்து வாங்கிடும் இவர்கள் அதன் காலக் கெடுவைப்பற்றிக்கூட (Expiry Date)
கவனித்து ஆராய்வதில்லை. சில நேரங்களில் காலாவதியான மருந்து களைக்கூட கவனிக்காமலே உட் கொள் ளவும் செய்கின்றனர்!)

அதிக தகவல்களைச் சேர்த்து, மாய்ந்து மாய்ந்து அதன் பிறகே இறுதி முடிவு என்று செயல்படும் வழமை உள்ளவர்கள் மனோ தத்துவ ரீதியில் ‘Information Bias’ தகவல் தேடிடும் சார்பு நிலை மையாளர் என்றே பெயரிடப்பட்டுள்ளனர்!

தேவைக்கு அதிகமான - களைப்பும், சோர்வும் அடையும் அளவு மண்டை யைக் குடைந்து கொள்ளுதல் பற்றி உளவியலாளர்கள் கூறும்போது,

உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம்; மிக அதிகமான தகவல்களை அவர்களுக் குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் குழப்பத்தில் ஊறியே அவர்கள் தோற்று விடுவார்கள் என்று வேடிக்கை யாகச் சொல்கிறார்கள். அதற்குத்தான் சதா தகவல் தேடும் சார்பாளர்களாக அவர்கள் அமர்ந்து எளிதில் முடிவு எடுக்க வேண்டிய முடிவுகளைக்கூட, மண்டை பிளந்து, ‘Cerebral Hemorrhage’ மூளையே ரத்தக் கொதிப்பின் உச்சத் திற்குச் சென்று, மூளை வெடித்தது மாதிரி ரத்தம் வழியும் அவலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று பரிதாபப்பட்டுக் கூறுகிறார்கள்!

எனவே, எண்ணித் துணியுங்கள்; என்பதன் முழுப் பொருள் புரிகிறதா?

தேவைக்கேற்ற (ஓரளவு) தகவல் களை வைத்தே முடிவுக்கு வாருங்கள் - பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு காணுங்கள்.

அதற்காக அளவு மிஞ்சிய தகவல் திரட்டி பயனற்றுப் போகாதீர்கள் என்பது நல்ல உளவியல் சார்ந்த அறிவுரைதானே!

என்ன பின்பற்றுவீர்களா? எதிரி களை அடக்க ஏராள தகவல் களைத் தீனியாகத் தந்தால் அது செரிக்குமா? செரிமான மாகாமல் வயிற்றில் புரட்சி உண்டாக்கி சோதனைக்கும் சோர்வுக் கும் ஆளாக்கும் அல்லவா அது போலத் தான்.

அளவுக்கு அதிகமானால் அமிர்த மும் நஞ்சு - என்பதற்கு இதனையும் ஒரு புது விளக்கமாக - உளவியல் ரீதியில் எடுத்துக்கொண்டு, ஒரு குறிப் பிட்ட அளவிலேயே தெளிவான, குழப்பமில்லாத முடிவு எடுங்கள் - வெற்றி நிச்சயம்!


- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/e-paper/82964.html#ixzz35tGUue4m

தமிழ் ஓவியா said...


குடியரசு தலைவரின் இந்துமதப் பிரச்சாரம்


இந்தியப் பாரம்பரிய ஆராய்ச்சி அமைப்பை தோற்றுவித்த அவ்வமைப்பின் தலைவரான சுவாமி சிவானந்த சரஸ்வதி என்சைக்ளோ பீடியா ஆஃப் இந்துயிசம் என்ற இந்து மதக் கலைக் களஞ்சிய நூலை வெளியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வேலை, திறமை, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஆகிய நான்கையும் கொண்ட முழுமையான நிலை, தர்மம், அன்பு, மோட்சம் ஆகிய நான்கும்தான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்பதை இந்து மதத் தத்துவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மனித செயல்பாட்டின் நடுநிலையான போக்குதான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் விளக்குகிறது.

இந்து மதம் என்பது பின்பற்றப்படும் ஒரு வழிமுறை மட்டுமல்ல; மெய்யறிவின் கூட்டமைப்பு. அதை விவரிக்க முடியாது; அனுபவிக்க மட்டும்தான் முடியும் என முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனை வருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், புத்தொளி கிடைக்க வேண்டும்; யாரும் துன்பப்படவோ, வேதனையடை யவோ கூடாது என்பதுதான் இந்து மதத்தின் உயரிய தத்துவம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடில்லியில் பேசியுள்ளார் (தினமலர் 24.6.2014).

ஓர் இந்து மதக்காரர் என்கிற முறையிலும் அதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் என்ற முறையிலும் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைத் தாண்டி பெரும் பொருள் இருப்பதாகக் கருதுவதற்கு இடம் இல்லை. அவர் நிதி அமைச்சராக நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் அளிக்கும் போதேகூட பல இந்து மதக் கடவுள்களை அழைத்தது உண்டு. இதில் மதச் சார்பற்ற தன்மையை அவர் கடைப் பிடித்ததில்லை. முதலில் ஒரு கருத்து முக்கியமானது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; அதற்கென்று ஒரு நிறுவனர்; அதற்கென்று தனித்த ஒரு வேத நூல். அதன் தோற்றம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஏதும் இருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றில் முரண் பாடுகளுக்கோ பஞ்சமில்லை. முரண்பாடுகளை பலகீனமாக எடுத்துக் கொள்வ தற்குப் பதிலாக முரண்பாடுகளையும்கூட சிறப்பு அம்சமாகக் கொள்ளும் மனப்பான்மை இந்து மதவாதிகளுக்கு உண்டு. காரணம் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை - இதனை ஒரு வகையில் சாமர்த்தியமாகவே கருதுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தன்னுரையில் எந்த ஓர் இடத்திலும் இந்து மதத்தின் கொள்கையில் சமத்துவத் துக்கு இடம் உண்டு என்று குறிப்பிடாதவரை மகிழ்ச்சி தான்.

குறிப்பாக இந்து மதத்தில் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று பொருளாகாது; அப்படி என்றால் வேத மறுப்புதான் இங்கு நாத்திகம்.

இத்தகைய நாத்திகர்களுக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்று வைத்திருப்பதானது எந்த வகையில் சரி?

வேதங்களை மறுத்து விட்டால் இந்து மதம் எங்கே இருக்க முடியும்? இதுபற்றி எல்லாம் மெத்த படித்தவர் களும், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களும் ஏன் சிந்திக்கவில்லை?

பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தை ஏற்படுத்தி விட்டு - ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு வகை தர்மம் என்று அறுதியிட்டு விட்டு, அந்தத் தர்மத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்று கோடு கிழித்துக் காட்டி விட்டு, அதற்குப் பிறகு அம்மதத்தில் நடு நிலைப் போக்கு என்று எப்படி சொல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

அரசனுடைய கடமையே வருண தர்மத்தைக் காப் பாற்றுவதுதான் - வருண தர்மத்தை மீறினால் அரசன் தண்டத்தை (வன்முறையை) பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு மதம் எப்படி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய முடியும்?

தலை எழுத்தின்படி நடந்து கொள்! அதில் திருப்தி அடை! அப்படி நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் மோட்சம் நம்பு - என்பது ஒரு மதமா? சுரண்டலுக்கான ஒரு வகை தந்திர அமைப்பு முறையா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தீண்டாமை என்பதேகூட க்ஷேமகரமானது என்று சொல்லக் கூடியவர் தான் இந்து மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய லோகக் குரு என்று போற்றக் கூடிய சங்கராச்சாரியார். அந்த சங்கராச்சாரியார்களைத் தண்டனிட்டுப் போற்றக் கூடியவர்கள்தாம் இந்நாட்டுப் பெரிய பதவிக்காரர்கள்! (காசியில் கங்கை நீரால் சங்கராச்சாரியாரின் காலைக் கழுவிக் குடிக்கவில்லையா அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்?)

குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய நூலை வெளியிடுவது கூட வேண்டாத ஒன்றுதான் - வேலியே பயிரை மேயலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/82963.html#ixzz35tGtS7Dx

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை


சரித்திரத்தை புராணத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.
(விடுதலை, 26.8.1967)

Read more: http://viduthalai.in/e-paper/82962.html#ixzz35tH7kZ64

தமிழ் ஓவியா said...


எங்க மகேசனைப் பார்த்தீங்களா - அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!


இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண் டிருக்கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங்களிலே.... கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா?

சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ரமணியன் போஸ் கிடைத்ததா?

தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா?

வள்ளியோடு பள்ளிகொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா கிளிக் ஆகவில்லை!

கூரான கற்கள் படிந்த புழுதி களையும், மணல் மேடுகளையும் தான் வைக்கிங் படம்பிடிக்க முடிந் ததா?

அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்று கூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே?

வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் முகவெட்டை இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா?

வாயைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டியவனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்புகிறோம்; எங்களை ஆற்றுவாரில்லையா? தேற்றுவாரில்லையா?

பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக்கிறீர்கள்? சொல்லித் தொலை யுங்களேன்! அங்கேயாவது அமெரிக் காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.

- விடுதலை, 22.7.1976 (சென்சாரால் வெட்டப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHcpegl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கி றவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டி யவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லு வதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHoOPf9

தமிழ் ஓவியா said...

ராமனின் மிருகத்தனம்

சீதை நெருப்பில் இறங்கி வந்தும்கூட, ராமனுக்கு அவள் மீதுள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக, கதையின் முடி வானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.

இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்கவில்லை. உலக ஒப்புதலுக்காகச் செய் யப்பட்டது என்றாலும், இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதைப் பார்க்கின்றபோது அதாவது, தனது மனைவி யை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டு வரும்படிச் செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படிச்செய்ததும் ஓர் ஆச்சரியமென்று சொல்லமுடியாது.

ஆகவே, ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்ரீவன், விபீசணன் நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது முதலியவையும் தக்க அத்தாட்சிகளாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHunLY5

தமிழ் ஓவியா said...


அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்


மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டு போகின்றது, அம்மன் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டு போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை, மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது, அச்சு ஒடிகின்றது.

இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் இந்த விக்கிரகங்களில் புனிதத் தன்மை அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா! தயவு செய்து சொல்லுங்கள்.

இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோட்டீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் - பாப்பராய் போகிறான் என்பதை பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.

இன்னும் ஒன்றுதான் - அப்புறம் ஒன்றுமில்லலை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதுண்ணு நினைக் கின்றீர்கள்.

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தை படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.

பதில்: சரி. அப்படியானால் அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)

மூடர்: கடவுளை படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.

பதில்: அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.

மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்.

பதில்: சரி.நல்ல காரியமாச்சு. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.

-சித்திரபுத்திரன், குடிஅரசு (4.1.1931)

Read more: http://viduthalai.in/e-paper/82995.html#ixzz35tI6dfGi

தமிழ் ஓவியா said...


பைபிளில் ஜாதி வெறி!


அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIIjl6B

தமிழ் ஓவியா said...

குட்டி கல்லுச் சாமி!

ஒரு கிழவர் தன் பேரனான சிறுவனுடன் கோவில் ஒன்றுக்குச் சென்றார். அந்தப் பையனிடம் கற்சிலையைக் காட்டி, அதைக் கும்பிடும்படி கேட்டுக் கொண்டார். சுட்டிப்பயல் உடனே, கல்லை எதற்குத் தாத்தா கும்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான்.

உடனே கிழவர், இது கல் இல்லை. கடவுளின் சிலை. இதைக் கும்பிடு என்று கூறினார். பையனும் கைகூப்பிக் கும்பிட்டான் - அந்தக் கற்சிலையை. சாமி தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த ஓட்டலுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார்கள்.

சோற்றில் சிறு கல் ஒன்றைப் பார்த்துவிட்ட அந்தப் பையன் உற்சாக மிகுதியால், தாத்தா! தாத்தா!! குட்டி சாமி இதோ என்று கும்பிட ஆரம்பித்து விட்டான். உடனே கிழவர் செய்வதறியாது, உடனிருந்தவர் களுடன் கூடி தானும் சிரித்து விட்டார்.

நன்றி: மலையாள மனோரமா, (1979 - மே 3-ஆம் வாரம்) தமிழாக்கம்: ச.ராமசாமி

Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIRGuma

தமிழ் ஓவியா said...


இன்று (ஜூன் 27) உலக நீரிழிவாளர் தினம்நீரிழிவு சர்க்கரை வியாதி என்ற உடனேயே இன்று பெரும்பாலானோர் பயத்தில் மூழ்கிவிடுகின்றனர். அக்காலத்தில் இயற்கைக்கு உகந்த உணவை உண்டு வந்தனர். ஆகையால் சர்க்கரை நோய் அவர்களைத் தாக்கவில்லை, இன்று நாம் பலவகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம் ஆகவே எளிதில் சர்க்கரை வியாதிக்கு ஆளாகிவிடுகிறோம் என்றும் சிலர் கூறுவார்கள். மனிதர்களுக்கு நாகரிகம் வளர வளர வசதிகள் பெருகுகின்றன. ஆகவே நாகரிக ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்கிறோம். உடலும் தன்னை மாற்ற முயல்கிறது. இதுதான் பரிணாமவளர்ச்சி என்று கூறுகிறோம். கடந்த 200 ஆண்டுகளில் பல உயிர்க்கொல்லி நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையின் வளர்ச்சி. உடலில் உள்ள சர்க்கரை அளவை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் உலகமெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். முன்பு சர்க்கரை நோய் வந்தவர்கள் உடல் பாகத்தில் ஏதாவது பாதிப்பு ஏறப்பட்டால் அந்தப் பாகத்தையே வெட்டி எடுத்துவிடும் நிலை இருந்தது. இன்று அப்படி அல்ல.

பாகிஸ்தானின் பிரபல மட்டைப்பந்து வீரர் வாசிம் அக்ரம் தன்னுடைய 31 வயதில் முதல்நிலை சர்க்கரை நோய்க்கு ஆளானவர் (type-1 diabetes) இந்த நிலை நோயுள்ளவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு விரை விலேயே மரணத்தை அடைந்து விடுவார்கள். பிரபல நகைச்சுவை சிரிப்பு நடிகர் உசிலைமணி இந்த type-1 diabetes
தாக்கத்தால் நீண்ட நாட்களாக மிகவும் வேதனைக் குள்ளாகி இறுதியில் மரணமடைந்தார்.

ஆனால், இன்று எந்த வகை சர்க்கரை நோயானாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீண்ட நாட்களாக உயிர் வாழமுடியும். மிகவும் ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு உயரும் தன்மையை கொண்ட வாசிம் அக்ரம் கூறுவதைக் கேளுங்கள்.

தொடக்கத்தில் எனக்கு type-1 diabetes உள்ளது என்றவுடன் என்னுடைய பயிற்சியாளர்கூட பயமுறுத்தி விட்டார். பாகிஸ்தானில் பெரிய மருத்துவர்கள் கூட என்னை அச்சுறுத்தினர். முக்கியமாக மட்டைப்பந்து விளையாட்டைக் கைவிடக்கூறினார்கள். ஆரம்பத்தில் எனக்கு ஒரு பயம் தான் இருந்தது. என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் சில இந்த வகையான சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்தும் இன்றும் ஆரோக்கியமாக வாழும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். முக்கியமாக முன்பிருந்ததைவிட அதிக நேரம் உற்சாகமாக தங்களு டைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர்.

சில நாள்கள் அவர்களுடன் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டேன். அது ஒன்றும் பெரிய சிரமமான செயல் அல்ல. பாகிஸ்தான் திரும்பிய பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தேன். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல புதிய நல்ல திருப் பங்கள் ஏற்பட்டன.

அதிலிருந்து என்னுடைய வாழ்க் கையில் பெரும் பங்கை நீரிழிவு நோய் என்ற மாயையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கி விட்டேன். இன்று யாரும் என்னை type-1 diabetes-ஆல் பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது.

கலகலப்பான வாழ்க்கை, உணவுக்கட்டுபபாடு, மருத் துவர்களின் ஆலோசனைஎல்லாவற்றையும் விட குடும்பத் தாரிடமும், பழகும் பிற நபர்களிடமும் இன்முகத்துடன் பழகி சுற்றுப்புறச்சூழலைக் கலகலப்பாக வைத்துக் கொண்டாலே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

Read more: http://viduthalai.in/page-8/82993.html#ixzz35tInUCBz

தமிழ் ஓவியா said...

னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம்


கனடாவில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக He/She என்பதற்குக்குப் பதிலாக Xe என்கிற பாலின பொதுச் சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கனடியன் சிட்டி பள்ளியின் நிர்வாகம் இந்த மாற்றத்தை அங்கீகரித்து உள்ளது. புதிய மாற்றத்தின்படி He/She என்பதற்குப் பதிலாக ‘Xe’, என்றும், him/her என்பதற்குப் பதிலாக ‘xem’, என்றும், his/her என்பதற்குப் பதிலாக ‘xyr’ என்றும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தைகளிடையே கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது குழப்பங்கள் இல்லாமல், பாலின வேறுபாடுகள் இன்றி (unisex) கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் மைக் லோம்பர்டி கூறும்போது, நாங்கள் குழந்தைகளுக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பள்ளியில் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று கூறினார். பெற்றோர்கள் இந்த மாற்றங்கள்குறித்து கேட்கும்போது, ஆறு வயதுள்ள குழந்தைகள் மத்தியில் பாலின அடையாளங்கள் பெரிதாக புரிவதில்லை. அவர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டி உள்ளதால் குழப்பங்களை அடைகிறார்கள். இந்த மாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கும்முன்பாக விவாதங்களுக்கான கூட்டங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காரசாரமாகவே நடைபெற்றது. கோபத்துடன் உள்ள பெற்றோர்கள் தரப்பில் செரில் சாங் என்பவர் குற்றச்சாட்டாகக் கூறும் போது, விவாதக்கூட்டத்துக்கு பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த விவாதம் பொருளற்றது. பிரிக்கும் அரசியலாகி உள்ளது. இதனால், மக்கள் கோபத்துடனும், நிலைகுலைந்தும் உள்ளனர் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/83019.html#ixzz35z6RHjfV

தமிழ் ஓவியா said...


திக்கெட்டும் முரசு கொட்டும் பெரியார் கொள்கைகள்!

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத்தலைவர் பேரா. டாக் டர் யுர்லிக் நிக்லசும், துணைத்தலைவர் திரு.சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப் பட்டுள்ளது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங்கப்பட்டது.

4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாயிண்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.

5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தந்தை பெரியாரின் தன்மான இயக்க மான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் வகுப்பு எடுத்தார்.

இப்படிப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிறபகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக, பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்தக் கிளையின் தலைவராக பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக சுவன்வோர்ட், செயலாள ராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பின் (அமெரிக்கா) வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து, தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கை களை, அவர் காண விரும்பிய சமுதா யத்தைப் படைக்க தன் பணியைச் செய்யும் என பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.

புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங்களை வழங்கியும் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன் ஆகியோர், பெரியார் புத் தகங்களை அரங்கில் அமர்ந்து விற்பனை செய்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் 1932இல் மேற்கொண்ட ஜெர்மனி பயணத்திற்குப் பிறகு, இப்போது தமிழர் தலைவர் கொலோன் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப்பட் டுள்ளது.

தொகுப்பு: இலக்கியா

நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (ஜூன் 16-30 2014)

Read more: http://viduthalai.in/page4/83020.html#ixzz35z85WAvs

தமிழ் ஓவியா said...


வேற்று கிரகவாசிகளைக் கண்டறிய நாசா நிறுவும் மிகப்பெரிய தொலைநோக்கி


ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகளைக் கண்டறிவதற்கு, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கியை, விண்வெளியில் நிறுவ, நாசா திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனின், போர்ட்ஸ்மவுத் நகரில் நடந்த தேசிய வானவியல் கூட்டத்தில், ராயல் வானவியல் கழகத்தின் தலைவர் மார்ட்டின் பார்ஸ்தோ, இத்திட்டம் குறித்து கூறியதாவது: இதற்காக, பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில், 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள, 'ஹபல்' தொலைநோக்கியை விட, நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியில், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கோள்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும், வேற்று கோள்களில், உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொலைநோக்கியை, பூமியில் தயாரித்து, ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு, தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ஆம் ஆண்டுக்குள், தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் இவ்வாறு, மார்ட்டின் பார்ஸ்தோ கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page4/83021.html#ixzz35z8PQVML

தமிழ் ஓவியா said...


வெண்ணெயும் - இறைச்சியும் கூடாதா?வெள்ளைக்காரர் சொல்வதே வேதம் என்ற எண்ணம் நமக்கு - அதிலும் வெள்ளைக்காரர்கள் கொடுத்த ஆங்கில வழிக் கல்வி படித்த நமக்கு வெண்ணெய் என்றாலே ரத்தக்குழாயில் மாரடைப்பை ஏற்படுத்தும் நஞ்சுருண்டையாகவே காட்சி தருகிறது. அப்படியெல்லாம் இல்லை, வெண்ணெய் நல்லது என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப் போது அட்டைப்படக் கட்டுரையாகவே வரைந்து தள்ளிவிட்டது.

உடலில் எடை கூடவும் தொப்பை வளரவும் வெண்ணெய்தான் காரணம் என்று இந்நாள்வரை ஆராய்ந்து கூறியதெல்லாம் தவறு, சர்க்கரையும் பதப் படுத்தப்பட்ட பெட்டியில் அடைக்கப் பட்ட ஆயத்த (ரெடிமேட்) உணவுகளும் தான் உடல் பருமனுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது அறிவிக்கின்றனர். 'கிளினிகல் நியூட்ரிஷன்' என்ற அமெரிக்கப் பத்திரிகை, அறிவியல்பூர்வமான பல ஆய்வுகளை நடத்திய பிறகு இந்த முடிவுக்கு வந்த தாகவும், வெண்ணெயினால் மாரடைப்பு வருவதில்லை என்றும் உரத்து அறிவித்திருக்கிறது. 'பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்' என்ற பத்திரிகையோ, பாலிலிருந்து கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் போன்ற பொருள்களைச் சாப்பிடுவதற் கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று முழங்கியிருக்கிறது. பீதியில் ஆழ்த்தினர் வெண்ணெய், நெய் சாப் பிட்டால் உடல் பருக்கும், ரத்தத்தில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பு சிறு துகள்களாகி ரத்தக்குழாயில் பயணிக்கும், இதயத்துக்குச் செல்லும் குழாய்களில் அது போய் அடைத்துக்கொள்ளும், அப்போது மாரடைப்பு ஏற்படும் என்று விரிவாகச் சொல்லி அனைவரையுமே பல்லாண்டு களாக பீதியில் ஆழ்த்திவிட்டனர். இயற்கையில் கிடைத்த இந்த வெண் ணெயை இப்படி வில்லனாக்கிய அதே சமயம், சிகரெட்டுகளுக்கும் _ மதுபானங் களுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு உபயோகியுங்கள், உற்சாக மாக இருங்கள் என்று வழிகாட்டி னார்கள் மேற்கத்திய தொழிலதிபர்கள். சிகரெட்டும் மதுபானமும் உடல் நலத்துக்கு எந்த அளவுக்குக் கேடு செய்யும் என்பதை விளக்க வேண்டிய தேவையே இல்லை. புற்றுநோய் வராமலிருக்க புகையிலைப் பொருள்களின் பக்கமே போகாதீர்கள் என்று இப்போது உலக அளவில் கெஞ்சிக் கொண்டிருக் கிறார்கள். புல்தரை வளர்த்து, அதில் கால்நடைகளை மேயவிட்டு, பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கலப்படமில்லாமல் தயாரித்து உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அயர்லாந்தில், வெண்ணெய் சாப்பிடு கிறீர்களா, அப்படியானால் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று நிபுணர் ஒருவர் இரக்கமில்லாமல் எச்சரித்தார்.

இதுவும் மக்களுடைய மனங்களில் ஆழப்பதிந்தது. மாவும் சர்க்கரையுமே உயிர்க்கொல்லிகள் 1970-களின் இறுதியில் தொடங்கி சமீப காலம்வரை வெண்ணெய்க்கு எதிராக இப்படிப்பட்ட பிரச்சாரங்களே ஓங்கி யிருந்தன. கார்போஹைடிரேட் என்று அழைக்கப்படும் மாவுச்சத்தும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளும்தான் உடல் பெருக்கக் காரணம் என்று சமீப காலங்களாகத்தான் அடுத்தடுத்து உறுதி செய்துள்ளனர்.

பால்பொருள்களும், செந்நிற இறைச்சியும்தான் உடலுக்குக் கேடு செய்யும் உணவுகள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பிரச்சாரமே செய்தனர். அது, உணவு, சுகாதாரம் குறித்து மக்களுடைய மனங்களில் கவலை பரவியிருந்த காலம். எனவே பிரச்சாரம் எடுபட்டது. அறையில் நிலவும் சாதா ரண வெப்பத்தில் உருகாத வெண்ணெய், பன்றிக்கொழுப்பு போன்றவற்றால் ஆபத்து என்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற திரவங்களால் ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டது. விலக்கியதால் மாரடைப்பு இப்படிப் பிரச்சாரம் செய்து வெண்ணெய் சாப் பிடுவதை அறவே விலக்கிவிட்டதால் தான் மாரடைப்பு பலருக்கு ஏற்பட்டி ருக்கிறது என்று லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் அசீம் மல்ஹோத்ரா குறிப்பிட்டிருக் கிறார். வெண்ணெய் போன்றவைதான் இதயத்தைக் காப்பவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். வெண் ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் 'டி' இருக்கிறது. இது இல்லா விட்டால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற செந்நிற இறைச்சி வகைகளில் இரும்புச் சத்தும் சி.எல்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் காஞ்சுகேடட் லினோலெய்க் அமிலமும் அதிகம் இருக்கின்றன. இவ்விரண்டும் பொது வான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துபவை. புற்றுநோய் வராமல் தடுக்கும் குணங்கள் உள்ளவை என்று இப்போது அறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி களால்தான் மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் ஏற்படுகின்றனவே தவிர இயற்கையான செந்நிற இறைச்சியால் அல்ல என்று இப்போது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. குறைந்தளவு கொழுப்பு உள்ளவை என்று விளம்பரப்படுத் தப்படும் உணவுப் பண்டங்களையே இப் போது வாங்கி உண்கின்றனர், அவற்றில் அதிக சர்க்கரை இருக்கிறது என்று எச்சரிக்கிறார் மல்ஹோத்ரா.

Read more: http://viduthalai.in/page5/83023.html#ixzz35z8zALVm

தமிழ் ஓவியா said...


மூன்றாம் இடத்தில்.... செபிர் நிறுவனத்தின் கணிப்பு


இன்னும் 15 ஆண்டுகளில், பொருளாதார வலிமையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என லண்டனைச் சேர்ந்த ஆலோசனை சேவை நிறுவனமான செபிர் தெரிவித்துள்ளது. செபிர் நிறுவனத்தின் மதிப்பீடு களின்படி 2028 இல் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கும். தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வரும் ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அந்த ஆண்டில் மெக்சிகோ ஒன்பதாவது இடத்திலும், கனடா பத்தாவது இடத்திலும் இருக்கும்.

செபிர் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு உலக பொருளாதார அட்டவணைப்படி இந்தியா தற்போது 11ஆவது பெரிய நாடாக உள்ளது. 2018இல் நம் நாடு 9ஆவது இடத்திற்கு முன்னேறும். 2023இல் மேலும் முன்னேறி 4ஆம் இடத்தை பிடிக்கும். 2028இல் 3வது இடத்தை பிடிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதார பலம் 6.56 லட்சம் கோடி டாலராக இருக்கும் என செபிர் கணித்துள்ளது. தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1,75,800 கோடி டாலராக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றம் நன்றாக உள்ளது. இந்நாடுகளின் வளர்ச்சி வேகம் இதே அளவில் நீடிக்கும்பட்சத்தில், 2018ஆம் ஆண்டில் இரஷ்யா 6ஆம் இடத்தில் இருக்கும். இந்தியா 9ஆம் இடத்திலும், மெக்சிகோ 12வது இடத்திலும், கொரியா 13ஆவது இடத்திலும்,துருக்கி 17வது இடத்திலும் இருக்கும் என செபிர் கணித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
(வளர்தொழில் ஜூன் 2014 பக்.32)

Read more: http://viduthalai.in/page5/83024.html#ixzz35z9DXpiI

தமிழ் ஓவியா said...


நம் வீட்டில் எந்த நூல்கள்?

20.6.2014 நாளிட்ட விஜய பாரதம் இதழில் அதன் ஆசிரியர் 34 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு இந்துக்களுக்கு நூலகம் அமைக்கவும் அதில் கீழ்க்கண்ட நூல்கள் அவசியம் இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.

இதோ ஒவ்வொரு ஹிந்துவின் வீடுகளிலும் சின்னஞ் சிறு நூலகம் அமைய வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அதில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு ஞாயிறுதோறும் கிறித்துவர் கைகளிலே பைபிள் புத்தகங்களோடு குடும்ப சகிதம் சர்ச்சுக்கு செல்லக்கூடிய காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் நம்முடைய இந்துக்களின் வீடுகளில் நமது சமய புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அது ஒரு கேள்விக் குறி தான்.

குறைந்தபட்ச புத்தகங்களையாவது நமது வீடுகளில் அவசியம் வைத்து இருக்க வேண்டும்.

1) சிறீமத் பகவத் கீதை (இறைவன் மனிதனுக்கு சொன்னதாம்) 2) திருவாசகம் (மனிதன் இறைவனுக்கே சொன்னதாம்) 3) திருக்குறள் (மனிதனுக்கு மனிதன் சொன்னதாம்) 4) ராமாயணம் 5) மகாபாரதம் 6) பாரதியார் பாடல்கள் 7) ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு. 8) அர்த்தமுள்ள இந்து மதம் 9) பஜனை பாடல்கள் 10) சுவாமி விவேகானந்தர் வரலாறு.

இப்படி விஜய பாரதம் இதழ் இந்துக் களுக்கு அறிவுரை கூறி உள்ளது.

அதில் எப்படியோ திருக்குறளையும் இணைத்து விட்டார்கள் ஏமாற்று வேலை தான். இதில் கிறித்துவர்களையும் பைபிளையும் சொல்லிவிட்டு இஸ்லாமியர்களையும், குரானையும் விட்டுவிட்டார்கள். அதே இதழில் மகான்களின் வாழ்வில் என்று தலைப்பிட்டு அதில் எனக்கு உறக்கம் எப்படி வரும்? என்று அம்பேத்கர் அவர்களின் படத்தை போட்டு செய்தியை திசை திருப்பி எழுதி இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்தால் எப்படித் தான் உறக்கம் வரும் அம்பேத்கர் அவர்களுக்கு?. மகான்களின் வாழ்வில் என்று குறிப்பிடும் விஜய பாரதம். அம் பேத்கரை இந்து மதவாதியாக்கி மகான் பட்டம் சூட்டி இருக்கிறது, மறுபக்கம் அம்பேத்கர் சமூகம் இழிநிலை சமுதாய மாக வைத்திருக்கிறது. பார்ப்பனியம் இதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் பிரித் தாளும் சூழ்ச்சி (தாழ்த்தப்பட்ட மக்கள் விஜய பாரதத்தை பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி).

எனவே திராவிடர்களாகிய தமிழர்கள், தனக்கு மானமும், அறிவும், சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவும் புரட்சி எண்ணத் தையும் உருவாக்கி மனிதனை மனிதனாக்கி தலைவர்களைப்பற்றி படியுங்கள். தமி ழர்களின் வீடுதோறும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்கள் கீழ்க்கண்டவைகளாக இருக்கட்டும்.

1) திருக்குறள் 2) விடுதலை, உண்மை 3) குடியரசு 4) ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? (அம்பேத்கர்) 5) ஆரிய மாயை (அறிஞர் அண்ணா) 6) பாரதிதாசன் பாடல்கள் 7) தந்தை பெரியார் வரலாறு 8) இராமாயண பாத்திரங்கள் (தந்தை பெரியார்) 9) கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி) 10) தமிழிசைப் பாடல்கள் 11) இராவண காவியம் 12) வாழ்வியல் சிந்தனைகள்

மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் (பெரியார் புத்தக நிலையங்களில்) கிடைக் கும். வாங்கிப் படித்து உண்மையை உணர்ந்து மூளைக்கிடப்பட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டும்.

மதங்கள் மாளட்டும், ஜாதிகள் அழி யட்டும்

சமத்துவம் மலரட்டும்

- அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page6/83026.html#ixzz35z9Qhji9

தமிழ் ஓவியா said...


பவுத்த வெறியர்களின்ஆபாசம் வட்டரக்க விஜித தேரருக்கு பலவந்தமாக சுன்னத்து


இலங்கையில் கடந்த வாரம் தாக்கப் பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்கு தலின் போது தனக்கு சுன்னத்து எனப் படும் விருத்தசேஷனம் செய்யப்பட் டதாகக் கூறினார் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மிதவாத பவுத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரரை சந் தித்து திரும்பிய அவர் வழக்குரைஞரான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை கூறியுள்ளார்.

ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக் குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்ட ரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் வீசி எறியப்பட்டுக் காணப்பட்டார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக் கியதாகக் கூறியதாக அவரது வழக் குரைஞர் முன்னதாக கூறியிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப் பையே குற்றஞ்சாட்டுகிறார் என்று அவர் வழக்குரைஞர் கூறியுள்ளார்.
-பிபிசி தமிழோசை, 23-_6_-2014

Read more: http://viduthalai.in/page6/83027.html#ixzz35z9bRjhn

தமிழ் ஓவியா said...


இங்கர்சாலின் பொன்மொழிகள்

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

####

அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.

Read more: http://viduthalai.in/page6/83028.html#ixzz35z9nQFXv

தமிழ் ஓவியா said...

இதுதான் ஹிந்துத்துவாகலாச்சார, மத மற்றும் அரசியல் இலக்குகளையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இந்து தர்மம் எனும் இந்து மதம், இந்து சன்ஸ்கிருதி எனும் இந்து கலாச்சாரம், இந்து ராஷ்டிரா எனும் இந்து தேசம் ஆகியவற்றின் உயர்வுக்காக சேவை செய்வதே தனது கடமையாகக் கொண்டு சங்கம் செயலாற்றி வந்தது.

சங்கத்தின் முன்னாள் தொண் டரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மீது விதிக்கப் பட்ட அரசின் தடையை விலக்கிக் கொள்வதற்கு, குறைந்த அளவு பொது மக்களின் கண்களுக்குத் தோன்றும்படி யாவது, அரசியல் கோணத்திலான தனது செயல்பாடுகளை சங்கம் கை விடவேண்டுமென்று 1948 ஜனவரியில் சங்கத்திற்கு படேலினால் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது.

அதன்படி சங்கத்தின் மறைமுகமான செயல் திட்டத்திலிருந்து ஹிந்து ராஷ்டிரா என்ற சொல்லை நீக்கிய சங்கம் தாங்கள் முழுமையான ஒரு கலா சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று அரசுக்கு உறுதியளித்தது. (பக்கம் 13-_14)

ஹிந்து மதத்தின்பால் தான் கொண் டிருந்த பாசமிகுதியின் காரணமாக சாவர்க்கர் தான் எழுதிய ஹிந்துத்வா என்ற பெயர் கொண்ட நூலில் தான் உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஆற்றல் நிறைந்த, வலிமை வாய்ந்த செயல்முறையான ஹிந்துத்வா என்ற சொல்லில் தங்கள் நோக்கங்கள் நிறை வேற்றப்படுவதற்கான நல்வாய்ப்புகள் இருப்பதை சங்கம் கண்டுகொண்டது. சாவர்க்கரைப் பொறுத்தவரை ஹிந் துத்துவா என்பது ஒரு மதம் என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டது அல்ல. அவரைப் பொறுத்தவரை இந்திய தேசத்தின் ஹிந்துக்கள்

(1) ஒரு பொதுவான கலாச்சாரத் தினால் கட்டுண்டிருப்பவர்கள்;

(2) பொதுவான ஒரு வரலாற்றினைப் பெற்றிருப்பவர்கள்;
(3) தங்களுக்கென ஒரு பொது மொழியினைப் பெற்றிருப்பவர்கள்;
(4) தங்களுடையது என்ற இந்திய தேசத்தைப் பெற்றிருப்பவர்கள்;
(5) தங்களுடையது என இந்து என்ற ஒரு தனி மதத்தினைப் பெற்றிருப்ப வர்கள் ஆவர்.

தமிழ் ஓவியா said...


ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர் என்ற முழக் கங்கள் சங்பரிவாரத்தின் அடிப்படை யான, ஆதிக்கம் செலுத்தும் முழக்கங் களாக ஆயின.
ஹிந்துத்துவ அமைப்பின் மறைமுக மான செயல்திட்டம்:

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து

ஹிந்து என்றழைக்கப்படும் ஒருவன் யார்? சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை பரவியிருக்கும் பாரதவர்ஷமாகிய இந்த தேசத்தை தனது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், தனது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டி லாகவும் கருதி பாவிக்கும் ஒருவன்தான் ஹிந்து என்பவன்.

வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 38-_39)

சிந்து என்ற சொல்லின் வளர்ச் சியைத் தேடும் நமது முயற்சியில், சன்ஸ் கிருதி என்ற சொல்லையே இதுவரை நாம் சார்ந்து, நம்பி வந்துள்ளோம். தற்போதுள்ள வேறு எந்த சொற் களையும் விட சிந்துஸ்தான் என்ற சொல்லே இந்திய தேசம் என்ற வளர்ந்து வரும் கோட்பாட்டை மேலான முறையில் விவரிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நிலையில் நமது தேடுதல் என்னும் நூலின் நுனியை நாம் விட்டுவிட்டோம். குறுகிய மனப்பான்மையும், பழமைவாத மும் கொண்ட ஆர்யவர்த்தா என்னும் சொல்லின் முக்கியத்துவத்தை சிந்துஸ் தான் என்ற இந்த சொல்லுக்கு அளிக் கப்பட இயன்ற வாய்ப்பினை முறியடிப் பதற்கான அதே நோக்கத்துடன்தான், ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு ஏதுமில்லாத முறையிலும், கட்சி வண்ணம் பூசப்படாமலும் இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

எடுத்துக் காட்டாக, ஒரு வல்லுநரின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தா என்பது

(நான்கு வர்ணங்கள் நடைமுறை இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிலேச்சர் நாடு என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆர்யவர்த் தாவோ அதனையும் தாண்டி வெகு தொலைவில் இருப்பதாகும்.)

ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 115)

அதனால், எட்டப்பட்ட முடிவு களைத் தொகுத்துக் கூறும்போது, இந்து எனப்படும் ஒருவன் சிந்து முதல் சிந்து வரை - அதாவது சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தையர் (பித்ரு) நாடாகக் காண்பவனாகவும், அந்த இனத்தின் ரத்தத்தின் வழி வந்த வனாகவும், அவனது நுண்ணறி விற்கான முதல் ஆதாரத்தை வேதகால அய்ந்து சிந்துநதிகளில் தேடிக் காணத் தக்கவனாகவும், தொடர்ந்த தனது முன்னேற்றப்பாதையில் தான் எவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அந் நாட்டுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ப வனாகவும் இருக்கும் ஒருவனே இந்து என அறியப்படுபவன்ஆவான்; பொது வான அவர்களது செம்மொழியான சமஸ்கிருதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அந்த இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்று வந்து அதனையே தனது கலாச்சாரமாகக் காண்பவன் ஆவான்; ஒரு பொதுவான வரலாறு, பொதுவான இலக்கியம், கலை, கட்டடக் கலை, சட்டம் மற்றும் நீதி பரிபாலனம், சடங்குகள், சம்பிரதா யங்கள், விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவன் ஆவான்; அனைத்துக்கும் மேலாக, இந்த சிந்துஸ்தான் என்னும் நாட்டினை புண்ணிய பூமியாக (புனித தேசமாக), தனது மதத் தலைவர்கள் மற்றும் தேவதூதர்கள், குருக்கள், கடவுள் மனிதர்கள் வாழும் தேசமாக வும், வழிபாட்டிற்காக தலயாத்திரை செய்யும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன் ஆவான்.

ஹிந்துத்துவாவிற்கு மிகமிக முக்கிய மானவையாவன:
ஒரு பொதுவான நாடு (ராஷ்டிரா),
ஒரு பொதுவான இனம் (ஜாதி)
ஒரு பொதுவான கலாச்சாரம் (சன்ஸ்திரி)

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஒன்றுதிரட்டி மிகச் சுருக்கமா இவ் வாறு கூறலாம்:

எவன் ஒருவனுக்கு சிந்துஸ்தான் ஒரு பித்ரு பூமியாக மட்டுமல்லாமல் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ அவனே ஹிந்து எனப்படுபவன்.

ஹிந்துத்வாவின் முதல் இரு முக்கிய தேவைகளான தேசம் மற்றும் ஜாதி ஆகியவை மிகமிகத் தெளிவாக பித்ரு பூமி என்று குறிப்பிடப்பட்டு பொருள் கொள்ளப்படுவதாகும். அதே நேரத்தில் மூன்றாவது முக்கியத் தேவையான சன்ஸ்திரி (கலாச்சாரம்) மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் புண்ணியபூமி என்ற சொல்லால் குறிப் பிடப்படுகிறது. இந்த சன்ஸ்திரி என்பதில் புண்ணிய பூமி எனப்படும் புனித பூமியைக் குறிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், கொண் டாட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

- அ. பாலகிருஷ்ணன்

Read more: http://viduthalai.in/page6/83029.html#ixzz35zA2hr5w

தமிழ் ஓவியா said...


காவித் தலைவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதையாம்!


சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சாமிகள் என்னும் சிருங்கேரி சங்கராச் சாரி காலடியில் உள்ள கோயில்களுக்கு செல்லும்போது பயணியர் விடுதியில் அவருக்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட் டுள்ளது.

ஆதிசங்கரர் பிறந்த இடமாகிய பெரியாறு ஆற்றங்கரைப்பகுதியை ஒட்டியுள்ள காலடியில் ஆதிசங்கரரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

15ஆண்டுகளுக்குப்பின்னர் 2010ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரி கால டிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அரசின் சிறப்பு விருந்தினராக இருக்கிறார். விசாக சுக்ல பஞ்சமியில் ஆதிசங்கரர் பிறந்த நாளை மே 18இல் தத்துவவாதியின் நாளாக மாநில அரசு கொண்டாடுகிறது. மே 7ஆம் தேதி 2010 அன்று சிருங்கேரி சங்கராச்சாரி வருகையின்போது கேரள மாநில தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தவரான ஜோஸ் தெட்டாயில், தேவஸ்வ அமைச்சர் இராமச்சந்திரன், கடன்னபள்ளி மற்றும் திருவாங்கூர் அரச பரம்பரையின் தலைவரான உத்ரோதம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

ஆதிசங்கரர் மற்றும் சாரதாம்பாள் கோயில் வளாகத்தின் கிழக்கு நுழை வாயில் பழமையான கேரளா பாணி யில் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்பட் டது. சிருங்கேரி சங்கராச்சாரி கோயிலைப் பார்வையிட்டபின் கூறும்போது, காலடி தீர்த்த ஷேத்திர மாக உள்ளது. சிருங்கேரி மடத்தின் பிரதிநிதியாக வருகைதரும் சிருங்கேரி சங்கராச் சாரிக்கும் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.என்.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் சங்கரரின் பிறந்த இடம் அறியாமல் இருந்துவந்தது. 33 ஆம் சிருங்கேரி சங்கராச்சாரி சச்சிதானந்தா ஷிவபினவா நரசிம்ம பாரதி சாமி மற்றும் திருவாங்கூர் மகாராஜா சிறீமூலம் திருநாள் ராமவர்மா ஆகியோர் சேர்ந்து ஆதி சங்கரரின் பிறந்த இடத்தைக் காலடி என்று கண்டறிந்தனர்.சிருங்கேரி மற்றும் சங்கராச்சாரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாக காலடி உள்ளது என்றார்.

1910ஆம் ஆண்டில் மகா சுக்ல துவாதசியில் இரண்டு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மே 14இல் தொடங்கி ஆதிசங்கரரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட் டங்கள் மே 31 வரை நடைபெற்றுள்ளது. பூர்ணஹத்தியின் ஆதி ருத்ர மகாயாகம் சிருங்கேரி மடாதிபதியின் முன்னிலை யில் நடைபெற்றுள்ளது. விழாவை யொட்டி வித்வத் சபாக்களில் வேதங்கள் ஓதப்படுகின்றனவாம். மே 18ஆம் தேதி அன்று சிருங்கேரி சங்கராச்சாரியால் சிறப்புப் பூசை செய்யப்படுகிறதாம். அப் போது, வேதங்கள் பயின்ற வித்துவான் கள் விருதுகள், சான்றுகள் அளித்துப் பாராட்டப்படுகின்றனர். தி இந்து ஆங்கில நாளிதழ், 14-.5.-2010

Read more: http://viduthalai.in/page6/83032.html#ixzz35zAs7p4J

தமிழ் ஓவியா said...


அரிது! அரிது!!

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!!

உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page6/83033.html#ixzz35zB2suJz

தமிழ் ஓவியா said...


நாத்திக அறிஞர் தபோல்கருக்கு அம்பேத்கர் விருது


பூனா, ஜூன் 28-_ பூனாவில் பாலகந்தர்வா அரங்கில் நடைபெற்ற விழாவில் மறைந்த நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு 2013-2014ஆம் ஆண்டுக்குரிய பாரத் ரத்னா டாக்டர் பாபாசாஹெப் அம் பேத்கர் விருது அவர் மகள் முக்தாவிடம் அளிக் கப்பட்டது. நாத்திக அறிஞர் நரேந்திர தபோல் கர் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதிலும், போதை களிலிருந்து விடுவிக்கும் இயக்கத்தின்மூலமும் சமுதாயத்துக்கு தம்முடைய பங்களிப்பை வழங்கியதால் அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட் டது.

மகாராட்டிர மாநிலத் துணை முதல்வர் அஜீத் பவார் விழாவில் கலந்துகொண்டு இவ் விருதை தபோல்கர் மகள் முக்தாவிடம் வழங்கினார். விருதுடன் ரூபாய் 1,11,111 தொகையும் வழங்கப்பட் டது. விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கிய மகா ராட்டி மாநிலத் துணை முதல்வர் பேசும்போது, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதிக்குள் சிசிடிவி கேம ராக்களை பூனா மற்றும் பிம்பிரி-சின்ச்வாட் உள் ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பொருத்த உள்ளதாகத் தெரிவித்தார். பூனா மாநகராட்சி கார்பொரேஷன் சார்பில் அதன் தலைவர் சுபாஷ் ஜக்தப், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் அம் பேத்கர் விருது தேர்வுக் குழுத் தலைவருமாகிய டாக்டர் சித்தார்த் தேண்டே ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதுக்கு டாக்டர் நரேந்திர தபோல் கரைத் தேர்வு செய்துள்ள தாகச் செய்தியாளர் களிடம் அறிவிப்பை வெளியிட்டனர்.

சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களும், எழுத்தாளர்களுமா கிய ராவ்சாஹெப் காஸ்பெ மற்றும் ராம்நாத் சவன் அம்பேத்கர் விருதுக்குரிய வர்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்வதில் இறுதி முடிவெடுத்தனர். அதன்படி நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல் கர் தேர்வு செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டில் ஆகஸ்ட்டு மாதம் 19ஆம் தேதி அன்று ஆதிக்க வெறியர்களால் சுடப்பட் டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய சமுதாயப் பணிகளை நினைவுகூர்ந்து அவருக்கு 22-6-2014 அன்று வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதை அவர் மகள் முக்தா பெற்றுக்கொண்டார். விழாவில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத வாலே, மேயர் சன்சலா கோத்ரே, டாக்டர் பாபா அதவ், நிலைக்குழுவின் தலைவர் பாபு கார்னே, பூனா மாநகராட்சி ஆணையர் விகாஸ் தேஷ்முக், தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் பேச்சாளர் அன்குஷ்காகடே, ராம்நாத் சவான் மற்றும் பலரும் விழாவில் பங் கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83041.html#ixzz35zCTGurf

தமிழ் ஓவியா said...

திரவுபதையின் ஆசை


திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்?

1) தருமன் -சதா வேதாந்தம் பேசுவான்.

2) பீமன் - உடல் பெரியவன் குண்டன் சாப் பிட்டுக் கொண்டே இருப் பான்.

3) அர்ச்சுனன் - ஏகப் பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணி னாலும் அர்ச்சுனன் மனைவிகளை எண்ணவே முடியாது). 4. நகுலன், 5. சகா தேவன்

எனது பிள்ளைகள் மாதிரி. எனவே கர்ணன் மீது ஆசைப்பட்டேன் என்கிறாள் திரௌபதி. (வியாசர் பாரதம்)

இந்த ஆன்மிகத்தை ஏற்கத் தயார் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/83044.html#ixzz35zCePPHy

தமிழ் ஓவியா said...


பாலாறா? பாழாறா?தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் தொல்லைகள் தலை தூக்குகின்றன. கருநாடகத்தி லிருந்து காவிரிக்குத் தொல்லை என்றால் கேரளாவி லிருந்து முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் முட்டுக்கட்டை!

இப்பொழுது ஆந்திராவிலிருந்து அறைகூவல் இவ்வாற்றின் பிறப்பிடம் கருநாடகம் என்றாலும் 60 மைல் அம்மாநிலத்தில் ஓடி ஆந்திர மாநிலம் குப்பத்தில் கால் பதிக்கிறது. குப்பம் மாவட்டத்தில் 30 மைல் பயணமாகி தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூரில் புகுகிறது. வேலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக வழிந்தோடி கல்பாக்கம் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழ்நாட்டில் இதன் ஓட்டம் 140 மைலாகும்.

இந்தப் பாலாறு வேலூர் மாவட்ட மக்களுக்குப் பால் வார்க்கும் நதியாகும் அம்மாவட்டத்தில் 49 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலாற்றால் பயன் அடைகிறது. 300 ஏரி குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாலாற்றங் கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை முக்கிய பயிர்களாகும்.

பாலாற்றின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டும் வருகின்றன.

மைசூர் மாநிலத்திற்கும், சென்னை மாநிலத்திற்கும் இடையில் எப்படி காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ அதுபோலவே பாலாற்றுப் பிரச் சினையிலும் ஓர் ஒப்பந்தம் 1892இல் போடப்பட்டது.

அதன்படி பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டக் கூடாது; அணைகளின் உயரத்தையும் நீட்டக் கூடாது.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலம் எப்படி ஒப்பந்தத்தை எல்லாம் உடைத்துத் தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்து கொண்டு வந்துள்ளதோ, அதே புத்தியில் பாலாற்றுப் பிரச்சினையிலும் கருநாடகம் நடந்து கொண்டது. ஆனால், பேந்த மங்கலம் என்னும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த அணையை ஒப்பந்தத்தை மீறி 15 அடியிலிருந்து 30 அடியாக உயர்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் பாலாற்றின் குறுக்கே ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டிக் கொண்டது.

கருநாடக அரசு தன் பங்குக்கு ஒப்பந்தத்தை உடைத்தது என்றால் ஆந்திர அரசு தன் பங்குக்கு ஏதாவது தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய வேண்டாமா?

1892 ஒப்பந்தத்தை மீறி குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரம் உள்ள 22 தடுப்பு அணைகளை 30 மைலுக்குள் கட்டி முடித்துக் கொண்டது.

இதனால் இயற்கையாகப் பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீர் செயற்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அணைகள் நிரம்பி வழியும் தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வந்து சேர முடியும்.

இதன் காரணமாகவே பாலாறு பாழாறாகிப் போய் விட்டது. 1892 ஒப்பந்தப்படி பாலாற்று நீர் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர மாநிலங்களில் சம அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் பழி வாங்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமே.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர்ப் பாசனமும், பாசன நீர்ப் பாசனமும் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையில் குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாக ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திருவாளர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டின், வடக்கு மாவட்டங்களின் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுவது போல ஒன்றை அறிவித்துள்ளார்.

குப்பத்தில் பாலாற்றில் புதிய அணை ஒன்றைக் கட்டி, ஒரு துளி நீரும் வீண் போகாமல், ஆந்திர விவசாயிகளின் நன்மைக்காகத் திட்டங்கள் தீட்டுவேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரும் தமிழ்நாட்டு உரிமையை மீட்பேன் என்று கூறியுள்ளார்.

இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை இந்நாள் முதல்வர் ஜெயலலிதா சீண்டியுள்ளது தேவையற்ற ஒன்று.

ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடியவர் இது போன்ற தமிழ்நாட்டு நலனைச் சேர்ந்த பொதுப் பிரச்சினையில், கிடைக்கக் கூடிய ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல், பொதுப் பிரச்சினையில்கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று காட்டிக் கொள்வது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வட மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் போதிய பயன் கிடைக்க வாய்ப்புண்டு.

Read more: http://viduthalai.in/page-2/83047.html#ixzz35zD5DagJ

தமிழ் ஓவியா said...


ஊழலைப்பற்றி ஏன் பேசவில்லை?


கேள்விக்குப் பதில்

ஊழலைப்பற்றி தாங்கள் பேசவில்லையே, ஊழலைப்பற்றி தங்களின் கருத்தென்ன? என்று பொதுக்கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுதி அனுப்பினார்.

அதற்குப் பதில் அளிக்கும் முறையில் தமிழர் தலைவர் கூறியது: ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் வராதவரை ஊழலை ஒழிக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாகும். 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மன நிலையில் மக்கள் இருக்கும் நாட்டில் லஞ்சம் ஒழியுமா? (பலத்த கரஒலி!)

இப்படி லஞ்சம் வழங்கியதை எங்களால் தடுக்கவே முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே சொல்லும் நாட்டில் ஊழல் சுலபத்தில் அழியுமா? உண்மையைச் சொல்லப்போனால் லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது? பூஜை அறையில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. பிரார்த்தனை என்பது என்ன? ஒன்றைக் காணிக்கைச் கொடுப்பது என்பது என்ன? கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதுதானே?

இந்த லஞ்சத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் வினா எழுப்பியபோது பலத்த கரஒலி!

- கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் (27.6.2014)

Read more: http://viduthalai.in/page-4/83067.html#ixzz35zDwEjIG

தமிழ் ஓவியா said...


72-ஆம் ஆண்டாக மேடையேறிய தமிழர் தலைவருக்கு பலத்த கரவொலி மூலம் பாராட்டு


நேற்று (ஜூன் 27) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 71 ஆண்டுகளுக்கு முன் 1943-இல் இதே நாளில் தான் கடலூர் பழையப்பட்டினம் செட்டிக்கோயில் திடலில் மாலை நடைபெற்ற தமிழர் கூட்டம் என்ற பொதுக்கூட்டத்தில், அன்று பத்துவயது கூட நிரம்பாத சிறுவனாக இருந்த கி.வீரமணி மேடை யேறி உரையாற்றினார்.

தோழர் மா.பீட்டர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் புராணங் களையும், புராண ஆபா சங்களையும் கிழி கிழி என்று கிழித்து சிறுவன் வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. மேடையை நோக்கி வந்த அறிஞர் அண்ணா அவர் கள் சிறுவன் வீரமணியின் உரையினால் பெரிதும் கவ ரப்பட்டார். இக்கூட்டத்தில் காஞ்சி பொன்னப்பா, பூவாளூர் போட்மெயில் பொன்னம்பலனார் போன் றோர் கலந்து கொண்ட னர்.

ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு வார இத ழுக்கு வளர்ச்சி நிதியாக வசூலித்த தொகையான ரூ.103/- வழங்கப்பட்டு வழிகாட்டப்பட்டது. அன்றைய சிறுவன் வீரமணி, இன்று (ஜூன் 27, 2014) திராவிடர் கழ கத்தின் தலைவராக, அடுத்த தலைமுறை கொள்கை யாளர்களை உருவாக்கும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் உங்களுக்கு வகுப்பினை நடத்த வந்திருக்கிறார் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செய்தியை கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தெரிவித்த போது அரங்கத்திலிருந்த அனைவரும் பலத்த கரவொலி மூலம் தங்கள் வரவேற்பை, மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். தொடர்ந்து கடவுள் மறுப்பு-ஏன்? என்ற தலைப்பில் தமிழர் தலை வர் வகுப்பு நடத்தினார் என்பது எத்துணை வர லாற்றுப் பொருத்தம்!

Read more: http://viduthalai.in/page-4/83068.html#ixzz35zEjmOlL

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமோ? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி என்று நீ சிந்திப்பதில்லை. நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது?

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFX1J94

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?

என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.

Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFeqWbm

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின்போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப்பனர்களின் தாசானுதா சராய் இருந்தவருமான திரு.முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் அய்யங்காரும் மற்றும் நிருவாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எ.சத்தியமூர்த்தி சாஸ்திரி, ஆர்.சீனிவா சய்யங் கார் முதலியவர்கள் நிருவாக சபையில் ராஜினாமா செய்து விட்டார்கள்.

காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில், கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆட்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய தானங்களும் அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது.

இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும்படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப்பட்ட ஆட்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலே யே காங்கிரசைப் பார்ப்பனர்கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்து ஓடுகின்ற ஆட்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகுவீரத் துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர் மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரதாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகம் தேர்தல் தாபனங்களைக் கைப்பற் றுவதுமேதான் இந்தப் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசிய லட்சியம் என்பதையும் அதற்கு வழி இருந்தால்தான் பூரண சுயேச்சையில் கலந்தி ருப்பார்கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களைக் குலாம் என்றும் சர்க்கார்தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒருசமயம் ஜெயிலுக்குப் போகவேண்டியதா யிருந்தால் இராஜினாமா கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்பதையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83072.html#ixzz35zFmL2tF