Search This Blog

30.6.14

சங்ககாலம் பொற்காலமா?

சங்ககாலம் பொற்காலமா?

பெண்ணடிமை - மூடநம்பிக்கை - வர்ணபேதம்-ஆரியத் தாக்கம்


சிறப்பிழந்த சேரமன்னர்கள்

சேரமன்னர்கள் பார்ப்பனியத்தில் ஊறித் திளைத்தனர். பார்ப்பனர்களுக்குத் தானங்களை வாரி இறைத்தனர். சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக மகப்பேறு வேள்வி (புத்ரகாமேஷ்டி யாகம்) நடத்தி பிள்ளை பெற்றானாம். (பதிற்றுப்பத்து_74)

சொக்கிப்போன சோழ மன்னர்கள்!

சோழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? கரிகால் சோழன் வேள்வித்தூண் (யூபம்) எழுப்பி வேள்வி முடித்தான். இராசசூயம் யாகம் நடத்தி இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி என இவன் அழைக்கப்பட்டான்.

பறைசாற்றப் பெற்ற பார்ப்பனத் திமிர்

ஒரு பார்ப்பனப் புலவன், சோழ இளவரசன் ஒருவனோடு சூதாடும் அளவுக்கு மிக நெருக்கமாக இருந்தான். சூதாடும்போது சினம் கொண்டு சூதாடு கருவியினை இளவரசன் வீசியதால் வெகுண்ட பார்ப்பனப் புலவன் இளவரசனைப் பார்த்து, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் (புறம்: 43: 14) என எச்சரித்துள்ளான். புலவன் என்பதைவிட, பார்ப்பனன் என்னும் வர்ணதர்மச் சிறப்பையே அவன் பெரிதாகக் கருதியுள்ளான். இது, ஆரிய_பார்ப்பன மேலாண்மையை எடுத்துக் காட்டுகிறதல்லவா? பார்ப்பன மேலாண்மை பறைசாற்றப்பட்ட சங்ககாலம் தமிழர்களின் பொற்காலம் ஆகுமா?

பணிந்துபோன பாண்டியர்கள்

பாண்டியர்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன? பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், வேள்வி செய்வதில் மிகப் புகழ்பெற்ற புரோகிதப் பார்ப்பனர்களைக் கொண்டு வேள்விகள் பல செய்து பார்ப்பனப் பணியாளராக, இருந்துள்ளார். இதனால்தான் இவனுக்கு இந்த அடைமொழியைச் சங்கப் புலவர்கள் வழங்கியுள்ளனர்.
பல்யாக சாலை அமைத்து வேள்வி நடத்தப்பெற்ற காலம் தமிழர்களின் பொற்காலமா? யாருக்குப் பொற்காலம்? தமிழர்களுக்கா? இல்லை! பார்ப்பனர்களுக்கா? எண்ணிப்பார்த்தல் வேண்டும்!

தொழப்பட்டு வந்த தொன்ம (புராண)க் கடவுள்கள்

இந்து புராண இதிகாசங்களில் வரும் கடவுள்களைச் சங்ககாலத் தமிழர் தொழுது வந்தனர். அவர்களுள், சிவன் ஒருவன். ஆரியப் புராணங்களில் சொல்லப்பட்ட முக்கண்ணன். (அகம்: 181, கலி.2; 104; புறம்-_6.) முப்புரம் எரித்தவன்_(கலி_23, 26, 156; பரிபாடல்_522) உமையொருபாகன் _ (கலி_38; புறம்_17; பதிற்றுப்பத்து_1) நீலகண்டன்(நீலமணிமிடற்றொருவன் _ கலி_142; பரிபாலை, 8,9; புறம்: 55, 56, 57) இவை சிவனைப் பற்றியவை.
முருகன்: கந்தபுராணக் கருத்தில் ஆறுகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் அறுவர் பயந்த ஆறு அமர் செல்வன் _ (முருகு: 25)
திருமால்: பாம்பணையான் (கலி_105, 123; பரி_13) திருமகள் கணவன் _ (பரிபா_3; கலி.104; பரிபா_18;2, பெரும்பாண்: 29)
திருமாலின் 10 அவதாரங்களில் மச்சம், கல்கி இரண்டும் நீங்கலாக 8 அவதாரக் கதைகள் கூறப்பட்டுள்ளன. கூர்மாவதாரம்_பரிபாடல்_3; வராக அவதாரம்_பரி_2,3,4,13; நரசிம்மாவதாரம்_பரி_4. பலராமாவதாரம்_நற்றி_32 புறம்_56, கலி_26, 105; வாமனாவதாரம்_கலி_124; பரி_3, முல்லைப்பாட்டு_1; பெரும்பாண்:29) பரசுராமாவதாரம்_அகம்_220; இராமாவதாரம்_புறம்_328; கிருஷ்ணாவதாரம்_அகம்_39; கலி_103; பரி_3, 134; புறம்_174; 201; மதுரைக்காஞ்சி_558; மேற்கண்ட ஆரியக் கடவுளை வணங்கிய காலம் பொற்காலமா?
பகுதி (4) நுண்ணிய நோக்கில் பெண்ணியக் கருத்துகள்

யாருக்கு யார் உயிர்?

ஆடவர்களுக்கு வினைபுரிதல் உயிர்; ஆனால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய இல்லத்திலேயே இருக்கும் பெண்டிருக்கு _ ஆடவர்தாம் உயிர்! என்ற பொருளில் அமைந்த சங்கப் பாடல் இது:

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே! (குறுந்தொகை: 135) இந்தப் பாடல் வழி நாம் அறிவது யாது? ஆடவன் வெளியே சென்று அலுவல் பார்த்தல் வேண்டும். பெண் வீட்டைவிட்டு வெளிச் செல்லாது இல்லத்திலேயே இருத்தல் வேண்டும். அவளுக்கு உயிர் ஆடவன்; அதாவது கணவன்!. இதுதான் சங்ககாலப் பெண்ணின் நிலை! இன்னொரு கருத்து: தன் கணவன் சான்றோர் இகழும்படியாக ஒழுக்கக் கேடனாக இருப்பினும், தகைசான்ற ஒரு பெண் தன் கணவனைப் போற்றிப் புகழ்வதுதான் சால்புடையதாகும் என்னும் பொருள்பட, தகவுடை மங்கையர் சான்றாண்மை, சான்றோர் இகழினும் கேள்வனை ஏத்தி! _ (பரிபாடல்: 88_89) என்னும் சங்கப் பாடலின் உட்பொருள் எவருக்கும் விளங்காமல் போகாது! சங்ககால மங்கையின் பெருமை இதுதானா? இவ்வன்மை இருந்த காலம் பொன்னான காலமா? பெண்ணடிமைத்தனத்தின் நிலையினை இதிலிருந்து நாம் அறிகிறோம் அல்லவா?

ஒன்று உடன்கட்டை, இன்றேல் தலைமொட்டை:

மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால், மனைவிக்கு இந்த உரிமை கிடையாது! இதைவிட ஒரு கொடுமை: கணவன் இறந்தால் மனைவி அவனோடு சிதையில் படுத்து உயிர்விட வேண்டும். பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு இறந்த கணவன் சிதையில் தீப்பாய்ந்த கொடுமையினைப் புறநானூறு _(216) புகல்கிறது! புகழ்கிறது.
உடன்கட்டை ஏறி உயிர் துறக்காவிட்டால் கணவனை இழந்த மனைவி கொடிய கைம்பெண் (விதவை) ஆகவேண்டும். அதாவது, கைம்மை நோன்பு ஏற்க வேண்டுமாம்!

என்ன கொடுமை! எத்தனைக் கொடுமை!!

கைம்பெண்ணான பெண்ணின் தலையை முழுதும் மழித்து மொட்டைத் தலையாக்குவர். கொய்ம்மொழித் தலையொடு கைம்மையுற _(புறம்: 261:17) கைவளையல்கள் உடைத்து நொறுக்கப்பட்டது. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி (புறம்_250;4) (தொடி_வளையல்).


இச்செயல்களால் அந்தப் பெண்ணின் அழகு குலைக்கப்பட்டது; கலைக்கப்பட்டது. கைம்பெண்டிர் பாயில் படுத்து உறங்கக் கூடாது; பருக்கைக் கற்களில் படுத்துறங்க வேண்டும்; பரல்பெய் பள்ளி பாயின்றி வதியும். வெள்ளரி விதை போன்ற சத்தற்ற நீர்ச்சோறு; எள் துவையல்; புளி சேர்த்துச் சமைத்த வேளைக் கீரை; இவைதான் அவர்கட்குரிய உணவு, உறைவிடம் (புறநானூறு: 246) இந்தச் சங்ககாலம்தான் தங்க காலமாம்!
பகுதி (5) படம் பிடித்துக் காட்டப்படும் பரத்தமை ஒழுக்கம்
இப்படியா பெண்மையை இழிவுப்படுத்துவது?
பரத்தமை ஒழுக்கம் ஒரு தொழிலாகவும், பரத்தையிடம் தங்க, தலைவியை விட்டுப் பிரிதல் ஒரு துறையாகவும், அதுவே தலைவனின் ஒரு பண்பாகவும் இருந்து வந்துள்ளது.

யாரோ? இவர் யாரோ?

பரத்தையர் என்பவர் பொதுமகளிர் எனப்பட்டனர்; வள்ளுவர் இவர்களை வரைவின் மகளிர் எனக் கூறுகிறார். பரத்தையருள், ஒரு தலைவன் மட்டுமே சென்று சிற்றின்பம் நிலையிலுள்ளவர் இல்பரத்தையர் எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி: 340, 359, 379, 382) இந்தக் காலத்தில் இவர்கள் சின்னவீடு என்றும் வைப்பாட்டி (Keeper) எனவும் அழைக்கப்படுவர். சேரிப்பரத்தையர் தம்மிடம் இன்பம் துய்க்கவரும் ஆடவரிடமிருந்து செல்வம் பெற்று வாழ்ந்தனர். இவர்கள் கொண்டி மகளிர் எனவும் அழைக்கப்பட்டனர். ஆற்றுநிலப் பகுதிகளில் எல்லாம் பரத்தையர் வாழ்ந்தனர். ஆற்றங்கரை நகரங்களில் அவர்தம் எண்ணிக்கை மிகுதி.

மருதத் திணையின் மதிப்புமிகு உரிப்பொருள்:

மருதத் திணையின் உரிப்பொருளாக உள்ளது. ஊடல் _ ஊடல் நிமித்தம் (வாயில்) தலைவன், தலைவியை நீங்கி பரத்தையிடம் சென்று அவளை நுகர்ந்து வீடு திரும்பும் போக்கினையே காரணமாகக் கொண்டு ஊடுதல் (பிணங்குதல்) தலைவியின் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இதுபற்றி, கூச்சமோ நாணமோ எவரும் பட்டதாகத் தெரியவில்லை. இச்செய்திகளையே சங்க அகப்பொருள் இலக்கியங்கள் சிறப்பாகவும் பெருமையாகவும் கூறுகின்றன; மாண்புடன் பாடுகின்றன. பெண்ணிழிவும், பெண்ணடிமைத்தனமும் கொடிகட்டிப் பறந்தன.

உள்ளம் கவரும் ஊடற்காட்சிகள்:

பின்வரும் கூற்றுகள் எல்லாம் தலைவியுடையன. கொடியின் இயல்புடைய பரத்தையருடைய புழுகு (புனுகுப்பூனையின் மணப்பொருள்) முதலியவற்றிலே அளைந்த மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்தாதுப்பொடி நின் தோள்பட்டையில் கிடக்க, எம்மைத் தீண்டுதற்கு நீ யார்? திரும்பிப் போய்விடு  (கலித்தொகை: 88)

வலிந்து புகுந்து நெருங்கி கூடுதற்கு வரும் தலைவனிடம், எம் இல்லம் வாராதே! போய்விடு! பரத்தையிடம் இருந்துவந்த நீ என்னைத் தொடாதே!
என்னை மன்னிப்பாயா! மன்னித்து என்னை ஏற்றுக்கொள்! _ என்றான் தலைவன். சினம் தணிந்த அந்தத் தலைவி தலைவனுடன் கூடினாள் (கலி: 90)
ஏய்! என்னை ஏமாற்றாதே!

தலைவன் பொய்கூற, தலைவி கூறுகிறார்: பரத்தை தன் கைவிரல் நகத்தால் காமவெறியில் கீறிய கீறல் வடுவாக உள்ளது! எனக்கா தெரியாது? ஏமாற்றாதே போய்விடு (கலி: 91).

வழிதப்பி வந்துவிட்டாயா? ஏடா, மணம் கமழும் கருங்கூந்தல் பரத்தை இல்லம் செல்கிறாய் நீ! இப்பொழுது வழிதவறி வந்துள்ளாயா? இங்கே வாராதே! அவளிடமே போ! போ!!

மறக்க முடியுமா?

மாட்டிக் கொண்டேன் வசமாக உன்னிடம்! மறக்க முடியுமா மாதரசி உன்னை! அருள்புரிவாய் கருணைக்கடலே! அமிழ்தல்லவோ உன் உடலே!! (கலி:91)
சொல்லடா, வாய் திறந்து!

தலைவனிடம் தலைவி: எப்படி நீ இங்கு வந்தாய்?
தலைவன்: குதிரை ஏறி உன்னிடம் வந்தேன்?
தலைவி: எந்தக் குதிரை அந்தக் குதிரை? பரத்தைக் குதிரையா? அந்தக் குதிரைதான் உன் மார்பில் கீறியதோ? பிறாண்டியதோ? சொல்லடா வாய் திறந்து! (கலி: 96)

இவ்வாறான வேண்டத்தகாத பண்பாட்டுத் தவறான பரத்தமை ஒழுக்கம் பரவிக் கிடந்த சங்ககாலம்தான் பொற்காலமா?

பகுதி (6) பெயர் போன பெருங்குடி மக்கள் கூட்டம்!

பல வகைகள்

ஏழையரும் செல்வர்களும், அரசர்களும், புலவர்களும் குடிப்பழக்கம் மிகுந்தவராகக் காணப்பட்டனர். குடிக்கின்ற கள் பலவகைகளாக இருந்தன. தென்னங்கள், பனங்கள் (பெரும்பாணாற்றுப்படை:245) அரிசிக்கள் அல்லது நறும்பிழி, (பெரும்பாண்:275) தேக்கள் தேறல்_(மலைபடுகடாம்:171) மட்டு (பட்டினப்பாலை 894), மகிழ்_(பொருநராற்றுப்படை:84), மகிழ்ப்பழம் (பொருநர்_111), தினைக்கள்_(அகநானூறு:284), மாங்கள்(அகம்:27)
இவையன்றி, யவன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேனாட்டுக் கள்ளும் வழக்கத்தில் இருந்தது. பொன்கலத்தில் ஊற்றி _இளம்பெண்கள் ஊற்றித்தர களிப்புடன் அரசர்கள் உண்பர். (புறநானூறு:24; மதுரைக்காஞ்சி_778)

அவ்வையார் அருந்தியகள்

அவ்வையார் போன்ற பெண்பாற் புலவர்களும் புரவலர்களும் குடிப்பழக்கம் உடையவராக விளங்கினர். சிறிது கள் கிடைத்தால் எமக்குக் கொடுப்பான் அரசன்: நிறையக் கிடைத்தால் நாங்கள் பாடி மகிழ அரசன் மகிழ்ந்து கள் உண்பான் என்ற கருத்தில், சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே, பெரிய கள் பெறினே யாம்பாடத் தாம் உவந்து ஈயும் மன்னே! _ (புறநானூறு)
இது அதியமானை அவ்வையார் புகழ்ந்து பாடியது. கள் அருந்துவதில் ஆடவர் _ பெண்டிர் எனப் பாகுபாடற்ற நிலை இருந்திருக்கிறது. இந்த நிலையுள்ள காலம் பொற்காலம் என்பது பொருந்துமா?
பகுதி (7) பகுத்தறிவுக்கு மாறாகப் பரவிக் கிடந்த மூடநம்பிக்கைகள்

குருட்டு நம்பிக்கைகளின் கூடாரம்:

ஒரு சமுதாயம் பகுத்தறிவு மனப்பாங்கோடு, சிந்தித்துச் செயல்பட்டு வாழ்வதுதான் அதற்குச் சிறப்புத் தருவதாகும். சங்ககாலச் சமுதாயம் அப்படிப்பட்டதா? அகம், புறம் அதாவது, காதல்-_மோதல் (போர்) இவற்றினையே அடிப்படையாக, கருப்பொருளாகக் கொண்டது ஆகும். இத்தகு வாழ்வில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, ஏன்? புறம்பாக பழமைக் கண்மூடிப் பழக்கவழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் கோலோச்சி நின்றன. பெரியாரியல் பார்வையில், சுருங்கக் கூறின், மூடநம்பிக்கைச் சேற்றில் முங்கிக் கிடந்தது. இது உண்மையா? வீண் பழியா? பார்ப்போமே?

கண்ணால் அல்லது பொறிகளால் காணாமலும் அறிவால் ஆய்ந்து பாராமலும், காரணகாரியத் தொடர்பு பற்றிக் கவலைப்படாமல் எதனையும் மடத்தனமாக நம்புவதும், ஏற்றுக்கொள்வதும் மூடநம்பிக்கைகளாகும். சங்ககாலத் தமிழர்கள் பகுத்தறிவுக்கு விடைகொடுத்துவிட்டு மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்தனர்.
பேய்கள்-பிசாசுகள்:
பேய்கள் இருப்பதாக சங்ககாலத் தமிழர் நம்பினர். போர்க்களம், சுடுகாடு, பொது மன்றங்கள், மரங்கள் முதலான இடங்களில் வாழ்வதாகவும் _ (பதிற்றுப்பத்து 24, 69) நள்ளிரவில் நடுத்தெருவில் அவை திரிவதாகவும் (புறம்:354; 386) பிணத்தின் புண்ணைத் தோண்டித் தின்னும் என்றும் (புறம்:370); பேய், பூதம் முதலான பெயரால் அவை அமையும் என்றும் அவர்கள் நம்பினர்.

கண்ணுபடப் போகுதய்யா!

கண்ணேறு எனப்படும் நம்பிக்கையுடையவர்களாக அவர்கள் வாழ்ந்தனர். ஒருவர் பார்வை மற்றவர்க்குத் துன்பம் செய்யும் என்றும் நம்பினர்.

மூட்டைமூட்டையாக பிற மூடநம்பிக்கைகள்:

1.    திங்களைப் பாம்பு விழுங்குவதே கிரகணம்;
2.    நாளும் கோளும் நன்மை தீமை செய்யும்;
3.    பாம்புகள் மாணிக்கங்களை உமிழும்.
4.    சகுனம் பார்த்துத்தான் எச்செயலையும் செய்தல் வேண்டும்.
5.    கனவில் காணும் காட்சிகளும் கெட்ட நிமித்தங்கள் ஆகும்.
6.    பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு; (நற்றிணை: 189, 323, அகம் 151.)
7.    காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்;
8.    இடக்கண் துடித்தால் நன்மை; வலக்கண் துடித்தால் தீமை வரும்.
9.    இம்மை _ மறுமையில் நம்பிக்கை;
10.    குறி கேட்டல்.
11.    தெய்வம் எவர் மீதிலேனும் வெளிப்பட்டுத் தோன்றித்தான் கூற வேண்டியதைக் கூறும்.இவைபோன்ற, இவற்றிற்கும் மேலான பல மூடநம்பிக்கைகளைச் சங்ககால மக்கள் கொண்டிருந்தனர் என சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் என்று கூறுதல் எப்படிப் பொருந்தும்?

இத்தனையும் இருக்கலாம்!

சங்கத்தமிழர், வீரவாழ்வில் சிறந்து விளங்கியிருக்கலாம்; வெற்றிகள் பல கண்டிருக்கலாம்; வள்ளல்கள் வாரி வாரி வழங்கியிருக்கலாம்; பாவலர்கள் அழகிய, சீரிய பாக்களைப் பாடியிருக்கலாம்; பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருக்கலாம்; களவியல் _கற்பியல் என்னும் அகத்திணை வாழ்வை நடத்தியிருக்கலாம்; எழிற்கலைகளில்(Fine Arts) ஏற்றம் பெற்றிருக்கலாம். முத்தமிழ்த் துறைகளில் கரை கண்டிருக்கலாம்; வணிகத்தால் வளம் பல பெற்றிருக்கலாம்! இவற்றால் இவையிருந்த காலத்தை நாம் பொற்காலம் என்று சொல்லலாமா?

இல்லை என்பது ஏன்?

இத்தனை இருந்தும், பொருளியல் வாழ்வில் வர்க்கபேதம்; சமுதாய வாழ்வில் வர்ணபேதம்; ஆரியத்தின் தாக்கம், பெண்ணடிமைத்தனம்; பரத்தமை ஒழுக்கம், அமைதி தவழாத போர்ப்பண்பு, கரைகாணாத கள் குடி; முற்றிப்போன மூடநம்பிக்கைகள் இவை எல்லாம் வேரூன்றிக்கிடந்த சங்ககாலம் பொற்காலம் ஆகுமா? அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

-------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் ---"உண்மை”பிப்ரவரி 01-15 - 2014

20 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் கூறிய கட்டுப்பாடுதான் இயக்கத்திற்கு மிக மிக முக்கியம்


சென்னை, ஜூன் 29_ கடமை, கண்ணியம், கட்டுப் பாடு என்பதில் கட்டுப்பாடு தான் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார் தந்தை பெரியார். எனவே நமது இயக்கத்திற்கு கட்டுப்பாடு மிக மிக முக்கியம் என தி.மு.க. தலைவர் நேற்று (28.6.2014) உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறிடித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறு புகை மூட்டம் என்றாலும் அதைப் பெரிதாக்கி ஏதோ மிகப் பெரிய தீ விபத்துஏற்பட்டு விட்டதைப் போலவும், அதில் பல்லா யிரக்கணக்கானோர் பலியாகிவிட்டது போலவும் தமிழ கத்திலே உள்ள சில நாளேடுகளும், வார இதழ்களும் செய்தி வெளியிடுகின்றன. அதே நேரத்தில், மாற்றார் முகாமில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டாலும், அதனை ஒன்றுமில்லை, சாதாரண புகைதான் என்பது போல அதே இதழ்கள் எழுதுகின்றன.

அதற்கு உதா ரணம்தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகம் தோற்று விட்டது என்றதும், அதுபற்றி எப்படியெல்லாம் செய்தி வெளியிட்டார்கள்? அதே நேரத்தில் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதே, அந்தச் செய்தியை அப்படியே மறைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

22.-6-.2014 தேதிய குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், கட்சியின்அடிமட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பலரும் முன்வைத்த பிரதானமான கோரிக்கை, கட்சியில் குறுநில மன்னர்களாகத் திகழும் ஒரு சில சீனியர் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுங்கள் என்பதுதான். கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் தோல்வியைத் தழுவிய தற்கே அ.தி.மு.க. அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

தமிழ் ஓவியா said...


அதே ஸ்டைல் நடவடிக்கைகளைத்தான் தி.மு.க. தொண்டர்களும் இப்போது விரும்புகிறார்கள் என்றெல்லாம் எழுதிய தோடு, பதவியிழக்கும் 18 மா.செ.க்கள்? என்ற தலைப்பில் 18 மாவட்டக் கழகச் செயலாளர்களின் பெயரையும் வெளியிட்டிருந்தது. இது ஒரு உதாரணம்தான்.

ஆயிரம் காலத்துப்பயிர்

இதே விதமாகத்தான் தொடர்ந்து எழுதி வந்தார்கள். கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம் என்ற தலைப்பில் சைரன் என்ற இதழில் பேனாவை கீழே வைத்து சாட்டையை கையில் எடுங்கள் தலைவா? என்று யாரோ ஒரு அன்புத் தொண்டன் எழுதுவதைப் போல நீண்ட கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. 28.5-.2014 தேதிய ஜூ.வி. இதழ் அட்டையிலேயே எல்லா மாவட்டச் செயலாளர்களையும் எடு என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை. இந்தக் கட்டுரைகள் எல்லாம் கழகத்தின் மீது அக்கறையோடு எழுதப்பட்டவை அல்ல; தி.மு. கழகத்தில் ஏதாவது நிகழாதா? அப்படி நிகழ்ந்தால் திராவிட இயக்கம் என்பதையே பூண்டற்றுப் போகச் செய்து விடலாமே; என்ற நப்பாசைதான்.

தி.மு. கழகம் ஆயிரம் காலத்துப் பயிர்! இதனை அழிக்க எத்தனையோ கொம்பர்கள் எல்லாம் முயன்று பார்த்து தோல்வியைத் தான் தழுவினார்கள். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப் போல தி.மு. கழகம் பல முறை தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நின்றிருக்கிறது.

கழகத்தின் சார்பில் ஒரேயொரு இடத்தில் ஆசைத்தம்பி வெற்றி பெற்ற தில்லையா? அதற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழக அணி 38 இடங்களில் வெற்றி பெற்றதில்லையா? எனவே தேர்தல் தோல்விகள், வெற்றிகள் என்பதெல்லாம் பகல் இரவு போலத்தான்! மாறி மாறி வரத்தான் செய்யும்!தற்போது மத்தியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. தோல்வியைக் கண்டதில்லையா? தமிழகத்திலே அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியதில்லையா? ஜெயலலிதாவே சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில்லையா? அந்தக் கட்சி பெண்ணாகரத்தில் இடைத் தேர்தலில் டெபாசிட் தொகையை இழக்கவில்லையா? இந்த வெற்றி தோல்விகள் என்பதே இயக்கத்தின் ஆயுளை நிர்ணயிக் கக்கூடிய ஒன்றல்ல!

உயர் நிலை செயல் திட்டக் குழு

ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஒரு சில இடங்களில் கழகத்தினர் சரியாகப் பணி யாற்றவில்லை; மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறு செய்தார்கள்; கழக முன்னணியினரே தவறு செய்தார் கள்; அ.தி.மு.க. வினரிடம் பணம் பெற்று பணியிலே ஈடுபடாமல் இருந்தார்கள் என்பதை யெல்லாம் கேள்விப்பட்டு கழகத்தின் சார்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றினை, கழகத்தின் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அமைத்தோம்.

அந்தக் குழு கலந்தாலோசித்து, அளித்த அறிக்கைப்படி தற்போது கழகத்தின் சார்பில் 34 மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருப்பதற்கு மாறாக, மாவட்டங்களைப் பிரித்து 65 மாவட்டங்கள் என்றாக்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் என்ற விவரங்களையெல்லாம் வெளியிட்டோம். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பக்கம் பக்கமாக எழுதிய இதழ்கள், கழகம் எடுத்த இந்த நடவடிக்கை பற்றி ஏதாவது பாராட்டினார்களா என்றால் இல்லை, இல்லவே இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் கழகத் தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப் பாளர்களும் தேர்தலில் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர வேண்டுமென்று கேட்டுக் கொள் ளப்பட்டு, அவர்களும் அவ்வாறே தலைமைக் கழகத் திற்கு அளித்தார்கள்.

அந்த அறிக்கைகளையெல்லாம் தொகுத்து, வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் யார் யார் மீது புகார் கொடுத்துள்ளார்கள், அவர்களில் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, தலைமைக் கழகத்தினால் இரண்டு பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் இரண்டு மூன்று நாள்கள் தலைமைக் கழகத்திலே இரவு பகலாகத் தங்கி, யார் யார் மீது எப்படிப்பட்ட புகார்கள் வேட்பாளர்களாலும், பொறுப்பாளர்களாலும் தரப்பட்டிருக்கின்றன என்பதையும், அவர்களில் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் பரிந்துரை செய்தார்கள்.

அந்தப் பரிந்துரைகள் அடிப்படையில்தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவ தற்கு முன்பு, கழகம் தன்னிச்சையாக முடிவெடுத்து விடாமல், அவர்களை உடனடியாக கட்சி உறுப்பினர் பொறுப்பி லிருந்தே விடுவித்து விடாமல், அவர்கள் வகித்த பொறுப்புகளிலே இருந்து மட்டும், அதுவும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு, அதே நேரத்தில் அவர்கள் ஒரு வாரக் காலத்திற்குள் தங்கள் மீதான புகார்களுக்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டு, அதற்கான தலைமைக் கழக அறிவிப்பும் கடந்த 21-.6-.2014 அன்று வெளியிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அந்த அறிவிப்புக்குப் பிறகு, நடவடிக்கை எடுக்கப் பட்டவர்களில், ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம், தங்கள் விளக்கங்களை தலைமைக் கழகத்திற்கும், அதன் நகல் ஒன்றினை எனக்கும் அளித்துள்ளார்கள். தலைமைக் கழகம், அவர்களை தற்காலிகமாக விலக்கி வைத்து, ஏன் முழுவதுமாக நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்கும்படி கேட்டுக் கொண்ட நிலை யில், அவர்கள் தந்த விளக்கங்கள் சிலவற்றை நான் புரட்டிப் பார்த்தேன்.

நேற்றைய தினம் மாலையில் விளக்கம் கேட்கப்பட்ட ஒரு ஒன்றியச் செயலாளர், தங்கள் தொகுதியிலிருந்து சுமார் 100 பேர்களுடன் என்னைச் சந்தித்து, தான் அளித்த விளக்கத்தின் நகல் ஒன்றினைக் கொடுத்தார். அந்த விளக்கத்திலே, தான் அய்ந்தாம் வகுப்பு வரைதான் படித்திருப்பதாகவும், ஆனால் அவருடைய மகன் பி.ஈ., படித்திருப்பதாகவும், எனவே அவருடைய மகனை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்த முயற்சித்ததாகவும், அதனால் அந்தத் தொகுதியிலே இடம் கிடைத்து போட்டியிட்டவருக்கு தன்னிடம் வருத்தம் என்றும், அதன் காரணமாகவே தன் மீது புகார் கூறி அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அதிலே எந்தவிதமான உண்மையும் இல்லை என்று தெரிவித்ததோடு, கழகத் திற்காக அவர் ஆற்றிய பணிகள் பற்றிய விவரங்களை யெல்லாம் நிழற்பட நகல்களோடு என்னிடம் காட்டினார். தான் தேர்தல் நேரத்தில் ஆற்றிய பணிகளை யொட்டி, ஆளுங்கட்சி சார்பில் தன் மீது நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றுகளையும் என்னிடம் எடுத்துக் காட்டினார்.

நான் அவரிடம், தேர்தலுக்குப் பிறகு உங்கள் தொகுதியிலே இருந்து சுமார் 100 பேர் நேரில் வந்து உம்மீது புகார் கொடுத்தார்களே என்று கேட்ட போது, அவர்கள் எல்லாம் அங்கே போட்டியிட்ட வேட்பாளர் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்ற விவரத்தையும் கூறினார். நான் அவரிடம் இந்த விவரங்களையெல்லாம் அறிந்து கொள்வதற்காகத்தான் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது; வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் தந்த அறிக்கை மீது எடுக்கப்பட்டது தற்காலிக நட வடிக்கைதான்.

அவர்களின் புகார்களையும், அதற்கு நீங்கள் தற்போது தரும் விளக்கங்களையும் நன்றாகப் படித்து, அவற்றிலே என்ன உண்மை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் கழகம் இறுதி முடி வெடுக்கும் என்று நான் கூறிய பிறகு, அந்த ஒன்றியச் செயலாளரும், அவருடன் வந்தவர்களும் மன ஆறு தலோடு திரும்பினார்கள்.

தமிழ் ஓவியா said...


இது ஒரு உதாரணம்! இன்னொரு மாவட்டத் திலிருந்து; விளக்கம் கேட்டவர்கள் எல்லாம் இரண்டு மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து தலைமைக் கழகத்திலே விளக்க அறிக்கையினை கொடுத்து விட்டு, என்னிடம் ஒரு நகலை நேரில் கொடுக்க முடியாததால், என் வீட்டில் அதனைக் கொடுத்து விட்டு, எப்படியாவது தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தலைவரிடம் கூறுங்கள் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

தற்காலிக நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் விளக்க மளித்துள்ளார்கள். அந்த விளக்கங்களில் எல்லாம், அவர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய கழகப் பணிகள், ஏற்றுக் கொண்ட இன்னல்கள், தற்போது அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள புகார்கள் எந்த வகையிலே அமைந்தவை என்பதையெல்லாம் குறிப்பிட்டிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கழகம் 33 பேர் மீது நடவடிக்கை எடுத்து விட்டது, இனிமேல் கழகம் அவ்வளவுதான், அந்த 33 பேரில் ஓரிருவர் கழகத் தலைமையையும், கழகப் பொருளா ளரையும் கடுமையாகச் சாடி அறிக்கைகள் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள், இனி கழகம் இல்லை, நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களையெல்லாம் தேடிச் சென்று அவர்களிடம் பேட்டி கண்டு, அதிலே ஏதாவது ஓரிரு வார்த்தைகள் கழகத் தலைமையைக் குற்றஞ் சாட்டி இருக்காதா, அதை ஊதிப் பெரிதுபடுத்தலாமா, அதற்கு எப்படி தலைப்புப் போடலாம் என்றெல்லாம் துடியாய்த் துடிக்கின்ற அந்த இதழாளர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.

தமிழ் ஓவியா said...

கழகம் அனைத்து இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டது, கழகம் இனி அவ்வளவு தான், எழவே எழாது என்றெல்லாம் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் நினைத்திருந்தால், இத்தனை பேரோடு வந்து விளக்கம் தந்திருப்பார்களா? எங்கள் மீது தவறில்லை, புகார் தவறாகக் கூறப்பட்டுள் ளது, கழகத்திலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளியுங்கள் என்று கீழே விழுந்து கதறுகிறார்கள் என்றால் இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இதையா அழித்து விடப் பார்க்கிறார்கள்? விளக்கம் அளிக்க வந்த ஒன்றியச் செயலாளரும், அவருடன் வந்த வர்களும் கதறி அழுதார்களே, அவர்கள் எல்லாம் கழகத் தினால் என்ன பயன் கண்டார்கள்? சட்டப்பேரவை உறுப்பினராக தவிக்கிறார்களா? நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்று கனவு காண்கிறார்களா? தோற்றுப்போன கழகம்தானே, இதிலே நீடிக்க விரும்பு கிறார்களே, அதற்காக பல மைல் தூரம் ஓடி வந்து விளக்கம் அளிக்கிறார் களே, அவர்கள் என் கால்களில் விழுந்து கழகத்திலிருந்து நீக்கி விடாதீர்கள்என்று கெஞ்சுகிறார்களே; என் அருமை உடன்பிறப்புகளே, அவர்கள் அல்லவா கழகத்தின் ரத்த நாளங்கள்.

தமிழ் ஓவியா said...

கழகம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தீர விசாரிக்காமல் எந்த ஒரு தொண்டர் மீதும் நடவடிக்கை எடுத்து விடாது! அதே நேரத்தில் புகார்கள் உண்மையாக இருக்குமானால், ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஓரிருவர் தவறு செய்திருப் பார்களேயானால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக் காமலும் இருந்து விடாது. வீண் புகார்களை உண்மை யென நம்பி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

அது மாத்திரமல்ல; கழகத்திலே நடு மட்டத்திலே இருப்பவர்கள் மாத்திரமல்ல; மேல்நிலையிலே உள்ள வர்கள், கழகத்தின் மூத்த முன்னோடிகள் என்பவர்களே, தங்களையும் அறியாமல் இந்தத் தேர்தலில் சில தவறான செயல்களிலே ஈடுபட்டார்கள் என்பதையும் நான் நன்றாகவே அறிவேன். அவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா? நாங்கள்தான் தவறு செய்தோமா? என்ற எண்ணம் கூட ஒருசிலருக்கு எழலாம். உங்கள் எண்ணத் திலே வருவது, என் கவனத்திற்கு வராதா என்ன? மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் மாவட்டத்தில் குழு ஒன்றைச் சேர்த்துக் கொண்டு, அந்தக் குழுவின் சார்பில் கூட்டங்களை நடத்துவதும், அதிலே தங்கள் நிழற்படங்களைப் பெரிதாகப் போட்டுக் கொள்வதோடு, பொறுப்பிலே உள்ள மற்றவர்களின் நிழற்படங்களைப் புறக்கணிப் பதுமான செயல்களில் ஈடுபட்டுவருவதும் என் கவனத்திற்கு வராமல் இல்லை.

அவர்களுக்கு அ.தி.மு.க. எதிரியாக, எதிர்க்கட்சியாகத் தெரிவதைவிட, நம்மவர் கள்தான் மிக நெருங்கிய எதிரிகளாகத் தெரிகிறார்கள். இப் படிப்பட்ட செயல்களும் கடந்த தேர்தலில் நாம் தோற்க ஒரு காரணம் என்பதை அவர்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ? நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளும், சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும் மட்டுமே கழகத்தின் வரலாறு அல்ல. தி.மு.கழகம் போன்ற மாபெரும் இயக்கத்தில் தேர்தல் வெற்றி கண்டு வெறி கொண்டு அலையவும் மாட்டோம்; அதே நேரத்தில் தோல்வி கண்டு துவண்டு விடவும் மாட்டோம். தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட் டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தவறே செய்யாதவர்கள், தேர்தலில் சிறப்பாகப் பணியாற் றினார்கள் என்றெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை.

வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டு கார்கள் கூறப்படாததால் அவர்கள் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல தவறு செய்தவர்கள், தண்டனையை அனுபவித்தே தீரவேண் டும். அதற்கான நாட்கள் தள்ளிப் போகலாம், அவ்வளவு தான். உயர்நிலைசெயல்திட்டக் குழு நடைபெற்றபோது, அதிலே பேசிய ஒரு உறுப்பினர், தலைவர் அவர்களே, நீங்கள் நிச்சயமாக யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள்; ஏனென்றால் உங்கள் மனம் மிகவும் இளகியது; யார் மீதும் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு மனம் வராது என்று கூறினார். நான் அப்போது எதுவும் கூறவில்லை.

பெரியார் கூறிய கட்டுப்பாடுதான் இயக்கத்திற்கு மிகவும் முக்கியம்

பேரறிஞர் அண்ணா ஒரு முறை கூறினார், நான்கை அய்ந்தாக ஆக்க வேண்டும், அய்ந்தை ஆறாக ஆக்க வேண்டும், மாறாக ஆறை அய்ந்தாக ஆக்கி விடக் கூடாது என்றார். நானும் அதையே நினைத்துக் கொண் டிருப்பது உண்மைதான். ஒருசில கட்சிகளில் ஒருவர் நினைத்தால் இருக்கலாம், அவர் நினைக்கவில்லை யென்றால் கட்டம் கட்டி விடுவார்கள் என்ற நிலையிலே நான் இல்லைதான். ஆனாலும் தவறு அளவுக்கு மீறு மேயானால், நடவடிக்கை எடுக்கப்பட்டே தீர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அண்ணா கூறியது இது. பெரியார் கூறியதோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாடுதான் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார். எனவே நமது இயக்கத்திற்கு கட்டுப்பாடு மிக மிக முக்கியம். அதைக் காப்பதற்கு, உடன்பிறப்பே நீங்கள் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும் என்பதே என்னுடைய இந்த மடலின் வேண்டுகோள்.

அன்புள்ள,
மு.க.

Read more: http://viduthalai.in/page-3/83132.html#ixzz365FbjI8E

தமிழ் ஓவியா said...

ஆவியோ - ஆவி!


விழுப்புரம் ரயில்வே காவலதுறையினர் இப்பொழுது ரயில் நிலையத்திற்குள் தங்குவதில்லையாம்; படபடத்துப் போயிருக் கிறார்களாம். பயத்தால் ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார்களாம்.

அப்படி என்ன நடந்து விட்டதாம்? ரயில்வே போலீசார் புத்தக வியா பாரி ஜெயவேல் என்பவர் மரணம் தொடர்பாக போலீசார் விசார ணையை மேற்கொண் டனர். இரவு நேரத்தில் ஜெயவேலுவின் ஆவி மிரட்டுவதாகச் சிலர் பீதியைக் கிளப்பி விட்ட னராம். இதன் காரணமாக போலீசார் யாரும் காவல் நிலையத்துக்குள் தங்கு வதில்லையாம்.

இதற்கு ஏதாவது பரிகாரம் வேண்டாமா? இப்படியெல்லாம் சொல் லுவதற்கென்றே சில ஆசாமிகள் இருப்பார்கள் அல்லவா! ஆவியை விரட்ட சில சடங்கு களைச் செய்ய வேண் டும்; சுத்திகரிக்க வேண் டும் என்று சொல்லவே, அச்சத்தின் பிடியில் கிடந்த போலீசார் அதற் கான ஆட்களை அழைத்து கணபதி பூஜை நடத்தப் பட்டு, பூஜை புனஷ் காரங்களும் சாங்கோ பாங்கமாக நடத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டதாம்!

சரி. இந்த முட்டாள் தனத்தோடாவது ஆவி பயம் தொலைந்திருக்க வேண்டும் அல்லவா!

அதுதான் இல்லை மறைந்த ஜெயவேலின் ஆவிக்குப் பயந்து இன் னும் காவல் நிலையத்திற் குள் தங்கிட அஞ்சி, வெளியில் காற்றாட இரவுப் பணியாளர்கள் படுத்து கிடக்கிறார்களாம்.

எப்படி இருக்கிறது? காவல்துறையினருக்கு உடல் பயிற்சிகள் எல் லாம் அவ்வப்போது கொடுக்கப்பட்டுதான் வருகின்றன. உடல் பலமாக இருந்து என்ன பயன்?

மனபலம், அறிவுப் பலம் இல்லையே! ஆவி என்றால் என்ன? மனிதன் இறந்து விட்டான் அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆவி என்றோ, உயிர் என்றோ தனியாக இருக் கிறதா! மனிதர் சத்துப் போய் செத்துப் போய் விட்டான் என்றால் அவ்வளவுதான்!

ஆத்மா, மோட்சம், நரகம், பிதுர்லோகம், மறுபிறப்பு ஆகியவற் றைக் கற்பித்தவன் அயோக் கியன் நம்புகிறவன் மூடன்; இவற்றால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை என்பது இதன் மூலம் தெற்றென விளங்க வில்லையா?

உண்மையான ஆவி யிலிருந்து இட்லியாவது சுடலாம். இதுபோன்ற முட்டாள்தனமான ஆவி யிலிருந்து மனிதனின் அறிவைச் சுட்டுப் பொசுக்கலாம்.

வெறும் உடற்பயிற் சியைவிட, பகுத்தறிவுப் பயிற்சி தான் அவசியம் என்பது இப்பொழுது விளங்கவில்லையா?

காவல்துறைக்குப் பெரியார் நூல்களைக் கொடுத்துப் படிக்க வைத்து அதில் தேர்ச்சி பெறுகிறவர்களை மட்டும் வேலையில் அமர்த்துக! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83186.html#ixzz36AhS9Uwp

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு ஒன்று - நினைவிருக்கட்டும்!


பி.ஜே.பி.யின் தமிழகப் பிரமுகர் திரு இல. கணேசன் அவர்கள் இந்தியைப் புகுத்த போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாட்டில் பேசி இருக்கிறார்.

இத்தகையவர்கள் இதுபோன்ற வகையில் பேசுவதைக்கூட ஒரு வகையில் வரவேற்கலாம் என்று தோன்றுகிறது. இத்தகைய வெளிப்படையான சாட்சியங்கள்தான் பிஜேபி என்பது என்ன? அதன் உள்ளுறைப் பொருள் என்ன? என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அரிய வாய்ப்புகள் ஆகும்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டால் அதன் விளைவு என்ன என்பதற்கு இதற்கு முன் ஏராளமான எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் உண்டு.

1937இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஆச்சாரியார் (ராஜாஜி) இந்தியைப் புகுத்தினார்; தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. ஆயிரக்கணக்கானோர் சிறை ஏகினர்; பெண்கள் கைக் குழந்தைகளுடன் சிறைக்குச் சென்றனர்.

இந்தி எதிர்ப்புப் பிரச்சார வழி நடைப்படையை கால்நடைகள் (விலங்குகள்) என்றும், கூலிக்கு குழந்தைகளை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறை சென்றார்கள் என்றும் தினமணி அன்று எழுதியது.

சிறைச்சாலையில் நடராசன் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் முதல் களப்பலியானபோது படிப்பறிவில்லாத ஹரிஜனன் என்று மரணம் அடைந்த நிலையிலும்கூட அந்தத் தோழரை சட்டசபையிலேயே எள்ளி நகையாடினார். பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

இந்தியை இரண்டு பேர்தான் எதிர்க்கிறார்கள். ஒருவர் ராமசாமி நாயக்கர், இன்னொருவர் புலவர் (நாவலர் சோமசுந்தர பாரதியார்) என்றார் பிரதமரான ராஜாஜி. அதற்குச் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா!

ஆமாம் - இந்தியை எதிர்ப்பவர்கள் இருவர் - ஆதரிப்பவரோ நீங்கள் ஒரே ஒருவர்தானே? என்று பளிச்சென்று அறைந்தார்.

இறுதி வெற்றி யாருக்கு? இந்தி எதிர்ப்பவர்களுக்கு தான். அந்த இந்தித் திணிப்பு தான் கட்சிகளை, ஜாதிகளை மதங்களை, ஆத்திகம் - நாத்திகம் என்பவற்றையெல்லாம் கடந்து தமிழர்களை ஓரினம் என்ற உணர்வில் ஒன்று சேர வைத்தது! இந்தித் திணிப்பு தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.

இந்தித் திணிப்பு தான் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை விரட்டியது. இந்த வரலாறு எல்லாம் புரியாமல் இல. கணேசன்கள் பூணூல்களை முறுக்கிக் காட்ட வேண்டாம்; காட்டினால் புலியை இடறிய கதையாகத்தான் முடியும்.

தமிழ் ஓவியா said...


இந்திக்காக வக்காலத்து வாங்கும் இந்த பிஜேபி வகையறாக்கள் தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை இருக்கிறதே -தமிழ்நாட்டில் நடைபெறும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கேந்திரா வித்யாலயங்களிலும் தமிழ் அறவே கற்றுக் கொடுப்பதில்லையே அதுபற்றிக் குரல் கொடுத்தது உண்டா?

தமிழை வெறுக்கும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அத்தகையவர்கள் எப்பொழுதும் இந்திக்காக நலுங்கு வைப்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

அண்மையில் மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி, கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல சமூக வலைத் தளங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றது.

இந்தி பேசாத பகுதிகளிலும் இந்தியை மறைமுக மாகப் புகுத்தும் வேலையில் இறங்கியுள்ளது பிஜேபி அரசு.

இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் எல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 27.6.2014 தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், மத்திய அரசு இந்த முடிவைக் கைவிடா விட்டால் தந்தை பெரியார் வழக்கமாக போராட்டம் அறிவிக்கும் நாளான ஆகஸ்டு முதல் தேதியன்று (1.8.2014) இரயில்வே நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் திராவிடர் கழகம் குதிக்கும் என்று அறிவித்துள்ளார்.

பி.ஜே.பி.யின் கொள்கை - ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்பது சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதே. ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் இதனைத் திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியை பள்ளிகளில் நான் புகுத்துவதன் நோக்கம் படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதற்கே என்று சென்னை இலயோலா கல்லூரியில் பிரதமர் ராஜாஜி அவர்கள் பேசியதை (24.7.1937) இங்குப் பொருத்தமாக நினைவு கூரலாம்.

மத்திய அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் சமஸ் கிருதத்திலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டதை யும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

இவ்வளவுக்கும் 127 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சமஸ்கிருதம் பேசும் மக்களின் எண்ணிக்கை வெறும் 14135 தான். சதவீத கணக்கில்கூட கூற முடியாத எண்ணிக்கை இது.

செத்த மொழியைச் சிங்காரிக்க இந்தியை முன் னோட்டமாக விட்டுப் பார்க்கிறார்கள்!

தமிழ்நாடு இதனை அனுமதியாது - இந்தி பேசாத அனைத்து மக்களின் உரிமைக் குரலாகத் தமிழகம் பொங்கி எழும்!

தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற தார் சட்டியும் புருசும் தயாராகவே உள்ளது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/83192.html#ixzz36AhjEYVN

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் அடுத்த கட்டம் இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத, தேர்வு எழுதாத 11 பேருக்கு தண்டனையா?


சென்னை, ஜூன் 30-_ தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டயமாக்க முயன்று வருகிறது. ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங் களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத!! ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு ஊழியர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுத் துறை களில் பணியாற்றுவோர் சமூக வலைத் தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத் திலும் எழுதிக் கொள்ள லாம் என்று மே 27-ஆம் தேதி உள்துறை அமைச்ச கம் உத்தர விட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங் களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள் ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத் தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல் லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 பேருக்கு மெமோ கொடுக் கப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையெப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப் போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள் ளது.

மேலும் அலுவலக கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத் துடன் தற்போது இந்தியி லும் அச்சிடப்பட்டு வழங் கப்படுகின்றன.

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியனிடம் கேட்ட போது, அவர் கூறிய தாவது:

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 6 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு அலுவலகங் களில் பணியாற்றி வருகின் றனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற் றுகின்றனர். மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியை கட்டாய மாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங் களில் ஏற்கெனவே செயல் படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண் டும் செயல் படுத்த உத்தர விட்டுள்ளது.

சென்னையில், இந்தி பயிற்சி வகுப்பு மற்றும் இந்தி தேர்வு எழுதாத 11 மத்திய அரசு ஊழியர் களுக்கு கடந்த 2 வாரங் களில் மெமோ கொடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. தென்மா நிலங்களில் இந்தி மொழி தேவையில்லாதது. எங் களுக்கான ஆவணங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகின்றன. அதை சரி பார்த்து ஆங்கிலத்தில் அரசுக்கு விளக்கம் அளிக் கிறோம்.

எனவே, ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். விருப்பமுள்ள வர்கள் படிக்கலாமே தவிர, இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்ளுக்கான தேசிய கூட்டு ஆலேசனைக் குழு விடம் முன்வைக்க உள்ளேம்.

இவ்வாறு துரை பாண்டியன் கூறினார்.

வழக்கமான நடவடிக்கைதானாம்!

இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபேது, மத்திய அரசுத் துறைகளில் பணி யாற்றும் இந்தி மொழி தெரியாத பணியாளர் களுக்கு பயிற்சி கொடுத்து தேர்வு நடத்துவது வழக் கமான ஒன்று தான்.

தேர்வில் கலந்து கொள் ளாதவர்களுக்கு மெமோ வும் வழங்கப்பட்டு வரு கிறது. இது வழக்கமான நடவடிக்கைதான். இப் போது, இந்தி மொழி பற்றி பிரச்சினை எழுந்துள்ள தால், இதை சிலர் பெரிது படுத்துகின்றனர் என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/83189.html#ixzz36AiKcslQ

தமிழ் ஓவியா said...

செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83197.html#ixzz36AiWzAK4

தமிழ் ஓவியா said...

ஜூன் 30: வகுப்புரிமை நாள்


ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்ட அனைவரும் இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டிய,நினைவு கூர வேண்டிய நாள் (30 ஜுன்). சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணையை நடைமுறைப்படுத்திய முத்தையா(முதலியார்) அவர்கள் மறைவுற்ற நாள்.

பானகல் அரசர் சென்னை மாகாண முதலைமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டவுடன் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் எல்லாச் சமூகத்தினர்க்கும் அரசுப் பணிகளில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அரசாணையப் பிறப்பித்தார்.

இதற்குப்பலத்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எழுந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆனாலும் அதன்பிறகு அவ் ஆணையை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர்.

1926 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவோடு அமைக்கப்பட்ட டாக்டர் சுப்ப ராயனைத் தவிர மற்ற மந்திரிகள் ராஜினாமா செய்து விடவே சுயேச் சைக் கட்சியினராக இருந்த திரு. முத்தையா (முதலியார்) அவர்கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு.சேதுரத்தினமய்யர் மூன்றாவது அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

திரு.முத்தையா (முதலியார்) அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற பின்னர்தான் நீதிக்கட்சியின் சமூக லட்சியமான, பார்ப்பனரல்லா தாரின் உரிமைச் சாசனமான வகுப் புரிமை எளிதில் நிறைவேறிய 'கம் யூனல் ஜி.ஓ' ஆக சட்டப்படி மலர்ந்தது. அமைச்சர் முத்தையா (முதலியார்) அவர்களின் மதிநுட்பம்,சமூக நீதி

உணர்வு ,இவைகளால் தான் வகுப் புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது( என்கிறார்தமிழர் தலைவர்)
1928 முதல் அப்பயன் அனை வருக்கும் கிடைத்தது.அந்த இட ஒதுக் கீட்டை செயல்படுத்திய முறை. அரசாங்க நியமனம் செய்ய 12 இடங்கள் உள்ளன என்றால் அவற்றை

இந்து - பார்ப்பனரல்லாதவர்களுக்கு 5

பார்ப்பனர்களுக்கு 2

இஸ்லாமியர்களுக்கு 2

கிருத்துவர்களுக்கு 2

ஆதி திராவிடர் 1

மொத்தம் 12

திரு. முத்தையா (முதலியார்) அவர்களால் தான் வகுப்புரிமை ஆணை நடைமுறைக்கு வந்தது, அதன் தொடர்ச்சி- மீட்சி தான் இன்று தமிழர் தலைவரால் சட்டம் உருவாக்கி அதனை மாநில,மத்திய அரசுகள் ஏற்று 9 ஆவது அட்டவனையில் பாதுகாப்பாக இருக்கும் 69/ சதவிகித இடஒதுக்கீடு. இவற்றால் பயன்பெற்ற அனைவரும் இதற்கு அடித் தளமிட்ட திரு.முத்தையா அவர்களின் நினைவு நாளான ஜுன் 30 நன்றியோடு நினைவு(வகுப்புரிமை நாள்) கூர்வோம்.

இதை 'வகுப்பு வாதம்' என்று பார்ப்பனர்கள் கூறி விசமப் பிரச்சாரம் செய்தபோது,தந்தை பெரியார் அவர்கள் 'அத்துனை எதிர்ப்புகளையும் அடித்து வீழ்த்தி முறியடித்து, முத்தையா (முதலி யார்) வாழ்க .என்று வாழ்த்தினார்.

ஈரோடு. த. சண்முகம்

Read more: http://viduthalai.in/page-2/83194.html#ixzz36AikitqP

தமிழ் ஓவியா said...

அதிகத் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.

எனவே, உடல் எடையை குறைக்க பகீரத முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்திக் கொள்கின்றனர்.

ஆனால், உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார துறை பேராசிரியர் சூசன் செப் தலைமையிலான நிபுணர்கள் உடல் பருமனை தடுப்பது குறித்து பலவித ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதன்படி பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஜூஸ்கள் மற்றும் நுரை ததும்பும் மது உள்ளிட்ட பானங்கள் அருந்துவதை தடுக்க வேண்டும். மாறாக அவர்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்பருமன் ஆவதை தடுக்க முடியும். ஏனெனில் ஜூஸ்கள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதுவே உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்பட காரணமாகிறது.

சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் அது போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் சூசன் செப் தெரிவித்துள்ளார். இந்த மிகவும் எளிமையான அறிவுரையை குழந்தை களுக்கு பெற்றோர் தெரிவிக்கலாம்.

இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவதை குழந்தை பருவத்தில் இருந்தே தடுக்க முடியும். வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழங் களை சாப்பிடுவது நல்லது.

சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.

Read more: http://viduthalai.in/page-7/83152.html#ixzz36AjJqbo9

தமிழ் ஓவியா said...

திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை


வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல் புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன.

வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு: வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி: சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல் படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக: பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்ச்சி தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு: வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/83155.html#ixzz36Ajh13Ix

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண விவகாரம் சுவிஸ் வங்கிக்கு இந்தியா கடிதம்


புதுடில்லி, ஜூன் 30- கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரின் விவரங் களை தருமாறு மத்திய நிதி அமைச்சகம், சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமான புதிய கடிதத்தை எழுதியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தியர் கள் பதுக்கி வைக்கப்பட்டி ருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் கருப்புப் பணம் வைத்திருப்போர் என சந்தேகப்படுபவர்களின் பட்டி யலை, எந்த வித நிபந்தனை யும் இன்றி மத்திய அரசுக்கு அளிக்க தயார் என்று, சுவிஸ் அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து சுவிஸ் வங் கிக்கு மத்திய நிதி அமைச்சகம் புதிய கடிதத்தை எழுதியுள் ளது.

இது குறித்து நிதித்துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்புப் பணம் வைத் திருப்போர் பட்டியலை அளிக்குமாறு சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சுவிஸ் வங்கி நமக்கு இந்த தகவலை அளிப் பதற்கு, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் உள்ள ராஜ ரீதியிலான ஒழுங்குமுறை ஆகியவை பயன்படுத்தப்படும். கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக் கைகள் தொடரும் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.

கருப்புப் பண விவ காரத்தில் புதிதாக அமைந் துள்ள மத்திய அரசுடன் இணைந்து, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப் போம் என சுவிஸ் அரசின் சர்வதேச நிதி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/83161.html#ixzz36AjwXU14

தமிழ் ஓவியா said...

மனைவியை மறைத்த மோடி குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத், ஜூலை 1: வேட்புமனுவில் தனது திருமண விவரத்தை நரேந்திர மோடி மறைத் தது குற்றம்தான். ஆனா லும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட முடியாது என அகமதாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நிஷந்த் வர்மா, கடந்த ஏப்ரல் மாதம் அகமதா பாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2012 சட்டமன்ற தேர்தலில் மோடி தனது வேட்புமனுவில் திருமண விவரத்தை மறைத்ததாக வும், அவர் மீது காவல் துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம்.ஷேக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ஷேக், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன்படி மோடி தனது வேட்புமனுவில் தகவலை மறைத்தது குற்றமே.

இக்குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ)(3)இன் கீழ் வரும் வழக்குகள், சம்பவம் நிகழ்ந்து ஓராண்டுக்குள் தொடர வேண்டும். மனுதாரர், ஓராண்டு 4 மாதங்களுக்கு பிறகு மனு செய்துள்ளார். எனவே, பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது எனக் கூறினார்.

இது குறித்து வர்மா கூறுகையில், மோடி குற்றம் செய்திருக்கிறார் என நீதிமன்றமே கூறிவிட்டது. இதனால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/83247.html#ixzz36GYA5sCA

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பு - முல்லைப் பெரியாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து

சென்னை, ஜூலை 1_ இந்தித் திணிப்புக் குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலியில் கூறியிருப்பதாவது:_

கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதே?

கலைஞர் :- 17-.6-.2014 அன்று தி எகானமிக் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை,- சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும், நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம், சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், இந்தி பேசாத மாநிலங் களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித் திருந்தது.

தமிழ் ஓவியா said...

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர் களிடம் கூறும்போது, எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு! என்று தெரிவித்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப் பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே?

கலைஞர் :- இதைத்தான் நான் 27-.6-.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை.

2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு அநாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார்.

ஆனால் நேற்றையதினம் (29.-6.-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, 4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது.

இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது.

இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது என்று பதில் கூறியதாக தினத்தந்தி, தினமணி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள் ளன.

எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்குத் தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்திரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக் குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் அரைவேக்காடு அவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டி ருப்பார் என்று நம்புகிறேன்.

(முரசொலி, 1.7.2014

Read more: http://viduthalai.in/page-3/83220.html#ixzz36GZ0pXnB

தமிழ் ஓவியா said...


அகில இந்திய அளவில் தனியார் துறைகளில் முழுமையாக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்


தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பேட்டி

குற்றாலம், ஜூன் 29- அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக்கோரி திராவிடர் கழகம் விரைவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தெரிவித் துள்ளார். குற்றாலத்தில் இன்று (29.6.2014) செய்தியாளர் களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேலை வாய்ப்புகள் அளிக்க வேண்டும்

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்கவில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசுக் கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து அகில இந்திய அளவில் தனியார் துறை நிறுவனங்களிலும் முழுமையான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளையும் திராவிடர் கழகம் கடைப் பிடிக்கும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்!

அதற்காக திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இப்புதிய பயணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து தனியார்மயமாவதை கண்டிப்போம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படுவதை திராவிடர் கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் தந்தை பெரியார் வழிகாட்டியிருந்தபடி ஆகஸ்டு முதல் தேதி ரயில் நிலை யங்களில் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும்.

மோடி ஆட்சி பழைய கள் புதிய மொந்தை

கடந்த ஒரு மாத பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசின் மோடி ஆட்சி, பழைய கள் புதிய மொந்தை என்ற நிலையில் தான் உள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை, பழைய நிலையைவிட மோசமான நிலையில் இருக்கிறது. விலைவாசியை பொறுத்தளவில் கடந்த ஆட்சியை விட தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் அதிக அளவில் விலையேற்றம் அதிகரித்துள்ளது.

ரயில்வே கட்டணங்கள் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்

ரயில்வே கட்டணங்கள் உயர்வு ஏழை - எளிய நடுத்தர வகுப்பு மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரயில்வே சரக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள் ளது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைக்கு முன்பே இவ்வளவு உயர்வு என்றால், பின்னர் வரி விதிப்புகள் மூலம் மக்களை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவை எதிர் விளைவுகளை உண்டாக்கும் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/headline/83140-at-a-national-level-in-the-private-sector-should-be-implemented-fully-castes-reservation-league-struggle.html#ixzz36GcBHKWa