Search This Blog

31.5.14

சுட்டிக்காட்டினால்சூடாகலாமா?கொள்கைகளைக்குழிதோண்டிப்புதைப்பதில்தயங்காதவர் வைகோ!

சுட்டிக்காட்டினால் சூடாகலாமா?
ரவிசங்கருடன் வைகோ பேச்சு வார்த்தை  பா.ஜ.க. கூட்டணி குறித்து. (தி இந்து 15.12.2013)

மதிமுகவின் கொள்கைபற்றி உண்மை இதழ் கேள்விப் பதில் பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் அளித்த பதில் மதிமுக வுக்கு கோபத்தைக் கிளப்பியிருக்கிறது போலும்!

எல்லோரும் தான் தன்னை திராவிட இயக்கம் என்கிறார்கள். பா.ஜ.க.வுடன் சேரும் வைகோகூட திராவிட இயக்கம் என்றுதான் சொல்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன பதில்தான் அது.

அதற்கு  பதில் சொல்ல முயற்சித் துள்ளது ம.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ இதழான சங்கொலி (30.5.2014 பக்கம் 7)

இந்திய அரசியலில் தேர்தலில் கூட்டணி என்பது கொள்கை அடிப் படையில் ஏற்படுவதல்ல. எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அந்தக் கட்சியினர் ஒன்று சேர்கிறார்கள். இப்படி இணைகின்ற கட்சிகளுக்கு வெவ்வேறு கொள்கைக் கோட்பாடுகள் உள்ளன. கூட்டணி சேர்ந்த தற்காக எந்தக் கட்சியும் தங்கள் கொள்கை களைக் கை விட்டு விடுவதில்லை. இதுதான் இந்திய அரசியலில் உள்ள நடைமுறை யாகும். என்று சங்கொலியில் எழுதப் பட்டுள்ளது.

இந்தப் பொது நியாயம் பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள மதிமுகவுக்குப் பொருந்தி வருகிறதா என்ற கேள்வி முக்கியம்.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கென்று பொதுத் தேர்தல் அறிக்கை கிடையாது. வாஜ்பேயி தலைமையில் தேர்தலில் போட்டியிட்டபோது அப்படி ஒரு பொதுத் தேர்தல் அறிக்கை வைக்கப்பட்டதுண்டு. (குறைந்தபட்ச திட்டம் எல்லாம்கூட வகுக்கப்பட்டதுண்டு)

இந்த முறை அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பிஜேபி தெளிவாக திட்ட வட்டமாக தனது தேர்தல் அறிக்கையில் தனது இந்துத்துவா அஜண்டாவை  முன் வைத்துள்ளது. இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால் ஆர்.எஸ். எஸின் ஆலோசனைகளைக் கேட் டுத் தான் தேர்தல் அறிக்கை தயாரிக் கப்பட்டதாக தேர்தல் அறிக் கையைத் தயாரித்த முரளி மனோகர் ஜோஷி டில்லியில் செய்தியாளர்களி டம் அப் பட்டமாகக் கூறி விட்டாரே! (12.4.2014).

பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைப் படிப்பவர்களுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மையே என்பது விளங்காமற்போகாது.

1) அயோத்தியில் ராமன் கோயில்.
2) அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆவது பிரிவு நீக்கம்.
3) யுனிஃபார்ம் சிவில் கோடு சட்டம் இயற்றப்படும்.
4) பசு பாதுகாப்புப் பேணப்படும்.

ஆர்.எஸ்.எஸ். கூறி வரும் இந்தத் திட்டங்கள், அட்சரம் பிறழாமல் பிஜேபி யின் தேர்தல் அறிக்கையிலே இடம் பெற் றுள்ளன.

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இவை நிறைவேற்றப்படும் என்பதில் அய்ய மில்லை. யாரும் எதிர்பாரா வெற்றியை பிஜேபி கூட்டணி வெற்றிபெறும் என்று இதே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  பேசவில்லையா?  (விருதுநகர் பேச்சு மாலை முரசு 20.3.2014 பக்கம்).

பிஜேபி ஆட்சிக்கு வரும்  நிலையில் தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள மேற் கண்ட ஆர்.எஸ்.எஸின் கொள் கைகள் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்று தெளிவாகத் தெரிந்து விட்ட நிலையில், மதிமுகவின் நிலைப் பாடு என்ன என்ற கேள்வி எழுமா எழாதா?

 

பிஜேபி தேர்தல் அறிக்கை கூறும் இந்தத் திட்டம் திராவிட இயக்கத்திற்கு உடன்பாடாக இருக்க முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. திராவிட இயக்கத்தின் அஸ்திவாரமான கொள்கையின்மீதே அடிப் படைக்கே வேட்டு   வைக்கும் வகையில் கோடாரி விழும் போது கூட்டணி தர்மம் பேசு வதைவிட கொடுமையானது வேறு எதுவாக இருக்க முடியும்?

அடிப்படைக் கொள்கைக்கே வேட்டு என்ற நிலையிலும் பிஜேபியோடு மதிமுக கூட்டுச் சேர்கிறது என்றால் அதன் பொருள் என்ன? கேள்வி எழாதா? தாய்க் கழகம் இடித்துக் காட்டக் கூடாதா?

இந்த முறையில்தான் திராவிடர் கழகத் தலைவர் உண்மை  இதழில் கேட்டு இருக்கிறார்.

இதற்காகக் கோபப்பட்டால் நாம் என்ன செய்வது? நேர்மையான பதில் கைவசம் இல்லை என்ற நிலையில் ஆத்திரப் படுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும். நமக்குக் கோபம் வரவில்லை - அனுதாபம்தான் பிறக்கிறது.

அந்த விருதுநகர் உரையில் வைகோ அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ள கருத்து வயிறு வெடிக்கச் சிரிப்பை மூட்டக் கூடியது என்று சொல்லலாம்; ஆனால் நாம் அப்படிக் கருதவில்லை. மறுமலர்ச்சியின் சிந்தனை யில் எப்படி இப்படியொரு சீர்கேடு கூடு கட்டியது என்றுதான் வேதனைப்பட வேண்டியுள்ளது.

மதச் சார்பற்ற ஆட்சியை நரேந்திர மோடி தருவார்! என்று குறிப்பிட்டு இருப்பதுதான் அந்தப்  பகுதி.

ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லக் கூடிய ஒருவர் மதச் சார்பற்ற ஆட்சியைத் தருவார் என்று உத்தரவாதம் சொல்லுவது  மோசடி தாயத்து வியாபாரம் அல்லவா! உ.பி. பைசராபாத்தில் பேசும்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று ராமராஜ்ஜியம் உண்டாக்குவேன் என்று மோடி பேசவில்லையா? அந்தக் கூட்ட மேடையின் பின் திரையில் ராமர் படமும், ராமன் கோயிலும் தீட்டப்பட்டதில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 5.5.2014).

அண்ணாவின் தீ பரவட்டும்! நூலுக்குத் தீ மூட்டப் போகிறார்களா?

மதச் சார்பற்ற கட்சிகள் தங்களோடு கூட்டணி வைத்துள்ளனர் என்ற எண்ணம் பிஜேபிக்கு இருந்தால் இது போன்ற கொள்கைகளையும், திட்டங்களையும் தமது தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்யும் முரட்டுத்தனம் வருமா? இடம் பெறச் செய்திருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துள்ள அரசியல் கட்சிகளை ஒரு பொருட்டாக மதிக்க பிஜேபி தயாராக இல்லை என்று தானே பொருள்!

தொடக்கத்திலேயே தலையைக் கவிழ்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டதே!

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்க வேண்டாம் என்று கும்பிட்டுக் குழைந்து அல்லவா பிரதமர் மோடிக்குக் கண்ணீரும் கம்பலையுமாக மனு போடுகிறார் நமது வைகோ.

இருந்தும் என்ன பலன்? விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லையே!

வெளி நாட்டுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் என்ன வேறுபாடு என்று நாம் கேட்டால் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளுக்குக் கோபம்  குபீர் என்று பாய்கிறது. இப்பொழுது யதார்த் தத்தைப் புரிந்து கொண்ட பிறகாவது மறு சிந்தனை வந்தால் பாராட்டக் கூடச் செய்யலாம்.

தேர்தல் கூட்டணி என்று வந்ததும் சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையில் சகோதரர் வைகோ எந்த அளவு திரிபுக்கு ஆளாகி விட்டார்! எதையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல் கொள்கையினைத் தியாகம் செய்யத் துணிந்து விட்டாரே!

தேர்தல் கூட்டணிக்காக எந்த எல்லைக் கும் சென்று கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைப்பதில் கொஞ்சம்கூடத் தயங்காதவர் வைகோ என்பதற்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லலாம்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியோடு கூட்டணி வைத்தபோது (1996) அவர்களின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு ஈழத் தமிழர் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சாரத்தில் கைவிட்டதில்லையா?

 

பிஜேபி ஆட்சியில் பொடா சட் டத்தைக் கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவுக் கரம் உயர்த்தவில்லையா அன்புக்குரிய வைகோ?

இப்பொழுதுகூட பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் மீண்டும் அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளதே - அந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி தானே அம்மையார்  ஜெயலலிதா மானமிகு வைகோ அவர்களையும் தோழர் களையும் காராக் கிரகத்தில் தள்ளினார்.

பிகாரில் ராப்ரி தேவியின் தலைமை யிலான ஆட்சியைக் கலைக்க அரசமைப் புச் சட்டப் பிரிவு 356அய் வாஜ்பேயி தலைமையிலான அரசு பயன்படுத்திய போது ஆம் என்க என்று ஆதரவுக் குரல் கொடுத்ததையெல்லாம் நினைவூட்ட வேண்டுமா?

ஆக தேர்தல் கூட்டணி என்று வரும் பொழுதெல்லாம் கெள்ளகைகளைச் சர்வப் பரிதியாகம் செய்ய முஷ்டியைத் தூக்கி கூட்டணியின் தர்மத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்வதில் வைகோ அவர்களை விஞ்ச யார் இருக்கிறார்கள்?

பிஜேபி கூட்டணியில் திமுக இருந்த போதும்கூட திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கத்தான் செய்தார்.

தாய்க் கழகத்தின் கடமையது - மதிமுகவும் நல்லெண்ணத்தோடு அதனை எடுத்துக் கொண்டு திருந்தினால் அதன் எதிர்காலத்துக்கு நல்லது - அதை மறந்து  விட்டு விட்டேனா பார்? என்று எகிறிக் குதித்தால் நட்டம் தாய்க் கழகத்துக்கு அல்ல!

வைகோ அவர்களைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சகோதரர் என்று  அடைமொழி போட்டு பேசுபவர், எழுதுபவர் திராவிடர் கழகத் தலைவர் என்பதை நினைவூட்டுகிறோம்.

               ------------------------------------மின்சாரம் அவர்கள் ”விடுதலை” ஞாயிறுமலர் 31-5-2014  இல் எழுதிய கட்டுரை

27 comments:

தமிழ் ஓவியா said...


அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்?

- குடந்தை கருணா

நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

Read more: http://viduthalai.in/page-2/81322.html#ixzz33L8rWrWo

தமிழ் ஓவியா said...


உ.பி.யில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறை மாயாவதி சீறுகிறார்

பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகளின் தந்தை ஜீவன்லால்

உஷைத், மே 31- உத்தரப்பிரதேச மாநி லத்தில் 2 தலித் சிறுமிகள் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 காவ லர்கள் பணி நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். ஒரு காவ லர் உள்பட 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைத்து, குற்றவாளி கள் உடனடியாகத் தண்டிக்கப் படுவார்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் அகி லேஷ் உறுதியளித் துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநி லம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27-ஆம் தேதி இரவு காணாமல் போயினர்.

இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல் துறை பதிவு செய்ய மறுத் தது. 28-ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல் களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.

உயிரிழந்த ஒரு சிறுமி யின் தந்தை கூறுகையில், காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவர் எனத் தெரிவித்தார். ஆனால், தூக் கில் தொங்கிய நிலையில் தான் அவர்கள் கிடைத் தார்கள் என்றார்.

இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங் கினர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய் தனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

பிரேதப் பரிசோதனை யில் இரு சிறுமிகளும் கும்பலால் பாலியல் வன் முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதுல் குமார் சக்ஸேனா கூறிய தாவது:

வழக்கில் தேடப்படும் ஏழு பேரில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வேஷ் யாதவ் மற்றும் சத்ரபால் யாதவ் ஆகிய 2 காவல்துறையினரும் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சர்வேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பப்பு மற்றும் அவதேஷ் யாதவ் என்ற 2 சகோதரர்களும் கைது செய்யபட்டுள்ளனர்.

பப்பு மற்றும் அவதே ஷின் சகோதரர் உர்வேஷ், காவலர் சத்ர பால் மற்றும் மேலும் இருவரைத் தேடி வருகிறோம் என்றார்.

இரு காவலர்கள் மீது, குற்றச் சதி வழக்கு பதியப் பட்டுள்ளது. மற்ற அய்வர் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக் கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் என அறிவித்துள் ளார். மேலும் அக்குடும்பத் தினருக்குப் பாதுகாப்பும் தேவையான உதவிகளும் அளிக்கப்படும் என்றார். மேலும் இவ்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன் றம் அமைக்கப்படும் என வும் அகிலேஷ் உறுதி யளித்துள்ளார்.

இது தொடர்பாக மத் திய மகளிர் மற்றும் குழந் தைகள் நலத்துறை அமைச் சர் மேனகா காந்தி கூறு கையில், இதுபோன்ற சம்பவங்களில் பாலியல் வன்முறை விவகாரக் குழு உடனடியாக அமைக்கப் பட்டு, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண் டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் ஒப்புக் கொண் டால், சிபிஅய் விசார ணைக்கு பரிந்துரைக்கப் படும்.

இச்சம்பவத்தில் காவல் துறையின் அலட் சியத்திற்கு சம பங்கு உள் ளது. காவல்துறை இன் னும் சரியான கோணத்தில் செயல்படத் தொடங்க வில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத் துக் காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட வேண் டும் என்றார்.

இதனிடையே பாதிக் கப்பட்ட பெற்றோர், உ.பி. காவல்துறையின் நடவடிக் கைகள் சந்தேகத்துக்குரி யவை. அவர்களை நம்ப முடியாது என்பதால், சிபி அய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயாவதி கடும் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இது தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத் தியுள்ளார்.

தலித் சிறுமிகள் கும்ப லால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் அமைப்பினர், மாணவர் கள் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநி லம் சராய்மீர் பகுதியைச் சேர்ந்த 17 வயது தலித் சிறுமியை நான்கு பேர் பாலியல் வன்முறை செய் துள்ளனர். இச் செயலில் ஈடுபட்டவர்கள் முகேஷ், அர்விந்த், விக்ரம், துர்கேஷ் என அடையாளம் காணப் பட்டுள்ளது. இந்நால்வ ரும் தலைமறைவாகிவிட் டனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து நால் வரையும் தேடி வருகின் றனர்.


Read more: http://viduthalai.in/e-paper/81325.html#ixzz33L9FJINQ

தமிழ் ஓவியா said...

தமிழ் ஈழத்தின் தனித்தவுரை

பெரியார் சாக்ட்டீசின் அருமை மகள் தமிழ் ஈழம் உரையாற்றுகையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது:

அப்பா அவர்கள் நான் பிறக்கும் முன் பெயர் சூட்டிவிட்டார். பையனாக இருந்தால் பிரபாகரன், பெண்ணாக இருந்தால் தமிழ் ஈழம் என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

சென்னைக்கு நாங்கள் வந்தபோது அப்பொழுது இருந்த டி.வி.எஸ்.50 மூலம் சென்னை மாநகரம் முழுவதும் எனக்குச் சுற்றிக் காட்டினார்கள். எனக்கு சென்னை மாநகரம் அத்துப்படி - பொது விவரங்களை எனக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்பாவுக்குத் தன்னைப் பற்றி ஒரு குறையுண்டு. நான் மட்டும் ஆங்கிலம் சரியாகக் கற்று இருந்தால் எங்கேயோ போயிருப்பேன் என்பார்.

அதனால்தான் நான் ஆங்கிலத்தை ஆர்வமுடன் கற்றேன் - கல்லூரியிலும் அந்தப் பிரிவை எடுத்துப் படிக்க இருக்கிறேன். நான் இப்பொழுது துணிவை வரவரழைத்துக் கொண்டு விட்டேன்; அப்பா நினைத்ததை செய்து முடிப்பேன் - அம்மாவுக்குத் துணையாக இருப்பேன். பெரியார் கொள்கை வழியை என்றென்றும் பின்பற்றி நடப்பேன்.

இந்தத் திடல் எனக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். திடலோடு என் தொடர்பு என்றைக்கும் இருக்கும். இங்கே வைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம் நான் எடுத்தது தான். ஒரு நாள் அப்பாவைப் பார்த்து இந்தவுடையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.

அப்படியே நில்லுங்கள், ஒரு படம் எடுக்கிறேன் என்றேன். அந்தப் படம் இப்படி திறக்கப்படும் ஒன்றாக மாறும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அடக்க முடியாத துயரத்தை அடக்கிக் கொண்டு அழுத்தமாகப் பேசினார். அவரது பேச்சை செவிமடுத்த பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் உருக்கமாகவும், உன்னிப்பாகவும், வியப்பாகவும் தமிழ் ஈழத்தினைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-4/81317.html#ixzz33LAqq4K0

தமிழ் ஓவியா said...


சென்னை மந்திரிகளைப் பின்பற்றுதல்

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன் மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும், மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும், வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்த தாகும்.

அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும், வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும், மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரச்சாரம் நடைபெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும்.

தவிர, காந்தி மடத்தின் சட்டாம்பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கையையும், பிரச்சாரத்தையும் தூற்றிக் கொண்டு வருவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். மந்திரி கனம் முத்தையா முதலியார் அவர்களின் இந்தக் கொள்கையை இப்போது இந்தியாவில் பல பாகங்களிலும், மேல்நாடுகளில் பல பக்கம் பின்பற்ற துவங்கிவிட்டன.

அதாவது, அய்க்கிய மாகாணமாகிய அலகாபாத் மாகாண அரசாங்கத்தார் இந்தக் கொள்கையைப் பின்பற்றி அந்த மாகாணம் முழுவதும் இப்பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்கள். மைசூர் அரசாங்கத்தாரும் இக்கொள்கையை பின்பற்றி பல ஆயிரம் ரூபாய்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். அமெரிக்கா அரசாங்கத்தார் இதைப் பின்பற்றி அய்ம்பதாயிரம் டாலர்கள் ஒதுக்கிவைத்து பிரச்சாரம் துவக்கி விட்டார்கள்.

நியூசிலெண்ட் தீவு அரசாங்கத்தாரும் இதே முறையில் மதுவிலக்குப் பிரச்சாரம் துவக்கி விட்டார்கள். இவ்வளவு பேர்கள் ஒப்புக் கொண்டாலும் நமது நாட்டு பார்ப்பனர்களுக்கும். அவர்கள் சிஷ்யர்களுக்கும், காந்தி சிஷ்யர்களுக்கும் மாத்திரம் இது பிடிக்க வில்லையாம் ஏன்? மதுவிலக்குப் பிரச்சாரத்தின் பெயர் சொல்லி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க முடியாமல் போனதும், மதுபானத்தால் பிழைக்கும் பார்ப்பனர்களின் வயிற்றில் மண் விழுவதாலும் தான்.

ஆகவே, இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத பொது மக்கள் இந்த அருமையான சந்தர்ப் பத்தை விட்டுவிட்டாமல் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவி புரிந்து கூட்டம் கூட்டியும் மற்றும் பல விதத்திலும் பிரச்சாரம் செய்வதற்கு வேண்டிய ஆதரவளிக்க வேண்டுவ துடன் ஜில்லா தாலுகா போர்டு தலைவர்களும் முனிசிபல் சேர்மென்களும், ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் திரு.சவுந்தரபாண்டியன் அவர்களை பின்பற்றி தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களும் இந்த பிரச்சாரத்துடன் ஒத்துழைத்து ஆதரவு செய்து கொடுக்க வேண்டுகின்றோம்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 24.11.1929

Read more: http://viduthalai.in/page-7/81292.html#ixzz33LB9yz7m

தமிழ் ஓவியா said...


கார்ப்பொரேஷன் தேர்தல்

ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10.1929 தேதி இரவு 8 மணிக்கு தியாகராயர் மெமோரியல் கட்டிட மேல்மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயணாசாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொரு வரும் வரவில்லை என்பதாகத் தெரிகின்றது.

கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராமசாமி முதலியாருக்கு. 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலில் போட்டிபோடப் போவதாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள்.

வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியம் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரி தான் பிரியும் போல் தெரிகின்றது.

வெள்ளைக்காரர்களின் ஓட்டுகள் நாலில் மூன்று பாகம் ஒருவருக்கும் ஒரு பாகம் ஒருவருக்குமாகப் பிரியலாம். மற்ற ஓட்டுகளும் சரிசமமாகப் பிரியலாம். எனவே, தேர்தலில் இருவர் போட்டியும் பலமாக இருக்கக் கூடும்.

நம்மைப் பொறுத்த வரை முடிவைப் பற்றி கவலையில்லா விட்டாலும், அதன் பயனாய் ஏற்படக் கூடிய கட்சிப் பிளவு பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சியின் அடுத்த சென்னை சட்டசபை தேர்தல்களையும் பாதிக்காமல் இருக்க முடியாதென்றே கருதி கவலைப்படுகின்றோம்.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் நிலைமையையும் நியாயத்தையும் உரிமையையும் சிறிதும் லட்சியம் செய்யாமல் பலத்தையும் தந்திரத்தையும் சண்டித்தனத்தையும் ஆதாரமாக வைத்தே முடிவு செய்வதாயிருந்தால், அக்கட்சிக்கு எந்த விதத்தில் யோக்கியதையும் நம்பிக் கையும் இருக்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

அநேகமாக 5,6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரக்கூடு மாதலால் திரு.ராமசாமி முதலியாரைப் போன்றவர்கள் கார்ப்பொரேஷன் தலைவரா யிருந்தால் கட்சி தேர்தலுக்கு அனுகூலமாயிருக்கக் கூடும் என்னும் காரணம் திரு. ராமசாமி முதலியாருக்கு அனுகூலமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

டாக்டர். நடேச முதலியார் இந்த கட்சியில் சேர்ந்த காலம் முதல்கொண்டு கஷ்டப்படுகின்றவரான தினாலும் ஒவ்வொரு சமயத்திலும் இம்மாதிரி சாக்குகள் வந்தே அவருடைய உரிமை நழுவ விடப்படுவதாலும் அவரும் இதனாலேயே அடிக்கடி கோபித்துக் கொண்டு கட்சியில் கலகம் விளைவிப்பதும் வெளியில் போவதும் மறுபடி சமாதானமும் ஆசையும் சொல்லி அழைக்கப்படுவதாலும், ஏதாவது ஒரு தடவை அவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒற்றுமையை உத்தேசித்தாவது அவசியம் என்கின்ற விஷயம் டாக்டர். நடேச முதலியாருக்கு அனுகூலமான காரணமாக சொல்லிக் கொள்ளப்படுகிறது.

இரண்டு காரணங்களும் சரி என்று வைத்துக் கொண்டாலும் திரு.நடேச முதலியாருக்கு விட்டுக்கொடுப்பது இந்தத் தடவையா அல்லது அடுத்த தடவையா என்பதை வேண்டுமானால் மற்ற தலைவர்களும் சேர்ந்து யோசனை செய்து ஒரு முடிவு கட்ட வேண்டியதான விஷயம்.

அப்படிக்கில்லாமல் எப்படியோ போகட்டும்! என்று மற்ற தலைவர்களும் இயக்கத் தலைவரும் அலட்சியாமாயிருப்பதும் சிலர் இருவருக்கும் நல்ல பிள்ளைபோல் நடந்து கொள்ளுவதும் உள்ளுக்குள் அவர்களுக்கு இஷ்டமானவர் களுக்கு வேலை செய்வதுமான காரியங்களானது, அவற்றின் பலன் எப்படியானாலும், அவை தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையையும் கோழைத் தனத்தையும் சுயநலத்தையும் காட்டுவதாகும்.

நெல்லூர் மகாநாட்டு நடவடிக்கை ஒருவாறு நமது இயக்கத்தில் உள்ள கட்சிகள் இவ்வளவு என்பதைக் காட்டிவிட்டது. ஆனால் அடுத்துவரும் கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தலானது அக்கட்சிகளின் தனித்தனி வேலைத் துவக்கத்தை காட்டக் கூடியதாகிவிடுமோ என்றே பயப்படுகின்றோம்.

ஆகையால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டி இருவரையும் தருவித்து இன்னார்தான் நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்ய வேண்டியது அவருடைய முக்கியமானதும் கடமையானதுமான வேலையாகும்.

அப்படிக்கில்லாமல் அலட்சியமாயிருப்பதோ அல்லது தனது தலைவர் ஸ்தானம் கவுரவிக்கப்படமாட்டாது என்பதோ காரணம் கொண்டு சும்மா இருப்பதானால் அவரும் பொறுப்பை உணராத தலைவர் என்றுதான் சொல்லித் தீர வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20-10-1929

Read more: http://viduthalai.in/page-7/81293.html#ixzz33LBITWD2

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை


ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகுகாலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விவரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திரு. சவுந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபச்சாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள்.

அவ்வுபச்சாரப் பத்திரங்களுக்குத் திரு.சவுந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே, இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில் தனக்கு சில கஷ்டங்கள் நாடார் சமுகத்தாராலேயே இருப்பதாகவும் சொல்லி உதாரணமாக அருப்புக் கோட்டையில் உள்ள நாடார் ஹைஸ்கூலில் ஆதிதிராவிடப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளுவதில்லை என்கின்ற நிர்ப்பந்தமிருப்பதேதான் முக்கியமான தடையென்றும் கூறி, அதனால் தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் தன்னுடைய சமூகத்திலேயே இவ்விதக் கொடுமையிருந்தால் தன்னுடைய உத்தியோக ஓதாவில் மற்ற சமூகத்தாருக்குள் இருக்கும் கொடுமைகளை நீக்கும் படி சொல்ல தனக்கு எப்படி தைரிய முண்டாகுமென்றும், ஆகவே எவ்வளவுக் கெவ்வளவு சீக்கிரத்தில் இவ்வருப்புக் கோட்டை பள்ளிக்கூடத்தில் இக்கொடுமை நீக்கப்படுகின்றதோ, அவ்வள வுக்கு அவ்வளவு தனது வேலை சுலபமாகுமென்றும் அவசியம் செய்ய வேண்டும் என்றும் தனது சமுகத்தலைவரை அடிப்பணிந்து கேட்டுக் கொள்ளுவ தாகவும் சொன்னார்.

அதற்கிசைய அன்று அப்பள்ளிக்கூட நிர்வாகிகள் அவ்வித நிர்ப்பந்தத்தை நீக்கிவிட்டு ஆதிதிராவிட மக்களை அந்தப் பள்ளிகூடத்தில் சேர்த்துக் கொண்டார்கள் . இது நமது நாட்டில் உள்ள தீண்டாமையும் உயர்வு தாழ்வும் ஒழிய ஒரு பெரிய அறிகுறியாகும் என்றே சொல்ல வேண்டும். இவ்வித அரிய காரியத்தைச் செய்த அருப்புக் கோட்டை நாடார் தலைவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 29.09.1929Read more: http://viduthalai.in/page-7/81294.html#ixzz33LBQN6Zv

தமிழ் ஓவியா said...


மதமாற்றம்: விவேகானந்தர்


வட இந்தியாவில்தான் முகமதியர் படையெடுப்புகள் நடைபெற்றன. ஆனால் கேரளா, தமிழகம் போன்று மலேசியா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ இன்னும்பிலிப்பைன்ஸ், சீனத்தில்கூட எந்த படையெடுப்புமில்லாமல் கோடிக் கணக்கில் மக்கள் இஸ்லாமைத் தழு வியது ஏன்?

ஆட்சிகள் மூலம்தான் மதமாற்றங் கள் ஏற்பட்டன என்பது உண்மையா னால் ஸ்பெயின் நாட்டை அரபு முஸ் லிம்கள் 700 ஆண்டுகள் ஆண்டார்கள். ஆனால் மதமாற்றம் ஏற்படவில்லை.

இந்தியாவின் சில பகுதிகளை எட்டாம் நூற்றாண்டிலிருந்து முகமதியர் ஆண்டு வந்த போதிலும் ஐந்தில் ஒருவரே இஸ் லாமுக்கு மாறினர். கிறிஸ்தவ ஆங்கி லேயர் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்டனர். ஆனால், 2-3 விழுக்காடு தான் கிறிஸ்தவர்களாகினர்.

இன்று உலகின் ஜனத்தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனே சியா. இன்றைய மக்கள் தொகை 24 கோடி. 13,500 சிறிய பெரிய தீவுகளைக் கொண்ட நாடு.

5,000 கி.மீ. நீளமுள்ள சமுத்திரத்தில் பரவியுள்ள நாடு. இன்றைய மக்கள் தொகையில் 88 விழுக்காடு இஸ்லாமியர்கள். இந்து மன்னர்களின் விஜயசாம்ராஜ்யம் 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை விரிவாகப் பரவி இருந்தது. ஆனால் இன்று 2 விழுக்காடு தான் இந்துக்கள்.

இந்த நாட்டை 16ஆம் நூற்றாண் டிலிருந்து போர்ச்சுகீஸ், பிரிட்டிஷ் பிரான்சு, டச்சு முதலாளிகளின் கம் பெனிகள் (டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி 1602 - 1798) பல்வேறு பகுதி களைக் கைப்பற்றிக் கொண்டனர். 1922லிருந்து இந்தோனேசியா முழு மையாக டச்சு சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.

இன்றைய இந்தோனேசியா 1949இல் தான் விடுதலை பெற்றது. சுமார் 500 ஆண்டு களுக்கு மேல் கிறிஸ்தவ ஐரோப்பியரின் ஆளுகை. ஆனால் இன்று 8 விழுக் காடுதான் கிறிஸ்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை- எளிய மக்களுக்கும், முகமதியர் படை யெடுத்துப் பிடித்தது ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால் தான் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் முகமதியர்களாக மாறினர். இதை சாதித்தது வாளால் தான் என்பதற்கில்லை.

வாளாலும், நெருப்பி னாலும் தான் இவையெல்லாம் சாதிக்கப் பட்டது என்பது மதி கேட்டின் உச்ச நிலையாகும் என்கிறார் விவேகானந்தர்.

Read more: http://viduthalai.in/page4/81269.html#ixzz33LCxjs5S

தமிழ் ஓவியா said...


ஸ்ரீலஸ்ரீகளே! பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)


இன்று!

பிள்ளையார் சிலை உடைப்பு கிளர்ச்சி நடந்த நாள் (27.05.1953)

''பிள்ளையார் சிலை உடைப்புப் பற்றி தந்தை பெரியார்''

'பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டி கையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண் ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்ல வில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது - கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப் பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக் களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக் கிறேன்.'

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

(முகநூலிலிருந்து குடந்தை கோ. கருணாநிதி)

Read more: http://viduthalai.in/page4/81271.html#ixzz33LDAbqji

தமிழ் ஓவியா said...


என்ன நடக்கிறது நாட்டில்?

முக நூலில் இருந்து: ' . 2012 - எழுதப் பட்ட இந்தக் கட்டுரை பிஜேபி- இலங்கை அரசின் பொருத்தப்பாடுகளை எப்படி கணித்திருக்கிறது பாருங்கள் யார் இந்த ஷர்மிளா..?

ஆசியாவின் ஹிட்லர் ராஜ பக்க்ஷே வுக்கும், இந்தியாவின் சுஷ்மா உள்ளிட்ட பாரதிய ஜனதா கும்பலுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஆழமான உறவுக்கும் ,திட்டமிட்டு பின்னப்பட்டுவரும் சதி வலைகளுக்கும் இடையில் ஒரு இணைப் புப் பாலமாக இயங்கிக் கொண்டிருக் கிறார் இலங்கையில் வசிக்கும் ஷர்மிளா என்ற இந்திய பெண்மணி...!

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரம் பொருந்திய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்காவின் ஒரே மகள்தான் இந்த ஷர்மிளா.

ஷர்மிளாவின் கணவர் அசோக் குமார் காந்தாதான் இலங்கைக்கான இந்திய தூதர்..!

இந்திய தூதரும் அவரது குடும்பமும் இலங்கையில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும்..?

இந்திய அரசின் செலவில் இலங் கையில் சொகுசான வாழ்க்கை வாழும்

இந்த ஷர்மிளாதான் சுஷ்மா உள்ளிட்ட பாஜகவினரையும் வட இந்திய பாஜக தலைவர்களையும் இலங்கை அரசுக்கும் ராஜபக்ஷேவிற்கும் ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்..

புத்தரின் பெயரால் தற்போது நிகழும் ராஜபக்ஷேயின் மத்திய பிரதேச விஜயத் திற்கு ஏற்பாடு செய்ததும் இதே கும்பல் தான்....!

பிகு:தற்போது இந்தியாவை காங்கிரஸ் கட்சி ஆண்டாலும் மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பிய குழுவிற்கு சுஷ்மாவை தலைவராகப் போட்டதும், பாஜக இலங்கை அரசுடன் நெருங்கி வருவதும் இலங்கை அரசின் ராஜ தந்திர நடவ டிக்கைகளின் ஒரு அங்கமே ..

இலங்கை அரசின் குறிப்பறிந்து அதற்கேற்ப ஒத்து ஊதுகிறது கொழும்பில் இயங்கும் இந்திய தூதரகம் ..

அதாவது நாளை காங்கிரஸ் போய் பாஜக இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசு இலங்கையிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவே இந்த ஏற்பாடு ..

ஷர்மிளாவும் அவரது சகாக்களும் தங்கள் கஜானாவை நிரப்ப வேண்டி தமிழ் மகக்ளுக்கு எதிராக செய்துவரும் இத் தகைய மோசடித்தனங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்...

Read more: http://viduthalai.in/page4/81270.html#ixzz33LDNWt3I

தமிழ் ஓவியா said...


இவர்தான் மோடி


குஜராத்தில், குஜராத்தி மொழியை அந்த மாநில மக்களிடம் இருந்து அகற்றி குஜராத் மக்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை நீக்கி, இந்துத்துவா மாநிலமாக மாற்றி இந்தியைத் திணித்த பெருமை, தற்போதைய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியையே சாரும்.

தன் தாய்மொழி மீது அளவு கடந்த பற்றுக் கொண்டு குஜராத்தியில் கையொப்பமிட்டு அதன் மூலம் தாய்மொழிப் பற்றை மக்களிடம் ஊக்குவித்த காந்திக்கு கிடைத்த பரிசு. காலப்போக்கில் இப்படிப்பட்ட விசத்தை கலந்தது கூட அந்த மக்களுக்கு தெரியாது. தங்களது தாய்மொழி இந்தி தான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி பட்ட ஒரு தந்திரக்காரர் தான் மோடி. இந்த மோடித்துவா பற்றி தான் முற்போக்காளர்கள் கூறுகிறார்கள். மோடித்துவா மெல்ல மெல்ல தான் தன் வேலையை காட்ட ஆரம்பிக்கும். அதை உணரமுடியாது போனால் நமக்கும் அதே கதிதான். புரிந்துகொண்டவர்கள் தப்பித்துகொள்வார்கள்.

- பரணீதரன் கரியபெருமாள்

Read more: http://viduthalai.in/page5/81273.html#ixzz33LDyu0QF

தமிழ் ஓவியா said...


சர்க்கரை வியாதிக்கு இயற்கை தரும் நிவாரணம்


இரண்டாம் ரக சர்க்கரைவியாதி மற்றும் இன்சுலின் தடுப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறு ஒன்று பெரும் உதவி புரியக்கூடும் என்று கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மூலக்கூறு சர்க்கரை வியாதிஉடையவர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டனர். இந்தஇயற்கை மூலக்கூறுக்கு அவர்கள்டிஎக்ஸ்(பிடிஎக்ஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.

மனித தசைஉயிரணுக்களில் இண்டர்லூகின் 6 (ஐஎல்-6) எனப்படும் வேதியல் பொருளை உற்பத்தி செய்து வெளியில் பரவவிடுவது இதன் முக்கிய செயல்களில்ஒன்றாக இருக்கும். இந்த ஐஎல்- 6 உற்பத்தி அதிகரிப்பு முக்கியமானதாகும்.

இது ரத்த ஓட்டத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகளில் உதவி புரிகிறது.முதலாவதாக, குளுகோஸ் உற்பத்தியைக் குறைக்குமாறு இது கல்லீரலுக்கு உத்தரவிடுகிறது.

இரண்டாவதாக தசை உயிரணுக்கள் பயன்படுத்தும் குளுகோஸின் அளவை அதிகரிக்க வேண்டுமென்று நேரடியாக தசை உயிரணுக்களுக்கு கட்டளையிடுகிறது. இந்த இரண்டும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுநிறைவேற்றப்பட்டால், ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவுகுறைந்து விடும்.

இது இரண்டாம் ரக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும். உடற்பயிற்சியால் உருவாகும் விளைவுகளை இந்த இயற்கை மூலக்கூறு உருவாக்குகிறது என்ற போதும், உடற்பயிற்சிக்கு இது பதிலியாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது என்று பேராசிரியர் ஆண்ட்ரே மாரெட் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page6/81274.html#ixzz33LEc1XEc

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களின் அகங்காரம் அடங்கி விட்டதா?

The Times of India (28.8.2010) ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டு இருந்தது. Ignored by Political Parties and Denies Welfare, Large sections of a Traditconally Elite in Poverty Brahmins on the Margins, Fight for survival என்று தலைப்பிட்டிருந்தது.

படித்தவர்கள் என்று கருதப்படக் கூடிய பார்ப்பனர்கள் இன்றைக்கு ஏழ்மையில் உழலுகிறார்கள். அரசியல் கட்சிகளால் உதாசினப்படுத்தப்படு கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதுபற்றி திருவாளர் சோ ராமசாமி யிடம் கேள்வி எழுப்பிய போது Brahmins are not wanted in Tamilnadu Beyond that I Do not want to comment என்று ஆதங்கத் தில் வெறும் போதிய சொற்களால் பதில் சொன்னார்.

பார்ப்பனர்கள் தமிழ் நாட் மக்களால் விரும்பப்பட்டவில்லை; இதற்குமேல் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை என்று சலித்துக் கொண்டார்.

தன் பக்கம் நியாயம் ஏதாவது இருந்தால் எகிறிப் பேசி இருப்பார்கள். இந்தப் பிரத்தியட்ச நிலையைத் தன் சாமர்த்தியமான லியாக்கியானத்தால் தூக்கி நிறுத்தக் கூடியவர்தான் ஆனாலும் அதற்குரிய நியாயமான அறிவுப் பூர்வ மான சங்கதிகள் சரக்குகள் அவர் வசம் இல்லை. எனவே தான் அவ்வாறு அவர் கூற நேர்ந்தது.

சோவின் இந்தப் பதிலைப்பற்றி வாச கர் ஒருவர் கல்கிக்கு எழுதிக் கேட்டார்.

கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்று துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி.

கல்கி பதில்: பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.

சமுதாய நீரோட்டத் தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில் அவர்களை ஒதுக்கு வதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுத தோன்றியிரு ப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப் பிரிவினை ஆபத்து.
(கல்கி 19.9.2010 பக்கம் 30)

சோவின் பதிலுக்கும் கல்கியின் பதிலுக்கு இடையில் நெளியும் வேறு பாட்டைக் கவனிக்கவேண்டும்.

பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் விரும்பப்படவில்லை என்பது சோவின் அருள்வாக்கு. என்றால் அப்படியெல்லாம் அவர் வெறுக்கப்படவில்லை; அவர் களின் அங்காரம் என்றோ மறைந்து விட் டது என்று கல்கி மிகவும் விழிப்பாகப் பதில் கூறுகிறது.

பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப் பட்டு விட்டனர் என்று சொன்னால் அதனுடைய பார தூர விளைவு வேறு விதமாப் போய் விடுமே!

அதே நேரத்தில் கல்கிக்கு நமது கேள்விகள் உண்டு. பார்ப்பனர்கள் உயர் ஜாதியிரன் என்ற அகங்காரம் மறைந்து விட்டது உண்மையா?

அனைத்து ஜாதியினக்கும் அர்ச்சகர் உரிமையுண்டு என்று ஒரு சட்டமன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் செய்தால் சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுகிறார்களே பார்ப் பனர்கள் இதுதான் அவர்கள் ஜாதி ஆணவத்திலிருந்து அகன்று விட்டனர் என்பதற்காக அடையாளமா?

சென்னை நாரதகானா சபையில் தாம்ப் ராஸ் எனப்படும் பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந் தது என்ன? ஆண்டவனுக்கு மேல் பிரா மணர் என்று பேசினாரா இல்லையா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட் டம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதன் தாத்பரியம் என்ன? தங்களை தூர ஜாதி - இரு பிறவியாளர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்வது தானே!

திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ எடையில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அணிவித்தாரே - இது கடவுளேயே தங்கள் பிராமணர் ஜாதிக்குள் அடைக்கும் ஆவ ணம் அல்லவா டி.எம். கிருஷ்ணா இந்து ஏட்டில் குறிப்பிட்டு இருப்பதை வரவேற் கிறோம் - ஏன் பாராட்டவும்கூடச் செய்வோம்.

Read more: http://viduthalai.in/page7/81277.html#ixzz33LEsjNYc

தமிழ் ஓவியா said...


எங்க முத்து மாரியம்மா...


- இரா. கண்ணிமை

மாரியம்மனை தமிழ்நாட்டின் கிராம தேவியாக்கி - அவளின் வரலாறு தெரியா விட்டாலும், ஆடிப்பாடி ஆர்ப்பாட்டமாக அவளுக்கு விழா கொண்டாடி வருவதை எங்கும் காணலாம்.

மாரியம்மாளின் வரலாற்றை பல் வேறாக சொல்வதில் இதுவும் ஒன்று.

கருவூர் பெரும் பறையன் மகள் ஆதி என்பவளை பேராழி முனியின் மகனான பகவன் என்பான் மனைவியாக்கிக் கொண் டானாம். பகவன் - சாதியில் பார்ப்பானாம், ஆதி என்பவள் பறைச்சி யுமாதலால் - இவ்விருவரும் மற்றவர் களால் புறக் கணிக்கப்பட்டு ஊரிலே பிச்சையிரந் துண்டு நாட்டிலே வாழ்ந்தார்களாம். இவர்களுக்கு நான்கு பெண்களும், மூன்று ஆண்களும் பிறந்தார்கள் இவர்கள் உப்பை, உறுவை அவ்வை, வள்ளி, அதிக மான், கபிலர், வள்ளுவர் என்றழைக்க பட்டனர்.

உப்பை: ஊற்றுக்காட்டிலே வண்ணார் வளர்த்தனர். இவளே எங்கும் கிராம தேவதையாய் போற்றி வணங்கப்படும் தற்கால மாரியம்மன்.

உறுவை: இவளை சாணார் வளர்த் தனர். அவ்வை: இவள் நரப்புச் சேரியில் அல்லது சேரி நரப்பில் நரப்புக் கருவி யோர் சேரி பாணரிடத்தில் வளர்ந்தாள்.

வள்ளி: இவள் மலைச்சாரலில் குறவனிடத்தில் வளர்ந்தாள்.

அதிகமான்: ஆரூரிலே அரசனாயிருந்த அதிகமான் வீட்டில் வளர்ந்தான்.

கபிலன்: ஆரூரிலே பார்ப்பனர் வீட்டில் வளர்ந்தான்.

வள்ளுவர்: தொண்டை மண்டலத்து மயிலாப்பூரில் - பறையரிடத்தில் வளர்க் கப்பட்டான்.

இவ்வேழு பேரில் ஆதி என்னும் பறைச்சி வயிற்றில் முதல் பிறந்ததும் வண்ணார் வீட்டில் வளர்ந்தவளுமான உப்பை என்பவள் பறைச்சி வயிற்றில் பிறந்ததால் வெட்டியாரப் பறையனுக்கே மணமுடித்து கொடுத்தார்.

அக்காலத்தில் உப்பைக்கு வைசூரி நோய் கண்டு உடலெங்கும் புண்ணாகி நாற்றமெடுத்து ஈக்கள் மொய்த்தன.

அவளின் கணவனான வெட்டியான் வறிய நிலையில் இருந்ததால் கட்ட ஆடைகூட இல்லாதவளாய் வேப்பந் தழைகளை அவளுக்குக் கீழே பரப்பி - அதையே போர்வையாய் மூடி - பாது காத்து ஊர் ஊராய் சுற்றி பிச்சையெடுத்து வாழ்ந்தான்.

அவளின் நோய் தெளிந்த பின் இருவ ரும் பிச்சைக்குப் போகும் போது இவள் புண்களில் மொய்க்கிற ஈக்களின் தொல்லை தாங்காமல் வேப்பந் தழை களாலேயே அவற்றை ஓட்டி - விசிறிக் கொண்டே வீடு வீடாகப் பிச்சையெடுத்து காலத்தைக் கழித்தனர். பிறகு அந்நோ யாலேயே அவள் இறந்து போனாள். ஊரார் அவளை அம்மை நோய் கண்ட வளானதால், உப்பை என்னும் பெயரை மாற்றி மாரியம்மன் என்ற பெயரைச் சூட்டி சமாதி கட்டி வைத்து கிராம தேவதையாக வணங்கி னார்கள். இப் பழக்கம் எனும் நோய் இன்றைய வரையில் தொடர்கிறது.

உப்பை என்ற மாரியம்மனின் வரலாறு உண்மையென்றால் நோய் வாய்ப்பட்டு முடிந்து போன ஒரு மனித பிறவியை தேவியாக்கி வணங்குவதால் எந்த நன்மையாவது கிடைக்குமா? இதில் என்ன நியாயம் உண்டு? இது அறியாமையும் அஞ்ஞானமும் அல்லவா?

கடந்த காலங்களில் மனிதர்க்குள் கண்ட கொடிய நோய்களையும் எல்லாம் கடவுளா கவே நம்பி - பின்னும் வராமலிருக்க வணங்கினார்கள் வாந்தி, பேதி, காலரா நோய்கள் அனைத்தும் காளிதேவி என நம்பினார்கள். ஆங்கில மருத்துவத்தில் ஆத்தா வார்த்தது அல்ல, ஆத்தா ஊத்தியது அல்ல என்பதுதெளிவாகி விட்டதே.

இந்த மாரியம்மன் அல்லாமல் பரமேஸ்வரி- மகேஸ்வரன் மனைவி, மனோன்மணி - சதாசிவன் மனைவி,

ருக்மணி - கிருஷ்ணன் மனைவி,

சீதை - ராமன் மனைவி,

ராதை - கிருஷ்ணன் வைப்பாட்டி,

காமாட்சி - ஏகாம்பரன் மனைவி,

விசாலாட்சி - விசுவநாதன் மனைவி,

அழகம்மை - கச்சாயை மனைவி,

உண்ணாமுலை - அருணாசலம் மனைவி,

மீனாட்சி - சொக்கநாதன் மனைவி,

தயிலி - வைத்தி மனைவி,

அலமேலு - வெங்கடாசலம் மனைவி,

பெருந்தேவி - வரதராசன் மனைவி,

கனகவல்லி - வீரராகவன் மனைவி,

ஆகியோரும் பொன்னி, குள்ளி, சங்தி, ஷீரி, நாகி, காளி, பாலி, கோலி, சீயான் முதலிய புது தேவதைகளையும் கன்னிமார் என்னும் தேவியர்களையும் - மக்கள் கண்மூடித்தனமாய் வணங்குகிறார்கள்.

இதைப்பற்றி அகத்தியர் சொல்வதைக் காணுங்கள்.

முகிவாகச் செய்துவிட்டேன்
மைந்தா, மைந்தா!
முப்பதுக்குள் ளடக்கிவிட்டேன்
முன்னூல் பார்த்து
அகிலமதில் விரித்துவிட்டேன்
இந்த நூலை;
யார்தானு மெந்தனைப்போ
லறைய மாட்டார்
பகிரதியுங் கலைமகளும்
வாணி தானும்
பார்வதியு மறுமுகனும்
பல பேர் தானும்
சகியாத மூர்த்திகளா
யிவர்க டானும்
சக்திசிவ விருப்பிடமோ
சாற்று வீரே!

மேற்கூறிய தேவர்களும் தேவியர் களும் வணக்கத்திற்குரியவர்கள். கடவு ளர்கள் அல்ல என்கிறார் அகத்தியர்.

சூத்திரச்சி மாரியம்மாளின் சுயமரி யாதை சொல்லி விட்டோம். இதைக்கேட்ட பிறகு எங்க முத்து மாரியம்மா! முத்து மாரியம்மா! எனப்பாடிப் பாடி -மாரியம் மனுக்கு கூழ் ஊற்றப் போகிறீர்களா?

Read more: http://viduthalai.in/page8/81278.html#ixzz33LFP0RUT

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி கந்தலாகிறது! சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உள்பட 3 பேர் பலி


செஞ்சி, மே 31-செஞ்சியை அடுத்த ஜெயங் கொண்டான் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவிலில் 3 நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 2ஆவது நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

திருவிழாவையொட்டி இரவில் மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து சாமி ஊர்வலம் நடந்தது. அந்த வண்டியில் மாடுகள் பூட்டப்படாமல், இரும்பு கம்பியை மாட்டி அதனை பக்தர்கள் இழுத்து சென் றனர். மேல் எடையாளம் செல்லும் வழியில் சாலை யின் குறுக்கே 3 உயர் மின் னழுத்த கம்பிகள் சென்றன. எனவே சாமி ஊர்வலத்தின் முன்பு சென்றவர்கள், நீண்ட தடுப்பு கம்புகளை வைத்து அந்த மின்கம்பி களை உயரே தூக்கி சிலை வந்த தேரை முன்னே இழுத்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு மின்கம்பி சிலை தேரின் உச்சியின் மீது பட்டது. மறுவிநாடியில் சாமி தேரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தேரை இழுத்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர்கள் யோகேஷ் (வயது 13), ஒட்டுநர் ராசு (32), கல்லூரி மாணவர்கள் சதீஷ், பிரபா கரன் ஆகியோர் மீது மின் சாரம் பாய்ந்தது.

விபரீதத்தை உணர்ந்த பக்தர்கள் சிலர் மரக்கட் டையால் தட்டிவிட்டு காப் பாற்ற முயன்றனர். எனி னும் யோகேஷ், ராசு, சதீஷ், பிரபாகரன் ஆகிய 4 பேரும் உடல் கருகினர். சதீசின் ஒரு கால் துண்டானது. மின் சாரம் தாக்கியதை அறிந்த வுடன் தேருக்கு அருகில் சென்ற பக்தர்கள் அலறிய வாறு ஓட்டம் பிடித்தனர். இதனால் ஊர்வலத்தில் கூச்சல்குழப்பம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது.

உடல் கருகிய 4 பேரையும் பிற பக்தர்கள் மீட்டு செஞ்சி அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழி யிலேயே பள்ளி மாணவன் யோகேஷ் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 3 பேரும் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தீவிர சிகிச்சையளித் தும் பலனின்றி ராசு உயிரி ழந்தார்.

பின்னர் சதீசையும், பிரபாகரனையும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கள் 2 பேருக்கும் மருத்து வர்கள் தீவிர சிகிச்சையளித் தனர். எனினும் பலனின்றி அவர்களில் ஒரு மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் விவரம் இன்னமும் ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை.

மின்சாரம் தாக்கி பலி யான ராசுவுக்கு வருகிற 2ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் பற்றி அறிந்த வுடன் செஞ்சி துணை காவல்துறைக் கண்காணிப் பாளர் முரளிதரன், செஞ்சி காவல்துறைக் ஆய்வாளர் மருது மற்றும் காவல் துறையினர் ஜெயங்கொண் டான் கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சாமி ஊர்வலத்தில் நடந்த அசம்பாவிதத்தால் திருவிழா பாதியுடன் நின் றது. திருவிழாவில் 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Read more: http://viduthalai.in/e-paper/81326.html#ixzz33LFjy0Cm

தமிழ் ஓவியா said...

108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.அவருடைய பெயர் டாக்டர் வெங்கட் செங்கவல்லி. அய்தராபாத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். அய்தராபாத்தில் “Emergency Management And Research Institute” என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்.

அவ்விழாவில் பேசிய வெங்கட் செங்கவல்லி, நான் அய்தராபாத்தில் நெருக்கடி நிலையில் நம் ஆளுமைத் திறன் _ ஆராய்ச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருங்காலத்தில் எனக்கு, ஆம்புலன்சு வண்டிகளை நெருக்கடி நிலையில் எப்படி விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது, உயிருக்குப் போராடுபவர்களைப் பாதுகாப்பாக உடனடியாக எப்படி மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்று தோன்றியது. தீயணைப்பு நிலையத்திற்கு நிலையான ஒரு தொலைப்பேசி எண் இருப்பதைப் போல, அவசர போலீஸ் உதவிக்கு ஒரு எண் இருப்பதைப் போல ஆம்புலன்சுக்கும் ஒரு நிலையான எண் வேண்டுமே என்று சிந்தித்தேன். அது இந்தியா முழுமைக்குமான ஒரு பொது எண்ணாக இருக்க வேண்டும். 108 என்ற எண் பொருத்தமானதாக எனக்குத் தோன்றியது. 108 என்ற இந்த எண்ணை அழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்சு வண்டி முதலுதவி வசதிகளுடன் வந்து நிற்க வேண்டும்.

இது தனியார் துறையில் இடம்பெற இயலாது. தீயணைப்புத் துறையைப் போல அரசாங்கம்தான் இதனை ஏற்று நடத்த வேண்டும். என்று தோன்றியது என்றும் சொல்லும் அவர், திட்டத்தைச் செம்மையாக வரையறைப்படுத்திக் கொண்டு முதலில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியைப் போய்ப் பார்த்தார். திட்டத்தை நன்கு படித்துப் பார்த்த ஆந்திர முதலமைச்சர், அதனை நடைமுறைப் படுத்துவதென்று முடிவு செய்தார். அடுத்தவாரம் வந்து தம்மைச் சந்திக்குமாறு வெங்கட் செங்கவல்லியிடம் ஆந்திர முதலமைச்சர் கூறியனுப்பி விட்டார். அடுத்த நாள் செங்கவல்லிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் காலமாகிவிட்டார்.

மனந்தளராமல் தமது 108 ஆம்புலன்சு திட்டத்தை மராட்டிய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே மராட்டிய முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. மராட்டிய முதலமைச்சரின் மனம் ஏற்குமாறு நல்ல முறையில் விளக்கமளித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வெளியில் வந்தார். இன்னும் சில நாட்களில் மராட்டிய மாநிலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஆவலோடு காத்திருந்தார் வெங்கட் செங்கவல்லி. ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை; மாறாக மராட்டிய முதலமைச்சரையே அங்கு மாற்றிவிட்டார்கள்! இப்போது புதிய முதலமைச்சர்!

மனம் உடைந்துபோன மருத்துவர் எவ்வளவு அருமையான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறோம்; நடைமுறைக்கு வராமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று வருந்தினார்.

கடைசியாக, இனி நாம் பார்க்க வேண்டிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்று எண்ணிய வெங்கட் செங்கவல்லி, அவரிடம் விளக்கியுரைத்துவிட்டால் 108 எனும் இத்திட்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நன்னம்பிக்கையோடு கலைஞரைப் பார்த்தார். கலைஞரைக் கவர்ந்தது 108! வெங்கட் செங்கவல்லி வெற்றி பெற்றார்.

கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்றோர் உயிரைக் காப்பாற்றி ஒளியூட்டிய 108 ஆம்புலன்ஸ் வந்தது இப்படித்தான்.

- பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து

தமிழ் ஓவியா said...

அணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்

நவீன திறன்பேசிகள், குளிகைகள், கையடக்கக் கணினிகள் இன்று பெருகிப் போயுள்ளன. பகலெல்லாம் கட்டிக் கொண்டும், தூக்கிக் கொண்டும் அலைந்தாலும், இரவிலும் அவற்றை அணைத்தே பலர் உறங்குகின்றனர். படுக்கைக்கு அருகிலேயே வைத்து உறங்கும் பழக்கமும் இருக்கிறது. குறுஞ்செய்திக்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நினைவுறுத்தலுக்காகவோ அடிக்கடி ஒளியைப் பாய்ச்சும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும் என்கிறது ஓர் ஆய்வு.

இரவா, பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் ஆகஆக புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, பொழுது போய்விட்டது. படுக்கப் போ என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. ஆக, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும்.

இந்த அமைப்பை திறன்பேசிகள் குளறுபடி செய்கின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால் இன்னும் இரவு நேரம் வரவில்லை என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்துக்கானது. தூங்கியது போதும் என்று படுக்கையில் இருந்து நம்மை எழுப்பிவிடுவதற்கானது.

எனவே, தொந்தரவு இல்லாத ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வேண்டும் என்றால் திறன்பேசிகளையும், குளிகைகளையும் அணைத்துவிட்டுப் படுங்கள். இல்லாவிட்டால் கண்ணில் படாமல் தொலைவிலாவது வைத்துவிட்டுப் படுங்கள் என்கிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த பிரையன் ஸோல்டோவ்ஸ்கி.
செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி, இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன், ஆர்வத்துடன் பேசி, பாடி, நடித்து, பல போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி பொங்குகின்றது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அய்ந்து வயது சிறுவன் நூறு திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல சிறுவர்கள், சிறுமியர்கள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். அவர்களாகவே திருக்குறள் பற்றிக் கதைகள் சொல்கின்றனர்.

இன்று நடந்த ஆண்டு விழாவிலே பல போட்டிகள். முழுவதும் தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் கதை, வார்த்தைகள், பழமொழிப் போட்டிகள், கிராமிய கலை, பண்பாட்டுப் பாடல்கள், பொங்கலின் சிறப்புகள் என்று குழு குழுவாக அவர்கள் அளித்த நிகழ்ச்சிகள் பாராட்டின் உச்சத்தைத் தொட்டன.

இது இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் படிப்புத் தேவையில் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகின்றது.

இன்று பல தமிழ்ச் சங்கங்களும் அமெரிக்காவின் அத்துனைப் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் நடப்பதும், குழந்தைகளின் தமிழ் அறிவும், தவறில்லா உச்சரிப்பும் தாத்தா பாட்டிகளைப் பெருமையில் ஆழ்த்தி விடுகின்றன.

- மருத்துவர் சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...

தேர்தல் பறிமுதல்


இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் இல்லாமல் தடுக்க பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருந்தது. பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நாடு முழுவதும் 313 கோடியே 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில்ரூ.153 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.25.67 கோடியும், தமிழகத்தில் ரூ.25.05 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் ரூ.24.07 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாராயம் இல்லாத மாநிலம் என்று ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில், ஒரு கோடி லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பாட்டில்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர். தேர்தல் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 75,306 வழக்குகளுள் தமிழகத்தில் 13,641 வழக்குகளும் உத்தரப்பிரதேசத்தில் 13,565 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைவிட தற்போது ரூ.123 கோடி அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 144ன் போது எத்தனை ஆயிரம் கோடி செலவானது என்பதற்குத்தான் கணக்கில்லை.

தமிழ் ஓவியா said...

நாடகம் ஆரம்பம்


தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு பல முறை உடைமாற்றுவதும், அந்தந்த பகுதிக்கேற்ற தொப்பிகள், உடைகள், வண்ணங்கள் பூசிக் கொண்டு தோன்றி, அடிப்படையே இல்லாத உணர்ச்சிப்பூர்வ வசனங்களாகப் பேசி வென்றுவிட்ட மோடியின் நாடகம் அடுத்த காட்சிக்குச் சென்றுள்ளது. காட்சியின் திரைவிலகியதும், நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார் ராஜபார்ட் மோடி. முதல் அடி வைப்பதற்குள் கீழே விழுகிறார். ஏதும் சறுக்கிவிட்டதா என்று எல்லோரும் பதற்றத்துடன் பார்க்க, நாடாளுமன்றப் படிகளை விழுந்து வணங்குகிறார் மோடி. அத்தனை கேமராக்களும் சுற்றி சுற்றிப் படமெடுக்க, அவற்றின் பிளாஷ் ஒளியில் காட்சி முடிந்து, நாடாளுமன்ற மைய மண்டபத்துக்குள் தொடர்கிறது அடுத்த காட்சி. கண்ணீரும் கம்பலையுமாக மோடி தொடங்கிய நாடகத்தில் வாழ்ந்து கெட்ட துணை கதாபாத்திரமான அத்வானியும் சேர்ந்து கொள்ள 1960 களில் அழுவாச்சி படம் பார்த்த எபெக்டில் ஒட்டுமொத்த இந்தியாவும் கைக்குட்டை தேடுகிறது.

இது ஒருபுறம் என்றால், பக்கத்து செட் நாடகத்தில் ராஜபார்ட்டான ராஜபக்சேவுக்கு, மோடி விடுத்த அழைப்பிற்கு தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு கிளம்ப, நாங்கள் விடுத்த அழைப்பு நெய்யில் பொறித்தது என்று விளக்கம் கொடுத்தார் பா.ஜ.க.வின் ஒரே தமிழ்நாட்டு எம்.பி. நாடகத்த்தில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு ராஜபக்சேவுக்கு இருக்காதா? உடனடியாக சிறையில் உள்ள இந்திய மீனவர்களையெல்லாம் விடுதலை செய்யப் போவதாக அவரும் அறிவித்துள்ளார். அதற்காக ஓநாய் சைவமாகிவிட்டது என்று பொருளல்ல. அப்புறம் அடுத்த முறை இந்தியா வரும்போது நல்லெண்ணத்துக்காக விடுவிக்க ஆள் வேண்டுமே! மீண்டும் கைதுகள் நடக்கும்; துப்பாக்கிச் சூடுகள் நடக்கும். கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்படலாம். ஆனால், கொன்றவர்களை என்ன செய்வார்? சொல்லமுடியாது சூப்பர்மேனாக கேதர்நாத்தில் குஜராத்திகளை மட்டும் மோடி காப்பாற்றிய காட்சி போல், சிங்களர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களை மட்டும் சாவித்திரியாக வேடமேற்று மீட்டுவந்தாலும் வரலாம். யார்கண்டா? இந்த அய்ந்தாண்டில் இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேற இருக்கின்றவோ?

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்றத்தில் பெண்கள்


அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

543 உறுப்பினர்ககளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2014இல் தான் அதிகளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 விழுக்காட்டை நெருங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?

தமிழ் ஓவியா said...

பதவியேற்பு விழாவில் போர்க் குற்றவாளியா?

26.05.2014 அன்று புதிய பிரதமராக, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திராமலேயே, தனித்த பெரும்பான்மைப் பலம் (மக்களவையில் 282 இடங்களை) பெற்று ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் பா.ஜ.க.வின் நரேந்திரமோடி அவர்களுக்கு எதிராக வாக்களித்த, நாட்டின் 69 சதவிகித மக்களில் ஒரு பகுதியாக உள்ளவர்களான நமது சார்பில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நரேந்திரமோடி வாங்கிய வாக்கு 31 சதவிகிதம்).மாற்றத்தை விரும்பிய மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் பல்துறையிலும் உள்ளன. ஆட்சி எத்திசையில் செல்லுகிறது என்பதைப் பொறுத்தே, இந்த வெற்றி நிலைத்த வெற்றியா என்பதைத் தீர்மானிக்கும்.

ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், பிரதமர் _- ஆட்சியாளர் _- அனைவருக்கும் உரியவர்; அனைவரது எதிர்பார்ப்புகளையும் அலட்சியப்படுத்தாது அரவணைத்துச் செல்ல வேண்டிய அறநெறி அரசியலே - ஜனநாயகம் என்ற மக்களாட்சி ஆகும்.

அவரது பதவியேற்பு விழாவுக்கு பல நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி, அவர்கள் வந்து வாழ்த்துவது நாட்டிற்கு, புதிய அரசுக்குப் பலம், பெருமை என்றாலும்கூட, மிகப் பெரிய இனப் படுகொலை நிகழ்த்தி, அய்.நா. மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் முன்னால் போர்க் குற்றவாளி என்று குற்றவாளிக் கூண்டில் பெரும்பாலான அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசை _- அதன் அதிபர் ராஜபக்சேவை அழைப்பது எவ்வகையிலும் சரியானதாக அமைய முடியாது.

அண்டை நாடு _ சார்க் (Saarc) உறுப்பு நாடு என்று காரணம் கூறுவது எவ்வகையிலும் சரியல்ல! தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் வாழ்வுரிமையைப் பறித்ததோடு, 2009-இல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப்பின் 5 ஆண்டுகள் ஆகியும்கூட, அங்குள்ள தமிழர்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை! சிறையில் அல்லது காணாமல் போனதாக அறிவிப்பு, ஆள் தூக்கும் அவலம்; மறைந்தவர்களுக்காக, கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கண்ணீர் வடிக்கக்கூட உரிமையற்ற பரிதாபம்!

ஒரு ஜனநாயகத் தேர்தல் மூலம் வந்த வடக்கு மாகாணத் தமிழர் ஆட்சிக்குக்கூட எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை; இன்னமும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதும், அதனால் உயிருக்குப் பயந்து ஈழத் தமிழர்கள் இரத்தக் கறையுடன் கண்ணீருடன் தப்பி வருவதும், புகலிடங்களைத் தேடுவதுமாக உள்ள நிலையில், ராஜபக்சே இங்கே, புதிய மோடி அரசு பதவி ஏற்கையில் வந்து வாழ்த்துவதோ, பங்கேற்பதோ பல கோடித் தமிழர்கள் நெஞ்சம் -ஏற்கெனவே அவர்கள் வெந்த புண்ணோடு உள்ள நிலையில் _- இப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு நியாயமானதுதானா?

ராஜரீகம் என்ற சாக்கு _- விளக்கம் ஏற்கப்படக் கூடியதல்ல.

இதற்கு முன் தேசிய ஜனநாயக முன்னணி (NDA) வாஜ்பேயி அவர்கள் பிரதமராகப் பதவியேற்றபோதோ, 2004, 2009இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA)பிரதமர் மன்மோகன்சிங் பதவி ஏற்றபோதோ வெளி நாட்டவரை அழைக்கவே இல்லையே _- இப்பொழுது மட்டும் என்ன அவசியம் வந்தது?

அய்.நா.வால் போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவர், இன்னமும் தமிழினப் படுகொலைகளைத் தயங்காது நடத்திடும் படலம் அங்கே தொடரும் நிலையில் இது தவிர்க்கப்பட வேண்டாமா?

உலக முழுவதும் உள்ள தமிழர்களின் வேண்டுகோள்!

இது தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேண்டுகோள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வு களின் பிரதி பலிப்பாகும்!

இல்லையென்றால், இலங்கையுடன் ஈழத் தமிழர் பிரச்சினைகளைப் புதிய அரசு வந்தால் பெரும் அளவுக்குப் புதிய அணுகுமுறையோடு தீர்க்கும் என்று நம்பியவர்களின் நம்பிக்கை வீணாகி, இவர்களும் உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கப்பன் என்பதாகவே கருதப்படும். துவக்கத்திலேயே இப்படி ஒரு நிலையா? இன்னும் இராணுவத்தின் அட்டகாசம் அங்கு குறையவே இல்லை!

புதிய மத்திய அரசில் பொறுப்பேற்க இருப்பவர்கள் சிந்திக்கட்டும்; துணிந்து முடிவுகளை வழமையாக தவறான ஆலோசனைகளைத் தருவதையே வாடிக்கையாகக் கொண்ட அதிகாரிகளை மட்டுமே நம்பாமல், சுதந்திரமாக மக்கள் உணர்வுகளைக் கருத்தில் எடுத்து முடிவு எடுப்பது அவசியம் _ அவசரம்.

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

பாராட்டத்தக்க பீகார்!
பாராட்டத்தக்க பீகார்!


மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ்.

தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. மொத்தம் 243 பேரைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் 117 இடங்களைப் பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் - 4, கம்யூனிஸ்டுகள்-1, சுயேட்சை-2 என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற போதுமான இடங்களை மஞ்சி தலைமையிலான அரசு பெறும் என்றாலும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரு முதல்வர் என்பதாலும், மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூகநீதியைக் காப்பாற்றவும் எங்களின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மஞ்சி அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று அறிவித்த லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சொன்னபடியே வாக்களித்து மொத்தம் 145 வாக்குகளுடன் நம்பிக்கை அளித்துள்ளது. இதை எதிர்க்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது பாரதிய ஜனதா. எதிரெதிர் திசைகளில் இருந்த லாலுவும், நிதிஷும் சமூக நீதித் தளத்தில் மறைமுகமாவேனும் கைகோர்த்திருப்பது நம்பிக்கைக் கீற்றைக் காட்டுவதாகக் கருதுகிறார்கள் சமூகநீதியாளர்கள்! இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.

தமிழ் ஓவியா said...

மதத்தை மறுப்பதா? கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


இங்கல்ல... சூடானில்!

மதத்தை மறுப்பதா?

கர்ப்பிணிக்கு மரணதண்டனை தந்த மதம்


சூடானில் மரியம் யாஹ்யா இப்ராகிம் (வயது 27) என்பவருக்கு 20 மாத வயதுள்ள ஆண்குழந்தை உள்ளது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆனால், அப்பெண்ணின் தந்தை குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டார். தனக்குத் தெரிந்தவரை தான் ஒரு கிறித்தவர் என்றே கருதி வந்துள்ளார்.அவர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால், அவர் மதத்தை மறுத்தவராகக் குற்றம் சுமத்தப்பட்டார். மாற்று மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் அவருடைய மதத்துக்குத் திரும்புவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால் அவர் கிறித்தவர் என்று தன்னைக் கூறிவிட்டார். அவர் தந்தை ஓர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அப்பெண்ணையும் இஸ்லாமியர் என்று நீதிமன்றம் கூறுகிறது.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் சூடான் ஆராய்ச்சியாளர் மானர் அய்ட்ரிஸ் கூறும்போது, உண்மை என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்பெண் அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப மதத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதால் மதத்தை மறுத்தார் என்று கூறியும், விபச்சாரம் செய்ததாகக் கூறியும் தண்டனைக்கு உள்ளாகி உள்ளார். மதத்தை மறுப்பது, விபச்சாரம் ஆகியவற்றைக் குற்றச் செயல்களாகக் கருதக்கூடாது. இச்செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் விதிகளை மீறி உள்ளது வெளிப்படையாகி உள்ளது என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரியத்தின் மனதளவிலான மத நம்பிக்கை, மத அடையாளத்தைக் கூறுவதால் மட்டுமே அவர் தண்டிக்கப்படக் கூடாது. நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே சர்வதேச பொது மன்னிப்பு சபையின் விருப்பமாகும். மனசாட்சிப்படி அவருடைய நம்பிக்கையை, மதத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்துச் சுதந்திரத்தைக் காண முடியவில்லை. இவை எட்டமுடியாத தொலைவில் உள்ளது. தனிப்பட்டவர் மீதான தண்டனை, அதுவும் மதம், நம்பிக்கைமீது தண்டனை இவை போன்ற அனைத்திலும் கருத்துச் சுதந்திரத்தை உள்ளடக்கியே இருக்கிறது என்றார்.
நீதிபதி அப்பாஸ் அல் கலீஃபா குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணான மரியம் யாஹ்யா இப்ராகிமிடம் இசுலாம் மதத்துக்குத் திரும்புகிறாயா என்று கேட்டபோது, நான் கிறித்தவர் என்று பதில் அளித்துள்ளார். அதன்பிறகே மரியத்துக்கு மதத்தை மறுக்கும் குற்றத்துக்கு மரண தண்டனையும், வேறு மதத்தவரைச் திருமணம் செய்துகொண்டதைச் செல்லாது என்று அறிவித்து, அதனால் விபச்சாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு நூறு கசை அடி தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு மதச் சுதந்திரத்தைக் கோரும் பதாகைகளுடன் முழக்கமிட்டவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வாரங்களாகவே அதிக சுதந்திரமும், சமுதாயம், பொருளாதார முன்னேற்றங்கள் வேண்டும் என்று கர்த்தூம் பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டு தொடர்ந்து போராட்டங்களைச் செய்து வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் சூடானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், மனித உரிமை நசுக்கப்படுவதைக் கண்டித்தும் இசுலாமியத்தை முன்னெடுக்கும் அரசு நம்பிக்கையின்மீதான சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சூடான் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் தளபதி ஏ.டி.பி.

திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.

ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.

அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?

இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?

உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில் மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.

திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!

பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!

இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம்.

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81385.html#ixzz33RCrfZgl

தமிழ் ஓவியா said...


தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது ,டீசலும் விலை ஏற்றம்


பழைய கள் புதிய மொந்தை!

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைப் பிடிப்பு றீரயில் கட்டணம் உயர்கிறது
டீசலும் விலை ஏற்றம்

புதிய பிஜேபி ஆட்சி என்பது இதுதான்

புதுடில்லி, ஜூன் 1- காங்கிரஸ் தலைமையி லான அய்க்கிய முற்போக் குக் கூட்டணியின் ஆட்சி மீது கூறப்பட்ட அத் தனைக் குற்றச்சாற்றுகளை யும், பிஜேபி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் தொடர்ந்து செய்யத் தொடங்கி விட் டது.

குறிப்பாக தமிழக மீனவர்கள் சிறைச்பிடிப்பு; டீசல் விலையேற்றம், ரயில் கட்டண உயர்வு அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கி விட்டனவே!

25 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்து அட்டூழியத்தை மீண்டும் காட்டியுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை, பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதம ருக்கு அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் நல்லெண்ண நடவடிக்கையாக 151 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதைப் பார்த்து இலங்கை அதிபர் ராஜபக் சேவும் தங்களது நாட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப் போம் என்று அறிவித்ததார். அதேபோல் இந்தியாவும் ஆந்திரா, ஒடிசா மாநில சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு அளித்த வாக் குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத் தியிருந்தார் என்றும் கூறப் பட்டது.

இந்த நிலையில் மீன் பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் நேற்றுதான் மீனவர்கள் கடலுக்கு சென் றனர். பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற் படை திடீரென சுற்றி வளைத்து தாக்கியது. தமி ழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து வீசி யது. மேலும் 25 மீனவர் களையும் கைது செய்து அவர்களது 6 விசைப் படகு களையும் சிறைப்பிடித்து சென்றுள்ளது ராஜபக்சே வின் கடற்படை.

ரயில் கட்டணம் உயர்வு

ரயிலில் அபாயச் சங்கிலி உண்டு - ஆபத்து காலத்தில் இழுத்து ரயிலை நிறுத்த லாம். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் அபாயம் அல்லவா ஏற் பட்டு விட்டது? எதைப் பிடித்து இழுப்பது?

பிஜேபியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா - ரயில் கட்டணம் உயரும் என்று அறிவிப்புக் கொடுத்துள் ளார். பழைய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்த தவறி விட்டதாம் - அத னால் இந்த ஆட்சியில் கட்டண உயர்வாம்! ரயில் கட்டணத்தை உயர்த்தாதது பழைய ஆட்சியின் தவறாம் - எப்படி இருக்கிறது?

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு

டீசல் விலை லிட்ட ருக்கு 50 காசுகள் உயர்த் தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக் கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்கள் விதிக்கும் வரிகள் சேர்க்கப்படாததால் இந்த விலை உயர்வு, மாநில வாரியாக வேறுபடும். எண் ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டது.

டீசலுக்கு அளிக்கப் படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக கடந்த காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு மாதந் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் திட்டத்தை 2013ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசும் இந்த விலை உயர்வை மேற் கொண்டுள்ளது. இதனால் மாதந்தோறும் டீசல் விலை உயர்வுத் திட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த ஆண்டு ஜன வரி மாதம் முதல் 15 முறை டீசல் விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதன் மூலம் லிட்டருக்கு இதுவரை ரூ. 9.55 காசுகள் உயர்ந்துள்ளது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81389.html#ixzz33RD5P2U0

தமிழ் ஓவியா said...


அரசு அலுவலகங்களில் புகைப்பிடிக்க தடை கர்நாடக அரசு அறிவிப்பு


கர்நாடகத்தில் அரசு அலுவலங்கள், பேருந்து நிலையம், மருத்துவ மனை ஆகிய இடங்களில் புகைப் பிடித்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன் னிட்டு, சனிக்கிழமை பெங்கருவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து, கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி.காதர் கூறிய தாவது:

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 60 லட்சம் பேர் புகையிலையினால் ஏற்படும் நோய்களால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் பலியாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமல்லா மல் வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறு நீரகம் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன. ரத்தக்குழாய், ரத்த நாளங் களில் ஏற்படும் பாதிப் பால் மாரடைப்பு, பக்க வாதமும் ஏற்படுகிறது. மனைவி கருவுற்றி ருக்கும் போது கணவன் அருகிலி ருந்து புகைப்பிடித்தால், வயிற்றில் இருக்கும் குழந் தையின் மனவளர்ச்சி பாதிக் கப்படும் என தெரியவந் துள்ளது.

உலக அளவில் புகை யிலை பொருட்களைப் பயன்படுத்துவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா 2-ஆம் இடத்திலும் இருக் கிறது. இந்தியாவில் 57 சதவீத ஆண்களும், 11 சதவீத பெண்களும், 34.6 சதவீத இளைஞர்களும் புகையிலை பயன்படுத்து கிறார்கள். கர்நாடகா வைப் பொறுத்தவரை 45 சதவீத ஆண்களும், 5 சதவீத பெண்களும் புகையிலை பயன்படுத் துகிறார்கள்.

புகைப்பிடிப்பதைத் தடுக்கவும், புகையிலை உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை முதல் அரசு அலுவலகங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப் படுகிறது.

புகைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் அருகில் இருப்பவருக்கும் பிரச் சினை ஏற்படுவதால், முதல் கட்டமாக அரசு அலுவ லகங்களில் தடையை மீறி புகைப்பிடிப்ப வருக்கு நிச்சயம் தண்டனை வழங் கப்படும். மேலும் பேருந்து நிலையம், மருத்துவ மனை, அரசு அலுவலகங் கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பவருக்கு தண் டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இதுதவிர கர்நாடகா வில் புகையிலை விளைச் சலை குறைக்குமாறு தோட் டக் கலைத் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு அருகில் நூறு மீட்டர் சுற்றளவில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாட கத்தை புகையிலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/81386.html#ixzz33RDGf3jP

தமிழ் ஓவியா said...

சீமாந்திராவுக்கு அடிக்கிறது லாட்டரி சீட்!

திருப்பூர், ஜூன் 1- திருப்பதி ஏழுமலையான் என்ற கல் முதலாளிக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ளது. 11 டன் தங்க நகைகளும் உள்ளன. 4000 ஏக்கர் நிலமும் உள்ளது.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா, சீமாந்தரா பிரிந்து விட்டதால், அந்தக் கோயிலும் சொத்தும் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை ஏற்பட்டது. இச்சொத்துக்கள் தேவஸ்தானத்துக்கும், கோயில் அமைந்துள்ள சீமாந்திரா வுக்குமே சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் முடங்கிக் கிடக்கின்றனவே தவிர, பொது மக் களுக்கு எள் மூக்கு முனை அளவுகூடப் பயன் கிடையாது.

Read more: http://www.viduthalai.in/e-paper/81381.html#ixzz33RDXEzl8