தினம் ஒரு தகவல் பகுதியில் நாள்தோறும் வெளியிடும் தினத்தந்தியில் ஒரு தகவல் வெளி யாகியுள்ளது.
ஜப்பானில் கோவில்களை அரிதாகத்தான்
பார்க்க முடியும். நாங்கள் வருடத்துக்கு ஒருமுறை புது வருடம் பிறக்கும்
போதுதான் கோவிலுக்குச் செல்வோம். மற்றபடி கோவிலுக்குச் சென்று
பணத்தையும், நேரத்தையும் செலவழிப்பது கிடை யாது. கடவுள் நம்பிக்கை யைவிட,
எங்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் என்கிறார்கள் ஜப்பானியர்கள் (தகவல்
அனுப்பி உதவியவர்: சீ.இலட்சுமி பதி, தாம்பரம்)
இரண்டாம் உலகப் போரின்போது அணு குண்டு வீச்சுக்கு ஆளா னது ஜப்பான். ஹீரோ ஷிமா, நாகசாகி நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
70 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பான் உலகளவில் தலை நிமிர்ந்து இன்று நிற்பதற்குக் காரணம் தினத்தந்தி வெளியிட்ட அந்தத் தகவல்தான்.
கடவுள் நம்பிக்கை யைவிட தன்னம்பிக்கை அதிகம் என்று ஜப்பானி யர்கள் கருதுவதும், செயல்படுவதும் தான் அதன் வளர்ச்சிக்குக் கார ணமாகும்.
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்; அவனன்றி
ஓரணுவும் அசையாது என்று திண் ணைத் தூங்கி வேதாந்தங் களைப் பேசிக் கொண்டி
ருந்தால், ஜப்பான் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு இருக்குமா?
ஒரு நாளில் இராகு காலம், எமகண்டம், குளிகை
என்றுகூறி நான் கரை மணிநேரத்தைப் பாழ்படுத்தும் இந்து மத இந்தியா எங்கே?
கோவி லுக்குச் சென்று நேரத்தை யும், பணத்தையும் செல வழிக்க மறுக்கும்
ஜப்பான் எங்கே?
இந்து மதத்தில் ஒவ் வொரு நாளுக்கும் சாங்கியம் உண்டு; விரதங்கள் உண்டு; மாதம் தவறி னாலும் பண்டிகைகள் தவறாது;
கோவில் க்ஷேத் திராடனம், புண்ணிய முழுக்குகள் என்று காலத் தையும்,
பொருளையும், உடல்நலனையும் நாசப் படுத்துவது கொஞ்சமா நஞ்சமா?
அரசுக்குக் கொடுக் கும் வரியைவிட புரோ
கிதனுக்கும், அர்ச்சகனுக் கும் கொடுக்கும் தட்ச ணைகள்தானே இங்கு அதிகம்.
செத்த பிறகும் திதி என்ற பெயரால் புரோகிதப் புடுங்கல்! சுரண்டலின் மறுபெயர்
தான் இந்து மதமும் அதன் சடங்கு முறைகளும்.
ஜப்பானியர் என்றால் குள்ளர்கள் என்பதைக் கூட விஞ்ஞான வளர்ச்சி யால் மாற்றி அமைத்து விட்டார்களே!
ஜப்பானைப் பார்த்தாவது குள்ளத்தனமான புத்தியைத் தூக்கி எறிந்து, நிமிர்ந்த அறிவியலைப் பின்பற்றக் கூடாதா?
வாழ்க பெரியார்!
---------------------------- மயிலாடன் அவர்கள் 14-05-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
25 comments:
மகாராஷ்டிராவில் கொடூரம்: உயர்ஜாதி மாணவியிடம் பேசியதால் தாழ்த்தப்பட்ட மாணவர் அடித்துக் கொலையாம்!
அகமத்நகர், மே 14- மகா ராஷ்டிர மாநிலத்தில் உயர் ஜாதி மாணவியிடம் பேசிய தால் தாழ்த்தப்பட்ட மாண வர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட் டத்தை மாநிலம் முழு வதும் நடத்தியது. இந்தக் கொடூரம் மேலும் தொட ராமல் தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ளது கார்டா கிராமம். இந்தக் கிராமத்தில் மொத் தம் 15 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் 1000 பேர் தாழ்த்தப்பட்ட மக் கள். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி கார்டா கிராமத்துக்கு வந்தனர். இவர்கள் கிராமத்தை சுற்றி உள்ள உயர் ஜாதியினருக்கு சொந்தமான வானம் பார்த்த விவசாய நிலத்தில் விவசா யக் கூலி தொழிலாளர்க ளாக வேலைபார்த்து வரு கிறார்கள்.
இதனால் உயர் ஜாதியினர் தலித் மக்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர். பிழைக்க வேறு வழி தெரியாததால் தலித் மக்களும், உயர்ஜாதியின ருக்கு கட்டுப்பட்டு வாழ் ந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் கார்டா கிரா மத்தைச் சேர்ந்த தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜூ ஆஜ் என்பவரின் மகன் நிதின் (வயது 17). இவர் வீட்டுக்கு எதிரே உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரும் 11 ஆம் வகுப்பு படிக்கும் உயர் ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் நண்பர்களாக பழகி வந்த னர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி காலை இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றார். பின் னர் நிதினும், பெண் தோழி யும் பள்ளிக் கட்டடத் துக்குப் பின்னால் நின்று பேசிக்கொண்டு இருந்த னர். இதை அந்தபெண் ணின் சகோதரர் சச்சின் கோல்கர் பார்த்து விட்டார். உடனே தனது நண்பர்கள் சிலரை சச்சின் அழைத்து வந்து நிதினை பயங்கர மாக தாக்கினார். இத னால் வலி தாங்காமல் நிதின் பலத்த சத்தத்துடன் அலறினார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமை ஆசி ரியர் மற்றும் ஆசிரியர்கள் நிதினை உயர் ஜாதி மாண வர்கள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாக் குவதைத் தடுப்பதற்குப் பதிலாக ஆசிரியர்கள், பள் ளியில் சண்டை போடக் கூடாது.
வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இத னால் துணிச்சல் அடைந்த அந்த மாணவர்கள் நிதினை அருகில் உள்ள சச்சின் மாமா சேஷ்ராவ் செங்கல் சூளைக்கு இழுத்துச் சென் றனர்.
அங்கு அவர்கள் நிதினை சுத்தியலாலும், இரும்புக் கம்பியாலும் மீண்டும் தாக் கத் தொடங்கினர். 4 மணி நேரம்தொடர்ந்து தாக்கிய தில் நிதின் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் நிதினின் உடலை அருகில் காட்டு பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.
அங்குள்ள மரத்தில் நிதின் உடலை தூக்கில் தொங்க விட்டு ஓடி விட்டனர். நிதினை காணாமல் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். இந்த நிலையில் நிதினின் தாய் செங்கல் சூளைக்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த சச்சின் மாமா சேஷ்ராவ் நிதினின் தாயிடம் நிதினை நான் அடித்தேன். அவன் மாலை வீட்டுக்கு வருவான் என்று திமிராக கூறி விரட்டி விட்டார். கொலைச் சம்பவம் குறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர், கார்டா கிராமத்துக்குச் சென்று நிதின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக சச்சின் உள்பட உயர் ஜாதியை சேர்ந்த 12 பேர் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.தலித் மாணவரை உயர்ஜாதியினர் கொடூரமாகத் தாக்கி அடித்து கொன்றது மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து 5 நாள்கள் பிறகு அகமத் நகரைச் சேர்ந்த அமைச்சர் மதுகர் பிச்சாத் நேரில் சென்று பார்த்தார்.
ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த அவர் தனது தாமதத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலை சாக்காக தெரிவித்தார். ஆனால் மகாராஷ்டிர மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் டாக்டர் அசோக் தாவ்லே தலைமையில் ஒரு குழுவினர் உடனே கார்டா கிராமத்துக்கு சென்று நிதினின் தாய், தந்தை மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் நிதின் படித்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று நிதின் தாக்கப்பட்டதை தடுக்கத் தவறிய தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தாழ்த்தப்பட்ட மாணவர் நிதின்படு கொலையைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி மும்பை, புனே உள்ளிட்ட மராட்டிய மாநிலம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் கொடுத்தனர்.
Read more: http://viduthalai.in/e-paper/80238.html#ixzz31kKjeETh
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு
புதுடில்லி, மே 14- ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தவரை மூன் றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்து இந்தியக் குடிமக்களுக்குரிய, அரச மைப்பு வழங்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப் பட வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற் படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள் ளிட்ட அனைத்து உரிமை களும் இதர பிற்படுத்தப் பட்டோருக்குரிய ஒதுக் கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் சார்பில் கூறப்படுவதா வது: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மத்திய அரசுக்கு மூன்றாம் பாலி னத்தவரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலுக் குள் சேர்த்துக்கொள்ள தீர் மானம் நிறைவேற்றி உள் ளோம்.
பிறப்பில் எந்த வகுப்பினராக இருந்தா லும் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக் குள் கொண்டு வரப்படு வார்கள். அனைத்து மூன் றாம் பாலினத்தவர்களும் இதர பிற்படுத்தப்பட் டோர் பெறும் அனைத்து உரிமை களையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவை அமைச்சரவை கூடி எடுக்கும். மூன்றாம் பாலினத் தவர் தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டிய லில் உள்ளபடி 23,019பேர் மற்றவர்கள் பட்டிய லில் பதிவாகி உள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் எந்த ஒரு வகுப்பையும் இணைப் பதற்கான ஆலோச னையை அரசுக்கு ஆணை யம் வழங்கிவருகிறது. அதனால், மத்திய சமூக நீதி மற்றும் நிர்வாகத் துறையின்கீழ் செயல் படும் ஆணையத்துக்கு துறைரீதியாக உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட் டுதலின்படி ஆணையத் தின் பரிந்துரையைக் கோரி கடிதத்தை அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமைகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
ஹிஜ் ராக்கள், யூனுச்சுகள், கோத் திகள், அரவாணிகள், ஜோகப் பாக்கள், சிவசக்திகள் என்று பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டு வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்குரிய உரி மைகளைப் பெறுவார்கள் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/e-paper/80212.html#ixzz31kKvtU8c
நரகம் ஒரு சூழ்ச்சி
நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.
- (விடுதலை, 29.2.1948)
Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d
பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?
- குடந்தை கருணா
கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?
பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?
அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.
இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!
ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.
இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?
Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj
அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே
ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு
ஆதரவு தருவதுபற்றி யோசிக்கும் மாநிலக் கட்சித் தலைவர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் எச்சரிக்கை அறிக்கை
ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படு கின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத் துவத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.
மதயானை வரும் பின்னே!
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பழைய (பழ) மொழி!
மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணை களின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே என்பது புதிய அரசியல் மொழியாகும்!
இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் முதற் பக் கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக் களைத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன:
எம்.ஜி. வைத்யா கூறுகிறார்
“Modi Must deliver on Ram Temple: - RSS Leader
M.G. Vaidya wants progress on Article 370, Uniform Civil Code”
இந்துவில் வந்த படமும் வெளி வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.
இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தி யாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; ஏற்படும் என்று எண்ணுகிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா? அந்த பதில்
ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியுள்ளார்.
நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்
அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர். எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும்பற்றிய மணியோசைகள் ஆகும்!
நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்து
இதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து.
“They [Sangh Parivar] may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if Modi budges under this pressure. But the dangers of a communal flare-up will always be there now,” ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்;
இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல் பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும் என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரான பேராசிரியர்).
எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா?
மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு...
இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி, வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?
காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்!
யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொறிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த இணையத்து தீராத விளையாட்டு விட லைகளே, காலந் தாழ்ந்தாவது வளர்ச்சி என்ற மயக்க பிஸ்கெட் பற்றிப் புரிந்து வருந்துங்கள்.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - குறள் (435)
சென்னை
15.5.2014
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
Read more: http://viduthalai.in/e-paper/80313.html#ixzz31pwqO3ek
அடடே, என்னே ஞானோதயம்!
தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு
அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!
Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1
புத்தரின் போதனைகளின்படி அரசு ஆட்சி புரிகிறதா? : இலங்கை வடக்கு மாகாண உறுப்பினர் கேள்வி
நல்லூர், மே 15- வடக்கின் சோகங்களை அனுசரிக்க விடாமல், அரசு தமது வெற்றியை, கட்டா யத்துடன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித் துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், நல்லூர் தெற்கு சன சமூக நிலை யத்தின் 65ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். விழா யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலை மையில் இடம்பெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இன்று சிங்கள பவுத்தர் களின் புனித நாள். அமை தியாக தர்ம சிந்தனை களோடு வாழும் வழி முறையை உலகிற்கு வழங் கியதில் பவுத்தத்திற்கு முக் கிய இடம் உண்டு.
ஆனால். அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள் ளும் ஆட்சியாளர்கள் எவ் வாறு நடந்து வந்திருக்கின் றார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டு கொண்டி ருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உண்மை யான பவுத்த சிந்தனைகளு டன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.
பவுத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல் லும் ஆட்சியாளர்கள் செய் யும் அக்கிரமங்களைப் பார்த்து தானாகவே வெட் கித் தலைகுனிந்திருப்பார்.
இந்த மே மாதம் பவுத் தர்களுக்கு எவ்வாறு முக்கி யத்துவமானதோ, புனித மானதோ, அவ்வாறே தமி ழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வு பூர்வமானதுமான மாதமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான வலி சுமந்த வாரமாகும். கடந்த இறுதிப் போரிலே இலட்சக்கணக் கில், கடற்கரை ஓரத்தில் மக்கள் கொன்று குவிக்கப் பட்டதொரு மாதமாகும்.
அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி, அர சாங்கம் அவர்களை அச் சுறுத்தி வருவதுடன், தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை முழக்கங்களு டன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக் களையும் அதைக் கொண் டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.
இந்த விடயமானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு நிலை யாகும். இது பவுத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர். மோகனதாஸ், யாழ். பல் கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம். இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Read more: http://viduthalai.in/e-paper/80307.html#ixzz31pxFVWUn
பாலாபிஷேகம் ஒரு கேடா?
சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)
ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?
Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX
சிந்திக்க முடிந்தது
புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)
Read more: http://viduthalai.in/page-2/80316.html#ixzz31pxjVNAZ
கடவுள் ச(ப)க்தியின் பலன் இவ்வளவுதான்!
ஏழுமலையானனை தரிசித்த நீதிபதி விபத்தில் பலி!
திருப்பதி, மே. 15-கர்நாடக மாநிலம் பெல் லாரியைச் சேர்ந்தவர் ருத் ரமணி (45). மைசூரு மாவட்ட நீதிபதியாக இருந் தார். இவர் குடும்பத்துடன் திருப்பதி வந்தார். ஏழு மலையானை தரிசிக்க பாதயாத்திரையாக அலிபிரி வழியாக நடந்து சென்றனர்.
திருமலை நுழைவு வாயில் அருகே சாலையை கடந்தார். அப்போது திரு மலையில் இருந்து திருப் பதி வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருத்ரமணி கீழ் திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந் தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
கிரிவலம் சென்ற பொறியியல் மாணவர் மின்சாரம் தாக்கி பலி
திருவண்ணாமலை, மே.15- சித்ரா பவுர்ண மியை யொட்டி திருவண் ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரி வலம் சென்றனர். சென்னை தனியார் பொறியியல் கல் லூரி மாணவர் அங்கப்பன் (எ) விக்னேஷ் (வயது 22). திருவண்ணாமலையை சேர்ந்த தனது கல்லூரி நண்பர் பூர்ண சந்திரன் மற்றும் நண்பர்கள் 6 பேர் உடன் கிரிவலம் வந்தார்.
இரவு 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கிப் பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப் போது சூறைகாற்றுடன் மழை பெய்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விளம் பரப் பதாகை ஒன்று திடீ ரென முறிந்து அங்கப்பன் மீது விழுந்தது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்தும் மாணவர்கள் கிரிவலம் வந் தனர். அண்ணா நுழைவு வாயில் அருகே வந்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்து முகாமில் சிகிச்சை பெறுவதற்காக அங்கப்பன் சென்றார். அவ ருடன் நண்பர்கள் பூரண சந்திரன், சிதம்பரத்தை சேர்ந்த ராகுல் பிரசாத் உடன் சென்றனர்.
அப்போது அங்கு போடப்பட்டிருந்த டியூப் லைட் மின்சார ஓயர் மீது அங்கப்பனின் கை உரசி யது. இதில் அவரை மின் சாரம் தாக்கியது. தூக்கி யெறியப் பட்ட அங்கப்பன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். காப் பாற்ற முயன்ற நண்பர்கள் பூரண சந்திரன், ராகுல்பிர சாத் படுகாயம் அடைந்த னர். அவர்கள் 2 பேரும் அரசு மருத்தும னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. அங்கப் ப னின் சொந்த ஊர் திருநெல் வேலி மாவட்டம், சுத்தமல்லி. மாணவர் இறந்த தகவல் அவரது தந்தை சாமிஜி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரு வண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pz7WIpL
கோவில் விழாவில் தகராறு
வலங்கைமான். மே. 15- வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த தேர்த் திரு விழா நடந்தது. அப்போது ஆண்டாங்கோவில் கடை வீதியில் வெடி வெடித்த போது அங்கிருந்த ஒரு கட்சி கொடி மேடை சேதம் அடைந் ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாஞ் சேரி பகுதியினருக்கும் ஆண் டாங்கோவில் பகுதியில் வசிப்போருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.
இந்நிலையில் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது கட்சி மேடை சேதம் அடைந்தது தொடர்பாக பேசிய போது இருதரப்பினரிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 30), அன்பரசு (30) ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப் பட்டனர்.
இதனை தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட் டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் ஏற் படாதவாறு பாப நாசம் டி.எஸ்.பி. சிவாஜி அருட் செல்வன் தலைமை யில் ஏராளமான காவல் துறை யினர் குவிக்கப்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வலங்கைமான் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், மகேஷ், தங்க துரை உட்பட வருவாய் துறை அலுவலர் கள் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர் பாக வலங்கைமான போலீ சார் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, ரகு, ஆறுமுகம், சதீஸ், மற்றொரு ஆறுமுகம், விவேக், சேட்டு, மகேந் திரன், சரவணன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவாரணை மேற் கொண்டு உள்ளனர். இச் சம்பவத்தால் ஆண்டாங் கோவில் மற்றும் மாஞ் சேரியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் உண்டியல் கொள்ளை
தண்டையார்பேட்டை, மே 15- வண்ணாரப் பேட்டை, எம்சிஎம் கார் டன், முதல் தெருவில் சிறீ வேங் கட முடையான் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும், பூசாரி ரவி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 உண் டியல்களை உடைத்து அதி லிருந்த பணம், பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தண்டை யார்பேட்டை காவல் நிலை யத்தில் ரவி புகார் செய்தார். காவல் நிலைய ஆய்வாளர் தெய்வேந்திரன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரித்தார். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.
Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pzGhQlu
எப்படி உருவானது ஸ்டெதாஸ் கோப்?
1816இல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும்.
ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.
1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளை யாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.
இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனை யைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.
இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.
இதை அடிப்படையாக வைத்து 1819 இல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843 இல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.
Read more: http://viduthalai.in/page-7/80276.html#ixzz31pzeITeg
பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!
கோவில் விழாவில் தகராறு இளைஞர்களுக்கு கத்திக்குத்து!
காரைக்குடியில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகரா றில் 2 இளைஞர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி பர்மா காலனி அழகப்பா நகரில் பெரிச்சியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவில் உரி யடிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதே பகுதியை சேர்ந்த சங்குப்பாண்டி என்பவர் உரிஅடித்தாராம்
அப்போது அவரை பாரி நகரைச் சேர்ந்த விஜயக்குமார் (வயது 24), வெங்கடேஷ் (26) ஆகி யோர் விசில் அடித்துகேலி செய்தனராம். இதில் ஆத் திரம் அடைந்த சங்குப் பாண்டி தனது நண்பர்கள் துரைப் பாண்டி, மணி கண்டன், காளி தாஸ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், வெங்க டேஷ் ஆகியோரைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த இரு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சங்குப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ் ஆகி யோரை கைது செய்தார். துரைப் பாண்டி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார். கோவில் வழிபாடு தொடர்பாக மோதல்!
தம்மம்பட்டியை அடுத்த மேல்வாஞ்சாரை கிராமத்தில் ராமர் கோவில், பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நடுவஞ்சாலை, பழமரத் தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது கோவில் பூசாரி கோவிலின் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களி டையே வாக்குவாதம் ஏற் பட்டது. இந்த நிலையில் நடுவஞ்சாரை, பழமரத் தூர் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த சிலருக்கும், மேல் வாஞ்சாரை கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை யொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதில் சின்னக்குழந்தை, கோவிந்தன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக தம் மம் பட்டி காவல்துறை யினர் 3 கிராமங்களையும் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vlyKuPo
கோவில் விழாவில் பயங்கர மோதல்!
பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.
எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.
இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.
இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6
அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!
மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.
தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc
பார்ப்பன சாதி
பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். - (விடுதலை, 29.5.1973)
Read more: http://viduthalai.in/page-2/80348.html#ixzz31vmOnuX8
விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!
விடுதலை செய்தி எதிரொலி:
நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:
விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.
குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.
திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.
இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.
அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.
தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.
முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.
- த.அமலா, திருச்செந்தூர்
Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1
கடவுள் இல்லை!
ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா
கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்
கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)
மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்
உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்
கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voXQLUs
பார்ப்பனர் பற்றி...
சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா
திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப் பட்டுள்ளது.
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31vojo1cu
பேய்க்கு திருமணம்!
பேய்க்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டால் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில் இங்கு இதுவும் நடக்கும் - இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கும்.
ஜாம் நகரில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரதா என்ற 16 வயது பெண்ணுக்கும் வாகனர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜகதீஸ் சந்திரா சோலங்கி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணம் நடக்கும் முன்னரே மணமகள் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டு விட்டது. இத்துடன் கதை முடிந்து விட வில்லை. இனி மேல்தான் ஆரம்பமாகிறது.
இறந்து போன சாரதாவின் ஆத்மா சாந்தியடைய வில்லை. அவள் பேயாக அலைந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் குடும்பத்தினர் நம்பினார்கள்.
அவளுடைய தாயையும், சகோதரனையும் அவளுடைய பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாகவும் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பையனையே திருமணம் செய்துக் கொள்ள விரும்பு வதாகவும் தாயார், சகோதரன் மூலம் அந்த பேய் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தப் பேயைக் கண்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பீதியடைந்தார்கள்.
பேயை வீட்டை விட்டு விரட்டுவதற்கு திட்டமிட்டனர். பேய்க்கு திருமணம் நடத்தி வைத்தால் பேய் கணவனுடன் வீட்டை விட்டு ஓடிவிடும் என்று கருதி பேய் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு சாரதாவின் சிலை செய்யப்பட்டு மண வறையில் சாரதாவின் சிலை அமர்த்தப்பட்டது. மணமகள் வேண்டுமா? எங்கு போவது? உடனே ஒரு கடவுளின் சிலை மணமகனாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மணமகள் வேறு யாரும் அல்ல. எல்லாம் வல்ல கோபிகா கிருஷ்ணன்தான். கிருஷ்ணனின் தோழர்களான மற்ற பொம்மைகளும் அலங்காரம் செய்யப்பட்டு மணவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்கள் மந்திரம் ஓதி சாரதா - கிருஷ்ணன் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.
தடபுடலான விருந்தும் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏற்கெனவே சாரதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த ஜகதீஸ் சந்திர சோலங்கியும் வந்திருந்தார் - தன் மனைவியுடன்.
Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voq0olX
ஏழு மொழிகள்
1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்
2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்
3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்
4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்
5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.
6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vozv6Uj
தந்தை பெரியார் பொன்மொழிகள்
தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.
மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vp8gHmM
சாத்தாணியின் புரோகிதம்
நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.
அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.
அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்
- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpEPqnP
இராவணனுக்குப் பிறந்த பிள்ளை
இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!
இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.
இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.
இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!
-புரட்சிக் கவிஞர்
Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpVZwGW
Post a Comment