Search This Blog

26.5.14

கருப்புச் சட்டைப் படை - பெரியார்

கருப்புச் சட்டைப் படை

கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு படை ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டில் திரட்டப்படுவது பற்றிப் பலருக்குக் கிலி ஏற்பட்டு அந்தக்கிலியைப் பரிகாசம் செய்வதன் மூலமாகப் பல இடங்களில் காட்டி வருகிறார்கள். நாட்டில் அரசியலின் பேராலோ மதத்தின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்சியாரும் அக்கட்சித் தொண்டாற்றுவதற்கு என்று ஒவ்வொரு படையை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ராம தண்டு, அனுமான் சைனியம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதளம் என்பன போன்ற பல படைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் எவரும் ஏதும் பேசாமல் இருந்துவிட்டு, கருப்புச் சட்டைப்படை என்பதற்கு ஆக மாத்திரம் ஏன் இத்தனை பேர்கள் பரிகாசம் செய்யவும், ஜாடை பேசவும் (கேலிச்சித்திரம்) பொம்மை போட்டுக் காட்டவுமான காரியங்கள் செய் கிறார்கள் என்பது விளங்கவில்லை. எப்படி இருந்தபோதிலும் கருப்புச் சட்டைப்படை என்பது மற்றப் படைகளைவிட மக்கள் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை என்பதோடு, அதற்கேற்றபடியே மக்கள் கவனத்தை ஆழ்ந்து செலுத்தும்படியான அளவுக்குக் கருப்புச் சட்டைப்படை வேலை செய்யப் போகிறது என்பதிலும் அய்யமில்லை.


கருப்புச் சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிரக் கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக்கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாசவேலை செய்து நம் மக் களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையோ பாழாக்கிக்கொள்ளவோ அல்ல என்பதைத் தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்கு ஆக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அவ்விழிவை நீக்கிக் கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்.


கருப்புச் சட்டைப் படை என்கின்ற பெயர் சிலருக்கு இழிவாக இருப்பதாகக் காட்டப்படுகிறது. அனுமான் படை, வானர சைனியம் என்று சொல்லப்படுவதை மனிதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதி பொறுத்துக் கொண்டிருக்கும்போது, கருப்புச் சட்டைப் படை என்பது மாத்திரம் மக்களுக்கு எந்த விதத்தில் இழிவாக கருதப்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. சிலரால் கருப்புச் சட்டை பார்வைக்கு அசிங்கமாக இருப்ப தாக சொல்லப்படுகிறது. பகுத்தறிவு உள்ள மக்கள் உச்சிக் குடுமியும், மழுங்கச் சிரைத்த தலையும்,பட்டை நாமமும், சாம்பல் பூச்சும், தொப்பை வயிறு தொப்புள் குழியுடன் தெரியும்படியான பஞ்சகச்சமும்; சூத்திரன் என்று ஒரு ஜாதியும், பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன், சக்கிலி என்று ஒரு ஜாதியும் அததற்கு ஒவ்வொரு மாதிரி அடையாள வேஷமும் கொண்டு அவற்றை அந்தந்த மக்களும் ஏற்றுக் கொண்டு நடக்கும் காட்சியைவிடவா கருப்புச் சட்டை அசிங்கமாகவும் கேலியாக வும் இருக்கக்கூடும் என்று கேட்கிறோம்.


மற்றும் கன்னான் வார்த்துக் கொடுத்த செம்புப் பொம்மைகளைச் சுவாமிகள் என்று சொல்லி அதை வண்டியில் வைத்து வாத்தியத்துடன் இழுப்பதும், அதற்குக் கல்யாணம் காரியாதி செய்வதும் பிள்ளை குட்டிகள் இருப்பதாகக் காட்டுவதும் சோறு பலகாரம் படைப்பதும் ஆன முட்டாள் தனமான காரியங்களைவிடவா கருப்பு சட்டைக்காரர்கள் மக்களுக்குக் கேலிக் கிடமாய் நடந்துகொள்ளுகிறார்கள் என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறோம்.


இந்த நாட்டில் உண்மையான முட்டாள் தனத்தையும், காட்டுமிராண்டித் தனத் தையும், சுயநல சூழ்ச்சிக்காரர்கள் மக் களுக்குள் கடவுள், மதம் என்னும் மயக்க வஸ்துக்கள் பேரால் புகுத்தி மடையர் களாகவும், மானமற்றவர்களாகவும் இழிவு படுத்தி வைத்திருக்கும் காரியங்களைப் பற்றி இந்நாட்டு மக்கள் சிறிதும் கவலையும் இல்லாமல், மான உணர்ச்சியும் இல்லாமல் பொறுத்துக்கொண்டு, பின்பற்றி வந்த கார ணத்தாலேயே அவைகளை ஒழிக்கவோ, அவ்விழிவுகளிலும், மடமையிலும் இருந்து வெளிவரவோ எவராலாவது செய்யப்படும் முயற்சிகளையெல்லாம் அம்முயற்சியின் எதிரிகள் பரிகாசம் செய்தும், பழி சுமத்தியும், குறும்புப் பிரசாரம் செய்தும், மற்றும் பல வழிகளில் வஞ்சகம், துரோகம், பலாத்காரம் முதலியவைகளைச் செய்தும், அடக்கி வைத்தும், ஒழித்தும் வந்திருக்கிறார்கள். அதுபோலவே திராவிட மக்களின் இழி வையும், மடமையையும் நீக்க இன்று முன் வந்திருக்கும் கருப்பு சட்டைப் படையைப் பற்றி எதிரிகள் கேலி செய்து பழி சுமத்தி குற்றம் கற்பிப்பது இப்போது அதிசயமல்ல என்போம்.


வெள்ளைக்காரனை ஓட்டுவது என்று பெயரை வைத்துக்கொண்டு அதற்கு ஆக என்று ராட்டினம் சுற்றுவதும், வெள்ளை யனை ஓட்டும்படை (தேசிய வீரன்) என்று பெயர் வைத்துக்கொண்டு கோணிச்சாக்கை (கதர் துணியை) கட்டிக்கொண்டு குரங்கு குல்லாயை (கதர் குல்லாயை) தலையில் மாட்டிக்கொண்டு திரிகிறதுமான பைத்தியக் காரத்தனத்தை விட, ஆபாசக் காட்டு மிராண்டி செய்கையை தோற்றத்தைவிடக் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு இருப்பது எந்தவிதத்தில் ஆபாசமாகவும், பைத்தியகாரத்தனமாகவும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
மனிதனுக்கு மானம் பிரதானமே ஒழிய அழகு பிரதானமல்ல. அழகு என்பது நாம் ஏற்படுத்திக் கொள்வதாகும். நம் பெண்கள் ஆபாசமாய் வேஷம் போட்டுக் கொள்ளு வதைக் காதிலும், மூக்கிலும் ஓட்டைகள் போட்டுக் கொள்ளுவதை, அதில் விகா ரமாய் நகைகள் என்று கண்ட கண்ட வைகளை மாட்டிக் கொள்ளுவதை அழ கென்கிறோம். அப்படி இல்லாமலிருப்பதை அசிங்கமாக இருப்பதாகக் காண்கிறோம். ஆனால் மானமும், மடமையும் நாம் ஏற்படுத்திக் கொள்வதல்ல. நமக்கு இயற்கையாகவே அவை அறியப்படக் கூடியவைகளாகும்.


எனவே, கருப்புச் சட்டையைப் பற்றி மற்றவர்கள் (நம் எதிரிகள்) கேலி செய்கிறார்கள் என்று படை வீரர்கள் யாரும் கருதிவிடக் கூடாது என்பதோடு நிர்ப்பந்த மாக ஏற்படக்கூடிய சமயம் தவிர மற்ற சமயங்களில் கருப்புச் சட்டை மாத்திரமல் லாமல் கருப்பு உடை அதாவது வேஷ்டியும் அல்லது பைஜாமா என்றும் கால் சட்டையும் கூட கருப்பாய் இருந்தாலும் நலமேயாகும். சட்டைகளை கருப்பு சட்டைப் படை ஸ்தாபனத்தில் இருந்தே விலைக்குச் சப்ளை செய்ய முயற்சிகள் நடந்துவருகின்றன.

பெண்களும் இப்படையில் சேரலாம். அவர்கள் கருப்புச் சேலை அல்லது குறைந்த அளவு கருப்பு ரவிக்கையையே சதா அணிந்து கொள்ள வேண்டும். கூடுமான வரையில் நகைகளை வெறுத்துத் தள்ள வேண்டும்.

இன்று நம்மைப் பரிகாசம் செய் கிறவர்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப் படும்படியான அளவுக்கும், நம்மைப்போல் அவர்களும் காப்பி அடிக்கும்படியான அளவுக்கும் நாம் வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம், வேலை செய்யவும் போகிறோம். இதற்கு ஆக நாம் ஒவ்வொருவரும் குடும்பம் வாழ்வு என்பவைகளைத் துச்சமாகக் கருத வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்று தோன்றியுள்ள இந்த திராவிடர் கருப்புச் சட்டைப் படை இயக்கம் பொதுநல வாழ்வின் பேரால் தொப்பை வளர்க்கவோ யோக்கியதைக்கு மேற்பட்ட சுகவாழ்வு வாழவோ ஏற்பட்டதல்ல, அப்படிப்பட்டவர் என்று சந்தேகிக்கப்பட நேர்ந்த எவருக்கும் கூடத் திராவிட இயக்கம் இடம் கொடுத்தால் இயக்கம் தற்கொலை செய்து கொள்ளச் சம்மதித்தது போலாகும்.


இயக்கத்திற்குத் தொண்டாற்றுவதில் எவரும் தன் நலத்தைச் சிறிதாவது விட்டுக் கொடுக்கத் தயாராகவும், தனது மானாவ மானத்தைக் கூட லட்சியம் செய்யாமல் இயக்கத்திற்கு தலை கொடுக்கக் கூடியவர் களாகத் துணிவுகொள்ள வேண்டும். விளம் பரத்திற்கும், சுயநல வாழ்வு மேம்பாட்டிற்கும் என்று கருதி இயக்கத்தை ஏணிப் படிக்கல்லாக உபயோகிக்கக் கருதுபவர்கள் திடீர் என்று கவிழ்க்கப்பட்டு விடுவார்கள் என்பதை மனதிலிறுத்திக் கொண்டு இதில் கலக்க வேண்டும். உண்மையான இயக்கத் தில் இது இயற்கை. ஆதலால் சொந்த வெட்கம், மற்றவர்கள் செய்யும் பரிகாசம், விஷமத்தனமான போதனை ஆகியவை களுக்குக் கருப்புச் சட்டைக்காரர்கள் சட்டை செய்து காது கொடுக்கக்கூடாது என்பதை நன்றாய் வலியுறுத்திக் கூறு கிறோம். அடுத்த மாதம் சென்னையில் கூடும் நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் கருப்புச் சட்டை விதிகள் மற்ற விவரங்கள் தெளிவுபடுத்தப்படும்.


இப்போது படைவீரர்கள் தங்கள் கழுத்து அளவு, மார்பு அளவு, உயரம் முதலியவை களைத் தெரிவிக்க வேண்டும். சட்டை 1க்கு ரூபாய் 1-12-0 அல்லது 2-க்குள் விலையாக லாம். சட்டை தேவை உள்ளவர்கள் எவ் வளவு வேண்டும் என்பதையும் எழுத வேண்டுகிறோம்.

-------------------------- தந்தை பெரியார்- "குடிஅரசு" - தலையங்கம் - 17.11.1945

29 comments:

தமிழ் ஓவியா said...

பொதுத்துறை அரசு வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


பொதுத்துறை அரசு வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

சமூகநீதிக்கும் அதன் மூலம் ஆபத்து வரும்!

நாயக் கமிட்டி அறிக்கையை புறந்தள்ளுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை மிகக் கடுமையாக திராவிடர் கழகம் எதிர்க்கும். தேவைப்பட்டால் கிளர்ச்சிகளில் கூட இறங்கத் தயங்காது என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

அவர் இன்று (25.5.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்து இயங்கிய நிலையில், நாயக் கமிட்டி என்ற ஒரு குழுவை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிலைப்பாடு, செய்ய வேண் டிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்கு, அமைத்தது. அதன் அறிக்கை வெளியானது; அதில் சிகிச்சை என்பது நோயை விடக் கொடுமையானது என்பது போல் பரிந்துரைகள் பெரிதும் அமைந்துள்ளன.

அதைப்பற்றி மிகவும் விரிவாக விளக்க வேண்டிய தில்லை; தற்போது நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளை, மீண்டும் தனியார் மயமாக்கி, தனியார் வங்கிகளாக்கிடவே அதற்கு ஒரு முன்னோடித் திட்டம் போல அமைந்துள்ளது!

1971இல் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராகி முன்பு தனியார் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி மிகப் பெரிய புரட்சிகரமான முடிவை எடுத்தார்.

அதன் விளைவு நாட்டின் அடிக்கட்டுமானம் (Infrastructure) மிகவும் பரவலாக வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

ஒரு நாட்டு வளர்ச்சி பொருளாதாரத் துறையில் ஏற்பட வேண்டுமானால், வாணிபமும், தொழிலும் வளர்ச்சி பெற வேண்டும்.

அதற்கு மக்களிடையே வங்கிப் பழக்கம் (Banking habit) பெருகிட வேண்டும்.

சுமார் 120 கோடி மக்களுக்கு மேல் உள்ள நமது நாட்டில், அதிலும் 70 விழுக்காட்டினர், கிராமங்களில் வாழும் நிலையில் 51.2 லட்சம் கிராமங்களில் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு, மக்கள் அதில் பணப் புழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், விவசாயிகள் கூட தங்களது விவசாயம் பெருக வங்கிக் கடன் முதலியவை களைப் (நபார்டு வங்கி ஓர் உதாரணம்) பயன்படுத்தி முன்னேறும் நிலை உள்ளது.

அத்தகைய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இப்படி மீண்டும், பழைய கருப்பனாக்குவதுபோல, தனியார் மயமாக்கினால் அது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் ஆகும்!

தற்போதுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தொண்டு பணி- என்பது வெறும் லாப நோக்கத்தை மட்டும் பாராமல், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குச் சேவை என்ற அளவில் செய்கைகள் தனியார் மயமாக்கப்பட பரிந்துரை செய்வதில் முழு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

லாபம் பெறுவதாகத்தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. அப்படி நட்டம் வருவதாக வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், மக்களுக்கு சேவை என்பதில் வெறும் வியாபார லாப நட்ட நோக்கு மட்டும் தானா?

பொது அமைப்புகளை அரசு நடத்துகையில் (Public Utility undertakings) அதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது வாய்ப்பற்றவர்களுக்குக் கிடைக்கும் சேவையின் மதிப்பு (Value of Service); அதை விடுத்து அதன் செலவு (Cost of Service)மட்டும் கணக்கிட்டுப் பார்ப்பது தனியார் கொள்ளை லாப வியாபார நோக்கம் ஆகும்.

இதை உரிமையுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களிடம் தான் மக்கள் எதிர்பார்க்க முடியும் உரிமையுடன் கேட்க முடியும்.

இதைத் தனியாரிடம் கேட்க முடியாது. தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் தற்போது போதிய மூலதனம் இல்லை என்று ஒரு கருத்து பரிந்துரையாக (Financial Adequacy) என்பது ஒரு சாக்குப் போக்கே தவிர, ஒரு நாயைக் கல்லால் அடிப்பதற்கு முன் அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று பட்டம் சூட்டுவதுபோன்ற ஒரு திட்டமிட்ட செய லாகும். தற்போதுள்ள மூலதனம்பற்றி பெரும் அளவில் பஞ்சமோ, பற்றாக்குறையோ இல்லை என்பதோடு, ரிசர்வ் ஃபண்டு போன்றவைகளும் உள்ளனவே!

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் முன்பு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட் டதே அவை அரசு வங்கிகளாலா? தனியார் வங்கிகளாலா?

அது மட்டுமா? விஜயா பேங்க், ஆந்திரா பேங்க் போன்ற சிறிய வங்கிகள்கூட பொதுத்துறை வங்கிகளோடு இணைந்துள்ளனவே அதனால் லாபமா? நட்டமா?

ஆகாத மனைவி கை பட்டாலும் குற்றம்; கால் பட்டாலும் குற்றம் என்ற பழமொழி போல், இப்படி முன் கூட்டியே முடிவு செய்து தனியாருக்கு, பெரு முதலாளி களுக்குக் கதவு திறக்க இப்படி ஒரு பரிந்துரையா?

பொருளாதாரக் கண்ணோட்டம் ஒருபுறம் இருந்தாலும், சமூகநீதி அடிப்படையில் பொதுத்துறை வங்கிகள் வந்த பிறகுதான் இடஒதுக்கீடு அமுலுக்கு வந்தது.

இந்த நிலை, தனியார் மயமாக்கப்பட்டால் நிச்சயம் இடஒதுக்கீடு ஒழிக்கப்படும்;

அதையும் மனதிற் கொண்டே இப்படி ஒரு உயர் (ஜாதி) வர்க்கத்தினரின் சூழ்ச்சித் திட்டமாக இப்படி ஒன்று நாயக் கமிட்டி அறிக்கை மூலம் உருவாகி உள்ளது. இதை வன்மையாக எதிர்க்கிறோம்.

இதனை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போர்க் கொடி தூக்கியிருப்பது 100-க்கு 100 சரியானது; அதனை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.

திராவிடர் கழகம், பொதுத்துறை வங்கிகளை தனியா ருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்க்கும், தேவைப்பட்டால் கிளர்ச்சிகளில் கூட இறங்கத் தயங்காது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பொருளாதாரக் கொள்கையில் மக்களால் தோற்கடிக்கப் பட்ட காங்கிரஸ் அரசின் அதே கொள்கையை நாளை பதவியேற்கவிருக்கும் நரேந்திரமோடியின் பா.ஜ.க. அரசும் செய்தால், அது பழைய கள், புது மொந்தை என்றே ஆகி விடும். நாயக் கமிட்டி அறிக்கையை அலமாரியில் வைத்துப் பூட்டுங்கள் என்றே புதிய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
25.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/80936.html#ixzz32mO31AN2

தமிழ் ஓவியா said...


நாங்கள் விரும்பிய ஆட்சி வந்து விட்டது இந்துத்துவா கல்வியைப் புகட்டுவோம் களத்தில் குதிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.


நாங்கள் விரும்பிய ஆட்சி வந்து விட்டது
இந்துத்துவா கல்வியைப் புகட்டுவோம்

களத்தில் குதிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

புதுடில்லி, மே 25- நாங்கள் விரும்பிய ஆட்சி வந்து விட்டதால் இந்துக் கலாச்சாரக் கல்வி சமஸ் கிருதத்துக்கு முக்கிய இடம் வேதக் கணிதம் இவற் றைப் புகுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ். கிளம்பி விட் டது. இது குறித்து வெளி வந்த செய்திகள் வருமாறு

முழுமையான பலம் கிடைத்துவிட்டது, இனி பாடத்திட்டத்தை மாற்று வோம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரும் கலாச்சாரக் கல்வி எழுச்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான தீனாநாத், பத்ரா டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி விபரம் வருமாறு:

தமிழ் ஓவியா said...


இந்திய கல்வி அமைப் பில் முழுமையான மாற் றம் கொண்டு வருவோம், இதுநாள் வரை ஆங்கி லேயர்கள் கொண்டுவந்த கல்வியைக் கண்மூடித் தனமாக நம் மீது திணித்து விட்டார்கள். தற்போதுள்ள கல்வியினால் இந்துக் கலாச்சாரத்திற்கு அழிவே தவிர எழுச்சி என்றும் கிடையாது, ஆகையால் இந்திய கலாச்சார வழியில் கல்வியில் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள அடிமைக் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவந்து இந்துக்கலாச்சார கல்வி முறையைக் கொண்டுவர கலாச்சார கல்வி எழுச்சி மய்யம் (சிக்ஷா சான்ஸ்கிரித் உதான் நியாஸ்) என்ற ஒன்றை ஆரம்பித்து கடந்த 30 ஆண்டுகளாக போராடி வந்தோம். இதுநாள் வரை இந்துமதக் கலாச்சாரத் திற்கு எதிரான ஆட்சி இருந்தது. ஆனால் இன்று முழுமையாக எங்கள் கரங்களில் இந்திய மக்கள் ஆட்சியைத் தந்துள்ளார் கள். புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து நாட்டை வழிநடத்துங்கள் என்று எங்களுக்கு ஆணையிட் டுள்ளனர். ஆகவே இந்திய தேசியத்தின் எழுச்சிக்கு முதலில் கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். எங்களது இந்தக்கோரிக் கையை பிரதமராக பதவி யேற்றவுடன் நரேந்திர மோடியிடம் நேரில் சென்று வலியுறுத்துவோம் என்று தீனாநாத் பத்ரா கூறினார். அரசியல் மாற்றம் எங் களுக்கு பெரிய ஆறு தலைக் கொடுத்துள்ளது. இதுநாள் வரை நாங்கள் எங்கள் இந்துக் கலாச் சாரத்தை குழந்தைகளுக்கு எப்படிகொண்டு செல்வது என்று திகைத்து நின்றபோது மக்கள் புதிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளனர். இந்துக் கலாச்சாரக் கல்விதான் சரியானது

தமிழ் ஓவியா said...

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும், முக்கியமாக உயர்கல்விக்கு தகுதிபெறும் வயதில் உள்ள பள்ளிமாணவ/மாணவிகள் எதிர்காலத்தில் இந்தியாவை பெரிய மாற் றத்திற்கு கொண்டுவரும் சக்திகள், ஆகவே இவர் களை நாம் நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண் டும். குழந்தைப் பருவத் தில் இருந்தே இந்துக் கலாச் சார கல்விதான் இவர்களின் எதிர்கால வாழ்க்கையை செம்மைப்படுத் தும்.

இந்துக்கலாச்சார கல்வி முறையை விரிவுபடுத்த சிற்றூர்கள், கிராமங்கள் என இந்தியாவில் உள்ள அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஊட்ட அகில பாரதீய சமூக தொண்டு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதில் எல்லா ஊர்களிலும் சென்று பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவ மாண விகள் உட்பட அனை வருக்கும் 3 மாதம் பயிற்சி அளிக்க உள்ளோம். தற்போதைய கல்வி முறையைப் பற்றி பத்ரா கூறியதாவது: தற்போது நாம் கற்கும் கல்விமுறை குருடன் யானையைத் தடவிப் பார்த்து கூறுவது போலாகும், நமது நாடு ஆன்மீக வளமுள்ள நாடு, ஆயிரக்கணக்கான ஆண்டு களாக ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கியதால் தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவை அனைவரும் வியப்புடன் பார்க்கும் வகையில் இருக்கிறது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு இந்துக்கலாச்சாரம் அழிவிற்கு உட்பட்டது. இந்திய மக்கள் பெரு வாரியாக எங்களுக்கு ஆதரவு அளித்து இழந்து போன கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஆணையிட்டுள்ளனர். எங் களுக்கான கடமையைச் செவ்வனே செய்ய சரியான காலம் இதுதான் என்று கூறினார்.

தீனாநாத் பத்ரா இந்தி யக் கல்வி முறையில் இந்துகலாச்சார கல்வி வேண்டும் என்று நீண்ட காலமாகவே போராடி வரு கிறார். வாஜ்பாய் அரசின் போது இவர் சில மாநிலங் களில் கல்வியில் மாற் றத்தை கொண்டுவருவதில் வெற்றியும் பெற்றுவிட் டார். இதனைத்தொடர்ந்து குஜராத் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதுல்பாய் கடோரி கூறுகிறார்

ஜார்கண்ட் மாநிலம் ஹராரிபாக்கில் இந்துக் கலாச்சார கல்வி வளர்ச்சி தலைவர் அதுல் பாய் கடோரி மே 17-ஆம் தேதி 2014 தைனிக் ஜாகரன் இந்தி நாளிதலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் சமஸ்கிரு தமே மூலமொழியாகும், உலகின் முதல் நூலான ரிக்வேதம் சமஸ்கிருந்த மொழியில் தான் எழுதப் பட்டது. ஆன்மீக சக்தி கொண்ட மொழி சமஸ் கிருதம் என்பதால் அதன் புனிதம் இன்றும் பாது காக்கப்பட்டு வருகிறது, ஆனால் ஆங்கிலேயன் நம்மை அடிமைகொண்ட பிறகு அவனது மொழிக்கு நம்மை அடிமையாக்கி னான். ஆகையால் இன்று ஆன்மீக மொழியான நமது சமஸ்கிருதம் பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது, இருக்கும் சில இடங்களி லும் அதற்கு முக்கியத் துவம் கொடுக்கப்படுவ தில்லை. நமது ஆன்மீக மொழியைக் கற்காத காரணத்தால் தான் இன்று நம் நாடு பின்தங்கிய நிலையில் உள்ளது. சமஸ் கிருதமே நமது ஆன்மீக அறிவியல் வாழ்வியல் மொழி. இத்தனை ஆண்டு களாக இருந்த காங்கிரஸ், ஆங்கிலேயர்களின் பினா மிகள் போல் செயல்பட்டு நாட்டை அவர்களுக்கு விற்றுவந்தார்கள். ஆகை யால் தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படமல் இருக்க சமஸ்கிருத மொழியை வளரவிடாமல் தடுத்தார்கள். நாங்கள் கல்வியை சீர மைக்கும் பணியைத்தான் மேற்கொள்கிறோம். சமஸ் கிருத கல்விமூலம் அடை யும் பயன் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தெரிய வரும் புதிய அரசிடம் நாங்கள் கேட்கும் மாற்றம் இதுதான்

1. இந்திய வரலாற்றில் ஆன்மீக மற்றும் புனித மான கலாச்சார மாற்றங் களுடன் கூடிய பாடங் களைச் சேர்த்தல்

2. கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை மய்ய மாகக் கொண்ட கல்வி

2. இந்துக் கலாச்சாரம் கூறும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மய்யமாகக் கொண்ட கல்வி

3. வேதக் கணிதம்

4. பொதுமொழியான சமஸ்கிருதத்தில் கல்வி

5. எந்த ஒரு தலையீடும் இல்லாத தன்னாட்சி கல்வி எங்களின் இந்த மாற்றங் களை புதிதாக பதவியேற் கும் நரேந்திரமோடி நிறைவேற்றுவார்.

இது எங்களுக்கான கோரிக் கைகள் அல்ல, இந்திய நாட்டின் வளமான எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு நமது ரிஷிகளும் முனிவர்களும் கண்ட கனவு.

இந்த கனவை நரேந் திரமோடி அவர்கள் நிறை வேற்றுவார்கள் என்று நாங்கள் உறுதிபடக் கூறுகி றோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/80933.html#ixzz32mOLk525

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?குல தெய்வ வழி பாட்டுடன் முருகப் பெரு மானை செவ்வாய் கிழமைகளில் அரளிப்பூ வைத்து வழிபட்டால் உங்கள் கடன் தீரும் என்று ஓர் ஏடு தெரிவித் துள்ளது.

தனி நபர் கடன் தீர இந்த எளிய வழியென்றால் இந்தியாவின் கடன் சுமை தீர பரங்கிப் பூ வைத்துப் படைக்கலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/80935.html#ixzz32mOYYeGk

தமிழ் ஓவியா said...


நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா?


பாகிஸ்தான் அதிபரோடு மன்மோகன் சிங் பிரியாணி சாப்பிடலமா என மோடி கேட்டது அப்போ; தேர்தலுக்கு முன்.

பாகிஸ்தான் அதிபரோடு நான் பிரியாணி சாப்பிடப் போறேன்; அவரோடு, ராஜபக்சேவும் சேர்ந்துக்குவார் என மோடி சொல்றது இப்போ; தேர்தலுக்குப் பின்.

ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தைரியத்தில் நடக்கிறது.

அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார்.

இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது.

இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று மோடி குற்றம் சாட்டினார்.

இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல; சாட்சாத் நம்ம நரேந்திர பாய் மோடி தான்.
எங்கே?

நம்மூர் திருச்சியில் தான்.

இப்படி ஆக்ரோஷமாக, விஜயகாந்த் திரைப்படத்தில் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை உருட்டிப், பேசுவாரே, அதை மிஞ்சும் அளவிற்குப் பேசினார் மோடி.

உடனே கூடியிருந்த மக்கள் பலத்த கையொலி எழுப்பினார்கள்.

ஆகா, பார், நாம் எதிர்பார்த்த ஹீரோ வந்துவிட்டார் என்று.

ஆனால், அதெல்லாம் தேர்தல் நேரத்தில் பேசும் பேச்சு என அந்த மக்களுக்கும் தெரியவில்லை; மோடிக்கு காவடி தூக்கிய நம்மூர் வைகோ அண்ட் கோவினர்க்கும் புரியவில்லை.

இப்போது வெற்றி பெற்றதும் என்ன ஆனது?

அதே பாகிஸ்தான் நவாஸ் ஷெரிப், அழைக்கப் படுகிறார்; இலங்கையின் ராஜபக்சேவிற்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

இப்போது என்ன காரணம் பாஜகவால் சொல்லப்படுகிறது. அண்டை நாடுகளுடன் நட்பு உருவாக்கிட மோடி மகத்தான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதை அரசியல் ஆக்கக்கூடாது என்கிறார்கள்.

ஏனய்யா இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கும்போது நவாஸ் ஷெரிப்போடு மன்மோகன்சிங் சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டீரே எனக் கேட்டால், அது அப்போ, தேர்தலுக்கு முன்.

இப்ப, நீங்க நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டால், இது இப்போ, தேர்தலுக்குப் பின் என்கிறார்கள் மோடி பரிவாரத்தினர்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/80930.html#ixzz32mOx2PPA

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது. - (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/80993.html#ixzz32sHT0q12

தமிழ் ஓவியா said...


பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்


- குடந்தை கருணா

மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருவதற்கு தமிழ் நாட்டிலும், நவாஸ் ஷெரிப் இந்தியா வருவதற்கு சிவ சேனாவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளுடன் நட்பு வளர்வதற்கு மோடி எடுத்துள்ள சிறப்பான முயற்சி இது என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்.

இதே அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தையை மன்மோகன் சிங் அரசு எடுத்தபோது அதை மோடியும், பாஜகவினரும் கடுமையாகச் சாடினர். இப்போது வெற்றி பெற்றதும், நட்பு, உறவு, அண்டை நாடு என மோடி பரிவாரங்கள் பேசுகின்றன.

தேர்தல் நேரத்தில் மோடி எப்படி எல்லாம் பேசினார்? நான் வெற்றி பெற்றால் மாநில அரசுக்கு உரிய மதிப்பு அளிப்பேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை அழைப்பதற்கு முன், தமிழக அரசோடு கலந்து பேசியிருக்க வேண் டாமா?

ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்கு காரணமான ராஜபக்சே மீது போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என பல நாடுகள் முயன்று வரும் நிலையில், தமிழக மக்கள் அதற்காக வலியுறுத்தும் நிலையில், ராஜபக் சேவை அழைக்க வேண்டிய அவசி யம் என்ன? குஜராத்தை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள், வேண்டாம், ஒரு நூறு பேர் பாகிஸ்தானில் தாக்கப்பட்டிருந்தால், மோடியின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்குமா? அதெல்லாம் இருக்கட்டும். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய மோடி, வெற்றி பெற்றதும் சொன்னாரே, சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைப்பதற்கு முன், அவரது கூட்டணியில் இருபத்தேழு கட்சிகள் இருக்கின்றனவே, அதில் தொடர் புடைய மாநிலக் கட்சிகளோடு ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமா? வேண் டாமா? தொடர்புடைய மாநிலக் கட்சி களோடும் பேசவில்லை; தொடர் புடைய மாநில அரசோடும் பேச வில்லை.

அப்படி என்றால் இப் போது அமைய உள்ள ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அல்ல; மாறாக, இது அவர்கள் முதலில் சொன்னதுபோல், மோடி சர்க்கார் தான் என்பதை, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல; கூட்டணியில் உள்ள கட்சிகளும் புரிந்து கொள்ள வேண் டும். பதவி ஏற்கும் விழாவிற்கு சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைக் கும் வழக்கம் ஏதும் இதற்கு முன்னர் எப்போதும் கிடையாது. இப்போது மோடி அரசால் ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இந்த அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது என்றால், இதன் நோக்கம், பாஜகவின் பெரும்பான் மையினவாதத்தை அண்டை நாடு களுக்கு காட்டுவதற்குத்தான் எனக் கருத வேண்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/81003.html#ixzz32sHauayB

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம்பரியம் நமது வாழ்க்கை நடைமுறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. சர்க்கரையின் அளவை கணக் கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.

அறிகுறிகள்: அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

ரத்தபரிசோதனை: பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தக்குழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரால், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற் கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIEsRbH

தமிழ் ஓவியா said...

குடற்புண்ணை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்

குடற்புண் அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலி வுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை செரிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்படலாம். சிகிச்சை பின்வருமாறு:

தண்ணீர்: போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.

அருகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதிய சாப்பாடு. இதன்மூலம் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.

வாழைத்தண்டு: நோயாளிகளுக்கு பொதுவாக சிறு நீரகக்கல் அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.

கொத்தமல்லி: இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வல்லாரை: மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIOBdmf

தமிழ் ஓவியா said...

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் பார்லி

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி. குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது. இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது. பார்லியில் பீட்டாக்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட் ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டாக்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.

அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்சினைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIVBdx4

தமிழ் ஓவியா said...

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

* சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.

* சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.

* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.

* சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்.

* சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.

* சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும். * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIb4Pou

தமிழ் ஓவியா said...


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?

ஊடகங்களுக்கு அச்சுதானந்தன் கேள்வி

திருச்சூர்,மே 26- ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப் படும் ஊடகங்கள், கார்ப் பரேட்மயமாக்கலின் ஆர வாரங்களுக்கு இடையே தங்களின் முகத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

திருச்சூரில் சீனியர் ஜெர் னலிஸ்ட் ஃபாரம் (மூத்த பத்திரிகையாளர்கள் சங் கம்) மாநில மாநாட்டை யொட்டி ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சி யடைகிறதா? என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கிற்கு அனுப்பிய துவக்க உரையில் அச்சுதானந்தன் மேலும் கூறியதாவது: சர்வதேச-தேசிய-மாநில சூழ்நிலைமைகளில் ஊடக அமைப்புகள் முதலாளித் துவ-கார்ப்பரேட் நலன் களுக்கு அடிபணிந்து செயல் படுகின்ற நிலைமை உள் ளது நாட்டில் உள்ள முக் கியமான சுமார் 40 பத்திரி கைகளும் அவற்றின் துணை வெளியீடுகளும் டாடா, பிர்லா மற்றும் பெனெட், கோல்மேன் உள்ளிட்ட நான்கைந்து பெரும் ஏக போக முதலாளிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. கேரளத்திலும் பிரபல பத் திரிகைகள் இவர்களின் நலன்களைத்தான் பாதுகாக் கின்றன.

சமூக வாழ்க்கையில் நிலவும் அநீதிகளை கண்ட றியவும், அவற்றை அகற்றி வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தவும், மாற்றி அமைக் கவும் ஊடகங்கள் கட மைப்பட்டவையாகும். ஆனால், ஊடகங்கள் இன்று பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும் பிரை வேட் ட்ரீட்ஜெர்ன லிசம் (தனியார் அணுகி தனக்கா னதை சாதித்துக் கொள்ளும் இதழியல்) என்றும் குற்றச் சாட்டுக்கு ஆளாகின்றன. திருவனந்தபுரத்தில் அர சின் குடியிருப்புத்திட்டத் தில் வீடு வழங்கப்பட்ட 54 பத்திரிகையாளர்கள் ஆண் டுகள் பலவாகியும் ஒரு பைசாக் கூட கட்டவில்லை என்றுசில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளி யானது.

எல்லாவற்றையும் விமர்சிக்கின்ற நான்காவது தூண்என்று அழைக்கப் படும் பத்திரிகைகளை யார் விமர்சிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளத் தில் இரண்டு பிரபல பத்தி ரிகைகளுக்கு, மற்ற பத்திரி கைகளுக்கு வழங்கப்படு வதைவிட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தில் அரசு விளம்பரம் அளித்தது என்று தகவல் உரிமை சட் டத்தின்படி கிடைத்த தக வல் கூறுகிறது. ஊடகங் களின் பிரச்சாரங்கள் மூலம் நரேந்திரமோடி பாரதத்தின் ரட்சகர் என்று வர்ணிக்கப் பட்டார். இதுபற்றி ஊட கங்கள் மேலும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

குஜராத் இனப்படு கொலையின் பேரில் ஹிட் லருடன் ஒப்பிடும் அள வுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடியை ஊட கங்கள் எளிமையானவர் என்றும் இரக்கம் உள்ளவர் என்றும் ஏழைகளின் காப் பாளர் என்றும் வர்ணித்தன. ஊடகங்களையும் ஊடகங் களின் போக்குகளையும் விமர்சனரீதியாக பார்க் கின்ற ஒரு சமூகத்தை உரு வாக்கவேண்டும். அதுதான் ஊடகங்களின் நம்பகத்தன் மையை மீட்டெடுப்பதற் கான முக்கியமான முதல் படியாகும். இவ்வாறு அதில் அச்சு தானந்தன் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81019.html#ixzz32sItyzJm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கோலார் தங்கவயல், மே 27- கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிக்பள்ளாப்பூர் அருகே இந்த விபத்து நடந்தது.

சிக்பள்ளாப்பூர் தாலுகா, ஹலயூர் கிராஸ் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 36). இவருடைய மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு நயனா (11), மோனிஷா (8) என்ற 2 மகள்கள் உண்டு. 4 பேரும் ஒரு காரில் சிக்பள் ளாப்பூரில் உள்ள நந்தி கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்று கொண்டு இருந்தனர். காரை ஜெய ராம் ஓட்டிச் சென்றார்.

தேவிசெட்டி ஹள்ளி கிராஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப் பளம் போல நொறுங்கி யது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினார்கள்.

இந்த விபத்தில் ஜெய ராம், அம்பிகா, மோனிஷா ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நயனா படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தவுடன் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சிக்பள் ளாப்பூர் புறநகர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டு நரை வலைவீசி தேடி வரு கிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/81060.html#ixzz32yJW6uYo

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடி கூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

_ (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/81061.html#ixzz32yJjPoaX

தமிழ் ஓவியா said...


திருவாரூர் மாநாடுதிருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர்கள் எழுச்சி மாநாடு நேற்று (26.5.2014) மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், கொள்கை முழக்கங்களோடு பேரணி முக்கியமானதாக அமைந்திருந்தது. பெரும்பாலும் திருவாரூர், நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய சங்கத் தொழி லாளர்கள் இருபாலரும் பங்கு ஏற்றனர் என்பதே உண்மையாகும்.

திராவிடர் கழகப் பேரணி என்றால் ஏதோ கூட்டம் கூட்டமாகச் செல்லும் முறையில் அது அமைவதில்லை.

முறையாக அணிவகுப்பது, மாநாட்டின் நோக் கத்தை வெளிப்படுத்தும் ஒலி முழக்கங்கள் (அச்சிட்டு வழங்கப்படும்) அதில் முக்கியமாக இடம் பெறும்.

இரண்டாவதாக, மூடநம்பிக்கை ஒழிப்புக் கூர்மையுடையதாக இருக்கும்; படித்தவர்களே மூடநம்பிக்கைக் குழிக்குள் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கும் மக்கள் நிறைந்த நாட்டில், மூடநம்பிக்கையை எதிர்க்கும், மக்களுக்கு உணர்த்தும் அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இது திராவிடர் கழகத்திற்கே உரித்தான சிறப்புத் தகுதியாகும்.

பொது மக்கள் மத்தியில் இத்தகு பேரணியும் மூடநம்பிக்கை ஒழிப்பு அம்சங்களும் இடம் பெறும் போது பொது மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியது மட்டுமல்ல; சிந்திக்கத் தூண்டுபவையாகவும் அமை கின்றன.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தச் ஷரத்தினைத் துல்லியமாக நூற்றுக்கு நூறு செவ்வனே செயல் படுத்துவது திராவிடர் கழகமே! சிறப்பாக திராவிடர் கழகம் நடத்தும் பேரணியில் அவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் (பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல், அலகு குத்திக் கார் இழுத்தல், கூரிய அரிவாள் மீது ஏறி நிற்றல் முதலியன) மிக முக்கியமானவையாகும்.

மாநாட்டைப் பொறுத்தவரை, தீர்மானங்கள் எப்பொழுதும் முக்கியமானதாக அமையும், திருவா ரூரில் நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் அந்த வகையில் இந்தக் கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

விவசாயத்தைத் தொழிலாக அறிவித்தல், காவிரி நதி நீர் பங்கீடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசியல் கண்ணோட்டமின்றி மானியங்கள், நிவாரணங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்தல், பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளி லிருந்து பாதுகாத்தல், விவசாயத்தின் துணைத் தொழிலான ஆடு - மாடுகள் பராமரிப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, விவசாயிகளுக்கு முதியோர் காப்பகங்கள், ஆண் பெண்களுக்கிடையே ஊதிய வேறுபாடு நீக்கம், தென்னக நதிகள் இணைப்பு, விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்தல் ஆகிய அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் மூன்றில் இரு பகுதியினரின் தொழில் விவசாயமாக இருக்கும் ஒரு நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!

ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலேயே வளர்ந்து, கடனிலேயே மாள்கிறான் என்பது தொடர் மொழியாகவே இருந்து வருகிறது.

விவசாயத்தில் கூட அந்நியத் தலையீடு என்கிற அளவுக்குக் கேவலமாகி விட்டது. பாரம்பரியமாகப் பராமரிக்கப்பட்டு வந்த விதை நெல்லுக்குப் பதிலாக மலட்டு விதைகள் அறிமுகப் படுத்தப்பட்ட கொடுமை எல்லாம் உண்டு.

இவற்றை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது மீண்டும் அந்த மலட்டு விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும் - உலகப் பொருளாதாரச் சூழலில் நாடுகள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட தீய விளைவுகளில் இதுவும் ஒன்று.

சில்லறை வர்த்தகத்தில்கூட அந்நிய முதலீடு என்று வருகிறபோது உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள் களுக்கான கட்டுபடியாகும் விலைகூடக் கிடைப்ப தில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழிலாக ஒதுக்கப்பட்டது இந்திய விவசாயியே!

காவிரி டெல்டா பகுதியைப் பொறுத்தவரை விவசாயத்தைத் தவிர வேறு எந்தவிதமான தொழில் வசதிகளும் கிடையாது. விவசாயத்தைத் தவிர வேலை வாய்ப்பு என்பது அரிதாகும். இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் தேவையான தொழிற்சாலைகளை உருவாக்கி, விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்ய வேண்டும் என்பதே திருவாரூர் மாநாட்டுத்தீர்மானம் அடிநாத மாகக் கொண்டிருக்கிறது.

மீன் பிடி தொழிலுக்குச் செல்லாத கால கட்டத்தில் அத்தொழிலாளிகளுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படுகிறதே - அதே கண்ணோட்டம் விவசாயத் தொழிலுக்கும் தேவைப்படுகிறது. திராவிடர் விவ சாயிகள் தொழிலாளர் எழுச்சி மாநாடு இத்திசையில் பல்வேறு சிந்தனைகளைத் தட்டி எழுப்பியுள்ளது என்பதில் அய்யமில்லை.

மாநாட்டு வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனை வருக்கும் பாராட்டுக்கள்.

Read more: http://viduthalai.in/page-2/81062.html#ixzz32yJrtlPP

தமிழ் ஓவியா said...

திருவாரூர் - திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாடு - அரிய கருத்துகள் பொழிவு

திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு திருவாரூர் கீழவீதியில் சுயமரியாதைச் சுடரொளிகள் குடவாசல் வீ.கல்யாணி, நூற்றாண்டு கண்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் ஆகியோர் நினைவரங்கில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு திராவிடர் கழக மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி தலைமை வகித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக விவசாயிகள் பாழ்பட்டுப் போன நிலை! 2012 இல் கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடன்களை அடைக்க முடியவில்லை. விவசாயமே செய்ய முடியாத நிலையில், கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்த முடியும். 2006 இல் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது 7000 கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்தார். அதுபோல, இந்த அரசும் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளர் ந.சுரேசன், தலைவரை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் கா.வீரையன், திருவாரூர் நகரக் கழகச் செயலாளர் கு.காமராஜ் ஆகியோர் தலைவரை வழிமொழிந்தனர்.

வீ.மோகன் வரவேற்புரை

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மிக முக்கியமான விவசாயிகள் மாநாட்டினை திருவாரூரில் நடத்திட வாய்ப்பு அளித்த கழகத் தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

திராவிடர் கழகக் கொடியை திருவாரூர் மாவட்ட மாணவரணி தலைவர் சீ.மோனிஷா ஏற்றினார்.

ராசகிரி கோ.தங்கராசு

மாநாட்டினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் உரையாற்றுகையில், விவசாயத் தொழிலையே செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்ட இந்த நிலையில், விவசாய தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன் உரையாற்றுகையில், காவிரி டெல்டா பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன்

60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்க அமைப்புகளைத் தொடங்கி விவசாயிகள் மத்தியில் தன்மான உரிமையையும், தொழி லாளர்களின் உரிமையையும் நிலை நாட்டியது திராவிடர் கழகமே; 60-க்கு 40 வாரம் வருவதற்குக் குரல் கொடுத்தது திராவிடர் கழகமே - உடைமையாளர் நிலத்தை விற்றால், குத்தகைதாரர்களுக்கு மூன்றில் ஒரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்ட அமைப்பு திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் என்று எடுத்துரைத்தார்.

பூண்டி கலைவாணன்

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் தமது உரையில், ஒரு சரியான காலகட்டத்தில் இந்த மாநாட்டை திராவிடர் கழகத் தலைவர் கூட்டியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மன்னார் குடியை அடுத்த வடுவூரில் விவசாய தொழிலில் ஈடுபட்ட இரு பார்ப்பனர்கள், சங்கராச்சாரி யாருக்குக் காணிக்கை அளிக்க முன்வந்தபோது, வருணா சிரமத்துக்கு விரோதமாகவும், மனுதர்ம சாஸ்திரத்திற்கு விரோதமாகவும் பாவத் தொழிலான விவசாயத்தைச் செய்த காரணத்தால், அந்தப் பார்ப்பனர்களின் காணிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று சங்கராச்சாரியார் சொன்னதை நினைவூட்டி னார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு.

விவசாயத் தொழிலை செய்யும் மக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், அவர்கள் அவமதிக் கப்படுகிறார்கள். இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய ஒரு கவிதையை நினைவூட்டினார்.

முழங்கால் சேற்றினில் முக்கி விதைத்தவன்
மூடச் சோதரன் பள்ளப்பயல் - அதை
மூக்குக்கும் நாக்குக்கும் தண்ணீர்க் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
என்ற பாடலைப் பொருத்தமாக நினைவூட்டினார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
விவசாயத்தைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்தத் தொழி லுக்கு அரசு ஒதுக்கும் தொகையோ ஒரே ஒரு சதவிகிதம் தான். தொழில் வளர்ச்சி என்று வருகிறபோது 8 சதவிகிதம் என்பார்கள்; விவசாயத் துறை வளர்ச்சி என்று வரும் பொழுது வெறும் 1.8 சதவிகிதம் என்று சொல்லுகிறார்கள். இதிலிருந்தே விவசாயம் இந்தியாவில் எந்த நிலைக்கு ஆளாக்கப்பட் டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக விலைவாசி உயர்வு என்றால் எதைப் பொறுத்தது?

உணவுப் பொருள்களின் விலையை வைத்துத்தானே பெரும்பாலும் அவ்வாறு கூறப்படுகிறது. இந்த நிலையில், விவசாயத்துக்கும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது மாநில - மத்திய அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டார்.


Read more: http://viduthalai.in/page-3/81077.html#ixzz32yKDVQbL

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர்கள் பட்டியல்: துறைகள் அதிகாரபூர்வ அறிவிப்பு


புதுடில்லி, மே 27- மத்திய அமைச்சர்கள் இலாக் காக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:- பிரதமர் நரேந்திர மோடி அணு சக்தி, விண் வெளி, பணியாளர்நலத்துறை, பென்ஷன், பணி யாளர் குறை தீர்ப்பு மற்றும் கொள்கை முடிவுகள்.

1. ராஜ்நாத்சிங் உள் துறை.

2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.

3. அருண்ஜேட்லி - நிதி மற்றும் ராணுவத்துறை, நிறுவன விவகாரம்.

4. வெங்கையா நாயுடு நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரம்.

5. நிதின்கட்காரி -சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை.
6. சதானந்த கவுடா - ரயில்வே
7. உமாபாரதி - நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை சுத்திகரிப்பு
8. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் விவகாரம்.
9. கோபிநாத் முண்டே -ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல்.
10. ராம்விலாஸ் பஸ்வான் - உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன்.
11. கல்ராஜ் மிஸ்ரா - நடுத்தர, சிறு குறு தொழில்.
12.மேனகாகாந்தி - பெண்கள், குழந்தைகள் நலம்.
13. அனந்தகுமார் -உரம் மற்றும் ரசாயணம்
14. ரவிசங்கர் பிரசாத் - தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதி.
15. அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து
16. ஆனந்த் கீதே - தொழில் துறை மற்றும் பொது நிறுவனம்.
17. ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்துதல்.
18. நரேந்திர சிங் தோமர் - சுரங்கம் மற்றும் இரும்புத் துறை தொழிலாளர் வேலை வாய்ப்பு.
19. ஜுவல் ஓரம் - மலை வாழ் மக்கள் நலத்துறை
20. ராதாமோகன்சிங் -விவசாயம்
21. தவாரி சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரம்.
22. ஸ்மிருதி இரானி - மனிதவளம் மேம்பாடு
23. ஹர்ஷ் வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்.

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

1. தளபதி வி.கே.சிங் -வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.

2. ராவ் இந்தர்ஜித்சிங் - திட்டம் (தனி பொறுப்பு), புள்ளியல், திட்ட அமலாக்கம், ராணுவம்.

3. சந்தோஷ்குமார் கங்வார் - ஜவுளி, நீர் வளம், நதி மேம் பாடு, கங்கை சுத்திகரிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்

4. சிறீபாத் எஸ்சோ நாயக் - சுற்றுலா மற்றும் கலாச்சாரம்.

5. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.

6. சர்பனந்த சோனாவால் - பட்டு ஜவுளி மேம்பாடு, தொழில் முனைவோர் நலம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு.

7. பிரகாஷ் ஜவடேகர் தகவல் ஒளிபரப்பு சுற்றுச் சூழல், வனத்துறை, பருவ நிலை மாற்றம் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரம்.

8. பியூஸ் கோயல் - மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. 9. ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பென்சன் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு, விண் வெளி மற்றும் அணுசக்தி.

10. நிர்மலா சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழில் (தனி பொறுப்பு) நிதி, நிறுவன விவகாரம்.

இணையமைச்சர்கள்

1. சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து

2. மனோஜ் சின்கா - ரயில்வே

3. நிகல் சந்த் - ரசாயணம் மற்றும் உரம்

4. உபேந்திர குஷ்வாகா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், குடிநீர்.

5. பொன்.ராதாகிருஷ்ணன் - கனரக தொழில் மற்றும் பொதுத் துறை, அரசுத் துறை தொழில்கள்.

6. கிரண் ரிஜ்ஜு - உள் துறை

7. கிரிஷன் பால்குஜ்ஜார் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்.

8. சஞ்சீவ்குமார் பல்யாண் - வேளாண், உணவு பதப்படுத்துதல் தொழில்.

9. மன்சுக்பாய் - மலைவாழ் மக்கள் நலம்.

10. ராவ் சாகிப் தாதாராவ் தன்வே - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது

விநியோகம்.

11. விஷ்ணு தேவ் சாய் - சுரங்கம், இரும்பு, தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு.

12. சுதர்சன் பகத் - சமூக நீதி மற்றும் அதிகாரம்.

Read more: http://viduthalai.in/page-3/81079.html#ixzz32yKfs2uU

தமிழ் ஓவியா said...


நீக்கம்-சேர்ப்புக்குப்பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு


சென்னை, மே 27- மூன்று பேர் மீண்டும் சேர்க்கப்பட் டிருப்பது, அமைச்சர் கே.பி. முனுசாமி நீக்கப்பட்டிருப் பது என சில மாற்றங்கள் செய்யப்பட்ட பின், புதிய தமிழக அமைச்சரவைப் பட் டியல் வெளியிடப்பட்டுள் ளது.

அமைச்சரவை பட்டி யல் குறித்த உத்தரவை தலை மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட் டார். அதன் விவரம்: (பெய ரும், அவர்கள் வகித்து வரும் துறைகளும்)

பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா-பொதுத்துறை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பொது நிர் வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள் துறை. ஓ.பன்னீர்செல்வம்-நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர் தல், பொதுப்பணித் துறை)

நத்தம் ஆர்.விஸ்வநாதன்- மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்-வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனி சாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழி லாளர் நலத் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை.

பி.பழனியப்பன்-உயர் கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட் டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை.

வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

வி.மூர்த்தி-பால்வளத் துறை.

எம்.சி.சம்பத்-வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ் ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங் கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத் தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணி யன்-தகவல் தொழில் நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வரு வாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங் கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட் டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

சி.விஜயபாஸ்கர்-சுகா தாரத் துறை.

Read more: http://viduthalai.in/page-5/81041.html#ixzz32yKxi3w7

தமிழ் ஓவியா said...


நலிவடைந்த விவசாயம்


விவசாயம் நலிந்ததா? நலிவடையச் செய்யப் பட்டதா? என்பது முக்கிய வினாவாகும்.

நாட்டில் 69 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 63 சதவிகித மக்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆவார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் ஒரு தொழிலாகக்கூட அங்கீகரிக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை!

திருவாரூரில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டின் முதல் தீர்மானமே இதுகுறித்ததுதான். விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவித்திடுக என்பதுதான்;

விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது என்பது எத்தகைய அவலம்!

அதன் விளைவு விவசாயத் தொழிலைவிட்டு கிட்டத் தட்ட 77 லட்சம் மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட் டனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் விவசாயிகள் இத்தொழிலை விட்டு விலகிச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாட்டின் உற்பத்தியில் 30 சதவிகிதம் விவசாயத் துறையில் கிடைப்பவையாகும்.

அத்தகைய துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை, 90-களில் 6 சதவிகிதமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பேயி தலை மையில் அமைந்தபோது அது வெறும் 1.3 சதவிகிதமாக வீழ்ச்சியுற்றது.

கிராமங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் 11 சதவிகிதம்தான். விவசாயிகள் வாங்கும் பல்நோக்கு டிராக்டருக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 12 முதல் 16 சதவிகிதமாகும். ஆனால், பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் வட்டியோ வெறும் 7 சதவிகிதம்தான்.

ஏழை விவசாயிகள் வாங்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்திட கடும் கெடுபிடிகள்! ஆனால், பெரும் பண முதலைகளுக்கு வழங்கப்பட்ட கடனோ கோடானு கோடியாகும். அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்யாமல் வாராக் கடன் என்ற முறையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.1.23 லட்சம் கோடியாகும்.

விஜய் மல்லையா நடத்தும் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் நட்டப்பட்டது என்றால், அதனைத் தூக்கி நிறுத்திட மத்திய அரசும், அரசு வங்கிகளும் ஓடோடி வருகின்றன. வங்கிகளுக்கு மட்டும் மல்லையா வைத்துள்ள கடன் பாக்கித் தொகை ரூ.7524 கோடியாம்!

ஒரு காலகட்டத்தில் (1992-1993) நாட்டின் மொத்த உற்பத்தியில் 41 சதவிகிதமாக இருந்த விவசாய தொழில் 18 சதவிகிதமாக படிப்படியாக பெரும் வீழ்ச்சியை அடைந்துவிட்டது.

உலகில் பட்டினிக் குறியீட்டில் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 66 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக வங்கி தரும் புள்ளி விவரப்படி 37 சதவிகித இந்தி யர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உழலுகின்றனர். உலகில் எடை குறைந்த குழந்தைகளில் 49 சதவிகிதமும், ஊட்டச் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டதில் 34 சத விகிதமும், உலகில் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் என்ற வரிசையில் 46 சதவிகிதமும் இந்தியாவிற்கே சொந்தமாகும்.

தமிழ் ஓவியா said...


இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய விவசாய தொழில் உரிய முறையில் கவனிக்கப்படாமை தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முக்கியமான பரிந்துரைகளை வெளியிட்டதுண்டு.

கணபதி பிள்ளை ஆணையம், கார்த்திகேயன் தலை மையிலான ஆணையம், மணி தலைமையிலான குழு, திரவியம் குழு, அரிபாஸ்கர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

1997 ஆகஸ்டு 27 இல் அய்.ஏ.எஸ். அதிகாரி - நில சீர்திருத்த ஆணையர் பெ.கோலப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு (தி.மு.க. ஆட்சியில்) நியமிக்கப்பட் டது. பலனுள்ள பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன.

திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் பெரும் பாலும் அவற்றை மய்யப்படுத்தியுள்ளன.

முப்போகம் விளைந்த கழனிகள் எல்லாம் வெறிச் சோடி கிடக்கின்றன. விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வேலை கிடைக்காத மக்கள் நகர்ப்புறங்களுக்கு நகர்கின்றனர். கடன் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் வீழ்ச்சியுற்ற விவசாயத் தொழிலை தூக்கி நிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

இத்தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மக்கள் ஆவார்கள். விவசாயத்தைத் தவிர வேறு தொழிலை அறியாதவர்கள்.

அரசு என்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜீவாதார தொழில்மீதும், அதில் ஈடுபடும் மக்கள் மீதும் தானே அக்கறை செலுத்தவேண்டும்.

மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இத்துறை யில் அதன் கவனம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை; குஜராத்தைப் பொறுத்தவரை மோடி ஆட்சியில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதுதான் உண்மை.

மாநில அளவில் வளர்ச்சி வளர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கலாம். ஆனால், 123 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஏமாற்றிட முடியாது.

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/81106.html#ixzz333wlmd5o

தமிழ் ஓவியா said...


வடமாநிலத்தவர்களும் - உயர்ஜாதியினரும் நிரம்பி வழியும் மத்திய அமைச்சரவை

புதுடில்லி, மே 28- மத்திய அமைச்சரவையில் வட மாநிலங்களில் இருந்துதான் அதிகம் பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்கள். தென்மாநிலங்களில் இருந்து 6 பேருக்கே அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்கள் கிடைத்தன.

தொடக்க காலத்தில், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாது என்றும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறின.
பின்னர்தான் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவில் ஆதரவு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில், பாரதீய ஜனதாவே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்குக் பெரும்பான்மையைப் பெற்றது.

தனித்தே பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளையும் அமைச்சரவையில் நரேந்திரமோடி இணைத்துள்ளார்.

அந்த வகையில் அகாலிதளம், லோக் ஜனசக்தி, சிவசேனா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர் களுக்கே அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உ.பி. முதலிடம் வகிக்கிறது. இந்த மாநிலத் தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உண்டு. இதில் 71 தொகுதிகளைப் பா.ஜ.க. வென்றது.
அதனால்தான் அந்த மாநிலத்திற்கு லாட்டரி பரிசு! அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 8 அமைச்சர் களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். ராஜ்நாத்சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா மற்றும் மேனகா காந்தி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் வி.கே.சிங், சந்தோஷ்குமார் கங்வார், மனோஜ் சின்கா மற்றும் சஞ்சீவ் பலியான் ஆகியோர் துணை அமைச்சர்கள் ஆவர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து 27 பேர் வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்திற்கு 4 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

பிகார் மாநிலத்தில் இருந்து பா.ஜ.க. கூட்டணிக்கு 23 இடங்கள் கிடைத்தன. அந்த

மாநிலத்திற்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

மராட்டிய மாநிலத்தில் 42 தொகுதிகளைப் பா.ஜ.க. கூட்டணி வென்றது. இந்த மாநிலம் 3 கேபினட் உள்பட 6 அமைச்சர்களைப் பெற்றுள்ளது.

ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா முழு அளவு வெற்றியை பெற்றது. ஆனால் இந்த மாநிலத்திற்கு ஒரே யொரு துணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
தென் மாநிலங்களில்...

தென்மாநிலங்களைப் பொறுத்தவரை 6 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் வெங் கையா நாயுடு (ஆந்திரா), சதானந்த கவுடா (கர்நாடகா), பொன்.ராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு) ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த ஸ்மிரிதி இரானிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (இவர் தேர்தலில் தோற்றவர்).

அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்ஜெட்லியும் முக்கிய அமைச்சர் பதவியில் இடம்பெற்றார்.

கேபினட்டில் உயர்ஜாதியினர்....

மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் ஜாதியினர்.
என்னென்ன ஜாதியினர்? பார்ப்பனர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசி யர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதி யினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸும் கேபினட்டில் இடம்பெற்றுள்ளனர்.

எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட் டோர்; இருவர் தலித்துகள்; ஒருவர் பழங்குடி இனத்தவர்.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10:

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் களில் 5 பேர் உயர் ஜாதியினர்; 4 பேர் இதர பிற் படுத்தப்பட்டோர்; பழங்குடி இனத்தவர் ஒருவர்.

12 இணை அமைச்சர்கள்

இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 3 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்
பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியின ருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ் வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81088.html#ixzz333xQDWKN

தமிழ் ஓவியா said...

பெயர் வைப்பதற்கு யோக்கியதை வேண்டாமா?

நரேந்திர மோடி பிரதமர் ஆன அந்த நாளில், மைசூருவில் பிறந்த இரு குழந்தைகளுக்கு மோடியின் பெயரை முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் என்பவர் சூட்டிவிட்டார். இப்படிப் பெயர் சூட்டப்பட்டது பெற்றோர்களுக்கே தெரியாது.

ஆண் குழந்தைக்கு நரேந்திர கிருஷ்ணா மோடி என்றும், பெண் குழந்தைக்கு தன்மயி மோடி என்றும் பெயர் சூட்டினாராம்.

அந்த இரு குழந்தைகளின் கல்விச் செலவை தாம் ஏற்பதாகவும், பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப் படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலையறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி, காவல்துறையினரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பெண் குழந்தையின் தந்தையாரான மஞ்சுநாத் கவுடா கூறியது கவனிக்கத்தக்கது.

குழந்தை பிறந்த போது மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது இவர் பெயர் சூட்டியுள்ளார்.

என்னிடமோ, என் மனைவியிடமோ, உறவினர்களிடமோ அனுமதி பெறவில்லை.

அது மாத்திரமல்லாமல் பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் ராமதாஸ் பெண்கள் விவகாரத்தில் ஏற்கெனவே சிக்கி, தற்கொலைக்கு முயற்சித்தவர்.

அத்தகைய ஒருவர் என்னுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டிட தகுதி படைத்தவர் அல்லர். நான் என் குழந் தைக்கு என் தாயின் பெயரையே சூட்ட விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.பி.,காரர்களின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xfoYaL

தமிழ் ஓவியா said...

அமைச்சராவதற்குத் தனித்தகுதி

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மதக் கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்திற்குக் காரண மாக இருந்தவர் என்பதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். தடை உத்தரவை மீறி ஜாதிக் கூட்டத்தை நடத்தியதுதான் காரணம். ஒரு மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார். கால்நடை மருத்து வரான இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பி.ஜே.பி.யில் இணைந்தார்.

சரி, இவருக்கு இப்பொழுது என்ன? ஒன்றும் இல்லை, மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. இவர் பெயர் பல்யான் ஜாத்.

பெயரிலேயே இவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர் என்பது ஒட்டி நிற்கிறது.

மோடி அமைச்சரவையில் இதுபோன்றவர்கள் அமைச்சராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பி.ஜே.பி. அமைச்சரவை யில் இடம்பெற இதுபோன்ற மதம் மற்றும் ஜாதிக் கலவரக் கதாநாயகர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களே!

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xvAEZR

தமிழ் ஓவியா said...

தமிழக பி.ஜே.பி.யினரின் பரிதாப நிலை

மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதவி யேற்பு விழாவிற்கு நாடெங்கும் கட்சிப் பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர்கள் டில்லிக்குச் சென்று காத்துக் கொண்டிருந்தும், அனுமதிச் சீட்டு (பாஸ்) கிடைக்க வில்லையாம். பெருத்த ஏமாற்றம்... நம்மைப் போலவே தொலைக்காட்சிகளில் பார்த்து மனத்திருப்தி அடைந் தனர். அத்தகையவர்களுக்குத் தனியே ஓட்டல் ஒன்றில் விருந்து அளித்தாராம் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன். தொடக்கமே இப்படியா?

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333y0kPGJ

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த முத்து

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன். 2020 இல் முக்கிய நிறுவனங்களில் மேலாண்மைப் பொறுப்புகளில் 30 சதவிகிதம் பெண்கள் இருப்பார்கள்.

- ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே

பொத்தானை அழுத்துவாராம்

பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை நம்பக்கூடாது; ஆனாலும், மோடிமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால், அணுகுண்டு பொத்தானை பிரதமர் மோடி அழுத்துவார். - உத்தவ்தாக்கரே, தலைவர், சிவசேனா

(பாகிஸ்தானிலும் பொத்தான் உண்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/81101.html#ixzz333yEVdWY

தமிழ் ஓவியா said...


சமூக ஒற்றுமை


ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெறவேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும், தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாகவேண்டியது மிகவும் அவசியமாகும்.

- (குடிஅரசு, 3.3.1929)

Read more: http://viduthalai.in/page-2/81105.html#ixzz333yOUnV5

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று கலைஞர் தாயார் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நிழற்படக் காட்சியைப் பார்வையிட்டார்.

அங்கே வைக்கப்பட்ட தகவல் பலகையில் கீழ்கண்டவாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதினார்

பாராட்டிப் போற்றிவந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்
என்று மாணவப் பருவந்தொட்டே முழங்கி
வாழ்வில் என்றென்றும் எத்தனைப் பெரும்
பதவிகளும் புகழாரங்களும் வந்தாலும்
தன்னை ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்
என்று அழைப்பதில் பெருமைகொண்ட
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த
இல்லம் - திருக்குவளையில் கண்டேன்
மகிழ்ந்தேன்.

குவளையில் பிறந்தவர்
குவலயத்தையே வியப்படையச் செய்த
குருகுலச்சீடரான வரலாறு பெரும்
எழுச்சி வரலாறு!

இதை இளைஞர்கள் கண்டு
அவரது உழைப்பை என்றும்
பாடமாக்கி வாழவேண்டுமென
விரும்பும் அவரது அன்பு இளவல்

- கி.வீரமணி
27.5.2014)

Read more: http://viduthalai.in/page-4/81130.html#ixzz333yfut8b