Search This Blog

2.5.14

அட்சய திருதியையாம்!

அட்சய திருதியையாம்!

சிறிது காலமாக இந்த அட்சய திருதியை என்ற சொல் அடிபடுகிறது. இந்த நாளில் ஒரு குன்றி மணி அளவுக்குத் தங்கம் வாங்கினாலும் அது பெருகுமாம் - வருமாம் - அதனால் கடன்  வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டுமாம்.

நகைக்கடை வியாபாரிகளில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டிருக்க வேண்டும். 

பச்சைப் புடவை கடைகளில் தேங்கி விட்டால் - ஒரு கதையைக் கிளப்பி விடுவார்கள். இந்த ஆண்டு பிறந்த நேரம் சரியில்லை; சகோதரனுக்கு ஆபத்து - எனவே சகோதரிக்குப் பச்சைப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எவனோ ஒருவன் கிளப்பி விட்டால், ஊரில் உள்ள அத்தனைப் பச்சைப் புடவைகளும் விற்றுத் தீர்ந்து விடும்.

அது போன்றது தான் இந்த அட்சய திருதியையும். அட்சய என்றால் அள்ளக் அள்ளக் குறையாதாம்; வளர்ந்து கொண்டே போகுமாம்!

ஒவ்வொரு முட்டாள்தனத்துக்கும் முக்கியமாகப் புராணக் கதைகளைக் கட்டி வைத்து விடுவார்கள். பக்தி முலாம் பூசி விட்டால் மலம்கூட மூட மக்களுக்கு மலர்தானே!

ஒவ்வொரு ஆண்டும் சித்திரையையடுத்து வரும் திருதியைத் திதியில் வரும் நாளே இந்நாள் என்று எழுதி வைத்துள்ளனர். திருதியையன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாகும் என்று ஜோதிடத்தில் எழுதி வைத்துள்ளனராம்.

திரவுபதை சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சயப் பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத்தானம் செய்த புண்ணியம் பெற்றாள் என்கிறது மகாபாரதம்; ஒரு சமயம் கிருஷ்ண பரமாத்மா திரவுபதையைக் காண பசியுடன் வந்தார். அந்நேரம் அட்சயப் பாத்திரம் கழுவிக் கவிழ்க்கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதைக் கிருஷ்ணனுக்கு பரிமாறி பசியாற்றியதோடு அதிதிதேவாபவா எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும் நிறைவேறப் பெற்ற புனித நாளும் அந்த அட்சயத் திருதியை தானாம்.

இந்த நாளில்தான் கிருதாயுகமே பிறந்ததாம். இந்த யுகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுள் ஒரு லட்சம் வருடங்களாம். இதில் பாலப் பருவம் பதினாயிரம் ஆண்டுகள், காளைப் பருவம் 1032 வருடங்களாம். இந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் உயரம் எவ்வளவுத் தெரியுமா? அய்ந்து பனை மரம் அளவாம்.

எனக்குப் பயித்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டுவா கோவணம் கட்டிக் கொண்டு வருகிறேன் என்று ஒருவன் சொன்னானாம். அது போன்ற கிறுக்கன் எவனாவது உளறிக் கொட்டி வைத்திருப்பான் போலும்!

இது போன்ற கதைகளை எல்லாம் இப்பொழுது ஏன் கட்ட முடியவில்லை? மக்களிடத்தில் சிந்திக்கும் திறன் உயர்ந்திருப்பதுதான்;  இந்த மாற்றத்தின் முனையை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற பழைய உளுத்துப் போன சரக்குகளை விளம்பர வெளிச்சத்தால் விநியோகம் செய்ய ஆசைப்படுகிறார்கள்.

இன்றைக்குத் தங்கம் விற்கும் விலையில் விலை கொடுத்து வாங்கும் நிலையிலா சாதாரண மக்கள் இருக்கிறார்கள். சென்றாண்டு இதே அட்சய திருதியையில் தங்கம் வாங்கியவர்கள் வீடுகளில் எல்லாம் இப்பொழுது தங்கக் கட்டிகள் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றனவா!

தங்கத்தை விற்றவன் வேண்டுமானால் பணக்கார னாகி இருப்பான். தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள் என்று ஒரு பக்கத்தில் ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது. நகைக் கடைகளில்கூட தங்கத்திற்காகச் சீட்டுப் பிடிப்பது எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு நாளை விளம்பரப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டாமா?

உலகத்திலேயே தங்கத்தை நகைகளாக மாற்றி உடலில் அணிந்து கொளளும் போதை இந்தியாவில் தான் அதிகமாம். மற்ற மற்ற நாடுகளில் தங்கள் ரிசர்வ் வங்கியில் இருக்கும். அதன் மூலம் பண வீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.

பக்திப் போதை எகிறிக் குதிக்கும் இந்தப் பாரதம் புண்ணிய பூமியில்தான் தலைகீழாக இருக்கிறது.

திருவனந்தபுரம் கோயிலில் தங்கச் சுரங்கமே குடி கொண்டு இருக்கிறது. இதனால் என்ன பயன்? இவற்றை யெல்லாம் மக்கள் நல வாழ்விற்குப் பயன்படுத்தினால் என்ன? வறுமைக் கோட்டுக்கும் கீழ் கிடந்து உழலும் மக்களைக் கரையேற்றினால் தான் என்ன?

இந்தமூட நாளில் இப்படி ஒரு முற்போக்குச் சிந்தனை வெடித்தால் நல்லதே!

                       --------------------------”விடுதலை” தலையங்கம் 2-5-2014

34 comments:

தமிழ் ஓவியா said...


சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டு வெடிப்பு:

கண்டிக்கத்தக்கது - இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அறிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே தினத்தன்று (1.5.2014) காலை பெங்களூர் - கவுகாத்தி ரயில் பெட்டியில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்று அதில் ஒரு பெண் பலி; 14 பேர் பலத்த காயம் என்கிற செய்தி அதிர்ச்சிக்குரியது.

அமைதிப் பூங்காவில் இந்த நிலையா?

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கு எத் தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. பாபர் மசூதி இடிக் கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் வீசியதே!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் - அதுவும் தலை நகரத்தில் இப்படியொரு நிகழ்வு கண்டிக்கத் தக்கது - வெட்கப்படத்தக்கதாகும்! வேதனையும் மிகுகிறது!

அலட்சியம் ஏன்?

மூன்று நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் (அவரிடம் பல தகவல்கள் கிடைத்திருக்கவும் கூடும் அல்லவா!) மிகவும் விழிப்புடன் மத்திய மாநிலக் காவல்துறை புலனாய்வுத் துறை இருந்திருக்க வேண்டாமா?

குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்?

நாட்டில் இதற்கு முன் ஆங்காங்கு நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக் கப்படவில்லையே! இத்தகைய கால தாமதம்கூட வன் முறையாளர்களுக்கு, தீவிரவாதிகளுக்குத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டக் கூடியவையல்லவா?

பாதுகாப்புப் போதுமானதல்ல

இரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக ஏதோ பெயரளவில் இரண்டொரு காவல்துறையினரை அமர்த்துகிறார்கள். இது போதுமானவையல்லவே!

தூங்கும் வசதியுடைய பெட்டிகள் திறந்தே கிடப்பது. தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

பொது மக்களிடம் அச்சம் ஏற்படும்

சாலைப் பயணத்தைவிட பாதுகாப்பானது - செலவு குறைவானது என்று இரயிலைத் தேர்வு செய்கிறார்கள் பொது மக்கள். அவர்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் நடந்திருப்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் வன்முறைக்கு மதமோ, நிறமோ கிடையாது. வன்முறை எங்கு, எவரால், கிளம்பினாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இதுவே கடைசியானதாக இருக்கட்டும்!

சென்னையில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பே இறுதியானதாக இருக்கட்டும்! காவல்துறை - பொது மக்கள் இரு தரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக இந்த வெறுக்கத்தக்க அநாகரிகச் செயலைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை!

மனிதநேயமே நாகரிகத்தின் அடையாளம்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79594.html#ixzz30bqYvVky

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் இரு சங்கராச்சாரிகள்


புதுடெல்லி, மே 2-மோடிக்கு எதிராக 2 சங்க ராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினர் ஹர ஹர மோடி என முழக்க மிட்டது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிர சாரம் மேற்கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பூரி சங்க ராச்சாரி நேற்று அளித்த நேர்காணலில் குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடி யவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட் சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார் பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

துவாரகை சங்கராச்சாரி கூறுகையில், என்னால் முடியா விட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப் பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங் கராச்சாரி உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவரது சீடர் முக்தீஸ் வரானந்த் பிரசாரம் செய் வார் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்ப தாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79593.html#ixzz30bqjgvRI

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு காகிதப் புலி: மம்தா கூற்று!

புரூலிய, மே 2- பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை "காகி தப் புலி' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர்ணித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் புரூலியா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசிய தாவது:

காகிதப் புலிக்கும், கம் பீரமான வங்கப்புலிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. மேற்கு வங்க சுந்தரவனத்தில் இருப் பவைதான் உண்மையான புலிகள்.

மதப்பிரிவினை: இந்துக் கள் மற்றும் முஸ்லிம்கள் இடையிலும், வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல் லாதோர் இடையிலும் பிரிவினையைத் தூண்டு பவர்களுக்கு பிரதமர் நாற் காலியில் அமர அரசியல் சாசனத்தின் அடிப்படை யில் எந்த உரிமையும் இல்லை.

மதச்சார்பின்மைதான் பல்வேறு மதம், நிறம், இனங்களைச் சேர்ந்தவர் களை ஒன்றிணைக்கும் சக்தி என்பதை உணர்ந்தே பாபா சாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அர சியல் சாசனத்தை உருவாக் கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.

Read more: http://viduthalai.in/e-paper/79592.html#ixzz30bqrIJu5

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. - (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/79572.html#ixzz30br3h3CL

தமிழ் ஓவியா said...


கோடையில் இளைப்பாற்றிட்ட குளிர்தரு புத்தகச் சங்கமத் திருவிழா!


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடை பெற்றதையொட்டி ஏகப்பட்ட களே பரம்! கெடுபிடிகள் -இத்தியாதி! இத் தியாதி!

இந்த பரபரப்புக்கிடையில் ஆர வாரமில்லாத ஆக்கப் பூர்வ அறிவுத் திருவிழா - அறிவுத் தேரோட்டம் ஒன்று தலைநகர் சென்னையில் நடைபெற்றது. (உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதியையொட்டி) ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிறு இரவு 9 மணியோடு முடிவடைந்தது. அதுதான் சென்னை புத்தகச் சங்கமம் என்ற திருவிழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான தந்தை பெரியார் அறக்கட்டளை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, இணைந்து, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் இன்னும் சிலரது அரிய ஒத்துழைப்புடன் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் உலகை விழுங் கும் மனிதநேயப் பெரு விழாவாக இந்த புத்தகத் திருவிழா, நகரின் மய்யமான ராயப்பேட்டை ஓய். எம்.சி.ஏ. மைதானத்தில் விசாலமான வியத்தகு ஏற்பாடுகள் - பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு நடைபெற்றது.

210 பதிப்பகத்தார்களின் கடைகள் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல; ஆங்கில வெளியீட்டவர்களும் கடைவிரித்தனர்; கொள்பவர்களை ஈர்த்தனர். மாலை வேளைகளில் கண்ணுக்கும் காட்சிக்கும் அறிவைத் தூண்டும் அருமையான அற்புதக் கலை நிகழ்ச்சிகள், உரைகள்!

வருவோர்க்கும் வாங்குவோருக்கும் வசதியாக மருத்துவ அவசரப் பிரிவுகூட!

உணவுக் கூடங்களும் பல் வகையில்! குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் வந்தனர்; வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்!

சென்னை ஊடகங்களில் இதற்குப் போதிய விளம்பரம் கொடுக்கப்பட வில்லை; காரணம் வெளிப்படை.

இப்பொருள் இவர் வாய் கேட்டால்...?

இப்பொருள் இத்தனையது என்றால்!... எப்படி விளம்பரப்படுத்துவது? பத்திரிகா தர்மபாவங்களில் அது சேர்ந்து விடாதோ என்ற விரிந்த பார்வை; என்னே விசித்திரக் கண்ணோட்டம்!

என்றாலும் ஒரு கோடி புத்தகங்கள் - ஏராளமானோர் வருகை!

எல்லாக் கருத்து கொள்கை யாளர்க்கும் எவ்வித வேறுபாட்டுக்கும் இடமின்றி சம வாய்ப்புத் தரப்பட்டது அமைப்பாளர்களால்!

புத்தகர் விருது என்ற புதுமை வெளிச் சம் இட்டது புதுமையிலும் புதுமை!

அரிய பணிகளை புத்தகங்களைப் பரப்புவது இளைஞர்களிடம் அறிவைக் கொண்டு செல்லும் தொண்டறப் பணியை முன்னெடுத்ததாக அமைந்தது.

புத்தகர் விருதுக்கு தேர்வு செய்த நான்கு பேர்களும் புத்தகப் புத்தொளி பாய்ச்சும் பொலிவுறு வைரங்களாகும்!

1. பொள்ளாச்சி நசன்
2.. பழங்காசு ப. சீனிவாசன்
3. தி.மா.சரவணன்
4. புத்தகத் தாத்தா சண்முகவேல்

இந்நால்வர் போன்று நானிலம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, விளம்பரம் விரும்பாது எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடக்கமிகு தொண்டறப் பணி செய்யும் தூய்மையானவர்கள் ஏராளம் உண்டு.

இவ்வளவு சிறப்புகளைச் செய்த பெருமை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய அமைப்பாளர்களாக உழைப்பை சளைக்காது தந்த பதிப் பாளர்கள் எமரால்ட் கோ. ஒளி வண்ணன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கே.எஸ். புகழேந்தி, விழிகள் பதிப்பகம் உரிமையாளர் த. வேணுகோபால், பெரியார் திடல் நிர்வாகி ப. சீத்தாராமன் தலைமையில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும், பங்கேற்ற பதிப்பகத் தினர் முதல் கலை நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களே!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/79577.html#ixzz30brDFdeM

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறைப் பொதுக் கூட்டம்


சென்ற 18.4.2014 மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத் தில் உங்களை சந்திக்க மாலை 6.45 மணியளவில் வந்தேன். அதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கூட்டம் முடிந்து மேடையை விட்டுத் தாங்கள் இறங்கி வரும்பொழுதும் தள்ளுமுள்ளு ஆகி விட்டது. நெரிசல் மிகுதியால் தங் களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.

மயிலாடுதுறைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர் களைப் பற்றிக் குறிப்பிட்டவை யாவும் வரவேற்கத் தக்கவையாகும். வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டது (அதா வது மோடி பிரதமராக வேண்டும்) திடுக் கிடும் செய்தியாகும். இதை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனை வரின் தலையாய கடமையாகும்.

- சு. பாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நூல் நிலையம், மேலப்பாதி

Read more: http://viduthalai.in/page-2/79583.html#ixzz30brSuvRG

தமிழ் ஓவியா said...


சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது


பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.

இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bryRxDl

தமிழ் ஓவியா said...

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை

திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.

இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bs6awvf

தமிழ் ஓவியா said...


காரவன் படப்பிடிப்பு


இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.

மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.

அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி - அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!

மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.

(காரவன், ஏப்ரல்-1, 1977

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsqtAXw

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச்செல்வம். தொழில்களிலெல்லாம் தலைசிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மைதான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையை கடைப் பிடிப்பவன்.

நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத் தைக் காட்டுபவன் ஆவான்

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsxyqeg

தமிழ் ஓவியா said...

வாருங்கள், கடவுளாகலாம்!

இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.

வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt8ohRO

தமிழ் ஓவியா said...


இந்திய விஞ்ஞானியும் மூடநம்பிக்கையும்

முயன்ற காரியம் முடிய வேண்டுமென்பதற்காக கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தாயத்துக்களை அணிகின்றனர்; தேங்காய் உடைக்கிறார்கள் என்று பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஒய். நாயுடம்மா கூறினார்.

பெங்களூருவில் பல்கலைக் கழகத்தில், விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் பற்றி விரிவாக அளவிடும் போது, நாட்டில் பரவியுள்ள பலவிதமான மூடநம்பிக்கைகளின் பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயல் என்றும் குறிப்பிட்டார்.

கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று சொல்லி ஏமாற்றும் மந்திரவாதிகளையும் சோதிடர்களையும், கைரேகை பார்ப்பவர்களையும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களுக்கும் பத்திரிகைகளில் அதிக இடம் கிடைக்கிறது. அதிகமாகப் படித்தவர்கள் கூட, ஒரு செயலைத் தொடங்குமுன் நல்ல நேரம், நல்லநாள், நல்ல வாரம், பார்க்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளின் விளைவாக, சூரிய சந்திரனை ராகுவும் கேதுவும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உண்டாகின்றன என்று எண்ணுகிறார்கள். பட்டினியால் செத்தவர்களுக்கு எப்படி ஏராளமான உணவுப் பொருள்களை பார்சல் அனுப்ப முடியும் என்று டாக்டர் நாயுடம்மா கேட்டார்.

மதத்தின் பேரால் பலரைச் சிலர் சுரண்டுவதன் விளைவுதான் என்று அவரே விடையும் பகர்ந்தார். மந்திரங்களினால் தேவையான உணவுப் பொருள் களைக் கொடுக்க முடியுமென்றால், இந்த உலகம் வாழ்வதற்கு வசதியான இடமாக இருக்கும். மழை பெய்வதற்காக மழைக்காலத்தில்தான் யாகம் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

இன்றைய தினம், இந்தியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரப்படும் விஞ்ஞானக் கல்வி, பரிசோதனை செய்வதற்கேற்ற வசதிகள் இல்லாமையால் தந்திரம் (மாஜிக்) போல் தாழ்வான நிலையை அடைகிறது.

தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btHb58z

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் மதவெறி: சீதாராம் யெச்சூரி கண்டனம்


புதுடில்லி, மே 2-மக்கள வைக்கான இறுதிக்கட்டத் தேர்தல்கள் இன்னும் இரு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அதில் பெரிதாக ஆதாயம் பெறும் நோக்கில் மிக நேர்த்தியாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

தலையங்கத்தில்...

இது தொடர்பாக கட்சி யின் பிரச்சார ஏடான பீப் பிள்ஸ் டெமாக்ரசி வாரப் பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதா ராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

அடுத்த இரு வாரங் களில் நடைபெற உள்ள இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிறைய தொகுதிகள் உத் தரப்பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவை.

இந்தி மொழிப் பகுதி களான இவை மக்கள வைக்கு ஏராளமான உறுப் பினர்களை அனுப்பக்கூடி யவை. வகுப்புவாதச் சக்தி களுக்கு ஆதரவாக உள் ளவை இந்தப் பகுதிகள்.

வகுப்புவாத விஷத்தை பரப்புவதும் மத ரீதியில் வாக்காளர்களை இரண் டாக பிரிப்பதும், பா.ஜ.க. வுக்கு ஆதாயத்தைத் தர லாம். ஆனால் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, வகுப்பு நல்லிணக்கத்தை இதனால் விலை கொடுத் தாக வேண்டிவரும்.

வாக்கு வங்கி அரசிய லின் மிக மோசமான அம் சமே பெரும்பான்மை இந் துக்களை ஒன்று திரட்டு வதாகும். அது நேர்த்தியாக நடைபெறப் போகிறது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியே வங்காளத்தில் பேசும்போது, எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்

மூட்டை முடிச்சுகளு டன் போவதற்கு வங்க தேசத்தவர்கள் தயாராக இருக்கவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். வகுப்புவாதத் தாக்குத லுக்கு இந்துத்துவா ஆதர வாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே மோடி விடுத்த எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்.

வங்கதேசத்தவருக்கு எதிரான முழக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது வகுப்புவாத முழக் கம் எடுபடாத இடங்களில், தனது உண்மை முகத்தை மறைத்து வளர்ச்சிபற்றி பேசும் பாஜக, பிற இடங் களில் தேர்தல் ஆதாயத் துக்காக வகுப்பு வாதத்தை உசுப்பி வெறி ஏற்றுகிறது. இடத்துக்கு இடம் இரட்டை வேடம் போட்டு பாஜக செயல்படுகிறது. - இவ்வாறு சீதாராம் யெச்சூரிய எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79557.html#ixzz30btvaKBl

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திரமோடி தகுதியானவர் இல்லை
லாலு பாய்ச்சல்

பாட்னா, மே 3- பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை. ஆர்எஸ் எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியாக பாஜ தலைவர்கள் செயல்படுகின் றனர் என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலடித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் அளித்த பேட்டி:

பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியாக இருந்தாலும், நான் தான் உண்மையான பிரதமர் பதவியை கையாளுவேன். ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த எனக்காக பாஜ.வுக்கு வாக்களியுங்கள் என்று பீகார் மக்களையும், அவரது இனத்தவரையும் ராஜ்நாத் சிங் ஏமாற்றி வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை.

பீகார் மக்களை முட்டாளாக்கி வரும் ராஜ்நாத் சிங் குக்கும், நரேந்திர மோடிக்கும் மக்கள் அரசியல் அடிப் படையை கற்றுத் தருவார்கள். ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியை போல, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் செயல்படுகிறார். தலித்து களின் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உண்மையிலேயே பாடுபடுகின்றனர். இவ் வாறு லாலு பிரசாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiM4J12

தமிழ் ஓவியா said...

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசுங்கள்
மோடிக்கு பிரியங்கா சவால்

அமேதி, மே 3- தைரி யம் இருந்தால் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று மோடிக்கு பிரியங்கா சவால் விடுத் துள்ளார். காங்கிரஸ் தலைவரும், அமேதி மக் களவை தொகுதி வேட்பாள ருமான சோனியா காந்தியை ஆதரித்து, மகள் பிரியங்கா காந்தி நேற்று கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்காரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: நான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இடங் களில் எல்லாம், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றி யும் அவதூறான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை இர வோடு இரவாக பா.ஜ கட்சி, கோழைத்தனமாக வெளி யிட்டு வருகிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் நின்று பேசவேண்டும்.
நாட்டில் தற்போது தேர்தல் பிரச்சாரம் என்பது மிகவும் மட்டரகமாகப் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்குதான். ஆனால், ஒரு சில தலைவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். மக்க ளின் அடிப்படை நலன் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகின்றனர். நரேந்திர மோடி பத விக்காக ஆசைப்படுகிறார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiRgLpT

தமிழ் ஓவியா said...

வாஜ்பாய் மகாத்மா காந்தியாம்!
மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோசாம்!!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

டில்லி, மே. 3- பாஜகவில் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலை வர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார். சி.என்.என். அய்.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது: வாஜ்பாயும், மோடியும் ஒன்றுபோல் தான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர்; மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது. இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiXDH7H

தமிழ் ஓவியா said...


கல்கியின் நளினம்!


நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்று சொல்லுவார்கள்; அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கல்கி போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு அப்படியே பொருந்தும்.

எடுத்துக்காட்டுக்கு வெகு தூரம் செல்ல வேண்டாம். இந்த வார கல்கி (4.5.2014)யின் தலையங்கம் ஒன்றே ஒன்று போதுமானது.

நரேந்திரமோடி 2014 மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுக்கச் செய்துள்ள பிரச்சாரப் பயண தூரம் சுமார் 5,40,381 கிலோ மீட்டர்! இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான்! சுமார் 450 அரசியல் கூட்டங்களில் இந்தியாவெங்கும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரும் இந்தளவுக்கு உழைப்பையும், அர்ப்பணிப் பையும் செய்திருப்பாரா என்பது சந்தேகமே

பல தலைவர்கள் மாநில அளவில் மட்டுமே புகழ் உடையவர்கள். மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாகப் பரிணமித்திருப்பவர் மோடி. இந்த நம்பிக்கையும், உத்வேகமும், அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற உதவ வேண்டும்! என்று உண்மைகளைக் களப்பலியாக்கி, ஆசை என்ற வெட்க மறியாத குதிரையில் ஏறி சவாரி செய்கிறது கல்கி.

கலைஞர் போன்றவர்கள் 90 வயதைக் கடந்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எல்லாம் அவாளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

பண முதலைகளின் தனி விமானத்தில் பயணித்து சொகுசுப் பிரச்சாரம் செய்வது பெரிய சாதனையாம்!

மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறதாம்!

இதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்டவர் என்பதை கல்கிகள் மறைக்கப் பார்க்கலாம் - அதற்குக் காரணம் உண்டு. இந்து வெறிப் பார்ப்பனிய ஆதி பத்தியத்தை இந்தப் பிற்படுத்தப்பட்ட வாடகைக் குதிரை நிறுவிக் காட்டும் என்ற ஆசையின் உந்துதல் தான் கல்கியை இபபடி எழுதத் தூண்டுகிறது.
இரண்டாயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு நர வேட்டை மனிதன் மத எல்லைகளைத் தாண்டி பரிண மித்து நிற்கிறாராம்! எங்கே போய் முட்டிக் கொள்வது!

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், இன்னொருவரும் சீக்கியர்!

பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதியிலிருந்தே பொடா வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில்!

தம் குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு ஆளாகி சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, வாழவே வழியில்லை என்று முகாம்களில் முடங்கிக் கிடக்கும் முஸ்லீம்களைப் பார்த்து இனப் பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லை களைக் கடந்த மாமனிதராம்! அதுவும் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாம் மோடி!

மத மூடநம்பிக்கைகளை எல்லாம் கடந்து துணைக் கண்டத்து மக்களையெல்லாம் சகோதரத்துவ வாஞ்சை யுடன் பார்த்த பகுத்தறிவாளர் நேரு எங்கே? இந்துத் துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே? ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கின்றன என்கிற மமதையில் சாக்கடையை ஜவ்வாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்று மனப்பால் குடிப்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப் படாதது ஏன்? மத எல்லைகளைத் தாண்டிய மாமனிதர் என்பதற்கு இதுதான் அளவுகோலா?

நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்களும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுகளும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆனந்தமூர்த்திகளும் கட்சிகளைக் கடந்த அறிஞர்கள் மோடியைப் எப்படி விமர்சித்துள்ளார்கள் என்பதைக் கல்கிகள் பூணூல் பார்வையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாகச் சிந்தித்துப் பார்க் கட்டும் உண்மை மிக வெளிச்சமாகவே தெரியும்.

மோடியளவுக்கு மோசமாக விமர்சிக்கப்பட்டது வேறு யாருமில்லை - அதில் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Read more: http://viduthalai.in/page-2/79632.html#ixzz30hj0vLlr

தமிழ் ஓவியா said...


நல்ல வர்க்கம் (சித்திரபுத்திரன்)


நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது.

அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும்.

இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்!

வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது.

ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

குடிஅரசு - கட்டுரை - 30-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79650.html#ixzz30hlIianZ

தமிழ் ஓவியா said...


ஒத்திப் போடுதல்

இந்திய சட்டசபை, மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்திப் போட்டு விட்டார்கள்.

அதுபோலவே, திரு. கல்யாண சுந்தரமுதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும் சைவப் பெரியார்கள் மகாநாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டு விடும். திரு. வரதராஜுலுவின் உத்தியோக மேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திபோடப்பட்டாய் விட்டது.

இதுமாத்திரமல்லாமல் திரு. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்குப் பிரசாரமும் திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரச்சாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத்துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்படலாம்.

அன்றியும் தேசமே பிரதானமென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமான பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்பட்டுவிடும்.

இவற்றையெல்லாம் விட, 1929ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு 12 மணி 5-நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்தாலும் நிற்காமல் ஒத்திப் போட்டாய்விடும்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hlunH1I

தமிழ் ஓவியா said...

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப் பற்றி நாம், அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்லவென்றும் இவர்களுக்கு கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 வருடகாலமாக விடாமல் சொல்லி வருகின்றோம்.

இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரமே செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில் காங்கிரசு பணக்காரர்கள் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது.

உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டார்கள் காங்கிரசுக்கு எதிரிகளாய் விட்டார்கள் முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றது.

இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm2Nac6

தமிழ் ஓவியா said...


மோடி ஒருமுறை மட்டுமே அதிகாரத்திற்கு வந்துவிட்டால் வெறுக்கத்தக்கதான கொள்கைகள் சட்டபூர்வமாகிவிடும் கலைஞர்கள் கருத்து


ஸ்டாக்ஹோம், மே 3- இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களான நடிகை நந்திதாதாஸ் மற்றும் சிற்பக் கலைஞர் அனீஷ்கபூர் ஆகி யோர் மோடித்துவ அர சியலை எதிர்த்து பொது மக்கள் குரல் எழுப்பவேண் டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர்.

மோடி வெல்வது என் பது அரசு எந்திரத்தின்மீது வெறுப்புணர்வை உண் டாக்கும். மேலும், அந்த வெறுப்புணர்வு நிறுவ னங்கள், அதன் கொள்கை களிலும் பரவிவிடும் என்று நந்திதாதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாக்ஹோமில் ஃபிராக் என்கிற படத்தை இந்தியப் பட விழாவில் திரையிட்டபோது நந்திதா தாஸ் மோடி குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறும்போது, மோடி பிரதமர் பதவிக்கு வருவது என்பது முஸ்லிம் போன்ற சிறுபான்மையர்களை, ஏற் கெனவே ஒடுக்கப்பட் டுள்ள அவர்களை முன் எப் போதும் இல்லாத வகை யில் காயப்படுத்துவதாக அமைந்து விடும் என்று கூறினார்.

மேலும், குறைந்த கால கட்டமே பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்த போதும், கல்வித்துறையில் பாடத் திட்டங்களை அவர் களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டனர். மோடி ஒரே ஒருமுறை மட்டுமே அதிகாரத்துக்கு வந்துவிட்டால், வெறுக்கத் தக்கதான கொள்கைகளை சட்டபூர்வமாக்கி விடுவார். அப்படி மாற்றியதைக்கூட நாம் அறிந்துகொள்ள முடி யாமல் போய்விடும் என்று குறிப்பிட்டார்.

பல்வகைப்பட்ட கலாச் சாரம் குறித்த பிரச்சாரத்தை ஆதரிக்கும் நந்திதாதாஸ், மதச்சார்பின்மைக்கு ஆத ரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட் டுக்கொண்டுள்ளார். மோடியை எதிர்ப்பதன் மூலம் குரூரமான தாக்கு தலை எதிர்கொள்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, நான் மோடியை எதிர்ப் பதால் இதுவரை நான் சந்தித்திராத வகையில், என்னையும், என் மகனை யும் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவும், பாகிஸ் தானுக்கு செல்லுமாறும் வெறுப்பான மின்னஞ் சல்கள் எனக்கு வருகின்றன.

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டலாக உள் ளது. முதன்முறையாக உண்மையிலேயே நான் அஞ்சும் நிலை ஏற்பட்டுள் ளது என்று கூறினார்.

வளர்ச்சி குறித்த போலி வாக்குறுதிகளை நம்பி மனித உரிமைகளை விற்றுவிட இந்தியர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும் வருத்தப்படுகிறார். இது முடிவான ஒன்றா கவே உள்ளது. மோடி ராஜ் ஜியத்தின்மூலம், மாறுபா டான கருத்துகளுக்கு இட மில்லை.

மோடியை எதிர்ப் பவர் யாராக இருந்தாலும் சகிப்புத்தன்மை கிடை யாது என்பதைக் காணலாம். மோடியை எதிர்ப்பதோ, எதிர்க்கும் எண்ணத்து டனோ இருந்தால் அவர் களின் நம்பிக்கைகள் சீர் குலைக்கப்படும். சமூக விரோதிகள், அரசியல் குண் டர்களை பாதுகாப்பவர்கள் யாரென்று அவர்களுக்குத் தெளிவாகவேத் தெரியும்.

இதேபோன்றே சிற்பக் கலைஞர் அனீஷ்கபூரிடமி ருந்தும் மோடி எதிர்ப்புள் ளது. அண்மையில் அவரு டைய கடிதம்மூலம் எதிர்ப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக்கடிதத்தை வெளியிட்டதிலிருந்து தொடர்ந்து, ஆபாசமாக வும், மிரட்டும் தொனி யிலும் (தொலைபேசி, டிவிட்டர், மின்னஞ்சல் வாயிலாக) மிரட்டல் இருந்துகொண்டே உள்ளது.

இதன்மூலம், மோடியின் கூடாரம் அச்சத்தில் ஏற்படும் விமர்ச னங்களாக உள்ளன என்பது தெளிவாகவே தெரிகிறது. மறைப்பதற்கு அவர்களி டம் ஏராளமாக உள்ளன. மோடிக்கு எதிரான கடி தத்தில் கையொப்பமிட்ட அனைத்துத் தனி நபருக்கும் மின்னஞ்சல், டிவிட்டரில் எழுதுவது உள்ளிட்டவற் றின்மூலம் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

2002 கலவரத்துக்கு பொறுப் பேற்கவோ, மன்னிப்பு கேட்கவோ மோடி முன்வர வில்லை. எந்த ஒரு கேள் விக்கும் உட்படுத்தாமல் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முடிவுக்கு வருகி றது. குஜராத்தில் மோடி அரசின் கொடுமைகளாக, குஜராத்தில் 2002 இல் நடை பெற்ற பயங்கரக் கலவர சம்பவங்களை மிக முக்கிய மாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சிறு பான்மையர் தற்காத்துக் கொள்ள முடியாமல், சொத் துக்கள் சூறையாடப்பட்டு, கொலை, பயங்கரவாதத் தால் பாதிப்புக்குள்ளா னார்கள். அதன் விளைவாக ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என்று இரண்டாயி ரம் பேர் கொல்லப்பட் டனர்.

குறிப்பாக பெண் கள்மீதான காட்டுமிராண் டித்தனமானத் தாக்குதல் கள், வன்முறை வெறியாட் டங்கள் யாவும் காவல் துறையால் தடுக்க முடி யாமல் இருந்தன. அவர் களின் குரல்கள் கேட்கப் படவேண்டும்.

ஒவ்வொரு வரிடமும் இதுபற்றி உரக் கக் கூறவேண்டும் என்று சொல்லவேண்டும். வியா பாரம் எந்த ஒரு விலையை யும் கொண்டதாக இருப்ப தில்லை. அப்பாவி, வறிய வர்களின் உயிரும், அதிக செல்வத்துடன் உள்ளவரின் உயிரும் ஒரே மதிப்புள்ள வைதான். இந்திய, இங்கி லாந்து நண்பர்களிடம் நான் கூறுவதெல்லாம், சமுதாயத் தின், சமூக சூழலின் விலையை எண்ணிப்பாருங் கள். -இவ்வாறு சிற்பக் கலை ஞர் அனீஷ்கபூர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79634.html#ixzz30hmGFj3A

தமிழ் ஓவியா said...


சந்தி சிரிக்கும் கடவுள்களின் சக்தி


கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கலிக்கநாயக்கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலையும், அங்கு நகை பணம் திருட்டுப் போனதால், காவல்துறையினர் விசாரணை நடத்துவதையும் காணலாம். உள்படம்: உடைக்கப்பட்ட உண்டியல்.

வடவள்ளி.மே 3- கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த கலிக்கநாயக் கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை யில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று முன் தினம் நடந்ததாம். இதையொட்டி காணிக்கைகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலின் கதவு பூட்டை உடைத்து சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். அவர் கள் அங்கிருந்த 5 அடி உயர சூலாயு தத்தைப் பயன்படுத்தி உண்டியலில் இருந்த 2 பூட்டுக்களையும் உடைத்துள் ளனர். பின்னர் அவர்கள் உண்டியலில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலில் நடை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது அவர், கோவில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பொருள்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகி, உடனடியாக தொண் டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங் களைப் பதிவு செய்தனர். கோவில் விழா நடந்த மறுநாளே உண்டியலில் இருந்த நகை, பணம் திருட்டு போயுள்ளது.

திருட்டு போன தங்கம், வெள்ளி மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக் கும் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய உண்டியலையே காப் பாற்றிக் கொள்ளாத அந்த பத்ரகாளியம் மன், எப்படி பக்தர்களின் குறையைப் போக்குவாள்?

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmPIEFv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் மோதல்: காயம் - கைது

ஆரணி, மே 3- ஆரணி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரணி அடுத்த சேவூர் எஸ்எல்எஸ் மில் அருகே வசிப்பவர் முனிவேல் மகன் மணிகண்டன் (22). அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்ததாம்.

விழாவையொட்டி மணிகண்டன், நண்பர்கள் வேல், வடிவேல், ரகு ஆகி யோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சம்பத் மகன்கள் மோகன், மதன் மற்றும் ராஜேஷ், கரிகாலன், யுவராஜ், மணிவாசகம் ஆகியோர் ஏன் சாலையில் சத்தம் போட்டுச் செல்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் கைகலப்பு ஏற்பட்டு ஒரு வரை ஒருவர் கையாலும், கல்லாலும், தடியாலும் தாக்கி கொண்டனர். இதில் மோகன், யுவராஜ், கரிகாலன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழு மோதல் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் மணிகண்டன், மணிவாசகம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து மதன், ராஜேஷ், மணிகண்டன், ரகு, வேல், வடி வேல் ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின் றனர்

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmWenj1

தமிழ் ஓவியா said...


மோடி சொல்வது முழுப் பொய்- ஆதாரமற்றதுமோடியின் முகமூடியைக் கிழிக்கும் அகமதுபட்டேல்

புதுடில்லி, மே 3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர் பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ கார ணம் தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி யில் வெளியான விவரங் கள்தான்.

அகமது பட்டேல் காங் கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண் பர்களில் ஒருவர். இப் போது அவர் மாறி இருக் கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப் பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவரு டன் சேர்ந்து உணவு அருந் தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப் பட்ட தோழமை உறவு தொடரவேண்டும் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அகமதுபாய் என எப் போதும் அவரை அழைத் ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகி றோம்.

பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த் தையை நான் பயன்படுத்து கிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்ப தற்கான காரணம்பற்றி கேட் டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக பட்டேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல் லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத் துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வரு கிறது. எனது வீட்டுக்கு அவ ரும், அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப் பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

1980-களில் அவர் பாஜக பொதுச்செயலாளராக இருந்தபோது, அவர் எனது வீட்டுக்கு வந்தது நினை விருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித் தோம்.

முதல்முறையாக முதல் வராக பொறுப்பேற்ற போது அவர் தொலைபேசி யில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை கார ணமாக எடுத்துப் பேசிய துண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ள வருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டியில் அரசியல் இருக்கிறது. தேர்தல் ஆதா யத்தைக் கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என் றார் அகமது பட்டேல். மோடி ஒரு பிரிவினைவாதி:

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmebCa1

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டையும், ஆடை மாற்றமும்


அண்மையில், சமுதாய சிந்தனை என்ற சிற்றிதழில் (மார்ச் 2014) படித்த செய்தி இது:

மத்திய மேல் நிலைக் கல்வி வாரியம் (CBSE) 9ஆம் வகுப்பு வரலாறு பாட நூலில், சாதிச் சண்டையும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பில், குமரி மாவட்டத்தில் 1822 முதல் 1859 வரை நடந்த மேலாடைப் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு தந்திருந்தது. அதில் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ மிஷனரி களின் பணி சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொறுக்க இயலாத இந்து நாடார் அமைப்புகள், அதை நீக்க, இழிவு... இழிவு... எனக் கூச்சல் போட்டன. இது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குள்ள நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சல் போட்டதற்குச் சமமாக இருந்தது. உடனே நாடார்களை வளைத்தெடுக்கும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட களம் இறங்கின. பிற மாநில மாவட்ட நாடார் களும் வழக்கம்போல போராட்டத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்றம் விளக்கம் கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட புரோட்டஸ் டண்டு கிறிஸ்தவர்களின் புனிதமான விடுதலை வரலாற்றை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.ஈ.யைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்டது. இச்செயலுக்கு யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. காரணம், புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர் களுக்கு மானம், மரியாதை, உரிமை முதலியவைமீது அக்கறை இல்லை. பிழைப்பு, ஆசீர்வாதம் முதலியவை மீதுதான் கவலை.

பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சமுதாய சிந்தனை ஆசிரியரும் கன்னி யாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்ற நிறுவனரு மான டி. பீட்டர் அவர்களின் மேற்கண்ட கூற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடார்களைப்பற்றி சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் எழுதப்பட்டதை நீக்கக் கோரி களத்தில் இறங்கியவை இந்து நாடார் அமைப்புகள் அல்ல. நாடார் சங்கங்கள் தான் களத்தில் இறங்கின. அங்கே இந்து நாடார்களும் உண்டு; கிறித்தவ நாடார் களும் உண்டு.

சேர நாட்டு (திரு விதாங்கூர்) நாடார்கள் ஆதிகாலம் தொட்டே தீண்டத்தகாத - பார்க்கத் தகாத குலத்தவர்கள் அல்ல; அதுபோல மேலாடை அணியாதவர்களும் அல்ல. பாண்டிய நாட்டில் நாடாண்டவர்கள் நாடார் குலம் ஆனது போல, சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்தவர்கள் சான்றோர் குலத்தவர்கள் ஆனார்கள். இவர்களையே தென் திருவிதாங்கூரில் நாடார்கள் என்றனர்.

மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்த வர்கள் மக்கள் (மகன்கள்) வழி வாரிசு கொள்கையைக் கொண்டவர்கள். பிற் காலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மருமக்கள்(மருமகன்கள்) வழி யைக் கடைபிடித்தவர். இதை சேரமான் பெருமாள் மரபினர் எதிர்தததால்தான் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவால் அடக்கி ஒடுக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை புராட் டஸ்டண்டு கிறித்தவர்கள் ஆதரித்தார்கள். காரணம், அப்பொழுதுதான் அவர்கள் பிழைப்பை இங்கே நடத்த முடியும்.

மீட் பாதிரியாரால் கிறித்தவ மதத்தில் சேர்ந்த பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமைதான் கிடைத்தது. இதை அணிந்துகொண்டு பொது இடங்களில், தைரியமாக நடந்து செல்ல கிறித்தவ நாடார் பெண்களால் முடியவில்லை என்பதே உண்மை. நாடார் பெண்கள் பாண்டிய நாட்டுப் பெண்களைப் போல மேலாடை அணியவே விரும்பினார்கள். அதற்காக இந்து நாடார்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த விலை சாமானியமானதல்ல; அதைக் குறைவாக மதிப்பிட முடியாது. வைகுண்ட சுவாமி கள் என்று மக்களால் அன்புடன் அழைக் கப்படுகின்ற முத்துக்குட்டி தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களே திருவிதாங்கூரில் நாடார் பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக்கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுத்தன. நாத்திகரான முத்துக்குட்டியை இன்று கடவுளாக்கியதால் அவர் வரலாற்றின் பக்கங்களிலிருந்தே மறைந்து விட்டார்.

திருவிதாங்கூர் நாடார் பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதும் மீண்டு வந்ததுமான வரலாறு இதுதான். நாடார் கள் இழி நிலையிலிருந்து மீள முத்துக் குட்டி முதற்காரணம்; பிற்காலத்தில் நாடார்களை முழுமையாக உயர்த்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

திருவிதாங்கூர் நாடார்களின் உண் மையான நிலை இதுதான். மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இதைக் கவனத்தில் கொண்டு பாடநூலில் திருத்தம் செய்ய வேண்டும்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page2/79605.html#ixzz30hnDORTB

தமிழ் ஓவியா said...குடிஅரசுத் திரட்டு!

நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுப வத்தில், பிராமண தேசீயவாதிகளென் போரில் பெரும்பாலோர், தங்கள் சுய நலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற் றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்துக்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் சிறீமான் நாயக்கர்போன்றாரை உபயோ கப்படுத்திக் கொண்டு வந்திருக் கின்றார்களென்றும், நினைக்கும் படி யாகவே ஏற்பட்டுப்போய் விட்டது.

பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப் படுவதாய் காணப்படுகிறது.

####

குடிஅரசின் போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது.

அதாவது ஒவ்வொரு பட்டணங் களிலும் குடிஅரசுக்கு கவுரவ ஏஜெண் டுகள் முன்வர வேண்டும்.

அவர்கள் பத்திரிகையை தெருத் தெருவாய் விற்க வேண்டும்.
சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்ய வேண்டும்.

####

அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்?

சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரி யத்தை ஏன் செய்யவேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப் படியோ போகட்டும்.
நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்?
நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ்,கீர்த்தி, சம்பாதனையா?
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா?
ஒரு தலைவராவது உதவியுண்டா?
ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

####

குடிஅரசினால் தேசிய வாழ்வுக் காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டி ருப்பதும், புராண பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக் கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம்.

யார் பிராமணன்?

யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும் இருக்கிறவன் பிரா மணன் என்று சொல்லுவதும் மற்ற சமயங்களில் மான ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங் களையும் அதாவது கொலை, களவு, திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிச னைக்கும், தாசி தரிசனைக்கும் தரகு பெறு வதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை செய்வதும், இஷ்ட மில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத் தாவது உத்தியோகம் பெறுவதும்,

அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங் குவதம், தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்து வதும் தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல் தடுப் பதும்,

தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்துகொண்டு தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்காக கள்ளுக்கடை, வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில் தங் களுக்கு வேறு உரிமையும் மற்றவர் களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றது மான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம் என்று திரு. ஆச்சாரியார், கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

- தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page3/79608.html#ixzz30hnNCntq

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி துளசிதாசர்


அவர்களுக்கு அறிவு அதிகமாக இருப்பதில்லை; அவர்கள் கடுமையானவர்கள்; அவர்களிடம் மென்மையிருப்பதில்லை - என்று பெண்களைப்பற்றி துளசிதாசர் இப்படிக் கூறுகிறாரே! - என்பதற்காக நாம் அவரிடம் குறைபட்டுக் கொள்ளவில்லை. வாழையடி வாழையாக பாரத நாட்டு அறப்பாதையை வகுத்துவரும் எத்தனையோ பேர் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறி வந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்மிருதிகள் எழுதியவர்கள்; சிலர் சாது சந்தியாசிகள்; சிலர் உயர்குல ஆரியர்கள் - நாம் குறைபட்டுக் கொள்வதெல்லாம் முற்போக்கு என்ற சொல்லுக்கு இன்று தரப்படும் விளக்கத்திற்கு ஏற்ப துளசிதாசர் ஒரு முற்போக்குக் கவிதான்! என்று கூறி அத்தனை துறைகளிலும் அவருக்கு முற்போக்குகள் இதற்கு (இராமாயணத்திற்கு) தீ வைக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய செய்தி!

- இப்படி எழுதியிருக்கிறார் ஒரு இந்தி எழுத்தாளர்,

பதந்த் ஆனந்த கௌசல்யாயன். இராமாயணம் பற்றி பெரியாரும், அண்ணாவும் கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவைச் சிறுமைப்படுத்தக் கூடுமானால், சில எழுத்தாளர்கள் இராமாயணம் பற்றி கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடுமானால், இத்தகு கருத்துக்களை வெளியிட்டுள்ள புத்தமதத் துறவியை - இவர்கள் நாத்திகர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள் அல்லது பிற்போக்காளர் பட்டியலிலா?

எல்லா வகையான சூது - பாவம் - தீமை இவற்றின் சுரங்கம் பெண்ணின் உள்ளம் - துளசிதாசர் இராமாயணம் (அயோத்திகா காண்டம் 162-2)

- குயில் 2014 மார்ச் - ஏப்ரல் பக்கம் 16

Read more: http://viduthalai.in/page4/79611.html#ixzz30hnyRr3m

தமிழ் ஓவியா said...


பெரியார் வழியை அறிந்திட்டால்.....


பல்லி சத்தம்
பக்தனுக்கு பரவசம் - ஆம்
நல் சகுணம்
பல்லிக்கோ அது
உல் தினம்
என்னை பார் யோகம் வரும்
கழுதை முகத்தினிலே
அவன் தலையில்
கழுதை இருந்தும்
மழை வேண்டி
புண்ணிய திரு நாட்டில்
கழுதைகளுக்கு திருமணம்
விதவைத் தன்மை கொண்டதனாலேயே
மணக்கோலத்தில் நின்றிட்ட
மகனே தாயை வணங்க
மறுத்திடும் கயமைத்தனம்
ஆன்மீகமும் அறிவியலே என்ற
பொய்மைவாத புரட்டுத்தனம்
பக்தியால் புத்தி அழிந்து
உறவையே இழந்து நிற்கும் - மடமைத்தனம்
இவையெல்லாம் அழிந்து போகும்
இக்கணமே பெரியார் வழியை அறிந்திட்டால்
அறிவில் தெளிவு உண்டாகும்.


- ஆறுமுகம், ஆசிரியர்
ப.க. துணைச் செயலாளர், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/79613.html#ixzz30hoQ5CR9

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கம் என்ன செய்தது?


திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்வில்லா நாக்குகள்சில பேசுகின்றன.

சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில் - அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தங்கும் இடம், உணவு, இலவசக் கல்வி அளிக்க முன் வந்தனர், திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்றால், அது என்ன சாதாரணமா? இதோ (ஏப்ரல் 28) குடிஅரசு இதழில் வெளிவந்த ஒரு விளம்பரம். (1937 ஏப்ரல் 18).

தியாகராய நகர் இல்லம்

(Theagaraya Nagar Home)

தியாகராய நகர், சென்னை
ஆதி திராவிட மாணவிகளுக்கு
இருப்பிடமும், உணவும், படிப்பும், நன்கொடை

மேற்படி இல்லம் 1937 ஜூனில் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தை ஒட்டித் துவக்கப்படும்.

2. அதில், கல்வியில் விருப்பமும், வேண்டிய அறிவுக் கூர்மையும், போதிய படிப்புத் தேர்ச்சியும், உள்ள கிறிஸ்தவர் அல்லாத ஏழை ஆதி திராவிடப் பெண்களுக்கு இருப்பிடமும், உணவும், நன்கொடையாக அளிக்கப்படும். படிப்பதற்கு அவர்கள் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3. அவர்கள் 1937 ஜூலை 1உயில் கீழேகுறிப்பிட்ட வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

வகுப்பு வயது வகுப்பு வயது
4வது 10 7வது 13
5வது 11 8வது 14
6வது 12

4. ஆதி திராவிடர் முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட தகுதியுடைய ஆதி திராவிடப் பெண்களை மேற்படி இல்லத்தில் சேரத் தூண்டவும், சேர்ப்பிப்பதற்கான துணை புரியவும் வேண்டப்படுகிறார்கள்.

5. சேர்க்கை விண்ணப்பங்கள் இப்பொழுது படிக்கிற பள்ளிக்கூடத்தின் மூலமாக அனுப்பப்பட வேண்டும். அவை இப்பொழுது முதலே பெறப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும். இன்னும் வேண்டிய விவரம் தெரிய விரும்புகிறவர்கள் நேரிலாவது, கடித ம் எழுதியாவது தெரிந்துகொள்ளலாம். தபால் வழி விடை விரும்புகிறவர்கள் தங்கள் கடிதத்துடன் தங்கள் விலாசம் எழுதி முத்திரையொட்டிய உறை வைத்து அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.

65-கி, சர். மகம்மது செ.தெ. நாயகம்
உஸ்மான் சாலை, (C.D. Nayagam)
தியாகராய நகர், சென்னை மேல்அதிகாரி

குறிப்பு: (1938 இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியான சுயமரியாதை இயக்கத்தலைவர்)

குறிப்பு: கிறித்தவர் அல்லாதார் என்று குறிப்பிடப் பட்டதற்குக் காரணம் அவர்களுக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் விடுதிகள் ஏராளமாக இருந்தன.

Read more: http://viduthalai.in/page7/79616.html#ixzz30homSCXC

தமிழ் ஓவியா said...


மோடியின் தந்திரம்


உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டி யிடும் நரேந்திரமோடி மனுதாக்கலில் வெவ்வேறு சமூகத்தைச்சேர்ந்த நால்வரிடம் பரிந்துரைக்க கையொப்ப மிடத் திட்டமிட்டது. அதன்படி பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பேரன் ஒரு கையொப்பம் போட்டார். பாரத ரத்னா பட்டம் பெற்றவரும் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தவருமான பிஸ்மில்லா ஹ்கான் குடும் பத்தினரிடம் ஒரு கையொப்பமிட்டு பெற முயன்றனர். அதனை நிராகரித்து விட்டனர் - அவரின் குடும்பத்தினர்.

Read more: http://viduthalai.in/page7/79615.html#ixzz30hovPfGW

தமிழ் ஓவியா said...


பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் குழந்தைத் திருமணம்


ஜெய்ப்பூர், மே 4- இப்போதும் இந்தியாவின் பல பகுதிகளில் மூன்று வய தில்கூட திருமணம் செய் விப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல, நடைமுறையில் இருந்து வருவதுதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர் பாக தி இந்து ஆங்கில நாளேடு (மே 3) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது. நீலு (பெயர் மாற்றப்பட்டி ருக்கிறது) ஓர் எட்டு வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவ ருக்கு அய்ந்தாண்டுகளுக்கு முன்பே அதாவது இவருக்கு மூன்றுவயதாக இருக்கை யிலேயே திருமணம் நடந்து விட்டது.

இது தொடர்பாக அச் சிறுமியிடம் கேட்கையில், எனக்குத் திருமணம் நடந் தது குறித்து எனக்கு எது வுமே தெரியாது என் கிறார்.இவ்வாறு நீலு மட்டுமல்ல, ஏராளமான சிறுமிகள் இந்தமாதத்தின் (வைசாக்) அட்சயதிரிதியை நாளில் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில்ஏராளமான அள வில் குழந்தைத் திரும ணங்கள் அட்சய திரிதியை நாளன்று நடைபெற்றுள் ளன.

ராஜஸ்தான் மாநிலம், சிட்டோ கார் மாவட்டத்தில் கண்பத்கேடா என்னும் நீலு வின் கிராமத்தில் இவ்வாறு சிறுமிகள் திருமணம் செய் விக்கப்படுவது வழக்கத் திற்கு மாறான செயல் அல்ல, மாறாக இயல்பான ஒன்றுதான். ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் இத்தகைய படுபிற்போக்குத் தனமான சமூக நிகழ்வுகளை இன் றைக்கும் காண முடி யும்.

நீலுவின் கிராமத்தி லிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் நாத்தி பாய் என்னும் 57 வயது மூதாட்டி இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஏழு வயதாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றது என்றும், அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரிகள் அனைவருமே சிக்கனம் கருதி ஒருவருக்கே திருமணம் செய்விக்கப் பட்டு விடுவதுண்டு என் றும் கூறுகிறார்.

இது தொடர்பாக கொஞ் சம் விஷயம் தெரிந்த பெரி யவர்களிடம் கேட்கையில், குழந்தைத் திருமணம் இந் தக் காலத்தில் விநோதமான ஒன்றாகக் காட்சி அளிப்பது உண்மைதான் என்றாலும், இன்றைக்கும்கூட பெற் றோர் தங்கள் பெண் குழந்தைகளை மிகவும் சிறு வயதிலேயே திருமணம் செய்விக்கத்தான் விரும்பு கிறார்கள் என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்,இன்றைய தினம் பெண்குழந்தைகள் மிக எளிதாக செல்போன் மூல மாகவும், இணைய தளம் மூலமாகவும் மற்றும் பல் வேறு வழிகளிலும் மிகவும் எளிதாக மிகவும் கீழ்த் தரமான செக்ஸ் காட்சி களையும், சங்கதிகளையும் தெரிந்து கொண்டு விடு கிறார்கள்.

எனவே, அவர்கள் கெட்டுப்போவதற்குள் அவர்களுக்குத் திரும ணத்தை செய்துவிட வேண் டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கூறினார் கள். குழந்தைத் திருமணங் களைத் தடுக்கக் கூடிய விதத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஏதே னும் செய்கிறதா என்றால் குழந்தைத் திருமணங் களுக்கு எதிராக சுற்றறிக் கைகள் வெளியிடுவதோடு அவர்கள் தங்கள் கடமை முடிந்துவிடுவதாகக் கருதிக் கொண்டு விடுகிறார்கள்.

ஆயினும் குழந்தைத் திருமணங்களுக்கு எதி ராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது மிகவும் அபூர்வம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள். பன்வீர் தேவி என்பவர் குழந்தைத் திரு மணம் கூடாது என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூக ஆர்வலராவார். அவர் இது தொடர்பாக கூறுகையில், இப்போது நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இப்போதெல் லாம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் முத லில் படிக்கட்டும், பின்னர் சரியான பருவத்தில் திரு மணம் செய்து கொள்ளட் டும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இருந்தாலும், எங்கள் சமூ கம் முழுமையாக மாறிவிட் டது என்று சொல்வதற் கில்லை, இன்னும் சிறிது காலம் பிடிக்கும், என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/79710.html#ixzz30nEgnf3X

தமிழ் ஓவியா said...


நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்வு நக்கீரன் இதழுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


செய்தியாளர்: தேர்தல் பிரச்சார பயணத்தில் உங் களை நெகிழ வைத்த சம்பவம்?

மு.க.ஸ்டாலின்: நிறைய இருக்குது. என் வாகனத்துக்கு முன் னாடி இளைஞர்கள் பைக்கில் வேகமாகப் போய்க்கொண்டே பிரச் சாரம் செய்தாங்க. கையில கொடியைப் பிடிச்சிருப்பாங்க. அந்தக் கொடி கீழே விழுந்திடக் கூடாதுன்னு கவனமும் இருக்கும். அதேநேரத்தில் பைக்கும் வேகமாகப்போகும்.

அதைப் பார்க்கும்போது, எனக்கு பதற்றமா இருக்கும். ஜாக்கிரதையா பைக் ஓட்டுங்கன்னு சொல்லுவேன். அவங்க அதைக் கேட்டுக்கிட்டாலும், வெற்றி பெறணும்ங்கிற வேகத்தை பைக்கில் காட்டுவாங்க. எனக்கு வெற் றியைவிட அவங்களோட உயிரும் உடல்நலனும் தான் முக்கியமா தெரியும்.

அதேமாதிரி இன்னொரு நெகிழ்ச்சியான சம்ப வம். பெரம்பலூர் தொகுதிக்குள் வரும் பாடலூரில் விஜய்னு ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர். பேஸ்புக்கில் தீவிரமாச் செயல்படக் கூடிய தி.மு.க. தொண்டர். சென்னையில் பேஸ்புக் தி.மு.க. இளை ஞர்களை நேரில் சந்திச்சப்ப ஒரு தொண்டர், அந்த விஜய் பற்றி சொன்னார். உடனே போன் போடச் சொல்லி அவர்கிட்டே பேசினேன்.

பிரச்சாரத்திற்கு வரும்போது உங்களைப் பார்க்கிறேன்னு சொன் னேன். அதேபோல பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்றப்ப, பாடலூர்னு பெயர் பார்த் ததும் அவர் ஞாபகம் வந்தது.

பிரச்சாரம் முடிந்த பிறகு இரவு 10 மணிக்குமேல பாடலூர் போய் அவரோட எளிமையான வீட்டில் சந்தித்தேன். சக்கரநாற்காலியில் இருந்த அந்தத் தம்பிக்கும், அவரோட குடும்பத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி. எனக்கோ, இந்தநிலையிலும் ஒரு மொபைல் போனை வச்சிக்கிட்டு கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறாரே, நான் உள்பட கழகத் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்கணும்ங் கிற எண்ணம்வந்தது.

அவர்கிட்டே, நாம எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம்னு நினைக்கிறீங்கன்னு கேட்டேன். நாற்பது தொகுதியும் ஜெயிப்போம்ண் ணேன்னு நம்பிக்கையோடு சொன்னார். இந்த நம்பிக்கையை என்னுடைய பிரச்சாரம் நெடுகிலும் பெற முடிந்தது.

இவ்வாறு `நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79674.html#ixzz30nGKcV5h

தமிழ் ஓவியா said...


குற்றத்தை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ஆ.இராசா


புதுடில்லி, மே 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். காவல்துறையின ரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச் சர் ஆ.இராசா தற்போது பிணையில் உள்ளார். நாடா ளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டில்லி யில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்தி ருப்பதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளி யாகி இருந்தது. அன்றே நான் நீதிபதியை சந்தித்து அந்த பத்திரிகைச் செய் தியை அவரிடம் காட்டி னேன்.

வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ டெபாசிட் செய்யப்பட்டி ருப்பதை சி.பி.அய். கண்டு பிடித்தால் நான் இந்த வழக்கை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்கி றேன். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்.

இதை வருமான வரித் துறைக்கும், மத்திய அம லாக்கப் பிரிவு இயக்குநர கத்துக்கும், சி.பி.அய்.க்கும் சவாலாக விடுக்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/79679.html#ixzz30nGnGdp4

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!