Search This Blog

12.5.14

அன்னையர் நாள் ஏன்?எதற்கு?


ஜீலியா வார்ட் ஹோவ்

இன்று அன்னையர் நாள்! உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மே இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அனுசரிக்கப் படுகிறது.

1600களில் இங்கிலாந்து அரசு, அரசுப் பணியாளர்கள் தங்கள் தாயாருடன் கழிப்பதற்காக மே 4 ஆவது ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறி வித்தது.

தன்னை ஈன்று புரந்த தாயைச்சந்திக்க மலர்க் கொத்துகள், பழங் கள் சகிதமாகச் சென்று அன்னையரை ஆரத் தழு வினர் - பாசம் பொங்கும் நெகிழ்வின் மலர்ச்சி அது! இதற்கு மதரிங்சண்டே (Mothering Sunday) என்று அப்பொழுது பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்காவிற்கு அய்ரோப்பியர்கள் குடியேறிய நிலையில், நாளடைவில் இந்த நாள் மறைந்து போய் விட்டது.

1870இல் வட அமெரிக்காவைச் சேர்ந்த ஜீலியா வார்ட் ஹோவ் என்ற அம்மையார் (Julia Ward Howe) மீண்டும் அன்னையர் தினத்தை உலகுக்கு அறிவித்தார்.

அமெரிக்கா நாட்டில் நடந்த போரில் மரண மடைந்த  மக்கள் பரிதாப கரமாக மரணமடைந்த கொடுமை, போரின் பேரழிவு அம்மையாரின் மனித நேயத்தை உலுக்கின.

ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனைக் கொல்லுவதோ! இது என்ன கொடுமை!!

இக்கொடிய போரை எதிர்க்கும் நினைவாகத் தான் அன்னையர் தினம் என்று இந்நாளை (மே 2-ஆவது ஞாயிறு) அறி வித்தார்.

போர்க்களத்தில் நிற்கும் வீரர்களுக்காகக் குரல் கொடுக்கும் வகையில் அனைத்துலக அன்னையர்களையும் ஒன்றிணையச் சொல்லி அன்பு அழைப்பினைக் கொடுத்தார்.

உலக அமைதியையும் தாய்மையையும் பேணும் நாளாக இந்த அன்னையர் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.

என்னே மனிதநேயத் தின் மாண்பு! உலகிலேயே கலப்படமற்ற அன்பு என்பது அன்னையரை மட்டுமே சார்ந்தது. கரு வுற்று, பத்து மாதங்கள் சுமந்து, ஆளாக்கும் வரை அவர்கள் அரும்பாடுபட்டு, கடைப்பிடிக்கும் பத்தியங் கள் அளப்பரியன! குழந்தையின் முதல் ஆசிரியரும் அவரே!

இன்றைய நிலை என்ன? பிள்ளைகளின் அன்புக்கு ஏங்கும் தாயாக  அல்லவா அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்! தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னதுபோல வீட்டுக் குப் பெயர் அன்னை இல்லம்; அன்னையாக இருப் பதோ முதியோர் இல்லம்!

இந்நாளில் மறு சிந்தனை தேவையன்றோ!

------------------- மயிலாடன் அவர்கள் 11-5-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...


நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமியின் கொழுப்பு!


சென்னை, மே11- பாஜக பிரதமர் பதவி வேட் பாளர் நரேந்திரமோடியை பிராமணராக நியமிக் கிறேன் என்று அக்கட்சி யில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத் தப்பட்ட ஜாதியை சேர்ந்த வர் என்கிறார்; அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனதா கட் சியை கலைத்துவிட்டு சமீ பத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:' நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமி அப்பாயிண்ட் மென்ட்! எனக்கு இருக் கும் அதிகாரத்தை பயன் படுத்தி நான் நமோவை (நரேந்திரமோடி) பிராமண ராக நியமிக்கிறேன்.

அவ ருக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரைப் பின்பற் றுவோர் சிலர் பாராட்டி யும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளி யிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்ச கட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப் படுகிறது.

இதைய டுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு (?) தொடர சுப்பிர மணியசுவாமி முடிவு செய் துள்ளாராம். இது குறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள் ளார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80072.html#ixzz31SUc8wHo

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் முறைக்கு மரண அடி! பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பூசை செய்யலாம்! உச்சநீதிமன்றத்தின் உன்னத தீர்ப்பு


சோலாப்பூர்.மே11- பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதி மன்றம் மரண அடி கொடுத் துள்ளது. தாழ்த்தப்பட்டவர் கள் பிற்படுத்தப்பட்டவர் கள், பெண்களும் அர்ச்சக ராகலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

மகாராட்டிர மாநிலத் தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900ஆண்டுகள் பழைமைவாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக்கூறப்படும் இந்நக ரில் உள்ள கோயிலின் வர லாற்றிலேயே முதன்முத லாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் பழமை யான ஆண்ஆதிக்கம் உடைத்து நொறுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

வித்தல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலை வர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது, நூற் றாண்டுகளாக பார்ப்பனர் களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப் பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சி யாக கோயில் அறக் கட் டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக் கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகிய வற்றை அனைத்து ஜாதி யினரும் குறிப்பாக பார்ப் பனர் அல்லாதோர் செய்ய வேண்டும் என்று விரும் பினோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கோயிலின் கடவுள் சிலைகளை வித்தோபா மற் றும் உடனுறை தெய்வமா கிய ருக்மணி ஆகியோருக்கு இரண்டிலிருந்து மூன்று சிறப்புப் பூசைகள் செய்வ தற்கும். அதோடு மற்ற கோயில்களில் பூஜைகள், இந்து சமய சடங்குகள் செய்வதற்கும் நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் அர்ச்சகர் களாக பணிபுரிவதற்குத் தேவை என்று எட்டு அர்ச் சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக்கோரி இந்த வாரத்தில் விளம்பரப் படுத்தியிருந்தோம்.

அதன்படி நேர்காணல் முடித்து இந்த மாதம் 18ஆம் தேதி அன்று பணிநியமன ஆணை அளிக்கப்பட உள் ளது. இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதும், ஒப்பந்த அடிப்படையில் உள்ளது மாகும். தேர்வு செய்யப்படு பவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்கப்படும் என்று டாங்கே கூறினார்.

அறக்கட்டளை சார்பில் முறையாக உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்து வழக்கு 40ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று, கோயில் வருவாய் மற்றும் பூசைகள், சமயச்சடங்குகள் செய்வதற்கு பாத்வே, உத்பத் ஆகிய குடும்பத்தாரின் பரம்பரை உரிமைகளைத் தள்ளிவிட்டு கடந்த சனவரி யில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ் ஓவியா said...


ஆனாலும், தீர்ப்பை அமலாக்க முன் வந்ததுடன், அந்தக் கோயிலை 1968 பி.டி.நட்கர்னி குழு சிபாரிசின்படி மாநில அரசு கையகப்படுத்த முடிவெ டுத்தது. அவ்விரு குடும்பத் தார் மாநில அரசின் முடிவை எதிர்த்துவந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டாங்கோ கூறுகிறார்

மகாராட்டிரத்தின் முன் னாள் அமைச்சர்டாங்கே கூறும்போது, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை முன் னதாகவே பெற்றுவிட் டோம். மும்பையின் தென் கிழக்கில் சுமார் 350கி.மீ. தொலைவில் உள்ள கோயில் களில் கடந்த சில மாதங் களாகவே கோயில் வரு வாயை கோயிலுக்கே சேரும் படியாக மாற்றிவிட்டோம்.

அதற்கு முன்பாக இரு குடும்பத்தாரும் நாள் தோறும்நடைபெறும் பூசை களை ஏலம் விடுவார்கள். இரு அர்ச்சகர்கள் பூசைகளை தங்கள் தலைமையில் நடத்து வதாகக் கூறி, ருக்மணிக்கான பூசைக்கு ரூபாய் ஏழாயிரத் துக்கும், வித்தோபாவுக்கு பூசை செய்ய ரூபாய் இருப தாயிரத்துக்கும் ஏலம் எடுப் பார்கள்.

நாள்தோறும் கிடைக்கக் கூடிய வருவாயாக சுமார் ரூபாய் ஒன்றரை இலட் சத்தை எட்டும். சிறப்பு நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் அதிகம் கிடைக்கும் வருவாய் முழு மையாக அவர்கள் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற் போது அனைத்து வரவு களும் கோயில் அறக்கட் டளைக்கே செல்கிறது. இந்த ஆண்டு கோயில் வருவாய் அய்ந்து கோடியைத் தாண் டும் என்று விவரித்தார் டாங்கே.

எல்லா வகுப்புகளிலிருந்தும் அர்ச்சகர்கள்

கோயில் அறக்கட்டளை புனிதப்பணியாக இலவச மாக சேவை ஆற்றக்கூடிய வர்களை ஏராளமாக நிய மிக்க விளம்பரப்படுத்தி உள்ளோம் என்று கூறிய டாங்கே மிகவும் புன்னகை யுடன் விண்ணப்பதாரர்கள் எந்த வகுப்பிலிருந்தும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மராத்தாக்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் மற்றும் பிற ஜாதிகளி லிருந்தும் இருப்பார்கள் என்றார்.

பந்தர்பூரில் உள்ள கோயிலில் வித்தோபா கட வுளின் சிலை (கிருஷ்ணன் சிலை) மற்றும் உடனிருக் கும் ருக்மணி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் வழிபடக் கூடியவர்களாக உள்ளனர்.

மகாராட்டிர மாநிலம் உட்பட பிற பகுதிகளிலிருந் தும் நாள்தோறும் சுமார் முப்பதாயிரம்பேர் வருகை புரிவார்கள். ஆண்டுக்கு நான்கு முறை விழாக் கோலமாக இருக்கும்.

அந்த நாள்களில் இரண்டு மில்லியனுக்கும் மேல் மக்கள் கூடுவார்கள். கண் ணைக்கவரும் வகையில் நவராத்திரி, தசரா உள்ளிட்ட காலங்களில் பக்தர்கள் புத்தாடை, நகைகள் அணிந்து கொண்டு, விளக்குகளின் அலங்காரங்கள் அருகில் ஓடும் அமைதியான பீமா ஆற்றின் நீரோட்டத்தில் பிரதிபலிக்கும்.

மும்பையில் பிரபல மான டப்பா வாலாக்கள் என்னும் உணவு எடுத்து செல்வோர் இரண்டு இலட் சம்பேர் இந்தக் கோயி லுக்குஆண்டுதோறும் தவறாது வரும் பக்தர்கள் ஆவார்கள். நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந் தும் பாதசாரியாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரண்டு, மூன்று வாரங் களாக நடந்தே இந்தக் கோயிலுக்கு வருவார்கள்.

இந்து மாதங்களான சைத்ர (மார்ச்,ஏப்ரல்), அஷாதி (சூன்,சூலை), கார்த்திக் (அக்டோபர், நவம்பர்), மாகி (சனவரி, பிப்ரவரி) ஆகிய மாதங்களில் நடைப்பயண மாக வருவார்கள்.

அப்படி வரும்போது, சுற்றி உள்ள கோயில்களான துல்ஜா பவானி கோயில்(சத்ரபதி சிவாஜிகுடும்பத்தார் கோயில்), சிறீ சுவாமி சமர்த் கோயில், சிறீ ஷேத்திரா கோயில், தத்தாத்ரேயா கோயில் ஆகியவற்றையும் கண்டு வருவார்கள் என்று அறக்கட்டளைத் தலைவர் டாங்கே கூறினார்.

(-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11-5-2014)

Read more: http://viduthalai.in/e-paper/80074.html#ixzz31SUldCzy

தமிழ் ஓவியா said...

தேர்வில் தோல்விக்குப் பரிகாரம் தற்கொலையா?

தேர்வில் தோல்வி அடைந்த 9ஆம் வகுப்பு மாண வர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்; தன் மகன் +2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றான் என்பதற்காக தந்தை தற்கொலை என்பது போன்ற செய்திகள் வெளி வந்துள்ளன.

மதிப்பெண்கள்தான் மதிப்புக்குரியவை என்ற மன நிலையே இதற்குக் காரணம்; மதிப்பெண்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்புக் கொடுப்ப தால்தான் இத்தகைய பாதிப்புகள் கனமாக இருபால் மாணவர்களின் மண்டையில் மோதுகின்றன. அதுவும் 9ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்ததற்காகத் தற்கொலையாம். 14 வயது மாணவர்கள் இப்படியொரு முடிவுக்கு வருவதற்கு யார் பொறுப்பு?

பெற்றோர்களா? ஆசிரியர்களா? சக மாணவர்களா? ஒட்டு மொத்தமான சமுதாயமா? ஒவ்வொரு கல்வி நிறுவ னத்திலும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் (கவுன் சிலிங்) அமைப்பு அவசியம் என்பதைத்தான் இது எடுத் துக்காட்டுகிறது. மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தந்தையார் தற்கொலை என்பது மிகப் பெரிய அவலம்!

ஓட்டப் பந்தயத்தில் தோற்றவன் அப்பந்தயத்தில் தோற்றவனே தவிர, வாழ்க்கைக்கு உதவாதவன் ஆக மாட்டான் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகவே இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் 5 முறை தோல்வி அடைந்த நான் விடா முயற்சியால் உயர்நீதிமன்ற நீதிபதியானேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளாரே!

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVSlzZ4

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அரசியலாக்குவது யார்? கலைஞர் அறிக்கை


சென்னை, மே 11- முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசிலாக்குவது பற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்தவுடன், அது குறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டபோது, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தி.மு.கழகத்தின் சார்பில் சொல்வதற்கு ஏராளமான செய்திகள் இருந்தாலும், அவற்றை யெல்லாம் எடுத்துச் சொல்லாமல் ஒரே வரியில், முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.

ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி 7-5-2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் வேண்டுமென்றே வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். அதற்குப் பதிலளித்திடும் வகையிலேதான்;

27-2-2006 அன்று சொல்லப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும், கேரள அரசின் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசின் சார்பில் அம்மையார்; இனியும் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்! தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட முயற்சி - விசாரணைக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் - நிறைவுக் கட்டமாக 7-5-2014 அன்று வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றைப் பற்றியும் 8-5-2014 அன்று விளக்கியிருந்தேன்.

தற்போது (10-5-2014) ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார். ஜெயலலிதா தன்னுடைய அறிக்கைகளில் அடிக்கடி சாத்தான் வேதம் ஓதுகிறது என்று குறிப்பிடுவது வழக்கம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.

முதல் அமைச்சர் அறிக்கை

ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார். தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபொழுது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றல் மனு 13-12-1999 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேரள அரசின் சார்பில், இரு மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து, வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏதேனும் ஒரு வகையில் இருமாநிலங்களுக்கும் இடையே ஒருமித்த கருத்துஉருவாகக் கூடும் என்ற எண்ணத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி 5-4-2000 அன்று நான் திருவனந்தபுரம் சென்று கேரள முதல் வருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கேரள அரசு தனது பிடிவாதமான நிலையை தளர்த்திக் கொள் ளாததால், அந்தப் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

தமிழ் ஓவியா said...

தொடர்ந்து 19-5-2000 அன்று டில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நானும், என்னோடு அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் தம்பி துரைமுருகன் அவர்களும் கலந்து கொண்டோம்.

அப்போதும் கேரள அரசின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாததால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இடைக்கால நிவாரணம்

தமிழ் ஓவியா said...

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, நீரியல் பொறியா ளர்கள் 7 பேர் கொண்ட குழு ஒன்றினை 14-6-2000 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்தது. மத்திய நீர்வளத் துறையின் தலைவர் திரு. பி.கே. மிட்டல் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார்.

தமிழக அரசின் சார்பிலும் கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம் பெற்றனர்.இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்று ஆய்வு நடத்தி, 10-10-2000 அன்று அணையை நேரடியாகவே பார்வையிட்டு பின்னர், 2001 மார்ச் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து இடைக்கால நிவாரணமாக 142 அடிவரை உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அதனை அடுத்து மத்திய அரசு, வல்லுநர் குழுவின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் தமிழக அரசின் கருத்தினையும் கோரியது. இதற்கிடையே தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்ததற்குப் பிறகு தி.மு.கழக அரசுதொடர்ந்து எப்போதும் போல முல்லைப்பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எனினும் எல்லாவற் றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சினை - பொது மக்களின் குடி தண்ணீர்ப்பிரச்சினை என்பதால், அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது! என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/80052.html#ixzz31SW09dSz

தமிழ் ஓவியா said...


தின்றதையே தின்று திகட்டல் இல்லாமல் அன்றன்று புதுமை காண வேண்டும்!

பழகு முகாம் அய்ந்தாம் நாள்...
தின்றதையே தின்று திகட்டல் இல்லாமல் அன்றன்று புதுமை காண வேண்டும்!
புரட்சிக் கவிஞரின் கவிதையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பிஞ்சுகளுக்கு புத்தறிவு புகட்டினார்

பெரியார் பிஞ்சிடம் அளவளாவும் தமிழர் தலைவர் ஆசிரியர்

தஞ்சை, மே 11- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பழகு முகாமில், புரட்சிக் கவிஞரின் புதிய ஆத்திச்சூடியை முழுமையாக படித்துக் காட்டி தமிழர் தலைவர் பிஞ்சுகளுக்கு புத்தறிவு புகட்டி னார்.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்து மிகச்சிறப்பாக நடைபெற்ற பழகு முகாமில் அய்ந்தாம் நாளில் முத்தாய்ப்பு போல, தமிழர் தலைவர் கூடுதல் நேரத்தை பெரியார் பிஞ்சுகளிடம் செலவழித்தார்.

சுழற்சி முறையில் தொடரும்பயிற்சி

8.5.2014 அன்று இரவே பெரியார் பிஞ்சுகளிடம் மறுநாளான 9.5.2014 அன்று அனைவரும் ஆசிரியர் தாத்தா முன்னிலையில் ஆளுக்கொரு மரம் நடப்போகிறீர்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. தாங்களும் மரம் நடப் போகிறோம் என்கிற ஆவலில், அதைப்பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்.

கராத்தே பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பெரியார் பிஞ்சுகள்

வழக்கம் போல நடைப்பயிற்சி முடிந்து, 209 பேரும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் உள்விளையாட்டரங்கில் யோகாவும், அதற்கெதிரில் கராத்தேவும், வெளி விளையாட்டரங்கில் சிலம்பமும், Knowledge Centre-க்கு பின்புறம் ஏரோபிக்சும் முறையே முரளீதரன், எட்வின், சிலம்பம், அய்யப்பன், கோவிந்தன் ஆகியோர் பயிற்றுநர்களாக இருந்து பிஞ்சுகளுக்கு கற்றுக் கொடுத்தனர்.

பயிற்சி முடிந்த பிறகு, அனைவரும் கியானி ஜெயில்சிங் நட்டு வைத்த ஆல மரத்தினருகே அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கருகில் பிஞ்சுகள் அனைவரும் மரம் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர் தலைவர் நடைப்பயிற்சி முடிந்து வந்ததும், தன் கையிலிருந்த கைக்குட்டையை அசைத்து அனுமதி கொடுத்தார்.

பிஞ்சுகள் அனைவரும் ஆவலுடன் தங் களை பெரிய மனிதர்களாக எண்ணிக்கொண்டு பொறுப் புடன் மரக்கன்றுகளை நட்டனர். சிலர் கூழாங்கற்களை எடுத்து வந்து நட்டு வைத்து மரக்கன்றைச் சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தினர்.

பெரியார் பிஞ்சுகளுக்கு யோகா பயிற்சி

இந்த நிகழ்வில் கவிஞர், சிவ.வீரமணி, பேரா.பர்வீன், பதிவாளர் கோவிந் தராஜூ, பேரா.தவமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் 60,000 மரங்கள்!


தமிழ் ஓவியா said...

மரம் நடும் பெரியார் பிஞ்சுகள்

மரக்கன்று நடுவதற்கு முன்பு துணைவேந்தர் பிஞ்சு களிடம் சில தகவல்களை பரிமாறிக் கொண்டார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தினுள் 60,000 மரங்களுக்கு மேல் உள்ளதாகவும், அனைத்தும் இப்பொழுது பெரியார் பிஞ்சுகள் நட்டது போல, இந்த வளாகத்திற்குள் வந்தவர்கள் நட்டு வைத்தது என்றும், மழை பெற, புற்றுநோய் வராமல் தடுக்க மரம் நடுவதுதான் சிறந்த வழி என்றும் குறிப்பிட்டார்.

குழு நிழற்படம்

அதைத் தொடர்ந்து காலை உணவு முடிந்த பிறகு முத்தமிழ் அரங்கில் குழு நிழற்படம் எடுப்பதற்கு விரி வான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிஞ்சுகளை உரிய இடங்களில் அமர வைத்து குழு நிழற்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழர் தலைவருடன் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பேரா.பர்வீன் மற்றும் பழகு முகாம் - ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து ஏ பிரிவு பெரியார் பிஞ்சுகள் சிக்மண்ட் பிராய்டு அரங்கத்திற்கும், கே பிரிவு பெரியார் பிஞ்சுகள் அய்ன்ஸ்டீன் அரங்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பெரியார் திரைப்படம்

தஞ்சை வல்லம் - பெரியார் பிஞ்சு பழகு முகாமில் பெரியார் திரைப்படத்தினை ஆவலுடன் பார்க்கும் பெரியார் பிஞ்சுகள்

பிஞ்சுகளின் நாடகத்தைக் கண்டுகளித்த தமிழர் தலைவர்

சிக்மண்ட் பிராய்டு அரங்கில் திருச்சியைச் சேர்ந்த ஆர்.லலிதா, வி.தனலட்சுமி ஆகியோர் பிஞ்சுகளுக்கு நினைவுத்திறனை வளர்க்கும் வகையில் விளையாட்டு களையும், பிஞ்சுகளோ சத்துணவு முக்கியம், புகைப் பிடித்தல் தவறு, குடி குடியைக் கெடுக்கும் - போன்ற கருத்துகளில் நாடகங்களை தயார் செய்து மேடையேறி நடித்துக் காட்டி அசத்தினர். தலைமைச் செயற்குழு முடிந்த பிறகு, அங்கு வருகை தந்த தமிழர் தலைவர் பிஞ்சுகளின் நாடகங்களை கண்டு களித்தார்

தமிழ் ஓவியா said...

அறிவியல் அணுகுமுறை

இதேநேரத்தில், அய்ன்ஸ்டீன் அரங்கில், வாழ்க்கை யில் அறிவியல் அணுகுமுறை தேவை என்பதை பல் வேறு செயல்முறைகள் மூலம் சேதுராமனும், சுற்றுச் சூழல் சீர்கேடுபற்றியும் அவற்றை தவிர்க்கும் விதம் பற்றியும் பிபிடி மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.தயாள் நாயகியும், மின்சார சக்தியை மிச்சப்படுத்துவது பற்றியும், மாற்று சக்தியின் அவசியம் பற்றியும் பிபிடி மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வினோத் குமார் ஆகியோர் பிஞ்சுகளுக்கு பயனுள்ள கருத்துகளை கேள்வி - பதில்கள் மூலமாகவும் கற்று கொடுத்தனர்.

திருத்தப்பட வேண்டியது பிஞ்சுகளல்ல... பெற்றோர்களே!

சிக்மண்ட் பிராய்டு அரங்கில், பிஞ்சுகள் நடத்திக் காட்டிய நாடகங்கள் முடிந்தவுடன் தமிழர் தலைவரின் வகுப்பு தொடங்கியது. தொடக்கத்திலேயே நான் பேச வரவில்லை. உங்களது கருத்துகளை கேட்பதற்காக வந் திருக்கிறேன் என்று பிஞ்சுகளிடம் சொல்லி, அவர்களை மேடைக்கு வரச் செய்து அவர்களது கருத்துகளை கேட்டார்.

அவர்களது கருத்துகளைக் கேட்ட பிறகு, பெற் றோர்களுக்கும் இதுபோல ஒரு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பிஞ்சுகளின் பலத்த கைத்தட்டல் களுக்கிடையே அறிவித்துவிட்டு, தொடர்ந்து பேசிய அவர் திருத்தப்பட வேண்டியவர்கள் பிஞ்சுகளல்ல.. பெற்றோர்கள்தான் என்று சொன்னவுடன், பிஞ்சுகளின் முகங்கள் மலர்ந்து பிரகாசித்தன. இந்தச் சொற்றொ டருக்கு அவர்களிடம் ஏகோபித்த வரவேற்பும் இருந்தது.

மம்மி- டாடி வேண்டாம்; அப்பா! அம்மா!வே போதும்

தொடர்ந்து பிஞ்சுகளின் கருத்துகளை கேட்கும்போது, சிலர் மம்மி - டாடி என்ற வார்த்தைகளை பயன் படுத்தியதைக் கேட்டு, இங்கிலீசில் பேசும்போது, இங்கிலீசிலேயே பேசிக்கொள்வோம், தமிழில் பேசும் போது அப்பா, அம்மா என்றுதான் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புரட்சிக்கவிஞரின் புதிய ஆத்திச்சூடி

அதைத் தொடர்ந்து அனைவரும் உறவினர் என்று தொடங்கி வையம் வாழ வாழ் என்று முடியும் புரட்சிக் கவிஞரின் புதிய ஆத்திச்சூடியை சொல்லி, பிஞ்சுகளை அதை திரும்பச் சொல்லச் செய்து, பிஞ்சுகளை மகிழ் வித்து தானும் மகிழ்ந்தார். மேலும் அவர், தின்றதையே தின்று செவிபடுதல் இல்லாமல் அன்றன்று புதுமை காண வேண்டும் என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளைச் சொல்லி, அதற்கு விளக்கமளித்து பிஞ்சுகளுக்கு வாழ்த்துச் சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.

முதலுதவிப் பயிற்சி

மதிய உணவிற்கு பிறகு பிஞ்சுகளுடன் பேரிடர் இன்னல் தற்காப்பு, முதலுதவி அடிப்படை பயிற்சி மாநில பயிற்றுநர் மாணிக்கம் அவர்கள் பன்னிரெண்டு விதமான பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார். மாலை விளையாட்டுக்குப் பிறகு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் 26 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இரவு உணவுக்கு பிறகு சனிக்கிழமையுடன் (10.5.2014) பழகுமுகாம் முடியப்போகிறதே என்று ஏறக்குறைய அனைவரும் ஆடிப்பாடித் திளைத்தனர். தொடர்ந்து ஆவலும், சோகமுமாக ஒருங்கிணைப் பாளர்கள் மூலம் தங்கள் தங்கள் பெற்றோர்களிடம் கைப்பேசியில் பேசி பழகு முகாமின் சிறப்புகளைப் பேசிப் பேசி மகிழ்ந்தனர்.

ஒதுங்கி ஒதுங்கி திரிந்த சிலரும்கூட, மடை திறந்த வெள்ளம் போல பொங்கிப் பாய்ந்து, தாங்கள் இயல்பு இதுவல்ல என்று பெற் றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

இன்னும் சிலரோ, மருகி மருகி என்ன செய்வது எப்படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத் துவது என்று தெரியாமல், உருவாகிவிட்ட இந்த நட்பு பந்தத்தைத் தாங்கள் தங்கியிருக்கும் அறையின் பொறுப் பாசிரியருடனும், தங்களை இரவில் சந்தித்து அளவளா விச் செல்லும் ஒருங்கிணைப்பாளர்களுடனும் நிழற் படம் எடுத்து தீர்த்துக் கொண்டனர். எது எப்படியோ, பழகு முகாம் - பிஞ்சுகளிடம் புத்தறிவை கொடுத்துள்ளது.

பெரியார் பிஞ்சுகளுக்கு - வெள்ளரிப் பிஞ்சு

நீடாமங்கலம் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்து (9.5.2014) பெரியார் பிஞ்சுகளுக்கு வெள்ளரிப்பிஞ்சு அளித்து மகிழ்ந்து மகிழ்வித்தார். இவர்தான் தஞ்சை சிவகங்கைப் பூங்காவில் பிஞ்சுகள் அனைவருக்கும் அவித்த சுண்டலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கலியாண சுந்தரத்துடன் அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குரு.செல்வமணி, குடந்தை அரசு ஆயர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அன்பழகன், சேகர் ஆகியோரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

புது உலகைக் காட்டி யுள்ளது. ஏராளமான நண்பர்களைக் கொடுத்துள்ளது. வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை, நம்பிக்கையை ஊட்டி யுள்ளது.

ஆனாலும் இந்த வாய்ப்பை இன்றோடு தவற விடுகிறோமே என்கிற ஊமை வலி ஒவ்வொருவரின் பிஞ்சு உள்ளத்திலும் இருப்பதைக் காண முடிந்தது. இந்த உணர்வை அவர்கள் தமிழர் தலைவரின் வகுப்பிலேயே கூட, நாங்கள் இங்கேயே தங்கி விடுகிறோம் என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

இப்படிப்பட்ட சுவையான உணர்வுகளுடன் நண்பர் களுடன் அளவளாவியபடியே உறங்கப் போயினர்.

Read more: http://viduthalai.in/page-4/80065.html#ixzz31SX3AOI6

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/80150.html#ixzz31e7hzoMv

தமிழ் ஓவியா said...


அரசு கோப்புகள் கன்னடமொழியில் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவேன் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, மே 13- அரசு கோப்பு களில் கன்னட மொழியில் எழுதாமல், ஆங்கிலத்தில் குறிப்பெழுதினால் கையெழுத்து போடமாட்டேன் என்று கருநாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கன்னட வளர்ச்சி ஆணையம் கன்னட மொழி பயன்பாடு பற்றி அறிக்கை தயாரித்து இந்த அறிக்கை கருநாடகா மாநில முதலமைச்சர் சித் தராமையாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு, ஆட்சி மொழி பற்றி பொது மக்களும், அதிகாரிகளும் கொண் டுள்ள எண்ணம் முதல்வர் சித்தராமை யாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆங்கிலம்

கன்னட மொழிக்கு ஆட்சி நிர் வாகத்தில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். எனவே அர சாங்க கோப்புகளில் கன்னட மொழி பயன்படுத்தப்படாவிட்டால் அந்த கோப்புகளை பார்வையிட்டாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட லாம் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதுபற்றி கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கன்னடியர்கள் அல்லாத அதிகாரி கள் அனைவரும் கன்னட மொழி யைக் கற்க வேண்டும் என்றும் கடித தொடர்புகள் கன்னட மொழியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்றும் நான் கூறியுள்ளேன்.

தமிழர்கள்

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த சில கோப்புகள் என்னிடம் வந்தன. நான் அதிகாரிகளை அழைத்து, கோப்புகள் கன்னட மொழியில் இல்லாவிட்டால் நான் அவற்றை திருப்பி அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்தேன். 1980 ஆம் ஆண்டுகளில் கன்னட காவலு சமிதி தொடங்கப்பட்டது. அப்போது முதல், நிர்வாகத்தில் கன் னட மொழியை பயன்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 300-க் கும் மேற்பட்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கு தங்கள் மொழியின் மீது ஒரு பற்றுதல் உள்ளது. நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி னால் அவர்கள் தமிழில் பதிலளிக் கிறார்கள். ஆனால் இங்கு பெங்களூருவில் நிலைமை அப்படியில்லை. நமது மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் நாம் கன்னட மொழி உணர்வை உரு வாக்க வேண்டியது அவசியமாகும். - இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/80163.html#ixzz31e9C9rIS

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானதே! கேரளாவை சேர்ந்த முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் பேட்டி
t

திருவனந்தபுரம், மே 12-முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண் டும் என்ற உச்சநீதிமன் றத்தின் உத்தரவு பாராட்டத் தக்கது என்று கேரளாவைச் சேர்ந்த முன் னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூறினார்.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.வி. ஆனந்த் தலைமையில் இரு மாநில நீதிபதிகளைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு வில் தமிழகம் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சும ணனும், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமசும் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த வாரம் உச்சநீதி மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் முல்லைப் பெரி யாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. அணை விவகாரத்தில் நீதி பதி கே.டி.தாமஸ் கேரளா வுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி இடுக்கியில் அவரது உருவபொம்மை யும் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி கே.டி.தாமஸ் கோட்டயத் தில் அளித்த சிறப்பு பேட்டி வருமாறு: உச்சநீதிமன்றத் தின் 11 நீதிபதிகளும், 7 நீர்ப் பாசனத்துறை தலைமை பொறியாளர்களும், இந்தி யாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர்களும் சேர்ந்து முல்லைப் பெரி யாறு அணையை பரிசோதித் ததில் அந்த அணை பலமாக இருப்பது தெரியவந்தது. அதனால் தான் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் மட்டக் குழு

2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் தான் இப்போதைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோச னைப்படி தான் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. நான் உட்பட 3 உச்சநீதிமன்ற நீதிபதிகளும், தலைசிறந்த பொறியாளர்களும் அந்தக் குழுவில் இடம் பெற்றி ருந்தோம்.

இந்தியாவில் எந்த அணையிலும் நடத்தாத வகையில் முல்லைப் பெரி யாறு அணையில் பரிசோ தனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் அணை பலமாக இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. அணை கட்டிய பின்னர் இதுவரை 116 முறை அணைப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அணையில் ஒரு சல்லிக்கல்லுக்கு கூட அந்த நில அதிர்வுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த அறிக்கை கேர ளாவுக்கும் அளிக்கப்பட் டது. 7 தலைமை பொறி யாளர்கள் தான் அணையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு அரசின் வழக்கு

1979ஆம் ஆண்டு மோர்வி அணை உடைந்த பின்னர்தான் முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அணையை பலப்படுத்தும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட் டன.

இவ்வாறு பலப் படுத்திய பின்னர் தான் அணையின் உயரத்தை 155 அடியாக உயர்த்தக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கேரளா தமிழ்நாட்டின் கோரிகையை நிராகரித்தது. இந்த வழக்கில் தான் கடந்த 2006ஆம் ஆண்டு நீர்மட் டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

ஆனால் கேரளா வேறு ஆய்வு எதுவும் நடத்தாம லேயே சட்டசபையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்தது. 2 மாநிலங் களுக்கு இடையே பிரச் சினை ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றம்தான் தீர்ப் பளிக்க வேண்டும். அவ் வாறு விதிக்கப்பட்ட தீர்ப் புக்கு எதிராக ஒரு மாநிலம் தன்னிச்சையாக சட்டத்தை நிறைவேற்றினால் அது இந்தியாவின் இறையாண் மையை பாதிக்கும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை பலமாக உள் ளது உறுதி செய்யப்பட்டுள் ளது. கேரளாவுக்கு இனியும் அணையின் பலம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந் தால் அதை தீர்ப்பதற்காகத் தான் மூவர் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்தக் குழுவில் கேரளா தனது கருத்துக்களை தெரிவிக்க லாம். அனைத்து தரப்பு ஆய்வுகளையும் பரிசீலித்து அளிக்கப்பட்டுள்ள உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை நான் மனதார பாராட் டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80089.html#ixzz31eAERgtw

தமிழ் ஓவியா said...


மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி


முக நூலில் சரவணப்பெருமாள் தெரிவித்துள்ள செய்தி:

வைகோ அவர்களே உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் - பாஜக வுடன் கூட்டணி வைக்கும் முன்பே - உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஆர்.எஸ்.எஸ்.யில் அய்க்கியமாகி - ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டு இருக்கின்றனர் !

உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடி மேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் - ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.

சீலக்கம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவர். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர் களுக்கு - பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAS2enb

தமிழ் ஓவியா said...

இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா??

இலங்கை எம்.பி. கேட்கிறார்?

இலங்கையில் கடந்த கால வரலாறு தற்போது மீண்டும் திரும்புகிறது. சுற்றி வளைப்பு, கொலை, கற்பழிப்பு என்று மீண்டும் வரும் நிலையில் ஈழத் தமிழர்கள் எங்கே போவது?

- சீனித்தம்பியோகேஸ்வரன் இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAaDeGe

தமிழ் ஓவியா said...

மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். செயல் படுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதிக்கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. அன்றைய தினம் மாலை டில்லி வந்த நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டில்லியில் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் நாக்பூரில் உள்ளது. அங் கிருந்து தான் பாஜக தலைவர்கள் இயக்கப் படுகிறார்கள். பாஜக பிரதமர் வேட்பாளருக்கு 56 அங்குல மார்பு மட்டுமே உள்ளது.

அவரை இயக்குவது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தான். 2004, 2009 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்தது. அதே போல் இப்போதும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். என்றார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAfkNup

தமிழ் ஓவியா said...


மே 12: உலகச் செவிலியர் தினம்


பொது மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலகச் செவிலியர் தினமாக (International Nurses Day) ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினம் கொண்டாட காரணமாக இருந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் லண்டன் நகரில் 1820-ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய வாழ்க் கையைத் துவக்கினார்

அப்போது ருஷ்யா கிரிமியப்போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் காயமுற்று கவனிப்பார் இன்றி இருப் பதைக் கேள்விப்பட்டு போர் நடக்கும் பகுதிக்குச் சென்று காயமுற்ற வீரர்களுக் காக முழுநேர சேவையில் இறங்கினார். காயங்களுக்கு மருந்திடுதல், உடை மாற்றுதல், இருக்கைகளை சரி செய்தல் ஆறுதலான சொற்களைக்கூறுதல் என்று நோயாளிகளுடனேயே முழு நேரத் தையும் செலவிட ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று தொண்டாற்ற தொண்டு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கும் பயிற்சியளித்தார். போர் முடிவுற்ற பிறகு தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பியதும், பிரிட்டன் அரசு இவரின் சேவையைப் பாராட்டி கவுரப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்தின் மகாராணிக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்ற பெண்ணாக மாறினார். அரசும் பல சமூக நிறுவனங்களும் பெருமளவில் பொன்னும் பொருளும் வழங்கினர்.

இவற்றை வைத்துக்கொண்டு தரமான செவிலியர் பயிற்சிப்பள்ளி ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த செவிலியர் பயிற்சிப் பள்ளி இன்று உலகப்புகழ் பெற்ற பிளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

சர்வதேச செவிலியர் கழகம் நைட்டிங் கேல் அம்மையாரின் சேவையை உலகமே போற்றும் வகையில் 1974-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான மே 12 -ஆம் தேதியை சர்வதேச செவி லியர் தினமாக அறிவித்தது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page1/80094.html#ixzz31eArVYzP

தமிழ் ஓவியா said...


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்

அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனி மருத்துவர்கள்.
சரி, கான்டாக்ட் லென்ஸ் எப்படி ரத்த அழுத்தத்தை அளக்கிறது?

2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் சென்சிமெட் எனும் ஒரு மைக்ரோ சென்சாரை கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை அளந்து சொன்னார்கள். இந்தக் கருவியின் பெயர் டிரைகர் ஃபிஸ்'. கண்ணில் அளக்கப்படும் அய்ஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்றப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப் பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொண்டே இருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால் குளுக்கோமா நோய் வந்து கண்ணைக் குருடாக்கிவிடும்.

ஆகவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த அளவை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு டிரைகர்ஃபிஸ் கருவி பயன்படுகிறது. இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்தத்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தைக் கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர்மனி மருத்துவர்கள் ஸ்டோட் மியாஸ்டர் மற்றும் ஜோனஸ் ஜோஸ்ட். இதற்கு கோல்டு மேன் கான்டாக்ட் லென்ஸ்' என்று பெயர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் 'சென்சிமெட்' சென்சாருடன் ஆன் டெனா, கெப்பாசிட்டர், கன்ட்ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை அளக்க முடியும் என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரிசோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த 'கூகுள் கான்டாக்ட் லென்ஸ்' இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும்.Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCEkgn7

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய: தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

உடல் எடை குறைய: சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக் கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப் பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவ துடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த: இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCNmtxN

தமிழ் ஓவியா said...தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் கேரட்

கேரட்டில் உள்ள ஏ' வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு களை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானமாகும். எலும்புகள் உறுதியாகும்.

முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக வோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCVNkc1

தமிழ் ஓவியா said...

கோடை வெப்பத்தை தணிக்க உதவும் இளநீர்

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர் கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4 கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் தாதுஉப்புகள் மிக அதிக அளவிலும், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் மிக குறைந்த அளவிலும் காணப்படும்.

இளம் குரும்பைகளில் இளநீர் சர்க்கரை வகைகளில் குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சத்துகள் காணப்படு கின்றன. தேங்காய் முதிர்ச்சி அடையும் போது இந்த சத்துகள் குறைகின்றன. 6 மாத வயதுடைய தென்னை இளநீரில் 4.6 சதவீதம் சர்க்கரையும், முற்றிலும் முற்றிய தேங்காயில் 2 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. இளநீரில் உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், மக்னீசியம், குளோரின் போன்றவை உள்ளன.

அதில் பொட்டாசியம் மற்றும் தாதுஉப்புகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீர் அதிக அளவு சீராக வெளியேற உதவுகிறது. புரதத்தின் அளவு தேங்காய் முதிர்ச்சி அடையும் போது அதிகமாகிறது. இளநீரில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், அர்ஜினைன், அலனைன், சிஸ்டைன், செரின் அதிக அளவில் காணப்படுகிறது. இவை பசும்பாலில் உள்ளதைவிட அதிகம் ஆகும். இளநீரில் புரதத்தின் அளவு 0.13 சதவீதம், முதிர்ச்சி அடைந்த தேங்காய் நீரில் புரதம் 0.29 சதவீதம் உள்ளது. 8 மாத தேங்காய் பருப்பில் 6.3 சதவீதம் புரதசத்து உள்ளது.

செரிமான கோளாறுகளில் அவதியுறும் சிறு குழந்தை களுக்கு இளநீர் கைகண்ட மருந்தாகும். உடலில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் அதிகம் இளநீரில் உள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை ஆகியவற்றால் ஏற்படும் அரிப்புக்கு நல்ல மருந்து. காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம். குடலில் உள்ள புழுக்களை அழிக்கிறது. சிறுநீரக நோய்களை கட்டுப் படுத்துகிறது. முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல ஊட்டசத்து மிக்க பானமாகும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCcixm6

தமிழ் ஓவியா said...


குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


வேர்களுக்கு பழுது ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர் சித்தார்த்தன்

குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


தஞ்சை, மே 12- தஞ்சை மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் கனல் கவிஞர் துரை.சித்தார்த்தன் எழுதி தோன்றும் வெளிச்சத்தின் விழுதுகள் என்றும் உன்னோடு ஆகிய கவிதை குறுந் தகடுகள் வெளியீட்டு விழா 10.5.2014 அன்று மாலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. உரத்தநாடு மாணவி ஜெயசிறீ வரவேற்பு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் உரையாற்றினார் குறுந்தகடுகளை அறிமுகம் செய்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி உரத்தநாடு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.காந்தி, தஞ்சை நகர் மன்ற முன்னால் உறுப்பினர் இரா.ஜெயபால் வெற்றித் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் இரா.செழி யன், முத்தமிழ் முற்றம் நிறுவனர் ந.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் முனைவர் சி.செந்தமிழ்குமார், பேராசிரியர் திலீப்குமார், மண்டலத்தலைவர் வெ.ஜெய ராமன். மாநில ப.க பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத்தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், அமெரிக்கா டெக்ஸ்சஸ் பல்கலைக் கழக பேராசிரியர் பெரியார் பண்ணாட்டு மய்ய தலைவர் இலக்குவன் தமிழ், தஞ்சை பாரதி கல்வி குழுமச்செய லாளர் புனிதா கணேசன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துச் செய்தியை கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் படித்தார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறுந்தகடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கவிஞர் துரை.சித்தார்த்தன் மிகவும் துடிப்பும் உணர்ச் சியும் மிகுந்தவர் அவரின் படைப்பில் வெளிவந்துள்ள கவிதை குறுந்தகடுகளை இன்று பார்த்து மகிழ்ந்தேன். அவர் தோன்றி கவிதை பாடும் விதத்தை படக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அவர் ஒரு நெருப்பு கவிஞர், அவரோடு ஈடுகொடுத்து வாழ்க்கை நடத்தும் அவரது துணைவியார் மகேஸ்வரியைத்தான் அதிகம் பாராட்ட வேண்டும் இந்த ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத் தாலும் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் இருந்தபொழுது அவரது இல்லம் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தேன். தற்பொழுது நல்ல உடல் நலம் பெற்று இந்த குறுந்தகடுகள் வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். இந்த அளவிற்கு அவரை பாதுகாத்து உயர்த்தியுள்ள அவரது துணைவியார். மகேஸ்வரியைத்தான் பாராட்ட வேண் டும்.

கவிஞர் சித்தார்த்தன் அவர்கள் என்றும் உன்னோடு என்ற குறுந்தகடில் அவர் பல துறைகளை காதல், வீரம், கடமை என பல இருந்தாலும் கடைசியில் என்றும் உன்னோடு என்று, என்னுடன் எப்பொழும் இருப்பார் என்று உணர்த்தியுள்ளார். நமக்கெல்லாம் தலைவர் பெரியார் ஒருவர் தான். பெரியாருக்கு தொண்டர் சித் தார்த்தன் நாம் எப்பொழுதும் பெரியாரோடு இருப் போம். வெளிச்சத்தின் விழுதுகள் குறுந்தகடில் பெரிதும் என்னைப்பற்றி எழுதியுள்ளார் ஒரு மனிதனுக்கு பெரிய தண்டனை பாராட்டை கேட்டுக்கொண்டு இருப்பது தான். கவிஞர் துரை சித்தார்த்தன் வேருக்குப் பழுது ஏற்படுத்த, வேரையே சாய்க்க நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர். அவர் நல்ல உடல் நலத் துடன் வாழ்ந்து சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும் என மேலும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80101.html#ixzz31eCufnln

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு

புதுடில்லி, மே 14- ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தவரை மூன் றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்து இந்தியக் குடிமக்களுக்குரிய, அரச மைப்பு வழங்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப் பட வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற் படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள் ளிட்ட அனைத்து உரிமை களும் இதர பிற்படுத்தப் பட்டோருக்குரிய ஒதுக் கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் சார்பில் கூறப்படுவதா வது: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மத்திய அரசுக்கு மூன்றாம் பாலி னத்தவரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலுக் குள் சேர்த்துக்கொள்ள தீர் மானம் நிறைவேற்றி உள் ளோம்.

பிறப்பில் எந்த வகுப்பினராக இருந்தா லும் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக் குள் கொண்டு வரப்படு வார்கள். அனைத்து மூன் றாம் பாலினத்தவர்களும் இதர பிற்படுத்தப்பட் டோர் பெறும் அனைத்து உரிமை களையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவை அமைச்சரவை கூடி எடுக்கும். மூன்றாம் பாலினத் தவர் தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டிய லில் உள்ளபடி 23,019பேர் மற்றவர்கள் பட்டிய லில் பதிவாகி உள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் எந்த ஒரு வகுப்பையும் இணைப் பதற்கான ஆலோச னையை அரசுக்கு ஆணை யம் வழங்கிவருகிறது. அதனால், மத்திய சமூக நீதி மற்றும் நிர்வாகத் துறையின்கீழ் செயல் படும் ஆணையத்துக்கு துறைரீதியாக உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட் டுதலின்படி ஆணையத் தின் பரிந்துரையைக் கோரி கடிதத்தை அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமைகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஹிஜ் ராக்கள், யூனுச்சுகள், கோத் திகள், அரவாணிகள், ஜோகப் பாக்கள், சிவசக்திகள் என்று பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டு வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்குரிய உரி மைகளைப் பெறுவார்கள் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80212.html#ixzz31kKvtU8c

தமிழ் ஓவியா said...


நரகம் ஒரு சூழ்ச்சி


நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

- (விடுதலை, 29.2.1948)

Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d

தமிழ் ஓவியா said...


பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

- குடந்தை கருணா

கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?

பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?

அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.

இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!

ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj