Search This Blog

7.5.14

தொழிலாளர்களின் சிந்தனைக்கு . . . பெரியார்



சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்டவேயாகும்.
இதைத் தவிர, எங்களுக்கு பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காக தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்துவிட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு, சோசியலிஸ்ட்டு, தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடி தடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றைய தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக்கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டுவருவதின் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலை திட்டங்களுமாகும்.

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடியவில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும். அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி-பட்டம் ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?

சமுதாயம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால் நமது மதமிருக்கிறதே அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்கு வதில் தீவிரப் பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்வித தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்டுகளும், சோஷியலிஸ்டுகளும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக் கொள்கைக் கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்டுகளும், சோசியலிஸ்டுகளும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.

              -----------------------------22.05.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய பேருரையிலிருந்து..

56 comments:

தமிழ் ஓவியா said...

எனக்குத் தெரியும் எல்லாம்...


ஒரு நாள்...
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்...
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்...
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்...
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்...
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்....
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்...
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்...
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்...
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்...
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்...
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்...
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்...
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்...
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்...
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்...
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்...
எல்லோரும்...
எல்லோரும்...
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்...
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்...
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்...
அனைவரும்...
அனைவரும்...!
நிறுத்து...
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்...
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

- சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

கடவுள் காலியாகிறது - விக்ரமன்

மதவாதிகளும் கடவுள் நம்பிக்கைவாதிகளும் சொல்வது, உலகைக் கடவுள் படைத்தார்; உயிர்களை அவரேதான் உண்டாக்கினார் என்பதுதான். எப்படி இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்கிறார்கள். அந்த நம்பிக்கை நூறு கோடிப் பேர்களுக்கு மேல் இந்த உலகத்தில் வரவில்லை என்பதைக் கூறினால், மனம் திரும்பு, என் மதத்திற்குள் வந்து பார் என்று தங்கள் மடமையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் வேண்டுகோளின்படியே, அங்கே போய்ப் பார்த்தால் வெறும் புளுகுகள்! ஆகட்டும் என்றாராம் கடவுள். அனைத்தும் ஆகிவிட்டன என்கிறது அந்தப் புத்தகம். தட்டையாக இருந்த உலகம் மேலும் கீழுமாக ஆடாமல் இருப்பதற்காக (பேப்பர் வெயிட் வைப்பதைப் போல) மலைகளை ஆங்காங்கே வைத்தார் என்கிறது ஒரு புத்தகம். அருகில் அமர்ந்து பார்த்ததைப் போல் கூறுகிறாயே என்று கேட்டால் எல்லாம் நம்பிக்கைதான் என்கிறார்கள்.

எப்படி உலகம் வந்தது, எப்படி உயிர்கள் வந்தன என்பதைக் கண்டறியும் அறிவும் ஆற்றலும் வளராத காலத்து மனிதன் வேண்டுமானால் நம்பலாம்! இன்றைய மனிதன் எப்படி நம்பலாம்? என்ன காரணி என்று பார்த்தால் அறியாமை என்றுதான் பதில் கிடைக்கிறது, அறிவுள்ளோரின் அறிவுக்கு!

தட்டை அல்ல, உருண்டை!

உலகம் தட்டை என்ற கருத்தைத் தகர்த்துக் கடவுளின் படைப்பான உலகம் என்ற மடத்தனத்தைப் பொசுக்கினார் மெகல்லன் என்பவர். கி.பி.1519ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் செவில்லி துறைமுகத்தில் இருந்து கப்பலில் மேற்கே பயணப்பட்டு 1522 செப்டம்பர் 7இல் மீண்டும் செவில்லி துறைமுகத்திற்கே திரும்பி வந்தார். புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்ததன் மூலம் உலகம் தட்டையல்ல, உருண்டை என்பதைச் செயல்மூலம் எண்பித்த பிறகுதான் கடவுளின் உலகம் தட்டை என்பது தகர்ந்தது.

தமிழ் ஓவியா said...

உருண்டையான உலகம் உருவானது எப்படி? 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரும் வெடிப்பு (BING BANG காரணமாக உலகம் உருவானது என்று பெல்ஜியம் நாட்டவரான அல்ஃப் ஜார்ஜ் லெமாய்த்தின் என்பவர் கண்டறிந்து கூறினார். இதன் விளைவாகத்தான் உலகம் உருவானது எனும் கருத்து தோற்றம் கொண்டது (HYPOTHESIS). இது முடிவானது அல்ல. அறிவியல் முடிவில்லாதது. நாளும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆய்வுகளின் வெளிப்பாடுகளின் மெய்ம்மை, அவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் உண்மைதான் அறிவியல் முறை! இதனையே பலரும் பலமுறைகளில் ஆய்ந்து ஒருமனதாக ஏற்றுக் கொண்ட பின்தான் கண்டுபிடிப்பு என்பதாக ஏற்கப்படுகிறது.

இதுதான் அறிவியல்

மெழுகுவத்தி எப்படி எரிகிறது? பிளாஜிஸ்டின் எனும் பொருளும் தீயும் காரணிகள் என்று ஆய்ந்து அறிவித்தார் லவாய்சியர் எனும் அறிவியலாளர். 18ஆம் நூற்றாண்டில் அவர் கூறியதை மறுத்து ஆக்சிஜன்தான் காரணி என்று எண்பித்தார் பிரீஸ்ட்லி என்பவர். எனவே முடிவில்லாத ஆய்வுகள் பலப்பல உண்மைகளை உலகிற்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், பெருவெடிப்பு எப்படி ஏற்பட்டது? 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்பது அனுமானம். பக்கத்திலிருந்து பார்த்தவர்களோ, அதுபற்றி எழுதி வைக்கப்பட்டவைகளோ எதுவும் கிடையாது அல்லவா? இருக்க முடியாது அல்லவா? ஆகவே அனுமானம், இந்த அனுமானத்தை ஆய்வு செய்வோமே! செய்தார்கள் சுவிட்ஜர்லாந்து நாட்டில்!

பெரு வெடிப்பு

2008ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் தொடங்கப்பட்டது. மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பணி தடைப்பட்டது. பிரான்சு நாட்டுக்கும் சுவிட்ஜர்லாந்து நாட்டுக்கும் எல்லைகளில் உள்ள இடத்தில் பூமிக்கு 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து அதில் மிகப் பெரிய இடிப்பான் (COLLIDER) அமைக்கும் பணி. தடங்கலுக்கு வருந்திக் கொண்டிருக்காமல் சீர் செய்தனர். இந்தப் பணியேகூட 13 மாதங்களை விழுங்கிவிட்டது. ஒருவழியாக 20.11.2009இல் ஆய்வுப் பணி தொடர்ந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் உழைப்புக்கும் ஆராய்ச்சிக்கும் செலவு செய்தனர். 2012 ஜூலை மாதம் 4ஆம் தேதி முடிவு புலப்பட்டது. 37 நாடுகளைச் சேர்ந்த 169 நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டன. முக்கிய ஆய்வாளர் ஃபேபியாலா கியான்னாட்டி எனும் இத்தாலி நாட்டு இயற்பியலாளர்.

பெரு வெடிப்புக்குக் காரணமாக அமைந்த பொருள்கள், அவை அமைந்திருந்த சூழல், அவற்றில் ஏற்பட்ட அழுத்தம் போன்ற பலவகைக் கூறுகளையும் ஆய்வாளர்கள் ஏற்படுத்தி வெடிப்பான் மூலம் வெடிக்கச் செய்தனர். வெடிக்கச் செய்த வெடிப்பான் தயாரிக்க மட்டுமே 30 ஆயிரம் லட்சம் யூரோ செலவானது.

தமிழ் ஓவியா said...

இது அமைக்கப்பட்ட சுரங்கம் அமைக்கப்பட 10 ஆண்டுகள் பிடித்தன. ALICE, CMS, ATLAS, LHDB என்று சுருக்கமாகக் குறிக்கப்படும் நான்கு வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தவை என அனுமானிக்கப்படும் ஆய்வு முறைகளை இவ்வாறு வகைப்படுத்தித் தற்போது ஆய்ந்தனர் அறிவியலாளர்கள்.

கடைசித் துகள்

அவர்களது அனுமானங்களின்படியே அனைத்தும் நடந்தன. ஏற்கெனவே கண்டறியப்பட்ட 12 துகள்களும் 4 விசைகளும் சேர்ந்த சேர்க்கையால் உருவானது உலகம் என்பதை மீண்டும் செயல்முறை மூலம் கண்டறிந்து உறுதி செய்தனர். இவற்றைச் சேரச் செய்த பொருளை இந்த ஆய்வு கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவமே, கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த சேர்க்கைப் பொருளைக் கண்டுபிடித்ததுதான்.

QUARKS எனும் பிரிவில் 6 துகள்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டன. அவை UP, DOWN, TOP, BOTTOM, STRANGE, CHARMED என்பவை. LEPTONS எனும் பிரிவில் 6 துகள்கள் முன்பே கண்டறியப்பட்டன. எலெக்ட்ரான், எலெக்ட்ரான் நியுட்ரினோ, மூவான் (MUON), மூவான் நியுட்ரினோ, டாவ்(TAU) டாவ் நியுட்ரினோ எனும் பெயருள்ளவை. இந்த 12 துகள்களையும் இணைக்கும் விசைகளாக 4 உள்ளன. Z, W, PHOTON, GLUON எனும் நான்கும் விசைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பதினாறுடன் (12+4) சேர்ந்து 17ஆம் பொருளாகக் கண்டறியப்பட்ட ஹிக்ஸ்போசான் துகள்தான் CERN ஆய்வுக்கூடத்தின் மகத்தான கண்டுபிடிப்பு. 6 ஆயிரம் ஆய்வாளர்களின் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உழைப்பின் பலன்தான் இந்த உலகை உருவாக்கிய எல்லாப் பொருள்களையும் கண்டுபிடித்தது.

நிலம், நீர், தீ. காற்று, வானம் ஆகிய 5 தனிமங்களின் சேர்க்கை (பஞ்சபூதங்கள்) இந்த உலகம் என்று கதவைச் சாத்திவிட்டனர் கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால், சீனர்களும் சார்வாகர்களும் 4 தனிமங்கள்தான் என்றனர். வானம் என்பது தனிமம் அல்ல, அதற்கும் உலகத்திற்கும் தொடர்பில்லை என்றனர் சார்வாகர்கள்! பரவாயில்லை! அந்தக் காலத்திற்கு அதுவே அதிகம்!

1400 கோடி ஆண்டுகளுக்கு முன் வெளிச்சம்

அறிவியல் உலகம் அத்தோடு நடையைக் கட்டிவிடவில்லை. பெருவெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் அந்த நிகழ்வு பெரும் ஈர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்க வேண்டும்; அந்த ஈர்ப்பு அலைகளில் சிக்கிய ஒளி (பெரு வெடிப்பினால் ஏற்பட்டது) நிலைமாற்றம் கண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இத்தகைய ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முனைந்தனர். ஈர்ப்பு அலைகளைக் கண்டறிய (BICEP2) பைசெப் 2 என்ற தொலைநோக்கியை உருவாக்கி உலகக் கோளத்தின் தென்துருவத்தில் (முனையில்) அமைத்தனர்.

அறிவியல் ஆய்வறிவும், முயற்சிகளும் தோற்கவில்லை. அந்தத் தொலைநோக்கியின் வாயிலாக ஈர்ப்பு அலைகளைப் (GRAVITATIONAL WAVES - ஆகர்ஷண அலைகள்) பார்த்துவிட்டனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள் செய்தித் தாள்களில் இந்த வெற்றிச் செய்தி வெளிவந்திருக்கிறது. 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டபோது வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளை இப்போது தொலைநோக்கி மூலம் கண்டறியும் வாய்ப்பை அறிவியல் வழங்கியுள்ளது (ஆண்டவன் வழங்கவில்லை) என்பதை ஹார்வர்டு ஸ்மித்சோனியன் மய்ய விண்வெளி இயற்பியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். பெருவெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் உண்டான அதிர்வுகள், எப்படிப்பட்டவையாக இருந்தன என்பதை அறிய இது உதவும். பேரண்டம், அதில் உலகு முதலியவை எப்படித் தோன்றின என்பதை அறிய உதவும். பேரண்டத்தின் தோற்றம் போன்ற பல கமுக்கச் செய்திகளை ஒளியின் மூலம் அறிய முடியும் என்பதால் இப்போதைய கண்டுபிடிப்பான இந்த ஒளி பல உண்மைகளை உலகுக்குத் தெரிவிக்கப் போகிறது.

மனித சக்தி

மனித மூளையின் கருதுகோள்கள் ஆய்வு முடிவுகளோடு எவ்வளவு ஒத்துப் போகின்றன என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு! மாயனார் எனும் குயவன் செய்த மண்பாண்டம் என்று சாக்குருவி வேதாந்தம் பாடிக்கொண்டு இருப்பதை விட்டு அறிவியல் மனப்பான்மையோடு வாழ்வதற்கும் வாழ்விப்பதற்கும் தயாராக வேண்டும்!

அறிவியல் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் கடவுள் எனும் கற்பனையைக் காலி செய்து வருகின்றன. உலகிற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை அறிவியல் மெய்ப்பித்துக் கொண்டே வருகிறது. கடவுள் காலியாகிக் கொண்டே வருகிறது! அது இருந்த இடம் புல் முளைக்கும் இடமாக மாறிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...

சரவணன் யார்...?


சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவணதேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் மஹாவீரரின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று அவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்.

கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதங்களாகத் திகழ்ந்தன. இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றன..

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே, அதைத் துவக்கி வைத்தவர்கள் சமண, பவுத்தர்கள்தான். அன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் விகாரைகளில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்காக வீடு வீடாகச் சென்று அரிசி கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள். பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவைக் கவனிக்கவேண்டி இப்பணியைச் செய்தனர்.

சமண முனிவர்கள் தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும். (உதாரணமாக இராமாயணத்தில் பெற்றோரைத் தோளில் சுமந்து சென்று தசரதனால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றிப் படித்திருப்பீர்கள். இவனை வடமொழியில் ஷ்ராவன் என்று கூறுவர். இதையே கம்பன் சிரவணன் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பார்) இந்த ஷரஹனாதான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டது.

பள்ளி அல்லது விகாரைகளில் மதிப்புமிக்க மாணவன் என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் ஆசை வராது. ஆகையால் தொடர்ச்சியாக தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கெனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்துவிட இறுதியில் சரவணாவும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது.

(ஹரத்தோ அஹிம்ச ப்ராஹ, சபி ஜிவ் பிரேம ஜவதோ-)

அன்பே அனைவருக்குமான உயிர்மூச்சு அனைத்து உயிரிலும் அன்பைக்காண்-.

- மஹாவீரர்

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் கார்ல் மார்க்ஸ் - டான் அசோக்


இந்த ஆண்டு எங்கே போவது? சாக்ரடீஸ் கண்ணில் பட்டுவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் கிரேக்கம் போ என்பார். எனக்கு மிகவும் பிடித்தது ருஷ்யாதான். ருஷ்யாதான் உடைந்துவிட்டதே என்கிறீர்களா?

கல் எத்தனையாக உடைந்தாலும் கல் கல்தானே! மண்ணாகப் போயிருக்கவேண்டிய ருஷ்யா, மண்ணாகாமல் சிறிய கல்லாக மட்டும் குறுகிக்கொண்டதற்கு கம்யூனிசம்தான் காரணம் என நினைக்கிறேன். அமெரிக்கர்கள் தொட்டதற்கெல்லாம் இரண்டு விஷயங்களைக் காரணம் சொல்வார்கள். ஒன்று கம்யூனிசம். மற்றொன்று அரேபியர்கள்.

புதின் பிரச்சினை சூடுபிடித்திருக்கும் வேளையில் நான் ருஷ்யா செல்வது என் மனதுக்கு நல்லதாக இருக்காது. உலகின் எங்காவது ஒரு மூலையிலேனும் கம்யூனிசம் கொஞ்சமேனும் நிலைபெற்றிருக்கிறதா எனப் பார்க்கும் என் ஆவல் ருஷ்யா போகும் மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சமாக நிறைவேறுகிறது.

இந்தமுறை அங்கேயும் கலவரமாக இருப்பதால் அந்த ஆசையையும் நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நேற்று மாலை உலாவிக்கொண்டிருந்த போது ஒரு பெரியவரைச் சந்தித்தேன். எங்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கும் இயற்கைக்கு மிகவும் பிடித்த பெரியவர் அவர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அரிஸ்டாட்டிலுக்கும், சாக்ரடீசுக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் அவர். அவரைப் பார்ப்பதென்றால் என்னைப் போன்ற பல பெரிய பெரிய ஆட்களே பதறுவார்கள். ஆனால் எனக்கு வேற வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுலாவிற்கு எங்கே போவது என அவரிடம் தான் கேட்க வேண்டும்.

சாக்ரடீஸ் புண்ணியத்தில் அவரைச் சந்திக்க முடிந்து கேட்டதற்கு, தமிழ்நாட்டுக்குப் போ. அங்கே கம்யூனிஸ்ட்னு யாருமே கிடையாது. ஆனா கம்யூனிசம் இருக்கும் எனச் சொன்னார். என்னடா இந்தாள் குழப்புகிறாரே எனத் தோன்றினாலும் தமிழ்நாட்டுக்குப் போக முடிவு செய்துவிட்டேன். ஓ... உங்களுக்குத் தமிழ்நாடு என்றால் எது எனத் தெரியாதல்லவா? அது ஒருகாலத்தில் தனி அரசாக இருந்த நாடு. கிரேக்க, எகிப்தியப் பாரம்பரியங்களையெல்லாம் ஒத்த பழம்பெரும் இனமாக தமிழினத்தைச் சொல்கிறார்கள். ஆனால் இப்போது இந்தியா எனும் ஒரு நாட்டின் பகுதியாக சிறுத்துக் கிடக்கிறது. அதைப்பற்றி அந்த இன மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அலட்டுவதைப் போல் நடிப்பவர்கள் அங்கே அதிகம் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இறங்கியதில் இருந்து ஒரே குழப்பம். அங்கங்கே கொடி கட்டிக் கத்திக்கொண் டிருந்தார்கள். பிறகு சிகப்புச்சட்டையணிந்த கருப்புத்தோல்காரர் ஒருவர் யாருமே இல்லாத ஒரு சிறிய கூடாரத்தில் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவரிடம் விவரம் கேட்கச் சென்றேன். அவர் கூடாரத்தில் அரிவாள், சுத்தியல் இருந்தது. அட... பெரியவர் கம்யூனிஸ்ட் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்றாரே! இங்கே ஒருவர் இருக்கிறாரே என மகிழ்ச்சி எனக்கு. என்ன இது அங்கங்கே கத்துகிறார்களே? எனக் கேட்டதற்கு தேர்தல் நேரம். அதான். எங்களைத்தான் தனியாக விட்டுவிட்டார்கள் என வருத்தமாகச் சொன்னார். என்னைத் தெரிகிறதா? எனக் கேட்டேன். எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா ஞாபகம் இல்லையே என்றார் அந்தக் கருந்தோல்காரர். ஞாபகம் இருந்திருந்தாதான் தனியா இருந்திருக்க மாட்டீங்களே என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

தமிழ்நாட்ல பெரிய கட்சிகள் எல்லாம் என்ன கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்? என்றேன். திராவிடம் தான் இங்கே அதிகமாக விற்பனையாகும் கொள்கை. திராவிடம் என்றால் என்ன? என்றதற்கு, எனக்கு அதைப்பற்றி அவ்வளவாகத் தெரியாது. வேறு யாரையாவது கேளுங்கள். எனக்கு போயஸ் தோட்டத்தில் வாட்ச்மேன் வேலைக்கு நேரமாகிவிட்டது எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். கம்யூனிச கூடாரம் காலியாக இருந்ததை வருத்தமாகப் பார்த்தபடியே நகர்ந்தேன்.

தமிழ் ஓவியா said...


கொஞ்ச தூரத்தில் கருப்பு, சிகப்பு, வெள்ளைக் கலரில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கே பெருங்கூட்டம். எல்லோரும் தரையோடு தரையாக இருந்தார்கள். என்ன ஏது எனக் கேட்கும் முன் பெரிதாக மீசை வைத்த ஒருவன் என்னையும் தரையில் அமுக்கினான். அம்மா வர்றாங்க. என்னய்யா நிக்கிற? படு படு என தரையில் நசுக்கினான். இவன் அம்மாவுக்கு நான் ஏன் மரியாதை கொடுக்கவேண்டும் என படுத்துக்கொண்டே யோசித்தேன். நீண்ட நேரத்துக்கு யாருமே வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு ஹெலிகாப்டர் மேலே வானத்தில் பறந்து சென்றது. எல்லோரும் அம்மா... அம்மா எனக் கத்திக்கொண்டு கையெடுத்துத் தொழுதார்கள். எனக்கு எதுவுமே புரியாமல் முகத்தில் ஒட்டியிருந்த மணலைத் துடைத்துக்கொண்டு எழுந்து மேலும் நடந்தேன்.

கடைசியாக கருப்பு சிகப்பில் ஒரு கூடாரம் இருந்தது. அங்கேயும் பெருங்கூட்டம். வந்தது வந்தோம். இங்கேயும் போய் என்னவெனப் பார்ப்போம் என முடிவு செய்துகொண்டு உள்ளே நுழைந்தேன். பலபேர் கருப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் அடையாளங்கண்டுகொண்டு அய்யா நீங்களா? அய்யா நீங்களா? என ஆச்சரியத்தோடு மரியாதை செய்தார்கள். நடுவில் சக்கர நாற்காலியில் மிகவும் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். அவரும் தன்னால் முடிந்தவரை தன் நாற்காலியில் இருந்து எழ முயற்சித்து தன் இருகைகளைக் கூப்பி வணங்கினார். சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். எங்கேயும் சுத்தியலையோ, கதிரையோ, அரிவாளையோ காணவில்லை. அங்கங்கே சூரியன் படம் மட்டும் இருந்தது. பெரியவர் கிளம்பியபின் அங்கே இருந்த ஒரு கருப்புச் சட்டைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

உங்கள் கொள்கை என்ன? என்றேன்.

திராவிடக் கொள்கை என்றார் பெருமையாக.

அப்படின்னா?

அப்படின்னா... நான் ஒரு கேள்வி கேக்குறேன். உங்க கொள்கை கம்யூனிசம் என்ன சொல்லுது?

யாருடா இவன்? நம்மிடமே கேள்வி கேட்கிறானே என எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் என்னதான் சொல்கிறான் பார்ப்போமே என பதில் சொன்னேன், எல்லோருக்கும் எல்லாம் பொதுவானது. பணக்காரங்க, ஏழைங்க,- முதலாளிகள், தொழிலாளிகள்னு பேதம் இருக்கக் கூடாது, அப்படிங்குறதுதான் கம்யூனிசக் கொள்கை என்றேன்.

அவன் உடனே சொன்னான், திராவிடக் கொள்கையும் பேதமில்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான்.

அப்படியென்றால் அதுவும் பொதுவுடைமை தானே? என்றேன்.

ஆமாம். ஆனால் கம்யூனிசத்தைவிட திராவிடக் கொள்கை சந்தித்த சிக்கல்கள் அதிகம். உங்கள் நாட்டில் ஏற்றத்தாழ்வு பணத்தால் மட்டுமல்ல, பிறப்பாலும் என்றால் எதை எதிர்த்து முதலில் போராடியிருப்பீர்கள்? என்றான் அவன்.

என்னடா இவன்? நாம் இவனைக் கேள்வி கேட்டால் இவன் நம்மைக் கேட்கிறானே என எண்ணிக்கொண்டே பிறப்பால் ஏற்றத்தாழ்வு எங்கே அப்பா இருக்கிறது? அப்படி இருந்தால் அதைவிட ஒரு கொடுமை இருக்காது. அதை ஒழிக்கத்தான் முதலில் போராடியிருப்பேன்.

தமிழ் ஓவியா said...

அவன் முகம் மலர்ந்தது. அதைத்தான் திராவிடம் செய்தது. இங்கே பணமுள்ளவர்கள்தான் முதலாளிகள் என்ற கொடுமை இருந்தால்கூட பரவாயில்லை. இங்கே இந்த ஜாதிதான் முதலாளிகளாக இருக்க வேண்டும், இந்த ஜாதிதான் மதிக்கப்பட வேண்டும், இந்த ஜாதிதான் கூலிவேலை செய்ய வேண்டும் என ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் எழுதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு சூத்திரன் பணக்காரனாய் இருந்தாலும்கூட ஒரு பார்ப்பனனுக்கு அவன் தாழ்ந்தவன்தான். அவனுக்கு படிப்பு முதல் வழிபாட்டு உரிமை வரை அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. அதைத் தகர்த்தெறிந்து வாழ்வுரிமையைப் பொதுவுடைமை ஆக்கியது எங்கள் திராவிடக் கொள்கைதான்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இப்படிக்கூடவா ஒரு நாடு இருக்கும்? இப்படியெல்லாமா எழுதி வைத்திருப்பார்கள்? ஒருமுறை நீட்சேவோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆரியர்கள் எழுதிய மனுதர்மம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் ஆரியர்களை சூப்பர்மேன் போலவும், மற்றவர்களை அவர்களுக்கு ஏவல் வேலை செய்யும் அடிமைகளாகவும் எழுதியிருப்பார்களாம். அந்தப் புத்தகத்தை உண்மையில் பின்பற்றும் நாடாகவா இந்தியா இருக்கிறது? அவ்வளவு முட்டாள்களா இவர்கள்? என்றெல்லாம் எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியது. ஏனப்பா? சமநிலையை உண்டாக்கிவிட்டீர்களா? அல்லது எங்கள் பொதுவுடைமை போல அது பாதிதான் ஜெயித்ததா?

இன்னும் முழு சமநிலையை எட்டவில்லை, நீதிக்கட்சி தொடங்கி இன்று எங்கள் கட்சிவரை முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களால் நிலைமை ஓரளவிற்குச் சீராகியுள்ளது. இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் நானெல்லாம் உங்களிடம் இப்படிப் பேசிக்கொண்டிருக்கவே மாட்டேன். என் ஜாதிக்கான இலக்கணப்படி நான் எங்காவது செருப்புத் தைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் கொடுமை என்னவென்றால் இடஒதுக்கீட்டின் மூலம் படித்தவர்களே இன்று இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனர்களுடன் கைகோர்த்து நிற்பதுதான். தான் ஏறிவிட்டால், அடுத்தவன் ஏறிவரும் ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் திராவிட இனத்திற்கும் தொற்றிவிட்டது

ஓஹோ... கல்வியுமா மறுக்கப்பட்டது?

ஆமாம். மெக்காலே என்றொருவர் இல்லையென்றால் நாங்கள் கல்விவாடையைக் கூட பிடித்திருக்க முடியாது. இங்கே வெள்ளைக்காரர்களுக்கு வேலை செய்ய போதிய அளவிற்குப் படித்தவர்கள் கிடைக்கவில்லை. படித்த பார்ப்பனர்கள் பாதிநாள் பூஜை புனஸ்காரத்தில் பொழுதைப் போக்கி திமிர்த்தனம் செய்தபோது பிரிட்டிஷ் அரசு மற்ற ஜாதியினரையும் படிக்க வைத்தால்தான் நிலைமை இந்தியாவில் சரியாகும் என முடிவு செய்து மெக்காலே அவர்களை அனுப்பியது.

தமிழ் ஓவியா said...

அவர்கள்தான் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடிந்த குருகுலக் கல்வியிலிருந்து எங்களைக் காப்பாற்றினார். அவரை எங்கள் ஊரின் பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது! ஹா ஹா ஹா! அவர் பேரைச் சொன்னாலே வேப்பங்காயாய் முகம் சுழிப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால், என்னைப் போன்ற திராவிடர்கள் பலரும்கூட பார்ப்பனர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்றலைகிறார்கள் என்றான் சோகமாக!

கல்வியின் நிலை இன்று எவ்வாறுள்ளது? என ஆவல் மிகுதியில் கேட்டேன்.

தமிழ் ஓவியா said...

மெக்காலேவில் தொடங்கி இன்று எங்கள் தலைவர் கொண்டுவந்த சமச்சீர் கல்வி வரை எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அனைவரும் சமச்சீரான கல்வி பெற, கல்வியிலும் பொதுவுடைமை வெற்றிபெற பல திராவிடர்களே தடையாய் இருப்பதுதான் பெருங்கவலை! வரும்போது பார்த்திருப்பீர்களே?

ஆமாம். பெரிய மீசை வைத்திருந்த பலர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஹெலிகாப்டரை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் சொல்கிறாயா?
ஆமாம். அவர்கள் எல்லாம் ஆதிக்க ஜாதிக்காரர்கள். சக மனிதனை ஜாதியின் பேரால் கேவலமாக நடத்துவார்கள். ஆனால் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பது அவர்களுக்குச் சுகமான ஒன்று. அதே ஹெலிகாப்டரில் ஒரு சூத்திரப் பெண் போனால் இப்படிக் கும்பிடுவார்களா என்ன? ஆதிக்கம், ஆண்ட பரம்பரைப் பெருமை எல்லாம் ஆரியத்தோலின் முன் செல்லாது அவர்களுக்கு!

என்னப்பா இது? இவ்வளவு சிக்கல் இருக்கிறது? இதையெல்லாம் மீறியா நீங்கள் ஜெயித்தீர்கள்?

ஆம். முதலில் சமூகப் பொதுவுடைமை ஏற்பட்டு, வாழ்வுரிமை எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டால்தான் அடுத்து பொருளாதாரப் பொதுவுடைமையை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதுதான் எங்கள் தீர்க்கமான கொள்கை. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இந்த நாட்டில் நிறைவேற்ற முடியவில்லை. எல்லோரும் சமம் எனச் சொல்லும் இந்தியா, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறதென்றால் இந்த நாட்டில் நீதி என்ன லட்சணம் என்பதைப் பாருங்கள்.

பொதுவுடைமைக்கு ஒரே எதிரிதான். முதலாளிகள்! ஆனால் உங்களுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்களே! இவர்களையெல்லாம் வென்று இன்றைக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் பெரிய விஷயம்தான். ஆமாம் உங்கள் தலைவர்கள் யார்?

டி.எம்.நாயர், நடேசன், பொப்பிலி ராஜா, தியாகராயர், பி.டி.ராஜன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலர் உண்டு. 1969லிருந்து இன்றுவரை எங்களுக்குத் தலைவராக இருந்து, திராவிடக் கொள்கைகளுக்கு இழுக்கு வந்தபோதெல்லாம் காப்பவர் எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி. சற்றுமுன் சக்கரநாற்காலியில் பார்த்தீர்களே அவர்தான்.

அவரா? அவர் ஏன் ஹெலிகாப்டர் பயன்படுத்தாமல் ஊர்தியில் செல்கிறார்?

அவர் பயன்படுத்த மாட்டார். நெடுந்தூரப் பயணங்களைக்கூட ரயிலில்தான் மேற்கொள்வார். அதனால்தானோ என்னவோ பலருக்கு அவரைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறது! மகாராணியைப் போல் மக்கள் பணத்தில் வலம்வருகிறவர்களை மதிக்கும் போதாத காலம் தானே இது! சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஓர் இளம்தலைவர் சுறுசுறுப்பாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் அங்கே இருந்த இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளினார்கள். யாரப்பா அது? என்றேன். அவர்தான் எங்கள் திராவிட இயக்கத்தை அடுத்ததாக வழிநடத்தப்போகிறவர். ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆடும் பெரிய பெரிய கோலியாத்களை உண்மை என்ற சிறிய கல்லைக் கொண்டு வீழ்த்தப்போகும் டேவிட்! எனச் சொல்லும்போது அவன் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம்.
அவர் பெயர் என்னப்பா?

ஸ்டாலின். அவர் பெயர் மு.க.ஸ்டாலின்.

எனக்குப் பேச்சே வரவில்லை. திராவிட இயக்கத்தை ஸ்டாலின் வழிநடத்தப் போகிறார். கம்யூனிசத்தின் முகவரி, திராவிட இயக்கத்தின் தலைமைக்குப் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் இருந்த பெரியவரை ஒருமுறை மனதில் நினைத்துக் கொண்டேன். மேலே கேட்க எனக்கு ஒன்றும் கேள்வி இல்லை. ருஷ்யா உடையாமல், அங்கே கம்யூனிசம் பீடுநடை போட்டிருந்தாலும் எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காது. தமிழகத்திலே கம்யூனிசத்திற்கு கம்பீரமான கருப்புப் போர்வை போர்த்தி அத்தத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்.

இவ்வளவு நேரம் பேசினாயே. என் பெயர் உனக்குத் தெரியுமா தம்பி?

என்னய்யா இப்படிக் கேட்டுட்டீங்க? உங்க கட்சிக்காரங்களைவிட எங்களுக்குத்தான் உங்களை நல்லாத் தெரியும். நீங்கள் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்!

எனக்குப் புல்லரித்தது. தம்பி எனக்கொரு கருப்புச்சட்டை கொடுக்கிறாயா?
எதற்கய்யா?

உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பொதுவுடைமைத் தத்துவம் சமூக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. உங்கள் ஊரைப் பொறுத்தவரை கம்யூனிசத்தின் நிறம் கருப்பு! அதையே இனி அணிந்துகொள்கிறேன் எனச் சொல்லி கருப்புச்சட்டைக்கு மாறினேன்.

என்னை ஏன் அந்தப் பெரியவர் இங்கே அனுப்பினார் எனப் புரிந்துகொண்டேன். அந்தப் பெரியவரின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே! அவர் பெயர் ஈ.வெ.ராமசாமி. அவரைப் பார்க்கும் போது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...

மெக்காலேவில் தொடங்கி இன்று எங்கள் தலைவர் கொண்டுவந்த சமச்சீர் கல்வி வரை எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அனைவரும் சமச்சீரான கல்வி பெற, கல்வியிலும் பொதுவுடைமை வெற்றிபெற பல திராவிடர்களே தடையாய் இருப்பதுதான் பெருங்கவலை! வரும்போது பார்த்திருப்பீர்களே?

ஆமாம். பெரிய மீசை வைத்திருந்த பலர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஹெலிகாப்டரை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் சொல்கிறாயா?
ஆமாம். அவர்கள் எல்லாம் ஆதிக்க ஜாதிக்காரர்கள். சக மனிதனை ஜாதியின் பேரால் கேவலமாக நடத்துவார்கள். ஆனால் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பது அவர்களுக்குச் சுகமான ஒன்று. அதே ஹெலிகாப்டரில் ஒரு சூத்திரப் பெண் போனால் இப்படிக் கும்பிடுவார்களா என்ன? ஆதிக்கம், ஆண்ட பரம்பரைப் பெருமை எல்லாம் ஆரியத்தோலின் முன் செல்லாது அவர்களுக்கு!

என்னப்பா இது? இவ்வளவு சிக்கல் இருக்கிறது? இதையெல்லாம் மீறியா நீங்கள் ஜெயித்தீர்கள்?

ஆம். முதலில் சமூகப் பொதுவுடைமை ஏற்பட்டு, வாழ்வுரிமை எல்லோருக்கும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டால்தான் அடுத்து பொருளாதாரப் பொதுவுடைமையை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதுதான் எங்கள் தீர்க்கமான கொள்கை. ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை இந்த நாட்டில் நிறைவேற்ற முடியவில்லை. எல்லோரும் சமம் எனச் சொல்லும் இந்தியா, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறதென்றால் இந்த நாட்டில் நீதி என்ன லட்சணம் என்பதைப் பாருங்கள்.

பொதுவுடைமைக்கு ஒரே எதிரிதான். முதலாளிகள்! ஆனால் உங்களுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்களே! இவர்களையெல்லாம் வென்று இன்றைக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் பெரிய விஷயம்தான். ஆமாம் உங்கள் தலைவர்கள் யார்?

டி.எம்.நாயர், நடேசன், பொப்பிலி ராஜா, தியாகராயர், பி.டி.ராஜன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா எனப் பலர் உண்டு. 1969லிருந்து இன்றுவரை எங்களுக்குத் தலைவராக இருந்து, திராவிடக் கொள்கைகளுக்கு இழுக்கு வந்தபோதெல்லாம் காப்பவர் எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி. சற்றுமுன் சக்கரநாற்காலியில் பார்த்தீர்களே அவர்தான்.

அவரா? அவர் ஏன் ஹெலிகாப்டர் பயன்படுத்தாமல் ஊர்தியில் செல்கிறார்?

அவர் பயன்படுத்த மாட்டார். நெடுந்தூரப் பயணங்களைக்கூட ரயிலில்தான் மேற்கொள்வார். அதனால்தானோ என்னவோ பலருக்கு அவரைப் பார்த்தால் இளக்காரமாக இருக்கிறது! மகாராணியைப் போல் மக்கள் பணத்தில் வலம்வருகிறவர்களை மதிக்கும் போதாத காலம் தானே இது! சொல்லும்போதே அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே ஓர் இளம்தலைவர் சுறுசுறுப்பாக எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் அங்கே இருந்த இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தில் துள்ளினார்கள். யாரப்பா அது? என்றேன். அவர்தான் எங்கள் திராவிட இயக்கத்தை அடுத்ததாக வழிநடத்தப்போகிறவர். ஊடகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஆடும் பெரிய பெரிய கோலியாத்களை உண்மை என்ற சிறிய கல்லைக் கொண்டு வீழ்த்தப்போகும் டேவிட்! எனச் சொல்லும்போது அவன் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம்.
அவர் பெயர் என்னப்பா?

ஸ்டாலின். அவர் பெயர் மு.க.ஸ்டாலின்.

எனக்குப் பேச்சே வரவில்லை. திராவிட இயக்கத்தை ஸ்டாலின் வழிநடத்தப் போகிறார். கம்யூனிசத்தின் முகவரி, திராவிட இயக்கத்தின் தலைமைக்குப் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் இருந்த பெரியவரை ஒருமுறை மனதில் நினைத்துக் கொண்டேன். மேலே கேட்க எனக்கு ஒன்றும் கேள்வி இல்லை. ருஷ்யா உடையாமல், அங்கே கம்யூனிசம் பீடுநடை போட்டிருந்தாலும் எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்காது. தமிழகத்திலே கம்யூனிசத்திற்கு கம்பீரமான கருப்புப் போர்வை போர்த்தி அத்தத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்.

இவ்வளவு நேரம் பேசினாயே. என் பெயர் உனக்குத் தெரியுமா தம்பி?

என்னய்யா இப்படிக் கேட்டுட்டீங்க? உங்க கட்சிக்காரங்களைவிட எங்களுக்குத்தான் உங்களை நல்லாத் தெரியும். நீங்கள் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்!

எனக்குப் புல்லரித்தது. தம்பி எனக்கொரு கருப்புச்சட்டை கொடுக்கிறாயா?
எதற்கய்யா?

உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பொதுவுடைமைத் தத்துவம் சமூக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. உங்கள் ஊரைப் பொறுத்தவரை கம்யூனிசத்தின் நிறம் கருப்பு! அதையே இனி அணிந்துகொள்கிறேன் எனச் சொல்லி கருப்புச்சட்டைக்கு மாறினேன்.

என்னை ஏன் அந்தப் பெரியவர் இங்கே அனுப்பினார் எனப் புரிந்துகொண்டேன். அந்தப் பெரியவரின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே! அவர் பெயர் ஈ.வெ.ராமசாமி. அவரைப் பார்க்கும் போது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்!

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்



அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்



அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...

திருவாளர் 420


- இரெ.இளம்வழுதி எம்ஏ., பி.எல்.



திராவிட இயக்க தீரர் கடலூர் இரெ. இளம்வழுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிடர் கழக மாணவர் அமைப்புக்குச் செயலாளராக இருந்தவர். தி.மு.க. தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். பொன்மொழி என்ற கழக இதழை தனது இறுதிக் காலத்தில் தொடங்கி நடத்தினார். தலைசிறந்த வழக்குரைஞராக, தலைமைக் கழகப் பேச்சாளராக விளங்கினார்.

1967இல் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அறிஞர் அண்ணாவால் கறுப்பு இளவரசர் என அழைக்கப்பட்ட இவர், தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பர். இறுதி மூச்சு வரை, இயக்கப் பணியாற்றிய பகுத்தறிவுப் பண்பாளர்.

இந்தியன் பினல் கோடு செக்ஷன்களில் 420 ஒரு தனிரகம். சமுதாய அமைப்பில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் திருவாளர்களைக் குறித்தும், அவர்கள் செயல்முறைகளில் எந்த அளவிற்கு மூளையைப் பயன்படுத்தி பலன் அடைகிறார்கள் என்பது பற்றியும், அவர்களுடைய வன்முறைச் செயல்களுக்கு முடிவுகட்டி அளிக்கப்படும் சிறைப்பரிசுகள் பற்றியும் விளக்குவதே 420ம் அதனை ஒட்டிய பிரிவுகளும்.

இந்த பேரும், புகழும் பெற்ற 420இல் சிக்குபவர்கள் யார்? பாங்குகளில், சினிமாக் கொட்டகைகளில் மாட்டப்பட்டிருக்கும் கேடிகளின் பட்டியல் மட்டுமல்ல; பெரிய மனிதர்கள் என்ற பெயரில்கூட அந்தத் திருவாளர்கள் பதுங்கியிருப்பார்கள்.

திருடனைக் கண்டுபிடித்துவிடலாம் கொலைகாரன் சிக்கிவிடுவான்; ஆனால் செக்ஷன் 420 கிடைப்பது சற்றுக் கடினம்தான்.

பக்திமான் போல் வேடமிடும் பகல் கொள்ளைக்காரர்கள், பகவான் பெயரைச் சொல்லிப் பணம் பறிக்கும் பாதகர்கள், செப்புக்காசை அசல் தங்கமென்று சொல்லி குறைந்த விலைக்கு அளிக்கும் குடிகேடர்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உன்மத்தர்கள், அரிசியில் கல்லையும், மண்ணையும் கலந்து அளக்கும் அசகாய சூரர்கள், நோட்டை இரட்டிப்பதாகச் சொல்லும் எத்தர்கள், சீட்டுக் கம்பெனி நடத்துவதாக விளம்பரம் செய்து ஏழைகளின் பணத்தை ஏப்பமிடும் இழிசெயலர்கள், அரசியல் சூதாடிகள், இன்னும் எத்தனையோ ரகங்கள் _ அத்தனைபேரும் திருவாளர்கள் 420தான். ஏமாற்று உலகத்தின் அரசகுமாரர்கள் இந்த 420.

***

இந்த நூற்றாண்டிலுமா அந்தக் கைங்கரியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் மனித வாழ்க்கை முன்னேற முன்னேற ஒவ்வொரு கோணத்திலும் யாராவது ஒரு திருவாளர் 420அய்ச் சந்திக்காமல் நம்மால் மேலே போக முடியாது. நீறு பூசிய நெற்றியும், உருத்திராட்சம் கட்டிய கழுத்தும், விசிறிமடி தொங்கும் தோளும், துவளும் ஜிப்பா தழுவும் உடலும், அத்தர் நெடி வீசும் வாடையும், புன்சிரிப்புத் தவழும் வாயும், விஷமம் விளையாடும் கண்களும், ஏமாற்றுக் கலை பயிலும் மூளையும், அப்பாவிகளைக் காணோமே என்று ஏங்கும் இதயமும், நயமான பேச்சும் கொண்ட மனித உடல் நடமாடும்போது, திருவாளர் 420இன் உலகம் விடிந்துவிட்டது என்றுதானே பொருள்!

***

ஆனால் அவர்களுடைய சரளப் பேச்சில் மயங்கி கைப்பொருளை இழக்கும் ஏமாளிகளைக் காணும்போது உள்ளபடியே நமக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகிறது. பத்திரிகைகளில் பத்தி பத்தியாக செய்தி வருகிறது, படித்தவர்களும் பாமரர்களும் எப்படி எத்தர்களிடம் ஏமாறுகிறார்கள் என்று.

ஆனால் அந்தச் செய்தி தொடர்கதையாக வருகிறதே தவிர, முற்றுப்புள்ளி வைத்து முடிக்க முடியவில்லையே! மனிதர்களின் பலவீனம், பேராசை, குறுக்கு வழியில் பெரும் பொருளீட்டும் பேராசை __ அந்தப் பேராசையை மூலதனமாகக் கொண்டே செயல்புரிகிறான் ஏமாற்றுக்காரன். சில சந்தர்ப்பங்களில் பயமுறுத்தியும் ஏமாற்றுகிறான், பழைய பஞ்சாங்கத்தைக் காட்டியும் ஏமாற்றுகிறான். ஆக இந்த ஏமாற்றுக் கலை வளர்ந்து வருகிறதே தவிர குறைவதாகக் காணோம்.

***

ஆண்டவன் பெயரைச் சொல்லி எப்படி அசகாய சூரனொருவன் அப்பாவி ஒருவரை ஏமாற்ற முனைந்தான் என்ற ஒரு கற்பனை _ நடந்த நிகழ்ச்சி ஒன்றை மய்யமாகக் கொண்டு தரப்படுகிறது.

சுமார் 30, 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூரில் ஷேக் இமாம் என்ற ஒரு பணக்கார முஸ்லிம் குடியிருந்து வந்தார். அவருடைய முன்னோர்கள் மலேயாவில் வணிகம் செய்து பெரும் பொருள் திரட்டியவர்கள். வம்ச பரம்பரையாகவே நல்ல செல்வாக்கில் உள்ளவர்கள்.

தமிழ் ஓவியா said...

ஷேக் இமாம், மார்க்கத் துறையில் கெட்டிக்காரர். தொழுகையை முறை தவறாமல் மேற்கொள்ளுபவர். அல்லாவின் திருநாமம் உச்சரிக்கப்பட்டால் போதும்; மெய் மறந்துவிடுவார். நாகூர் ஆண்டவர்மீது அசைக்க முடியாத பக்தி. இமாம் சாயபுவின் தகப்பனார் ஹஜ் யாத்திரைக்குப் போய் வந்தவர். முஸ்லிம் பேட்டையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தார்கள்.

***
திடீரென்று தந்தை இறந்துபோன கவலையால் பீடிக்கப்பட்டிருந்த ஷேக் இமாமுக்கு பீதியும் பயமும் தரத்தக்க இரு கடிதங்கள் நேரே நாகூர் ஆண்டவனிடமிருந்து தபாலில் வந்தன. வந்தன என்று சொல்வதைக் காட்டிலும் ஆண்டவனால் அனுப்பப்பட்டிருந்தவை போல் இருந்தன.

ஆண்டவனின் கட்டளைகளாக சில பயங்கர உத்தரவுகளும் அவைகளில் கண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று ஒரு பெருந்தொகையை உடனடியாக ஷேக் இமாம் கொடுக்காவிட்டால், ஷேக் இமாமின் குடும்பம் அடியோடு நாசமாகி விடுமென்றும், அல்லாவின் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் இமாமின் குடும்பத்தில் திடீர்ச்சாவுகள் ஏற்படுமென்றும், தீப்பிடித்து எரியுமென்றும், இன்னும் எவ்வளவோ பயமுறுத்தல்களைத் தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு கடிதங்களும். மேலும், ஆண்டவனின் கோபம் இமாமின் குடும்பத்தின்மீது இருப்பதால்தான் அவரின் தந்தையும் திடீர் மரணமடைந்து விட்டாரென்றும் கடிதங்கள் பயமுறுத்தின.

தமிழ் ஓவியா said...

தகப்பனார் மரணமடைந்து நாட்கள் சில ஆனதாலும், நாகூர் ஆண்டவனிடம் அழியாத பக்தி கொண்டிருந்ததாலும், ஷேக் இமாம் தெய்வக் கட்டளைக்குப் பயந்து, தன்னுடைய மைத்துனனையும் துணைக்கழைத்துக் கொண்டு, கடிதங்களில் குறிப்பிட்டிருந்த கடற்கரைப் பகுதிக்கு மாலை 6 மணிக்குச் சென்றார். பணமும் எடுத்துச் சென்றிருந்தார் என்று சொல்லவும் வேண்டியதில்லை.

கடற்கரைப் பகுதியில் ஒரு கனவான்_கார்த்திகேய அய்யர் எனப் பெயர் படைத்தவர் வீற்றிருந்தார். முதலில் வர்ணித்திருந்த திருவாளர் 420க்குள்ள சர்வ லட்சணங்களும் பொருந்திய சீமான்தான் அவர். அவரைக்கண்ட இமாம் ஆண்டவனை நேரே கண்டதுபோல் ஆனந்தம் கொண்டு, வந்த விவரங்களை அவரிடம் சொல்லி பணத்தையும் கொடுக்க முன்வந்தார்.

ஆனால் திருவாளர் கார்த்திகேயர் பணத்தை வாங்கவில்லை. வாங்காதது மட்டுமல்ல; விவரத்தை அறிந்து கேலியும் செய்தார். ஆண்டவனாவது கடிதமாவது அனுப்புவதாவது; இதெல்லாம் என்ன கேலிக்கூத்து; என்று சொல்லி, இமாமை, இப்படியெல்லாம் ஏமாறக் கூடாது என்று புத்திமதியும் கூறி அனுப்பினார். அவருடைய பேச்சில் நயம் இருந்தது; நயவஞ்சகம் இருந்தது தெரியவில்லை. போதனை இருந்தது; சூது இருந்தது தெரியவில்லை. இவ்வளவுக்கும் காரணம் இமாம் தனியாக வராமல் துணையோடு வந்ததுதான் என்பதை விவரம் அறிந்தவர் கூறுவர். இமாமும் அவரது மைத்துனரும் திரும்பிவிட்டனர்.
***
மழைவிட்டும் தூவானம் விடவில்லை. மேற்படி திருவாளர் கார்த்திகேயர் சில நாட்களுக்குப் பிறகு இமாம் வீட்டுக்கே சென்றார். தனக்கும் ஆண்டவர் இரு கடிதங்கள் எழுதியதாகவும், இமாமின் குடும்பத்தை ரட்சிக்க வேண்டுமானால், இமாம் கொடுக்கும் பணத்தைத் தான் வாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று சொல்லி இரு கடிதங்களை இமாமிடம் கொடுத்தார்.

தமிழ் ஓவியா said...

அக்கடிதங்களில் ஆண்டவர் விவரமாகக் குறிப்பிட்டிருந்தார். பணம் பெறவேண்டிய ஆளின் அடையாளத்தையும் கடிதங்களில் காட்டியிருந்தார். முழு அடையாளமும் திருவாளர் 420க்குப் பொருந்தியிருந்தது.

இமாமும் ஆண்டவனைத் திருப்தி செய்ய வேண்டி பணத்தைக் கொடுக்க முன்வந்தார். திருவாளரின் முகமும் அகமும் மலர்ந்து ஆண்டவனைத் தியானித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அந்த நேரம் பார்த்துத்தானா இமாமின் மைத்துனர் வரவேண்டும்? அங்கு நடந்த நாடகத்தைக் கண்டு மனம் பொறாத அந்த நல்லறிவாளர், திருவாளர் 420இன் மீது லேசாக சந்தேகம் கொள்ள ஆரம்பித்து, தன் எண்ணத்தைச் சூசகமாக தன் மைத்துனருக்குத் தெரியப்படுத்தினார். விவரம் புரியாமல் குழம்பியிருந்த இமாமும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏங்கிய திருவாளரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமலேயே அமர்ந்திருந்தனர். பிறகு இமாமின் மைத்துனர் திருவாளருக்குத் தெருவழியைக் காட்டினார். வேறு வழியின்றி அவரும் நடையைக் கட்டினார்.
***
எதையும் நம்பும் ஏமாளி இமாமிருக்க, திருவாளர் 420 சும்மாயிருப்பாரா? அல்லது அரிய சந்தர்ப்பத்தை இழக்க மனந் துணிவாரா?

திடீரென ஒரு நாள் இமாமுக்குக் கடைசி எச்சரிக்கையாக நாகூர் ஆண்டவரே நேரில் தபால் எழுதினார். எப்படியாவது முன்னூறு ரூபாயாவது திருவாளர் கார்த்திகேயருக்குக் கொடுக்காவிட்டால், இமாமின் குலக்கொழுந்தைக் கொன்று, சொத்துக்களைச் சூறையாடி, குடும்பத்தின் பூண்டே இல்லாமல் அழித்துவிடுவதாக நாகூர் ஆண்டவர் மிரட்டியதுபோல அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆண்டவன் மனது புண்பட்டுவிட்டதே என்று பயந்து நடுங்கிய இமாம் திருவாளர் கார்த்திகேயரை வீட்டுக்கு அழைத்தார். குழையக் குழைய பேசினார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். ஏதோ தவறு நடந்துவிட்டது; ஆகையால் அதை மனதில் கொள்ளாமல் ஆண்டவன் ஆணைப்படி தான் கொடுக்கும் முன்னூறு ரூபாயையும் பெற்றுக்கொண்டு தன்னை ரட்சிக்கும்படிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

ஆண்டவனின் இச்சைப்படி நடப்பதுதானே இந்த இமாமின் கடமை! உங்களிடம் உயிரையே கொடுத்துவிடு என்று அவர் எனக்குக் கட்டளை இட்டாலும், தப்பாமல் செய்திருப்பேன்! கேவலம் இந்தப் பணம்தானா எனக்குப் பிரமாதம்? நீங்கள் மறுக்காதீர்கள்; இனியொருமுறை அந்த ஆண்டவனிடமிருந்து எனக்கு இத்தகைய அச்சுறுத்தும் கடிதங்கள் வந்தால் நான் தாங்கமாட்டேன்! என்று சொல்லிக் கொண்டே உள்ளே அவசர அவசரமாக நுழைந்த இமாம், திரும்பி வரும்போது கையில் ஒரு தட்டுடன் வந்தார்.

மலர், பழம், சர்க்கரை இவைகளை வைத்து 3 நூறு ரூபாய் தாள்களை வைத்து மரியாதையாக திருவாளரிடம் இமாம் கொடுத்தார். ஆவல் பொங்கும் கண்களோடு தன் திறமையைத் தானே வியந்து கொண்டு, இமாம் கொடுத்த நோட்டுகளையும் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினார். ஆனால் அவர் அறிவாரா இமாமின் மைத்துனர் ஏமாளி அல்லவென்பதை!

கடைசிக் கடிதம் வந்தவுடன் மைத்துனர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து, அவர்களை இமாமின் வீட்டுக்கு வெளியே மறைவாகக் கொண்டுவந்து வைத்திருந்தார். திருவாளர் 420 அட்டகாசத்துடன் வெளியே வரும்போது 3 நூறு ரூபாய் நோட்டுகளுடன் போலீசார் அவரைக் கைது செய்து கைவிலங்கு மாட்டி ஆண்டவன் பெயரால் அப்பாவி ஒருவரை ஆட்டிப்படைத்த அந்த கார்த்திகேயரை காராக்கிரகத்தில் கொண்டு தள்ளினார்கள்.

பின் முறைப்படி வழக்கு நடந்தது. கடைசியில் நாகூர் ஆண்டவரைக் கைவிட்டு உயர் நீதிமன்றம்வரை திருவாளர் 420 வழக்காடிப் பார்த்தார். கடைசியில் உயர் நீதிமன்றமும் 6 மாதம் சிறையில் தள்ளி அவரைக் கைவிட்டு விட்டது. அந்தோ பரிதாபம்.

இந்த உலகத்தில் மனிதனை மனிதன் ஏமாற்றுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல! என்ன காரணத்தாலோ ஏறிட்டு நோக்குகிறவனையே சந்தேகக் கண்களுடன் பார்ப்பார்கள். இரண்டு முறை ஒருவன் தம் வீட்டு வாசல் வழியே நடந்துவிட்டால் வீட்டுக் கதவைத் தாளிட்டு விடுவார்கள் பெண்கள்.

இத்தகைய உஷாரான உலகில் கார்த்திகேயரைப் போன்றவர் காலம் தள்ள முடிவது எப்படி? சுகவாழ்வு என்றால் சாதாரணமாகவா? ஆண்டுக்கு ஒன்பது லட்சம் வாங்கும் கவர்னர்களுக்கும் கிடைக்காத வரவேற்பைப் போன்றல்லவா அவர்களுக்கும் தருகிறார்கள்? இதற்குள்ளே புகுந்து கிடப்பது ரகசியமல்ல; எல்லாரும் உணர்ந்த அறியாமை _ மூட நம்பிக்கை!

அதை ஒழிக்க சட்டம் இருக்கிறது என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் சீரிய பணிக்குப் பின்னரே மக்கள் சிறிது உண்மையை உணரத் தலைப்பட்டனர்.

இந்தச் சிறிய நிகழ்ச்சி உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து கற்பனையாகப் பின்னப்பட்டதாகும். மனித சமுதாய அமைப்பில் ஏமாற்றுக்காரர்கள் எப்படி எப்படியெல்லாம் வேஷம் போட்டு ஏய்க்கிறார்கள் என்பதை உணரும்போது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ... என்று நாமும் சற்று உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை நல்லறிவாளர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

இருபதாம் நூற்றாண்டிலும் இத்தகையோர் வாழ்வது விசித்திரமே!

- நன்றி: முரசொலி பொங்கல் மலர் 1961

தமிழ் ஓவியா said...

துணை இழந்தவர்கள் மறுமணத்தில் தமிழ்கம் முதலிடம்


- சரவணா இராசேந்திரன்

இந்துமதக் கலாச்சாரமும் விதவைகளும் இந்துமதக் கலாச்சாரத்தில் விதவைகள் என்பவர்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பானவர்கள். சென்ற பிறப்பில் செய்த கொடுமையின் பலனால் அவர்களுக்கு இந்த நிலை. அவர்களுக்கு உதவுபவர்கள்கூட அவர்களின் பாவத்தில் பங்கு பெற்று அடுத்த ஜென்மத்திலும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இன்னும் எவ்வளவோ சாத்திரங்களில் எழுதி இந்தியாவில் வேதகாலம் தழைத்தது முதல் விதவைப் பெண்களை கொடுமைக்குட்படுத்தி வந்தனர்.

பெரியாரின் விதவைத் திருமணப் போராட்டம்

பெரியாரின் சீரிய சமூகப்பணியில் விதவைத் திருமணமும் ஒன்று. தான் வலியுறுத்தியதை பெரியார் தனது வீட்டில் இருந்தே தொடங்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். பெரியார் இதன் காரணமாக தென் இந்தியாவில் பெண்களின் நிலையில் மாற்றம் வந்ததுடன், திராவிட கட்சிகளின் தொடர் ஆளுமையால் தமிழகத்தில் விதவைகளின் மறுமணம் என்பது சாத்தியமானது, இன்றைய நிலையில் இந்தியாவில் விதவைகள் மறுமணம் அதிகமாக தமிழகத்தில்தான் நடக்கிறது. இந்திய மாநிலங்களில் விதவைத் திருமணங்களின் எண்ணிக்கை (விழுக்காட்டில்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு விதவைத் திருமணத்தில் 8.8 விழுக்காடு என்ற நிலையில் எப்போதும் முதலிடத்தில் நிற்கிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா 8.2 விழுக்காடு, கேரளா மற்றும் கர்நாடகா 8.1 விழுக்காடு என்ற நிலையில் உள்ளன. மராட்டியத்தில் 7 விழுக்காடு, ஒரிசாவில் 7.4 விழுக்காடு, ஹிமாச்சல் பிரதேசத்தில் 6.9 விழுக்காடு, பிகாரில் 6 விழுக்காடு என்ற நிலையில் விதவைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன,

தமிழ் ஓவியா said...

இறுதி வரிசையில் குஜராத் 5.2 விழுக்காடு, ராஜஸ்தான் 5.0 விழுக்காடு, மத்திய பிரதேசம் 4.9 விழுக்காடு என்று உள்ளன. இந்தியாவின் தலைநகரான டில்லியில்தான் விதவைகளின் திருமணம் மிகவும் குறைவாக 4.1 விழுக்காடு நடைபெறுகிறது.

ரேணுகா சவுத்திரி பேட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி கூறும்போது, வட மாநிலங்களில் விதவைப் பெண்களின் வாழ்க்கையில் கலாச்சாரப் பழக்கவழக்கம் பெரும் தடையாக அமைகிறது. முக்கியமாக சமூகத்தில் விதவைப் பெண்கள் என்றாலே தீண்டத்தகாதவர்கள் என்று சொந்த உறவுகளாலேயே வெறுக்கப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக அவர்களுக்காக துணிந்து பேசுபவர்கள் என்று யாரும் இல்லாத சூழலில் அந்தப் பெண்களுக்கான மறு வாழ்வு என்பது இல்லாத நிலையில்தான் உள்ளது. தற்போதைய விகிதாச்சாரத்தின்படி வடக்கு மாநிலங்களில் நடக்கும் விதவை மறுமணம் எல்லாம் நகரம் மற்றும் படித்த வர்க்கத்திடம் மாத்திரமே உள்ளது. நகரத்திலும் உள்ள நடுத்தர மக்களிடம்கூட விதவை மறுமணம் என்பது ஏதோ தேவையற்ற குடும்பத்திற்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் சிறுநகரம் மற்றும் கிராமங்களில் விதவைகளின் நிலை என்பது மிகவும் மோசமாகவே உள்ளது.

பிரபுல் மனீஷா கவுர் பேட்டி

டில்லியைச் சேர்ந்த விதவைகள் மறுவாழ்வு மய்யத்தின் துணை இயக்குனரான பிரபுல் மனீஷா கவுர் என்பவர் கூறும்போது, இந்தியாவில் விதவைகள் மறுமணம் என்பது இவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்த போதிலும் அவசியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மதம் தொடர்பான சடங்குகள்தான். இந்தியாவைப் பொருத்தவரை, மதம் வாழ்வில் ஒன்றாகக் கலந்துவிட்டது. தினசரி வாழ்வில் மதம் தொடர்பானவைகள் கலந்துவிட்டன. இங்குதான் விதவைகளுக்கான சிக்கல் ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, விரத நாட்களில் விதவைகளைப் பார்ப்பது விரதத்திற்குப் பாதகமான ஒன்றாகக் கருதப்படுகிறது, வாரம் முழுவதும் விரதங்களை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, திங்கள் சிவனுக்கு, செவ்வாய் சக்தி தெய்வத்திற்கு, புதன் கிரக தோசத்திற்கு, வியாழன் குரு தெய்வத்திற்கு, வெள்ளி விஷ்னு மற்றும் லட்சுமிக்கு, சனிக்கிழமை சனி பகவான் மற்றும் காளிக்கு, ஞாயிறு அன்று சூரிய பகவானுக்கு என தினசரி வீட்டில் ஏதாவது ஒரு காரணத்திற்காக விரதமிருந்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இந்த நிலையில் அந்த வீட்டில் உள்ள விதவைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். இவர்களின் நம்பிக்கையின் மூலாதாரம், விரதமிருந்தால் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்கும்போது சாத்திரங்களின்படி விரத காலத்தில் விதவைகளைக் கண்டாலோ அவர்கள் எதிரில் வந்தாலோ விரதம் கலைந்துவிடும் என்று இருக்கும்போது விரதமிருப்பவர்கள் தானாகவே முன்வந்து விதவைகளை விலக்கிவைப்பார்கள். இதனை, இயற்கையான நிகழ்ச்சி தொடர்பான ஒன்றாகப் பார்க்கிறார்களே தவிர அதை உணர்வு தொடர்பான ஒன்றாகப் பார்க்க மறுக்கிறார்கள், மறுமணத்தைப் பொருத்தவரை விதவைகள் என்பவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அவர்கள் இந்தப் பிறவியில் தன்னுடைய விதவைப் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து விடுபடுவது அல்லது மறுமணம் செய்வது பின்வரும் பிறவியில் மேலும் அதிக துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளது. மேலும், விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பவர்கள், அவர்களின் பாவங்களில் பங்கு கொள்ளவேண்டும். அதே நேரத்தில் மறுமணம் செய்பவர்களும் அடுத்த பிறவியில் துன்புறுவார்கள் என்று உள்ளது. இதுவும் மதம் சார்ந்த கொள்கையாகப் பார்க்கப்படுவதால் விதவைகளுக்கு மறுவாழ்வு என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. அப்படியே யாராவது முன்வந்தாலும், அதைத் தேவையற்ற ஒன்றாக்கி விதவைகளை மறுமணம் செய்பவர்களையும் ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். இதனால் ஒரு சமூகப் பிளவு அங்கு உருவாகிறது. இதிலிருந்து மீள்வதற்குத் துணிச்சல் இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஏச்சுப் பேச்சும் மறுமணம் செய்தவர்களை மனதளவில் மருளச் செய்து விடுகிறது. இதன் விளைவு, நமக்கெதற்கு என்று விதவைகளை மறுமணம் செய்துகொள்ள முன்வரும் நபர்களும் ஒதுங்கிவிடுகின்றனர்.
தற்போது வீட்டிற்குள் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் விதவைகள் குறித்த தவறான ஒரு பார்வை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் தொலைக்காட்சித் தொடர்களில் குறிப்பாக விதவைப் பெண்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு காட்சியையும் குறிப்பாக தொடர்களில் விதவையாக வரும் பெண்ணை அபசகுணமாகப் பார்க்கும் காட்சிகள், விழாக்களின் போது விதவையாக நடிப்பவர்களை கலந்துகொள்ளவிடாமல் அவர்களின் விதவைத்தனத்தைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வது, குடும்பமாக வெளியில் செல்லும் போது விதவையாக நடிப்பவர்களை வீட்டில் இருக்கும்படி ஆணையிடுவது விதவைகளை ஏதோ கொடூரமான வில்லிகளைப்போன்று சித்தரிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்யவேண்டும். ஆனால், தொடர்களுக்கு ஏற்றவாறு அந்தக் காட்சிகள் இருந்தால்தான் சுவையாக இருக்கும் என்று கூறி வேண்டுமென்றே அது போன்ற காட்சிகளை அதிகமாக எடுத்து வருகின்றனர். இப்படி சமூகத்தில் விதவைப் பெண்களை ஊடகங்கள் மூலமாக கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு கடுமையான தணிக்கை முறை வகுத்து அப்படிப்பட்ட காட்சிகளை எடுப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வழிவகை செய்யவேண்டும். கருவிலேயே பாலினம் கண்டுபிடிப்பதை எப்படி கடுமையான சட்டங்கள் கொண்டு தடை செய்கின்றனரோ அதுபோல் விதவைகளை மட்டமாகச் சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களைத் தடைசெய்யவேண்டும். தொடர் ஆரம்பிக்கும்போது அதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்ற குறிப்பையும் காட்டவேண்டும்.

தமிழ் ஓவியா said...

தீர்வு

தீர்வுகள் என்று கூறப்போனால் மத ரீதியாக இந்த விவகாரத்தைச் சீர்செய்ய முன்வர வேண்டும். ஆனால், இங்குள்ள மதவாதிகள் இதை மாற்ற முன்வர மாட்டார்கள். காரணம், இது நேரடியாக மதம் தொடர்பான விவகாரம். இந்த விவகாரத்தில் தலையிடும்போது மத விதிகள் மாற்றம் காணும். அப்போது மதத்தின் மீதான நம்பிக்கைகள் குலைந்துவிடும் என்ற பயமும் மதவாதிகளிடம் இருக்கிறது. அதைவிட மதவாதிகளின் தனிப்பட்ட பல நன்மைகள் விதவைகளின் மறுமணத்தினால் பாதிக்கப்படும். மேலோட்டமாக பார்க்கப்போனால் இது கேள்விக்குரிய ஒன்றாகத் தெரியும். ஆனால், உண்மை விதவைகள் இந்தியாவில் சொத்துக்களைப் பாதுகாக்கப் பயன்படும் ஒன்றாகவும் குடும்ப கவுரவத்தைப் பேணிக் காக்கவும் பயன்படுத்தப்பட்டனர்.

சொத்திற்காக கொலை செய்யப்பட்ட விதவை

முக்கியமாக விதவைகள் மறுமணம் செய்யும்போது சொத்துக்கள் குறித்த சண்டைகள் ஏற்பட்டு கொலைகள் நடந்த சம்பவங்கள் பரவலாக வட இந்தியாவில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2011ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டம் பட்வான் கிராமத்தில் நடந்த கொலைச் சம்பவத்தைக் கூறலாம். பெயர்: சந்தோஷி தேவி, வயது 28. விதவையான இவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பெற்றோரின் கவனிப்பில் வசித்து வந்தார். இவரது கணவருக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் தொடர்பாக இவர்களுக்கு அடிக்கடி மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் இவருக்கு மறுமணம் செய்துவைக்க சந்தோஷி தேவியின் பெற்றோர் முன்வந்த சில தினங்களுக்குள் அவரும் அவரது இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனர். ஹரியானா மாநில காவல்துறையின் நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்தக் கொலைதொடர்பாக சந்தோஷிதேவியின் இறந்து போன கணவருடன் பிறந்த மூன்று சகோதரர்களின் சதிச்செயல் என்று தெரியவந்தது. சொத்து தொடர்பாக இவர்கள் சந்தோஷி தேவியை அடிக்கடி மிரட்டி வந்தனர். இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பெற்றோரும் தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்துவைக்க முன்வந்தது தெரியவந்தது. திட்டமிட்டு சந்தோஷி தேவியையும் அவரது குழந்தைகளையும் கொலை செய்துவிட்டனர். தற்போது அந்த நிலம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதாவது, விதவைகளுக்கான பாதுகாப்பு 21ஆம் நூற்றாண்டிலும் அரசால் கொடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.

மாநிலங்களில் விதவைகளுக்கான நலத்திட்டம்

தமிழக அரசின் தர்மாம்பாள் அம்மையார் விதவை உதவித் திட்டம், ஆந்திர அரசின் விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகைத் திட்டம், கேரளாவின் மாங்கல்யா விதவைகள் மறுமண உதவித் திட்டம், மராட்டிய அரசின் மறுமணம் புரிந்த பெண்களுக்கான நலவாழ்வு மற்றும் பொருளாதார உதவிச் சலுகைகள் போன்ற திட்டங்கள் தணிக்கைக் குழுவின் அறிக்கைப்படி சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்கூட சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு ஆளாகி வருகிறது. இதில் அரசு சலுகைகள் மக்களை எந்த நிலையிலும் போய்ச்சேரவில்லை, ராஜஸ்தான் அரசில், கடந்த 7 வருடங்களாக விதவைகள் மறுமணத்திற்கான உதவித்தொகைக்கு யாருமே பதிவிடவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி, நாட்டின் விதவைகளின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...

மறுமணம் செய்தவர்களுக்கு அயல்நாட்டு சுற்றுலாப்பயணம்

வட மாநிலங்களில் விதவைகள் மறுமணம் என்பது சமூகத்திற்குப் பாதகமான ஒன்றாகப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் மறுவாழ்விற்காக ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் விதவைகளை மறுமணம் செய்பவர்களுக்கு தேனிலவு சுற்றுலா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவன இயக்குனர் கூறியதாவது:.

இளம் வயதில் துணையை இழந்து தனிமையில் வாடிவரும் விதவைகளை நமது கலாச்சாரம் மற்றும் மத சாஸ்திரங்களைக் காரணம் கூறி எவரும் மறுமணம் செய்ய முன்வருவதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஓர் இளைஞர் சிறுவயதுப் பெண் குழந்தையுடன் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்த ஒரு விதவைக்கு மறுவாழ்வு தர முன்வந்து பலதரப்பு எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, துணிந்து மறுமணம் செய்தார். இந்தச் செயல் சமூகத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. இதை இப்படியே பேச்சோடு விட்டுவிடாமல் இவரைத் தொடர்ந்து பல இளைஞர்களும் முன்வர வேண்டும். இதற்காக பல திட்டங்களை வகுத்துள்ளோம். திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி, வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்றவைகளுடன் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு ஆசியாவின் 5 நகரங்களுள் ஏதாவது ஒரு நகரத்திற்கு 5 நாட்கள் இலவச தேனிலவு சுற்றுப்பயணம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதில் மறுமணம் செய்யும் தம்பதிகளுக்கான சுற்றுப்பயணம், செலவு, தங்குமிடம், உள்ளூர் சுற்றுலா என அனைத்துச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது மறுமணம் செய்தவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அதே நேரத்தில் இந்தத் தேனிலவுப் பயணம் என்பது சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் தரும் என்பதில் அய்யமில்லை. இதனால் சமூகத்தில் பொதுவான ஒருவராக இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார். வடமாநிலங்களில் அவ்வப்போது இதுபோன்ற ஒரு சில முற்போக்கான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஒரு பரபரப்பான செய்தி போன்று சில தினங்களுக்குள் அடங்கிவிடுகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் விதவைகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை, தற்போது உள்ள சட்டங்கள் போலில்லாமல் மறுமணம் புரிபவர்களுக்காக வேலைவாய்ப்பு, தொழில், கடனுதவி மற்றும் சமூகத்தில் மறுமணம் குறித்து ஒரு நல்ல பார்வையை உருவாக்க வீதி நாடகங்கள், மற்றும் ஊடகங்கள் மூலம் பல திட்டங்களை _ விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பக்தர்களே சிந்திப்பீர்களா?
பக்தர்களே சிந்திப்பீர்களா?



கோயில் கொள்ளை
ஒரு தொடர்கதையா?

- கி.வீரமணி

கண்களை மூடிக்கொண்டு கடவுளைத் தொழுது, அதற்காக விழா, விரதம், வேண்டுதல் என்ற பெயரால் காசை வீணாக்கி, பகுத்தறிவைப் பாழாக்கிடும் பரிதாபத்திற்குரிய பக்த சிகாமணிகளே!

கேரளத்தின் மூன்று பெரும் முதலாளிக் கடவுள்களில் ஒன்றான (1. குருவாயூரப்பன், 2.சபரிமலை சாஸ்தா அய்யப்பன், இப்போது தோண்டத்தோண்ட புதையல்கள்போல் வெளிவரும் திருவனந்தபுரம் பத்மநாபா கோயில்களில் நடைபெற்ற அமைதிக் கொள்ளைகளையும் அதிசயச் சுரண்டல்களையும் பற்றி உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஒவ்வொரு அறைகளாகத் திறக்கப்பட்டு ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் அதிர்ச்சி அலைகள் சுனாமிபோல் ஓங்கி உயர்ந்து கேட்போரைக் கதிகலங்க வைத்துள்ளது.



உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மதி கலங்க அடித்துள்ளது. அதுபற்றிய உண்மைகளை அறிய உச்ச நீதிமன்றம் கோபாலகிருஷ்ணன் என்பவரை நியமித்தது, விசாரணைகளும் அதன்பின் அதையொட்டிய உண்மைகளைப் பற்றிய தகவல்களைத் தரவேண்டியும் பணித்தது.

அவர் திருவனந்தபுரம் சென்று இரண்டு மாதங்கள் தங்கியிருந்து, அக்கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்திய அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் (550 பக்கங்களைக் கொண்டது) தாக்கல் செய்ததினால் உச்ச நீதிமன்றமே அங்கு பத்மநாப சாமிக்கே தீட்டிய பட்டை நாமத்தின் பரிமாணத்தைக் கண்டு அதிர்ந்து போயுள்ளது.

ஒரு தமிழ் நாளேட்டில் (19.4.2014) வெளிவந்துள்ள _ திருவனந்தபுரம் பத்மநாபா கோயில் கொள்ளைபற்றிய செய்திச் சுருக்கம் இதோ: படியுங்கள்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.

தமிழ் ஓவியா said...

இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விபரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரைச் சந்தித்துப் பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத்தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்புக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:

பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொதுச் சொத்தாகும். ஆனால் கோயிலையும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களையும் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களாகக் கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுகத் தொடர்புகள் உள்ளன.

இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து பொக்கிஷங்களைக் கடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளைக் கடத்தி அதற்குப் பதிலாக போலி நகைகளைத் தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள பொக்கிஷங்களைப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மர்மமாக உள்ளது. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும். கோயில் நஷ்டத்தில் இயங்குவது போல் பொய்க் கணக்குக் காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்குகளைத் தணிக்கை செய்ய முன்னாள் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். கோயில் விவகாரங்களில் இனிமேல் மன்னர் குடும்பம் தலையிடக்கூடாது.

கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டும். மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும். இந்தியா குடியரசு நாடாகி பல வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாகச் சேர்ந்து கோயிலில் இருந்து பொக்கிஷங்களைக் கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலைத் தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சிச் சம்பவமும் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது ஆசிட் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் மர்மமான முறையில் ஒரு ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. பத்மநாபசுவாமி கோயில் விவகாரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கைக் கடைபிடித்துள்ளது. கோயில் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரைக் கோயிலுக்குள் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது. இது போல் பல மோசமான சம்பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இதுவே முழு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்த அறிக்கையாகாது; பனிப்பாறையின் முனை (Tip of the iceberg) என்று சொல்லுவார்களே அது போன்றதே இது!

பொருள் கொள்ளையோடு, ஊழியர்களைக் கொலைசெய்த முயற்சிகளும், ஊழியர்கள் மீது திராவகம் _ ஆசிட் வீசிய நிகழ்வுகளான பல்வேறு கிரிமினல் குற்றங்களும்கூட நடைபெற்று உள்ளன!

இந்திய நாட்டின் எல்லா பிரபல கோயில்களையும் அதன் கடவுளர், கடவுளச்சிகளையும் _ சிலைகளையும், சொத்துக்களையும் ஆராய்ந்தால் தெரியும்.
பகற்கொள்ளை பகா மேதைகளான சிதம்பரம் தீட்சதர்களின் சுரண்டல், கொள்ளையிலிருந்து அதனை மீட்டது தி--.மு.க. அரசு. மீண்டும் பார்ப்பனர் உச்ச நீதிமன்றத்தின் தயவால் _ மீண்டும் பகற்கொள்ளைக்கு வாய்ப்பைத் திரும்பப் பெற்று தம் சைட் கொண்டையை தட்டிவிட்டுச் சவால் விடுகின்றனரே!

இந்தியா முழுவதும் இப்படி பல கோயில்களில் வடபுலத்திலும் நடைபெறுவதை ஆராய பிரதமர் நேரு காலத்தில், சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அதுபற்றி விசாரணை நடத்தி, பரிந்துரைகளைத் தவிர ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்து அது அறிக்கையை 1960_62இல் தந்தது!

அதில் 2 பாட்டில் சாராயத்திற்காக சாமி சிலையையே விற்ற அர்ச்சகர்கள் சம்பவம் பற்றியெல்லாம் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் சில செய்திகள் இதோ!

பிரபல பழனிமுருகன் கோயிலில் அங்குள்ள அய்ம்பொன் முருகன் சிலையையே கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் (முன்பு புலிப்பாணியார்கள் பரம்பரையான சைவப் பண்டாரங்களான தமிழ் ஓதுவார்கள்தான் அங்கே அர்ச்சகர்கள் _ பிறகு திருமலை நாயக்கன் மதுரையை ஆண்டபோது அவருக்கு பிரதம மந்திரியாகவும் இருந்த இராமப்பையன் என்ற பார்ப்பனர்தான் பழனிகோயிலில் முறையாக பார்ப்பனரை கொடுமுடியிலிருந்து இறக்குமதி செய்து அவர்களிடம் ஒப்படைத்தார் என்பது உண்மை வரலாறு).

அங்கே முருகனையே சுரண்டும் கொடுமை _ குற்றச்சாற்றாக விஸ்வரூபம் எடுத்தபோது, தமிழக அரசு நீதியரசர் ஜஸ்டிஸ் பி.எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் போட்டு அறிக்கை வாங்கி, பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை எடுத்து பழனிமுருகனை மேலும் சுரண்டாமல் இந்து அறநிலையத்துறை பாதுகாத்தது!

எம்.ஜி.ஆர். அரசு நியமித்த ஜஸ்டிஸ் மகராஜன் கமிஷனின் அறிக்கையில் பார்ப்பன அர்ச்சகர் என்பவர்கள் எத்தகைய ஒழுக்கமற்ற சுரண்டல் பேர்வழிகள் என்பதையும் தகுதி இல்லாதவர்கள் என்பதையும்கூடச் சுட்டியிருக்கிறது!

ஹிந்து அறநிலையத் துறை கமிஷனராக இருந்த கோவைகிழார் என்று பலராலும் அழைக்கப்பட்ட, சி.எம்.இராமச்சந்திரனார் அவர்கள் கோயிற்பூனைகள் என்ற பெயரில் வெகுகாலம் முன்பு தினமணி வெளியீடாக எழுதியதில், இத்தகைய பல்வேறு சுரண்டல்கள், பகற்கொள்ளை, திருட்டுகள் பற்றியும் எழுதியுள்ளார். (நாமும் அதை சில ஆண்டுகளுக்கு முன் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளோம்.) இவை ஒருபுறமிருக்க, ஆந்திர ஆசிரமத்தில் சத்திய சாயிபாபா மறைவுக்குப் பின் அவரது சொத்துகள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு எளிதில் மறந்துவிட்டதே!

இப்போதுள்ள வடநாட்டு, பாபாக்கள், இன்றுள்ள ஆனந்தாக்களும், மயின்களும் பற்றிய பல்வேறு குமட்டல் கொள்ளைகள் கொஞ்சமா? நஞ்சமா? இந்திய அரசுக்குத் தேவையான அவ்வளவு நிதிகளும் இவைகளிடமிருந்து கடன்போல வாங்கி _ கோயில்களிடமிருந்து பறிமுதல்கூட வேண்டாம் _ தங்க பாண்டுகள் போல கடன் பத்திரங்களை மத்திய அரசு வழங்கி மக்களிடம் வரி போட்டு கசக்கிப் பிழியாமலேயே ஆட்சி நடத்தலாமே!

பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட வேண்டாமா?

பக்தி என்ற பெயரால் இப்படி ஒரு பகற்கொள்ளையை, ஏற்படாத இழப்பான, கற்பனை இழப்பான 2ஜி 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று எழுதும், பேசும் வாய்கிழிந்த வக்கனை ஊடகத்தினர்களே, அரசியல் தலைவர்களே இந்த உலக மகா, மெகா, கொள்ளைகளுக்குத் தீர்வுதான் என்ன?

கடவுள் காப்பாராம் இன்னமும் நம்பும் அறியாமைப் பிண்டங்களே, தன்னை, தன் சொத்தைக் காப்பாற்றத் தெரியாத கடவுள்களா உன்னைக் காப்பர் என்று கேட்டாரே தந்தை பெரியார், அந்தக் கேள்விக்கு இதுவரை எவராவது பதில் சொன்னதுண்டா?
சிந்தியுங்கள் பக்தர்களே!

திருந்துங்கள், அறியாமையிலிருந்து அறிவுப் பாதைக்கு வாருங்கள், விரைந்து வாருங்கள்; அது உங்களை உயர்த்துவதோடு, உலகத்தார் கண்முன் இந்நாட்டிற்குப் பெருமையைக் கூட்டிவரும்!

தமிழ் ஓவியா said...

ஹிந்து மத அறக்கட்டளைகள் ஆணைய அறிக்கை - 1960-1962

அ. கோயில்கள்

4. முதல் வேத இலக்கிய காலத்தில் தோன்றிய வேதகாலத்து வழிபாட்டுப் பாடல் திரட்டான சம்ஹிதாவில் இப்போது நாம் அறிந்திருக்கும் கோயில்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், தீ வளர்க்கப்பட்டு, கடவுளுக்குக் காணிக்கை சமர்ப்பிக்கப்படும் ஓரிடம் பற்றி அக்னியகரா (agnyagara) என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்த தெய்வம் தொழப்பட்டாலும் சரி, ஹூடாவாஹா (agnyagara) என்னும் புனிதமான தீக் குண்டம்தான் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகளை அந்தத் தெய்வத்திடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும். வேறு எந்தவிதமான வழிபாட்டுக்கான அடையாளமோ, தொழுபவர் வாழும் இடத்தில் உள்ள பலிபீடம் தவிர பலி கொடுப்பதற்கான தனி இடமோ இருந்ததாகத் தோன்றவில்லை. இந்த அக்னியகரா என்னும் இடமே ஒரு கோயிலின் தோற்றமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படக்கூடும். சம்ஹிதாவில் கோயில்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லையென்றாலும், சூத்ர காலத்தில் ஏதோ ஒரு வடிவிலான கோயில்கள் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகவே தோன்றுகிறது. கடவுளின் வீடு என்ற பொருள் தரும் தேவதவதானம் (Devathavathanam) என்னும் சொல்லும், கடவுளின் உருவம் என்ற பொருள் தரும் தேவபிரதிமா (Devapratima) என்னும் சொல்லும் சூத்ரர்களுக்கு முந்தைய பார்ப்பனர்களின் வேதகால வழிபாட்டு இலக்கியத் தொகுப்பு ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலப் பார்ப்பனர்களின் காலத்தில் கடவுளின் உருவங்களும், அவற்றை வைப்பதற்கான கோயில்களும் உருவாக்கப்பட்டன. கவுதமா மற்றும் அபஸ்தம்பா ஆகியோரின் தர்ம சாஸ்திரங்களில் கோயில்கள் பற்றிய நிச்சயமான குறிப்புகள் காணப்படுகின்றன. தனது தர்மசாஸ்திரத்தை கவுதமா எழுதிய காலத்தில், கிணறுகள், தோட்டங்கள், தர்மசாலைகள் போன்ற அறக்கட்டளைகள் இருந்திருக்கின்றன என்பதையும், இத்தகைய அறப்பணிகளுக்காகவும், ஆன்மீக நோக்கங்களுக்காகவும் நிலங்களை மானியமாக அளிக்கும் பழக்கம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது என்பதையும் மெய்ப்பிப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், புராண கால தொடக்கத்தில்தான் கோயில்களைக் கட்டுவது என்னும் செயல்பாடு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றது. கடவுள் சிலைகளைப் புனிதமாக்கும் வழிமுறைகள் பத்ம புராணத்திலும், மற்ற புராணங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தானாகத் தோன்றிய (சுயம்பு) கடவுள் சிலைகளுக்கும், மண், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு மனிதர்களால் செய்யப்பட்ட கடவுள் சிலைகளுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு வரையறுக்கப்பட்டுள்ளது.

பிந்தைய கடவுள் சிலைகளைப் பொருத்தவரை பிராணபிரதிஷ்டா (prana praatishtha) என்னும் புனிதமாக்கப்படும் சடங்கு செய்யப்படவேண்டும். அஷ்டதியாயி (Ashtadhyayi) நூலின் ஆசிரியரும், தலைசிறந்த இலக்கண ஆசிரியருமான பாணிணி காலத்தில், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கடவுள்களுக்கான கோயில்கள் இருந்தது பற்றிய எந்தக் குறிப்பையும் நம்மால் காணமுடியவில்லை. ஆனால், பார்வதி என்னும் பெண் கடவுள் மற்றும் அவரது இணையர் சிவன் ஆகியோரைப் பற்றி பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்த மவுரியரின் புகழ்பெற்ற அமைச்சரான கவுடில்யர் காலத்தில்தான், கோயில்கள் கட்டப்பட்டது பற்றிய நிச்சயமான குறிப்புகளை நம்மால் காண முடிகிறது. டாக்டர் ஷியாமா சாஸ்திரி பதிப்பித்த கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் நூலின் 54ஆவது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அபராஜிதா, அப்ராதிதா, ஜெயந்தா, வைஜெயந்தா, சிவா, வைஸ்ரவானா, அஸ்வினா மற்றும் பெண் கடவுள் மதிரா ஆகியோருக்கான கோயில்கள் ஒரு நகரின் மய்யத்தில் அமைந்திருக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...


கோயில்களிலும், திறந்த வழிபாட்டிடங்களிலும் வைக்கப்பட்டிருந்த கடவுள் சிலைகள் எவரது தனிப்பட்ட உடைமைகளாகவும் இருக்கவில்லை; அதற்கு மாறாக ஒரு கடவுள் சிலையின் உரிமையாளருக்கு ஒரு தனிப் பெயர் அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கடவுள் சிலைகள் பூசிப்பதற்கு மட்டுமல்லாமல், உரிமையாளர் வாழ்வதற்கான ஓர் வாழ்வாதாரமுமாக இருந்தன. அதே நேரத்தில், தேவலாகாஸ் (Devalakas) அல்லது கோயில்களின் பாதுகாவலர்கள் உடமைகளாக இருந்த கடவுள் சிலைகளைப் பற்றி பாணினி விவரித்துக் கூறியுள்ளார். இந்தக் கடவுள் சிலைகள் ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்பட்டும் இருக்கும்; அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுபவையாகவும் இருக்கும். பாணினி அறிந்த இந்தியா என்ற தனது நூலின் 362ஆவது பக்கத்தில், தேவததியக்ஷா என்று அழைக்கப்படும் அரசனின் அதிகாரி தெய்வீகக் கடவுள் சிலைகளை வழிபடுவது பற்றியும், திருவிழாக்கள், கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது பற்றியும் முனைவர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 1952இல் ஜார்ஜ் அல்லன் மற்றும் அன்வின் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட கிழக்கத்திய மேற்கத்திய தத்துவங்களின் வரலாறு என்னும் நூலின் 33ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, வீடுகளில் தெய்வ வழிபாடு நடத்தும் வேதகால பழக்கத்தினால் சமூக மக்களிடையே ஏற்பட்ட உறவு, கிராமங்களிலும், நகரங்களிலும் சமூக வழிபாடு நடத்துவதற்கும், அதற்கான கோயில்களும், வீடுகளின் வழிபாட்டுத் தலங்களும் கட்டப்படுவதற்கும் வழிவகுத்தது.

தமிழ் ஓவியா said...

5. வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சில சடங்குகள், உயிர்ப் பலிகளை எதிர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் புத்தமதம் தோன்றியது. பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த அறிவார்ந்த கடவுள் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை அற்ற, ஆன்மீக நெறியில் அல்லாத மதமாக பவுத்தம் விளங்கிய போதிலும், நினைவுச் சின்னங்களாக புத்தரின் உடல் உறுப்புகள் போற்றப்பட்டதும், பின்னர் புத்த மத நூல்களுக்கு அளிக்கப்பட்ட புனிதத்தன்மையும், புத்தரின் உருவத்தையே கடவுளாக வழிபடுவது என்று இறுதியாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவும், இந்தியாவில் பரவலான உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்தன. இந்துக்களிடையே எந்தக் காலகட்டத்தில் உருவ வழிபாடு தொடங்கப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எளிதானது அல்ல. தொடக்க கால புத்த இலக்கியத்தில் உருவ வழிபாடு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. கவுதம தர்ம சாஸ்திரத்தில் உருவத்தைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது என்ற போதிலும், அது எந்தக் குறிப்பிட்ட கடவுள் உருவத்தையோ, உருவங்களையோ குறிப்பிடுவதாக இருக்கவில்லை. இன்றைய நாளில் இந்துக்களால் வழிபடப் படுகின்ற கடவுள்களில் பெரும்பாலானவை இதிகாசங்களிலும், புராணங்களிலும் கொண்டாடப்பட்டவையே ஆகும்.

இந்தியாவின் சில பாகங்களில் வழிபாட்டு வடிவங்கள் மாந்திரிகச் சடங்குகளின் கலவையாக இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக வங்காளத்தைக் குறிப்பிட்டுக் கூறலாம். இதிகாச காலத்திற்குப் பிறகும், புத்தமதத்தில் மஹாயானப் பிரிவு தலைதூக்கிய கி.பி. 4 முதல் 6ஆம் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும், இத்தகைய கடவுள்களின் வழிபாடு நாட்டில் பிரபலம் அடையத் தொடங்கியது. புத்தமதத்தின் செல்வாக்கு இந்தியாவில் உச்ச கட்டத்தில் இருந்த கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் எல்லோரா, அஜந்தா, கர்லா, ஹளபீடு போன்ற சில குறிப்பிடத்தக்க குகைக் கோயில்கள் கட்டப்பட்டன. இந்துக் கோயில்களின் கட்டிடக் கலைக்கு முதல் எடுத்துக்காட்டாக புத்த விகாரங்கள் விளங்கின என்றும் கூறலாம்.

தமிழ் ஓவியா said...


6. புராண தெய்வங்கள் வழிபடுவதற்கான கோயில்கள் கட்டுவது பற்றியும், புராணங்களின் பெருமை பற்றியுமான பரப்புரைக்கு குப்தப் பேரரசர்கள் பெரிதும் பங்களித்தனர். பல வடிவங்கள், பல தோற்றங்களில் விளங்கிய சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோரே பொதுவாக வழிபடப்பட்ட கடவுளர்கள் ஆவர். சக்தி வழிபாடு அல்லது உமா, பார்வதி, துர்கா, காளி என்பது போன்ற பல வடிவங்களில் சிவனின் இணையரை வழிபடுவது என்பது நாளடைவில் பிரபலமானது. விஷ்ணுவின் இணையரான லட்சுமி, பிரமனின் இணையரான சரஸ்வதி மற்றும் பல பெண் தெய்வங்களின் பல்வேறு அம்சங்களும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.

அக்காலத்தில் பின்பற்றப்பட்ட இந்து, ஜைனம், புத்தம் ஆகிய மதங்களையும், அவற்றின் கலைகளையும் பெரிதும் ஆதரிப்பவர்களாக குப்தப் பேரரசர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த இந்து அரசர்களும், மதவிஷயங்களில் சகிப்புத் தன்மைக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். நாடு முழுவதிலும் பலப்பல ஜைனக் கோயில்கள் தோன்றின. அபு மலைக்கு அருகில் உருவான தில்வாரா மற்றும் ரணக்பூர் கோயில்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்தக் கோயில்களில் ஜைனரின் உருவச் சிலைகள் மட்டுமே இருக்கவில்லை. இந்து மதக் கடவுள்கள், கடவுளச்சிகளின் உருவங்களும் இடம் பெற்றிருந்தன.

7. இந்தியாவின் தென்பகுதியில் கோயில்கள் படிப்படியாக உருவாகி வளர்ச்சி பெற்ற காலம் என்று 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியையும், 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியையும் கூறலாம். 6ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், காஞ்சி பல்லவ சாம்ராஜ்யம் முழுவதிலும், குடவரைக் கோயில்களை கற்களைக் குடைந்து உருவாக்கும் உந்துதல் தலைதூக்கியது. கிருஷ்ணா, கோதாவரி டெல்டா பகுதிகளை ஆண்டுவந்த விஷ்ணுகந்தன் என்னும் அரசன் கிருஷ்ணா நதிக்கரையில் உருவாக்கிய குடவரைக் கோயில்களில் இருந்து இந்தக் கருத்து தோன்றியிருக்கலாம். தொடக்க கால பல்லவ குடவரைக் கோயில்கள் கி.பி. 600_-630ஆம் ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டன. தமிழ் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் நிலைகளில் புகழ் பெற்றிருந்த அரசர்களில் ஒருவராக இவரும் கருதப்படுபவர் ஆவார். இந்தக் காலத்தில் பல குடவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. கி.பி. 630_-668ஆம் ஆண்டுக் காலத்தில் அரசாண்ட அவரது மகனான மாமல்லன் எனப்படும் நரசிம்ம பல்லவன் காலத்தில் விரிவான குடவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் கட்டுவதில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, மூலக் கோயிலைவிட அதிக உயரம் கொண்ட பல அடுக்குக் கோபுரங்கள் கொண்ட, கற்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோயில்கள் தோற்றம் பெற்றன. காஞ்சி கைலாசநாதர் கோயிலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இந்து மற்றும் ஜைன மதக் கோயில்களும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. கி.பி. 900ஆம் ஆண்டுக் காலத்தில் தஞ்சையில் சோழ வம்ச அரசர்கள் பல நாடுகளையும் வென்று கொண்டு வந்த நிலையில், இறுதியாக பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, பல்லவ காலக் கோயில்கள் கட்டப்படுவதும் முடிவுக்கு வந்தன. கி.பி. 1019ஆம் ஆண்டு தொடங்கி நிலைபெற்ற சோழ சாம்ராஜ்ய காலத்தில் திருவாரூர், தஞ்சாவூர், உத்தரநல்லூர் வைகுந்தப்பெருமாள் கோயில் போன்ற எண்ணற்ற புதியவகைக் கோயில்கள் தோற்றம் பெற்றன. இதன் உச்சகட்டமாக ராமேஸ்வரம், மதுரைக் கோயில்களைக் கூறலாம். சோழர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் அவர்களைத் தொடர்ந்து வந்த விஜயநகர மன்னர்களாலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு


உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் 15.4.2014; நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.

அரவாணிகள் என்ற பெயரில் ஏதோ நடமாடும் நிலையில்தான் அவர்கள் இருந்து வந்தனர். சமுதாயத்தில் ஏதோ அருவருப்பானவர்கள் கேலிக்குரியவர்கள் என்பது போன்ற மனப்பான்மை இருந்து வந்தது.

பிறப்பின் அடிப்படையில் உருவ அமைப்பில் சில மாற்றங்கள் இருந்து விடுவதாலேயே அவர்கள் மதிக்கப்படத் தகுந்தவர்கள் அல்ல என்ற மனப்பான்மை மனிதத் தன்மையற்றது -_ பகுத்தறிவுக்கும் விரோதமானது.

ஓர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பது பெரிதும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பு - பாலினம், மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சம வாய்ப்பை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்குகிறது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதற்கு (இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி) 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன என்றாலும் காலந் தாழ்ந்தாவது இப்படி ஒரு தீர்ப்பு வந்ததே என்று வரவேற்று மகிழ்ச்சி அடைகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று, 15.4.2014 சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் பேசினேன்.

13.4.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திருநங்கைகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கைகளை மூன்றாவது பாலாக, மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஷிமீஜ் என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்கவேண்டும் என்றும்,

தமிழ் ஓவியா said...


(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!

மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.

16ஆவது மக்களவைத் தேர்தல் தி.மு.க. அறிக்கையில்கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாகச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் _- தி.மு.க. தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

திராவிடர் கழக மாநாட்டிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின்றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர்களில் படித்தவர்கள் இந்த வகையில் வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...



எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?

இலங்கை அரசுக்குத் தலையாட்டுவதா இந்திய அரசு?

மாநில அரசு தப்பி வந்தவர்களை சிறையிடுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகிவருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக இலங்கை இராஜபக்சே அரசு சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை, மற்ற நாடுகளின் இலங்கைப் புறக்கணிப்பு போன்ற நிலைமை, இராஜபக்ஷே அரசுக்கு வரவிருக்கும் எரிச்சலில், அங்கு எஞ்சியுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களின்மீது காட்டத் துவங்கியுள்ளது.

முன்புபோலவே, தமிழ் இளைஞர்களை வேட்டையாடி மீண்டுமொரு இன அழிப்பு அத்தியாயத்தை புதிதாகத் துவக்கியுள்ளதாக, அங்கிருந்து தப்பித்து இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீருடன் ஏடுகளுக்குப் பேட்டி தந்துள்ளனர்! இதைப்பற்றி, அமெரிக்கத் தீர்மான வாக்கெடுப்பில் அதைப் புறக்கணித்து, இலங்கை அரசுக்கு உதவிய, இந்திய அரசு இப்போதும் மவுனம் சாதிக்கிறது; இதற்காக தனது கண்டனக் குரலை எழுப்பி இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழ்ப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிங்கள இராணுவம், காவல் துறை மூலம் ஆளாக்கப்படுவதாக, அங்கிருந்து தப்பித்து வந்துள்ள தமிழ்க் குடும்பத்தினர் கதறிக் கதறிக் கண்ணீர் வடித்துக் கூறும் அவலம் பற்றி, மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறிடும் அரசு கை பிசைந்து, வாய் மூடி நிற்கலாமா - இலங்கை அரசு முன்?

அது மட்டுமா? வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமைபோல தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, 16 தமிழ் அமைப்புக்கள், அதன் ஆதரவாளர்களான 424 பேர்கள்மீது தடைவிதித்ததோடு, உலக நாடுகள் அனைத்தும் இதுபோலவே அவ்வமைப்புகள், அந்த 424 தமிழர்கள் அனைவர்மீதும் தடைகளை விதிக்க வேண்டுமென அறிவிப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

இதனை பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஏற்க முடியாது; என்று நிராகரித்து விட்டன. ஆனால் இந்திய - மத்திய அரசு அத்தடையை இங்கும் போட்டு, இராஜபக்சே அரசின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பறிப்புக்கு மிகப் பெரிய அளவில் துணை போய் இருக்கிறது. எவ்வளவு பச்சை அக்கிரமம் இது?

பயங்கரவாதிகள் என்று இராஜபக்சே அரசால் போலி முத்திரை குத்தப்பட்ட விடுதலைப்புலிகளே அங்கு இல்லை; முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், சகஜ நிலை திரும்பி விட்டது என்று ராஜபக்ஷேக்கு சகஸ்ரநாமம் பாடிய மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு சர்வதேசத் தவறினை இழைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.

கெட்ட பின்பு ஞானம் சிலருக்கு வருவதுண்டு; மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வரவே இல்லை.

இந்த நிலையில், தமிழக அரசோ, அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவதுபோல், உயிருக்குத் தப்பி வந்த அந்த ஈழத் தமிழர்களை பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி, காவல்துறை சிறை பிடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? முற்றிலும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? அவர்களை அகதிகள் முகாம்களுக்குத்தானே கொண்டு சென்று அடைக்கலம் தந்து காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டாமா? இந்த அரசுகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தப்பி வரும் தமிழர்களை குறைந்த பட்சம் அகதிகள் முகாமுக்காவது அனுப்பி, அவர்களது தீராத துயரங்களுக்கு மருந்திடும் மனிதநேயச் செயலை மாநில அரசு செய்ய முன்வர வேண்டாமா? தமிழர்கள்தான் உலகிலேயே நாதியற்ற இனமா? தமிழர்களே சிந்தியுங்கள். மனிதநேயம் காப்பாற்ற பெரும் குரல் கொடுங்கள்; தயங்காதீர்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

6.5.2014 சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/79776.html#ixzz30zFmyuV0

தமிழ் ஓவியா said...


மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்


லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.

மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.

அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.

அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq

தமிழ் ஓவியா said...


மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்



அலகாபாத் மே 6 - சமீப காலமாக தேச நலனுக்கு எதிராகவும் மத மோதலை தூண்டும் வகை யில் மோடியும் அவரது சகாக்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது வட இந்திய மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தில் திங்கள் அன்று நடந்த பேரணியின் போது மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது. நேற்று காலை பேரணி நடந்துகொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நோ நோ மோதி டவுன் டவுன் மோதி என்று கூவிக்கொண்டு தனது காலில் இருந்த செருப்பை மோடியை நோக்கி வீசி னார். இந்த காட்சி உடனடி யாக அனைத்து தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பா னது. ஆனால் சில நிமி டங்களிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் மேடைப்பிரச் சாரம் ஒளிபரப்பானது.

இதனிடையே கூட்டத் தில் இருந்த பாஜகவினர் நரேந்திர மோடியின் பிரி வினைபேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். கூட்டத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அந்த நபரை பாஜக ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அலகா பாத் நகர காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித் தனர். விசாரணையில் பிரதாப் ருத்ரா சிங் என்ற அந்த நபர் அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும், கடந்த சில மாதங்களாக பாஜவினரும் நரேந்திர மோடியும் தேச நலனுக்கு எதிராக தேர்தல் பரப்புரை யில் பேசி வருவது குறித்து எனது எதிர்ப்பைத் தெரி வித்தேன். ஊடகங்கள் மோடியின் செயலை மறைத்து வைக்கும் செய லில் ஈடுபட்டு வரும் நிலையில் எனக்கு இந்தச் செயலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். விசார ணைக்குப் பிறகு அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்

Read more: http://viduthalai.in/e-paper/79781.html#ixzz30zGBNknV

தமிழ் ஓவியா said...


பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்


பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:

:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.

மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c

தமிழ் ஓவியா said...


இது உண்மையா?


சிதம்பரம் நடராசர் கோயிலில் பல உண்டியல்கள் தமிழக அரசால் வைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குபின் இதுவரை உண்டியல்கள் திறக்கப்படவில்லை. தற்பொழுது, தீட்சிதர்கள் உண்டியல்களைத் திறக்க முயற்சி செய்தனர். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமுகர் ஒருவர் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் - இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடிதம் எழுதி - முயற்சி செய்து, தீட்சிதர்கள் முயற்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். உண்டியல் திறப்பது அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையா?

Read more: http://viduthalai.in/e-paper/79782.html#ixzz30zGVsV4u

தமிழ் ஓவியா said...


இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?

உத்தரப்பிரதேசம், பைசாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி. மேடையில் ராமர் படம்; கிரீடம் வைக்கப்பட்ட ராமர் படம். மோடி பேசும் ஒலிபெருக்கிக்கு பின் னால், ராமர் படம் இருக்க வேண்டும் என முடிவு செய்து, பேனர் வைக்கப் பட்டுள்ளது.

மேடையில் பேசும் போது, மோடிக்குப் பின்னால், ராமரின் உருவத்தை மறைப்பதுபோல் மோடி நிற்பதற்கும், ராமரின் தலையில் உள்ள கிரீடம், மோடி தலையில் இருப்பது போல, மேடைக்கு எதிரே உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம், அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அங்கே பேசிய மோடி, தன் வாழ்நாள் முழு வதும், ஊழலை ஒழிப்பதற்கு போராட இருப்பதாகவும், ராமர் பிறந்த நிலத்தில் இருந்து இதனைக் கூறுவதாகவும் பேசி உள்ளார். காந்தியை வேறு சாட்சிக்கு அழைத்து உள்ளார். காந்தி ராமராஜ்யம் வேண் டும் என கனவு கண்டாராம்;

அதனைப் போல், இவர் ராமராஜ்யம் அமைத் திட வாக்களியுங்கள் என்கிறார். பைசாபாத் தொகுதிக்கு உட்பட்டதுதான் அயோத்தி நகரம். ராமர் அங்கே தான் பிறந்தார் என்று சொல்லி, 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்த இடம் அந்த தொகுதியில்தான் உள்ளது.

அத்தகைய பதற்றமான ஒரு பகுதியில் தான், மோடி, ராமர் படத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அப்பட்டமாக, மத உணர்வோடு பேசி உள்ளார். இது குறித்து, அந்த கட்சியின் இன்னொரு யோக்கியர் அருண் ஜெட்லியிடம், தொலைக்காட்சி ஊடகம் கேள்வி கேட்டதற்கு, ஜெட்லி சொல்கிறார்; மோடிக்கு ராமர் படம் வைத்தது தெரிந்திருக்காது; அந்த பகுதி நிர்வாகி கள் வைத்திருப்பார்கள்;

இனிமேல், இதுபோல் செய்யாதீர்கள் என அறிவு றுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார், சட்ட நிபுணர் என கூறப்படும் ஜெட்லி. மத சின்னங்களை, தேர்தல் நேரத் தில் பயன்படுத்தக்கூடாது என்ற தேர் தல் விதிகூட தெரியாமலா இருக் கிறார்கள், பிரதமர் கனவு காணும் மோடியும், அவருக்கு துணை நிற்கும் ஜெட்லியும். இவ்வாறு மதச் சின்னங்களை பயன்படுத்துவது தவறுதானே என செய்தியாளர் ஜெட்லியிடம் கேட் கிறார். அதற்கு, ஜெட்லி, இது தவறு என்று சொல்ல முடியாது; பிழையான முடிவு என்று வேண்டுமானால் சொல் லலாம் என்கிறார். சட்டம் படித்தவர், வார்த்தை விளையாட்டைக் காட்டுகிறார்.

1992-இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, அதில் கலந்துகொண்ட அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள், எங்களை மீறி இந்த செயல் நடந்து விட்டது என்றுதானே கூறினார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மசூதி இடிப்பில் கலந்து கொண்ட கரசேவர்களின் பொறுமை யின்மையை கணக்கில் எடுக்காதது பிழைதான்; ஆனால், அதற்கு அந்த இயக்கத்தவர் பொறுப்பு என கூற முடியாது என்று சொன்னவர் தான் அத்வானி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2011).

இப்போது, ஜெட்லியும் பிழை என்கிறார். கலவரம் நடைபெற்ற முசாபர் நகர் பகுதியில் ஜாட் மக்களைப் பார்த்து, நீங்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசிய மோடியின் வலது கரம், அமீத் ஷாவை, உ.பி.யில் எங்கும் பேசக்கூடாது என தடைவிதித்த தேர்தல் ஆணையம், பின்னர் அதனை தளர்த்தியது.

இப் போது, அதே, அமீத் ஷா, ஆசாம்கர் தொகுதியில் பேசும் போது, இந்த பகுதிதான், தீவிரவாதிகளின் தளம் என முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஆசாம்கர் பற்றி பேசுகிறார். ஆக, மோடி அலை எங்கும் வீச வில்லை என்பது தெரிந்ததும், குஜராத் வளர்ச்சி என்ற கோஷம் வீக்கம்தான் என்பது தோலுரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறார் மோடி.

இப்போது இறுதிக்கட்டமாக, ராம ரையும், ராமராஜ்யத்தையும், பயன் படுத்தி, தனது சுயரூபத்தை காட்டி யுள்ளார் மோடி. இதில் மிக முக்கிய மான விஷயம் எதுவெனில், பைசா பாத் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் லாலுசிங், பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏற்கனவே, முசாபர் நகர் தொகுதி யில் அந்த கலவரத்துக் காரணமானவர் தான் பாஜக வேட்பாளர்;

2002 குஜராத் கலவரம் நடைபெற்றபோது, முதல்வ ராக இருந்தவர் மோடி; உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. இப்போது சொல்லுங்கள், இவர் கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும் என்று?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79800.html#ixzz30zHE1e9R

தமிழ் ஓவியா said...


மே 6: உலக ஆஸ்துமா தினம்



நுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச குழாயின் உட்பகுதி வீங்கிக் கொள்வதால் ஏற் படும் குறைபாடே ஆஸ்துமா.

இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக, மே மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ் துமா தினமாக (மே 6ஆம் தேதி) கடைப்பிடிக்கப்படு கிறது.

உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும் என்பது இந்தாண்டு இத் தினத்தின் மய்யக்கருத்து. 1998இல் இத்தினம் தொடங் கப்பட்டது.

காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்துமா நோயாளிகள் அதற் கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு உடற் பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். தும்மல், இருமல், சுவாசித்த லில் ஏற்படும் சிரமம் ஆஸ் துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்ட றிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதில் ஏற்படும் தாமதம் நுரையீ ரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.

ஆஸ்துமாவுக்கு இப் போது இன்ஹேலர்கள் பரிந் துரைக்கப்படுகின்றன.

இது நுகரப்படுவதால் மருந்து நேர டியாக சுவாசப் பாதைக்கு சென்று சீர் செய்கிறது.

2025 இல் உலகில் 40 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப் படுவர் என கணிக்கப்பட்டு உள்ளது.

உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவினால் இறக்கிறார். அதில் 90 சதவீத மரணங்கள் தவிர்க்க கூடியவை. விழிப்புணர்வு இல்லா ததும், முறையான சிகிச்சை எடுக்காததும் மரணத்தை ஏற்படுத்துகிறது.

சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமாவுக்கு சூரிய ஒளியை அரிய மருந்தாக மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

இதிலிருந்து வைட் டமின் டி கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-3/79814.html#ixzz30zHdTsSz

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பழகு முகாம் - முதல் நாளில்...


சனாதன தர்மத்தை வேரோடு சாய்த்த கடல் பூதம்- நாடகம்!

முப்பரிமாணக் காட்சியைக் கண்டு ரசிக்கும் பிஞ்சுகள்.

தஞ்சை மே 6- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தொடங்கிய பழகு முகாமின் முதல் நாளில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தான கடல் பூதம் நாடகம் குலத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிற பார்ப்பன தர்மத்தை தகர்ப்பதை ஆரவாரமாக நகைச் சுவையோடு நடத்திக் காட்டியது.

கண்களுக்கு பயிற்சி புதிய முயற்சி

பழகு முகாமின் தொடக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற பிறகு தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி , அப்துல்கலாம், கல்பனா சாவ்லா அண்ணல் காந்தி, ஜவர்ஹலால் நேரு, அன்னை தெரசா, தாமஸ் ஆல்வா எடிசன், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் படங்களுடன் கூடிய முகமூடி பெரியார் பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்டது.

அந்தந்த தலைவர்களின் பெயர்களை ஆவலோடு தெரிந்து அதை அணிந்து கொண்டு, மேடையேறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். சுவையான மதிய உணவுக்குப் பிறகு கண்ணாடி அணிந்துள்ள 19 பெரியார் பிஞ்சுகளுக்கு பார்வைக் குறைபாட்டை பயிற்சி முகாம் அகற்றும் அரியதொரு முயற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்தப் பணிகளை யோகா ஆசிரியர் முரளீதரன் ஒருங்கிணைத்து கொடுத்தார். இதில் புதுவை சிவவீரமணி, பேரா. பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலிலியோ அரங்கத்தில் குதூகலம்

தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் சுழற்சி அடிப்படை யில் Periyar Knowledge Centre கட்டடத்தின் இரண் டாவது தளத்தில் அமைந்துள்ள கலிலியோ அரங்கத்தில் முப்பரிமாணப் பட்டைப்படம் (3D Movie) காண்பிக் கப்பட்டது.

அதில் டயனோசர்கள், இயற்கையைப் பேணுவது, ஆழ்கடல் ஆகியவைகளைப்பற்றி திரை யிடப்பட்டது. இந்தத் திரையிடல் பெரியார் பிஞ்சு களின் ஏதோபித்த ஆதரவை பெற்றது. அதே கட்டடத் தின் மூன்றாவது தளத்தில் கணினி விளையாட்டுகளி லும் ஆர்வத்துடன் பெரியார் பிஞ்சுகள் ஈடுபட்டனர்.

இயற்கை வண்ணங்களில் பிஞ்சுகளின் எண்ணங்கள்

கலைத் திறன் கற்கும் செல்வங்கள்

பிறகு, பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் கிரே யான் பென்சில்கள் மூலம் ஓவியங்களையும், அய்ஸ் குச்சிகள்மூலம் மேசை, பேனா கூடு ஆகியவைகளை யும் படைப்பு ஓவியங்களில் இயற்கை வண்ணங் களைத் தீட்டியும் பழகு முகாமின் ஒருங்கிணைப்பா ளர்களையும், மற்றவர்களையும் பெரியார் பிஞ்சுகள் அசத்திவிட்டனர்.

தமிழ் ஓவியா said...


அதிலும் சிலர் இப்படித்தான் அஜெந்தா குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்று கூறிநம்மைத் திகைக்க வைத்தனர். திருச்சியி லிருந்து வருகை தந்திருந்த அய்ஸ்வர்யா என்ற பெரியார் பிஞ்சு, அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பழகு முகாம் கையேட்டில் உள்ள தந்தை பெரியாரின் கோட்டோவியத்தை அச்சு அசலாக, அதுவும் மிக விரைவில் வரைந்து முடித்து ஆச்சர்யப்படுத்தினார். இந்தப் பணியில் நம்மை மட்டுமல்ல அவர்களையே மறந்து கடமையே கண்ணாயினர்.

இதுவரையில் அரங்கம், அறை என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்ட விடுதலை என்றிருந்துமே உற்சாக மாக இருந்த பெரியார் பிஞ்சுகள் பரந்து விரிந்து கிடந்த விளையாட்டுத் திடலில் அனுமதிக்கப்பட்டதும் ஏய்... என்று உற்சாகத்துடன் பறவைகள் போன்று பறந்து திரிந்து தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆடித் தீர்த்துவிட்டனர் அவர்களின் உற்சாகத்தை மங்கி வந்த வெளிச்சம்தான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று.

சுவையான சிற்றுண்டிக்குப் பிறகு பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமின் ஒழுக்கப்படி அந்தந்த பிரிவுகளின் தலைவர்கள் (வாலண்ட்டியர்ஸ்) மூலம் வரிசைப்படுத் தப்பட்டு, முத்தமிழ் அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

அங்கு முதல் நிகழ்ச்சியாக கை, கால் கழுத்து ஆகிய பகுதிகளில் கட்டியிருக்கும் கயிறுகளால் ஏற்படும் தீங்கை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பையோடெக் பிரிவின் ஆசிரியர் குமரன் விளக்கிப் பேசியும், சில பிஞ்சுகளை மேடைக்கு அழைத்து அவர் கள் கட்டியிருந்த கயிற்றின் ஒரு சிறு பகுதி, நக அழுக்கு களில் கொஞ்சம் பரிசோதனைக்குட்படுத்தி, நாளை அதன் விளைவை காண்பிக்கிறேன் என்றும் கூறி விடைபெற்றார்.

கடல் பூதம் நாடகம்

குழந்தைகள் ரசித்த வேலு மாமாவின் குதூகல நாடகம்

அதைத் தொடர்ந்து, புதுவை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேலுமாமா என்று குழந்தைகளால் அன்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் வேலுசரவண னின் குழுவினர் நடத்திக் காட்டிய கடல் பூதம் - நாடகம் பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் பிஞ்சுகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டது. 209 பேரையும் தன் நாடகத்தில் சேர்த்துக் கொண்டு தானும் நடித்து அசத்தினார்.

மாலை முழுவதும் விளையாட்டு

பள்ளிக்கு செல்லக்கூடாது பாடம் படிக்க கூடாது குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை மாற்றி தான் விரும்புகின்ற தொழிலைச் செய்யாமல் படிக்கலாம் பள்ளிக்குச் செல்லலாம் என்ற வகையில் நாடகத்தை அமைத்து, இதையே ஆரவார மாக நகைச்சுவையுடனும் பெரும் பரபரப்புடன் நடத்தி காட்டி மாணவர்களுக்கு புத்தறிவு புகட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்கும், கருத்துக்கும் சுவை கிடைத்த பிறகு அனைவருக்கும் வயிற்றுக்கும் சுவை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிஞ்சுகள் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளில் நண்பர்களுடன் அமர்ந்து ஆரவாரமாக அரட்டை அடித்துக்கொண்டே கையேட்டினை எழுதிவிட்டு அடுத்த நாளுக்கான ஆவலுடன் உறங்கச் சென்றனர்.

நேற்றைய செய்தியில் திருத்தம்....
3 ஆம் பக்கம் 3 ஆவது பத்தியில்....

புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப் படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும் அவரைப் போல ரிலேடிட்விட்டி தியரியைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போலவும் சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-8/79813.html#ixzz30zI2jyDN

தமிழ் ஓவியா said...


மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -


சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-

தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.

திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.

அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.

திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்


பருய்பூர், மே 7- நாட்டின் பிரதமராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ னிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச் சார்ஜி கூறி யுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந் தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முத லில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர்.

தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ் தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலி காப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79853.html#ixzz314ke0J00

தமிழ் ஓவியா said...


மோடியின் ராமன் பேச்சும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்!


மோடியின் ராமன் பேச்சு: அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம் என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் பேசிய பொதுக்கூட்டத்தில் மோடி தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்குக் காரணம்.

தனது பேச்சில் ராமன் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்; ராமன் பிறந்த மண்ணிலிருந்து பேசுகிறேன் - காங்கிரசுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் பேசியதோடு மட்டுமல்ல, அந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் ராமன் உருவம் பல வண்ணத்தில் தீட்டப்பட்ட பதாகையும் வைக்கப்பட்டு இருந்தது.
இதுதான் இப்பொழுது பிரச்சினைக்குக் காரணமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைப் புகுத்தியதுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருப்படியாக வெளிப்படுத்த முடியாத போது - அதற்கான சிந்தனையோட்டம் இல்லாத கையறு நிலையில், பி.ஜே.பி. மக்களின் மலிவான நம்பிக்கையை - பக்தியைக் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதை முதன்மைப்படுத்தாமல், தேர்தல் ஆணையம் நியாயமாக - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அது இந்திய அரசமைப் புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமான ஒன்றல்லவா! அதன்மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமில்லையே!

பாபர் மசூதி உடைப்புத் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வாக்குறுதியைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுகூட நீதிமன்ற அவமதிப்பாகாதா?

இதே உத்தரப்பிரதேசத்தில் இதே மோடி - உத்தரப் பிரதேசத்தின் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பி.ஜே.பி.,க்குத் தாருங்கள் - ராமன் கோவில் கண்டிப்பாகக் கட்டித் தருகிறோம் என்று சொன்னாரா - இல்லையா?

அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?

மகாராட்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை எடுத்து வைத்த காரணத்தால், வெற்றி பெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது உண்டே!

மதச்சார்பற்ற கொள்கை எங்கள் கட்சிக்கு உறுதியாக உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி.யின் தலைவர்களால் பேசப் பட்டு வருகின்றது. இது எப்படியென்றே தெரியவில்லை. தங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள்பற்றிச் சற்றும் பி.ஜே.பி. கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லலாமா?

அதேநேரத்தில், பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துள்ள அந்த மதச்சார்பற்ற கட்சிகளும் - பி.ஜே.பி.யின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தும் சொல்லவில்லை என்பது மிகப் பரிதாபமே!

பதவிப் பசி வந்தவர்கள் கையில் எது கிடைத்தாலும் உண்பார்கள் போலும்!

இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு ராமன் கோவில் கட்டுவார்களாம் - அது எப்படி என்று தான் புரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி இத்தகு செயலுக்கு இடம் அளிக்கிறது?

மதச்சார்பற்ற தன்மை என்று அரசமைப்புச் சட்டம் கூறியதற்குப் பொருள்தான் என்ன?

இன்னொன்றையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது. ராமன் கோவில் கட்டுவது என்பதுபோன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - இது மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று பி.ஜே.பி. யினர் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில், இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்டால், அரசமைப்புச் சட்டம் நீதிமன்றம் இவற்றை யெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் அல்லர் என்கிற முறையில்தானே செயல்படுவார்கள்?

மதப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துக்கொண்டுள்ள கட்சிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது - முடியாது என்கிற அளவில் கடுமையான அளவில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனைக் கறாராக செயல்படுத்தா தவரை மோடிகளும், மோகன்பகவத்துகளும் எந்த எல்லையைத் தாண்டியும் எகிறிக் குதிப்பவர்கள் என்பதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளலாம்.

அடிப்படையை மறந்துவிட்டு, ஓடி விளையாடு பாப்பா என்ற முறையில், தேர்தல் ஆணையம் பெரிய பிரச்சினைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்டு, சின்னஞ்சிறிய புகார்களை விசாரிப்பதாகக் கூறுவதெல்லாம் அசல் ஏமாற்று வேலையே!

Read more: http://viduthalai.in/page-2/79867.html#ixzz314l0Sajy

தமிழ் ஓவியா said...


எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோடிஜி!

- குடந்தை கருணா

தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தில் பிறந்ததால், விமர்சித்து விட் டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியா கஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப் பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்ப தால், தன்னை தாக்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத் தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசு கிறார்.

சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற் படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற் காக, தர்மம் கெட்டுவிட்டது எனக் கூறி, சம்பூகன் தலை வெட்டப் பட் டது என ராமாயணத்தில் கூறப்பட் டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?

அந்த ராமாயணத்தையும், ராம னையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

குஜராத்தில் நான்கு முறை முதல் வராக இருந்த மாதவ் சிங் சோலங் கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக் கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக் கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப் போது சொல்கிறார், தான் பிற்படுத் தப்பட்டவன் என்று?

மண்டல் குழு பரிந்துரையை வி.பி. சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப் பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?

வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத் திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

2005 இல் மத்திய அரசில் அர்ஜூன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத் துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப் போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று.

பிற்படுத்தப்பட்ட மக்கள், மோடியின் இந்த மோசடிப்பேச்சை நிச்சயம் நிராகரிப்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/79872.html#ixzz314lEjMLu

தமிழ் ஓவியா said...


மூடத் தனத்தில் கிராம மக்கள்

மூடத் தனத்தில் கிராம மக்கள்
மணப்பாறையில் மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!

திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.

சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!

தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV

தமிழ் ஓவியா said...


பக்தி வந்தால் புத்தி போகும்



சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.

அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.

உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.

Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV

தமிழ் ஓவியா said...


பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்


பிரிவு 370அய் விலக்குவது:
காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு

சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.

செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.

கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?

உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.

இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய

இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.

குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?

உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.

நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்


ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:

1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.

2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.

3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!

4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.

5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)

6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.

7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.

8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.

9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.

10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.

11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.

12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.

13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.

14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).

இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.

ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.

திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.

கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.

அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.

பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ

தமிழ் ஓவியா said...


நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை


நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp

தமிழ் ஓவியா said...


பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்


விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4

தமிழ் ஓவியா said...

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.

இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx

தமிழ் ஓவியா said...

சுறாக்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

பெரிய வகை வெள்ளை சுறாக்கள் எழுபது வயதுக்கும் மேல் வாழக்கூடியவை என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கதிரியக்கத் தன்மை கொண்ட கார்பனைக் கொண்டு சுறாக்களின் வயதை ஆய்வு செய்ததில் இவ்வகை ஆண் சுறாக்கள் 70வயதுக்கு மேலும், பெண் சுறாக்கள் 40 வயது வரையிலும் வாழக்கூடியவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3nDuko

தமிழ் ஓவியா said...

பற்களை சோதிப்பதன் மூலம் பிறந்த தேதியை அறியலாம்

சென்னை, மே 8- குழந்தை களுக்கு பற்கள் வளருவதை சோதிப்பதன் மூலம் அவர் களது பிறந்த தேதியைக் கண் டறிய முடியும் என ஹாங் காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் குழந்தைகள் சார் மருத்துவ ஆராய்ச்சியா ளருமான மருத்துவர் ஜே. ஜெயராமன் கூறினார்.

போரூர் சிறீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத் துவர் ஜே.ஜெயராமன் பேசி யது: பற்கள் வளர்வதைச் சோதிப்பதன் மூலம் ஒரு குழந்தை பிறந்ததை கிட்டத் தட்ட கண்டுபிடிக்கலாம். ஆண் குழந்தைகளின் வயதை 1.5 வாரம் மற்றும் பெண் குழந்தைகளின் வயதை 2.6 வார வித்தியாசத்துக்குள்ளும் துல்லியமாக நிர்ணயிக்க முடி யும்.

இந்த வகையான சோத னைகள் இங்கிலாந்தில் பர வலாக பயன்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அடிப் படைத் தகவல்கள் முறை யாக சேகரிக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்ட பின்புதான் இதுபோன்ற ஆய்வுகள் நடத் தப்பட வேண்டும் என்றார் ஜெயராமன்.

யுனிசெஃப் அமைப்பு கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 5 வயதுக்குள் பட்ட 41 சதவீத குழந்தை களே பிறக்கும்போது பதிவு செய்யப்படுகின்றன.

இது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், குழந் தைத் தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழ கத்தின் குழந்தை சார் பல் மருத்துவத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்து கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79913.html#ixzz31B4Lskyl