Search This Blog

1.5.14

பார்ப்பனஆதிக்கத்தை ஒழிக்க நாம்தான் பாடுபட வேண்டியுள்ளது!-பெரியார்

எங்கும் நிறைந்துள்ள பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க நாம்தான் பாடுபட வேண்டியுள்ளது!


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தோழர்களே! உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சத்துவாச்சாரிக்கு (வேலூர்) இதற்கு முன் சுமார் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு தடவை வந்திருக்கிறேன். பிறகு இன்றுதான் இங்குவர வாய்ப்புக் கிடைத்தது. இப்பவும் என்னை வரும்படியழைத்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. இப்போது தான் வர வசதி கிடைத்தது.

திராவிடர் கழகம் தமிழ் மக்களுக்காக - தமிழ் நாட்டிற்காகப் பாடுபட்டு வருகிற ஒரு நிறுவனமாகும். இந்த ஒரு நிறுவனத்தைத் தவிர இந்த நாட்டில் வேறு கட்சியும் கிடையாது. இன்றைக்குப் பெரும்பான்மையாகவுள்ள காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர்கள் இருந்தாலும் அது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு என்று இல்லை. ஆகவே அதில் (காங்கிரஸ்) நம்மைப் பற்றிக் கேட்க நாதியில்லை. காங்கிரஸ் கட்சியின் உண்மை யோக்கியதையைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டு இப்பொழுது இருப்பவர்கள் வெகு சிலர்தான். அவர்களும் திருடர்களாகவேயிருப்பவர்கள். அவர்கள் பார்ப்பனரின் காலைப்பிடித்துப் பிழைப்பவர்கள். இதை விட்டால் அவர்களுக்கு வேறு பிழைப்பும் கிடையாது.

காங்கிரஸ்காரர்கள் தமிழ், தமிழர், தமிழ்நாடு இவற்றைப் பற்றியும் இவற்றின் நன்மையைப் பற்றியும் நினைப்பதில்லை. அப்படி மனத்தில் நினைத்தாலும் பேச வாய் திறக்காது. அப்படித் தப்பித் தவறி யாராவது பேசிவிட்டாலும் "வகுப்புணர்ச்சியை எழுப்புகிறது. நாட்டுப் பிரிவினையை ஏற்படுத்துகிறது. இன உணர்ச்சியை உண்டாக்குகிறது" என்று கூறி இலாயக்கில்லை என்று தள்ளிவிடுவார்கள். பேசவிட மாட்டார்கள்.

ஒரு மனிதன் இன்று காங்கிரஸ்காரனாக இருக்கிறான் என்றால் அவன் நமக்கு எதிரி; நமது நாட்டுக்கு எதிரி; நம் சமுதாயத்திற்கு எதிரி என்று அர்த்தம். நாம் நாம் சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அவன் ஒழியக்கூடாது என்பான். நாம் நாடு பிரியவேண்டும் என்றால் பிரியக்கூடாது என்று தடுப்பான். நமது சமுதாயம் முன்னேற விகிதசாரப்படி படிப்பு, உத்தியோகம் வேண்டுமென்றால் இவற்றைப் பற்றிப் பேசக்கூடாது என்பான். இப்படி எதற்கெடுத்தாலும் இந்தக் காங்கிரஸ் கட்சியினர் பார்ப்பான் காலடியில் விழுந்து இருப்பதனால்தான் அவன் நம்மை மதிப்பதில்லை. எப்படிப்பட்ட சீர்திருத்தமுள்ள பார்ப்பானாக இருந்தாலும் சரி அவனுக்கு மேற்கண்ட எண்ணங்கள் கொஞ்சமும் வாரா.

இன்றைக்கு எடுத்துக் கொண்டால் எங்குப் பார்த்தாலும் பார்ப்பன மயமாகத்தானே இருக்கிறது? எதிலும் கருமாதி, புரோகிதம் செய்யும் பார்ப்பான்தானே நிறைந்திருக்கிறான்? இந்த நாட்டின் பிரதம மந்திரி நேரு ஒரு பார்ப்பான். நேரு, நேருவின் தகப்பனார் தவிர மற்ற மற்ற மூதாயர்கள் புரோகிதம் செய்யவே காஷ்மீரத்திலிருந்து இங்கு இந்தியாவுக்கு வந்தவர்கள்! இதற்கெல்லாம் சரித்திரம் இருக்கிறது.

அடுத்து நம்நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு பார்ப்பான் அடிமை - முன்னேறிய ஜாதிக்காரர் இராசேந்திர பிரசாத்திற்கு அந்தப் பதவி நேரு கொடுத்த பிச்சைதான். இருந்தாலும் நேருவை ஒழிக்க வேண்டுமென்றால் ஒழித்து விடலாம். சட்டமன்றத் தீர்மானங்களையும் பார்லிமெண்ட் (நாடாளுமன்றம்) நிறைவேற்றும் தீர்மானங்களையும், குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். மேலும் கேரளத்தில் செய்தது போல் எந்த மாநில மந்திரி சபையையும் கலைத்து கவர்னர் (ஆளுனர்) ஆட்சி ஏற்படுத்தலாம். ஆனால் பார்ப்பனருக்கு ஆபத்து வந்தால் ஒழிய நேரு எதுவும் சொல்லமாட்டார். "இவர்கள் எல்லோரும் நாங்கள் பார்ப்பனர்கள் இல்லை" என்று தான் சொல்லுவார்கள்.

அவர்களுடைய சட்டையைக் கழற்றி விட்டுப் பார்த்தால் வடகயிறு மாதிரி பூணூல் தொங்கும். மற்ற மற்ற உத்தியோகங்களை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்தான் நிறைய இருப்பார்கள். என்னைப் போன்றவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதால் பயந்து கொண்டு சில பார்ப்பனரல்லாதார் அதுவும் சிறிய உத்தியோகங்களில் வருமானம் இல்லாத இடத்தில் போட்டிருப்பார்கள். அதிலும் தமிழன் இருக்க மாட்டான். கிறிஸ்தவனும், முஸ்லிம்களும் தான் இருப்பார்கள். இப்பொழுதுதான் எப்படியோ அமைச்சர் பதவியை டாக்டர் சுப்பராயனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பதவியும் அவரிடத்தில் எத்தனை நாளைக்கு இருக்குமோ தெரியாது. டாக்டர் சுப்பராயன் அவர்களும் பார்ப்பான் சொற்படிதான் கேட்க வேண்டும்! 

அப்படியிருந்தால்தான் பதவியில் இருக்க முடியும். இல்லாவிட்டால் இதுதான் வழி என்று வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இப்படி பெரிய அதிகாரங்கள் எல்லாம் பார்ப்பான் கையில்! அவன் அடிமைகள்தான் இந்த மாதிரி சபையும். இதுதான் இந்தக் காங்கிரஸ் கட்சியின் வண்டவாளம்.

காங்கிரஸ் கட்சி ஏற்பட்டதே இந்தியா நாட்டு விடுதலைக்காக அல்ல; பார்ப்பான் நன்மைக்குத்தான். அதனுடைய முதல் கொள்கை "வெள்ளையர்கள் உலகம் உள்ள அளவும் அரசராகவே, சக்ரவர்த்தியாகவே இருக்க வேண்டும்" என்பதாகும். அதன் இரண்டாவது தீர்மானம் எல்லோரும் இராஜ (அரசர்) விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்தத் தீர்மானங்களைக் காங்கிரஸ் கட்சி போடவில்லை என்று யாராவது மறுக்கட்டுமே! 'அய்யா நான் பேசியது தப்பு! என்று மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.' இந்தத் தீர்மானங்கள் போட்டவுடன் வெள்ளையன் பார்ப்பனர்களுக்கு நிறைய கலெக்டர் (மாவட்ட ஆட்சியர்), ஜட்ஜூ (நீதிபதி) போன்ற பதவிகளையெல்லாம் கொடுத்தான். இவ்வாறு பார்ப்பனர்கள் தம் மதத்தில் வெள்ளையர்களைக் கை வைக்காமற்படிக்குப் பாதுகாத்துக் கொண்டார்கள். பிறகுதான் நம்மவர்கள் சிலர் (திராவிட இனத்தவர்) எல்லாப் பதவிகளும் பார்ப்பனர்களுக்கே போகிறதே என்று கவலைப்பட ஆரம்பித்தார்கள். இந்த நிலைமை வரும்வரை, இந்தக் காங்கிரஸ் கட்சி வெள்ளையருக்கு அடிமைக் கட்சியாகவேயிருந்தது.

1885-ஆம் வருடத்திலிருந்து 1915, 1920-வரை வெள்ளையர்கள் கொடுத்த உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனருக்கு. இதற்குப் பதிலாக பார்ப்பனர்கள் காங்கிரஸ் கட்சியில் நாங்கள் எல்லோரும் இராஜ விசுவாசிகள் என்று தீர்மானம் போட்டுக் கொள்வார்கள்.

பிறகுதான் சிலர் சட்டசபை பிரவேசம். 'சுயராஜ்ஜியக் கட்சி' என்று ஆரம்பித்தார்கள். அப்பொழுதும்கூட தேர்தலில் நின்று வெற்றி பெறுபவனும், தோற்பவனும் பார்ப்பனராகவே இருந்தனர். நம் ஆள்கள் இரு தரப்பு பார்ப்பனர்களுக்கும் வேலை மாத்திரம் செய்வார்கள். நமக்கும் தேர்தலில் நின்று வெற்றி பெற யோக்கியதை இருக்கிறது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. பிறகுதான் நம் ஆள்கள் நிற்க ஆரம்பித்தார்கள்.

முதலில் நின்றவர் சர்.தியாகராயச் செட்டியார் அவர்களாகும். இவர் பி.ஏ. வரை படித்திருந்தார். அப்பொழுது தென்னிந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர். காங்கிரஸ் கட்சியின் செயலாளராக வேறு இருந்தார். செட்டியார் நின்றது சட்சபை தேர்தலுக்குக் கூட அல்ல. தோழர்களே வெறும் கார்ப்பரேஷன் (மகாநகராட்சி உறுப்பினர்) பதவிக்குத் தான். அவருக்கு எதிராகப் பார்ப்பனர்கள் அனைவரும் டி.எம். நாயர் என்னும் மலையாளியை விட்டுத் தொல்லை தொடுத்தார்கள். டாக்டர் நாயர் அவர்கள் டாக்டர்களின் சங்கத்தின் தலைவர். இப்பொழுது கூட எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 1912-ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்பொழுது சென்னையில் மண்டி வைத்திருந்தேன். அடிக்கடி மாலை வேலைகளில் கிளப்பிற்கு வருவதில்லை. தேர்தலுக்காக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அந்தச் சமயம் பார்த்து ஒரு பார்ப்பான் தியாகராய செட்டியார் தேர்தலில் நிற்பதற்கு யோக்கியதை இல்லை. அவர் ஒரு கடைக்காரர்; அவருக்குச் சொத்து ஒன்றும் இல்லை. இன்சால் வென்ட் (திவால்) கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பவர் என்று ஒரு மனுக்கொடுத்து விட்டான்.

அதுதான் முதலில் பார்ப்பான் - பார்ப்பனரல்லாதவன் என்று கொந்தளிப்பு ஏற்பட முழு முதற்காரணம். பலர் செட்டியாருக்காக ஜாமீன் நின்றார்கள். பிறகு அந்தப் பார்ப்பான் விண்ணப்பம் தள்ளப்பட்டு விட்டது. செட்டியார் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து செட்டி யாருக்கும், டாக்டர் டி.எம்.நாயருக்கும் ராஜி (ஒற்றுமை) செய்து வைத்தார்கள். பிறகுதான் 1916-இல் இவர்கள் பார்ப்பனருக்குக்கெதிராக இனிமேல் வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். அப்பொழுது காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் கட்சியினர் தமிழரின் பிரதிநிதித்துவம் பெற்றவர்கள் அல்ல; பார்ப்பனர்களின் பிரதிநிதிகள் என்று கூறி "நாங்களும் இராச விசுவாசிகள். எங்களுக்கும் உத்தியோகம், பதவி கொடுக்க வேண்டும். எங்கள் சங்கத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

நீதிக் கட்சி சொன்னபடி செய்தார்கள். விகிதாச்சார முறையைக் கடைப்பிடிக்கவில்லை யென்றாலும் பிராமணரல்லாதாருக்கு இவ்வளவு கொடுப்பது என்று 1920-இல் செய்தார்கள். தேர்தல் வந்தது. அதில் எல்லா பார்ப்பனர்களும் தோற்றனர். எம்.சி., எம்.எல்.ஏ.,எம்.பி., எல்லாப் பதவிகளிலும் நம் திராவிட ஆள்கள் வருகின்ற நிலை வந்த உடனே தமிழ்நாட்டில் பார்ப்பனருக்கு மரியாதையில்லை; பேச மேடையில்லை என்று காந்தியைப் பிடித்து வந்தார்கள். காந்தி பார்ப்பனரல்லாதவராகயிருந்தும் பார்ப்பான் மாதிரியே நடந்து கொள்வார். நம்மாள்கள் விகிதாச்சார முறை வேண்டும் என்று கேட்டவுடனே இவர்கள் நம்மை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஆகவே நமக்குக் காங்கிரஸ் கட்சியும் எதிரான கட்சியாயிற்று.

இன்று நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருக்கும் கட்சிகள் எல்லாம் "காங்கிரஸ் ஒழிய வேண்டும், பார்ப்பான் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும்" என்று சொல்லுவதில்லை. தமிழர் சமுதாயத்துக்காக உழைப்பதில்லை. இந்தக் கண்ணீர்த்துளிக் கட்சியையே எடுத்துக் கொள்ளுங்கள்! இராவணனுக்கு எதிராக இராமன் காலடியில் எப்படி விபீடணன் விழுந்தானோ அதுபோல் இந்தக் கண்ணீர்த்துளிகள் பார்ப்பானின் அடிமைகளாய் இருக்கிறார்கள். திராவிடர் கழகம் என்றாலே பார்ப்பான் வாசனை அடிக்கக் கூடாது.

பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர மற்றப்படி பார்ப்பானிடத்தில் பூரணமாக அய்க்கியமாகி விட்டார்கள். இன்றைக்குக் கண்ணீர்த்துளிகள் கட்சியின் வழிகாட்டியே (இராசபோபால ஆச்சாரியார்) பார்ப்பான்தான். அந்தக் கட்சிக்குப் பொதுச் செயலாளராக ஒரு பார்ப்பானைத்தான் கொண்டு வரப்போகிறார்கள். எங்களுக்குப் பயந்து கொண்டு வரலாமா? வேண்டாமா? என்று இருக்கிறார்கள். தேர்தலில் ஈடுபாடு கொண்டதால் நிச்சயம் பார்ப்பானைச் சேர்த்துக் கொண்டுதானே ஆகவேண்டும்? ஆகவே நமக்கு இதுவும் பெரிய விரோதமான ஸ்தாபனமாகும்.

மற்றக் கட்சிக்காரர்கள் எல்லோரும் வெளிப்படையாக நமக்கு எதிராகப் பேசுவார்கள். இந்தக் கண்ணீர்த்துளி கட்சியினர் நாம் எப்படிப் பேசுகிறோமா அதுபோலவே பேசி நம் தலையிலேயே கை வைப்பார்கள். நேரடியாக விகிதாச்சார முறை கேட்க அஞ்சுவார்கள். கடவுள், சாதி, மதம் முதலியவற்றைப் பற்றி நேரடியாகப் பேச மாட்டார்கள்.

இவர்கள் பேசும் ஊரில் திராவிடர் கழகத் தோழர்கள் நிறைய இருந்தால் "எங்கள் தலைவரும் தந்தை பெரியார் அவர்கள்தான். திராவிடர் கழகம் வெளியே போராடுகிறது. நாங்கள் உள்ளே சண்டை போடுகிறோம்" என்று கூறி ஏய்ப்பார்கள்.

அடுத்து பொது உடமைக் கட்சி பொது உடைமைவாதிகளுக்குக் கடவுள், மதம் முதலியவைகளில் நம்பிக்கையிருக்கக்கூடாது. உண்மை பொதுவுடமைவாதிகள் என்றால் கடவுள், மதங்களை முதலில் ஒழிக்கப் பாடுபட வேண்டும். இதுதான் இரஷ்ய கம்யூனிசம். இங்கிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியில் பார்ப்பானே தலைவனாக இருக்கிறான். கடவுள், மதம், சாதி அனைத்தும் இங்கிருக்கும் கம்யூனிஸ்டு கட்சியில் உண்டு. அதன் அருகிலேயே போகமாட்டான். தமிழ் நாட்டுப் பிரிவினையைப் பற்றிப் பேசமாட்டான். உதாரணமாக நானும், ஒரு காங்கிரஸ்காரரும் தேர்தலில் நின்றால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் ஒட்டுப் போடுவான். "காங்கிரஸ் தேசியக் கட்சி. நாம் வகுப்புவாதக் கட்சி அது ஜனநாயகக் கட்சி நாம் சர்வாதிகாரம்! காங்கிரஸ் ஏக இந்தியா; நாம் பிரிவினை கோருபவர்கள்" என்று கூறி ஓட்டுப் போடமாட்டான்.

சோஷியலிஸ்டும் அப்படித்தான். அவனும் இந்தியா முழுவதும் ஒரே கட்சி. அக்கட்சியின் தலைவர்களும் பார்ப்பனர்கள். அவனும் நமக்கு எதிரி.

அதுபோலவே சுதந்திராக் கட்சியும், "காங்கிரஸ் கொள்கைதான் எங்கள் கொள்கை அவர்கள் திட்டங்களைச் சரிவர செய்வதில்லை. நாங்கள் நிதானமாக செய்கிறோம்" என்று கூறுவார்கள். காமராசர்தான் இவர்களுக்கு எதிரியே தவிர நேரு பேச்சைக் கேட்பார்கள்.

"நம் பெண்களைப் பார்ப்பனர்கள் அனுபவிக்கலாம். நாம் வேத சாஸ்திரம் படிக்கக் கூடாது. படித்தால் வாயில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும்."

என்று பார்ப்பனர் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால்தான் இவைகளுக்குக் காரணமாய் இருக்கும் கடவுள், மதம், புராணம், சாதி முதலியவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம். நாங்கள் தானே வெளிப்படையாக மதம் ஒழிய வேண்டும், நாடு பிரிய வேண்டும் என்று கேட்கிறோம். மற்றவர்கள் யார் கேட்கிறார்கள்? "வேண்டுமானால் நீயும் பார்ப்பானைப் போலவே படியேன்" என்று கூறுவார்களே தவிர இதுவரை படித்த படிப்பிற்கே விகிதாச்சார முறைப்படி உத்தியோகம், பதவி கொடு என்று யார் கேட்கிறார்கள்? வேறு யாராவது இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம், உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாழ்வு நடத்திக்கொள்ள, பொறுக்கித் தின்ன எந்தக் கட்சியிலாவது சேர்ந்து கொள்ளுங்கள்! நாங்கள் நடத்தும் காரியங்களுக்குத் தடையாக மட்டும் இருக்காதீர்கள்! உங்களுக்காக மட்டும் அல்ல! தமிழன் ஒருவனுக்குச் சிறு ஆபத்து ஏற்பட்டாலும் நாங்கள் தான் கேட்கிறோம். மந்திரி, போலீஸ்காரர், கலெக்டர், நீதிபதி, தாசில்தார் முதலியவர்கள் யாருக்குத் தீமை நேர்ந்தாலும் நாங்கள்தான் கேட்கிறோம். வேறு யார் இருக்கிறார்கள்?

----------------------------- 12.09.1959-அன்று சத்துவாச்சாரியில் (வேலூர்) பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 28.09.1959

14 comments:

தமிழ் ஓவியா said...


சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டு வெடிப்பு:

கண்டிக்கத்தக்கது - இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அறிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே தினத்தன்று (1.5.2014) காலை பெங்களூர் - கவுகாத்தி ரயில் பெட்டியில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்று அதில் ஒரு பெண் பலி; 14 பேர் பலத்த காயம் என்கிற செய்தி அதிர்ச்சிக்குரியது.

அமைதிப் பூங்காவில் இந்த நிலையா?

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கு எத் தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. பாபர் மசூதி இடிக் கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் வீசியதே!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் - அதுவும் தலை நகரத்தில் இப்படியொரு நிகழ்வு கண்டிக்கத் தக்கது - வெட்கப்படத்தக்கதாகும்! வேதனையும் மிகுகிறது!

அலட்சியம் ஏன்?

மூன்று நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் (அவரிடம் பல தகவல்கள் கிடைத்திருக்கவும் கூடும் அல்லவா!) மிகவும் விழிப்புடன் மத்திய மாநிலக் காவல்துறை புலனாய்வுத் துறை இருந்திருக்க வேண்டாமா?

குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்?

நாட்டில் இதற்கு முன் ஆங்காங்கு நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக் கப்படவில்லையே! இத்தகைய கால தாமதம்கூட வன் முறையாளர்களுக்கு, தீவிரவாதிகளுக்குத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டக் கூடியவையல்லவா?

பாதுகாப்புப் போதுமானதல்ல

இரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக ஏதோ பெயரளவில் இரண்டொரு காவல்துறையினரை அமர்த்துகிறார்கள். இது போதுமானவையல்லவே!

தூங்கும் வசதியுடைய பெட்டிகள் திறந்தே கிடப்பது. தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

பொது மக்களிடம் அச்சம் ஏற்படும்

சாலைப் பயணத்தைவிட பாதுகாப்பானது - செலவு குறைவானது என்று இரயிலைத் தேர்வு செய்கிறார்கள் பொது மக்கள். அவர்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் நடந்திருப்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் வன்முறைக்கு மதமோ, நிறமோ கிடையாது. வன்முறை எங்கு, எவரால், கிளம்பினாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இதுவே கடைசியானதாக இருக்கட்டும்!

சென்னையில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பே இறுதியானதாக இருக்கட்டும்! காவல்துறை - பொது மக்கள் இரு தரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக இந்த வெறுக்கத்தக்க அநாகரிகச் செயலைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை!

மனிதநேயமே நாகரிகத்தின் அடையாளம்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79594.html#ixzz30bqYvVky

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் இரு சங்கராச்சாரிகள்


புதுடெல்லி, மே 2-மோடிக்கு எதிராக 2 சங்க ராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினர் ஹர ஹர மோடி என முழக்க மிட்டது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிர சாரம் மேற்கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பூரி சங்க ராச்சாரி நேற்று அளித்த நேர்காணலில் குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடி யவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட் சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார் பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

துவாரகை சங்கராச்சாரி கூறுகையில், என்னால் முடியா விட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப் பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங் கராச்சாரி உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவரது சீடர் முக்தீஸ் வரானந்த் பிரசாரம் செய் வார் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்ப தாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79593.html#ixzz30bqjgvRI

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு காகிதப் புலி: மம்தா கூற்று!

புரூலிய, மே 2- பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை "காகி தப் புலி' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர்ணித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் புரூலியா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசிய தாவது:

காகிதப் புலிக்கும், கம் பீரமான வங்கப்புலிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. மேற்கு வங்க சுந்தரவனத்தில் இருப் பவைதான் உண்மையான புலிகள்.

மதப்பிரிவினை: இந்துக் கள் மற்றும் முஸ்லிம்கள் இடையிலும், வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல் லாதோர் இடையிலும் பிரிவினையைத் தூண்டு பவர்களுக்கு பிரதமர் நாற் காலியில் அமர அரசியல் சாசனத்தின் அடிப்படை யில் எந்த உரிமையும் இல்லை.

மதச்சார்பின்மைதான் பல்வேறு மதம், நிறம், இனங்களைச் சேர்ந்தவர் களை ஒன்றிணைக்கும் சக்தி என்பதை உணர்ந்தே பாபா சாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அர சியல் சாசனத்தை உருவாக் கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.

Read more: http://viduthalai.in/e-paper/79592.html#ixzz30bqrIJu5

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. - (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/79572.html#ixzz30br3h3CL

தமிழ் ஓவியா said...


கோடையில் இளைப்பாற்றிட்ட குளிர்தரு புத்தகச் சங்கமத் திருவிழா!


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடை பெற்றதையொட்டி ஏகப்பட்ட களே பரம்! கெடுபிடிகள் -இத்தியாதி! இத் தியாதி!

இந்த பரபரப்புக்கிடையில் ஆர வாரமில்லாத ஆக்கப் பூர்வ அறிவுத் திருவிழா - அறிவுத் தேரோட்டம் ஒன்று தலைநகர் சென்னையில் நடைபெற்றது. (உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதியையொட்டி) ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிறு இரவு 9 மணியோடு முடிவடைந்தது. அதுதான் சென்னை புத்தகச் சங்கமம் என்ற திருவிழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான தந்தை பெரியார் அறக்கட்டளை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, இணைந்து, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் இன்னும் சிலரது அரிய ஒத்துழைப்புடன் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் உலகை விழுங் கும் மனிதநேயப் பெரு விழாவாக இந்த புத்தகத் திருவிழா, நகரின் மய்யமான ராயப்பேட்டை ஓய். எம்.சி.ஏ. மைதானத்தில் விசாலமான வியத்தகு ஏற்பாடுகள் - பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு நடைபெற்றது.

210 பதிப்பகத்தார்களின் கடைகள் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல; ஆங்கில வெளியீட்டவர்களும் கடைவிரித்தனர்; கொள்பவர்களை ஈர்த்தனர். மாலை வேளைகளில் கண்ணுக்கும் காட்சிக்கும் அறிவைத் தூண்டும் அருமையான அற்புதக் கலை நிகழ்ச்சிகள், உரைகள்!

வருவோர்க்கும் வாங்குவோருக்கும் வசதியாக மருத்துவ அவசரப் பிரிவுகூட!

உணவுக் கூடங்களும் பல் வகையில்! குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் வந்தனர்; வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்!

சென்னை ஊடகங்களில் இதற்குப் போதிய விளம்பரம் கொடுக்கப்பட வில்லை; காரணம் வெளிப்படை.

இப்பொருள் இவர் வாய் கேட்டால்...?

இப்பொருள் இத்தனையது என்றால்!... எப்படி விளம்பரப்படுத்துவது? பத்திரிகா தர்மபாவங்களில் அது சேர்ந்து விடாதோ என்ற விரிந்த பார்வை; என்னே விசித்திரக் கண்ணோட்டம்!

என்றாலும் ஒரு கோடி புத்தகங்கள் - ஏராளமானோர் வருகை!

எல்லாக் கருத்து கொள்கை யாளர்க்கும் எவ்வித வேறுபாட்டுக்கும் இடமின்றி சம வாய்ப்புத் தரப்பட்டது அமைப்பாளர்களால்!

புத்தகர் விருது என்ற புதுமை வெளிச் சம் இட்டது புதுமையிலும் புதுமை!

அரிய பணிகளை புத்தகங்களைப் பரப்புவது இளைஞர்களிடம் அறிவைக் கொண்டு செல்லும் தொண்டறப் பணியை முன்னெடுத்ததாக அமைந்தது.

புத்தகர் விருதுக்கு தேர்வு செய்த நான்கு பேர்களும் புத்தகப் புத்தொளி பாய்ச்சும் பொலிவுறு வைரங்களாகும்!

1. பொள்ளாச்சி நசன்
2.. பழங்காசு ப. சீனிவாசன்
3. தி.மா.சரவணன்
4. புத்தகத் தாத்தா சண்முகவேல்

இந்நால்வர் போன்று நானிலம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, விளம்பரம் விரும்பாது எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடக்கமிகு தொண்டறப் பணி செய்யும் தூய்மையானவர்கள் ஏராளம் உண்டு.

இவ்வளவு சிறப்புகளைச் செய்த பெருமை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய அமைப்பாளர்களாக உழைப்பை சளைக்காது தந்த பதிப் பாளர்கள் எமரால்ட் கோ. ஒளி வண்ணன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கே.எஸ். புகழேந்தி, விழிகள் பதிப்பகம் உரிமையாளர் த. வேணுகோபால், பெரியார் திடல் நிர்வாகி ப. சீத்தாராமன் தலைமையில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும், பங்கேற்ற பதிப்பகத் தினர் முதல் கலை நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களே!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/79577.html#ixzz30brDFdeM

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறைப் பொதுக் கூட்டம்


சென்ற 18.4.2014 மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத் தில் உங்களை சந்திக்க மாலை 6.45 மணியளவில் வந்தேன். அதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கூட்டம் முடிந்து மேடையை விட்டுத் தாங்கள் இறங்கி வரும்பொழுதும் தள்ளுமுள்ளு ஆகி விட்டது. நெரிசல் மிகுதியால் தங் களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.

மயிலாடுதுறைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர் களைப் பற்றிக் குறிப்பிட்டவை யாவும் வரவேற்கத் தக்கவையாகும். வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டது (அதா வது மோடி பிரதமராக வேண்டும்) திடுக் கிடும் செய்தியாகும். இதை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனை வரின் தலையாய கடமையாகும்.

- சு. பாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நூல் நிலையம், மேலப்பாதி

Read more: http://viduthalai.in/page-2/79583.html#ixzz30brSuvRG

தமிழ் ஓவியா said...


சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது


பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.

இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bryRxDl

தமிழ் ஓவியா said...

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை

திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.

இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bs6awvf

தமிழ் ஓவியா said...


காரவன் படப்பிடிப்பு


இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.

மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.

அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி - அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!

மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.

(காரவன், ஏப்ரல்-1, 1977

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsqtAXw

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச்செல்வம். தொழில்களிலெல்லாம் தலைசிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மைதான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையை கடைப் பிடிப்பவன்.

நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத் தைக் காட்டுபவன் ஆவான்

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsxyqeg

தமிழ் ஓவியா said...

பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்க முடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படு வோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலரா யிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

- திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt3PUIh

தமிழ் ஓவியா said...

வாருங்கள், கடவுளாகலாம்!

இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.

வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt8ohRO

தமிழ் ஓவியா said...

அய்யா உடைத்த அட்வான்ஸ் பிள்ளையார்

1953ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் தேதி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் அதன் போர்முறைத் திட்டம் பற்றியும், பொதுவாக கழகத் தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கிக் கொண்டு வருகிறார்.

பிள்ளையாரின் பிறப்பு ஆபாசங்களை புராணத்தின் பகுதிகளில் இருந்து எடுத்துக் கூறி பிள்ளையார் உடைப்பு போராட்டம் ஏன் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் கொண்டு வந்திருந்த பெரியதும் சிறியதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகளை எடுத்து கூட்டத்தாரிடம் காண்பிக்கிறார்.

இரண்டு பொம்மைகளும் வண்ணப் பொம்மைகள். இதுபோன்ற வண்ணப் பிள்ளையார் படங்களையோ அல்லது மண் பிள்ளையார் பொம்மைகளையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை 27ஆம் தேதியன்று உடையுங்கள் என்று அய்யா கூறுகிறார்.

கூட்டம் ஆரவாரமெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து 27ஆம் தேதி பிள்ளையார் உடைப்பதற்கு அட்வான்சாக சாம்பிளாக என் கையில் உள்ள இந்த சின்ன பிள்ளையாரை இன்றைக்கு தூளாக்குவோமா? என்று கூட்டத்தை நோக்கிக் கேட்கிறார்.

கூட்டத்தினர் மகிழ்ச்சிப் பெருக்கில் உடைப்போம், உடைப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து-

சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன் என்று பக்தர்களால் கூறப்படும் பிள்ளையார் கடவுள் உடைக்கப்பட்டது மேடையிலே, மேஜையின் மேலே - புரட்சி வேந்தர், புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் தம் கையால்.

எங்கெங்கும் ஆனந்த ஒலிகள்! எக்காள முழக்கம், பந்தலெங்கும் எதிரொலித்தது. கணபதி ஒழிக! விநாயகன் ஒழிக! பிள்ளையார் ஒழிக! என்று கிளம்பிய முழக்கம் அடங்க வெகுநேரம் ஆகியது.

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btSYGiU

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் மதவெறி: சீதாராம் யெச்சூரி கண்டனம்


புதுடில்லி, மே 2-மக்கள வைக்கான இறுதிக்கட்டத் தேர்தல்கள் இன்னும் இரு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அதில் பெரிதாக ஆதாயம் பெறும் நோக்கில் மிக நேர்த்தியாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

தலையங்கத்தில்...

இது தொடர்பாக கட்சி யின் பிரச்சார ஏடான பீப் பிள்ஸ் டெமாக்ரசி வாரப் பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதா ராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

அடுத்த இரு வாரங் களில் நடைபெற உள்ள இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிறைய தொகுதிகள் உத் தரப்பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவை.

இந்தி மொழிப் பகுதி களான இவை மக்கள வைக்கு ஏராளமான உறுப் பினர்களை அனுப்பக்கூடி யவை. வகுப்புவாதச் சக்தி களுக்கு ஆதரவாக உள் ளவை இந்தப் பகுதிகள்.

வகுப்புவாத விஷத்தை பரப்புவதும் மத ரீதியில் வாக்காளர்களை இரண் டாக பிரிப்பதும், பா.ஜ.க. வுக்கு ஆதாயத்தைத் தர லாம். ஆனால் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, வகுப்பு நல்லிணக்கத்தை இதனால் விலை கொடுத் தாக வேண்டிவரும்.

வாக்கு வங்கி அரசிய லின் மிக மோசமான அம் சமே பெரும்பான்மை இந் துக்களை ஒன்று திரட்டு வதாகும். அது நேர்த்தியாக நடைபெறப் போகிறது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியே வங்காளத்தில் பேசும்போது, எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்

மூட்டை முடிச்சுகளு டன் போவதற்கு வங்க தேசத்தவர்கள் தயாராக இருக்கவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். வகுப்புவாதத் தாக்குத லுக்கு இந்துத்துவா ஆதர வாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே மோடி விடுத்த எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்.

வங்கதேசத்தவருக்கு எதிரான முழக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது வகுப்புவாத முழக் கம் எடுபடாத இடங்களில், தனது உண்மை முகத்தை மறைத்து வளர்ச்சிபற்றி பேசும் பாஜக, பிற இடங் களில் தேர்தல் ஆதாயத் துக்காக வகுப்பு வாதத்தை உசுப்பி வெறி ஏற்றுகிறது. இடத்துக்கு இடம் இரட்டை வேடம் போட்டு பாஜக செயல்படுகிறது. - இவ்வாறு சீதாராம் யெச்சூரிய எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79557.html#ixzz30btvaKBl