Search This Blog

7.5.14

திராவிடமொழி அறிஞர் இராபர்ட்கால்டுவெல் 200 ஆம் ஆண்டு பிறந்தநாள் -கி.வீரமணி


திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று:
கால்டுவெல் பாராட்டு விழாவை நன்றித் திருவிழாவாக நடத்துவோம், வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை

எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?
இன்று (7.5.2014) திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள். பரந்த விரிந்த உள்ளத்தோடு அவரது பாராட்டு விழாவை நன்றித் திருவிழாவாக நடத்துவோம் வாரீர்! வாரீர்!! என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட் டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் அளப்பரிய தொண்டு செய்தோர் தமிழ்ப் புலவர் பெருமக்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் மட்டுமல்ல, அதன் மொழிக் கூறு எப்படிப்பட்ட மூத்த, முதிர்ந்த தன்மைகளை தன்ன கத்தே கொண்ட மொழிக் குடும்பம் என்பதை வெளிநாட்டி லிருந்து கிறித்துவ மத போதகர்களாக வந்தவர்களாயினும், அவர்கள் செய்த ஒப்புயர்வற்ற பணி என்றென்றும் மறக்க இயலாத ஒரு திருப்புமுனைப் பணியாகும்.

ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ஏக்கல் (Haeckal), பி.கயில்ஸ்(P.Giles), , என்.ஆண்டர்சன், எச்.சுவீட் (H.Sweet), பாப் (Bopp),டெயிலர் (Taylor), எப்.எம்மல்  (F.Hammel) போன்ற, உலகில் உள்ள மிகப் பழைமை சார்ந்த மொழிகள் அனைத்தும், ஒரு மூலமொழியினின்றும் உண்டானவை என்றும், அந்த மூல மொழியானது குமரிக் கண்டத்தில் முதலில் பேசப்பட்ட தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் சொற்கள் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் சில பலவாகக் காணப்படுவதே, தமிழ் மொழியின் பழைமைக்கும், சிறப் புக்கும் ஏற்ற, சான்றாகும் என்றும், எடுத்துக்காட்டும் சில குறிப்புக்களிலிருந்து தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
------------------------------------ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்,
திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதி - பக்கம் 97

மேலும் அதே திராவிட இயக்க வரலாறு முதல் பகுதி யில் நாவலர் டாக்டர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிட மொழியான தமிழைப்பற்றிக் கால்டுவெல் பாதிரியார் என்ற தலைப்பில் எழுதுகையில், பின்வரும் அரிய குறிப்புக்களைத் தருகிறார்கள்.
அதனை அப்படியே தருகிறோம்:

திராவிட மொழியான தமிழின் தனித்தன்மைப்பற்றியும், தனிச்சிறப்பியல்கள் பற்றியும், சிறப்பாகவும், செம்மை யாகவும் உலகிற்கு உணர்த்திய பெருமகனார், கால்டுவெல் பாதிரியார் ஆவார். கிருத்த சமய நெறியைத் தமிழகத்தில் பரப்பும் நோக்கோடு 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகைத் தந்து, தமிழகத்திலேயே பல ஆண்டுகாலம் தங்கியிருந்து, தமிழர்களோடு நெருங்கிப் பழகியும், தமிழ் மொழியை நன்கு அறிந்தும் சிறந்து விளங்கிய கால்டுவெல் பாதிரியார் அவர்கள், ஆராய்ந்து எழுதியதிராவிட ஒப்பி யல் இலக்கணம் என்னும் சிறப்பிற்குரிய ஆராய்ச்சி நூல், திராவிட மொழியான தமிழ் மொழியின் சிறப்புக் கூறியல் களைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக்காட்டுகின்றது.

கால்டுவெல் பாதிரியார், தமிழைப் பற்றிச் சுட்டிக் காட்டியுள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:

1) திராவிட மொழிகளில், பெரும்பாலும் முதன் முதல் பயன்படுத்தப் பெற்ற மொழி, தமிழ் மொழியேயாகும்.
2) அவைகளில் தலைசிறந்த மொழியாக வளர்க்கப் பட்ட மொழியும் தமிழேயாகும்.
3) திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைமொழிகள் அத்துணைக்கும் தலைமை தாங்கும் பெற்றித் தமிழ் மொழிக்கே உண்டு.
4) தமிழ்தான் திராவிடக்குடும்பமொழிகளில் மிகத் தொன்மைக் காலந்தொட்டு, மிகச்சிறப்பாகப் பண்படுத்தப் பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் மொழியாகும்.
5) தமிழானது, பழைமையான வடிவங்களைப் பெற்று மிகுந்த வளமுடனும், வலிவுடனும் திகழும் மொழியாகும்.
6) தமிழானது வடமொழித் தொடர்பு சிறிதும் இன்றித் தனித்து நின்று வழங்கும் தன்மையைப் பெற்றதாகும்.
7) வடமொழியின் உதவி இல்லாமல், தனித்துத் தழைத்தோங்கும் தகைமை தமிழுக்கு உண்டு.
8) வடமொழிச் சொற்களைத் தன்னிடத்திலிருந்து அறவே நீக்கி விடுவதன் மூலம், தமிழ் தூய்மையான தாகவும், நடையில் உயர்ந்ததாகவும், நேர்த்தி உடைய தாகவும் திகழும் தன்மையைக் கொண்டதாகும்.
9) தமிழின் இலக்கிய நடை, உலக மொழிகள் பல வற்றின் நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுச் சிறந்து விளங்குவதாகும்.
10) தமிழின் சொல்வளம், இலக்கண வடிவுகள், வகைதொகைகள் குறியீடுகள், திசைச்சொற்கள், புணர்ச் சொற்கள், வேர்ச் சொற்கள் போன்றவை வளம் பொருந்திக் காணப்படுபவைகளாகும்.
11) பிற திராவிட இன மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க் கும்போது தமிழ் தொன்மையானதாகவும், தூய்மையான தாகவும் காணப்படுவதாகும்.
12) தமிழ் இலக்கியம் தெலுங்கு, கன்னட இலக்கியங் களுக்கு மிகவும் முற்பட்டதாகும். மலையாள இலக்கியத்திற்கு மிகமிக முற்பட்டதாகும்.
13) தமிழிலுள்ள எண்ணுப் பெயர்கள், வேற்றுமை யுருபுகள், வினைவிகுதிகள் போன்றவை. பல்லூழிக்காலம் கடந்த நிலையிலும், திரிபுக்கு இடமின்றி நிலைத்தவையாக இருந்து வருகின்றன.

இவ்வாறும், இவைபோன்றும் தமிழுக்கு உள்ள சிறப்புக் கூறுபாடுகளைக் கால்டுவெல் பாதிரியார் சுட்டிக்காட்டி யிருப்பது, நமக்கெல்லாம் பெருமிதவுணர்வை அளிக்க வல்லதாகும். சங்ககால நூற் பயிற்சியும், தனித்தமிழ் உணர்ச்சியும் இல்லாதிருந்த அந்தக்காலத்தில், அயல் நாட்டாரான அவர், ஆரிய மொழியினின்றும் திராவிட மொழியைப் பிரித்துக் காட்டிய செயல், மிகவும் பாராட்டுவதற்குரியதாகும்.

பொதுவாக, ஜி.யு.போப் அவர்களின் தமிழ்த்தொண்டு, அவரது கல்லறையில் ஒரு தமிழ்த் தொண்டன் உறங்கு கிறான் என்று ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் உள்ளது.

அவர் மரணத்திற்கப் பிறகும் வாழும் தமிழ்த் தொண்டர் என்பதைக் காட்டவில்லையா?

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?

என்று வினவினார் புரட்சிக்கவிஞர்!

வீரமாமுனிவர் போன்ற பெரும் இலக்கியச் செறி வாளர்கள், (இவர்களுக்கெல்லாம் சென்னைக் கடற்கரைச் சாலையில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிடர் ஆட்சி - தி.மு.க. அமைச்சரவை அரசு சிலை களை உலகத் தமிழ் மாநாட்டின்போது திறந்து வரலாறு படைத்ததே!
அதுமட்டுமா?

ஆல்பர்ட் ஷைவட்சர் என்ற ஜெர்மானிய அறிஞர் திருக்குறளை மிகவும் பாராட்டி உலகப் புகழ் அடையச் செய்தாரே!

கில்பர்ட் சிலேட்டர் என்பவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக வந்து, பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரியாகவும் பணிபுரிந்தவர்.

அவரது இந்தியப் பண்பாட்டில் உள்ள திராவிட கருத்தியல்கள் (‘‘Dravidian Elements in Indian Culture’’)  என்று எழுதிய நூல் ஓர் அரிய நூல்.
இந்த 20 ஆம் நூற்றாண்டு, 21 ஆம் நூற்றாண்டிலும், ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா (ஜார்ஜ் ஹார்ட்), கபிலசுவல் (செக்கோசுலோவேகியா) போன்ற பல பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள் பணி (இன்னும் எவ் வளவு பேர்கள் உள்ளனர்) செயற்கரிய வரலாற்றுப் பணி, மிகவும் பாராட்டத்தக்கது.

அவர்களை இங்கே சிலர் மதக் கண்ணோட்டத் தோடுதான் பார்க்கும் குள்ள மனப்பான்மையைவிட்டு, பரந்த விரிந்த உள்ளத்தோடு அவர்களது பாராட்டு விழாவை நன்றித் திருவிழாவாக (Thanks Giving Festival) நடத்துவோம், வாரீர்! வாரீர்!! 
-------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். 7.5.2014 சென்னை

20 comments:

தமிழ் ஓவியா said...


மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -


சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-

தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.

திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.

அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.

திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00

தமிழ் ஓவியா said...


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, மே. 7- முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு தவறியது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி யது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும் என்றும் விஷமப் பிரச்சாரம் செய்து வந்தது. இதுமட்டுமின்றி அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டது.

இந்த தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேறி யது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த குழுவினர் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டதுடன் புதிய குழுவை நியமிக்கவும் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் கேரள அரசின் இந்த வாதத் திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும், அணை பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுமட்டுமன்றி கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/79864.html#ixzz314jlOXOD

தமிழ் ஓவியா said...


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை
142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில், இன்று (7.5.2014) உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தந்துள்ள தீர்ப்பு - 142 அடி நீர் தேக்கிக் கொள்ளும் அளவுக்கு அணை பலமாக உள்ளது;

தனி அணை தேவையில்லை. கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது என்றும் கூறியுள்ளது தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பாகும். அய்ந்து மாவட்ட விவசாயிகள் இதனால் பலனடைவர், வரவேற்கிறோம்!

இந்தத் தீர்ப்பினை கேரள அரசு மதித்து செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் நல்லுறவை வளர்க்கவேண்டும். இரு மாநில உறவுகள் வலுப்பட, உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதவட்டும்!

- கி.வீரமணி,
சென்னை, தலைவர்,

7.5.2014 திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/e-paper/79861.html#ixzz314jtSg6I

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்: புத்ததேவ்


பருய்பூர், மே 7- நாட்டின் பிரதமராக மோடி தேர்ந் தெடுக்கப்பட்டால் நாடு பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மா.கம்யூ னிஸ்டு கட்சியின் முக்கிய தலைவருமான புத்ததேவ் பட்டாச் சார்ஜி கூறி யுள்ளார்.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஆனால், நாங்கள் இது பேராபத்தை தரும் என கூறி வருகின்றோம். மோடியை பிரதமராக தேர்ந் தெடுப்பதற்கு மக்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. எனவே மோடியை நம்பாதீர்கள் என்று புத்ததேவ் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் துவங்கியவுடன் முத லில் மோடியை பற்றி பேசாத மம்தா, அவருக்கு பூச்செண்டு அனுப்பியுள்ளர்.

தற்போது வரை மம்தா அதை தவறு என ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள புத்ததேவ் தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஹெலி காப்டரில் செல்லும் மம்தாவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79853.html#ixzz314ke0J00

தமிழ் ஓவியா said...


மோடியின் ராமன் பேச்சும் தேர்தல் ஆணையத்தின் விசாரணையும்!


மோடியின் ராமன் பேச்சு: அறிக்கை கோருகிறது தேர்தல் ஆணையம் என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் பேசிய பொதுக்கூட்டத்தில் மோடி தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்குக் காரணம்.

தனது பேச்சில் ராமன் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்; ராமன் பிறந்த மண்ணிலிருந்து பேசுகிறேன் - காங்கிரசுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவர் பேசியதோடு மட்டுமல்ல, அந்தப் பொதுக் கூட்ட மேடையின் பின்புறத்தில் ராமன் உருவம் பல வண்ணத்தில் தீட்டப்பட்ட பதாகையும் வைக்கப்பட்டு இருந்தது.
இதுதான் இப்பொழுது பிரச்சினைக்குக் காரணமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தைப் புகுத்தியதுதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

மக்கள் மத்தியில் அவர்களுக்குத் தேவையான திட்டங்களை உருப்படியாக வெளிப்படுத்த முடியாத போது - அதற்கான சிந்தனையோட்டம் இல்லாத கையறு நிலையில், பி.ஜே.பி. மக்களின் மலிவான நம்பிக்கையை - பக்தியைக் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசியதை முதன்மைப்படுத்தாமல், தேர்தல் ஆணையம் நியாயமாக - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளதே - அது இந்திய அரசமைப் புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமான ஒன்றல்லவா! அதன்மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றுமில்லையே!

பாபர் மசூதி உடைப்புத் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வாக்குறுதியைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுகூட நீதிமன்ற அவமதிப்பாகாதா?

இதே உத்தரப்பிரதேசத்தில் இதே மோடி - உத்தரப் பிரதேசத்தின் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பி.ஜே.பி.,க்குத் தாருங்கள் - ராமன் கோவில் கண்டிப்பாகக் கட்டித் தருகிறோம் என்று சொன்னாரா - இல்லையா?

அப்பொழுதெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏன்?

மகாராட்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதவாதத்தை எடுத்து வைத்த காரணத்தால், வெற்றி பெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது உண்டே!

மதச்சார்பற்ற கொள்கை எங்கள் கட்சிக்கு உறுதியாக உண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டே, ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி.யின் தலைவர்களால் பேசப் பட்டு வருகின்றது. இது எப்படியென்றே தெரியவில்லை. தங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள்பற்றிச் சற்றும் பி.ஜே.பி. கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லலாமா?

அதேநேரத்தில், பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துள்ள அந்த மதச்சார்பற்ற கட்சிகளும் - பி.ஜே.பி.யின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தும் சொல்லவில்லை என்பது மிகப் பரிதாபமே!

பதவிப் பசி வந்தவர்கள் கையில் எது கிடைத்தாலும் உண்பார்கள் போலும்!

இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு ராமன் கோவில் கட்டுவார்களாம் - அது எப்படி என்று தான் புரியவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி இத்தகு செயலுக்கு இடம் அளிக்கிறது?

மதச்சார்பற்ற தன்மை என்று அரசமைப்புச் சட்டம் கூறியதற்குப் பொருள்தான் என்ன?

இன்னொன்றையும் இந்த இடத்தில் கவனிக்கத் தவறக்கூடாது. ராமன் கோவில் கட்டுவது என்பதுபோன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது - இது மக்களின் உணர்வு சார்ந்த பிரச்சினை என்று பி.ஜே.பி. யினர் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில், இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்டால், அரசமைப்புச் சட்டம் நீதிமன்றம் இவற்றை யெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக் கூடியவர்கள் அல்லர் என்கிற முறையில்தானே செயல்படுவார்கள்?

மதப் பிரச்சினையைக் கைகளில் எடுத்துக்கொண்டுள்ள கட்சிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது - முடியாது என்கிற அளவில் கடுமையான அளவில் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனைக் கறாராக செயல்படுத்தா தவரை மோடிகளும், மோகன்பகவத்துகளும் எந்த எல்லையைத் தாண்டியும் எகிறிக் குதிப்பவர்கள் என்பதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளலாம்.

அடிப்படையை மறந்துவிட்டு, ஓடி விளையாடு பாப்பா என்ற முறையில், தேர்தல் ஆணையம் பெரிய பிரச்சினைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்டு, சின்னஞ்சிறிய புகார்களை விசாரிப்பதாகக் கூறுவதெல்லாம் அசல் ஏமாற்று வேலையே!

Read more: http://viduthalai.in/page-2/79867.html#ixzz314l0Sajy

தமிழ் ஓவியா said...


மதம் பயன்படாது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/79866.html#ixzz314l7lShV

தமிழ் ஓவியா said...


எந்தப் பதுங்குக் குழியில் அப்போது இருந்தீர்கள் மோடிஜி!

- குடந்தை கருணா

தன்னை பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தில் பிறந்ததால், விமர்சித்து விட் டார் என்று பிரியங்கா மீது குற்றம் சுமத்தி உத்தரபிரதேசம் தோமாரியா கஞ்சில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசி உள்ளார். பிரியங்கா சொன்னது, இவர்கள் எனது தந்தையை விமர்சிக்கிறார்கள்; அமேதி மக்கள் இந்த கீழ்தரமான அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப் பார்கள் என பேசினார். ஆனால், மோடி, இதனை, ஜாதி சாயம் பூசி, தான் பிற்படுத்தப்பட்டவன் என்ப தால், தன்னை தாக்குவதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன், ராமன் படத்தை வைத்து, ராம ராஜ்யம் அமைக்க வாக்களியுங்கள் என மதத் தின் பெயரால், வாக்கு கேட்ட மோடி, இப்போது, ஜாதியைப் பற்றி பேசு கிறார்.

சரி; ராம ராஜ்யத்தில், இந்த பிற் படுத்தப்பட்ட சூத்திர மக்களுக்கு என்ன கதி என மோடிக்குத் தெரியுமா? சம்பூகன் தவம் இருந்தான் என்பதற் காக, தர்மம் கெட்டுவிட்டது எனக் கூறி, சம்பூகன் தலை வெட்டப் பட் டது என ராமாயணத்தில் கூறப்பட் டுள்ளதே, அதைப் பற்றி தெரியுமா, மோடிக்கு?

அந்த ராமாயணத்தையும், ராம னையும் தலையில் வைத்து வன்முறை ஆட்டம் ஆடும் ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தில் பயிற்சி பெற்ற மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

கோல்வார்க்கரின் சிந்தனையின் தொகுப்பில், சூத்திரர்களுக்கு என்ன நிலை என்று சொல்லப்பட்டிருக் கிறதே; அதனை இத்தனை காலம் ஏற்றுக்கொண்டு, அந்த ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்ததை பெருமையாக கருதும் மோடி சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

குஜராத்தில் நான்கு முறை முதல் வராக இருந்த மாதவ் சிங் சோலங் கியின் ஆட்சியில் 1980-களில், கொண்டு வரப்பட்ட இட ஒதுக் கீட்டை எதிர்த்து நடத்தப்பட்ட இயக் கத்தில் தீவிரமாக இருந்த மோடி இப் போது சொல்கிறார், தான் பிற்படுத் தப்பட்டவன் என்று?

மண்டல் குழு பரிந்துரையை வி.பி. சிங் அமல்படுத்தியதை தொடர்ந்து, வட நாட்டில், இட ஒதுக்கீடு எதிர்ப் பாளர்களால் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிற்படுத்தப்பட்ட மனிதர் மோடி எந்த பதுங்கு குழியில் ஒளிந்திருந்தார்?

வி.பி.சிங்கிற்கு எதிராக ரத யாத் திரை என்ற பெயரில் சமூக அநீதித் தீயை அத்வானி கொளுத்தியபோது, ரதத்திற்கு எண்ணெய் விட்ட மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று?

2005 இல் மத்திய அரசில் அர்ஜூன் சிங், கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, எந்த ஆதரவும் தராத மோடி, இப்போது சொல்கிறார், தான் பிற்படுத்தப்பட்டவன் என்று?

சமூக நீதியின் எந்த உணர்வும் இல்லாதவர்; அதற்கு எதிரான தத் துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை பெருமையாக கருதுபவர்; இப் போது சொல்கிறார், தான் பிற் படுத்தப்பட்டவன் என்று.

பிற்படுத்தப்பட்ட மக்கள், மோடியின் இந்த மோசடிப்பேச்சை நிச்சயம் நிராகரிப்பார்கள்.

Read more: http://viduthalai.in/page-2/79872.html#ixzz314lEjMLu

தமிழ் ஓவியா said...


மூடத் தனத்தில் கிராம மக்கள்

மூடத் தனத்தில் கிராம மக்கள்
மணப்பாறையில் மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!

திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.

சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!

தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV

தமிழ் ஓவியா said...


பக்தி வந்தால் புத்தி போகும்சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.

அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.

உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.

Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV

தமிழ் ஓவியா said...


பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்


பிரிவு 370அய் விலக்குவது:
காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு

சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.

செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.

கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?

உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.

இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய

இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.

குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?

உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.

நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்


ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:

1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.

2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.

3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!

4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.

5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)

6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.

7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.

8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.

9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.

10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.

11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.

12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.

13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.

14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).

இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.

ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.

திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.

கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.

அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.

பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ

தமிழ் ஓவியா said...


நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை


நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu

தமிழ் ஓவியா said...

இளரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

வயோதிகத்திலும் மூளையில் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்த வர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆனால் டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்கள் மூப்படைவதால் மட்டும்தான் வருகின்றன என்று கூறுவதற்கில்லை என்று அந்நோய்கள் சம்பந்தமாக அய்க்கிய ராஜ்ஜியத்தில் சேவை ஆற்றிவரும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3M4WHv

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp

தமிழ் ஓவியா said...


பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்


விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4

தமிழ் ஓவியா said...

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.

இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx

தமிழ் ஓவியா said...

சுறாக்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

பெரிய வகை வெள்ளை சுறாக்கள் எழுபது வயதுக்கும் மேல் வாழக்கூடியவை என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கதிரியக்கத் தன்மை கொண்ட கார்பனைக் கொண்டு சுறாக்களின் வயதை ஆய்வு செய்ததில் இவ்வகை ஆண் சுறாக்கள் 70வயதுக்கு மேலும், பெண் சுறாக்கள் 40 வயது வரையிலும் வாழக்கூடியவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3nDuko

தமிழ் ஓவியா said...


மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறக்கும்


சொந்த உறவுகளில் திரு மணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த நோய் நிபுணர் டி.உஷா தெரிவித் தார்.

உலக தாலசீமியா நோய் தினம் மே 8ஆம் தேதி அனு சரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியி லேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத் தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை ரத்த நோய் நிபுணர் மருத்துவர் டி.உஷா கூறிய தாவது:

தாலசீமியா நோய் என் பது குழந்தைகளுக்கு பிற வியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையா கும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இத னால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.

அதற் காக, குழந்தைக்கு ஹீமோ குளோபின் அளவை அதிக ரிக்க 6ஆவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண் டும்.

குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச் சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவ தற்கு வாய்ப்புள்ளது.

அம்மா, அப்பா வம்சா வழியில் யாருக்காவது தால சீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய் வதால் குழந்தைகள் தாலசீ மியா நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தால சீமியா நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்ப வர்கள் கருக்கலைப்பு செய்து விடலாம்.

குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடு வது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும். - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79911.html#ixzz31B43Uee9

தமிழ் ஓவியா said...

பற்களை சோதிப்பதன் மூலம் பிறந்த தேதியை அறியலாம்

சென்னை, மே 8- குழந்தை களுக்கு பற்கள் வளருவதை சோதிப்பதன் மூலம் அவர் களது பிறந்த தேதியைக் கண் டறிய முடியும் என ஹாங் காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் குழந்தைகள் சார் மருத்துவ ஆராய்ச்சியா ளருமான மருத்துவர் ஜே. ஜெயராமன் கூறினார்.

போரூர் சிறீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ கருத்தரங்கம் புதன் கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மருத் துவர் ஜே.ஜெயராமன் பேசி யது: பற்கள் வளர்வதைச் சோதிப்பதன் மூலம் ஒரு குழந்தை பிறந்ததை கிட்டத் தட்ட கண்டுபிடிக்கலாம். ஆண் குழந்தைகளின் வயதை 1.5 வாரம் மற்றும் பெண் குழந்தைகளின் வயதை 2.6 வார வித்தியாசத்துக்குள்ளும் துல்லியமாக நிர்ணயிக்க முடி யும்.

இந்த வகையான சோத னைகள் இங்கிலாந்தில் பர வலாக பயன்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அடிப் படைத் தகவல்கள் முறை யாக சேகரிக்கப்பட்டு, அவை சரிபார்க்கப்பட்ட பின்புதான் இதுபோன்ற ஆய்வுகள் நடத் தப்பட வேண்டும் என்றார் ஜெயராமன்.

யுனிசெஃப் அமைப்பு கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 5 வயதுக்குள் பட்ட 41 சதவீத குழந்தை களே பிறக்கும்போது பதிவு செய்யப்படுகின்றன.

இது குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், குழந் தைத் தொழிலாளர் முறை, பாலியல் குற்றங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன என சிறீ ராமச்சந்திரா பல்கலைக்கழ கத்தின் குழந்தை சார் பல் மருத்துவத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முத்து கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79913.html#ixzz31B4Lskyl