Search This Blog

14.5.14

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?-பெரியார்

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம்.

மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங் களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவு களாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாச்சிரமத்தையும், ஜாதிப்பிரிவு களையும், பலவகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்துமதமானது எல்லா மதங்களையும் விட மக்கள் சமூகத்திற்கு பெரிய இடையூறாய் இருந்து கொண்டு மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலி இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும் பகுத்தறிவற்ற மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு பார்த்தாலே போதும். இந்துகள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதிகளாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டு இருக்கின்றார்கள். (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியரின் எண்ணிக்கையும் காலம் சென்ற திரு.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புஸ்தகத்தில் காணலாம்) நாளேற நாளேற நாகரீகத்தின் காரணமாகவும் செல்வநிலையின் காரணமாகவும் இன்னும் அதிகமான ஜாதி பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும் படியான நிலையிலேயே தேசம் போய் கொண்டிருக்கிறதே தவிர அவைகள் குறைந்து ஒன்றுபடத் தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற் கில்லை.

இந்தியாவின் 8 -ல் ஒரு பாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப்பிரிவுகள் இருக்கின்றதென்றால் இனி மற்ற 7-பாக ஜனத்தொகையில் எத்தனை ஜாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் தானாக விளங்கிவிடும்.

இந்த ஜாதிப்பிரிவுகள் மாத்திரமல்லாமல் ‘உயிரினும் தேசத்தினும் முக்கியமாய் கருத வேண்டிய’தானதாய் பாஷை பிரிவுகள் எவ்வளவு? இவ் வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங்களுக்குள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ண மும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?

இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக் காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக்காரரும் ‘தேசீயம் தேசீயம்’ என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத் தால் நாடு எப்படி nக்ஷமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம் தான் இந்த தேசீய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடந்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

‘வகுப்பு வாதம் கூடாது’ என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசீயவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

‘வகுப்புவாதம் மதவாதம் ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது’ என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக்கண்டு நாம் சிறிது லக்ஷியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100க்கு அரைப் பேராவது தங்கள் மதத்தையும், உள் மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதி யையும் ,வகுப்பையும் உள்வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

ஆகவே தேசீயம் என்பதும், தேசீயப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடுகின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்று ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?

வகுப்புவாதம், மத வாதம், ஜாதி வாதம் கூடாது என்கின்ற யோக் கியர்கள் ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர் வரை மாயாவாதம் முதல் சைவர்வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின்றார்களேயொழிய ஒருவராவது ஜாதிமத வகுப்புகளை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் ஒரு புறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற்றொரு புறத்தில் ஜாதி மத வகுப்புப்பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத் தனம், இழிதன்மை என்று சொன்னால் அப்படிச்சொல்லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட் கின்றோம்.

தேசம்,ஜீவராசிகளுக்கு பொதுவானதாகும், தேச ஆட்சியும் மக்க ளுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக்கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பதை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சகர்களது செல்வாக்குக்காலத்தில் அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈனமுள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும் கொடுங்கோன்மைகளாலும் ஜாதிமத வகுப்பு ஆணவங் கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதி மத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கு உதவியாகவே இருக்கவேண்டுமா என்றும் யாரோ சிலருக்கு பிழைப்பதற்கு வேறு வழி இல்லாததினாலேயே அந்த ஈனர்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.

ஏதாவது ஒரு மனிதன் ‘என்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதியென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதை தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு’ என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக்கேட்பது ‘குலாம் தன்மை’ என்றும் தேசத்துரோகத் தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச்சொல்லுவது ‘வயிற்றுப்பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழி தன்மை’ என்று ஏன் சொல்லக்கூடாது.

தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அனேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக்காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படி கேடுற்றாலும் சில பொருப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால் நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டு கோடி முஸ்லீம்களும் தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் ‘எங்களை நம்பித்தானாக வேண்டும்’என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தியிடமும், காங்கிரசினிட மும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பட்காரிடம் நம்பிக்கை இல்லை’ என்று சில பாவங்களுக்கு பணம் கொடுத்து சீமைக்கு தந்தி அடித்து பத்திரிகை களில் விளம்பரப்படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா?என்று கேட்கின்றோம்.

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர்களில் நூற்றுக்கு கால் பேராவது காந்தியையும், காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

சீமையில் திரு.காந்தியடிகள் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி’ என்று சொன்னபோது திரு.அம்பெட்கார் சொன்ன பதிலுக்கு திரு.காந்தி என்னபதில் சொன்னார்? அம்பெட்கார் அவர்கள் நல்ல வெளிப்படையான பாஷையில் ‘காங்கிரசுக்கும், தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது, அப்படியிருக்க திரும்பத் திரும்ப திரு.காந்தியவர்கள் காங்கி ரசும் தானும் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதிகள் என்று சொல்லு வது பொறுப்பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும்’ என்று எடுத்து சொன்னார். அப்படி இருக்கும்போது மறுபடியும் மறுபடியும் காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகிற வர்களுக்கு சிறிதாவது மானமோ , சுயமரியாதையோ இருக்குமானால் திரு.அம்பெட்காருக்கு பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பெட்காரையும் அவரது அபிப்பி ராயத்தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் ‘அம்பெட்கார் ஒரு குலாம்’ ‘எம்.சி.ராஜா ஒரு குலாம்’, ‘என். சிவராஜ் ஒரு குலாம்’ ‘மதுரைப்பிள்ளை ஒரு குலாம்’ ‘அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும் குலாம் இழி மக்கள்’ என்று பேசிவிட்டால் எழுதிவிட்டால் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர்க ளுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவர வர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தன் பங்கைக் கேட்பவனை குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர்கூலி என்றும், எச்சில் பொருக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாண யமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட் கின்றோம்.

அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லீம் பிரதிநிதிகளை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை என்றும் , முஸ்லீம்களின் முட்டுக்கட்டையென்றும் முஸ்லீம்களின் வஞ்சகம் என்றும் , முஸ்லீம்களின் சூட்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே ‘தேசீயப் பத்திரிகை’களுக்கு ஒரு யோக்கியதையாக விளங்குகின்றது. இது ‘தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்ல முடியும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லீம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமூகத்தாருக்கு தங்கள் உரிமைக்குப் பாடுபடு வதில் இன்னும் சரியான அக்கரை இருந்து, அப்பத்திரிகைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசீயத்தின் பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மௌலானா ஷெளகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய் எழுதத் தொடங்கிவிட்டன. மௌலானா ஷெளகத்தலியின் நாணயத்தை விட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர் கள் என்று கேட்கின்றோம். மௌலான ஷெளக்கத்தலி அவர்கள் மகமதிய சமூகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண்டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.

ஆனால், மேல் கண்ட திரு.காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்கு மாத்திரமல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லா விட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும் உண்மையான முஸ்லீம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள், சூட்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ்வளவு மோசடியான தந்திரமென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

நிற்க, ஒரு சமூகத்தாரிடமோ ஒரு மதத்தாரிடமோ மற்றொரு சமூகத் தார் உண்மையில் பயப்பட்டு பந்தோபஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப்பங் களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும்போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந் துணிந்து வேண்டுமென்றே செய் கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்ய மாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர் கடமையாகும்.

-------------------------- தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 08.11.1931

37 comments:

தமிழ் ஓவியா said...

முதுமையும் முன்னெச்சரிக்கை முறைகளும்!


சில ஆண்டுகளுக்குமுன் படித்த ஒரு நல வாழ்வு அறிவுரை நூலி லிருந்து ஒரு அருமையான அனுபவ மொழி எனக்குக் கிடைத்தது!

“Life extension without health and vigour can be an external punishment” நல்ல உடல் ஆரோக்கியமும், உடல் வன்மையும் இல்லாத ஆயுள் நீடிப்பைவிட சிறந்த வகையில் கிடைக் கும் தண்டனை வேறு கிடையாது என்பதே அதன் தமிழாக்கம்.

தந்தை பெரியார் அவர்களை, அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று, மேடைகளில் பலர் மிகுந்த நல்லெண்ணத்தோடும், பற்றுதலாலும் அவர்களது தொண்டு சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டும் என்ற அவா காரணமாகவும், வாழ்த்துத் தெரிவித்த பின்னர் அவர்களது விருப்பத்திற்கு நன்றி தெரிவித்து தந்தையவர்கள் பதில் உரை ஆற்றும்போது,

உங்களுக்கென்ன நீங்கள் எளிதில் 100 வயதிருக்க வேண்டும், பல்லாண்டு இருக்க வேண்டும் என்று வாழ்த்தி விட்டுப் போய் விடுகிறீர்கள்; வாழ்ந்து பார்க்கும் எங்களுக்கல்லவா அதில் உள்ள கஷ்ட, நஷ்டம், துன்பம் - தொல்லை என்பது புரியும்! என்று கூறுவார்கள்.

காரணம் முதுமையில், உள்ளம் எவ்வளவு உற்சாகத்துடன் உழைக்க விரும்பினாலும், உடல் உறுப்புக்கள் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பெரியாரைவிட குறைந்த வயது வாழ்ந்தவர் - என்ற போதிலும், படுக்கையில் பல திங்களைக் கழித்த நிலையில், பார்வை பழுதாகி விட்ட தால் பக்கத்தில் உதவும் நண்பர்களை அமர்த்திக் கொண்டு, படுக்கைப் பிதற் றல் - முதுமை உளறல் என்ற சிறந்த கவிதை ஆக்க அறிவுரை எழுத்தோவி யங்களையும் தரத் தவறவில்லை.

ஆனால், 95 ஆண்டு காலம் வாழ்ந்த தந்தை பெரியாரும், இறப்பதற்கு 5 நாள் முன்பு கூட, சென்னை தியாகராயர் நகரில் தமது மரண சாசன உரையை, தனது சிங்கக் குரலில் கர்ஜிக்கவே செய்தார்!

அன்னை மணியம்மையார் என்ற செவிலித் தாயாகி அய்யாவைப் பாதுகாத்தார்; அய்யா அவர்களும் கடைசி வரை பேசினார்; எழுதினார்; சுற்றுப் பயணம் செய்தார். அவர்தம் சிந்தனைச் சிறகுகள் பரந்து விரிந்த பகுத்தறிவு வானத்தில் அவர் பறக்க உதவிக் கொண்டே இருந்தன!

முதுமை வந்தால் - அது இன்றைய அறிவியல்படி (நாளை ஒரு வேளை இதுவும் மாறலாம்) பல்வேறு நோய்கள் - உடல் உபாதைகள் ஏற்படலாம். அதுபற்றி இன்று தமிழ் இந்து நாளேட்டில் மனதுக்கு இல்லை வயது என்ற பொதுத் தலைப்பில் இன்று முதுமையியல் (Expert of Geriatrics) டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள் எழுதியுள்ள பயனுள்ள குறிப்பு முதியவர்களும், முதியவர்களைக் கவலையோடு பேணி பாதுகாக்க எண்ணும் உற்றவர்களும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பொதுவாக முதுமையை பல நோய்களின் மேய்ச்சல் காடு என்பார்கள். சில நோய்கள் அறிகுறி இல்லாமல், மறைந்து காணப்படும். ஆனால், நோய்களால் ஏற்படும் தொல்லைகள் அதிகம் இருக்கும். உடல் பரிசோதனை யில்தான், பிரச்சினை என்னவென்று தெரியவரும். அதனால், முதியவர்கள் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மறைந்திருக்கும் நோய்களை ஆரம் பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

தமிழ் ஓவியா said...

மது அருந்துபவர்கள் திடீரென்று மதுவை நிறுத்தக்கூடாது; அப்படிச் செய்தால் நடுக்கம் அதிகரிக்க வாய்ப் புள்ளது. இயல்பாக முதுமையில் வரும் நடுக்கத்தால் எவ்விதமான பாதிப்பும் இல்லை. நடுக்கத்தைப் போக்க மருந்து, மாத்திரைகள் உள்ளன. அதே சமயம், நரம்பு சார்ந்த நோய்களால் ஏற்படும் உதறுவாதம் என்கிற பார்கின்சன்ஸ் நடுக்கத்திற்கு கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும்.

இது ஏற்பட்டால் முதலில் கையில் நடுக்கம் ஆரம்பிக்கும். வேலை செய்யும்போது, தூங்கும்போது நடுக்கம் இருக்காது. நாளடைவில் உடல் தசைகள் இறுகி மரக்கட்டைபோல ஆகிவிடும். பொறுமையாக நடப்பார்கள். சட்டை யைக்கூட போட முடியாது. பேச்சு சரியாக வராது; சாப்பிட முடியாது; ஆனால், மனநிலை நன்றாக இருக்கும். இவர்களது அனைத்து வேலை களுக்கும் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும்; ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

எனவே, முதுமையில் உடல் நடுக்கம் வந்த உடனே மருத்துவரிடம் சென்று அது இயல்பான நடுக்கமா அல்லது உதறுவாதம் நடுக்கமா என்று ஆலோசியுங்கள். நடுக்கத்தைப் போக்க மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளன. நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தலாம். முதியவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை உடற் பரி சோதனையை தகுந்த ஆய்வுக் கூடத்திற்கு சென்று தவறாது செய்து, அதன்பின் உரிய மருத்துவ ஆலோ சனை பெற்று, அதற்கேற்ப அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

சிலர் எடுத்த எடுப்பில் மிகப் பெரிய சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் செல்லும் பழக்க முடையவர்களா கிறார்கள்; இது விரும்பத்தக்கதல்ல.

வழக்கமான உங்கள் குடும்ப ஆலோசகர் மருத்துவ (Family Consultant Doctor)ரையே அணுகி அவர் சொன்ன பிறகே எந்த நிபுணரிடமும் செல்லுங்கள். அதுவே மிகவும் பாது காப்பானது!

முதுமையை வெல்ல முடியாவிட் டாலும் நல்லபடியாக ஆக்கிக் கொள்ள முயற்சியுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/80190.html#ixzz31e6khy00

தமிழ் ஓவியா said...

அடுத்த ஆண்டு புரட்சிக்கவிஞரின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மூன்று நாள்கள் மிகப்பெரிய விழாவாகவும் நடைபெறும்


அடுத்த ஆண்டு புரட்சிக்கவிஞரின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
மூன்று நாள்கள் மிகப்பெரிய விழாவாகவும்-நிறைவு விழா பெரியார் திடலிலும் நடைபெறும்
புரட்சிக்கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, மே 13- அடுத்த ஆண்டு (2015) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். அந்தப் பிறந்த நாள் விழாவினை மூன்று நாள்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஒரு நாள் வடசென்னையிலும், மறு நாள் தென்சென்னையிலும், நிறைவு நாள் விழாவை மத்திய சென்னையான பெரியார் திடலிலும் மிகச் சிறப்பாக நடத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

3.5.2014 அன்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழா மற்றும் 35 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய புரட்சிக்கவிஞ ருடைய பிறந்த நாள் விழா - தமிழர் பண்பாட்டு கலை விழாவாக இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருக்கக்கூடிய வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மானமிகு அருமைத் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களே, வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் கோவி.கோபால் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருட்டிணன் அவர்களே, திராவிடப் புரட்சி அவர்களே, தி.வே.சு. திருவள்ளுவன் அவர்களே,

மோகன் அவர்களே, வெங்கடேசன் அவர்களே, முனைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே, பெரியார் விருது பெற்ற பெருமைக்குரியவர் களான கல்வியாளர் அய்யா கலிகி கல்விக் குழுமத்தின் தலைவர் அர.ஜனார்த்தன் அவர்களே, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் பொறியாளர், மின்சார வாரியத்தில் பணிபுரிந்து சிறப்பான முத்திரை பதித்த அருமைத் தோழர் செங்குட்டுவன் அவர்களே, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் பொருளாளர் செயல்வீரர் மனோ கரன் அவர்களே,

இங்கே சிறப்பாக வாழ்த்துரை வழங்கிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செய லாளர் குமரேசன் அவர்களே, இந்த நிகழ்ச்சிக்கு அடித் தளமாக விளங்கியும், இணைப்புரை நிகழ்ச்சிகள் அமைப் பையும் சிறப்பாக செய்துள்ள திராவிட மகளிர் பாசறை செய லாளர் அன்புக்குரிய அருமை மகள் டெய்சி மணியம்மை அவர்களே,

தமிழ் ஓவியா said...

இந்த நிகழ்ச்சியில் நன்றியுரை கூறவிருக்கின்ற வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ராஜசேகரன் அவர்களே, சிறப்பாக குழுமியுள்ள கழகக் குடும்பத்தவர்களே, கொள்கைக் குடும்பத்தவர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரியார் பிஞ்சுகளே, பரிசு பெற்ற அருமை மாணவச் செல்வங்களே, உங்கள் எல்லோருக் கும் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நேரம் நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்

நம்முடைய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரை யாற்றும்பொழுது ஒரு குறிப்பை உணர்த்தினார். பின்னால் நாங்கள் வந்து பேசக்கூடிய எங்களைப் போன்றவர் களுக்கு, நீண்ட நேரம் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள். மதியத்திலிருந்து நீங்கள் உட்கார்ந்திருக்கின்றீர்கள். இந்தக் கோடையில் என்னதான் இளைப்பாறும் நிகழ்ச்சிகளாக இங்கே நடைபெற்றாலும்கூட, நீங்கள் நீண்ட நேரம் வீட்டை மறந்து இங்கே இருக்கிறீர்கள்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எட்டாண்டு களாக அலுப்பு சலிப்பின்றி மிகவும் அற்புதமான விழாவாக - குடும்ப விழாவாக நடத்துவது என்பது மிகவும் பாராட்டுக்குரியது.

தாய்மார்களுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கும் விழாவாக அமைந்துள்ளது

நிறைய தாய்மார்கள், குழந்தைகள் இங்கே குழுமியி ருக்கிறார்கள். ஒரு திருவிழாவாக இருக்கிறது; நமக்கு வேறு திருவிழா ஏது? பெரியார் விழாதான் நமக்குத் திருவிழா; புரட்சிக்கவிஞர் விழாதான் திருவிழா; ஆகவே, இங்கே குடும்பம் குடும்பமாக வந்து குழுமியிருக்கிறார்கள், மிக்க மகிழ்ச்சி. உணவு ஏற்பாடும் தொடர்ந்து செய்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

ஏனென்றால், தாய்மார் களுக்கு ஒரு நாள் ஒய்வு கிடைக்கும்; எப்பொழுதும் அடுப் பங்கரையில் உட்கார்ந்துகொண்டு, சமையல் செய்து கொண்டே இருப்பார்கள். என்னதான் சமையலை நன்றாகச் செய்தாலும், திருப்தி இல்லாதவர்கள் உப்பு சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லை என்பவர்கள் மத்தியில் நீங்கள் பணியாற்றிவிட்டு, இதுபோன்று ஒரு நாள் உங்களுக்கு ஓய்வு கொடுப்பது என்பது இந்த விழா - ஒரு புத்தாக்க விழாவாக இருக்கிறது.

தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுவது ஒருபக்கம்; அதேபோல், குடும்பத்தில் உள்ள தாய்மார்களுக்கு எல் லோருக்கும் புத்துணர்ச்சி ஏற்படும்.

அடுத்த ஆண்டு மூன்று நாள் விழாவாக நடைபெறும்

இந்த ஆண்டு புரட்சிக்கவிஞரின் 124 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொன்னார்கள்; அடுத்த ஆண்டு 125 ஆம் ஆண்டு பிறந்த நாள். 125 ஆம் ஆண்டு என்பது ஒன்றே கால் நூற்றாண்டாகும். ஆகவே, அடுத்த ஆண்டு - 125 ஆம் ஆண்டு என்று சொல்கின்ற நேரத்தில், இந்த விழா மூன்று நாள்கள் நடைபெறும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இந்த மூன்று நாள்களில், ஒரு நாள் வழக்கம்போல் வடசென்னையில் நடைபெறும். கூட்டம் போடுகின்ற பகுதி புதிய பகுதியாக இருக்கும். அடுத்த நாள் தென்சென்னை யில் நடைபெறும். மூன்றாவது நாள் நிறைவு நிகழ்ச்சியாக - அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய குடும்ப விழாவாகவும், அதேநேரத்தில், மத்திய சென்னையில் - மத்திய சென்னை என்றால், பெரியார் திடலில் நடைபெறும்.

ஆகவே, அதனை ஒரு பெரிய நிகழ்ச்சியாக - ஒரு மூன்று மாதத்திற்கு முன்பே விளம்பரப்படுத்தவேண்டும்; இருபால் இளைஞர்களுக்கு நிறைய போட்டிகளை நடத்த வேண்டும். பல பகுதிகளில் இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

இங்கே நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நம் பிள்ளைகளைப் பார்த்தோம். நேரத்தின் நெருக்கடி காரணமாக, டெய்சி மணியம்மை அவர்கள் சில பிள்ளை களைப் பாடச் சொன்னார்கள். மிகவும் சிறப்பாக அமைந்தது அந்த நிகழ்ச்சி. நம் பிள்ளைகளின் உள்ளே புதைந்துள்ள ஆற்றலை வெளியே கொண்டுவரவேண்டும். நம் பிள்ளை களில் எந்தப் பிள்ளையும் சோடை போன பிள்ளைகள் கிடையாது.

எல்லாப் பிள்ளைகளும் தலைசிறந்த அறிவாளிகள்தான்

ஆசிரியர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறீர்கள். எந்தப் பிள்ளைகளும் முட்டாள்களும் அல்ல; சோனை களும் அல்ல; சொத்தைகளும் அல்ல. எல்லாப் பிள்ளை களும் தலைசிறந்த அறிவாளிகள்தான். அவர்களின் அறிவை வெளியே கொணருவதற்கு வாய்ப்பு வரவில்லை என்பதுதானே தவிர, வேறொன்றும் இல்லை.

இங்கே உரையாற்றிய பிள்ளைகள் என்ன அருமையாக உரையாற்றினார்கள். இந்தச் சிறிய வயதில் மிக அருமை யாக, மிகச் சிறப்பாக இங்கே உரையாற்றினார்கள்.

மூட நம்பிக்கையைச் சிறிய வயதிலேயே புகுத்துகின் றனர். அதற்கு நேர் எதிரானது பகுத்தறிவு, விஞ்ஞான மனப்பான்மை, அறிவியல் சிந்தனைகள், பெரியாருடைய சிந்தனைகள் இவையெல்லாவற்றையும் புகுத்துவதற்கு, இதுபோன்ற விழாவிற்கு அவர்களை அழைத்து, பெரியார் பிஞ்சுகளுக்கே ஒரு பகுதி நேரத்தை ஒதுக்கவேண்டும். அந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளில். அதேபோன்று, பெண்கள் - அவர்களுக்கும் மகளிர் பகுதி என்று ஒன்றை ஒதுக்கவேண்டும். அந்த மூன்று நாள்களையும், நல்ல வகையில் திட்டமிட்டு செய்யவேண்டும்.

தந்தை பெரியாருடைய கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர் புரட்சிக்கவிஞர்

புரட்சிக்கவிஞரைபற்றி மிக அழகாக இங்கே சொல்லிவிட்டார்கள். நான் உங்களுக்கு சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. புரட்சிக்கவிஞருடைய கவிதை களைப் பிள்ளைகளும் நன்றாக இங்கே சொன்னார்கள்.

தமிழ் ஓவியா said...


அதனை நடனமாக, பாட்டாக உருவகப்படுத்திக் காட்டி னார்கள். புரட்சிக்கவிஞரை நாம் கவிஞராகப் பார்த்தோம். அவரை பேச்சாளராகப் பார்க்கின்றபொழுது, தந்தை பெரியாருடைய கொள்கையினால் அவர் ஈர்க்கப்பட்டார்.

சுப்பிரமணிய துதியமுது பாடிய கனக.சுப்புரத்தின கவிஞர், முருகனைப்பற்றி பாடியவர், எப்படி பெரியாரு டைய தொண்டராக வந்து, கடைசிவரையில் கொள்கை யில் மிகத் தீவிரமாக இருந்தார் என்று சொல்லும்பொழுது, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

பாரதிதாசன் பேசுகிறார் என்ற புத்தகத்தில், புரட்சிக் கவிஞருடைய உரையைத் தொகுத்து வெளியிட்டிருக் கிறார்கள். புரட்சிக்கவிஞருடைய கவிதை நடைகளை எல்லாம் நீங்கள் ஏராளமாகக் கேட்டிருப்பீர்கள். அதைப் பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால், அதை நான் எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

வெறும் புகழ் வார்த்தைக்குத் தன்னைப் பலியாக்கிக் கொண்டவர் அல்லர்!

புரட்சிக்கவிஞர் அவர்கள் ஒரு குறிக்கோளோடு வாழ்ந்த கவிஞர். கவிஞர் என்றால், யார் பாராட்டினாலும் சரி என்று வாழக்கூடியவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அவர் வெறும் புகழ் வார்த்தைக்குத் தன்னைப் பலியாக்கிக் கொண்டவர் அல்லர்.

அவரைப் பொறுத்தவரையில், ஒரு இலக்கு; கொள்கை. இலக்கியம் என்றாலே, குறிக்கோள். இலக்கு இயம். குறிக்கோளோடு செல்லவேண்டும். எங்கே செல்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்? எந்த இடத்தை நாம் அடையவேண்டும் என்று நினைத்தால்தான் நாம் தெளிவாக இலக்கை அடைய முடியும்.

ஜாதி ஒழிப்புப் பணிக்காகப் போராடிய தந்தை பெரியார் அவர்கள், இன்னும் அந்தப் பணி முற்றுப் பெறவில்லை. இப் பொழுது புரட்சிக்கவிஞர் மிகவும் அதிகமாகத் தேவைப் படுகிறார்; எப்படி பெரியார் தேவைப்படுகிறார்களோ, அதுபோல!

பெரியாரின் நெறியில் நின்றவர்தான் புரட்சிக்கவிஞர்

மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி இவைகளெல்லாம் காணுகின்ற நேரத்தில் - நான் காலையில்கூட புதுவை மாநிலத்தில், புரட்சிக்கவிஞர் மண்ணில் உரையாற்றும் பொழுது சொன்னேன்; அதையே உங்களுக்கும் நினை வூட்டுகிறேன். இந்தப் பதவி வெறி, ஜாதி வெறி, மதவெறி யெல்லாம் படமெடுத்து ஆடக்கூடிய இந்தக் காலகட்டத் தில், வெறிக்கு ஒரு பதில் வேண்டும்;

அதுதான் பெரியாரின் நெறி, அதுதான் மிக முக்கியம். நெறிக்கும் - வெறிக்கும் தான் போராட்டம். அது தேர்தல் ரூபமாக இருக்கலாம்; தேர்தல் முடிந்தும் இருக்கலாம். வெறி ஒருபக்கம்; நெறி ஒரு பக்கம். நெறி கண்டிப்பாக வெற்றி பெறும். பெரியாரின் நெறியில் நின்றவர்தான் புரட்சிக்கவிஞர்.

எனவே, இருட்டறையில் உள்ளதடா உலகம் என்று ஆரம்பித்த புரட்சிக்கவிஞர், வெருட்டுவது பகுத்தறிவே, இல்லையாயின் விடுதலையும், கெடுதலையும் ஒன்றேயா கும். அருமையாக பிள்ளைகள் இங்கே சொன்னார்கள்.

பாரதிதாசன் பேசுகிறார்!

அந்த வகையில் ஒன்றைச் சொல்லி என் உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞர் விழாவில் நாமெல்லாம் பேசுவதைவிட, புரட்சிக்கவிஞரையே பேசவிட்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

23.6.1957 ஆம் ஆண்டு குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் மாநாட்டில் புரட்சிக்கவிஞர் ஆற்றிய வீர உரையின் பகுதிகள் இவை:

இப்போது பார்ப்பனர் உணவு விடுதிகளில் உண்ணக் கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால், இதில் மாணவர்கள் முற்றிலும் கலந்துகொள்ள லாம். இதில் பங்கேற்கலாம். அரசியலாரை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் மக்கள் மட்டுமே கலக்கவேண்டும்.

எந்தப் பகுதியில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பெரியார் அவர்கள் கூறுகிறார்களோ அதில், கலந்து கொள்ளக்கூடாது. நம்முடைய சீர்திருத்தப் போராட்டத் திற்கு வேண்டிய கிளர்ச்சிகள் உங்களிடமே உள்ளன. எத்தனை முயற்சிகள் எந்தெந்த முயற்சிகள் உண்டோ அத்தனை முயற்சிகளையும் கையாளவேண்டும்.

இரண்டு தண்ணீர்ப் பானைகள் வைக்கப்பட்டு, ஒன்று நமக்கென்றும், மற்றொன்று பார்ப்பானுக்கு என்று கூறப்பட்டால், சும்மா விடலாமா? இதுபோன்ற சின்ன தகராறுக்கெல்லாம்கூட பெரியாரிடம் செல்லலாமா? நாமே இதற்கு முடிவு கட்டவேண்டும்.

ஆகையினால் தோழர்களே! அரசியல் பகுதி எது, சமூகப் பகுதி எது என்பதை நீங்கள் நன்கு அலசிப் பார்த்துப் போராடவேண்டும். இப்படிப்பட்ட சமுதாயத் துறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு.

தமிழ் ஓவியா said...


நீங்கள் அவர் வழி நிற்கவேண்டும். அவர் பாதையில் செல்லவேண்டும்.

சிதம்பரம் பக்கம் பரதூர் என்ற ஊரில், ராஜன் என்ற வாலிபர் இருந்தார். இந்த இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுள்ள வர். அந்த ஊரிலே நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றைப் போட்டார். அதற்கு அந்த ஊரில் உள்ளவர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள் தெரியுமா? நீங்கள் சற்று கவனமாகக் கேளுங்கள்.

அவருடைய மனைவியைத் தூக்கிச் சென்றனர். அவரையும் அடித்து ஊரை விட்டு விரட்டினர். அவருடைய வீட்டைப் பிடுங்கிக் கொண்டு, அவருடையது அல்ல என்று சொல்லிவிட்டனர். தாய், பாட்டி முதலி யோரை ஊருக்கு அனுப்பி விட்டனர்.

கடைசியிலே மானத் திற்கு இழுக்கு வந்ததை எண்ணி எண்ணி ஏங்கிய அந்தத் தமிழன், தஞ்சைக்கருகில் உள்ள கல்லூரிக்குப் பக்கத்தில் தூக்குப் போட்டுக்கொண்டு மாண்டார். அதைப்போல, பல உத்தமர்கள் தியாகம் செய்து வளர்த்த இயக்கம் இது.

சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும், சிதம்பரம் தீட்சிதர் களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் ஒப்புக்கொண்டார். ஆனால், சனாதனிகளும், தீட்சிதர்களும் எதிர்ப்பைப் பலமாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அன்றைய தினம் கலகம் செய்ய ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். ஒவ்வொருவனிடமும் கல், தடி, கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. அன்று பெரியாரை ஒழித்துவிடுவது என்றே திட்டமிட்டு விட்டனர். நிலைமை மிகமிகப் பயங்கரமாக இருந்தது.

நாங்கள் பத்துப் பேர்கள் போயிருந்தோம். இந்நிலை யைப் பார்த்துவிட்டு பயந்தே போனோம். உடனே நாங்கள் ரயிலடிக்குப் போய், பெரியார் வந்ததும் திரும்பிப் போகச் சொல்லிவிடுவது என்று முடிவு கட்டிக்கொண்டு, ரயி லடிக்குப் போனோம். பெரியார் வராமலேயே இருந்தால் நல்லது என்று எண்ணினோம்.

ஆனால், வருகிறேன் என்று கூறியிருந்தவர் வண்டியில் வந்திறங்கினார். உள்ள நிலைமையைக் கூறினோம். கேட்டுக்கொண்டே, விடு, விடு என்று சொல்லி ஊருக்குள் போனார். போக வேண்டாம், ஆபத்து, ஆபத்து என்று நாங்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டே போனார். எந்த வழியில் போகக்கூடாது என்று நினைத்தோமோ அந்த வழியில் போனார். போய் டக் என்று நின்றார். அதுவும் எந்த இடம்? எந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று பயந்தோமோ அதே இடம். போலிகளின் கூட்டம் எதிர்ப்பை ஆரம்பித்துவிட்டது. போலீஸ்காரர்களின் ஆயுதம் தாங்கிய கரங்கள் உயர்ந்துவிட்டன. இன்று என்ன செய்யப் போகிறோம்? என்று எங்கள் கூட்டில் உயிர் இல்லை.

இந்த நிலையில் பேசவும் ஆரம்பித்துவிட்டார். எப்படிப் பட்ட பேச்சு? பாமரர் முதல் அனைவருக்கும் புரியும் முறையில் அழகாக - உள்ளம் கவரும் விதத்தில் பேசினார்.

உங்கள் பையன் ஒருவன் படித்திருக்கிறான். பார்ப் பனரின் பையன் ஒருவன் படித்திருக்கிறான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் பையனுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்றுதானே? ஆனால், இன்றைய பார்ப்பன ஆதிக்கத்தில் யாருக்குக் கிடைக்கும்? இதைத் தானே கூறுகிறேன் என்றார். உயர்ந்த கரங்கள் தாழ்ந்தன. அனைவரின் மனமும் சிந்திக்க ஆரம்பித்தன.

கடைசியில் மூட நம்பிக்கையின் பிறப்பிடமான இந்த ஊர் ஆல யத்திலே உள்ள நடராசன் சிலையைக் கொண்டு வந்து திருப்பிப் போட்டு வேட்டி துவைப்பேன் என்றார். எதிர்த்த கரங்கள் திரும்பித் திட்டுதலின் மூலம் ஓசையைக் கிளப்பின.

அன்று சாகடிக்கப்படவிருந்த பெரியார், நடராசன் கோவில் துவம்சமாக்கப்பட வேண்டும் என்று பெரியார் அன்று கட்டளையிட்டிருப்பாரேயானால், நொடியிலே ஆகியிருக்கும். அப்படிப் பெரியார் அவர்கள் பாடுபட்டு, முன்னுக்குக் கொண்டு வந்த இயக்கம் நிலையானது. இயக்கம் மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுவது - எந்த இயக்கம், சமுதாயம் முன்னேற உண்மையாக உழைக்கிறது என்பதை உணர்ந்து நீங்கள் சேரவேண்டும்.

தமிழ் மாணவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். பார்ப்பனரிடம் ஏமாந்துவிடக் கூடாது. எஞ்ஞான்றும் விழிப்போடு இருக்கவேண்டும். பெரியார் சொல்லுகின்ற அறிவுரைகளை அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்றைக்கும் அதுதான் தேவைப்படுகிறது

இதுதான் புரட்சிக்கவிஞருடைய உரை. இதுதான் இன்றைக்கும் தேவைப்படுகிறது. இந்தச் செய்தியோடு நான் விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/80161.html#ixzz31e764bEP

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/80150.html#ixzz31e7hzoMv

தமிழ் ஓவியா said...


12000 சந்தாக்களைத் திரட்டுவீர்!


9.5.2014 அன்று தஞ்சை வல்லத்தில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று.

80ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் (ஜூன் 2) விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டுச் சந்தாக்களைத் திரட்டுவது என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் பகுத்தறிவு - நாத்திக ஏடு ஒன்று 80 ஆண்டுகளாக நடைபெறுவது விடுதலையைத் தவிர, வேறு ஏதும் உண்டோ?

நாத்திக ஏடு என்று சொல்லும்பொழுது, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

இன்று ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினரின் நலம்; நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக் களின் நலம் (விடுதலை (19.2.1971) என்று குறிப்பிட்டார்.

இந்த நாத்திகத்தைத் தான் விடுதலை ஏடு நாளும் பரப்பி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நாஸ்திகம் - ஆஸ்திகம் என்பதற்கு மற்ற மதக்காரர்கள் சொல்லும் விளக்கத் திற்கும், இந்து மதம் கூறுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

மற்ற நாடுகளில் கடவுள் மறுப்பாளர்கள் தான் நாஸ் திகர்கள்; இந்து மதத்திலோ வேத மறுப்பாளர்கள்தான் நாஸ்திகர்கள்! இதுபற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகின்றது?

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின்றான் (மனுதர்மம் அத்தியாங்கள் - 2 சுலோகம் - 11).

இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவன் ஆகிறான் (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் -11).

பிராமணன் இந்த மனு சாஸ்திரத்தை மற்ற வருணத் தாருக்கு ஓதுவிக்கக் கூடாது (மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் - 103)
இத்தகு ஒரு சமூக அமைப்பில்தான் விடுதலை தந்தை பெரியார் அவர்களின் கைவாளாகச் சுழன்று, பெரும்பான்மையான மக்களைக் கீழ்மைப்படுத்தும் சக்திகளைச் சாய்த்தது - சாய்த்தும் வருகிறது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் வருணாசிரம தர்மத்தை வீழ்த்துவதில் முன்னணிப் படையாக இருக்கிறது.

மூடநம்பிக்கை எதிர்ப்புப் போரில் தீயாகச் சுட்டு எரித்திருக்கிறது. சமூக நீதிக் களத்தில் விடுதலை வீரன் கண்ட வெற்றியின் வீச்சு - இந்தியத் துணைக் கண்டத் தின் சகல பகுதிகளிலும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. பெண்ணடிமையை வீழ்த்துவதில் பீரங்கியாகச் செயல்பட்டிருக்கிறது. அதன் விளைச்சலை நாடெங்கும் காண முடிகிறது.

அரசியல் களத்திலும் கூட தீய சக்திகளை அடையாளப்படுத்திக் காட்டுவதிலும் விடுதலைக்குத் தனியிடம் உண்டு. மதவெறி மாய்த்து மனிதநேயம் காத்ததில் மகத்தான பங்களிப்பு விடுதலைக்கு உண்டு.

தமிழர்கள் பெற்றிருக்கும் பல்வேறு வகையான உரிமைகளுக்கும் விடுதலை அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்று அர்த்தமுள்ள வரிகளைச் சொன்னார்.

நம்மைக் கீழ்மைப்படுத்தும் - சமூக நீதிக்குக் குழி வெட்டும் ஏடுகளைத் தமிழன் தீண்டலாமா? தமிழர் உரிமைக்காக நாளும் குரல் கொடுக்கும் விடுதலையை வாங்காமல்தான் இருக்கலாமா?

விடுதலை வளர்ச்சிக்காக விடுதலையை வாங்கச் சொல்லவில்லை; தமிழர்கள் நலன்களுக்காகத்தான் விடுதலையை வளர்ச்சியை அடையச் செய்ய வேண்டும்.

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததில் விடுதலையின் பங்களிப்புச் சாதாரணமானதா? அன்றைக்கு ஆச்சாரியார் திணித்த அந்த குலக் கல்வித் திட்டத்தைப் போராடி ஒழிக்கவில்லையென்றால் தமிழர்கள் வாழ்வில் கல்வி ஒளி படர்ந்திருக்குமா?

சென்னைப் பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20.11.2010) உரையாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450; சதவீத அடிப்படையில் 89 என்று கூறியதை நினைவு கொண்டால் இந்த நிலையை எட்டிப் பிடிக்க தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கம் எப்படி எல்லாம் பாடுபட்டது? அதற்குப் போர் வாளாக விடுதலை நாளேடு எப்படியெல்லாம் சுழன்றது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்குப் பல வகைகளிலும் மதவாத இருள் சூழ்ந்து நிற்கிறது - மீண்டும் மனு தர்மத்தைக் குடியமர்த்த, கொடி ஏற்ற மும்முரமாக எழுந்து நிற்கிறது. இத்தகு கால கட்டத்தில் விடுதலை தமிழர்களின் வீட்டுக்கு வீடு ஒளிர வேண்டாமா?

எனவே தமிழர்களே, உங்களை நாடி வரும் திராவிடர் கழகத் தோழர்களிடத்தில் தாராளமாக விடுதலை ஆண்டுச் சந்தாக்களை வழங்குவீர்! அதன் மூலம் உங்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவீர்!

தமிழர் விடுதலைக்கு விடுதலை தேவை!

கழக மாவட்டத்துக்கு 200 விடுதலை ஆண்டு சந்தாக்கள் என்பது எளிதான இலக்கே! ஒரு மூச்சுப் பிடி யுங்கள் - உங்கள் இலக்கை எளிதில் எட்டி விடலாமே!

Read more: http://viduthalai.in/page-2/80151.html#ixzz31e7pe1A7

தமிழ் ஓவியா said...


ஆண்களின் போக்குக்கு எதிரான அதிரடித் தீர்ப்பு!


இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக மணவிலக்குக் கோருவதா?
பெங்களூரு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பெங்களூரு.மே13- மணவிலக்குக் கோரி கண வன் தொடுத்த வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன் றம் மறுமணம் செய்வதற் காக மணவிலக்கு சட் டத்தை தவறாகப் பயன்ப டுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

பெங்களூரு நகரில் ஜெயநகர் பகுதியிலிருந்து எம்பிஏ பட்டதாரி ஒருவர் தன் மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற்றுத்தரு மாறு நீதிமன்றத்தை நாடினார். 2001ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் அவரு டைய மனைவி வீட்டை விட்டு வெளியேற்றப்பட் டுள்ளார்.


தமிழ் ஓவியா said...

மீண்டும் செப் டம்பரில் கணவன் வீட் டுக்கு வந்த மனைவி மூன்றே நாளில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேற் றப்பட்டார். இதன் தொடர்ச் சியாக 2002ஆம் ஆண்டில் குடும்ப நீதிமன்றத்தை அணுகி, தன் மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற்றுத் தரு மாறு கோரி உள்ளார்.

தன் மனைவியிடமி ருந்து மணவிலக்கு கோருவ தற்கான காரணங்களாக, தன்னுடைய பெற்றோ ரைப் பேணுவதில்லை. குழந்தை பிறந்த தகவல் மற்றும் அக்குழந்தையின் பெயர்சூட்டுவிழா, பள்ளி யில் சேர்த்த விவரங்களை கணவன் வீட்டாருக்கு தெரி விக்கவில்லை என்று அவ ருடைய மனைவியிடமி ருந்து மண விலக்குக் கோரு வதற்கான காரணங்களின் பட்டியல் நீள்கிறது.

மனைவி தரப்பில் கூறும்போது, கணவன், மனைவியிடையே எப்போ தும் அவருடைய பெற் றோரின் தலையீடு இருந்த தால் புரிந்துகொள்ள முடி யாத முரண்பாடுகள் ஏற் பட்டதாகவும், கணவன் வீட்டார் புகுந்த வீட்டிலி ருந்து அவரின் வாழ்வுரி மையைப் பறித்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேற் றுவதிலேயே குறியாக இருந்துள்ளனர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனிக் குடித்தனம் வைப் பதில் கட்டாயப்படுத்திய தாகக் கூறப்படும் குற்றச் சாட்டை மறுத்துள்ளார்.

அதேநேரத்தில், அவர், தன் கணவரின் தாயாரைப் பேணுவதிலும், கணவரு டன் சேர்ந்து வாழ்வதிலும் எப்போதுமே ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித் துள்ளார். மனைவியின் தரப்பு வாதங்கள் நீதிபதிகளின் கவ னத்தைப் பெரிதும் கவர்ந் தன.

கணவரின் மனு தள்ளுபடி!

நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் கணவரின் மண விலக்குக் கோரும் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு குறித்து நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கில் கணவர் தரப்பில் மணவிலக்குக் கோரப்பட்டுள்ளது.

நீதிமன் றத்தில் மணவிலக்குக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்து விட்டால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் நோக்கம் தெரிகிறது. இதுபோன்ற காரணங்களுக்காக நாடா ளுமன்றத்தில் மணவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட வில்லை. தவிர்க்கவே முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே மணவிலக்கு அளிக்கமுடியும்.

தமிழ் ஓவியா said...

எந்தவகை யில் மணவிலக்கு கோரப் படுகிறது என்பதன் பின் னணி சட்டப்படி நிரூபிக் கப்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நீதி மன்றத்துக்கு மணவிலக்கு அளிக்கும் அதிகாரம் கிடையாது என்று நீதிபதி கூறினார். மேலும் அவர் கூறும்போது, இணையர் நல்ல கலாச்சாரம் மிகுந் துள்ள குடும்பத்தில் இருந்து வந்துள்ளனர்.

அவர்கள் வாழ்வில் ஈகோ ஏற்பட் டுள்ளது. எல்லா உறவுகளிட மிருந்தும் கொடுத்துப் பெறுவது என்கிற முறை இருக்க வேண்டும். இந்த இணையர் அவர்கள் வாழ் வில் அதைக் கடைப்பிடிப் பதற்கு கற்கவில்லை என்றனர்.

தேவை புது சட்டம்

இந்த வழக்குக் குறித்து பெங்களூரு குடும்பநீதி மன்றத்தின் வழக்குரைஞ ரான பி.என்.முத்தண்ணா கூறும்போது, இந்து திரு மணச் சட்டம் 1955இன் படி, நீதிமன்றத்தை திருப் திப்படுத்தும்வகையில் மணவிலக்குக் கோருபவர்; அதற்கான காரணங்களை நிரூபிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணையின்படி மணவிலக்கு கோரும் வழக் குகளைக் கையாள்வதில் மென்மையான போக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலும், கணவன், மனைவி இருவர் தரப்பிலும் சேர்ந்து முடிவு செய்து வேறு வழியே இல்லை, இணைந்து வாழவே முடியாது என்கிற கட்டத்தில்மட்டுமே மணவிலக்கு அளிக்கலாம் என்கிறது. ஆனாலும், நாடாளுமன்றத்தில் இது குறித்து சட்டம் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.

ஆகவே, இணையரில் ஒருவர் மணவிலக்கை எதிர்த்து, சேர்ந்து வாழ விரும்பும் தருவாயில் அவரின் வாழ் வுரிமையை நீதிமன்றம் பரிசீலிக்கும். நீதிமன்றத்தில் அளிக்கப்படும் ஆதாரங் களின்படி வழக்கு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

- பெங்களூரு மிர்ரர், 4-5-2014

Read more: http://viduthalai.in/e-paper/80196.html#ixzz31e87KfuS

தமிழ் ஓவியா said...


பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே! - தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை


பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும், அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே - எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014

Read more: http://viduthalai.in/page-8/80149.html#ixzz31e8udRp7

தமிழ் ஓவியா said...


அரசு கோப்புகள் கன்னடமொழியில் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவேன் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, மே 13- அரசு கோப்பு களில் கன்னட மொழியில் எழுதாமல், ஆங்கிலத்தில் குறிப்பெழுதினால் கையெழுத்து போடமாட்டேன் என்று கருநாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கன்னட வளர்ச்சி ஆணையம் கன்னட மொழி பயன்பாடு பற்றி அறிக்கை தயாரித்து இந்த அறிக்கை கருநாடகா மாநில முதலமைச்சர் சித் தராமையாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு, ஆட்சி மொழி பற்றி பொது மக்களும், அதிகாரிகளும் கொண் டுள்ள எண்ணம் முதல்வர் சித்தராமை யாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆங்கிலம்

கன்னட மொழிக்கு ஆட்சி நிர் வாகத்தில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். எனவே அர சாங்க கோப்புகளில் கன்னட மொழி பயன்படுத்தப்படாவிட்டால் அந்த கோப்புகளை பார்வையிட்டாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட லாம் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதுபற்றி கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கன்னடியர்கள் அல்லாத அதிகாரி கள் அனைவரும் கன்னட மொழி யைக் கற்க வேண்டும் என்றும் கடித தொடர்புகள் கன்னட மொழியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்றும் நான் கூறியுள்ளேன்.

தமிழர்கள்

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த சில கோப்புகள் என்னிடம் வந்தன. நான் அதிகாரிகளை அழைத்து, கோப்புகள் கன்னட மொழியில் இல்லாவிட்டால் நான் அவற்றை திருப்பி அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்தேன். 1980 ஆம் ஆண்டுகளில் கன்னட காவலு சமிதி தொடங்கப்பட்டது. அப்போது முதல், நிர்வாகத்தில் கன் னட மொழியை பயன்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 300-க் கும் மேற்பட்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கு தங்கள் மொழியின் மீது ஒரு பற்றுதல் உள்ளது. நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி னால் அவர்கள் தமிழில் பதிலளிக் கிறார்கள். ஆனால் இங்கு பெங்களூருவில் நிலைமை அப்படியில்லை. நமது மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் நாம் கன்னட மொழி உணர்வை உரு வாக்க வேண்டியது அவசியமாகும். - இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/80163.html#ixzz31e9C9rIS

தமிழ் ஓவியா said...

தஞ்சை வல்லத்தில் பெரியார் பிஞ்சு - பழகு முகாம்:மத போதனைகள் இல்லாது வாழ்வை செம்மைப்படுத்தும் பெரியார் பிஞ்சு அறிவியல் பழகு முகாம்
வெற்றிக்குஉழைத்தஅனைவருக்கும்பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அறிக்கை

தஞ்சை வல்லத்தில் மே 5 முதல் 10 வரை நடைபெற்ற பெரியார் பிஞ்சு பழகு முகாம் பற்றியும், வெற்றிக்காகப் பாடுபட்டவர்களைப் பாராட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தஞ்சை வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணி யம்மைப் பல்கலைக் கழகத்தின் முழு ஆதரவோடு, சென்னை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான பெரியார் அறக்கட்டளை குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மை (Scientific Temper) ஊட்ட நடத்தப் பெறும் பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில், குழந்தைகள் பழகு முகாம் கடந்த மே 5ஆம் தேதி தொடங்கி, 10ஆம் தேதி முடிவுற்றது.

பெற்றோர்களும் பெருமிதம் அடையும் முகாம்!

இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்தப் பழகு முகாமில் பயின்ற இளம் குழந்தைகள் இளைஞர்கள் - வாலிபர்களாகியும் அதை மறக்காததோடு, அதனால் முழுப் பயன் அடைந்து பண்பட்டதை எண்ணி, அவர்களும் அவர்களது பெற்றோர்களும் பெருமிதம் அடைகின்றனர். திருமணங்கள் அவர்களுக்கு நான் நடத்தி வைக்கும் (பலர் உண்டு) வாய்ப்பில் அவர்கள் மிகுந்த மகிழ்ச் சியுடன் நேரில் நன்றி உணர்வுடன் பகிர்ந்து கொண்டனர்!

கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியை டாக்டர் பர்வீன் ஆகியோர் துவக்கம் முதல் இன்று வரை அம்முகாமை நடத்தும் முதன்மையர்கள் ஆவர்.

எதையும் திறம்படச் செய்து - அதே நேரத்தில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாத இயல்புக்குரிய கழகப் பொதுச் செயலாளரும், தலைமை நிலையப் பொறுப்பாளருமான அன்புராஜ் அவர்கள் இதனை கடந்த சில ஆண்டுகளாக மேலும் மெருகேற்றிப் பொலிவு பெற்ற ஒரு அருமையான கூட்டுக் குழுவினராகப் பலரையும் இணைத்து வேலை வாங்கி வெற்றியடையச் செய்கிறார்; திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளரும், சட்டக் கல்லூரி மாணவருமான இளந் தோழர் என்னாரெஸ் பிரின்ஸ் பெரியார் அவர்கள் குழந்தைகளின் குதூகலத் தோழனாக இருந்து, அவர்களை மயக்கிய மாபெரும் தொண்டராகக் காட்சியளிக்கிறார்.

தமிழ் ஓவியா said...

கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள நமது கல்வி நிறுவனக் கண்மணிகள், இருபாலரும், அகமுகமலர்ச்சி யுடன் அயராது செவிலியர்களாக அக்குழந்தைகளுக்கு முகாமில் வழி நடத்திய பாங்கை எளிதில் வருணிக்கவே முடியாது! (ஒத்துழைத்தோர் பட்டியல் 3ஆம் பக்கம் காண்க).

மிகச் சிறப்பாக முகாம் நடத்த உதவிய துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவத் தொண்டறத் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சம் வழியும் பாராட்டுகள்!

வீட்டிற்குச் செல்ல மனமில்லை

209 பேர்கள் - இவ்வாண்டு விடலைகளான வளர் இளம் பிராயத்தினர் அணி ஒன்று, குழந்தைகள் அணி ஒன்று என இரு வகையினருக்கு வாய்ப்பு!

இதில் கழகக் குடும்பத்துக் குழந்தைகள் 106 பேர் தான்! எஞ்சியவர்கள் அவர்களது நண்பர்களோ, அல்லது தங்கள் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு போதிக்கப்படுதலுக்கு இம்முகாம் கை கொடுக்கிறது என்று கேள்விப்பட்டு கொணர்ந்து சேர்த்தவர்கள்!

முதலில் பெற்றோர்கள் முகாமில் விட்டு விடை பெற்ற போது, சிணுங்கிய குழந்தைகள்கூட, பிறகு அய்ந்து நாள் களில் வீட்டிற்குச் செல்ல விருப்பம் அற்றவர்களானார்கள்! என்னே அதிசய மாற்றம்! எந்த குழந்தையும் கெட்ட குழந்தை அல்ல; எந்தக் குழந்தையும் முட்டாள் அல்ல;

வாய்ப்புத் தந்து வகைப்படுத் தும் முறையில் வழிப்படுத்தினால் வாகை சூடும் வீரர் - வீராங்கனைகளாகவே இருப்பர் என்ற உண்மையை பெற்றோர்களுக்கும், மற்றோர்களுக்கும் இந்த வல்லம் பெரியார் பழகு முகாம் தெளிவாக பிரகடனப்படுத்துவதாக அமைந்தது!

திறந்த புத்தகங்கள் ஆக்கினோம்!

பல குழந்தைகளின் மனச் சுமைகளை இறக்கி வைக்க வும்கூட, வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் கலகலப்பாகி, எதனையும் சுமையாகக் கருதாமல், சுவையாகவே கருதி ருசித்து மகிழ்ந்தனர் - அந்த 5 நாள்களில்!

திறந்த புத்தகங்களாக்கினோம்; திறமைகள் தானே வெளிப்பட்டன!

கட்டுப்பாடும் ஒழுங்கும், தானே அவர்களுக்கு வரும் என்பதை காட்டினார்கள். உடல் நலம், உள்ள வளம் - இரண்டும் பேணப்பட அவர்களுக்கு அருமையான வாய்ப்பாகவும் முகாம் அமைந்தது.

பெற்றோர்களுக்கும் இது போன்ற பழகு முகாம் நடத்த வேண்டிய இன்றியமையாமையை குழந்தைகளின் குமுறல்கள் வெளிக் கொணர்ந்தன!

இக்காலக் குழந்தைகளும், பிஞ்சுகளும் பெற்றுள்ள வாய்ப்பு, வயதான நம்மைப் போன்றவர்கள் பெற்றதில்லை; அதை ஏற்க ஏனோ பல பெற்றோர்கள் ஒப்புவதில்லை!

இருபால் மாணவர்களின் தற்கொலைகள்

நேற்றும் இன்றும் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளிவந்து, 90 விழுக்காடு நம் பிள்ளைகள் வெற்றி என்ற மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும் இரண்டு வேதனை பீறிட்ட நிகழ்வுகள்.

அ) 78 - 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற மாணவன் இன்னும் அதிகம், பெற முடியவில்லையே என்று எண்ணி ஓடும் இரயிலிலிருந்து குதித்து செய்து கொண்ட அநியாயமான- தற்கொலை!

ஆ) நல்ல மதிப்பெண் பெற்ற அக்காள் - தங்கை இணை பிரியாதவர்கள். இவர்களில் ஒருவரைத் தான் மேலே படிக்க வைக்க முடியும். மற்றவரைப் படிக்க வைக்க, தனது குடும்பச் சூழல் இடந்தராது என்று யதார்த்தமாகக் கூறிய தந்தை - குடும்பத்தார் வறுமை நிலையை எண்ணி இரண்டு இணைபிரியா சகோதரிகள் தூக்கு மாட்டிக் கொண்டு சாவிலும் இணை பிரியாது இறந்தனர்.

அந்தோ என்னே அறியாமை! படிக்க உதவுவோருக்கு நாட்டில் பஞ்சமா? ஓடோடி உதவும் கரங்களும் ஏராளம் உண்டே! புரியாத பக்குவம் - இளம் பெண்கள் இப்படித் தவ றான முடிவை - உணர்ச்சி வயப்பட்டு எடுத்து விட்டார்களே!

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவசியம் தன்னம்பிக் கையை ஊட்டியும் தோல்வியைக் கூட எதிர் கொள்ளும் பக்குவத்தையும் பாடத்தை விட முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லி கொடுத்து கோழிக் குஞ்சு இதயமுள்ளவர்களை, எஃகு உள்ளம் கொண்டவர்களாக்கி விட வேண்டும்.

மத போதனைகள் பயன்படாது!

மதபோதனைகள் பயன்படாது. வாழ்வியல் தன்னம் பிக்கை பாடங்கள் தான் முக்கியம்!

வெற்றி - தோல்வி - இரண்டையும் சமமாக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தையும் ஆசிரியர்கள் சிறு மழலைப் பருவம் முதலே சொல்லித் தர முன் வருதல் வேண்டும். வெறும் ஏட்டுச் சுரைக்காய் கல்வி, நெட்டுருப் போட்டு வாந்தி எடுத்து மார்க் வாங்கி மார் தட்டும் முறை மாற்றப்படல் வேண்டும்.

இதில் அரசும், கல்வித் துறையும் ஆழ்ந்து இணக்கமாகச் சிந்தித்து ஆக்க பூர்வ திட்டங்களை உருவாக்க முன்வர வேண்டும்.

சென்னை
12.5.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/80091.html#ixzz31e9rZdbm

தமிழ் ஓவியா said...


மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி


முக நூலில் சரவணப்பெருமாள் தெரிவித்துள்ள செய்தி:

வைகோ அவர்களே உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் - பாஜக வுடன் கூட்டணி வைக்கும் முன்பே - உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஆர்.எஸ்.எஸ்.யில் அய்க்கியமாகி - ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டு இருக்கின்றனர் !

உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடி மேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் - ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.

சீலக்கம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவர். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர் களுக்கு - பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAS2enb

தமிழ் ஓவியா said...


மே 12: உலகச் செவிலியர் தினம்


பொது மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலகச் செவிலியர் தினமாக (International Nurses Day) ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினம் கொண்டாட காரணமாக இருந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் லண்டன் நகரில் 1820-ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய வாழ்க் கையைத் துவக்கினார்

அப்போது ருஷ்யா கிரிமியப்போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் காயமுற்று கவனிப்பார் இன்றி இருப் பதைக் கேள்விப்பட்டு போர் நடக்கும் பகுதிக்குச் சென்று காயமுற்ற வீரர்களுக் காக முழுநேர சேவையில் இறங்கினார். காயங்களுக்கு மருந்திடுதல், உடை மாற்றுதல், இருக்கைகளை சரி செய்தல் ஆறுதலான சொற்களைக்கூறுதல் என்று நோயாளிகளுடனேயே முழு நேரத் தையும் செலவிட ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று தொண்டாற்ற தொண்டு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கும் பயிற்சியளித்தார். போர் முடிவுற்ற பிறகு தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பியதும், பிரிட்டன் அரசு இவரின் சேவையைப் பாராட்டி கவுரப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்தின் மகாராணிக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்ற பெண்ணாக மாறினார். அரசும் பல சமூக நிறுவனங்களும் பெருமளவில் பொன்னும் பொருளும் வழங்கினர்.

இவற்றை வைத்துக்கொண்டு தரமான செவிலியர் பயிற்சிப்பள்ளி ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த செவிலியர் பயிற்சிப் பள்ளி இன்று உலகப்புகழ் பெற்ற பிளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

சர்வதேச செவிலியர் கழகம் நைட்டிங் கேல் அம்மையாரின் சேவையை உலகமே போற்றும் வகையில் 1974-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான மே 12 -ஆம் தேதியை சர்வதேச செவி லியர் தினமாக அறிவித்தது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page1/80094.html#ixzz31eArVYzP

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு!

மகாராட்டிர மாநிலம், சோலாப்பூரையடுத்த பந்தர்பூரில் உள்ள 900 ஆண்டுக் கால வித்தோபா கோயிலில் பெண்கள் உட்பட, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் அர்ச்சகராவது தொடர்பான வழக்கில் - இவர்கள் அர்ச்சகர்களாகலாம் என்று உச்சநீதிமன்றம் நல்லதோர் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நீதித்துறை வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய புரட்சிகரமான தீர்ப்பு என்று இதனைக் கூற வேண்டும்.

இது தொடர்பான வழக்கு 40 ஆண்டுகள் நடைபெற்ற தாம். இது குறித்து கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னாடாங்கே கூறியுள்ளதாவது:

நூற்றாண்டுகளாக பார்ப்பனர் களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப் பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சி யாக கோயில் அறக் கட் டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக் கப்பட்டுள்ளது. நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகிய வற்றை அனைத்து ஜாதி யினரும் குறிப்பாக பார்ப் பனர் அல்லாதார் செய்ய வேண்டும் என்று விரும் பினோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கோயிலின் கடவுள் சிலைகளை வித்தோபா மற்றும் உடனுறை தெய்வமாகிய ருக்மணி ஆகியோருக்கு இரண்டிலிருந்து மூன்று சிறப்புப் பூசைகள் செய்வ தற்கும். அதோடு மற்ற கோயில்களில் பூஜைகள், இந்து சமய சடங்குகள் செய்வதற்கும் நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் அர்ச்சகர் களாக பணிபுரிவதற்குத் தேவை என்று எட்டு அர்ச் சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக்கோரி இந்த வாரத்தில் விளம்பரப் படுத்தியிருந்தோம்.

அதன்படி நேர்காணல் முடித்து இந்த மாதம் 18ஆம் தேதி அன்று பணிநியமன ஆணை அளிக் கப்பட உள் ளது. இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமான தும், ஒப்பந்த அடிப்படையில் உள்ளது மாகும். தேர்வு செய்யப்படு பவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் அளிக் கப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்புகூட கேரளாவில் பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்கள் அர்ச்சகர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதுண்டு.

இவ்வளவு இருந்தும் தமிழ்நாட்டில் இந்துக் கோயில் களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்கி வைத்திருப்பது ஏன் என்பது நியாயமான கேள்வியாகும். கோயில் கருவ றைக்குள் நிலை நிறுத்தப்படும் தீண்டா மையை எதிர்க்கும் வகையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் 1970 சனவரி 26 அன்று கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார்.

தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான அரசு, வாரிசுரிமைப்படி அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் ஒன்றை 1971இல் ஒரு மனதாக நிறைவேற்றிக் கொடுத்தது.

அதனை எதிர்த்து 10 பார்ப்பனர்களும்,. இரு மடாதி பதிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஒரு சில சொற்களின் அடிப்படையில் அது முடக்கப்பட்டது. திராவிடர் கழகம் தொடர்ந்து போராடிக் கொண்டு வந்தது.

தமிழ் ஓவியா said...

அதன்பின் 2006 இல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ.கே. ராஜன் தலைமையில் எழுவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் இடஒதுக்கீடு அடிப் படையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டு, அதனடிப்படையில் 206 பேர் பயிற்சியை முடித்து, பணிக்காகக் காத்திருந்த வேளையில், மீண்டும் மதுரைப் பார்ப்பனர்கள் (சிவாச்சாரியார்கள் சங்கம்) உச்சநீதி மன்றத்திற்குச் சென்று தடை வாங்கியுள்ளனர்.

பிராமண ஜாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள், மற்றும் பட்டாச்சாரியார்கள் தவிர, வேறு யாருக்கும் சாமி சிலை யைத் தொட்டு பூசை செய்யும் தகுதி கிடையாது. பூசை களையும், மந்திரங்களையும் கற்றுத் தேர்ந்திருந்தாலும் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக முடியாது. அவர்கள் சாமி சிலையைத் தொட்டால் கோயில் தீட்டாகி விடும்.

அந்தச் சிலையிலிருந்து கடவுள் வெளியேறி விடுவார். இதன் காரணமாக கோயிலுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிவாச்சாரியார்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடையை விதித்துள்ளது. இதன்காரணமாக உரிய பயிற்சி பெற்ற 206 பேர்களும் பணி நியமனம் செய்யப்படாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், இடஒதுக்கீடுதான் ஜாதியைக் காப்பாற்றுகிறது என்று கூப்பாடு போடும் இதே பார்ப்பனர்கள், ஜாதி வேறுபாடின்றி பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் செய்தால் அது கூடாது; பிராமணர்களாகிய நாங்கள் மட்டும் அர்ச்சகராக உரிமை படைத்தவர்கள் என்று அடம் பிடிப்பது யோக்கியமான தன்மை கொண்டது தானா?

யதார்த்தமாகச் சொல்ல வேண்டுமானால், ஜாதி அடிப் படையில் அர்ச்சகர்களாகப் பார்ப்பனர்கள் இருந்து வரு கிறார்களே - இவர்களுக்கு முறையாக ஆகமவிதிகளும், மந்திரங்களும் தெரியுமா? என்ற கேள்வி ஆரோக்கிய மானதாகும். இதுகுறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஏ.கே. ராஜன் அவர்களால் எழுதப்பட்ட கோயில்கள், ஆகமங்கள், மாற்றங்கள் எனும் நூலின் 75ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சென்னை கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணா சலேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் போன்ற கோயில்களில்கூட பணிபுரியும் அர்ச்சகர்களில் மிகச் சிலரே அனைத் துப் பூசை முறைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கபாலீசுவரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகமவிதிகள் தெரிந்துள்ளனர். மற்றவர்களுக்கு அஷ்டோத்திரம், குறிப்பாக சில மந்திரங்கள், நாமாவளிகள் மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்களே, இதற்கு நாணயமான பதில் உண்டா?

சோலாப்பூர் - பந்தர்பூர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையின் வெளிச் சத்தில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தமிழக அரசின் அர்ச்சகர் சட்ட வழக்கின் மீதான தீர்ப்பை நாடே எதிர்ப்பார்க்கிறது.

Read more: http://viduthalai.in/page1/80092.html#ixzz31eAzY6Mf

தமிழ் ஓவியா said...


நாத்திகராக வேண்டும்

மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.

(விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page1/80093.html#ixzz31eB8dHHH

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டர் ஆயக்காரன் புலம் க.சுந்தரம் அவர்களின் இறுதிப் பயணம்


திருத்துறைப்பூண்டி, மே 12- திராவிடர் கழகத்தின் அடிநாள் உறுப்பினராக, திருத்துறைப்பூண்டி வட்ட திராவிடர் கழகத் தலைவர், நாகை மாவட்ட துணைத் தலைவர், கழக மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் என்கிற நிலைகளில் அங்கம் வகித்து, ஆயக்காரன்புலம் முதல் சேத்தி ஊராட்சி மன்றத் தலைவராக இரண்டு முறை பத்து ஆண்டுகள் பணியாற்றியவரும் முன்னாள் ராணுவ வீரருமாகிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் 4.5.2014 அன்று இயற்கை எய்தினார்.

சுயமரியாதை இயக்கதின் மூலசித்தாந்தமான கடவுள் மறுப்புக் கொள்கையில் தமது 104-ஆம் வயதிலும் உறுதியாய் நின்று ஒப்புயர்வற்ற சுயமரியாதை வீரராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். காலையிலிருந்து பொதுமக்கள் சாரைசாரையாக வந்து மரியாதை செலுத்திய வண்ண மிருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அணிஅணியாக வரிசையில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். எவ்வித மூடச்சடங்குகளுமின்றி, எப்போதும் அணியும் கருஞ்சட்டையோடு கழகக்கொடி போர்த்தப் பட்டு கண்ணாடிப் பெட்டிக்குள் மீளாத் துயில் கொண் டிருந்தார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் காலம் வரை ஒரே கொள்கை ஒரே தலைமை என்று நிலையாய் நின்று, எவ்வித சபலங் களுக்கும் ஆளாகாமல் பெரியாரைப் பேசா நாளெல்லாம் பிறவா நாளே என்று தன் கதையை முடித்துக்கொண்டார்.

கழகம் நடத்திய அனைத்து போரட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை ஏகியவர். தேசியக் கொடி எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, பிராமணாள் கபே மறியல், மனுதர்ம நகல் எரிப்பு, காவிரி நீர் பிரச்சினை, ரயில் நிலையத்தில் தார்பூசி இந்தி அழிப்பு, நீதிபதி பொம்மை எரிப்பு போன்ற போர்களில் கலந்து கொண்டு சிறைவாசம் செய்தவர். போரட்டம் என்ற உடனே போர்வை, படுக்கை, கொடிக்கம்பு சகிதமாய் கைதுக்குத் தயாராய் கிளம்பி விடுவார்.

பெரியார் மேளாவுக்கு டில்லிக்குப் பயணமான போது குடும்பத்திலுள்ளோர், தள்ளாத வயதில் நீங்கள் இப்படிப் போகலாமா என்றபோது, அதற்கு இவர் நான் போறபடி போறேன், இருக்கிற நீங்கள் பத்திரமாக இருங்கள்! என்று நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். (மேற்கண்ட இந்த தகவலை 28.2.2014 திருத்துறைப் பூண்டியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்ட வாசலில், பெரியார் உலகத்திற்கு ரூ. 25,000/- நிதி வழங்கி ஆசிரியரிடம் சொல்லிச் சிரித்தார்!) எந்த நிலையிலும் நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர். கவலை, பயம் இவை இரண்டும் இவரிடம் அண்டியதில்லை.

1948-ஆம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி மாநில மாநாட்டை தன் வாழ்நாளில் மறக்க முடியாத மாநாடாக வியந்து பேசுவார். அப்படிப்பட்ட மாநாட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்பார்.

வந்த பேச்சாளருக்கு உடம்புக்கு சுகமில்லை என்பதை அவர் வந்து இறங்கிய போதே நான் உணர்ந்து கொண்டேன். உணவு உண்ண எவ்வளவு வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார். கூட்டம் தொடங்கிவிட்டது. பேச்சைக் கேட்பதற்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசினார். கையை நீட்டி நீட்டி ஆவேசமாகப் பேசியதைப் பார்த்து எனக்கு அதிசயமாக இருந்தது. அதே நேரத்தில் கவலையாகவும் இருந்தது.

கூட்டத்திலிருந்தோர் பகுத்தறிவுச் சிறுவனின் பேச்சால் சொக்கிப்போனார்கள். கை கொட்டி ஆர்ப்பரித்தார்கள். கூட்டம் முடிந்தது. கூட்டம் கேட்டோருக்கு எவ்வித கவலையும் இல்லாமல் அவனவன் பிரியத்துக்கு கும்பல்கும்பலாய் நின்று கொண்டு பேசிய பேச்சு பற்றியே - அதைக் குறித்து பேசினாரே இதைக்குறித்து பேசினாரே என்று பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர வந்த பேச்சாளருக்கு என்ன செய்கிறது என்று எவனும் கேட்கவில்லை.

தமிழர் தலைவர் மீது அய்யா சுந்தரம் கொண்டிருந்த அன்பு, நம்பிக்கை, மரியாதை என்பது எல்லையற்றது. தமிழர் தலைவரால் அன்பொழுக அண்ணன் சுந்தரம் என்று விளித்துச்சொல்லும் பேற்றினைப் பெற்ற சீலர் இவர்!

தமிழ் ஓவியா said...

சிறியவர் முதல் பெரியவர் வரை பாகுபாடின்றி மரியாதையோடு பழகியவிதத்தால் அனைவரையும் கவர்ந்தார். சர்தார் வேதரத்தினம் பிள்ளை, நெடும்பலம் என்.ஆர்.சாமியப்ப முதலியார், கருப்பம்புலம் பி.வெங் கடாசலத்தேவர் போன்ற பெரிய மனிதர்களோடு நெருங்கிய நட்பு கொண்டவராகத் திகழ்ந்தார்.

ஜவுளித் தொழில், மளிகை மண்டி, மிளகாய் மண்டி, புகையிலை வணிகம் என பலதரப்பட்ட தொழிலை வெற்றிகரமாகச் செய்து நாணயமான வியாபாரி எனப் பெயரெடுத்தார்.

அய்யா சுந்தரம் அவர்களுக்கு அன்பழகன், சம்பத் என்று இரண்டு மகன்கள் மற்றும் கண்ணகி, விமலா என இரண்டு மகள்கள், பெயரன் - பெயர்த்திகள் என பெரிய குடும்பமாய் நிறைந்த செல்வமும் உயரிய கல்வியும் பெற்று சிறந்து விளங்குகிறார்கள்.

மாலை 5 மணிக்கு கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் கி.முருகையன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் அவர்கள் அனுப்பியிருந்த இரங்கல் அறிக்கையை கவிஞர் அவர்கள் வாசித்து தனது இரங்கல் உரையைத் தொடங்கினார்.

ஆசிரியரின் அறிக்கையைக்கேட்ட கூட்டத்திலிருந்தோர் கண்களில் கண்ணீர் கசிந்து வடிந்ததைக் காணமுடிந்தது. ஆயக்காரன் புலத்தின் ஆலமரம் சாய்ந்ததே என்னும் அறிக்கை இரங்கல் இலக்கியமாய் நன்றியோடு வார்த்து வடிக்கப்பட்டது. கழகத் துணைத் தலைவர் ரத்தின சுருக்கமாய் சுந்தரம் இயக்கத்திற்கு ஆற்றிய அருந்தொண் டினை எடுத்துரைத்து வீரவணக்கத்தினை செலுத்தினார். இரண்டு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

தலைமைக் கழகம் சார்பில் வருகை தந்தோர்; துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜகிரி கோ.தங்கராசு, பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், திருச்சி கல்விவளாக ஒருங்கிணைப்பாளர் ப.சுப்பிரம ணியம், மாநில விவசாய அணிச்செயலாளர் குடவாசல் கணபதி, தலைமை நிலைய சொற்பொழிவாளர் இராம. அன்பழகன்,

அதிரடி அன்பழகன், திருவாரூர் மண்டலத் தலைவர் ராயபுரம் கோபால், மண்டல செயலாளர் க.முனியாண்டி, பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் அத்திவெட்டி வீரையன், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் புலவஞ்சி ராமையன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.எஸ். எம்.கே.அருண்காந்தி, நகரத் தலைவர் மனோகரன், பெரியார் பெருந்தொண்டர் பொன்.இராமையா, திருநெய்ப்பேர் கோவிந்தராசு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்டச் செயலாளர் சிவானந்தம், திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் ராயநல்லூர் பொன்முடி, மாவட்ட துணைத்தலைவர், இராசி.கதிரவன்,

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தலைவர் சித்தார்த்தன், நகரத் தலைவர் குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் சு.கிருட்டிணமூர்த்தி, பெரியார் பெருந்தொண்டர்கள், கோடியக்கரை வீர.சுப்பிரமணியம், கச்சனம் ஆத்மநாதன், மருதூர் ந.இராமையன், முருகானந்தம், நகரச்செயலாளர் பா.நாகராசன், கீழையூர் ஒன்றியத் தலைவர் ரெங்கநாதன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ப.க. தலைவர் புயல்குமார் ப.க. அமைப்பாளர் பஞ்சாபகேசன், பொதுக் குழு உறுப்பினர்கள் இரா.ச.சீனிவாசன், சி.இராமசாமி, தேத்தாகுடி இராசேந்திரன், ஓட்டுநர் முருகாநந்தம், இளைஞரணி ஒன்றியத் தலைவர் அழகிரி, அண்டர் காடுசேகர், குப்புசாமி, வினோத், பன்னீர், கோ.சு.மணி, ப.க.துணைத்தலைவர் எஸ்.எஸ்.ஆசைத்தம்பி, விளக்குடி தமிழ்ச்செல்வன், ப.க மாவட்ட துணைச்செயலாளர் சொ.மாறன், ஒன்றிய ப.க.தலைவர் கவிஞர் சி.முத்துசாமி, அரங்கசாமி, ச.நடராசன், பெரியார் பெருந்தொண்டர்கள் சா.சிங்காரவேலு, சோமு டெய்லர்.

தொழிலதிபர் திருவாரூர் ஏ.கே.எம்.காசிநாதன், இலக்கிய ஆர்வலர் மா.சோமநாதன், தொழிலதிபர் ந.அரிகிருட்டிணன், மூத்த வழக்கறிஞர் அரசு, பொறியாளர் திருவாரூர் அறவாழி, முன்னாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் கருப்பம்புலம் பி.வி.குழந்தைவேல், வேதை சட்டமன்ற உறுப்பினர் என்.வி.காமராஜ், வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் மலர்க்கொடி நமசிவாயம், வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் மா.முத்துராமலிங்கம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மா.மீனாட்சி சுந்தரம், எஸ்.கே.வேதரத்தினம், திமுக மாவட்ட அவைத் தலைவர் ச.குமரவேல், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சி.சாகுல்அமீது, திமுக நகரச்செயலாளர் மா.மீ.புகழேந்தி, மாவட்டப் பிரதிநிதி இரா.துரைராசு.

பி.வி.ஆர். குடும்பத்தின் சார்பாக மேலாளர் கருப்பம் புலம் முருகையன் மற்றும் ஏராளமான பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page1/80142.html#ixzz31eBNfk6I

தமிழ் ஓவியா said...தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் கேரட்

கேரட்டில் உள்ள ஏ' வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு களை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானமாகும். எலும்புகள் உறுதியாகும்.

முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக வோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCVNkc1

தமிழ் ஓவியா said...

கோடை வெப்பத்தை தணிக்க உதவும் இளநீர்

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர் கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4 கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் தாதுஉப்புகள் மிக அதிக அளவிலும், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் மிக குறைந்த அளவிலும் காணப்படும்.

இளம் குரும்பைகளில் இளநீர் சர்க்கரை வகைகளில் குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சத்துகள் காணப்படு கின்றன. தேங்காய் முதிர்ச்சி அடையும் போது இந்த சத்துகள் குறைகின்றன. 6 மாத வயதுடைய தென்னை இளநீரில் 4.6 சதவீதம் சர்க்கரையும், முற்றிலும் முற்றிய தேங்காயில் 2 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. இளநீரில் உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், மக்னீசியம், குளோரின் போன்றவை உள்ளன.

அதில் பொட்டாசியம் மற்றும் தாதுஉப்புகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீர் அதிக அளவு சீராக வெளியேற உதவுகிறது. புரதத்தின் அளவு தேங்காய் முதிர்ச்சி அடையும் போது அதிகமாகிறது. இளநீரில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், அர்ஜினைன், அலனைன், சிஸ்டைன், செரின் அதிக அளவில் காணப்படுகிறது. இவை பசும்பாலில் உள்ளதைவிட அதிகம் ஆகும். இளநீரில் புரதத்தின் அளவு 0.13 சதவீதம், முதிர்ச்சி அடைந்த தேங்காய் நீரில் புரதம் 0.29 சதவீதம் உள்ளது. 8 மாத தேங்காய் பருப்பில் 6.3 சதவீதம் புரதசத்து உள்ளது.

செரிமான கோளாறுகளில் அவதியுறும் சிறு குழந்தை களுக்கு இளநீர் கைகண்ட மருந்தாகும். உடலில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் அதிகம் இளநீரில் உள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை ஆகியவற்றால் ஏற்படும் அரிப்புக்கு நல்ல மருந்து. காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம். குடலில் உள்ள புழுக்களை அழிக்கிறது. சிறுநீரக நோய்களை கட்டுப் படுத்துகிறது. முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல ஊட்டசத்து மிக்க பானமாகும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCcixm6

தமிழ் ஓவியா said...


குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


வேர்களுக்கு பழுது ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர் சித்தார்த்தன்

குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


தஞ்சை, மே 12- தஞ்சை மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் கனல் கவிஞர் துரை.சித்தார்த்தன் எழுதி தோன்றும் வெளிச்சத்தின் விழுதுகள் என்றும் உன்னோடு ஆகிய கவிதை குறுந் தகடுகள் வெளியீட்டு விழா 10.5.2014 அன்று மாலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. உரத்தநாடு மாணவி ஜெயசிறீ வரவேற்பு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் உரையாற்றினார் குறுந்தகடுகளை அறிமுகம் செய்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி உரத்தநாடு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.காந்தி, தஞ்சை நகர் மன்ற முன்னால் உறுப்பினர் இரா.ஜெயபால் வெற்றித் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் இரா.செழி யன், முத்தமிழ் முற்றம் நிறுவனர் ந.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் முனைவர் சி.செந்தமிழ்குமார், பேராசிரியர் திலீப்குமார், மண்டலத்தலைவர் வெ.ஜெய ராமன். மாநில ப.க பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத்தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், அமெரிக்கா டெக்ஸ்சஸ் பல்கலைக் கழக பேராசிரியர் பெரியார் பண்ணாட்டு மய்ய தலைவர் இலக்குவன் தமிழ், தஞ்சை பாரதி கல்வி குழுமச்செய லாளர் புனிதா கணேசன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துச் செய்தியை கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் படித்தார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறுந்தகடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கவிஞர் துரை.சித்தார்த்தன் மிகவும் துடிப்பும் உணர்ச் சியும் மிகுந்தவர் அவரின் படைப்பில் வெளிவந்துள்ள கவிதை குறுந்தகடுகளை இன்று பார்த்து மகிழ்ந்தேன். அவர் தோன்றி கவிதை பாடும் விதத்தை படக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அவர் ஒரு நெருப்பு கவிஞர், அவரோடு ஈடுகொடுத்து வாழ்க்கை நடத்தும் அவரது துணைவியார் மகேஸ்வரியைத்தான் அதிகம் பாராட்ட வேண்டும் இந்த ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத் தாலும் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் இருந்தபொழுது அவரது இல்லம் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தேன். தற்பொழுது நல்ல உடல் நலம் பெற்று இந்த குறுந்தகடுகள் வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். இந்த அளவிற்கு அவரை பாதுகாத்து உயர்த்தியுள்ள அவரது துணைவியார். மகேஸ்வரியைத்தான் பாராட்ட வேண் டும்.

கவிஞர் சித்தார்த்தன் அவர்கள் என்றும் உன்னோடு என்ற குறுந்தகடில் அவர் பல துறைகளை காதல், வீரம், கடமை என பல இருந்தாலும் கடைசியில் என்றும் உன்னோடு என்று, என்னுடன் எப்பொழும் இருப்பார் என்று உணர்த்தியுள்ளார். நமக்கெல்லாம் தலைவர் பெரியார் ஒருவர் தான். பெரியாருக்கு தொண்டர் சித் தார்த்தன் நாம் எப்பொழுதும் பெரியாரோடு இருப் போம். வெளிச்சத்தின் விழுதுகள் குறுந்தகடில் பெரிதும் என்னைப்பற்றி எழுதியுள்ளார் ஒரு மனிதனுக்கு பெரிய தண்டனை பாராட்டை கேட்டுக்கொண்டு இருப்பது தான். கவிஞர் துரை சித்தார்த்தன் வேருக்குப் பழுது ஏற்படுத்த, வேரையே சாய்க்க நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர். அவர் நல்ல உடல் நலத் துடன் வாழ்ந்து சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும் என மேலும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80101.html#ixzz31eCufnln

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு

புதுடில்லி, மே 14- ஆண், பெண் அல்லாத மாற்றுப் பாலினத்தவரை மூன் றாம் பாலினத்தவர் என்று அங்கீகரித்து இந்தியக் குடிமக்களுக்குரிய, அரச மைப்பு வழங்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப் பட வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பிற் படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் மூன்றாம் பாலினத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மத்தியஅரசு மற்றும் மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள் ளிட்ட அனைத்து உரிமை களும் இதர பிற்படுத்தப் பட்டோருக்குரிய ஒதுக் கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் சார்பில் கூறப்படுவதா வது: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மத்திய அரசுக்கு மூன்றாம் பாலி னத்தவரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலுக் குள் சேர்த்துக்கொள்ள தீர் மானம் நிறைவேற்றி உள் ளோம்.

பிறப்பில் எந்த வகுப்பினராக இருந்தா லும் இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக் குள் கொண்டு வரப்படு வார்கள். அனைத்து மூன் றாம் பாலினத்தவர்களும் இதர பிற்படுத்தப்பட் டோர் பெறும் அனைத்து உரிமை களையும் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவை அமைச்சரவை கூடி எடுக்கும். மூன்றாம் பாலினத் தவர் தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டிய லில் உள்ளபடி 23,019பேர் மற்றவர்கள் பட்டிய லில் பதிவாகி உள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் எந்த ஒரு வகுப்பையும் இணைப் பதற்கான ஆலோச னையை அரசுக்கு ஆணை யம் வழங்கிவருகிறது. அதனால், மத்திய சமூக நீதி மற்றும் நிர்வாகத் துறையின்கீழ் செயல் படும் ஆணையத்துக்கு துறைரீதியாக உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட் டுதலின்படி ஆணையத் தின் பரிந்துரையைக் கோரி கடிதத்தை அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று இந்தியக் குடிமக்களுக்கு அரசமைப்பு வழங்கும் உரிமைகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஹிஜ் ராக்கள், யூனுச்சுகள், கோத் திகள், அரவாணிகள், ஜோகப் பாக்கள், சிவசக்திகள் என்று பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டு வருபவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்குரிய உரி மைகளைப் பெறுவார்கள் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80212.html#ixzz31kKvtU8c

தமிழ் ஓவியா said...


நரகம் ஒரு சூழ்ச்சி


நரகம் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி; மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள,- அறிவாராய்ச்சியைத் தடை செய்து தமது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள, சூழ்ச்சிக்காரர்கள் செய்த ஒரு தந்திரம்.

- (விடுதலை, 29.2.1948)

Read more: http://viduthalai.in/page-2/80215.html#ixzz31kL7ze4d

தமிழ் ஓவியா said...


பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

- குடந்தை கருணா

கருத்துக்கணிப்போ, திணிப்போ? எதுவாக வேண்டுமானாலும் இருக் கட்டும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஊடகங் களின் முடிவுகள் ஒன்றை தெளிவு படுத்தி உள்ளன. அது என்ன?

பாஜக அணியை உருவாக்கிய தும், அதில் இணைந்த கட்சிகள், பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக என எல்லா காக்காக் களும் ஒரே விஷயத்தை ஊர் தோறும் கரைந்தன. அது என்ன?

அதாவது, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளையும் அப்புறப்படுத்துவ தற்காக இந்தக் கூட்டணி அமைத்த தாகக்கூறினார்கள். மோடி அலை வேறு தமிழ்நாட்டில் வீசுவதாக சொன்னார்கள். மோடி டீக்கடை, சோப்புக்கடை, மீன் கடை இதெல் லாம் வேறு ஆரம்பித்தார்கள். இல.கணேசய்யரையே மீன் விற்க விட்டார்கள் என்றால் பாருங் களேன்.

இப்போது, இந்த ஊடகங்கள் தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு நான்கு அல்லது அய்ந்து இடங் களுக்குமேல் தேறாது என கணித் துள்ளார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? மீதம் உள்ள 35 இடங்களிலும், திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதுதானே!

ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளைத் தாண்டி அரசியல் கிடையாது என்பதைத் தான் இந்தக் கருத்துக் கணிப்பு களோ, திணிப்புகளோ சொல்ல வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளிடமும், நாளை ஆதரவு கேட்டு மோடி கூட் டம் வராது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? என்பதை, பாஜகவில் உள்ள, மதிமுக, தேமுதிக, பாமக, கொமுக கூற வேண்டும். சொல்வார்களா? பார்ப்போம் இவர்களது போக்கை மே 16-க்குப் பிறகு?

Read more: http://viduthalai.in/page-2/80223.html#ixzz31kLH2XIj

தமிழ் ஓவியா said...

அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே
ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு
ஆதரவு தருவதுபற்றி யோசிக்கும் மாநிலக் கட்சித் தலைவர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் எச்சரிக்கை அறிக்கை

ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படு கின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத் துவத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.

மதயானை வரும் பின்னே!

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பழைய (பழ) மொழி!

மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணை களின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே என்பது புதிய அரசியல் மொழியாகும்!

இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் முதற் பக் கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக் களைத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன:

எம்.ஜி. வைத்யா கூறுகிறார்

“Modi Must deliver on Ram Temple: - RSS Leader
M.G. Vaidya wants progress on Article 370, Uniform Civil Code”

இந்துவில் வந்த படமும் வெளி வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தி யாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; ஏற்படும் என்று எண்ணுகிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா? அந்த பதில்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியுள்ளார்.

நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்

அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர். எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும்பற்றிய மணியோசைகள் ஆகும்!

நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்து

இதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து.

“They [Sangh Parivar] may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if Modi budges under this pressure. But the dangers of a communal flare-up will always be there now,” ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்;

இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல் பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும் என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரான பேராசிரியர்).

எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா?

மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு...

இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி, வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்!

யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொறிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த இணையத்து தீராத விளையாட்டு விட லைகளே, காலந் தாழ்ந்தாவது வளர்ச்சி என்ற மயக்க பிஸ்கெட் பற்றிப் புரிந்து வருந்துங்கள்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - குறள் (435)

சென்னை
15.5.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/80313.html#ixzz31pwqO3ek

தமிழ் ஓவியா said...

அடடே, என்னே ஞானோதயம்!

தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!

Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1

தமிழ் ஓவியா said...


புத்தரின் போதனைகளின்படி அரசு ஆட்சி புரிகிறதா? : இலங்கை வடக்கு மாகாண உறுப்பினர் கேள்வி


நல்லூர், மே 15- வடக்கின் சோகங்களை அனுசரிக்க விடாமல், அரசு தமது வெற்றியை, கட்டா யத்துடன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித் துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், நல்லூர் தெற்கு சன சமூக நிலை யத்தின் 65ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். விழா யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலை மையில் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இன்று சிங்கள பவுத்தர் களின் புனித நாள். அமை தியாக தர்ம சிந்தனை களோடு வாழும் வழி முறையை உலகிற்கு வழங் கியதில் பவுத்தத்திற்கு முக் கிய இடம் உண்டு.

ஆனால். அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள் ளும் ஆட்சியாளர்கள் எவ் வாறு நடந்து வந்திருக்கின் றார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டு கொண்டி ருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உண்மை யான பவுத்த சிந்தனைகளு டன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.

பவுத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல் லும் ஆட்சியாளர்கள் செய் யும் அக்கிரமங்களைப் பார்த்து தானாகவே வெட் கித் தலைகுனிந்திருப்பார்.

இந்த மே மாதம் பவுத் தர்களுக்கு எவ்வாறு முக்கி யத்துவமானதோ, புனித மானதோ, அவ்வாறே தமி ழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வு பூர்வமானதுமான மாதமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான வலி சுமந்த வாரமாகும். கடந்த இறுதிப் போரிலே இலட்சக்கணக் கில், கடற்கரை ஓரத்தில் மக்கள் கொன்று குவிக்கப் பட்டதொரு மாதமாகும்.

அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி, அர சாங்கம் அவர்களை அச் சுறுத்தி வருவதுடன், தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை முழக்கங்களு டன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக் களையும் அதைக் கொண் டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.

இந்த விடயமானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு நிலை யாகும். இது பவுத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர். மோகனதாஸ், யாழ். பல் கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம். இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80307.html#ixzz31pxFVWUn

தமிழ் ஓவியா said...


பாலாபிஷேகம் ஒரு கேடா?


சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/80316.html#ixzz31pxjVNAZ

தமிழ் ஓவியா said...


கடவுள் ச(ப)க்தியின் பலன் இவ்வளவுதான்!


ஏழுமலையானனை தரிசித்த நீதிபதி விபத்தில் பலி!

திருப்பதி, மே. 15-கர்நாடக மாநிலம் பெல் லாரியைச் சேர்ந்தவர் ருத் ரமணி (45). மைசூரு மாவட்ட நீதிபதியாக இருந் தார். இவர் குடும்பத்துடன் திருப்பதி வந்தார். ஏழு மலையானை தரிசிக்க பாதயாத்திரையாக அலிபிரி வழியாக நடந்து சென்றனர்.

திருமலை நுழைவு வாயில் அருகே சாலையை கடந்தார். அப்போது திரு மலையில் இருந்து திருப் பதி வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருத்ரமணி கீழ் திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந் தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கிரிவலம் சென்ற பொறியியல் மாணவர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை, மே.15- சித்ரா பவுர்ண மியை யொட்டி திருவண் ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரி வலம் சென்றனர். சென்னை தனியார் பொறியியல் கல் லூரி மாணவர் அங்கப்பன் (எ) விக்னேஷ் (வயது 22). திருவண்ணாமலையை சேர்ந்த தனது கல்லூரி நண்பர் பூர்ண சந்திரன் மற்றும் நண்பர்கள் 6 பேர் உடன் கிரிவலம் வந்தார்.

இரவு 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கிப் பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப் போது சூறைகாற்றுடன் மழை பெய்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விளம் பரப் பதாகை ஒன்று திடீ ரென முறிந்து அங்கப்பன் மீது விழுந்தது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்தும் மாணவர்கள் கிரிவலம் வந் தனர். அண்ணா நுழைவு வாயில் அருகே வந்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்து முகாமில் சிகிச்சை பெறுவதற்காக அங்கப்பன் சென்றார். அவ ருடன் நண்பர்கள் பூரண சந்திரன், சிதம்பரத்தை சேர்ந்த ராகுல் பிரசாத் உடன் சென்றனர்.

அப்போது அங்கு போடப்பட்டிருந்த டியூப் லைட் மின்சார ஓயர் மீது அங்கப்பனின் கை உரசி யது. இதில் அவரை மின் சாரம் தாக்கியது. தூக்கி யெறியப் பட்ட அங்கப்பன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். காப் பாற்ற முயன்ற நண்பர்கள் பூரண சந்திரன், ராகுல்பிர சாத் படுகாயம் அடைந்த னர். அவர்கள் 2 பேரும் அரசு மருத்தும னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. அங்கப் ப னின் சொந்த ஊர் திருநெல் வேலி மாவட்டம், சுத்தமல்லி. மாணவர் இறந்த தகவல் அவரது தந்தை சாமிஜி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திரு வண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pz7WIpL

தமிழ் ஓவியா said...

எப்படி உருவானது ஸ்டெதாஸ் கோப்?

1816இல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும்.

ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளை யாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.

இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனை யைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.

இதை அடிப்படையாக வைத்து 1819 இல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843 இல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.

Read more: http://viduthalai.in/page-7/80276.html#ixzz31pzeITeg