Search This Blog

27.5.14

விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும்!

திருவாரூர்: திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் - 26.5.2014
தீர்மானம் 1:
நாகை மாவட்டச் செயலாளர் கு.சிவானந்தம் 

விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும்

விவசாயம் என்பது ஒரு தொழிலாக வரன்முறை செய்யப்படவேண்டும் என்று நீண்ட காலமாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வந்தும், இதுவரை எந்த அரசுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. விவசாயம் என்பது வருணாசிரமப்படி பஞ்சமர்கள், சூத்திரர்கள் செய்யும் பாவத் தொழில் என்கிற ஆதிக்க மனப்பான்மை தகர்த்தெறியப்பட்டு, விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரித்து அத்தொழி லுக்குரிய அனைத்து மட்டத்திலான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு அங்கீகாரம் வழங்கிடவேண்டும் என்று இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2:

மண்டலச் செயலாளர் ஆசிரியர் முனியாண்டி
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக....

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பரிந்துரை செய்யப் பட்ட நடுவர் குழு மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டும் நெறிமுறைகளின் படியும் இந்திய அரசிதழில் வெளி வந்தும், கருநாடக அரசு பிடிவாதம் செய்வதற்கு இம் மாநாடு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், பரிந்துரை செய்யப்பட்ட நீர் வெளியேற்ற அளவுகளைக் கண்காணிக்கவும், நடைமுறைப்படுத்த வும் இரு மாநில விவசாயிகள் மற்றும் இரு மாநில அரசு அலுவலர்கள் குழு ஏற்படுத்தியும், அந்தக் குழு நேர்மையாக செயல்பட தேவைப்பட்டால், கிருஷ்ண ராஜசாகர் அணையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, மத்திய காவல்துறையைப் பயன்படுத்தி நீர்ப் பங்கீட்டை ஒழுங்குபடுத்திட, மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ்

நீர் சேமிப்பு

நீர் சேமிப்பு ஆதாரங்களான குளம், குட்டை, ஏரி ஆகியவைகளில் ஏற்பட்டிருக்கும் நீர் தடுப்பு ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றியும், அவைகளைத் தூர்வாரி பராமரிக்கும் பொறுப்பினை அந்தந்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள பயன்படுவோர் அனைவரையும் ஒருங்கிணைத்து, குழு அமைத்து, அந்தக் குழுவிடமே பொறுப்புகளை எவ்விதத் தலையீடும் இன்றி ஒப்படைத்து உரிய துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் கி.முருகையன்
விவசாயிகளுக்கான இழப்பீடு!

அரசால் அறிவிக்கப்படும் பயிர் பாதுகாப்பீட்டுத் தொகை மற்றும் பயிர் இழப்பீட்டிற்கான தொகை நிவாரணம் தொடர்புடைய விவசாயிகளுக்கு உரிய காலத்தில் சென்றடையும் காலதாமதத்தைத் தவிர்த்திட, கிராம விவசாயிகள் குழு அமைத்து, மகளிர் குழுக்களைப் போல், அவர்கள்மூலமே வேளாண் துறை அதிகாரிகளின் தணிக்கை மற்றும் மேற்பார்வையில் உரிய காலத்தில் பாரபட்சமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5(அ):

தஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய்யனார்
மானியங்கள் ஒதுக்கீடு விவசாயிகளுக்கு முறையாக சென்றடையவேண்டும்

வேளாண் துறை மூலம் விவசாயக் கருவிகள், விவசாய இடுபொருள்கள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நோய்த் தடுப்பான்கள், விதைகள் இவைகளை விவசாயிகளுக்கு மானியங் களாக எந்தெந்த வகையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை முறையாக விளம்பரப்படுத்தப்படாமல், அந்த மானியங்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விலை போகும் அவலத்தைத் தடுத்திட ஒவ்வொரு ஊராட் சியிலும் என்னவிதமான மானியங்கள் வழங்கப்படு கிறது என்பதை விவசாயிகள் தகவல் பலகை அமைத்து அந்தந்த வேளாண்மைத் துறை விரிவாக்கப் பணியா ளர்கள் தெரிவிப்பதுடன், முன்னணி விவசாயிகள் மற்றும் சாதாரண விவசாயிகளுக்கு மேற்காணும் அறிவிப்பு சென்றடைந்துவிட்டது என்பதற்கு, அவர் களின் ஒப்புதலைப் பெற்று அறிக்கை அளித்திடவும், மானியங்கள் குறித்து அனைத்து விவரங்களும் எல்லா விவசாயிகளும் அறியும் வண்ணம் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5(ஆ):

பட்டுக்கோட்ட மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்

அரசியல் கட்சிக் கண்ணோட்டமின்றி உதவித் தொகைகள் - நிவாரணங்கள் வழங்கப்படுதல் அவசியம்

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள், நிவாரணங்கள், வீட்டு மனைகள் வழங்குதல் உள்ளிட்ட அரசின் உதவிகள் கட்சிப் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்குப் போய்ச் சேருவதை உறுதி செய்யவேண்டும்; இப்பிரச்சி னயில் ஆளும் கட்சிக் கண்ணோட்டத்துடன் செயல் கள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.

வெளிப்படையான செயல்பாடுகளாக (டிரான்ஸ் பரன்சி) அமையும் வகையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

மண்டல மகளிரணிச் செயலாளர் தோ.செந்தமிழ்ச்செல்வி

பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைந்திடவேண்டும்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளைக் களைந்திட அவர்களே கூச்சமின்றி தங்கள் குறைகளை வெளிப்படுத்திட பெண்களையே அதிகாரிகளாக அமைந்த ஒரு புகார் ஏற்பு மய்யத்தை, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நிறுவி, அவர்களின் குறைகளைக் களைய காவல்துறை உதவியோடு நடவடிக்கை எடுக்க ஒரு தனி அமைப்பை உருவாக்கிட தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7:

குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி

விவசாயம் சார்ந்த ஆடு, மாடுகள் பராமரிப்பு
விவசாயம் சார்ந்த ஆடு, மாடுகள் வளர்ப்புக்காக அரசு இலவசமாக வழங்கியது என்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் ஆடு, மாடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சி அளவில் ஒரு பதிவேடு பராமரிப்பதுடன், கால்நடை களுக்கு ஏற்படும் நோய்கள்பற்றி உடனடியாக புகார் செய்திட, ஒரு புகார் பதிவேட்டை ஊராட்சி அளவில் பராமரித்திடவும், அந்தப் பதிவேட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட உரிய கால்நடை மருத்துவர் களுக்கு ஆணை வழங்கிடவேண்டும், கோமாரி நோய் போன்ற கொடுமையான தாக்குதல்கள் நேரும்போது, நோய்கள் ஏற்படாத பிற பகுதிகளில் பணிபுரியும் மருத்து வர்களை வரவழைத்து, போர்க்கால அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டு, விவசாயிகளின் துணைத் தொழிலான கால்நடை பராமரிப்பை பால்வளம் பெருக செம்மைப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத் துகிறது.

தீர்மானம் 8:

மாவட்ட இளைஞரணித் தலைவர் இராச.முருகையன்

முல்லைப் பெரியாறு - தாமதமின்றி நடவடிக்கை
முல்லைப் பெரியாறு நீர்மட்டம் தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு, அதைக் காலந்தாழ்த்தாமல் அமல்படுத் திடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், காலந்தாழ்த்தினால், காவிரி பிரச்சினைபோல் ஆகும் என்ற அச்சத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், உடனடியாக நீர் மட்டத்தை உயர்த்தவும், கேரள எல்லையில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9:

நாகை மாவட்ட அமைப்பாளர் ந.செந்தில்குமார்

முதியோர் காப்பகங்கள் தேவை
விவசாயத் தொழிலில் ஈடுபடுகின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கையில் உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லாத பரிதாப நிலை; வேலை  செய்ய முடியாத முதுமைக் காலத்தில், பிறருடைய தயவில் வாழ்வைக் கழிக்கும் அவல நிலை; முதுமைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க காப்பகங்களை அரசே ஏற்பாடு செய்யவேண்டும் அல்லது உரிய வகையில் ஓய்வூதியம் அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.
விவசாய வேலையில்லாத காலங்களில், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:

தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங்

ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்கிடவேண்டும்

படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போய் பெண்கள் சம்பாதிக்கும் நிலையிலும், ஆண் ளைவிட அதிக ஊதியம் பெறும் இந்த நாளிலும், விவசாயத் தொழில் பார்க்கும் பெண்கள் - ஆண் தொழிலாளர்களைவிட குறைவான ஊதியம் பெறுவது நியாயமல்ல. இதைக் கருத்தில் கொண்டு, ஆண்களுக்கு நிகரான உடல் உழைப்புப் பெண்களுக்கு சரிசமமான ஊதியம் வழங்கிட அரசின் தொழிலாளர் துறைமூலம் நடவடிக்கை எடுத்திட தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 11:

மண்டல மாணவரணிச் செயலாளர் சுரேஷ்

தென்னக நதிகளை இணைத்திடுக!

நதிநீர் இணைப்பு குறித்து தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. உடனடியாக தென்னக நதிகளை இணைத்து, நீர்ப் பற்றாக்குறை நிலையைப் போக்கும் பணியைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12:

திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ்

விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்க!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் விவசாயம் சீர்குலைந்த நிலையில், அதை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்துவிட்டு வேலை யில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு (இருபால்) நம் நாட்டில் உற்பத்தியாகும் விவசாயப் பொருள்களை (கச்சா) பயன்படுத்தி, சிறு தொழில் ஆலைகளை ஏற்படுத்தி, வேலை வாய்ப்பை உருவாக்கிட தமிழக அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

விவசாயத்தை வாழ வைக்கவேண்டும் அல்லது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மாற்று வாழ்வுக்கு வருகை செய்து தீரவேண்டும். காவிரி டெல்டா பகுதி களில் வேலை வாய்ப்புக்கு வழி செய்யும் தொழிற் சாலைகளைத் தொடங்கி, அங்கு டெல்டா பகுதி மக் களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்று இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்து கிறது.

பெருத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
                    ------------------------------”விடுதலை” 27-5-2014

31 comments:

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கோலார் தங்கவயல், மே 27- கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிக்பள்ளாப்பூர் அருகே இந்த விபத்து நடந்தது.

சிக்பள்ளாப்பூர் தாலுகா, ஹலயூர் கிராஸ் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 36). இவருடைய மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு நயனா (11), மோனிஷா (8) என்ற 2 மகள்கள் உண்டு. 4 பேரும் ஒரு காரில் சிக்பள் ளாப்பூரில் உள்ள நந்தி கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்று கொண்டு இருந்தனர். காரை ஜெய ராம் ஓட்டிச் சென்றார்.

தேவிசெட்டி ஹள்ளி கிராஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப் பளம் போல நொறுங்கி யது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினார்கள்.

இந்த விபத்தில் ஜெய ராம், அம்பிகா, மோனிஷா ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நயனா படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தவுடன் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சிக்பள் ளாப்பூர் புறநகர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டு நரை வலைவீசி தேடி வரு கிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/81060.html#ixzz32yJW6uYo

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடி கூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

_ (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/81061.html#ixzz32yJjPoaX

தமிழ் ஓவியா said...


திருவாரூர் மாநாடுதிருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர்கள் எழுச்சி மாநாடு நேற்று (26.5.2014) மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், கொள்கை முழக்கங்களோடு பேரணி முக்கியமானதாக அமைந்திருந்தது. பெரும்பாலும் திருவாரூர், நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய சங்கத் தொழி லாளர்கள் இருபாலரும் பங்கு ஏற்றனர் என்பதே உண்மையாகும்.

திராவிடர் கழகப் பேரணி என்றால் ஏதோ கூட்டம் கூட்டமாகச் செல்லும் முறையில் அது அமைவதில்லை.

முறையாக அணிவகுப்பது, மாநாட்டின் நோக் கத்தை வெளிப்படுத்தும் ஒலி முழக்கங்கள் (அச்சிட்டு வழங்கப்படும்) அதில் முக்கியமாக இடம் பெறும்.

இரண்டாவதாக, மூடநம்பிக்கை ஒழிப்புக் கூர்மையுடையதாக இருக்கும்; படித்தவர்களே மூடநம்பிக்கைக் குழிக்குள் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கும் மக்கள் நிறைந்த நாட்டில், மூடநம்பிக்கையை எதிர்க்கும், மக்களுக்கு உணர்த்தும் அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இது திராவிடர் கழகத்திற்கே உரித்தான சிறப்புத் தகுதியாகும்.

பொது மக்கள் மத்தியில் இத்தகு பேரணியும் மூடநம்பிக்கை ஒழிப்பு அம்சங்களும் இடம் பெறும் போது பொது மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியது மட்டுமல்ல; சிந்திக்கத் தூண்டுபவையாகவும் அமை கின்றன.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தச் ஷரத்தினைத் துல்லியமாக நூற்றுக்கு நூறு செவ்வனே செயல் படுத்துவது திராவிடர் கழகமே! சிறப்பாக திராவிடர் கழகம் நடத்தும் பேரணியில் அவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் (பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல், அலகு குத்திக் கார் இழுத்தல், கூரிய அரிவாள் மீது ஏறி நிற்றல் முதலியன) மிக முக்கியமானவையாகும்.

மாநாட்டைப் பொறுத்தவரை, தீர்மானங்கள் எப்பொழுதும் முக்கியமானதாக அமையும், திருவா ரூரில் நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் அந்த வகையில் இந்தக் கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

விவசாயத்தைத் தொழிலாக அறிவித்தல், காவிரி நதி நீர் பங்கீடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசியல் கண்ணோட்டமின்றி மானியங்கள், நிவாரணங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்தல், பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளி லிருந்து பாதுகாத்தல், விவசாயத்தின் துணைத் தொழிலான ஆடு - மாடுகள் பராமரிப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, விவசாயிகளுக்கு முதியோர் காப்பகங்கள், ஆண் பெண்களுக்கிடையே ஊதிய வேறுபாடு நீக்கம், தென்னக நதிகள் இணைப்பு, விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்தல் ஆகிய அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் மூன்றில் இரு பகுதியினரின் தொழில் விவசாயமாக இருக்கும் ஒரு நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!

ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலேயே வளர்ந்து, கடனிலேயே மாள்கிறான் என்பது தொடர் மொழியாகவே இருந்து வருகிறது.

விவசாயத்தில் கூட அந்நியத் தலையீடு என்கிற அளவுக்குக் கேவலமாகி விட்டது. பாரம்பரியமாகப் பராமரிக்கப்பட்டு வந்த விதை நெல்லுக்குப் பதிலாக மலட்டு விதைகள் அறிமுகப் படுத்தப்பட்ட கொடுமை எல்லாம் உண்டு.

இவற்றை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது மீண்டும் அந்த மலட்டு விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும் - உலகப் பொருளாதாரச் சூழலில் நாடுகள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட தீய விளைவுகளில் இதுவும் ஒன்று.

சில்லறை வர்த்தகத்தில்கூட அந்நிய முதலீடு என்று வருகிறபோது உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள் களுக்கான கட்டுபடியாகும் விலைகூடக் கிடைப்ப தில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழிலாக ஒதுக்கப்பட்டது இந்திய விவசாயியே!

காவிரி டெல்டா பகுதியைப் பொறுத்தவரை விவசாயத்தைத் தவிர வேறு எந்தவிதமான தொழில் வசதிகளும் கிடையாது. விவசாயத்தைத் தவிர வேலை வாய்ப்பு என்பது அரிதாகும். இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் தேவையான தொழிற்சாலைகளை உருவாக்கி, விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்ய வேண்டும் என்பதே திருவாரூர் மாநாட்டுத்தீர்மானம் அடிநாத மாகக் கொண்டிருக்கிறது.

மீன் பிடி தொழிலுக்குச் செல்லாத கால கட்டத்தில் அத்தொழிலாளிகளுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படுகிறதே - அதே கண்ணோட்டம் விவசாயத் தொழிலுக்கும் தேவைப்படுகிறது. திராவிடர் விவ சாயிகள் தொழிலாளர் எழுச்சி மாநாடு இத்திசையில் பல்வேறு சிந்தனைகளைத் தட்டி எழுப்பியுள்ளது என்பதில் அய்யமில்லை.

மாநாட்டு வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனை வருக்கும் பாராட்டுக்கள்.

Read more: http://viduthalai.in/page-2/81062.html#ixzz32yJrtlPP

தமிழ் ஓவியா said...


மத்திய அமைச்சர்கள் பட்டியல்: துறைகள் அதிகாரபூர்வ அறிவிப்பு


புதுடில்லி, மே 27- மத்திய அமைச்சர்கள் இலாக் காக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:- பிரதமர் நரேந்திர மோடி அணு சக்தி, விண் வெளி, பணியாளர்நலத்துறை, பென்ஷன், பணி யாளர் குறை தீர்ப்பு மற்றும் கொள்கை முடிவுகள்.

1. ராஜ்நாத்சிங் உள் துறை.

2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.

3. அருண்ஜேட்லி - நிதி மற்றும் ராணுவத்துறை, நிறுவன விவகாரம்.

4. வெங்கையா நாயுடு நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரம்.

5. நிதின்கட்காரி -சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை.
6. சதானந்த கவுடா - ரயில்வே
7. உமாபாரதி - நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை சுத்திகரிப்பு
8. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் விவகாரம்.
9. கோபிநாத் முண்டே -ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல்.
10. ராம்விலாஸ் பஸ்வான் - உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன்.
11. கல்ராஜ் மிஸ்ரா - நடுத்தர, சிறு குறு தொழில்.
12.மேனகாகாந்தி - பெண்கள், குழந்தைகள் நலம்.
13. அனந்தகுமார் -உரம் மற்றும் ரசாயணம்
14. ரவிசங்கர் பிரசாத் - தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதி.
15. அசோக் கஜபதி ராஜு - விமான போக்குவரத்து
16. ஆனந்த் கீதே - தொழில் துறை மற்றும் பொது நிறுவனம்.
17. ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்துதல்.
18. நரேந்திர சிங் தோமர் - சுரங்கம் மற்றும் இரும்புத் துறை தொழிலாளர் வேலை வாய்ப்பு.
19. ஜுவல் ஓரம் - மலை வாழ் மக்கள் நலத்துறை
20. ராதாமோகன்சிங் -விவசாயம்
21. தவாரி சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரம்.
22. ஸ்மிருதி இரானி - மனிதவளம் மேம்பாடு
23. ஹர்ஷ் வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்.

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

1. தளபதி வி.கே.சிங் -வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.

2. ராவ் இந்தர்ஜித்சிங் - திட்டம் (தனி பொறுப்பு), புள்ளியல், திட்ட அமலாக்கம், ராணுவம்.

3. சந்தோஷ்குமார் கங்வார் - ஜவுளி, நீர் வளம், நதி மேம் பாடு, கங்கை சுத்திகரிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்

4. சிறீபாத் எஸ்சோ நாயக் - சுற்றுலா மற்றும் கலாச்சாரம்.

5. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.

6. சர்பனந்த சோனாவால் - பட்டு ஜவுளி மேம்பாடு, தொழில் முனைவோர் நலம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு.

7. பிரகாஷ் ஜவடேகர் தகவல் ஒளிபரப்பு சுற்றுச் சூழல், வனத்துறை, பருவ நிலை மாற்றம் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரம்.

8. பியூஸ் கோயல் - மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. 9. ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பென்சன் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு, விண் வெளி மற்றும் அணுசக்தி.

10. நிர்மலா சீதாராமன் வர்த்தகம் மற்றும் தொழில் (தனி பொறுப்பு) நிதி, நிறுவன விவகாரம்.

இணையமைச்சர்கள்

1. சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து

2. மனோஜ் சின்கா - ரயில்வே

3. நிகல் சந்த் - ரசாயணம் மற்றும் உரம்

4. உபேந்திர குஷ்வாகா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், குடிநீர்.

5. பொன்.ராதாகிருஷ்ணன் - கனரக தொழில் மற்றும் பொதுத் துறை, அரசுத் துறை தொழில்கள்.

6. கிரண் ரிஜ்ஜு - உள் துறை

7. கிரிஷன் பால்குஜ்ஜார் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்.

8. சஞ்சீவ்குமார் பல்யாண் - வேளாண், உணவு பதப்படுத்துதல் தொழில்.

9. மன்சுக்பாய் - மலைவாழ் மக்கள் நலம்.

10. ராவ் சாகிப் தாதாராவ் தன்வே - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது

விநியோகம்.

11. விஷ்ணு தேவ் சாய் - சுரங்கம், இரும்பு, தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு.

12. சுதர்சன் பகத் - சமூக நீதி மற்றும் அதிகாரம்.

Read more: http://viduthalai.in/page-3/81079.html#ixzz32yKfs2uU

தமிழ் ஓவியா said...


நீக்கம்-சேர்ப்புக்குப்பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு


சென்னை, மே 27- மூன்று பேர் மீண்டும் சேர்க்கப்பட் டிருப்பது, அமைச்சர் கே.பி. முனுசாமி நீக்கப்பட்டிருப் பது என சில மாற்றங்கள் செய்யப்பட்ட பின், புதிய தமிழக அமைச்சரவைப் பட் டியல் வெளியிடப்பட்டுள் ளது.

அமைச்சரவை பட்டி யல் குறித்த உத்தரவை தலை மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட் டார். அதன் விவரம்: (பெய ரும், அவர்கள் வகித்து வரும் துறைகளும்)

பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா-பொதுத்துறை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பொது நிர் வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள் துறை. ஓ.பன்னீர்செல்வம்-நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர் தல், பொதுப்பணித் துறை)

நத்தம் ஆர்.விஸ்வநாதன்- மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்-வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனி சாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழி லாளர் நலத் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை.

பி.பழனியப்பன்-உயர் கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட் டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை.

வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

வி.மூர்த்தி-பால்வளத் துறை.

எம்.சி.சம்பத்-வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ் ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங் கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத் தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணி யன்-தகவல் தொழில் நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வரு வாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங் கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட் டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

சி.விஜயபாஸ்கர்-சுகா தாரத் துறை.

Read more: http://viduthalai.in/page-5/81041.html#ixzz32yKxi3w7

தமிழ் ஓவியா said...

நலிவடைந்த விவசாயம்


விவசாயம் நலிந்ததா? நலிவடையச் செய்யப் பட்டதா? என்பது முக்கிய வினாவாகும்.

நாட்டில் 69 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 63 சதவிகித மக்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆவார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் ஒரு தொழிலாகக்கூட அங்கீகரிக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை!

திருவாரூரில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டின் முதல் தீர்மானமே இதுகுறித்ததுதான். விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவித்திடுக என்பதுதான்;

விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது என்பது எத்தகைய அவலம்!

அதன் விளைவு விவசாயத் தொழிலைவிட்டு கிட்டத் தட்ட 77 லட்சம் மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட் டனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் விவசாயிகள் இத்தொழிலை விட்டு விலகிச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாட்டின் உற்பத்தியில் 30 சதவிகிதம் விவசாயத் துறையில் கிடைப்பவையாகும்.

அத்தகைய துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை, 90-களில் 6 சதவிகிதமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பேயி தலை மையில் அமைந்தபோது அது வெறும் 1.3 சதவிகிதமாக வீழ்ச்சியுற்றது.

கிராமங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் 11 சதவிகிதம்தான். விவசாயிகள் வாங்கும் பல்நோக்கு டிராக்டருக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 12 முதல் 16 சதவிகிதமாகும். ஆனால், பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் வட்டியோ வெறும் 7 சதவிகிதம்தான்.

ஏழை விவசாயிகள் வாங்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்திட கடும் கெடுபிடிகள்! ஆனால், பெரும் பண முதலைகளுக்கு வழங்கப்பட்ட கடனோ கோடானு கோடியாகும். அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்யாமல் வாராக் கடன் என்ற முறையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.1.23 லட்சம் கோடியாகும்.

விஜய் மல்லையா நடத்தும் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் நட்டப்பட்டது என்றால், அதனைத் தூக்கி நிறுத்திட மத்திய அரசும், அரசு வங்கிகளும் ஓடோடி வருகின்றன. வங்கிகளுக்கு மட்டும் மல்லையா வைத்துள்ள கடன் பாக்கித் தொகை ரூ.7524 கோடியாம்!

ஒரு காலகட்டத்தில் (1992-1993) நாட்டின் மொத்த உற்பத்தியில் 41 சதவிகிதமாக இருந்த விவசாய தொழில் 18 சதவிகிதமாக படிப்படியாக பெரும் வீழ்ச்சியை அடைந்துவிட்டது.

உலகில் பட்டினிக் குறியீட்டில் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 66 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக வங்கி தரும் புள்ளி விவரப்படி 37 சதவிகித இந்தி யர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உழலுகின்றனர். உலகில் எடை குறைந்த குழந்தைகளில் 49 சதவிகிதமும், ஊட்டச் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டதில் 34 சத விகிதமும், உலகில் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் என்ற வரிசையில் 46 சதவிகிதமும் இந்தியாவிற்கே சொந்தமாகும்.

தமிழ் ஓவியா said...

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய விவசாய தொழில் உரிய முறையில் கவனிக்கப்படாமை தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முக்கியமான பரிந்துரைகளை வெளியிட்டதுண்டு.

கணபதி பிள்ளை ஆணையம், கார்த்திகேயன் தலை மையிலான ஆணையம், மணி தலைமையிலான குழு, திரவியம் குழு, அரிபாஸ்கர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

1997 ஆகஸ்டு 27 இல் அய்.ஏ.எஸ். அதிகாரி - நில சீர்திருத்த ஆணையர் பெ.கோலப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு (தி.மு.க. ஆட்சியில்) நியமிக்கப்பட் டது. பலனுள்ள பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன.

திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் பெரும் பாலும் அவற்றை மய்யப்படுத்தியுள்ளன.

முப்போகம் விளைந்த கழனிகள் எல்லாம் வெறிச் சோடி கிடக்கின்றன. விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வேலை கிடைக்காத மக்கள் நகர்ப்புறங்களுக்கு நகர்கின்றனர். கடன் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் வீழ்ச்சியுற்ற விவசாயத் தொழிலை தூக்கி நிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

இத்தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மக்கள் ஆவார்கள். விவசாயத்தைத் தவிர வேறு தொழிலை அறியாதவர்கள்.

அரசு என்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜீவாதார தொழில்மீதும், அதில் ஈடுபடும் மக்கள் மீதும் தானே அக்கறை செலுத்தவேண்டும்.

மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இத்துறை யில் அதன் கவனம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை; குஜராத்தைப் பொறுத்தவரை மோடி ஆட்சியில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதுதான் உண்மை.

மாநில அளவில் வளர்ச்சி வளர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கலாம். ஆனால், 123 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஏமாற்றிட முடியாது.

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/81106.html#ixzz333wlmd5o

தமிழ் ஓவியா said...


வடமாநிலத்தவர்களும் - உயர்ஜாதியினரும் நிரம்பி வழியும் மத்திய அமைச்சரவை

புதுடில்லி, மே 28- மத்திய அமைச்சரவையில் வட மாநிலங்களில் இருந்துதான் அதிகம் பேர் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்கள். தென்மாநிலங்களில் இருந்து 6 பேருக்கே அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்கள் கிடைத்தன.

தொடக்க காலத்தில், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாது என்றும், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறின.
பின்னர்தான் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவில் ஆதரவு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில், பாரதீய ஜனதாவே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்குக் பெரும்பான்மையைப் பெற்றது.

தனித்தே பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிகளையும் அமைச்சரவையில் நரேந்திரமோடி இணைத்துள்ளார்.

அந்த வகையில் அகாலிதளம், லோக் ஜனசக்தி, சிவசேனா, தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர் களுக்கே அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உ.பி. முதலிடம் வகிக்கிறது. இந்த மாநிலத் தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உண்டு. இதில் 71 தொகுதிகளைப் பா.ஜ.க. வென்றது.
அதனால்தான் அந்த மாநிலத்திற்கு லாட்டரி பரிசு! அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 8 அமைச்சர் களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். ராஜ்நாத்சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா மற்றும் மேனகா காந்தி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் வி.கே.சிங், சந்தோஷ்குமார் கங்வார், மனோஜ் சின்கா மற்றும் சஞ்சீவ் பலியான் ஆகியோர் துணை அமைச்சர்கள் ஆவர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து 27 பேர் வெற்றி பெற்றனர். இந்த மாநிலத்திற்கு 4 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

பிகார் மாநிலத்தில் இருந்து பா.ஜ.க. கூட்டணிக்கு 23 இடங்கள் கிடைத்தன. அந்த

மாநிலத்திற்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

மராட்டிய மாநிலத்தில் 42 தொகுதிகளைப் பா.ஜ.க. கூட்டணி வென்றது. இந்த மாநிலம் 3 கேபினட் உள்பட 6 அமைச்சர்களைப் பெற்றுள்ளது.

ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா முழு அளவு வெற்றியை பெற்றது. ஆனால் இந்த மாநிலத்திற்கு ஒரே யொரு துணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
தென் மாநிலங்களில்...

தென்மாநிலங்களைப் பொறுத்தவரை 6 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் வெங் கையா நாயுடு (ஆந்திரா), சதானந்த கவுடா (கர்நாடகா), பொன்.ராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு) ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்கள்.
நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த ஸ்மிரிதி இரானிக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. (இவர் தேர்தலில் தோற்றவர்).

அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருண்ஜெட்லியும் முக்கிய அமைச்சர் பதவியில் இடம்பெற்றார்.

கேபினட்டில் உயர்ஜாதியினர்....

மோடி உள்ளிட்ட 23 கேபினட் உறுப்பினர்களில் மொத்தம் 12 பேர் உயர் ஜாதியினர்.
என்னென்ன ஜாதியினர்? பார்ப்பனர்கள், ராஜ்புத்திரர்கள், கயஸ்தாஸ், வைசி யர்கள் இவர்கள்தான் வட இந்தியாவில் உயர் ஜாதி யினர். அதேபோல் லிங்காயத்துகள், ஒக்கலிகா மற்றும் மராத்தாஸும் கேபினட்டில் இடம்பெற்றுள்ளனர்.

எஞ்சிய 11 பேரில் 5 பேர் இதர பிற்படுத்தப்பட் டோர்; இருவர் தலித்துகள்; ஒருவர் பழங்குடி இனத்தவர்.

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 10:

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் களில் 5 பேர் உயர் ஜாதியினர்; 4 பேர் இதர பிற் படுத்தப்பட்டோர்; பழங்குடி இனத்தவர் ஒருவர்.

12 இணை அமைச்சர்கள்

இணை அமைச்சர்கள் 12 பேரில் 4 பேர் பழங்குடி இனத்தவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர். 3 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்
பிற்படுத்தப்பட்டோரில் கூட வலிமை வாய்ந்த ஜாட், குஜ்ஜார்கள், யாதவர்கள், கம்மாஸ் ஜாதியின ருக்கே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குஸ் வாஹாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட் டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/81088.html#ixzz333xQDWKN

தமிழ் ஓவியா said...

பெயர் வைப்பதற்கு யோக்கியதை வேண்டாமா?

நரேந்திர மோடி பிரதமர் ஆன அந்த நாளில், மைசூருவில் பிறந்த இரு குழந்தைகளுக்கு மோடியின் பெயரை முன்னாள் பி.ஜே.பி. அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ் என்பவர் சூட்டிவிட்டார். இப்படிப் பெயர் சூட்டப்பட்டது பெற்றோர்களுக்கே தெரியாது.

ஆண் குழந்தைக்கு நரேந்திர கிருஷ்ணா மோடி என்றும், பெண் குழந்தைக்கு தன்மயி மோடி என்றும் பெயர் சூட்டினாராம்.

அந்த இரு குழந்தைகளின் கல்விச் செலவை தாம் ஏற்பதாகவும், பெற்றோர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப் படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலையறிந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி, காவல்துறையினரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பெண் குழந்தையின் தந்தையாரான மஞ்சுநாத் கவுடா கூறியது கவனிக்கத்தக்கது.

குழந்தை பிறந்த போது மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது இவர் பெயர் சூட்டியுள்ளார்.

என்னிடமோ, என் மனைவியிடமோ, உறவினர்களிடமோ அனுமதி பெறவில்லை.

அது மாத்திரமல்லாமல் பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் ராமதாஸ் பெண்கள் விவகாரத்தில் ஏற்கெனவே சிக்கி, தற்கொலைக்கு முயற்சித்தவர்.

அத்தகைய ஒருவர் என்னுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டிட தகுதி படைத்தவர் அல்லர். நான் என் குழந் தைக்கு என் தாயின் பெயரையே சூட்ட விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.பி.,காரர்களின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xfoYaL

தமிழ் ஓவியா said...

அமைச்சராவதற்குத் தனித்தகுதி

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மதக் கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்திற்குக் காரண மாக இருந்தவர் என்பதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். தடை உத்தரவை மீறி ஜாதிக் கூட்டத்தை நடத்தியதுதான் காரணம். ஒரு மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார். கால்நடை மருத்து வரான இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பி.ஜே.பி.யில் இணைந்தார்.

சரி, இவருக்கு இப்பொழுது என்ன? ஒன்றும் இல்லை, மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. இவர் பெயர் பல்யான் ஜாத்.

பெயரிலேயே இவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர் என்பது ஒட்டி நிற்கிறது.

மோடி அமைச்சரவையில் இதுபோன்றவர்கள் அமைச்சராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பி.ஜே.பி. அமைச்சரவை யில் இடம்பெற இதுபோன்ற மதம் மற்றும் ஜாதிக் கலவரக் கதாநாயகர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களே!

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xvAEZR

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த முத்து

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன். 2020 இல் முக்கிய நிறுவனங்களில் மேலாண்மைப் பொறுப்புகளில் 30 சதவிகிதம் பெண்கள் இருப்பார்கள்.

- ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே

பொத்தானை அழுத்துவாராம்

பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை நம்பக்கூடாது; ஆனாலும், மோடிமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால், அணுகுண்டு பொத்தானை பிரதமர் மோடி அழுத்துவார். - உத்தவ்தாக்கரே, தலைவர், சிவசேனா

(பாகிஸ்தானிலும் பொத்தான் உண்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/81101.html#ixzz333yEVdWY

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று கலைஞர் தாயார் அஞ்சுகம் மற்றும் முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நிழற்படக் காட்சியைப் பார்வையிட்டார்.

அங்கே வைக்கப்பட்ட தகவல் பலகையில் கீழ்கண்டவாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதினார்

பாராட்டிப் போற்றிவந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுதுபார்
என்று மாணவப் பருவந்தொட்டே முழங்கி
வாழ்வில் என்றென்றும் எத்தனைப் பெரும்
பதவிகளும் புகழாரங்களும் வந்தாலும்
தன்னை ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்
என்று அழைப்பதில் பெருமைகொண்ட
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த
இல்லம் - திருக்குவளையில் கண்டேன்
மகிழ்ந்தேன்.

குவளையில் பிறந்தவர்
குவலயத்தையே வியப்படையச் செய்த
குருகுலச்சீடரான வரலாறு பெரும்
எழுச்சி வரலாறு!

இதை இளைஞர்கள் கண்டு
அவரது உழைப்பை என்றும்
பாடமாக்கி வாழவேண்டுமென
விரும்பும் அவரது அன்பு இளவல்

- கி.வீரமணி
27.5.2014)

Read more: http://viduthalai.in/page-4/81130.html#ixzz333yfut8b

தமிழ் ஓவியா said...

எங்கள் பிள்ளைகளும் சாதிப்பார்கள்!

தமிழ்நாடு முழுவதும் விசைத் தறிகளில் குழந் தைத் தொழிலாளர்களாக இருந்த 840 மாணவ - மாணவிகள் சிறப்புப் பள்ளி களில் சேர்க்கப்பட்டு, கல்வி வாய்ப்பு அளிக்கப் பட்டது. இதில் 795 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர் களில் 24 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற் றனர். 490 மதிப்பெண் பெற்ற அகிலாவின் பெற் றோர் இன்னும் விசைத் தறியில்தான் வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

எங்கள் பிள்ளைக ளுக்குச் சரியான வாய்ப்புக் கொடுத்தால், சாதித்துக் காட்டுவார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Za7uD8

தமிழ் ஓவியா said...

புரோகிதராக மாறிய அமைச்சர்

நாகப்பட்டினத்தில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் - காட்பாடி கிளைக்கு 1700 சதுர அடியில் 54 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

பூமி பூஜை என்று வந்து விட்டால் புரோகிதர் வேண் டாமா? ஏற்பாடு செய்திருந்த புரோகிதர் வரவில்லையாம்.

புரோகிதர் வரவில்லை யென்றால் அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர் போதாதா?

மீன்வளத் துறை அமைச் சர் ஜெயபாலே அந்தப் புரோகித வேலைகளைக் கவனித்தாராம்.
அந்த நேரத்திலே அ.இ. அ.தி.மு.க. பிரமுகர் சொன் னதுதான் நல்ல தமாஷ்!

தி.மு.க. ஆட்சி என்றால் புரோகிதருக்கு வேலை இல்லை. அ.தி.மு.க. என்றால் எல்லா சடங்குகளும் உண்டு என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந் திருக்கவேண்டாமா? என்று நச்சென்று ஒரு கடி கடித் தாராம்.

கட்சிகளை விட்டுத் தள்ளுங்கள் - அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது - எந்தவித மதச் சடங்குகளுக்கும் அங்கு இடம் இல்லை என்று அமைச்சருக்குத் தெரிந் திருக்கவேண்டாமா?

அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், ஆட்சியிலும் வைத்துக் கொண்டுள்ளவர்கள் மூட நம்பிக்கைகளின் மூட்டை களாக இருக்கிறார்களே!

(வாழ்க அண்ணா நாமம்!)

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339ZgIzsv

தமிழ் ஓவியா said...

குளிர்காய்வது
யார்?

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதி பர் ராஜபக்சேவை அழைத்த விவகாரத்தில் தமிழ் மக்க ளின் உணர்வுகளைத் தூண் டிவிட்டு சில அரசியல் கட்சிகள் குளிர்காய நினைக்கின்றன. - பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பி.ஜே.பி. தலைவர், மத்திய அமைச்சர்

எந்த அரசியல் கட்சிகள் இவை? பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த ம.தி.மு.க., பா.ம.க.வையும் குளிர்காயும் பட்டியலில் சேர்த்து விட்டாரே பொன்.ராதாகிருஷ்ணன்?

தேர்தல் முடிந்த கையோடு பி.ஜே.பி.யோடு இணைய ஆசைப்படுபவர்கள் தாராளமாக இணை யலாம் என்றார் - இப் பொழுதோ இப்படிக் கூறுகிறார் - பாவம் கூட்டணிக் கட்சிகள்!

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Zlrdlo

தமிழ் ஓவியா said...


ஆனந்தமூர்த்திகளை மிரட்டுவதா?


16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை அமைத் தாகிவிட்டது. யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மோடி பிரதமர் என்பது நிதர்சனம்.

தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் நடை பெற்ற உரையாடல்கள், எதிர்விவாதங்கள் அடிப் படையில் பழி வாங்குவது என்று ஆரம்பித்தால், நாடு நாடாக இருக்காது - காடாகத்தான் மாறும். அது ஆளும் நிலையில் இருக்கும், பி.ஜே.பி.க்குத் தான் தலைவலியாகும்.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி. சாகித்ய அகாடமி விருது பெற்ற வரும்கூட. தேர்தலுக்கு முன்னதாக ஒரு கருத்தினை வெளியிட்டதுண்டு.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் பட்சத்தில் நாட்டை விட்டே நான் வெளியேறி விடுவேன். குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் நரேந்திர மோடி. காந்தி, நேரு போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற இந்திய நாட்டை மோடி ரத்தப் பூமியாக மாற்றி விடுவார் என்று அவர் கருத்துக் கூறியது உண்மைதான்.

ஆனந்தமூர்த்தி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென், இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள்கூட மோடி பிரதமருக்குத் தகுதியானவர் அல்லர் என்று கூறியதுண்டு.

இவர்களால் கூறப்பட்ட சொற்களில் வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், அடிப்படையில் வேறு பாடுகள் ஏதும் இல்லை.

தேர்தல் முடிவு மோடிக்கு சாதகமாக வந்துவிட்ட தால், கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் நமோ அமைப்பினர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்திக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனந்தமூர்த்தி பாகிஸ்தான் செல்லுவதற்கு விமான டிக்கெட் எடுத்தும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைப்பேசிகள் வாயிலாகவும் அவரை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆனந்தமூர்த்தி இந்தியாவைவிட்டு வெளியேறா விட்டால், உலகத்தைவிட்டே வெளியேற்றுவோம் என்கிற அளவுக்குக் கொலை மிரட்டல்களை விட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக ஆனந்தமூர்த்தியின் இல்லத் திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடாவுக்கும் மிரட்டல் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமரானால் அரசியலை விட்டே விலகுவேன் என்று தேவேகவுடா கூறிவிட்டாராம். எப்பொழுது விலகப் போகிறீர்கள்? என்று மிரட்டல்கள் பி.ஜே.பி. வட்டாரத்திலிருந்து.

இந்தி நடிகர் கமால் ஆர்கான் மோடி பிரத மரானால், டுவிட்டரிலிருந்து மட்டுமல்ல, இந்தி யாவை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னபடி வெளியேறியும் விட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.பற்றி இந்து ஏட்டில் எழுதிய வித்யா சுப்பிரமணியத்திற்கு சில மாதங்களுக்குமுன் கொலை மிரட்டல் வந்ததையும் இத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இந்தியா முழுமையும் ஊடகங்களில் பணி யாற்றிய பி.ஜே.பி. மதவாத நஞ்சுக்கு எதிர்ப் பானவர்களையெல்லாம் எல்லா வகைகளிலும் நெருக்கடி கொடுத்து வெளியேற்றியதையும் கவனத்தில் கொண்டால், பாசிஸ்டுகள் இப்படித்தானே வரலாற்றில் பல பகுதிகளில் நடந்துகொண்டுள்ளனர் என்ற நினைவு வராமல் போகாது.

பி.ஜே.பி.யின் இந்த அநாகரிக செயல்பாடுகள் குறித்து பெரிய அளவில் யாரும் வாய்த் திறக்க வில்லை என்பது, நாகரிக உலகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற வினாவை எழுப்புகின்றது.

அதிகாரம் என்பது ஆபத்தான கருவி. அதனை லாவகமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதற்கு இதற்கு முன்னதாக எத்தனையோ எடுத்துக்காட்டுகளும் உண்டு.

அதுவும் ஆளும் கட்சியாகிவிட்டால், கம்பியின் மீது கண்ணாடிப் பேழையைக் கையில் ஏந்தி நடப்பதற்கு ஒப்பானதாகும்.

இன்றைக்கு ஏதோ சில காரணங்களுக்காக நிலை கெட்டு குடை சாய்ந்து எழுதும் ஏடுகள், எழுத் தாளர்கள்கூட பேனாவை எதிர்த் திசையில் பிடிக்க வெகுகாலம் ஆகாது.
அடக்கமாக இருக்கும் வரையில் நல்லது - பாதுகாப்பானதும்கூட!

Read more: http://viduthalai.in/page-2/81175.html#ixzz339a656KZ

தமிழ் ஓவியா said...


சேவை


சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. - (குடிஅரசு, 17.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/81172.html#ixzz339aSQhqV

தமிழ் ஓவியா said...


ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!


தேர்தல் பிரச்சாரத்தின்போது, அக மதாபாத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஹர்தாய் போன்ற இடங்களில் உரை யாற்றும்போது, இன்றைய பிரதமர் மோடி, ஒரு கருத்தை ஆவேசமாகக் கூறினார். கிரிமினல்கள் இப்போது அரசியலில் நுழைவதைப்பற்றி விவாதங்கள் நடை பெறுகின்றன. என்னிடம் அதற்கான நிவார ணம் உள்ளது;

நான் இந்திய அரசியலை தூய் மைப்படுத்த உறுதி பூண்டுள்ளேன். மக்களா கிய உங்களது ஆதரவுவேண்டும் என மோடி பேசினார்.

அத்துடன் அவர் தனது பேச்சை நிறுத்திக் கொள்ளவில்லை; மேலும் பேசினார். உச்ச நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டு, இந்த வழக்குகள் ஒரு ஆண் டிற்குள் முடிக்கப்படும்; அனைத்துக் கிரிமினல் களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். என்னுடைய பாஜகவினர் உட்பட யாரையும் தண்டிக்க நான் தயங்கமாட்டேன் என பேசி னார். இது சென்ற மாதம் ஏப்ரல் 15 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சு.

இப்போது, மே 26, இந்திய நாட்டின் 15 ஆவது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும், 45 அமைச்சர்கள், காபி னெட் அமைச்சர்களாக, இணை அமைச்சர் களாக பதவி ஏற்றுள்ளனர்.

இந்த அமைச்சர்களில் 13 அமைச்சர்கள் மீது, கொலை முயற்சி, ஆட்கடத்தல், சமூகத் தில் பதற்றம் ஏற்படுத்தியது என கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் கலவரத் தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சீவ் பலி யானுக்கு, மோடி அரசில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் தொடர்ந்து பாஜகவால் முடக்கப்பட்ட நிலையில், முந்தைய காங்கிரசு அரசு, உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலம் நிறைவேற்றிட முயற்சித்த போது, இதே பாஜகவினர், மோடி உள்பட, நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது காங்கிரசு என ஒப்பாரி வைத்தனர். அதே மோடி, இன்றைக்கு என்ன செய்கிறார்? தனது முதன்மைச் செயலாளராக தொலைத் தொடர்பு கட்டுப்பாடு வாரியம் என அழைக் கப்படும் டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை நியமனம் செய்கிறார். இதில் என்ன தவறு என கேட்க லாம். டிராய் விதிப்படி, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பின், மத்திய அரசு, மாநில அரசுகளில் எந்தப் பணியும் செய்யக்கூடாது. தனியார் நிறுவனங் களில் பணியாற்ற வேண்டும் என் றால், ஓய்வு பெற்ற தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேர லாம் என டிராய் சட்டத்தின் விதி 5(8) கூறுகிறது.

ஆனால், மோடி என்ன செய்தார்? இந்த விதியை பதவி ஏற்ற ஒரே நாளில், அவசர சட்டம் மூலம் மாற்றி விட்டார். இந்தச் சட்டத்தின்படி, மத்திய அரசு அனுமதி பெற்று, எந்த பதவிக்கும் செல்லலாம் என சட்டம் இயற்றி விட்டார். அப்படி என்ன அவசரம்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை; நாடாளுமன்றம் ஜூன் 4 ஆம் தேதி கூடும் என சொல்லப்படு கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக, அவசரம் அவசரமாக, இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுதான் மோடி மாடல்; குஜராத் மாடல்.

நாடாளுமன்றத்தில், பாஜகவிற்கு, மிருக பலம் இருந்தும், நாடாளுமன்ற ஜனநாய கத்தை குப்பையில் வீசிவிட்டு, அவசர சட்டம் மூலம், தனக்கு வேண்டியதை செய்யக்கூடிய இந்த மோடி என்கிற நமது பிரதமர் தான், உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு, அவசர சட்டம் கொண்டு வரலாமா? என கேள்வி கேட்டவர்.

கிரிமினல்களை அரசியலில் ஒழிப்பேன் என சொன்னவர், தனது அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேரை அமைச்சர்களாக சேர்த்துள்ளார்.

இவையெல்லாம், மோடிக்கும், பாஜக வினர்க்கும், அவரது அணியில் உள்ளவர் களுக்கும், அவர்களுக்கு வாக்களித்தவர் களுக்கும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ, நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/81181.html#ixzz339aaQnDg

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீடு - 370 ஆவது பிரிவுகள் குறித்து பி.ஜே.பி. அமைச்சர்களின் கருத்துகள்

நீக்கிப் பாருங்கள் - அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவீர்கள்!

கனல் கக்குகிறார் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

புதுடில்லி, மே 29- சிறுபான்மையினருக்கான இட ஒதுக் கீடு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கிடும் அரச மைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு நீக்கம் குறித்து மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிராக கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப் துல்லா கூறியதற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நஜ்மா, முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்றும் பார்சிகள்தான் சிறுபான்மையினர் எனவும் கூறி இருந்தார். இதைக் கண்டித்து, வட இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கருத்து கூறினர்.

உ.பி.யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் தின் இறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத்கான் கூறியதாவது:

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆந்திர மாநில அரசு மீது டி.எம்.ஏ.பாய் தொடுத்த வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், மாநில வாரியாக எடுக்கப்படும் கணக்கில் 15 சதவீதத் துக்கும் கீழ் உள்ளவர்கள் சிறுபான்மையினர்களாகக் கருதப்படுவார்கள் எனத் தீர்ப்பளித்தனர்.

தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்படி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும் சிறுபான்மையினர் ஆவர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நம் நாட்டின் ஆறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர். எனவே நஜ்மா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல் படுத்த முயற்சிக்கிறார். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. நஜ்மா தனது கருத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இணை அமைச்சர் கருத்து

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டில்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்படுகிற கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் சிலர், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 குறித்த எங்கள் (ரத்து செய்வது) நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டனர்.

இதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு தயார். காஷ்மீரில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்போம். இதன் மூலம் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும், ஏற்றுக்கொள்ளச்செய்வோம் எனக் கூறினார்.

காஷ்மீர் முதல்வர் கொந்தளிப்பு!

சிறீநகரில் நேற்று காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் எங்களுக்கே உரியது. அரசியல் நிர்ணய சபையைக் கூட்டாத வரையில், அவர்களால் (மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு) அரசியல் சாசனத்தின் பிரிவு 370-அய் நீக்க முடியாது. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைத்துக்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் வழங்கி யுள்ளது. நீங்கள் மீண்டும் இந்தப் பிரச்சினையை (370-ஆவது பிரிவை நீக்குவது) எழுப்பினால், நீங்கள் அரசியல் நிர்ணய சபையை கூட்ட வேண்டும். அதன்பிறகு நாங்கள் பேசுவோம்.

பாகிஸ்தான் தரப்பு காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத்தான் இப்படி கூறுகிறார்.) இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பாரதீய ஜனதா எப்போதும் கூறி வந்துள்ளது. அங்கிருந்தும், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். ஆனால் இது கொஞ்சம் கூட சாத்தியம் இல்லாத விஷயம். யார் அரசியல் நிர்ணய சபையை கூட்டுவது?

காஷ்மீர் மாநில அரசுடனான தனது உறவை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும். ஆனால் இத்தகைய செயல்பாடு, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் மத்திய அரசை அன்னியப்படுத்தி விடும். நீங்கள் மாநில அரசுடனான உறவை வலுப்படுத்த இது சரியான வழி அல்ல.

இது மாநில மக்களுக்கும், நாட்டின் எஞ்சிய பகுதி மக்களுக்கும் இடையேயான இடைவெளியை

அதிகரித்துவிடும். பாரதீய ஜனதாவின் அரசியல் நிர்ப்பந்தம் எனக்கு புரிகிறது. ஆனால் முதலில் பிற வாக்குறுதிகளில் கவனம் செலுத்துங்கள். மாநில பொருள் சட்டம் தொடர்பாகவும், அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு பற்றியும் வேண்டுமென்றே குழப்பம் உருவாக் கப்படுகிறது.

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு வருமுன், பணக்கார பஞ்சாபியர்கள் இங்கு வந்து நிலங்களை வாங்கி விடுவார்கள் என்று மக்கள் பயந்தார்கள். மக்களை காப்பாற்றுவதற்காக மாநில சட்டங்களை இங்கே மகாராஜா அமல்படுத்தினார்.


தமிழ் ஓவியா said...

இன்றைக்கு எங்களது மாநில சட்டங்களுடன் விளையாடினீர்களேயானால், அப்படியொரு நிலை வந்தால், காஷ்மீருக்கு யாரும் வரமாட்டார்கள்.

370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசத் தொடங்கி உள்ளதாக கூறி இருக்கிறீர்கள். நானும் சம்பந்தப்பட்டவன்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக உள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து யாரும் உங்களுடன் பேசவில்லை. எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சு நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. பிறகு யாருடன் பேசினீர்கள்?

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கிப் பாருங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொன் றையும் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் செய்யுங்கள். அதன் பின் பாருங்கள்.இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் ராம் மாதவ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்காதா? 370 இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜம்மு- காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகத்தான் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் என்ன, தன் பெற்றோரின் சொத்து என முதலமைச்சர் உமர் அப்துல்லா நினைத்து விட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கருத்து

இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நேற்று கருத்து தெரிவிக்கையில், அரசியல் சாசனப் பிரிவு 370 (3) உடன் இணைந்த பிரிவு 370 (2), அரசியல் நிர்ணய சபையின் (தற்போது இது இல்லை) ஒப்புதல் இன்றி, பிரிவு 370-அய் நீக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது என கூறினார்.

காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் பொறுப் பையும் நேற்று ஏற்றுக்கொண்டார். அப்போது வந்திருந்த செய்தியாளர்கள், அரசியல் சாசனப் பிரிவு 370 விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்திருப்பது பற்றி கேள்விகள் எழுப்பினர்.

ஆனால், அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார். இங்கே அறிவியல் மணம் கமழ்கிறது. அறிவியல் பற்றித்தான் இங்கே பேசமுடியும். வேறு எதைப் பற்றியும் பேச முடியாது என அவர் கூறி விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/81149.html#ixzz339bYFmaL

தமிழ் ஓவியா said...


பூமியின் நிலத்தோற்றம் மாறுகிறதா? ஏன்? எப்படி?


பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கை காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை தாண்டி பூமியின் நிலத்தோற்றத்தை பெரிதும் மாற்றி யமைப்பது நதிகளே.

தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்து தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக வீழ்படிவுகளை கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும் உண்டு.

உலகில் எல்லா பகுதிகளிலும் காணப்படும் நதிதான், இயற்கையின் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கும் மற்ற குத்தகைதாரர்களை விட வேகமாகவும், வீரியமாகவும் செயல்படக்கூடியது. போட்டு வைத்த திட்டத்தை நிறை வேற்றாமல் இதற்கு தூக்கமே வராது.

எல்லா நதிகளுமே தன் சக்திக்கேற்ப பள்ளத்தாக்கு தோண்டுகின்றன. அந்த பள்ளத்தாக்குக்கு உள்ளே அரிப்பதும், சேர்ப்பதுமாக ஜனநாயக கடமையை ஆற்றிக்கொண்டே இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81185.html#ixzz339cVSqYG

தமிழ் ஓவியா said...


புதிய மலேரியா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி


மலேரியா நோய் தாக்காமல் இருப்பதற்கான எதிர்ப்பு சக்தியை உடலில் இயற்கையாகவே பெற்றுள்ள தான்சானியப் பிள்ளைகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்க்கு புதிய தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.

மலேரியாவை உண்டாக்கும் கிருமியைத் தாக்கி அழிக்கக் கூடிய இரசாயனங்கள் இவர்களது உடலில் உற்பத்தி ஆகின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இவ்வகை இரசாயனங்களை எலிகளுக்கு செலுத்தியபோது அந்த எலிகளின் உடலிலும் மலேரியா நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளது என தம் பரிசோதனைகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பரிசோதனையை குரங்குகளிடத்தும் பின்னர் மனிதர்களிடத்தும் நடத்திப்பார்த்து, இதன் அடிப்படையில் மலேரியாவுக்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கண்டுபிடிக்க வேண்டும் என இந்த ஆய்வின் முடிவுகளை சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.

குறிப்பிட்ட இந்த குழந்தைகளின் உடலில் உற்பத்தி யாகும் நோய் எதிர்ப்பு இரசாயனம், மலேரியா கிருமியியை தாக்கி அந்தக் கிருமி நோயாகப் பரவாமல் தடுத்து விடுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனாலும் பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பின்னரே இந்த வழியில் ஒரு வெற்றிகரமான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியும் என பேராசிரியர் கர்டிஸ் தெரிவித்துள்ளார்.

கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் உருவாகிக்கி யுள்ள, தடுப்பு மருந்துதான் இதுவரையில் கண்டுபிடிக் கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்தில் அதிகம் பலன் தந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. இவ்வகையான தடுப்பு மருந்துகள் இருந்தும், மலேரியா என்பது தொடர்ந்தும் நிறைய பேரைக் கொல்லும் நோயாக இருந்துவருகிறது.

2012ஆம் ஆண்டு ஆறு லட்சம் பேருக்கும் அதிக மானோர் மலேரியாவால் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன. இதில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் சகாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81190.html#ixzz339d3yVLM

தமிழ் ஓவியா said...

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை: எச்சரிக்கை

உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக் கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது.

சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டி பயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக் கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்ப தாகவும், உலகச் சுகாதார நிறுவனம், ஆண்டிபயாடிக்ஸ் செயலற்றுப் போகும் நிலை குறித்து வெளியிட்டுள்ள முதல் உலகளாவிய அறிக்கையில் கூறுகிறது.

இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கு அதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற செயலே இதற்குக் காரணம் என்று அது கூறியது.

இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அது கூறியது. புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக் கப்படவேண்டும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்று கூறுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/81190.html#ixzz339dB1upD

தமிழ் ஓவியா said...


திருமணத்திற்கு ரூ.5 லட்சத்துக்குமேல் செலவு செய்தால் வரி விதிக்கப்படும் கருநாடக அரசு


பெங்களூரு, மே 30-ஐந்து லட்சம் ரூபாய் அல் லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திரு மணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக் கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார். சட்டத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா நேற்று அளித்த நேர்காணல் கர்நாட காவில் கோடிக்கணக்கில் செலவு செய்து தேவையில் லாமல் ஆடம்பர திரு மணம் செய்கின்றனர். இதனால், யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.

கவு ரவத்திற்காக ஆடம்பரமாக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்வதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

ஆடம்பர திருமணம் செய்வதை தடுக்கும் வகை யில் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆயிரம் பேர்கள் சேரும் திருமணம் மற்றும் ரூ.5லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக செலவு செய்து திருமணம் செய்ப வர்கள் அரசுக்கு கட்டாயம் வரி செலுத்த வேண்டும். இந்த வரிப்பணம், வறு மையில் உள்ளவர்களின் திருமணத்திற்கு பயன்படுத் தப்படும். இதற்கு மாங் கல்ய நிதி என்று பெய ரிடப்பட்டுள்ளது.

இதே திட்டத்தின் கீழ், கலப்பு திருமணம் செய் வோருக்கும் இந்த நிதி வினியோகிக்கப்படும். இந்து திருமண சட்டம் 1976-ன் படி ஆடம்பர திருமணம் செய்வோரிடம் வரி வசூ லிக்கும் புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப் படும் என்று அமைச்சர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/81213.html#ixzz33FTrSHGS

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நாத்திக மாணவிக்கு தண்டனையா? அமெரிக்க மனித நேய அமைப்பு எதிர்ப்பு

நியூயார்க், மே30- அமெரிக்காவில் நியூ யார்க்கை அடுத்த எல்மிரா சிட்டி பள்ளியில் கடவு ளுக்குக் கீழாக என்கிற சொற்பதத்தை சொல்ல மறுத்த மாணவிக்குத் தண் டனை வழங்கப்படுவதாக பள்ளி ஆசிரியை மிரட்டி உள்ளார்.

பள்ளியில் பிரார்த் தனைப்பாடலை மனப் பாடம் செய்து ஒப்பிக்கக் கட்டாயப்படுத்திய ஆசிரியையிடம் மறுப்பு தெரிவித்த மாணவியைத் தண்டிப்பதாக மிரட்டிய ஆசிரியை குறித்து அந்த மாணவி அந்த பகுதியில் செயல்பட்டுவரும் பகுத் தறிவாளர்களுக்கான அமைப்பாகிய அமெரிக் கன் மனித நேய அமைப் பிடம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அந்த அமைப்பின் சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், மாவட் டத்தின் அலுவலருக்கு ஆசிரியையின் செயலுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித் துள்ளனர்.

இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயிலும் அந்த மாணவி ஒரு கடவுள், மத மறுப்பாளர் ஆவார். எந்த நிலையிலும் அவர் பிரார்த் தனைக் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவ தில்லை. ஏனென்றால், கட வுளுக்கு கீழாக என்று சொல்வதை அவர் எதிர்த்து வந்துள்ளார். அது போலவே, அன்றும் வெகு இயல்பாக இருப்பதுபோல் அமர்ந்து இருந்துள்ளார்.

அதைக் கவனித்த ஆசிரியை எழுந்து நிற்குமாறு கூறி உள்ளார். அதற்கு அம் மாணவி மறுத்திருந்தால் ஒழுங்கின்மை என்று கூறி தண்டனை வழங்கும் நிலை யும் உள்ளது. இதற்கெல் லாம் மேலாக, அனைத்து வகுப்புத் தோழியர்கள் முன்னிலையில் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறும் போது, பிரார்த்தனைக் கூட்டங்களில் எழுந்து நிற்காமல் போனால், அமெரிக் காவை இழிவுபடுத்திய தாகும் என்றும், அதுவும் இரா ணுவத்தை தனிப்பட்ட வகையில் மரியாதை செலுத்த தவறியதாகவும் கருதப் படும் என்றும், மேலும் தேசத்தின்மீது உள்ள பற்று, தேசத்தின் மீதான விசுவாசம் ஆகியவை வெளிப்படையா கவே கேள்விக்குரியதாகி விடும் என்றும் அந்த மாண வியிடம் ஆசிரியை கூறி உள்ளார்.

அமெரிக்கள் மனிதநேய அமைப்பின்சார்பில் மோனிகா மில்லர் அனுப்பி கடிதத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவியின் தேசப்பற்று பற்றி கேள்வி எழுப்புவது என்பது அவருக்கு அரசியல மைப்பு அளிக்கும் உரிமை களை மீறுவதாகும். பிரார்த் தனைக் கூட்டத்தில் பங்கேற் காமல் இருக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்துள்ளது.

அமெரிக்கன் மனித நேய அமைப்பின் சட்டப்பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளி நிர்வாகம் 21 நாட்களில் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பள்ளி நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆசிரி யையின் செயல்குறித்து கருத்து எதுவும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருகிறது.

அமெரிக்கப் பள்ளிகளில் பிரார்த்தனைக் கூட்டங் களில் பங்கேற்பதுகுறித்த பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் களிடையே பிரிவினைகளை வளர்ந்து வருகின்றன.

அதி லும் குறிப்பாக கடவுளுக்கு கீழாக என்கிற சொல்வது குறித்தும், பல கடவுள் களைக் கொண்டுள்ள மதங் களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் கடவுள், மதங்களை மறுக்கும் நாத்திகர்களுக்கு பிரார்த்தனைக் கூட்டங்க ளில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண் டும்.

Read more: http://viduthalai.in/e-paper/81212.html#ixzz33FUL6uqm

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது.

- (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/81208.html#ixzz33FUYCo7p

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளின் மோசமான விளைவுகள்!


கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் தன்னம்பிக் கையைத் தகர்க்கிறது என்பது மட்டுமல்ல; அது மூடநம்பிக்கையாக மாறி பெற்ற பிள்ளையையும், கட்டிய மனைவியையும் கூட நரபலி கொடுக்கக் கூடிய அளவுக்குக் கொலை வெறியை ஊட்டக் கூடியதாக இருக்கிறதே!

தன் குடும்பக் கஷ்டங்களுக்குப்பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று தந்தையே தன் பிள்ளையைக் கொன்ற சம்பவங்களைப் பார்த்த பிறகும் இவற்றை எப்படி நியாயப்படுத்துவார்கள்?

தமிழ்நாட்டில் துறையூரை அடுத்த உப்பலியாபுரம் காவல் துறை சரகத்தைச் சார்ந்தது கோனேரிப்பட்டி, அந்தவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மனைவி ராணி ஆகியோர் உள்ளனர். லாரி ஓட்டுநரான ரவிச்சந்தி ரனின் முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகளுக்குத் திருமணம் நடந்து விட்டது. இரண்டாவது மகள் பானுப்பிரியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் முசிறியையடுத்த கொளக்குடியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் அமாவாசையன்று நடு வீட்டில் சொந்த மகளை நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும்; செல்வங்கள் கிடைக்கும் என்று கூறவே, ஓட்டுநர் ரவிச்சந்திரன் தன் மகள் பானுப்பரியாவை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளான். அவனுக்கு இரண்டாவது மனைவியும், மனைவியின் தந்தையும் உடந்தையாம்.

நிலைமையைப் புரிந்து கொண்ட பானுப்ரியா வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்து கூக்குரல் போட்டுள்ளார். ஊர் திரண்டு வந்து பார்த்தபோது வீட்டின் நடுவில் குழி தோண்டப்பட்டு இருந்ததாம்; அங்கு தேங்காய், பழம், வெற்றிலை வகையறாக்கள் கிடந்தன; புதிய நபர்கள் சிலர் அங்கு அமர்ந்து கொண்டு பூஜைக்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

பிரச்சினை காவல் நிலையத்திற்குச் செல்லவே காவல்துறையினர் விரைந்து வந்து அங்குள்ளவர் களைக் கைது செய்தனர். மந்திரவாதி தப்பி ஓடி விட்டான் - காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று செய்தி வெளி வந்துள்ளது.

இந்தக் கொலை முயற்சியை என்னவென்று சொல் லுவது! இதுதான் பக்தியா? இதுதான் மூடச் சடங்குகள் காட்டும் நல்வழியா?
ஆன்மீக இதழ்களைப் பக்கம் பக்கமாக வெளி யிடும் பத்திரிகை முதலாளிகள்தான் இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு - கொலைகார சிந்தனை களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டில் திரியும் நரபலி சாமியார்கள், மந்திர வாதிகளை அடையாளம் கண்டு, காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் நரபலி சாமியார் ஒருவருக்கு மாவட்ட நீதிபதியாக இருந்த கே.ஆர். சத்தியேந்திரன் தூக்குத் தண்டனையே கொடுத்தார் என்பது இங்கு நினைவூட்டத் தக்கதாகும். தூக்குத் தண்டனை இல்லாவிட்டாலும் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விசால நகரில் ஒரு சம்பவம்; எண்ணெய் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவருக்குத் தீராத முதுகு வலி! மருத்துவமனை களுக்குச் சென்றும் பலன் கிட்டவில்லை.

வைத்தியத்தில் குணம் ஆகவில்லையென்றால் அடுத்து மாந்திரிகம் - தாந்திரிகம் தானே! ராம் சேவக் திவாரி என்ற ஒரு மந்திரவாதி குறுக்கே வந்தான். பூஜைகள் செய்தால் சரியாகி விடும் என்ற அவன் பேச்சைக் கேட்டு ஏமாந்ததுண்டு. மந்திரவாதிக்கு ஆனந்தகுமாரி, லலித்குமாரி, பூஜா திவாரி என்பவர்கள் எடுபிடிகள்!

கணவனின் நோய் எப்படியாவது குணமாக வேண் டும் என்பதில் குறியாக இருந்த மனைவி பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்ட பணத்தையெல்லாம் வாரி வாரிக் கொடுத்துள்ளார். செலவான தொகை மட்டும் ரூ.1.21 கோடியாம்!

இதற்கிடையில் அந்த மந்திரவாதி இரவுப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறினானாம்; அதற்கும் நோயாளியின் மனைவி சம்மதித்தார். விளைவு அந்தப் பெண்ணை தம் காமவெறிக்குப் பலியாக்கினான் மந்திரவாதி. அதற்குமேல் பொறுமை காட்டாத அந்த பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

மந்திரவாதியும், அவனின் எடுபிடிகளான மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியத் தண் டனைச் சட்டம் 376, 420, 384 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியாயமாக மத்திய, மாநில அரசுகள் மந்திரம் மாந்திரிகம், ஜோதிடம் என்பனவற்றை அதிகாரப் பூர்வமாக தடை செய்ய வேண்டும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று சட்டத்தில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது; அதனைச் செயல்படுத்தும் பொழுது, விஞ்ஞானத் தன்மைக்கு எதிரான - மாறான இத்தகைய தீய விளைவுகளுக்குக் காரணமான முறைகளைத் தடை செய்தாக வேண்டும்.

முதற் கட்டமாக இந்த மந்திரவாதிகளை - ஓரிடத்திற்கு வரவழைத்து அவர்களின் செயல்பாடு களை நிரூபித்துக் காட்ட ஒரு வாய்ப்புக்கூட அளித்துப் பார்க்கலாம்;

அப்படி நிரூபிக்க இயலாத பட்சத்தில், அத்தகு செயலில் ஈடுபடக் கூடாது என்று முதற்கட்ட மாக எச்சரித்து, அனுப்பலாம்; அதையும் மீறி அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைக் கூடமாகத்தான் இருக்க முடியும்.

Read more: http://viduthalai.in/page-2/81207.html#ixzz33FUgpxsw

தமிழ் ஓவியா said...


பூசணிக்காய் மகத்துவம்


புராணத்திலே கூறப்பட்டுள்ள கடவுள்கள் எப்படித் தோன்றினர் என்ற செய்திகளை நாம் படிக்க நேரிடும் போது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மக்களின் அறிவின்மையும் முட்டாள்தனமும் அவர்களுடைய விபரீதமான கற்பனையும் நமக்கு நன்கு தெளிவாகின்றது. அது - விஞ்ஞானம் வளராத காலம்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் இருந்த காலம்.

அவ்வாறு அவர்களை சிந்திக்க விடாமல் அந்த கடவுளைக் கற்பித்தவர்கள் மக்களை முட்டாள்களாக்கி விட்டிருந்த காலம்.

அவரவர் வசதி, கற்பனைக்கு ஏற்றவாறு கடவுளை கற்பனை செய்து பரப்பியவர் களும் அதை நம்பி ஏமாந்தவர்களும் வாழ்ந்த காலம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் மக்களுடைய சிந்தனை, அறிவு இரண்டுமே இன்னும் புதுப்புதுக் கடவுள்களைக் கற்பிப்பதில்தான் ஈடுபட்டு இருக்கிறது. உண்மையைச் சிந்திக்க மறுப்பதோடு தங்கள் கற்பனையைத்தான் வளர்த்து வருகின்றார்கள்.

கல்லைக் கடவுள் என்றார்கள் - அதை வணங்கினார்கள். அதற்குப் பால் அபிசேகம், நெய் அபிசேகம் நடத்தினார்கள். எண்ணெய்க் காப்பு சாத்தினார்கள். சாணிக்கு பொட்டிட்டார்கள் - சாமி என்றார்கள். கடவுளின் பெயரால் காலத்தையும் செல்வத்தையும் தங்கள் சக்தியையும் வீணாக்கினார்கள்.

இன்று இதோ ஒரு புதுக் கற்பனை!

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பல் குலங்கரா என்ற ஊரில் பூசணிக்காய்ப் பொட்டிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு ஊதுபத்தி கற்பூர ஆரத்தி காட்டி இருக்கிறார்கள். பால், நெய் என்றும் இன்னோரன்ன நைவேத்தியம் படைத்து இருக்கிறார்கள்.

இத்தனையும் செடியிலே பந்து போல் குண்டாகக் காய்க்காமல் நீள் வடிவத்திலே பாம்புபோல் காய்த்துள்ள பூசணிக்காய்க்கு அடித்த சான்ஸ். தினமும் பக்த கோடிகள் ஆயிரக்கணக்கில் அந்த பூசணிக்காயைக் கும்பிட விஜயம் செய்கின்றனர்.

வளைந்து காய்ந்த பூசணிக்காயைக் கடவுள் என்று வணங்கும் பக்தர்களே! கடவுள் உண்மையில் இருப்பாரேயானால் அந்தச் செடியிலே காய்த்துள்ள அந்த பூசணிக்காய் இன்னும் குறைந்தபட்சம் ஆறு மாதமாவது காய்ந்துப் போகாமல் இருக்குமா?

ஒரு பூசணிக்காய் இயற்கைக்கு மாறாக வளைந்து காய்த்ததைக் கடவுள் என்று வணங்குகிறீர்களே...! உலகத்தில் இயற்கையாக பிறவாமல் வளைந்த முதுகோடு (கூன்) பிறக்கிறார்களே அவர்கள் எல்லாம் கடவுள்களா? அல்லது பிறவிக் கோளாறுகளோடு பிறக்கிறார்களே அவர்களெல்லாம் கடவுள்களா? அவர்களுக்கு பாலாபிசேகமும், நெய்யாபிசேகமும் செய்தீர்களா? அல்லது செய்ய முன் வருவீர்களா?

இன்னுமொரு சுவையான செய்தி... இந்தப் பெயரைச் சொல்லி பண்ட் கலெக்சன் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். இது என்ன நீங்கள் செய்கின்ற விபரீதமான கற்பனைக்கு கூலியா?

ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு, நாள்: 26.5.1978

Read more: http://viduthalai.in/page-7/81239.html#ixzz33FVQXq7B

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
ஜாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

Read more: http://viduthalai.in/page-7/81240.html#ixzz33FVbZhC7

தமிழ் ஓவியா said...


பக்திப் பண்டாரங்களின் பார்வைக்கு!


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் வந்திறங்கிய பயணிகளிடம் ரிக்ஷாக்காரர்கள் எப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆள் பிடிப்பார்கள் என்பது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்களுக்கு தெரியும். அதைப் போல, பூரி கோயிலில் பக்தர்களை இழுத்துப் பிடிக்கிறார்கள்.

பண்டாக்கள் எனப்படும் பார்ப்பன அர்ச்சகர்கள். இது பற்றி இவ்வார சண்டே (மே 28) ஏட்டில் ஒரு தம்பதிகள் பெற்ற அனுபவம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் கீழ்க்கண்டவாறு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

கடந்த கோடை விடுமுறையின் போது நாங்கள் பூரிக்கு செல்ல நேரிட்டது. ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் நானும் என் கணவரும் ஏறிக்கொண்டு பூரி ஜெகநாதன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றோம். கோயிலை நோக்கிச் செல்லும் மய்ய வீதி வந்ததும் கிடு கிடு என்று எங்களை நோக்கி பண்டாக்கள் எனப்படும் அர்ச்சகர்கள் ஓடி வந்தார்கள். எங்களை சூழ்ந்தது ஒரே அர்ச்சகர்கள் கூட்டம் எங்களுக்கு முக்தி அளிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்!

நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு நின்றது அந்தக் கூட்டம். ஒரு வயதான பல் எல்லாம் போன அர்ச்சகர் ஒருவர் எங்கள் ரிக்ஷாவுக்கு முன் வந்து நின்று கொண்டு இப்படியே வாருங்கள் என்று வழிகாட்டி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். கூட்டத்திலிருந்து எல்லா பண்டாக்களையும் பிடித்து தள்ளிவிட்டு முன்னே ஓடி வந்தார். அவசர அவசரமாக எங்களுக்கு உத்தரவிட ஆரம்பித்தார். இதற்கு மற்றொரு இளம் பார்ப்பன அர்ச்சகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

அட முட்டாளே, என்ன விளையாடறே, இது என் கிராக்கி என்று உனக்கு தெரியாதா? ஒவ்வொரு வருஷமும் இவா பூரிக்கு வருவா ஒவ்வொரு முறையும் நான்தான் கோயிலுக்கு அழைத்துச் செல்வேன் தெரியுமா? என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

அடப்பாவி, என்ன அபாண்டமாகப் புளுகுகிறானே, என்று நான் எதிர்ப்பைத் தெரிவிக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது, இந்த அர்ச்சகன் என்னை பேச விடாது, வலது கையை தூக்குங்கள் என்றான்.

உடனே கையில் இரண்டு இலையை எடுத்து தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து 2 சொட்டுத் தண்ணீரை விட்டு வாங்கோ, இப்போ நீங்கள் தரிசனத்துக்கு ரெடியாயிட்டேள் என்றான். இதுதான் சமயம் என்று என் கணவர் குறுக்கிட்டுப் பேசினார். ரொம்ப நன்றி நாங்கள் இந்தக் கோயிலுக்கு நாங்களாகவே போய்க் கொள்கிறோம். எங்களை விடுங்களேன் என்றார்.

அர்ச்சகர்கள்தான் பகவானிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்களே கூறுகிறதே, தெரியாதோ? என்றான் அந்தப் பூசாரி. எனக்கு அதெல்லாம் தெரியும். வழிவிட போகிறீங்களா, இல்லையா? என்று ஆத்திரத்துடன் கேட்டார் என் கணவர்.

நீங்கள் இந்துக்கள்தானா? என்று சந்தேகத்துடன் கேட்டான் ஒரு பூசாரி. ஆமாம் என்று சொன்னதுதான் தாமதம் அப்படியானால், உள்ளே பகவானைச் சென்று பார்க்காமல் உங்களை விடமாட்டோம் என்று மிரட்ட ஆரம்பித்தனர். ஒருவன் ஓடி வந்து காதில் ரகசியமாக உள்ளே இருக்கும் விசேஷ அர்ச்சகரை எனக்கு நன்றாகத் தெரியும்.

10 ரூபாய் கொடுத்தால் போதும், விசேஷ பூஜை நடத்துவார். நிச்சயமாக சொர்க்கத்தில் உங்களுக்கு இடம் கிடைத்து விடும் வாங்கோ என்றான். நாங்கள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சரி, ஏன் பேச்சை வளர்த்திக் கொண்டு 8 ரூபாய் மட்டும் கொடுங்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் ஜாதி என்ன சொல்லுங்கோ என்று ஆரம்பித்தான்.

இப்போது எங்களைச்சுற்றி வேடிக்கைப் பார்க்கும் கூட்டம் இன்னும் அதிகரித்து விட்டது. இதுதான் சந்தர்ப்பம் என்று என் கணவர் சொன்னார் என்ன, எங்கள் ஜாதிதானே உங்களுக்கு தெரியவேண்டும்? நாங்கள் அரிஜன்! அவ்வளவுதான். இதைச் சொல்லியதுதான் தாமதம். மின்சாரம் பாய்ந்தது போல் அவர்களுக்கு அதிர்ச்சி! எல்லா அர்ச்சகர்களும் முணுமுணுத்துக் கொண்டனர். கிசுகிசு என்று ரகசியம். ஷாந்தம் பாபம் என்று எல்லோரும் ஒரே சத்தம் போட்டனர்.

எந்தத் தொல்லையும் இடையூறும் இல்லாமல் நாங்கள் கோயிலுக்குச் சென்றோம். நல்ல காரியத்துக்காகப் பொய் சொல்வதில் தவறில்லையே, மகா பாரதத்தில் அரசன் யுதிஷ்திரதா கூட நல்ல காரியத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறான்.
இவ்வாறு அந்த பக்தை எழுதியிருக்கிறார்.

- சண்டே, 28.5.1978

Read more: http://viduthalai.in/page-7/81241.html#ixzz33FVr3xRc

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டதா வது:

இந்த மணவிழாவிலே நான் கலந்து கொள்வது என்பது அதிசயமானதல்ல. உரிமை, உறவின் பாற்பட் டது என மிக சிறப்பாக கூற வேண்டும். தந்தை பெரி யார் இருந்தவரையிலே அவர்கள் தலைமை தாங் குவார்கள் - அடுத்து அன்னை மணியம்மையார் இயக் கத்திற்கு தலைமை தாங் கியதால் அவர்கள் இந்த பணியை செய்திருப்பார் கள். அதே போல இந்த பணியை செய்வதற்கு என்னை எப்போதும் உரி மையோடு அம்மையார் வசந்தா, மண்டோதரி போன்றோர்கள் எந்த மண விழாவாக இருந்தாலும் இதற்கு முன்பு நடந்த மணவிழாவாக இருந்தா லும், எல்லா மணவிழாக் களிலும் வந்து நேரிலே அழைத்து சண்டை போட்டு தேதி வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

வேறு நிகழ்ச்சிகள் அடுக்க டுக்காக இருந்த நேரத்தில் ஒரு முறை தஞ்சை பாலி டெக்னிக்கிலே அவர்கள் வந்து சந்தித்தபோது வரு வதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது, சுற்று பயண நெருக்கடி இருக்கிறது. உடல் நிலை இப்படி இருக் கிறது என்றெல்லாம் சொன்னபோது கூட அம் மையார் ஏற்க தயாராக இல்லை. அதுவும் கல் யாணி மறைவுக்கு பின் னாலே. மிக வேகமாக என் னிடம் உரிமையோடு கோபித்து கொண்டார்கள்.

அப்படியானால் நீங்கள் எப்போது தேதி கொடுக் கிறீர்களோ அப்போதே திருமணத்தை வைத்து கொள்கிறோம். வேறு யாரையும் அழைத்து நடத்த நான் விரும்பவில்லை என கட் அண்டு ரைட்டாக மிக வேகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கோபமாக வெளியே வந்தார். எல்லோ ருக்கும் வியப்பு. நான் உடனே அழைத்து நீங்கள் கேட்கிற தேதியிலேயே கட் டாயம் வருகிறேன் என சொல்லி மற்றவர்களுக்கு நான் சமாதானத்தை சொல்லி அந்த தேதியை கூட மாற்றி வைத்துவிட்டு இந்த திருமணத்திற்கு வந் தேன்.

எனவே இவ்வளவு நெருக்கமான உறவு கருப்பு சட்டைகாரர்களுக்கு தான் உண்டு. கொள்கை உறவு தான் கருப்பு சட்டைகாரர் களிடத்திலே இருக்கக் கூடிய தீவிரமான உறவா கும். எங்களுடைய உண் மையான உறவுக்காரர்கள், கழக உறவுதான் மிக முக்கியமானதாகும்.

தோழர் கணபதி, சிவா னந்தம் ஆகியோர் கல்யாணி அவர்களோடு என்றைக் கும் சேர்ந்திருப்பார்கள். நரசிங்கம் பேட்டை முத்து கிருட்டிணனை பார்க்க முடியாத சூழ்நிலை. பெரி யார் இயக்கத்திலிருந்து பணிகளை தீவிரமாக செய்ய கூடியவர்கள். எனவே இது எங்கள் குடும்பத்து மண விழா. எனவே மிகுந்த மகிழ்ச்சியோடு இதிலே பங்கேற்கிறேன். மண மக்கள் சுபா (எ) கல்யாணி - மனோகரன் இருவருமே நன்கு படித்த பொறியா ளர்கள்.

அதுதான் பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி, இதைவிட பொருத்தமான மணமக் களைத் தேடி கண்டுபிடிக்க முடியாது, மணமகன் கத் தாரிலே பணியாற்றுவதை அழைப்பிதழிலே காண்கி றோம். சுபா பெரியார் மணியம்மை பல்கலை கழக மாணவி ஆவார். இது எங்களுடைய பல்கலை கழக மாணவி என்ற உரி மையும் உள்ளது.

சுபா திரு மணத்தை நானே தலைமை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி, அவர்கள் இப்போது எம்பிஏ படிப்பது மிகுந்த பாராட் டுக்குரியது என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/81243.html#ixzz33FWbLXye