Search This Blog

16.5.14

கடந்தாண்டு பச்சை ஆடை உடுத்தித் தான் கள்ளழகர் வந்தார் - பலன் என்ன?சிந்திப்பீர்களா பக்தர்களே?




மதுரையில் சித்திரைத் திருவிழா, அழகர் வைகை யில் இறங்குவார் - அவர் எந்த நிறத்தில்  ஆடை உடுத்தி வருகிறாரோ - அதற்கேற்றவாறு நாட்டின் நலம் இருக்கும் என்றெல் லாம் கேட்டுக் கேட்டு காது புளித்துப் போன ஒன்று.

கடந்தாண்டுக்கூட பச்சை ஆடை உடுத்தித் தான் கள்ளழகர் வந்தார் - பலன் என்ன? வறட்சி! வறட்சி!! வறட்சியே!!

கள்ளழகர் இறங்கி வரும் போதுகூட வைகையில் தண்ணீர் இல்லையே! மதுரை வட்டாரத்தின் வளர்ச்சி, செழிப்பு என்பது முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்ததே தவிர - அழகர் இறங்குவதல்ல - (அதுகூட அழகர் இறங்குவதல்ல - அந்தப் பொம்மையைக் கூலிக் காகத் தூக்கி வரும் பரிதாபம்தான்!)

சரி. அய்தீகம் அய்தீகம் என்று குதிப்பவர்கள் ஒரு கேள்விக்குப் பதில் சொல் லியாக வேண்டும்.

மீனாட்சியம்மன் திருக் கல்யாணம் மாசியிலும் அழகர் திருவிழா சித்திரை யிலும் தானே நடந்து வந்தது? அந்நிலை மாறி இரண் டும் சித்திரையில் வந்தது எப்படி? மீனாட்சிக் கடவுள் சைவத்துக்கும் அழகர் கடவுள் (விஷ்ணு) வைண வத்துக்கும் தானே உரியவை!

இரு பிரிவினரும் எதிலாவது ஒத்துப் போன துண்டா? ஸ்ரீமத் நாராயணன் (விஷ்ணு) தான் எல்லாக் கடவுளுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத் தான். அந்தப் பிரம்மா சங்கரனை (சிவனை) படைத்தான் என்ற கதை இருக்கு - அதுபடி பார்த் தால் நாராயணன் பாட்டன் ஆகிறார் என்று சொன் னவர் சாதாரணமானவர் அல்ல. திருவரங்கத்து ஜீயர் (கல்கி 11.4.1982).

மன்னன் திருமலை நாயக்கன் தானே வெவ்வேறு மாதங்களில் நடை பெற்ற கோயில் விழாவை ஒரே மாதத்தில் கொண்டு வந்திருக்கிறான்?

தங்கையாகிய மீனாட் சியின் கல்யாணத்துக்கு அழகர் வந்ததாகக் கூறுவ தெல்லாம் மாதத்தை மாற்றிய பிறகு திணிக்கப் பட்டதாகத்தானே இருக்க முடியும்?

அழகர் வருவதற்கு முன் தங்கை மீனாட்சியின் கல்யாணம் நடந்தேறி விட் டதாம் - கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட் டாராம் அழகர் - வண்டி யூரில்  என்ன விருந்தினர் மாளிகையா இருக்கிறது?

துலுக்காநாச்சியார் வீட்டுக்குச் சென்று விட்டா ராம் - அந்த அம்மையார் அழகருக்கு வைப்பாட்டியாம் - கடவுளின் யோக்கி யதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

அழகர் என்று ஒருவன் இருந்ததுண்டு. அவன் ஒரு கொள்ளைக்காரன் - அய் யப்பன் போல;  பின்னால் குறிப்பிட்டவர்களுக்குக் குல தெய்வப் பூஜையாகி பிறகு தலப் புராணங்கள் முளைத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டி ருக்கிறது.

பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்த மாட்டார்களே. அந்தத் தைரியத்தில் எல்லாம் நடக் கிறது- அவ்வளவுதான்!    

------------------ மயிலாடன் அவர்கள் 15-5-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
---------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று அழகர் ஆற்றில் இறங்கினார்; பாதி வழியிலேயே திரும்பிய நிகழ்ச்சிப்பற்றி பரவசத்துடன் பக்தியால் உருகி - மெல்டாகி - போதையில் உள்ளனர்! (எல்லாம் அர்ச்சகப் பார்ப்பனர்தான்  செய்வர்)

மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாணம் ஏன் ஆண்டு தவறாமல் நடக்க வேண்டும்; அது என்ன காண்ட்ராக்டா?

ரினிவலா (Renewal)   என்று வெளிநாட்டவர் பார்த்தால் கேட்க மாட்டானா? யோசித்தார்களா? தந்தை பெரியார் தான் கேட்பார்.

வருசா வருசம் ஏம்பா கல்யாணம் உம் சாமிக்கு? ஏற்கெனவே டைவர்சா ரத்தா என்று!

கள் அழகர் போன வருசம் தான் லேட்டா வந்தாரே தங்கைக் கல்யாணத்துக்கு; ஏன் இந்த வருசமும் லேட்டா வந்து பாதியில் வழக்கம் போல் திரும்புகிறார்! இதைவிடப் பொறுப்பற்றதனம் வேறு உண்டா?

தொடர்ந்து லேட்டா வந்தால் எந்த ஆபிசிலாவது வேலைக்கு அவரை அனுமதிப்பார்களா?

என்னே வேடிக்கைக் கூத்து?! வெட்கமாக இல்லையா உங்கள் கடவுளின் தனிப்பட்ட ஒழுக்கம்?

இந்த லட்சணத்தில் இந்து மதம் அர்த்தமுள்ள மதமாம்! அட மண்டூகச்சாமிகளே!

இதெல்லாம் மதுரையில் பெரிய பிள்ளைகள் விளையாட்டு அல்லாமல் வேறு என்ன? - வடலூர் வள்ளலார் மொழியில்.

சிந்திப்பீர்களா பக்தர்களே?

                            -------------------------- ”விடுதலை” 15-5-2014

40 comments:

தமிழ் ஓவியா said...

அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே
ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு
ஆதரவு தருவதுபற்றி யோசிக்கும் மாநிலக் கட்சித் தலைவர்கள் சிந்திக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் எச்சரிக்கை அறிக்கை

ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படு கின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத் துவத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.

மதயானை வரும் பின்னே!

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பழைய (பழ) மொழி!

மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணை களின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே என்பது புதிய அரசியல் மொழியாகும்!

இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் முதற் பக் கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக் களைத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன:

எம்.ஜி. வைத்யா கூறுகிறார்

“Modi Must deliver on Ram Temple: - RSS Leader
M.G. Vaidya wants progress on Article 370, Uniform Civil Code”

இந்துவில் வந்த படமும் வெளி வந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தி யாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; ஏற்படும் என்று எண்ணுகிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா? அந்த பதில்

ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியுள்ளார்.

நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்

அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர். எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும்பற்றிய மணியோசைகள் ஆகும்!

நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்து

இதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து.

“They [Sangh Parivar] may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if Modi budges under this pressure. But the dangers of a communal flare-up will always be there now,” ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்;

இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல் பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும் என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரான பேராசிரியர்).

எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா?

மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு...

இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி, வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்!

யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொறிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த இணையத்து தீராத விளையாட்டு விட லைகளே, காலந் தாழ்ந்தாவது வளர்ச்சி என்ற மயக்க பிஸ்கெட் பற்றிப் புரிந்து வருந்துங்கள்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - குறள் (435)

சென்னை
15.5.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/80313.html#ixzz31pwqO3ek

தமிழ் ஓவியா said...

அடடே, என்னே ஞானோதயம்!

தமிழ்நாட்டில் மக்கள வைத் தேர்தல் அமைதியாக நடக்க பொது மக்கள் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர். அதே போல பணம் வாங்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

- பிரவீன்குமார், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு

அடடே!, என்ன ஞானோ தயம்! புத்தர் பூர்ணிமாவை யொட்டி உதிர்த்த ஒளி முத்து இது! மக்கள் எல்லா ரும் நல்லபடியாக நடப்பார் களேயானால் இந்தத் தேர் தல் ஆணையம், காவல் துறை ஏன் அரசும்கூட தேவையில்லையே!

Read more: http://viduthalai.in/e-paper/80311.html#ixzz31px6OxT1

தமிழ் ஓவியா said...


புத்தரின் போதனைகளின்படி அரசு ஆட்சி புரிகிறதா? : இலங்கை வடக்கு மாகாண உறுப்பினர் கேள்வி


நல்லூர், மே 15- வடக்கின் சோகங்களை அனுசரிக்க விடாமல், அரசு தமது வெற்றியை, கட்டா யத்துடன் கொண்டாட வேண்டுமென நிர்ப்பந்தித் துக் கொண்டிருப்பது தான் இன்றைய நாட்டின் நிலைமை என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், நல்லூர் தெற்கு சன சமூக நிலை யத்தின் 65ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது தெரிவித்தார். விழா யாழ்.மாநகரசபை சனசமூக நிலையங்களின் தலைவர் திரு.க.நாகேந்திரம் தலை மையில் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இன்று சிங்கள பவுத்தர் களின் புனித நாள். அமை தியாக தர்ம சிந்தனை களோடு வாழும் வழி முறையை உலகிற்கு வழங் கியதில் பவுத்தத்திற்கு முக் கிய இடம் உண்டு.

ஆனால். அதன் வழி வந்தவர்களாகத் தங்களைக்கூறிக் கொள் ளும் ஆட்சியாளர்கள் எவ் வாறு நடந்து வந்திருக்கின் றார்கள், எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தான் நாங்கள் அனுபவ ரீதியாக கண்டு கொண்டி ருக்கின்றோம். கடந்த 66 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உண்மை யான பவுத்த சிந்தனைகளு டன் முற்று முழுதாக முரண்பட்டு வருகின்றன.

பவுத்த சிந்தனைகளை போதித்த புத்தபகவான் இன்று இருந்திருந்தால், தனது கொள்கைகளைப் பின்பற்றுவதாகச் சொல் லும் ஆட்சியாளர்கள் செய் யும் அக்கிரமங்களைப் பார்த்து தானாகவே வெட் கித் தலைகுனிந்திருப்பார்.

இந்த மே மாதம் பவுத் தர்களுக்கு எவ்வாறு முக்கி யத்துவமானதோ, புனித மானதோ, அவ்வாறே தமி ழர்களாகிய எங்களுக்கும் மிகவும் புனிதமானதும், உணர்வு பூர்வமானதுமான மாதமாகும். அதுவும் இந்த வாரம் மிகவும் உணர்வு பூர்வமான வலி சுமந்த வாரமாகும். கடந்த இறுதிப் போரிலே இலட்சக்கணக் கில், கடற்கரை ஓரத்தில் மக்கள் கொன்று குவிக்கப் பட்டதொரு மாதமாகும்.

அதில் கொல்லப்பட்ட மற்றும், காயமடைந்த எமது மக்களின் உறவினர்கள் இன்று அவர்களை நினைத்து ஒருசொட்டு கண்ணீர் கூட விட முடியாதபடி, அர சாங்கம் அவர்களை அச் சுறுத்தி வருவதுடன், தெற்கில் எமது மக்களின் அவலங்களின் மேல் பெறப்பட்ட இராணுவ வெற்றியை முழக்கங்களு டன் கொண்டாடுவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக் களையும் அதைக் கொண் டாடுமாறு பலாத்காரமாக நிர்ப்பந்தித்து வருகின்றது.

இந்த விடயமானது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒரு நிலை யாகும். இது பவுத்த மதம் கூறும் போதனைகளுக்கு எவ்வித்ததிலும் ஒவ்வாத ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி ஆர். மோகனதாஸ், யாழ். பல் கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர், எம். இளம்பிறையன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80307.html#ixzz31pxFVWUn

தமிழ் ஓவியா said...


பாலாபிஷேகம் ஒரு கேடா?


சித்ரா பவுர்ணமியையொட்டி மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பெண்கள் 1008 பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். (மாலைமலர் 14.5.2014)

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டே குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா?

Read more: http://viduthalai.in/e-paper/80308.html#ixzz31pxNkttX

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது


புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்க வேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.

(விடுதலை, 23.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/80316.html#ixzz31pxjVNAZ

தமிழ் ஓவியா said...


நம்பிக்கை விதை:16ஆவது மக்களவையில் மரண தண்டனையை ஒழிக்க முடியும்!


இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் ஸிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கம் குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்கிறது.

இதுவரை செய்தித்தாள்களின் தலையங் கத்திலும், சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விவாத மேடைகளிலும் மட்டுமே அடைபட்டுக்கிடந்த மரண தண்டனை எதிர்ப்புக் குரல்கள் தற்போது அரசியல் தளத்தில் அடி எடுத்து வைத் திருக்கின்றன. மூன்று வெவ்வேறு கூட் டணிகளில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றி ருப்பதன் மூலம் மரண தண்டனையை சட்டரீதியாக ஒழிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

சமீப காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் மரண தண்டனைக்கு எதிராக வாதங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் தேவேந்திர புல்லர் வழக்கில் சிரோமணி அகாலி தளமும், காஷ்மீரின் அப்சல் குரு வழக்கில் தேசிய மாநாட்டு கட்சியும் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இதுபோல், வழக்குகளின் அடிப்படையில் தற்காலிகமாக எழும் ஆதரவுகளுக்கு கொள்கை ரீதியான பின்புலம் இல்லை. மேலும், இதுபோன்ற குரல்கள் நிரந்தர தீர்வுக்கு வழிவகையும் செய்வதில்லை.

அரசியலமைப்பு சட்ட விதி -21ம் மரணதண்டனையும்

அரசியல் தரப்பினரை மட்டும் இதில் குறிப்பிட்டு கூற இயலாது, ஏனென்றால் ஆயுள் தண்டனை கொடுக்க அறவே இயலாது என்ற அடிப்படையில் 'மிகவும் அரிதான' குற்றங்களில் உச்ச நீதிமன்றமும் மரண தண்டனைக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

'மிகவும் அரிதான' (க்ஷீணீக்ஷீமீ ஷீயீ லீமீ க்ஷீணீக்ஷீமீ) குற்றங்கள் என்ற கூற்றை 1980ல் பச்சன் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது. அன்று முதல் கீழ் நீதி மன்றங்கள் 'மிகவும் அரிதான' என்ற கூற்றின் அடிப்படையில் மரண தண் டனை விதித்து வருகின்றன.

உரிமை சார்ந்த சட்ட இயலின் பரிணாம வளர்ச் சியில், குறிப்பாக 1978இல் மேனகா காந்தி வழக்கில் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு பிறகு பச்சன் சிங் வழக்கில் அரசியல மைப்பு சட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லாத கூற்றை மறு ஆய்வுக்கு உட் படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கூறி யிருக்கிறார்.

மிகவும் சமீபமாக, சத்ருகன் சவுகான் (2014) வழக்கில் அரசியலமைப்பு சட்ட விதி-21 அளிக்கும் பாதுகாப்பு தூக்கு கைதிக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அதனை யடுத்து, முருகன் (ராஜீவ் காந்தி கொலை) வழக்கில், உச்சநீதிமன்றம் சத்ருகன் சவுகான் தீர்ப்பில் கொடுத்த காரணத்தின் அடிப்படையில், மரண தண்டனையை குறைத்திருக்கிறது. இந்த இரு வழக்கு களிலும், கருணை மனுவை காலதாமதப் படுத்துவது அடிப்படை உரிமையை பாதிக்கவே செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.

உச்சநீதிமன்றத் தின் இந்த கருத்து மரண தண்டனை அடிப்படை உரிமையை பாதிக்கிறதா என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த சரியான காரணியாகும். இந்த தொடர் தீர்ப்புகள் மூலம் அரசியல் தளத்தில் மரண தண்டனையை ஒழிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கை விதை விதைக்கிறது.

தமிழ் ஓவியா said...


மரண தண்டனைக்கு எதிரான அரசியல் பொதுமக்களிடையே மரண தண் டனை ஒழிப்பு தொடர்பாக விவாதம் தொடங்குமேயானால் அரசியல் தலை மைகள் செயல்பட ஏதுவாக இருக்கும். இங்கே, தமிழ்நாடு ஒரு சுவாரஸ்யமான நேர் ஆய்வை நமக்கு தருகிறது.

தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின் தொடக்கம் எங்கே என்று பார்த்தால் அது ராஜீவ் காந்தி கொலை வழக்குதான். கடந்த இருபது ஆண்டுகளில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததுபோது, சமூகத்தின் மனசாட்சி அவர்கள் மீது இரக்கம் காட்டத்தொடங்கி பின்னர் மரண தண்டனைக்கு எதிராக ஒரு வெறுப்பு உணர்வாக உருவெடுத்திருக்கிறது.

தவிர நாம் அனைவருக்கும் பரீட்சயமான, டில்லி மாணவி நிர்பயா, பாலியல் பலாத் காரத்திற்கு உட்பட்டு கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியது இதர அரசியல் கட்சிகளின் கருத்துகளில் இருந்து வேறுபட்ட வலு வான முன்னெடுப்பாகும். மேலும், மரண தண்டனை குற்றங்கள் நடப்பதை தடுக் குகிறதா என்ற கேள்வியை இடதுசாரி தலைவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

மேலே குறிப்பிட்ட மூன்று கட்சிகளில் ஏதாவது ஒன்று அடுத்த மத்திய அரசில் அங்கம் வகித்தால் மரண தண்டனையை ஒழிக்க என்னென்ன சாத்தியக் கூறுகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

முதலில், வரப்போகும் புதிய அரசு சட்ட இயலின் பரிணாம வளர்ச்சியையும், தற்போது உலகில் நிலவும் சூழ்நிலையையும் கருத்தில்கொண்டு நமது சட்டத்தில் மரண தண்டனையின் தேவையை மறுஆய்வு செய்ய தேசிய சட்ட ஆணையத்துக்கு பரிந்துரை செய்யவேண்டும். சமீபத்தில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையில், சட்ட ஆணையம் மரண தண்டனையை ரத்து செய்யவும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களையும் பகுப்பாய்வு செய்யவேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் தேச துரோகம் (பகுதி 121), கொலை (பகுதி 302), தொடர் பாலியல் வன்முறை (பகுதி 376 ணி) அத்துடன் ஆயுதப்படைகள் சட்டம், ஆயுத சட்டம், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், போதை மருந்துகள் தடுப்பு சட்டம் போன்ற பதினோரு சட்டங்களில் நாடாளுமன்ற ம் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

மேலும், ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமனம் செய்து இந்த திருத் தங்களினால் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல் களை ஆய்வு செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட வழிவகை செய்யவேண்டும்.

இறுதியாக, உலகில் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில், இந்தியா மட்டும் எஞ்சிய நாடுகளுடன் மரன தண்டனையைக் கைவிடாமல் இருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய இயக்கங்களை எதிர்க்கும் பழமையான எதிர்ப்புணர்வை இந்தியா கைவிட்டு, அய்க்கிய நாடுகளின் பொது அவையில் மரண தண்டனைக்கு எதிராக தடை விதிக்கும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.

அதனைத்தொடர்ந்து, அடுத்து வரப்போகும் அரசு உரிய சட்டத் திருத் தத்தை ஆராய்ந்து, விவாதித்து இயற்று வதற்கு முன் மரண தண்டனையை செயல்படுத்த தடைவிதிக்கவேண்டும்.

இந்த முன்னெடுப்புகள் மூலம், மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற மூன்று கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு நிச்சயம் புதிய வழி பிறக்கும்.

- மனுராஜ் சண்முகசுந்தரம்.
(டில்லி பல்கலைக்கழக சட்ட மாணவர் மற்றும் நாடாளுமன்ற ஆய்வாளர்)

Read more: http://viduthalai.in/page-2/80317.html#ixzz31pxvuvGe

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் சாக்ரடீசின் வீரவணக்க நிகழ்ச்சியில் என்.ஆர்.சாமி குடும்பத்தினர் உறுதி மொழி!

காரைக்குடி, மே 15- மறைந்த தி. பெரியார் சாக்ரடீசின் வீர வணக்க நிகழ்ச்சி, காரைக்குடி சாமி சமதர்மம் அவர்களது வீட்டில் நேற்று (14-05-14) காலை 9.30 மணிக்கு தொடங் கியது. அந்நிகழ்வில் என்.ஆர்.சாமி குடும்பத்தினர், எந்த இடர் வந்தாலும்இயக்கக் கொள்கைகளை வலுவோடும், பொலிவோடும் எடுத்துச் செல்வோம் என்று கண்ணீருடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு!

காலை முதலே சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள இயக்கத் தோழர்களும், வணிகர்களும், பொதுமக்களும் காரைக்குடி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த தி. பெரியார் சாக்ரடீசின் மறைவுச் செய்தி சுவரொட்டியைப் பார்த்தும், தகவல் கிடைத்தும் திரண்டு கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து வீரவணக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுப்பினர் வழக் குரைஞர் ச.இன்பலாதன் ஒருங்கிணைத்தார்.

பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று இரங்கலுரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து, பெரியார் கல்வி நிறு வனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேரா. ப. சுப்பிரமணி யன், கோவை மண்டல தி.க. தலைவர் மருத்துவர் கவுத மன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பகுத் தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா. நேரு, சமூக ஊடகவியலாளரும், எழுத்தாளருமான முத்துக்கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம், பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், முனைவர் அதிரடி அன்பழகன், காரைக்குடி மாவட்ட தி.க. தலைவர் அரங்கசாமி, காரைக்குடி தொழில்வணிகத் துறை பொருளா ளர் சத்யமூர்த்தி,

இராமநாதபுரம் மாவட்ட தி.க. செயலாளர் முருகேசன், சிவகங்கை மாவட்ட தலைவர் சுப்பையா, காரைக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப் பாளர் முரளி, திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப் பினர் பழனி புள்ளையண்ணன், மாநில மகளிர் அணிச் செயலாளர் தஞ்சை அ. கலைச்செல்வி, சிவகங்கை நாடாளு மன்ற தி.மு.க. வேட்பாளர் சுப. துரைராஜ், காரைக்குடி மாவட்ட செயலாளர் பிராட்லா ஆகியோர் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் சிந்தியவாறே இரங்கலுரை ஆற்றினர். அனைவருமே தி. பெரியார் சாக்ரடீசின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றே குறிப்பிட்டுப் பேசினர்.

தமிழர் தலைவரின் அறிக்கை!

இரங்கலுரையின் போது, தலைமை கழகப் பேச்சாளர் அதிரடி க. அன்பழகன் அவர்கள் தமிழர் தலைவர் எழுதிய இரங்கல் அறிக்கையை கூடியிருந்தவர்கள் மத்தியில் வாசித்தார்.

தமிழர் தலைவரின் அறிக்கையை படித்தபோது அவர் குரல் பல இடங்களில் கம்மியது, தடுமாறியது. அப்படி கம்மிய போதெல்லாம் திராவிடமணி, ஆசிரியரைக் குறிப்பிட்டு, அய்யாவே அழுதிட்டாரே, நாம் என்ன செய்வது என்று கதறினார்.

கொள்கையில் ஒருநாளும் சமரசமில்லை!

வீரவணக்கவுரையின் இறுதியில் மறைந்த தி. பெரியார் சாக்ரடீசின் சகோதரரும், காரைக்குடி மாவட்ட தி.க. செயலாளருமான பிராட்லா பேசும்போது, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். ஆனாலும், எந்த இடர் வந்தாலும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் , பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் வழிகாட்டுதலில் பெரியார் பணி முடிக்க அர்ப்பணிப்போடு இன்னும் வேகமாக செயல்படுவோம்.

ஒருபோதும் கொண்ட கொள்கையை விட்டுவிட மாட் டோம். அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று. பெரியார் சாக்ரடீசு மறைவால் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் இன்னும் வலுவோடும், துணிவோடும் இயக்கப் பணிகளை ஆற்றுவோம் என்று சிந்தும் கண்ணீருடன் கம்பீரமாக தன் குடும்பத்தாரின் சார்பில் அறிவித்தார்.

தமிழ் ஓவியா said...

இறுதிப்பயணம்

அதன்பிறகு, பிராட்லா மிகுந்த உணர்ச்சியோடு வீர வணக்க முழக்ககங்களை எழுச்சியோடு எழுப்பினார். கூடி யிருந்தவர்கள் அனைவரும் அதை பின்பற்றி முழங்கினர். அதைத்தொடர்ந்து மவுனமாகவும் இரண்டு நிமிடம் வீர வணக்கத்தை மறைந்த பெரியார் சாக்ரடீசுக்கு செலுத்தினர்.

சரியாக காலை 10 மணிக்கு இறுதிப்பயணம் தொடங் கியது. ஊர்வலம் அய்ஸ்கேணி வீதியிலுள்ள சாமி சமதர்மம் வீட்டில் தொடங்கி, கீழத்தெரு, கண்டனூர் சாலை, காந்தித்திடல், ஆலங்குடியார் வீதி, புதுச்சந்தை வழியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை அமைதியாக, போக் குவரத்திற்கு இடையூறு இல்லாமல், கோயில் பணிக்கு குந்தகம் இல்லாமல் நடைபோட்டு, சந்தை பேட்டை மயானத்தை அடைந்தது.

குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் உட்பட, தோழர்கள் அனைவரும் எந்தவிதமான சடங்குகளும் இன்றி பெரியார் சாக்ரடீசின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அடுத்த தலைமுறையினரின் அணிவகுப்பு

முன்னதாக, இறுதிப்பயணம் தொடங்கிய போது அந்த ஊர்வலத்தின் முதல் வரிசையில் மூன்றாவது தலைமுறை யினர் பிரின்சு, புரூனோ, நான்காவது தலைமுறையினரைச் சேர்ந்த பவானி, தமிழீழம் (பெரியார் சாக்ரடீசு மகள்), டார்வின் தமிழ் ஆகியோர் இருபுறமும் இரண்டு கழகக் கொடி ஏந்திய வண்ணம் வழிகாட்டுவது போன்று சென்ற காட்சி, மூன்றாவது தலைமுறை பெரியார் தொண்டனின் மூத்த மகன் மறைந்தபிறகு, இந்த இழப்பு ஈடுசெய்ய இயலாத இழப்புதான், ஆனாலும், இயக்கக் கொள்கை களை இன்னும் வலுவோடு எடுத்துச் செல்வோம் என்று என்.ஆர்.சாமி குடும்பத்தின் சார்பில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மெய்ப்பிப்பது போல இருந்தது.

Read more: http://viduthalai.in/page-3/80292.html#ixzz31pyu9RR0

தமிழ் ஓவியா said...


கடவுள் ச(ப)க்தியின் பலன் இவ்வளவுதான்!


ஏழுமலையானனை தரிசித்த நீதிபதி விபத்தில் பலி!

திருப்பதி, மே. 15-கர்நாடக மாநிலம் பெல் லாரியைச் சேர்ந்தவர் ருத் ரமணி (45). மைசூரு மாவட்ட நீதிபதியாக இருந் தார். இவர் குடும்பத்துடன் திருப்பதி வந்தார். ஏழு மலையானை தரிசிக்க பாதயாத்திரையாக அலிபிரி வழியாக நடந்து சென்றனர்.

திருமலை நுழைவு வாயில் அருகே சாலையை கடந்தார். அப்போது திரு மலையில் இருந்து திருப் பதி வந்த அரசுப் பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ருத்ரமணி கீழ் திருப்பதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந் தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

கிரிவலம் சென்ற பொறியியல் மாணவர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை, மே.15- சித்ரா பவுர்ண மியை யொட்டி திருவண் ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரி வலம் சென்றனர். சென்னை தனியார் பொறியியல் கல் லூரி மாணவர் அங்கப்பன் (எ) விக்னேஷ் (வயது 22). திருவண்ணாமலையை சேர்ந்த தனது கல்லூரி நண்பர் பூர்ண சந்திரன் மற்றும் நண்பர்கள் 6 பேர் உடன் கிரிவலம் வந்தார்.

இரவு 12 மணியளவில் கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கிப் பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தனர். அப் போது சூறைகாற்றுடன் மழை பெய்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விளம் பரப் பதாகை ஒன்று திடீ ரென முறிந்து அங்கப்பன் மீது விழுந்தது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்தும் மாணவர்கள் கிரிவலம் வந் தனர். அண்ணா நுழைவு வாயில் அருகே வந்து கொண் டிருந்தனர். அப்போது அங்கு பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்து முகாமில் சிகிச்சை பெறுவதற்காக அங்கப்பன் சென்றார். அவ ருடன் நண்பர்கள் பூரண சந்திரன், சிதம்பரத்தை சேர்ந்த ராகுல் பிரசாத் உடன் சென்றனர்.

அப்போது அங்கு போடப்பட்டிருந்த டியூப் லைட் மின்சார ஓயர் மீது அங்கப்பனின் கை உரசி யது. இதில் அவரை மின் சாரம் தாக்கியது. தூக்கி யெறியப் பட்ட அங்கப்பன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். காப் பாற்ற முயன்ற நண்பர்கள் பூரண சந்திரன், ராகுல்பிர சாத் படுகாயம் அடைந்த னர். அவர்கள் 2 பேரும் அரசு மருத்தும னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. அங்கப் ப னின் சொந்த ஊர் திருநெல் வேலி மாவட்டம், சுத்தமல்லி. மாணவர் இறந்த தகவல் அவரது தந்தை சாமிஜி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திரு வண்ணாமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pz7WIpL

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் தகராறு

வலங்கைமான். மே. 15- வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத் தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த தேர்த் திரு விழா நடந்தது. அப்போது ஆண்டாங்கோவில் கடை வீதியில் வெடி வெடித்த போது அங்கிருந்த ஒரு கட்சி கொடி மேடை சேதம் அடைந் ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாஞ் சேரி பகுதியினருக்கும் ஆண் டாங்கோவில் பகுதியில் வசிப்போருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவில் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அப்போது கட்சி மேடை சேதம் அடைந்தது தொடர்பாக பேசிய போது இருதரப்பினரிடையே தக ராறு ஏற்பட்டது. இதில் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபு (வயது 30), அன்பரசு (30) ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப் பட்டனர்.

இதனை தொடர்ந்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட் டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவித சம்பவம் ஏற் படாதவாறு பாப நாசம் டி.எஸ்.பி. சிவாஜி அருட் செல்வன் தலைமை யில் ஏராளமான காவல் துறை யினர் குவிக்கப்பட்டு நிலை மையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வலங்கைமான் தாசில்தார் வெங்கட்ராமன், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், மகேஷ், தங்க துரை உட்பட வருவாய் துறை அலுவலர் கள் சம்பவ இடத்தில் விசா ரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர் பாக வலங்கைமான போலீ சார் ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, ரகு, ஆறுமுகம், சதீஸ், மற்றொரு ஆறுமுகம், விவேக், சேட்டு, மகேந் திரன், சரவணன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விவாரணை மேற் கொண்டு உள்ளனர். இச் சம்பவத்தால் ஆண்டாங் கோவில் மற்றும் மாஞ் சேரியில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில் உண்டியல் கொள்ளை

தண்டையார்பேட்டை, மே 15- வண்ணாரப் பேட்டை, எம்சிஎம் கார் டன், முதல் தெருவில் சிறீ வேங் கட முடையான் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்ததும், பூசாரி ரவி கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோயிலை திறக்க வந்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 2 உண் டியல்களை உடைத்து அதி லிருந்த பணம், பூஜை அறையில் இருந்த வெள்ளி மற்றும் பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுகுறித்து தண்டை யார்பேட்டை காவல் நிலை யத்தில் ரவி புகார் செய்தார். காவல் நிலைய ஆய்வாளர் தெய்வேந்திரன் சம்பவ இடத் துக்கு சென்று விசாரித்தார். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின் றனர்.

Read more: http://viduthalai.in/page-3/80291.html#ixzz31pzGhQlu

தமிழ் ஓவியா said...

எப்படி உருவானது ஸ்டெதாஸ் கோப்?

1816இல் 'ரெனே லென்னக்' என்கிற பிரான்ஸ் மருத்துவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யம். இவர் காலத்தில் நோயாளியின் இதயத் துடிப்புகளைத் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் தங்கள் காதுகளை நோயாளியின் மார்பில் நேரடியாக வைத்துக் கேட்க வேண்டும்.

ஆண் நோயாளிகளுக்கு இது ஓகே; பெண்கள் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஒருமுறை பருமனான ஒரு பெண் நோயாளியின் இதயத் துடிப்பைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் லென்னக்குக்கு ஏற்பட்டது. அவரின் நெஞ்சின் மீது லென்னக் தன்னுடைய காதை என்னதான் அழுத்தி வைத்துக் கேட்டாலும் இதயத் துடிப்பு பிடிபடவில்லை. அப்போதுதான் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்தார் லென்னக்.

1816 செப்டம்பர் மாதத்தில் ஒரு காலைப் பொழுதில் அவர், பாரிஸ் நகரில் லீ லோவர் அரண்மனையைச் சுற்றி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு சிறுவர்கள் ஒரு நீளமான மரத்துண்டை வைத்து விளை யாடிக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அந்த மரத் துண்டின் ஒரு முனையைக் குண்டூசியால் கீறி ஒலி எழுப் பினான்.

இன்னொரு சிறுவன் மரத்துண்டின் மறுமுனை யைத் தன் காதில் வைத்துக் கொண்டு அந்த ஒலியைக் கேட்டு குதூகலித்தான். பார்த்த லென்னக், 'இதயத் துடிப்பைக் கேட்க இந்த வழியைப் பயன்படுத்தலாமே' என்று யோசித்தார். ஒரு நீண்ட பேப்பரைச் சுருட்டி உருளை மாதிரி செய்தார். அதை மிகவும் குண்டாக இருந்த ஒரு நோயாளியிடம் சோதித்துப் பார்த்தார்.

இரண்டடி நீளம் இருந்த அந்த உருளையின் ஒரு பக்கத்தை நோயாளியின் நெஞ்சிலும் மறு பக்கத்தைத் தன் காதிலும் பொருத்திக் கேட்டார். என்ன ஆச்சர்யம்... நோயாளியின் நெஞ்சில் நேரடியாக காதை வைத்துக் கேட்பதைவிட பல மடங்கு துல்லியமாகக் கேட்டது இதயத்தின் ஒலி.

இதை அடிப்படையாக வைத்து 1819 இல் மூன்றரை செ.மீ. விட்டமும் 25 செ.மீ. நீளமும் கொண்ட, ஒரு காதை மட்டுமே வைத்து கேட்கக் கூடிய மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை லென்னக் தயாரித்தார். இதுதான் உலகம் கண்ட முதல் ஸ்டெதாஸ்கோப்! அதன் பிறகு அது பல பரிமாணங்களை எடுத்தது. 1843 இல் இரு காதுகளை வைத்துக் கேட்கும் ஸ்டெதாஸ்கோப் உருவானது.

Read more: http://viduthalai.in/page-7/80276.html#ixzz31pzeITeg

தமிழ் ஓவியா said...

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!

கோவில் விழாவில் தகராறு இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

காரைக்குடியில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகரா றில் 2 இளைஞர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி பர்மா காலனி அழகப்பா நகரில் பெரிச்சியம்மன் கோவில் திருவிழா நடை பெற்று வருகிறது. விழாவில் உரி யடிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று அதே பகுதியை சேர்ந்த சங்குப்பாண்டி என்பவர் உரிஅடித்தாராம்

அப்போது அவரை பாரி நகரைச் சேர்ந்த விஜயக்குமார் (வயது 24), வெங்கடேஷ் (26) ஆகி யோர் விசில் அடித்துகேலி செய்தனராம். இதில் ஆத் திரம் அடைந்த சங்குப் பாண்டி தனது நண்பர்கள் துரைப் பாண்டி, மணி கண்டன், காளி தாஸ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார், வெங்க டேஷ் ஆகியோரைத் தாக்கி கத்தியால் குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த இரு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து சங்குப்பாண்டி, காளிதாஸ், ரமேஷ் ஆகி யோரை கைது செய்தார். துரைப் பாண்டி, மணிகண்டன் ஆகியோரை தேடி வருகிறார். கோவில் வழிபாடு தொடர்பாக மோதல்!

தம்மம்பட்டியை அடுத்த மேல்வாஞ்சாரை கிராமத்தில் ராமர் கோவில், பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக நடுவஞ்சாலை, பழமரத் தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிலர் சென்றனர். அப்போது கோவில் பூசாரி கோவிலின் சாவியை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களி டையே வாக்குவாதம் ஏற் பட்டது. இந்த நிலையில் நடுவஞ்சாரை, பழமரத் தூர் ஆகிய கிராமங் களைச் சேர்ந்த சிலருக்கும், மேல் வாஞ்சாரை கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒருவரை யொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதில் சின்னக்குழந்தை, கோவிந்தன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம டைந்தவர்கள் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக தம் மம் பட்டி காவல்துறை யினர் 3 கிராமங்களையும் சேர்ந்த 15க்கும் மேற் பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vlyKuPo

தமிழ் ஓவியா said...

கோவில் விழாவில் பயங்கர மோதல்!

பழனி அருகே உள்ள இந்திராநகர் நாயக்கர் தோட்டம் பகுதியில் பிள் ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா வுக்காக வரிவசூல் செய்த போது பிரபாகரன்(29) என்பவர் சென்ற வரு டத்தை விட இந்த வருடம் அதிகமாக வரி கேட் கிறீர்கள்.

எனவே நான் சென்ற வருடம் கொடுத்த வரிதான் கொடுப்பேன் என்றார். ஆனால் அவர்கள் வரி வாங் காமல் சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடந்த போது பிரபாகரன் தனது நண்பர்கள் ராஜா, பெரிய சாமி, சுரேஷ், முனி யாண்டி, நிலவாழன், காளீஸ்வரன் ஆகியோரு டன் சென்றார். அப்போது அவர்கள் குடி போதையில் கலை நிகழ்ச் சியை நடத்த விடாமலும், மைக்செட் மற்றும் டியூப் லைட்களை உடைத்த தாகவும் கூறப்படுகிறது.

இதனை ஆனந்தகுமார், வேலப்பன், செந்தில், ஆனந்தம், நடராஜ், குமார், மகுடீஸ் வரன் ஆகியோர் தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பிரபாகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையை சிகிச் சைக்காக சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து பிரபா கரன் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தனித் தனியாக பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்து லெட்சுமி வழக் குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vm5uFb6

தமிழ் ஓவியா said...

அழகரை தரிசிக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று காலை இறங்கினார். அழகரை தரிசிக்க மதுரை மற்றும் விருதுநகர், சிவ கங்கை, போன்ற மாவட் டங்களில் இருந்து பல்லா யிரக் கணக்கான பக்தர்கள் வந்து குவிந்தனர்.

தல்லாகுளம் வந்த போது ஆத்திக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி, சூரியா (32) என்பவர் அழகரை தரிசிக்க சென்றார். அப்போது கூட் டத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு ஆசாமி அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டான். இது குறித்து சூரியா காவல்துறை யில் புகார் செய்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80341.html#ixzz31vmCYeXc

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சாதி


பார்ப்பன சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும்வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்துவரும். - (விடுதலை, 29.5.1973)

Read more: http://viduthalai.in/page-2/80348.html#ixzz31vmOnuX8

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி: நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!


விடுதலை செய்தி எதிரொலி:

நாகர்கோயில் டவுன் ரயில் நிலையப் பணிகள் ஆரம்பம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தமிழ்நாட்டி லுள்ள ரயில் நிலையங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமுறிக் கொண்டிருந்தனர்; பல போராட்டங்களையும் நடத்தினர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம். அதனால் சமூக ஆர்வலர்கள் பலர் திராவிடர் கழகத்தை அணுகினர். இது சம்பந்தமாக விடுதலை (27.3.2013) குறிப்பிட்டிருந்ததாவது:

விடுதலையின் பெருமையை - திராவிடர் கழகத்தின் பணிகளை அறிந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திரு வனந்தபுரம் ரயில்வே கோட்டத்தால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையங்களைப் பற்றி அந்தக் கோட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுத் தார்கள். முதலில் நாம் நாகர்கோயில் டவுன் (Nagercoil Town) ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத் தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக் கின்றோம்.

குமரி மாவட்டத்தின் தலைநகரமான நாகர்கோயிலின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் உள்ளது. ஆனால், இங்கே எந்த அடிப் படை வசதிகளும் இல்லை. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிமெண்ட் பல கையில் ஓய்வெடுக்கின்ற நிலையை இங்கே காணலாம்.

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படுகின்ற ஹப்பா, பிலாஸ்பூர் விரைவு வண்டிகள் நாகர் கோயில் சந்திப்பு நிலையத்துக்குச் செல்லாமல் இந்த நிலையம் வழியாகவே சென்று வருகின்றன. இத்தகைய முக் கியத்துவம் இருந்தும் இங்கே எவரும் பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்வதே இல்லை என்று அந்த நிலைய நிரு வாகமே சொல்கின்றது.

இந்த நிலையத்திலுள்ள குறை பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, உடனே உரிய முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார், இணை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிக் கல் நாட்டப்பட்டு 40 ஆண்டுகள் தான் ஆகின்றது. ரயில்கள் ஓடத்துவங்கிய பின் 30 ஆண்டுகளாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த நாகர்கோயில் டவுன் ரயில் நிலையத்தின்மீது தெற்கு ரயில்வே தலைமையின் பார்வை விடுதலையின் பணியால் விழுந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார்.

அந்தக் கட்டத்தில் கன்னியாகுமரியி லும் பெரும் குறைபாடு காணப்பட்டது. பயணிகளுக்கு கழிவறை இல்லை என்பதே அது. பொது மேலாளர் நேரில் வருகை புரிந்து பார்வையிட்டு, பூட்டப் பட்டிருந்த காத்திருப்போர் அறையை திறக்க வைத்தார். இதன் விளைவாக பயணிகள் நிம்மதியான மூச்சை விட்டனர். மேலும், நாகர்கோயில் டவுன் நிலையம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள்.

தொடர்ந்து, நாகர்கோயில் டவுன் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நபர் மாற்றப்பட்டார். காண்ட்ராக்ட் பணிகள் விரைவாகவே நடந்தன. இங்கே ரயில்வே கிராசிங் வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு வழங்குமிடம், குடிநீர் வசதி, கழிவறை வசதி என ரூ. 2 கோடி செலவில் மேம் பாட்டுப் பணிகள் செய்யப்பட உள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகின்றது. ஜனவரி 31 ஆம் நாள் திருவனந்தபுரம் கோட்ட புதிய மேலாளர் சுனில் பாஜ்பாய், கோட்ட ரயில்வே பொறியாளர் சிறீகுமார், கோட்ட உதவிப்பொறியாளர் ஆனந்த் ஆகி யோர் நாகர்கோயில் டவுன் நிலையத் துக்கு வருகைபுரிந்து ஆய்வு செய் தார்கள்.

முப்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்ற நிலையில் இருந்த ஒரு நிலையம், திராவிடர் கழகத்தின் தலையீட்டால் விரைவாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்ற நிலையைப் பார்த்த பொதுமக்கள், திராவிடர் கழகத்துக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றார்கள்.

- த.அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page-2/80351.html#ixzz31vmmfht1

தமிழ் ஓவியா said...


கடவுள் இல்லை!


ஒன்றுமில்லாத இந்த ஆகாயத்திலே கடவுளை வைத்திருக்கும் மனிதர்களை நீ நம்பாதே.
- பெர்னாட்சா

கடவுள் என்பது கற்பனையப்பா கற்பனை
- காண்டேகர்

கடவுளை யாரும் கண்டதில்லை.
- குருசேவ் (அய்.நா. சபையில்)

மனிதனுக்கு கேவலம் ஒரு புழுவை படைக்கத் தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் ஆயிரக்கணக்கான கடவுளைப் படைக்கத் தெரியும்.
- ஒரு மேநாட்டறிஞன்

உனக்கெட்டாத கடவுளைப் பற்றி நீ நம்பாதே
- வால்விச்மன்

கடவுள் என்பது திருடர்களின் இரதத்திற்காக செய்யப்பட்ட கடையாணி போன்றது.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voXQLUs

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் (Barbarians) எனப் பொருள் கூறப் பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31vojo1cu

தமிழ் ஓவியா said...

பேய்க்கு திருமணம்!

பேய்க்கு திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டால் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில் இங்கு இதுவும் நடக்கும் - இன்னும் கொஞ்சம் அதிகம் நடக்கும்.

ஜாம் நகரில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரதா என்ற 16 வயது பெண்ணுக்கும் வாகனர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜகதீஸ் சந்திரா சோலங்கி என்பவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணம் நடக்கும் முன்னரே மணமகள் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டு விட்டது. இத்துடன் கதை முடிந்து விட வில்லை. இனி மேல்தான் ஆரம்பமாகிறது.

இறந்து போன சாரதாவின் ஆத்மா சாந்தியடைய வில்லை. அவள் பேயாக அலைந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவள் குடும்பத்தினர் நம்பினார்கள்.

அவளுடைய தாயையும், சகோதரனையும் அவளுடைய பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாகவும் அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த பையனையே திருமணம் செய்துக் கொள்ள விரும்பு வதாகவும் தாயார், சகோதரன் மூலம் அந்த பேய் தெரிவித்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தப் பேயைக் கண்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பீதியடைந்தார்கள்.

பேயை வீட்டை விட்டு விரட்டுவதற்கு திட்டமிட்டனர். பேய்க்கு திருமணம் நடத்தி வைத்தால் பேய் கணவனுடன் வீட்டை விட்டு ஓடிவிடும் என்று கருதி பேய் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு சாரதாவின் சிலை செய்யப்பட்டு மண வறையில் சாரதாவின் சிலை அமர்த்தப்பட்டது. மணமகள் வேண்டுமா? எங்கு போவது? உடனே ஒரு கடவுளின் சிலை மணமகனாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகள் வேறு யாரும் அல்ல. எல்லாம் வல்ல கோபிகா கிருஷ்ணன்தான். கிருஷ்ணனின் தோழர்களான மற்ற பொம்மைகளும் அலங்காரம் செய்யப்பட்டு மணவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பார்ப்பனர்கள் மந்திரம் ஓதி சாரதா - கிருஷ்ணன் திருமணம் சிறப்பாக நடத்தப்பட்டது.

தடபுடலான விருந்தும் நடைபெற்றது. திருமணத்திற்கு ஏற்கெனவே சாரதாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த ஜகதீஸ் சந்திர சோலங்கியும் வந்திருந்தார் - தன் மனைவியுடன்.

Read more: http://viduthalai.in/page-7/80349.html#ixzz31voq0olX

தமிழ் ஓவியா said...


ஏழு மொழிகள்


1. தேசீயம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

4. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

5. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

6. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்

7. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித் தின்ன அரசியல்
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vozv6Uj

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

தீண்டாமை இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக, இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vp8gHmM

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலேதான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.



அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு



Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpEPqnP

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும் போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்கு மணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின் றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்த பிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/80352.html#ixzz31vpVZwGW

தமிழ் ஓவியா said...


தேர்தல் முடிவுகள் குறித்து


தேர்தல் முடிவுகள் குறித்து தமிழர் தலைவர்
கலைஞர் அறிக்கை, பேராசிரியர், மு.க. ஸ்டாலின், முதல் அமைச்சரின் பேட்டிகள்!

சென்னை, மே 17- தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு :

மிகப்பெரிய அதிர்ச்சித் தோல் வியை நமக்குத் தந்த இந்த தேர்தல் முடிவுகள் நமது தேர்தல் ஜனநாயகத் தில் புதியதல்ல; வழமையானதுதான்.

இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும், கட்சி - ஆட்சி தலைமையேற்போருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட!இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால், அதனை என்றும் வரவேற்போம்!இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

கலைஞர் அறிக்கை

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன் னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. வெற்றி கண்டு வெறி கொள்வது மில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் க. அன்பழகன்

எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. தோல்விக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை என்றார் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்.

தளபதி மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். தேர்தல் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். தி.மு.க. மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்றார் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

முதலமைச்சர் பேட்டி

கேள்வி: மத்திய அமைச்சரவையில் இடம் பெறு வீர்களா?

முதல்வர்: அப்படிஒரு சூழ்நிலை இல்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

முதல்வர்: தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

- முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா
அளித்த பேட்டி 16.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/80424.html#ixzz321X8sfsB

தமிழ் ஓவியா said...


கோயில் திருவிழா கூத்துகள்!


சென்னிமலை கோவில் தேர் விபத்து சென்னிமலையில் கோவில் தேர் மீது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட் டது. இதில் ஓட்டுநர் கிளீனர் உயிர் தப்பினர்.

சென்னை துறைமுகத் தில் இருந்து ஒரு டாரஸ் லாரி 2 கண்டெய்னர்களில் கொப்பரை தேங்காய்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம், காங்கயம் நோக்கி சென்று கொண்டு இருந்தது லாரியை நாகை மேலத்தெருவை சேர்ந்த முருகவேல் (வயது 25) என்பவர் ஓட்டிச்சென்றார். கிளீனராக பாண்டியராஜன் என்பவர் இருந்தார்.

இந்த லாரி நேற்று மதியம் ஈரோடு மாவட் டம், சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே ஒரு கார் வந்தது. இதனால் லாரி ஓட்டுநர் பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் எதிர்பாராத வித மாக லாரியில் இருந்த 2 கண்டெய்னர்களும் சரிந்த தால் கோவில் தேர் மீது ஒரு பக்கமாக லாரி கவிழ்ந்தது. இதில் தேர் மீது மூடி வைத்து இருந்த தகர பலகை சேதம் அடைந்தது. லாரியில் இருந்த கொப் பரை தேங்காய்கள் கீழே சிதறின.

அப்போது முருகவே லும், பாண்டியராஜனும் லாரியில் இருந்து கீழே குதித்தார்கள். இதில் பாண்டியராஜனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்த இடம் மக்கள் எப்போதும் நட மாட்டம் அதிகமாக காணப் படும். ஆனால் நேற்று அந்த வழியாக பொது மக்கள் யாரும் செல்லாத தால் உயிர்ச்சேதம் இல்லை.

விபத்து நடந்த இடத் துக்கு மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த கொப்பரை தேங்காய்கள் அதில் ஏற்றப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டன. கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர்களை மீட் கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சென்னிமலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாமி ஊர்வலம் : தாக்குதல் 15 பேர் கைது கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் முன் ஆட்டம் போட்டபடி வந் ததை கண்டித்ததால் ஆத் திரம் அடைந்த கும்பல் ஆயுதங்களுடன் தெரு வுக்குள் புகுந்து தாக்குத லில் ஈடுபட்டது. இந்த மோதல் தொடர்பாக 15 பேரை காவலர் கைது செய்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி இரவு அம்மன் வீதி உலா நடந் தது. அப்போது களத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில், காமராஜ், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சாமி வீதி உலா வுக்கு முன்பாக நடனமாடி யபடி வந்தனர்.

அவர்கள் ஒரு தெரு வுக்குள் அவ்வாறு ஆடிய படி வந்தபோது அங்கு இருந்தவர்கள் 3 பேரிடமும் சாமி ஊர்வலம் முன் நடனமாடக்கூடாது எனக் கூறி அவர்களை கண்டித்து அனுப்பினர். ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அது குறித்து கூறினர். பின்னர் அவர்கள் 25-க்கும் மேற்பட்டோரு டன் கல், உருட்டுக்கட்டை, கத்தி, கொம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தங்களைக் கண் டித்தவர்கள் இருந்த தெரு வுக்கு வந்தனர்.

அங்கு அவர்கள் சாமி ஊர்வலம் முன் நடனமாடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தவர்கள் யார்? என்று கேட் டவாறு அந்த தெருவில் இருந்தவர்களை ஆயுதங்க ளால் கடுமையாகத் தாக் கினர். பலர் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித் தனர்.

கும்பல் தாக்கியதில் அந்த தெருவில் இருந்த மணிகண்டன் (வயது 29), சுப்பிரமணி (39), ஜெகன் (37), சின்னப்பையன் (45), விஜயன் (35) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர்.

தங்களைத் தாக்கிய கும்பல் மீது காவேரிப் பாக் கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித் தார். அதன்பேரில் 15 பேரை காவல் ஆய்வாளர் பழனி கைது செய்தார். இதில் 10 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின் றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80430.html#ixzz321XgI4se

தமிழ் ஓவியா said...


தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜினாமா


திரு.ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 04.07.1929ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா/நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்கு களுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகின்றேன்.

நிற்க, மேற்படி 4ஆம் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவ தானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும்,

மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோத மானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறிவிடும் பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்தில் இருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜினாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை.

எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு செய்து எனது ராஜினாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் வகித்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் - குடிஅரசு - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YfN3o9

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

நாம் உண்மையிலேயே ஒரு நாட்டவர்; ஓர் இனத்தவர்; ஒரு குறிப்பிட்ட எல்லையில் ஒரே பழக்க வழக்கங்களோடு இருக்கிறவர்கள்; ஒரு காலத்தில் இந்நாட்டை ஆண்டவர்கள்; வெகுநாளாக இருந்து வருபவர்கள்;

இன்னும் வெகு நாளைக்கு எப்போதும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள். நாம் யாவரும் ஒன்று. நாம் யாவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்று சொல்லுவதற்குத் தகுதியில்லாத நிலைமையில் சின்னா பின்னப்பட்டுக் கிடக்கிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YnhbCH

தமிழ் ஓவியா said...


தமிழர் சங்கம்


சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர்.

தமிழ்ப் பாஷை, கலை, இலக்கிய இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும் கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதைப் அறிந்து அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும், நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமுக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்குத் தற்கால தேவைக்கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள் கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மதுபானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது. கலப்பு மணம், மறுமணம், ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமுகச் சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்: திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும் திரு.மணி, திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம். உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்தாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

சமயப் பற்றில் மூழ்கி, பரலோகத்திற்கும், பரலோகக் கடவுளுக்கும் பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள் களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம்.

மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும் ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்க தாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Yx1VLc

தமிழ் ஓவியா said...

சென்னைக் காங்கிரஸ் கமிட்டி

இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங்களி லெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதாரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது.

அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம் அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைக் கன்னாபின்னா என்று வையச் சொன்னாராம்.

கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள் வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Z4xZQo

தமிழ் ஓவியா said...


திரு.சொ. முருகப்பர்


திரு. முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையைப் பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.

நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலானதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல.

அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும். கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்தத் தியாக புத்தியும், வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகத வல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக!

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZBdTxJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படா தென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார்.

அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும் படியான புதிய கையந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார்.

இது பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZKZxyn

தமிழ் ஓவியா said...


வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் ஆபத்தான கோவில் விரிவாக்கம்!


மக்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக உள்ள சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் குறுகலான தெருவில், நாள்தோறும் விபத்துக்களும், மக்கள் நெரிசலும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் இடமாகும். ஆசியாவிலேயே உள்ள பெரிய தொகுதியான வில்லிவாக் கத்தில் உள்ள பேருந்து நிலையம் மிக மிக சிறியதான ஒன்றே ஆகும். இந்த லட்சணத்தில் இருக்கின்ற கோவிலை, பொது மக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு செய்யும் விதத்தில் இப்படி ஒரு கோவில் விரிவாக்கம் தேவையா என்று அனைவரும் வருத்தம் அடைகின்றனர். தேவையே இல்லாத இப்படிப்பட்ட இந்து மத கோவில்களின் விரிவாக்கங்களால் எங்களைப் போன்ற இந்துக்கள்தான் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர்.

ஒரு காலத்தில் 2 அடிக்கு 2 அடியாக இருந்த கோவில், இன்று 10 அடிக்கு 60 அடி கோவிலாக வளர்ந்துள்ளது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்துக் கழகமும், மாநகராட்சியும் கண்களை மூடிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஏனென்றால் இந்து மதத்தின் பெயரால் நாம் எதையும் தடை இன்றி செய்யலாம் என்பதே இக் கோவில்களின் நிருவாகிகள் செய்வது அன்றாட வழக்கமாகி விட்டது. சென்னையிலேயே மக்கள் நெருக்கம் அதிகமுள்ள வில்லிவாக்கத்தில் பெரியது, சிறியது என்று எங்கு நோக்கினாலும் கோவில்கள் மயமாக உள்ளது. வில்லிவாக்கத்தில் 100-க்கு மேல் கோவில்கள் உள்ளன. எதற்காக இப்படி பொது வழிகளை அடைத்து ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்? எங்கு நாம் தடுக்கி விழுந்தாலும் அங்கு ஒரு கோவில் இருக்கின்றது.

வில்லிவாக்கத்தில் மட்டும் ஏராளமான பூங்காக்கள் எல்லாம் இன்று கோவில்களாக மாறி உள்ளன. எதற்காக இப்படி தேவை இல்லாமல் பொதுமக்களுக்கு நிரந்தரமான இடையூறு? கனவில் சாமி வந்து எனது கோவிலை பெரிதாக மாற்று என்று சொன்னார்களா? ஒருவேளை சொன்னாலும் சொல்வார்கள். இப்படிப்பட்ட கோவில்களின் நிருவாகிகள் எளிதாக கல்லா கட்ட முடிவதால், வில்லிவாக்கத்தில் எங்கு நோக்கினும் இதே கதையாக உள்ளது. இப்படிப்பட்ட பொதுச் சாலைகளை ஆக்கிரமிக்கும் கோவில்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் பணத்தை ஏழை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். வில்லிவாக்கத்தில், தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான சாலைகள் இல்லை. கொசு தொந்தரவு சொல்லவே வேண்டாம். இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இப்படிப்பட்ட கோவில்களால் பொது மக்களுக்குத் தான் தொந்தரவு. இந்தப் பேருந்து நிலையத்தை ஒரே அடியாக மூடி விட்டு, கோவிலாக மாற்றிவிட்டாலும், இந்தக் கோவில் நிருவாகிகள் பேராசை முடிவுக்கு வராது என்று இந்தத் தெருவில் உள்ளவர்கள் கூறி வருந்துகிறார்கள். எங்கள் வீட்டு ஆண்களிடம் இதைச் சொன்னால், உங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று சொல்லி எங்களை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனவே பெரியார் இயக்கம் இங்கு ஒரு பொதுக் கூட்டம் மூலம் உடனே நிறுத்துமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எனவே, மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்டே ஆர்டர் மூலம் இந்த விரிவாக்கத்தை உடனே நிறுத்தி, பேருந்து நிலையத்தை அழிவிலிருந்து காப்பாற் றுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்..

உங்கள் சகோதரிகள்.

Read more: http://viduthalai.in/page2/80466.html#ixzz321ZxcTdu

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் கங்கை ஆறு - குறிப்புகள்



இந்தியாவின் நீளமான ஆறு 2,525 கி.மீ. உத்தர் காண்ட் - 450கி.மீ., உத்தரப்பிரதேசம்- 1000கி.மீ., பிகார் - 450 கி.மீ. ,ஜார்கண்ட்-40கி.மீ., மேற்கு வங்கம்-520 கி.மீ., பிகார், உத்தரப்பிரதேச எல்லைப்பகுதி-110கி.மீ.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவ்முக் (கங்கோத்ரி பனிக்கட்டிஆறு) பகுதியிலிருந்து உருவாகிறது.

இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு கங்கை ஆற்றுத்திட்டம் பலனளிக்கிறது

ஆற்றோட்டப்பகுதியின் பரப்பளவு: 8,61,404 சதுரகி.மீ.

ஆண்டுக்கு கடலில் கலக்கும் நீரின் அளவு: 4,93,400 மில்லியன் கனமீட்டர்
கிளை நதிகள், துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா, கோம்தி, காகரா, கண்டாக், தாமோதர், கோசி, கலி, சம்பல், சிந்து, பெட்வா, கென், டோன்ஸ், சோனெ, காசியா-

ஹால்டி

ஆற்றங்கரையில் முக்கிய நகரங்கள்: ரிஷிகேஷ், அரித்துவார், ரூர்கி(உத்தர்கண்ட்) பிஜ்னோர், நரோரா,, கன்னோஜ், கான்பூர், அலகாபாத், வாரணாசி, மீர்சாப்பூர் (உத்தரப்பிரதேசம்), பாட்னா, பகல்பூர் (பிகார்) பஹ்ரம்பூர், செராம்பூரெ, ஹவுரா, கோல்கட்டா (மேற்கு வங்காளம்)

கங்கா செயல்திட்டம்: (28ஆண்டுகளில் இரண்டு திட்டங்கள்)

கங்கா செயல்திட்டம்-1

1986 ஜூன் தொடங்கி 2000 மார்ச்சில் முடிந்தது 462.04 கோடி ஒதுக்கீடு 25 மாநகரங்கள், நகரங்கள் உபி-6, பிகார்-4, மேற்கு வங்காளம்-15 உள்ளடக்கியது

கங்கா செயல்திட்டம்-2

1993யிலிருந்து 1996 வரையிலும் பெல கட்டங் களாக தொடக்கம் 2001 ஏப்ரல்-1இல் அமல்படுத்தப் பட்டது 95 மாநகரங்கள், நகரங்கள் முக்கிய கிளை நதிகள் உள்ளடக்கியது

பொருளாதார செலவினங்கள்: தாவரங்களுக் காக கழிவுகள் மேலாண்மை, தண்ணீர் மாசு கண் காணிப்பகங்கள், வெள்ளச்சேதங்களிலிருந்து பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் செலவு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

2008-09 தேசிய ஆறாக அறிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடுதல், செலவிடு தல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள என்ஜிஆர்பிஏ என்கிற அமைப்பு 2009இல் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/80469.html#ixzz321aY5NTV

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களை தீவிரவாதிகள் எனும் சவுதி சட்டம்: நீக்கப்பட அழுத்தம்


அண்மையில் சவுதி அரேபிய அரசு இரு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று நாத்திகர்கள் (கடவுள், மத மறுப்பாளர்கள்) தீவிரவாதிகள் என்றும், மரணதண்டனையை அதிகபட்ச தண்டனையாக அளிக்கலாம் என்றும் அந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்மூலம் நாத்திகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை சவுதி அரசு ஏற்படுத்தி உள்ளது.

நாத்திகத்தைப்பற்றி முழுமையாக அறியாதவர்கள்கூட, அந்த நாட்டிலிருந்து நாத்திக இணையதளத்துக்கு சென்று பார்வையிடுபவர், அதில் தம் கருத்தை பதிவிடுபவர், நாத்திகர்களுடன் தொடர் பில் இருப்பவர் மற்றும் எந்த ஒரு தனி நபருடனோ, எந்த நாத்திக அமைப் புடனோ தொடர்பில் இருப்பவர் என்று இச்சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்று தண்டிக்க ஏதுவா கிறது. சவுதி அரசின் மதரீதியிலான நம்பிக் கையை அலுவலக நடைமுறைகளில் கடைபிடிக்கவில்லை என்றுகூறி எவ்வித ஆதாரங்களும் இல்லாமலே பெரும் பாலானவர்களை குற்றவாளிகளாக்கும் சட்டங்களாக அவை உள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும்.

அரேபிய நாட்டின் அடிப்படைகளை தகர்ப்பததாக, அரேபிய மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சட்டங்கள்மூலம் நீதிக்கு இடமின்றி சிறையில் அடைத்து துன்புறுத்தும் அபாயம் உள்ளது. பத்தில் தொடங்கி ஆயிரம் என்று சவுதி குடிமக்களை துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சவுதி நாத்திகர்கள் வேறு அதிக சகிப்புத்தன்மை உள்ள நாடுகளில் புகலிடம் தேட ஏதுவாகும்.

வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள் ளவர்கள் சவுதியில் பலபேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெற்ற இளைஞர்களாக இருக்கின்றனர். உலகஅளவில் வின்கேல்லப் நிறுவ னத்தின் புள்ளிவிவரப்படி சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் அய்ந்து விழுக்காட்டினர் நாத்திகர்களாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டில் முப்பது மில்லியன் மக்களில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி ஏழு மில்லியன் சவுதி குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சவுதி அரேபியா அரசு மதத்தின்மீதான மரியாதையைக் காத்திட குறிப்பாக இசுலாம் மதத்தை மதிப்புக்குரியதாக்கிட அய்நாவின் மதவிரோதச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக ஆதரித்தது. மேலும், சவுதி அரேபியாவில் அய்நாவின் மனித உரிமை ஆணையத்தை அண்மையில் ஏற்படுத்தியது. அது எதிர்பார்க்கக் கூடிய மதிப்பை அது விரும்பும் மதம் பெற வேண்டுமானால், அதே அளவு மதிப்பையும், பாதுகாப்பை யும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

சவுதி அரசை விரைவாக அந்த சட்டங்களை நீக்க வலியுறுத்துவதோடு அப்பாவிகளின் உயிர்களை அழிவிலிருந்து காக்கவும், அகதிகள் உருவாகாமல் தடுக் கவும் விரைந்து அந்த சட்டங்களை நீக்கிட வேண்டும் என்று மதசார்பற்ற உலகுக் கான சர்வதேச நாத்திக கூட்டமைப்பின் (கிலீமீவீ கிறீறீவீணீஸீநீமீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வேண்டு கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page5/80471.html#ixzz321akHYZa

தமிழ் ஓவியா said...


அணுகுண்டு சோதனைகள்


இந்தியாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுவதற்கு சக்தி நடவடிக்கை (Operation Shakthi) என்று பெயரிடப்பட்டு இரண்டுமுறை சோத னைகள் நடந்துள்ளன. சக்தி நடவடிக்கை (Operation Shakthi) இராஜஸ்தான் மாநி லத்தில் பாலைவனப்பகுதியாகிய போக் ரான் பகுதியில் நடைபெற்றன.

போக்ரான் -2 (Pokhron-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அய்ந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அணுகுண்டு சோதனைகள் 11-5-1998 தேதியிலும், இரண்டுஅணுகுண்டு சோத னைகள் 13-5-1998 வெடிக்கப்பட்டன. இந்த அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத் தடைகளை விதித்தன. மேலும், இந்தியாவைத் தொடர்ந்து 28-5-1998 மற்றும் 30-5-1998 ஆகிய நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்தியா முதன்முதலாக 18-5-1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டு அணு குண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு 11-5-1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்துத்துவ தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று பெயரிட்டது. சக்தி என்ற சமஸ்கிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல் லாகும்(அவர்கள் அப்படித்தானே!). 1998இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும், பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த நாளை நினை வுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப் படுகின்றன.

Read more: http://viduthalai.in/page5/80470.html#ixzz321asSfXb

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

மாணவர்களின் விடைத்தாள் களைத் தகுதி இல்லாத ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தால், தகுதி இல்லாத வர்களுக்கு அதிக மதிப்பெண் ணும், தகுதி உள்ளவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்ணும் கிடைக் கும் நிலை ஏற்படும். எனவே விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்களை திருவள் ளுவர் பல்கலைக் கழகம் (வேலூர்) உறுதி செய்ய வேண்டும் இவ் வாறு சென்னை உயர்நீதி மன்றத் தின் முதல் அமர்வு உத்திரவிட் டுள்ளது (விடுதலை நாளிதழ், 4.5.2014 பக்கம்3)

நம் நாட்டுக் கல்வி முறையில் விடைத்தாள் என்பது மாணவர் களின் உழைப்பின்அறுவடை, ஒரளவு மாணவர்களின் எதிர் காலத்தையே தீர்மானிக்கும் கருவி.

மாணவர்களின் விடைத்தாள் கள் தகுதி இல்லாத ஆசிரியர்களால் திருத்தப்பட்டதற்கு நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி உதாரண மாகத் திகழ்கிறது. பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் களைத் திருத்துவதில் கவனக்குறை வாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்து றை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாண வர்களின் மதிப்பெண் மாறியது. ஒரு மாணவனின் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யா மல் மதிப்பெண் வழங்கப்பட்டி ருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக அதிகரித்தது. (தினமணி 9.12.2013 பக்கம் 4)

சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் விசுவநாதன் பின்வரு மாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

18 மதிப்பெண்ணுக்கு மதிப் பீடு செய்த ஒரு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தபோது 78 மதிப்பெண் வந்தது. எனவே இனி மேல் நல்ல முறையில் விடைத் தாள் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் (விடுதலை இதழ் 19.7.2005).

நடுநிலை தவறிய பேராசிரியர் கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப் பட்டால் மாணவர்களின் எதிர் காலமே பாதிக்கப்படுகிறது. சென்னை அய்.அய்.டி (மி.மி.ஜி) இல் பேராசிரியராகப் பணிபுரியும் கல்பனா சாவ்லா விருது பெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி பின்வருமாறு கருத்து தெரி வித்துள்ளார்: பெரியாரும், அம் பேத்கரும் வராமல் இருந் திருந்தால் நான் அய்.அய்.டியில் பேராசிரியராக இருந்திருக்க மாட் டேன். வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பேன்.
அய்.அய்.டியில் இது வரை ஒரு தலித் பெண் கூட ஆய்வுப்பட்டம் (றிலீ.பீ) பெற்றதில்லை! ஐ.ஐ.டியில் எம்.எஸ்ஸி (வி.ஷிநீ) படிக்கும் பெண்கள் தலித் என்றால் அவர் களை உடனே ஃபெயிலாக்கி விடு கிறார்கள். நிறைய தலித் மாண விகள் இது போல் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக் கிறேன்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தபோது பல மாணவ மாணவிகளின் மதிப்பெண் பட்டி யலில் குளறுபடிகள் நடந்திருப் பது தெரியவந்தது. இந்த மோசடி யின் உச்சக்கட்டமாக பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்ற 2 மாணவர்கள், ஒரு மாணவி தேர்வுக்கு விண்ணப்பிக் காமலும், தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தாமலும் தேர்வே எழுதா மலும் ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மெகா மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது (விடுதலை இதழ் 19.2.2012 பக்கம் 7)

சென்னை மாநிலக் கல்லூரியில் நான் 1954 - 56-இல் பொருளாதாரத் துறையில் எம்.ஏ. படித்தபோது, எனது பல்கலைக்கழக விடைத் தாளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்துறை தலைமைப் பேராசிரியர் அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினார். பெரியார் தொண்டனாகிய நான் தன்மானத்துடன் மறுக்கவே என்னை எம்.ஏ., வகுப்பில் அரை சதவீதம் மதிப்பெண் குறைவாகக் கொடுத்து மூன்றாம் வகுப்பில் (மிமிமி சிறீணீ) தள்ளிவிட்டார். இதனால் என் வாழ்க்கை ஓரளவு பாதிக் கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இன்றைய மதிப்பெண் முறையைக் கடுமையாக எதிர்த் துள்ளார். மார்க்தான் (மதிப் பெண்) தகுதி, திறமையின் அறிகுறி என்பது அக்கிரமம் மாத்திரமல்ல; மகா மகா அயோக்கியத்தனம் அல்லது மடத்தனம் என்பேன்.

தற்போதுள்ள தேர்வு முறை யினால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க் கையே பாழடிக்கப்படுகிறது. கல்வித்துறைச் சான்றோர்கள் மாணவர்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கு காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

- செய்யாறு இர.செங்கல்வராயன்

முன்னாள் துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மாவட்டம்

Read more: http://viduthalai.in/page7/80476.html#ixzz321b7AXAX

தமிழ் ஓவியா said...



அதிர்ஷ்ட கற்கள்

கடன் தொல்லையா?
கணவன் மனைவி சண்டையா?
தாம்பத்தியத்தில் சுகம் இல்லையா?
வீடுகள் கட்ட வேண்டுமா?
விளை நிலங்கள் வாங்க வேண்டுமா?
வீதியில் பார்த்த பெண்ணை
ஆசையாய் மணக்க வேண்டுமா?
அத்துணைக்கும் அதிர்ஷ்ட கற்கள் உண்டு.
அபரிதமாய் வேலை செய்யும்
திருமணமாகாத, வேலையில்லா
இளைஞனின் விபரீத கூப்பாடு...

நாளும் புதுமை அறிந்திடுக

தாழ்ந்த நிலைப்படி இது என்று
தலைமை உடலை வளைத்துச் செல்வர்
நிலைப்படி உடைத்தல் - பாவமென்றும்
அய்யன் வைத்த நிலைப்படி - இது
அன்பின் நினைவுச் சின்னம் - இது
என்றே எண்ணி வாழ்ந்திடுவர்
ஆண்டவன் பெயரைச் சொல்லிச் சொல்லி!!
அறிவுக்கு பொருந்தாச் செயல்கள் செய்வர்
உதட்டை, நாக்கை, உடலுறுப்பை,
கம்பிகளாலே கிழித்துக் கொள்வர்
நெருப்பின் மீதே நடந்து செல்வர்
எல்லாம் இறைவன்
செயல் என்பார்
கிளியின் உத்தரவை
பெற்றே தான்
காரிய மாற்ற புறப்படுவர்
மனிதநேயம் மறந்திடுவர்
மதப் பிடிதனிலே வாழ்ந்திடுவர்
இலவசமாய்
செருப்பு
கிடைத்துவிட்டால்
காலை செருப்பிற்கேற்றாற் போல்
கணப் பொழுதினிலே
வெட்டிக் கொள்வர்
சிந்தனையற்ற செயல்களாலே
உயிரைக் கூட இழந்திடுவார்
சலனம் அடையும் மனிதனைச்
சாந்தப் படுத்திட....
சோதிடம் சொல்வார்
மூன்றாம் பிறவி செயல்களுக்கு
இந்தப் பிறவியில் வகை காண்பார்
அடிமைத் தனத்தை
ஏற்றுக் கொள்வார்
அச்சம் கொண்டே வாழ்ந்திடுவார்
புதுமை அறிந்திட மறந்திடுவார்
புவியில் மருண்டே வாழ்ந்திடுவார்
அறிவு ஆசான் பெரியாரின்
ஆற்றல் நிறைந்த வழிதன்னை
ஆய்ந்தே நீயும் ஏற்றுக் கொள்வாய்

- சு. ஆறுமுகம் M.A., M.Phil., B.Ed., நன்னிலம்

Read more: http://viduthalai.in/page7/80477.html#ixzz321bHuCJv

தமிழ் ஓவியா said...


அன்று காந்தியார் சொன்னது


கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்

காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.
மதமாற்றம்: விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st

தமிழ் ஓவியா said...


இது அல்லவோ மனிதநேயம்!

மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.

ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.

நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.

சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.

மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.

நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

-மும்பை மிர்ரர், 11-5-2014

Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe