Search This Blog

25.5.14

கால்டுவெல் விழா கொண்டாட்டமும் பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலும்!


வரலாறு உணரலாகாப் பழங்காலத் திராவிட மக்களை நாகரிக மறியா இழி நிலை பெற்ற மக்களாக வாழ்ந்திருந்த பழங்குடியினரின் நிலையாதேயாயினும், திராவிடர் என்று சிறப்புப் பெயரிட்டு, அழைக்கப் பெற்ற மக்கள், ஆரியப் பார்ப்பனர்கள் தங்களிடையே வந்து வாழத் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலேயே, நாகரிக வாழ்வில் அடியிட்டிருந்தனர் என்பதில் சிறிதும் அய்யம் இல்லை

தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அறவே நீக்கி விட்டு நோக்கினால், எஞ்சி நிற்கும் பழம் பெரும் சிறப்பு வாய்ந்த திராவிடச் சொற்கள், ஆரியக் கலப்பற்ற திராவிட நாகரிக வாழ்க்கை முறைகளை விளங்க உணர்த்தவல்ல உயிர் ஓவியம் ஒன்றை வனப்புற வரைந்து காட்டும் அம்மொழியின் பழம் பெரும் சொல்லுருவங்கள், சமஸ்கிருதத் தளைகளினின்றும் விடுபட்ட நிலையில் விளங்கி நிற்கும். பண்டைத் தமிழரின் மனவளம், வாழ்க்கை வளம், வழிபாட்டுவளம் ஆகியவற்றை மட்டும் ஈண்டு காட்டிச் செல்ல விரும்புகிறேன்.  - (திராவிட ஒப்பியல் மொழி நூல் பக்கம் 125).

ஆரியருக்கும் முந்தியது திராவிடர் நாகரிகம் என்பதை இதன் மூலம் நிறுவுகிறார் - அறிஞர் கால்டுவெல்.

தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் திராவிட என்பதாம். இச்சொல் திராவிடர் என வழங்கப் பெறும் மக்கள் வாழும் நாட்டையும், அம்மக்கள் வழங் கும் மொழியையும் ஒரு சேரக் குறிக்கும்
(மேற்கண்ட நூல் பக்கம் 13,14)

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் ஒப்பியன் மொழி நூலில் தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ரவிட - திராவிடம் என்று மருவியதாகக் குறிப்பிட் டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களோ கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

திராவிடம் என்கிற பேச்சே, தமிழ் வார்த்தையாகும். எப்படியெனில் திரு இடம் என்பது திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகி விட்டது. தமிழர்கள் திரு என்ற வார்த்தையை  ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (17.11.1942 அன்று திருவள்ளுவர் நன்னெறிக் கழகத்தில் தந்தை பெரியார் உரையாற்றுகையில் குறிப்பிட்டது!)

எது எப்படியாக இருந்தாலும், திராவி டர்கள்தான் தமிழர்கள் - தமிழர்கள்தான் திராவிடர்கள் என்பது உறுதிப்படுத் தப்படுகிறது.

திராவிடர் - தமிழர் என்று பேதப்படுத்தி, ஆரியர்களின் மனங்களைக் குளிரச் செய்யும் பேர் வழிகள் கால்டுவெல் அவர்களின் இருநூறாம் ஆண்டிலாவது சிந்திப்பார்களாக!

வடமொழியைத் தேவபாஷை எனவும், தமிழை நீஷப் பாஷை எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழி வந்தவை என நேராகவும், உரைகளின் வழியாகவும், வடமொழிச் சார்பாளர்கள் சாதித்து வந்ததுண்டு. இன்றைக்கும் வரைகூட பூஜை வேளையில் சங்கராச்சாரியார் தமிழில் பேச மாட்டார்; காரணம் தமிழ் நீஷப் பாஷை என்பதால் தீட்டுப்பட்டு விடுமாம். மறுபடியும் குளித்து விட்டுத்தான் பூஜையை மேற்கொள்ள நேரிடுமாம்.

இத்தகுப் பார்ப்பனர்கள்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகவே படம் பிடித்ததுண்டு.

தமிழ் நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப் பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வ தில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ண மெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருதத் தின் மீதுதான் (திராவிட நாடு 2.11.1947). என்றார் அண்ணா.

பார்ப்பனர்களின் முகத்திரையைக் கிழித்து, தமிழன் தனித் தன்மையையும், வரலாற்றில் திராவிட இனத்தின் செழிப்பையும் நிலை நிறுத்தும் வகையில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆய்வுநூல் யாத்தனர். என்றால் அதற்காக தமிழர்கள் அப்பெருமகனாரின் தொண்டுக் குத் தலை வணங்க வேண்டாமா?  அவர் எழுதிய திராவிட மொழிகளில் ஒப்பிலக் கணம் எனும் நூல் காலத்தை வென்று நின்று ஒளி வீசக் கூடியதாகும்.

அவர் அந்நிய நாட்டுக்காரர் - கிறித்துவர் என்று கூறி அவர்மீது சேற்றை வாரி இறைக்கும் இந்துத்துவாவாதிகள் இன்னும் இங்கு இருக்கத்தான் செய் கிறார்கள். இராபர்ட் கால்டுவெல்லின் இருநூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில் திரிநூலான தினமலர் எப்படியெல்லாம் நஞ்சைக் கக்கியுள்ளது?

இதோ தினமலரின் பூணூல் புலம்பல்:

இந்தியத் தேசத்திலிருந்து தமிழர் களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது பிரிட்டிஷ்காரர்களில் வேலைத் திட்டமாக  இருந்தபோது, அவர்களுக்கு ஏற்ற வகை யில், தன் மொழி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர் கால்டுவெல்.

தென்னிந்திய மொழிகளைப் பேசு பவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த வர்கள் என்றும், வட இந்திய மொழிகளைப் பேசுபவர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார், அவரின் இந்த முடிவுக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. அது மட்டுமல்லாது, வரலாற்று உணர்வு உள்ள வர்கள் சிரிக்கக் கூடிய, இன்னொரு கருத்தையும் அவர்முன் வைத்தார். அது தென் இந்தியாவில் இருக்கும் பிரா மணர்கள், ஆரிய இனத்தைச் சேர்ந்த வர்கள் என்பதுதான்.

மொழி ஆராய்ச்சி செய்ய முற்பட்ட கால்டுவெல் அதை, இன ஆராய்ச்சியாக மாற்றி விட்டார்.

தன்னுடைய நூலான திராவிட மொழி களின் ஒஃப்பிலக்கணத்தில் பிராமணர்களை வசை பாடினார். பிராமணர்களால் வழி நடத்திச் செல்லப்படும். சமய உணர்வுதான் தமிழர்களின் பிரச்சினைக்குக் காரணம் என்றார்.
ஏழைத் தமிழனின் கோவணத்தையே உருவி எடுப்பது, அதில் லாபம் பார்ப்பது தான், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களுடைய சுரண்டல் கொள்கைக்குச் சாதகமாக தன் கட்டுரைகளை எழுதினார் கால்டுவெல் (தினமலர் 18.5.2014 பக்கம் 4)

என்று பூணூலை உருவிய நிலையில் தினமலர் பொரிந்து தள்ளியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.

ஆரியர்கள் - திராவிடர் என்பது பார்ப் பனர்களுக்கு பயன்பட்டது வரை ஒன்றும் இல்லை; ஆரியர் மீதான எதிர்ப்புணர்ச்சி வெடித்துக் கிளம்பி விட்டது என்றவுடன், ஆரியர் - திராவிடர் என்பது ஆங்கி லேயன் ஏற்படுத்திய சூழ்ச்சி என்று பல்லவி பாடுவது பார்ப்பனர்களின் வழக்கமான பல்லவியே! தாகூர் இயற்றிய ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்பதுகூட வெள்ளைக் காரரால் தூண்டப்பட்டதுதான் என்று சொல்லுவார்களோ அல்லது தாகூரே ஒரு ஆங்கிலேயர்தான் என்று அரட்டை அடிப் பார்களோ! அதை விட்டுத்தள்ளுங்கள். தினமலர் கூட்டம் இதய சிம்மாசனத்தில் வைத்துப் பூசிக்கும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய குருநாதர் கோல்வாக்கர் நாம் ஆரியர்கள் மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்று அவர்கள் போற்றும் ஆர்.எஸ்.எஸ். வேத நூலான பஞ்ச் ஆஃப் தாட்சில் எழுதியுள்ளதற்கு என்ன பதில்?

இன்றுவரை தங்களைப் பிராமணர்கள் என்றும், தாங்கள் அணியும் பூணூல் என்பது தாங்கள் துவி ஜாதியினர் (இரு பிறப்பாளர்) என்பதற்கான அடையாளம் என்றும்; அதற்கென்றே ஆவணி அவிட்டம் என்று  ஒரு நாளையும் ஒதுக்கி வைத்துள்ளார்களே - இதுகூட மிலேச்சர் வெள்ளைக்காரன் ஏற்படுத்திய சூழ்ச்சி தானோ!

இராபர்ட் கால்டுவெல்லின், இருநூறாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவோர் - தினமலர் வகையறாக்களையும்  மனதிற் கொண்டு, உண்மையின் வீரியத்தை வெளியில் கொண்டு வரத் தவறக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!


பேராயர் ராபர்ட் கால்டுவெல் (1814-1891)

அயர்லாந்து தேசத்தில் கிளாடி எனும் நதிக்கரையில் அமைந்த சிறு கிராமத்தில் பிறந்த இவர் இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது பணியைத் தொடங்கினார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

பின் 1841இல் கால்நடையாகவே திருநெல்வேலிக்கு நடந்து சென்றார். இந்த நெடிய பயணம் தமிழர் தம் வாழ்க்கைமீது அவருக்குள் ஒரு மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கியது. நெல்லை இடையன் குடியை வந்தடைந்தவர் அங்கே தன் வசிப்பிடத்தை உருவாக்கிக் கொண்டார். தான் வந்த பணி சமயப் பணியாக இருந்தாலும் தமிழ்ப் பணியைத் தன் தலைப்பணியாக இன்பச் சுமையேற்றார். அயல் மொழிகளில் வெளியான தமிழர் குறித்த, நூல்களை  ஆய்ந்தார்.

மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகள் அவருக்குக் கை கொடுத்தன. அதனைப் படித்தபோதுதான் தமிழ்நாடு பன்னெடுங்காலமாக அயல் நாடுகளான கிரேக்கம், ஹீப்ரு ஆகிய மொழிகளோடும் அம்மக்களோடும் உறவு வைத்திருப்பதை அறிந்தார். உதாரணத்திற்கு ஹீப்ருவில் துகி என்பது தமிழில் தோகை; கிரேக்கத்தில் அருசா என்பது  தமிழில் அரிசி போன்றவற்றை ஆய்ந்தறிந்தவருக்கு அப்போதுதான் தமிழின் தொன்மமும் அதன் காலத்தால் அவை மூத்த மொழியாக இருப்பதும், இதர திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம், குடகு தமிழிலிருந்தே பிறந்திருப்பதும் மட்டுமல்லாமல் நீலகிரி, ஒரிசா  மற்றும் நாகபுரி ஆகிய மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மொழிகளும் மற்றும் வடக்கே பலுசிஸ்தானத்தில் பேசப்படும் பிராகி ஆகிய மொழிகளும் தமிழ் மொழியிலிருந்து பிறந்த திராவிட மொழிகளே எனத் தம் ஆய்வின் மூலம் அறியப்படுத்தினார். சாதாரண மக்களிடத்திலே பெரும் அன்பைச் செலுத்தி மக்கள் கைகூப்பித் தொழத்தக்க நற்பேறு பெற்றார். ஒருமுறை ஒரு குடியானவர் கால் நழுவி கிணற்றில் விழ உடனே இவரும் தன் உயிரைப் பொருட்படுத்தாது சடுதியில் தானும் குதித்து அன்னாரைக் காப்பாற்றிய கதையை அவர் குறித்த சரித்திரத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை விவரித்துச் சொல்கிறார்.

ஏறத்தாழ பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றிருந்த கால்டுவெல் கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பணி செய்து இறுதிக் காலத்தில் நீலமலையில் தங்கி ஓய்வெடுக்கும் காலத்தில் கண்மூடினார். அவரது உடல் ரயில் மூலம் நெல்லைக் கொண்டு வரப்பட்டபோது ரயில் நிலையம் முன் திரண்டிருந்த மக்கள் கண்ணீருடன் காத்திருந்து அவர் வசித்த இடையன்குடிவரை தொடர்ந்து வந்து அடக்கம் வரை உடனிருந்த காட்சி அவரது வாழ்வின் மாட்சி

----------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------- கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்கள்  24-05-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/80900.html#ixzz32gPg9RLR

40 comments:

தமிழ் ஓவியா said...

சமத்துவம் விரும்பா பார்ப்பனர்கள்

- மா.பால்ராசேந்திரம்

பார்ப்பனர்களுக்குச் சமமாகப் படித்து விட்டோம் என்று பெருமை பேசியதால் தான் பொறுக்காத ஆரியம் ஏகலைவனின் வலதுகைக் கட்டைவிரலை வெட்டி வீசியது தெரியுமா?

தமக்குச் சமமாய்க் கடவுள் அருள்வேண்டித் தன்னிச்சையாய் நின்றதால் தான் சம்பூகன் தலையைப் பார்ப்பனியம் வெட்டி எடுத்தது தெரி யுமா?

விப்ரத்வேனது சூத்ரஸ்ய

ஜிவவதோஷ் சதோதம:

பார்ப்பனன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு உயிர் வாழ்கின்ற சூத்திரன் 800 பொன்நாணயங்களை அபராதமாகச் செலுத்த வேண்டுமென்று யக்ஞவல்கிய ஸ்மிருதி மூலம் பிரிவினைப் பேதத்தை நிலைநாட்டியவர்கள் பார்ப் பனர்கள் தாமே!

பகவத்கீதையில், சதுர்வர்ணம் மயாஸ் ருஷ்டம் குணகர்ம விபாகச: என்கிறான் கிருஷ்ணன். நான்கு வருணங் கள் என்னால் உண்டாக்கப்பட்டாலும் குணமும், கருமமுமே வேறுபாடே தவிர மற்றைய வேறுபாடு கிடையாது என் கிறானே! சங்கர விஜயமோ, ஜன்மனா ஜாயதே சூத்ரா; கர்மனா ஜாயதே த்விஜ: என்று எல்லாருமே பிறக்கும்போது சூத்திரர்கள் தாம். கர்ப்பதானம், உப நயனம் முதலியவைகளால் மறுபிறப் பாளனாக பார்ப்பனன் ஆகின்றான் என்கிறது. அப்படியாயின் நல்லொழுக்க முடையவன் எவனும் பார்ப்பனனாக இருக்கலாம் என்கிறது. அவ்வாறு இருக்க முடிகிறதா? இருக்க விடுகிறார்களா? ஆச்சாரி என்று போடாதே. ஆசாரி என்று போடு என அதிகாரம் செலுத்தியவர்கள் அக்கிரகாரவாசிகள் தாமே.
நம் ஆரியர் புலையருக்கடிமை களாயினர்

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?

என்று பார்ப்பனப் பாரதியே திராவிட ரோடு ஆரியப்பார்ப்பனர் ஒருப்படுவதை வெறுத்தொதுக்கிச் சாத்திரம் செய் துள்ளாரே!

ந சூத்ராய மதிம தத்யாத்
நொச்சிரஷ்டம் ஹவிஷ்க்ருதம்
ந ஹஸ்யோ பதிசேத் தர்மம்
நசாஸ்ய வ்ர தமாதிசேத்

தமிழ் ஓவியா said...

சூத்திரனுக்குப் பார்ப்பனன் கல்வி கற்பிக்கக்கூடாது. யாகத்தில் எஞ்சிய உணவையும் தரக்கூடாது. தரும உப தேசம் பண்ணக்கூடாது. நோன்பு நோற் கும் முறை சொல்லக்கூடாது. எவ்வளவு சமத்துவ எண்ணம் பாரீர்! மீறி நடந்த பார்ப்பனத்தோழர்கள் மளையாளத் திலும், தமிழ்நாட்டிலும் பந்தியில், போஜ னத்தில் மறுத்து விரட்டப்பட்டுள்ளனரே!

திருவையாறு வடமொழிக் கல்லூரி, இலவசச் சாப்பாட்டு விடுதியில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மாணவர் தனித்தனியே உணவு உண்டனர். தந்தை பெரியார் கண்டித்தார். ஆனாலும், மிராசுகள் உதவியோடு பார்ப்பன மாணவர் தமக்குத் தனியாகச் சமைத்துக் கொண்டனரே! பிரிவினையைத் தொடர்ந்தவர் எவர்? என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
என்பார் திருவள்ளுவர்.

எலும்பற்ற உயிர்களை வெயில் காய்ந்து வருத்துதல் போல அன்பில்லாத உயிர்களை அறம் வருத்தும். அறம் என்றால், கடமையால், கற்பால், இல்லறத் தால், துறவறத்தால், நல்வினையால், தீச்சொல்லால் வருந்துதலுக்குள்ளாவர். ஆனால், அன்பில்லாத ஆரியப் பார்ப்பனர் இவ்வழியெல்லாம் வருந்துதலுக்காளாக வில்லையே! உறவாட உருகிடும் தமிழ ரல்லவா நோஞ்சானாய், நொந்து, துன்புற்றுத்துயருடன் வாழ்கின்றார்.

பிராமணனும் சூத்திரனும் என்ற நாடகத்தை எழுதிச் சமரச நிலையை ஏற்படுத்த முயன்றார் நாடகத் தந்தை ராவ்பகதூர் ப.சம்பந்த முதலியார்.

அந்நாடகம் பற்றி இந்துவில் விமர்சனம் எழுதிய சத்யமூர்த்தி அய்யர், சமூக நிகழ்வுகளில் இருந்துதான் அரசியல் உருவாகின்றது.

சிக்கல்கள் உரிமைப் போர்க்குரல்களாக எதிரொலிக்கின்றன. அரசியல் மெல்ல மெல்ல சிக்கல் களைய தீர்வு நோக்கி நகர்த்தப்படுகிறது. அப்படியும் சேதாரம், நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது எனும் போது இதில் சமரசம் எப்படிக் காணமுடியும்? என்பதைச் சம்பந்தனார் போன்றோர் எண்ணாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது என்றாரே! பார்ப்பனர் சமரசத்துக்கு உடன்படுவாரா? அய்யா சொல்கிறார், வகுப்புத்துவேஷம் உண்டாக்குவோர் நாமா, இல்லை பார்ப்பனர்களா?

சத்திரம், சாவடி கோயில் குளங்களில் இது பிராமணர்க்கே. இந்த இடத்தில் சூத்திரர் (பார்ப்பனரல்லாத அனைவருமே) தண்ணீர் மொள்ளக்கூடாது; குளிக்கக் கூடாது; இந்தப் பள்ளியில் சேர்க்கக் கூடாது; இந்த வீதியில் இதற்குமேல் போகக்கூடாது; குடியிருக்கக்கூடாது என்று வெறுப்பையும், துவேஷத்தையும், இழிவையும் உண்டாக்கி வருவது யார்? குஷ்டரோகியானாலும் பார்ப்பான் உணவுக் கடை சமையலறை வரைச்சென்று பலகாரங்களை எடுத்துத் தின்கிறான். நாமோ கையில் காசைத் தூக்கிக் காட்டி சாமி... சாமி... எனக்குக் கொடுங்கள் எனக் கெஞ்ச வைத்துப்பார்ப்பவர் யார்? என்கிறாரே. வெறுத்தவனல்லவா விரும்பி வரவேண்டும். மேலும் அய்யா பேசு கிறார்.

நான் காங்கிரசில் இருக்கும்போது காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்று நானும் திருவாளர் எஸ். இராமநாதனும் தீர்மானம் நிறைவேற்றி னோம். ஆனால் திருவாளர்கள் சி.ராஜ கோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டி.வி.எஸ்.சாஸ்திரி, என்.எஸ்.வரதாச்சாரி, கே.சந்தானம் ஆகிய பார்ப்பனர்கள் அதனை எதிர்த்து இராஜினாமாவே செய்தனர் தெரியுமா? என்கிறார்களே! அவ்வழிப்பட்டோர் சமரசத்துக்கு உடன் படுவாரா? பார்ப்போம்.

தேசத்தினர் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத் தெளியா மக்கள் பிறரை நத்தும் - நாய்கள்
என்றுகூடப் புரட்சிக் கவிஞர் கடுமை யாகச் சாடிப் பார்த்தாரே. ஓரினத்தினராய் ஒரேநாட்டினராய் நம்மை இன்றளவும் வந்தேறி ஆரியப்பார்ப்பனர்கள் ஏற்றாரா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை.

தமிழர்களாய் ஆரியரை ஏற்றுக் கொண்டோம். ஆனால் ஆரியர், தமிழரை மனிதராய் இன்றும், நாளையும் ஏற்றுக் கொள்ளமாட்டார். இஃது உறுதி. முயலுக்குக் கொம்பு முளைக்கட்டும் பார்ப்போம்.

Read more: http://viduthalai.in/page2/80901.html#ixzz32gS3M4uJ

தமிழ் ஓவியா said...


இவர்தான் ராஜ்நாத்சிங் ராஜ்நாத் சிங்


உத்திரப்பிரதேசம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள பஹன்புரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ராம்பதன் சிங். தயார் குஜராத்தி தேவி. விவ சாயக்குடும்பத்தில் பிறந்த இவர் உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் வென்றார். தன்னுடைய தந்தையாரின் சகோதரர் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மிர்ஷாபூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டு மிர்சாப்பூர் கிளை பாரதீய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பில் அமர்ந்தார். இங்கிருந்து ராஜ்நாத் சிங்கின் அரசியல் பயணம் தொடங்கியது. 1991-ஆம் ஆண்டும் உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது அவர் உத்திரப்பிரதேசத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய வரலாறு தொடர்பான பாடங்களில் இந்துத்துவ அமைப்புகளின் ஆசைகளுக்கு இணங்க மாற்றம் கொண்டு வந்தார். வேதக்கணிதம் என்ற இல்லாத ஒரு கணித பாடத்தை பள்ளிகளில் கணிதப்பாடமாக சேர்க்கப்பட்டது.

2004-களுக்கு பிறகு பாஜக கட்சி தொடர் சரிவைக்கண்டு வந்தது, ஆட்சியை இழந்தது, பிரமோத் மகாஜன் கொலை, தேர்தல் தோல்வி, வாஜ்பாயின் அரசியல் சந்நியாசம் லால்கிருஷ்ண அத்வானியின் ராஜினாமா மிரட்டல் என பல பக்கங்களில் இருந்தும் கட்சிக்கு நெருக்குதல் வர பாஜக கட்சியின் தேசியத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியை வளர்க்கும் கட்டாயத்தில் இருந்த ராஜ்நாத் சிங் கட்சி இதுவரை மேம்போக்காக கூறிவந்த இராமர் கோவில் பிரச்சினையில் தீவிரமாக இறங்கினார். ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்த பழமைவாத தலைவர்களுள் இவரும் ஒருவர். இந்திய பாடத்திட்டத்தில் பழமைவாத கருத்துக்கள் தேவை என்று கூறி பாஜக ஆளும் மாநிலங்களின் இந்தியவரலாற்றை மாற்றி எழுதவும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

Read more: http://viduthalai.in/page2/80902.html#ixzz32gSPgHhI

தமிழ் ஓவியா said...


வாழ்க பெரியார் சாக்ரடீஸ்!


பெரியார் தொண்டர் களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில் இரண்டு விஷ யங்கள் முன்னணியில் நிற்கும். ஒன்று அய்யாவின் தத்துவங்களையும் சிறப்பு களையும் நாம் பேசும் பொழுது, இரண்டாவது, தந்தை பெரியாரை மற்றவர்கள் போற்றிப் புகழும் பொழுது அடைகின்ற இன்பம்.

அந்த வகையிலே, 2008ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தைப் புரட்டும் பொழுது- முன்னுரைப் பக்கங்களிலேயே சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார்.

பண்புகளின் பல்கலைக் கழகமாக விளங்கும் பெரியாரின் வாழ்வு இந்திய அளவில் சிறந்த தலைவர்களாகக் கருதப்படும் எவரையும் விஞ்சி நிற்கக் கூடியது என்பன போன்ற வரிகளைப் படிக்கப் படிக்க நமக்குள் இன்பம் ஊற்றெடுக்கத் தொடங்கியது.
ஆனால், அடுத்த பக்கத்தில்

கள ஆய்வில் தங்களது நேரங்களைத் தந்து உதவிய நன்றிக்குரிய பெருமக்கள் என்ற பெயர்களின் வரிசையில் இறுதியாக இருந்த பெரியார் சாக்ரடீஸ் என்ற எழுத்துகளைப் படித்தவுடன் மனிதன் இன்பம் சட்டென ஆவியாகி பெருமூச்சு மட்டுமே மிஞ்சியது.

அதற்குமேல் படிப்பதற்கு மனம் நாட்டம் கொள்ளவில்லை என்றாலும், அனிச்சைச் செயலாக அடுத்த பக்கத்தைப் புரட்டினேன், முதல்கட்டுரையின் தொடக்கத்திலேயே மேற்கோள் காட்டப்பட்டிருந்த வரிகள் என்ன தெரியுமா?

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய் விடுவதில்லை பெரியார்

என்றிருந்த வரிகளைப் படித்தபொழுது மெய் சிலிர்த்துப் போனேன். எவ்வளவு கண்ணீர் சொரிந்தாலும் ஆறாத மனப் புண்ணுக்கு ஆளான - அருமை பெரியார் சாக்ரடீசை இழந்து வாடும் அவரது குடும்பத் தினர்க்கும், கழகத்தவர்க்கும் தந்தையின் இந்த வரிகள் துளிம்பாது மாறட்டும்; வாழ்க பெரியார் சாக்ரடீசு!

- பா. சடகோபன், மதுரை - 14

Read more: http://viduthalai.in/page3/80905.html#ixzz32gSvlBLh

தமிழ் ஓவியா said...


பெயர் தெரியாத உணவுகள்!


இட்லி சாப்பிடத்தான் லாயக்கு! சாப்பாட்டுக்கு முன் இரண்டு சம்ப வங்களை நினைவுபடுத்த விரும் புகிறேன்..!

எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப் போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம் பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனு கார்டு கைக்கு வந்தது. புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெ கட்டி, சரமுரா, அல் பஸ்தோ, க்ரோ குயிட், பேகெட் என மாத்திரைப் பெயர் களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத் தெரியாமல் விழித் துக் கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.

அதில் ஒன்று, இத்தாலிய உணவு. மற்றொன்று, சீன உணவு. கூடவே பெயர் உச்சரிக்க முடியாத நான்கு அய்ந்து உணவு வகைகள். இதை எல்லாம் எங்கே சாப்பிடப் பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்?

என்னைப் போலவே அன்றாடம் வீட் டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப் போடு அவர்களைப் பார்த்தபடி, 'எப்படித் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டேன். 'டி.வி. விளம்பரத்தில் காட்டுவார்கள் என்றனர். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை டி.வி. முடிவு செய்கிறது. இதுதான் காலக் கொடுமை.

உணவு வரும்வரை மெனு கார்டு எப்படி அறிமுகமானது என்பதைப் பற்றிப் பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும் போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.

மெனு என்ற சொல் பிரெஞ்சு காரர்களால் அறிமுகம் செய்யப்பட் டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes இதன் பொருள், 'சிறிய பட்டியல் என்பதாகும். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.


தமிழ் ஓவியா said...

உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர் களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகை களில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர் La Carte.

ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உண வகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமை யல்காரரை செஃப் என அழைக் கிறோம், இல்லையா? Chef De என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமைய லறையின் தலைவர் என்பதாகும்.

சூப், பிரதான உணவு, அய்ஸ்கிரீம் அல்லது ஜூஸ், இனிப்பு வகைகள் கொண்ட மூன்றடுக்கு உணவு வகை கள் ரோமானியர்கள் அறிமுகம் செய்தவை. அது இன்று உலகெங்கும் பரவி 'திரி கோர்ஸ் மீல் எனப்படுகிறது, மூன்றடுக்கு மட்டும் இல்லை. 21 அடுக்கு உணவு சாப்பிடுகிற பழக்க மும் விருந்தில் இருக்கிறது. ஒருவர் இதைச் சாப்பிட்டு முடிக்க குறைந்த பட்சம் மூன்றரை மணி நேரமாகும்.

பசி தூண்டக் கூடிய சூப்பை, உணவின் தொடக்கமாகக்கொள்வதை வழக்கமாக்கியவர்கள் ரோமானி யர்கள். அதிலும் முட்டை ஊற்றிய சூப், பச்சைக் காய்கறிகள், அனைவரும் பகிர்ந்து குடிக்கும் மதுபானம் என அவர்கள் உணவு ஆரம்பிக்கும். இறுதி யில் பழங்கள் சாப்பிடுவதோடு முடி யும். ஃபிரெஞ்சு மற்றும் ரோமானி யர்களின் உணவுப் பழக்கம்தான் இன்று உலகெங்கும் அதிகம் பரவி யிருக்கிறது. இப்படியாக நமது சாப் பாட்டுக்குப் பின்னும்கூட அறியப் படாத வரலாறு இருக்கிறது'' என்று நான் சொன்னேன்.

நாங்கள் கேட்ட உணவு வந்தது. அதில் பலவும் வெண்ணெய் சேர்க்கப் பட்டவை. சோயா சாற்றின் மணம் வேறு. இனிப்பும் புளிப்புமான சுவை. எனக்கு அதில் கையளவுகூடச் சாப்பிட முடியவில்லை.

'தோசை கிடைக்குமா எனக் கேட்டேன். 'இட்லி, தோசை போன்ற எந்த உணவும் கிடையாது என்றார்கள். 'பன்னாட்டு உணவில் தமிழ்நாட்டு உணவுகளுக்கு இடம் கிடையாதா? என்று கேட்டபோது, 'இங்கே யாரும் அதைச் சாப்பிட வருவதில்லை என்ற பதில் கிடைத்தது.

பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். 'இப் போதுதான் நாங்களும் முதன் முறையாக சாப்பிடுகிறோம். என் னவோ போல இருக்கிறது என்றார்கள். அதற்கு அர்த்தம், பிடித்திருக்கவும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.

பசி பொறுக்க முடியாமல் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் மெனு கார்டை 10 முறை புரட்டிப் பார்த்துவிட்டேன். எதையும் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.

இங்கே சாப்பிடுகிறவர்களில் பெரும்பகுதி தமிழ் மக்கள், மத்தியதர வர்க்கத்து மனிதர்கள். இதை எப்படிச் சாப் பிடுகிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை மாறுபட்ட சுவைக்காக வந்து சாப்பிடுகிறார்களோ என்று சமாதானம் செய்துகொண்டேன்.

சென்னைக்கு நான் வந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பாதி உலகைச் சுற்றிவந்துவிட்டேன். ஆனால், மனதுக்குள் உள்ள கிராமவாசி அப்படியேதான் இருக்கிறான். வீட்டில் அறிமுகமான சுவை, எந்த வயதானா லும் எவ்வளவு ஊர் சுற்றினாலும் மாறிவிடாது தானே என நினைத்த படியே பசித்த வயிறுடன் பில்லுக்குக் காத்திருந்தேன்.

நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6,500 ரூபாய். அந்த பில்லை உற்றுப் பார்த்தபடி இருந்தேன். கணக் குப் பார்க்காதே என்பதுபோல பிள்ளைகள் திரும்பிப் பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக் கிறார்கள்? உரிய பணத்தைத்தான் தருகிறோமோ எனத் தெரிந்து கொள் வதில் என்ன தவறு இருக்க முடியும்? பில்லை நான் பார்த்தேன். 5,700 ரூபாய் உணவுக்கு பில். அவர்கள் உணவு பரிமாறியதற்கு, உணவகத்துக்கு வந்து சாப்பிட்டதற்கான சேவை வரி 600 ரூபாய். இந்த பில்லுக்கு டிப்ஸ் 200 ரூபாய் வைக்க வேண்டும். 6,500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக் குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனசாட்சி கேட்டுக் கொண்டே யிருந்தது.

- பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

Read more: http://viduthalai.in/page4/80907.html#ixzz32gTKl4Qu

தமிழ் ஓவியா said...


பாகிஸ்தானின் தீப்பொறி

பஞ்சாயத்து கூடியது. அவள் வீட்டுக்கு எதிரே 400 பேர் கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவள் வீட்டுக்கும் விஷயம் அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது. காரணம், சிம்பிள். அவளுடைய சகோதரன் எதிர் கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணோடு ஓடி விட்டான். அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கதான் பஞ்சாயத்து கூடியிருந்தது.

அவளும் அப்பாவும் சமாதானம் பேச கிளம்பினார்கள். மாலை ஆரம்பித் திருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. அப்பா பேச ஆரம்பித்தார். அவர் பேச்சினை சட்டை செய்யலாமல் அந்த நாலு பேரும் அவளை அவர் கண் முன்னாலேயே தூக்கி, குடிசைக்குள் நுழைந்தார்கள்.

அப்பாவின் கதறலும் அவளின் கூக்குரலும் ஊர் முழக்க எதிரொலித்தது. கந்தலான துணி போல வெளியே வந்தாள். அவருடைய சல்வார் கமீஸ் கிழிந்திருந்தது. ஊரின் மானத்தை காத்து விட்டோம் என்று அந்த நான்கு ஓநாய்களும் காவலுக்கு நின்றிருந்த மற்றவர்களும் எக்காளமிட் டனர். வெளியே வந்த அவளை அந்த கூட்டம் நிர்வாணப்படுத்தியது. அப் பாவின் முன் நிர்வாணமாகவும், ரத்தம் கசியவும் நின்றாள். தன்னிடமிருந்த ஒரு துண்டினை அவள் உடம்பில் போர்த்தி கண்ணீர் விடுவதை தவிர எதையும் செய்ய இயலாத அவளுடைய அப்பா கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார். உடலும் உள்ளமும் அனலாய் கொதித்தது. வீட்டின் கதவை மூடுமுன் அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை பாகிஸ்தானை உலுக்கியது. அவள் முக்தாரன்பீவி அல்லது முக்தாரன் மாய், பாகிஸ்தானில் ஒரு சின்ன கிராமமான மீராவலாவில் வசித்தவர்.

முக்தாரன் சும்மா விடவில்லை. ஊடகங்களுக்கு போனார். பெண்ணு ரிமைகளை பேச ஆரம்பித்தார். பாகிஸ் தான் ஜெனரல் முஷ்ரப்பின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு மூக்கு வேர்த்து, மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப் பானது. வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானில் பெண்களின் நிலைப்பற்றி பேச அழைப்பு வந்தது.

முஷ்ரப்புக்கோ தலைவலி, பாகிஸ் தானில் பெண்களின் நிலை இதுதான் என்று மேற்கு நாடுகள் நினைத்தால் தன்னை காலி செய்து விடுவார்கள் என்று பயந்தார். இவரின் பாஸ்போர்ட்டினை முடக்கினார். முக்தாரன் அதையும் தைரியமாக எதிர்கொண்டார். வெளிநாடுகளில் வசித்த பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்தார்கள். பாகிஸ்தானின் ஊடகங்கள், பொது மக்கள், அரசு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பெருங்கூட்டமே முக்தாரனுக்கு பின்னால் எழுந்து நின்றது.

ஆனாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அரசியல் பேசின. வன்புணர்வுக்கு துணை நின்ற நான்கு பேர்மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்தன. ஆனால், ஒரு வன்புணர்வு ஆயுத மாக மாறி பாகிஸ்தானிய மனசாட்சியை நெறிக்க ஆரம்பித்திருந்தது.

முக்தாரன் மாய் பாகிஸ்தானிய பெண் குரலுக்கான முகமாக மாறியிருந்தார். 2005-இல் பாத்திமா ஜின்னா தங்க விருது கிடைத்தது. கிளாமர் வார இதழ் அதே வருடம் வுமன் ஆஃப் தி இயர் விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.

பிரிட்டிஷ் செய்தியாளர் இவரோடு பேசி எழுதிய நினைவலைகள் தேஷ்னூரி ஆங்கிலத்தில் ‘Oh! Edition’ என்று வெளியாகி உலகமெங்கும் அதிர்வினை கிளப்பியது. 2006-இல் அய்.நா.வின் பேசினார். 2006-இல் பாகிஸ்தானின் கீழ் சபை வன்புணர்வுக்கான சட்டங்களை மாற்ற முன்மொழிந்தது. 2010-இல் கனடிய பல்கலைக் கழகம் கவுரவ முனை வர் விருது கொடுத்தது.

வெந்து தணிய காட்டுக்கு ஒரே ஒரு தீப்பொறி போதும். பாகிஸ்தானில் முக்தாரன் மாய் அந்த தீப்பொறி. - நரேன்

(தினகரன் வசந்த மலர் 18.5.2014

Read more: http://viduthalai.in/page5/80909.html#ixzz32gTZIYcv

தமிழ் ஓவியா said...


100 டன் எடையுள்ள டைனோசர்


தென் அமெரிக்காவில் அர்ஜென்டி னாவில் அறிவியலாளர்கள் பெஸ்க்ராங்கங் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் இதுவரையிலும் எவரும் கண்டறியாத வகையில் மிகப்பெரியதும், மிகவும் பழமையானதுமான டைனோசர் உயிரினத்தின் முழு அளவிலான உடற் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாலியன்டாலஜி ஈஜிடியோ ஃபெருக் லியோ அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சி யாளர் குழு செய்துள்ள ஆய்வின்முடிவில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்ன தாக வாழ்ந்த உயிரினத்தின் (டைனோசர் விலங்கின்) எச்சங்களாக கிடைத்துள்ளது. அந்த ஆய்வின்படி கிடைத்துள்ளவற்றை பாதுகாப்பதுகூட சவாலாகவே உள்ளது. சற்றும் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு அளவிலும், எடையிலும் மிக அதிக அளவில் உள்ளதே அதற்கு காரணமாகும். பட்டாகோனியா பகுதியின் தொலைதூரத்தில் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. உயிரியல் அகழ்வாராய்ச்சி யாளர்கள் கூறும்போது, டைனோசர் என்று கூறப்படும் நீண்ட கழுத்தும், நீண்ட வால் பகுதியுடனும் உள்ள நான்கு கால்களைக்கொண்ட தாவர உண்ணியான இந்த விலங்கின் புவியியல் காலம் என்பது சுமார் 95 மில்லியன் காலத்துக்கு முந்தைய தாக இருக்கும் என்று அறிவியலா ளர்களால் கணிக்கப்படுகிறது. அந்த விலங்கின் முழு எடையானது 14ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமாக இருக்கும் அல்லது நூறு டன் எடை உள்ளதாக இருக்கும் என்றும் , இந்த கண்டுபிடிப்பு உயிரியல் ஆய்வில் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்றும், இதற்கு முன்னர் ஆய்வுகளில் கிடைத்த பழமையான உயிரினங்களின் காலம் குறைந்ததாகவும், அவ்வுயிரிகளின் உடற் பாகங்கள் சிதைந்து சிறிதளவே கிடைத்தன என்றும் ஆராய்ச்சிக்குழுவின் சார்பில் தெற்கு அர்ஜென்டினா டிரிலீவ் நகரின் ஈஜிடியோ ஃபெருக்லியோ அருங்காட்சிய கத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஜோஸ் லூயிஸ் கர்பல்லிடோ கூறுகிறார்.

அருங்காட்சியகத்தின் இயக்குநர் ரூபன் கியூனியோ கூறும்போது, உலகி லேயே பெரிதாக கிடைத்துள்ள மாதிரியாக, முழு அளவில் கிடைத்துள்ள டைனோசர் கண்டுபிடிப்பாக இது உள்ளது என்றார்.

2011இல் அர்ஜென்டினாவில் உள்ள விவசாயி ஒருவர் எதேச்சையாக தெரிவித்த தகவலின்படிதான் தலைநகரான புவனெஸ் அய்ரெஸ் நகருக்கு தென் பகுதியில் சுமார் ஆயிரத்து முந்நூறு கி.மீ (800மைல்) தொலைவில் உள்ள பட்டகோனியாவில் சுபுட் நிலப்பகுதியில் 200 புதையுண்ட படிமங்கள் கண்டறிப் பட்டன. தற்போதைய கண்டுபிடிப்பு இதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு டைனோசர், மாமிச உண்ணிகளின் உடைந்த பற்கள் உள்ளிட்ட அனைத் தையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

-ராய்ட்டர்ஸ், 18-5-2014

Read more: http://viduthalai.in/page5/80908.html#ixzz32gTn6KIt

தமிழ் ஓவியா said...

நாட்டின் 70 விழுக்காடு மக்கள் பாஜக பக்கம் இல்லை..

10 ஆண்டுகால காங்கிரஸ் எதிர்ப்பு அலை பலமாக வீசிவிட்டது.. இந்த எதிர்ப்பு அலையை மோடி சுனாமியாக மாற்றிய பாரதீய ஜனதா அதன் முன் னுள்ள விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் 'சித்தாந் தங்களை' நிறைவேற்ற முனைந்தால் காங்கிரஸுக்கு நேர்ந்த கதிதான் நாளை அக்கட்சிக்கு ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 10 ஆண்டுகாலம் நாட்டை ஆண்டது. அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற ஒருசில நடவடிக்கைகள்தான் மக்களுக்கு பயனைத் தந்தது.

50% இல்லையே.. காங்கிரஸை வீழ்த்தி பாஜக அரிய ணையில் அமர்ந்த போதும் பாஜகவுக்கு எதிராக மொத்தம் 70% பேர் வாக்களித் துள்ளதையும் நினைவில் கொள்ள வேண் டியது அவசியம். மோடி சுனாமி என்று பாஜக தம்பட்டம் அடித்துக் கொண்டால் ஆகக் குறைந்தது ஊடகங்கள் கணித்தபடி 50% வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும் பாஜக. வழக்கமான பாஜக வின் வாக்கு சதவீதத்துடன் மக்களின் கோப அலை இணைந்து கொண்டதால் மட்டுமே அக்கட்சி அரியணை ஏற முடிந் துள்ளது.

பாஜக- 31% நாடு முழுவதும் மெத்தமாகவே பார தீய ஜனதா கட்சி 31% வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. மொத்தம் 17 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 549 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. எஞ்சிய அத்தனை கோடி வாக்காளர்களும் பாஜகவை ஏற்கவில்லை.

காங்கிரஸ் 19.3% 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடுகளால் அக் கட்சிக்கு 19.3% வாக்குகள்தான் கிடைத் துள்ளன. அதாவது 10 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரத்து 765 பேர் மட்டுமே அக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் 4.1%

மக்களவைத் தேர்தலில் ஒரு இடம் கூட பெறாத பகுஜன் சமாஜ் கட்சி 4.1% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 2 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 102 வாக்குகளை பகுஜன் பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 3.8% திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரத்து 681 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய அள வில் 3.8% சதவீத வாக்குகளை திரிணாமுல் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

சமாஜ்வாடிக்கு 3.4%

5 இடங்களைக் கைப்பற்றிய சமாஜ் வாடி கட்சி 3.4% வாக்குகளைப் பெற் றுள்ளது. சமாஜ்வாடிக்கு 1 கோடியே 86 லட்சத்து 72 ஆயிரத்து 916 பேர் வாக் களித்துள்ளனர்.
அதிமுகவுக்கு 37 இடங்களைப் பெற்றுள்ள அதிமுக 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 825 வாக்குகள் கிடைத்துள்ளன.

சிபிஎம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3.2% வாக்குகளைப் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு மொத்தம் 1 கோடியே 79 லட்சத்து 86 ஆயிரத்து 773 பேர் வாக்களித்துள்ளனர்.

தெலுங்குதேசம்.., ஒய்.எஸ்.ஆர் காங் கிரஸ் கட்சிகள் தலா 2.5% வாக்குகளைப் பெற்றுள்ளன.

ஆம் ஆத்மி ஆம் ஆத்மிக்கு 2% வாக்குகள் கிடைத் துள்ளன.

மொத்தம் 1 கோடியே 13 லட் சத்து 25 ஆயிரத்து 635 வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெல்லாத திமுக தேசிய அளவில் 1.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 96 லட்சத்து 36 ஆயிரத்து 430 வாக்குகளை திமுக பெற்றுள்ளது.

பிஜூ ஜனதா தளம் 20 தொகுதிகளை வென்ற பிஜூ ஜனதா தளம் 1.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 94 லட்சத்து 91 ஆயிரத்து 497 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதர கட்சிகள் இதேபோல் தேசியவாத காங்கிரஸ் 1.6%, ராஷ்டிரிய ஜனதா தளம் 1.3%. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 1.2%. அய்க்கிய ஜனதா தளம் 1.1%. அய்க்கிய ஜனதா தளம் 0.8%, மதச்சார்பற்ற ஜனதா தளம் 0.7% வாக்குகளைப் பெற்றுள்ளது.

எதிராக 70% இப்படி பாஜகவுக்கு எதிராக சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மோடி சுனாமி என்றால் இத்தனை கட்சி களும் காணாமல் போயிருக்க வேண்டும் என்பதை பாஜகவினர் நினைவில் கொள்ள வேண்டும்.

தீர்வு தேவை இருப்பினும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டது பாரதீய ஜனதா. இப் போது மக்களுக்கு தேவை.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது. மாதந் தோறும் மடங்கு மடங்காக ஏறுகிற பெட் ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப் பது போன்ற அவசியத் திட்டங்கள் தேவை.

தமிழ் ஓவியா said...


சோஷியல் மீடியா.. அதைவிட்டு விட்டு மோடி சுனாமி எனும் பிம்பத்தை சமூக வலைதளங்கள் மூலம் உருவாக்கிவிட்டதைப் போல தொடர்ந்தும் விளையாடிக் கொண்டே மக்களை சமாளிக்கலாம் என பாரதீய ஜனதா எண்ணுமேயானால் காங்கிரஸை எப்படி மக்கள் தூக்கி எறிந்தார்களோ அந்த கதிதான் நேரும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சித்தாந்தமா? வளர்ச்சியா?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டு வது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் கை வைப்பது, பொதுசிவில் சட்டம் போன்றவற்றைதான் நிறைவேற்று வோம் என்று அடம்பிடித்துக் கொண்டி ருக்காமல் பல லட்சம் முறை உச்சரித்த "வளர்ச்சி" என்பதை செயலில் காட்ட வேண்டிய கட்டாயம் மோடிக்கு இருக் கிறது.
இப்போதே காங்கிரஸ் எச்சரிக்கை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களுக்குள் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து காட்டாவிட்டால் போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபடும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இப்போதே எச்சரிக்கை விடுத்துள்ளார். செயலில் பாஜக காட்டாவிட்டால் எதிர்க் கட்சிகள் 'வேலையை' காட்டுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சொன்னதை செய்ய வேண்டும் "எனது அரசு மக்களுக்கானது; நாட் டுக்காக வாழ்வதற்கான நேரமிது' என்று தமது வெற்றி உரையில் மோடி குறிப் பிட்டதை செய்து காட்டினால் மட்டுமே பாஜக தப்பிக்கும். அதை விட்டுவிட்டு கங்கைக்குப் போய் ஆரத்தி காட்டிக் கொண்டு, சோஷியல் மீடியா மூலம் எல்லா வற்றையும் சமாளித்துவிடலாம் என மோடி கருதினால் காங்கிரசுக்கு ஏற்பட்ட கதி நிச்சயம் ஏற்படும் என்பதை பாஜக மனதில் கொள்ள வேண்டும்.

Read more: http://viduthalai.in/page6/80910.html#ixzz32gU2mSKB

தமிழ் ஓவியா said...


வாழ்க அண்ணா நாமம்!


உடல் நலம் சிறக்க இந்து மதம் கூறும் வழிகள்
யாகம் செய்வதன் பலன்
பஞ்ச பூதங்களை வென்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்
கணபதியின் திருநாமங்கள்
மறுபிறப்பு எடுக்க வேண்டிய அவசியம்
அரச மரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா?

இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்தில் வெளிவந்த தலைப்புகள் அல்ல - செய்திகளும் அல்ல ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ராமகிருஷ்ண விஜயத்தில் வெளி வந்தவையும் அல்ல! பின் வேறு என்னவாம்! அண்ணா பெயரைக் கட்சியிலும் அண்ணா உருவத்தை கொடியிலும் பொறித்து வைத்துள்ள திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் இணைத்துக் கொள்ளும் அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ ஏடான ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆரில் வெளி வந்தவைதான் (19.5.2014) இவை! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page6/80911.html#ixzz32gUKuiNO

தமிழ் ஓவியா said...


வெள்ளைப் பூண்டு


பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப் பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.
வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்ட மின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.
தயோ சல்பினேட் எனும் உயிர்ப்பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரி விக்கின்றன.
ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..

இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும்


Read more: http://viduthalai.in/page6/80912.html#ixzz32gUXFMwz

தமிழ் ஓவியா said...


தேவை பெரியார் இயக்கம்


புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம் 3.5.2014இல் தங்களால் அமைக்கப்பட்டு, புதுவையிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளீர்கள் என்ற சேதி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல தித்திப்பாக இனிக்கிறது.

இன்றைக்கு உலக நாடுகள் பலவற் றிலே இனவெறி, மதவெறி, நிறவெறி, பதவி வெறி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளால் - உலக மனித சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன. மனிதாபிமானமற்ற இலங்கை ராஜபக்சே அரசு இன்று வரை தமிழர்களை அழிப்பதையே, குறியாகக் கொண்டு, தமிழர்களை கொன்று குவித்து வருகின்றது - இது ராஜபக்சே அரசின் இன வெறி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் யூதர்கள் - இது மதவெறி.

இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னதால், காந்தியை 1948-லே சுட்டுக் கொன்றது - பார்ப்பன - ஆரிய மதவெறி.

ஒடிசாவில் பழங்குடி மக்களின் தொழு நோயைப் போக்கும் தொண்டறத்தைச் செய்து கொண்டிருந்த, ஆஸ்திரேலியா டாக்டர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் - 1999-லே ஜீப்பில் வைத்துக் கொளுத்திக் கொன் றார்களே இந்துத்துவா பஜ்ரங்தள் கும்பல் - இது இந்து மதவெறி.

இன்றைக்கு இந்தியாவில் 93 கோடி மக்கள் சேரிப் பகுதிகளில் ஒதுக்குப்புற மாக தள்ளப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே. இது இந்து மதத்தின் சாதி வெறி. நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் கருப்பினத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது - இருட்டிய பிறகுதான் வெளியே வர வேண்டும் என்ற நீதிபதியின் உத்தர வின்படி 5 ஆண்டுகள் இந்தக் கொடு மையை அனுபவித்தனர். இது தென் ஆப் பிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் நிற வெறி. எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒரு முறை சொன்னார். ஆனால் 20.03.2012 கால கட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். (ஜூனியர் விகடன் 13.4.2014) இப்படி மோடி உண்மைக்கு மாறாகக் கூற வேண்டிய தன் அவசியமென்ன? இதுதான் பதவி வெறி!

சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகா ணத்தை தனியாகப் பிரித்து தந்து இஸ் லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் வீகர் எனப்படும் தீவிர வாதக் குழுவினர் - யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் (2.3.2014) இது தீவிரவாதம்.

இப்படி காலங்காலமாக உயிர்ச் சேதங்களும், பொருளாதார அழிவுகளும், பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இவை களையெல்லாம் மாற்றியமைக்கின்ற வழிமுறைகள் பற்றி எத்தனை நாட்டுத் தலைவர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள்? சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பதைப்பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பட்டம், பதவிக்காகவும், கோடி கோடி யாகக் கொள்ளையடித்து சொத்துக்களை குவிப்பதற்காகவும், தாங்கள் பெற்ற பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தங்களுக்குச் சாதகமான - தீய வழி முறையாக இருந்தாலும் - கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் - அதன்படி நடக் கவே சித்தமாக உள்ளார்கள். அது முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அமைச்சர்களாக இருந்தாலும் சரி.

பணம் பதுக்கி வைப்பதற்கென்றே ஒரு சுவிஸ் வங்கி வேறு. இப்படி பல கோணங்களிலே ஏராளமான களைகள் உலகளவிலே முளைத்து துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை யெல்லாம் வெட்டி, கெல்லி எறிகின்ற ஒரே களைவெட்டி - பெரியாரிசம் தான்.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவை மனிதநேயம். அந்த மனிதநேயத்தைப் பரப்புரை செய்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் கி. வீரமணியும் ஆவார்கள். உலகெங்கும் திராவிட இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். புதியதோர் உலகம் செய்வோம். அதில் மாந்தர்களை மட்டுமே காண்போம்.
கா.நா. பாலு, எடப்பாடி

Read more: http://viduthalai.in/page7/80914.html#ixzz32gUurGWC

தமிழ் ஓவியா said...


சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்


சனிக்கோளின் வளையங்களில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத பகுதி முதல் முதலாக சூரிய ஒளியை உள்வாங்கி பிரகாசித்தது. இந்தக் காட்சியை சனிக்கோளை ஆய்வு செய்ய அனுப்பிய கசினி விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. சனிக்கோளின் கடுமையான ஈர்ப்புவிசை மற்றும் அதன் வேகம் காரணமாக சனியின் நடுக்கோட் டுப்பகுதியில் பலலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அழகிய வளையங்கள் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி ஆண்டுகளாக சனிக்கோளை சுற்றி வரும் வளையங்களை பல பகுதிகளாக பிரித்து அதற்கு ஆங்கிய எழுத்து ஏ முதல் எப் வரை பெயர் சூட்டி யுள்ளனர். இதில் சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான வளையப்பகுதி இருட்டிலேயே உள்ளது. இந்தப் பகுதிக்கு பி என்று பெயர் சூட்டி அழைத்துவந்தனர். அடர்த்தியான தூசுகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ஒளியிழந்து காணப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் சனிக்கோள் 43 டிகிரி கோணத்தில் தற்போது சூரியனை நெருங்கிச் சுற்றுகிறது, இதன் காரணமாக பி வளையம் முழுவதிலும் நன்றாக சூரிய ஒளிபட்டு அந்த வளையப்பகுதி மிகவும் பிரகாசமாகத்தோற்றம் அளிக் கிறது, இதனை கசினி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

கசினி அனுப்பிய படம் குறித்து நாசா மற்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் மற்றும் இத்தாலி விண்வெளி கழகம் மூன்றும் இணைந்து ஆய்வு செய்துவருகிறது. இதுவரை தொலைநோக்கி மூல மாகவும் விண்கலன்களின் புகைப்படக் கருவிக்கும் புலனாகாத பி வளையம் தற்போது ஆய்விற்கு உகந்த சூழ் நிலையில் சூரியஒளியை உள்வாங்கி எதிரொளித்துக்கொண்டுள்ளது. இதை வைத்து வியாழனுக்கும், சனிக்கும் இடையில் சுற்றும் விண்கற்களின் பாதையில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசாவில் சூரியக்குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்

Read more: http://viduthalai.in/page7/80915.html#ixzz32gV41SVl

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா? அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா?

அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரப் போகும் தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்தானா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ளவர் வட மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு பார்ப்பனர்.

இவர் வேறு மாநிலத்திற்குத் தலைமை நீதிபதியாகி விரைவில் சென்று விடுவார் என்ற நிலையில், மீண்டும் நிரந்தரமான தலைமை நீதிபதியாக, பஞ்சாப் அரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் இவரும் உயர் ஜாதி பார்ப்பனர் (கவுல் என்றாலே காஷ்மீர மூலதாரமான உயர் பார்ப்பன வகுப்பு ஆகும்) அவர் இங்கே வந்து, சில மாதங்களிலேயே உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று சென்று விடக் கூடும்.

60 மொத்த நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது ஓய்வு பெற்றவர்கள் போக 43 நீதிபதிகள்தான் உள்ளனர். 17-க்கும் மேற்பட்ட பதவிகள் காலி; வழக்குகளும் அதன் காரணமாக ஏராளம் தேக்கமாகி நிற்கின்றன!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 31.

இதற்கு தற்போது காலி இடங்களில் புதிதாக 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள், இரண்டு பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகி, உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று வரவிருக் கின்றவர்கள்; மற்றும் இரு சட்ட நிபுணர்கள் என்பதால் - நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட இருப்பவர் இருவர். ஒருவர் பார்சி வழக்குரைஞர்; மற்றொருவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பார்ப்பன வழக்குரைஞர் நீண்ட காலம் டில்லியிலேயே அரசு வழக்குரைஞராகவே இருந்தவர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கர்நாடகத்தைச் சார்ந்த ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா என்ற பார்ப்பனர், இவருக்கு மூத்த வழக்குரைஞர் தகுதியை, விதிகளுக்கு விலக்கு அளித்தே இவரை குறுக்கு வழியில் உயர்த்தியது தான் இன்று இவர் இப்பதவி உயர்வுக்கும் - உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரேரணை செய்வதற்கும் அடிப்படைக் காரணமாகும்.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களான நீதிபதிகள் தகுதியுள்ள பலர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மற்ற நீதிபதி களாகவும், அதேபோல மூத்த நீதிபதிகளாக பல தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்தும் அவர்களில் ஒருவர்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்படாதது, அரசியல் சட்டத்தின் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் வழக்குரைஞர்களிடையே குமுறல் உள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே மிகவும் காலந் தாழ்ந்து,

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து

1. ஜஸ்டீஸ் வரதராஜன் (தமிழ்நாடு)
2. ஜஸ்டீஸ் இராமசாமி (ஆந்திரா)
3. ஜஸ்டீஸ் பாலகிருஷ்ணன் (கேரளா)

வந்து ஓய்வு பெற்று விட்டனர்!

இப்போது எவரும் இல்லை! அதேபோல் பிற்படுத்தப் பட்ட சமூகத்திலிருந்து

1. ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் (தமிழ்நாடு)
2. ஜஸ்டீஸ் ப. சதாசிவம் (தமிழ்நாடு)

இவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது எவரும் இல்லை! 31 இடங்களிலும் ஆண் களும் சரி, பெண்களும் சரி எல்லாம் முற்பட்ட ஜாதியினரே!

மேலும், இப்போது நிரப்பப்படவிருக்கும் நான்கு நீதிபதிகளும்கூட உயர் வகுப்பினரே!

இதுபற்றி புதிய மத்திய அரசு, சமூக நீதிக் கண்ணோட் டத்தில் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுப்பதும்; கொலி ஜியம் என்ற முறையை மாற்றுவதுபற்றி யோசிக்கவும் முன்வர வேண்டும் என்பதே பல வழக்குரைஞர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலரின் கருத்தாகும். விடியல் ஏற்படுமா நீதித் துறையில்?

- நமது சிறப்பு செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/80858.html#ixzz32gVwptGG

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


இராமேசுவரத்தில் 24 புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கினால் பலவிதமான சாபங்கள், தோஷங்கள் இறைவன் அருளால் நீங்கும் என்பது அய்தீகம் என்கிறது ஓர் ஏடு!

அது என்ன அய்தீகம் அதையும் விளக்கலாமே?

தான் தப்பித்துக் கொள்ள அய்தீகத்தின்மீது பழியா?

24 புண்ணிய தீர்த் தங்கள் இருக்கும் இராமேசுவரத்தில் மருத்துவமனைகள் ஏன்?

இழுத்து மூடி விடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/80867.html#ixzz32gW658BN

தமிழ் ஓவியா said...


ஆட்டுக் கல்லான அறிவு!


குமாரபாளையம், மே 24- நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் பகுதியில் கொச்சி பெங் களூர் தேசிய நெடுஞ் சாலையில் பல இடங் களில் ஆட்டுக்கல், அம் மிக்கல், குழவி கல் போன் றவை நேற்றுமுன்தினம் திடீ ரென கொட்டப்பட்டிருந் தன. இந்த கற்கள் எப்படி நெடுஞ்சாலைக்கு வந்தது என்பது பலர் புரியாமல் தவித்தனர். மழை வேண்டி மக்கள் இப்படி செய்தது தெரிய வந்தது. குமார பாளையம் கிராமங்களில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவும் போது, கல் கொடும்பாவி கொட்டுதல் என்ற வினோத வழிபாடு மக்கள் மத்தியில் உள்ளதாம். மழை பெய்யாத கிராமங் களை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதிகளில் பயன் படாத கல் உரல், ஆட் டுக்கல், அம்மி குழவி போன்றவற்றை வண்டி யில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள கிராமங்களில் இர வோடு, இரவாக கொட் டுவார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் உள்ள பீடைகள் நீங்கி, மழை கொட்டும் என நம்புகின் றனராம் குமார பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் நேற்று முன் தினம் (20ஆம் தேதி) இரவு 3 இடங்களில் இது போல் கல் கொடும் பாவி கொட் டப்பட்டுள்ளது. இதற் கிடையில், கற்கள் கொட் டப்பட்ட பகுதியில் மழை பொய்த்து போகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80861.html#ixzz32gWrUvD7

தமிழ் ஓவியா said...

கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!


தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.

இதில் 90.7 சதவீத இருபால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் மேல் என்பது - எந்த அளவுக்கு நம் மக்களிடையே கல்வியின் செழிப்பு வளர்ந் திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்த சமூகத்தில், இப்படி கல்விப் பயிர் செழித்துக் குலுங்குகிறது என்பதை எண்ணும் பொழுது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.

இதற்காக உழைத்த தந்தை பெரியார் அவர்களையும் அவர் கண்ட இயக்கத்தையும் நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் முயற்சியையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்ப்போம்! நெஞ்சம் நிறைந்த பூரித்த நன்றிவுணர்வால் அவர்களை நனைப்போம்.

சமூக புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், தாம் கண்ட அறக்கட்டளையின் சார்பில் சில கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நடத்தினார்; அன்னை மணியம்மையார் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப்பிட முடியாத முயற்சியாலும், கண் துஞ்சாப் பணியாலும் கூர்த்த சிந்தனையாலும், அறிவார்ந்த திட்டங்களாலும், அக்கல்வி நிறுவ னங்களை மேலும் மேலும் (எத்தனை மேலும் என்றும் போட்டுக் கொள்ளலாம்) வளர்த்தார் - வளர்த்துக் கொண்டும் உள்ளார்; ஒரு பல்கலைக் கழகம் என்கிற அளவுக்குப் பெரியார் விதைத்த அந்தக் கல்வி வித்தினை வளர்த்து ஆளாக்கி விட்டாரே!

அழுக்காறு அற்ற நெஞ்சங்கள் வாழ்த்துகின்றன - பூரிக்கின்றன - பாராட்டுகின்றன. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகெங்கும் பரவிப் பணியாற்றுகின்றனர். இந்திய இராணுவத் துறையிலும்கூட முத்திரை பதிக்கின்றனர் என்று எண்ணும்போது நம் தலைவர் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பெயரைக் கொண்டு சென்ற அந்தப் பெற்றிதான் என்னே!

பெரியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் அனைவரின் கவனத்தையும், கருத்துகளையும் ஈர்த்துள்ளன.

எட்டு ஆண்டுகளுக்கு முன் 217 மாணவர்களுடன் பெரியார் அறக்கட்டளையால் கையகப்படுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில், இப்பொழுது படிக்கும் இருபால் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா 2500; 217 எங்கே 2500 எங்கே!

பத்து மடங்கு அதிகமாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் படையெடுக் கிறார்கள் என்றால் அதன் தன்மையின் ஆழத்தை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பரப் பினை எண்ணினால் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது.

நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றதில் மூன்றாவது இடத்துக்கு வந்த மாணவன் (கி. நவீன்ராஜ் 497/500). ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் என்று நினைக்கிறபோது, அந்த மாணவனின் பெற்றோர்களைவிட நமது தலைவரும், பள்ளி ஆசிரியர்களும், கழகத்தவர்களும் பூரிப்படைகின்றனர் - பெருமிதம் கொள்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில்; படிக்க வாய்ப்பற்றுக் கிடந்த அந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துவக்கினார்.

இவ்வாண்டு ஆறுபேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி அத்தனை மாணவர்களும் வெற்றி பெற் றுள்ளனர். அந்த ஆறு பேரில் மூவர் 400-க்கும் மேலாக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நாகம்மையார் இல்லத்துப்பிள்ளைகளின் நூறு சதவீத வெற்றி பெருமிதமாக இருக்கிறது.

படிப்பு பார்ப்பனர்களுக்குத்தான் வரும்; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் வரவே வராது என்று ஆக்கி வைக்கப்பட்ட மனுதர்ம காட்டை அழித்து, சமூகப் புரட்சி இந்த நாட்டில் உருவாக் கப்பட்டுள்ளது என்பதற்கு இவை எல்லாம் ஈடில்லா எடுத்துக்காட்டுகள்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்கா விட்டால் மான்யம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்த நீதிக்கட்சியை நெஞ்சார இந்த நேரத்தில் நினைப்போமாக!

பெரியார் கல்வி நிறுவனங்களை நிறுவி, அடி கோலிட்ட அய்யாவையும், அன்னை மணியம்மை யாரையும், நாகம்மை இல்லத்துப் பிள்ளைகளின் அண்ணனாக இருந்த அருமைப் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களையும் எண்ணுவோம்.

இன்று பெரும் அளவு வளர்த்த எல்லோரையும் ஆச்சரியரித்தோடு திரும்பிப் பார்க்க செய்துள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர்களை மானசீகமாகக் கை குலுக்குவோம்! பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து உழைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனை வரையும் பாராட்டுவோம் - நன்றியும் கூறுவோம்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/80888.html#ixzz32gXiHsTi

தமிழ் ஓவியா said...


வரலாறுதிரும்பும்!


- கி.தளபதிராஜ்


"மோடியும் லிபரல்களின் தோல்வி யும்" என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டி ருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக "இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக் காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத் துக்கு உள்ளாயிற்று. அடக்கு முறையா கவே மாறியது" என்று சொல்லும் கட் டுரையாளர்

"பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின் மனக் குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார். மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத் தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்" என எழுதுகிறார்

மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை. நிலைமை இப்படியிருக்க இதை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின் ஆழ்மனதையே வெளிக் காட்டுகிறது. "அய்ரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் அஞ்சல் அலுவலகங்களாக மாற்றப்பட்டு விட்டன" என புலம்புகிறார் கட்டுரை யாளர். அவை மானுட சமூகத்தின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறை யால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால் இந்தி யாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!
நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத் தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.

அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை யாமே! அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா? கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது எந்த வகை அறிவு? மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெபாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே? ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில் "ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!" னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ? இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத் திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!

Read more: http://viduthalai.in/page-2/80889.html#ixzz32gXqJpjU

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/80887.html#ixzz32gYZrnmG

தமிழ் ஓவியா said...
தமிழ்நாடு மாகாண மகாநாடு

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்ப னரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZHeI7v

தமிழ் ஓவியா said...

பாலிய விதவையின் பரிதாபம்

இந்து தருமத்தின் மகிமை

17.07.1929ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங்,பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.

தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5ஆவது வயதிலேயே மணம் முடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அனுமதி இல்லாமையால் பீபியா மரணப் பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்துவிட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.

பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர திட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZVED88

தமிழ் ஓவியா said...

காங்கிரசுக் கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும், அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிர கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிர சட்டசபைக்குப் போகும்படி கட்டளைஇட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப் பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிர பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

-குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZaeGfn

தமிழ் ஓவியா said...

வைதிகர்களின் இறக்கம்

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத் திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:

1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்து வதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத்துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.

குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZo8abG

தமிழ் ஓவியா said...

கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித் தொகை திட்டங்கள்!
சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை, மே 24- தமிழறிஞர் ராபர்ட் கால்டு வெல்லுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரு டைய பெயரில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூன்று துறைகளின் கீழ் மூன்று கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண் டவன் கூறினார்.

கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னைப் பல்கலைக்கழகத் தில் கொண்டாடப்பட்டது இதில் துணைவேந்தர் ஆர். தாண் டவன் பேசியதாவது:

தமிழறிஞர் பேராசிரியர் ராபர்ட் கால்டுவெல் தனது 24 வயதில் லண்டன் மிஷனரி சொசைட்டி என்ற கிறிஸ்தவ மத பிரசாரக் குழுவினருடன் சேர்ந்து மதத்தைப் பரப்புவ தற்காக இந்தியா வந்தார்.

இவரைப் போன்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பு வதற்காக இந்தியா வந்த பலரும் அந்தந்தப் பகுதி மொழியை அறிந்து அதன் மூலமாகப் பேசி, மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட னர். இவர்களிடமிருந்து கால்டுவெல் வேறுபட்டு இருந்தார்.

மற்றவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு மட்டுமே, இங்குள்ள மொழி களை கற்றறிந்தனர். ஆனால், கால்டுவெல் தமிழ் மொழியை அறிந்து அதன் பெருமைகளை உணர்ந்து அதன் மீது பற்றும் கொண்டார். அவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் எனும் நூல் உலகெங்கும் அவருக்கு புகழை ஈட்டித்தந்தது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி களுக்கு தாய் மொழி தமிழே. இந்த மொழிகள் அனைத்தும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தியவரும் அவரே.
இப்படிப்பட்ட மாமனி தரின் நூலை கடந்த 1913இல் சென்னைப் பல்கலைக் கழகம் இரண்டாவது முறை யாகப் பதிப்பித்தது.அவருக்கு மீண்டும் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 1913இல் பல்கலைக்கழகம் பதிப்பித்த அவருடைய நூல் இப்போது மறு பதிப்பு செய்யப்படும். மேலும் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை மற்றும் திருக்குறள் துறை ஆகிய மூன்று துறைகளுக்கும் கால்டுவெல் பெயரில் மூன்று கல்வி உதவித்தொகைத் திட் டங்கள் அறிமுகம் செய்யப் படும்.

அதோடு, சென்னைப் பல் கலைக்கழகத்தில் ஆரம்ப காலங்களில் தமிழ்த் துறை யில் பணியாற்றிய தமிழ் மொழி வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றியவர்களின் நினை வாக சங்கப்பாதை என்ற ஓர் இருக்கை உருவாக்கப்பட்டு வாரம் அல்லது மாதம் ஒரு முறை தமிழறிஞர்கள் மற் றும் பிற மொழி அறிஞர்கள் வரவழைக்கப்பட்டு கருத்தரங் குகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.

Read more: http://viduthalai.in/page-7/80884.html#ixzz32gZzTHsg

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?குல தெய்வ வழி பாட்டுடன் முருகப் பெரு மானை செவ்வாய் கிழமைகளில் அரளிப்பூ வைத்து வழிபட்டால் உங்கள் கடன் தீரும் என்று ஓர் ஏடு தெரிவித் துள்ளது.

தனி நபர் கடன் தீர இந்த எளிய வழியென்றால் இந்தியாவின் கடன் சுமை தீர பரங்கிப் பூ வைத்துப் படைக்கலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/80935.html#ixzz32mOYYeGk

தமிழ் ஓவியா said...


ஆரம்பமாகிவிட்டது மத வெறியர்களின் ஆட்டம்


பாட்னா, மே 25- டில்லியில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பேரா சிரியராக பணியாற்றிவரு பவர் ஜி.என்.சாய்பாபா அவருக்கும் மாவாயிஸ்ட் டுகளுக்கும் தொடர்பு உள்ள தாகக் கூறி 9-5-2014 அன்று மகாராட்டிரக் காவல்துறை யினர் கைது செய்தனர். பாட்னாவில் உள்ள ஏஎன்சின்கா சமூக கல்வி நிறுவனம் சார்பில் பேரா சியர் கைது குறித்து கல்வி யாளர்களின் கருத்தரங்கு கூட்டம் நடத்த ஏற்பாடா னது.

கூட்டம் நடக்கும் போது, வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று முழக் கங்களை எழுப்பியபடி கல்வி நிறுவனத்தின் பொருட் களை சேதப்படுத்தியது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர் களை விரட்டி அடித்து வன்முறை வெறியாட்டத் திலும் ஈடுபட்டது. வன் முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவின் மாணவர் அமைப் பான அகில பாரதீய வித் யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) என்கிற அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், விரைவில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள்மீது நடவடிக்கை யும் எடுக்கப்படும் என்று காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் தீவிர வாதிகளுடன் தொடர்பு என்றாலே எவ்வித விவாத மும் நடத்தவே கூடாது என்று வன்முறையாட் டத்தை ஏபிவிபியினர் நடத்தி உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/80934.html#ixzz32mOfYWbk

தமிழ் ஓவியா said...


நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா?


பாகிஸ்தான் அதிபரோடு மன்மோகன் சிங் பிரியாணி சாப்பிடலமா என மோடி கேட்டது அப்போ; தேர்தலுக்கு முன்.

பாகிஸ்தான் அதிபரோடு நான் பிரியாணி சாப்பிடப் போறேன்; அவரோடு, ராஜபக்சேவும் சேர்ந்துக்குவார் என மோடி சொல்றது இப்போ; தேர்தலுக்குப் பின்.

ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர், பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தைரியத்தில் நடக்கிறது.

அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார்.

இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது.

இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று மோடி குற்றம் சாட்டினார்.

இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல; சாட்சாத் நம்ம நரேந்திர பாய் மோடி தான்.
எங்கே?

நம்மூர் திருச்சியில் தான்.

இப்படி ஆக்ரோஷமாக, விஜயகாந்த் திரைப்படத்தில் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை உருட்டிப், பேசுவாரே, அதை மிஞ்சும் அளவிற்குப் பேசினார் மோடி.

உடனே கூடியிருந்த மக்கள் பலத்த கையொலி எழுப்பினார்கள்.

ஆகா, பார், நாம் எதிர்பார்த்த ஹீரோ வந்துவிட்டார் என்று.

ஆனால், அதெல்லாம் தேர்தல் நேரத்தில் பேசும் பேச்சு என அந்த மக்களுக்கும் தெரியவில்லை; மோடிக்கு காவடி தூக்கிய நம்மூர் வைகோ அண்ட் கோவினர்க்கும் புரியவில்லை.

இப்போது வெற்றி பெற்றதும் என்ன ஆனது?

அதே பாகிஸ்தான் நவாஸ் ஷெரிப், அழைக்கப் படுகிறார்; இலங்கையின் ராஜபக்சேவிற்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.

இப்போது என்ன காரணம் பாஜகவால் சொல்லப்படுகிறது. அண்டை நாடுகளுடன் நட்பு உருவாக்கிட மோடி மகத்தான ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதை அரசியல் ஆக்கக்கூடாது என்கிறார்கள்.

ஏனய்யா இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கும்போது நவாஸ் ஷெரிப்போடு மன்மோகன்சிங் சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டீரே எனக் கேட்டால், அது அப்போ, தேர்தலுக்கு முன்.

இப்ப, நீங்க நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா? எனக் கேட்டால், இது இப்போ, தேர்தலுக்குப் பின் என்கிறார்கள் மோடி பரிவாரத்தினர்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/80930.html#ixzz32mOx2PPA

தமிழ் ஓவியா said...


பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்


- குடந்தை கருணா

மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருவதற்கு தமிழ் நாட்டிலும், நவாஸ் ஷெரிப் இந்தியா வருவதற்கு சிவ சேனாவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளுடன் நட்பு வளர்வதற்கு மோடி எடுத்துள்ள சிறப்பான முயற்சி இது என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்.

இதே அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தையை மன்மோகன் சிங் அரசு எடுத்தபோது அதை மோடியும், பாஜகவினரும் கடுமையாகச் சாடினர். இப்போது வெற்றி பெற்றதும், நட்பு, உறவு, அண்டை நாடு என மோடி பரிவாரங்கள் பேசுகின்றன.

தேர்தல் நேரத்தில் மோடி எப்படி எல்லாம் பேசினார்? நான் வெற்றி பெற்றால் மாநில அரசுக்கு உரிய மதிப்பு அளிப்பேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை அழைப்பதற்கு முன், தமிழக அரசோடு கலந்து பேசியிருக்க வேண் டாமா?

ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்கு காரணமான ராஜபக்சே மீது போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என பல நாடுகள் முயன்று வரும் நிலையில், தமிழக மக்கள் அதற்காக வலியுறுத்தும் நிலையில், ராஜபக் சேவை அழைக்க வேண்டிய அவசி யம் என்ன? குஜராத்தை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள், வேண்டாம், ஒரு நூறு பேர் பாகிஸ்தானில் தாக்கப்பட்டிருந்தால், மோடியின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்குமா? அதெல்லாம் இருக்கட்டும். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய மோடி, வெற்றி பெற்றதும் சொன்னாரே, சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைப்பதற்கு முன், அவரது கூட்டணியில் இருபத்தேழு கட்சிகள் இருக்கின்றனவே, அதில் தொடர் புடைய மாநிலக் கட்சிகளோடு ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமா? வேண் டாமா? தொடர்புடைய மாநிலக் கட்சி களோடும் பேசவில்லை; தொடர் புடைய மாநில அரசோடும் பேச வில்லை.

அப்படி என்றால் இப் போது அமைய உள்ள ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அல்ல; மாறாக, இது அவர்கள் முதலில் சொன்னதுபோல், மோடி சர்க்கார் தான் என்பதை, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல; கூட்டணியில் உள்ள கட்சிகளும் புரிந்து கொள்ள வேண் டும். பதவி ஏற்கும் விழாவிற்கு சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைக் கும் வழக்கம் ஏதும் இதற்கு முன்னர் எப்போதும் கிடையாது. இப்போது மோடி அரசால் ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இந்த அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது என்றால், இதன் நோக்கம், பாஜகவின் பெரும்பான் மையினவாதத்தை அண்டை நாடு களுக்கு காட்டுவதற்குத்தான் எனக் கருத வேண்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/81003.html#ixzz32sHauayB

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம்பரியம் நமது வாழ்க்கை நடைமுறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. சர்க்கரையின் அளவை கணக் கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.

அறிகுறிகள்: அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

ரத்தபரிசோதனை: பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தக்குழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரால், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற் கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIEsRbH

தமிழ் ஓவியா said...

குடற்புண்ணை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்

குடற்புண் அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலி வுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை செரிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்படலாம். சிகிச்சை பின்வருமாறு:

தண்ணீர்: போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.

அருகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதிய சாப்பாடு. இதன்மூலம் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.

வாழைத்தண்டு: நோயாளிகளுக்கு பொதுவாக சிறு நீரகக்கல் அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.

கொத்தமல்லி: இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வல்லாரை: மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIOBdmf

தமிழ் ஓவியா said...


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?

ஊடகங்களுக்கு அச்சுதானந்தன் கேள்வி

திருச்சூர்,மே 26- ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப் படும் ஊடகங்கள், கார்ப் பரேட்மயமாக்கலின் ஆர வாரங்களுக்கு இடையே தங்களின் முகத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

திருச்சூரில் சீனியர் ஜெர் னலிஸ்ட் ஃபாரம் (மூத்த பத்திரிகையாளர்கள் சங் கம்) மாநில மாநாட்டை யொட்டி ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சி யடைகிறதா? என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கிற்கு அனுப்பிய துவக்க உரையில் அச்சுதானந்தன் மேலும் கூறியதாவது: சர்வதேச-தேசிய-மாநில சூழ்நிலைமைகளில் ஊடக அமைப்புகள் முதலாளித் துவ-கார்ப்பரேட் நலன் களுக்கு அடிபணிந்து செயல் படுகின்ற நிலைமை உள் ளது நாட்டில் உள்ள முக் கியமான சுமார் 40 பத்திரி கைகளும் அவற்றின் துணை வெளியீடுகளும் டாடா, பிர்லா மற்றும் பெனெட், கோல்மேன் உள்ளிட்ட நான்கைந்து பெரும் ஏக போக முதலாளிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. கேரளத்திலும் பிரபல பத் திரிகைகள் இவர்களின் நலன்களைத்தான் பாதுகாக் கின்றன.

சமூக வாழ்க்கையில் நிலவும் அநீதிகளை கண்ட றியவும், அவற்றை அகற்றி வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தவும், மாற்றி அமைக் கவும் ஊடகங்கள் கட மைப்பட்டவையாகும். ஆனால், ஊடகங்கள் இன்று பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும் பிரை வேட் ட்ரீட்ஜெர்ன லிசம் (தனியார் அணுகி தனக்கா னதை சாதித்துக் கொள்ளும் இதழியல்) என்றும் குற்றச் சாட்டுக்கு ஆளாகின்றன. திருவனந்தபுரத்தில் அர சின் குடியிருப்புத்திட்டத் தில் வீடு வழங்கப்பட்ட 54 பத்திரிகையாளர்கள் ஆண் டுகள் பலவாகியும் ஒரு பைசாக் கூட கட்டவில்லை என்றுசில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளி யானது.

எல்லாவற்றையும் விமர்சிக்கின்ற நான்காவது தூண்என்று அழைக்கப் படும் பத்திரிகைகளை யார் விமர்சிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளத் தில் இரண்டு பிரபல பத்தி ரிகைகளுக்கு, மற்ற பத்திரி கைகளுக்கு வழங்கப்படு வதைவிட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தில் அரசு விளம்பரம் அளித்தது என்று தகவல் உரிமை சட் டத்தின்படி கிடைத்த தக வல் கூறுகிறது. ஊடகங் களின் பிரச்சாரங்கள் மூலம் நரேந்திரமோடி பாரதத்தின் ரட்சகர் என்று வர்ணிக்கப் பட்டார். இதுபற்றி ஊட கங்கள் மேலும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

குஜராத் இனப்படு கொலையின் பேரில் ஹிட் லருடன் ஒப்பிடும் அள வுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடியை ஊட கங்கள் எளிமையானவர் என்றும் இரக்கம் உள்ளவர் என்றும் ஏழைகளின் காப் பாளர் என்றும் வர்ணித்தன. ஊடகங்களையும் ஊடகங் களின் போக்குகளையும் விமர்சனரீதியாக பார்க் கின்ற ஒரு சமூகத்தை உரு வாக்கவேண்டும். அதுதான் ஊடகங்களின் நம்பகத்தன் மையை மீட்டெடுப்பதற் கான முக்கியமான முதல் படியாகும். இவ்வாறு அதில் அச்சு தானந்தன் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81019.html#ixzz32sItyzJm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கோலார் தங்கவயல், மே 27- கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிக்பள்ளாப்பூர் அருகே இந்த விபத்து நடந்தது.

சிக்பள்ளாப்பூர் தாலுகா, ஹலயூர் கிராஸ் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 36). இவருடைய மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு நயனா (11), மோனிஷா (8) என்ற 2 மகள்கள் உண்டு. 4 பேரும் ஒரு காரில் சிக்பள் ளாப்பூரில் உள்ள நந்தி கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்று கொண்டு இருந்தனர். காரை ஜெய ராம் ஓட்டிச் சென்றார்.

தேவிசெட்டி ஹள்ளி கிராஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப் பளம் போல நொறுங்கி யது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினார்கள்.

இந்த விபத்தில் ஜெய ராம், அம்பிகா, மோனிஷா ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நயனா படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தவுடன் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சிக்பள் ளாப்பூர் புறநகர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டு நரை வலைவீசி தேடி வரு கிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/81060.html#ixzz32yJW6uYo

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடி கூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

_ (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/81061.html#ixzz32yJjPoaX

தமிழ் ஓவியா said...


திருவாரூர் மாநாடுதிருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர்கள் எழுச்சி மாநாடு நேற்று (26.5.2014) மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், கொள்கை முழக்கங்களோடு பேரணி முக்கியமானதாக அமைந்திருந்தது. பெரும்பாலும் திருவாரூர், நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய சங்கத் தொழி லாளர்கள் இருபாலரும் பங்கு ஏற்றனர் என்பதே உண்மையாகும்.

திராவிடர் கழகப் பேரணி என்றால் ஏதோ கூட்டம் கூட்டமாகச் செல்லும் முறையில் அது அமைவதில்லை.

முறையாக அணிவகுப்பது, மாநாட்டின் நோக் கத்தை வெளிப்படுத்தும் ஒலி முழக்கங்கள் (அச்சிட்டு வழங்கப்படும்) அதில் முக்கியமாக இடம் பெறும்.

இரண்டாவதாக, மூடநம்பிக்கை ஒழிப்புக் கூர்மையுடையதாக இருக்கும்; படித்தவர்களே மூடநம்பிக்கைக் குழிக்குள் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கும் மக்கள் நிறைந்த நாட்டில், மூடநம்பிக்கையை எதிர்க்கும், மக்களுக்கு உணர்த்தும் அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இது திராவிடர் கழகத்திற்கே உரித்தான சிறப்புத் தகுதியாகும்.

பொது மக்கள் மத்தியில் இத்தகு பேரணியும் மூடநம்பிக்கை ஒழிப்பு அம்சங்களும் இடம் பெறும் போது பொது மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியது மட்டுமல்ல; சிந்திக்கத் தூண்டுபவையாகவும் அமை கின்றன.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தச் ஷரத்தினைத் துல்லியமாக நூற்றுக்கு நூறு செவ்வனே செயல் படுத்துவது திராவிடர் கழகமே! சிறப்பாக திராவிடர் கழகம் நடத்தும் பேரணியில் அவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் (பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல், அலகு குத்திக் கார் இழுத்தல், கூரிய அரிவாள் மீது ஏறி நிற்றல் முதலியன) மிக முக்கியமானவையாகும்.

மாநாட்டைப் பொறுத்தவரை, தீர்மானங்கள் எப்பொழுதும் முக்கியமானதாக அமையும், திருவா ரூரில் நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் அந்த வகையில் இந்தக் கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

விவசாயத்தைத் தொழிலாக அறிவித்தல், காவிரி நதி நீர் பங்கீடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசியல் கண்ணோட்டமின்றி மானியங்கள், நிவாரணங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்தல், பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளி லிருந்து பாதுகாத்தல், விவசாயத்தின் துணைத் தொழிலான ஆடு - மாடுகள் பராமரிப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, விவசாயிகளுக்கு முதியோர் காப்பகங்கள், ஆண் பெண்களுக்கிடையே ஊதிய வேறுபாடு நீக்கம், தென்னக நதிகள் இணைப்பு, விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்தல் ஆகிய அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் மூன்றில் இரு பகுதியினரின் தொழில் விவசாயமாக இருக்கும் ஒரு நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!

ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலேயே வளர்ந்து, கடனிலேயே மாள்கிறான் என்பது தொடர் மொழியாகவே இருந்து வருகிறது.

விவசாயத்தில் கூட அந்நியத் தலையீடு என்கிற அளவுக்குக் கேவலமாகி விட்டது. பாரம்பரியமாகப் பராமரிக்கப்பட்டு வந்த விதை நெல்லுக்குப் பதிலாக மலட்டு விதைகள் அறிமுகப் படுத்தப்பட்ட கொடுமை எல்லாம் உண்டு.

இவற்றை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது மீண்டும் அந்த மலட்டு விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும் - உலகப் பொருளாதாரச் சூழலில் நாடுகள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட தீய விளைவுகளில் இதுவும் ஒன்று.

சில்லறை வர்த்தகத்தில்கூட அந்நிய முதலீடு என்று வருகிறபோது உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள் களுக்கான கட்டுபடியாகும் விலைகூடக் கிடைப்ப தில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழிலாக ஒதுக்கப்பட்டது இந்திய விவசாயியே!

காவிரி டெல்டா பகுதியைப் பொறுத்தவரை விவசாயத்தைத் தவிர வேறு எந்தவிதமான தொழில் வசதிகளும் கிடையாது. விவசாயத்தைத் தவிர வேலை வாய்ப்பு என்பது அரிதாகும். இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் தேவையான தொழிற்சாலைகளை உருவாக்கி, விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்ய வேண்டும் என்பதே திருவாரூர் மாநாட்டுத்தீர்மானம் அடிநாத மாகக் கொண்டிருக்கிறது.

மீன் பிடி தொழிலுக்குச் செல்லாத கால கட்டத்தில் அத்தொழிலாளிகளுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படுகிறதே - அதே கண்ணோட்டம் விவசாயத் தொழிலுக்கும் தேவைப்படுகிறது. திராவிடர் விவ சாயிகள் தொழிலாளர் எழுச்சி மாநாடு இத்திசையில் பல்வேறு சிந்தனைகளைத் தட்டி எழுப்பியுள்ளது என்பதில் அய்யமில்லை.

மாநாட்டு வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனை வருக்கும் பாராட்டுக்கள்.

Read more: http://viduthalai.in/page-2/81062.html#ixzz32yJrtlPP

தமிழ் ஓவியா said...


பழகு முகாமின் சிறப்புகள்

பெரியார் பிஞ்சுகளின் பழகுமுகாம் சிறுவர், சிறுமியர் மற்றும் விடலை பருவத்து பிள்ளைகளிடமும் நல்லவண்ணம் முற் போக்கு எண்ணத்தை சிந்தனையை விதைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது வரும் ஆண்டுகளில் பெற்றோருக்கு பயிற்சி வகுப்புகள் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது.

10.5.2014 அன்று தாங்கள் பெரியார் பிஞ்சுகளுக்கு அறிவுரை, கருத்துரை வழங்குமுன் அவர்களை பேரன், பேத்தி களே என விளித்ததை குறிப்பிடும்போது எங்கள் பிள்ளைகளின் முகத்தில் மின் விளக்கின் ஒளிர்வை பார்க்கும்போது அவர்களின் அகமகிழ்வை அளவிட முடி கிறது. கழக கூட்டங்களுக்கு அழைத்த போது மறுத்த பிள்ளைகள், அதே பிள் ளைகள் தாத்தா சொல்லிட்டார்மா உங்கள் ஊருக்கு நான் வரும்போது நீங்கள்தான் என்னை வரவேற்கு வரனும் என்று அதனால் அப்பா என்னை அழைத்து செல்லவில்லை என்றாலும் நானே சைக்கிள் எடுத்துச் சென்று வரவேற்பு கொடுப்பேன் என்றபோது என் வாழ்விணையர் பெரு மிதத்தோடு என்னை பார்த்தார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நான் சொன்னபோது ஏற்காதவர்கள், பழகுமுகாம் சென்று வந்தபின் சொல்லும் முன்பே பயிற்சி செய்வது எனக்கு மகிழ்ச் சியை அளிக்கிறது.

பழகு முகாம்களை கழகத்தின் நாற்றங்கால்களாக்கப்பட என் உள்ளார்ந்த யோசனைகள்

குழந்தைகளின் பெற்றோர் பகுத்தறி வாளர்களாக இருந்தும் குடும்ப சுமை, பொருளாதார நெருக்கடி, இன்னும் சில காரணங்களால் குடும்ப தலைவிகள் பகுத் தறிவு பாதையிலிருந்து விலக நேரிடுகிறது ;அதற்கு குடும்ப தலைவர்களும் காரணமாக இருப்பதுண்டு. இந்நிலையிலிருந்து விடுபட மதவாதிகளுக்கு போல தொடர்ச்சியாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும் சூழ் நிலை பகுத்தறிவாளர் குடும்பங்களுக்கு சிறப்பாக பெற்றோர்களுக்கு வழங்கும் வகையில் பெற்றோர் பயிற்சி முகாம் அமைய வேண்டும். ஆண்டுதோறும் வெளியூர் சுற்றுலா சென்று தம்மை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பில்லாததாலேயே அய்யப்பா, திருப்பதி என்று ஆன்மீக சுற்றுலா செல்கின்றனர் என்பது கவனிக்க தக்கது.

முக்கியமாக பெண்கள் சமையல், துணி துவைப்பது போன்ற வேலைகள் செய்து சலித்துள்ளனர். சமையில் விடுதலைக் காகவே பல பெற்றோர்களும் பங்கேற்பர், பெற்றோர்கள் தெளிவானவர்களாக இருந்தால் பிள்ளைகள் சரியாகவே வளர்வார்கள், பெற்றோர் பயிற்சி முகாமில் சுற்றுலாவும் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

முடிந்தால் முழுநேரம் அல்லது பகுதி நேரம் பெரியார் டி.வி.அவசியமாகும். பகுத்தறிவை சிறுவர்களிடம் கொண்டு செல்லும்வகையில் பல வண்ண படக்கதை புத்தகங்களாக தந்தை பெரியார் வரலாறு, பகுத்தறிவாளர் வாழ்கையில் சுவையான நிகழ்ச்சிகள் அவர்களின் போராட்டத்தை சுவைப்பட சொல்லும் தனி படக்கதை புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும். கார்ட்டூன் குறுந்தகடுகளும் வெளியிடலாம்.
பழகு முகாம் பயிற்சி முகாம்களில் பங்கேற்கும், சிறுவர், பெற்றோருக்கு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடுகள் அவரவர் பகுதி முக்கிய நிகழ்வுகளை குறுஞ்செய்தியாக ஒருவாரம் முன்பு ஒருமுறையும் முதல்நாள் ஒருமுறையும் நினைவூட்டல் செய்யலாம்.

பழகு முகாம் பிள்ளைகளின் வயது வரம்பு 18 ஆக்கப்பட வேண்டும்.

- செ.ரா.முகிலன், காஞ்சிபுரம்

Read more: http://viduthalai.in/page-2/81065.html#ixzz32yK0W1ne

தமிழ் ஓவியா said...

திருவாரூர் - திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாடு - அரிய கருத்துகள் பொழிவு

திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு திருவாரூர் கீழவீதியில் சுயமரியாதைச் சுடரொளிகள் குடவாசல் வீ.கல்யாணி, நூற்றாண்டு கண்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் ஆகியோர் நினைவரங்கில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு திராவிடர் கழக மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி தலைமை வகித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக விவசாயிகள் பாழ்பட்டுப் போன நிலை! 2012 இல் கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடன்களை அடைக்க முடியவில்லை. விவசாயமே செய்ய முடியாத நிலையில், கடன்களை எப்படித் திருப்பிச் செலுத்த முடியும். 2006 இல் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது 7000 கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்தார். அதுபோல, இந்த அரசும் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளர் ந.சுரேசன், தலைவரை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் கா.வீரையன், திருவாரூர் நகரக் கழகச் செயலாளர் கு.காமராஜ் ஆகியோர் தலைவரை வழிமொழிந்தனர்.

வீ.மோகன் வரவேற்புரை

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மிக முக்கியமான விவசாயிகள் மாநாட்டினை திருவாரூரில் நடத்திட வாய்ப்பு அளித்த கழகத் தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

திராவிடர் கழகக் கொடியை திருவாரூர் மாவட்ட மாணவரணி தலைவர் சீ.மோனிஷா ஏற்றினார்.

ராசகிரி கோ.தங்கராசு

மாநாட்டினைத் திறந்து வைத்த திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் உரையாற்றுகையில், விவசாயத் தொழிலையே செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்ட இந்த நிலையில், விவசாய தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன் உரையாற்றுகையில், காவிரி டெல்டா பகுதிகளில் தொழிற்சாலைகளைத் தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன்

60 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தப் பகுதிகளில் விவசாய தொழிலாளர் சங்க அமைப்புகளைத் தொடங்கி விவசாயிகள் மத்தியில் தன்மான உரிமையையும், தொழி லாளர்களின் உரிமையையும் நிலை நாட்டியது திராவிடர் கழகமே; 60-க்கு 40 வாரம் வருவதற்குக் குரல் கொடுத்தது திராவிடர் கழகமே - உடைமையாளர் நிலத்தை விற்றால், குத்தகைதாரர்களுக்கு மூன்றில் ஒரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்ட அமைப்பு திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் என்று எடுத்துரைத்தார்.

பூண்டி கலைவாணன்

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் தமது உரையில், ஒரு சரியான காலகட்டத்தில் இந்த மாநாட்டை திராவிடர் கழகத் தலைவர் கூட்டியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

மன்னார் குடியை அடுத்த வடுவூரில் விவசாய தொழிலில் ஈடுபட்ட இரு பார்ப்பனர்கள், சங்கராச்சாரி யாருக்குக் காணிக்கை அளிக்க முன்வந்தபோது, வருணா சிரமத்துக்கு விரோதமாகவும், மனுதர்ம சாஸ்திரத்திற்கு விரோதமாகவும் பாவத் தொழிலான விவசாயத்தைச் செய்த காரணத்தால், அந்தப் பார்ப்பனர்களின் காணிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று சங்கராச்சாரியார் சொன்னதை நினைவூட்டி னார் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு.

விவசாயத் தொழிலை செய்யும் மக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், அவர்கள் அவமதிக் கப்படுகிறார்கள். இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய ஒரு கவிதையை நினைவூட்டினார்.

முழங்கால் சேற்றினில் முக்கி விதைத்தவன்
மூடச் சோதரன் பள்ளப்பயல் - அதை
மூக்குக்கும் நாக்குக்கும் தண்ணீர்க் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
என்ற பாடலைப் பொருத்தமாக நினைவூட்டினார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
விவசாயத்தைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்தத் தொழி லுக்கு அரசு ஒதுக்கும் தொகையோ ஒரே ஒரு சதவிகிதம் தான். தொழில் வளர்ச்சி என்று வருகிறபோது 8 சதவிகிதம் என்பார்கள்; விவசாயத் துறை வளர்ச்சி என்று வரும் பொழுது வெறும் 1.8 சதவிகிதம் என்று சொல்லுகிறார்கள். இதிலிருந்தே விவசாயம் இந்தியாவில் எந்த நிலைக்கு ஆளாக்கப்பட் டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாக விலைவாசி உயர்வு என்றால் எதைப் பொறுத்தது?

உணவுப் பொருள்களின் விலையை வைத்துத்தானே பெரும்பாலும் அவ்வாறு கூறப்படுகிறது. இந்த நிலையில், விவசாயத்துக்கும், அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பது மாநில - மத்திய அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டார்.


Read more: http://viduthalai.in/page-3/81077.html#ixzz32yKDVQbL

தமிழ் ஓவியா said...


நீக்கம்-சேர்ப்புக்குப்பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு


சென்னை, மே 27- மூன்று பேர் மீண்டும் சேர்க்கப்பட் டிருப்பது, அமைச்சர் கே.பி. முனுசாமி நீக்கப்பட்டிருப் பது என சில மாற்றங்கள் செய்யப்பட்ட பின், புதிய தமிழக அமைச்சரவைப் பட் டியல் வெளியிடப்பட்டுள் ளது.

அமைச்சரவை பட்டி யல் குறித்த உத்தரவை தலை மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட் டார். அதன் விவரம்: (பெய ரும், அவர்கள் வகித்து வரும் துறைகளும்)

பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா-பொதுத்துறை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பொது நிர் வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள் துறை. ஓ.பன்னீர்செல்வம்-நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர் தல், பொதுப்பணித் துறை)

நத்தம் ஆர்.விஸ்வநாதன்- மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்-வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனி சாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழி லாளர் நலத் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை.

பி.பழனியப்பன்-உயர் கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட் டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை.

வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

வி.மூர்த்தி-பால்வளத் துறை.

எம்.சி.சம்பத்-வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ் ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங் கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத் தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணி யன்-தகவல் தொழில் நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வரு வாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங் கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட் டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

சி.விஜயபாஸ்கர்-சுகா தாரத் துறை.

Read more: http://viduthalai.in/page-5/81041.html#ixzz32yKxi3w7