Search This Blog

20.5.14

16ஆவது மக்களவைத் தேர்தல் - தோல்விக்குக் காரணம் என்ன?-கி. வீரமணி


16ஆவது மக்களவைத் தேர்தல் - தோல்விக்குக் காரணம் என்ன?
காங்கிரசின் மீதுள்ள கோபம் அதன் கூட்டணிக் கட்சிகளையும் பாதித்து விட்டது!
அடிக்கட்டுமானமுள்ள திமுக  விரைவில் எழுச்சி பெறும்
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசை உருவாக்கும் 16ஆம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி  தரத்தக்கவையாகவே வெளி வந்தன.  மத்தியில் பா.ஜ.க., (RSS)  தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் வெற்றி பெற்றன. பா.ஜ.க. 282 தொகுதிகள் (தனித்த பெரும்பான்மைக்கு மேலேயே) அதன் கூட்டணியாகிய தேசிய ஜனநாயக முன்னணி (NDA) 336 பெற்றன.

அ.இ.அ.தி.மு.க. மொத்தம் உள்ள 39 தமிழ்நாட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றது 37 ஆகும்.

புதுவை ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது (மூன்றாவது இடத்தைப் பெற்றது). தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் தி.மு.க. பெற்றுள்ள வாக்குகள் 24 சதவிகிதம் (23.6%) மிக அதிக வெற்றி பெற்றிட்ட அதிமுக பெற்ற வாக்குகள் 44 சதவிகிதம் (44.4%).

தி.மு.க. தோல்விகளைச் சந்தித்த கட்சிதான்!

24 சதவிகித வாக்குகள் பெற்றும்கூட தி.மு.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத நிலை!  தி.மு.க.வுக்கு இது ஒன்றும் முதன் முறை அல்ல. ஏற்கெனவே நடந்த சில பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு இப்படி நிகழ்ந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை.

பிறகு அதிலிருந்து மீண்டு, விழுந்த வேகத்திலேயே எழுந்தும் வந்துள்ளது. இது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; அ.தி.மு.க.வுக்கும் இரண்டு, மூன்று முறை இத்தகைய நிலைமை பொதுத் தேர்தலில் ஏற்பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. 2004 பொதுத் தேர்தலில் ஆளுங் கட்சியாக இருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட போதுகூட ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல், தற்போது தி.மு.க. அடைந்த தோல்வியைப் போலவே, அ.தி.மு.க.வும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது, பிறகு மாறிய நிலையில் இப்படி வெற்றியும் பெற்றுள்ளது.

தி.மு.க. கதை முடிந்து விடாது!

எனவே, இந்த முடிவுகளை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு தி.மு.க.வின் கதையே முடிந்துவிட்டது என்று கூவுவது, குதூகலிப்பது, கும்மாளமிடுவது ஒரு தற்காலிக மகிழ்ச்சிப் படலமே தவிர, நிரந்தரமாகி விடாது; நிரந்தரமானதும் இல்லை.

மத்தியில் பங்கேற்போம் என்று கூறிய நிலையில், பலர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு தனித்த அறுதிப் பெரும்பான்மையைக் கொடுத்து விட்ட நிலையில் அந்தக் கனவும் நிறைவேற வாய்ப்பில்லாததாகி விட்ட வருத்தமும்  வெளிப்படையாகவே தெரியும் ஒன்றாகியுள்ளது.

மோடி அலை என்பது உண்மையா?

இவ்வளவு பெரிய வெற்றியை பா.ஜ.க. அடைந்ததற்கு என்ன சரியான காரணம் என்று ஆராய்ந்தால், மோடி அலை என்றால் பா.ஜ.க.வின் வெற்றி கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும்கூடப் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டுமே; அப்படி ஏற்படவில்லை என்பது ஏன் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸின் செயல்பாடுகளே காரணம்!

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின்  (UPA) இரண்டாம் முறை அரசு (முதல் முறையில் மக்கள் விரோதப் போக்கு மிக அரிது - CMP என்பதுபோல பல கட்டுப்பாடுகள் - உட்பட வரைமுறைகளுக்குட்பட்டே நடந்தது). எந்த முடிவையும் காலந் தாழ்த்தியே எடுத்ததால் எதிர் விளைவைச் சந்தித்தது.

விலைவாசி ஏற்றம், வேலை கிட்டாத நிலை, வெறும் (GDP) வளர்ச்சிபற்றி ஏட்டுச் சுரைக்காய் சமைத்தது; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்குக் கதவு திறப்பு,  வெளிநாட்டு வியாபாரம் உட்பட மக்கள் உணர்வுகளுக்கு விரோதமான போக்கு, உள்நாட்டுப் பிரச்சினைகள்; மாநில மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாதது, ஊழல் என்ற எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட ஓங்காரக் கூச்சலைக் கண்டு வேகமாக எதிர்த்து நிற்காதது. தயங்கித் தயங்கி முடிவுகளை அறிவித்து, கூட்டுப் பொறுப்பு பிரதமருக்கு -அமைச்சரவைக்கு உண்டு என்பதை அறவே மறந்து விட்டு தங்களை மட்டும் காப்பாற்றிட தற்காப்புவாத (Defensive) முறைகளையே பயன்படுத்தியது போன்றவற்றை பா.ஜ.க. மிக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
காங்கிரஸ் கட்சிமீது மக்களுக்கு  நாளும் தணியாத கோபம் - வெறுப்பு நாளும் வளர்ந்ததே தவிர, குறையவே இல்லை.

காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்தவர்கள் மீதும் கோபம்
இதுதான் அவர்களை எதிர்க் கட்சித் தகுதியுடன்கூட வராத அளவுக்குத் தாழ்த்தி விட்டது - வாக்காளர்களது தீர்ப்பில்.

இவர்களோடு இருந்த காரணத்திற்காகவே தி.மு.க., ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சி, கூட்டணி கட்சியினர் பரூக் அப்துல்லா கட்சி சரத்பவார் கட்சி முதலியவைகளையும், (வெளியேறினாலும் கூட தி.மு.க.வின்மீதும் கடுங்கோபம்); வெளியில் இருந்து ஆதரித்து  5 ஆண்டுகள் நிலையான ஆட்சி என்ற நிலையைத் தருவதற்குக் காரணமாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, லாலு கட்சி, (RJD) முலாயம் சிங்கின் சமாஜ்வாடி எல்லாக் கட்சிகள்மீதும் இந்த சுனாமி பாய்ந்து விட்டது!

தி.மு.க.மீதும் கோபம்

தி.மு.க.விற்கு உள்ள வாக்கு வங்கி சரியா விட்டாலும்கூட, புதிதாக அவர்களை ஆதரிக்க வேண்டிய மக்கள் காங்கிரசுக்கு உதவியவர்கள்  என்ற கோபத்தில் தி.மு.க.வையும் தண்டித்துள்ளனர்.

பார்ப்பன ஊடகங்கள் கூறும் ஊழல் குற்றச்சாற்று காரணம் என்றால் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் எப்படி வெற்றி பெற முடிந்தன? ஊழலைக் களைவோம் என்றவர்களின் வேட்பாளரே (பி.ஜே.பி.) விலைக்கு வாங்கப்பட்ட நிலை பரவலாகப் பேசப்படவில்லையா?
உதாரணத்திற்கு கர்நாடகத்தில் எடியூரப்பா, ஸ்ரீராமுலு போன்றவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் எப்படி?

பதிலடி கொடுத்திருக்க வேண்டும்

பார்ப்பன உயர் ஜாதி ஊடகங்கள் திட்டமிட்டே தி.மு.க.மீது தனி வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வந்தன. கடந்த சில ஆண்டுகளாக அதனை எதிர்த்துப் பதிலடிகளை திட்டவட்டமாகக் கொடுக்காமல், தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் தி.மு.க.வின் பிரச்சாரம் அமைந்ததும் அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது!

புதிய இணையதள இளையர்களான வாக்காளர்கள் மேலெழுந்த வாரியான திட்டமிட்ட வளர்ச்சிப் பேச்சு, மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு என்பதுபோன்றவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர்.

காங்கிரஸ் - திமுகவை அவர்கள் பிரித்துப் பார்க்கவே தயாராக இல்லை.

பொய்யுடைய ஒருவன் சொல் வன்மையால்
மெய்போலும்மே மெய் போலும்மே! 

என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது!

பல்  குழுவும், பாழ் செய்யும் உட்பகையும்

தி.மு.க.வின் பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் நோயாக ஆங்காங்கே உள்ளதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும். இந்த நோயை மறைத்தால் அது பிறகு உயிர்க் கிறுதியாகி ஆகிவிடும்.

தி.மு.க. தலைவர் கலைஞர், பேராசிரியர், தளபதி மு.க. ஸ்டாலின் போன்றவர்களது கடும் உழைப்பு, எதிர்பார்த்த பலனைத் தராததற்கு முக்கிய காரணம்; புதிய வாக்காளர்கள், பொதுவானவர்கள் நம்பிக்கையையும் தி.மு.க. பெற வாய்ப்பு இல்லை; இனி இதனையே ஒரு வாய்ப்பாக எண்ணி தகுந்த ஆய்வுகளோடு, புதிய அணுகுமுறைகளைப் புகுத்திட தயங்கக் கூடாது.

அசைக்க முடியாத தி.மு.க.வின் அடிக்கட்டுமானம்

தி.மு.க. அடிக்கட்டுமானம் அசைக்க முடியாததாக இன்றும் உள்ளது என்பதில் அய்யமில்லை. இந்த முடிவுகளை அறைகூவலாக எடுத்துக் கொண்டால், திட்டமிட்டுச் செயல்பட்டால் நிச்சயம் ஆறு மாதங்களில் இயக்கம் புத்தெழுச்சி பெற்று விட முடியும். பெருஉருக் கொள்ள முடியும்.

மற்றபடி பண நாயக பவனி, பெற்ற வெற்றிகளைபற்றி தமிழ்நாட்டுத் தேர்தல் ஆணையரே தமிழ்நாட்டில் கடைசி 2 நாள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்று ஒப்புதல் வாக்கு மூலம் போல செய்தியாளர்களிடையே மதுரையில் 8.5.2014ல் கூறியுள்ளதைவிட, மிகப் பெரிய காரணம் வேறு தேவையா?

5 காரணங்கள்

எனவே, பெரு வெற்றி  அதி.மு.க.வுக்கென்று நினைத்து ஊடகங்கள் ஓகோ என்று புகழலாம்; ஆனால் உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் அறிய மாட்டார்களா? அஇஅதிமுகவுக்கு உதவிய அய்ந்து
எனவே,

1. ஆட்சி பலம், 2. தேர்தல் ஆணைய பலம், 3. ஊடகங்களின் ஒரு சார்பு நிலை, 4. பணப் பட்டுவாடா, 5. அதற்கு உதவிய 144 சட்டம் அமல் - இத்தியாதிகள் இத்தியாதிகள்.

அதிர்ச்சி தந்த இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நாடு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்றையும் சுட்டிக் காட்டுவதில் பெருமிதம் அடைகிறோம்.

பலமான கூட்டணியை அமைத்து நாங்கள் 39 இடங்களையும் கைப்பற்றுவோம் என்றவர்களும் அவர்களுக்குத் துணைபோன ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளும், அதில் சிலர் பணத்தை வாரி வாரி இறைத்தும்கூட, பெரியார் மண்ணான இத்தமிழ் மண்ணைக் காவிமயமாக்க முடியவில்லை.

இந்தத் தோல்வியை, தமிழ் நாட்டிற்கான பா.ஜ.க. பொறுப்பாளர் திரு. முரளிதரராவ், வெளிப்படையாகவே ஒப்புதல் வாக்குமூலம் போல், தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட கூட்டணியால் ஒரு பலனும் ஏற்படவில்லை என்று இன்று செய்தியாளர்களிடையே கூறியுள்ளார்.

அவர்கள் பெற்ற இரண்டு வெற்றிகளில் ஒன்று மதவாத வெற்றி; மற்றொன்று ஜாதி வாத வெற்றி என்பது உலகறிந்த உண்மையல்லவா?

இந்த முடிவுகளிலிருந்து தோல்வி அடைந்தவர்கள் பாடம் பெற்று, அனுபவத்தை அறுவடை செய்வதோடு, அதை மனதிற் கொண்டே அடுத்து பயிரிடும் உழவாரப் பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.

தி.மு.க. தனது அணுகுமுறையிலும், அமைப்பு ரீதியாகவும், ஆழ்ந்து சிந்தித்து இப்போதே முடிவுகளை - அவை யாருக்கு எவ்வளவு கசப்பானவைகளாக இருந்தபோதிலும் - எடுக்கத் தவறக் கூடாது என்பதே உரிமையுடன் நாம் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

நட்டம் தி.மு.க.வுக்கா?

தி.மு.க. வைத் திட்டமிட்டு பலவீனப்படுத்தினால், அதனால் ஏற்படும் நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; திராவிடர் இன நலத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்கும் முனைப்புடன் போராட வேண்டி  உணர்வுகளுக்கும் ஏற்படுவதாக அமையும்.

கலங்காது கண்ட வினைக்கண்  துளங்காது
தூக்கங் கடிந்து செயல் - குறள் (668)

(நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்யத் துணியும் வினையை, மனக் கலக்கம் இல்லாமலும், சோர்வில்லாமல் காலத் தாழ்வு நீக்கியும் விரைந்து செய்து முடிக்க வேண்டும்).

---------------------------------------------கி.வீரமணி  தலைவர்,  திராவிடர் கழகம்  
சென்னை 19.5.2014

41 comments:

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, 22.6.191973)

Read more: http://viduthalai.in/page-2/80577.html#ixzz32DGYKpXg

தமிழ் ஓவியா said...திருவாய் மலரும் திருவாளர்!

மக்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தேர்லின் போது பணப்பட்டுவா டாவை தடுத்து நிறுத்த முடி யாது என்கிறார் தமிழ் நாட்டின் தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீன்குமார் (மக்கள் வரிப் பணத்தில் வாழும் அதிகாரிகள் மக்கள் மீதே பழி போடும் விசித் திரம்) மக்கள் திருந்த வில்லை என்பதற்காகத் தானே அதிகாரம் ஆட்சி என்பதெல்லாம்?


இவர்கள் படித்தவர்கள்?

சேலம் மக்களவைத் தேர்தலில் அரசுப் பணியா ளர்களின் தபால் வாக்களிப் பில் செல்லாதவை 466.

பி.ஜே.பி.யும் முஸ்லீம்களும்

பி.ஜே.பி. சார்பாக 7 தொகுதிகளில் முஸ்லீம்கள் நிற்க வைக்கப்பட்டும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மூன்று முறை வெற்றி பெற்ற ஷானவாஸ் ஹுசேன் பீகார் மாநிலம் பாகல்பூரில் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் பாமுல்லா தொகுதியில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட குலாம் முகமதுபீர் - ஆறாம் இடத்திற்கும், சிறீநகர் தொகுதியில் முஷ்டாக் அகமது மாலிக் 4ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். மே. வங்கத்தில் தம்லுக் தொகுதியில் பாதுஷா சலாம் நான்காம் இடம் பிடித்தார். லட்சத் தீவிலோ சையது முகம்மது கோயாவுக்கு 5ஆம் இடம்,6 இடங்களில் 3 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் என்பதுகூட வேறு வழியில்லாத காரணமே!அட பைத்தியசாமிகளே!

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். செய்தி கேள்விபட்டு முதல் அமைச்சர் என். ரெங்கசாமி அப்பா பைத்தியசாமி படத்தை வைத்து - அதற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்தபடி இருந்தாராம். சிறிது நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இவர் வெற்றி பெற்றவுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்று கும்பிடு போட்டாராம். (வாக்குப் பதிவு இயந்திரத் தில் அப்பா பைத்தியசாமி தில்லுமுல்லு செய்திருப்பாரோ!) அட பைத்தியங்களே!

Read more: http://viduthalai.in/e-paper/80575.html#ixzz32DH8GtOi

தமிழ் ஓவியா said...

பெரியார் கொள்கைகள் யாரையும் வீழ்த்தாது! உயர்த்தும்!

சோதி இராமலிங்கம்-கவிதா இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் உரை

பெரம்பூர், மே 19- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் வே.சோதி இராமலிங்கம் - செல்வி கவிதா ஆகியோரின் வாழ்விணை ஏற்பு விழா சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் 18.5.2014 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் இயக்குநர் இளங்கோ சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். அவரது வரவேற் புரையில் மணமக்களின் சமூகப் பணிகளை விளக்கினார். கழக வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ. ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமகள், வடசென்னை மாவட்டச் செயலாளர் வெ.மு.மோகன், மாவட்டத் துணைச்செயலாளர் கோ.கதிரவன், கி.இராம லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வாய்ஸ் ஆஃப் ஓ.பி.சி ஏட்டின் ஆசிரியர் வேயுறு தோளிபங்கன், ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் இராம.பாண்டுரங்கன், திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன் வாய்ஸ் ஆஃப் ஓ.பி.சி பதிப்பாளர் பார்த்தசாரதி, ஊடகவிய லாளர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில்:- தோழர் சோதி இராமலிங்கம் அவர்கள் பெரி யார் திடலில் உருவானவர் என்றும், அவரது தலையங்க விமர்சனம் நடத்துவதில் மணமகள் கவிதாவின் பங்கு சிறப்பானது என்று குறிப்பிட்டார். மேலும் தமது உரையில் சுயமரியாதை திருமணம் குறித்தும், பழந்தமிழர் திருமண முறைகள் குறித்தும், தாலி பின்னர் புகுத்தப்பட்டதையும் விளக்கினார்.

தொடர்ந்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்த திருமணம் அடிமைத் தனத்தை அழித்து சமத்து வத்தை கொண்டுவரும். புழுக்கத்தை ஒழித்து காற்றோட் டத்தை தரும். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைக் கொண் டவர்களான மணமக்கள் மிகச்சிறப்பான வாழ்வினை வாழ்வார்கள் என்று கூறி மேலும் தந்தை பெரியாரின் தனித்தன்மைகளையும், திராவிடர் இயக்கத்தின் சாதனை களையும், தந்தை பெரியார் கொள்கைகளால் சமுதாயத் திற்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்கி உரையாற் றினார்.

இறுதியாக கழகத்தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து தலைமையுரையாற்றினார். ஆசிரியர் அவர்கள் தமதுரையில் குறிப்பிட்டதாவது:- இந்த திருமணம் ஒரு கொள்கை திருவிழா, வெற்றித்திருவிழா, சோதி இராமலிங்கம் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் என்று ஊடகத்துறை நண்பர் ஒருவர் கூறினார். இது கேட்டு மகிழ்ச்சியடைகிறோம். பொதுவாக ஊடகத்துறையில் அல்ல எந்தத் துறையில் இருந்தாலும் பொருள் விளங்கா உருண்டைகளாக தான் இருப்பார்கள். பொருள் விளங்கா உருண்டை என்பது பழங்கால திருமணங்களில் வைக்கப்படும் ஒரு கெட்டியான உணவு பொருள் ஆகும்.

இந்த திருமண முறைக்கு ஒப்புக்கொண்ட பெற்றோரை பாராட்டிடக் கடமைப்பட்டுள்ளோம். பெற்றோர் பிள்ளைகளின் உணர்வுகளை மதித்துள்ளர். இதை நீங்கள் மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் வீழமாட் டார்கள். வரவுக்கு உட்பட்டு செலவு செய்வது தான் ஒழுக்கமான வாழ்வு என்பார் பெரியார்.

பிறர் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த கொள்கை மனித நேயத்தை பறைசாற்றுவது, பெண்களை சமமாக மதிப்பது, நடத்துவது; போன்ற வாழ்வியல் தத்துவங்களை கொண்டதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் திருமண செலவு குறித்து கூறும்போது ஒருவர் தமது வருவாயில் பத்து நாள் வருமானத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று கூறுவார்.

எனவே பெரியார் கொள்கை யாரையும் உயர்த்துமே ஒழிய வாழவைக்குமே ஒழிய யாரையும் தாழ்த்தாது. திராவிடர் கழகம் குறித்து பலர் கருத்து கூறும்போது, பெரியார் இல்லாவிட்டால், திராவிடர் கழகம் இல்லா விட்டால் எங்கள் பிள்ளைகள் படித்திருக்க முடியாது; முன்னேறியிருக்க முடியாது. ஆனால் கடவுள் இல்லை என்பது தான் இடிக்கிறது என்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால் கடவுளைப் பற்றிய கேள்விகளுக்கு இதுவரை யாரும் பதிலளித்தவர் கிடையாது. ஒரு முறை தந்தை பெரியாரிடம் ஒரு தோழர் ஒரு வினாவை எழுப்பினார். அது என்னவென்றால், அய்யா, கடவுள் இல்லை என்கிறீர்களே திடீரென்று கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டார். தந்தை பெரியார் அவர்கள் உடனே கடவுள் இருக்கிறார் என்று கூற வேண்டியதுதான் பதிலளித்தார். ஆனால் கடவுள்தான் இன்றுவரை வரவில்லை. மனித சமுதாயத்தை பிரிக்கும் ஜாதியும் மதமும் வீழ்த்தப்பட வேண்டும் என்று உரையாற்றி மேலும் மணமக்கள் தங்கள் சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்களை எடுத்துக்கூறி இல்லறம் என்பதையும் தாண்டி தொண்டறத்திலும் தொடர்ந்து ஈடுபட கேட்டுக்கொண்டு தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார். ஊடகவியலாளர் கா.எழிலரசன் தொகுப்புரையாற் றினார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வெ.மு.மோகன் நன்றியுரையற்றினார்.

இந்நிகழ்வில் மாநில திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை. தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் பா. தென்னரசு, திராவிடர் இயக்க தமிழர் பேரவையில் வடக்கு மண்டல செயலாளர் மாறன், வட சென்னை பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் வெங்க டேசன், தி.செ.கணேசன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தின் செயலாளர் கி.சத்திய நாராயணன், துணைச்செயலாளர் சுப்ரமணியம், பெரியார் களம் தலைவர் இறைவி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் தொழில் உலகம் விஜயக்குமார், ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் கு.செல்வேந்திரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் கி.இராம லிங்கம், கழக வடசென்னை மாவட்ட மகளிரணி அமைப் பாளர் கு.தங்கமணி, மகளிரணியைச் சேர்ந்த வெற்றிச் செல்வி பூங்குன்றன், த.மரகதமணி, தங்க.தனலெட்சுமி, சுமதி கணசன், கீதா இராமதுரை, பா.மு.நிர்மலா, தமிழரசி சேகர்.

மற்றும் இளைஞரணி தோழர்கள் ஏ.மணிவண்ணன், சு.அன்புச்செல்வம் பெரியார் திடல் சுரேஷ், இரா.கருணா கரன், கு.கண்ணன், உடுமலை, இராஜிவ், ஒளிவண்ணன், ஆவடி இரா.கலைவேந்தன், நா.பார்த்திபன், பிரபு, அம்பேத்கர், இரா.பிரபாகரன், சி.வாசு, மதுரவாயல் பாலமுரளி, எ.எஸ்.செந்தில், வழக்குரைஞர் சிவஞானம், அம்பத்தூர் ஏழுமலை, வை.கலையரசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் வருகை தந்து வாழ்த்தினர்.

முன்னதாக நுழைவு வாயிலில் தமிழர் தலைவருக்கு மண வீட்டார் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமகன் தந்தை வேங்கடாச்சலபதி மற்றும் மணமகள் தந்தை கல்யாணசுந்தரம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

மணமக்கள் இன்று (19.5.2014) பெரியார் திடலுக்கு வருகை தந்து இணையேற்பு விழா மகிழ்வாக தமிழர் தலைவரைச் சந்தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. ஆயிரம் நன்கொடை வழங்கினர்.

Read more: http://viduthalai.in/page-4/80592.html#ixzz32DHWDeyf

தமிழ் ஓவியா said...


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B

தமிழ் ஓவியா said...

சாறுகளில் உடல்நலம்

இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.

வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.

வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.

புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.

நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.

துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.

முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.

அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHzQHcI

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.

கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.

காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU

தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.தமிழ் ஓவியா said...


ரசல்


பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970) ஒரு பிரித்தானிய மெய் யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்க வாதி), சமூக சீர்திருத்த வாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் பெரும்பாலும் இங்கி லாந்தில் தன் வாழ்க் கையைக் கழித்தாலும், வேல்சில் மறைந்தார்.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப் பாளர், தடையிலா வணி கத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித் தவர், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காக வும்" 1950 இல், இலக்கியத் திற்கான நோபல் பரிசு கிடைத்தது".

ரசலின் மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரைகள்` என்ற இரு நூல்களில் காணப் படும். நான் ஏன் கிருஸ் துவன் இல்லை என்கிற தலைப்பில் 1927ல் மார்ச் மாதம் ஆறாம் நாளில் பாட்டர்சீ நகர மாளி கையில் தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண் டன் கிளையின்சார்பில் உரை ஆற்றினர், ஓராண்டு கழித்து அது துண்டு வெளியீடாக வந்தது. அதில் கடவுள் நம்பிக்கை யின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையி யல் பற்றியும் பேசுகிறார்.

(தமிழில் மொழிபெயர்த்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளி யிட்டது) நான் மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பி னாலும், கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் முதல் காரணி வாதம் கிழிக்க முடியாத தாக தோன்றியது.

18ஆம் வயதில், கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன், அதில் அவர் தந்தை `என்னை செய்தவர் யார்` என்பதற்கு பதில் இல்லை, ஏனெனில் அது `கடவுளை யார் செய்தனர்` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் என சொல்வதாக படித்தேன். அதிலிருந்து முதல் காரணி வாதத்தை கைவிட்டு, நாத்திகனா னேன்.

(பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36) (இன்று ரசல் பிறப்பு -1872)

- மயிலாடன் -18-5-2014

Read more: http://viduthalai.in/page1/80537.html#ixzz32DJNUH6p

தமிழ் ஓவியா said...


அயோத்திதாசப் பண்டிதர்


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf

தமிழ் ஓவியா said...


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!

மனித உரிமை கண்காணிப்பகம் உறுதி!

ஜெனீவா, மே 20- இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர் பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப் பகம் மீண்டும் வலியு றுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக விசாரணை களை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதி யளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல் கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர் பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளை யிடம் தீர்மானத்தில் கோரப்பட் டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள் ளதாக மனித உரிமைப் பேரவையின் ஆசிய பிராந் தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தம் நிறை வடைந்து அய்ந்து ஆண்டு கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் நம்பக மானதும் பக்கச் சார்பற்றது மான விசாரணைகள் நடத் தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேர வையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விசா ரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக் கப்பட்டவர்கள் நியாயத் திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள், ஊடகவி யலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டா ளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோ கிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்ட வில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிர் நீத்த வர்களுக்கு அஞ்சலி செலுத் தவும் இலங்கை அரசாங் கம் அனுமதி மறுத்திருந்த தாகத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80617.html#ixzz32J5kq3pW

தமிழ் ஓவியா said...


நடத்தப்படக்கூடாது


அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரி யங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.

- (குடிஅரசு, 29.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/80628.html#ixzz32J5y3Hbg

தமிழ் ஓவியா said...


அருந்ததிய மக்கள் ஊர் திரும்ப நடவடிக்கை தேவை


மதுரை, மே 20- மேல்மங் கலம் கிராமத்தில் ஜாதி ஆதிக்கவாதிகளால் பாதிக் கப்பட்டு வெளியூர் சென்று விட்ட அருந்ததிய மக்கள் மீண்டும் ஊர் திரும்ப உரிய நடவடிக்கையை தமிழக அரசுமேற்கொள்ள வேண் டும் என்று உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

மதுரை, உத்தப்புரம் பகுதியில் நடைபெற்ற தீண் டாமைக்கொடுமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்று வந்த உண்மை அறி யும் குழுவின் உறுப்பினர் வழக்குரைஞர் ரஜினி மது ரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தலித் மக் கள் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்குச் சென்று நடைபெற்ற வன்முறைகள் குறித்து உண்மை அறிய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வரு வது ஜனநாயக மறுப்பின் மறு வடிவம் தான். ஏற் கெனவே, உத்தப்புரத்தில் தலித் மக் கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை யென தெரிந்து அவ்வூருக்கு உண்மை அறியச்சென்ற போது அனுமதி மறுத்தார் கள்.

உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று தான் அந்த ஊருக் குச் சென்று வந்தோம். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற் றது போலவே, தேனி மாவட் டம் மேல்மங்கலம் கிராமத் திலும் அருந்ததிய மக்கள் மீது திட்டமிட்டு வன்முறை நிகழ்த் தப்பட்டுள்ளது.

6 வீடுகள் முற்றிலும் எரிக் கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை கிராமத்தை விட்டு வெளி யேறிய அருந்ததிய சமுதாய மக்கள் ஊர் திரும்ப வில்லை. தாக்குதல் நடத்திய வர்கள் என 20 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட் டது. ஆனால், அவர்கள் பிணையில் வெளி யே வந்து விட்டனர்.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த முருகுபாண்டி என் பவர் மீது பிணையில் வெளி வரமுடி யாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுசிறை யில்அடைக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட் டவர்களுக்கு வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தின் படி நிவாரணம் வழங்கப் படவில்லை.

அரசு அவர் களுக்கு வீடுகளையும் கட்டித்தரவில்லை. அருந்த திய மக்கள் வசிக்கும் பகுதி யில் நிரந்தரமாக காவல் துறையினரின் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமைக் குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அவர்கள் மீது வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண் டும். உத்தப்புரம் பகுதியில் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் வழிபாட்டு உரி மைமறுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான தெளி வான ஆணையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வெளி யிட்டிருந்தும் அதை அமல் படுத்த மறுக்கிறார்கள்.

முத் தாலம்மன் கோவில் அற நிலையத்துறையின் நிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். உத்தப்புரத் தில் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-8/80654.html#ixzz32J7lGhrw

தமிழ் ஓவியா said...

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்


அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்...
நீ செரித்துக் கொண்டதில்லை.

உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.

தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.

நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.

உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.

தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.

அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி

கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்- பொன்.இராமசந்திரன், பம்மல்

தமிழ் ஓவியா said...

அணிய வேண்டிய ஆடை!


ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பது
திராவிடம்!

ஜாதி, மதவெறிக்கு
மகுடம் சூட்டுவது
தமிழ்த் தேசியம்!

அம்மணமாயிருக்கும்
என்னுயிர்த் தமிழா!
ஆடையாய் நீ
அணிய வேண்டியது -
திராவிடமா?
தமிழ்த் தேசியமா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குறுங்கதை : சுயமரியாதை


- க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

தமிழ் ஓவியா said...

கைமேல் பலன்?


காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : யாராலே?....


மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்

சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்

அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே

குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே

இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்

சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!

பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்

கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்

ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்

அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே

திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...


பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?


பூனைக்குட்டி வெளியில் வருகிறது!

பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?

தடுத்திட சட்டம் தேவை என்கிறார் தேர்தல் ஆணையர் சம்பத்

புதுடில்லி, மே 21- தேர் தலின்போது, வேட்பாளர் கள் பணம் கொடுத்து, ஊட கங்களில் செய்தி வெளி யிடச் செய்வது, அபாயகர மானது. ஆனாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகளால், அந்த அபாயத்தை தடுக்க முடியவில்லை. எனவே, கடுமையான சட்ட விதி களை உருவாக்க வேண்டி யது அவசியம் என, தலை மைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

செய்தி நிறுவனம் ஒன் றுக்கு நேர்காணலில் தலை மைத் தேர்தல் ஆணையர், சம்பத் கூறியதாவது:

நாட்டின், 16 ஆவது மக்களவைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் வெற்றி கரமாக நடத்தி முடித்துள் ளது. அதனால், நாம் நிம் மதி அடைந்துள்ளோம். இந்த தேர்தலின் போது, அரசியல் தலைவர்கள் சிலர், மக்களிடையே விரோ தத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசிய தால், அவர்களுக்கு எதிராக, முதன்முதலாக நடவ டிக்கை எடுக்க வேண்டி நேரிட்டது.

வாக்காளர்கள் பலரை, கடைசி நேரத்தில் வாக் காளர்கள் பட்டியலில் சேர்த் தது, தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என, வாக்காளர்கள் மத்தி யில், விழிப்புணர்வு பிரச் சாரம் செய்தது போன்ற வற்றால், இதுவரை இல் லாத வகையில், இந்த தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊடகங்களுக்குப் பணம்

தேர்தல் நேரத்தில், ஊட கங்களுக்கு பணம் கொடுத்து, செய்தி வெளி யிடச் செய்வது, அபாய கரமான ஒன்றாக அதி கரித்து வருகிறது. சட்ட ரீதியாக, இதைக் கையாள முடியவில்லை. அதனால், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை, மக்கள் பிரதிநிதித்துவச் சட் டப்படி, தேர்தல் குற்ற மாக்க வேண்டியது அவசி யம்.

இந்த தேர்தலின் போது, பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை தடுக்க, தேர்தல் ஆணையம் முடிந்தவரை, பல நடவ டிக்கைகளை எடுத்தது. இந்த பிரச்சினையை கண் காணிக்க, மாவட்ட அள விலும், மாநில அளவிலும் குழுக்களை நியமித்தது.

பணம் கொடுத்து, 7,000 செய்திகள் வெளியிடப் பட்டது என்று உறுதி செய்யப் பட்டது. அதில், 3,000 செய் திகள் தொடர்பாக, சம்பந் தப்பட்டவர்களுக்கு, அறி விக்கை அனுப்பப்பட்டன.

இருந்தாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகள் காரணமாக, இந்தப் பிரச் சினையை கடுமையான முறையில் கையாள முடிய வில்லை. பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய் வதை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் வகையிலேயே, ஆணை யத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது.

மக்களவைத் தேர்த லின்போது, வாக்குச்சாவடி களுக்கு, ஒன்பது லட்சம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சேர்ப்பதும், பின், அவற்றை வாக்கு எண்ணும் மய்யங் களுக்கு எடுத்துச் செல்வ தும் சிரமமான பணியாகும்.

அத்துடன், தேர்தல் பணியில் ஈடுபடும், 70 லட் சம் ஊழியர்களை கையாள் வதும், மத்திய, மாநில காவல் படையினரை வழிநடத்துவதும், மிகப் பெரிய வேலையாகும். ஆனாலும், அவற்றை எல் லாம், தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு விதமாக உள் ளது. ஒவ்வொரு தேர்தலின் போது, பல விதமான பிரச் சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்து டன், வாக்காளர்கள் எண் ணிக்கை அதிகரிப்பதும், பிரச்சினைகள் அதிகரிக்க காரணமாகும் என்று சமா தானம் கூறினார் தேர்தல் ஆணையர் சம்பத்.

Read more: http://viduthalai.in/e-paper/80681.html#ixzz32PD5tZuL

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை

இலண்டன் மே 21- விடு தலைப்புலிகளின் தொலைக் காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன் றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகி யுள்ள புகைப்படத்தில் அவ ருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தி னர் கூறியிருக்கின்றனர். இந்த தக வலை இலண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது.

இணைய தளங்களிலும் பின்னர் உள்ளூர் பத்திரிகை களிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த் ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண் டுள்ளதாக அவருடைய தந் தையார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று தமது மூத்த மகளாகிய உஷாளினி சென்றதாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம் பெயர்ந்து, முள்ளி வாய்க்காலுக்குச் சென்றி ருந்த போது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட் டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத் தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் இடைத் தங்கல் முகாமுக்கு வந்தி ருந்தபோது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரு மாறு கோரி முறையிட்டி ருந்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர் கள் தொடர்பில் விசாரணை நடத்திய அதிபர் ஆணைக் குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள் ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப் பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவில் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழு வினரிடம் முறையிடவுள்ள தாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா இராணு வத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொ ளிகள் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இப் போது அவர் இராணுவ பங் கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப் படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் குறித்து இலங்கை இராணு வத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர் களிடம் கேட்டபோது, இப் படியான படங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என் றும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80682.html#ixzz32PDMmtT1

தமிழ் ஓவியா said...


ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?


புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஊட கம் நேர்மையாக செய்தி வெளியிடு கிறது என சொல்லுகிறார். உண்மையா? மோடி வளர்ச்சி நாயகன் என மோடியின் பிரச்சார கோஷ்டி தொடர்ந்து சொன்னதை ஊடகம் என்றைக்காவது கேள்விக்கு உட் படுத்தியுதுண்டா?

அடுக்கடுக்காக, குஜராத் மாடல் உண்மையல்ல என அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் சொன்னதை, ஊடகங்கள் நேர்மையாக வெளிப் படுத்தினவா?

நான் ஆட்சிக்கு வந்தால், குற்றப் பின்னணி உள்ளவர்களை சிறையில் அடைப்பேன் என மோடி பேசினார்; அமீத் ஷா, முசாபர் நகர் கலவரக் குற்றவாளிகள், எடியூரப்பா போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படி பேசுகிறீர்களே என எந்த ஊடகம் கேள்வி கேட்டது?

பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா சேர்த்த சொத்து விவரத்தை பட்டியலிட்டாரே; அதனை எந்த ஊடகமும் வெளியிடா மல் இருக்கிறீர்களே என கலைஞர் வெளிப்படையாகக் கேட்டாரே, அப்போதாவது, அந்த செய்தியை ஊடகம் வெளியிட்டதா?

ஆக, இங்கே ஊடக நிறுவனத்தின் முதலாளிகளுக்கு ஒரு அரசியல் இருக் கிறது. அதற்கு ஏற்ப செய்திகளை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக் கிறது. அதை மீறி நான் சொல்வேன் என்றால், அவர் வெளியே தள்ளப் படுவார்.

மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட சில பத்திரிகையாளர்கள். முதலாளிகளால் நீக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் தும்மினால் கூட, அது ஒரு செய்தி; உடனே, மைக்கைத் தூக்கிக் கொண்டு, மு.க. அழகிரியிடம் பேட்டி. அவரைத் தான், கட்சியி லிருந்து நீக்கிட்டாங்களே; அப்புறம் அவரிடம் பேட்டி எதற்கு?

இன்றைக்கு, அதிமுக அமைச்சர் கள் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்றைக்கு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட, அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி.வேலு மணியும், 26.1..2012 அன்று, முதல்வர் ஜெயலலிதாவால், அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

கோகுல இந்திரா, சென்ற ஆண்டு பிப்ரவரி 27, 2013, அவர் வகித்து வந்த சுற்றுலாத் துறையை ஒழுங்காக கவனிக்கத் தவறியதால், இதே முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.

இந்தச் செய்தியை, மூன்று அமைச் சர்கள் நீக்கம்; புதிய அமைச்சர்கள் நியமனம் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி கூறுகின்றன.

ஒரு ஊடகம்கூட, இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வர்கள், ஏற்கெனவே, அமைச்சர் களாக இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள் என கூறவில்லை.

ஏற் கெனவே, அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி எந்த அடிப்படையில் தரப்படுகிறது என ஜெயலலி தாவிடம், இந்த ஊடகங்கள், கேள்வி கேட்டுவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்.

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள்தான், பத்திரிக்கா தர்மம், நடு நிலை என்றெல்லாம் வாந்தி எடுக்கின்றன.

நம்மைப் பிடித்த அய்ந்து நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சும்மாவா சொன்னார்? அவர் காலத்தில், தொலைக்காட்சி ஊடகம் இல்லை; இருந்திருந்தால், இதையும் சேர்த்து இருப்பார்.- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/80691.html#ixzz32PED9Wm2

தமிழ் ஓவியா said...


மம்முட்டி
மலையாள நாட்டு நடிகர் மம்முட்டி, மற்ற நடிகர்கள் எல்லாம் பின் பற்ற வேண்டிய ஓர் அறி விப்பை வெளியிட்டுள்ளார்.

பல தேசிய விருதுகளை பெற்றவர்; மலை யாள உலகில் மட்டுமல்ல; பல மொழிகளிலும் நடித்து முத்திரை பொறித்தவர்.

அவருக்கு மிகப் பலமான ரசிகர் சங்கம் உண்டு.

ஆனாலும் ரசிகர் களை அதிர வைக்கும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்றோடு எனது ரசிகர் மன்றம் கலைக்கப் பட்டது! என்பதுதான் அந்த அறிவிப்பு.

என்ன காரணம்? ரசிகர் மன்றத்தில் நடவடிக்கைகள் எரிச்சலை ஊட்டிவிட்டன - முக நூலில் மற்ற மற்ற நடிகர்களை இயக்குநர்களைத் தேவையில்லாமல் சீண்டுவது - கேவலமாக விமர்சிப்பது என்பது அதிகரித்து விட்டதாம்.

அதைவிட முக்கியமாக மத ரீதியாகவும் மம்முட்டி பெயரை ரசிகர்கள் பயன்படுத்துகிறார் களாம்.

கேரள மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ள நல்ல பெயர் இதனால் பெரும் அள வுக்குக் கெடக் கூடிய நிலையில்தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக மனந் திறந்துள்ளார்.

உலகில் நடிகர்களுக்காக ரசிகர் மன்றம் வியாதி நம் பாரத புண்ணிய பூமியில் தான்!

யார் நன்றாக நடித்தாலும் பாராட்ட வேண்டியது தானே? அதற்காக ஓர் இரசிகர் மன்றம் தேவையா?

சுவையாக சமைக்கிறார்கள் என்பதற்காக எந்த ஓட்டல் முதலாளிக்காவது இரசிகர் மன்றம் வைப்பதுண்டா?

நாட்டில் கறுப்புப் பணச் சந்தையில் கொழிக்காத நடிகர்கள் எத்தனைப் பேர்? இவர்கள் தான் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள்.

அரசியலில் நேர்முகமாக வராமல் பதுங்குக் குழிகளில் இருந்து கொண்டு ஜாடை காட்டும் கோழைத்தனம் எல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.

கடவுள் உள்ளமே! கருணை இல்லமே!

கடவுள் படைத்திட்ட
மனிதக் கடவுளே!
பதவி ஆசை இல்லாத
பரமோத்மாவே!
ஆறு கோடி தமிழர்களின்
காதலனே!
மனிதநேயமுள்ள
மனித தெய்வமே!
இனியும் மக்கள்
வாழ வேண்டுமானால்
நீங்கள் ஆள வேண்டும்

என்று சுவரொட்டிகள் நடிகர் ஒருவருக்குத் தமிழ் நாட்டில் ஒட்டப்பட் டதுண்டு.

மம்முட்டி எங்கே இவர்கள் எங்கே?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80758.html#ixzz32UvqGW9k

தமிழ் ஓவியா said...


பிகார் - திருப்பம் தருமா?

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று தோல்வியடைந்த கட்சிகள் ஆய்வில் ஏற்பட்டுள்ளன. இது இயல்பான ஒன்றே!

பிஜேபியே எதிர்பாராத அளவுக்கு சில மாநிலங்களில் வெற்றியைக் கவ்விப் பிடித்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சொல்ல வேண்டும் இந்த மாகாணங்களில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் அதிகம். இந்த மக்களுக்கான அடி நாதம் என்பது சமூக நீதியே! ஆனால் இந்தச் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமான பி.ஜே.பி. வெற்றி பெற்றது எப்படி? என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

விடை எளிதானதுதான். இந்த மக்களிடையே நிலவிய பிளவும், அரசியலும்தான். இந்தப் பிளவுகளை பயன்படுத்தி ராஜ தந்திர வழிகளில் வெற்றி பெற்றுவிட்டது பா.ஜ.க., குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சி என்று கணிக்கப்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் ஒரு பக்கம்; உயர் ஜாதியோடு அக்கட்சி வைத்திருந்த கூட்டு இந்த முறை கை கொடுக்கவில்லை பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்குகளும் கிடைக்கப் பெறவில்லை.

சமாஜ்வாடி கட்சியைப் பொறுத்தவரை அதன் வாக்கு வங்கி பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை மக்களான முஸ்லிம்களும்தான்.

உ.பி.யில், மோடியின் அந்தரங்க மனிதரான அமித்ஷா உ.பி.யில் புகுந்து குறுகிய காலத்தில் மதக் கலவரத்துக்கு வழிகோலி, தம் பக்கம் குறிப்பிட்ட பிரிவினரை இழுத்துக் கொண்டார்; குறிப்பிட்ட மக்களைப் பழி வாங்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் நஞ்சைக் கக்கினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டு இது அரங்கேற்றம் செய்யப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

பிகாரைப் பொறுத்தவரை நிதீஷ்குமார் நல்லாட்சி நடத்தி வந்திருக்கிறார். பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், மத வெறி நாயகரான மோடியை என்றைக்குமே அவர் ஏற்றுக் கொண்ட தில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வரக் கூடாது என்று கறாராகவே சொல்லி விட்டார்.

பிகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நாயகரான லாலு பிரசாத், தாழ்த்தப்பட்ட மக்களின் நட்சத்திரமான ராம்விலாஸ் பஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர்களுக்கிடையே நல்லிணக்கம் கிடையாது - எல்லாம் அரசியல் அபிலாசைகள்தான் அதற்குக் காரணம். இடையிலே நெருங்கி வந்திருந்த பஸ்வானும், லாலுவும், தேர்தலில் போட்டிப் போடும் இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பிசிறினால், பஸ்வான் பி.ஜே.பி.க்கே சென்று ஆலிங்கனம் செய்து கொண்டு விட்டார்.

பிஜேபி அமைச்சரவையில் இடம் பெற்று, கடைசி நேரத்தில் மதவாத எதிர்ப்பு என்ற கொடியைப் பிடித்து வெளியேறியவர்தான் அவர். இப்பொழுது மீண்டும் முன்பைவிட தீவிரமாக மத நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பிஜேபியோடு கையிணைத்தற்கு எதிர்காலத்தில் அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

பி.ஜே.பி.யை பொறுத்த வரை - குறிப்பாக நரேந்திர மோடியின் எண்ணம் பிகாரில் நிதிஷ்குமார் கட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதாகும்.

ஆனால், வெகு புத்திசாலித்தனமான நிதிஷ் குமாரும், சரத்யாதவும் காய்களை நகர்த்தி, காங்கிரஸ் துணையுடன், நிதிஷ்குமார் தனக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம் மன்ஜியை முதல் அமைச்சராக ஆக்கி விட்டார்.

இந்தத் திருப்பத்தை எதிர்பாராத பிஜேபி வட்டாரம் திகைத்து நிற்கிறது.

பிகாரைப் பொறுத்த வரை பி.பி. மண்டல், போலோ பஸ்வான் சாஸ்திரி, கர்ப்பூரிதாகூர், லாலுபிரசாத் என்று ஒரு நீண்ட சமூகநீதியாளர் பட்டியல் உண்டு.

அப்படிப்பட்ட பிகாரில், மண்டல் காற்றால் அடையாளம் காணப்பட்ட ராம்விலாஸ் பஸ்வான் இப்பொழுது கூறுகிறார். தனித் தொகுதிகளில் 62 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்று தலித் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத் திரையைக் கிழித்து விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்.

இத்தகு மனப்பான்மையின் அஸ்திவாரத்தின் மீதுதான் பிஜேபி உயர் ஜாதி அதிகார மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது.

பிகாரில் நிதிஷ் இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட வரை முதல் அமைச்சராக்கி புதியதோர் திருப்பத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்தக் காற்று வட மாநிலங்களில் வீசட்டும்; மீண்டும் மண்டல் கொடுத்த அந்தச் சமூகநீதிக் கொடி உயரட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/80731.html#ixzz32UwKyEvc

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

- (விடுதலை, 12.10.1962)

Read more: http://viduthalai.in/page-2/80730.html#ixzz32UwTpLT6

தமிழ் ஓவியா said...


கோவில் சொத்துக்களைக் காப்பது யார்?

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் மிகப்பெரிய அளவில் மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்கள் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. தற்போது மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் மோசமான தகவல்களுடன் வந்துள்ளது. நீதிமன்றத்தால் கோவிலில் உள்ள சொத்துக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது. 35 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் விலைமதிப்பில்லாத தங்கங்கள் திருடப்பட்டுவருவதையும், பொருட்களை கையாள்வதில் முறை கேடுகள் நடப்பதையும் குழு அறிக்கை வெளிக்கொணர்ந்தது. கோவில் நிர்வாகத்தினரையும், கேரள மாநில அரசையும் இவ்விவகாரத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டது. அப்போது தங்கப் புதையல்குறித்த ஆய்வுக்கு போதுமான அளவில் ஒத் துழைக்காமல் கோவில் நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டது. உச்சநீதிமன்றம் மீண்டும் புதிய குழுவை அமைத்து, இடைக்கால ஏற்பாடாக கோவில் நிர் வாகத்தை எடுத்து நடத்த அறிவுறுத்தியது. இந்த முடிவால் மிகவும் கவலைப்படும் சூழல் ஏற்பட்டது. இடைக்கால நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பொறுப்பாளர் களை திட்டமிட்டுத் திருடுபவர்களைக் காட்டிலும் கீழ்த்தரமாக கோவில் நிர்வாகத்தினராலேயே மிரட்டும் நிலை ஏற்பட்டது.

சில நேரங்களில் பத்மநாபசாமிக் கோவில் நிர்வாகத்தைச் சுற்றியே கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. நீண்டகால சட்டப்போராட்டத்தில் பொதுமக்களையும் இணைத்து, 2011இல் உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக்குழு கோவிலுக்குள் உள்ள ஆறு பாதாள அறைகளில் அய்ந்து பாதாள அறைகளை சோதனை செய்ததில் எண் ணிலடங்கா பழமையான தங்க ஆபரணங் கள் இருந்துள்ளதை முதன்முதலாக பொதுமக்கள் கவனத்துக்கு வெளியு லகுக்கு வந்தது. தங்கப்புதையல் குறித்து கணக்கெடுத்து ஆவணப்படுத்தும்பணி நடைபெற்றவண்ணம் உள்ளது.

இந்த வழக்கில் 2012இல் முன்னாள் அரசு வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியம் என்பவர் நீதிமன்றத்தால் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற ஆலோ சகராக (amicus curiae) நியமிக்கப் பட்டார்.

அவருடைய இரண்டாம் அறிக் கையில், கோவிலில் தங்க ஆபரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதைக் கணக்கிடுவதில், தற்போதைய கோவில் நிர்வாகம் திருவாங்கூர் அரச குடும்பத்தினரையும் ஈடுபடுத்திட வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. கோவிலின் சொத்துக்களை எப்படிக் காப்பது என்றும், அரசின் அறநிலையத் துறை பொதுநோக்கில் உள்ளவர்கள் பத்மநாபசாமிக் கோவில் விவகாரம் மட்டுமின்றி இதர பிற விவகாரங்களிலும் சந்திக்கின்ற சவால்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பாக திருமலையில் சிறீ வெங்கடேசுவரா கோவிலில் உள்ள கண்ணைக்கவரும் ஆபரணங்கள்குறித்த சரியான தகவல்களை ஆந்திரப்பிரதேச நீதிமன்றம் கேட்டிருந்தது. கோவில் சொத்துக்கள் என்று இருப்பதால் அவ்வப் போது வரக்கூடிய வரவுகள் கணக்கில் கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கோவில் சொத்துக்களுக்கு வரவேண்டிய வற்றை விட்டுவிடாமல் மீட்கவேண்டும். கெட்ட வாய்ப்பாக, கோவிலை நிர்வாகம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்றவற்றில் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை இதன்மூலம் வழிபடக் கூடிய பொதுமக்கள் மீண்டும் வருவதை உறுதிசெய்யவும் தவறுகிறார்கள்.சில கோவில் நிர்வாகிகள் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்வதற்கு மாறாக, நிர் வாகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விடாமல் காத்துவருகின்றனர். அவர்கள் மத நடைமுறைகளில் தலையிடுவதாகப் பார்க்கிறார்கள்.

விதிகளின்படி மதசார்பற்ற விழாக் களும் கோவிலில் நடத்தலாம். கோவில் பொதுவான செயல்பாடுகளுக்கு திறந்து விடப்பட வேண்டும். சிலைகளின் பெயரில் சொத்துக்களை உரிமையாக்கிவைப்பதன் பின்னணி என்ன வென்றால், அறங்காவல் குழுவில் உள்ளவர்கள், நிர்வாகிகள் கோவில் சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றாமல் இருப்பதற்காகவும், சொத்துக் களைத் தவறானமுறையில் கையாளாமல் இருப்பதற்காகவே ஆகும். கோவில்கள் தனியார் நிறுவனம் அல்ல. பொதுவான வழிபடுவதற்கான இடமாகும். முறையான மத ரீதியிலான கண்காணிப்புகளில் தலையீடுகள் இருக்கக் கூடாது. மதத்துக்கு அப்பால் கோவில்களில் நிர்வாகத்தில் பொதுவானவர்கள் இருக்க வேண்டும்.

-தி ஹிந்து ஆங்கில நாளிதழ், தலையங்கம் 29-4-2014

Read more: http://viduthalai.in/page-2/80747.html#ixzz32UwcfLsb

தமிழ் ஓவியா said...


தொழிலாளர் தோழர்களே திருவாரூரில் சந்திப்போம்!


தோழர்களே,
தொழிலாளர்களே,
விவசாயப் பெருங்குடி மக்களே!

நம்முன் ஏராளமான பிரச்சினைகள் உள் ளன. அதுவும் விவசாயம் என்பது கிட்டதட்ட மரணப் படுக்கையில் தள்ளப்பட்டு விட்டது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை!

விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் சிக்கியுள்ளனர்.
பெரும்பாலும் விவசாயத்தில் ஆண்களும் - பெண்களுமாக ஈடுபட்டு வருபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களே! அதன் காரணமாகவே இது கேட்பாரற்றுக் கிடக்கிறது. எந்த உரிமைகளையும் இலவசமாகப் பெற்றிட முடியாது.

போராடாமல் உரிமை நம் கதவை வந்து தட்டாது; வீதிக்கு வாருங்கள் தோழர்களே!

வரும் 26இல் திருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டின் மூலம் புதிய திருப்பத்தை - எழுச்சியை - உருவாக்குவோம்!

கோரிக்கைகள் நிறைவேறக் குரல் கொடுப்போம்!

விவசாயத்தை வாழ விடு!

இல்லையேல்

மாற்றுவழியை எங்களுக்குக் கொடு! என்று குரல் கொடுப்போம் வாரீர்!

காவிரி டெல்டா பகுதிகளில் வேலை வாய்ப் புடன் கூடிய உற்பத்திக்கு வழி செய்யும் தொழிற் சாலைகளை ஏற்படுத்துக! விவசாயக் குடும்பத்து இருபால் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புக்கு வழி செய்!

மீன்பிடி தொழில் நடத்தாத காலங்களில் மீன வர்களுக்கு உதவுவது போல -

விவசாய வேலை இல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கு என்று குரல் கொடுப்போம்!

வாரீர்! வாரீர்!! கோரிக்கைகள் நிறைவேற கோடிக் கைகள் உயரட்டும்! உயரட்டும்!!

உங்கள் தோழன்

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்சென்னை
23.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/80837.html#ixzz32afbd6hL

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......தங்கள் கணவன் மார்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் காளிகா - பரமேஸ்வரி அம்மன் ஆலய உண்டியலில் நேர்த் திக் கடனாக தாலியைக் கழற்றி போடலாமாம்.

கணவனை இழந்தால் தான் தாலியைக் கழற்று வார்கள்.

நம் நாட்டு ஆன்மீகத்தில் கணவன் உயிரோடு இருக்கும் போதே தாலியை அறுத் துப் போடச் சொல்லு கிறார்களே - பக்தி வியா பாரத்தில் தாலியைக்கூட உருவி விடுவார்களோ!

கடவுளின் கருணையோ, கருணை!

Read more: http://viduthalai.in/e-paper/80838.html#ixzz32afj5EyX

தமிழ் ஓவியா said...


ஜாதிப் பார்வையா?


பிகார் மாநிலத்தில் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜிடான்ராம் மன்ஜி அவர்களை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்தார். இந்த எண்ணம் எத்தனைப் பேருக்கு வரும் என்பது முக்கியமானதோர் கேள்வியாகும்.

சமூக நீதி சிந்தனை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதனை உள்ளத்தைத் திறந்து வைத்து வரவேற்பார்கள் - பாராட்டுவார்கள்.

சமூக நீதிச் சிந்தனையற்றவர்களோ வேறு வகையில் எண்ணுவார்கள்; இருந்தும் இருந்தும் ஒரு தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தாரா என்று முணு முணுப்பார்கள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு எப்படி செய்தியை வெளியிடுகிறது?

“Nitish Plays Caste Card Names Former Minister Jitaram as Bihiar Chief Minister”

என்று தலைப்புக் கொடுத்து செய்தியினை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் வெளியிடுகிறது.

பிகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் ஜாதி துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி விட்டாராம். உயர் ஜாதிக்காரர் ஒருவரை அந்த இடத்தில் அமர்த்தினால் இவ்வாறு செய்தி வெளியிடுவார்களா? உயர் ஜாதிக்காரர்களை அமர்த்தினால் ஜாதிப் பார்வை கிட்டே நெருங்காது; அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவரை அமர்த்தினால், அவர்கள்மீது உடனே நான்கு கால் பாய்ச்சலில் தாவுகிறது ஜாதி முத்திரை.

இது அவர்களின் ரத்தத்தோடு ரத்தமாக ஊறித் திளைத்து விட்ட ஜாதி ஆணவத்தின் எதிரொலி!

பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிமுகமான நிலையில் திடீரென்று நரேந்திரமோடி நான் ஒரு பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்ல ஆரம்பித்தாரே - ஏன்? (உண்மை என்னவென்றால் அவர் பிறந்த ஜாதி அம்மாநிலத்தில் முற்பட்டோர் பிரிவு, தன்னைப் பிற்படுத்தப்பட்டோர் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த ஜாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட ஆணை பிறப்பித்து விட்டார் என்பதுதான் உண்மை)

அதைப்பற்றி எல்லாம் இந்தப் பார்ப்பன ஊடகங்கள் மூச்சு விட்டனவா? ஆ. இராசாவை தாழ்த்தப்பட்டவர் என்று கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட போது! ஆகா, பார்த்தீர்களா இந்தக் கருணாநிதியை? ஜாதியைச் சொல்லித் திசை திருப்புகிறார் என்று கூச்சல் போட்ட சோ ராமசாமிகள் மோடி திடீரென்று பிற்படுத்தப் பட்டவர் என்று தன்னை முன்னிறுத்த முனைந்தபோது பேனாவின் வாலைச் சுருட்டி மேசை அறைக்குள் அடைத்து வைத்தது ஏன்?

அதுவும் ஆங்கிலப் பார்ப்பன ஏடுகள் பற்றிக் கேட்கவா வேண்டும்? மண்டல் குழுப் பரிந்துரைகள் அதிகாரப் பூர்வமாக வெளி வராததற்கு முன்னதாகவே Burry the Mandal Report
என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியவர்களாயிற்றே!

உடனே “Hurry the Mandal Report” என்று பதிலடி கொடுத்தவர்தான் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

கருநாடக முதலமைச்சராக குண்டுராவ் வந்த பிறகு பாதிக்கப்பட்டிருந்த பார்ப்பனர்களில் ஏராளமானவர்கள் உயர் பதவிகளைப் பெற்று விட்டனர்
- இந்தியன் எக்ஸ்பிரஸ் 1.1.1981

இதற்கு என்ன பொருள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விரிவுரை பொழிப்புரை எழுதுமா?
பிராமணான் செய்தால் பெருமாள் செய்த மாதிரியா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக் கூடியவர்கள். அதனை எதிர்த்துத் தலையங்கம் தீட்டக் கூடியவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களை முக்கிய மான பதவியில் அமர்த்தினால், ஜாதி ஒழிப்பு ஜாம்ப வான்கள் போல பூணூலை ஒரு கையில் இறுகப் பிடித்துக் கொண்டு அய்யய்யோ, ஜாதி பார்த்து நடந்து கொள்கிறார்களே! என்று நீலிக் கண்ணீர் வடிக் கின்றனர். இந்தச் சூழ்நிலையில் மேலும் ஒருபடி மேலே சென்று தான் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரரை முதல் வராக நியமித்த நிதீஷ்குமாரை மேலும் பாராட் டுகிறோம் - பல படப் பாராட்டுகிறோம்.
இதன் வழி சமூக நீதிக் காற்று அங்கு சுழன்றடிக் கட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/80829.html#ixzz32ag0h7yI

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


இந்து மதத்தையோ, அது சம்பந்த மான கடவுள், சாத்திரம், இதிகாசம், புராணங்களையோ, சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண் வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமே யாகும். - (குடிஅரசு, _ 13.1.1945)

Read more: http://viduthalai.in/page-2/80828.html#ixzz32ag98Fjk

தமிழ் ஓவியா said...

அய்யப்பனைக் காப்பாற்றிய சிறுநீர்!

கடந்த 17.1.1978-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சியிலிருந்து வெளியிடும் செய்தித்தாளை படிக்க நேர்ந்தது. அதில் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் என்ற பகுதியில் ஒரு செய்தியை படித்து வியப்பும் அதேபோல் சிரிப்பும் உண்டாயிற்று.

அய்யப்பப் பக்தர்கள் தான் இதற்குப் பதில் கூற வேண்டும். அதில் கண்டுள்ள செய்தியின் தமிழ் மொழியாக்கம் இதோ!

‘Urln Quers Fire’

(எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ்), கோட்டயம், ஜனவரி -16, சிறுநீர் மீண்டும் செய்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றும் எதிர்பாராத இடங்களில் கூட ஆச்சரியப்படத்தக்க செயல்களைப் புரிந்துள்ளது. சிறுநீரின் உபயோகம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கும்பளம் தோடி என்ற சபரிமலை வனப்பிரிவைச் சேர்ந்த பகுதி சாம்பலாகி இருக்கும். சபரிமலையின் எல்லா பகுதிகளும் காவல் புரிந்து வந்த காவல்துறையினர் ஜனவரி 9ஆம் தேதியன்று கும்பளம்தோடி என்ற பகுதியில் தீப்பிடித்துள்ளதாக கம்பியில்லாத் தொலைபேசி மூலமாக தலைமை அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பினர். காவல்துறை தனி அலுவலர் திரு. பி.ஆர்.மேனன் உடனடியாக 100 காவலர்களை இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களின் தலைமையில் தீக்கிரையாகி கொண்டிருக்கும்

பகுதிக்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியை தீவிரமாக தொடங்கும்படி கட்டளையிட்டார். தீ மிகவும் அசுர வேகத்தில் பரவிக் கொண்டு கடவுள் அய்யப்பனின் தலமாகிய அந்த அடர்ந்த காட்டையே அழிக்கும் நிலைக்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் காவல் படையினர் அந்த இடத்தை சென்றடைந்தனர். அருகில் தண்ணீர் வசதியோ போதுமான அளவு மணலோ கிடையாது. காவலர்கள் என்ன செய்வது என்று அறியாமல் குழப்பத்திற்கிடையே கையற்ற நிலையில் தவித்துப் போயினர். ஆனால் தனி ஆயுதக் காவல்பிரிவைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலும், கேரள ஆயுதக் காவல் பிரிவைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் பால்ராமும் பலவிதமான சிந்தனையில் ஈடுபட்டனர். இறுதியாக ஒரு விந்தையான எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது போலும். ஒரே சமயத்தில் 100 காவலர்களையும் தீயை நோக்கி சிறுநீர் விடும்படி அந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டளையிட்டனர். தீ மெதுவாக தணிந்தது. முடிவாக அணைக்கப்பட்டு விட்டது. சில தினங்களுக்கு முன்னர் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலைக்குச் சென்ற செய்தியாளர்களிடமும் இந்நிகழ்ச்சிகளை தனிக்காவலர் அலுவலர் மேனன் அவர்கள் விளக்கினார். தக்க சமயத்தில் செயல்புரிந்து வரவிருந்த பெரும் விளைவை தடுத்த தற்காக அந்த சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், அவர்கள் சேவையை பாராட்டி தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

(ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்-
17.1.1978, செவ்வாய், கொச்சி பதிப்பு)

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32ahLFFOV

தமிழ் ஓவியா said...

எது சோஷலிசம்? - தந்தை பெரியார்

மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சோஷலிச உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் பிறவியில் மேல் - கீழ் எனும்படியான ஜாதிபேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு ஜாதிபேத ஒழிப்பு என்ற சமுதாய சோஷலிசம் பற்றிச் சொல்லி, பிறகு பொருளாதார சோஷலிசம் பற்றி சொன்னால்தான் உணர்ச்சி உண்டாக்க முடிகிறது.

ஆகவே பொருளாதார சோஷலிசத்துக்காக வேண்டியே ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், ஜாதியை ஒழிப்பதற்கு அதன் ஆதாரமாகவுள்ள மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம்.

மனிதரில் சிலரை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுக்கும்படியும், மற்ற பலரைக் கீழ் ஜாதியாக்கி அவர்கள் பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாளியாய், கட்டக் கந்தையற்று குந்த குடிசையற்று இருக்கும் படி செய்தது கடவுள் என்றால் அக்கடவுளைவிட அயோக்கியன் உலகில் வேறு யார் இருக்க முடியும்? அப்படிப்பட்ட அயோக்கியக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், விடுதலை -16.9.1970

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32ai7Q4Tv

தமிழ் ஓவியா said...

யாருக்கு லாபம்?

பரமசிவம் அருள்புரிய வந்து வந்து போவார்:
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தானமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும் போகும்!
மகரிஷிகள் கோயில்களும் - இவைகள் கதாசாரம்,
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

- புரட்சிக்கவிஞர், திராவிடன் 14.1.1950, பொங்கல்மலர்

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiDuxcN

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியைத்
தடுப்பது எது?

பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. -ஜவகர்லால் நேரு

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiL6kUT

தமிழ் ஓவியா said...

மதத்தின் குத்துச்சண்டை!

உலகக் குத்துச்சண்டை மாவீரனாகிய முகம்மது அலியையும் மதத்தின் கொடுமை விடவில்லை. கிருஸ்துவக் குடும்பத்திலே பிறந்த அவர், தன்னை கறுப்பு மனிதன் என்று வெள்ளை இனம் இழித்துப் பழித்ததைக் கண்டு தாள முடியாமல், தன்னை முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். மதம் மாறி விட்டார் என்றதும் மதவாதிகளின் ஆத்திரம் பன்மடங்காக ஆகிவிட்டது. எப்படியும் அலியை ஒழித்துக் கட்டுவது என்று திட்டம் தீட்டினார்கள்.

வியட்நாம் போரில் அவரைக் கட்டாயமாக அமெரிக்க இராணுவத்தில் சேர உத்திரவு பிறப்பித்தனர். அலி மறுக்கவே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiUAepX

தமிழ் ஓவியா said...

தமிழக வழக்குரைஞர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள், என்.ராஜா ராமன் மற்றும் ஜி.நித்தியானந்தம் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;-

இலங்கையில் படுகொலை பாதகங்களில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் ஒன்று ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு மனிதருக்கு இந்திய அரசின் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பது தமிழர்களின் உணர்வுக்கு எதிரான காரியமாகும். எனவே, ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களைப் பற்றிய விரிவான விசா ரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று மற்ற நாடுகளின் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சு வார்த்தைகளில் இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்தப் பதவியேற்புக்கு அழைப்பது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் எதிர்ப்பு

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வ தற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக் சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாச்சலம் கொழஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர்.

கல்லூரியில் இன்று (23.5.2014) தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32ajKM8l1

தமிழ் ஓவியா said...


வறட்டு இருமல் குணமாக...


மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். றீ நன்றாகப் பழுத்த அரை நேந் திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.
மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
மஞ்சள்காமாலையால் பாதிக்கப் பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குண மாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக் கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத் துணர்ச்சி பொங்கும். தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். றீ மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக் கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளைச் சாறை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்சினைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.


Read more: http://viduthalai.in/page-1/80484.html#ixzz32akEWMrd

தமிழ் ஓவியா said...


இராவணனுக்குப் பிறந்த பிள்ளை


இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விட்டு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்குமணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவனால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடுகிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page-1/80488.html#ixzz32alDhK1q

தமிழ் ஓவியா said...


மூட்டுவலிக்குவைத்தியம்


மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் மொசைக் தரையிலோ, வெறும் தரையிலோ, பளிங்கு கல் தரையிலோ படுத்துத் தூங்கக் கூடாது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகும். ஆகவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்து ராகிக் கஞ்சி குடிப்பதுதான்!
மூட்டுவலி உள்ளவர்கள் காரத்தைக் குறைக்க வேண்டும்; குறிப்பாக பச்சைமிளகாய் கூடாது. சாதாரண காப்பிக்கு பதில் சுக்குக் காப்பி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். இதனால் மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத் தரையில் வெறும் காலால் நடக்கவும் கூடாது.

உளுந்து எண்ணெயை மூட்டுவலி உள்ள இடத்தில் சூடேறும்படி தேய்த்துவிட்டால் மூட்டுவலி குறையும்.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக்காய், முருங்கைக் கீரையை உணவில் சேர்க்கக் கூடாது. * சித்தரத்தையை இடித்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்து காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டாக்டர் எஸ்.என்.முரளீதர் எழுதிய மூட்டுவலிக்கு வைத்தியம்' என்ற நூலிலிருந்து.

Read more: http://viduthalai.in/page-1/80490.html#ixzz32amKuai3

தமிழ் ஓவியா said...


தொட்டுத் தொடரும் தேவதாசி பாரம்பரியம்

கர்நாடகம் ஆந்திரா போன்ற மாநி லங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப்படுகின்றனர். இது கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெயரில் படிப்பறி வில்லா மக்களை ஏமாற்றி இந்த கொடூரம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் தந்தை பெரியார் தலை மையில் அன்னை முத்துலட்சுமி ரெட்டி யார் மற்றும் மூவலூர் இராமாமிர்தத்த அம்மையார் போன்றோர் நடத்திய சமூகப் போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்துபோனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்கு புனிதமான ஒரு சடங்கு போலவும் ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக் குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு தங்கள் கலாச்சாரத்தில் பொறாமையும் மதத்தில் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப் போது பரபரப்பான ஒன்றாக இருந்தது.

அவரின் திருவாய்மொழியை உச்சநீதி மன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் அவமானம் என்று கூறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹரப்பனல்லி தாலுகாவில் உள்ளது உத்தரங்கமல துர்கை கோவில் அடிவிமலநகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசிற்கு தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம் இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழா வாகும். இதனால் யாரும் பாதிக்கப்பட வில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்த கோவில் தேவதாசி விழாவை சீரோடு சிறப்பாக நடத்தி வந்தது.

இந்த கோவிலின் முதிய தேவதாசியான உளியம்மா என்பவர் நீண்ட காலமாக இந்த பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால், நகர நிர்வாகம் மற்றும் பிரபலங்களின் தலையீடு காரண மாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன் வந்தது. நீண்ட போராட் டத்திற்கு பிறகு எஸ்.எல். பவுண்டேசன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது அதில் உதரங்கமல் துர்க்கை யம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம் பரிய தேவதாசி முறையையும் அதன் சின்னாப்பின்னமாகும் பெண்களின் வாழ்க்கைபற்றியும் குறிப்பிட்டிருந்தது.

சமூகத்தின் மிகவும் கொடிய பழக்க மாக இன்றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதிமன்றமே ஒரு முறை அதிர்ந்து போனது,தேவதாசியாக மாற்றப்படும் விழா 13.2.2014 இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இந்த மனுமீது நீதிபதி கீழ்க்கண்ட உத் தரவை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக தலைமைசெயலாளருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் குறிப்பிடப்படுவ தாவது: இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என்பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமான சின்னமாகும். இந்த சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் நடைபெறுவதை தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட் டுள்ளது.

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப் பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறோம். சமூகத்தில் பெண்கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன்றளவும் குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழுவதும் தேவைப் படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்படி அவரின் வார்த்தை உண்மையானது.

Read more: http://viduthalai.in/page-1/80493.html#ixzz32amwKQ1H