Search This Blog

3.5.14

ராஜீவ்காந்தி கொலைவழக்கு நிரபராதிகள் தண்டிக்கப்படலாமா?-கி.வீரமணி


ராஜீவ் காந்தி கொலை வழக்கு:
வழக்கை விசாரித்த அதிகாரிகளும், நீதிபதியும்  விசாரணையில் தவறு நடந்து இருக்கிறது என்று கூறிவிட்டார்கள்
நிரபராதிகள் தண்டிக்கப்படலாமா? நளினிக்கு அளிக்கப்பட்ட சலுகை மற்றவர்களுக்கும் பொருந்தாதா?

சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான வினா அலைகள்
சென்னை, மே. 2- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப் பட்ட விசாரணையிலும் தீர்ப்பிலும் தவறு நடந்து விட்டது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நீதிபதிகளும் கூறிவிட்ட பிறகு நிரபராதிகள் விடு விக்கப்பட வேண்டாமா? என்ற வினாவை எழுப் பினார் திராவிடர் கழகத் தலைவர் கி,வீரமணி அவர்கள்.

30.4.2014 அன்று சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில்  பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலையும் - நீதிப்போக்கும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

மிகக் குறுகிய காலத்தில் பல முக்கிய சட்ட ரீதியான செய்திகள் மற்றவர்களால் கவனிக்கப்படாத காரணத் தினாலோ அல்லது மறைக்கப்படவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தினாலோ இருக்கக்கூடிய பல செய்திகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுபோக வேண்டியது, சட்டம் தெரிந்தவர்களுடைய சமுதாய பணியாகும். அதனை முன்னிறுத்தி பணியாற்றக்கூடியவர்களுடைய மிக முக்கியமான ஒரு கடமை என்ற அடிப்படையில் கூட்டப்பட்டிருக்கின்ற இந்தக் கூட்டத்தில், வரவேற் புரையாற்றிய நம்முடைய கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வருகை புரிந்துள்ள சான்றோர் பெருமக்களே, தோழர்களே, தோழியர்களே, உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

நாங்கள் தெளிவுபடுத்தவேண்டியது அடிப்படையான ஒன்று

இங்கே கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல, ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற அந்த நிகழ்வையொட்டி, கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு தொடர் வழக்குகள், விசாரணை ஆணையங்கள் இவைகளெல்லாம் ஏராளமாக நடந்து கொண் டிருக்கின்ற நிலையில், இதுபற்றி பேச வருகிறபொழுது, ஒரு சமுதாயத் தொண்டன் என்கிற முறையில், பெரியா ருடைய தொண்டன் என்கிற வகையில், எங்களுடைய கடமையை நாங்கள் தெளிவுபடுத்தவேண்டியது அடிப் படையான ஒன்றாகும்.

முதலாவது, இப்படி விவாதம் செய்கின்ற நேரத்தில், சட்ட ரீதியான கருத்துகளைச் சொல்லி, வாதிடக்கூடிய வகையில், மக்கள் மன்றத்தின்முன்பு விளக்கி சொல்லக் கூடிய இந்தக் காலகட்டத்தில், ஒன்றை தெளிவுபடுத்த வேண்டியது எங்களுடைய இன்றியமையாத கடமை யாகும்.

ராஜீவ் காந்தி கொலையை திராவிடர் கழகமோ அல்லது தெளிந்த உள்ளம் படைத்த, மனிதநேயம் படைத்த எவருமோ நியாயப்படுத்துவதற்காக இதனை வாதிடவில்லை. அந்தக் கொலை என்பது ஏற்கப்பட முடியாத ஒன்று; வருத்தப்படக் கூடிய ஒன்று. அது நடந்திருக்கக்கூடாது என்பதிலே, பாதிக்கப்பட்டவர் களுக்கு எப்படிப்பட்ட மனிதநேய உணர்வு, துயரமும், துன்பமும் இருக்கிறதோ, அதில் எந்த அளவிற்கும் குறைந்த அளவில் நம்முடைய உணர்வுகள் இல்லை என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கடுத்தப்படியாக, ஒரு கொலைக் குற்றமாக இருந்தாலும் அல்லது வேறு கிரிமினல் குற்றங்களாக இருந்தாலும், குற்றவியலுடைய அடிப்படை நம் முடைய நாட்டில், வழக்கறிஞர்களாக ஆகக்கூடிய, சட்டம் பயின்ற எங்களுக்குக்கூட, சட்டக் கல்லூரியில் முதலில் சொல்லிக் கொடுப்பது, குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தவரையில், 10 குற்றவாளிகள் தப்பித்து விட் டால்கூட பரவாயில்லை; ஒரு நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்பதுதான், நீதியினுடைய போக்கில், சரியான ஒரு அடிப்படை தத்துவமாக சொல்லிக் கொடுக்கப்படுகின்ற ஒன்று.

எனவேதான், நீதியினுடைய தராசுகள் சாயாமல் இருக்கவேண்டும் என்பதும்; ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செய்யக்கூடிய முறை இருக்கவேண்டும் என்பதும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

இந்த வழக்கு தொடக்க காலத்திலிருந்து, அது முடிந்த பிறகும், அதற்குப் பிறகு அந்தத் தண்டனையை தேவை யற்ற நிலையில், இவர்கள்தான் குற்றவாளிகளா? அல்லது வேறு யாராவது குற்றவாளிகளா? என்பதைப் பொறுத்த வரையில், விவாதம் இன்னமும் நடைபெற்றுக் கொண்டி ருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில், எத்தனையோ நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நமக்கொன்றும் சமரச சிந்தனை இல்லை!

அதிலே, குறிப்பாக சொல்லவேண்டுமானால், இந்த நிகழ்வு என்று சொல்கின்ற நேரத்தில், நம்மைப் பொறுத்தவரையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருக்கக்கூடிய குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக வாதம் செய்ய இங்கே வரவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார்களோ, அவர்கள் தண்டிக்கப் படலாம்; தண்டிக்கப்படவேண்டும் சட்டப்படி - இதில் நமக்கொன்றும் சமரச சிந்தனை இல்லை. ஆனால், யார் உண்மையான குற்றவாளிகள் என்பதுதான் அங்கே கண்டுபிடிக்கப்படவேண்டும். இதுதான் இப்பொழுது விவாதத்திற்குரிய பிரச்சினையாக இருக்கிறது. உண்மை யான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். தண்டிக்கப்படட்டும்; தண்டிக்கப்பட்டாகவேண்டும். இதிலே மாற்றுக் கருத்தில்லை.
இதேநேரத்தில், அவர் மிக அழகாக சொன்னார், இதைவிட எந்த ஒரு வழக்கிலும், இவ்வளவுக் குழப்பம் வரக்கூடிய அளவிற்கு தீர்ப்புகள், சாட்சிகள், விசா ரணைகள் அமைந்திடவில்லை; இவைகளெல்லாம் நடத்தியவர்களே, வெவ்வேறு கருத்தினைச் சொல்வது, இந்த ஒரு வழக்கைத் தவிர, வேறு எந்த வழக்கிலும் இல்லை.

கடைசியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏன் இந்தக் கூட்டத்தினை நடத்துகிறோம் என்றால், ஜனநாயகத்தில் கடைசி நம்பிக்கை என்பது மூன்றாவது அம்சமாக இருக்கக்கூடிய நீதித்துறையைத்தான் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். எனவே, நீதித்துறை, அதனுடைய அதிகாரங்கள், அதனுடைய போக்குகள் சரியான முறையில் அமையவேண்டும். அந்த நீதித் துறை என்பதுதான் மக்களுடைய கடைசி நம்பிக்கை என்கிற காரணத்தினாலே, நாம் கவலையோடு அதனை அணுகுவ தற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனையெல்லாம் முடிந்த பிறகுகூட, வழக்கை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் என்பவர், பின்னாளில் சொல்கிறார், அந்த வழக்கில் பல சிக்கல்கள் இருந்தன; அந்த வழக்கில் தீர்ப்பு சரியாக வழங்கப்பட்டதா என்பது நான் ஓய்வு பெற்ற பிறகு சிந்திக்கிறேன் என்று சொல்லி யிருக்கிறார். இது ரகசியமல்ல; வெளிப்படையாக சொல்லி நாளிதழ்களிலும் வெளிவந்திருக்கிறது.

நீதியினுடைய போக்கு எப்படி அமைந்திருக்கிறது என்பதற்கு, அந்த வழக்கினை விசாரித்த நீதிபதியே, பின்னாளில், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்கிற பழமொழிக்கேற்ப நடந்திருக்கிறது.
எனக்கு இப்பொழுது எனது மனசாட்சிக்கு உறுத்தலாக இருக்கிறது! - அதிகாரி சொல்கிறார்

அதைவிட, பேரறிவாளனைப் பொறுத்தவரையில், ஒரு பேட்டரியை வாங்கிக் கொடுத்தார்; அதனால் ஏதோ ஒரு சாட்சியை வைத்து, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அந்த வழக்கினைப் பதிவு செய்த - காவல் துறையில் மிக முக்கியமான பொறுப்பில் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன் என்பவர், தெளிவாக சொல்கிறார், நான் அந்த சாட்சியத்தை சரியாகப் பதிவு செய்யவில்லை. முக்கியமான ஒரு பகுதியைத் திருத்தி தான் பதிவு செய்தேன். அது எனக்கு இப்பொழுது எனது மனசாட்சிக்கு உறுத்தலாக இருக்கிறது என்று சொன்னார். அப்பொழுதும் சொன்னார், உச்சநீதிமன்றத்தினுடைய தற்பொழுது தீர்ப்பு, இதைவிட அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்று சொல் கின்ற நேரத்திலும், அந்த விசாரணை அதிகாரி சொல்லி யிருக்கிறார்.

அதைவிட இன்னும் ஆழமான சட்டப் பிரச்சினை என்னவென்று சொன்னால், நான் மற்ற பிரச்சினைகளுக் குச் செல்வதற்கு முன்னால், முன்னுரை போல, இதனை நீங்கள் எல்லோரும் புரிந்து கொண் டால்தான், பின்னாலே இது கொஞ்ச சிக்கலான சட்ட செய்திகளைப் புரிந்து கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும்; ஒரு முகவுரை போலவும் அமையும்.

தடா சட்டம் முன்பு நடைமுறையில் இருந்தது; இப்பொழுது நடைமுறையில் இல்லை. தடா சட்டம் என்பது சாதாரண சட்டங்களைவிட, பயங்கரவாதி களுக்காகப் போடப்பட்ட அந்த சட்டம் இருக்கிறதே, அந்தத் தடா சட்டத்தின்கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டது; சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
தடா சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என்று உச்சநீதி மன்றமே தெளிவாக சொல்லிவிட்டது ஏற்கனவே!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நளினிக்கு என்ன நியாயமோ அதை மற்றவர்களுக்கும் வழங்கவேண்டாமா?

நளினிக்கு எப்படி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள். யார் சொல்லி செய்தார்கள். உடனே அந்த அம்மையார் சொன்னார் - மனிதநேயம் - அந்த அம்மையாரைப் பாராட்டு கிறோம். நளினிக்கு என்ன நியாயமோ, அதை நளினி யினுடைய கணவருக்கோ அல்லது பேரறிவாள னுக்கோ அளித்தால் அது தவறா? நளினிக்கு மனிதாபிமானம் என்றால், இவர்களுக்கும் அது பொருந்தவேண்டாமா? அது என்ன தாடிக்கு ஒரு சீயக்காய்; தலைக்கு வேறு சீயக்காய் என்று தந்தை பெரியார் சொல்வதுபோல! மிக முக்கியமாக சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------
தண்டனை எப்படி நியாயமாகும்?

இந்த வழக்கினை தடா சட்டத்தின்கீழ் கொண்டுவந்து விசாரணை செய்தது சரியானதல்ல; ஏற்கத்தக்கதல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட பிறகு, அன்றே தடா சட்டத் தின்கீழே சாட்சியங்களாக, ஒப்புதல் வாக்குமூலங்களாக, சிஷீஸீயீமீவீஷீஸீணீறீ ஷிணீமீனீமீஸீ  சொல்லக்கூடிய ஒப்புதல் வாக்குமூலங்களாகக் கொடுக்கப்பட்டவைகளை நாங்கள் ஏற்று, அதுதான் தண்டனைக்கு அடிப்படை என்ற அளவில் இருந்தால், இந்த அடிப்படையே சரியாக இல்லை என்று சொல்கிறபோது, தண்டனை எப்படி நியாயமானதாகும்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டாமா?
தடா சட்டத்தின்கீழ் விசாரணை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அடிப்படையில் கிரிமினல் வழக்கில், கொலைக் குற்றமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய வழக்கில், என்ன மிக முக்கியமான பிரச்சினை என்று சொன்னால், மற்ற குற்ற வழக்குகளில், குற்றத்தை நிரூபிக்கக்கூடிய பொறுப்பு இருக்கிறதே, அது யாருடையது? யார் அந்தக் குற்றத்தை சுமத்துகிறார்களோ, அவர்கள் சம்பந்தப்பட்டது.

ஆனால், தடா சட்டம் என்பது அதற்கு நேர் எதிரானது; மனித சமுதாயத்திற்கு, தனி மனித உரிமைக்கு நேர் எதிரானது; நான் குற்றவாளி அல்ல என்று, யார் நிரூபித்துக் காட்ட வேண்டும் தெரியுமா?  யார் மீது குற்றம் சுமத்தினார்களோ, அவர் வந்து நிரூபிக்கவேண்டும். அவர் உள்ளே சிறையில் இருப்பார்; அவர் யாரையும் சந்திக்க முடியாது. மற்ற குற்றவாளிகளுக்குள்ள வாய்ப்பு இவருக்குக் கிடையாது. ஆனால், அவர்தான் நிரூபிக்கவேண்டும் - இதுதான் விசித்திரமான ஒரு நிலை. அதுமட்டுமல்ல, இன்னுங் கேட்டால், மற்ற நேரங்களில் அதிகாரிகளிடமோ, மற்றவர் களிடையோ சொன்ன ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்பது பொதுவான சட்ட விதி. இங்கே நீதிபதிகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள்; வழக்குரைஞர்களாக இருக்கின்றவர்கள், இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள்; அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.
எது செல்லாது என்று மற்ற சட்டங்களில் இருக்கிறதோ, அது இந்தத் தடா சட்டத்தில் செல்லும் என்று நேர் எதிர் நிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது, முழுமையாக அந்தச் சட்டத்தின்படி இவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று சொன்னால், நண்பர்களே, அந்தத் தண்டனை அடிப்படை யிலேயே எவ்வளவு தவறா னது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வழக்கை விசாரித்த அதிகாரி களைப் பார்த்தீர்களேயானால், யார் விசாரணை அதிகாரியாக இருந்தாரோ, அவரே ஒரு புத்தகத்தை எழுதுகிறார்.

மற்றவர்களை விட்டுவிடுங்கள்; வெளியில் இருக் கின்றவர்கள் சொல்கின்ற கருத்து, அவர்களுக்கெல்லாம் ஒரு முத்திரையை குத்திவிடுகிறார்கள்.
சட்ட ரீதியாகத்தான் பேசுகிறேனே தவிர, உணர்ச்சிவயப்பட்டு நான் பேசவில்லை

தமிழ் ஆர்வலர்கள் - அது என்ன நியாயம் கேட்கிறவர் களுக்கென்ன தமிழ் ஆர்வலர்கள். நான் இங்கே பேசும் பொழுது, சட்ட ரீதியாகத்தான் பேசுகிறேனே தவிர, உணர்ச்சி வயப்பட்டோ, மற்ற கண்ணோட்டத்திலோ நான் பேச வில்லை. சட்ட ரீதியாக ஒரு வழக்கறிஞன், சட்டம் படித்த வன், சட்டம் தெரிந்தவன், தீர்ப்பில் தவறான போக்கிருந் தால், அதனைச் சுட்டிக்காட்டவேண்டிய கடமை, அதுவும் ஒரு பெரியார் தொண்டாக இருக்கின்றவனுக்கு, உலகமே எதிர்த்தாலும், தனியாக நின்று, ஒரே ஒருவனாகக்கூட அந்தக் குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று அறிவாசான் சொல்லிக் கொடுத்த அந்தப் பாடத்தை ஏற்று, இந்தப் பணியைச் செய்யக்கூடிய நிலையில், தெளிவாக இருக்கிறோம்.

எனவேதான், அடிப்படையிலேயே இந்த வழக்கு ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று சொல்லக்கூடிய நிலையில், ரகோத்தமன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்; அவர்தான் அடிப்படையிலேயே எல்லா காரியத்தையும் செய்த அதிகாரி. அய்யா அவர்கள் அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்வார், செத்துப் போனவர்களை சாட்சிக்கு அழைக்கமாட்டேன் என்று சொல்வார்.
விசாரணை அதிகாரிகளே, விசாரணை சரியாக நடைபெற வில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால், அதற்குத் தனியாக ஒரு கருத்தரங்கமே நடத்தக்கூடிய அளவிற்கு அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

எனவே, இந்தப் பின்னணியில் அவர்கள் தண்டிக்கப் பட்டார்கள் என்று சொல்கின்ற நேரத்தில், அவர்கள் கடைசி நேரத்தில், கருணை மனு போடுகிறார்கள். அதுவும் சட்ட ரீதியாகத்தான் இருக்கிறது. Granting of the pardoning power இப்பொழுதுதான் இந்த வழக்கிற்குள்ளே வருகிறோம்.

மனிதநேய அடிப்படையில் கருணை காட்டவேண்டும்; எங்களை விடுதலை செய்யவேண்டும்!

அரசியல் சட்ட ரீதியாக இருக்கின்ற அந்த உரிமையை அந்த தண்டிக்கப்பட்டவர்கள், அந்த வழக்கிலும் சரி, எந்த வழக்கிலும், அவர்கள் கருணை மனு போட்டு; எங்களுடைய தண்டனையை மறுபரிசீலனை செய்து, எங்களுக்கு மனிதநேய அடிப்படையில் கருணை காட்டவேண்டும்; எங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்பதிருக் கிறதே, அது இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற உலகளாவிய மற்ற அரசியல் சட்டங்களில் இருக்கின்ற வாய்ப்பை எடுத்துச் செய்திருக்கக்கூடிய ஒன்றாகும்.

அதன்படிதான், அவர்கள் அந்தக் கோரிக்கையை கேட்டார்கள்.
72 ஆவது விதி என்பதிருக்கிறதே, அது குடியரசுத் தலைவருக்கு அரசியல் சட்டத்தினுடைய 72 ஆவது பிரிவு என்பதும், அதுபோலவே, சட்ட புத்தகங்களையே வைத்து உங்களுக்குச் சுட்டிக்காட்டிகிறோம்.
என் கையில் இருப்பது Consitutional of India அதைப்பற்றி மிகத் தெளிவாக, விளக்கமாக வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் எடுத்துச் சொல்லக்கூடியது என்று சொன்னால், எச்.எம்.சால்வே என்று சொல்லக்கூடிய மிகப் பிரபலமான வழக்கறிஞர். அவர் எழுதிய அந்த நூல், பல பதிப்புகள் வெளிவந்து, மற்றவர்களால் திருத்தப்பட்டு, மிகத் தெளிவாக இருக்கக்கூடிய - ஒரு பாட நூலாக இருக்கக் கூடியது. அதிலிருக்கும் ஒரு பகுதியை உங்களுக்கு விளக்க மாகச் சொல்கிறேன். இங்கே ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும். சட்ட ரீதியான பிரச்சினைகளை, சட்டக் கண்ணோட்டத்தோடு சொல்கின்ற நேரத்தில், பல நேரங்களில் ஆங்கிலத்தில் இருப்பதைத்தான் அப்படியே படிக்கவேண்டும். அரசியல் சட்ட ரீதியாக இருப்பதில், உலக நாடுகளையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது, தெளிவாக இருக்கக்கூடிய வாய்ப்பு, இரண்டு வகைககளில் அவர்கள் தங்களுடைய கருணையை கேட்கலாம்; மன் னிப்பை கேட்கலாம்; pardoning power என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பு இருக்கிறது. முதலில், ஒரு மாநிலத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு - ஆளுநருக்கு உரிமை உண்டு; அதுபோலவே, மத்தியிலுள்ள குடியரசுத் தலைவருக்கு இறுதியாக உண்டு.  இந்த இரண்டும் அரசியல் சட்டத்தில் இரண்டு விதிகளின்கீழ் உறுதி செய்யப்பட்டிருக்கிற சட்ட பூர்வமான உரிமை.

அப்படி வருகின்ற பொழுது, அந்தப் பகுதியை மட்டும் முதலில் எடுத்துக்கொண்டு, விவாதங்கள் நடத்தி, அவர்களின் தண்டனையை எப்படிக் குறைப்பது? அல்லது விடுதலை செய்வது - செய்யாமலிருப்பது என்பதெல்லாம் இந்த வாதங் களை  வைத்துக்கொண்டுதான் வருகிறார்கள்.
ஆகவே, அதனை உங்களுக்குத் தெளிவுபடுத்தினால், பின்னாலே வரக்கூடிய விவரங்களைச் சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

இந்திய அரசியல் சட்டம் 72 ஆவது பிரிவு

இந்திய அரசியல் சட்டத்தினுடைய 72 ஆவது பிரிவு:

Ariticle 72
Article 72(1) in The Constitution Of India 1949
(1) The President shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence
(a) in all cases where the punishment or sentence is by a court Martial;
(b) in all cases where the punishment or sentence is for an offence against any law relating to a matter to which the executive power of the Union extends;
(c) in all cases where the sentence is a sentence of death

இதன் தமிழாக்கம் வருமாறு:

72 (1) (அ) ஒரு இராணுவ நீதிமன்றத்தில் (Court Martial) அளிக்கப்பட்ட தண்டனைகளை;

(ஆ) மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் அடங்கக் கூடிய ஒரு விவகாரத்தை எதிர்த்துச் செய்யப்பட்டுள்ள குற்றத்துக்காக விதிக்கப்பட்ட தண்டனைகளை,
(தண்டனை என்பது விதிக்கப்பட்ட தண்டனையையும், அதற்கான குற்றத் தீர்வையும் குறிப்பதாகும்)

(இ) மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அதனைக் குறைப்பதற்கும், இரத்துச் செய்வதற்கும், தண்டனையினின்றும் மீட்பதற்கும் அல்லது மன்னிப்பு வழங்குவதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.

(2) (1) ஆவது கூறின் (அ) கிளைக் கூறில் உள்ளவை எதுவும் ஒரு படை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைப்பதற்கு அல்லது ஒருங்கிணைப்பதற்குப் படைத் தலைமை அலுவலருக்குள்ள சட்டபூர்வமான அதிகாரம் எதையும் பாதிக்காது.

(3) (1) ஆவது கூறின் (இ) கிளைக் கூறில் உள்ளவை எதுவும், அமலில் உள்ள ஒரு சட்டப்படி, மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு அல்லது நிறுத்தி வைப்பதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு, ஒரு மாநில ஆளுநருக்குள்ள அதிகாரம் எதையும் பாதிக்காது.

இந்திய அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவு

அதேபோல, அதற்கு சம்பந்தப்பட்ட இன்னொரு பகுதி எதுவென்றால், 161
Ariticle 161

Power of Governor to grant pardons, etc, and to suspend, remit or commute sentences in certain cases The Governor of a State shall have the power to grant pardons, reprieves, respites or remissions of punishment or to suspend, remit or commute the sentence of any person convicted of any offence against any law relating to a matter to which the executive power of the State extends  

இதன் தமிழாக்கம் வருமாறு:

குற்றத் தண்டனை பெற்றவருக்கு, மன்னிப்பை வழங்குவதற்கும், அந்தத் தண்டனையைக் குறைப்பதற்கும், இரத்துச் செய்வதற்கும், விடுவிப்பதற்கும் அல்லது நிறுத்தி வைப்பதற்கும் ஒருவகைத் தண்டனையை மற்றொரு வகையாக மாற்றுவதற்கும், ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அத்தகைய அதிகாரம், ஒரு மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தின்கீழ் வரக்கூடிய சட்ட விவகாரங்கள் பற்றியதாகும்.

நண்பர்களே, இதில் தெளிவாக ஒரு சில வார்த்தைகள் இருக்கிறது. இந்த வார்த்தைகளிலேயே, இந்தப் பிரச்சினை யைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், இரண்டு பேர் களுக்கும் உள்ள அதிகாரத்தில், எந்தெந்த வார்த்தைகளை சட்ட ரீதியாக போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சொல் லுக்கும், சட்டத்தைப் பொறுத்தவரையில், பொருளுண்டு என்பது மட்டுமல்ல, ஏ-வுக்கும், பி-க்கும் வேறுபாடு இருந்தால், அது முக்கியமாக கவுண்ட்டாகும். முற்றுப் புள்ளிக்கும், கமாவுக்கும் வேறுபாடு இருந்தால், அது நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

ஆகவே, அவ்வளவு கவனமாக, உன்னிப்பாக பார்க்கப் படவேண்டிய செய்திகளிலே, இதற்கு என்ன ஒரு விளக்கம் என்று சொன்னால், நண்பர்களே, பொதுமக்களாக இருக்கக் கூடிய உங்களுக்கு விளக்குவதற்காக, சட்ட ரீதியாக இருக் கக்கூடிய ஒரு செய்தியை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலில், அவர்கள் என்ன சொல்கிறார்கள்? pardoning power என்பதுதான் இரண்டு பேருக்கும் இருக்கின்ற மிக முக்கியமான, அந்த மன்னித்துவிடக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது முதலாவது,
இரண்டாவது, Reprieve என்று சொல்லும்பொழுது, அதற்கு என்ன அர்த்தம் என்றால்,

Reprieve means a stay of execution of sentence; a forcefontment of capital punishment.
அந்த வார்த்தை என்ன பொருள் என்றால், ஒன்று அவர்கள் மன்னிக்கலாம்; அல்லது கொடுத்திருக்கின்ற தண்டனையை நிறுத்தி வைக்கலாம். தண்டனையை தள்ளி வைக்கலாம் என்பதுதான்.

அதேபோல, Respite என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால்,
Respite means awarding a lesser sentence instead of penatly in view of the fact. That the accused as no previous conviction.

இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்றால், அதிக தண்டனையை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  காரணம் என்னவென்றால், இவர் ஏற்கெனவே எந்தக் குற்றமும் செய்யவில்லை; எந்தத் தண்டனையும் பெறவில்லை என்று சொல்லக்கூடியதுதான்.

Remit என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால்,
Remit some of the meanings of the word remit or to pardirn to refrine from inflictive  to giveup. remition is reduction of amount of the sentence without changing character.
இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்றால், அதாவது ஒருவருக்கு அய்ந்து ஆண்டுகள் தண்டனை கொடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.  அவர் சிறையில் நல்ல முறையில் நடந்துகொள்கிறார். சிறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. ஒரு சிறைக் கைதியின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, அவரை நான்கரை ஆண்டுகளிலும் விடுதலையா கலாம்; நான்கு ஆண்டுகளிலும் விடுதலையாகலாம். இதனால், அவர் குற்றம் செய்யாதவர் என்று அர்த்தம் அல்ல. commute sentence என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றால்,

commute sentence The power of the president to commute any sentence is not subject any consitutional or judicial communication is in essence  the alteration of sentence of one kind into a sentence of lesser severe kite.

இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்றால், தூக்குத் தண்டனை கைதியை, ஆயுள் தண்டனைக் கைதியாக தண்டனையை குறைத்துக் கொடுப்பதுதான்.
இந்த அடிப்படையான செய்திகளை நாம் தெளிவாக தெரிந்துகொண்டால்,
இந்திய அரசியல் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகளில்  32, 72, 161 இவைகளைப்பற்றியெல்லாம் விவாதம் செய்து, அந்த அடிப்படையில் அந்த விசாரணைகள் நடைபெற்றிருக்கிறது. மிகத்தெளிவாக யார் யாருக்கு அதிகாரங்கள் இருக்கின்றன? - எவ்வளவு இருக்கிறது என்றெல்லாம் வந்தாலும்கூட, இதனுடைய முழு தத்துவம் என்னவென்று சொன்னால், நான் முன்பு சொன்ன மாதிரி, கடைசி நேரத்தில்கூட சாட்சியங்களை விசாரித்திருக் கலாம்; ஒரு வழக்கில் சரியான சாட்சியங்கள் வராததால், அவர்களை தண்டிக்கிறார்கள்; அப்படி தண்டித்த பிறகு, கடைசி நேரத்தில், அவர்களுக்குப் புதிய சாட்சியங்கள் கிடைக்கின்றன; அல்லது இதுவரையில் கிடைக்காத தகவல்கள் கிடைக்கின்றன என்றால், அந்த வழக்கினை மறு ஆய்வு செய்து, மறு விசாரணை செய்து அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும், அந்த மனிதர்களுடைய சுதந்திரத்தைப் பறித்துவிடக்கூடாது.

இந்த அரசியல் சட்டத்திலேயே 32 ஆவது விதியின்கீழே இந்த விசாரணைகள் எல்லாம் நடக்கிறது - நடப்பதற்கு சட்ட ரீதியான அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும், எல்லாவற்றையும்விட மேலானது என்ன வென்றால், 21 ஆவது விதி என்று சொல்லக்கூடிய Personal freedom and liberties unferted liberties ஒருவன் படித்தவனா? படிக்காதவனா? ஏழையா? பணக்காரனா? நல்லவனா? கெட்டவனா? என்பதைப்பற்றி பிரச்சினையல்ல.
மனிதனாகப் பிறந்து, இந்தியக் குடிமகனாக ஒருவன் இருந்தால், இந்திய அரசியல் சட்டத்தின்கீழே அவனுடைய சுதந்திரத்தைப் பறிக்க எந்த சக்திக்கும் உரிமை கிடையாது. இதுதான் இந்த 21 ஆவது விதியின் அடிப்படை உரிமையாகும்.

எனவே, இந்த அடிப்படையில் ஒருவருடைய உரிமை யைப் பறிப்பதற்கு, அதனை எடுத்துக்கொள்வதற்கு உரிமையே இல்லை என்று சொல்லும்பொழுது - உயிரைப் பறிப்பதற்கு என்றால், எந்த அளவிற்கு சிந்தித்திருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
எனவே, இந்த அடிப்படையில் இந்த விசாரணைகள் வருவதற்கு முன்னாலே, அவர்கள் என்ன சொன்னார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தார்கள்; ஏற்கெனவே நீதிபதி சதாசிவம் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகளின் அமர்வு - அந்த வழக்கினை விசாரித்தது.
இரண்டு நீதிபதிகளுக்கு மேல் இருந்தாலே, மூன்று நீதிபதிகள் விசாரிக்கிறார்கள் என்றாலே it is already assume the character of the bench ஆனால், அதை அரசியல் சட்டத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். அது என்னவென்றால், குறைந்தபட்சம் அய்ந்து பேரை வைத்தால்தான், Consitutional Bench அரசியல் சட்டரீதியான பிரச்சினைகளை ஆய்வு செய்து, அலசி, ஆராய்ந்து அதற்கேற்ப தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்கு, அய்ந்து பேர் இருக்கலாம், எட்டு பேர் இருக்கலாம் அல்லது 9 பேர் இருக்கலாம் என்று நிர்ணயம் செய்துகொள்கிறார்கள். பிரச்சினைகளைப் பொருத்தது அது.

தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி

ஆனால், இந்தக் காலகட்டம் வரக்கூடிய இந்த அடிப்படையில் என்ன நடந்தது என்று சொன்னால், தெளிவாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பிப்ரவரி 19 ஆம் தேதி இந்து நாளிதழில் வந்த செய்தி இது:

In a landmark verdict, the Supreme Court on Tuesday granted relief to the three convicts in the Rajiv Gandhi assassination case - Murugan, Santhan and Perarivalan - by commuting their death sentence into life term on the grounds of inordinate delay in disposal of their mercy petitions by the President.
While commuting the death sentence of three convicts - Murugan, Santhan and Perarivalan - in the Rajiv Gandhi assassination case into life citing inordinate delay in disposal of their mercy petitions by the President, the Supreme Court rejected the contention of the Centre that the trio did not deserve any mercy as they never showed remorse for killing the former Prime Minister.
The three-judge Bench of Chief Justice P. Sathasivam and Justices Ranjan Gogoi and Shiva Kirti Singh also gave a ray of hope for their release, saying that the Tamil Nadu government could exercise its remission powers under Section 432 and 433 Cr.P.C. and following the due procedure in law.
Centre’s stand rejected
The Bench rejected the Centre’s stand that the delay caused was not at the instance of the head of the executive and was not unreasonable.
It said: “Following the rejection of (their) mercy petitions by the Tamil Nadu Governor on April 25, 2000, these petitions were forwarded to the Ministry of Home Affairs on May 04, 2000. After an unreasonable delay of five years and 1 month, on July 21, 2005, the Ministry of Home Affairs submitted the petitioners’ mercy petitions to the President for consideration.”
Petitions recalled
The court said there was delay even thereafter. In February 2011, the MHA recalled the mercy petitions from the President. “Here also there was a delay of five years and eight months. Ultimately, the President, on September 12, 2011, rejected these mercy petitions after a delay of more than 11 years,” the Bench said.
It said it was indisputable that the delay was “inordinate and unreasonable and not caused at the instance of the petitioners,” warranting commutation of their death sentence life imprisonment.

இதன் தமிழாக்கம் வருமாறு:

ராஜீவ் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கும் வாய்ப்பு
தமிழ்நாடு அரசுக்கு அவர்களை விடுவிக்கும் முழு அதிகாரம் உள்ளது
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளபடி, உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றி உள்ளது.  குடியரசுத்தலை வரிடம் அளிக்கப்பட்ட கருணைமனுமீதான முடிவு எடுப் பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் அவர்களுடைய தண்ட னைக் குறைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த மத்திய அரசின் வாதங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.

உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இவ்வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனையை மாற்றி தீர்ப்பளித்தபோது, சாந்தன், முருகன் மற்றும் பேரறி வாளன் ஆகிய மூவருக்கும் கொலைவழக்கில் அவர்களின் உள்ளார்ந்த பங்களிப்பு இருப்பதாக தெளிவுபடுத்தப் படவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த மூவரையும் விடுவிப்பதுகுறித்து இந்திய குற்ற வியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432 மற்றும் பிரிவு 433 ஆகிய பிரிவுகளின்படி சட்ட நடைமுறைகளைப்பின்பற்றி, முழு அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய், ஷிவ்கீர்த்தி சிங் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பில் கூறி உள்ளனர்.

                            ----------------------"விடுதலை” 2-5-2014

52 comments:

தமிழ் ஓவியா said...


சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டு வெடிப்பு:

கண்டிக்கத்தக்கது - இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அறிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே தினத்தன்று (1.5.2014) காலை பெங்களூர் - கவுகாத்தி ரயில் பெட்டியில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்று அதில் ஒரு பெண் பலி; 14 பேர் பலத்த காயம் என்கிற செய்தி அதிர்ச்சிக்குரியது.

அமைதிப் பூங்காவில் இந்த நிலையா?

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கு எத் தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. பாபர் மசூதி இடிக் கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் வீசியதே!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் - அதுவும் தலை நகரத்தில் இப்படியொரு நிகழ்வு கண்டிக்கத் தக்கது - வெட்கப்படத்தக்கதாகும்! வேதனையும் மிகுகிறது!

அலட்சியம் ஏன்?

மூன்று நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் (அவரிடம் பல தகவல்கள் கிடைத்திருக்கவும் கூடும் அல்லவா!) மிகவும் விழிப்புடன் மத்திய மாநிலக் காவல்துறை புலனாய்வுத் துறை இருந்திருக்க வேண்டாமா?

குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்?

நாட்டில் இதற்கு முன் ஆங்காங்கு நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக் கப்படவில்லையே! இத்தகைய கால தாமதம்கூட வன் முறையாளர்களுக்கு, தீவிரவாதிகளுக்குத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டக் கூடியவையல்லவா?

பாதுகாப்புப் போதுமானதல்ல

இரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக ஏதோ பெயரளவில் இரண்டொரு காவல்துறையினரை அமர்த்துகிறார்கள். இது போதுமானவையல்லவே!

தூங்கும் வசதியுடைய பெட்டிகள் திறந்தே கிடப்பது. தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

பொது மக்களிடம் அச்சம் ஏற்படும்

சாலைப் பயணத்தைவிட பாதுகாப்பானது - செலவு குறைவானது என்று இரயிலைத் தேர்வு செய்கிறார்கள் பொது மக்கள். அவர்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் நடந்திருப்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் வன்முறைக்கு மதமோ, நிறமோ கிடையாது. வன்முறை எங்கு, எவரால், கிளம்பினாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இதுவே கடைசியானதாக இருக்கட்டும்!

சென்னையில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பே இறுதியானதாக இருக்கட்டும்! காவல்துறை - பொது மக்கள் இரு தரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக இந்த வெறுக்கத்தக்க அநாகரிகச் செயலைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை!

மனிதநேயமே நாகரிகத்தின் அடையாளம்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79594.html#ixzz30bqYvVky

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் இரு சங்கராச்சாரிகள்


புதுடெல்லி, மே 2-மோடிக்கு எதிராக 2 சங்க ராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினர் ஹர ஹர மோடி என முழக்க மிட்டது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிர சாரம் மேற்கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பூரி சங்க ராச்சாரி நேற்று அளித்த நேர்காணலில் குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடி யவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட் சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார் பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

துவாரகை சங்கராச்சாரி கூறுகையில், என்னால் முடியா விட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப் பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங் கராச்சாரி உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவரது சீடர் முக்தீஸ் வரானந்த் பிரசாரம் செய் வார் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்ப தாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79593.html#ixzz30bqjgvRI

தமிழ் ஓவியா said...


கோடையில் இளைப்பாற்றிட்ட குளிர்தரு புத்தகச் சங்கமத் திருவிழா!


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடை பெற்றதையொட்டி ஏகப்பட்ட களே பரம்! கெடுபிடிகள் -இத்தியாதி! இத் தியாதி!

இந்த பரபரப்புக்கிடையில் ஆர வாரமில்லாத ஆக்கப் பூர்வ அறிவுத் திருவிழா - அறிவுத் தேரோட்டம் ஒன்று தலைநகர் சென்னையில் நடைபெற்றது. (உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதியையொட்டி) ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிறு இரவு 9 மணியோடு முடிவடைந்தது. அதுதான் சென்னை புத்தகச் சங்கமம் என்ற திருவிழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான தந்தை பெரியார் அறக்கட்டளை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, இணைந்து, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் இன்னும் சிலரது அரிய ஒத்துழைப்புடன் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் உலகை விழுங் கும் மனிதநேயப் பெரு விழாவாக இந்த புத்தகத் திருவிழா, நகரின் மய்யமான ராயப்பேட்டை ஓய். எம்.சி.ஏ. மைதானத்தில் விசாலமான வியத்தகு ஏற்பாடுகள் - பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு நடைபெற்றது.

210 பதிப்பகத்தார்களின் கடைகள் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல; ஆங்கில வெளியீட்டவர்களும் கடைவிரித்தனர்; கொள்பவர்களை ஈர்த்தனர். மாலை வேளைகளில் கண்ணுக்கும் காட்சிக்கும் அறிவைத் தூண்டும் அருமையான அற்புதக் கலை நிகழ்ச்சிகள், உரைகள்!

வருவோர்க்கும் வாங்குவோருக்கும் வசதியாக மருத்துவ அவசரப் பிரிவுகூட!

உணவுக் கூடங்களும் பல் வகையில்! குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் வந்தனர்; வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்!

சென்னை ஊடகங்களில் இதற்குப் போதிய விளம்பரம் கொடுக்கப்பட வில்லை; காரணம் வெளிப்படை.

இப்பொருள் இவர் வாய் கேட்டால்...?

இப்பொருள் இத்தனையது என்றால்!... எப்படி விளம்பரப்படுத்துவது? பத்திரிகா தர்மபாவங்களில் அது சேர்ந்து விடாதோ என்ற விரிந்த பார்வை; என்னே விசித்திரக் கண்ணோட்டம்!

என்றாலும் ஒரு கோடி புத்தகங்கள் - ஏராளமானோர் வருகை!

எல்லாக் கருத்து கொள்கை யாளர்க்கும் எவ்வித வேறுபாட்டுக்கும் இடமின்றி சம வாய்ப்புத் தரப்பட்டது அமைப்பாளர்களால்!

புத்தகர் விருது என்ற புதுமை வெளிச் சம் இட்டது புதுமையிலும் புதுமை!

அரிய பணிகளை புத்தகங்களைப் பரப்புவது இளைஞர்களிடம் அறிவைக் கொண்டு செல்லும் தொண்டறப் பணியை முன்னெடுத்ததாக அமைந்தது.

புத்தகர் விருதுக்கு தேர்வு செய்த நான்கு பேர்களும் புத்தகப் புத்தொளி பாய்ச்சும் பொலிவுறு வைரங்களாகும்!

1. பொள்ளாச்சி நசன்
2.. பழங்காசு ப. சீனிவாசன்
3. தி.மா.சரவணன்
4. புத்தகத் தாத்தா சண்முகவேல்

இந்நால்வர் போன்று நானிலம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, விளம்பரம் விரும்பாது எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடக்கமிகு தொண்டறப் பணி செய்யும் தூய்மையானவர்கள் ஏராளம் உண்டு.

இவ்வளவு சிறப்புகளைச் செய்த பெருமை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய அமைப்பாளர்களாக உழைப்பை சளைக்காது தந்த பதிப் பாளர்கள் எமரால்ட் கோ. ஒளி வண்ணன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கே.எஸ். புகழேந்தி, விழிகள் பதிப்பகம் உரிமையாளர் த. வேணுகோபால், பெரியார் திடல் நிர்வாகி ப. சீத்தாராமன் தலைமையில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும், பங்கேற்ற பதிப்பகத் தினர் முதல் கலை நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களே!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/79577.html#ixzz30brDFdeM

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறைப் பொதுக் கூட்டம்


சென்ற 18.4.2014 மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத் தில் உங்களை சந்திக்க மாலை 6.45 மணியளவில் வந்தேன். அதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கூட்டம் முடிந்து மேடையை விட்டுத் தாங்கள் இறங்கி வரும்பொழுதும் தள்ளுமுள்ளு ஆகி விட்டது. நெரிசல் மிகுதியால் தங் களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.

மயிலாடுதுறைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர் களைப் பற்றிக் குறிப்பிட்டவை யாவும் வரவேற்கத் தக்கவையாகும். வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டது (அதா வது மோடி பிரதமராக வேண்டும்) திடுக் கிடும் செய்தியாகும். இதை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனை வரின் தலையாய கடமையாகும்.

- சு. பாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நூல் நிலையம், மேலப்பாதி

Read more: http://viduthalai.in/page-2/79583.html#ixzz30brSuvRG

தமிழ் ஓவியா said...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கட்டுபாட்டில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் இடஒதுக்கீட்டை வேரறுக்கும் மோசடி


வரும் நாட்களில் பொதுத்துறை வங்கியில், மே லாண்மைபிரிவு பணிக்காக நேர்முகத்தேர்வு நடை பெறப்போகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அழைக்கப்படவிருக்கின்றன. மொத்த மதிப்பெண்கள் 200 இதில் இட ஒதுக்கீட்டின் படி ஒதுக்கப்பட்ட மதிப்பெண்கள் எஸ்சி\சி - 112

ஒபிசி - 123, பொதுப்பிரிவு - 108, வங்கியின் பெயர் பாண்டியன் கிராம வங்கி. நேர்முகத்தேர்வு நாள், 3.5.2014.

இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி குறித்தும் மிகத் தீவீரமாக உரையாடும், இயங்கும் நமது நாட்டில் மிகவும் நூதனமான முறையில் மோசடி நடக்கிறது.

இந்த நேர்முகத்தேர்வு குறித்து எந்தத் தகவலையும் வங்கியின் இணையதளத்தில் வெளிப்படையாக அறி விக்காமல், குறைந்த பட்சம் அய்ந்து நாட்கள் அவ காசத்தில், சம்பந்தப்பட்ட தேர்வாளர்களுக்கு மட்டும் தகவலைத் தெரிவித்து, அவசர அவசரமாக நேர்முகத்தேவு நடத்த பாண்டியன் கிராம வங்கி துணிகிறது.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக இருப்பதால், பல தோழர்கள் தாங்கள் வாங்கிய மதிப்பெண்கள் குறித்தும், தாங்கள் சார்ந்திருக்கிற பிர்வுகள் பற்றி கூறவும் இந்த குழப்பம் கவனத்திற்கு வந்தது. விசாரிக்க ஆரம்பித்த போது, இந்த மிகப் பெரும் மோசடி வெளிப்பட்டது. மொத்தம் 100 அதிகாரிகளுக்கு இந்த பணிநியமனம் நடைபெறுகிறது. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் இட ஒதுக்கீட்டின் முடிவின் கீழ்கண்டவாறுஇருக்க வேண்டும். எஸ்.சி- 15 % எஸ்.டி- 7.5% ஓபிசி - 27.5 % பொது- 50%

முதலில் எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களில், எத்தனைப் பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர் களுக்குள் ஒரு மதிப்பெண்(கட் ஆப் மார்க்) முடிவு செய்யப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

அடுத்ததாக ஓபிசி சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு மதிப்பெண்(கட் ஆப் மார்க்) முடிவு செய்யப்படுகிறது.

இறுதியாக இந்த இரண்டு பொதுப்பிரிவு எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு மதிப்பெண்(கட் ஆப் மார்க்) முடிவு செய்யப்படுகிறது.

பொதுப்பிரிவில் அதிகமான பேர் தேர்ந்தெடுக்கப்படு வதால், அவர்களுக்குரிய (கட் ஆப் மார்க்) இயல்பாக குறைவாகவும், மற்ற பிரிவில் குறைவான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்களுக்குரிய மதிப் பெண்(கட் ஆப் மார்க்) அதிகமானதாகவும் இருக்கிறது.

ஆனால், அந்தந்த பிரிவில் தேவைப்படும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

சட்டென்று மேலோட்டமாக பார்ப்பதற்கு இது சரியெனவும் தெரியும். ஆனால் உண்மை இதுவல்ல. இடஒதுக்கீட்டை தலைகீழாக வைத்திருக்கிறார்கள் பாண்டியன் கிராம வங்கியில்.

இவர்கள் முதலில் தீர்மானித்திருக்க வேண்டியது பொதுப்பிரிவை! அதில் ஓபிசியில் உள்ளவர்களும் வருவார்கள், எஸ்சி.எஸ்டி உள்ளவர்களும் வருவார்கள். அதற்குத்தான் பொதுப்பிரிவு என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, எத்தனை பேர் தேவைப்படுகிறார்களோ அதற்கேற்ப கட் ஆப் மார்க் முடிவு செய்ய வேண்டும்.

இந்த பொதுப்பிரிவிற்கு தேவையான கட் ஆப் மார்க் வாங்கிய ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியைச் சேர்ந்தவர்கள் பொதுப்பிரிவாகவே கருதப்படுவர். இவர்கள் போக மீதமிருக்கிற ஒபிசி மற்றும் எஸ்சி.எஸ்டியைச் சேர்ந் தவர்களுக்குத்தான் அந்தந்த பிரிவுக்குத் தேவையான எண்ணிக்கைக்கேற்ப கட் ஆப் மார்க் முடிவு செய்யப்பட வேண்டும்.

இப்படிச் செய்யும்போது, பொதுப்பிரிவின் கட் ஆப் மார்க்கை விட ஒபிசி மற்றும் எஸ்சி.எஸ்டிக்குரிய கட் ஆப் மார்க் ஒரு போதும் அதிகமாய் இருக்காது. இருக்க முடியாது. பொதுப்பிரிவிற்கு கட் ஆப் மார்க் 108 என்றால், மற்ற ஒபிசிக்கும், எஸ்சி.எஸ்டிக்கும் கட் ஆப் மார்க் அதிகபட்சமாக 107.99 ஆகவாவது வரும். இதுதான் விஞ்ஞானபூர்வமான இடஒதுக்கீட்டு முறை.

இங்கே அதையே தலைகீழாகச் செய்து, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஒரு பெரும் துரோகம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. எவ்வளவு எளிதாகவும், வெளிப்படையாகவும் அவர்களால் ஏமாற்ற முடிகிறது.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த கட் ஆப் மார்க் மார்க்குகளைப் பார்த்த மாத்திரத்தில் தெரியும் பாரபட்சங்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எல்லாம் சரியாகவே நடந்திருப்பதாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் தலைமை நிர்வாககத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. அதன் வழிகாட்டுதலின்படிதான், இந்த பணி நியமனம் நடைபெற்று வருவதாகச் சொல்லப்பட்டது. நாம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, இதனை அம்பலப்படுத்தி இயக்கங்கள் நடத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மற்ற சங்கங்கள், சகோதர அமைப்புகளை சந்தித்துப் பேசியபோது தெரிவிக்கப்பட்ட உண்மை இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. Indian banking personnel selction (IBPS)

தமிழ் ஓவியா said...


வசம் வங்கிகளில் பணிநியமனங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு பல பொதுத்துறை வங்கி களில், இப்படித்தான் நடந்து வருகிறது. அங்குப் பெரும் பான்மையாக இருக்கிற சங்கங்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை. பொதுப்பிரிவிலிருந்து வருகிறவர்கள் தங்களிடம் உறுப்பினர்களாக சேர மாட்டார்கள் என பயந்து அமைதியாகிவிடுகிறார்கள் என்று தெரிவிக்கப் பட்டது.

ஆனால் நாங்கள், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி அதிகாரிகள் ஒன்றியமும் இதனை விடப் போவதில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து தொடர் போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறோம்.

இதற்கிடையில், இந்த அநியாயத்தைக் கேள்விப் பட்டு பாதிக்கப்பட்ட தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள். நான் எஸ்சி/எஸ்டி பிரிவில் 119 வாங்கியிருக்கிறேன். சார், இதுதான் எனக்கு கடைசி அட்டம்ட் என்றார்.

நான் 114 மார்க்குகள். ஓபிசி சார். எனக்கு நேர்முகத்தேர்வுக்குக்கு கடிதம் வரவில்லை. இதென்ன அநியாயம்? நான் ஓபிசி. 119 மார்க்குகள் எடுத்திருக் கிறேன். ஆனால் எனக்கு இண்டர்வியூ கிடையாது. 108 மார்க்குகள் எடுத்த பொதுப்பிரிவை சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவுக்கு செல்லப் போகிறார். எதுக்கு சார் இந்த Reservation Policy?எல்லோரும் பொதுப்பிரிவை என்றால் கூட நான் வந்திருப்பேனே?

108 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனா எஸ்சி/எஸ்டி சார். எதாவது செய்யுங்கள் சார், ப்ளீஸ்

இந்தக் குரல்கள் ஒவ்வொன்றும் வேதனையும், வலியும் தருவதாக இருக்கின்றன. தங்கள் எதிர்காலத் திற்கான ஆதரவுக் கரங்களை தேடி நிற்கின்றன. இட ஒதுக்கீடு என்னும் மகத்தான சமூக நீதி அர்த்தமிழந்து போனதால் அவர்களது வாழ்க்கையும், நம்பிக்கைகளும் சிதைந்து போயிருக்கின்றன.

- மாதவராஜ் (பாண்டியன் கிராம வங்கிப் பணியாளர் சங்கம்)

Read more: http://viduthalai.in/page-3/79545.html#ixzz30brjvOpg

தமிழ் ஓவியா said...


சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது


பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.

இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bryRxDl

தமிழ் ஓவியா said...


வடக்குமாங்குடியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்ட கொடுமை தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை, மே 2- நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜாதி, மத வெறி யர்களுக்கு ஏமாற்றமளிக் கும் வகையில் அமைதி யான முறையில் நடந்தேறி யிருக்கிறது. வன்முறை களைத் தூண்டி, சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைத்து, ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்கு களைத் திரட்டி விடலாம் என்ற கனவுகளோடு சிலர் தேர்தல் களத்தில் இறங்கி னர்.

அப்பாவி மக்களி டையே வெறுப்பை விதைத்து பகையை மூட்டி, வன்முறைகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், மக்கள் தேர்தல் முடிவு களை வழங்க உள்ளனர்.

ஜாதி, மத வெறியர்கள் நினைத்த அளவுக்கு வன் முறைகள் நடைபெற வில்லை என்றாலும், குறிப் பிட்ட சில பகுதிகளில் சமூகப் பதற்ற நிலையை உருவாக்கினர். சில இடங் களில் வன்முறை வெறி யாட்டங்களிலும் ஈடுபட் டனர். அருவருக்கத்தக்க வகையில், வெளிப்படை யாகப் பேசவும் ஏசவும் செய்தனர். ஆதாரமில்லாத அபாண்டமான அவதூறு களைப் பரப்பினர்.

வம்பிழுக்கச் செய்தார்கள்

சிதம்பரம் தொகுதியின் வேட்பாளர் என்கிற முறை யில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன், அனைத்துத் தரப்பினரிடை யேயும் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ஒரு குறிப்பிட்ட கட்சியினர் ஜாதியின் பெய ரால் இளம்பிஞ்சுகளி டையே ஜாதி உணர்வைத் தூண்டி வம்பிழுக்கச் செய் தனர். இருட்டில் மறைந்து நின்று கற்களை எறிந்தனர்.

எல்லாவற்றையும் பொறுத் துக்கொண்டு, சகித்துக் கொண்டு அனைத்துத் தரப் பினரையும் நேசித்தவாறு வாக்குச் சேகரித்ததுடன் சட்டம்-ஒழுங்கையும் சமூக அமைதியையும் நிலை நாட்டும் வகையில் விடு தலைச் சிறுத்தைகள் கட் டுப்பாடாக தேர்தல் பணி களை ஆற்றினோம். எனினும், சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி என்னும் கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் மட்டுமே உள்ள சிறுபான்மையான ராக வாழும் தாழ்த்தப் பட்ட மக்களைத் தங்கள் சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லி வற்புறுத்தியுள் ளனர்.

தமிழ் ஓவியா said...

அதற்கு தாழ்த்தப் பட்ட மக்கள் உடன்பட வில்லை என்பதுடன், கள்ள வாக்குப் போட முயற்சித்த வர்களையும் தடுத்துள்ள னர். இதனால் ஆத்திரம டைந்த ஜாதி வெறியர்கள் வழக்கம்போல தெரு விளக் குகளை அணைத்துவிட்டு கொடூரமான ஆயுதங்களு டன் தாழ்த்தப்பட்ட குடி யிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 40 வீடுகளைக் கடுமையாகச் சேதப்படுத் தியுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகளின் பொறுப் பாளர் வீட்டைக் குறி வைத்து, தருமபுரி பாணி யில், பொருள்களைக் கொள் ளையடித்த பின்னர் தாக்கு தல் நடத்திவிட்டுப் பின்னர் குடிசைகளுக்குத் தீ வைத் துள்ளனர். காவல்துறையி னர் தீயைப் பரவவிடாமல் தடுத்துள்ளனர். அந்தத் தாக் குதலில் 6 பேர் காயமடைந் துள்ளனர். பாப்பா என்ப வர் தலையில் கடுமையான காயமுற்று புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக் கிறார். மற்றவர்கள் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

இந்நிலையில், வழக் கம்போல பாதிக்கப்பட்ட வர்கள் மீதே பழியைப் போடும் வகையில் சிலர் அவதூறு பரப்புகின்றனர். பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர் கள் தாழ்த்தப்பட்ட மக் களைத் தாக்கியுள்ள நிலை யில், காவல்துறையினர் சுமார் 20 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். நேர டியாக வன்முறையில் ஈடு பட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை.

வடக்குமாங்குடியில் நடந் ததைப் போலவே வட மாவட்டங்களில் பெரும் பாலான கிராமங்களில் சமூகப் பதற்றத்தை உரு வாக்கி ஒரு சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறைகளைக் கட்ட விழ்த்துவிட்டுள்ளனர்.

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

உண்மை நிலை இவ்வா றிருக்க, விடுதலைச் சிறுத் தைகள் வன்முறையில் ஈடு பட்டார்கள் என்று மீண் டும் மீண்டும் பழி சுமத்து கின்றனர். இது மேலும் சமூகப் பதற்றத்தை உரு வாக்கும், சட்டம்-ஒழுங் கைச் சீர்குலைக்கும், வன் முறைகளுக்கு வழிவகுக் கும். எனவே, தமிழக அரசு இவ்வாறு அவதூறு பரப்பு கிறவர்களைக் கட்டுப் படுத்திட உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். வடக்குமாங் குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் குடி யிருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்தப் பகுதி யில் அவர்களால் தங்கியி ருந்து வாழ முடியாது என்று பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அச் சப்படுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபட்ட ஜாதி வெறியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இவ்வாறு அவதூறு பரப்புகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து, சமூக அமைதியை நிலை நாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

வாக்கு எண்ணிக்கையின் போது மீண்டும் அவர்கள் வன்முறை வெறியாட்டத் தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் கூடு தல் காவல்துறை பாது காப்பு வழங்கிட ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

- இவ்வாறு தமிழக அரசுக்கு தொல்.திருமா வளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79554.html#ixzz30bsZm8Xw

தமிழ் ஓவியா said...


காரவன் படப்பிடிப்பு


இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.

மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.

அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி - அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!

மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.

(காரவன், ஏப்ரல்-1, 1977

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsqtAXw

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச்செல்வம். தொழில்களிலெல்லாம் தலைசிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மைதான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையை கடைப் பிடிப்பவன்.

நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத் தைக் காட்டுபவன் ஆவான்

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsxyqeg

தமிழ் ஓவியா said...

வாருங்கள், கடவுளாகலாம்!

இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.

வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt8ohRO

தமிழ் ஓவியா said...


இந்திய விஞ்ஞானியும் மூடநம்பிக்கையும்

முயன்ற காரியம் முடிய வேண்டுமென்பதற்காக கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தாயத்துக்களை அணிகின்றனர்; தேங்காய் உடைக்கிறார்கள் என்று பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஒய். நாயுடம்மா கூறினார்.

பெங்களூருவில் பல்கலைக் கழகத்தில், விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் பற்றி விரிவாக அளவிடும் போது, நாட்டில் பரவியுள்ள பலவிதமான மூடநம்பிக்கைகளின் பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயல் என்றும் குறிப்பிட்டார்.

கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று சொல்லி ஏமாற்றும் மந்திரவாதிகளையும் சோதிடர்களையும், கைரேகை பார்ப்பவர்களையும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களுக்கும் பத்திரிகைகளில் அதிக இடம் கிடைக்கிறது. அதிகமாகப் படித்தவர்கள் கூட, ஒரு செயலைத் தொடங்குமுன் நல்ல நேரம், நல்லநாள், நல்ல வாரம், பார்க்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளின் விளைவாக, சூரிய சந்திரனை ராகுவும் கேதுவும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உண்டாகின்றன என்று எண்ணுகிறார்கள். பட்டினியால் செத்தவர்களுக்கு எப்படி ஏராளமான உணவுப் பொருள்களை பார்சல் அனுப்ப முடியும் என்று டாக்டர் நாயுடம்மா கேட்டார்.

மதத்தின் பேரால் பலரைச் சிலர் சுரண்டுவதன் விளைவுதான் என்று அவரே விடையும் பகர்ந்தார். மந்திரங்களினால் தேவையான உணவுப் பொருள் களைக் கொடுக்க முடியுமென்றால், இந்த உலகம் வாழ்வதற்கு வசதியான இடமாக இருக்கும். மழை பெய்வதற்காக மழைக்காலத்தில்தான் யாகம் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

இன்றைய தினம், இந்தியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரப்படும் விஞ்ஞானக் கல்வி, பரிசோதனை செய்வதற்கேற்ற வசதிகள் இல்லாமையால் தந்திரம் (மாஜிக்) போல் தாழ்வான நிலையை அடைகிறது.

தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btHb58z

தமிழ் ஓவியா said...

அய்யா உடைத்த அட்வான்ஸ் பிள்ளையார்

1953ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் தேதி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் அதன் போர்முறைத் திட்டம் பற்றியும், பொதுவாக கழகத் தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கிக் கொண்டு வருகிறார்.

பிள்ளையாரின் பிறப்பு ஆபாசங்களை புராணத்தின் பகுதிகளில் இருந்து எடுத்துக் கூறி பிள்ளையார் உடைப்பு போராட்டம் ஏன் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் கொண்டு வந்திருந்த பெரியதும் சிறியதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகளை எடுத்து கூட்டத்தாரிடம் காண்பிக்கிறார்.

இரண்டு பொம்மைகளும் வண்ணப் பொம்மைகள். இதுபோன்ற வண்ணப் பிள்ளையார் படங்களையோ அல்லது மண் பிள்ளையார் பொம்மைகளையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை 27ஆம் தேதியன்று உடையுங்கள் என்று அய்யா கூறுகிறார்.

கூட்டம் ஆரவாரமெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து 27ஆம் தேதி பிள்ளையார் உடைப்பதற்கு அட்வான்சாக சாம்பிளாக என் கையில் உள்ள இந்த சின்ன பிள்ளையாரை இன்றைக்கு தூளாக்குவோமா? என்று கூட்டத்தை நோக்கிக் கேட்கிறார்.

கூட்டத்தினர் மகிழ்ச்சிப் பெருக்கில் உடைப்போம், உடைப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து-

சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன் என்று பக்தர்களால் கூறப்படும் பிள்ளையார் கடவுள் உடைக்கப்பட்டது மேடையிலே, மேஜையின் மேலே - புரட்சி வேந்தர், புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் தம் கையால்.

எங்கெங்கும் ஆனந்த ஒலிகள்! எக்காள முழக்கம், பந்தலெங்கும் எதிரொலித்தது. கணபதி ஒழிக! விநாயகன் ஒழிக! பிள்ளையார் ஒழிக! என்று கிளம்பிய முழக்கம் அடங்க வெகுநேரம் ஆகியது.

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btSYGiU

தமிழ் ஓவியா said...

மோடிமீது அச்சப்பட சிறுபான்மையருக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன நோபல் அறிஞர் அமர்த்தியாசென்


இந்தியக் குடிமகன் என்கிற வகையில், என்னுடைய பிரதமராக மோடி வருவதை நான் விரும்பவில்லை. சிறுபான்மையர் பாதுகாப்பாக உணர்வதற்கு மோடி எதுவுமே செய்ததில்லை. மதச் சார்பின்மைக்கு ஆதரவாக செய்திருக்கலாம். அதன்மூலம் சிறுபான்மை வகுப்பினருக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வைக் கொடுத்திருக்கலாம்

அமர்த்தியா சென் 2001 மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது தான் வாக்களித்துள்ளார். போல்பூர் பகுதியில் வாக்களித்த பின்னர் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியாசென் கூறும்போது, மதச் சார்பின்மை சவாலுக்கு ஆளாகி உள்ளது. மதச்சார்பின்மைக்கு விரோதமாக உள்ளவர் மோடி என்று முடிவுக்கு வந்தால் அது சரியானதே. மோடிமீதான பல குற்றச்சாட்டுக்கள் அச்சாகவே இல்லை.

மோடி அதிகாரத்துக்கு வருவது என்பது குறித்து சிறுபான்மையருக்கு அச்சம் தோன்றி உள்ளதற்குப் பின்னால் ஏராளமான காரணங்கள் உள்ளன. நல்ல நிலையில் உள்ள முஸ்லீம்கள் இதுகுறித்து சிந்திப்பதுகூட கிடையாது. அதனாலேயே அப்படிப்பட்ட சிலர் மோடியுடன் உள்ளனர். நானும் இந்தத் தேர்தலில் என் பங்கை அளிக்கும் படியான முக்கியமான தேர்தலாகும்.

வாக்களிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் அரசியலமைப்பு அனுமதிக்கக்கூடிய அம்சங்களை மீறாமல் அரசியல் விவாதங்களில் பங்கேற்பேன். இவர் 2013 ஆம் ஆண்டில் மோடி யைத் தீவிரமாக எதிர்த்தார். மோடி மதசார்பின்மைக்கு எதிரானவர் என்பதால், மோடி பிரதமராக வரக்கூடாது என்கிறார் சென்.

அமர்த்தியா சென் தொலைக்காட்சிப் பேட்டியில், இந்தியக் குடிமகன் என்கிற வகையில், என்னுடைய பிரதமராக மோடி வருவதை நான் விரும்பவில்லை. சிறு பான்மையர் பாதுகாப்பாக உணர்வதற்கு மோடி எதுவுமே செய்ததில்லை. மதச்சார்பின்மைக்கு ஆதரவாக செய்திருக்க லாம். அதன்மூலம் சிறுபான்மை வகுப்பினருக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வைக் கொடுத்திருக்கலாம்.

என்னுடைய பார்வையில் பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த் சின்கா உள்ளிட் டோரிடம் பேசியுள்ளேன். கல்வித் திட்டத்தில் குறிப்பாக பள்ளிக் கல்வித் திட்டம் மற்றும் சுகாதாரத்துக்கு என்று புரிந்துகொள்ளக் கூடிய மோடியின் திட்டம் எதுவுமே இல்லை என்றார்.

இந்தியாவின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பல மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் இருந்தபோதே விமரிசனம் செய்து வந்துள்ளார். அமர்த்தியாசென் குறித்து மக்கள் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லாத, அமெ ரிக்கக் குடிஉரிமை உள்ளவர் என்று கருதி வந்துள்ளனர். இது குறித்து அவர் கூறும்போது,

இந்தியக்குடிமகன் என்று நிரூபிக்கும் வகையில் உண்மையில் நான் நாளை வாக்களிக்க உள்ளேன். உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் நீண்ட வரிசைகளில் முழுமையான சோதனைக்கு ஆளாகி உள்ளேன். விசா நடைமுறைகள், இடப்பெயர்வு அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன்.

கல்வி அவசியம்

வளர்ச்சி என்று சொல்லும்போது, நம் நாட்டில் மனித வளத்தை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. படித்த, திடகாத்திரமானவர்களாக இருக்கவேண்டும். மேலும், மின்சாரம், சாலைகள் உள்ளிட்டவையும் தேவை. இரண்டுமே முக்கியமானவை. இரண்டில் ஒன்று குறைந்தாலும் பிரச்சினை தான். மக்கள்தொகையில் 30 விழுக்காட்டினர் மின்சார வசதியின்றி இருக்கும்போது முக்கியத்துவமுள்ளதாக எதைக் குறிப்பிட முடியும்?

2012ஆம் ஆண்டு ஜூலையில் அறு நூறு மில்லியன் மக்கள் மின்சாரமில்லாமல் இருளில் தள்ளப்பட்டிருக்குமபோது, ஊடகங்கள் அறுநூறு மில்லியன் மக்களில் இருநூறு மில்லியன் மக்கள் எப்போதுமே மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று கூறியிருந்தன. அடுத்த முக்கியப் பிரச்சினையாக ஊழல் என்கிற முறைகேடுகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

ஆம்ஆத்மி கட்சியினர் பெரிய விஷயமாக்குவதற்கு தங்களின் திறமைகளை எல்லாம் காட்டினார்கள். ஆனால், கத்துக் குட்டிகள் ஊழலை எடுத்துக் கொள்வதைப்போல் கல்லா மையை ஏன் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை? முறைப்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டம் உலக அளவில் சீனா, கொரியா, இலங்கை, தாய்லாந்து உள்ளதுபோல் ஏன் இந்தியா வில் இல்லை? இந்தோனேஷியாவில் உள்ள அனைத்து மக்க ளுக்கும் பாதுகாப்பாக சுகாதாரத்திட்டம் உள்ளது என்றார்.

மனித வளம் வேண்டும்

மோடியின் வளர்ச்சித்திட்டம் குறித்து கேட்டபோது, தொடக்கத்தில் கல்வியைப் பற்றியும், தனி மனித பொரு ளாதாரத்தைப் பற்றியும் கவனம் இருக்க வேண்டும். காங்கிரசு பல்வேறு குரல்களில் பேசி வருவதாலேயே விமரிசனத்துக் குள்ளாகி வருகிறது. தனித்துவமான கட்சி என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்றார்.

உலகமயம் ஆதரவு

இந்தியப் பொருளாதார சீர்திருத்தம் குறித்து சென் கூறும்போது, சீனாவில் திறமையான ஆட்களைக்கொண்டு ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. நானே பயன்படுத்து கின்ற தொலைபேசி, கால்குலேட்டர், தெர்மோமீட்டர் ஆகியவை சீனாவிலிருந்து வந்ததுதான்.

தமிழ் ஓவியா said...


நம்முடைய கவ னங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. நம்முடைய பணியாட் களின் கல்வியும் வரையறைக்குள் இருப்பதுதான் காரணம். கல்வி மிக முக்கியமானது. நம்முடைய பணியாட்களின் கல்விக் குறைபாட்டால், நமக்கு அதிகாரமும் இல்லாமல் உள்ளது.

இதனாலேயே, நான் உலகமயமாக்கலுக்கு ஆதரவாக இருக்கிறேன்.

பங்கு சந்தையில் மாற்றங்கள்

அண்மைய பங்குசந்தை நிலவரங்கள் குறித்துக் கூறும்போது, இது இயற்கையானதே. வலதுசாரிகள் அதிகாரத்துக்கு வரும்போதெல்லாம் இதேபோல் நடப்பது வழமைதான். பிரான்சு, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதுபோன்றே நடந்துள்ளது. சமூக அக்கறையுள்ள இயக்கங்கள் அதிகாரத்துக்கு வரும்போது பங்குசந்தைகளில் குழப்பங்கள் ஏற்படும். அதுதான் நிலையானது.

ஆனால், பங்கு வணிகத்தில் தற்போது உயர்ந்துள்ளது போல் காணப்படுவது நீண்டகாலத் துக்கு இருக்காது. நீண்ட காலத்துக்கு தொடர்ந்து இருக்க வேண் டுமானால், மனித வளம், சுகாதாரம், கல்வி இவற்றைப்பொறுத்தே அனைத்தும் அமைந்துவிடும் என்று கூறினார்.

ராகுலுடன் சென்

மோடிக்கு எதிராக ராகுல் என்பது போல் சென்னுக்கு எதிராக பகவதி என்று சொல்லலாமா? என்று கேட்டபோது, என்னுடைய நூல்களைப் படிப்பவர்கள் ஜீன் ட்ரெஸ் மீது நன்னம்பிக்கையும், உயர்ந்த மதிப்பும் கொள்வார்கள்.

நான் காங்கிரசால் எப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இருந்தேன் என்பதைக் காணமுடியும். ராகுல் டிரினிடி கல்லூரியில் மாணவராக இருந்தபோது, ராகுலுடன் மதிய உணவு எடுத்துக்கொண்டேன். அப்போது அரசியல் ரீதியாக எவ்வித விவாதமும் செய்யவில்லை.

ஜூலை, ஆகஸ்ட காலத்தில் பேராசிரியர் பகவதி, அவரைச்சார்ந்தவர்கள் என்னைப்பற்றி 24 கட்டுரைகள் எழுதி உள்ளனர். அவர்களுக்கு எதிராக நான் ஒன்றுகூட எழுதவில்லை. என்னைப்பற்றிய தவறான புரிதல் களைமட்டும் என் கட்டுரைகளில் திருத்தி எகனாமிஸ்ட்டில் எழுதியுள்ளேன். மற்றவர்களைப்பற்றி எழுதுவதை நான் விரும்புவதில்லை.

நாலந்தாவில் பணி

விரைவில் நாங்கள் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பாடம் சொல்லித் தர உள்ளோம். பல்கலைக்கழகத் தலைவர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் ஆகியோரின் அறிக்கை எனக்கு வந்துள்ளது. விரைவில் பல்கலைக்கழகத்தின் சார்பில் நிர்வாகக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

நாலந்தா பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் குழுவுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் அமர்த்தியாசென் கூறும்போது, அங்கு எல்லோரும் நன்கு பணிபுரிந்து வருகிறார்கள். என்னுடைய வேலை ஆலோசனை கூறுவதுதான். சுகாடோ போஸ் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று மாணவர் அமைப்பு தரப்பில் வலியுறுத்தப்படுவதாக அறிந்தேன்.

நான் ஆலாசகர் என்கிற முறையில், அவரிடம் பதவி விலக வேண்டாம் என்றும், மாணவர், ஆசிரியர் மற்றும் அறிஞர்குழு தரப்பில் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்திடுமாறு கூறியுள்ளேன். விரைவில் அதுகுறித்த அறிக்கை வந்ததும் சுகாடோ என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றார்.

-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 30.4.2014, டில்லி பதிப்பு

Read more: http://viduthalai.in/page-8/79560.html#ixzz30btj5Qub

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் மதவெறி: சீதாராம் யெச்சூரி கண்டனம்


புதுடில்லி, மே 2-மக்கள வைக்கான இறுதிக்கட்டத் தேர்தல்கள் இன்னும் இரு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அதில் பெரிதாக ஆதாயம் பெறும் நோக்கில் மிக நேர்த்தியாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

தலையங்கத்தில்...

இது தொடர்பாக கட்சி யின் பிரச்சார ஏடான பீப் பிள்ஸ் டெமாக்ரசி வாரப் பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதா ராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

அடுத்த இரு வாரங் களில் நடைபெற உள்ள இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிறைய தொகுதிகள் உத் தரப்பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவை.

இந்தி மொழிப் பகுதி களான இவை மக்கள வைக்கு ஏராளமான உறுப் பினர்களை அனுப்பக்கூடி யவை. வகுப்புவாதச் சக்தி களுக்கு ஆதரவாக உள் ளவை இந்தப் பகுதிகள்.

வகுப்புவாத விஷத்தை பரப்புவதும் மத ரீதியில் வாக்காளர்களை இரண் டாக பிரிப்பதும், பா.ஜ.க. வுக்கு ஆதாயத்தைத் தர லாம். ஆனால் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, வகுப்பு நல்லிணக்கத்தை இதனால் விலை கொடுத் தாக வேண்டிவரும்.

வாக்கு வங்கி அரசிய லின் மிக மோசமான அம் சமே பெரும்பான்மை இந் துக்களை ஒன்று திரட்டு வதாகும். அது நேர்த்தியாக நடைபெறப் போகிறது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியே வங்காளத்தில் பேசும்போது, எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்

மூட்டை முடிச்சுகளு டன் போவதற்கு வங்க தேசத்தவர்கள் தயாராக இருக்கவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். வகுப்புவாதத் தாக்குத லுக்கு இந்துத்துவா ஆதர வாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே மோடி விடுத்த எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்.

வங்கதேசத்தவருக்கு எதிரான முழக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது வகுப்புவாத முழக் கம் எடுபடாத இடங்களில், தனது உண்மை முகத்தை மறைத்து வளர்ச்சிபற்றி பேசும் பாஜக, பிற இடங் களில் தேர்தல் ஆதாயத் துக்காக வகுப்பு வாதத்தை உசுப்பி வெறி ஏற்றுகிறது. இடத்துக்கு இடம் இரட்டை வேடம் போட்டு பாஜக செயல்படுகிறது. - இவ்வாறு சீதாராம் யெச்சூரிய எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79557.html#ixzz30btvaKBl

தமிழ் ஓவியா said...


புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி பகுத்தறிவாளர்களின் எதிர்ப்பால் நின்றது


மங்களூர், மே 3- நிம்ஹான்ஸ் என்கிறஅரசு உதவி பெறும் நிறுவன அரங்கத்தில் சிலர் ஏற்பாடு செய்திருந்த புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூர்பகுதி பகுத்தறிவாளர்களின் எதிர்ப் பால் கைவிடப்பட்டது.

நிம்ஹான்ஸ் இயக்குநர் பி.சத்தீஷ்சந்திராவுக்கு, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் நரேந் திர நாயக் புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதன் விளைவாக சத்தீஷ்சந்திரா வேகமாக நடவடிக்கை எடுத்து நிகழ்ச்சியை நிறுத் தினார்.

மே 11ஆம் தேதி அன்று நிம்ஹான்ஸ் கூட்ட மய்யத் தில் புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூரில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி குறித்து இந்திய பகுத்தறி வாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர நாயக் தன்னு டைய கடிதத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நியூராலஜிக் கோளாறு களுக்கு ஒருவருடைய கர்மா காரணமாக உள் ளதா? ஆதாரங்களுடன் உள்ள மருந்துகள், மருத் துவம் கூறுகின்ற உண்மை களை மறுப்பதும், முற்றி லும் எதிரானதுமாக உள்ள புனித கர்மாவைக் குணப் படுத்தல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா? என்று கேட்டு அனுமதியை மறுபரிசீலனை செய்யு மாறு கோரிக் கடிதம் எழுதி யிருந்தார். மேலும், கடிதத் தில் குறிப்பிடும்போது, 2004இல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, அங்கீகாரமில்லாத, ஆதாரங்களின் அடிப்படை இல்லாத குணப்படுத்துவ தாக கூறிக்கொள்ளும் எந்த செயலையும் அங்கீகரிக் கவோ, அதற்கு ஆதரவா கவோ அரசு இருக்கக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதன்படி, அரசின் நிதி உதவியுடன் செயல்படு கின்ற நிம்ஹான்ஸ் நிறுவன மும் அதே அடிப்படையில் வருகிறது என்றார்.

நிம்ஹான்ஸ் இயக்குநர் டாக்டர் சத்தீஷ்சந்திரா கூறும் போது பகுத்தறிவாளர்கள் கூறுகின்ற வாதம் முற்றி லும் சரியே என்றும், அந்த நிகழ்ச்சியின் அமைப்பா ளர்களை அழைத்து நிகழ்ச் சியை நிறுத்திவிடுமாறும், அந்த நிகழ்ச்சிக்காக அளிக் கப்பட்ட தொகை முழு மையாக திரும்ப அதன் ஏற்பாட்டாளர்களுக்குக் கொடுத்துவிடுவதாகவும் கூறிவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சிக்காக அரங் கைப் பதிவுசெய்தபோது, இதுபோன்ற நிகழ்ச்சி என்று என் கவனத்துக்கு வரவில்லை என்றார். நிகழ்ச்சி குறித்து கவனத் துக்கு கொண்டு வந்ததும் நடவடிக்கை எடுத்துள் ளேன் என்றார். மேலும், இதுபோன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்பது நிம்ஹான்சின் கொள்கையா கும். பகுத்தறிவாளர்கள் அந்த நிகழ்ச்சிகுறித்து சுட் டிக்காட்டிக் கடிதம் எழு தியதும், அந்த நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து பெறப்பட்டத் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டோம். நிம்ஹான்ஸ் வளாகத்தில் எங்கும் அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் நிறுத்திவிட்டோம் என்று கூறினார்.

- தி ஹிந்து ஆங்கில நாளிதழ், 2-5-2014

Read more: http://viduthalai.in/e-paper/79646.html#ixzz30hhsBL4Y

தமிழ் ஓவியா said...


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க
விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவார் மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி, மே 3- குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி உத்தர விட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததையொட்டி இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசா ரணை ஆணையத்திற்கு விரைவில் நீதிபதி நியமிக் கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித் துள்ளார்.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்கு மாறு கூறியதன் பேரில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித்ஷா, இது தொடர்பாக காவல் துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங் களை ஊடகங்கள் வெளி யிட்டன. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறி வித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இது வரை நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று (2.5.2014) சிம்லாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய் தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.

அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே நீதிபதியை நிய மிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லையா? என்று கேட்டதற்கு, இந்த முடிவு 4 மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்றும், எனவே இது தேர் தல் நடத்தை விதிமீறல் இல்லை என்றும் தெரி வித்தார்.

மேலும், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வேவு பார்த்துள்ள நிலையில், அவர் பிரதம ரானால் பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? என் பது குறித்து உண்மையி லேயே வருத்தப்படுவ தாகவும் ஷிண்டே கூறினார்.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த முடிவு, அர சியல் உள்நோக்கம் கொண் டது என பா.ஜனதா கூறி யுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசி யல் காழ்ப்புணர்ச்சி நட வடிக்கை இது என்று தெரி வித்தார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார் என்றும் அவர் கூறினார். இதைப்போல, காங் கிரஸ் கட்சியின் உள் நோக் கம் கொண்ட இந்த நடவ டிக்கைக்கு, மதிப்பு மிக்க நீதித்துறை துணை போகாது என நம்புவதாக ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

ஆனால், இந்த விவகா ரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண்டிப்பாக நீதிபதி நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது குறித்து மத் திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண் டிப்பாக நீதிபதி நியமிக்கப் படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள் ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் மேலும்கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகி றார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. விசா ரணைக்குழுவில் எந்த நீதி பதியும் சேரமாட்டார்கள் என ஏன் வெளிப்படையாக கூறுகிறார்கள்? இந்த விவ காரத்தின் உண்மை நிலை அவர்களுக்கு தெரியும்.

ஏனெனில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவ காரத்தில் மோடி என்ன செய்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் உள் ளது. எனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டால், மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது என் பது அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79641.html#ixzz30hi2zwYc

தமிழ் ஓவியா said...

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசுங்கள்
மோடிக்கு பிரியங்கா சவால்

அமேதி, மே 3- தைரி யம் இருந்தால் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று மோடிக்கு பிரியங்கா சவால் விடுத் துள்ளார். காங்கிரஸ் தலைவரும், அமேதி மக் களவை தொகுதி வேட்பாள ருமான சோனியா காந்தியை ஆதரித்து, மகள் பிரியங்கா காந்தி நேற்று கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்காரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: நான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இடங் களில் எல்லாம், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றி யும் அவதூறான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை இர வோடு இரவாக பா.ஜ கட்சி, கோழைத்தனமாக வெளி யிட்டு வருகிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் நின்று பேசவேண்டும்.
நாட்டில் தற்போது தேர்தல் பிரச்சாரம் என்பது மிகவும் மட்டரகமாகப் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்குதான். ஆனால், ஒரு சில தலைவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். மக்க ளின் அடிப்படை நலன் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகின்றனர். நரேந்திர மோடி பத விக்காக ஆசைப்படுகிறார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiRgLpT

தமிழ் ஓவியா said...

வாஜ்பாய் மகாத்மா காந்தியாம்!
மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோசாம்!!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

டில்லி, மே. 3- பாஜகவில் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலை வர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார். சி.என்.என். அய்.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது: வாஜ்பாயும், மோடியும் ஒன்றுபோல் தான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர்; மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது. இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiXDH7H

தமிழ் ஓவியா said...


விடுதலை செய்தி எதிரொலி இடஒதுக்கீடு அமலாகும் பாண்டியன் கிராம வங்கி உறுதிவிருதுநகர், மே 3-அதி காரிகள் பணியிட நிரப்ப லில் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்துவதற் கான அனைத்து நடவடிக் கைகளையும் எடுப்போம் என்று பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பாண்டியன் கிராம வங்கியில் அதிகாரிகள் பணி யிடங்களை நிரப்புவதற் கான நேர்காணலுக்கு நிர் ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் இட ஒதுக் கீட்டு உரிமையை மறுக் கும் வகையில் உள்ளது என்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன், பாண் டியன் கிராம வங்கி ஊழி யர்கள் சங்கம் ஆகியவை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

மேலும், இந்த அமைப் புகளின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வர வில்லையென்றால் மே 2 ஆம் தேதி மாலையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத் துவதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு திட்ட மிடப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு நிர் வாகம் அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார் பாக மாநிலச் செயலாளர் கே.கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலை வர் பி.எஸ்.போஸ் பாண்டி யன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஜா.மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத் தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர் ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் தவறா னவை என்பதை ஏற்றுக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், அதிகாரிகள் நேர்காண லுக்கு விண்ணப்பித்திருக் கும் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்தது.

நேர்காணல் நிறைவு பெற்று வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் அரசி யல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமைக்கு உத்தரவாதம் தரப்பட வேண் டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.

அதையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் மோசடி செய் யும் வேலைகள் பல அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களில் நடக்கின்றன. இந்நிலையில், பாண்டியன் கிராம வங்கி வேலை வாய்ப்பில் அத்தகைய முயற்சிகள் நடக்காமல் தடுத்திருப்பது குறிப்பிடத் தக்க வெற்றியாகும்

Read more: http://viduthalai.in/e-paper/79647.html#ixzz30hiimLce

தமிழ் ஓவியா said...


கல்கியின் நளினம்!


நரியை நனையாமல் குளிப்பாட்டுவது என்று சொல்லுவார்கள்; அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கல்கி போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு அப்படியே பொருந்தும்.

எடுத்துக்காட்டுக்கு வெகு தூரம் செல்ல வேண்டாம். இந்த வார கல்கி (4.5.2014)யின் தலையங்கம் ஒன்றே ஒன்று போதுமானது.

நரேந்திரமோடி 2014 மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுக்கச் செய்துள்ள பிரச்சாரப் பயண தூரம் சுமார் 5,40,381 கிலோ மீட்டர்! இங்கிருந்து சந்திரனுக்கு உள்ள தொலைவே 3,84,400 கிலோ மீட்டர்தான்! சுமார் 450 அரசியல் கூட்டங்களில் இந்தியாவெங்கும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரும் இந்தளவுக்கு உழைப்பையும், அர்ப்பணிப் பையும் செய்திருப்பாரா என்பது சந்தேகமே

பல தலைவர்கள் மாநில அளவில் மட்டுமே புகழ் உடையவர்கள். மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறது. ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும் ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாகப் பரிணமித்திருப்பவர் மோடி. இந்த நம்பிக்கையும், உத்வேகமும், அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற உதவ வேண்டும்! என்று உண்மைகளைக் களப்பலியாக்கி, ஆசை என்ற வெட்க மறியாத குதிரையில் ஏறி சவாரி செய்கிறது கல்கி.

கலைஞர் போன்றவர்கள் 90 வயதைக் கடந்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எல்லாம் அவாளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

பண முதலைகளின் தனி விமானத்தில் பயணித்து சொகுசுப் பிரச்சாரம் செய்வது பெரிய சாதனையாம்!

மாநில மொழி, மத எல்லைகளைக் கடந்து மோடியின் ஆளுமை பரந்து விரிந்திருக்கிறதாம்!

இதைப் படிப்பவர்கள் யாரும் வாயால் சிரிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்டவர் என்பதை கல்கிகள் மறைக்கப் பார்க்கலாம் - அதற்குக் காரணம் உண்டு. இந்து வெறிப் பார்ப்பனிய ஆதி பத்தியத்தை இந்தப் பிற்படுத்தப்பட்ட வாடகைக் குதிரை நிறுவிக் காட்டும் என்ற ஆசையின் உந்துதல் தான் கல்கியை இபபடி எழுதத் தூண்டுகிறது.
இரண்டாயிரம் முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு நர வேட்டை மனிதன் மத எல்லைகளைத் தாண்டி பரிண மித்து நிற்கிறாராம்! எங்கே போய் முட்டிக் கொள்வது!

பொடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 287 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றால் அதில் 286 பேர் முஸ்லீம்கள், இன்னொருவரும் சீக்கியர்!

பாதிக்கப்பட்ட மக்கள் தொகுதியிலிருந்தே பொடா வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில்!

தம் குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு ஆளாகி சொந்தமான வணிக நிறுவனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, வாழவே வழியில்லை என்று முகாம்களில் முடங்கிக் கிடக்கும் முஸ்லீம்களைப் பார்த்து இனப் பெருக்கம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட மனிதநேயமின்றி ஆபாச வக்கிரக் கீழ்ப் புத்தியோடு பேசிய ஒருவர்தான் மத எல்லை களைக் கடந்த மாமனிதராம்! அதுவும் நேருவுக்குப் பிறகு மக்களிடம் தனித்த கவர்ச்சியும், ஈர்ப்பும் உள்ள நம்பிக்கை நாயகனாம் மோடி!

மத மூடநம்பிக்கைகளை எல்லாம் கடந்து துணைக் கண்டத்து மக்களையெல்லாம் சகோதரத்துவ வாஞ்சை யுடன் பார்த்த பகுத்தறிவாளர் நேரு எங்கே? இந்துத் துவா வெறி பிடித்து அடுத்த மதக்காரர்களைச் சீண்டும் மரண வியாபாரியாம் மோடி எங்கே? ஊடகங்கள் தங்கள் கைகளில் இருக்கின்றன என்கிற மமதையில் சாக்கடையை ஜவ்வாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்று மனப்பால் குடிப்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, மக்களவைத் தேர்தலிலும் சரி ஒரே ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ பி.ஜே.பி. சார்பில் வேட்பாளராக நிறுத்தப் படாதது ஏன்? மத எல்லைகளைத் தாண்டிய மாமனிதர் என்பதற்கு இதுதான் அளவுகோலா?

நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்களும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுகளும், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆனந்தமூர்த்திகளும் கட்சிகளைக் கடந்த அறிஞர்கள் மோடியைப் எப்படி விமர்சித்துள்ளார்கள் என்பதைக் கல்கிகள் பூணூல் பார்வையைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு நிதானமாகச் சிந்தித்துப் பார்க் கட்டும் உண்மை மிக வெளிச்சமாகவே தெரியும்.

மோடியளவுக்கு மோசமாக விமர்சிக்கப்பட்டது வேறு யாருமில்லை - அதில் கின்னஸ் சாதனை படைத்து விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Read more: http://viduthalai.in/page-2/79632.html#ixzz30hj0vLlr

தமிழ் ஓவியா said...


பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு சுயமரியாதை ஆசிரமத் திறப்பு விழாச் சொற்பொழிவு


சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவுற்புக் கமிட்டியார் தேர்ந்தெடுத்ததற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

ஏனெனில் நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர் களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக் கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சவுந்தர பாண்டியனார், சொ. முருகப்பா, ஆகிய முக்கியமானவர்களில் சி.குருசாமி ஒருவராவார்.

ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக் கொள்கையையே பின்பற்று கிறவருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய ரிவோல்ட்க்கு பெயரளவில் நான் பத்திராதி பனே ஒழிய, காரியத்தில் அவரே தான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர்.

அவரது எழுத்துக்களும் கருத்துக்களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளி மகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது.

இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா அய்ரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதைத் தவிர திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதால் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும் அதிலும் விதவை யாயிருத்தலே மேல் என்றும் தீர்மானித் துக் கொண்டிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லா வற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.

(பட்டுக்கோட்டையில் 24.05.1929 வெள்ளி இரவு 11 மணியளவில் திரு.சி.குருசாமி தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlhSTqf

தமிழ் ஓவியா said...

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல் லாதார்களை விலக்கிவிட்டார்கள்.

இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாச மும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவ தாகத் தெரிகிறது.

குடிஅரசு - செய்தி விளக்ககுறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlorfcT

தமிழ் ஓவியா said...


ஒத்திப் போடுதல்

இந்திய சட்டசபை, மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்திப் போட்டு விட்டார்கள்.

அதுபோலவே, திரு. கல்யாண சுந்தரமுதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும் சைவப் பெரியார்கள் மகாநாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டு விடும். திரு. வரதராஜுலுவின் உத்தியோக மேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திபோடப்பட்டாய் விட்டது.

இதுமாத்திரமல்லாமல் திரு. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்குப் பிரசாரமும் திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரச்சாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத்துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்படலாம்.

அன்றியும் தேசமே பிரதானமென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமான பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்திப் போடப்பட்டுவிடும்.

இவற்றையெல்லாம் விட, 1929ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு 12 மணி 5-நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாய் ஒத்துழையாமை நடத்துவது என்கின்ற திரு.காந்தியின் வாய்தாவும் கண்டிப்பாய் யார் தடுத்தாலும் நிற்காமல் ஒத்திப் போட்டாய்விடும்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hlunH1I

தமிழ் ஓவியா said...

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப் பற்றி நாம், அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்லவென்றும் இவர்களுக்கு கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 வருடகாலமாக விடாமல் சொல்லி வருகின்றோம்.

இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரமே செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில் காங்கிரசு பணக்காரர்கள் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது.

உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டார்கள் காங்கிரசுக்கு எதிரிகளாய் விட்டார்கள் முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றது.

இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm2Nac6

தமிழ் ஓவியா said...


மோடி ஒருமுறை மட்டுமே அதிகாரத்திற்கு வந்துவிட்டால் வெறுக்கத்தக்கதான கொள்கைகள் சட்டபூர்வமாகிவிடும் கலைஞர்கள் கருத்து


ஸ்டாக்ஹோம், மே 3- இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களான நடிகை நந்திதாதாஸ் மற்றும் சிற்பக் கலைஞர் அனீஷ்கபூர் ஆகி யோர் மோடித்துவ அர சியலை எதிர்த்து பொது மக்கள் குரல் எழுப்பவேண் டும் என்று கேட்டுக் கொண் டுள்ளனர்.

மோடி வெல்வது என் பது அரசு எந்திரத்தின்மீது வெறுப்புணர்வை உண் டாக்கும். மேலும், அந்த வெறுப்புணர்வு நிறுவ னங்கள், அதன் கொள்கை களிலும் பரவிவிடும் என்று நந்திதாதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாக்ஹோமில் ஃபிராக் என்கிற படத்தை இந்தியப் பட விழாவில் திரையிட்டபோது நந்திதா தாஸ் மோடி குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறும்போது, மோடி பிரதமர் பதவிக்கு வருவது என்பது முஸ்லிம் போன்ற சிறுபான்மையர்களை, ஏற் கெனவே ஒடுக்கப்பட் டுள்ள அவர்களை முன் எப் போதும் இல்லாத வகை யில் காயப்படுத்துவதாக அமைந்து விடும் என்று கூறினார்.

மேலும், குறைந்த கால கட்டமே பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்த போதும், கல்வித்துறையில் பாடத் திட்டங்களை அவர் களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டனர். மோடி ஒரே ஒருமுறை மட்டுமே அதிகாரத்துக்கு வந்துவிட்டால், வெறுக்கத் தக்கதான கொள்கைகளை சட்டபூர்வமாக்கி விடுவார். அப்படி மாற்றியதைக்கூட நாம் அறிந்துகொள்ள முடி யாமல் போய்விடும் என்று குறிப்பிட்டார்.

பல்வகைப்பட்ட கலாச் சாரம் குறித்த பிரச்சாரத்தை ஆதரிக்கும் நந்திதாதாஸ், மதச்சார்பின்மைக்கு ஆத ரவான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட் டுக்கொண்டுள்ளார். மோடியை எதிர்ப்பதன் மூலம் குரூரமான தாக்கு தலை எதிர்கொள்கிறார்.

மேலும் அவர் கூறும் போது, நான் மோடியை எதிர்ப் பதால் இதுவரை நான் சந்தித்திராத வகையில், என்னையும், என் மகனை யும் இந்திய நாட்டைவிட்டு வெளியேறவும், பாகிஸ் தானுக்கு செல்லுமாறும் வெறுப்பான மின்னஞ் சல்கள் எனக்கு வருகின்றன.

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிரட்டலாக உள் ளது. முதன்முறையாக உண்மையிலேயே நான் அஞ்சும் நிலை ஏற்பட்டுள் ளது என்று கூறினார்.

வளர்ச்சி குறித்த போலி வாக்குறுதிகளை நம்பி மனித உரிமைகளை விற்றுவிட இந்தியர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும் வருத்தப்படுகிறார். இது முடிவான ஒன்றா கவே உள்ளது. மோடி ராஜ் ஜியத்தின்மூலம், மாறுபா டான கருத்துகளுக்கு இட மில்லை.

மோடியை எதிர்ப் பவர் யாராக இருந்தாலும் சகிப்புத்தன்மை கிடை யாது என்பதைக் காணலாம். மோடியை எதிர்ப்பதோ, எதிர்க்கும் எண்ணத்து டனோ இருந்தால் அவர் களின் நம்பிக்கைகள் சீர் குலைக்கப்படும். சமூக விரோதிகள், அரசியல் குண் டர்களை பாதுகாப்பவர்கள் யாரென்று அவர்களுக்குத் தெளிவாகவேத் தெரியும்.

இதேபோன்றே சிற்பக் கலைஞர் அனீஷ்கபூரிடமி ருந்தும் மோடி எதிர்ப்புள் ளது. அண்மையில் அவரு டைய கடிதம்மூலம் எதிர்ப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக்கடிதத்தை வெளியிட்டதிலிருந்து தொடர்ந்து, ஆபாசமாக வும், மிரட்டும் தொனி யிலும் (தொலைபேசி, டிவிட்டர், மின்னஞ்சல் வாயிலாக) மிரட்டல் இருந்துகொண்டே உள்ளது.

இதன்மூலம், மோடியின் கூடாரம் அச்சத்தில் ஏற்படும் விமர்ச னங்களாக உள்ளன என்பது தெளிவாகவே தெரிகிறது. மறைப்பதற்கு அவர்களி டம் ஏராளமாக உள்ளன. மோடிக்கு எதிரான கடி தத்தில் கையொப்பமிட்ட அனைத்துத் தனி நபருக்கும் மின்னஞ்சல், டிவிட்டரில் எழுதுவது உள்ளிட்டவற் றின்மூலம் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

2002 கலவரத்துக்கு பொறுப் பேற்கவோ, மன்னிப்பு கேட்கவோ மோடி முன்வர வில்லை. எந்த ஒரு கேள் விக்கும் உட்படுத்தாமல் இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் முடிவுக்கு வருகி றது. குஜராத்தில் மோடி அரசின் கொடுமைகளாக, குஜராத்தில் 2002 இல் நடை பெற்ற பயங்கரக் கலவர சம்பவங்களை மிக முக்கிய மாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் சிறு பான்மையர் தற்காத்துக் கொள்ள முடியாமல், சொத் துக்கள் சூறையாடப்பட்டு, கொலை, பயங்கரவாதத் தால் பாதிப்புக்குள்ளா னார்கள். அதன் விளைவாக ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என்று இரண்டாயி ரம் பேர் கொல்லப்பட் டனர்.

குறிப்பாக பெண் கள்மீதான காட்டுமிராண் டித்தனமானத் தாக்குதல் கள், வன்முறை வெறியாட் டங்கள் யாவும் காவல் துறையால் தடுக்க முடி யாமல் இருந்தன. அவர் களின் குரல்கள் கேட்கப் படவேண்டும்.

ஒவ்வொரு வரிடமும் இதுபற்றி உரக் கக் கூறவேண்டும் என்று சொல்லவேண்டும். வியா பாரம் எந்த ஒரு விலையை யும் கொண்டதாக இருப்ப தில்லை. அப்பாவி, வறிய வர்களின் உயிரும், அதிக செல்வத்துடன் உள்ளவரின் உயிரும் ஒரே மதிப்புள்ள வைதான். இந்திய, இங்கி லாந்து நண்பர்களிடம் நான் கூறுவதெல்லாம், சமுதாயத் தின், சமூக சூழலின் விலையை எண்ணிப்பாருங் கள். -இவ்வாறு சிற்பக் கலை ஞர் அனீஷ்கபூர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79634.html#ixzz30hmGFj3A

தமிழ் ஓவியா said...


சந்தி சிரிக்கும் கடவுள்களின் சக்தி


கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கலிக்கநாயக்கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலையும், அங்கு நகை பணம் திருட்டுப் போனதால், காவல்துறையினர் விசாரணை நடத்துவதையும் காணலாம். உள்படம்: உடைக்கப்பட்ட உண்டியல்.

வடவள்ளி.மே 3- கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த கலிக்கநாயக் கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை யில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று முன் தினம் நடந்ததாம். இதையொட்டி காணிக்கைகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலின் கதவு பூட்டை உடைத்து சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். அவர் கள் அங்கிருந்த 5 அடி உயர சூலாயு தத்தைப் பயன்படுத்தி உண்டியலில் இருந்த 2 பூட்டுக்களையும் உடைத்துள் ளனர். பின்னர் அவர்கள் உண்டியலில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலில் நடை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது அவர், கோவில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பொருள்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகி, உடனடியாக தொண் டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங் களைப் பதிவு செய்தனர். கோவில் விழா நடந்த மறுநாளே உண்டியலில் இருந்த நகை, பணம் திருட்டு போயுள்ளது.

திருட்டு போன தங்கம், வெள்ளி மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக் கும் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய உண்டியலையே காப் பாற்றிக் கொள்ளாத அந்த பத்ரகாளியம் மன், எப்படி பக்தர்களின் குறையைப் போக்குவாள்?

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmPIEFv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் மோதல்: காயம் - கைது

ஆரணி, மே 3- ஆரணி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரணி அடுத்த சேவூர் எஸ்எல்எஸ் மில் அருகே வசிப்பவர் முனிவேல் மகன் மணிகண்டன் (22). அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்ததாம்.

விழாவையொட்டி மணிகண்டன், நண்பர்கள் வேல், வடிவேல், ரகு ஆகி யோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சம்பத் மகன்கள் மோகன், மதன் மற்றும் ராஜேஷ், கரிகாலன், யுவராஜ், மணிவாசகம் ஆகியோர் ஏன் சாலையில் சத்தம் போட்டுச் செல்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் கைகலப்பு ஏற்பட்டு ஒரு வரை ஒருவர் கையாலும், கல்லாலும், தடியாலும் தாக்கி கொண்டனர். இதில் மோகன், யுவராஜ், கரிகாலன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழு மோதல் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் மணிகண்டன், மணிவாசகம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து மதன், ராஜேஷ், மணிகண்டன், ரகு, வேல், வடி வேல் ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின் றனர்

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmWenj1

தமிழ் ஓவியா said...


மோடி சொல்வது முழுப் பொய்- ஆதாரமற்றதுமோடியின் முகமூடியைக் கிழிக்கும் அகமதுபட்டேல்

புதுடில்லி, மே 3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர் பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ கார ணம் தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி யில் வெளியான விவரங் கள்தான்.

அகமது பட்டேல் காங் கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண் பர்களில் ஒருவர். இப் போது அவர் மாறி இருக் கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப் பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவரு டன் சேர்ந்து உணவு அருந் தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப் பட்ட தோழமை உறவு தொடரவேண்டும் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அகமதுபாய் என எப் போதும் அவரை அழைத் ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகி றோம்.

பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த் தையை நான் பயன்படுத்து கிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்ப தற்கான காரணம்பற்றி கேட் டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக பட்டேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல் லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத் துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வரு கிறது. எனது வீட்டுக்கு அவ ரும், அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப் பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

1980-களில் அவர் பாஜக பொதுச்செயலாளராக இருந்தபோது, அவர் எனது வீட்டுக்கு வந்தது நினை விருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித் தோம்.

முதல்முறையாக முதல் வராக பொறுப்பேற்ற போது அவர் தொலைபேசி யில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை கார ணமாக எடுத்துப் பேசிய துண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ள வருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டியில் அரசியல் இருக்கிறது. தேர்தல் ஆதா யத்தைக் கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என் றார் அகமது பட்டேல். மோடி ஒரு பிரிவினைவாதி:

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmebCa1

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் கபீர் மடாலயத் தலைவர்

வாரணாசி, மே 3-பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி ஒரு பிரிவினை வாதி; வாரணாசியில் மோடி போட்டியிடுவதால், பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என்று கபீர் மடாலயத்தின் தலைவர் விவேக் தாஸ் ஆச்சார்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

புனித நகரான காசி பல் வேறு கலாச்சாரம், மதங் களின் சங்கமம் ஆகும். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு பிரிவினைவாதி. அவர் காசியின் பன்முக கலாச்சாரத்தைப் பிரதி பலிப்பவர் அல்ல, அதற்கு எதிரானவர்.

காசியில் பல நூற்றாண் டுகளாக இந்துக்களும் முஸ் லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மோடி போட்டியிடு வது வாய்ப்புக் கேடானது.

இங்கு போட்டியிடுவ தன் மூலம் பாஜகவும், மோடியும் அரசியல் ஆதா யம் தேட முயல்கின்றனர். மோடியின் பெயரில் போலி யான அலை உருவாக்கப் பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியின் தற்போதைய எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக் காக எதுவும் செய்யவில்லை. பாஜகவின் மூத்த தலை வர்களில் ஒருவரான ஜோஷியே எதுவும் செய் யாத நிலையில் மோடி யிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

நான் முற்றும் துறந்த துறவி தான். எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனினும் நாடு எதிர் கொள் ளும் முக்கியப் பிரச்சினை களில் மவுனமாக இருக்க முடியாது.

உலகின் அடையாளச் சின்னங்களில் காசியும் ஒன்றாகும். இந்த நகரைப் பாதுகாக்க அனைத்து தரப் பினரும் முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இந்த புனித நகரைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmloOyW

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டையும், ஆடை மாற்றமும்


அண்மையில், சமுதாய சிந்தனை என்ற சிற்றிதழில் (மார்ச் 2014) படித்த செய்தி இது:

மத்திய மேல் நிலைக் கல்வி வாரியம் (CBSE) 9ஆம் வகுப்பு வரலாறு பாட நூலில், சாதிச் சண்டையும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பில், குமரி மாவட்டத்தில் 1822 முதல் 1859 வரை நடந்த மேலாடைப் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு தந்திருந்தது. அதில் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ மிஷனரி களின் பணி சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொறுக்க இயலாத இந்து நாடார் அமைப்புகள், அதை நீக்க, இழிவு... இழிவு... எனக் கூச்சல் போட்டன. இது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குள்ள நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சல் போட்டதற்குச் சமமாக இருந்தது. உடனே நாடார்களை வளைத்தெடுக்கும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட களம் இறங்கின. பிற மாநில மாவட்ட நாடார் களும் வழக்கம்போல போராட்டத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்றம் விளக்கம் கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட புரோட்டஸ் டண்டு கிறிஸ்தவர்களின் புனிதமான விடுதலை வரலாற்றை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.ஈ.யைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்டது. இச்செயலுக்கு யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. காரணம், புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர் களுக்கு மானம், மரியாதை, உரிமை முதலியவைமீது அக்கறை இல்லை. பிழைப்பு, ஆசீர்வாதம் முதலியவை மீதுதான் கவலை.

பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சமுதாய சிந்தனை ஆசிரியரும் கன்னி யாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்ற நிறுவனரு மான டி. பீட்டர் அவர்களின் மேற்கண்ட கூற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடார்களைப்பற்றி சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் எழுதப்பட்டதை நீக்கக் கோரி களத்தில் இறங்கியவை இந்து நாடார் அமைப்புகள் அல்ல. நாடார் சங்கங்கள் தான் களத்தில் இறங்கின. அங்கே இந்து நாடார்களும் உண்டு; கிறித்தவ நாடார் களும் உண்டு.

சேர நாட்டு (திரு விதாங்கூர்) நாடார்கள் ஆதிகாலம் தொட்டே தீண்டத்தகாத - பார்க்கத் தகாத குலத்தவர்கள் அல்ல; அதுபோல மேலாடை அணியாதவர்களும் அல்ல. பாண்டிய நாட்டில் நாடாண்டவர்கள் நாடார் குலம் ஆனது போல, சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்தவர்கள் சான்றோர் குலத்தவர்கள் ஆனார்கள். இவர்களையே தென் திருவிதாங்கூரில் நாடார்கள் என்றனர்.

மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்த வர்கள் மக்கள் (மகன்கள்) வழி வாரிசு கொள்கையைக் கொண்டவர்கள். பிற் காலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மருமக்கள்(மருமகன்கள்) வழி யைக் கடைபிடித்தவர். இதை சேரமான் பெருமாள் மரபினர் எதிர்தததால்தான் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவால் அடக்கி ஒடுக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை புராட் டஸ்டண்டு கிறித்தவர்கள் ஆதரித்தார்கள். காரணம், அப்பொழுதுதான் அவர்கள் பிழைப்பை இங்கே நடத்த முடியும்.

மீட் பாதிரியாரால் கிறித்தவ மதத்தில் சேர்ந்த பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமைதான் கிடைத்தது. இதை அணிந்துகொண்டு பொது இடங்களில், தைரியமாக நடந்து செல்ல கிறித்தவ நாடார் பெண்களால் முடியவில்லை என்பதே உண்மை. நாடார் பெண்கள் பாண்டிய நாட்டுப் பெண்களைப் போல மேலாடை அணியவே விரும்பினார்கள். அதற்காக இந்து நாடார்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த விலை சாமானியமானதல்ல; அதைக் குறைவாக மதிப்பிட முடியாது. வைகுண்ட சுவாமி கள் என்று மக்களால் அன்புடன் அழைக் கப்படுகின்ற முத்துக்குட்டி தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களே திருவிதாங்கூரில் நாடார் பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக்கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுத்தன. நாத்திகரான முத்துக்குட்டியை இன்று கடவுளாக்கியதால் அவர் வரலாற்றின் பக்கங்களிலிருந்தே மறைந்து விட்டார்.

திருவிதாங்கூர் நாடார் பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதும் மீண்டு வந்ததுமான வரலாறு இதுதான். நாடார் கள் இழி நிலையிலிருந்து மீள முத்துக் குட்டி முதற்காரணம்; பிற்காலத்தில் நாடார்களை முழுமையாக உயர்த்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

திருவிதாங்கூர் நாடார்களின் உண் மையான நிலை இதுதான். மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இதைக் கவனத்தில் கொண்டு பாடநூலில் திருத்தம் செய்ய வேண்டும்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page2/79605.html#ixzz30hnDORTB

தமிழ் ஓவியா said...குடிஅரசுத் திரட்டு!

நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுப வத்தில், பிராமண தேசீயவாதிகளென் போரில் பெரும்பாலோர், தங்கள் சுய நலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற் றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்துக்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் சிறீமான் நாயக்கர்போன்றாரை உபயோ கப்படுத்திக் கொண்டு வந்திருக் கின்றார்களென்றும், நினைக்கும் படி யாகவே ஏற்பட்டுப்போய் விட்டது.

பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப் படுவதாய் காணப்படுகிறது.

####

குடிஅரசின் போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது.

அதாவது ஒவ்வொரு பட்டணங் களிலும் குடிஅரசுக்கு கவுரவ ஏஜெண் டுகள் முன்வர வேண்டும்.

அவர்கள் பத்திரிகையை தெருத் தெருவாய் விற்க வேண்டும்.
சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்ய வேண்டும்.

####

அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்?

சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரி யத்தை ஏன் செய்யவேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப் படியோ போகட்டும்.
நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்?
நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ்,கீர்த்தி, சம்பாதனையா?
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா?
ஒரு தலைவராவது உதவியுண்டா?
ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

####

குடிஅரசினால் தேசிய வாழ்வுக் காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டி ருப்பதும், புராண பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக் கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம்.

யார் பிராமணன்?

யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும் இருக்கிறவன் பிரா மணன் என்று சொல்லுவதும் மற்ற சமயங்களில் மான ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங் களையும் அதாவது கொலை, களவு, திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிச னைக்கும், தாசி தரிசனைக்கும் தரகு பெறு வதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை செய்வதும், இஷ்ட மில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத் தாவது உத்தியோகம் பெறுவதும்,

அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங் குவதம், தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்து வதும் தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல் தடுப் பதும்,

தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்துகொண்டு தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்காக கள்ளுக்கடை, வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில் தங் களுக்கு வேறு உரிமையும் மற்றவர் களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றது மான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம் என்று திரு. ஆச்சாரியார், கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

- தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page3/79608.html#ixzz30hnNCntq

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி துளசிதாசர்


அவர்களுக்கு அறிவு அதிகமாக இருப்பதில்லை; அவர்கள் கடுமையானவர்கள்; அவர்களிடம் மென்மையிருப்பதில்லை - என்று பெண்களைப்பற்றி துளசிதாசர் இப்படிக் கூறுகிறாரே! - என்பதற்காக நாம் அவரிடம் குறைபட்டுக் கொள்ளவில்லை. வாழையடி வாழையாக பாரத நாட்டு அறப்பாதையை வகுத்துவரும் எத்தனையோ பேர் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறி வந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்மிருதிகள் எழுதியவர்கள்; சிலர் சாது சந்தியாசிகள்; சிலர் உயர்குல ஆரியர்கள் - நாம் குறைபட்டுக் கொள்வதெல்லாம் முற்போக்கு என்ற சொல்லுக்கு இன்று தரப்படும் விளக்கத்திற்கு ஏற்ப துளசிதாசர் ஒரு முற்போக்குக் கவிதான்! என்று கூறி அத்தனை துறைகளிலும் அவருக்கு முற்போக்குகள் இதற்கு (இராமாயணத்திற்கு) தீ வைக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய செய்தி!

- இப்படி எழுதியிருக்கிறார் ஒரு இந்தி எழுத்தாளர்,

பதந்த் ஆனந்த கௌசல்யாயன். இராமாயணம் பற்றி பெரியாரும், அண்ணாவும் கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவைச் சிறுமைப்படுத்தக் கூடுமானால், சில எழுத்தாளர்கள் இராமாயணம் பற்றி கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடுமானால், இத்தகு கருத்துக்களை வெளியிட்டுள்ள புத்தமதத் துறவியை - இவர்கள் நாத்திகர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள் அல்லது பிற்போக்காளர் பட்டியலிலா?

எல்லா வகையான சூது - பாவம் - தீமை இவற்றின் சுரங்கம் பெண்ணின் உள்ளம் - துளசிதாசர் இராமாயணம் (அயோத்திகா காண்டம் 162-2)

- குயில் 2014 மார்ச் - ஏப்ரல் பக்கம் 16

Read more: http://viduthalai.in/page4/79611.html#ixzz30hnyRr3m

தமிழ் ஓவியா said...

மூளையின் அபாரத்திறன்


- டாக்டர் வி. நிகோலயேவ்

மூளையின் அபாரத் திறன்தான் என்ன என்பது பற்றி டாக்டர் வி. நிக் கோலயேவ் கூறுவதை இக்கட்டுரை விளக்குகிறது.

சோவியத் நாட்டில் மெலிக்கெஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த என்ஜினீயரான யூசெஃப் புரோகோத்கோ என்பவர் எந்த எண்ணின் இரு மடங்கு. மும்மடங்குப் பெருக்கலையும் மனக்கணக்காகவே, நொடிப்பொழுதில் செய்துமுடிக்க முடி கிறது என்று சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது 10,15, 20 இலக்கமுள்ள எண்களின் பெருக்குத் தொகையையும் அந்த மனிதர் சில வினாடிகளில் கூறிவிடுகிறார் என்றும் அச்செய்தியில் காணப்பட்டிருந்தது. மனித மூளையின் திறனுக்கு, அதில் மறைந் திருக்கும் ஆற்றலுக்கு, இது ஓர் உதாரண மாகும். மூளையின் புறணிப் பகுதி 1400 கோடி நரம்பு ஸெல்களைக் கொண்டது என்று விஞ்ஞான ரீதியாக நிலை நாட்டப்பட் டுள்ளது. என்றாலும்கூட அவ்வளவு நரம்பு ஸெல்களும் சேர்ந்து 2 அல்லது 5 மில்லி மீட்டர் அடுக்காகவே உள்ளது என்றால் அவை எவ்வளவு நுண்ணியவை என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். மூளையின் வெண்மைப் பகுதிதான் அது. மூளையின் அமைப்பையும் நன்கறிந்து, அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மின் னணுக் கணிதமானியொன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முற்பட்டபோது அந்த எந்திரத்தின் அளவு ஒரு பெரிய வீட ளவுக்குச் சென்று விட்டது.

உடலின் எல்லாக் கிரியைகளுக்கும் ஏற்ப அவற்றை இணைத்து பணியாற்று கிறது மூளை. நீங்களும், நானும் 150 ஆண்டு காலத்திற்கு வாழ்ந்த போதும்கூட, மூளை அமைப்பின் அடிப்படையாகத் திகழும் நரம்பு இணைப்புக்களில் பாதி யைக்கூட நாம் பயன்படுத்தியிருக்க மாட் டோம். அதனால்தான் நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட தொழில் துறை வரையறைக் குள் அடக்கிக் கொள்ளக் கூடாது. நமது மூளையின் பரந்து விரிந்த திறனை கூடிய அளவு அதிகமாகப் பயன்படுத்த முற்பட வேண்டும். நமது நினைவாற்றலுக்குப் பயிற்சி யளித்து, கலை, விளையாட்டு, சமூகப் பணி ஆகிய பல்வேறு துறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடும்போது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு ஓஹோ என்று புகழ் வரலாம். அல்லத வராமலும் இருக்க லாம். அப்படி வராவிடில் அது கண்டு நீங்கள் ஏமாற்றமடைவதும் சரியல்ல. ஏனெனில் பல்வேறு துறைகளிலும் நீங்கள் உங்கள் ஆற்றலையும், திறனையும் வளர்த்துக் கொண்டால், நீங்கள் பிரதான மாக ஈடுபட்டுள்ள உங்கள் வேலையைச் சிறப்பாக உங்களால் ஆற்ற முடியும்.

தமிழ் ஓவியா said...


மூளை வேலையின் நம்பகத் தன்மை யும், இழப்பிற்கு ஈடு செய்யும் அதன் திறனும் நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக் குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது; புகழ் பெற்ற பாக்டீரிய இயலாளரான லூயி பாய்ட்சருக்கு 46ஆவது வயதில் மூளை யின் வலது கோளத்தில் இரத்தப் பெருக்கு கண்டது. அதிலிருந்து சிகிச்சை பெற்று மீண்ட அவர் தொடர்ந்து தனது விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்ட தோடு 73 வயது வரை வாழ்ந்தார். நோய் கண்டு குணமடைந்த பின்னர் உள்ள அவரது வாழ்வுக் காலம் தான் மிகப் பயனுள்ள காலமாகவிருந்தது. அந்தக் கால கட்டத்தில் தான் அவர் வெறிநாய் கடிக்கான வாக்ஸீன் மருந்தைக் கண்டு பிடித்தார். அவர் இறந்த பின்னர், அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அவர் இறப்பதற்கு 27 ஆண்டு களுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு நோயின் விளைவாக, அந்த விஞ்ஞானியின் வலது பக்க மூளை முழுவதுமே நசித்திருந்த தாகத் தெரிய வந்தது. ஆகவே, அவர் இறப்பதற்குமுன் 27 ஆண்டு காலமாக, மூளையின் வலது புறம் செய்திருக்க வேண்டிய அத்தனை பணிகளையும் இடதுபுறமே மேற் கொண்டு செய்து வந்துள்ளது என்பது புலனாயிற்று. தனியாக எடுத்துக் கொண்டால், மூளை யின் அடிப்படை அலகான நரம்பு ஸெல் அல்லது நியூரான் என்பது ஒரு மின்காந்த அஞ்சல் கருவியையோ, ஒரு ரேடியோ வால்வையோ அல்லது ஒரு ஒலி பரப்புக் கருவியையோ விட நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்பது உண்மை தான். ஆனால், மேற்சொன்ன தொழில் நுட்பக் கருவிகள், பழுதுபட்டு விடலாம்; அதன் காரணமாக அவற்றின் வேலை நின்று விடுகிறது. மூளையின் கூறுகளோ, எவை யேனும் பழுதுபட்ட போதிலும்கூட, பல லட்சம் நியூரான்கள் சேதமடைந்த போதுங் கூட, நரம்பு அமைப்புகளின் முழுப் பகுதியே சிதைவடைந்த போதும்கூட, மொத்தத்தில் வேலை செய்யும் ஆற்றலை இழப்பதில்லை. அதனால்தான், ஏதேனும் விபத்துக்களின் விளைவாக பார்வை யையோ, பேச்சையோ இழந்தவர் சில வேளைகளில் மீண்டும் அவற்றைப் பெற்று விடுகின்றனர்.

தங்களுக்குச் சாதாரணமாக உள்ள வேலைகளைக் காட்டிலும், பெருமளவு அதிகப்படியான வேலை செய்யும் ஆற்றல் நரம்புக் கேந்திரங்களுக்கு உண்டு. உதாரணமாக, இருதய வேலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி, மெல்ல மெல்ல உறுப்புக்களின் இயக்கத் தையும் கட்டுப்படுத்தத் தொடங்கலாம்; அதே போன்று பிற உறுப்புக்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் கேந்திரம் இருதயம், இரைப்பை ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கூடும்.

வற்றாத ஆற்றல் நிறைந்த மனித மூளை உண்மையிலேயே ஓர் அற்புதப் பொரு ளாகும்.

Read more: http://viduthalai.in/page8/79618.html#ixzz30hp6qIhw

தமிழ் ஓவியா said...


எய்ம்ஸ் நிறுவனம் இடஒதுக்கீட்டைப் புறக்கணிப்பதா? போராட்டத்தில் குதித்தனர் மருத்துவர்கள், மாணவர்கள்


டில்லி.மே4- எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் எய்ம்ஸ் நிறுவனத்தில் பணிநியம னத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற மறுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத் தில் குதித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிவிய லாளர்கள் முன்னேற்ற அமைப்பு, உரிமைகள் மற் றும் சமத்துவத்துக்கான அமைப்புடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது. போராட் டத்தின் நிறைவாக இருநபர் குழு போராட்ட நோக்கங் கள் மற்றும் தீர்மானங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கி, இந்த விவகாரத் தில் புதிதாக அமையக்கூடிய அரசுடன் சேர்ந்து நட வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாண வர்கள், வர்தமான் மகாவீர் மருத்துவக்கல்லூரி மாண வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். எய்ம்ஸ் கல்லூரி சார்பில் மருத்துவர் எல்.ஆர்.மூர்மு, ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர் விகாஸ் பாஜ்பாய், மவ் லானா ஆசாத் மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத் துவர் பி.ரத்தோர் ஆகியோர் போராட்ட நோக்கங்களை விளக்கி உரை ஆற்றினார்கள்.

உரையில், இட ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத் துவதில், விதிமுறைகளை கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத்தழுவியுள்ளோம் என்றனர். மேலும், சிறிய அளவில் சாலைவிதிகளைப் பின்பற்றாதவர்கள்மீதுகூட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், அதைவிட அதிகப்படியான குற்றமாக, அரசியலமைப்பு வழங் கியுள்ள அம்சங்களையே மீறக்கூடியவை தண்டிக்கப் படாமல் போகிறதே என் றும் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

தீர்மானத்தில், நாங்கள் சுகாதாரத்துறை, தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி,எஸ்டி) தேசிய ஆணை யம், இதர பிற்படுத்தப்பட் டவர் நலன்களுக்கான தேசிய ஆணையம், நாடாளு மன்றக் குழு ஆகிய அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களி டம் மனுக்கள் கொடுத்துள் ளோம்.

அரசியலமைப்பு வழங்கும் இதர பிற்படுத் தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் ஆகியோருக்கு பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை வழங் காமல் இருப்பதை விளக் கமாகச் சுட்டிக்காட்டியது டன், இடஒதுக்கீடுக் கொள் கையை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத் துரைத்தோம். மேலும், இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டோம் -இவ்வாறு போராட்டத் தீர் மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79716.html#ixzz30nEXApTD

தமிழ் ஓவியா said...


பாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு


டில்லி, மே 4- பாரதீய ஜனதா கட்சியில் மோடி என்ற ஒற்றை மனிதரின் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அக் கட்சியில் இருந்து 2ஆவது முறை யாக நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா வின் வேட்பாளராக ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித் திருந்தார். தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் தமது சொந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்.

ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த்சிங், வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவில் ஒரு நபர் ராஜ்ஜியம் நடந்தது.

ஆனால் தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து மோடி அலை எதுவும் வீசவில்லை. நான் மத்தியில் அமையப் போகும் எந்த அரசையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பொறுத்து நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுப்பேன். இவ்வாறு ஜஸ்வந்த்சிங் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79711.html#ixzz30nEro4sE

தமிழ் ஓவியா said...


நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்வு நக்கீரன் இதழுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


செய்தியாளர்: தேர்தல் பிரச்சார பயணத்தில் உங் களை நெகிழ வைத்த சம்பவம்?

மு.க.ஸ்டாலின்: நிறைய இருக்குது. என் வாகனத்துக்கு முன் னாடி இளைஞர்கள் பைக்கில் வேகமாகப் போய்க்கொண்டே பிரச் சாரம் செய்தாங்க. கையில கொடியைப் பிடிச்சிருப்பாங்க. அந்தக் கொடி கீழே விழுந்திடக் கூடாதுன்னு கவனமும் இருக்கும். அதேநேரத்தில் பைக்கும் வேகமாகப்போகும்.

அதைப் பார்க்கும்போது, எனக்கு பதற்றமா இருக்கும். ஜாக்கிரதையா பைக் ஓட்டுங்கன்னு சொல்லுவேன். அவங்க அதைக் கேட்டுக்கிட்டாலும், வெற்றி பெறணும்ங்கிற வேகத்தை பைக்கில் காட்டுவாங்க. எனக்கு வெற் றியைவிட அவங்களோட உயிரும் உடல்நலனும் தான் முக்கியமா தெரியும்.

அதேமாதிரி இன்னொரு நெகிழ்ச்சியான சம்ப வம். பெரம்பலூர் தொகுதிக்குள் வரும் பாடலூரில் விஜய்னு ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர். பேஸ்புக்கில் தீவிரமாச் செயல்படக் கூடிய தி.மு.க. தொண்டர். சென்னையில் பேஸ்புக் தி.மு.க. இளை ஞர்களை நேரில் சந்திச்சப்ப ஒரு தொண்டர், அந்த விஜய் பற்றி சொன்னார். உடனே போன் போடச் சொல்லி அவர்கிட்டே பேசினேன்.

பிரச்சாரத்திற்கு வரும்போது உங்களைப் பார்க்கிறேன்னு சொன் னேன். அதேபோல பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்றப்ப, பாடலூர்னு பெயர் பார்த் ததும் அவர் ஞாபகம் வந்தது.

பிரச்சாரம் முடிந்த பிறகு இரவு 10 மணிக்குமேல பாடலூர் போய் அவரோட எளிமையான வீட்டில் சந்தித்தேன். சக்கரநாற்காலியில் இருந்த அந்தத் தம்பிக்கும், அவரோட குடும்பத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி. எனக்கோ, இந்தநிலையிலும் ஒரு மொபைல் போனை வச்சிக்கிட்டு கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறாரே, நான் உள்பட கழகத் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்கணும்ங் கிற எண்ணம்வந்தது.

அவர்கிட்டே, நாம எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம்னு நினைக்கிறீங்கன்னு கேட்டேன். நாற்பது தொகுதியும் ஜெயிப்போம்ண் ணேன்னு நம்பிக்கையோடு சொன்னார். இந்த நம்பிக்கையை என்னுடைய பிரச்சாரம் நெடுகிலும் பெற முடிந்தது.

இவ்வாறு `நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79674.html#ixzz30nGKcV5h

தமிழ் ஓவியா said...


குற்றத்தை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ஆ.இராசா


புதுடில்லி, மே 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். காவல்துறையின ரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச் சர் ஆ.இராசா தற்போது பிணையில் உள்ளார். நாடா ளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டில்லி யில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்தி ருப்பதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளி யாகி இருந்தது. அன்றே நான் நீதிபதியை சந்தித்து அந்த பத்திரிகைச் செய் தியை அவரிடம் காட்டி னேன்.

வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ டெபாசிட் செய்யப்பட்டி ருப்பதை சி.பி.அய். கண்டு பிடித்தால் நான் இந்த வழக்கை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்கி றேன். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்.

இதை வருமான வரித் துறைக்கும், மத்திய அம லாக்கப் பிரிவு இயக்குநர கத்துக்கும், சி.பி.அய்.க்கும் சவாலாக விடுக்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/79679.html#ixzz30nGnGdp4

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...


தேவதாசி முறையை எதிர்த்துப் போராடி அறவே ஒழிப்பேன்

துணிவுடன் திருமணம் செய்து கொண்ட பெண் சூளுரை

ஹூப்ளி.மே5- கர்நாடகா மாநிலத்தில் ஹூப்ளி வட்டத்தில் தேவ தாசியாக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்புகளுக்கிடையே துணிச்சலாக திருமணம் செய்து கொண்ட தோடு, தேவதாசி முறையை எதிர்த் துப் போராடி அறவே ஒழிப்பேன் என்று சூளூ ரையை ஏற்றுள்ளார். எச்.சுமங்களா (வயது 35) எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய தாயாராலாயே வற்புறுத்தப் பட்டு தேவதாசியாக ஆக் கப்பட்டார்.

இருப்பினும் ஏழு ஆண்டுகளாக வேணு என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். வேணுவின் தொடர்பால் சுமங்களாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெண்களுக்கான மாநில அரசின் பாக்கிய லட்சுமி என்னும் உதவித் திட்டத்தில் தன்னுடைய மகளை சேர்க்கும்போது தந்தையின் பெயரைக் குறிப் பிடுமாறு கேட்டுள்ளனர்.

திருமணத்துக்கு முன் பாக வேணுவுடன் ஏற் பட்ட உறவில் குழந்தை கள் பிறந்துள்ளதால், குழந் தைகளின் எதிர்காலத்தை யும் கருத்தில்கொண்டு வேணுவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். தற்போது, தன் தாயார் உட்பட பலரையும் எதிர்த்து, கடந்த 3-5-2014 அன்று பெல்லாரி மாவட்டத்தில் மாளவி கிராமத்தில் கூலி வேலை செய்துவரும் வேணு என்கிற எம்.வேணுகோ பால் என்பவருடன் திரு மணம் செய்து கொண்டு இல்லறத்தில் இணைந் துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தேவதாசிகளாக தள்ளப் பட்டு, வாழ்வில் பல கொடுமைகளை சந்திக்கும் பெண்களின் மறுவாழ்வுக் காக தேவதாசி மகிளேயரா விமோச்சனா கர்நாடகா என்கிற தொண்டு நிறுவ னம் செயல்பட்டுவரு கிறது. அந்த நிறுவனத்தின் தலைவர் பி.பாலம்மாவின் உதவியுடன் சுமங்களாவின் திருமணம் ஹகாரிபொம் மனஹள்ளி பகுதியில் உள்ள அம்பேத்கர் பவனில் எளி மையாக நடைபெற்றது. வாழ்வில் பல தடங்களில் பயணிக்கும் ஏராளமான வர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

சுமங்களாவின் வீட் டுக்கு வேணு செல்லும் போது, கிராமத்தினர், உற வினர்கள் மற்றும் நண்பர் களின் எதிர்ப்பை எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப்போது, எங்களுடைய உறவு தற்போது அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. என் வீட்டாரும், அவளு டனே இருந்துகொள் என்று கூறி என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட் டார்கள். நானும் சுமங் களாவை ஆழமாக நேசிப் பதால், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது ஒப்புக்கொண்டேன் என்று விளக்கி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, அரசு எங்களுக்கு எங்கள் கிராமத்திலேயே வாழ்வதற்கு சிறிய அளவில் இடம் கொடுத்தால் ஒரு குடிசை போட்டுக்கொண்டு என் மனைவி குழந்தை களோடு வாழ்வேன் என்று வேணு கூறுகிறார்.

தேவதாசி விமோச்சனா அமைப்பின் தலைவர் பி.பாலம்மா கூறும்போது, திருமணமுறையில் நம் பிக்கை ஏற்பட்டபின் சுமங் களாவின் ஒப்புதலின் பேரில், திருமணத்துக்கு வேண்டியவற்றை செய்து கொடுத்தோம் என்றார்.

கர்நாடகா மாநிலத்தில் தேவதாசி முறை தடை செய்யப்பட்டிருந்தாலும், 1982ஆம் ஆண்டு தேவதாசி முறை தடை சட்டம் அம லில் இருந்தாலும், மாநி லத்தின் பல்வேறு பகுதி களிலும் பழைமைவாதி களால் தொடர்ந்து பின் பற்றப்பட்டுவருகிறது.

திருமணத்துக்குப்பின்னர் சுமங்களா கூறும்போது: நான் தேவதாசி என்னும் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. நடத் தைக்குறைவான தேவதாசி முறையை எதிர்த்துப் போரா டுவேன். நன்மதிப்பைக் கெடுக்கும் இந்த முறையை அறவே ஒழிப்பதற்கும், என்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் எதிர் காலத்தை பாதுகாக்கவும் என்னை ஒப்படைத்துக் கொள்வேன் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79748.html#ixzz30tPtxfeh

தமிழ் ஓவியா said...


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு
எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி

அமேதி, மே 5- பிரமாண்ட கட்-அவுட், போஸ்டர் கள் அடித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதற்கு பாஜ கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சொந்த தொகுதியான அமேதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: இரண்டு, மூன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் ஏராளமான பணத்துக் காகத் தான் பாஜ அரசியல் செய்கிறது. அப்படியில்லை என்றால், பல கோடி செலவு செய்து பெரிய பெரிய கட் அவுட் வைப்பதற்கும், நாடு முழுவதும் போஸ்டர் அடிப் பதற்கும் அவர்கள் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என் பதை சொல்வார்களா? இதெல்லாம் என்ன மோடியின் பணமா?

குஜராத்தில் மோடி ஒரே ஒரு தொழில் நிறுவனத்துக்கு ரூ.26,000 கோடி மின்சாரத்தையும், ரூ.15,00 கோடி நிலத் தையும் வழங்கியிருக்கிறது. நான் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரி கிடையாது. ஆனால், அவர்கள் தங் களுக்கான வசதிகளை விதிமுறைப்படியும் நேர்மையாகவும் பெற வேண்டும். குஜராத்தில் அதானி மட்டுமே ஆதாயமடைந்துள்ளார். ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மோடியின் சில போஸ்டர்களில் அவரது ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என கூறியிருக் கிறார்கள். பெண்களுக்கு ஏற்கெனவே அதிகாரம் உண்டு. அவர்களுக்கு முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பின் பெண்களே அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம்

கொல்கத்தா, மே 5- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி யுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வடக்கு கொல்கத்தாவில் நடை பெற்ற பிரச் சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித் துள்ளார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசிய தாவது: மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வங்கத்தில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். வங்கத்தில் வசிக்கும் உ.பி. மற்றும் பிகார் மாநில மக்கள் இம் மாநிலத்தின் ஒரு அங்கமாக தான் கருதப்பட்டு வருகின் றனர். அரசிய லுக்காக மக்களை நாங்கள் பிரிக்க மாட் டோம். மதம் மற்றும் ஜாதி பற்றிய நம்பிக்கை கொள்ள லாமல் மக்களை பற்றி மட்டுமே தாங்கள் கவலைப் படுகின்றோம். இனி எக்காலத்திலும், என்றும் பா.ஜ.க. வுடன் கூட்டணி சேரமாட்டோம் என மம்தா கூறினார்.

மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ்

சான்ட் கபீர் நகர், மே 5- 56 அங்குலம் (இஞ்ச்) மார்பள வுடைய மோடியை கட்டுப் படுத்த எங்கள் கட்சி யில் பல பயில்வான்கள் உள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

கலிலாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:- 56 அங்குலம் மார்பள வுடன் சுற்றும் மோடியை கட்டுப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்களால் மட்டுமே முடியும். அவரை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட குஜராத்தில் நலத்திட்டங்கள் இல்லை. குஜராத்தில் வசதிகள் குறைவு. மோடி அலை என்பது வெறும் காற்றுதான். குஜராத் முன்மாதிரி என்று பொய்யான தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அலை மட்டுமே தரையில் வீசுகிறது. மோடி அலை என்பது வானத்தில் மட்டும்தான். தேர்தலுக்குப் பிறகு முலாயம் சிங் தலைமையிலான 3-ஆவது அணி ஆட்சி அமைக்கும்.

மதவாதியாக இருப்பது எளிது. ஆனால் மதச்சார்பற்று இருப்பது மிகவும் கடினம். சமாஜ்வாடி அரசு கிராமங் கள், ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக அடிமட்ட அளவில் பாடுபடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். குஜராத் போன்று பிரகாசமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை மாற்ற 56 அங்குலம் மார்பளவு கொண்ட நபர் தேவை என்று கடந்த மாதம் தேர்தல் பிரச் சாரத்தில் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/79753.html#ixzz30tQ3V8pC

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்ற அரசின் லட்சணம் இதுதானா?


காவல்துறை பாதுகாப்புடன் அய்தராபாத் பகுதியில் ரூ.நூறு கோடியில் கோயிலாம்!

அய்தராபாத்.மே5- அரே கிருஷ்ணா இயக்கம் (HKM), , பெங்களூருவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வ தேச கிருஷ்ண ஞான சங்கம் (International Society for Krishna Conciousness ISKCON) ஆகிய அமைப் புகள் இணைந்து இலட் சுமி நரசிம்மன் கோவில் என்கிற பெயரில் கோவில் அமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளதாம். இந்தக் கோவில் அமைக்கும் பணிக்கு ஆந்திர அரசு 4.38 ஏக்கர் நிலத்தை அளித்துள் ளதாம். கடந்த 2012ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர தொழில்துறை அமைச்சர் தனம் நாகேந்தர் இந்த கோவிலுக்கு அடிக் கல் நாட்டு விழாவில் அடிக் கல் நாட்டிவைத்தாராம். ஆனாலும், அவருடைய ஆதரவாளர்கள் கிருஷ் ணாஷ்டமி விழாவைக் கொண்டாட தடைபோட்டு அந்தக் கோவில் வளாகத் தின் வாசற்கதவுகளைப் பூட்டுப்போட்டு மூடி வைத்தனராம்.

இதைத் தொடர்ந்து அரே கிருஷ்ணா அமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்து, தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் துறை யின் பாதுகாப்புடன் சுமார் ரூ.நூறு கோடி மதிப்பிலான கோவில் கட்ட உள்ளதாம்.

கோவில் கட்டுமானப் பணிகளில் கோவில் வளா கத்தினுள் கலைகளை வளர்ப்பதற்கு நரசிம்ம லீலை, நரசிம்ம கலாஷேத் திரா அல்லது திறந்த வெளி திரை அரங்கு மற்றும் வேத சம்ஸ்கார அரங்கு ஆகி யவை அடங்குகிறதாம்.

அரே கிருஷ்ணா அமைப் பைச் சேர்ந்த கவுர சந்திர தாசா கூறும்போது: - அட்சய திருதியையில் கோவில் அமைக்கும் பணியைத் தொடங்கி உள் ளோம். இலட்சுமி நரசிம் மாவுக்காக 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக அரசு வழங்கி உள்ளது என்றார்.

பஞ்சாரா மலைப்பகுதி யில் இலட்சுமி நரசிம்ம சாமி கோவில் வளாகத்தில் கோவில் வளாகம், கலாச்சார மய்யம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற அரசின் யோக்கியதை எப்படி இருக் கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/79750.html#ixzz30tQCb0Gq

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் தூக்கிய போர்க் கொடி!


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு முக்கியமான போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில், விதிமுறைகளைக் கையாளுவதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத் தழுவி யுள்ளோம். சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால்கூட சட்ட ரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள் பவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? என்ற நியாயமான வினாவை எழுப்பியுள் ளனர் - போராட்டக் குழுவினர். இது குறித்து அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது.

சுகாதாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், நாடாளுமன்ற நிலைக் குழு ஆகிய அனைத்து அதிகார பூர்வ அமைப்புகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணி நியமனங் களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியதுடன் இடஒதுக்கீட்டை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

மேலும் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக சட்டரீதியாக ஆக்கப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் நிறுவனம் இப்படி திமிரடியாக - சட்ட விரோதமாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல!

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் சரி, அதன்பின் கல்வியிலும் இடஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்ட கால கட்டத்திலும் சரி, எய்ம்ஸில் படித்துக் கொண்டிருந்த உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்களும், பேராசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு.

என்ன கொடுமை என்றால், அந்தச் சட்ட விரோத போராட்டத்திற்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் அனைத்துப் பொருள்களையும், (மின்சாரம் உட்பட) பயன்படுத்திக் கொண்டனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளையும்கூட அவர்கள் கவனிக்கத் தயாராக இல்லாத குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பது வெட்கக் கேடானதாகும்!

மருத்துவ சோதனையின் போது 49 குழந்தைகள் இறந்தன எனக் குற்றச்சாற்று எழுந்ததுண்டு.

அவர்கள் பணி செய்யாத அந்த வேலை நிறுத்தக் கால கட்டத்திற்கு சம்பளத்தை நிறுத்தியபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று சகாயமான ஆணையை பெற்றுக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரியது.

ஒரு கால கட்டத்தில் இவர்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால். இவர் பிஜேபி ஆட்சியில் 5 ஆண்டு காலம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டவர் (3.7.2003 - 3.7.2008).

2007 நவம்பர் 28 இல் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கான ஓய்வு வயது 65 என்று சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் வேணுகோபால். இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக இயக்குநர் வேணுகோபால் செயல்பட்டது பற்றியெல் லாம் எடுத்துக் கூறப்பட்டது. பார்ப்பனர் வேணுகோ பாலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர் பி.ஜே.பி. பார்ப்பனரான அருண்ஜெட்லி. (இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது!)
எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டனர் இழிவுபடுத்தப்பட்டனர்.

தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குமுறினர் என்றால், அங்கு நிலவிய சமூக அநீதியின் கொடுங்கோன்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே!

அனில்குமார் மீனா, பால் முகுந்த்பார்தி, வினேஷ் மோகன் காவ்லே ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது!

ஆட்சியதிகாரம் யார் கைகளில் இருந்தாலும் நிருவாக இயந்திரம் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கைகளில் இருந்தால் இந்த நிலைதான் நீடிக்கும் என்பது வெளிப்படை.

மத்திய தேர்வாணையமே இடஒதுக்கீடு வழங்கு வதில் குளறுபடிகள் செய்யவில்லையா? திறந்த போட் டிக்கான இடங்களைமுதலில் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களை அவர் களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதானே சட்ட ரீதியான நிலைப்பாடு!

இதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, திறந்த போட்டியென்றாலே இடஒதுக்கீடே இல்லாத உயர் ஜாதியினருக்கு என்று ஆக்கிச் செயல்படுத்த வில்லையா?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் இப்படி சட்ட விரோதமாக நடக்கும் பொழுது, பெரும்பான் மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சட்டப்படியான உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடிட என்ன தயக்கம்?

டில்லியில் எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் சமூக நீதி உரிமைக்காக வீதிக்கு வந்து விட்டனர். இது நாடெங்கும் பரவட்டும்! பரவட்டும்!!

Read more: http://viduthalai.in/page-2/79744.html#ixzz30tQWAVo7

தமிழ் ஓவியா said...


நடவடிக்கைபார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய் வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. - (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/79742.html#ixzz30tQe2iCt

தமிழ் ஓவியா said...


அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!


குழந்தைகள் பழகு முகாம் - 2014 தொடக்கம்

அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளிடம் பேச்சு!


தஞ்சை, மே 5- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமின் தொடக்கவிழாவில் சொந்தமாக சிந்திக்க கற்றுத் தரப் போகிறோம் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.

குவிந்தனர் மழலைப் பட்டாளங்கள்!

நான்காவது ஆண்டாக நடைபெறும் பழகு முகாமில் மொத்தமாக 209 பெரியார் பிஞ்சுகள் குவிந்துவிட்டனர். 150-க்குள் திட்டவட்டமாக சுருக்கிவிட வேண்டுமென்று பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சி செய்தும் பெரியார் பிஞ்சுகளின் அளவு கடந்த ஆர்வத்தால் இலக்கை விஞ்சினர்.

இதில் 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் A-(ADOLESCENT) என்றும் மற்றவர்கள் K-பிரிவு (KIDS) எனவும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டிலும் 15 பேர் கொண்ட உட் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர் (VOLUNTEERS) நியமிக்கப்பட்டனர். 13-வயதுக்கு மேற்பட்டோரில் பெண் கள் 35, ஆண்கள் 38 ஆக 73 பேரும், குழந்தைகள் பிரிவில் பெண்கள் 53, ஆண்கள் 83 ஆக 136 பேருமாக மொத்தம் 209 பேர் ஆவர்.

சிட்டுக்குருவிகளுடன் நடைப்பயிற்சி

பதிவுகள், குருதிப் பரிசோதனை முதலியவை முடிந்த பிறகு சென்னை அரங்கநாதன் விடுதியிலிருந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் பெரியார் பிஞ்சுகளின் நடைப்பயிற்சி தொடங்கியது.

வெயிலுக்கு குடை பிடித்த மழை மேகங்கள்

பெற்றோர்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாகி நின்ற பெரியார் பிஞ்சுகளுக்கு இயற்கையும் அருமையாக ஒத்துழைத்தது. சுளீரென்று அடிக்க வேண்டிய வெயிலை தடுக்கும் விதமாக கருநிற மேகங்கள் குடையாக பரந்து விரிந்து சுற்றுச்சூழலையே சில்லென்று மாற்றிவிட பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் சிறகடித்தனர்.

தொடக்க விழா

காலை உணவுக்குப்பிறகு சிக்மண்ட் ஃபிராய்டு அரங் கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. பவர் அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோவிந்தராஜி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்திப் பேசினார். திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் நன்றி கூறி தொடக்க விழாவை நிறைவு செய்தார்.

சிந்திக்க கற்றுத் தருகிறோம்

முன்னதாக தொடக்கவிழாவில் பேசிய பேராசிரியர் பர்வின் இந்த பழகு முகாமானது எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள் கிறோம் என்று குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தங்களை நம்பி ஒப்படைத்ததற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பிஞ்சுகளிடம் கலகலப்பாக உரையாடினார். அப்பொழுது தான் புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப்படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும், அவரைப்போல, ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போல, பழகு முகாமின் ஆறு நாட்களும் நாங்கள் உங்களுக்கு சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல்படி தொடர்ந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் கல்வி வளாகங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/79738.html#ixzz30tRfLFx4

தமிழ் ஓவியா said...

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தி லான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட் டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலி பிளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மை யாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும். ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.

மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSMLCdn

தமிழ் ஓவியா said...


கோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு...

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.

இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற் போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.

தர்பூசணி: தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.

அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்ற வற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும். கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை சாறு: திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSTPE3U