Search This Blog

3.5.14

சிலப்பதிகாரமா? பார்ப்பன அதிகாரமா?

சிலப்பதிகாரமா? பார்ப்பன அதிகாரமா?(சிலப்பதிகாரம் தான்முதன் முதல் தமிழ் காப்பியம் என்று தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் சில தமிழர்களைப் பார்க்கிறோம். சிலப்பதி காரத்தில் படமெடுத்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை இவர்கள் அறியாதவர்களா? இதோ பார்ப்பன ஆதிக்கப் பட்டியல்)

1. மாங்காட்டு மறையவன் என்ற ஊர் சுற்றிப் பார்ப்பனனுக்கு இளங்கோ வடிகள் அள்ளிச் சொரியும் அடை மொழிகள் மாமறையாளன் தீத்திறம் புரிந்தோன் நலம்புரி கொள்கை நான் மறையாளன்

2) தலைச்செங்கானத்துப் பார்ப்பானை இளங்கோவடிகள், அருமறை முதல்வன் குறையாக் கல்வி மாடலன் என்கிறார்.

3) மாதவி வீட்டுக்குப் பிச்சை வாங்கவந்த கிழட்டுப் பார்ப்பானையும் ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் என்று அறிவின் உச்சியிலே அமர்த்துகிறார் இளங்கோவடிகள்.

4) கார்த்திகை கணவன் பார்த்திகன் முன்னர்-இருநில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி-அவள் தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே என்று பாண்டிய மன்னன் ஒருவனைப் பார்ப்பான் ஒருவன் காலடியில் சாஷ்டாங்கமாக விழ வைக் கிறாரே இளங்கோவடிகள்.

5) வடபுலம் நோக்கிப் படைகொண்டு செல்லும் செங்குட்டுவன் நீலகிரியில் பாசறை அமைத்துத் தங்கியிருந்தபோது பார்ப்பனப் பரதேசிக் கும்பல் ஒன்று வடதிசையில் உள்ள அந்தணர்களுக்கு தீங்கு ஏதும் நேரக்கூடாது என்று கோருகிறது. அந்தக் கோரிக்கையை தப் பாமல் நிறைவேற்றுகிறான் செங்குட் டுவன் வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் - தடவுத்தீ அவியாத் தண் பெருவாழ்க்கை-காற்றூதாளரைப் போற்றிக் காமின் என்பது நமக்கு எத்தனை பெரிய அவமான ச்சின்னம்,

பூணூல் பெருச்சாளிகளின் புளகாங்கிதம்.

6) கண்ணகி சிலையை கங்கையில் நீராட்டியது யார் தெரியுமா? பூணூல் பெருச்சாளிகள் தாம்.

பால்படுமரபின் பத்தினிக் கடவுளை - நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து...

7) வடபுலப் போரிலே வாகைசூடிய வீரர்களுக்கு வெறும் வாகை மலர் தரு கிறார் செங்குட்டுவன் ஆனால் மாடலன் என்ற பார்ப்பானுக்கு மட்டும் எடைக்கு எடை தங்கம் தருகிறான். இவன் செய்த வீரசாகசம் என்ன தெரியுமா? கைதியாக இருந்த ஆரிய அரசர்களையும், வீரர்களை யும் விடுதலை செய்தது தான்.

8) வீரம்செறிந்த செங்குட்டுவனின் போர்க்குணத்தை மாற்றி அவனை வேள்வி செய்யும்படி தூண்டியவனும் இதே பார்ப்பான் தான். நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்-அரு முறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய பெருநல்-வேள்வி நீ செயல்வேண்டும் என்கிறான். விளைவு? சிறையிலிருந்த ஆரியர்களுக்கு மாளிகை வாச சுகபோகம் கிட்டுகிறது.

9) மணிமேகலையின் பெயர் சூட்டு விழா நாளில் கூன் பார்ப்பான் ஒருவனை யானையிடமிருந்து கோவலன் காப்பாற் றியதனால் தான் அவனுக்கு விண்ணுலகம் கிடைக்கிறது என்று கூறி செங்குட்டு வனையும் பார்ப்பனர்கட்கு தான் வழங்கவும்வேள்வி செய்யவும் தூண்டுகிறான் இதே மாடலன்.

10) கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனத்தியின் கர்மத்தைத் தொலைக்க பெரும்பொருள் கொடுத்தானாம் கோவலன்! வேறு வேலை இல்லையா அவனுக்கு?

11) மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் புரிந்து ரோகினி நட்சத்திரத்தில் வேத விதிப்படி புரோகிதத் திருமணம் செய்து கொண்ட பார்ப்பன அடிமை அல்லவா கோவலன்!

சிலப்பதிகாரத்தில் இராமாயணப் பிரச்சாரம்

12. கோவலனும் கண்ணகியும் பூங் புகாரை விட்டுப்புறப்பட்டு மதுரைக்குச் சென்றபின்னர் பூம்புகார் இராமன் பிரிந்த பின்னிருந்த அயோத்தி போல இருந்த ததாம்! நெஞ்சையள்ளும் சிலப்பதி காரத்தில் நெஞ்சைப்பிளக்கும் இராமாயணப் பிரச்சாரம்!

13. மாங்காட்டு மறையவன் திரு வேங்கடத்திலே திருமால் நின்ற வண்ணத் தையும், திருவரங்கத்திலே கிடந்த வண்ணத்தையும் பற்றி அளக்கும் அளப்பு! பார்ப்பனப்பக்திப் புராணங்கள் கெட் டது! இவை தவிர புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் பொய்கைத்தீர்த்தங்கள் பற்றிய புளுகு மூட்டைகள் தமிழ் இனத்தையே பார்ப் பனர்களுக்கு அடகு வைக்கும் போக் கல்லவா?

தமிழர்களே! இனி நீங்களே தீர்ப்புக் கூறுங்கள், சிலப்பதிகாரம் தமிழ் இனத் தின் சிலப்பதிகாரமா? அல்லது பார்ப்பன அதிகாரமா?

                      -----------------------"விடுதலை” ஞாயிறுமலர் 03-05-2014
Read more: http://viduthalai.in/page2/79606.html#ixzz30eD39gDe

46 comments:

தமிழ் ஓவியா said...


புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி பகுத்தறிவாளர்களின் எதிர்ப்பால் நின்றது


மங்களூர், மே 3- நிம்ஹான்ஸ் என்கிறஅரசு உதவி பெறும் நிறுவன அரங்கத்தில் சிலர் ஏற்பாடு செய்திருந்த புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூர்பகுதி பகுத்தறிவாளர்களின் எதிர்ப் பால் கைவிடப்பட்டது.

நிம்ஹான்ஸ் இயக்குநர் பி.சத்தீஷ்சந்திராவுக்கு, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் நரேந் திர நாயக் புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதன் விளைவாக சத்தீஷ்சந்திரா வேகமாக நடவடிக்கை எடுத்து நிகழ்ச்சியை நிறுத் தினார்.

மே 11ஆம் தேதி அன்று நிம்ஹான்ஸ் கூட்ட மய்யத் தில் புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூரில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி குறித்து இந்திய பகுத்தறி வாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர நாயக் தன்னு டைய கடிதத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நியூராலஜிக் கோளாறு களுக்கு ஒருவருடைய கர்மா காரணமாக உள் ளதா? ஆதாரங்களுடன் உள்ள மருந்துகள், மருத் துவம் கூறுகின்ற உண்மை களை மறுப்பதும், முற்றி லும் எதிரானதுமாக உள்ள புனித கர்மாவைக் குணப் படுத்தல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா? என்று கேட்டு அனுமதியை மறுபரிசீலனை செய்யு மாறு கோரிக் கடிதம் எழுதி யிருந்தார். மேலும், கடிதத் தில் குறிப்பிடும்போது, 2004இல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, அங்கீகாரமில்லாத, ஆதாரங்களின் அடிப்படை இல்லாத குணப்படுத்துவ தாக கூறிக்கொள்ளும் எந்த செயலையும் அங்கீகரிக் கவோ, அதற்கு ஆதரவா கவோ அரசு இருக்கக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதன்படி, அரசின் நிதி உதவியுடன் செயல்படு கின்ற நிம்ஹான்ஸ் நிறுவன மும் அதே அடிப்படையில் வருகிறது என்றார்.

நிம்ஹான்ஸ் இயக்குநர் டாக்டர் சத்தீஷ்சந்திரா கூறும் போது பகுத்தறிவாளர்கள் கூறுகின்ற வாதம் முற்றி லும் சரியே என்றும், அந்த நிகழ்ச்சியின் அமைப்பா ளர்களை அழைத்து நிகழ்ச் சியை நிறுத்திவிடுமாறும், அந்த நிகழ்ச்சிக்காக அளிக் கப்பட்ட தொகை முழு மையாக திரும்ப அதன் ஏற்பாட்டாளர்களுக்குக் கொடுத்துவிடுவதாகவும் கூறிவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சிக்காக அரங் கைப் பதிவுசெய்தபோது, இதுபோன்ற நிகழ்ச்சி என்று என் கவனத்துக்கு வரவில்லை என்றார். நிகழ்ச்சி குறித்து கவனத் துக்கு கொண்டு வந்ததும் நடவடிக்கை எடுத்துள் ளேன் என்றார். மேலும், இதுபோன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்பது நிம்ஹான்சின் கொள்கையா கும். பகுத்தறிவாளர்கள் அந்த நிகழ்ச்சிகுறித்து சுட் டிக்காட்டிக் கடிதம் எழு தியதும், அந்த நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து பெறப்பட்டத் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டோம். நிம்ஹான்ஸ் வளாகத்தில் எங்கும் அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் நிறுத்திவிட்டோம் என்று கூறினார்.

- தி ஹிந்து ஆங்கில நாளிதழ், 2-5-2014

Read more: http://viduthalai.in/e-paper/79646.html#ixzz30hhsBL4Y

தமிழ் ஓவியா said...


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க
விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவார் மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி, மே 3- குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி உத்தர விட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததையொட்டி இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசா ரணை ஆணையத்திற்கு விரைவில் நீதிபதி நியமிக் கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித் துள்ளார்.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்கு மாறு கூறியதன் பேரில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித்ஷா, இது தொடர்பாக காவல் துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங் களை ஊடகங்கள் வெளி யிட்டன. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறி வித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இது வரை நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று (2.5.2014) சிம்லாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய் தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.

அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே நீதிபதியை நிய மிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லையா? என்று கேட்டதற்கு, இந்த முடிவு 4 மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்றும், எனவே இது தேர் தல் நடத்தை விதிமீறல் இல்லை என்றும் தெரி வித்தார்.

மேலும், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வேவு பார்த்துள்ள நிலையில், அவர் பிரதம ரானால் பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? என் பது குறித்து உண்மையி லேயே வருத்தப்படுவ தாகவும் ஷிண்டே கூறினார்.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த முடிவு, அர சியல் உள்நோக்கம் கொண் டது என பா.ஜனதா கூறி யுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசி யல் காழ்ப்புணர்ச்சி நட வடிக்கை இது என்று தெரி வித்தார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார் என்றும் அவர் கூறினார். இதைப்போல, காங் கிரஸ் கட்சியின் உள் நோக் கம் கொண்ட இந்த நடவ டிக்கைக்கு, மதிப்பு மிக்க நீதித்துறை துணை போகாது என நம்புவதாக ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

ஆனால், இந்த விவகா ரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண்டிப்பாக நீதிபதி நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது குறித்து மத் திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண் டிப்பாக நீதிபதி நியமிக்கப் படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள் ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் மேலும்கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகி றார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. விசா ரணைக்குழுவில் எந்த நீதி பதியும் சேரமாட்டார்கள் என ஏன் வெளிப்படையாக கூறுகிறார்கள்? இந்த விவ காரத்தின் உண்மை நிலை அவர்களுக்கு தெரியும்.

ஏனெனில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவ காரத்தில் மோடி என்ன செய்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் உள் ளது. எனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டால், மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது என் பது அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79641.html#ixzz30hi2zwYc

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திரமோடி தகுதியானவர் இல்லை
லாலு பாய்ச்சல்

பாட்னா, மே 3- பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை. ஆர்எஸ் எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியாக பாஜ தலைவர்கள் செயல்படுகின் றனர் என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலடித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் அளித்த பேட்டி:

பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியாக இருந்தாலும், நான் தான் உண்மையான பிரதமர் பதவியை கையாளுவேன். ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த எனக்காக பாஜ.வுக்கு வாக்களியுங்கள் என்று பீகார் மக்களையும், அவரது இனத்தவரையும் ராஜ்நாத் சிங் ஏமாற்றி வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை.

பீகார் மக்களை முட்டாளாக்கி வரும் ராஜ்நாத் சிங் குக்கும், நரேந்திர மோடிக்கும் மக்கள் அரசியல் அடிப் படையை கற்றுத் தருவார்கள். ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியை போல, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் செயல்படுகிறார். தலித்து களின் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உண்மையிலேயே பாடுபடுகின்றனர். இவ் வாறு லாலு பிரசாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiM4J12

தமிழ் ஓவியா said...

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசுங்கள்
மோடிக்கு பிரியங்கா சவால்

அமேதி, மே 3- தைரி யம் இருந்தால் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று மோடிக்கு பிரியங்கா சவால் விடுத் துள்ளார். காங்கிரஸ் தலைவரும், அமேதி மக் களவை தொகுதி வேட்பாள ருமான சோனியா காந்தியை ஆதரித்து, மகள் பிரியங்கா காந்தி நேற்று கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்காரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: நான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இடங் களில் எல்லாம், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றி யும் அவதூறான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை இர வோடு இரவாக பா.ஜ கட்சி, கோழைத்தனமாக வெளி யிட்டு வருகிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் நின்று பேசவேண்டும்.
நாட்டில் தற்போது தேர்தல் பிரச்சாரம் என்பது மிகவும் மட்டரகமாகப் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்குதான். ஆனால், ஒரு சில தலைவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். மக்க ளின் அடிப்படை நலன் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகின்றனர். நரேந்திர மோடி பத விக்காக ஆசைப்படுகிறார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiRgLpT

தமிழ் ஓவியா said...

வாஜ்பாய் மகாத்மா காந்தியாம்!
மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோசாம்!!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

டில்லி, மே. 3- பாஜகவில் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலை வர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார். சி.என்.என். அய்.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது: வாஜ்பாயும், மோடியும் ஒன்றுபோல் தான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர்; மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது. இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiXDH7H

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி

நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன. - (குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79630.html#ixzz30hj9MQZi

தமிழ் ஓவியா said...


கணினி போர்க் களம்

- நீரோடை

அண்மையில் பி.பி.சி. இணைய தளத்தில் ஆப்பிரிக்க கல்விக்கு விளக்கேற்றும் சூரிய ஒளி வகுப்பறைகள் (Solar Classrooms light up African Education) என்னும் கட்டுரை படித்தேன். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராமப் பள்ளிக்கூடங்களில் மின்சாரமே இல்லை. மின்சாரமே இல்லை என்று சொல்கின்றபொழுது, அந்தப் பள்ளிக்கூடங்களில் கணினி கற்றுக் கொடுப்பது எப்படி? மற்ற நாடுகளில் உள்ள மாணவ மாணவிகளின் படிப்போர் உலகம் கணினி பயன்பட்டால், இணை யத்தின் உதவியால் விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கணினி என்னும் பெயரே கேள்விப்படாத நிலையை விவரிக்கின்றது அந்தக் கட்டுரை.

ஆனால் இந்த நிலைமையை மாற்று வதற்கு, உலகத்து பிள்ளைகளோடு நமது பிள்ளைகளும் போட்டி போட வேண்டும் என்னும் நினைப்பில் ஒரு அறக்கட் டளையை ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டில் நிறுவியிருக்கின்றார்கள். அந்த அறக்கட்டளையின் பெயர் மெயிண் டாலோ பவுண்டேசன் ( Maendeleo Foundation). அந்த அறக்கட்டளை பற்றியும் . அதன் நிர்வாக இயக்குநர் ஆசிய கமுகாமா ( Maendeleo Foundation). பற்றியும் அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றியும் அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகின்றது. என்ன இல்லை என்பதனை உணர்ந்த அவர்கள், தங்கள் நாட்டில் என்ன இருக்கிறது என்று கவனித்தார்கள், தக தகக்கும் வெயில், சூரிய வெப்பம் நிறைய இருக்கிறது என்பதனை உணர்ந்த அவர்கள், சூரிய ஒளியால் இயங்கும் பேட்டரிகள் மூலம் கணினிகளை இயக்குகின்றார்கள். ஒரு நான்கு சக்கர வாகனம், வாகனத்தின் மேல் சூரிய வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் தகடுகள், ஒரு கணினியை , இணையத்தை இயக்க தேவைப்படும் கருவிகள் என ஒரு நடமாடும் கணினி வாகனத்தை அவர்கள் அமைத்திருக்கின்றார்கள், ஊர், ஊராக செல்கின்றார்கள், சாலைகள் இல்லாத இடங்களில், பாதை என்று இருக்கும் இடங்களின் வழியாக எல்லாம் சென்று அந்த கணினிக் கல்வியை அந்த ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். இப்படி 37000 பேருக்கு இந்தக் கணினி கல்வியை, இந்த அறக்கட்டளை மூலம் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் 80 சதவீதம் பேர் மாணவர்கள் மற்றும் 20 சதவீதம் பேர் ஆசிரியர்கள் மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் என விவரிக்கும் அந்தக் கட்டுரை இது மிகப்பெரிய கல்வி-கணினி புரட்சி என எடுத்துக் காட்டியிருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களால், தாழ்த்தப்பட்டவர் களாக, பிற்படுத்தப்பட்டவர்களாக ஆக் கப்பட்ட நமது நாட்டு உழைக்கும் மக்கள், கிராமம் கிராமமாக சிதறுண்டு, பிரிந்து கிடக்கின்றார்கள். படித்த பார்ப்பன வர்க்கம், கணினியை ஏற்கனவே கற்று வைத்துக் கொண்டுள்ளது. குளிரூட்டப் பட்ட அறைகளிலே உட்கார்ந்து கொண்டு, ஊடகங்களில், பத்திரிகை களில் , இணைய் தளங்களில் , வலைத் தளங்களில் கூசாமல் கற்பனை பெயர் களைச்சூட்டிக் கொண்டு பொய்யை திரும்ப திரும்ப எழுதிக்கொண்டு இருக் கின்றார்கள். திராவிட இயக்க உணர்வு உள்ள மூத்த தோழர்கள் பெரும்பாலும் கணினி கல்வி இல்லாமல் இருக்கின் றார்கள். மின்னஞ்சல், முகநூல் பதி விடுதல், பத்திரிகைகளுக்கு பின்னோட் டம் இடுதல் போன்றவை எப்படி என்பதனை அறியாமல் இருக்கின்றார்கள். இளைய தலைமுறையில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் கூட எதையும் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு பார்ப்பனர்கள் சொல்லும் செய்திகளை, பொய்களை நம்பக்கூடிய வர்களாக இருக்கின்றார்கள்.

தமிழ் ஓவியா said...


இதனை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கணினி கல்வியின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றார். ஈரோட்டுப் பாதைக்கு நமது ஒடுக்கப் பட்டவர்களைத் திருப்ப, தமிழர் தலைவர் அவர்கள் பல ஊர்களில் இணையம், கணினி குறித்து வகுப்புகள் எடுக்கச் சொன்னார். எடுத்தோம். இப்பொழுது, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் கணினி வாகனம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு , ஊர் ஊராக் வருகின்றது. ஆப்பிரிக்காவில் நடமாடும் கணினி வகுப்பறைகள் பற்றி படித்தபொழுது எனக்கு நமது இயக்கத் தின் நடமாடும் கணினி வகுப்பறைகள் தான் நினைவிற்கு வந்தது. நமது தோழர்களும், மாணவ, மாணவிகளும் கணினியை , இணையத்தை கற்றுக் கொள்ள உதவும் ஏற்பாடாக ,மிகச் சிறப்பான ஏற்பாடாக அது உள்ளது. அதனை பெருமளவில் பயன்படுத்தி, நமது மூத்த தோழர்களுக்கு, தோழியர் களுக்கு, இளைஞர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்க வேண்டும். பயன்படுத் தும் முறையை கற்றுத்தரவேண்டும். நமது பரம்பரை எதிரிகள் , திராவிட இயக்கத்தை அழித்து விட துடியாகத் துடிக்கின்றார்கள். இட்டுக் கட்டுகின் றார்கள், இல்லாததை இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆப்பிரிக்க கல்விக்கு விளக்கேற்றும் சூரிய ஒளி வகுப்பறைகள் போல , பகுத்தறிவு விளக்கேற்றும் கணினி ஒளி வகுப்பறைகளாய் வலம் வரும் இந்த நடமாடும் கணினி வாகனம் ந்ல்ல முறையில் பயன்படுத்தப் படவேண்டும். 'கற்பி', 'ஒன்று சேர்', 'புரட்சி செய்' என்றார் அண்ணல் அம்பேதகர். தனது வாழ் நாள் முழுவதும் ஊர் ஊராக பயணம் செய்து, ஜாதி என்னும் நாகத்தை , தனது கொள்கைத்தடியால் தாக்கி, தாக்கி மூர்ச்சையுறச்செய்தார் தந்தை பெரியார். தந்தை பெரியார், அன்னை மணியம் மையாருக்குப் பின்னால் கழகத் தலைமை ஏற்ற ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியாரைப் போல ஊர் ஊராகப் பயணம் செய்து ஜாதி ஒழிப்பு பிரச்சாரம் செய்வதோடு, இன்றைய அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி, இணையத் தின் மூலமும், வலைத்தளங்கள் மூலமும் பகுத்தறிவுப் பிரச்சாரங்களைச் செய்கின் றார். மற்றவர்களையும் செய்ய தூண் டுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மரியாதைக்குரிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பல இடங்களில் கணினியையும், திராவிட இயக்கத்தை யும் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் நடத்த செய்கின்றார்கள். நல்ல பலன் கிடைத்துள்ளது. சென்ற சட்ட சபைத் தேர்தல் போல் இல்லாமல் இணையதளங்களில்,தமிழ் மணம் போன்ற தமிழ் திரட்டிகளில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் புகுந்து விளை யாடுகின்றார்கள். உடனுக்குடன், சுடச்சுட, எதிராளி எந்த மொழியில் பேசுகின் றானோ, அதே மொழியில், அதே பாணியில் ஆதாரத்தோடு விளக்கம், பதிலடி கொடுக்கின்றார்கள். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த பாணி பல்கிப் பெருகவேண்டும். "எதிரிதான், நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கின்றான்" என் பார்கள். இன்றைய காலகட்டத்தில் நமது எதிரிகள், இணையதளம், கணினி என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தி நிற்கின்றார்கள்.

திராவிட இயக்க வரலாற்றை கற்பிக்க, நிறைய கணினி வகுப்பறைகள் வேண் டும். பழைய வரலாறுகள் காணொலி காட்சிகளாக, இளைஞர்களே உங்களுக் குத் தெரியுமா என்னும் கேள்விகளோடு கற்பிக்கப்பட வேண்டும். இந்தத் தேர் தலில் அமைந்த கூட்டணியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செல்லும் இடமெல்லாம், கொள்கைக் கூட்டணி எனக் குறிப்பிட்டார். அந்தக் கொள்கை கூட்டணியில் உள்ள ஒவ் வொரு இயக்கமும், தனது உறுப்பினர் களுக்கு, ஆதரவாளர்களுக்கு கணினி பயிற்சி தர வேண்டும். எப்படி ஆப்பிரிக்க குழந்தைகள் ககணினி கற்றுக் கொள்ள நடமாடும் கணினி வகுப்பறைகள் போகின்றனவோ, அப்படி நம்மை எதிர் நோக்கியுளள் சமூக நீதிக்கு எதிரான போக்கு, ஜாதிச்சண்டைகள், மதச்சண் டைகள் ஒழிய இணைப்புப் பாலமாய் இருக்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடமாடும் கணினி வகுப் பறைகளில் கணினி கற்றுக் கொள்ள நம்மை அழைக்கின்றார். கற்றுக் கொள் வோம், கற்பிப்போம். கணினி போர்க் களத்திலும் நமது பரம்பரை எதிரிகளை வெற்றி கொள்வோம்.

Read more: http://viduthalai.in/page-2/79636.html#ixzz30hjJ0Qxb

தமிழ் ஓவியா said...


விரைவில் பெரிய கிராம மாநாடு, பெரியார் மன்றம் திறப்பு விழா


விரைவில் பெரிய கிராம மாநாடு, பெரியார் மன்றம் திறப்பு விழா
அன்பழகன்-கீதா மணவிழாவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

திருச்சி, மே 3- திருச்சியை அடுத்த திருப்பைஞ்ஞீலியில் 27.4.2014 அன்று காலை 9 மணிக்கு கே.பி. திருமண மகாலில் அன்பழகன் - கீதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ஆசைத்தம்பி வரவேற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் மா.முருகேசன், க.சிவசங்கரன், பெரியார் பெருந்தொண்டர் நீ.வனத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை வழக்குரைஞர் பூவை.புலிகேசி தொகுத்து வழங்கினார். பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் ப.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ப.ஆல்பர்ட், உடுக்கடி அட்டலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வீ.அன்புராஜா, மாணவரணி தலைவர் சு.முரளி தரன், இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடி வள்ளல், மாவட்ட ப.க. தலைவர் ச.மணிவண்ணன், ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பி.பாவேந்தர், மணச்சநல்லூர் நகர தலைவர் சா.ஜெயபால் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

மலர்ச்செல்வி வீரமணி ஆகியோரின் மகன் வீ.அன்பழ கனுக்கும், கோவிந்தராஜ் - இந்திராணி ஆகியோரது மகள் கோ.கீதாவிற்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மணமக்களுக்கு உறுதி மொழி கூறி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார். நிறைவாக வீ.இளவரசன் நன்றி கூறினார்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு

மணவிழாவிற்கு வருகை தந்த கி.வீரமணி அவர்கள் கழகத்தின் நீண்ட நாள்களாக கொள்கையோடு வாழக் கூடிய கொள்கைச் செம்மல்கள் பெரியார் பெருந்தொண்டர் கள் நீ.வனத்தான், திருப்பதி, வெங்கடாசலம், வேலு, பிச்சைய்யா, து.பொ.பெரியசாமி, தர்மலிங்கம் ஆகியோ ருக்கு கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து அவர் களது தொண்டு மேலும் தொடர பாராட்டுகளைத் தெரி வித்தார்.

வரவேற்பு

மணவிழாவை நடத்தி வைக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு திருப்பைஞ்ஞீலி ஊர் எல்லையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஏராளமான தோழர்கள் தாரைத் தப்பட்டை முழங்க தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து கொள்கை முழக்க மிட்டு வரவேற்றனர். இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல தமிழர் தலைவர் வாகனம் பின் தொடர ஊரே திரும்பி பார்க்கும் வண்ணம் எழுச்சி மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

27.4.2014 அன்று திருச்சி - திருப்பைஞ்ஞீலியில் நடைபெற்ற அன்பழகன் - கீதா ஆகியோரின் திருமண நிகழ்வில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

இந்த மணவிழா நம் கொள்கைக் குடும்பத்து மண விழாவாகும். இங்கே நண்பர்கள் குறிப்பாக அருமை நண்பர் பூவை.புலிகேசி அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இன்றைய நாள் நான் ஏற்கெனவே சென்னையில் புத்தகச் சங்கமத்தில் நிறைவுரை நடத்துவதற்கு, ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு நிறைவு நாள். அதுமட்டுமல்ல, உங் களுக்கே தெரியும் தேர்தலில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, பிறகு சென்னைக்குத் திரும்பி, ஓரிரு நாள்கள்கூட ஓய்வெடுக்க முடியாத சூழ்நிலையில், நேற்றும் புத்தகச் சந்தையில் நடைபெற்ற புத்தகர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுவிட்டு, திருச்சி ரயிலை பிடித்து திருச்சிக்கு இன்று காலையில் வந்து சேர்ந்தேன். இத்திருமண விழாவிவை முடித்துவிட்டு, மாலையில் நடைபெறும் புத்தகச் சங்கம நிறைவு விழாவில் பங்கேற்க செல்லவேண்டும்.

உறவோடும், உரிமையோடும் இங்கே வந்திருக்கிறேன்

தமிழ் ஓவியா said...

இரண்டு நாள் நிகழ்வுகளும் சென்னையில் இருந் தாலும், நம்முடைய தோழர் சிவசங்கரன் திருமண நிகழ் வுக்கு தேதி கேட்ட நேரத்தில், தலைமைக் கழகத்தில் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், எனக்கு உடல்நிலையாகட்டும், மற்றவையாகட்டும் தொந்தரவு இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், வீரமணி, அய்யா வனத்தான் போன்றவர்களுடைய குடும்பத்து நிகழ்ச்சி என்று சொன்னால், கட்டாயம் அது நம்முடைய குடும்பத்து நிகழ்ச்சி என்ற உறவோடும், உரிமையோடும் அதில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

நண்பர் வீரமணி அவர்கள் எத்தகைய செயல்வீரர் என்பதையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். இந்தக் குடும்பம் இருக்கிறதே, அதுவும் இந்தப் பகுதி திருப்பைஞ்ஞீலியாக இருந்தாலும், வாழ்மானபாளையமாக இருந்தாலும், மண்ணச்சநல்லூர் தொடங்கி இந்தப் பகுதிக்கு வரும்பொழுதெல்லாம் கழகத்திற்கு இது ஒரு பாசறை போன்ற பகுதி என்பதை பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்றைய இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு வயதானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மகிழ்ச்சியடைக்கூடிய செய்தி என்னவென்றால், வீரமணி அவர்கள் அன்று மணவிழாவின்போது, எப்படி கருப்புச் சட்டையை போட்டு, எவ்வளவு தீவிரமான உணர்வாளராக இருந்தாரோ, அதேபோல, அவருடைய அன்புச்செல்வன் அன்பழகன் அவர்கள், அதில் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறார் என்று சொல்லும்பொழுதுதான், இந்த இயக்கம் மாற்றுக் குறையாத ஒரு சிறப்பான அமைப்பு என்பது தலைமுறை தலைமுறையாக இங்கே இருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படித்தான். அய்யா செம்பறை நடராசன் அவர்கள் மாவட்டத் தலைவராக இருந்தார்கள். இன்றைக்கு அவருடைய மகன். அதுபோல, ஒவ்வொரு வரையும் எடுத்துக்கொண்டால், நம்முடைய இயக்கம் என்று சொன்னால், அது வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம் என்ற கொள்கைக் கூட்டமாக, கொள்கைக் குடும்பமாக என்றைக்கும் திகழ்வது. இன்றைய அளவிற்கு வளர்ச்சி, மருத்துவத் துறையில் அன்றைக்கு இல்லை

தமிழ் ஓவியா said...


வீரமணி அவர்கள் உடல்நிலை குறைந்திருந்த நேரத்தில் எல்லாம், அவரை எப்படியாவது காப்பாற்றிடவேண்டும் என்று நாங்கள் எல்லோரும் அரும்பாடு பட்டோம். அவருடைய வாழ்விணையரும், அவருடைய குடும்பத் தினரும் எல்லையில்லா அளவிற்கு போராடினார்கள். என்றாலும், இன்றைய அளவிற்கு வளர்ச்சி, மருத்துவத் துறையில் அன்றைக்கு இல்லை. இன்றைய அளவிற்கு வளர்ச்சி இருந்திருந்தால், ஓரளவுக்கு நாம் அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடும். என்றாலும், பரவாயில்லை, இன் றைக்கு அதே கொள்கையில் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

அய்யா வனத்தான் அவர்கள், எப்படி நீங்கள் இந்த இயக்கத்திற்கு, எவ்வளவு காலத்திற்கு முன்னால் வந்தீர்கள் என்று கேட்ட நேரத்தில்,
அவர் சொன்னார்,

1948 ஆம் ஆண்டிற்கு முன்பு, மிகப்பெரிய பக்தி மானாக இருந்த நான், அய்யா வழியில் 1948 ஆம் ஆண்டுதான் இந்த இயக்கத்திற்கு வந்தேன் என்று சொன்னார்.

அதுபோல, நம் இயக்கப் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், வாழ்மானபாளையம், திருப்பைஞ்ஞீலியும் உள்ள நம்முடைய தோழர்கள் பங்கேற்காத போராட்டமே கிடையாது. பெரியார் அய்யா அவர்கள் சொன்னால், அதைவிட பெரிய ஆணை நமக்குக் கிடையாது என்று கருதிக்கொண்டு, அன்றைக்கு சிறைக்குச் சென்றவர்கள் இன்றைக்கு வயதானவர்களாக காட்சியளிக்கிறார்கள். ஆனால், அன்பழகனைப் போல, அன்புராஜாவைப்போல மற்ற மற்ற இங்கே வந்த இளைஞர்கள், மாணவரணியைப் போல, பூவை புலிகேசியைப் போல, அடுத்த தலைமுறை இளைஞர்கள் இப்பொழுது பொறுப்பேற்க வந்துவிட்டார் கள். இதுதான் மிகவும் சிறப்பானது.

இந்தப் பகுதியில் இளைஞரணி தலைவராக இருக்கக் கூடியவர் நம்முடைய அன்புராஜா, முரளிதரன், வான்முடி வள்ளல், மணிவண்ணன் இவர்களையெல்லாம் பார்த்தீர் களேயானால், நம்முடைய இளைஞர்களைத் தயாரிக்கக் கூடியவர்கள்,

தமிழ் ஓவியா said...

இளைஞர்களாக இருக்கக் கூடியவர்கள். ஆகவேதான், இது நம்முடைய குடும்பத்து மணவிழா வாகும். ஆயிரம் இடைஞ்சல்கள் இருந்தாலும், அவை களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த மணவிழா வினை நடத்தி வைத்துவிட்டு செல்லவேண்டும் என்பதில் நான் குறியாக இருந்தேன்.

அதுமட்டுமல்ல, உங்களில் சில பேருக்குத் தெரியாது; புதிதாக வந்திருக்கின்ற இளைஞர்களுக்கு, தாய்மார்கள், மற்றவர்களுக்கெல்லாம் சொல்லவேண்டும். மணமகன் அன்பழகனுடைய தந்தையார் வீரமணி; அதேபோல, மணமகனுடைய தாயார் மலர்ச்செல்வி ஆகியோருடைய மணவிழாவிவை 19.4.1982 ஆம் ஆண்டு இன்றைக்கு 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவர்களின் மணவிழாவினை நடத்தி வைத்துவிட்டு, இன்றைக்கு அவர்களுடைய பிள்ளையினுடைய மணவிழாவினை நான் நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்று சொன்னால், இது எனக்கு மட்டும் வாய்ப்பல்ல, அது இரண்டாம்பட்சம். ஆனால், அதைவிட மகிழ்ச்சியடைக் கூடிய ஒரு செய்தி இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

ஒரு மயிரிழைகூட எள் மூக்கு முனையளவு கூட அவர்கள் வழுவவில்லை

அவர்கள் சொன்ன மாதிரி, வசதி, வாய்ப்பு, அது மட்டுமல்ல, இப்பொழுது எத்தனையோ திசை திருப்பல் கள், இவைகளெல்லாம் வளர்ந்திருக்கின்ற நேரத்தில், இந்தக் குடும்பம் அந்தக் கொள்கையிலிருந்து ஒரு மயிரி ழைகூட எள் மூக்கு முனையளவு கூட அவர்கள் வழுவ வில்லை என்றால், இதைவிட சிறந்த குடும்பத்திற்கு, லட்சியக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. ஆகவேதான், இங்கே வரவேண்டும் என்ற அந்த உணர்வோடு நான் வந்தேன்.

அதுபோலவே, நம்முடைய வீரமணி அவர்கள், அன்பு காம்ப்ளக்ஸ் யும், பெரியார் இல்லம் -வீடு திறப்பு - இந்த இரண்டையும் எப்பொழுது திறந்து வைத்தார்கள் என்றால், 20.2.1992 அது 22 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகவே 32 ஆண்டுகளுக்கு முன்னாலே, அவர்களுடைய மணவிழா; இந்த முறையில் செய்தால், வாழ்வார்களா, வளருவார் களா, உருப்படுவார்களா என்றெல்லாம் மூட நம்பிக்கை யாளர்கள் நினைப்பார்கள். நாங்கள் வளர்ந்து வந்திருக்கி றோம் என்று காட்டக்கூடிய அளவில், அவர்கள் சிறந்த முறையில் அதனை எடுத்துக்காட்டினார்கள்.

22 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாய்ப்பினை பெற்றார் கள். இன்னமும் அய்யா அவர்கள் கொள்கையில் உறுதி யாக இருக்கிறார்கள்.

ஒரு பெரிய கிராம மாநாடாகவும், திறப்பு விழாவாகவும் விரைவில் நடைபெறும்
வாழ்மானபாளையம் தோழர்கள் ஒரு மணக்கூடத்தை அமைத்திருக்கிறார்கள்; அங்கு விரைவில் ஒரு பெரிய கிராம மாநாடாகவும், அதேநேரத்தில் திறப்பு விழாவாகவும் அது நடைபெறும். அப்பொழுதும் நாங்கள் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்று, இந்த வட்டாரத்திலேயே ஒரு சிறந்த நிகழ்வாக அது இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

ஆகவே, இந்தக் குடும்பம் பெரியாரின் பெருங்குடும்ப மாகத் திகழ்கிறது. எங்களுக்கு ஜாதியில்லை; இன்னமும் எனக்கு இவர்கள் என்ன ஜாதி என்று தெரியாது; நான் என்ன ஜாதி என்று இவர்களுக்குத் தெரியாது. எங்கள் தோழர் களுக்கு ஜாதி என்றால் என்னவென்று தெரியாது. கருப்புச் சட்டை போட்டுவிட்டால், மனிதநேயம் மட்டும்தான் தெரியுமே தவிர, எங்களுக்கு கட்சி, ஜாதி, மதம் இந்தப் பிரிவினைகள் எல்லாம் கிடையாது.

அப்படிப்பட்ட நிலையில், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லக்கூடிய அளவில், மிக அற்புதமாக இந்த மணமக்கள் அன்பழகன் - கீதா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எந்தவித சடங்கு சம்பிரதாயங்களும் இங்கே கிடையாது. அதைவிட ஆண்களுக்கு நிகர் பெண்கள். ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ, அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டும். ஆணுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே அளவு பங்கு பெண்களுக்கும் இருக்கவேண்டும். ஆண்கள் என்னென்ன உத்தியோகத் திற்குச் செல்கிறார்களோ, அதேபோல் பெண்களும் அந்த உத்தியோகங்களுக்குச் செல்லவேண்டும்.

இங்கே பார்த்தீர்களேயானால், பெண்கள் அமர்ந்திருக் கிறார்கள், சில ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நிலை உண்டா?
ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் சொல்கிறார்:

ஒருத்தருடைய வருமானத்தில் கணக்கு போட்டு, ஒரு நாள் எவ்வளவு வருமானம் என்று கணக்கு போட்டு, 10 நாள் வருமானத்தை திருமணத்திற்காக செலவு செய்யலாம் என்று தந்தை பெரியார் சொன்னார்.

எனவேதான் அருமைப் பெரியோர்களே, நான் உங் களைக் கேட்டுகொள்வது, இந்த மணமக்கள், இவர்களு டைய தந்தையார், இந்தக் கொள்கையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்தக் கொள்கையில் அந்தக் குடும்பம் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள். பாரம் பரியமாக இது மூன்றாவது, நான்காவது தலைமுறையாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றால், நமக்கு வளர்ச்சியும், முன்னேற்றமும், வாழ்வில் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
என மேலும் பல கருத்துகளை எடுத்துச் சொல்லி மணவிழாவினை நடத்தி வைத்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

Read more: http://viduthalai.in/page-4/79652.html#ixzz30hjrvPnk

தமிழ் ஓவியா said...


நல்ல வர்க்கம் (சித்திரபுத்திரன்)


நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது.

அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும்.

இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்!

வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது.

ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

குடிஅரசு - கட்டுரை - 30-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79650.html#ixzz30hlIianZ

தமிழ் ஓவியா said...


பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு சுயமரியாதை ஆசிரமத் திறப்பு விழாச் சொற்பொழிவு


சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர்களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப்பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரவுற்புக் கமிட்டியார் தேர்ந்தெடுத்ததற்கு நாம் அவர்களை பாராட்ட வேண்டும்.

ஏனெனில் நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர் களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர்களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக் கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சவுந்தர பாண்டியனார், சொ. முருகப்பா, ஆகிய முக்கியமானவர்களில் சி.குருசாமி ஒருவராவார்.

ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக் கொள்கையையே பின்பற்று கிறவருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய ரிவோல்ட்க்கு பெயரளவில் நான் பத்திராதி பனே ஒழிய, காரியத்தில் அவரே தான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர்.

அவரது எழுத்துக்களும் கருத்துக்களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளி மகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத்தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக்கிறது.

இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா அய்ரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாக்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இதைத் தவிர திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதால் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும் அதிலும் விதவை யாயிருத்தலே மேல் என்றும் தீர்மானித் துக் கொண்டிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லா வற்றிலும் ஒரே மாதிரியான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.

(பட்டுக்கோட்டையில் 24.05.1929 வெள்ளி இரவு 11 மணியளவில் திரு.சி.குருசாமி தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு - சொற்பொழிவு - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlhSTqf

தமிழ் ஓவியா said...

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல் லாதார்களை விலக்கிவிட்டார்கள்.

இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாச மும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவ தாகத் தெரிகிறது.

குடிஅரசு - செய்தி விளக்ககுறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlorfcT

தமிழ் ஓவியா said...

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப் பற்றி நாம், அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்லவென்றும் இவர்களுக்கு கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 வருடகாலமாக விடாமல் சொல்லி வருகின்றோம்.

இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரச்சாரமே செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில் காங்கிரசு பணக்காரர்கள் உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது.

உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டார்கள் காங்கிரசுக்கு எதிரிகளாய் விட்டார்கள் முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றது.

இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm2Nac6

தமிழ் ஓவியா said...

நாஸ்திகத்தின் சக்தி

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரச்சாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டிவருகின்றனர்.

அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரிய வில்லை.

அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். நாதிகத்தின் சக்தியே சக்தி!

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 23-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm96jfZ

தமிழ் ஓவியா said...


சந்தி சிரிக்கும் கடவுள்களின் சக்தி


கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கலிக்கநாயக்கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலையும், அங்கு நகை பணம் திருட்டுப் போனதால், காவல்துறையினர் விசாரணை நடத்துவதையும் காணலாம். உள்படம்: உடைக்கப்பட்ட உண்டியல்.

வடவள்ளி.மே 3- கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த கலிக்கநாயக் கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை யில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று முன் தினம் நடந்ததாம். இதையொட்டி காணிக்கைகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலின் கதவு பூட்டை உடைத்து சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். அவர் கள் அங்கிருந்த 5 அடி உயர சூலாயு தத்தைப் பயன்படுத்தி உண்டியலில் இருந்த 2 பூட்டுக்களையும் உடைத்துள் ளனர். பின்னர் அவர்கள் உண்டியலில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலில் நடை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது அவர், கோவில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பொருள்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகி, உடனடியாக தொண் டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங் களைப் பதிவு செய்தனர். கோவில் விழா நடந்த மறுநாளே உண்டியலில் இருந்த நகை, பணம் திருட்டு போயுள்ளது.

திருட்டு போன தங்கம், வெள்ளி மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக் கும் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய உண்டியலையே காப் பாற்றிக் கொள்ளாத அந்த பத்ரகாளியம் மன், எப்படி பக்தர்களின் குறையைப் போக்குவாள்?

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmPIEFv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் மோதல்: காயம் - கைது

ஆரணி, மே 3- ஆரணி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரணி அடுத்த சேவூர் எஸ்எல்எஸ் மில் அருகே வசிப்பவர் முனிவேல் மகன் மணிகண்டன் (22). அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்ததாம்.

விழாவையொட்டி மணிகண்டன், நண்பர்கள் வேல், வடிவேல், ரகு ஆகி யோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சம்பத் மகன்கள் மோகன், மதன் மற்றும் ராஜேஷ், கரிகாலன், யுவராஜ், மணிவாசகம் ஆகியோர் ஏன் சாலையில் சத்தம் போட்டுச் செல்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் கைகலப்பு ஏற்பட்டு ஒரு வரை ஒருவர் கையாலும், கல்லாலும், தடியாலும் தாக்கி கொண்டனர். இதில் மோகன், யுவராஜ், கரிகாலன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழு மோதல் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் மணிகண்டன், மணிவாசகம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து மதன், ராஜேஷ், மணிகண்டன், ரகு, வேல், வடி வேல் ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின் றனர்

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmWenj1

தமிழ் ஓவியா said...


மோடி சொல்வது முழுப் பொய்- ஆதாரமற்றதுமோடியின் முகமூடியைக் கிழிக்கும் அகமதுபட்டேல்

புதுடில்லி, மே 3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர் பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ கார ணம் தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி யில் வெளியான விவரங் கள்தான்.

அகமது பட்டேல் காங் கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண் பர்களில் ஒருவர். இப் போது அவர் மாறி இருக் கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப் பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவரு டன் சேர்ந்து உணவு அருந் தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப் பட்ட தோழமை உறவு தொடரவேண்டும் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அகமதுபாய் என எப் போதும் அவரை அழைத் ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகி றோம்.

பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த் தையை நான் பயன்படுத்து கிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்ப தற்கான காரணம்பற்றி கேட் டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக பட்டேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல் லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத் துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வரு கிறது. எனது வீட்டுக்கு அவ ரும், அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப் பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

1980-களில் அவர் பாஜக பொதுச்செயலாளராக இருந்தபோது, அவர் எனது வீட்டுக்கு வந்தது நினை விருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித் தோம்.

முதல்முறையாக முதல் வராக பொறுப்பேற்ற போது அவர் தொலைபேசி யில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை கார ணமாக எடுத்துப் பேசிய துண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ள வருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டியில் அரசியல் இருக்கிறது. தேர்தல் ஆதா யத்தைக் கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என் றார் அகமது பட்டேல். மோடி ஒரு பிரிவினைவாதி:

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmebCa1

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் கபீர் மடாலயத் தலைவர்

வாரணாசி, மே 3-பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி ஒரு பிரிவினை வாதி; வாரணாசியில் மோடி போட்டியிடுவதால், பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என்று கபீர் மடாலயத்தின் தலைவர் விவேக் தாஸ் ஆச்சார்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

புனித நகரான காசி பல் வேறு கலாச்சாரம், மதங் களின் சங்கமம் ஆகும். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு பிரிவினைவாதி. அவர் காசியின் பன்முக கலாச்சாரத்தைப் பிரதி பலிப்பவர் அல்ல, அதற்கு எதிரானவர்.

காசியில் பல நூற்றாண் டுகளாக இந்துக்களும் முஸ் லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மோடி போட்டியிடு வது வாய்ப்புக் கேடானது.

இங்கு போட்டியிடுவ தன் மூலம் பாஜகவும், மோடியும் அரசியல் ஆதா யம் தேட முயல்கின்றனர். மோடியின் பெயரில் போலி யான அலை உருவாக்கப் பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியின் தற்போதைய எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக் காக எதுவும் செய்யவில்லை. பாஜகவின் மூத்த தலை வர்களில் ஒருவரான ஜோஷியே எதுவும் செய் யாத நிலையில் மோடி யிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

நான் முற்றும் துறந்த துறவி தான். எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனினும் நாடு எதிர் கொள் ளும் முக்கியப் பிரச்சினை களில் மவுனமாக இருக்க முடியாது.

உலகின் அடையாளச் சின்னங்களில் காசியும் ஒன்றாகும். இந்த நகரைப் பாதுகாக்க அனைத்து தரப் பினரும் முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இந்த புனித நகரைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmloOyW

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டையும், ஆடை மாற்றமும்


அண்மையில், சமுதாய சிந்தனை என்ற சிற்றிதழில் (மார்ச் 2014) படித்த செய்தி இது:

மத்திய மேல் நிலைக் கல்வி வாரியம் (CBSE) 9ஆம் வகுப்பு வரலாறு பாட நூலில், சாதிச் சண்டையும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பில், குமரி மாவட்டத்தில் 1822 முதல் 1859 வரை நடந்த மேலாடைப் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு தந்திருந்தது. அதில் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ மிஷனரி களின் பணி சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொறுக்க இயலாத இந்து நாடார் அமைப்புகள், அதை நீக்க, இழிவு... இழிவு... எனக் கூச்சல் போட்டன. இது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குள்ள நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சல் போட்டதற்குச் சமமாக இருந்தது. உடனே நாடார்களை வளைத்தெடுக்கும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட களம் இறங்கின. பிற மாநில மாவட்ட நாடார் களும் வழக்கம்போல போராட்டத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்றம் விளக்கம் கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட புரோட்டஸ் டண்டு கிறிஸ்தவர்களின் புனிதமான விடுதலை வரலாற்றை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.ஈ.யைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்டது. இச்செயலுக்கு யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. காரணம், புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர் களுக்கு மானம், மரியாதை, உரிமை முதலியவைமீது அக்கறை இல்லை. பிழைப்பு, ஆசீர்வாதம் முதலியவை மீதுதான் கவலை.

பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சமுதாய சிந்தனை ஆசிரியரும் கன்னி யாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்ற நிறுவனரு மான டி. பீட்டர் அவர்களின் மேற்கண்ட கூற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடார்களைப்பற்றி சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் எழுதப்பட்டதை நீக்கக் கோரி களத்தில் இறங்கியவை இந்து நாடார் அமைப்புகள் அல்ல. நாடார் சங்கங்கள் தான் களத்தில் இறங்கின. அங்கே இந்து நாடார்களும் உண்டு; கிறித்தவ நாடார் களும் உண்டு.

சேர நாட்டு (திரு விதாங்கூர்) நாடார்கள் ஆதிகாலம் தொட்டே தீண்டத்தகாத - பார்க்கத் தகாத குலத்தவர்கள் அல்ல; அதுபோல மேலாடை அணியாதவர்களும் அல்ல. பாண்டிய நாட்டில் நாடாண்டவர்கள் நாடார் குலம் ஆனது போல, சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்தவர்கள் சான்றோர் குலத்தவர்கள் ஆனார்கள். இவர்களையே தென் திருவிதாங்கூரில் நாடார்கள் என்றனர்.

மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்த வர்கள் மக்கள் (மகன்கள்) வழி வாரிசு கொள்கையைக் கொண்டவர்கள். பிற் காலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மருமக்கள்(மருமகன்கள்) வழி யைக் கடைபிடித்தவர். இதை சேரமான் பெருமாள் மரபினர் எதிர்தததால்தான் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவால் அடக்கி ஒடுக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை புராட் டஸ்டண்டு கிறித்தவர்கள் ஆதரித்தார்கள். காரணம், அப்பொழுதுதான் அவர்கள் பிழைப்பை இங்கே நடத்த முடியும்.

மீட் பாதிரியாரால் கிறித்தவ மதத்தில் சேர்ந்த பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமைதான் கிடைத்தது. இதை அணிந்துகொண்டு பொது இடங்களில், தைரியமாக நடந்து செல்ல கிறித்தவ நாடார் பெண்களால் முடியவில்லை என்பதே உண்மை. நாடார் பெண்கள் பாண்டிய நாட்டுப் பெண்களைப் போல மேலாடை அணியவே விரும்பினார்கள். அதற்காக இந்து நாடார்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த விலை சாமானியமானதல்ல; அதைக் குறைவாக மதிப்பிட முடியாது. வைகுண்ட சுவாமி கள் என்று மக்களால் அன்புடன் அழைக் கப்படுகின்ற முத்துக்குட்டி தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களே திருவிதாங்கூரில் நாடார் பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக்கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுத்தன. நாத்திகரான முத்துக்குட்டியை இன்று கடவுளாக்கியதால் அவர் வரலாற்றின் பக்கங்களிலிருந்தே மறைந்து விட்டார்.

திருவிதாங்கூர் நாடார் பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதும் மீண்டு வந்ததுமான வரலாறு இதுதான். நாடார் கள் இழி நிலையிலிருந்து மீள முத்துக் குட்டி முதற்காரணம்; பிற்காலத்தில் நாடார்களை முழுமையாக உயர்த்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

திருவிதாங்கூர் நாடார்களின் உண் மையான நிலை இதுதான். மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இதைக் கவனத்தில் கொண்டு பாடநூலில் திருத்தம் செய்ய வேண்டும்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page2/79605.html#ixzz30hnDORTB

தமிழ் ஓவியா said...

அரசை ஆட்டுவிக்கும் சாமியார்கள்!


இந்தியாவின் இருபத்தொன்பதாவது மாநிலத்தை தோற்றுவிக்க சட்ட வடிவம் கொடுத்து விட்டு நாடாளுமன்றம் ஆயுளை முடித்துக் கொண்டது.

மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங் களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 பேர் இவர்களின் செயல்பாடுகளால்தான் இந்தியாவின் குடிநாயகமும், இறையாண்மையும் காப்பாற்றப்படுவதாக வெகுசன மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால்அதுவல்ல உண்மை. கிராமத் திற்கு ஒரு சாமியாரும், தாலுக்காவிற்கு ஐந்துக்கு குறைவில்லாத கார்ப்பரேட் சாமியார்கள் தான் ஆளுகின்றனர். இந்த சாமியார்களின் காலில் விழுந்து ஆசிர் வாதமும் அரசின் பதவி உயர்வும் பெறாத அரசு அலுவலர்களோ காவல் துறையினரோ இல்லை என்றே கூறலாம். கெட்டுத் தப்பி குற்றப்பின்னணி வெளிப் பட்டு சிறைக்கோட்டத்திற்கு உள்ளே சென்றால், மிக உன்னதமான சொகுசு வாழ்வு, சிலகால நடைமுறைக்குப் பின் ஏகபோக உச்சகட்ட வரவேற்போடு வெளிவந்து விடுவது வாடிக்கையாகி உள்ளது. அண்மைக்கால சாமியார்களின் செயல்பாடு.

ஒரு மாநில அரசிடம் கூட இல்லாத இருப்புப்பணம் ஒரு சாமியாரிடம் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது. திட்டங்கள் தீட்டி, பட்ஜெட் போட்டு, வரி விதிப்பு செய்து ஆட்சியாளர்கள் கூட அரசு அலுவலர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி ஏற்றும்போது இழப்பு ஏற்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் அரசு இறுக்கமான முகத்தோடு அறிவிக்கிறது.

சாமியார்களின் வழிக்காட்டுதலின் பேரில்தான் ஆட்சியாளர்கள் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்கின்றனர். அண்மையில் வடஇந்தியாவில் உல்லால் கிராமத்தில் பாழடைந்த கோட்டைக்குள் 1000 கிலோ தங்கம் இருப்பதாக ஒரு சாமியார் மத்திய அமைச்சரை பார்த்து கூறி தேடி எடுக்கும்படி கட்டளையிட்டான். இது கனவு கண்ட புதையல். அதன்படி அமைச்சர் சகிதம் தேடுதல் வேட்டையை 12 நாள்கள்... முயன்ற சாமியாரின் கனவு வீணாகப் போய்விட்டது. சாமியாரின் கனவுக்கு மத்திய உள்துறைவரை கிடு கிடுத்து வேலை செய்தது என்றால் பாருங்களேன்.

ஒரு வேளை சேது சமுத்திரத் திட் டத்தை ஒரு சாமியார் கனவு கண்டதாக கூறினால் மாநில மய்ய அரசு வரிந்து கட்டிக்கொண்டு செய்யுமோ என்னவோ! தயவு செய்து ஏதாவது காவியின் கனவு காண வேண்டுவதாக...!

1992 ஆம் ஆண்டு பாபர்மசூதி இடிப்பு நிகழ்வதற்கும் இரு சாமியார்களின் நில அபகரிப்பு கோஷ்டி மோதலே காரணம் என்று ஓலன் என்ற ஆங்கில ஏடு சாதுக்களின் நில அபகரிப்புச் செய்திகளை வெளிக்கொண்டு வந்தது. இவர்களின் கைகள் கமண்டலமும், கையில் மூங்கில் குச்சியும், உத்திராட்ச மாலை பிடிக்கும் கைகளில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி களோடு தான் திரிவார்களாம்.

தமிழ் ஓவியா said...


சினிமா பட வில்லன் நடவடிக்கைகள் தான். துப்பாக்கி முழக்கம் கேட்காத நாளே இல்லை என பைசாபாத் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான தர்மேந்திர சிங் கூறுகின்றார். ஏதாவது ஒரு சாமியாரின் மீது புகார் மனு வராத நாளே கிடையாது. சாது குருக்களுக்குள் சண்டை, சிறுமிகள் மற் றும் பெண்களை தீண்டியது, போதைப் பொருள் உட்கொண்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்வது. இது போன்ற காரியங்கள் செய்வதற்கு சாமியாராக ஏன் இருக்க வேண்டும். பேசாமல் ரவுடிகளாக மாறிவிடலாமே? என்று வேதனையோடு கூறுகின்றார்.

பக்தர்களின் உள்ளத்தில் சாமி (கடவுள்)யை விட சாமியார்கள்தான் உயர்ந்தவர்கள் சாமியார்களுக்குத் தலை வர் குரு அவரே என்று அதிகாரங்களையும் கையில் கொண்டவர். ஆகையால் குருவின் காலைப் பிடித்து சீடனாக வேண்டும் பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அங்கு தான் குருவாகிவிட வேண்டும். இதுதான் தற்போதைய சாமியார்களின் நடவடிக்கை என்கிறார் சரயு நதிக்கரையிலுள்ள ராம்ஜானகி கோவில் மடத்தலைமை குருவான கிஷோர் சாஸ்திரி.

குற்றப்பின்னணி சாதுக்கள் என்னும் சாமியார்களை ஆள் ஆளுக்கு ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துபோட்டு வம்பு தும்பு செயல்களை நிகழ்த்துவது வாடிக்கை.

சாதுக்களாம் இவர்களுக்கு அகில பாரதிய வினர்ய மற்றும் சாமியார்கள் சங்கம் என்ற பெரிய அமைப்பே உள்ளது.

உஜ்ஜையினி மடத்தை சேர்ந்த திரிபுவன்தாஸ் தான் அயோத்தியில் நடக்கும் அனைத்து குற்ற சம்பவங் களுக்கும் மூலகாரணமாய் இயங்குபவர். ராமஜென்மபூமி சமிதியின் தலைவர் இராமச்சந்திர பரமஹம்சர், நிருத்திய கோபால்தாஸ் சாமியார் பெயரில் பல கொலை வழக்குகள் உள்ளனவாம். அதேபோல, அனுமான் காடி மடமும் கொலை மடமாம். மடத்தலைவர் பிரஹ லதாஸ் என்பவனை அங்குள்ள மக்கள் ரவுடிபாபா (குண்டாபாபா) என்றே அழைக்கின்றனர். அயோத்தியில் பார்ப் பனர்கள், தாக்கூர் மற்றும் யாதவ் சாதியைச் சேர்ந்த பூசாரியினர் அதிகம் உள்ளனர்.
நமது ஊரில் சாதி சங்கங்களைப்போல அங்கு சாதி மடங்களும் உண்டு. அதில் நாவூ கோவில், பதாயி கோவில், விஷ்வ கர்மா கோவில், சந்திரவிதாஸ்கோவில், ஹல்வாயி கோவில், தோபி கோவில், திரிகுப்தகோவில் என தங்களின் சாதிக்களுக்கு என கோயிலை உருவாக்கி அதற்கு பல நூறு ஏக்கர் நிலங்களுடன் மடங்களையும் உருவாக்கி விடுகின்றனர்.

தமிழ் ஓவியா said...


இதே கதை காஞ்சிபுரம் சங்கர மடத்திலும் திருவாளர் செயேந்திரர் அன்கோ சங்கரராமனை கோவிலுக் குள்ளே வெட்டிக்கொன்று, படுஜோரான வழக்கில் விடுதலையாகி சுப்பிரமணிய சாமி தலைமையில் ஊர் அறிய மெச்ச ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் சாமி அசுதோஷ் மகராஜ் என்ற சாமியார் இறந்து போனார். இருந்தும் அவர் ஜீவமரணம் அடைய வில்லை என அவரது பக்தர் அரியானா, பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் டில்லியிலிருந்து வருபவர்கள் கூறு கின்றனர். இவரும் மிகப்பெரிய கார்ப் பரேட் சாமியார் தான். சுமார் ரூ. 7 கோடி செலவில் இமயமலையின் பனிச்சிகரத் திற்கு சமமான சூழ்நிலையில் அவரது சமாதி அறை அமைக்கப்பட்டுள் ளது.இறந்தவருக்கு அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சாமியாருக்கு உலகம் முழுவதும் 110 அமைப்புகளும் ஆயிரக்கணக்கான கிளைகளும் ரூபாய் 1,70,000 கோடி சொத் துக்கள் உள்ளனவாம்.

தனியாக ஒரு சக்தி தங்களுக்கு இருப்பதாக கூறிக்கொண்டு மக்களையும், ஆட்சியாளரையும் மிரட்டி பணிய வைக்கின்றனர். சாதுக்கள் என்னும் சாமியார்கள். பணம் வந்து கொட்டோ கொட்டுவென கொட்டுகிறது. தங்கம் வெள்ளி என குவிகிறது.

கடந்தாண்டு புட்டபர்த்தி சாயிபாபா இறக்கும்போது தனது அறையில் பல கோடி தங்கக்கட்டிகளும், கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களாய் இருந்து எடுத்தது நாடே அறிந்த செய்தி. பல ஆயிரம் கோடிக்கு நிலம் வாங்கி, அரசு அனுமதி வாங்கி, ஒரு தொழிற்சாலை நிறுவினால் கூட இவ்வளவு சொத்தும், நகைகளும், ரொக்க பணமும் குவியாது. வரி, ஊதியம் தொழிலாளர் சிக்கல்கள் எல்லாம் வரும். ஆனால், சாமியார்கள் நடத்தும் ஆசிரமம், மடம், கோவில் பக்கம் யாரும் எட்டிக் கூடப் பார்க்க தைரியம் வரவே வராது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிர மம் நடத்திய சிரிப்பு நடிகரைப்போன்ற பிரேமானந்தா என்பவரின் காமக் களியாட்டம், கற்பழிப்பு கொள்ளை, கொலைகள் தோண்டத் தோண்ட மர்ம முடிச்சாக வெளிப்பட்டு மிகப்பெரிய சொகுசு பெருவாழ்வுக்கு (சிறை) தள்ளப் பட்டு, ஆடி, அடங்கி அங்கேயே மரண மடைந்தார். குட்டி சமஸ்தானத்தையே நிறுவி நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தம் போதிய அளவு செயல்பட்டிருந்தபோதும் இந்த சாமியார் களின் மோடி வேலைகள் குறைந்த பாடில்லை. மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு கடவுளும், அதன் மகிமையும் தான் என நம்புகின்றனரே தவிர, உழைப்பு உயர்த்தும். தன்னம் பிக்கையின்மையே சாமிகளின் பலமாக செயல்படுகின்றனர்.

சாமியார்களின் பல்வேறு தொழில் நுட்பங்களையும், பெயர் முறைகளையும் வைத்து செயல்படுகின்றனர். பீடிசாமியார், சுருட்டு சாமியார், கஞ்சா, சாராய சாமியார், கெட்ட வார்த்தை சாமியார், கட்டிபிடி சாமியார், வெற்றிலையில் மைபோடும் சாமியார், எலுமிச்சை மாலை சாமியார் எனப் பல்வேறு ரகச்சாமியார்கள் மோசடி யிலும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சாமியார்களாகத் தான் உள்ளார்கள்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் செவ்வாடை குரு என மாவட்டம், வட்டம் என கிளை மன்றங்களை அமைத்து மக்களை அழைத்துவர ஏஜெண்டுகள் மூலம் செயல்பட்டு மருத்துவக்கல்லூரி, உட்பட எல்லா கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றார். ஏன் என்றால் இவர் துவக்க நிலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்.
மேடவாக்கம் பகுதியில் யாகவா முனிவர் என்பவர் செயல்பட்டு சிறிய அளவு வசூல் வேட்டைக்குப் பின் மரணமடைந்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் ஆதீனம் என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நில உரிமையாளராகவும், சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களின் நிர்வாகியாக ராஜவாழ்வு வாழ்கின்றனர். திருவாவடு துறை திருப்பனந்தாள் ஆதீனங்களின் புதிய ஆதீனங்கள் நியமிக்கும்போது வெட்டுகுத்து கலவரமே.

மதுரை ஆதீனம் சற்று தூக்கல்தான். திருவண்ணாமலையிலிருந்து கருநாடகம் பிடதியில் பல ஆயிரம் ஏக்கரில் ஆசிரமம் பெரிய கார்பரேட் நிர்வாக சினிமா நடிகைகள் முதல் சீமான்கள் வரை புகலிடம். போதாக்குறைக்கு மதுரை ஆதினம் தத்து பிள்ளையாய் போய் சேர்ந்து பல கோடி கருப்பு வெள்ளை களில் கைமாறி திரும்ப பிடதி மடத்தி லேயே தஞ்சம். இதுபோல பெட்டிக்கடை ஆதீனங்கள் தமிழ்நாட்டில் பலபல.

கேரளாவில் கட்டிபிடி சாமியார் என்ற பெயரில் அமிர்தானந்தமயி என்ற பெண்சாமியார். கல்வி நிறுவனங்களில் கொடிகட்டிப் பறக்கின்றார். கள்ள நோட்டு அடிப்பவர் கூட வளர முடியாத வளர்ச்சி கண்டுள்ளவர்கள் சாமியார்கள்.

கர்நாடக மாநிலத்தில் மடங்களுக்கு நிதியும் மான்யமும் தற்போதைய அரசு நிறுத்தி விட்டது. மடங்களின் செயல் பாட்டினை அடக்கி ஒடுக்கும் நிகழ்வாக உள்ளது. நாட்டை ஆள அரசு இருக் கும்போது மோசடியை போர்த்திக் கொண்டு ஆன்மீ கம் என்ற பெயரால் மடங்களும் சாமியார்களும் செயல்படத் தேவையில்லை.

- இரா.முல்லைக்கோ, பெங்களூர்
தமிழர் முழக்கம் மார்ச்சு 2014

Read more: http://viduthalai.in/page4/79610.html#ixzz30hnZdMGf

தமிழ் ஓவியா said...


பெரியார் வழியை அறிந்திட்டால்.....


பல்லி சத்தம்
பக்தனுக்கு பரவசம் - ஆம்
நல் சகுணம்
பல்லிக்கோ அது
உல் தினம்
என்னை பார் யோகம் வரும்
கழுதை முகத்தினிலே
அவன் தலையில்
கழுதை இருந்தும்
மழை வேண்டி
புண்ணிய திரு நாட்டில்
கழுதைகளுக்கு திருமணம்
விதவைத் தன்மை கொண்டதனாலேயே
மணக்கோலத்தில் நின்றிட்ட
மகனே தாயை வணங்க
மறுத்திடும் கயமைத்தனம்
ஆன்மீகமும் அறிவியலே என்ற
பொய்மைவாத புரட்டுத்தனம்
பக்தியால் புத்தி அழிந்து
உறவையே இழந்து நிற்கும் - மடமைத்தனம்
இவையெல்லாம் அழிந்து போகும்
இக்கணமே பெரியார் வழியை அறிந்திட்டால்
அறிவில் தெளிவு உண்டாகும்.


- ஆறுமுகம், ஆசிரியர்
ப.க. துணைச் செயலாளர், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/79613.html#ixzz30hoQ5CR9

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கம் என்ன செய்தது?


திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்வில்லா நாக்குகள்சில பேசுகின்றன.

சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில் - அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தங்கும் இடம், உணவு, இலவசக் கல்வி அளிக்க முன் வந்தனர், திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்றால், அது என்ன சாதாரணமா? இதோ (ஏப்ரல் 28) குடிஅரசு இதழில் வெளிவந்த ஒரு விளம்பரம். (1937 ஏப்ரல் 18).

தியாகராய நகர் இல்லம்

(Theagaraya Nagar Home)

தியாகராய நகர், சென்னை
ஆதி திராவிட மாணவிகளுக்கு
இருப்பிடமும், உணவும், படிப்பும், நன்கொடை

மேற்படி இல்லம் 1937 ஜூனில் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தை ஒட்டித் துவக்கப்படும்.

2. அதில், கல்வியில் விருப்பமும், வேண்டிய அறிவுக் கூர்மையும், போதிய படிப்புத் தேர்ச்சியும், உள்ள கிறிஸ்தவர் அல்லாத ஏழை ஆதி திராவிடப் பெண்களுக்கு இருப்பிடமும், உணவும், நன்கொடையாக அளிக்கப்படும். படிப்பதற்கு அவர்கள் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3. அவர்கள் 1937 ஜூலை 1உயில் கீழேகுறிப்பிட்ட வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

வகுப்பு வயது வகுப்பு வயது
4வது 10 7வது 13
5வது 11 8வது 14
6வது 12

4. ஆதி திராவிடர் முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட தகுதியுடைய ஆதி திராவிடப் பெண்களை மேற்படி இல்லத்தில் சேரத் தூண்டவும், சேர்ப்பிப்பதற்கான துணை புரியவும் வேண்டப்படுகிறார்கள்.

5. சேர்க்கை விண்ணப்பங்கள் இப்பொழுது படிக்கிற பள்ளிக்கூடத்தின் மூலமாக அனுப்பப்பட வேண்டும். அவை இப்பொழுது முதலே பெறப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும். இன்னும் வேண்டிய விவரம் தெரிய விரும்புகிறவர்கள் நேரிலாவது, கடித ம் எழுதியாவது தெரிந்துகொள்ளலாம். தபால் வழி விடை விரும்புகிறவர்கள் தங்கள் கடிதத்துடன் தங்கள் விலாசம் எழுதி முத்திரையொட்டிய உறை வைத்து அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.

65-கி, சர். மகம்மது செ.தெ. நாயகம்
உஸ்மான் சாலை, (C.D. Nayagam)
தியாகராய நகர், சென்னை மேல்அதிகாரி

குறிப்பு: (1938 இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியான சுயமரியாதை இயக்கத்தலைவர்)

குறிப்பு: கிறித்தவர் அல்லாதார் என்று குறிப்பிடப் பட்டதற்குக் காரணம் அவர்களுக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் விடுதிகள் ஏராளமாக இருந்தன.

Read more: http://viduthalai.in/page7/79616.html#ixzz30homSCXC

தமிழ் ஓவியா said...


மோடியின் தந்திரம்


உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டி யிடும் நரேந்திரமோடி மனுதாக்கலில் வெவ்வேறு சமூகத்தைச்சேர்ந்த நால்வரிடம் பரிந்துரைக்க கையொப்ப மிடத் திட்டமிட்டது. அதன்படி பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பேரன் ஒரு கையொப்பம் போட்டார். பாரத ரத்னா பட்டம் பெற்றவரும் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தவருமான பிஸ்மில்லா ஹ்கான் குடும் பத்தினரிடம் ஒரு கையொப்பமிட்டு பெற முயன்றனர். அதனை நிராகரித்து விட்டனர் - அவரின் குடும்பத்தினர்.

Read more: http://viduthalai.in/page7/79615.html#ixzz30hovPfGW

தமிழ் ஓவியா said...

மூளையின் அபாரத்திறன்


- டாக்டர் வி. நிகோலயேவ்

மூளையின் அபாரத் திறன்தான் என்ன என்பது பற்றி டாக்டர் வி. நிக் கோலயேவ் கூறுவதை இக்கட்டுரை விளக்குகிறது.

சோவியத் நாட்டில் மெலிக்கெஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த என்ஜினீயரான யூசெஃப் புரோகோத்கோ என்பவர் எந்த எண்ணின் இரு மடங்கு. மும்மடங்குப் பெருக்கலையும் மனக்கணக்காகவே, நொடிப்பொழுதில் செய்துமுடிக்க முடி கிறது என்று சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது 10,15, 20 இலக்கமுள்ள எண்களின் பெருக்குத் தொகையையும் அந்த மனிதர் சில வினாடிகளில் கூறிவிடுகிறார் என்றும் அச்செய்தியில் காணப்பட்டிருந்தது. மனித மூளையின் திறனுக்கு, அதில் மறைந் திருக்கும் ஆற்றலுக்கு, இது ஓர் உதாரண மாகும். மூளையின் புறணிப் பகுதி 1400 கோடி நரம்பு ஸெல்களைக் கொண்டது என்று விஞ்ஞான ரீதியாக நிலை நாட்டப்பட் டுள்ளது. என்றாலும்கூட அவ்வளவு நரம்பு ஸெல்களும் சேர்ந்து 2 அல்லது 5 மில்லி மீட்டர் அடுக்காகவே உள்ளது என்றால் அவை எவ்வளவு நுண்ணியவை என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். மூளையின் வெண்மைப் பகுதிதான் அது. மூளையின் அமைப்பையும் நன்கறிந்து, அந்தத் தத்துவத்தின் அடிப்படையில் மின் னணுக் கணிதமானியொன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முற்பட்டபோது அந்த எந்திரத்தின் அளவு ஒரு பெரிய வீட ளவுக்குச் சென்று விட்டது.

தமிழ் ஓவியா said...

உடலின் எல்லாக் கிரியைகளுக்கும் ஏற்ப அவற்றை இணைத்து பணியாற்று கிறது மூளை. நீங்களும், நானும் 150 ஆண்டு காலத்திற்கு வாழ்ந்த போதும்கூட, மூளை அமைப்பின் அடிப்படையாகத் திகழும் நரம்பு இணைப்புக்களில் பாதி யைக்கூட நாம் பயன்படுத்தியிருக்க மாட் டோம். அதனால்தான் நாம் நம்மை ஒரு குறிப்பிட்ட தொழில் துறை வரையறைக் குள் அடக்கிக் கொள்ளக் கூடாது. நமது மூளையின் பரந்து விரிந்த திறனை கூடிய அளவு அதிகமாகப் பயன்படுத்த முற்பட வேண்டும். நமது நினைவாற்றலுக்குப் பயிற்சி யளித்து, கலை, விளையாட்டு, சமூகப் பணி ஆகிய பல்வேறு துறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடும்போது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு ஓஹோ என்று புகழ் வரலாம். அல்லத வராமலும் இருக்க லாம். அப்படி வராவிடில் அது கண்டு நீங்கள் ஏமாற்றமடைவதும் சரியல்ல. ஏனெனில் பல்வேறு துறைகளிலும் நீங்கள் உங்கள் ஆற்றலையும், திறனையும் வளர்த்துக் கொண்டால், நீங்கள் பிரதான மாக ஈடுபட்டுள்ள உங்கள் வேலையைச் சிறப்பாக உங்களால் ஆற்ற முடியும்.

மூளை வேலையின் நம்பகத் தன்மை யும், இழப்பிற்கு ஈடு செய்யும் அதன் திறனும் நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக் குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது; புகழ் பெற்ற பாக்டீரிய இயலாளரான லூயி பாய்ட்சருக்கு 46ஆவது வயதில் மூளை யின் வலது கோளத்தில் இரத்தப் பெருக்கு கண்டது. அதிலிருந்து சிகிச்சை பெற்று மீண்ட அவர் தொடர்ந்து தனது விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொண்ட தோடு 73 வயது வரை வாழ்ந்தார். நோய் கண்டு குணமடைந்த பின்னர் உள்ள அவரது வாழ்வுக் காலம் தான் மிகப் பயனுள்ள காலமாகவிருந்தது. அந்தக் கால கட்டத்தில் தான் அவர் வெறிநாய் கடிக்கான வாக்ஸீன் மருந்தைக் கண்டு பிடித்தார். அவர் இறந்த பின்னர், அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டது. அவர் இறப்பதற்கு 27 ஆண்டு களுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு நோயின் விளைவாக, அந்த விஞ்ஞானியின் வலது பக்க மூளை முழுவதுமே நசித்திருந்த தாகத் தெரிய வந்தது. ஆகவே, அவர் இறப்பதற்குமுன் 27 ஆண்டு காலமாக, மூளையின் வலது புறம் செய்திருக்க வேண்டிய அத்தனை பணிகளையும் இடதுபுறமே மேற் கொண்டு செய்து வந்துள்ளது என்பது புலனாயிற்று. தனியாக எடுத்துக் கொண்டால், மூளை யின் அடிப்படை அலகான நரம்பு ஸெல் அல்லது நியூரான் என்பது ஒரு மின்காந்த அஞ்சல் கருவியையோ, ஒரு ரேடியோ வால்வையோ அல்லது ஒரு ஒலி பரப்புக் கருவியையோ விட நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்பது உண்மை தான். ஆனால், மேற்சொன்ன தொழில் நுட்பக் கருவிகள், பழுதுபட்டு விடலாம்; அதன் காரணமாக அவற்றின் வேலை நின்று விடுகிறது. மூளையின் கூறுகளோ, எவை யேனும் பழுதுபட்ட போதிலும்கூட, பல லட்சம் நியூரான்கள் சேதமடைந்த போதுங் கூட, நரம்பு அமைப்புகளின் முழுப் பகுதியே சிதைவடைந்த போதும்கூட, மொத்தத்தில் வேலை செய்யும் ஆற்றலை இழப்பதில்லை. அதனால்தான், ஏதேனும் விபத்துக்களின் விளைவாக பார்வை யையோ, பேச்சையோ இழந்தவர் சில வேளைகளில் மீண்டும் அவற்றைப் பெற்று விடுகின்றனர்.

தங்களுக்குச் சாதாரணமாக உள்ள வேலைகளைக் காட்டிலும், பெருமளவு அதிகப்படியான வேலை செய்யும் ஆற்றல் நரம்புக் கேந்திரங்களுக்கு உண்டு. உதாரணமாக, இருதய வேலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி, மெல்ல மெல்ல உறுப்புக்களின் இயக்கத் தையும் கட்டுப்படுத்தத் தொடங்கலாம்; அதே போன்று பிற உறுப்புக்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் கேந்திரம் இருதயம், இரைப்பை ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கூடும்.

வற்றாத ஆற்றல் நிறைந்த மனித மூளை உண்மையிலேயே ஓர் அற்புதப் பொரு ளாகும்.

Read more: http://viduthalai.in/page8/79618.html#ixzz30hp6qIhw

Unknown said...

கண்ணகி, பார்ப்பனர்களை தவிர்த்து மதுரையை எரித்தாள் என கேள்விப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து அந்த பாடல் இடம்பெற்ற வரிகளையும் காண்டம் காதையையும் தந்துதவுவீர்களா?

Unknown said...

please send to fmathuranayagam@gmail.com

தமிழ் ஓவியா said...


எய்ம்ஸ் நிறுவனம் இடஒதுக்கீட்டைப் புறக்கணிப்பதா? போராட்டத்தில் குதித்தனர் மருத்துவர்கள், மாணவர்கள்


டில்லி.மே4- எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாண வர்கள் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் எய்ம்ஸ் நிறுவனத்தில் பணிநியம னத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற மறுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத் தில் குதித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிவிய லாளர்கள் முன்னேற்ற அமைப்பு, உரிமைகள் மற் றும் சமத்துவத்துக்கான அமைப்புடன் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது. போராட் டத்தின் நிறைவாக இருநபர் குழு போராட்ட நோக்கங் கள் மற்றும் தீர்மானங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கி, இந்த விவகாரத் தில் புதிதாக அமையக்கூடிய அரசுடன் சேர்ந்து நட வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டது.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாண வர்கள், வர்தமான் மகாவீர் மருத்துவக்கல்லூரி மாண வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். எய்ம்ஸ் கல்லூரி சார்பில் மருத்துவர் எல்.ஆர்.மூர்மு, ஜவஹர் லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர் விகாஸ் பாஜ்பாய், மவ் லானா ஆசாத் மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத் துவர் பி.ரத்தோர் ஆகியோர் போராட்ட நோக்கங்களை விளக்கி உரை ஆற்றினார்கள்.

உரையில், இட ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத் துவதில், விதிமுறைகளை கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத்தழுவியுள்ளோம் என்றனர். மேலும், சிறிய அளவில் சாலைவிதிகளைப் பின்பற்றாதவர்கள்மீதுகூட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், அதைவிட அதிகப்படியான குற்றமாக, அரசியலமைப்பு வழங் கியுள்ள அம்சங்களையே மீறக்கூடியவை தண்டிக்கப் படாமல் போகிறதே என் றும் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

தீர்மானத்தில், நாங்கள் சுகாதாரத்துறை, தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி,எஸ்டி) தேசிய ஆணை யம், இதர பிற்படுத்தப்பட் டவர் நலன்களுக்கான தேசிய ஆணையம், நாடாளு மன்றக் குழு ஆகிய அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களி டம் மனுக்கள் கொடுத்துள் ளோம்.

அரசியலமைப்பு வழங்கும் இதர பிற்படுத் தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் ஆகியோருக்கு பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை வழங் காமல் இருப்பதை விளக் கமாகச் சுட்டிக்காட்டியது டன், இடஒதுக்கீடுக் கொள் கையை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத் துரைத்தோம். மேலும், இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டோம் -இவ்வாறு போராட்டத் தீர் மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79716.html#ixzz30nEXApTD

தமிழ் ஓவியா said...


பாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு


டில்லி, மே 4- பாரதீய ஜனதா கட்சியில் மோடி என்ற ஒற்றை மனிதரின் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அக் கட்சியில் இருந்து 2ஆவது முறை யாக நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா வின் வேட்பாளராக ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித் திருந்தார். தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் தமது சொந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்.

ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த்சிங், வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவில் ஒரு நபர் ராஜ்ஜியம் நடந்தது.

ஆனால் தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து மோடி அலை எதுவும் வீசவில்லை. நான் மத்தியில் அமையப் போகும் எந்த அரசையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பொறுத்து நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுப்பேன். இவ்வாறு ஜஸ்வந்த்சிங் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79711.html#ixzz30nEro4sE

தமிழ் ஓவியா said...


குற்றத்தை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ஆ.இராசா


புதுடில்லி, மே 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். காவல்துறையின ரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச் சர் ஆ.இராசா தற்போது பிணையில் உள்ளார். நாடா ளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டில்லி யில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்தி ருப்பதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளி யாகி இருந்தது. அன்றே நான் நீதிபதியை சந்தித்து அந்த பத்திரிகைச் செய் தியை அவரிடம் காட்டி னேன்.

வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ டெபாசிட் செய்யப்பட்டி ருப்பதை சி.பி.அய். கண்டு பிடித்தால் நான் இந்த வழக்கை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்கி றேன். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்.

இதை வருமான வரித் துறைக்கும், மத்திய அம லாக்கப் பிரிவு இயக்குநர கத்துக்கும், சி.பி.அய்.க்கும் சவாலாக விடுக்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/79679.html#ixzz30nGnGdp4

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு
எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி

அமேதி, மே 5- பிரமாண்ட கட்-அவுட், போஸ்டர் கள் அடித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதற்கு பாஜ கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சொந்த தொகுதியான அமேதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: இரண்டு, மூன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் ஏராளமான பணத்துக் காகத் தான் பாஜ அரசியல் செய்கிறது. அப்படியில்லை என்றால், பல கோடி செலவு செய்து பெரிய பெரிய கட் அவுட் வைப்பதற்கும், நாடு முழுவதும் போஸ்டர் அடிப் பதற்கும் அவர்கள் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என் பதை சொல்வார்களா? இதெல்லாம் என்ன மோடியின் பணமா?

குஜராத்தில் மோடி ஒரே ஒரு தொழில் நிறுவனத்துக்கு ரூ.26,000 கோடி மின்சாரத்தையும், ரூ.15,00 கோடி நிலத் தையும் வழங்கியிருக்கிறது. நான் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரி கிடையாது. ஆனால், அவர்கள் தங் களுக்கான வசதிகளை விதிமுறைப்படியும் நேர்மையாகவும் பெற வேண்டும். குஜராத்தில் அதானி மட்டுமே ஆதாயமடைந்துள்ளார். ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மோடியின் சில போஸ்டர்களில் அவரது ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என கூறியிருக் கிறார்கள். பெண்களுக்கு ஏற்கெனவே அதிகாரம் உண்டு. அவர்களுக்கு முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பின் பெண்களே அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம்

கொல்கத்தா, மே 5- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி யுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வடக்கு கொல்கத்தாவில் நடை பெற்ற பிரச் சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித் துள்ளார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசிய தாவது: மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வங்கத்தில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். வங்கத்தில் வசிக்கும் உ.பி. மற்றும் பிகார் மாநில மக்கள் இம் மாநிலத்தின் ஒரு அங்கமாக தான் கருதப்பட்டு வருகின் றனர். அரசிய லுக்காக மக்களை நாங்கள் பிரிக்க மாட் டோம். மதம் மற்றும் ஜாதி பற்றிய நம்பிக்கை கொள்ள லாமல் மக்களை பற்றி மட்டுமே தாங்கள் கவலைப் படுகின்றோம். இனி எக்காலத்திலும், என்றும் பா.ஜ.க. வுடன் கூட்டணி சேரமாட்டோம் என மம்தா கூறினார்.

மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ்

சான்ட் கபீர் நகர், மே 5- 56 அங்குலம் (இஞ்ச்) மார்பள வுடைய மோடியை கட்டுப் படுத்த எங்கள் கட்சி யில் பல பயில்வான்கள் உள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

கலிலாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:- 56 அங்குலம் மார்பள வுடன் சுற்றும் மோடியை கட்டுப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்களால் மட்டுமே முடியும். அவரை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட குஜராத்தில் நலத்திட்டங்கள் இல்லை. குஜராத்தில் வசதிகள் குறைவு. மோடி அலை என்பது வெறும் காற்றுதான். குஜராத் முன்மாதிரி என்று பொய்யான தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அலை மட்டுமே தரையில் வீசுகிறது. மோடி அலை என்பது வானத்தில் மட்டும்தான். தேர்தலுக்குப் பிறகு முலாயம் சிங் தலைமையிலான 3-ஆவது அணி ஆட்சி அமைக்கும்.

மதவாதியாக இருப்பது எளிது. ஆனால் மதச்சார்பற்று இருப்பது மிகவும் கடினம். சமாஜ்வாடி அரசு கிராமங் கள், ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக அடிமட்ட அளவில் பாடுபடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். குஜராத் போன்று பிரகாசமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை மாற்ற 56 அங்குலம் மார்பளவு கொண்ட நபர் தேவை என்று கடந்த மாதம் தேர்தல் பிரச் சாரத்தில் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/79753.html#ixzz30tQ3V8pC

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் தூக்கிய போர்க் கொடி!


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு முக்கியமான போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில், விதிமுறைகளைக் கையாளுவதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத் தழுவி யுள்ளோம். சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால்கூட சட்ட ரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள் பவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? என்ற நியாயமான வினாவை எழுப்பியுள் ளனர் - போராட்டக் குழுவினர். இது குறித்து அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது.

சுகாதாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், நாடாளுமன்ற நிலைக் குழு ஆகிய அனைத்து அதிகார பூர்வ அமைப்புகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணி நியமனங் களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியதுடன் இடஒதுக்கீட்டை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

மேலும் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக சட்டரீதியாக ஆக்கப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் நிறுவனம் இப்படி திமிரடியாக - சட்ட விரோதமாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல!

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் சரி, அதன்பின் கல்வியிலும் இடஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்ட கால கட்டத்திலும் சரி, எய்ம்ஸில் படித்துக் கொண்டிருந்த உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்களும், பேராசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு.

என்ன கொடுமை என்றால், அந்தச் சட்ட விரோத போராட்டத்திற்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் அனைத்துப் பொருள்களையும், (மின்சாரம் உட்பட) பயன்படுத்திக் கொண்டனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளையும்கூட அவர்கள் கவனிக்கத் தயாராக இல்லாத குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பது வெட்கக் கேடானதாகும்!

மருத்துவ சோதனையின் போது 49 குழந்தைகள் இறந்தன எனக் குற்றச்சாற்று எழுந்ததுண்டு.

அவர்கள் பணி செய்யாத அந்த வேலை நிறுத்தக் கால கட்டத்திற்கு சம்பளத்தை நிறுத்தியபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று சகாயமான ஆணையை பெற்றுக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரியது.

ஒரு கால கட்டத்தில் இவர்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால். இவர் பிஜேபி ஆட்சியில் 5 ஆண்டு காலம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டவர் (3.7.2003 - 3.7.2008).

2007 நவம்பர் 28 இல் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கான ஓய்வு வயது 65 என்று சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் வேணுகோபால். இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக இயக்குநர் வேணுகோபால் செயல்பட்டது பற்றியெல் லாம் எடுத்துக் கூறப்பட்டது. பார்ப்பனர் வேணுகோ பாலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர் பி.ஜே.பி. பார்ப்பனரான அருண்ஜெட்லி. (இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது!)
எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டனர் இழிவுபடுத்தப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குமுறினர் என்றால், அங்கு நிலவிய சமூக அநீதியின் கொடுங்கோன்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே!

அனில்குமார் மீனா, பால் முகுந்த்பார்தி, வினேஷ் மோகன் காவ்லே ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது!

ஆட்சியதிகாரம் யார் கைகளில் இருந்தாலும் நிருவாக இயந்திரம் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கைகளில் இருந்தால் இந்த நிலைதான் நீடிக்கும் என்பது வெளிப்படை.

மத்திய தேர்வாணையமே இடஒதுக்கீடு வழங்கு வதில் குளறுபடிகள் செய்யவில்லையா? திறந்த போட் டிக்கான இடங்களைமுதலில் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களை அவர் களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதானே சட்ட ரீதியான நிலைப்பாடு!

இதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, திறந்த போட்டியென்றாலே இடஒதுக்கீடே இல்லாத உயர் ஜாதியினருக்கு என்று ஆக்கிச் செயல்படுத்த வில்லையா?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் இப்படி சட்ட விரோதமாக நடக்கும் பொழுது, பெரும்பான் மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சட்டப்படியான உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடிட என்ன தயக்கம்?

டில்லியில் எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் சமூக நீதி உரிமைக்காக வீதிக்கு வந்து விட்டனர். இது நாடெங்கும் பரவட்டும்! பரவட்டும்!!

Read more: http://viduthalai.in/page-2/79744.html#ixzz30tQWAVo7

தமிழ் ஓவியா said...


நடவடிக்கைபார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய் வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. - (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/79742.html#ixzz30tQe2iCt

தமிழ் ஓவியா said...


அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!


குழந்தைகள் பழகு முகாம் - 2014 தொடக்கம்

அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளிடம் பேச்சு!


தஞ்சை, மே 5- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமின் தொடக்கவிழாவில் சொந்தமாக சிந்திக்க கற்றுத் தரப் போகிறோம் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.

குவிந்தனர் மழலைப் பட்டாளங்கள்!

நான்காவது ஆண்டாக நடைபெறும் பழகு முகாமில் மொத்தமாக 209 பெரியார் பிஞ்சுகள் குவிந்துவிட்டனர். 150-க்குள் திட்டவட்டமாக சுருக்கிவிட வேண்டுமென்று பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சி செய்தும் பெரியார் பிஞ்சுகளின் அளவு கடந்த ஆர்வத்தால் இலக்கை விஞ்சினர்.

இதில் 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் A-(ADOLESCENT) என்றும் மற்றவர்கள் K-பிரிவு (KIDS) எனவும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டிலும் 15 பேர் கொண்ட உட் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர் (VOLUNTEERS) நியமிக்கப்பட்டனர். 13-வயதுக்கு மேற்பட்டோரில் பெண் கள் 35, ஆண்கள் 38 ஆக 73 பேரும், குழந்தைகள் பிரிவில் பெண்கள் 53, ஆண்கள் 83 ஆக 136 பேருமாக மொத்தம் 209 பேர் ஆவர்.

சிட்டுக்குருவிகளுடன் நடைப்பயிற்சி

பதிவுகள், குருதிப் பரிசோதனை முதலியவை முடிந்த பிறகு சென்னை அரங்கநாதன் விடுதியிலிருந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் பெரியார் பிஞ்சுகளின் நடைப்பயிற்சி தொடங்கியது.

வெயிலுக்கு குடை பிடித்த மழை மேகங்கள்

பெற்றோர்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாகி நின்ற பெரியார் பிஞ்சுகளுக்கு இயற்கையும் அருமையாக ஒத்துழைத்தது. சுளீரென்று அடிக்க வேண்டிய வெயிலை தடுக்கும் விதமாக கருநிற மேகங்கள் குடையாக பரந்து விரிந்து சுற்றுச்சூழலையே சில்லென்று மாற்றிவிட பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் சிறகடித்தனர்.

தொடக்க விழா

காலை உணவுக்குப்பிறகு சிக்மண்ட் ஃபிராய்டு அரங் கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. பவர் அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோவிந்தராஜி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்திப் பேசினார். திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் நன்றி கூறி தொடக்க விழாவை நிறைவு செய்தார்.

சிந்திக்க கற்றுத் தருகிறோம்

முன்னதாக தொடக்கவிழாவில் பேசிய பேராசிரியர் பர்வின் இந்த பழகு முகாமானது எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள் கிறோம் என்று குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தங்களை நம்பி ஒப்படைத்ததற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பிஞ்சுகளிடம் கலகலப்பாக உரையாடினார். அப்பொழுது தான் புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப்படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும், அவரைப்போல, ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போல, பழகு முகாமின் ஆறு நாட்களும் நாங்கள் உங்களுக்கு சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல்படி தொடர்ந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் கல்வி வளாகங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/79738.html#ixzz30tRfLFx4

தமிழ் ஓவியா said...

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தி லான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட் டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலி பிளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மை யாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும். ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.

மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSMLCdn

தமிழ் ஓவியா said...


கோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு...

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.

இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற் போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.

தர்பூசணி: தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.

அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்ற வற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும். கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை சாறு: திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSTPE3U

தமிழ் ஓவியா said...

குளிர வைத்த தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான நீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மலேரியாவை குணமாக்கும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தோ அல்லது வெல்லம் கலந்தோ ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் என கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை குடிக்கும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து குடிப்பதால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து குடித்தால் மலேரியா நோய் குணமாகும். எலுமிச்சை சாறுடன் வெள்ளை வெங்காயம், கற்பூரம் சேர்த்து குடித்தால் காலரா குணமாகும்.

உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்-வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSeS0Rx