Search This Blog

18.5.14

பெரியார் பிறந்த தமிழ் மண்ணின் இயல்பு- பகுஜன்னா - சர்வ ஜன்னா?

பகுஜன்னா - சர்வ ஜன்னா?

உத்தரப்பிரதேசத்தில் 2007ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மாயாவதி வேட்பாளர்களாக தாழ்த்தப்பட்ட மக்களைப் புறந்தள்ளிவிட்டு, அதிக அளவில் பிராமணர் களுக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

அடுத்து வந்த 2012 தேர்தலில் கட்சி படுதோல்வி அடைய, அதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது நடக்கும் தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 40 தொகுதி களில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுததப் பட்டோர் அல்லாத உயர் ஜாதியினரை வேட் பாளர்களாக நிறுத்தியிருக்கிறார்.

அதில் பெரும் பாலானவர்கள் பிராமணர்கள்; கான்ஷிராம்  தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின்  பேனர், போஸ்டர்களில் அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, சாகு மஹாராஜா, ஜோதிபாபூலே ஆகி யோரின் படங்கள் கட்டாயம் இடம் பெறும்.

ஆனால், மாயாவதி வந்த பிறகு சமூக நீதிப் போராளி பெரியாரின் படத்தை அப்புறப்படுத்தி விட்டார். பெரியார் கடைசிவரை பிராமணர்களுக்கு எதிராகப் போராடினார். படத்தைப் பயன்படுத்தினால் பிராமணர்களின் வாக்கு கிடைக்காது என்று அதற்குக் காரணம் சொல்லு கிறார்கள்.

85 சதவிகித மக்களான தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி 15 சதவிகிதமே உள்ள  பிராமணர்களுக்கான கட்சியாக மாறி விட்டது.

அதனைக் கண்டித்துத்தான் நாங்கள் பிரமோத் குரீல் எம்.பி. தலைமையில் பகுஜன் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் கட்சியில் இருந்து வெளியேறாமல் தனியாக இயங்குகிறோம் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளரும், உ.பி.யில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவருமான ஜீவன்குமார் கூறி இருக்கிறார்.

இது ஒரு முக்கியமான கருத்தாகும். கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி என்று உருவாக்கியதே - தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினரை ஒருங்கிணைந்த இந்த நாட்டின் பெரும் பான்மை மக்களுக்கான அமைப்பாகும்.

இவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பெரும்பான்மையான மக்கள். இந்தப் பெரும்பான்மை மக்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்று எண்ணினார்.

எண்ணியதோடு அல்லாமல் அதன் அடிப்படையில் ஓர் ஆட்சியையும் நிறுவி, அதனை  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணியான மாயாவதியின் கையிலும் ஒப்படைத்தார்.

ஆனால் மாயாவதி என்ன செய்தார்? பகுஜன் சமாஜ் கட்சி என்பதை சர்வ ஜன் என்று ஆக்கி கான்சிராமின் சூத்திரத்தையே சுக்கல் நூறாக உடைத்தெறிந்து விட்டார்.

கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு பார்ப்பனரையே நியமிக்கும் அளவுக்குத் தடுமாறி விட்டார்.

இதன் காரணமாக அக்கட்சிக்குப் பேராதர வாகவும் ஆணி வேராகவும் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள்  கட்சியைக் கைக் கழுவி விட்டனர் - அதன் விளைவை இப்பொழுது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காண முடிகிறது.

ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 21 பார்ப்பனர்களுக்குத் தேர்தலில் நிற்க வாய்ப் பளித்தார். வேறு எந்த கட்சியும் இந்தளவுக்குக் கொடுக்கவில்லை.

பொதுவாக பாரதீய ஜனதா என்றாலே அது பார்ப்பன ஜனதா என்ற எண்ணம் பொதுவாக நிலை கொண்ட ஒன்றாகும். அக்கட்சியின் மிக முக்கிய பொறுப்பாளர் களாக இருக்கக் கூடியவர்கள், செய்தித் தொடர்பாளர் கள், பதவிகளில் வீற்றிருப்பவர்கள் எல்லாமே பெரும் பாலும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவது கண் கூடாகும்.

அதனால்தான் பிற்படுத்தப்பட்டவர் என்று கூறப்படும் நரேந்திரமோடியை, திருவாளர் சு.சாமி பிராமணராகப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

மோடியும் நிஜப் புலியைவிட, வேடம் தரித்தபுலி அதிகமாகக் குதிக்கும் என்ற இலக்கணத்துக்கேற்ப நடந்து கொள்ளக் கூடியவராக இருக்கிறார். (ஆட்சிக்கு வந்த பின்னர் எப்படி இருக்கிறார் என்பதைப் பார்க்கப் போகிறோம்).

அக்கட்சியில் உள்ள ஆதிக்கவாதிகளான பார்ப் பனர்கள் தாங்கள் எதிர்ப்பார்க்கும் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கின்ற வரையில்தான் பொத்திப் பொத்திப் பேசுவார்கள்; அதில் ஓர் இழை பிசகினாலும் எந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள் என்று சொல்ல முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி.க்குத் தலைவராக ஒரு கட்டத்தில் இல. கணேசன் போன்ற பார்ப்பனர்களை தலைமை இடத்தில்  வைத்திருந்தனர் என்பது உண்மைதான்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணின் இயல்புக்கு (Soil Psychology) அது ஒத்துவராது என்பதால் தான் டாக்டர் கிருபாநிதி, சி.பி. இராதாகிருஷ்ணன், பொன் இராதாகிருஷ்ணன்களை அப்பொறுப்பில் அமர்த்தினார்கள் என்பதுதான் உண்மை.

பி.ஜே.பி. சார்பில் தொலைக்காட்சிகளில் வக் காலத்து வாங்கும் அந்த இரு பெண்மணிகள்கூட அந்த இடங்களைப் பிடிப்பதற்கும் அக்கட்சியில் சில பொறுப்புகளில் அமர்த்தப்பட்டதற்கும்கூடக் காரண மாக தமிழ் மண்ணின் இந்த இயல்புதான் என்பதை நினைக்க வேண்டும்.

பி.ஜே.பி.யாக இருந்தாலும், அதன் கூட்டணியாக இருந்தாலும் ஒரே ஒரு பெண்ணைக்கூட வேட்பாளராக தமிழ்நாட்டில் நிறுத்த முன்வரவில்லை;  இதற்குக் காரணம் என்ன என்பதை அந்தப் பெண்மணிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்;

இந்துத்துவாவில் பெண்களுக்குரிய இடம் என்னவென்று தெரிந்திருந்தால் இதற்கான காரணத்தை வெகு எளிதாகவே தெரிந்து கொண்டு விடலாம்.

                         ---------------------------"விடுதலை” தலையங்கம் 17-5-2014

42 comments:

தமிழ் ஓவியா said...


தேர்தல் முடிவுகள் குறித்து


தேர்தல் முடிவுகள் குறித்து தமிழர் தலைவர்
கலைஞர் அறிக்கை, பேராசிரியர், மு.க. ஸ்டாலின், முதல் அமைச்சரின் பேட்டிகள்!

சென்னை, மே 17- தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு :

மிகப்பெரிய அதிர்ச்சித் தோல் வியை நமக்குத் தந்த இந்த தேர்தல் முடிவுகள் நமது தேர்தல் ஜனநாயகத் தில் புதியதல்ல; வழமையானதுதான்.

இது மக்கள் தீர்ப்பு என்பதால் அதை மனம் தளராது ஏற்று, மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிப் பெற்ற அனைவருக்கும், கட்சி - ஆட்சி தலைமையேற்போருக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் - கொள்கைகளில் மாறுபட்டாலும் கூட!இதன் விளைவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக அமைந்தால், அதனை என்றும் வரவேற்போம்!இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

கலைஞர் அறிக்கை

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி வாய்ப்பினை முழுவதுமாக இழந்திருக்கின்றது.

மக்களின் இந்த முடிவை, மக்கள் குரலே மகேசன் குரல் என்ற ஜனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் திராவிட முன் னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற தோல்வியையும் சந்தித்திருக்கின்றது; தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பெறாத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது. வெற்றி கண்டு வெறி கொள்வது மில்லை, தோல்வி கண்டு துவண்டு போவதுமில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியவாறு, வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதியாக பெறக் கூடிய வகையில் எங்கள் தொண்டினைத் தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

இந்தத் தேர்தலில் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க. அணியினருக்கும், குறிப்பாக பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் க. அன்பழகன்

எங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. தோல்விக்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை என்றார் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்.

தளபதி மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவு மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். தேர்தல் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். தி.மு.க. மக்கள் பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்றார் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

முதலமைச்சர் பேட்டி

கேள்வி: மத்திய அமைச்சரவையில் இடம் பெறு வீர்களா?

முதல்வர்: அப்படிஒரு சூழ்நிலை இல்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

முதல்வர்: தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

- முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா
அளித்த பேட்டி 16.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/80424.html#ixzz321X8sfsB

தமிழ் ஓவியா said...


குறையில்லாமல்...


மனக்குறை இல்லாமல் வாழ வேண்டு மென்றால் வசதியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழ வேண்டும். - (விடுதலை, 10.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80435.html#ixzz321XyAo5D

தமிழ் ஓவியா said...


தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜினாமா


திரு.ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 04.07.1929ஆம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா/நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்கு களுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகின்றேன்.

நிற்க, மேற்படி 4ஆம் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவ தானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும்,

மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோத மானதென்றும் நான் அபிப்பிராயப்படுவதாலும் அத்தீர்மானம் கமிட்டியில் ஒரு சமயம் நிறைவேறிவிடும் பட்சம் என் போன்றவர்கள் கமிட்டியிலிருந்து விலகிக் கொள்வது தவிர வேறு வழியில்லாததாலும், அது கமிட்டியில் விவாதத்தில் இருக்கும் சமயத்தில் நான் ஆஜராகி இருந்து எனது அபிப்பிராயத்தை மற்ற கமிட்டி அங்கத்தவர்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எனது கடமையாகும்.

ஆனால் எதிர்பாராத சம்பவங்களால் அந்த சந்தர்ப்பம் எனக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆதலால், இந்த நிலையில் நான் இந்தக் கமிட்டியில் என்னுடைய மெம்பர் பதவியையும், வைஸ் பிரசிடெண்டு பதவியையும் ராஜினாமா கொடுத்து கமிட்டியிலுள்ள எனது தொடர்பை நீக்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லை.

எனவே திரு.பிரசிடெண்டு அவர்களும், கமிட்டி மெம்பர் கனவான்கள் அவர்களும் தயவு செய்து எனது ராஜினாமாவை அங்கீகரித்துக் கொள்ள வேணுமாய் தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

(ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் வகித்த வைஸ்பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா செய்து எழுதிய கடிதம் - குடிஅரசு - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80422.html#ixzz321YfN3o9

தமிழ் ஓவியா said...

சென்னைக் காங்கிரஸ் கமிட்டி

இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங்களி லெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதாரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டுபோய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது.

அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம் அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைக் கன்னாபின்னா என்று வையச் சொன்னாராம்.

கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து தேர்தலை நடத்தி இருக்கின்றார்கள் வழக்கம்போல் அய்யங்கார் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையார் என்கின்ற முறையில் அத்தேர்தலை செல்லுபடி அற்றது என்று சொல்லப் போகின்றார்கள் என்பது உறுதி. எனவே காங்கிரஸ் என்பது திரு. சீனிவாசய்யங்காருக்கும் அவர்களின் தாசர்களுக்கும் கூலிகளுக்கும் மாத்திரம்தான் சொந்தமேயன்றி மற்றபடி பொது ஜனங்களுக்கு அதில் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இனியும் என்ன சாட்சி வேண்டும்.

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 21.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80427.html#ixzz321Z4xZQo

தமிழ் ஓவியா said...


திரு.சொ. முருகப்பர்


திரு. முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையைப் பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.

நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலானதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல.

அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும். கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்தத் தியாக புத்தியும், வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகத வல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக!

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZBdTxJ

தமிழ் ஓவியா said...

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படா தென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம்தான் கூலிகிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப்பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணிகளுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்று சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங்கொள்ளத் தொடங்கினார்கள்.

சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரச்சாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாக உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையைத் தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு இப்போதுதான் திரு.காந்தி அவர்கள் கண்விழித்து இதற்கு ஏதாவது வேறு ஏற்பாடு செய்யலாமா? என்று யோசிக்கத் தொடங்கி இருக்கின்றார்.

அதாவது சன்னமானதும் அதிக நீளமானதுமான நூல் நூற்கும் படியான புதிய கையந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்குச் சன்மானங்கள் செய்வதற்கு ஆக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாக வெளியிட்டிருக்கிறார்.

இது பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும் எப்படியாவது இப்போதைய கதர் நிலை இப்படியே தான் இருக்க வேண்டும் என்றும், இதனாலேயே தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய வேறொன்றினாலும் முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருந்த முரட்டுப் பிடிவாதம் சற்று அசைவு கொடுக்க நேர்ந்ததோடு சரக்கு பிரதானமே ஒழிய செட்டி பிரதானமல்ல என்கின்ற பழமொழிப்படி காரியத்தின் பலனைத் தான் பொது ஜனமக்கள் கவனிப்பார்களே ஒழிய மகாத்மா சொல்லுகின்றார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் காலம் மலையேறிவிட்டதென்பதையும் இக்கண்விழிப்பு நன்றாய் எடுத்துக் காட்டுகின்றது. தவிர இப்போதுள்ள கதர் திட்டத்தில் கண் மூடி நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் குருட்டுப் பிடிவாதத்தை விட்டுவிட்டு அதில் உள்ள அனுபவத்திற்கும் இயற்கைக்கும் ஒத்துவராத தன்மைகளை மாற்ற முயற்சிப்பதோடு திரு.காந்தி அவர்களின் இந்தப் பிரயத்தனத்திற்குச் சற்று உதவி செய்வார்களாக.

- குடிஅரசு - கட்டுரை - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80423.html#ixzz321ZKZxyn

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு விழா நினைவலைகள்

பாரதி விடுதலைக் கழகத்தார் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரைச் சந்தித்து பாரதி பாடல்களை நாட்டு டமையாக்க வேண்டும் என்ற விண்ணப் பத்தை அளித்தார்கள். அப்படிச் செய்வ தற்கு முன் பாரதியின் வாரிசுகளிடமிருந்து இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டும் என்று சொன்னார் ஓமந்தூரார். இந்தச் செய்தி டி. எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மூலமாக நாரண. துரைக் கண்ணனை அடைந்தது. பாரதி குடும்பத்தாரை நன்கறிந்த பேரா சிரியர் அ. சீனிவாச ராகவனுக்கு உடனே தந்தி கொடுத்து வரவழைத்தார்கள். கலை ஞர் டி. கே. சண்முகம், வல்லிக்கண்ணன், திருச்சி வானொலி நிலையத்தைச் சேர்ந்த மு. கணபதி, அசீரா, நாரண. துரைக் கண்ணன் ஆகிய ஐவர் அடங்கிய குழு செல்லம்மாவைப் பார்ப்பதற்காகச் சென்றது. செல்லம்மாவிடம் விளக்கிச் சொன்னார்கள்.

எனக்கு இந்த அம்மையைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நன்றி உணர்ச்சி மேலெழும். பாரதியாருடைய எழுத்து மேசையின் மீது தாளையும் பேனாவை யும் வைப்பார்களாம். வெற்றிலை பாக்கும், செம்பு நிறைய காபியும் வைப் பார்களாம். வீட்டில் ஒன்றும் இல்லை ஏதாவது எழுதி, பத்திரிகைக்கு அனுப்பு என்பதற்கான குறிப்பு அது. அப்படி இந்த அம்மை எழுது எழுது என்று தூண்டா திருந்திருந்தால் எத்தனை அரிய எழுத் துக்கள் எழுதப்படாமலேயே போயிருந் திருக்குமோ!

மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். ஒப்புதல் கடிதத்தையும் எழுதிக் கொடுத் தார்கள். அந்தக் கடிதத்தை அப்படியே கீழே தருகிறேன்.

நாள் 23.4.1948, இடம் திருநெல்வேலி கைலாசபுரம்.

ஓம். கனம் பிரதம மந்திரி இராமசாமி ரெட்டியார் அவர்களுக்குச் சக்தி அருள் புரிக. மகாகவி பாரதியாருடைய பாடல் களையும் இலக்கியங்களையும் பொதுவு டைமையாக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் கிளர்ச்சி நடந்து வருவதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாகப் பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களும், சிந்தனை ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்களும் என்னைக் காண வந்தார்கள். பாரதியார் இலக் கியங்களில் யார் யாருக்கு உரிமை இருக் கின்றனவோ அவற்றையெல்லாம் சென்னை அரசாங்கமே பெற்றுத் தமிழ் மக்களுக்குப் பொதுவுடைமையாக வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இந்தப் பணியில் தாங்கள் சிரத்தை காட்டுவ தாகவும் என்னிடம் சொன்னார்கள். தங்கள் பெருந்தன்மையை மனமாரப் பாராட்டு கிறேன். இப்போதுள்ள உரிமைகளையும், இனி எழக்கூடிய உரிமைகளையும் நியாயமான முறையில் அரசாங்கமே பெற்றுப் பொதுமக்களுக்கு வழங்குவது எனக்குப் பூரண சம்மதம். தங்கள் முயற்சி சக்தி அருளால் வெற்றி பெறுக. ஆனால் ஒன்று. இதைச் சொல்லக் கூசுகிறது. என் கணவருடைய (பாரதியாருடைய) இலக் கியங்களுக்குள்ள செல்வாக்கின் காரண மாக, எனக்கோ அவருடைய குடும்பத் தாருக்கோ விசேடமான வசதி ஏற்பட வில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தரும நியாயமான முறையில்(? ல உண்டா?) இந்தப் பணியை நிறைவேற்று வீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.
இப்படிக்கு,

செல்லம்மா பாரதி.

இந்த அம்மைக்குத்தான் பாரதி நீ இப்படிக் கவலைப்படும் நேரத்தில் தமிழைப் படித்தால் நான் சந்தோஷ முறுவேன் என்று காசியிலிருந்து எழுதி னான். எப்படி எழுதியிருக்கிறார்கள்! இவருடைய இரண்டு கட்டுரைகளை பாரதி பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறான். அருமையாக எழுதியிருக்கிறார்கள். இதை எழுதும் நேரத்தில் கூட என் விழி கசிகிறது. இதைச் சொல்லக் கூசுகிறது. என் கணவ ருடைய (பாரதியாருடைய) இலக்கியங் களுக்குள்ள செல்வாக்கின் காரணமாக, எனக்கோ அவருடைய குடும்பத்தா ருக்கோ விசேடமான வசதி ஏற்பட வில்லை என்பது தாங்கள் அறிந்ததே. தரும நியாயமான முறையில் இந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன். எத்தனை நாசூக்கான வேண்டுகோள்!

இன்னொரு விஷயம். நாரண. துரைக் கண்ணன் அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு, அம்மையைச் சந்திக்கப் புறப்படும் நேரத்தில் அவருடைய ஒரே மகன் நான்கு வயது திப்தீரியாவால் பாதிக்கப்பட்டுக் கிடந்தான். கவலைக் கிடமான சூழலிலும், தாமதம் செய்ய விரும்பாமல் புறப்பட்டார். அவர் திரும்ப வருவதற்குள் அந்த மகன் காலமாகி விட்டான்.

இந்த சம்மதக் கடிதத்துடன் ஓமந் தூராரைச் சந்தித்தனர். ஒரு வரி மூலம் மெய் யப்பருக்குச் செய்தி அனுப்பப்பட்டது. மெய்யப்பர் சொல்கிறார்.

தமிழ் ஓவியா said...


பின்னர் ஒருநாள் அப்போது முதல மைச்சராக இருந்த ஒமந்தூர் ரெட்டியார் இரவு ஏழு மணிக்கு வெரி அர்ஜென்ட் என்பதாக மோட்டார் சைக்கிள் மெஸஞ் சரிடம் தம்மை அன்று இரவே எட்டு மணிக் குச் சந்திக்கும்படி செய்தி அனுப்பினார்.

உடனே வருகிறேன் என்று சொல்லி விட்டு அன்று இரவு எட்டு மணிக்கே சென்று அவரைக் கூவம் ஹவுசில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: நீங்கள் பாரதி பாடல்களின் உரிமையை வாங்கி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், என்றார்.

இத்தனைத் தமிழறிஞர்கள் சேர்ந்து பாரதி விடுதலைக் கழகம் அமைத்துப் போராடியிருக்கிறார்கள். நாரண. துரைக் கண்ணன், வல்லிக்கண்ணன், அசீரா, ப. ஜீவானந்தம் போன்ற பெரிய அறிஞர் களும் தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். பத்திரிகை களில் பக்கம் பக்கமாக எழுதியிருக் கிறார்கள். சட்ட சபையில் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் திறக்காத மனக் கதவு, அரசாங்கம் அழைத்தவுடன் படாரென்று திறந்து கொண்டது. ஒரு வினாடி கூட யோசிக் காமல், பாரதியார் பாடல்களின் உரி மையை இந்தக் கணமே அரசாங்கத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விடுகிறேன். எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம். எந்தவிதப் பிரதி பிரயோசனமும் இன்றிக் கொடுக்கத் தயார் என்று சொல்லிவிட்டேன் என்று மெய்யப்பர் சொல்கிறார்.

Read more: http://viduthalai.in/page2/80465.html#ixzz321Zho6ye

தமிழ் ஓவியா said...


20 ஆயிரம் கோடியை விழுங்கியும் கங்கை சாக்கடை நீரே!


2,500 கி.மீ. நீளத்தில் கங்கை நதியை தூய்மைப்படுத்த ஒரு திட்டத்தை 1986இல் அரசு அறிவித்தது. கடந்த 28 ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கையின்படி, ரூபாய் 20ஆயிரம் கோடிகள் கங்கையில் பல்வேறு தூய்மைப்படுத்தும் திட்டங்கள்மூலம் செலவிடப்பட்டுள்ளன.

வாரணாசியில் இன்றுவரையிலும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலந்துள்ளதோடு, கங்கையின் பல்வேறு கிளைநதிகளின்மூலமாகவும் கழிவுநீராக பெருக்கெடுத்து ஓடுகிறது. ராஜ்காட்டிலிருந்து ராம்நகர்வரையிலும் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றங்கரையோரங்களில் வீடுகள், பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நக்வாவில் தொடங்கி நெடுந்தூரத்துக்கு அஸ்சி காட் பகுதிவரையிலும் ஆற்றின் அகலம் பாதிஅளவாக குறைக்கப்பட்டு விட்டது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சூழலியல் அறிவியலாளரும், (என்ஜிபிஆர்ஏ) தேசிய கங்கை ஆறு முகமையின் உறுப்பினருமான பி.டி.திரி பாதி கூறும்போது, அணைகள் மற்றும் தடுப்பு அணைகள்மூலம் தண்ணீர்வரத்து குறைவாகிவிட்டது ஒருபக்கம் என்றால், ஆற்றின்மீது ஆக்கிரமித்துக் குடியிருப்ப வர்களாலும் ஆற்றின்நிலைமை மோச மாகியுள்ளது என்றார். 2013 அக்டோபரில் அங்கீகாரமில்லாமலே புதிதாக கட் டப்பட்ட 22 கட்டடங்கள் சரிந்து விழுந்தன. அப்பகுதிவாழ் பிரமுகர் திரிபாதி கூறும்போது, 12-க்கும் மேலான வீடு களின் சுற்றுச்சுவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. ஆனாலும், ஆறே மாதங்களில் மீண்டும் அனைத் துமே அதே இடத்தில் கட்டப்பட்டன என்றார். கங்கையைச் சுத்தம் செய்யும் பணியில் மறைந்த ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ரூபாய் ஆயிரத்து எழுநூறு கோடியில் கங்கை செயல் திட்டத்தின் மூலம் கங்கையை சுத்தம் செய்யும் பணி கொண்டுவரப்பட்டது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் முறை ஆகியவற்றால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக 2004 நாடாளுமன்றக்குழு அறிக்கை கூறி உள்ளது. கங்கை ஆறு தேசிய ஆறு என்கிற அறிவிப்புக்குப்பின்பு பிரதமரான மன்மோகன்சிங் தலைமையில் அமைக் கப்பட்ட (என்ஜிஆர்பிஏ) தேசிய கங்கை ஆறு முகமை அமைப்புமூலம் 2009இல் ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2011இல் உலகவங்கி ஒரு பில்லியன் டாலர் தொகையை இத்திட்டத்துக்கு வழங்கியது. சுற்றுசூழல்துறை அமைச்ச கம் ஏழு (அய்அய்டி) பொறியாளர் களைக்கொண்ட முழுமையான ஆற்றுநீர் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில் கங்கை ஆறு குறித்த ஆய்வு மற்றும் ஆற்றின் கட்டமைப்பு, சூழலியல் மேலாண்மை மற்றும் பயிற்சி மய்யம் சார்பில் 2010இல் வெளியான ஆய்வுமுடிவின்படி கங்கை ஆற்றுநீரில் மொத்தத்தில் ஒரு விழுக் காட்டுக்கும் குறைவாகவே வாரணாசியில் ஓடுகிறது. உத்தரப்பிரதேசம்வழியே பாய்ந்துவரும்போது அணைகள், தடுப் பணைகள் இவற்றால் ஆறு தடம் மாறி யது. ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.

12 அணைகள்


தமிழ் ஓவியா said...

12 அணைகள் வாரணாசிவரை கங்கை யின் பாதையில் கட்டப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் சுங்க வரி வசூலிக்கப் படுகின்றது. அரித்துவாரில் பீம்கோடா குறுக்கு அணையின்மூலம் 95 விழுக்காடு புனித நீராக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள்மூலம் நரோராவை அடைகின்றது. கங்கையின்ஆற்றோட்டம் நூறு விழுக்காடு லோயர் கங்கா கால் வாய்மூலம் உள்ளது. அதன்பிறகு, கங்கை நீரானது பறிக்கப்பட்டு விடுகிறது. பனா ரஸ் இந்து பல்கலைக்கழக மய்யத்தின் முன்னாள் தலைவர் யு.கே.சவுத்ரி கூறும் போது, நிலத்துக்குமேலாக நீரோட்ட மாக, கழிவு நீராக இன்னும் பிற கிளை களிலிருந்து பெறும் நீராகவே காணப் படுகிறது என்கிறார்.
கான்பூரில் மட்டும் 420 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. அத்தொழிற்சாலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டு வாரணாசியை அடை கின்றன. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத் தின் பேராசிரியரும், தேசிய கங்கை ஆற்று முகமையின் உறுப்பினருமாகிய பி.டி.அகர் வால் கூறும்போது, வட இந்தியா முழு மையாக மிக மோசமாக அசுத்தங்களின் உறைவிடமாக உள்ளது என்கிறார்.

எஃப்சிசி கங்கை நகருக்குள் நுழையும் போது சுமார் அறுபதாயிரம் நுண்ணு யிரிகள் மிதக்கின்றன. வாரணாசியில் கங்கையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலும் ஒன்றரை மில்லியன் நுண்ணு யிரிகள் மிதக்கின்றன. இரண்டு இறுதிச் சடங்கு செய்யுமிடங்கள் உள்ளன. ஒன்று அரிச்சந்திரா, காட், மற்றொன்று மணி கர்னிகா காட் இவற்றிலிருந்து 33ஆயிரம் உடல்கள், பாதியளவு எரிந்த உடல்கள் 300டன், 16ஆயிரம் டன் சாம்பல் ஆற்றில் கொட்டப்படுகின்றன. கவ்முக் பகுதியிலிருந்து உத்தர்காசி வரையிலும் சுமார் 130 கி.மீ. நீளம், பாகீரதி இயற்கை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டு அங்கு நிறைவேற்றப் பட இருந்த 13 திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலைப்பெற்ற நிலையில் தேசிய கங்கை ஆற்று முகமையால் நிறுத்தப்பட்ட தகவல் நேர்மறையான வெளிப்பாடாக உள்ளதாக திரிபாதி தெரிவித்தார். ஆனாலும், நோக்கம் சிதையாமல் தேவையானவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சவுத்ரி அணை களைக்குறிப்பிட்டு கூறுகிறார். ஆறு இயல்பான தன் ஓட்டத்தில் இருந்தால் ஒழிய முகமை செய்வதெல்லாம் மேல் பூச்சாகத்தான் அமையும் என்கிறார் சவுத்ரி.

அவர் மேலும் கூறும்போது, ஒருவர் தன்னுடைய குருதியில் 95 விழுக்காட்டை கொடுத்தபின்னர் உயிருடன் இருக்க முடியுமா? என்று கேட்கிறார். 2014 பிப்ரவரியில் பிரதமர் அலுவலகத்தி லிருந்து சுற்றுசூழல்துறைக்கு கங்கை யைப் பாதுகாப்பதுகுறித்து மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளுக்கான வரைவை அனுப்புமாறு கோரியுள்ளது. திரிபாதி கூறும்போது, பாஜக தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களில் கங் கையை சுத்தமாக்கும் பணியை செய்வதாக உறுதி கூறி யுள்ளது. சபர்மதி திட்டம் குறித்தும் கூறுகிறது. இரு ஆறுகளின் இயற்கை க்கூறுகள் வெவ்வேறானவை என்பதை பாஜக உணரவேண்டும் என்று கூறுகிறார்.

இருபதாண்டுகளாக கங்கைக்காக சேவையாற்றி வருபவரும், சங்கத் மோச் சன் கோவில் மகந்தும், சங்கத் மோச்சன் பவுண்டேஷன் என்கிற தொண்டு நிறு வனத் தலைவருமாகிய பேராசிரியர் விஷ்வாம்பர நாத மிஷ்ரா கங்கைப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டில்லி, 14-5-2014)

Read more: http://viduthalai.in/page4/80468.html#ixzz321aM65Pc

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் கங்கை ஆறு - குறிப்புகள்இந்தியாவின் நீளமான ஆறு 2,525 கி.மீ. உத்தர் காண்ட் - 450கி.மீ., உத்தரப்பிரதேசம்- 1000கி.மீ., பிகார் - 450 கி.மீ. ,ஜார்கண்ட்-40கி.மீ., மேற்கு வங்கம்-520 கி.மீ., பிகார், உத்தரப்பிரதேச எல்லைப்பகுதி-110கி.மீ.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவ்முக் (கங்கோத்ரி பனிக்கட்டிஆறு) பகுதியிலிருந்து உருவாகிறது.

இந்திய மக்கள்தொகையில் 43% பேருக்கு கங்கை ஆற்றுத்திட்டம் பலனளிக்கிறது

ஆற்றோட்டப்பகுதியின் பரப்பளவு: 8,61,404 சதுரகி.மீ.

ஆண்டுக்கு கடலில் கலக்கும் நீரின் அளவு: 4,93,400 மில்லியன் கனமீட்டர்
கிளை நதிகள், துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா, கோம்தி, காகரா, கண்டாக், தாமோதர், கோசி, கலி, சம்பல், சிந்து, பெட்வா, கென், டோன்ஸ், சோனெ, காசியா-

ஹால்டி

ஆற்றங்கரையில் முக்கிய நகரங்கள்: ரிஷிகேஷ், அரித்துவார், ரூர்கி(உத்தர்கண்ட்) பிஜ்னோர், நரோரா,, கன்னோஜ், கான்பூர், அலகாபாத், வாரணாசி, மீர்சாப்பூர் (உத்தரப்பிரதேசம்), பாட்னா, பகல்பூர் (பிகார்) பஹ்ரம்பூர், செராம்பூரெ, ஹவுரா, கோல்கட்டா (மேற்கு வங்காளம்)

கங்கா செயல்திட்டம்: (28ஆண்டுகளில் இரண்டு திட்டங்கள்)

கங்கா செயல்திட்டம்-1

1986 ஜூன் தொடங்கி 2000 மார்ச்சில் முடிந்தது 462.04 கோடி ஒதுக்கீடு 25 மாநகரங்கள், நகரங்கள் உபி-6, பிகார்-4, மேற்கு வங்காளம்-15 உள்ளடக்கியது

கங்கா செயல்திட்டம்-2

1993யிலிருந்து 1996 வரையிலும் பெல கட்டங் களாக தொடக்கம் 2001 ஏப்ரல்-1இல் அமல்படுத்தப் பட்டது 95 மாநகரங்கள், நகரங்கள் முக்கிய கிளை நதிகள் உள்ளடக்கியது

பொருளாதார செலவினங்கள்: தாவரங்களுக் காக கழிவுகள் மேலாண்மை, தண்ணீர் மாசு கண் காணிப்பகங்கள், வெள்ளச்சேதங்களிலிருந்து பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் செலவு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

2008-09 தேசிய ஆறாக அறிவிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடுதல், செலவிடு தல், கண்காணிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள என்ஜிஆர்பிஏ என்கிற அமைப்பு 2009இல் உருவாக்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/page4/80469.html#ixzz321aY5NTV

தமிழ் ஓவியா said...


நாத்திகர்களை தீவிரவாதிகள் எனும் சவுதி சட்டம்: நீக்கப்பட அழுத்தம்


அண்மையில் சவுதி அரேபிய அரசு இரு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று நாத்திகர்கள் (கடவுள், மத மறுப்பாளர்கள்) தீவிரவாதிகள் என்றும், மரணதண்டனையை அதிகபட்ச தண்டனையாக அளிக்கலாம் என்றும் அந்த சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள்மூலம் நாத்திகர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை சவுதி அரசு ஏற்படுத்தி உள்ளது.

நாத்திகத்தைப்பற்றி முழுமையாக அறியாதவர்கள்கூட, அந்த நாட்டிலிருந்து நாத்திக இணையதளத்துக்கு சென்று பார்வையிடுபவர், அதில் தம் கருத்தை பதிவிடுபவர், நாத்திகர்களுடன் தொடர் பில் இருப்பவர் மற்றும் எந்த ஒரு தனி நபருடனோ, எந்த நாத்திக அமைப் புடனோ தொடர்பில் இருப்பவர் என்று இச்சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்று தண்டிக்க ஏதுவா கிறது. சவுதி அரசின் மதரீதியிலான நம்பிக் கையை அலுவலக நடைமுறைகளில் கடைபிடிக்கவில்லை என்றுகூறி எவ்வித ஆதாரங்களும் இல்லாமலே பெரும் பாலானவர்களை குற்றவாளிகளாக்கும் சட்டங்களாக அவை உள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும்.

அரேபிய நாட்டின் அடிப்படைகளை தகர்ப்பததாக, அரேபிய மனித உரிமைகள் குறித்த ஒப்பந்தங்களை மீறுவதாகவும் அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சட்டங்கள்மூலம் நீதிக்கு இடமின்றி சிறையில் அடைத்து துன்புறுத்தும் அபாயம் உள்ளது. பத்தில் தொடங்கி ஆயிரம் என்று சவுதி குடிமக்களை துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். அதனாலேயே, சவுதி நாத்திகர்கள் வேறு அதிக சகிப்புத்தன்மை உள்ள நாடுகளில் புகலிடம் தேட ஏதுவாகும்.

வெளிப்படையாகவே தங்களை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டுள் ளவர்கள் சவுதியில் பலபேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெற்ற இளைஞர்களாக இருக்கின்றனர். உலகஅளவில் வின்கேல்லப் நிறுவ னத்தின் புள்ளிவிவரப்படி சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் அய்ந்து விழுக்காட்டினர் நாத்திகர்களாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 19 விழுக்காட்டினர் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்று உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டில் முப்பது மில்லியன் மக்களில் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி ஏழு மில்லியன் சவுதி குடிமக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

சவுதி அரேபியா அரசு மதத்தின்மீதான மரியாதையைக் காத்திட குறிப்பாக இசுலாம் மதத்தை மதிப்புக்குரியதாக்கிட அய்நாவின் மதவிரோதச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக ஆதரித்தது. மேலும், சவுதி அரேபியாவில் அய்நாவின் மனித உரிமை ஆணையத்தை அண்மையில் ஏற்படுத்தியது. அது எதிர்பார்க்கக் கூடிய மதிப்பை அது விரும்பும் மதம் பெற வேண்டுமானால், அதே அளவு மதிப்பையும், பாதுகாப்பை யும் மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

சவுதி அரசை விரைவாக அந்த சட்டங்களை நீக்க வலியுறுத்துவதோடு அப்பாவிகளின் உயிர்களை அழிவிலிருந்து காக்கவும், அகதிகள் உருவாகாமல் தடுக் கவும் விரைந்து அந்த சட்டங்களை நீக்கிட வேண்டும் என்று மதசார்பற்ற உலகுக் கான சர்வதேச நாத்திக கூட்டமைப்பின் (கிலீமீவீ கிறீறீவீணீஸீநீமீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வேண்டு கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது

Read more: http://viduthalai.in/page5/80471.html#ixzz321akHYZa

தமிழ் ஓவியா said...


அணுகுண்டு சோதனைகள்


இந்தியாவில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுவதற்கு சக்தி நடவடிக்கை (Operation Shakthi) என்று பெயரிடப்பட்டு இரண்டுமுறை சோத னைகள் நடந்துள்ளன. சக்தி நடவடிக்கை (Operation Shakthi) இராஜஸ்தான் மாநி லத்தில் பாலைவனப்பகுதியாகிய போக் ரான் பகுதியில் நடைபெற்றன.

போக்ரான் -2 (Pokhron-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய அய்ந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று அணுகுண்டு சோதனைகள் 11-5-1998 தேதியிலும், இரண்டுஅணுகுண்டு சோத னைகள் 13-5-1998 வெடிக்கப்பட்டன. இந்த அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறு தரப்பட்ட வணிகத் தடைகளை விதித்தன. மேலும், இந்தியாவைத் தொடர்ந்து 28-5-1998 மற்றும் 30-5-1998 ஆகிய நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாகவும் அமைந்தது. இந்தியா முதன்முதலாக 18-5-1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று பெயரிடப்பட்டு அணு குண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு 11-5-1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்துத்துவ தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று பெயரிட்டது. சக்தி என்ற சமஸ்கிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல் லாகும்(அவர்கள் அப்படித்தானே!). 1998இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும், பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இந்த நாளை நினை வுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப் படுகின்றன.

Read more: http://viduthalai.in/page5/80470.html#ixzz321asSfXb

தமிழ் ஓவியா said...


மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

மாணவர்களின் விடைத்தாள் களைத் தகுதி இல்லாத ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தால், தகுதி இல்லாத வர்களுக்கு அதிக மதிப்பெண் ணும், தகுதி உள்ளவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்ணும் கிடைக் கும் நிலை ஏற்படும். எனவே விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்களை திருவள் ளுவர் பல்கலைக் கழகம் (வேலூர்) உறுதி செய்ய வேண்டும் இவ் வாறு சென்னை உயர்நீதி மன்றத் தின் முதல் அமர்வு உத்திரவிட் டுள்ளது (விடுதலை நாளிதழ், 4.5.2014 பக்கம்3)

நம் நாட்டுக் கல்வி முறையில் விடைத்தாள் என்பது மாணவர் களின் உழைப்பின்அறுவடை, ஒரளவு மாணவர்களின் எதிர் காலத்தையே தீர்மானிக்கும் கருவி.

மாணவர்களின் விடைத்தாள் கள் தகுதி இல்லாத ஆசிரியர்களால் திருத்தப்பட்டதற்கு நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி உதாரண மாகத் திகழ்கிறது. பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் களைத் திருத்துவதில் கவனக்குறை வாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்து றை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாண வர்களின் மதிப்பெண் மாறியது. ஒரு மாணவனின் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யா மல் மதிப்பெண் வழங்கப்பட்டி ருந்தது. மறு மதிப்பீட்டில் அவரது மதிப்பெண் 200 ஆக அதிகரித்தது. (தினமணி 9.12.2013 பக்கம் 4)

சென்னை அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் விசுவநாதன் பின்வரு மாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

18 மதிப்பெண்ணுக்கு மதிப் பீடு செய்த ஒரு விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தபோது 78 மதிப்பெண் வந்தது. எனவே இனி மேல் நல்ல முறையில் விடைத் தாள் மதிப்பீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் (விடுதலை இதழ் 19.7.2005).

நடுநிலை தவறிய பேராசிரியர் கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப் பட்டால் மாணவர்களின் எதிர் காலமே பாதிக்கப்படுகிறது. சென்னை அய்.அய்.டி (மி.மி.ஜி) இல் பேராசிரியராகப் பணிபுரியும் கல்பனா சாவ்லா விருது பெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி பின்வருமாறு கருத்து தெரி வித்துள்ளார்: பெரியாரும், அம் பேத்கரும் வராமல் இருந் திருந்தால் நான் அய்.அய்.டியில் பேராசிரியராக இருந்திருக்க மாட் டேன். வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பேன்.
அய்.அய்.டியில் இது வரை ஒரு தலித் பெண் கூட ஆய்வுப்பட்டம் (றிலீ.பீ) பெற்றதில்லை! ஐ.ஐ.டியில் எம்.எஸ்ஸி (வி.ஷிநீ) படிக்கும் பெண்கள் தலித் என்றால் அவர் களை உடனே ஃபெயிலாக்கி விடு கிறார்கள். நிறைய தலித் மாண விகள் இது போல் பாதிக்கப்பட் டுள்ளனர். இதை எல்லாம் எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக் கிறேன்.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு செய்தபோது பல மாணவ மாணவிகளின் மதிப்பெண் பட்டி யலில் குளறுபடிகள் நடந்திருப் பது தெரியவந்தது. இந்த மோசடி யின் உச்சக்கட்டமாக பட்டப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்ற 2 மாணவர்கள், ஒரு மாணவி தேர்வுக்கு விண்ணப்பிக் காமலும், தேர்வுக்குரிய கட்டணம் செலுத்தாமலும் தேர்வே எழுதா மலும் ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மெகா மோசடி நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது (விடுதலை இதழ் 19.2.2012 பக்கம் 7)

சென்னை மாநிலக் கல்லூரியில் நான் 1954 - 56-இல் பொருளாதாரத் துறையில் எம்.ஏ. படித்தபோது, எனது பல்கலைக்கழக விடைத் தாளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்துறை தலைமைப் பேராசிரியர் அவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்தினார். பெரியார் தொண்டனாகிய நான் தன்மானத்துடன் மறுக்கவே என்னை எம்.ஏ., வகுப்பில் அரை சதவீதம் மதிப்பெண் குறைவாகக் கொடுத்து மூன்றாம் வகுப்பில் (மிமிமி சிறீணீ) தள்ளிவிட்டார். இதனால் என் வாழ்க்கை ஓரளவு பாதிக் கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இன்றைய மதிப்பெண் முறையைக் கடுமையாக எதிர்த் துள்ளார். மார்க்தான் (மதிப் பெண்) தகுதி, திறமையின் அறிகுறி என்பது அக்கிரமம் மாத்திரமல்ல; மகா மகா அயோக்கியத்தனம் அல்லது மடத்தனம் என்பேன்.

தற்போதுள்ள தேர்வு முறை யினால் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க் கையே பாழடிக்கப்படுகிறது. கல்வித்துறைச் சான்றோர்கள் மாணவர்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கு காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.

- செய்யாறு இர.செங்கல்வராயன்

முன்னாள் துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு, தி.மலை.மாவட்டம்

Read more: http://viduthalai.in/page7/80476.html#ixzz321b7AXAX

தமிழ் ஓவியா said...


பெண்ணினத்தை வேரறுக்கும் கொலைகார ஜோசியம்


இன்னொரு பெண் குழந்தை பொறந்தா வீட்டை விட்டுத் துரத்தி என் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணிவெச்சிடு வேன்னு என் மாமியார் சொன்னாங்க... ஜோசியர்கிட்ட போனோம். அவர் அடுத் ததும் பொண்ணுதான்னு சொன்னார், அதான் கலைச்சிட்டோம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் முதல் மாம் பழம் வரை தனக்கெனத் தனி அடை யாளங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கும் நகரம் சேலம். ஆனால், மலை கள் சூழ்ந்த இந்த நகரம், காலம்காலமாகத் தனக்குள் ஒரு சமூக அவலத்தைப் பொத்தி வைத்திருப்பதோடல்லாமல் அதைப் பாதுகாத்தும் வைத்திருக்கிறது என்பது 2014-ல் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம் தான். பெண் சிசுக்களைப் பாதுகாக்க அரசு வகுத்த திட்டங்களும் தன்னார்வ அமைப் புகள் எடுத்த முயற்சிகளும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்பதை சேலம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங் களைச் சுற்றி வந்தாலே புலப்படுகிறது.

பெண்களாக இருப்பவர்கள் தங்களை இழிவான பிறவிகளாகக் கருதிக்கொள் வதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப் பதன் மூலமே அவர்களது பிறப்பின் இழிவை'த் துடைக்க முடியும் என்று நம்புவதையும் இந்தக் கிராமங்களில் பரவலாகக் காண முடிகிறது.

வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றமென்றாலும் சேலம் மாவட்டத்தைச் சுற்றி அதை அறிவிக்கும் பல ஸ்கேன் மய்யங்கள் இயங்குவதாகச் சொல்லி அதிர்ச்சியளிக்கிறார் க்ரைம் அமைப்பைச் சேர்ந்த ராயன். க்ரைம் அமைப்போடு சேர்ந்து சேலம் மக்கள் அறக்கட்டளை அமைப்பு சேலம் பகுதியில் பெண் சிசுக்கள் பாதுகாப்புக்கெனப் பல முயற்சி களை எடுத்துவருகிறது. அறக்கட்ட ளையை நிர்வகித்துவரும் ஜெயம் என் பவரை அறக்கட்டளையின் அலுவலகம் இயங்கும் அயோத்தியாபட்டினத்தில் சந்தித்தோம். ஸ்கேன் மய்யங்கள் மட்டு மல்ல, சேலத்தில் மட்டும்தான் பெண் சிசுக்களுக்கு எதிராக விஞ்ஞானமும் மரபும் கைகோத்துச் செயல்படும். இந்தப் பகுதியில் நாங்கள் சுமார் 27 கிராமங்களில் வேலை பார்த்துக்கொண்டுவருகிறோம். இந்தப் பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறைகளைச் சொல்லி மாளாது. கருக்கலைப்பு தொடங்கி, கல்வியில் பாகுபாடு, குழந்தைத் திருமணம் என்று எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்தித்தே ஒரு பெண் வளர வேண்டியிருக்கிறது என்று சொன்னவர், அறக்கட்டளையில் பணிபுரியும் பாரதி என்கிற பெண்ணை யும், ஏழு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவரது உறவினர் சங்கீதாவையும் நம்மோடு அனுப்பிவைத்தார்.


தமிழ் ஓவியா said...

ஜோசியம்-ஜாதகம்-நம்பிக்கை

சங்கீதாவும் பாரதியும் முதலில் காரிப்பட்டி என்னும் கிராமத்தின் அருகில் இருக்கும் மின்னம்பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். காரிலிருந்து இறங்கிக் காட்டுப் பாதையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தவுடன் அந்த வீடு தென்படுகிறது. காவித்துண்டு அணிந்து வெளிப்படும் படையாச்சியிடம் ஜாத கத்தை நீட்டுகிறார் சங்கீதா. ஏற்கெனவே இரண்டு பொண்ணுங்க, இந்த மொற யாவது பையன் பொறக்குமா பாருங்க என்று கோரிக்கை வைக்கிறார். சுமார் பத்து நிமிடங்கள் ஜாதகத்தைப் பார்த்துப் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த வுடன் பதில் சொல்கிறார் படையாச்சி. உனக்குப் பையன் உண்டு. ஆனா, இப்போ வயித்துல இருக்கிறது பொண்ணுதான். போயிட்டு வா.

தமிழ் ஓவியா said...

சங்கீதாவிடமிருந்து தட்சிணையாக நூறு ரூபாயைப் பெற்றுக்கொள்கிறார். மெதுவாக, பேச்சுக்கொடுக்கும் பாரதி யிடம் சங்கீதா போல நிறையப் பேர் வருவதாகப் பெருமிதம் பொங்கச் சொல் கிறார் படையாச்சி. தினமும் ஒண்ணு ரெண்டு பேராவது வந்து கேட்பாங்க, என்ன குழந்தைன்னு. நான் சொல்றது இதுவரை தப்பிப்போனதில்ல. நீ வேணு மினா பாரு, இவளுக்கும் தப்பாது என்று சொல்லி வழியனுப்புகிறார்.

படையாச்சியைப் போல பல ஜோசி யர்கள் அந்தப் பகுதிகளில் இருப்பதாகச் சொல்லி அதிர வைக்கிறார் பாரதி. இங்கு இருக்கிற 27 கிராமங்களிலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைஞ்சது ஒண்ணு ரெண்டு பேராவது ஜோசியர் இருப்பாங்க. கல்யாணப் பொருத்தமெல்லாம் பார்த்தா லும், அவங்க பெருசா சம்பாதிக்கிறது குழந்தை ஆணா, பெண்ணான்னு ஜாத கத்தைப் பார்த்துச் சொல்றதுலதான். இதுல சில பேருக்கு ரொம்பக் கிராக்கி. சாப்பாடு கட்டிக்கிட்டு வந்து வரிசையில் நின்னு பார்த்துட்டுப் போவாங்க என்கிறார் பாரதி.

உண்மையான அதிர்ச்சி இந்த ஜோசியத்தை நம்பிப் பலர் தங்களது கருவைக் கலைப்பதுதான். இன்னொரு பெண் குழந்தை பொறந்தா வீட்டை விட்டுத் துரத்தி என் புருஷனுக்கு வேற கல்யாணம் பண்ணிவெச்சிடுவேன்னு என் மாமியார் சொன்னாங்க. இதோ இவ பொறக்கும்போது இவளக் கையிலகூடத் தூக்கல. வேற வழியில்லாம ஜோசியர் கிட்ட போனோம். அவர் அடுத்ததும் பொண்ணுதான்னு சொன்னார், அதான் கலைச்சிட்டேன் என்று குற்றவுணர்வு கொஞ்சமு மின்றிச் சொல்கிறார் மேகலா, இரண்டரை வயதுப் பெண் குழந்தையைச் சுமந்தபடி. அதெல்லாம் பார்த்தா முடி யுமா? இவளுக்கு முன்னாடியும் பொண் ணுதான். மொத பொண்ணு பொறந்தவு டனேயே என் புருசன் அடிக்க ஆரம்பிச் சிட்டாரு. அவரோட தம்பிக்கு ரெண்டும் பசங்க. பூர்வீகச் சொத்து அவங்களுக்குப் போயிடும். அதுக்காகவாவது அடுத்தத பையனா பெத்துக்கணும். அப்போதான் எனக்கும் மரியாதை கிடைக்கும். ஜோசியர் நாலாவது பையன்னு சொல்லியிருக்காரு, நம்பிக்கை இருக்கு என்று சிரிக்கிறார்.

தமிழ் ஓவியா said...


அடுத்து சங்கீதாவும் பாரதியும் நம்மை அழைத்துச்சென்ற இடம் வாழப்பாடி.

கருக்கலைப்பா தானமா?

உயர்ந்த கட்டிடம் ஒன்றின் முன்பு நிறுத்தப்படுகிறது நமது கார். அது ஒரு ஸ்கேன் மய்யம். என்ன குழந்தைன்னு தெரிஞ்சிக்கணும் என்று அடிக்குரலில் கெஞ்சும் சங்கீதாவிடம் இன்னிக்கு டாக்டர் இல்ல, நாளைக்கு வா என்று கறாராகச் சொல்லி அனுப்புகிறார் அங்கிருக்கும் நர்ஸ். இந்த சென்டர்ல நிச்சயம் சொல்லிடுவாங்கன்னு தெரியும். இன்னிக்கு டாக்டர் இல்லை என்று புலம்பியபடி இன்னொரு மருத்துவ மனையில் வண்டியை நிறுத்தச் சொல் கிறார் பாரதி. அங்கே காத்திருப்பவர்கள் முழுவதும் கர்ப்பிணிகள். விதவிதமான கவலைகளின் ரேகைகளைச் சுமந்த முகங்கள். வரவேற்புப் பிரிவில் இருந்த வரிடம் பேச்சுக்கொடுத்த பாரதி வந்து சொல்கிறார், கேட்டேன், இங்கேயும் சொல்லுவாங்க.குழந்தை எப்படி இருக்குன்னு சொல்ல 600 ரூபாய். என்ன குழந்தைன்னு சொல்ல 1,500 ரூபாயாம் என்கிறார். பெண் டாக்டர் நுழைந்தவுடன் அந்த இளம்சிவப்பு நிறக் கட்டிடமே கொஞ்சம் பரபரப்பாகிறது. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு சங்கீதா அழைக் கப்படுகிறார். என்னம்மா தெரியணும்? கையில காசு வெச்சிருக்கியா? என்று கேட்டுக்கொண்டே வயிற்றுப் பகுதியில் ஜெல் தடவி ஸ்கேன் கருவியைப் பொருத்துகிறார். பொண்ணுதாம்மா. பேசாம இப்பவே அட்மிட் ஆயிடு. ஏழு மாசம் ஆகுது. அதனால டெலிவரி பண்ற மாதிரியே குழந்தையை வெளியே எடுத்துடுவோம். 9,000 ரூபா ஆகும் என்கிறார். அவ்வளவு காசு இல்ல என்று சங்கீதா தயங்க, சரி, டெலிவரிக்கு அட்மிட் ஆயிடு. காசு எதுவும் செலவுசெய்ய வேணாம். குழந்தையைக் கொடுத்திட லாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

தமிழ் ஓவியா said...

எருக்கம் இலை - சிறு குழந்தை

சேலம் மக்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் மேலும் பல செய்தி களைச் சொல்லி அதிர வைக்கிறார் ஜெயம். இங்க மொத்தம் 243 ஸ்கேன் சென்டர் இருக்கு. இதுல 107-தான் அதிகார பூர்வமா செயல்படுது. கடந்த ரெண்டு வருஷத் துல எங்க பகுதியில மட்டும் 340 கருக் கலைப்பு நடந்திருக்கு. இதெல்லாம் ஆர்.டி.ஐ, கள ஆய்வுகள்னு பல வகையில நாங்க திரட்டின தகவல்கள் என்கிறார். அறக்கட்டளையில் புதிதாக இருந்த மாரி யம்மாவுக்கு நம்மை அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவர். சுமார் 70 வயது இருக்கும் மாரியம்மாவுக்கு. முன்ன மாதிரி இல்லம்மா. இப்போ எல்லாம் நிறுத்திட் டேன். இவங்க பயமுறுத்தினாங்க. இப்போ கட்டிட வேலைக்குப் போறேன் என்று பேசிக்கொண்டே போக, அவர் பேசிக்கொண்டிருப்பது கருக்கலைப்பு களைப் பற்றி என்று புரியவே கொஞ்ச நேரம் ஆகிறது. 50 வருஷமா மருத்துவச் சியா இருந்தேன். நிறைய குழந்தை களுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறேன். சும்மா ஆயிரத்துக்கும் மேல இருக்கும். கருக்கலைப்பு யாராவது வற்புறுத்திக் கேட்டாதான் செய்வேன். அப்படி சும்மா 50 செஞ்சிருப்பேன் என்று சொல்லும் மாரியம்மாவுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். எல்லோரையும் நல்லா கட்டிக்கொடுத்துட்டேன் என்கிறார்.


அஞ்சு நாள், ஆறு நாள் தள்ளிப் போச்சுன்னா சர்க்கரைப் பாகு வெச்சுச் சாப்பிடச் சொல்லிடுவேன். அதுலேயே கலைஞ்சிடும். மூணு மாசம் வரைக் கும்னா அவங்களுக்கு வேற வைத்தியம் என்று சொல்லிக்கொண்டே கையளவு அகலமாக இருக்கும் எருக்க இலையை அருகிலிருந்து பறிக்கிறார். இதை ரெண்டா ஒடிச்சி வழியிற பாலைக் காம்போட துணியில சுத்தி உள்ள விட்டு டணும். ஒரே நாள்ல குழந்தையோட வெளியே வந்துடும் என்கிறார். மூணு மாசத்துக்கு மேலேனா அவங்க ஹாஸ் பிடலுக்குத்தான் போகணும். எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும் நான் செய்ய மாட்டேன் என்கிறார். எருக்கம் காம்பு உயிர்வலியைத் தரும். ஆனாலும் இப்பவும் பண்ணிக்கிற பொண்ணுங்க இருக்காங்க என்கிறார் ஜெயம். மூணு மாசத்துல எப்படி குழந்தை ஆணா, பெண்ணான்னு தெரியும்? என்று கேட்டபோது, அதான் ஜாதகத்தைப் பார்த்துட்டு வருவாங்க இல்ல என்கிறார் மேகலா.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய 14 -15 வாரங்களாகும். மூன்று மாதங்களிலேயே கருக் கலைப்பு செய்வதெல்லாம் அறி யாமையின் உச்சம். இந்தப் பகுதியில், குறிப்பாக, பெண் குழந்தைகள் கல்விக் கென்று பல சலுகைகள் ஏற்படுத்தியி ருக்கிறது அரசு. ஆனால், அவை இன்னும் போய்ச்சேர வேண்டிய இடத்தைச் சேரவில்லை. அரசு இந்தப் பிரச்சினையில் இன்னமும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சேலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அசோக். சேலம் பகுதியில் உள்ள பல ஸ்கேன் மய்யங் களில் பல ஏமாற்று வேலைகள் நடப்ப தாகச் சொல்கிறார். வருகிறவர்கள் கருக்கலைப்பு செய்யும் எண்ணத்தில் வந்தால் ஆறு வாரங்களில்கூட குழந்தை யின் பாலினம் தெரியும் என்று சொல்லி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்யும் ஸ்கேன் சென்டர்கள் எல்லாம் இங்கு உண்டு என்று அதிர வைக்கிறார். புதுப் புடவ கட்டியிருக்கேன், போட்டோ புடிக்கலையா? என்று கேள்வி கேட்டு வேணாம், நீ பத்திரிகையில போட்டா, யாராவது சாபம் வுடுவாங்க என்று தானே பதிலும் தந்து வெள்ளந் தியாக வழியனுப்பி வைக்கிறார் மாரியம்மா. எருக்க இலையின் நிறத்தில் இருக்கிறது அவரது புடவை.

- கவிதா முரளிதரன்.

தொடர்புக்கு: .kavitha.m@kslmedia.in (பெரும்பாலான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Read more: http://viduthalai.in/page6/80473.html#ixzz321bbQrFR

தமிழ் ஓவியா said...


அன்று காந்தியார் சொன்னது


கரூர் மாவட்டம் நெருரி வடபாகம் காவேரி ஆறு அருகே தமிழக அரசுக்கு சொந்தமான சுற்றுலா விளையாட்டு பூங்கா அருகே அரச மரம் உள்ளது. அந்த அரச மரத்தடியில் விநாயகர் சிலை சிவன் முருகன் போட்டோக்களும் உள்ளன. காவேரி ஆற்றுக்கு குளிக்க வரும் பக்தர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து மது பானம் சாப்பிட்டு அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர்

காந்தியார் சொன்ன மாதிரி கோயில்கள் விபச்சார விடுதி என்பதற்கு இது ஒரு சான்று! அரச மரத்தடியில் மதுபானம், சிகரெட் பீடி துண்டுகள் ஆணுறைகள் போன்றவை அங்கேயே கிடக்கின்றன. ஆற்றில் குளித்து வரும் பக்தர்கள் சாமி கும்பிட்டு இவற்றையும் செய்கின்றனர்.
மதமாற்றம்: விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page6/80474.html#ixzz321btV9st

தமிழ் ஓவியா said...


இது அல்லவோ மனிதநேயம்!

மும்பையைச் சேர்ந்தவர் ஃபாரூக் மாப்கர். இவர் சிப்லூன் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது இவர் பயணம் செய்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய இவர் மற்றவர் களைக் காப்பாற்றும் நோக் கில் தன் காயங்களைப் பொருட்படுத்தாமல் வேக மாக செயல்பட்டுள்ளார். அவரைச்சுற்றி இருந்த பயணிகள் விபத்தில் உடைந்து நொறுங்கிய தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு பரிதவித்தனர். அவர் தன்னை மட்டும் காத்துக்கொண்டு சென்றிருக்க லாம்.

ஆனால், அவரால் செய்யக்கூடிய உதவிகள்குறித்து நினைத்து செயல்பட் டார். மூன்று வயது சம்ருதி நக்தி என்கிற சிறுமி தொடர்வண்டிக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தபோது, அவ்ளின் தந்தை என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண் டிருந்தார். சிறுமியின் தந்தைமீது வேறு ஒருவர் விழுந்து கிடந்தார். இந்நிலையில் தான், உடனடியாக அச்சிறுமியை மாப்கர் மீட்டு, ஆட்டோமூலமாக தாமாகவே அவள் கால் துண்டான நிலையில் மருத் துவமனைக்குக் கொண்டு சென்றார்.

நகோத்தானேவுக்கும் ரோகாவுக்கும் இடையே சென்றுகொண்டிருந்த தொடர் வண்டி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது தன்னுடைய பணப்பை உள்ளிட்ட தன்பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டபோதிலும், விடாமுயற்சியாக சிறு மியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்ப்பித்தார். ஆட்டோ ஓட்டுநர் இவர்நிலைகண்டு தொகை பெறாமலே இவர்தம் சேவையில் தன்னையும் இணைத்துக்கொண்டார். விபத்துப்பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரையிலும், தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் இலவச மாக ஆட்டோ ஓட்டுநர் அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் முதலுதவி மட்டுமே வழங்கப்படும் வசதி இருந்தது. அச்சிறுமியுடன் மேலும் இருவரை அரசு பொது மருத்துவ மனைக்கு சிவசேனா அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு சென்று சேர்க்குமாறு மாப்கரிடம் மருத்துவர் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி மருத்துவர் இரண்டாயிரம் ரூபாய் தொகை கட்டுமாறு கேட்டபோது, மாப்கர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். அச்சிறுமியுடன், இளம்பெண் மற்றும் சவான் என்பவரையும் மாப்கர் அலிபாக் மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். சவானிடமும் பணம் ஏதும் இல்லை. சிறுமியின் மன உறுதி குறித்து மாப்கர் வியந்து கூறுகிறார். மிகுந்த வலி இருக்கும்போதும் ஒருவார்த்தைக்கூட பேசாமல், மாப்கர்மீது சாய்ந்தவாறு மிக அமைதியாக இருந்தாள். தன்னுடைய உறவினருக்கு இறுதி மரியாதை செலுத்து வதற்காகச் சென்ற மாப்கர் முற்றிலும் அச்சிறுமி உட்பட மற்றவர்களையும் காக்கும் செயலில் இருந்துவிட்டதால் உறவினரின் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை.

சம்ருதி என்கிற அச்சிறுமி பிற்பாடு சயான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அவள் கால்களை அறுவை மூலம் அகற்றி தொடர்சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் அக்காள் வாஷி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாள். சிறுமியின் தாய் இந்த விபத்தில் உயிர் இழந்து விட்டார். எதுவுமே தெரியாமல் அவள் தந்தையும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மாப்கர் இவ்விபத்து குறித்து கூறும் போது, திவா-சவந்த்வாடி பாசஞ்சர் தொடர்வண்டி தாமதாக இயக்கப் பட்டதால், இழந்த நேரத்தை சரிகட்ட அதிவேகமாக இயக்கப்பட்டுள்ளது. பின்னால் வரக்கூடிய விரைவு தொடர் வண்டிக்கு வழிவிடுவதற்காக வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில்வே நிர்வாகம் பாசஞ்சர் தொடர் வண்டியை குறித்த நேரத்தில் இயக்குவதை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற விபத் துகள் நடைபெறாது. விபத்துக்குள்ளாகி எல்லாவற்றையும் இழந்திருப்பவர் களிடம், இழப்பீடு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் பயணச்சீட்டை கேட்டு வலியுறுத்தக்கூடாது என்று கூறினார்.

மாப்கர் ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட 1992-93 கலவரங்களின்போது வடாலா பகுதியில் 1993 சனவரி 10ஆம்தேதி அன்று குண்டடிப் பட்டார். அதேநாளில் காவல்துறையின் துப்பாச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் மசூதிக்குள் இருந்தபோது சுடப்பட்டு உயிரிழந்தனர்.

நீதிபதி பி.என்.சிறீகிருஷ்ணா குழு அறிக் கையில் காவல்துறையின் உதவி ஆய் வாளர் நிக்கில் காப்சே என்பவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்திருந் தார். ஆனால், அரசு அவர்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. மத்தியப் புலனாய்வுக்குழுவின் விசாரணையைக் கோரி மாப்கர் நீதிமன்றத்தில் அணுகி ஆதரவாக தீர்ப்பு பெற்றார். ஆனாலும், மத்தியப்புலனாய்வுக்குப்பின் விசாரணை முடிவு காவல் உதவி ஆய்வாளர் காப்சேவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த மாப்கர்தான் மிகுந்த மனிதநேயத்துடன் சிறுமி உள்ளிட்டவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

-மும்பை மிர்ரர், 11-5-2014

Read more: http://viduthalai.in/page8/80479.html#ixzz321cDQvRe

தமிழ் ஓவியா said...


மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை. - (விடுதலை, 22.6.191973)

Read more: http://viduthalai.in/page-2/80577.html#ixzz32DGYKpXg

தமிழ் ஓவியா said...


தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!


வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.

எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.

பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.

எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!

எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத் தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!

கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!

தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!

அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.

தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.

இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.

- கி. வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/80582.html#ixzz32DGhArJh

தமிழ் ஓவியா said...திருவாய் மலரும் திருவாளர்!

மக்களாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தேர்லின் போது பணப்பட்டுவா டாவை தடுத்து நிறுத்த முடி யாது என்கிறார் தமிழ் நாட்டின் தலைமைத் தேர் தல் அதிகாரி பிரவீன்குமார் (மக்கள் வரிப் பணத்தில் வாழும் அதிகாரிகள் மக்கள் மீதே பழி போடும் விசித் திரம்) மக்கள் திருந்த வில்லை என்பதற்காகத் தானே அதிகாரம் ஆட்சி என்பதெல்லாம்?


இவர்கள் படித்தவர்கள்?

சேலம் மக்களவைத் தேர்தலில் அரசுப் பணியா ளர்களின் தபால் வாக்களிப் பில் செல்லாதவை 466.

பி.ஜே.பி.யும் முஸ்லீம்களும்

பி.ஜே.பி. சார்பாக 7 தொகுதிகளில் முஸ்லீம்கள் நிற்க வைக்கப்பட்டும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. மூன்று முறை வெற்றி பெற்ற ஷானவாஸ் ஹுசேன் பீகார் மாநிலம் பாகல்பூரில் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

ஜம்மு காஷ்மீர் பாமுல்லா தொகுதியில் பிஜேபி சார்பில் நிறுத்தப்பட்ட குலாம் முகமதுபீர் - ஆறாம் இடத்திற்கும், சிறீநகர் தொகுதியில் முஷ்டாக் அகமது மாலிக் 4ஆம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர். மே. வங்கத்தில் தம்லுக் தொகுதியில் பாதுஷா சலாம் நான்காம் இடம் பிடித்தார். லட்சத் தீவிலோ சையது முகம்மது கோயாவுக்கு 5ஆம் இடம்,6 இடங்களில் 3 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் என்பதுகூட வேறு வழியில்லாத காரணமே!அட பைத்தியசாமிகளே!

புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணப்பட்ட போது தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னணியில் இருந்தார். செய்தி கேள்விபட்டு முதல் அமைச்சர் என். ரெங்கசாமி அப்பா பைத்தியசாமி படத்தை வைத்து - அதற்கு முன்னால் உட்கார்ந்து உற்றுப் பார்த்தபடி இருந்தாராம். சிறிது நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இவர் வெற்றி பெற்றவுடன் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு சென்று கும்பிடு போட்டாராம். (வாக்குப் பதிவு இயந்திரத் தில் அப்பா பைத்தியசாமி தில்லுமுல்லு செய்திருப்பாரோ!) அட பைத்தியங்களே!

Read more: http://viduthalai.in/e-paper/80575.html#ixzz32DH8GtOi

தமிழ் ஓவியா said...


நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHqHz3B

தமிழ் ஓவியா said...

சாறுகளில் உடல்நலம்

இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.

வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.

வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.

புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.

நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.

துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.

முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.

அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DHzQHcI

தமிழ் ஓவியா said...

நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.

கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.

காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/80558.html#ixzz32DICgRKU

தமிழ் ஓவியா said...


கருவுற்ற பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


கருவுற்றவர்கள் உண்ணும் சில உணவுகளில் கருச் சிதைவையோ அல்லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தும் கிருமிகளும் பாக்டீரியாக்களும் அதிகளவில் காணப்படுகின்றன. ஆகையால், கருவுற்றவர்கள் எந்தெந்த உணவுகளை உண்ணக் கூடாது என்று ஒரு பட்டியலை குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மீன்கள்: ஆற்று மீன்களையோ, குளத்து மீன்களையோ அல்லது அய்ஸ் வைத்த பதப்படுத்தப்பட்ட மீன்களையோ சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த மாதிரியான மீன்களை உண்பதால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரித்து கருவுற்ற நேரத்தில் அவர்களது உடலில் இருக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்துவிடும்.

அசைவ உணவுகள்: ஆட்டுக்கறி, கோழிக்கறி, மற்றும் இதர அசைவ உணவுகள், முட்டை & பால் பொருட்கள் ஆகிய உணவுகளை பாதி வேக்காட்டில் சமைத்து சாப்பிடக் கூடாது. பாதிவேக்காட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா இருப்பதால், அது, கருவின் வளர்ச்சியை பாதிப்படைச்செய்கிறது. மேலும் லிஸ்டீரியா என்னும் பாக்டீரியா வகையும் அதில் காணப் படுவதால், கருச்சிதைவும் ஏற்படும் அபாயம் உண்டு.

துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதி ப்பை ஏற்படுத்தும்.

பழங்கள்: அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டு பழ வகைகளை சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், அவர்கள் உடலில் உள்ள வெப்பத்தின் அளவு அதிகமாகி கருச்சிதைவிற்கு காரணமாகி விடும்.

காய்கறிகள்: சுத்தம் செய்யப்பட்ட காய்கறிகளை (முட்டை கோஸ், காலி ஃபிளவர் போன்றவற்றை வெந்நீரில் கழுவிய பின் சமையலுக்கு பயன்படுத்தலாம்) சமைத்து உண்ண வேண்டும். கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்கக் கூடாது. கருவில் இருக்கும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more: http://viduthalai.in/page-7/80559.html#ixzz32DIT735g

தமிழ் ஓவியா said...

தோல் நோய்களை நீக்கும் தகரை

அழகை விரும்பாத மனிதனே கிடையாது என்று கூறலாம். பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களை அழகு படுத்தி கொள்ளும் காலம் இது. கரிய நிறமாகட்டும் சிவந்த நிறமாகட்டும் பார்த்தவுடன் அழகை வெளிப் படுத்துவது தோல் தான். அது பளபளப்பாகவும் நோய் இல்லாமல் இருந்தால்தான் சிறப்பு. தோலில் பாதிப்பு ஏற்பட்டால் வேதனை படாதவர்கள் மிகவும் குறைவு. அத்தகைய தோலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை நீக்கும் மூலிகை தகரை.

தகரை, கருந்தகரை வெண் தகரை, ஊசித் தகரை என பல்வேறு வகை தகரைகள் உள்ளன. அனைத்தும் ஒரே வகையான பண்புகளை கொண்டிருந்தாலும் கை வைத் தியம் என்ற மருத்துவ முறை தெரிந்தவர்களால் தகரையும் ஊசித்தகரையும் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தகரையானது நீண்ட கூரிய வடிவத்தில் கரும்பச்சை நிறத்தில் எதிரெடுக்கில் அமைந்த இலைகள் கொண்டது.

வெருட்டல் மணமும், மஞ்சள் நிற பூக்களையும் உடைய குறுஞ்செடி. இதன் காய் உருண்டை வடிவத்தில் பயிறு போல நீண்டிருக்கும். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும். பெண்கள் அணியும் பாவாடையை இறுக்கமாக கட்டினால் இடுப்பு பகுதியில் வியர்வையும், அழுக்கும் சேர்ந்து படை உண்டாகும். அரிப்புடன் கூடிய இந்த படையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு சிகிச்சை பார்க்காமல் அதிகரிக்க செய்து விடுவார்கள்.

படர் தாமரை எனப்படும் இந்த நோய், ஆண்களிலும் சிலருக்கு வருவதுண்டு. தகரை இலையை பறித்து சிறிது எலுமிச்சை சாறு விட்டு மென்மையாக அரைத்து வைத்துக் கொண்டு குளிப்பதற்கு சில மணிநேரம் முன் படர்தாமரை உள்ள இடத்தில் பூசி விட்டு பிறகு குளித்தால் சில நாட்களில் இது தீரும். தடவும் போது சிறிது எரிச்சல் கொடுத்தாலும், நோய் நீங்கி மகிழ்ச்சி கொடுக்கும்.

மண், அழுக்கு, புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு தொற்றாலும், உடல் சூட்டாலும் சிரங்கு வரும். அரிப்புடன் கூடிய சிறிய கொப்பளமாக தோன்றி ஆறாத சிரங்காக மாறுவதும் உண்டு. பெரும்பாலும் கோடை தொடங்கும் காலத்தில் வரும் இந்த பிரச்சினைக்கு தகரையின் இலையை பறித்து கொதிக்க வைத்து அந்த நீரைக் கொண்டு சொறி மற்றும் சிரங்கை கழுவி விட்டு இலையுடன் மஞ்சள் அரைத்து பற்றிட்டால் பறந்து போகும்.தமிழ் ஓவியா said...


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா?


உங்களுக்குச் சொத்துப் பிரச்சினையா? வயல் எஸ்டேட் தொழிலில் சிக்கலா? போர்வெல் அமைக்க வேண்டுமா?

கவலைப்படாதீர்கள். காவல் நிலையம் போகா தீர்கள் - நீதிமன்றம் போகாதீர்கள்! மண்ணச்சநல்லூரில் இருக்கும் பூமிநாத சாமியைச் சென்று தரிசியுங்கள் - காரியம் கைக் கூடும்! என்று தினமணி வெள்ளி மணி கூறுகிறது! வெட்கக் கேடு!

சக்தி கொடு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிஜேபி சார்பில் போட்டியிட்டார் அருண்ஜெட்லி. அவர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீக்கியர்களின் 10ஆம் மதக் குருவான குருகோவிந்தசிங் எழுதிய நூலிலி ருந்து ஒரு பாடலைப் பாடினார்.

கூட்டத்தில் உள்ளவர் களையும் திருப்பிப் பாடச் சொன்னார். கடவுளே எனக்குச் சக்தி கொடு நல்ல விஷயங்களைச் செய்வதற்குப் பலம் கொடு. எனது எதிரியை எதிர் கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய்!

நியாயமான வெற்றி என் பக்கம் இருக்கட்டும் என்ற வரியில் நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாகவே இருக்கட்டும் என்று மாற்றிப் பாடச் சொன்னார் - பாடினார்கள். ஆனால் முடிவு தேர்தலில் தோற்று விட்டாரே! கடவுள் கதை கந்தையாகி விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/80540.html#ixzz32DJZTyM4

தமிழ் ஓவியா said...


16ஆம் மக்களவைத் தேர்தலின் அதிர்ச்சி தரும் தகவல் 13 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்குக் கிடைத்த இடம் 4 சதவீதமே! பி.ஜே.பி.யில் நிறுத்தப்பட்ட 5 முஸ்லிம்களும் தோல்வியே!

புதுடில்லி, மே 18- 16ஆம் மக்களவைத் தேர் தலில் சிறுபான்மை மக் களான இஸ்லாமியர்களுக்கு 22 இடங்களே கிடைத் துள்ளன. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது வீழ்ச்சியாகக் கருதப்படு கிறது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி என்ற நிலையில் சிறுபான்மை மக்களைப் பல வகைகளிலும் சிந்திக்க வைத்துள்ளது.

16ஆம் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் பேர் உள்ளனர். இந்நிலையில் புதிய மக் களவைக்கு சுமார் 4 சதவீத முஸ்லிம்களே (22 உறுப் பினர்கள்) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட முஸ் லிம் உறுப்பினர்கள் மக்க ளவையில் இடம் பெற்றி ருந்தனர். கடந்த 20 ஆண் டுகள் என்று கணக்கிட்டால் 25க்கும் மேற்பட்டவர் களும், 1980-89க்கு இடைப் பட்ட காலத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களும் மக்க ளவையில் இடம் பெற் றிருந்தனர்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழு வதும் 5 முஸ்லிம் வேட்பா ளர்களை மட்டுமே களத் தில் நிறுத்தியது. இந்த 5 பேரும் தோல்வி அடைந்து விட்டனர். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி சார்பில் மட்டும், பீகாரின் காகரியா தொகுதியில் இருந்து ஒரு முஸ்லீம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் 16ஆம் மக்களவைக்கு 8 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 4 பேர் காங்கிரஸ் சார்பிலும், 2 பேர் தேசிய வாத காங்கிரஸ் சார்பிலும் ஒருவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பிலும் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்களவையில் முஸ் லிம் உறுப்பினர் எண் ணிக்கை குறைந்துள்ளதற்கு முஸ்லிம் சமூகத் தலை வர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் இமுஷாவரத் அமைப்பின் தலைவர் ஜபருல் இஸ்லாம் கான் கூறுகையில்: தேசிய அரசி யலில் பா.ஜ.க. மிகப் பெரிய சக்தியாக உருவெ டுத்துள்ள நிலையில் மிக விரைவில் முஸ்லிம் இப் பதவிக்கு பொருத்தமற்ற வர்களாக ஆக்கப்படுவார் கள் என்றார்.

பெண் உறுப்பினர்கள் உயர்வு

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எண் ணிக்கை தொடர்ந்து போதிய அளவில் இல்லாமல் இருந்தாலும், 16ஆம் மக்களவையில் இவர்களின் எண்ணிக்கை 62 ஆக (சுமார் 11 சதவீதம்) உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் 2009 மக்களவையில் 61 பெண் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்பட்டதே அதிக பட்ச அளவாக இருந்தது.

தற்போதைய மக்கள வைக்கு பா.ஜ.க. சார்பில் அதிகபட்சமாக 28 பெண் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி மக்கள வைக்கு 3 பெண் உறுப் பினர்களை மட்டுமே அனுப்புகிறது. ஆம் ஆத்மி சார்பில் 4 பேர் போட்டி யிட்டாலும் யாரும் வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் போட்டியிட்ட 8,163 வேட்பாளர்களில் 636 பேர் பெண்கள்.

Read more: http://viduthalai.in/page1/80544.html#ixzz32DK9L8Hw

தமிழ் ஓவியா said...


அயோத்திதாசப் பண்டிதர்


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf

தமிழ் ஓவியா said...


நடத்தப்படக்கூடாது


அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரி யங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.

- (குடிஅரசு, 29.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/80628.html#ixzz32J5y3Hbg

தமிழ் ஓவியா said...

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்


அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்...
நீ செரித்துக் கொண்டதில்லை.

உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.

தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.

நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.

உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.

தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.

அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி

கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்- பொன்.இராமசந்திரன், பம்மல்

தமிழ் ஓவியா said...

அணிய வேண்டிய ஆடை!


ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பது
திராவிடம்!

ஜாதி, மதவெறிக்கு
மகுடம் சூட்டுவது
தமிழ்த் தேசியம்!

அம்மணமாயிருக்கும்
என்னுயிர்த் தமிழா!
ஆடையாய் நீ
அணிய வேண்டியது -
திராவிடமா?
தமிழ்த் தேசியமா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

குறுங்கதை : சுயமரியாதை


- க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

தமிழ் ஓவியா said...

கைமேல் பலன்?


காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : யாராலே?....


மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்

சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்

அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே

குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே

இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்

சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!

பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்

கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்

ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்

அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே

திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...


டாக்டர் தருமாம்பாள்


எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி? எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்? என்ற புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் வீரம் கொழுந்து விட்டு எரியும் எரிமலைப் பாடல் வரிகளைப் பாடிக் கொண்டு சென்னைப் பெத்துநாயக்கன்பேட்டை யிலிருந்து பெண்கள் படை ஒன்று புறப்பட்டது.

அந்தப் படை வந்து சேர்ந்த இடம் - இந்து தியாலாஜிகல் உயர் நிலைப்பள்ளி (14.11.1938) தலைமை தாங்கிய வீராங் கனை டாக்டர் தருமாம் பாள்!

அதற்கு முதல்நாள் (13.11.1938) சென்னையில் கூடிய பெண்கள் மாநாட் டில்தான் மதிப்புக்குரிய தலைவர் ஈ.வெ.ரா.வுக் குப் பெரியார் என்ற பட்டம் பெருமையுடன் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில்தான் மறுநாள் இந்த ஊர்வலம்.

டாக்டர் தருமாம்பாள் தலைமையில், மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மயிலை சிவமுத்துவின் தமக்கை யார் மலர் முகத்தம்மை யார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் அவர்களின் வாழ்விணையர் பட்டம் மாள், டாக்டர் தருமாம் பாள் அவர்களின் மரு மகள் சீதம்மாள், (மங்கை என்ற 3 வயது மகள், நச்சினார்க்கினியன் என்ற ஒரு வயது மகன் ஆகிய இரு குழந்தைகளுடன்) ஆகியோர் முதல் நாள் மறியலில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டனர். அய்வருக்கும் ஆறு வார கடுங்காவல் தண்டனை - வேலூர் சிறைக்கு அனுப் பப்பட்டனர்.

அந்த மறியல் போராட்டம் 4.9.1938 வரை தொடர்ந்தது. மொழிப் போரில் பெண் கள் பங்குகொண்டனர் என்ற வரலாற்றில் முதல் அத்தியாயத்தைப் பூக்கச் செய்தனர்.

மொழிப் போருக்குத் தலைமையேற்ற டாக்டர் தருமாம்பாள் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1959).

மொழிப்பற்று, தமிழ் இசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆசிரியர் களின் உயர்வு, விதவை கள் மறுமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, சித்த மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்த மூதாட் டியாக விளங்கினார்.

அவர் மறைந்தபோது, அறிஞர் அண்ணா எழுதி னார்:

மேலும் ஏதும் எழுத அன்னையாரைப் பிரிந்த தால் ஏற்பட்ட இதயக் குமுறல் இடம் தரவில்லை என்று எழுதினார் என் றால் அம்மையாரின் அருமை விளங்குமே! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80680.html#ixzz32PCuRAzo

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை

இலண்டன் மே 21- விடு தலைப்புலிகளின் தொலைக் காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன் றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகி யுள்ள புகைப்படத்தில் அவ ருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தி னர் கூறியிருக்கின்றனர். இந்த தக வலை இலண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது.

இணைய தளங்களிலும் பின்னர் உள்ளூர் பத்திரிகை களிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த் ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண் டுள்ளதாக அவருடைய தந் தையார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று தமது மூத்த மகளாகிய உஷாளினி சென்றதாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம் பெயர்ந்து, முள்ளி வாய்க்காலுக்குச் சென்றி ருந்த போது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட் டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத் தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் இடைத் தங்கல் முகாமுக்கு வந்தி ருந்தபோது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரு மாறு கோரி முறையிட்டி ருந்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர் கள் தொடர்பில் விசாரணை நடத்திய அதிபர் ஆணைக் குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள் ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப் பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவில் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழு வினரிடம் முறையிடவுள்ள தாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா இராணு வத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொ ளிகள் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இப் போது அவர் இராணுவ பங் கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப் படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் குறித்து இலங்கை இராணு வத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர் களிடம் கேட்டபோது, இப் படியான படங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என் றும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80682.html#ixzz32PDMmtT1

தமிழ் ஓவியா said...


ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?


புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஊட கம் நேர்மையாக செய்தி வெளியிடு கிறது என சொல்லுகிறார். உண்மையா? மோடி வளர்ச்சி நாயகன் என மோடியின் பிரச்சார கோஷ்டி தொடர்ந்து சொன்னதை ஊடகம் என்றைக்காவது கேள்விக்கு உட் படுத்தியுதுண்டா?

அடுக்கடுக்காக, குஜராத் மாடல் உண்மையல்ல என அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் சொன்னதை, ஊடகங்கள் நேர்மையாக வெளிப் படுத்தினவா?

நான் ஆட்சிக்கு வந்தால், குற்றப் பின்னணி உள்ளவர்களை சிறையில் அடைப்பேன் என மோடி பேசினார்; அமீத் ஷா, முசாபர் நகர் கலவரக் குற்றவாளிகள், எடியூரப்பா போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படி பேசுகிறீர்களே என எந்த ஊடகம் கேள்வி கேட்டது?

பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா சேர்த்த சொத்து விவரத்தை பட்டியலிட்டாரே; அதனை எந்த ஊடகமும் வெளியிடா மல் இருக்கிறீர்களே என கலைஞர் வெளிப்படையாகக் கேட்டாரே, அப்போதாவது, அந்த செய்தியை ஊடகம் வெளியிட்டதா?

ஆக, இங்கே ஊடக நிறுவனத்தின் முதலாளிகளுக்கு ஒரு அரசியல் இருக் கிறது. அதற்கு ஏற்ப செய்திகளை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக் கிறது. அதை மீறி நான் சொல்வேன் என்றால், அவர் வெளியே தள்ளப் படுவார்.

மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட சில பத்திரிகையாளர்கள். முதலாளிகளால் நீக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் தும்மினால் கூட, அது ஒரு செய்தி; உடனே, மைக்கைத் தூக்கிக் கொண்டு, மு.க. அழகிரியிடம் பேட்டி. அவரைத் தான், கட்சியி லிருந்து நீக்கிட்டாங்களே; அப்புறம் அவரிடம் பேட்டி எதற்கு?

இன்றைக்கு, அதிமுக அமைச்சர் கள் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்றைக்கு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட, அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி.வேலு மணியும், 26.1..2012 அன்று, முதல்வர் ஜெயலலிதாவால், அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

கோகுல இந்திரா, சென்ற ஆண்டு பிப்ரவரி 27, 2013, அவர் வகித்து வந்த சுற்றுலாத் துறையை ஒழுங்காக கவனிக்கத் தவறியதால், இதே முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.

இந்தச் செய்தியை, மூன்று அமைச் சர்கள் நீக்கம்; புதிய அமைச்சர்கள் நியமனம் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி கூறுகின்றன.

ஒரு ஊடகம்கூட, இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வர்கள், ஏற்கெனவே, அமைச்சர் களாக இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள் என கூறவில்லை.

ஏற் கெனவே, அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி எந்த அடிப்படையில் தரப்படுகிறது என ஜெயலலி தாவிடம், இந்த ஊடகங்கள், கேள்வி கேட்டுவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்.

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள்தான், பத்திரிக்கா தர்மம், நடு நிலை என்றெல்லாம் வாந்தி எடுக்கின்றன.

நம்மைப் பிடித்த அய்ந்து நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சும்மாவா சொன்னார்? அவர் காலத்தில், தொலைக்காட்சி ஊடகம் இல்லை; இருந்திருந்தால், இதையும் சேர்த்து இருப்பார்.- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/80691.html#ixzz32PED9Wm2