Search This Blog

9.5.14

ஆண் பெண் சமத்துவம்-பெரியார்ஆண் மக்கள் தங்களுடைய பெண் மக்களை அதாவது தாங்கள் மிகுதியும் மரியாதை செலுத்தும் தாய்மார்களாயிருந்தாலும் சரி, அன்பு செலுத்தும் சகோதரியாயிருந்தாலும் சரி, காதலுக்குரித்தான மனைவிகளா யிருந்தாலும் சரி ஒரே படியாக அவர்களைக் கேவலமாகவே எண்ணியும், மதித்தும் வருவது சகஜமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் வெகுகாலமாக இம்மாதிரி பெண்களை இழிவாகக் கருதப்படுவதற்கு நமது சாஸ்திரங்களும், பண்டிதப் பெரியோர்களும், முற்றும் துறந்த முனிவர்களென்று சொல்லப் பட்டவர்களும் ஒருவித காரணமுமின்றி பெண்களைக் கேவலமாக வர்ணித்து வந்ததோடு, பாரபக்ஷமாக ஏட்டிலும் எழுதிவைத் திருக்கின்றனர். இதைப் படிக்கும் மக்கள் சாதாரணமாக தங்கள் பகுத்தறிவைக் கொண்டே ஆராயாமல் தங்கள் பெண்மக்களைக் கேவலமாக நடத்தி வந்ததோடு அவர்களுக்கு எவ்விதத்திலும் சமத்துவம் ஏற்படாதபடி சட்ட திட்டங்களையும் செய்து அதைப் பழக்கத்திலும் கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பழக்கமானது இந்தியர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பலனால் மக்கள் சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி மேனாட்டு மனோதத்வ நிபுணர்கள் செய்யும் முடிவையும் நாம் பெரிதும் கவனிக்க வேண்டியது அவசியம்.

ஆடவர்கள் சாதாரணமாகப் பெண்களை "பேதையர்க"ளென்று அழைப்பதில் எவரும் பின் வாங்குவதில்லை. அடுப்பங்கரையில் சட்டி சுரண்டும் அம்மையர்களைத்தான் இவ்வாறு கூறிவிடுகிறார்களென்றாலோ தற்கால படிப்புப் படித்து ஆண்களைப் போலவே பி.ஏ., எம்.ஏ., பட்டம் பெற்றவர்களையும் கூட "எப்படியிருந்தாலும் பெண்புத்தி பின் புத்தி தானே; பேதமை என்பது மாதர்க்கணிகலன்" என்று அலட்சியமாகக் கூறி விடுகிறார்கள்.

இதைப் போல் பாமர மக்கள் கூறுவதுதான் ஒருபுறமென்றால் படித்த ஆண்களும் இவ்வாறு கூறுவதற்கு கூச்சமடைவதில்லை. அவர்கள் கூறுவ தெல்லாம் என்ன? பெண்களுக்கு "மூளையில்லை" என்பதுதான் பொதுவானது. இது மனிதனுடைய பழக்க வாசனையா, அல்லது இயற்கைவாசனையா என்று கூட நாம் சில சமயங்களில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் இது ஒரு அலட்சிய புத்தியினாலும், தற்பெருமையினாலும் நாளா வட்டத்தில் நிலைபெற்று விட்ட ஒரு தப்பபிப்பிராயமென்றே கூறவேண்டும். இந்தக் காரணத்தினாலேயே அவர்களை அலட்சியம் செய்து சரியான கல்வியை அளிக்காமல் இருந்து விட்டார்களெனக் கூறலாம். பெண்கள் புத்தியில்லா தவர்களென்று பொதுவாகக் கருதப்படுவதால் ஒவ்வொரு ஆடவரும் தங்கள் பெண்டிர்க்கு எல்லா விஷயத்திலுமே தங்களுடைய "புத்திசாலித் தனமான" யோசனைகளைக் கூற முன் வந்து விடுகிறார்கள். சமைக்கின்ற வேலை முதற்கொண்டு வீட்டு வேலைகள் சகலமும் சேர்த்துப் பிள்ளை பராமரிப்பு வரையிலுங் கூட விஷயங்கள் தங்களுக்கு எந்த விதத்திலும் அனுபோகமில்லாதிருந்துங் கூட தங்களுக்கு அதிக புத்தியுண்டு என்கின்ற ஒரு தற்பெருமையினால் எதையும் யூகித்து சொல்லக்கூடிய திறமை உண்டென்கின்ற அசட்டுத் தைரியத்தால் தங்கள் யோசனையைப் பெண் களுக்குக் கூற முன் வந்து விடுகிறார்கள். இந்த சம்பவமானது எந்தக் குடும்பத்திலும் சகஜமானதென்றாலும் அவர்கள் அப்படிக் கூறும் சந்தர்ப்பங்கள் நேரும்போதெல்லாம் குடும்பத்திற்குள் கொஞ்சம் "முறு முறுப்பு" ஏற்படாமல் போவதில்லை. சாதாரணமாக வீட்டிலுள்ள பெண்டிர் அந்த "நிபுணத்தனமான" யோசனையை எதிர்த்துக் கண்டிக்காமல் விடுவதில்லை. சில சமயம் ஆத்திரம் பொங்கி தாங்கள் எப்பொழுதும் காட்டும் அடக்கத்தையும் கூட மீறி "நீங்கள் பேசுவது இன்னதென்றே புரியாமல் பேசுகிறீர்கள்; உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூடச் சொல்லி விடுவார்கள். ஆடவர் தற்பெருமைக்குச் சிறிது ஆட்டங்கொடுத்தாலும் தனது படிப்பை விடுவதில்லை. ஏனெனில் தன் பெண்ஜாதியைவிட இல்லை, மற்ற எந்தப் பெண்களையும் விடவே தனக்கு "அதிகமான மூளை" இருப்பதாகவே அவரது எண்ணம். அதோடு அதை "நிரூபித்து" காட்டக் கூட முடியுமென்று கூறுவார்கள். அதற்கு உதாரணங்களின் மேல் உதாரணம் எடுத்துக்காட்டுவார்கள். எது எப்படி யிருந்தாலும் இவர்கள் இம்மாதிரியாக தம் பெண் ஜாதிகளுக்கு குடும்ப விஷயத்தைப்பற்றி யோசனை கூறப்போகும் போதெல்லாம் "முறுமுறுப்பு" ஏற்படுவதற்குக் காரணந்தான் என்ன வென்று யோசித்தாலோ இவர் கூறும் 10 யோசனைகளில் 9 யோசனைகள் சரியாகயிருப்பதில்லை. ஆனால் இவர் யோசனை சரியென்று இவர் நிரூபிப்பதற்கு பேசுகின்ற பேச்சோ ஊரை வளைக்கும்; ஆடுகின்ற ஆட்டமோ சொல்ல முடியாது. மற்ற உப அங்கங் களுக்கும் குறைவிருக்காது. இருந்தும் என்ன பயன். சில சமயம் இவர் கூறப்புறப்படும் யோசனைகள் யாவுமே பிசகாய்ப்போய் விடுவதுண்டு.

ஆனால் அவர்கள் சச்சரவு எப்படியிருந்தாலும் இருந்து போகட்டும், மனோதத்வ நிபுணர்கள் இது விஷயமாக என்ன கூறுகிறார்களென்றாலோ பெண்டிர்க்கும் "சரியான மூளை உண்டு" என்கிறார்கள். இது உத்தேச மென்றோ, கிட்டத்தட்ட என்றோ, வேறு சித்தாந்தமென்றோ சொல்லி விட முடியாது. அவர்கள் நேரடியாகச் சோதித்துப் பார்த்து ஆராய்ந்தறிந்து கண்டறிந்த முடிவுண்மைகளாகும். அமெரிக்காவிலே ஒரு கல்லூரியிலுள்ள 115 ஆண்களையும், 111 பெண்களையும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய புத்தித்திறமையைப்பற்றி வெகு கவனமாக சோதனை செய்து பார்த்ததில் சராசரியாக பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, சமத்துவமாக 142 மார்க்குகள் கொடுத்தார்களாம். அதை விடுத்து பல பிரபல்யமான கல்லூரி களிலுள்ள எல்லோரையும் ஒன்று சேர்த்து மொத்தம் 3175 ஆண்களையும், 1575 பெண்களையும் சோதித்துப்பார்த்ததில் அவர்களுடைய கல்வித் திறமையானது "ஏ" கிரேடு, "பி" கிரேடு முதலிய இரண்டுமே சேர்த்து ஆண்களுக்கு 100க்கு 75.4 மார்க்குகள் என்றும், பெண்களுக்கு 100க்கு 75.2 மார்க்குகள் என்றும் முடிவிற்கு வந்தார்களாம். அமெரிக்காவில் ஹேர்வார்டு பல்கலைக்கழகமானது சற்று மேல் தரமான கல்லூரி. இதனுடைய மாணவர்களையும், உயர்தாராட்கிளிப் பெண் கல்லூரியிலுள்ள மாணவி களையும் சோதித்து சில மாதங்கள் அவர்களுடைய அறிவுத்திறமையை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் மாத்திரம் முதல் தரமானவர்களென்று தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு 86% மார்க்குகள் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஹார்வார்டு மாணவர் எல்லோரையும் விட நிரம்பத் தாழ்ந்ததான 8% மார்க்கு வாங்கினதைப்பற்றி யாவரும் ஆச்சரியப்பட நேர்ந்தது. ஆனால் வெகு குறைந்த மார்க்குகள் வாங்கின பெண்மணிகள் மாத்திரம் 28% மார்க்குக்கு குறையாமல் வாங்கி யிருந்தார்கள். பொதுவாக எல்லோரையும் சேர்த்து சராசரி பார்த்தபொழுது மாணவர்களுக்கு 100க்கு 50.5 ஆகவும், மாணவிகளுக்கு சராசரி 100க்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெண்களுக்கும் ஆண்களுக்கு மிடையே அறிவு, திறமை இவைகளில் அதிகமான வித்தியாசங்கள் இருக்கவில்லை என்பது திட்டமாகத் தெரிகிறது. மற்றும் அவரவர்களுக்கு இட்ட வேலைகளில் சிறிதும் ஏற்றத்தாழ்வு கூற முடியாதபடி திறமையாகவே நடத்தக்கூடிய ஆற்றல் உண்டென்று தெரிகிறது.

இப்பொழுது நாம் சாதாரணமாக உலகத்திலேயே உள்ள ஆண், பெண்களையும் எடுத்துக்கொண்டோமானாலும், திறமைசாலிகளான பெண்கள் சராசரியில் சமத்துவமாகவே தோன்றியிருப்பதாகக் கண்டு கொள்ளலாம். ஆண்களுக்குப் பிறகு எவ்வளவோ காலத்திற்குப் பின்னால் பெண்கள் தங்கள் சுதந்திரங்களைப் பெற்றிருந்தாலும் இந்தக் குறுகிய காலத்திற்குள் நல்ல புகழ்பெற்ற ஆசிரியைகளும், நடிகர்களும், பிரசங்கிகளும், வர்த்தகம் முதலான துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும், எண்ணிக்கையில் கூடுமான வரையில் வீதாச்சாரத்திற்குக் குறையா தென்பது திண்ணம், இந்தியாவின் பெண்கள் சுதந்திரமோ வெகுகாலமாகத் தடுக்கப்பட்டிருந்தும் அவர்களிலும் புகழ் பெற்றவர்களும், அறிவிலும், ஆற்றலிலும், ஆண்களோடு சமத்துவமாக வைத்துப் போற்றக்கூடிய இயல் புடையவர்கள் எத்தனையோ பேர் இந்த குறுகிய காலத்திற்குள் தோன்றி யிருக்கிறார்களென்பதையும் கண்டு கொள்ளலாம்.

இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள சமத்துவமானது ஒரே தன்மையிலென்பதாக தவறுதலாகக் கொள்ளக்கூடாது. அவர்கள் ஆண்களுக்குச் சமத்துவமான துணைவர்களே ஒழிய, அதாவது தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்குமுள்ள திறமையில் அவரவர்கள் சமத்துவமென்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய ஆண்களைப் போன்ற நகல்கள் என்று கூறுவதல்ல. இருபாலார்களுக்கிடையே அவசியமான வித்தியாசங்கள் உண்டு. அவர்களுடைய மனோ பாவத்தில் தெளிவாக வித்தியாசப் படுகிறார்களென்பதாக புரொபசர் எட்வர்ட்டி தான்டைட் என்ற மனோ தத்துவ சாஸ்திரி கூறுகிறார். பெண்களானவர்கள் பாஷா வித்வத்திலும், சடுதியான ஞாபக சக்தியிலும், கிரகிக்கும் தன்மையை யுடையவர்களென்றும், ஆண்களோ சரித்திர ஆராய்ச்சியிலும், உள் உணர்ச்சியிலும், திரேக பலத்திலும், ரசாயன சாஸ்திரங்களிலும் பெருமையாய் இருப்பதோடு நுணுக்கமான வேலைகளிலும் திறமைசாலிகள் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு பாலாருக்கும் இம்மாதிரியான, இயல்பான குணா குணங்கள் தனித்தனியாக இருக்கிறதென்பதை உணராமல் ஆண்களுக்குள்ள அறிவுத்திறமையில் பெண்கள் குறைவானவர்கள் என்ற முடிவுக்கு வருவதானது ஒரு பெரிய தவறு; ஒரு பிரபல விஞ்ஞான சாஸ்திரியானவர் விஞ்ஞான ஆராய்ச்சியைப் பற்றி வியாசம் தயாரிக்கும்போதெல்லாம் அடிக்கடி தன் பக்கத்திலுள்ள 13 வயதுடைய மகளை தனக்குச் சந்தேகமாய் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுத்துக் கூட்டுதலைக் கேட்டுக் கொண்டு எழுதுவாராம். இந்தப் பெண் சாதாரணமாகப் பள்ளி மாணவியாயிருந்தும் விஞ்ஞான கலை சம்பந்தமான வார்த்தைகளைக் கூட பிழையில்லாமலும் தயக்கமின்றியும் எழுத்துக் கூட்டிச் சொல்லும் வழக்கமுண்டாம். அப்படிச் சொல்லும் பொழு தெல்லாம் அந்தப் பெண் குழந்தையானது தனக்கு இருக்கும் ஞாபகசக்தி கூட தந்தையாருக்கு இல்லாதிருப்பதைப் பற்றி பெரிதும் வியப்புறுவாளாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டு ஆண்களுக்கு பாட்டனார் திதி எப்பொழுது, அமாவாசை எப்பொழுது, தான் ஊர் போய் வந்தது எப்பொழுது என்பதான வெகு சாதாரணமான விஷயங்களைக் கூட எந்தத் தேதியிலென்பது கூட ஆண் மக்களுக்கு ஞாபகம் வருவதில்லை. குடும்பத்தில் நடந்த எந்த சந்தர்ப்பங்களைப் பற்றியும் சரியானபடி எந்த தேதியில் நடந்தது என்று சொல்லவும் முடியாது. தன்னுடைய பவுண்டன் பேனாவை எங்காவது வைத்து விட்டு வீடெல்லாம் தேடித் திரிவார்கள். ஆனால் வீட்டிலுள்ள பெண்களோ எதுவாயிருந்தாலும் மறக்காமல் ஞாபகத்தோடு சொல்வதும், எடுத்துக் கொடுப்பதும், ஞாபகமூட்டுவதும் வெகு சகஜமான தென்பது யாவருக்கும் தெரிந்த விஷயம். மேனாட்டிலோ தற்சமயம் பெரும்பாலான பெண்கள் தங்கள் பாஷா ஞானத்தின் திறமையை யாவருக்கும் திடுக்கிடும் படியான விதத்தில் பிரத்தியட்சத்தில் காட்டி வருகின்றார்கள். முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை இப்பொழுதும் நாம் கவனிக்க விட்டு விட்டே பார்த்தாலும் 100க்கு 30 பேர்கள் வரையில் உலகத்தில் புகழ் பெற்ற பேராசியர்களாய் இருப்பவர்கள் பெண்களென்றே சொல்ல வேண்டும். இங்கிலாந்தில் நூல் வல்லார்களெல்லாம் பெண்மணிகளே. பிரான்சில் எத்தனையோ நூலாசிரியர்களும் நடிக நாடகத்தில் பேர்போனவர்களும், அரசியல் நிபுணர்களும் பெண்களாக இருந்திருக்கின்றனர். இத்தாலியி லிருந்தும், ஜர்மனியிலிருந்தும் எவ்வளவோ சங்கீத சாகித்யத்தில் பேர் போனவர்களெல்லாம் தோன்றியிருக்கின்றனர். அமெரிக்காவில் எவ்வளவோ சமூக சீர்திருத்தத்தில் புகழ் பெற்ற பெண்களைக் காணலாம். இன்னும் அநேக தொழில்களிலும் ஈடுபட்டு இருக்கின்றார்களெனினும் சமூக சீர்திருத்தத்தில் முனைந்து நிற்பவர்கள் பெண்கள் தான் அதிகமெனலாம். வர வர அமெரிக்கப் பெண்கள் அரசியல் விஷயத்திலும் புகுந்து யாவருடைய போற்றுதலையும் பெற்று வருகின்றனர். சமீப காலத்திற்கு முன் தான் விஞ்ஞான சாஸ்திர வழிகளிலும் தங்களுக்குத் திறமையுண்டென்று பெண்கள் அறியத் தொடங்கினார்கள். சென்ற ஜனக் கணிதத்திலிருந்து விஞ்ஞான ரசாயன சாஸ்திர ஆராய்ச்சியிலும் முனைந்து நிற்கும் பெண்கள் 10 வருடங்களுக் குள்ளாக இரட்டிப்பாக அதிகரித்திருக்கின்றார்களென்று தெரிகிறது. இப்பொழுது அமெரிக்காவிலோ 10 வருடங்களுக்கு முன் 400 பேர் இருந்த விடத்தில் இப்பொழுது 3000 பெண்கள் பிளான் வரைவதில் திறமைசாலிகளாகவும், பெண் கல்லூரித் தலைவிகளாகவும் பேராசிரியர்களில் 10000க்கு மேற்பட்டவர் களும், 2000 ஜட்சுகளும், லாயர்களில் சுமார் 5000 வரையிலும் பெண்கள் இருப்பதாகவும் தெரிகிறது. பாங்கு உத்தியோகத்தில் முக்கிய ஸ்தானங்கள் வகித்து வருபவர்கள் மாத்திரம் 4000க்கு மேற்பட்டவர்களென்று தெரிகிறது. பெண்கள் டாக்டர்களாகவும், நர்சுகளாகவும், பாதிரிமார்களாகவும் எத்தனையோ 1000 பேர்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இவற்றை யெல்லாம் கொண்டு நாம் என்ன முடிவிற்கு வர முடிகிறதென்றால் அவர்களுக்கு எந்த விஷயங் களிலும் ஆண்களைப் போன்ற திறமை உண்டென்றும் ஆனால் அவர்களுக்கு முன்னிருந்த சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு அவர்களுடைய திறமையைக் காட்ட ஒட்டாதபடி செய்ததே ஒழிய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டால் அவர்களுடைய போக்கில் நல்ல திறமையைக் காட்டக் கூடுமென்பதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் ஆண்களுடைய மூளையை விட பெண்களுடைய மூளை அளவில் சிறியதாக இருந்திருப்பதால் புத்தியில் பெண்கள் குறைந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால், உடற்கூறு சாஸ்திரிகளும் மனோதத்துவ சாஸ்திரிகளும் மூளையினுடைய அளவில் உள்ள வித்தியாசத்தைக் கொண்டு புத்தியை நிர்ணயிக்க முடியாதென்றும், பெரிய மூளைகளை விட சிறிய மூளைகளிலே தான் அதிலும் பெண்களுடைய மூளைகளிலே அதிகமான "பிரைன் செல்கள்" இருப்பதாகவும், செல்களுடைய எண்ணிக்கைக்கு தகுந்த விதத்திலே தான் புத்தியின் அளவும் இருக்கிறதென்றும், ஆதலால் சாதாரணமாகப் பெண்களும், ஆண்களும் சமத்துவமான அறிவு பலம் உடையவர்களென்று முடிவு கட்டி இருக்கின்றனர். ஆனால், ஆண்கள் எப்பொழுதும் தங்கள் மனைவிக்கு "மூளை இல்லை" யென்று அடிக்கடி ஏன் சொல்லுகிறார்களென்று யோசித்துப் பார்க்குமிடத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனப்போக்கும், குணப்போக்கும், உணர்ச்சிப்போக்கும் வித்தியாசப்பட்டு இருப்பதினாலேயே யென்பதை கவனிக்க வேண்டியது. இவற்றை அளவிடுவதற்கு நிபுணர் களாலேயே பெரிதும் கஷ்டமாயிருக்கிறது. அவர்களுக்கு உணர்ச்சியும், உற்சாகமும் புத்திப் போக்கு, மதாபிமானம், இரக்கம், பொறுமை, கூச்சம், நாணம் முதலியவைகளான குணங்கள் அதிகமாயிருந்து வருகின்றன. ஆண்களோ, சுயேச்சையிலும், தீவிரத்திலும் உள் உணர்ச்சியிலும், கேலிகளிலும் அதிகமான போக்குடையவர்களாய் இருந்து வருகிறார்கள். இந்த அளவு கூட சராசரி என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறதே ஒழிய தனித்தனியாகவும் கூற முடியவில்லை. ஏனெனில் சில ஆண்கள் குழந்தை களிடத்தில் பெண்களைவிட அதிகமான ஆர்வத்தைக் காண்பிக்கின்றனர். சில பெண்கள் ஆண்களைப் போல திடமும், தீவிரமுள்ளவர்களாகவு மிருக்கிறார்கள். பெண்களானவர்கள் ஒரு ஆசாமியினுடைய தோற்றத்தைக் கொண்டே நிர்ணயிக்க முற்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் உண்மை நிகழ்ச்சிகளைக்கொண்டே தங்கள் அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஆண்களானவர்கள் ஒருவர் செய்த காரியத்தைக் கொண்டே அவர்களை மதிக்கின்றார்களே ஒழிய அவர்களுடைய குணாகுணங்களைக் கொண்டோ, அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றியோ கவலைப்படுவ தில்லை. மனித ஸ்பாவத்தை சம்பந்தப்பட்டு எந்த விஷயங்களையும் பெண்களுக்கு யூகித்து உணர்வதற்கான நுட்ப அறிவானது ஆண்களை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு உதாரணமாக, ஒரு ஆணானவன் எவ்வளவுதான் தன் மனைவியோடு பழகி இருந்தாலும் அவளுடைய குணா குணங்களை சரிவர அறிந்து கொள்வதற்கு சக்தியில்லாமலிருக்க, ஒரு மனைவி தான் பழகிய புருஷனின் குணா குணத்தை சிறு காலத்திற்குள் அவனைப் பற்றி அவனே உணர்ந்திருப்பதைவிட அதிகமாக உணர்ந்திருக்கிறாள்.

எவ்வளவு காரணங்கள் இதைப்போல் சொன்னாலும் ஆண்களுக்கு மாத்திரம் பழக்க வாசனையால் ஏற்பட்ட ஒரு அபிப்பிராயமானது திருந்துவதற்கு வெகு நாட்கள் பிடிக்கும்போல் தோன்றுகிறது. இருந்தாலும் இதற்கு முக்கியமான காரணம் குடும்பத்தில் சச்சரவு ஏற்படாமல் சமாதானம் நிலவ வேண்டுமென்று பெண்கள் நினைத்துத் தங்கள் ஆண்மக்களுக்கு அடிக்கடி எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்து விடுவதினாலேயே பெண்களைப்பற்றி சர்வ சாதாரணமாக சமத்துவமில்லாதவர்களென்று எண்ணம் தோன்றுவதற்கு இடமாயிருக்கிறது. மேலும், அவர்கள் சுதந்திரத்தோடு தங்களுடைய சுய சம்பாத்திய முயற்சியினால் வாழ்ந்து காட்ட வேண்டுவதும் அவசியமாயிருக்கிறது. பெண்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஆண்களை எப்பொழுதும் எதிர்பார்த்து நிற்பதானது அவர்களை ஆண்களுக்கு சமத்துவ மானவர்களாய்ச் செய்ய முடியாமலிருக்கிறது. பெண்கள் அறிவுத்திறமையில் சமத்துவமானவர்களாயினும் புத்திப் போக்கில் மாத்திரம் மாறுபட்டவர்களாய் இருக்கிறார்களாதலால் அவர்கள் இருவரும் சமத்துவமானவர்களென்பதோடு இவர்கள் இருவருடைய குணாகுணங்களும் ஒத்து நின்று ஒரு காரியம் நடத்துவதாலேயே வாழ்க்கையும் இன்பமும் ஏற்பட முடியுமென்பதையும் திண்ணமாய் உணர வேண்டும்.

 ---------------------------------- பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜுன் 1936 இதழில் பெரியார் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...

கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்

அணையை பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, மே 8- கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது. அது அரசியல் சாசன சட் டத்துக்குப் புறம்பானது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்; அணையைப் பலப்படுத் தும் பணி முடிந்த பிறகு நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதி மன்றத்தின் அய்ந்து நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன அமைப்பு இந்த வழக்கில் நேற்று (7.5.2014) தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழக-கேரள எல்லை யில் அமைந்துள்ள முல் லைப்பெரியாறு அணை யின் மூலம் தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன.

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த அணையில் 152 அடி உயரத்துக்கு தண் ணீரை தேக்கி வைக்க முடி யும். ஆனால் அணை பல வீனமாக இருப்பதாக கூறி நீர் மட்டத்தை கேரள அரசு 136 அடியாக குறைத்துவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு அளித்தது.

கேரள அரசு சட்டம்

இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த கேரள அரசு, முல் லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த் தாமல் இருப்பதற்காக, மாநில சட்டசபையில் அணை பாதுகாப்பு திருத்த சட்டம் ஒன்றை நிறைவேற் றியது.

கேரள அரசின் முடிவு களில் அண்டை மாநிலங் கள் தலையிடக்கூடாது என்று அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந் தது. மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கும் அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு

கேரள அரசின் இந்த அணை பாதுகாப்பு சட் டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந் தது. தமிழக அரசின் மனு மீதான விசாரணையின் போது, முல்லைப் பெரி யாறு அணை மிகவும் பலவீனமாக இருக்கிறது என்ற வாதம் கேரள அரசின் சார்பில் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன் றம் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது.

அந்த குழு முல்லைப் பெரியாறு அணையை நேரில் ஆய்வு செய்து, அணை மிகவும் பலமாக இருப்பதாகவும், எனவே நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த் தலாம் என்றும், இதனால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றம் கண்டனம்

அந்த அறிக்கையை ஏற்க மறுத்த கேரள அரசு, புதிய குழு ஒன்றை அமைக் குமாறு வற்புறுத்தியது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் நியமித்த குழு குளுகுளு ஏ.சி.அறை யில் அமர்ந்து அறிக்கை தயார் செய்யவில்லை என் றும், நேரடியாக சென்று அணையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்கள்.

தமிழ் ஓவியா said...

இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதி முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடா மல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது. இந்நிலையில், உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி குமார் பிரசாத், மதன் பி.லோகுர், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங் கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் நேற்று (7.5.2014) தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும், கேரள அரசு நிறை வேற்றிய சட்டம் செல்லாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
கேரள அரசின் சட்டம் செல்லாது

நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் கூறி இருப்பதாவது:-

கேரள அரசு நிறைவேற் றியுள்ள கேரள நீர்ப்பாச னம் மற்றும் அணை பாது காப்பு (திருத்தம்) சட்டம் 2006 அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டம் இயற்றி தடுக்கக்கூடாது. எனவே கேரள அரசு நிறைவேற்றிய சட்டம் செல்லாது. ஏற்க னவே, 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அணையின் நீர் மட்டத்தை தமிழகம் 142 அடிக்கு உயர்த்திக்கொள்ள லாம். அணையின் நீர்மட் டத்தை 142 அடியாக உயர்த் தவும், அணையை பலப் படுத்தும் பணி முடிந்த பிறகு நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள் ளலாம் என்றும் 27-2-2006 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியது இல்லை.

தமிழ்நாடு தரப்பில் அணையில் பழுது பார்க் கும் வேலையைத் தொடர கேரளா எந்த வகையிலும் குறுக்கிடவோ, தடை விதிக் கவோ கூடாது. முல்லைப் பெரியாறு அணை வலு வாக உள்ளது.

3 பேர் குழு

இருந்தாலும் அணை யில் நீரின் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதில் கேரளாவுக்கு இருப்பதாக கூறப்படும் அச்சத்தை தவிர்க் கும் வகையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணியை கண் காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்கப்படும்.

இந்த குழுவில் மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியும், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் சார்பில் தலா ஒரு பிரதி நிதியும் இடம் பெறுவார் கள். இந்த கண்காணிப்பு குழுவின் அலுவலகம் கேர ளாவில் இருக்கும். இந்த குழுவுக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும்.

இந்த கண்காணிப்பு குழு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணியை கண்காணிப்ப தோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அணை யில் ஆய்வு மேற்கொள் ளும். குறிப்பாக மழைக் காலத்திற்கு முன்பும், மழைக்காலத்திற்கு பிறகும் ஆய்வுகள் மேற்கொண்டு, தேவைப்பட்டால் மேற் கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை களை பரிந்துரைக்கும். அந்த பாதுகாப்பு நடவடிக் கைகளை தமிழக அரசு நிறைவேற்றும்.

ஏற்க வேண்டும் நெருக்கடியான சூழ் நிலைகளில், அணையின் பாதுகாப்பு குறித்து தமிழ் நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த குழு தேவையான வழி ட் டுதல்களை பரிந்துரைக் கும். இந்த வழிகாட்டுதல் களை இரு தரப்பும் ஏற் றுக்கொள்ள வேண்டும். மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணைக் கட்டு பாது காப்பு அமைப்பு வழிகாட் டுதலின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை யின் பாதுகாப் புக்காக தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அவ் வப்போது மேற்கொள்ளும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை இந்த கண்காணிப்பு குழு அனு மதிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/79889.html#ixzz31B0q1SOO

தமிழ் ஓவியா said...


பக்தி வந்தால் புத்தி போகும்சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.

அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.

உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.

Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV

தமிழ் ஓவியா said...


பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்


பிரிவு 370அய் விலக்குவது:
காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு

சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.

செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.

கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?

உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.

இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய

இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.

குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?

உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.

நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi

தமிழ் ஓவியா said...


போலியான வளர்ச்சி என்னும் வாக்குறுதிக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவா சக்திகள்

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்பு வரை நாட்டின் வளர்ச்சி, குஜராத் மாதிரி, ஊழலற்ற இந்தியா என்று பேசிக்கொண்டே வந்தார். மோடியின் பேச்சை ஊன்றி கவனிக்கையில் பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு முன்பு வரை எந்த ஒரு இடத்திலும் மதம் பற்றியோ பிரிவினை பற்றியோ கூறவில்லை. இதன் காரண மாகவே பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது.அதே வேளையில் பிற பாஜக தலைவர்களும் அவ்வளவாக பிரிவினை பற்றிப்பேசவில்லை. ஆனால் தேர்தல் அறிக்கை வெளி யிட்டது முதல் மத ரீதியாக பிரிவினை பேச்சுக்கள், வன்முறையை தூண்டும் அப்பட்டமான உரைகள் சாதிரீதியான பேச்சுக்களும் பெருகிவிட்டது, இது நடுநிலையாளர்களுக்கு பெரிய அதிர்ச் சியைக்கொடுத்தது.

முக்கியமாக அமித் ஷாவின் பேச்சு மக்களிடையே ஒரு அச்சத்தை ஊட்டி இருப்பது என்பது உண்மை தான். உத்திரப்பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமித் ஷா தன்னுடைய பேச்சில் அஜம்கர் சம்பவத்திற்கு நாம் பழிவாங்குவோம் என ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக பேசினார். ராமன்கோவில் விவகாரத்திலும் இதுவரை இலைமறைகாய் போல் செயலாற்றி வந்தவர்கள், தங்களின் தேர்தல் அறிக்கையில் இராமன்கோவில் விவகாரம் இடம்பெற்றவுடன் நேரடியாக பேச ஆரம்பித்து விட்டனர். முக்கியமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இராமன் கோவில் கட்டுவோம் என்று பாஜகவின் முஸ்லீம் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வியை வைத்து அறிக்கை வெளியிட வைத்தனர். பிகார் மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கிரிராஜ் கிஷோர் மோடியை ஆதரிக்காதவர்கள் அனை வரும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதாவது: இது இந்து நாடு மதச்சார்பற்ற என்பது அரசியல் லாபத் திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்துக்கள், இந்துக்களுக்கு ஒரே கட்சி அது பாஜக அக்கட்சி பிரதமராக அறிவித்திருக்கும் நரேந்திரமோடியை பிடிக்கவில்லை என்று யாரும் கூறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடவேண்டும், இல்லையென்றால்.... என எச்சரிக்கும் விதத்தில் பேசினார். இது வடக்கே நடக்கிறது என்றால் மேற்கே மராட்டிய மாநிலத்தில் முக்கிய எதிர்கட்சியான சிவசேனாவின் குரலோ இதைவிட பயங்கரமாக உள்ளது. அக் கட்சியின் பிரமுகர் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின்கட்கரி மேடையில் இருக் கும் போதே, இந்துக்கள் அல்லாத மக்கள் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறார்கள், அவர்களுக்கு மோடி பிரதமாரான பிறகு தகுந்த பாடம் கற்பிப்போம் என்று கூறுகிறார். மேலும் இஸ்லாமியர்களை துரோகிகள் என்றும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ளத்தயாராக இருங்கள் என்றும் கூறியிருக்கிறார். அவர் பேசிய பேச்சைக்கேட்டுக்கொண்டு இரசித்து கொண்டு இருந்தார் நிதின் கட்கரி

தமிழ் ஓவியா said...


இந்துத்துவ அமைப்புகள் மேலும் ஒரு படிக்கு மேலே சென்று இந்துக்களே உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள், இல்லையென்றால் உங்களின் பாதுகாப்பு உங்கள் கையில் அல்ல என்று மத்திய பிரதேசம் முழுவதும் கைப்பிரதிகள் கொடுத்து உள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பாக நடந்த பொதுகூட்டங்களில் குஜராத் வளர்ச்சி, குஜராத் மாடல் இந்தியாவெங்கும் கொண்டு வருவேன். என்று கூறிக்கொண்டு இருந்த மோடியை உண்மையிலேயே பல இந்தியர்கள் நல்ல பிரதமமந்திரியாக வருவார் என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தனர். ஆனால் குஜராத்தில் நடந்த மாற்றங்கள் அனைத்தும் போலியானவை விவசாய நிலங்கள் பல கையகப்படுத்தி முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. முதலாளிகளின் நலன் குஜராத்தில் மிகவும் அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது, அதே வேளையில் அங்குள்ள மக்களின் வாழ் வாதாரம் மிகவும் ஆபத்தான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதே உண்மை, இதை பல புள்ளிவிபர ஆதாரங்கள் மூலம் அறிகிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே மோடி மெல்ல மெல்ல தன்னை இந்தியாவின் முக்கிய நபராக மாற்றமுனைந்து கொண்டு வந்தார். ஒவ்வொரு பத்திரிகையில் தன்னுடைய பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காகவே பரபரப்பான வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தார். எடுத்துக்காட்டாக குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு இன்றும் அகதிகள் முகாம்களில் வாழும் மக்களைப் பற்றி கேட்ட கேள்விக்கு எனக்கு அந்த இடம் அகதிகள் முகாமாக தெரியவிலை அது குழந்தைகள் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த பரபரப்பு அடங்கும் முன்பாகவே 2002-ஆம் ஆண்டு கலவரத்தில் இறந்தவர் களை காரில் ஒரு நாய்குட்டி அடிபட்டு செத்துப்போனால் கூட என் மனம் வருந்தத்தான் செய்யும் என்று கூறினார். மோடியின் இந்தப்பேச்சு பெரிய விவாதப் பொருளாக அனைத்து தரப்பு தலைவர் களாலும் விமர்சிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

மோடிக்கு இதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. எல்லாவற்றையும் விட தற்போது முழுக்க முழுக்க மதரீதியான பேச்சில் இறங்கிவிட்டார். அவரது ஒரே நோக்கம் பெரும்பான்மை இந்துக்களின் வாக்கு களை எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்பதுதான். முசாபர் நகரில் நடந்த கலவரத்தினால் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பாஜக தன்னை ஈடுபடுத்திக்கொண்டது, முக்கியமாக கலவரத்தின் போது நடந்த பல சம்பவங்கள் தொழில் நுட்ப உதவியுடன் போலியாக வன்முறையைத்தூண்டும் விதமாக தயாரிக்கபட்டு பல்வேறு ஊடக சாதனங்கள் மூலமாக மக்களை பிரித்தாளும் வேலையைச்செய்தது. இவை அனைத்தும் ஒரு தலைவரின் ஆலோசனையின் கீழ்தான் நடந்து வந்தது, இந்த பிரிவினைவாத முயற்சியின் கீழ் எந்த அரசியல் தலைவர் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இறுதியாக மோடி தனது அரசியல் வாழ்க்கைக்கு மக்களைப்பிளவுபடுத்தி அதன் மூலம் லாபம் தேடும் ஒன்றாகவே மாற்றிவிட்டார். இதுவரை மோடியின் பின்னாலும் பாஜகவின் பின்னாலும்இருந்து செயல் பட்ட இந்துத்துவா அமைப்புகள் தற்போது நேரடியாக தங்களின் கோர முகத்தைக் காட்டத்துவங்கியுள்ளன. மக்களை எளி தில் பிரித்தாகிவிட்டது, எஞ்சியுள்ள தேர் தல்களில் இந்துக்களின் ஓட்டுக் ளைப் பெறுவதே முக்கிய நோக்கம் என்ற நோக் கத்தில் களமிறங்கியுள்ளது. தற்போது வளர்ச்சி மற்றும் அனைத்தும் பிரச்சாரத் தின் போது காணாமல் போய் விட்டது. இந்துத்துவ அமைப்புகள் மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்பு தடை செய்யப்பட்டன. பிறகு அவை அரசியல் களத்தில் இல்லாமல் சமூக அமைப்பு என்ற போர்வையில் இயங்கிவந்தன. ஆனால் அவை தங்களுடைய நோக் கத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவதே அதன் தணியா தாகமாக இருந்தது. அதே வேளையில் அதற்கு சாதகமான ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது. இந்த வேளையில் பாரதீய ஜனசங்கம் உரு வானது இதுவும் இந்துத்துவ அமைப்பு களின் கிளை அமைப்பு போல இருந் தாலும் நீண்ட காலமாக வெளியே தெரியாமல் ஒரு பொது அமைப்பாகவே காட்சிதந்தது. இந்துத்துவ அமைப்புகள் தங்களின் செயல்பாடுகளை அனைத்து இடங்களிலும் கொண்டு சென்ற பிறகு உங்களுக்கான அரசியல் தளம் பாஜக என்று அடையாளம் காட்டப்பட்டது.

அதாவது செம்மறி ஆட்டுத்தோல் போர்த்தப்பட்ட ஓநாய் ஒன்று இது நாள் வரை கூட்டத்தில் இருந்தது, தற்போது அதன் உண்மை உருவம் வெளிப் படையாக தெரிந்துவிட்டது. இதன் மூலம் தேச வளர்ச்சி அபிவிருத்தி எல்லாம் மோடி பிரதமரானால் சரிசெய்யமுடியும் என்ற நம்பிக்கை காணாமல் போய் நாட்டின் வளர்ச்சி பின்னடைந்து வரு கிறது. தேர்தலின் முடிவிற்கு பிறகு நமது நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லுமா அல்லது மீண்டும் பழமைவாதிகளின் கைகளில் செல்லுமா என்பதை முடிவு செய்யலாம்.

- எக்னாமிக் அண்ட் பொலிட்டிகள் வீக்லி மே 3, 2014

தமிழில்: சரவணா ராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-2/79899.html#ixzz31B1PHbuG

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்


ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:

1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.

2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.

3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!

4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.

5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)

6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.

7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.

8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.

9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.

10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.

11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.

12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.

13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.

14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).

இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.

ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.

திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.

கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.

அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.

பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ

தமிழ் ஓவியா said...


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா தாமதமின்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கலைஞர் அறிக்கை (8.5.2014)


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா தாமதமின்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கலைஞர் அறிக்கை (8.5.2014)

சென்னை, மே 8- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்த உடன், அதுகுறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டபோது, முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது என்று பதில் அளித்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்கே உரிய பாணியில் அபாண்டமான சில செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல...

தமிழக அரசும், கேரள அரசும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், 14.2.1998 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதுதான் உச்சநீதி மன்றம் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்ற வுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் 27-2-2006 அன்று உத்தரவிட்டதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையில் முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல மறைத்து திசை திருப்பிட முயற்சித்திருக்கிறார்; பாவம்! உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை நிறைவேற் றாமல், அதற்கு எதிராக 18-3-2006 அன்று கேரள அரசு, அதன் நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டம் -2003க்கு திருத்தங்களைக் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.


தமிழ் ஓவியா said...

அப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவசர முக்கியத் துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில், உடனடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு அ.தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, கேரள அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை காத்திருந்து, அதற்கு எதிராக தடையாணை கோரி ஜெயலலிதா அரசு 31-3-2006 அன்று - அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்து 32 நாட்களுக்குப் பிறகும்; கேரள அரசு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி யதற்கு 13 நாட்களுக்குப் பிறகும் - வழக்கு தொடுத்தது. ஜெயலலிதா அரசு இப்படி வழக்கு தொடுத்ததோடு சரி. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை, சட்ட விதிமுறைகளை அனுசரித்து முறையாகப் பதிவு செய்து, அதற்கான பதிவெண்ணைப் பெறுவது; வழக்கை விசாரணைக்குக் கொண்டு வந்து தடையாணை பெறுவது போன்ற முயற்சி எதையும் மேற்கொள்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரையில் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேலைகளிலேயே தீவிரமாக இருந்தார். 2006 மே மாதம் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி அமைந்த தற்குப் பிறகுதான்; அந்த வழக்கில் சட்ட ரீதியான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, வழக்கிற் கான ஆரம்பக் கட்டம் எனப்படும் பதிவெண்ணைப் பெற்று, 25-9-2006 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த வழக்கின் நிறைவுக் கட்டமாகத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு பிரச்சினை யில் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

25.9.2006 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் இரு மாநில அரசுகளும், மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச் சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியது. அதன்படி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையில் 29.11.2006 அன்று நானும் கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்களும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் வழங்கிய யோசனையின் அடிப்படையில், மீண்டும் கேரள அரசுடன் 19.12.2007 அன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவேதும் எட்டப்படவில்லை.

தமிழ் ஓவியா said...


நான் எழுதிய கடிதங்கள்... பிரதமரை சந்தித்தும் பேசினேன்

முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து நான், கேரள முதலமைச்சருக்கு 14.9.2006; 4.10.2006; 26.10.2006; 4.2.2008; 13.7.2009; ஆகிய தேதிகளிலும் - மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கு 31.10.2006; 15.11.2006; 16.11.2006; 23.11.2006; 27.11.2006 ஆகிய தேதிகளிலும் - பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 23.11.2006 அன்றும் - பிரதமருக்கு 23.11.2006, 2.1.2007, 25.3.2007, 19.5.2007, 20.12.2007, 8.10.2009 ஆகிய தேதிகளிலும் கடிதம் எழுதியதோடு, 18.12.2007அன்று பிரதமரை நேரில் சந்தித்தும் பேசினேன்.

4.12.2011 அன்று அதிகாரம் படைத்த குழுவின் தலைவர், நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களுக்கு நான் எழுதிய அவசரக் கடிதம் ஒன்றில், 1956ஆம் ஆண்டு இந்திய மாநிலங்கள் சீரமைக்கப்பட்டபோது, தமிழகம் தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் கேரள மாநிலத்திற்கு விட்டுக் கொடுத்தது. அதைப் போலவே 1886 அக்டோபர் 29ஆம் நாள் ஏற்பட்ட ஒப்பந்த சாசனத்தின்படி தமிழகத் திற்கு 999 ஆண்டுகளுக்கான குத்தகை உரிமைகள் கேரள அரசின் பிடிவாதப் போக்கினாலும், அத்துமீறிய அணுகு முறையாலும் ஒவ்வொன்றாகப் பறிபோய்விட்டன. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையைப் பாது காத்திட மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணைப் பகுதி உள்ள இடத்தை கேரள மாநிலப் போலீசார் காவல் காத்து வருவதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில், மத்தியப் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் விட வேண்டும். அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திட அனுமதிக்க வேண்டுமென்று, 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டினை, ஆட்சியிலே இல்லாதபோதும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் விரைவான தீர்வு ஏற்பட வேண்டுமென் பதற்காகத் தெளிவு படுத்தி னேன்.

ஜெயலலிதா கடைந்தெடுத்த

பொய்யைச் சொல்லியிருக்கிறார்

தமிழ் ஓவியா said...

இவ்வாறு தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த காலத்திலும், இல்லாத நேரத்திலும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக் காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது. இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு தற்போது ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எந்தவிதமான நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்றும் கேரள அரசின் சட்டத் திருத்தத்திற்கு நான் மதிப்பளித்தேன் என்றும் கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

பெரியாறு, வைகை பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் திரு.புத்திசிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கை யில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேபி அணையைப் பலப்படுத்தி னால், அணையின் நீர் மட்டத்தை, 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது. ஆனால் அதனை செயல்படுத்தாமல் 17 நாட்கள் அ.தி.மு.க. அரசு காலந்தாழ்த்தியது. இதைப் பயன்படுத்தி கேரள சட்டமன்றத்தில் அணைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தனர். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, ஆய்வு, வாதம் என வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியாக 2006இல் வழங்கிய அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மீண்டும் வழங்கியுள்ளது. தாமதமாகக் கிடைத்த இந்த நீதிக்கு, பாராட்டு விழா நடத்துவது முக்கியமல்ல. தீர்ப்பு நகலைப் பெற்று, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு உடனே செயல்படுத்த வேண்டும். அணையில் 142 அடிக்குத் தண்ணீர் தேங்காத அளவுக்கு மதகுகள், 152 அடிக்கு மேல் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மதகுகளை உடனே 136 அடிக்கு இறக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெரியாறு - வைகை விவசாயிகளின் அவசர அவசியத்தையும்; அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதையும்; உணர்ந்து செயலாற்ற வேண்டும்

ஆழ்ந்து கவனித்து அவசர நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான முயற்சிகளை ஜெயலலிதா முனைப்போடு மேற்கொள்ள வேண்டுமேயல்லாமல், தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டு, பயனற்ற முறையில் காலத்தைக் கடத்தி, நீண்டகாலமாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்குப் பாசன நீரையும், பொதுமக்களுக்கு குடிநீரையும் வழங்கு வதைத் தாமதப்படுத்திவிடக் கூடாது என்றே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலே உள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/79918.html#ixzz31B1xOyTF

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பழகு முகாம்

எல்லோரும் நூலகங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! - கவிஞர் அறிவுரை

உளவியலை குறித்து பெரியார் பிஞ்சுகளுக்கு புரிய வைக்கும் ஆசிரியை...

தஞ்சை, மே 8- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் பழகு முகாம் முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்ற பிறகு அங்குள்ள நூலகங்களுக்குச் சென்று படிக்கும் பழக்கத்தைத் தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பிஞ்சுகளுக்கு அறிவுரை கூறினார். தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் 05.05.2014 முதல் 10.05.2014 வரையிலான ஆறு நாட்களுக்கு பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் காலையில் உடல் நலம் பேணும் உடற்பயிற்சி

பறவைகளுக்கு முன்பே விழிக்கும் பெரியார் பிஞ்சுகள்!

பழகு முகாமின் நேரப்பட்டியல் படி அதிகாலை 5.30 மணிக்கே பெரியார் பிஞ்சுகள் எழுந்து விடவேண்டும். எண்ணும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இரண்டாவது நாளில் பெரியார் பிஞ்சுகள் சொல்லி வைத்தாற் போன்று அந்த நேரக்கட்டுபாட்டைக் கடை பிடித்து, சிட்டுக்கள் அதிகாலைச் சிற்றுண்டியை சுவைத்து விட்டு நடைப்பயிற்சிக்குத் தயாராகிவிட்டனர். இனிய காலை வேளை, இரவில் பெய்த மழையால் குளித்திருந்த சாலைகள், பசுமையான மரங்கள் பறவைகளின் விடியல் கீச்சொலிகள் இந்த சூழலில் பெரியார் பிஞ்சுகளின் நடைப் பயிற்சி ஊர்வலம்... உற்சாகத்திற்கு குறையேது! அதைத் தொடர்ந்து சிலம்பம், யோகா, ஏபிக்ஸ் ஆகிய பயிற்சிகளும் பெரியார் பிஞ்சுகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டன.

பழகு முகாமில் பிஞ்சுகளோடு கலந்துறவாடிய கவிஞர் தாத்தா

அம்பேத்கரின் அரிய வேண்டுகோள்

அண்ணல் அம்பேத்கர் ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்ல இருந்த போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நூலகம் எங்கே இருக்கிறதோ அதற்கு பக்கத்தில் ஒரு அறையை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியதையும், தூக்கில் தொங்குவதற்கு முன்பு கூட பகத்சிங் புத்தகம் படித்துக் கொண்டு இருந்ததையும், பேரறிஞர் அண்ணா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க வேண்டி தனக்கு நடக்க இருந்த முக்கியமான அறுவை சிகிச்சையை அடுத்த நாள் வைத்துக்கொள்ள மருத்துவர்களை வேண்டியதையும் கூறி பிஞ்சுகளின் மனதில் புத்தகங்களின் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார். அப்பொழுதுதான் வீட்டுக்குச் சென்ற பிறகும் நூலகங்களுக்கு சென்று படிக்கும் பழகத்தை இதே போல தொடர வேண்டும் என்று அறிவுறித்தினார்.

ஆர்வமுடன் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளும் பெரியார் பிஞ்சுகள்

முன்னதாக ரி- பிரிவு பெரியார் பிஞ்சுகள் சமூக நீதிக் காவலர் அர்ஜுன் சிங் நூலகத்தில், தாங்கள் விரும்பிய புத்தகங்களைப் பெற்று படித்து குறிப்புகள் எடுத்து அதை கவிஞர் முன்னிலையில் பேசியும் அசத்தினர். அவர்களை பாராட்டி பேசும் போதுதான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நூலகத்தில் நடந்த நிகழ்வுக்கு உதவி நூலகர் வளர்மதி மிகுந்து ஒத்துழைப்பு அளித்து சிறப்பித்தார். பழகு முகாமின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஹேமலதா இதை ஒழுங்கு செய்திருந்தார். அதே போல் கி- பிரிவு பெரியார் பிஞ்சுகளுக்கு சிக்மண்ட் பிராய்டு அரங்கில் டாக்டர் யிளி.ஜெரிடா உடல் நலம், மன நலம், முடிவு எடுக்க இயலாத போது நண்பர்களிடம், பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது ஆகியவை பற்றி கற்றுக்கொடுத்தார்.

பெரியார் பிஞ்சுகளுக்கு நாள்தோறும் காலையில் ஆசனப் (யோகா) பயிற்சி

பாதுகாப்பு சாலைக்கா? நமக்கா?

தமிழ் ஓவியா said...

சாலை விதிகள் விபத்துக்கள் எதனால் நடக்கின்றன, அவற்றை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் பெரியார் பிஞ்சுகளிடம் இந்த நாடு என்னென்ன எதிர்பார்க்கிறது என்பது பற்றி கலந்துரையாடலாகவும், அதையே கலகலப்பாகவும் கற்றுக் கொடுத்தார் திருச்சி South Express Transport Corporation லிருந்து வருகை தந்திருந்த ராஜசேகரன். பெரியார் பிஞ்சுகள் அவரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துவிட்டனர். அவரும் அதை விரும்பி வரவேற்றும் பேசினார். முன்ன தாக அவர் தனது வகுப்பைத் தொடங்கும் போதே, சாலைப் பாதுகாப்பு என்று சொல்வதில் பாதுகாப்பு சாலைக்கா? நமக்கா? என்ற கேள்வியுடன்தான் தொடங்கினார். பெரும்பாலான பெரியார் பிஞ்சுகள் நமக்குதான் நமக்குத்தான் என்று கூறி ஆரவாரமாகவே வகுப்பைத் தொடங்கி வைத்தனர்.

போக்குவரத்து விதிகளைப் பற்றி அறிய வைத்த ராஜசேகரன்

பகல் உணவிற்கு பிறகு

தமிழ் ஓவியா said...

பார்வைக் குறைபாடுள்ள பெரியார் பிஞ்சுகளுக்கு நேற்றும் பயிற்சி தொடர்ந்தது தொடக்க நாளான 05.05.14 அன்று புதுவையிலிருந்து வருகை தந்திருந்த சந்தோஷ் அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார். அவரிடம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களான வித்யா, கவிதா, கனிமொழி ஆகியோர் அந்த பயிற்சியை நேற்று (07.05.14) தொடர்ந்தனர்.

கண் பார்வைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

பெரியார் பிஞ்சுகளால் அமர்க்களப்பட்ட விளையாட்டுத் திடல் வெட்ட வெளியில் விளையாட அனுமதி கிடைத்தும் அந்தத் திடலே அமளி துமளிப்பட்டது. எங்கும் உற்சாகம் எதிலும் உற்சாகம் ஒருங்கிணைப்பாளர்களும் பிஞ்சு களுக்கு ஈடுகொடுத்து அவர்களும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிவிட்டனர். முன்னதாக அய்ன்ஸ்டின் அரங்கில் டாக்டர் டி.ஆன்டனி லில்லி புஷ்பம் பிஞ்சு களுக்கு சின்ன சின்ன கதைகள் மூலம் புறம் திருத்தம் அகத் திருத்தம் உண்மையைதான் சொல்ல வேண்டும் இதற்காக உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். வெடிச்சிரிப்புடன் நாடகம் - சைல்டுலைன் 1098 சிற்றுண்டிக்கு பிறகு முத்தமிழ் அரங்கத்தில் சைல்டு லைன் 1098 சார்பில் நெஞ்சு பொறுக்கவில்லை, குழந்தை கள் அடிமைத்தனம் ஆகிய நாடகங்களை பெரியார் பிஞ்சுகளே நடத்தி காட்டினர்.

இயல்பான அவர்களின் நடிப்பு பார்வையாளர் அனைவரையும் மனம் விட்டு சிரிக்க வைத்தது சிந்திக்கவும் வைத்தது. இந்த நிகழ்ச்சியை சைல்டுலைன் 1098 அமைப்பின் தஞ்சை மாவட்ட நிர்வாக இயக்குநர் ஜெரால்டு மற்றும் ஞானராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பித்தனர். முன்னதாக வெளி விளையாட்டு அரங்கில் பெரியார் பிஞ்சுகள் விளையாடிச் கொண்டிருந்தபோது பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வருகை தந்து நிகழ்ச்சி ஏற்பாடுகள் பற்றி உரியவர்களிடம் விசாரித்து அறிந்தும் நேரில் கண்டும் அறிந்தார். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா.எம். தவமணி, புதுவை சிவ. வீரமணி, பேரா.அதிரடி க.அன்பழகன், பேரா.பர்வீன், அழ கிரிசாமி (ப.க) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேடைப்பேச்சுப் பயிற்சிகான குறிப்புகளை எடுக்கும் பிஞ்சுகள்

பாட்டுத்திறன் வளர்க்கும் பயிற்சி

பழகு முகாமில் தையற்கலை பழகுகின்ற பெரியார் பிஞ்சுகள்

விடை தேடும் புதிர் இரவு உணவின்போது துணைத்தலைவர் மிகவும் இளம் வயது பங்கேற்பாளரான பெரியார் பிஞ்சு அருணி டம் தன்னை அறிமுக செய்துகொள்ள வேண்டிவந்தது. அறிமுகம் முடிந்ததும் கவிஞர் ஒரு விடுகதை விடுத்து, அதற்கான பதிலை நாளை சொல்லவேண்டும் என்று வேண்டுகோளும் வைத்து சென்றுவிட்டார். சற்று நேரத் தில் விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலான பிஞ்சுகள் இதற்கான விடை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு, அந்த ஆரவாரம் அடங்க வெகுநேரம் ஆகிவிட்டது.

Read more: http://viduthalai.in/page-4/79909.html#ixzz31B2owYCK

தமிழ் ஓவியா said...


நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை


நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu

தமிழ் ஓவியா said...

இளரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

வயோதிகத்திலும் மூளையில் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்த வர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஆனால் டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்கள் மூப்படைவதால் மட்டும்தான் வருகின்றன என்று கூறுவதற்கில்லை என்று அந்நோய்கள் சம்பந்தமாக அய்க்கிய ராஜ்ஜியத்தில் சேவை ஆற்றிவரும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3M4WHv

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp

தமிழ் ஓவியா said...


பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்


விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4

தமிழ் ஓவியா said...


மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறக்கும்


சொந்த உறவுகளில் திரு மணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த நோய் நிபுணர் டி.உஷா தெரிவித் தார்.

உலக தாலசீமியா நோய் தினம் மே 8ஆம் தேதி அனு சரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியி லேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத் தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை ரத்த நோய் நிபுணர் மருத்துவர் டி.உஷா கூறிய தாவது:

தாலசீமியா நோய் என் பது குழந்தைகளுக்கு பிற வியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையா கும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இத னால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.

அதற் காக, குழந்தைக்கு ஹீமோ குளோபின் அளவை அதிக ரிக்க 6ஆவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண் டும்.

குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச் சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவ தற்கு வாய்ப்புள்ளது.

அம்மா, அப்பா வம்சா வழியில் யாருக்காவது தால சீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய் வதால் குழந்தைகள் தாலசீ மியா நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தால சீமியா நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்ப வர்கள் கருக்கலைப்பு செய்து விடலாம்.

குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடு வது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும். - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79911.html#ixzz31B43Uee9

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு


தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

ஜூன் இறுதிக்குள் விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டு சந்தாக்களைச் சேர்க்க முடிவு

தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு

வல்லம், மே 9- தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இன்று (9.5.2014) தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று (09.05.2014) சனி காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமயில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

1. இரங்கல் தீர்மானம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஆயக்காரன் புலம் க.சுந்தரம் (வயது 104), அரியலூர் மு.சிங்காரம் (வயது 92) ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களது தொண்டிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் -2

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை இக்கூட்டம் வரவேற்கிறது. இப்பிரச்சினையை அரசியல் ஆக்காமல், கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு, தமிழ்நாடு-கேரள மாநில மக்களின் நல்லுறவை பேணிக்காக்குமாறு இச்செயற்குழு கேரள மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 3

சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாறும் கல்வி நிறுவனங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

மேல்நிலைப்பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வி திட்ட முறையை தவிர்க் கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறை யிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யு மாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4

வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக

ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் மார்க் முறையை அறவே அகற்றுமாறு இச் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 5

கழக பொறுப்பாளருக்கு களப்பணி பயிற்சி முகாம்

திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாமை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் கட்டாயமாக பங்கேற்குமாறு வலியுறுத்தப்படு கிறார்கள். முதற் கட்டமாக 24.05.2014 அன்று புதுச்சேரியிலும் 25.05.2014 கடலூர் மண்டலத்துக்கான களப்பணி பயிற்சி முகாமை குறிஞ்சிப்பாடியிலும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 6

விடுதலைக்குச் சந்தா சேர்க்கை

விடுதலை 80 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி ஜுன்மாத இறுதிக்குள் கழக மாவட்டத்திற்கு 200 ஆண்டு சந்தாக்கள் வீதம் 12000 விடுதலை ஆண்டு சந்தாக்களைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79950.html#ixzz31Gsuo0AZ

தமிழ் ஓவியா said...


மனிதன்பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லிமென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப் படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார்.

நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuVzQWs

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.

மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.

பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.

- எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR

தமிழ் ஓவியா said...


பார்ப்பனம் மதம்- தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானியும் - பார்ப்பானும்

ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது தல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gupy5B5

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடைய வராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்க மானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை.

மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்டவனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31GuwyzCr

தமிழ் ஓவியா said...


அவசியம்

கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும். - (விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80033.html#ixzz31MgHlWwK

தமிழ் ஓவியா said...

எது நாஸ்திகமில்லாதது?

ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகுபலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடையாமல் போனதால் அடுத்துவரும் ஈடர் உற்சவத்தை அதாவது கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்தநாள் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழு திருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக் கின்றார்களாம்.எனவே, கடவுள் பிறந்தநாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப் படுவதில்லை.

நமது நாட்டிலே, சாமி தாசி வீட்டுக்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம் வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து விக்கிரத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாதிகம் அல்லாததோ நமக்கு விளங்க வில்லை. - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 13-01-1929 காங்கிரசுக் கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது.

அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைக்குப் போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MifUAia

தமிழ் ஓவியா said...

சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரச்சாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா? என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் திரு. நாயக்கர், மதத்தையும், சமூகத்தையும் தூஷித்துப் பிரச்சாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லி யிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5,6 - கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகா நாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களான சுமார், 4,5 - தமிழ் சுருக் கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின் றார்கள்.

அவைகள் சர்க்கார் குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள், சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம். அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்டபிறகாவது சர்க்கார், சி.அய்.டி. ரிப்போர்ட்டுகளைப் பார்த்துப் பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக்கொன்றுமில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதிலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டிப்பிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திரு.சத்தியமூர்த்தி சாதிரிகளும் கூட, திரு.நாயக்கர் வேலூரில் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய் முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

மத விஷயம்: மதவிஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்துமதம் என்பதாக ஒன்று உண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு,. அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகியவை களே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி விதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்தமதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.

சமூக விஷயம்: சமூக விஷயங்களில் எந்த சமூகம் மற்றொரு சமூகத்தைவிட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொதுவாழ்க்கையில் மற்ற சமூகத்தைவிடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம், சமூகத்தின் சுயமரியாதைக்கு இடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லாவற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்ளுவதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் பின்வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும். நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ளவேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும். ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத்தையோ, உபயோகிக்கக் கூடாது என்பது எந்நிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31Mim9yeU