Search This Blog

5.5.14

எனது சுயநலம் திராவிட சமுதாயமே! - பெரியார்

எனது சுயநலம் திராவிட சமுதாயமே!
தோழர்களே! தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை பாராட்டிப் புகழ்ந்துப் பேசினார். அவருக்கு என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது உண்மை தான். நான் செய்து வரும் தொண்டு பெரிதும் பொது மக்களையும், சிறப்பாக தாழ்த்தப் பட்ட வகுப்பு மக்களையும் பொறுத்து பொதுவில் ஆற்றி வருகிறேனே ஒழிய, தனிப்பட்ட மனிதர்கள் விஷயத்தில் நான் அதிகம் செய்ய முயற்சிப்ப தில்லை என்பதோடு, அது என்னால் முடியக் கூடிய காரியமும் அல்ல; முடிவதானாலும் தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி எவ்வளவுக் கெவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளு கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனது சிறிது செல்வாக்குக்கும் பலக் குறைவு ஏற்பட ஏதுவாகிறது.

அப்படி இருந்தும் நான் தவறாமல் தினம் ஒன்றுக்கு 4, 5 சில சமயங்களில் 10 வீதம் கூட சிபாரிசு கடிதங்கள் கொடுத்துக் கொண்டு தான் வருகிறேன். சில சமயங்களில் நான் வெளியூர் போகும் நிகழ்ச்சியைக் கூட பத்திரிகையில் தெரிவிப்பதில்லை. காரணம் என்னவென்றால் நான் போகும் ஊர்களுக்குக்கெல்லாம் 10, 15 பேர்கள் வந்து அதற்கு சிபாரிசு இதற்கு சிபாரிசு என்று என்னால் முடியாததற்கெல்லாம் கேட் கிறார்கள்.

கொடுக்காவிட்டால் அவர்கள் புது விரோதிகள் ஆகி விடுகிறார்கள். கொடுத்து அது பயன்படாவிட்டால் நான் சரியாய் முயற்சித்திருந்தால் கிடைத் திருக்காதா என்று நிஷ்டூரப் பட்டுக் கொள்ளுகிறார்கள், சில சமயம் ஒருவருக்கு கொடுத்தது போதாதென்று வேறு நமக்கு தெரியாத நபருக்குக் கேட் கிறார்கள். கொடுக்காவிட்டால் முன் கொடுத் ததும் வீணாகி விரோதமும் கொண்டு விடு கிறார்கள். 10 தடவை கொடுத்து ஒரு தடவை கொடுக்க முடியாமல் போனால் வெளிப் படையான எதிரி யாகவே ஆகி விடுகிறார்கள்.

சிபாரிசு கொடுத்து அனு கூலம் ஆகி அவர்கள் தகுந்த யோக்கி யதைக்கு வந்தாலும், அதற்கும் மேல், யோக்கியதைக்கு போக நம்மை வைதால் அனுகூலமாகும் என்று கருதினால், தைரியமாய் வைகிறார்கள். தங்களுக்குக் கீழ் இருப்பவர்கள் நமக்கு வேண்டியவர்களா யிருந்தால் தொல்லை கொடுக்கிறார்கள். நமக்கு விரோதமாகவும் சதியா லோசனையில் கலந்து கொள்ளுகிறார்கள். சிபாரிசோ, அல்லது வேலையோ நம்மால் கிடைக்கா விட்டால் இந்தக் கட்சி என்ன சாதித்தது என்கிறார்கள்.

வேலை கிடைத்து நல்ல பதவியில் உட்கார்ந்து கொண்டு மேலால் நம் தயவு தேவை இல்லை என்று கண்டு கொண்டால் நான் ஒரு கட்சியாலும் ஒருவர் ஆதரவாலும் இப்பதவி பெற்றவன் அல்ல. இந்த கட்சியால் கட்சித் தலைவரால் எனது முற்போக்கு கெட்டுப் போய்விட்டது.

என் னுடைய தனிப்பட்ட கெட்டிக்காரத்தனத் தினால் முன்னுக்கு வந்தேன் என்றும், என்ன கட்சி? கட்சிக்கு என்ன செல்வாக்கு? கட்சி எங்கே இருக்கிறது? என்றெல்லாம் கூடப் பேசுகிறார்கள். இந்த விதமான நிலைமை நம் மக்களிடம் இன்று நேற்றில் லாமல் கட்சி தோன்றிய காலம் முதல் தியாகராயர், பனகல் அரசர், பொப்பிலி அரசர் காலம் முதல் இருந்து வருகிறது.

பனகல் அரசர், ஒரு வேலை காலியானால், அதனால் எனக்கு 20 விரோதியும் ஒரு சந்தேகப்படத் தக்க நண்பனும் ஏற்படு கிறான் என்று சொல்லி இருக்கிறார்.

கட்சி என்றால் தனிப்பட்டவர்களுக்கு உத்தியோகம், பதவி, பட்டம், பொருள் லாபம் என்பதாகத்தான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்திருக்கிறார்களே தவிர, பொது உழைப்பு என்றோ, பயன் அடைந் தவர்கள் நன்றி காட்டுவது என்றோ வெகு பேர் கருதுவதே இல்லை.

பார்ப்பனர் அப்படி நினைப்பதே இல்லை. கட்சிக்காகப் பொது வாகப் பாடுபடுவதும் பலனை வரும் போது அனுபவிப்பதும் என்று கருது கிறார்கள். நம்மவர்கள் பாடுபடாமல் தனக்கு தனக்கு தனக்கு என்கின்றார்கள். இந்த லட்சணத்தில் நன்றியும் கிடையாது. அது மாத்திர மல்லாமல் எதிரியுடனும் சேர்ந்து கொள் ளுவது சகஜமாக இருக்கிறது.

உதாரணமாக அய்க்கோர்ட் ஜட்ஜு தேவஸ்தானபோர்டு கமிஷனர் முதலிய பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப் பனரல்லாத அய்க்கோர்ட் ஜட்ஜுகளும், தேவஸ்தான போர்டு ஆரம்பமான காலமுதல் இன்று வரை அதில் நியமனம் பெற்ற கமிஷ னர்கள் அத்தனை பேரும் கட்சி ஆதர வினாலேயே நியமனம் பெற்றார்கள்.

அப்படி இருந்தும் அவர்களில் பெரும்பாலோர் கட் சிக்கு எதிரிகளானார்கள். எதிரிகளுடன் சேர்ந் தார்கள், கட்சியைப்பற்றிக் கவலையற்றவர் களானார்கள். கட்சி மக்களுக்கும், கட்சி கொள் கைக்கும் துரோகம் செய்து தங்கள் முற் போக்கை கருதுபவர்களானார்கள்.

இன்னும் இப்படி எத்தனை உதாரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருவர் தன் மகனுக்கு ஒரு புரோமோஷனுக்கு சிபாரிசு கேட்டு, அது ஒரு அளவுக்கு செய்யப்பட்டு, அந்த அளவு அவருக்கு திருப்தி இல்லை யானால் உடனே வேறு தலைவர் ஏற்பட்டால் தான் கட்சியால் மக்களுக்கு நன்மை ஏற்பட முடியும் என்று சொல்லி விடுகிறார்.

இப்படி ஒரு கட்சியை தனிப்பட்டவரின் பெரும் பதவிக்கும் லாபத்துக்கும் மாத்திரம்தான் என்று கருதினால் கட்சி எப்படி முன்னுக்கு வர முடியும்? பதவியும் லாபமும் கிடைத் தாலும் கிடைத்ததின் செல்வாக்கை கட்சிக்கோ கட்சி மக்களுக்கோ பயன்படுத்தாவிட்டால் எப்படி முடியும்? எல்லோரும் இப்படி என்று நான் சொல்ல வரவில்லை.

அநேக நல்லவர்களும் யாதொரு நலனும் இல்லா விட்டாலும் கட்சிக்குத் தன் கைக்காசைச் செலவழித்துக் கொண்டு அநேக அசவுகரியங்களையும், ஏமாற்றங்களையும் பொறுத்துக் கொண்டு பாடுபடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் இன்று கட்சியின் காரியம் பெரிதும் நடந்து வருகிறது. அவர்கள் இந்த சமுதாயம் உள்ளவரையில் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதில் சந்தேக மில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

தவிர, தோழர் வெங்கலவன் அவர்கள் என்னை சுயநலமில்லாதவன் என்றும், பதவி யில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் சில பெரியவர்களைப் போல் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடி யில் பெரும் பணம் சம்பாதித்தும் இருக்கக் கூடும் என்றும் நான் பெரிய தியாகம் செய் திருப்பதாகவும் சொல்லிப் புகழ்ந்தார். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

நான் இந்த தொண்டு வேலை செய் வதைத் தவிர வேறு எந்தப் பதவிக்கும் தகுதி அற்றவன் என்பது எனக்குத் தெரியும். பதவி வந்தாலும் அதை சுமந்து கொண்டு இருக்க என்னால் முடியாது என்பது உங் களுக்குத் தெரியும்.

அன்றியும் இன்று எனக்கு பணம் இல்லா மலோ, பதவி இல்லாமலோ நான் இருக்க வில்லை. எனக்கு செலவுக்கு வேண்டியதற்கு மேல் என்னிடம் பணம் உண்டு - அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினையாய் இருக் கிறது. எனக்கு இருக்க வேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித் திருக்கிறீர்கள்.

நீங்கள் கருதுகிற அளவு செல்வமும், நீங்கள் கருதுகிற பெரிய பதவியும் எனக்கு இருந்தால் எனக்கு இன்றுள்ள மதிப்பு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் கருதுகிற பணக்காரரைவிட, நீங்கள் கருதுகிற பதவியாளர்களைவிட உங்கள் முன் நான் பெருமை உள்ள வனாக இருக்கிறேன். நீங்களும் பெருமையாய்க் கருதுகிறீர்கள் என்றே கருதுகிறேன்; எனக்கு சுயநலமில்லை என்று கருதாதீர்கள்.

நான் மகா பேராசைக் காரன்; என்னுடைய ஆசை யும் சுயநலமும் எல்லையற்றது. நான் என் சொந்த சுயநலம் என்பதை திராவிட சமுதாயம் என்று எண்ணி யிருக்கிறேன். அச்சமுதாயத்திற்கு வேண்டிய செல் வமும் பதவியும் என்பவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்தச் சுயநலத் திற்கே உழைக்கிறேன். அதைத் தவிர, என் சொந்தம் என்று எண்ணுவ தற்கு அவசிய மான சாதனம் எனக்கு ஒன்றுமே இல்லை. இருந் தாலும் இதற்கு மேல் என்ன வேண்டி இருக் கிறது?

ஏன் இவ்வளவு தூரம் (தற்பெருமை யாய் கருதும்படி) சொல்லுகிறேன் என்றால், ஒவ் வொரு மனிதனும் தோழர் வெங் கலவன் அவர்கள் குறிப்பிட்டவர் களான ராஜா சர் போலவோ, சர். இராமசாமி போலவோ, சர். சண்முகம் போலவோ வர வேண்டும் என்று கருதுவதைவிட அதாவது பெரிய செல்வ வான்களாகவும், பதவியாளர் களாகவும் வர வேண்டுமென்று கருதுவதை விட, நல்ல தொண்டனாக தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப்பட்ட மக்களுக்கு விடுதலை அளிப்ப வர்களாக, அவர்களை செல்வவான்களாகவும் பதவியாளர்களாக வும் ஆக்குபவர்களாக இருப்பதினால் பெருமை இல்லாமல் போகாது என்பதை வாலிபர்களுக்கு எடுத்துக் காட்டவே யாகும்.

முன் சொன்னவர்களால் ஏற்படும் நன்மையைவிட பின் சொன்னவர்களால் ஏற்படும் நன்மை குறைந்து போகாது. ஆதலால் வாலிபர்களுக்கு செல்வத்திலும் பதவியிலுமே கண்ணும் கருத்தும் இருக்கக் கூடாது என்றும், பொதுத் தொண்டுக்கு இறங்கி தொண்டனாகவே ஆக ஆசைப்பட வேண் டும் என்றும், நம் சமுதாயத்துக்கு தொண்டாற்ற செல்வமும் பதவியும் கருதாத தொண்டர்கள் அநேகர்கள் வேண்டி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

                    -------------------------திருச்சி சலவைத் தொழிலாளர் தோழர் முத்து அவர்கள் மகள் திருமணத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-
”குடிஅரசு” - சொற்பொழிவு - 24.06.1944

32 comments:

தமிழ் ஓவியா said...


பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் குழந்தைத் திருமணம்


ஜெய்ப்பூர், மே 4- இப்போதும் இந்தியாவின் பல பகுதிகளில் மூன்று வய தில்கூட திருமணம் செய் விப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று அல்ல, நடைமுறையில் இருந்து வருவதுதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர் பாக தி இந்து ஆங்கில நாளேடு (மே 3) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது. நீலு (பெயர் மாற்றப்பட்டி ருக்கிறது) ஓர் எட்டு வயது சிறுமி. நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி. இவ ருக்கு அய்ந்தாண்டுகளுக்கு முன்பே அதாவது இவருக்கு மூன்றுவயதாக இருக்கை யிலேயே திருமணம் நடந்து விட்டது.

இது தொடர்பாக அச் சிறுமியிடம் கேட்கையில், எனக்குத் திருமணம் நடந் தது குறித்து எனக்கு எது வுமே தெரியாது என் கிறார்.இவ்வாறு நீலு மட்டுமல்ல, ஏராளமான சிறுமிகள் இந்தமாதத்தின் (வைசாக்) அட்சயதிரிதியை நாளில் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில்ஏராளமான அள வில் குழந்தைத் திரும ணங்கள் அட்சய திரிதியை நாளன்று நடைபெற்றுள் ளன.

ராஜஸ்தான் மாநிலம், சிட்டோ கார் மாவட்டத்தில் கண்பத்கேடா என்னும் நீலு வின் கிராமத்தில் இவ்வாறு சிறுமிகள் திருமணம் செய் விக்கப்படுவது வழக்கத் திற்கு மாறான செயல் அல்ல, மாறாக இயல்பான ஒன்றுதான். ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் இத்தகைய படுபிற்போக்குத் தனமான சமூக நிகழ்வுகளை இன் றைக்கும் காண முடி யும்.

நீலுவின் கிராமத்தி லிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் நாத்தி பாய் என்னும் 57 வயது மூதாட்டி இது குறித்துக் கூறுகையில், தனக்கு ஏழு வயதாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றது என்றும், அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரிகள் அனைவருமே சிக்கனம் கருதி ஒருவருக்கே திருமணம் செய்விக்கப் பட்டு விடுவதுண்டு என் றும் கூறுகிறார்.

இது தொடர்பாக கொஞ் சம் விஷயம் தெரிந்த பெரி யவர்களிடம் கேட்கையில், குழந்தைத் திருமணம் இந் தக் காலத்தில் விநோதமான ஒன்றாகக் காட்சி அளிப்பது உண்மைதான் என்றாலும், இன்றைக்கும்கூட பெற் றோர் தங்கள் பெண் குழந்தைகளை மிகவும் சிறு வயதிலேயே திருமணம் செய்விக்கத்தான் விரும்பு கிறார்கள் என்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்,இன்றைய தினம் பெண்குழந்தைகள் மிக எளிதாக செல்போன் மூல மாகவும், இணைய தளம் மூலமாகவும் மற்றும் பல் வேறு வழிகளிலும் மிகவும் எளிதாக மிகவும் கீழ்த் தரமான செக்ஸ் காட்சி களையும், சங்கதிகளையும் தெரிந்து கொண்டு விடு கிறார்கள்.

எனவே, அவர்கள் கெட்டுப்போவதற்குள் அவர்களுக்குத் திரும ணத்தை செய்துவிட வேண் டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கூறினார் கள். குழந்தைத் திருமணங் களைத் தடுக்கக் கூடிய விதத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஏதே னும் செய்கிறதா என்றால் குழந்தைத் திருமணங் களுக்கு எதிராக சுற்றறிக் கைகள் வெளியிடுவதோடு அவர்கள் தங்கள் கடமை முடிந்துவிடுவதாகக் கருதிக் கொண்டு விடுகிறார்கள்.

ஆயினும் குழந்தைத் திருமணங்களுக்கு எதி ராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது மிகவும் அபூர்வம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள். பன்வீர் தேவி என்பவர் குழந்தைத் திரு மணம் கூடாது என்று பிரச்சாரம் செய்ததற்காக கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூக ஆர்வலராவார். அவர் இது தொடர்பாக கூறுகையில், இப்போது நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இப்போதெல் லாம் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகள் முத லில் படிக்கட்டும், பின்னர் சரியான பருவத்தில் திரு மணம் செய்து கொள்ளட் டும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இருந்தாலும், எங்கள் சமூ கம் முழுமையாக மாறிவிட் டது என்று சொல்வதற் கில்லை, இன்னும் சிறிது காலம் பிடிக்கும், என்கிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/79710.html#ixzz30nEgnf3X

தமிழ் ஓவியா said...


பாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு


டில்லி, மே 4- பாரதீய ஜனதா கட்சியில் மோடி என்ற ஒற்றை மனிதரின் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அக் கட்சியில் இருந்து 2ஆவது முறை யாக நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா வின் வேட்பாளராக ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித் திருந்தார். தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் தமது சொந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்.

ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜஸ்வந்த்சிங். இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த்சிங், வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவில் ஒரு நபர் ராஜ்ஜியம் நடந்தது.

ஆனால் தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து மோடி அலை எதுவும் வீசவில்லை. நான் மத்தியில் அமையப் போகும் எந்த அரசையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. பிரச்சினைகளைப் பொறுத்து நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுப்பேன். இவ்வாறு ஜஸ்வந்த்சிங் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79711.html#ixzz30nEro4sE

தமிழ் ஓவியா said...

புதுவையில் திராவிடர் கழக துவக்கம்


ஒரு மைல் ஊர்வலம்
ஊர்வலத்தில் 3000 பேர்
மண்டபத்தில் 5000 பேர், வெளியில் 5000 பேர்

22.7.1945 ஆம் தேதி காலை புதுச்சேரி ஒதியஞ்சாலை கவாவியன் தியோட்டரில் திராவிடர் கழக துவக்க விழா

அமைப்பு ரீதியாக, புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் நேற்று (3.5.2014) புதுச்சேரி யில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரியில் கழகம் குறித்த மலரும் நினைவுகள் இங்கே பதிவு செய்யப் படுகின்றன.

22.7.1945 அன்று காலை புதுச்சேரிக்கு வந்த ரயிலில் சுமார் 5000 பேர், தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, டி. சண்முகம், சி.என். அண்ணாதுரை, சத்தியவாணிமுத்து அம்மை, காஞ்சி தங்கவேல் முதலியார், ஆதிலட்சுமி அம்மை, அன்பழகன், நெடுஞ்செழியன், நடராஜன், அழகிரிசாமி, சேலம் நடேசன், ரோசு அருணாச்சலம், சம்பத், பாலசுந்தரம், கருணானந்தம், திராவிடமணி, பீட்டர், விழுப்புரம் சேர்மன் கோவிந்தராஜூலு நாயுடு, இஸ்மாயில், சிங்காரவேல், சாமி மற்றும் அனைவரும் தஞ்சை, திருச்சி, சேலம், வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை, கோவை முதலிய எல்லா ஜில்லாக்களிலிருந்தும் ஏராளமான மக்கள் பெண்கள் வந்து இறங்கியது சேலம் மாநாட்டை ஞாபகப்படுத்துவது போல் இருந்தது மற்றும் பேருந்துகளிலும் வண்டி களிலும் மக்கள் அடிக்கடி வந்து பெருகிய வண்ணமே இருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி கவி பாரதிதாசன் அவர்கள் மாளிகையில் இருந்து 9.30க்கு தலைவர்கள் ஊர்வலம் மேளம் பாண்டு கொடிகள் வெற்றி வாழ்த்துரை, வளைவுகள் ஆகியவைகளுடன் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் பின் தொடர சுமார் ஒரு மைல் தூரம் அனேக கொடிகளையும், வளைவு களையும், தோரணங்களையும் அறவுரைகளையும் கண்டும் கடந்தும் சென்று 10.30 மணிக்கு கொட் டகையை அடைந்தது. கொட்டகையில் இருந்த மக்கள் உள் செல்வதற்கு இடம் இல்லாதபடி 4000, 5000 மக்கள் நிரம்பியிருந்தனர்.

தலைவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததும் திராவிட நாட்டு இசைகள் பலரால் பாடப்பட்டன. பிறகு கவி பாரதிதாசன் வரவேற்புரை கூறி தோழர் அண்ணாத் துரை அவர்களை கொடி உயர்த்தும்படி வேண்டினார். பெரிய ஆரவாரத்தின் இடையில் ஒரு சிறு சொற்பொழி வுடன் கொடி உயர்த்தப்பட்டதும் தோழர் திருவொற்றியூர் டி. சண்முகம் அவர்கள் திராவிடர் என் கின்ற சொல்லை விளக்கி மாநாட்டை துவக்கினார்.

பிறகு பெரியார் தலைமை வகித்து ஒரு மணி நேரம் சொற் பொழிவாற்றி தலைமை உரையை முடித்து, தோழர் நெடுஞ் செழியனை அழைத்து திராவிட நாட்டு படத்தை திறக்கும் படி வேண்டினார். இந்த சந்தர்ப்பத்தில் ஈ.வெ.ராவுக்கு மயக்கம் ஏற்பட்டு ஆந்திர மற்றும் பிரயாணத்தில் ஏற்பட்ட ஒரு வித களைப்பு உண்டானதால் தோழர் டி. சண்முகம் அவர்களை தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டு மக்களையும் கேட்டுக் கொண்டு ஜாகைக்குச் சென்றார்.

பிறகு நெடுஞ் செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றி திராவிட நாடு படம் திறந்து வைத்தார். பிறகு தோழர் அன்பழகன் பெரியார் படம் திறந்து உரையாற்றினார். இத்துடன் காலை நிகழ்ச்சி கள் இனிதே முடிந்து உணவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

- குடிஅரசு 28.7.1945

தமிழ் ஓவியா said...

பிற்பகல் நடவடிக்கை

பிற்பகல் நிகழ்ச்சி 5 மணிக்கு துவக்கப்பட்டது. பெரியார் முத்தையா பேட்டையில் ஜாகை இருந்ததால் சற்று வர தாமதமானதால் தோழர் அழகிரிசாமி தலைமை வகித்தார். தோழர் பெருமாள் அவர்கள் படத்தையும் சத்தியவாணி அம்மை டாக்டர் அம்பேத்கர் படத்தையும் தோழர் ஜனார்த்தனம் பன்னீர்செல்வம் படத்தையும் திறந்து வைத்தபின் புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்கள் படத்தை தோழர் பாலசுந்தரம் அவர்கள் திறந்து வைக்க எழுந்து பேசினார்.

இந்த சமயத்தில் பாரதிதாசன் அவர்களது உள்ளூர் அரசியல் கட்சி எதிரிகளால் சிறிது அங்கும் இங்கும் கைதட்டலும், சீட்டி அடித்ததுமான கூச்சல் நடந்தது. அதை சமாளித்து சொற்பொழிவும் நடந்து வருகையில் பாரதி தாசன் அவர்களை குறை கூறி கூட்டத்தில் இருந்த அவரது எதிரிகள் இரண்டொருவர் கெட்ட வார்த்தைகள் சொல்ல வும் கூட்டத்தில் பலர் அவர்களை தாக்க முனைந்தார்கள்.

இதை சாக்காக வைத்து போலீஸ் சார்ஜண்ட் உடனே கூட் டத்தை நிறுத்தி விட்டார். அந்த ஊர் சட்டப்படி கூட்டத்தை நிறுத்துவது என்பது கூட்டம் நடத்த கொடுத்த லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டதாக அர்த்தம். எனவே உடனே கூட்டத்தை முடித்து விட வேண்டியதாயிற்று.

பிறகு மக்கள் வெளிவரும்போது பாரதிதாசன் தெருவில் சிலரை கடுமை யாக தாக்கி பேசினார். அதனால் கைகலப்பு ஏற்படும் போல் இருந்ததால் அதை போலீசார் தடியடியால் கலைத்தார்கள்.

காலித்தனத்திற்கு காரணம்

தமிழ் ஓவியா said...

காலித்தனத்திற்கு காரணம் புதுவையில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருக்கின்றன. திராவிட சங்கம் திறக்க அவ்வூர் பிரமுகர்கள் சிலர் செய்த முயற்சியை அவ்வூர் எதிர்க்கட்சியார்கள் இது கட்சி பிரச்சாரம் என்று கருதி விட்டார்கள். அதோடு அவ்வூர் சுயமரியாதை கட்சியாரில் வேறு கட்சியிலும் சிலர் இருந்ததால் அவர்களுக்கும் தன் கட்சிக்கு எதிர் பிரச்சாரம் என்று கருதி கலகக்காரர்களை ஏற்பாடு செய்து அவர்களுக்கு ஆதரவாய் இருந்து விட்டார்களாம்.
இந்த லட்சணத்தில் போலீஸ் அதிகாரியில் ஒருவர் பார்ப்பனர் தொழிலாளர் கட்சித் தலைவர்களும் இக்கட்சியில் கலந்து இருந்ததால் பாரதிதாசன் அவர்கள் படம் திறக்கும்போது அவர் பெருமையை சொன்னது தங்களுக்கு பொறுக்காமல் கூச்சல் போட்டார்கள். இவ்வளவுதான் கூச்சலுக்கும் குழப்பம் என்பதற்கும் காரணம் ஒழிய வேறில்லை. மற்றபடி,

இதை தேசிய பத்திரிகைகள் என்பவைகளில் சில வழக்கம்போல் அவர்களது இயற்கையானதும் இழிவானதுமான முறையில் திரித்தும் கற்பித்தும் எழுதி இருக்கின்றன. ஆனால் சுதேசமித்திரன் கூடிய வரை நேர்மை என்றே சொல்லலாம். இதில் இரண்டொரு புனைந்துரைகளே உள்ளன. ஊருக்குள் எந்தவிதமான எதிர்ப்பு எழுத்தோ கலாட்டவோ எதுவும் கிடையாது. ஈ.வெ.ரா.வைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை.

பெரியார், அண்ணாத்துரை முதலியோர்களிடம் எல்லாக் கட்சியாருக்கும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. தங்கள் சார்பாய் வரும்படி மறுபடி மறுபடி அவர்கள் அழைக்கப்பட் டிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் புதுச்சேரியில் எலெக்ஷன் வர போனதால் அவர்கள் கட்சிப் பிரச்சாரத் திற்கு இப்படி செய்ய வேண்டியதாகி விட்டது. புதுச்சேரி எலெக்ஷன் முறையும் சட்டமும் தெரிந்தவர்கள் இதில் அதிசயப்பட மாட்டார்கள்.

ஆகவே சுயமரியாதை கட்சியையும் திராவிட கட்சியையும் பொறுத்தவரை புதுச்சேரியில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் அதிருப்தியோ ஆட்சேபணையோ இல்லை. மாநாட்டை போலீசார் கலைய உத்தரவு போடா மல் இருந்தால் அவர்கள் மக்களை பிடித்து வெளியில் தள்ளாமல் இருந்தால் மாநாடு நல்ல வெற்றிகரமான முடி வுக்கு வந்திருக்கும்.

ஆனாலும் காலையில் தோழர்கள் பெரியார், அண்ணாத்துரை, டி. சண்முகம், நெடுஞ்செழி யன், அன்பழகன் ஆகியவர்கள் பேச்சுகள் முழுவதும் எவ்வித தடங்கலோ, கூச்சலோ இல்லாமல் நடந்தன. பெண்கள் மக்கள் மிக உற்சாகத்தோடும் ஆரவாரத் தோடும் கடைசிவரை கேட்டார்கள். ஊர் முழுவதும் இந்த பேச்சுக்களை பற்றியே பேச்சு நடந்து கொண்டிருக்கிறது.

- குடிஅரசு 4.8.1945

5.8.1945 ஞாயிறு மாலை 7 மணிக்கு கனகசுப்புரத்தினம் (பாரதிதாசன்) அவர்கள் இல்லத்தில் வழக்கறிஞர் அ. பெருமாள் அவர்கள் தலைமையில் கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு 60 உறுப்பினர்கள் வந்திருந்தனர். திறப்பு விழா வரவு செலவு கணக்கு சரிபார்ப்பதற்கு அய்வர் அடங்கிய கமிட்டி நியமிக்கப் பட்டது. பின்னர் பொதுக் கூட்டத்தினரால் 15 பேர் அடங்கிய செயற்குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

செயற்குழுவினர்: - தலைவர் கனக சுப்புரத்தினம் அவர்கள் (பாரதிதாசன்), துணைத் தலைவர்: எஸ். துரைராஜன், செயலாளர்: எஸ். சிவபிரகாசம், துணைச் செயலாளர்: பொ. ராமலிங்கம், கணக்குப் பரிசோதகர் ம. நோயல் மற்றும் தோழர்கள் ஒ. நடேசன், எ. காங்கேயன், என்.எஸ். மஜித், நாகராஜன், எஸ். கோவிந்தராசு, பொ. நாராயணசாமி, நா. முத்துவீரன், கோவிந்தசாமி முதலி யோர்.

பின்னர் காரைக்காலில் கழகத்தின் கிளை நிறு வனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி அனுப்பியிருந்த விண்ணப்ப படிவம் படிக்கப்பட்டது. அது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டபின் கூட்டம் 9.30க்கு முடிவுற்றது.

- குடிஅரசு 11.8.1945

Read more: http://viduthalai.in/page-2/79708.html#ixzz30nFHqVRd

தமிழ் ஓவியா said...


நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்வு நக்கீரன் இதழுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!


செய்தியாளர்: தேர்தல் பிரச்சார பயணத்தில் உங் களை நெகிழ வைத்த சம்பவம்?

மு.க.ஸ்டாலின்: நிறைய இருக்குது. என் வாகனத்துக்கு முன் னாடி இளைஞர்கள் பைக்கில் வேகமாகப் போய்க்கொண்டே பிரச் சாரம் செய்தாங்க. கையில கொடியைப் பிடிச்சிருப்பாங்க. அந்தக் கொடி கீழே விழுந்திடக் கூடாதுன்னு கவனமும் இருக்கும். அதேநேரத்தில் பைக்கும் வேகமாகப்போகும்.

அதைப் பார்க்கும்போது, எனக்கு பதற்றமா இருக்கும். ஜாக்கிரதையா பைக் ஓட்டுங்கன்னு சொல்லுவேன். அவங்க அதைக் கேட்டுக்கிட்டாலும், வெற்றி பெறணும்ங்கிற வேகத்தை பைக்கில் காட்டுவாங்க. எனக்கு வெற் றியைவிட அவங்களோட உயிரும் உடல்நலனும் தான் முக்கியமா தெரியும்.

அதேமாதிரி இன்னொரு நெகிழ்ச்சியான சம்ப வம். பெரம்பலூர் தொகுதிக்குள் வரும் பாடலூரில் விஜய்னு ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர். பேஸ்புக்கில் தீவிரமாச் செயல்படக் கூடிய தி.மு.க. தொண்டர். சென்னையில் பேஸ்புக் தி.மு.க. இளை ஞர்களை நேரில் சந்திச்சப்ப ஒரு தொண்டர், அந்த விஜய் பற்றி சொன்னார். உடனே போன் போடச் சொல்லி அவர்கிட்டே பேசினேன்.

பிரச்சாரத்திற்கு வரும்போது உங்களைப் பார்க்கிறேன்னு சொன் னேன். அதேபோல பெரம்பலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்றப்ப, பாடலூர்னு பெயர் பார்த் ததும் அவர் ஞாபகம் வந்தது.

பிரச்சாரம் முடிந்த பிறகு இரவு 10 மணிக்குமேல பாடலூர் போய் அவரோட எளிமையான வீட்டில் சந்தித்தேன். சக்கரநாற்காலியில் இருந்த அந்தத் தம்பிக்கும், அவரோட குடும்பத்திற்கும் ரொம்ப மகிழ்ச்சி. எனக்கோ, இந்தநிலையிலும் ஒரு மொபைல் போனை வச்சிக்கிட்டு கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறாரே, நான் உள்பட கழகத் தொண்டர்கள் இன்னும் அதிகம் உழைக்கணும்ங் கிற எண்ணம்வந்தது.

அவர்கிட்டே, நாம எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவோம்னு நினைக்கிறீங்கன்னு கேட்டேன். நாற்பது தொகுதியும் ஜெயிப்போம்ண் ணேன்னு நம்பிக்கையோடு சொன்னார். இந்த நம்பிக்கையை என்னுடைய பிரச்சாரம் நெடுகிலும் பெற முடிந்தது.

இவ்வாறு `நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/79674.html#ixzz30nGKcV5h

தமிழ் ஓவியா said...


குற்றத்தை நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ஆ.இராசா


புதுடில்லி, மே 4- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.அய். காவல்துறையின ரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச் சர் ஆ.இராசா தற்போது பிணையில் உள்ளார். நாடா ளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் டில்லி யில் அவர் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் பதுக்கி வைத்தி ருப்பதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளி யாகி இருந்தது. அன்றே நான் நீதிபதியை சந்தித்து அந்த பத்திரிகைச் செய் தியை அவரிடம் காட்டி னேன்.

வெளிநாட்டு வங்கியில் என் பெயரில் ஒரு ரூபாயோ அல்லது ஒரு டாலரோ டெபாசிட் செய்யப்பட்டி ருப்பதை சி.பி.அய். கண்டு பிடித்தால் நான் இந்த வழக்கை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்கி றேன். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்.

இதை வருமான வரித் துறைக்கும், மத்திய அம லாக்கப் பிரிவு இயக்குநர கத்துக்கும், சி.பி.அய்.க்கும் சவாலாக விடுக்கிறேன்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/page-8/79679.html#ixzz30nGnGdp4

தமிழ் ஓவியா said...


புதுச்சேரியில் ஒரு நாள்! புத்தாக்கம் தரும் கழகப் பணிகள்


அமைப்பு ரீதியாக புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தை உருவாக்கும் பணிக்காக புதுச்சேரி மாநிலத்தில் பணிகளைத் தீவிரப்படுத்தவும், அதற்கான கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்று (3.5.2014) காலை 5.30 மணிக்கு சாலை வழியாக புறப்பட்டார்கள். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் சென்றனர். வடலூரிலிருந்து பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வந்து பங்கேற்றார்.

புதுச்சேரி எல்லையில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்களின் தலைமையில் புதுவை மண்டல திராவிடர் கழகத் தலைவர் இராசு, செயலாளர் கி.அறிவழகன் உள்ளிட்டோரும் புதுச்சேரி மகளிரும் திரளாக வந்திருந்து பயனாடைகள் அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.

புதுச்சேரி செய்தியாளர்கள் மத்தியில்...

புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:- (3.5.2014 காலை 9.30 மணி) புதுச்சேரி மாநிலத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் சதவீதத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவிகித அளவில் இட ஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வருகிறது.

பிற்படுத்தப்பட்டவர் 30 சதவீதம், மிகவும் பிற் படுத்தப்பட்டவர் 20 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம், தாழ்த்தப்பட்டவர் 18 சத வீதம், மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவீதம், தாழ்த்தப் பட்டோரில் அருந்ததியர்க்கு 3.5 சதவீதம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண சட்டத்தைப் பின்பற்றி எப்படி புதுச்சேரியிலும் சட்டம் இயற்றப்பட்டதோ, அதைப் போலவே இட ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைப் பின்பற்றி சட்டம் இயற்ற வேண்டும்.

இப்பொழுது பொதுத்துறைகள் எல்லாம் தனியார் மயம் ஆகிக் கொண்டிருப்பதால், தனியார்த் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வருவது பற்றி புதுச்சேரி மாநில அரசு சிந்திக்க வேண்டும் - செயல்படுத்த வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, காரைக்கால் பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படுவ தில்லை. புறக்கணிக்கப்படுகிறது என்ற அதிருப்தி நிலவி வருகிறது. அந்த அதிருப்தியைப் போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அந்தப் பகுதியிலும் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து அளிக்கப்படவேண்டும்.

தேர்தல் கூட்டணி

புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தல்பற்றி செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இங்குக் கூட்டணி முரண்பட்டது முதலில் தோல்வியாகும். நீலகிரியில் வேட்பாளர் காணாமல் போனார் என்றால், புதுச்சேரியில் கூட்டணியே காணாமல் போய்விட்டது என்றார் கழகத் தலைவர்.


தமிழ் ஓவியா said...

குண்டு வெடிப்புப்பற்றிய கேள்விக்கு பதில் அளிக் கையில் தமிழ் நாட்டில் அண்மைக் காலமாக வன்முறை கள் தலைதூக்கி வருகின்றன, கொலை, கொள்ளைகளும் அன்றாடம் பெருகி விட்டன. முதற்கட்டமாக இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வன்முறை என்பது ஒரு தீர்வாகாது. அதை எந்த நிலையிலும் ஆதரிக்க முடியாது.

1942 இல் காங்கிரஸ், வெள்ளையர்களை எதிர்த்து தந்திக் கம்பிகளை அறுத்துத் தண்டவாளங்களை பெயர்த்து வன்முறையில் ஈடுபட்டபோது அப்பொழுதே தந்தை பெரியார் அவற்றைக் கண்டித்தார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி பத்து நாட் களாகத் தமிழ் நாட்டில் தங்கி இருந்தார் என்றால் அதனைக் கண்டு பிடிக்க தவறியது தமிழக அரசின் காவல் துறைதானே.

தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்த புதுவை - காரைக்கால் தோழர்கள் (புதுவை, 3.5.2014)

எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினால் கோபப் பட்டுப் பயனில்லை - அதனை பயனுள்ள வகையில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு அடையாளமாகும்.

உடல் நலம் சீர்கெட்டு இருக்கும்; ஆனால் அதை சிலர் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். நன்றாக இருக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள் அது கேடாய்ப் போய்தான் முடியும் என்று புதுச்சேரி செய்தியார்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறினார்!

அமைப்பு ரீதியாக புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் உருவாக்கம்

3.5.2014 சனியன்று புதுச்சேரி தமிழ்ச் சங்கக் கட்ட டத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் புதுச்சேரி மாநில திராவிடர் கழகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழ் ஓவியா said...

1. புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் அமைப்பு ரீதியாக உருவாக்கம்

இதன் தலைவராக மானமிகு சிவ.வீரமணி நிய மிக்கப்படுகிறார்.

இம் மாநிலம் இரண்டு மண்டலங்களை உள்ளடக் கமாகக் கொண்டதாகும்.

புதுச்சேரி மண்டலம்

இதில் புதுச்சேரி அதனை ஒட்டிய கீழ்க்கண்ட பகுதி களைக் கொண்டதாகும்.

1. புதுச்சேரி, 2. உழவர்கரை, 3. வில்லியனூர், 4. சேது ராப்பட்டு, 5. அரியாங்குப்பம், 6. ஏம்பலம், 7. மண்ண டிப்பட்டு, 8. பாகூர் ஆகிய கொம்யூன்கள் அடங்கும்.

இந்த மண்டலத்தின் தலைவராக இரா.இராசு,செயலாளராக கி.அறிவழகன் ஆகியோர் நியமிக்கப்படு கிறார்கள்.

2. இரண்டாவது பகுதி காரைக்கால் மண்டலம் ஆகும்

இதன் கீழ் 1. காரைக்கால், 2. திருநள்ளாறு, 3. அம்ப கரத்தூர், 4. நெடுங்காடு, 5. நிரவி, 6. திருமலைராயன் பட்டினம், 7. கோட்டுச்சேரி ஆகிய கொம்யூன்கள் அடங் கும். புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீர மணி, புதுச்சேரி மண்டல தலைவர் இரா.இராசு, செய லாளர் கி.அறிவழகன், காரைக்கால் மண்டல தலைவர் ஜி.கே.நாராயணன், செயலாளர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் கிருட்டிணமூர்த்தி, அமைப்பாளர் செயபாலன், கடலூர் மண்டல தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்விரு மண்டலங்களில் தக்க வகையில் இயக்கப் பிரச்சாரங்களைத் திட்டமிட்டு முடுக்கிவிட்டு, புதிய இளைஞர்களை இயக்கத்தில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 2:

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை

புதுச்சேரி மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்கிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. புதுச்சேரி சட்டமன்றத்தில் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை, அதன் முதல்வரை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 3:

காரைக்கால் பகுதிக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தேவை

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதிகளில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தேவையான வகையில் இல்லை என்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகி விட்டது என்றும் அப்பகுதி மக்களிடையே இருந்து வரும் அதிருப்தியைக் கவனத்தில் கொண்டு, அப்பகுதி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு மாநில, மத்திய அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

தமிழ்நாட்டில் உள்ளது போன்ற இடஒதுக்கீடு தேவை!

புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள விகிதத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான சட்டத்தை நிறைவேற்றுமாறு புதுச்சேரி மாநில அரசினை இக்கூட்டம் வலியுறுத்து கிறது.

கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். திராவிடச்செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார்.

புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி வரவேற் புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ் ஆகியோருக்குப்பின், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புதுவை யில் கழகம் தோன்றிய வரலாறு, நடத்தப்பட்ட மாநாடு கள், புரட்சிக்கவிஞரின் பங்கு, புதுவையில் கழகப் பணியாற்றிய பெருமக்கள்பற்றியும், கழகச் சித்தாந்தம் குறித்தும் விரிவாக உரை நிகழ்த்தினார். (அவ்வுரை தனியே வெளிவரும்). மண்டல செயலாளர் கி.அறிவழ கன் நன்றி கூறிட, பிற்பகல் 12.30 மணிக்கு அமைப்புக் கூட்டம் நிறைவுற்றது.

புதுவை, காரைக்கால் பகுதிகளிலிருந்து ஏராளமான கழகத் தோழர்கள் வருகை தந்திருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/79677.html#ixzz30nH4YTQ0

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் 15.4.2014; நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.

அரவாணிகள் என்ற பெயரில் ஏதோ நடமாடும் நிலையில்தான் அவர்கள் இருந்து வந்தனர். சமுதாயத்தில் ஏதோ அருவருப்பானவர்கள் கேலிக்குரியவர்கள் என்பது போன்ற மனப்பான்மை இருந்து வந்தது.

பிறப்பின் அடிப்படையில் உருவ அமைப்பில் சில மாற்றங்கள் இருந்து விடுவதாலேயே அவர்கள் மதிக்கப்படத் தகுந்தவர்கள் அல்ல என்ற மனப்பான்மை மனிதத் தன்மையற்றது -_ பகுத்தறிவுக்கும் விரோதமானது.

ஓர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பது பெரிதும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பு - பாலினம், மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சம வாய்ப்பை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்குகிறது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதற்கு (இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி) 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன என்றாலும் காலந் தாழ்ந்தாவது இப்படி ஒரு தீர்ப்பு வந்ததே என்று வரவேற்று மகிழ்ச்சி அடைகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று, 15.4.2014 சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் பேசினேன்.

13.4.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திருநங்கைகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கைகளை மூன்றாவது பாலாக, மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஷிமீஜ் என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

தமிழ் ஓவியா said...

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்கவேண்டும் என்றும்,

(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!

மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.

16ஆவது மக்களவைத் தேர்தல் தி.மு.க. அறிக்கையில்கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாகச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக; அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் _- தி.மு.க. தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

திராவிடர் கழக மாநாட்டிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின்றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர்களில் படித்தவர்கள் இந்த வகையில் வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி


பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு
எங்கிருந்து வருகிறது பணம்? : ராகுல் கேள்வி

அமேதி, மே 5- பிரமாண்ட கட்-அவுட், போஸ்டர் கள் அடித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதற்கு பாஜ கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது சொந்த தொகுதியான அமேதியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: இரண்டு, மூன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் ஏராளமான பணத்துக் காகத் தான் பாஜ அரசியல் செய்கிறது. அப்படியில்லை என்றால், பல கோடி செலவு செய்து பெரிய பெரிய கட் அவுட் வைப்பதற்கும், நாடு முழுவதும் போஸ்டர் அடிப் பதற்கும் அவர்கள் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என் பதை சொல்வார்களா? இதெல்லாம் என்ன மோடியின் பணமா?

குஜராத்தில் மோடி ஒரே ஒரு தொழில் நிறுவனத்துக்கு ரூ.26,000 கோடி மின்சாரத்தையும், ரூ.15,00 கோடி நிலத் தையும் வழங்கியிருக்கிறது. நான் ஒன்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரி கிடையாது. ஆனால், அவர்கள் தங் களுக்கான வசதிகளை விதிமுறைப்படியும் நேர்மையாகவும் பெற வேண்டும். குஜராத்தில் அதானி மட்டுமே ஆதாயமடைந்துள்ளார். ஏழைகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மோடியின் சில போஸ்டர்களில் அவரது ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என கூறியிருக் கிறார்கள். பெண்களுக்கு ஏற்கெனவே அதிகாரம் உண்டு. அவர்களுக்கு முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பின் பெண்களே அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது: மம்தா திட்டவட்டம்

கொல்கத்தா, மே 5- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி யுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வடக்கு கொல்கத்தாவில் நடை பெற்ற பிரச் சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி இனி எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என தெரிவித் துள்ளார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பேசிய தாவது: மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வங்கத்தில் உள்நாட்டு கலவரத்தை தூண்டி மக்களை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். வங்கத்தில் வசிக்கும் உ.பி. மற்றும் பிகார் மாநில மக்கள் இம் மாநிலத்தின் ஒரு அங்கமாக தான் கருதப்பட்டு வருகின் றனர். அரசிய லுக்காக மக்களை நாங்கள் பிரிக்க மாட் டோம். மதம் மற்றும் ஜாதி பற்றிய நம்பிக்கை கொள்ள லாமல் மக்களை பற்றி மட்டுமே தாங்கள் கவலைப் படுகின்றோம். இனி எக்காலத்திலும், என்றும் பா.ஜ.க. வுடன் கூட்டணி சேரமாட்டோம் என மம்தா கூறினார்.

மோடியை தடுக்க எங்களிடம் பல பயில்வான்கள் உள்ளனர்: அகிலேஷ்

சான்ட் கபீர் நகர், மே 5- 56 அங்குலம் (இஞ்ச்) மார்பள வுடைய மோடியை கட்டுப் படுத்த எங்கள் கட்சி யில் பல பயில்வான்கள் உள்ளனர் என்று உத்தர பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

கலிலாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:- 56 அங்குலம் மார்பள வுடன் சுற்றும் மோடியை கட்டுப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்களால் மட்டுமே முடியும். அவரை கட்டுப்படுத்த எங்கள் கட்சியில் பல பயில்வான்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் உத்தர பிரதேசம் குஜராத்தை விட வளர்ச்சி அடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட குஜராத்தில் நலத்திட்டங்கள் இல்லை. குஜராத்தில் வசதிகள் குறைவு. மோடி அலை என்பது வெறும் காற்றுதான். குஜராத் முன்மாதிரி என்று பொய்யான தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அலை மட்டுமே தரையில் வீசுகிறது. மோடி அலை என்பது வானத்தில் மட்டும்தான். தேர்தலுக்குப் பிறகு முலாயம் சிங் தலைமையிலான 3-ஆவது அணி ஆட்சி அமைக்கும்.

மதவாதியாக இருப்பது எளிது. ஆனால் மதச்சார்பற்று இருப்பது மிகவும் கடினம். சமாஜ்வாடி அரசு கிராமங் கள், ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக அடிமட்ட அளவில் பாடுபடுகிறது. இவ்வாறு அவர் பேசினார். குஜராத் போன்று பிரகாசமான மாநிலமாக உத்தர பிரதேசத்தை மாற்ற 56 அங்குலம் மார்பளவு கொண்ட நபர் தேவை என்று கடந்த மாதம் தேர்தல் பிரச் சாரத்தில் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/79753.html#ixzz30tQ3V8pC

தமிழ் ஓவியா said...


மதச்சார்பற்ற அரசின் லட்சணம் இதுதானா?


காவல்துறை பாதுகாப்புடன் அய்தராபாத் பகுதியில் ரூ.நூறு கோடியில் கோயிலாம்!

அய்தராபாத்.மே5- அரே கிருஷ்ணா இயக்கம் (HKM), , பெங்களூருவை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சர்வ தேச கிருஷ்ண ஞான சங்கம் (International Society for Krishna Conciousness ISKCON) ஆகிய அமைப் புகள் இணைந்து இலட் சுமி நரசிம்மன் கோவில் என்கிற பெயரில் கோவில் அமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளதாம். இந்தக் கோவில் அமைக்கும் பணிக்கு ஆந்திர அரசு 4.38 ஏக்கர் நிலத்தை அளித்துள் ளதாம். கடந்த 2012ஆம் ஆண்டில் அப்போதைய ஆந்திர தொழில்துறை அமைச்சர் தனம் நாகேந்தர் இந்த கோவிலுக்கு அடிக் கல் நாட்டு விழாவில் அடிக் கல் நாட்டிவைத்தாராம். ஆனாலும், அவருடைய ஆதரவாளர்கள் கிருஷ் ணாஷ்டமி விழாவைக் கொண்டாட தடைபோட்டு அந்தக் கோவில் வளாகத் தின் வாசற்கதவுகளைப் பூட்டுப்போட்டு மூடி வைத்தனராம்.

இதைத் தொடர்ந்து அரே கிருஷ்ணா அமைப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்து, தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் துறை யின் பாதுகாப்புடன் சுமார் ரூ.நூறு கோடி மதிப்பிலான கோவில் கட்ட உள்ளதாம்.

கோவில் கட்டுமானப் பணிகளில் கோவில் வளா கத்தினுள் கலைகளை வளர்ப்பதற்கு நரசிம்ம லீலை, நரசிம்ம கலாஷேத் திரா அல்லது திறந்த வெளி திரை அரங்கு மற்றும் வேத சம்ஸ்கார அரங்கு ஆகி யவை அடங்குகிறதாம்.

அரே கிருஷ்ணா அமைப் பைச் சேர்ந்த கவுர சந்திர தாசா கூறும்போது: - அட்சய திருதியையில் கோவில் அமைக்கும் பணியைத் தொடங்கி உள் ளோம். இலட்சுமி நரசிம் மாவுக்காக 4.38 ஏக்கர் நிலத்தை இலவசமாக அரசு வழங்கி உள்ளது என்றார்.

பஞ்சாரா மலைப்பகுதி யில் இலட்சுமி நரசிம்ம சாமி கோவில் வளாகத்தில் கோவில் வளாகம், கலாச்சார மய்யம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற அரசின் யோக்கியதை எப்படி இருக் கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/79750.html#ixzz30tQCb0Gq

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் தூக்கிய போர்க் கொடி!


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு முக்கியமான போராட்டத்தில் குதித்துள்ளார்கள். போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில், விதிமுறைகளைக் கையாளுவதில் பின்னடைவு ஏற்பட்டு, நடைமுறையில் தோல்வியைத் தழுவி யுள்ளோம். சிறிய அளவில் சாலை விதிகளை மீறினால்கூட சட்ட ரீதியாக தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சமூகநீதிக்கு எதிராக நடந்து கொள் பவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை? என்ற நியாயமான வினாவை எழுப்பியுள் ளனர் - போராட்டக் குழுவினர். இது குறித்து அவர்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது.

சுகாதாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், நாடாளுமன்ற நிலைக் குழு ஆகிய அனைத்து அதிகார பூர்வ அமைப்புகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பணி நியமனங் களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டியதுடன் இடஒதுக்கீட்டை அழிக்கும் செயல் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

மேலும் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்று தீர்மானத் தில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக சட்டரீதியாக ஆக்கப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் நிறுவனம் இப்படி திமிரடியாக - சட்ட விரோதமாக நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல!

வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் சரி, அதன்பின் கல்வியிலும் இடஒதுக்கீடு என்று சட்டம் செய்யப்பட்ட கால கட்டத்திலும் சரி, எய்ம்ஸில் படித்துக் கொண்டிருந்த உயர் ஜாதிப் பார்ப்பன மாணவர்களும், பேராசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டதுண்டு.

என்ன கொடுமை என்றால், அந்தச் சட்ட விரோத போராட்டத்திற்கு எய்ம்ஸ் நிறுவனத்தில் அனைத்துப் பொருள்களையும், (மின்சாரம் உட்பட) பயன்படுத்திக் கொண்டனர். உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளையும்கூட அவர்கள் கவனிக்கத் தயாராக இல்லாத குரூர மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தனர் என்பது வெட்கக் கேடானதாகும்!

மருத்துவ சோதனையின் போது 49 குழந்தைகள் இறந்தன எனக் குற்றச்சாற்று எழுந்ததுண்டு.

அவர்கள் பணி செய்யாத அந்த வேலை நிறுத்தக் கால கட்டத்திற்கு சம்பளத்தை நிறுத்தியபோது, அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று சகாயமான ஆணையை பெற்றுக் கொண்டார்கள் என்பது வேதனைக்குரியது.

ஒரு கால கட்டத்தில் இவர்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால். இவர் பிஜேபி ஆட்சியில் 5 ஆண்டு காலம் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டவர் (3.7.2003 - 3.7.2008).

2007 நவம்பர் 28 இல் எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கான ஓய்வு வயது 65 என்று சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் வேணுகோபால். இடஒதுக்கீட்டுக்கு விரோதமாக இயக்குநர் வேணுகோபால் செயல்பட்டது பற்றியெல் லாம் எடுத்துக் கூறப்பட்டது. பார்ப்பனர் வேணுகோ பாலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர் பி.ஜே.பி. பார்ப்பனரான அருண்ஜெட்லி. (இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது!)
எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பல வகைகளிலும் ஒதுக்கப்பட்டனர் இழிவுபடுத்தப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...


தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது என்று ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குமுறினர் என்றால், அங்கு நிலவிய சமூக அநீதியின் கொடுங்கோன்மை எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே!

அனில்குமார் மீனா, பால் முகுந்த்பார்தி, வினேஷ் மோகன் காவ்லே ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட கொடுமையை என்னவென்று சொல்வது!

ஆட்சியதிகாரம் யார் கைகளில் இருந்தாலும் நிருவாக இயந்திரம் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் கைகளில் இருந்தால் இந்த நிலைதான் நீடிக்கும் என்பது வெளிப்படை.

மத்திய தேர்வாணையமே இடஒதுக்கீடு வழங்கு வதில் குளறுபடிகள் செய்யவில்லையா? திறந்த போட் டிக்கான இடங்களைமுதலில் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களை அவர் களுக்குரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதானே சட்ட ரீதியான நிலைப்பாடு!

இதனைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, திறந்த போட்டியென்றாலே இடஒதுக்கீடே இல்லாத உயர் ஜாதியினருக்கு என்று ஆக்கிச் செயல்படுத்த வில்லையா?

நூற்றுக்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் இப்படி சட்ட விரோதமாக நடக்கும் பொழுது, பெரும்பான் மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சட்டப்படியான உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடிட என்ன தயக்கம்?

டில்லியில் எய்ம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், பேராசிரியர்களும் சமூக நீதி உரிமைக்காக வீதிக்கு வந்து விட்டனர். இது நாடெங்கும் பரவட்டும்! பரவட்டும்!!

Read more: http://viduthalai.in/page-2/79744.html#ixzz30tQWAVo7

தமிழ் ஓவியா said...


நடவடிக்கைபார்ப்பனர்களுக்கு விரோதமாக எவர் நடக்க ஆரம்பித்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டவே பார்ப்பனர் சதி செய் வார்கள். புராண கால முதலே இதுதான் அவர்கள் நடவடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. - (விடுதலை, 14.7.1961)

Read more: http://viduthalai.in/page-2/79742.html#ixzz30tQe2iCt

தமிழ் ஓவியா said...


அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!


குழந்தைகள் பழகு முகாம் - 2014 தொடக்கம்

அய்ன்ஸ்டீனைப் போல சிந்திக்க கற்றுத்தரப் போகிறோம்...!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் பிஞ்சுகளிடம் பேச்சு!


தஞ்சை, மே 5- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நான்காவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகளுக்கான பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாமின் தொடக்கவிழாவில் சொந்தமாக சிந்திக்க கற்றுத் தரப் போகிறோம் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.

குவிந்தனர் மழலைப் பட்டாளங்கள்!

நான்காவது ஆண்டாக நடைபெறும் பழகு முகாமில் மொத்தமாக 209 பெரியார் பிஞ்சுகள் குவிந்துவிட்டனர். 150-க்குள் திட்டவட்டமாக சுருக்கிவிட வேண்டுமென்று பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சி செய்தும் பெரியார் பிஞ்சுகளின் அளவு கடந்த ஆர்வத்தால் இலக்கை விஞ்சினர்.

இதில் 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் A-(ADOLESCENT) என்றும் மற்றவர்கள் K-பிரிவு (KIDS) எனவும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டிலும் 15 பேர் கொண்ட உட் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர் (VOLUNTEERS) நியமிக்கப்பட்டனர். 13-வயதுக்கு மேற்பட்டோரில் பெண் கள் 35, ஆண்கள் 38 ஆக 73 பேரும், குழந்தைகள் பிரிவில் பெண்கள் 53, ஆண்கள் 83 ஆக 136 பேருமாக மொத்தம் 209 பேர் ஆவர்.

சிட்டுக்குருவிகளுடன் நடைப்பயிற்சி

பதிவுகள், குருதிப் பரிசோதனை முதலியவை முடிந்த பிறகு சென்னை அரங்கநாதன் விடுதியிலிருந்து உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் பெரியார் பிஞ்சுகளின் நடைப்பயிற்சி தொடங்கியது.

வெயிலுக்கு குடை பிடித்த மழை மேகங்கள்

பெற்றோர்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விட்டு விடுதலையாகி நின்ற பெரியார் பிஞ்சுகளுக்கு இயற்கையும் அருமையாக ஒத்துழைத்தது. சுளீரென்று அடிக்க வேண்டிய வெயிலை தடுக்கும் விதமாக கருநிற மேகங்கள் குடையாக பரந்து விரிந்து சுற்றுச்சூழலையே சில்லென்று மாற்றிவிட பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் சிறகடித்தனர்.

தொடக்க விழா

காலை உணவுக்குப்பிறகு சிக்மண்ட் ஃபிராய்டு அரங் கத்தில் தொடக்க விழா நடைபெற்றது. பவர் அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் பர்வீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோவிந்தராஜி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்திப் பேசினார். திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவருக்கும் நன்றி கூறி தொடக்க விழாவை நிறைவு செய்தார்.

சிந்திக்க கற்றுத் தருகிறோம்

முன்னதாக தொடக்கவிழாவில் பேசிய பேராசிரியர் பர்வின் இந்த பழகு முகாமானது எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள் கிறோம் என்று குறிப்பிட்டார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேராசிரியர் தவமணி பேசுகையில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை தங்களை நம்பி ஒப்படைத்ததற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பிஞ்சுகளிடம் கலகலப்பாக உரையாடினார். அப்பொழுது தான் புவி ஈர்ப்பு விசையை அய்சக் நியூட்டன் பள்ளிப்படிப்பினால் கண்டு பிடிக்கவில்லை என்பதையும் இது போன்றதொரு விடுமுறை நாளில்தான் கண்டு பிடித்தார் என்பதையும், அவரைப்போல, ரிலேட்டிவிட்டி தியரி கண்டுபிடித்த அய்ன்ஸ்டீனைப் போல, பழகு முகாமின் ஆறு நாட்களும் நாங்கள் உங்களுக்கு சொந்தமாக சிந்திக்க கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையில் குறிப்பிட்டார். தொடர்ந்து பழகு முகாமின் முதல் நாள் நிகழ்ச்சி நிரல்படி தொடர்ந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் கல்வி வளாகங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/79738.html#ixzz30tRfLFx4

தமிழ் ஓவியா said...


மஞ்சளின் மருத்துவ குணங்கள்


1. மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும்.பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

2. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

3. மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மது போதை விலகும்.மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகை யான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

4. மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

5. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப் பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

6. மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சுயிரி (தீ நுண்மம், நுண்ணு யிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

7. மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கொண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும்.

8. மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

9. மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத் தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும்.

10. மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSDxrdW

தமிழ் ஓவியா said...

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தி லான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட் டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலி பிளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மை யாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும். ரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.

மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79764.html#ixzz30tSMLCdn

தமிழ் ஓவியா said...


கோடை வெயிலை சமாளிக்க பழங்கள் இருக்கு...

கோடை வெயில் வெளியே செல்ல முடியாமல் தடை விதிக்கிறது. அனல் காற்று வீசுவதால் வீடுகளிலும் இருக்க முடியவில்லை. இரவு தூக்கமும் வர மறுக்கிறது. இத்தனை சோதனைகளையும் நாம் தாங்கித்தானே ஆக வேண்டும்.

இந்த கோடையை சமாளிக்க ஏராளமான பழங்கள் தற் போது மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ளன. சில பழங்களை அப்படியே உண்ணாமல் சாறு எடுத்து குடித்தால் பலன்கள் கூடுதலாக உள்ளது. பழச்சாறு குடித்தால் சிறுநீர் வெளியேறும்போது பல்வேறு நோய்களின் தாக்கம் வெளியேறி விடும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும்.

தர்பூசணி: தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குணமாகும். மேலும் இப்பழச்சாறுடன் சமஅளவு மோர் கலந்து குடித்தால் காமாலை கூட குணமாக வாய்ப்புள்ளது.

அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தின் சாறு பிழிந்து, தேங்காய் பால், தேன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். அத்திப்பழம் தேன் ஆகியவற்றுடன் கல் உப்பு சேர்த்து குடித்தால் ஆரம்ப கால சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு, புத்துணர்வு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல் களைப்பு, வேலையில் ஆர்வமின்மை போன்ற வற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும். கர்ப்பிணிகள் இச்சாற்றை குடித்து வர பிரசவத்தின்போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சை சாறு: திராட்சை சாறு தொடர்ந்து குடித்தால் ரத்த அழுத்த குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயு கோளாறுகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும். திராட்சை சாறுடன், தேன் கலந்து குடித்தால் உடல்பலம் மிகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாறு குடிப்பது மிகவும் நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSTPE3U

தமிழ் ஓவியா said...

குளிர வைத்த தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான். சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருள்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான நீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மலேரியாவை குணமாக்கும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தோ அல்லது வெல்லம் கலந்தோ ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் என கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை குடிக்கும் போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து குடிப்பதால் டைபாய்டு காய்ச்சல் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து குடித்தால் மலேரியா நோய் குணமாகும். எலுமிச்சை சாறுடன் வெள்ளை வெங்காயம், கற்பூரம் சேர்த்து குடித்தால் காலரா குணமாகும்.

உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்-வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குழைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-7/79765.html#ixzz30tSeS0Rx

தமிழ் ஓவியா said...

எனக்குத் தெரியும் எல்லாம்...


ஒரு நாள்...
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்...
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்...
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்...
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்...
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்....
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்...
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்...
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்...
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்...
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்...
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்...
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்...
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்...
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்...
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்...
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்...
எல்லோரும்...
எல்லோரும்...
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்...
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்...
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்...
அனைவரும்...
அனைவரும்...!
நிறுத்து...
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்...
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

- சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

கேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா


- மஞ்சை வசந்தன்

நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.

வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!

விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல...

இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.

இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!

வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.

ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!

இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?

எது உண்மையான கல்வி?

மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.

கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.

கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.

அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.

இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (மிஸீக்ஷீணீநீவீஷீஸீ) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!

தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.

சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!

தமிழ் ஓவியா said...

சரவணன் யார்...?


சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவணதேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் மஹாவீரரின் பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று அவரை நினைத்துப் பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்.

கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதங்களாகத் திகழ்ந்தன. இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம், தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றன..

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே, அதைத் துவக்கி வைத்தவர்கள் சமண, பவுத்தர்கள்தான். அன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் விகாரைகளில் கல்வி பயில வரும் மாணவ மாணவிகளுக்காக வீடு வீடாகச் சென்று அரிசி கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள். பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவைக் கவனிக்கவேண்டி இப்பணியைச் செய்தனர்.

சமண முனிவர்கள் தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலிமொழியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும். (உதாரணமாக இராமாயணத்தில் பெற்றோரைத் தோளில் சுமந்து சென்று தசரதனால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றிப் படித்திருப்பீர்கள். இவனை வடமொழியில் ஷ்ராவன் என்று கூறுவர். இதையே கம்பன் சிரவணன் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பார்) இந்த ஷரஹனாதான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டது.

பள்ளி அல்லது விகாரைகளில் மதிப்புமிக்க மாணவன் என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் ஆசை வராது. ஆகையால் தொடர்ச்சியாக தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்ப சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கெனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்துவிட இறுதியில் சரவணாவும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது.

(ஹரத்தோ அஹிம்ச ப்ராஹ, சபி ஜிவ் பிரேம ஜவதோ-)

அன்பே அனைவருக்குமான உயிர்மூச்சு அனைத்து உயிரிலும் அன்பைக்காண்-.

- மஹாவீரர்

தமிழ் ஓவியா said...

தள்ளுபடி வியாபாரம்அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!

ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு....ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது...
அர்ச்சகர் கேரியர்!

- க. அருள்மொழி,
குடியாத்தம்.

தமிழ் ஓவியா said...எஞ்சிய ஈழத் தமிழர்களுக்கும் இக்கதியா?

இலங்கை அரசுக்குத் தலையாட்டுவதா இந்திய அரசு?

மாநில அரசு தப்பி வந்தவர்களை சிறையிடுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!

ஈழத் தமிழர் வாழ்வுரிமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகிவருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காரணமாக இலங்கை இராஜபக்சே அரசு சர்வதேச நெருக்கடிக்கு ஆளாகும் நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை, மற்ற நாடுகளின் இலங்கைப் புறக்கணிப்பு போன்ற நிலைமை, இராஜபக்ஷே அரசுக்கு வரவிருக்கும் எரிச்சலில், அங்கு எஞ்சியுள்ள அப்பாவி ஈழத் தமிழர்களின்மீது காட்டத் துவங்கியுள்ளது.

முன்புபோலவே, தமிழ் இளைஞர்களை வேட்டையாடி மீண்டுமொரு இன அழிப்பு அத்தியாயத்தை புதிதாகத் துவக்கியுள்ளதாக, அங்கிருந்து தப்பித்து இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீருடன் ஏடுகளுக்குப் பேட்டி தந்துள்ளனர்! இதைப்பற்றி, அமெரிக்கத் தீர்மான வாக்கெடுப்பில் அதைப் புறக்கணித்து, இலங்கை அரசுக்கு உதவிய, இந்திய அரசு இப்போதும் மவுனம் சாதிக்கிறது; இதற்காக தனது கண்டனக் குரலை எழுப்பி இருக்க வேண்டாமா?

ஈழத் தமிழ்ப் பெண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு சிங்கள இராணுவம், காவல் துறை மூலம் ஆளாக்கப்படுவதாக, அங்கிருந்து தப்பித்து வந்துள்ள தமிழ்க் குடும்பத்தினர் கதறிக் கதறிக் கண்ணீர் வடித்துக் கூறும் அவலம் பற்றி, மத்திய அரசு ஈழத் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று கூறிடும் அரசு கை பிசைந்து, வாய் மூடி நிற்கலாமா - இலங்கை அரசு முன்?

அது மட்டுமா? வெந்த புண்ணில் வேலைச் சொருகும் கொடுமைபோல தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, 16 தமிழ் அமைப்புக்கள், அதன் ஆதரவாளர்களான 424 பேர்கள்மீது தடைவிதித்ததோடு, உலக நாடுகள் அனைத்தும் இதுபோலவே அவ்வமைப்புகள், அந்த 424 தமிழர்கள் அனைவர்மீதும் தடைகளை விதிக்க வேண்டுமென அறிவிப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

இதனை பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் ஏற்க முடியாது; என்று நிராகரித்து விட்டன. ஆனால் இந்திய - மத்திய அரசு அத்தடையை இங்கும் போட்டு, இராஜபக்சே அரசின் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பறிப்புக்கு மிகப் பெரிய அளவில் துணை போய் இருக்கிறது. எவ்வளவு பச்சை அக்கிரமம் இது?

பயங்கரவாதிகள் என்று இராஜபக்சே அரசால் போலி முத்திரை குத்தப்பட்ட விடுதலைப்புலிகளே அங்கு இல்லை; முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டார்கள், சகஜ நிலை திரும்பி விட்டது என்று ராஜபக்ஷேக்கு சகஸ்ரநாமம் பாடிய மத்திய அரசு, இப்போது மேலும் ஒரு சர்வதேசத் தவறினை இழைத்துள்ளது. உலகத் தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள எவரும் மன்னிக்கவே மாட்டார்கள்.

கெட்ட பின்பு ஞானம் சிலருக்கு வருவதுண்டு; மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வரவே இல்லை.

இந்த நிலையில், தமிழக அரசோ, அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறுவதுபோல், உயிருக்குத் தப்பி வந்த அந்த ஈழத் தமிழர்களை பாஸ்போர்ட் இல்லாமல் வந்தவர்கள் என்று குற்றம் சுமத்தி, காவல்துறை சிறை பிடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயம்? முற்றிலும் மனிதநேயமற்ற செயல் அல்லவா? அவர்களை அகதிகள் முகாம்களுக்குத்தானே கொண்டு சென்று அடைக்கலம் தந்து காப்பாற்ற முன் வந்திருக்க வேண்டாமா? இந்த அரசுகளின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். தப்பி வரும் தமிழர்களை குறைந்த பட்சம் அகதிகள் முகாமுக்காவது அனுப்பி, அவர்களது தீராத துயரங்களுக்கு மருந்திடும் மனிதநேயச் செயலை மாநில அரசு செய்ய முன்வர வேண்டாமா? தமிழர்கள்தான் உலகிலேயே நாதியற்ற இனமா? தமிழர்களே சிந்தியுங்கள். மனிதநேயம் காப்பாற்ற பெரும் குரல் கொடுங்கள்; தயங்காதீர்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

6.5.2014 சென்னை

Read more: http://viduthalai.in/e-paper/79776.html#ixzz30zFmyuV0

தமிழ் ஓவியா said...


மோடி பிரசார மேடையில் ராமன் படம், ராமன் கோயிலின் மாதிரி வரைபடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்


லக்னோ, மே 6- நரேந் திர மோடி பிரசாரம் செய்த மேடையின் பின்னால் ராமன் படம் வரையப்பட்ட பேனர் வைக்கப்பட்டிருந் தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பைசாபாத் மாவட்ட தேர்தல் அதிகா ரிக்கு மாநில தேர்தல் ஆணை யம் கடிதம் அனுப்பி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத் தில், பாரதீய ஜனதா கட்சி யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். அவர் அந்த தொகுதியில் போட்டி யிடும் பா.ஜனதா வேட் பாளர் லாலு சிங்கை ஆதரித்து பேசினார்.

மேடையின் பின்னணி யில் ராமன் படம் மற்றும் அயோத்தியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ராமன் கோவிலின் மாதிரி வரைபடம் ஆகியவை வரையப்பட்ட பேனர் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் மோடி பேசு கையில், ராமன் கோவில் அமைக்கும் திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் ராமன் வரலாறு மற்றும் வழிகாட்டி நெறி முறைகளை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா வேட் பாளரை வெற்றி பெற செய் யுமாறு கேட்டுக் கொண் டார். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் மக்களை கேட் டுக்கொண்டார்.

அப்போது பொது மக்கள் ஜெய் சிறீராம் என்று முழக்கம் எழுப்பினர்.

அரசியல் கட்சி தலை வர்கள் தேர்தல் பிரச்சாரத் தின்போது மதம் சார்ந்த அல்லது கடவுள் படங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. எனவே மோடி பேசிய மேடையின் பின்ன ணியில் ராமன் மற்றும் மாதிரி வடிவ கோவில் படம் அமைக்கப்பட்டிருந் ததை கவனித்த தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, பைசாபாத் மாவட்ட தேர் தல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப் பினார். இந்த தகவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவே செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/79779.html#ixzz30zFyj4oq

தமிழ் ஓவியா said...


மோடியின் பிரிவினைவாதப் பேச்சுக்கு செருப்பை வீசி எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர்அலகாபாத் மே 6 - சமீப காலமாக தேச நலனுக்கு எதிராகவும் மத மோதலை தூண்டும் வகை யில் மோடியும் அவரது சகாக்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இது வட இந்திய மக்களி டையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத்தில் திங்கள் அன்று நடந்த பேரணியின் போது மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது. நேற்று காலை பேரணி நடந்துகொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்து ஒருவர் நோ நோ மோதி டவுன் டவுன் மோதி என்று கூவிக்கொண்டு தனது காலில் இருந்த செருப்பை மோடியை நோக்கி வீசி னார். இந்த காட்சி உடனடி யாக அனைத்து தொலைக் காட்சியிலும் ஒளிபரப்பா னது. ஆனால் சில நிமி டங்களிலேயே அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் மேடைப்பிரச் சாரம் ஒளிபரப்பானது.

இதனிடையே கூட்டத் தில் இருந்த பாஜகவினர் நரேந்திர மோடியின் பிரி வினைபேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பை வீசிய நபரை பிடித்து அடித்து உதைத்தனர். கூட்டத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் அந்த நபரை பாஜக ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அலகா பாத் நகர காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித் தனர். விசாரணையில் பிரதாப் ருத்ரா சிங் என்ற அந்த நபர் அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும், கடந்த சில மாதங்களாக பாஜவினரும் நரேந்திர மோடியும் தேச நலனுக்கு எதிராக தேர்தல் பரப்புரை யில் பேசி வருவது குறித்து எனது எதிர்ப்பைத் தெரி வித்தேன். ஊடகங்கள் மோடியின் செயலை மறைத்து வைக்கும் செய லில் ஈடுபட்டு வரும் நிலையில் எனக்கு இந்தச் செயலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். விசார ணைக்குப் பிறகு அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்

Read more: http://viduthalai.in/e-paper/79781.html#ixzz30zGBNknV

தமிழ் ஓவியா said...


பிராமணர்களுக்குத் தனி சாப்பிடுமிடமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன இயக்கம்


பெங்களூரு, மே 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர் ஜி.வி. சிறீராம ரெட்டி செய்தியாளர்களி டையே கூறியிருப்பதாவது:

:உடுப்பி சிறீகிருஷ்ண மடத்தில் பிராமணர்களுக் குத் தனி சாப்பிடுமிடமும், பிராமணர் அல்லாதவர் களுக்குத் தனி சாப்பிடு மிடமும் என்கிற பங்கி பேதா என்னும் வர்ணா சிரம முறைக்கு எதிராக பெங்களூரிலும், உடுப்பி யிலும் தொடர் ஆர்ப்பாட் டங்கள் நடத்திடவும்,. மற்ற மாவட்டத் தலைநகர்களில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படும் நடைமுறைக்கு எதிராக மாநில அரசுஉறுதியாக நட வடிக்கை எடுத்து, இம் முறையை தடை செய்திட வேண்டும்.

மாநிலத்தின் நடைமுறையில் இருந்து வரும் பிராமணர்கள் சாப் பிட்ட எச்சில் இலைகளில் பிராமணர் அல்லாதவர்கள் படுத்துப் புரளும் மட ஸ்நானா என்னும் இழி வான நடைமுறைக்கும், சாப்பிடுமிடத்தைப் பிரிக் கும் இக்கேவலமான பங்கி பேதா நடை முறைக்கும் கர்நாடக முதல்வர் சித்த ராமய்யா முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர் பார்த்தோம். ஆயினும் எது வும் நடை பெறவில்லை. இவ்வாறு ஜி.வி.சிறீராம ரெட்டி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79780.html#ixzz30zGKXZ2c

தமிழ் ஓவியா said...


இவர்கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?

உத்தரப்பிரதேசம், பைசாபாத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார் மோடி. மேடையில் ராமர் படம்; கிரீடம் வைக்கப்பட்ட ராமர் படம். மோடி பேசும் ஒலிபெருக்கிக்கு பின் னால், ராமர் படம் இருக்க வேண்டும் என முடிவு செய்து, பேனர் வைக்கப் பட்டுள்ளது.

மேடையில் பேசும் போது, மோடிக்குப் பின்னால், ராமரின் உருவத்தை மறைப்பதுபோல் மோடி நிற்பதற்கும், ராமரின் தலையில் உள்ள கிரீடம், மோடி தலையில் இருப்பது போல, மேடைக்கு எதிரே உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம், அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அங்கே பேசிய மோடி, தன் வாழ்நாள் முழு வதும், ஊழலை ஒழிப்பதற்கு போராட இருப்பதாகவும், ராமர் பிறந்த நிலத்தில் இருந்து இதனைக் கூறுவதாகவும் பேசி உள்ளார். காந்தியை வேறு சாட்சிக்கு அழைத்து உள்ளார். காந்தி ராமராஜ்யம் வேண் டும் என கனவு கண்டாராம்;

அதனைப் போல், இவர் ராமராஜ்யம் அமைத் திட வாக்களியுங்கள் என்கிறார். பைசாபாத் தொகுதிக்கு உட்பட்டதுதான் அயோத்தி நகரம். ராமர் அங்கே தான் பிறந்தார் என்று சொல்லி, 400 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்த இடம் அந்த தொகுதியில்தான் உள்ளது.

அத்தகைய பதற்றமான ஒரு பகுதியில் தான், மோடி, ராமர் படத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அப்பட்டமாக, மத உணர்வோடு பேசி உள்ளார். இது குறித்து, அந்த கட்சியின் இன்னொரு யோக்கியர் அருண் ஜெட்லியிடம், தொலைக்காட்சி ஊடகம் கேள்வி கேட்டதற்கு, ஜெட்லி சொல்கிறார்; மோடிக்கு ராமர் படம் வைத்தது தெரிந்திருக்காது; அந்த பகுதி நிர்வாகி கள் வைத்திருப்பார்கள்;

இனிமேல், இதுபோல் செய்யாதீர்கள் என அறிவு றுத்தப்பட்டதாக சொல்லியிருக்கிறார், சட்ட நிபுணர் என கூறப்படும் ஜெட்லி. மத சின்னங்களை, தேர்தல் நேரத் தில் பயன்படுத்தக்கூடாது என்ற தேர் தல் விதிகூட தெரியாமலா இருக் கிறார்கள், பிரதமர் கனவு காணும் மோடியும், அவருக்கு துணை நிற்கும் ஜெட்லியும். இவ்வாறு மதச் சின்னங்களை பயன்படுத்துவது தவறுதானே என செய்தியாளர் ஜெட்லியிடம் கேட் கிறார். அதற்கு, ஜெட்லி, இது தவறு என்று சொல்ல முடியாது; பிழையான முடிவு என்று வேண்டுமானால் சொல் லலாம் என்கிறார். சட்டம் படித்தவர், வார்த்தை விளையாட்டைக் காட்டுகிறார்.

1992-இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது, அதில் கலந்துகொண்ட அத்வானி மற்றும் பாஜக தலைவர்கள், எங்களை மீறி இந்த செயல் நடந்து விட்டது என்றுதானே கூறினார்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மசூதி இடிப்பில் கலந்து கொண்ட கரசேவர்களின் பொறுமை யின்மையை கணக்கில் எடுக்காதது பிழைதான்; ஆனால், அதற்கு அந்த இயக்கத்தவர் பொறுப்பு என கூற முடியாது என்று சொன்னவர் தான் அத்வானி (இந்தியன் எக்ஸ்பிரஸ் 13.3.2011).

இப்போது, ஜெட்லியும் பிழை என்கிறார். கலவரம் நடைபெற்ற முசாபர் நகர் பகுதியில் ஜாட் மக்களைப் பார்த்து, நீங்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று பேசிய மோடியின் வலது கரம், அமீத் ஷாவை, உ.பி.யில் எங்கும் பேசக்கூடாது என தடைவிதித்த தேர்தல் ஆணையம், பின்னர் அதனை தளர்த்தியது.

இப் போது, அதே, அமீத் ஷா, ஆசாம்கர் தொகுதியில் பேசும் போது, இந்த பகுதிதான், தீவிரவாதிகளின் தளம் என முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஆசாம்கர் பற்றி பேசுகிறார். ஆக, மோடி அலை எங்கும் வீச வில்லை என்பது தெரிந்ததும், குஜராத் வளர்ச்சி என்ற கோஷம் வீக்கம்தான் என்பது தோலுரிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், கள்ள ஓட்டு போடப் பட்டுள்ளதை, தேர்தல் ஆணையம் தடுக்க தவறிவிட்டது என்ற குற்றச் சாட்டை முன்வைக்கிறார் மோடி.

இப்போது இறுதிக்கட்டமாக, ராம ரையும், ராமராஜ்யத்தையும், பயன் படுத்தி, தனது சுயரூபத்தை காட்டி யுள்ளார் மோடி. இதில் மிக முக்கிய மான விஷயம் எதுவெனில், பைசா பாத் தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் லாலுசிங், பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். ஏற்கனவே, முசாபர் நகர் தொகுதி யில் அந்த கலவரத்துக் காரணமானவர் தான் பாஜக வேட்பாளர்;

2002 குஜராத் கலவரம் நடைபெற்றபோது, முதல்வ ராக இருந்தவர் மோடி; உள்துறை அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. இப்போது சொல்லுங்கள், இவர் கள் அமைக்கும் ராமராஜ்யம் எப்படி இருக்கும் என்று?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79800.html#ixzz30zHE1e9R