Search This Blog

11.5.14

மணமக்களுக்கு மனப்பொருத்தம் பார்க்கப்படுகிறதா?-பெரியார்

பவுனாம்பாள் - அழகப்பா திருமணம்
தோழர்களே! இன்று மணமகனாக வீற்றிருக்கும் எம்.கே. அழகப்பா நாட்டுக்கோட்டை செட்டிமார் வம்சத்தைச் சேர்ந்தவர். மணமகள் பவுனாம்பாள் வேளாள வம்சத்தைச் சார்ந்தவர். இந்த மணம் புரோகிதச் சடங்கு முதலிய அனாச்சார வழக்கங்களின்றி நடைபெறுகிறது. மணமக்கள் இருவரும் தாங்களே மணமொத்து மண ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தது பாராட்டத்தக்கது. 

வைதிகர்கள் பழைய சாஸ்திரத்தை அனுசரித்து அறிவுக்கும் ஞாயத்திற்கும் பொருந்தாத முறையில் நூற்றுக்கு 90 கலியாணங்களைச் செய்து விடுகின்றனர். அது கடைசியில் யாதொரு பிரயோசனத்தையும் அளிக்காமல் கஷ்டத்தை விளைவிக்கின்றது. எப்படியாவது கலியாணம் ஆனால் போதுமென்று முயற்சிக்கின்றனர். தாங்களே தங்களுக்கு இஷ்டமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள மணமக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. பெண் கொள்வதைச் சந்தையில் மாடுவாங்குவதாக நினைத்துச் செய்து விடுகின்றனர். பொருத்தம் பார்ப்பதில் மணமக்களுக்கு இருக்க வேண்டிய மனப் பொருத்தம் பார்க்கப்படுவதில்லை.

வழியே போகும் ஒரு பார்ப்பானையோ, வள்ளுவனையோ கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொல்லி மணத்தை நடத்தி விடுகின்றனர். 

மாப்பிள்ளை ஏழரை அடியும் பெண் இரண்டரை அடியுமாக இருந்தாலும் பரவாயில்லை, பார்ப்பான் சொல்லிவிட்டால் போதும், போன உடனேயே அறுத்துவிட்டு வந்து விட்டால் தலைவிதியென்று சொல்லிவிடுவார்கள். பெண்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டு முக்கி முணகி மூலையில் கிடக்க வேண்டியதுதான். 

இந்த அநியாயத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. கூடிய சீக்கிரம் பகுத்தறிவு பெற்று விவாகத் தம்பதிகளான அழகப்பாவையும் பவுனாம்பாளை பின்பற்றியும் நடப்பீர்களாக.

------------------16-9-1934 திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தின் ஆதரவில் பவுனாம்பாள்-அழகப்பா திருமணத் திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழிவிலிருந்து-- "பகுத்தறிவு' - சொற்பொழிவு - 23 - 9 - 1934

19 comments:

தமிழ் ஓவியா said...


நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமியின் கொழுப்பு!


சென்னை, மே11- பாஜக பிரதமர் பதவி வேட் பாளர் நரேந்திரமோடியை பிராமணராக நியமிக் கிறேன் என்று அக்கட்சி யில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத் தப்பட்ட ஜாதியை சேர்ந்த வர் என்கிறார்; அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனதா கட் சியை கலைத்துவிட்டு சமீ பத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:' நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமி அப்பாயிண்ட் மென்ட்! எனக்கு இருக் கும் அதிகாரத்தை பயன் படுத்தி நான் நமோவை (நரேந்திரமோடி) பிராமண ராக நியமிக்கிறேன்.

அவ ருக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரைப் பின்பற் றுவோர் சிலர் பாராட்டி யும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளி யிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்ச கட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப் படுகிறது.

இதைய டுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு (?) தொடர சுப்பிர மணியசுவாமி முடிவு செய் துள்ளாராம். இது குறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள் ளார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80072.html#ixzz31SUc8wHo

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் முறைக்கு மரண அடி! பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பூசை செய்யலாம்! உச்சநீதிமன்றத்தின் உன்னத தீர்ப்பு


சோலாப்பூர்.மே11- பார்ப்பனர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதி மன்றம் மரண அடி கொடுத் துள்ளது. தாழ்த்தப்பட்டவர் கள் பிற்படுத்தப்பட்டவர் கள், பெண்களும் அர்ச்சக ராகலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

மகாராட்டிர மாநிலத் தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900ஆண்டுகள் பழைமைவாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக்கூறப்படும் இந்நக ரில் உள்ள கோயிலின் வர லாற்றிலேயே முதன்முத லாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் பழமை யான ஆண்ஆதிக்கம் உடைத்து நொறுக்கப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

வித்தல் ருக்மணி கோயில் அறக்கட்டளையின் தலை வர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது, நூற் றாண்டுகளாக பார்ப்பனர் களால் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப் பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சி யாக கோயில் அறக் கட் டளை மூலமாகவே பழைய முறை உடைத்து நொறுக் கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கோயில் பூசைகள், சடங்குகள் ஆகிய வற்றை அனைத்து ஜாதி யினரும் குறிப்பாக பார்ப் பனர் அல்லாதோர் செய்ய வேண்டும் என்று விரும் பினோம் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கோயிலின் கடவுள் சிலைகளை வித்தோபா மற் றும் உடனுறை தெய்வமா கிய ருக்மணி ஆகியோருக்கு இரண்டிலிருந்து மூன்று சிறப்புப் பூசைகள் செய்வ தற்கும். அதோடு மற்ற கோயில்களில் பூஜைகள், இந்து சமய சடங்குகள் செய்வதற்கும் நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் அர்ச்சகர் களாக பணிபுரிவதற்குத் தேவை என்று எட்டு அர்ச் சகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக்கோரி இந்த வாரத்தில் விளம்பரப் படுத்தியிருந்தோம்.

அதன்படி நேர்காணல் முடித்து இந்த மாதம் 18ஆம் தேதி அன்று பணிநியமன ஆணை அளிக்கப்பட உள் ளது. இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானதும், ஒப்பந்த அடிப்படையில் உள்ளது மாகும். தேர்வு செய்யப்படு பவர்களின் தகுதிக்கேற்ப ஊதியம் அளிக்கப்படும் என்று டாங்கே கூறினார்.

அறக்கட்டளை சார்பில் முறையாக உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்து வழக்கு 40ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று, கோயில் வருவாய் மற்றும் பூசைகள், சமயச்சடங்குகள் செய்வதற்கு பாத்வே, உத்பத் ஆகிய குடும்பத்தாரின் பரம்பரை உரிமைகளைத் தள்ளிவிட்டு கடந்த சனவரி யில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனாலும், தீர்ப்பை அமலாக்க முன் வந்ததுடன், அந்தக் கோயிலை 1968 பி.டி.நட்கர்னி குழு சிபாரிசின்படி மாநில அரசு கையகப்படுத்த முடிவெ டுத்தது. அவ்விரு குடும்பத் தார் மாநில அரசின் முடிவை எதிர்த்துவந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் டாங்கோ கூறுகிறார்

மகாராட்டிரத்தின் முன் னாள் அமைச்சர்டாங்கே கூறும்போது, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை முன் னதாகவே பெற்றுவிட் டோம். மும்பையின் தென் கிழக்கில் சுமார் 350கி.மீ. தொலைவில் உள்ள கோயில் களில் கடந்த சில மாதங் களாகவே கோயில் வரு வாயை கோயிலுக்கே சேரும் படியாக மாற்றிவிட்டோம்.


தமிழ் ஓவியா said...

அதற்கு முன்பாக இரு குடும்பத்தாரும் நாள் தோறும்நடைபெறும் பூசை களை ஏலம் விடுவார்கள். இரு அர்ச்சகர்கள் பூசைகளை தங்கள் தலைமையில் நடத்து வதாகக் கூறி, ருக்மணிக்கான பூசைக்கு ரூபாய் ஏழாயிரத் துக்கும், வித்தோபாவுக்கு பூசை செய்ய ரூபாய் இருப தாயிரத்துக்கும் ஏலம் எடுப் பார்கள்.

நாள்தோறும் கிடைக்கக் கூடிய வருவாயாக சுமார் ரூபாய் ஒன்றரை இலட் சத்தை எட்டும். சிறப்பு நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் அதிகம் கிடைக்கும் வருவாய் முழு மையாக அவர்கள் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற் போது அனைத்து வரவு களும் கோயில் அறக்கட் டளைக்கே செல்கிறது. இந்த ஆண்டு கோயில் வருவாய் அய்ந்து கோடியைத் தாண் டும் என்று விவரித்தார் டாங்கே.

எல்லா வகுப்புகளிலிருந்தும் அர்ச்சகர்கள்

கோயில் அறக்கட்டளை புனிதப்பணியாக இலவச மாக சேவை ஆற்றக்கூடிய வர்களை ஏராளமாக நிய மிக்க விளம்பரப்படுத்தி உள்ளோம் என்று கூறிய டாங்கே மிகவும் புன்னகை யுடன் விண்ணப்பதாரர்கள் எந்த வகுப்பிலிருந்தும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மராத்தாக்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடி யினர் மற்றும் பிற ஜாதிகளி லிருந்தும் இருப்பார்கள் என்றார்.

பந்தர்பூரில் உள்ள கோயிலில் வித்தோபா கட வுளின் சிலை (கிருஷ்ணன் சிலை) மற்றும் உடனிருக் கும் ருக்மணி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. நகரில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் வழிபடக் கூடியவர்களாக உள்ளனர்.

மகாராட்டிர மாநிலம் உட்பட பிற பகுதிகளிலிருந் தும் நாள்தோறும் சுமார் முப்பதாயிரம்பேர் வருகை புரிவார்கள். ஆண்டுக்கு நான்கு முறை விழாக் கோலமாக இருக்கும்.

அந்த நாள்களில் இரண்டு மில்லியனுக்கும் மேல் மக்கள் கூடுவார்கள். கண் ணைக்கவரும் வகையில் நவராத்திரி, தசரா உள்ளிட்ட காலங்களில் பக்தர்கள் புத்தாடை, நகைகள் அணிந்து கொண்டு, விளக்குகளின் அலங்காரங்கள் அருகில் ஓடும் அமைதியான பீமா ஆற்றின் நீரோட்டத்தில் பிரதிபலிக்கும்.

மும்பையில் பிரபல மான டப்பா வாலாக்கள் என்னும் உணவு எடுத்து செல்வோர் இரண்டு இலட் சம்பேர் இந்தக் கோயி லுக்குஆண்டுதோறும் தவறாது வரும் பக்தர்கள் ஆவார்கள். நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந் தும் பாதசாரியாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரண்டு, மூன்று வாரங் களாக நடந்தே இந்தக் கோயிலுக்கு வருவார்கள்.

இந்து மாதங்களான சைத்ர (மார்ச்,ஏப்ரல்), அஷாதி (சூன்,சூலை), கார்த்திக் (அக்டோபர், நவம்பர்), மாகி (சனவரி, பிப்ரவரி) ஆகிய மாதங்களில் நடைப்பயண மாக வருவார்கள்.

அப்படி வரும்போது, சுற்றி உள்ள கோயில்களான துல்ஜா பவானி கோயில்(சத்ரபதி சிவாஜிகுடும்பத்தார் கோயில்), சிறீ சுவாமி சமர்த் கோயில், சிறீ ஷேத்திரா கோயில், தத்தாத்ரேயா கோயில் ஆகியவற்றையும் கண்டு வருவார்கள் என்று அறக்கட்டளைத் தலைவர் டாங்கே கூறினார்.

(-டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11-5-2014)

Read more: http://viduthalai.in/e-paper/80074.html#ixzz31SUldCzy

தமிழ் ஓவியா said...

எல்லாம் சமஸ்கிருதமயமே!

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்குட்டிகளுக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா எப்படியெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்? தாரா, மீரா, பீமா, நம்ருதா ஆதித்தியா, கர்ணா, உத்ரா, அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று இதுவரை பெயர் சூட்டியுள்ளார்.

பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினாலும் ஜெயராம், ஜெய கிருஷ்ணா, ஜெயராஜ் இத்தியாதி... இத்தியாதி...

அம்மையாருக்கு தமிழில் பெயர் கிடைக்க வில்லையா - மனம் இல்லையா? சமஸ்கிருதப் பெயர் களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்தல்லவா சூட்டுகிறார்! ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று காவேரி மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாகப் பெயர் சூட்டியிருக்கிறார்.

திராவிடர் இயக்கத்துக்கு என்று ஒரு வரலாறு உண்டு பெயர் சூட்டுவதில்கூட மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திராவிடர் இயக்கம் - தன்மான இயக்கம்!

அதன் அடிப்படையாகத்தான் நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார்; இராமையன் அன்பழகன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார். கோதண்ட பாணி வில்வாளன் ஆனார்; ரெங்கசாமி அரங்கண்ணல் ஆனார்.

திராவிட இயக்கத்தில் ஊடுருவிய அம்மையாரோ ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து பெயர்களைப் பொறுக்கி எடுத்துச் சூட்டிக் கொண்டு வருகிறார். தமிழர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SV7IzgF

தமிழ் ஓவியா said...

தேர்வில் தோல்விக்குப் பரிகாரம் தற்கொலையா?

தேர்வில் தோல்வி அடைந்த 9ஆம் வகுப்பு மாண வர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்; தன் மகன் +2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றான் என்பதற்காக தந்தை தற்கொலை என்பது போன்ற செய்திகள் வெளி வந்துள்ளன.

மதிப்பெண்கள்தான் மதிப்புக்குரியவை என்ற மன நிலையே இதற்குக் காரணம்; மதிப்பெண்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்புக் கொடுப்ப தால்தான் இத்தகைய பாதிப்புகள் கனமாக இருபால் மாணவர்களின் மண்டையில் மோதுகின்றன. அதுவும் 9ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்ததற்காகத் தற்கொலையாம். 14 வயது மாணவர்கள் இப்படியொரு முடிவுக்கு வருவதற்கு யார் பொறுப்பு?

பெற்றோர்களா? ஆசிரியர்களா? சக மாணவர்களா? ஒட்டு மொத்தமான சமுதாயமா? ஒவ்வொரு கல்வி நிறுவ னத்திலும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் (கவுன் சிலிங்) அமைப்பு அவசியம் என்பதைத்தான் இது எடுத் துக்காட்டுகிறது. மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தந்தையார் தற்கொலை என்பது மிகப் பெரிய அவலம்!

ஓட்டப் பந்தயத்தில் தோற்றவன் அப்பந்தயத்தில் தோற்றவனே தவிர, வாழ்க்கைக்கு உதவாதவன் ஆக மாட்டான் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகவே இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் 5 முறை தோல்வி அடைந்த நான் விடா முயற்சியால் உயர்நீதிமன்ற நீதிபதியானேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளாரே!

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVSlzZ4

தமிழ் ஓவியா said...

மீனாட்சித் திருக்கலியாணம்

அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் விழாக்கோலம் மதுரை - என்று ஒரு ஏடு 8 பத்தித் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. வைரக்கல் பதித்த தங்கத் தாலியை அம்மன் கழுத்தில் சுவாமி அணிவித்தாராம்.

இது சுத்தப் பொய், புரட்டு, பித்தலாட்டம் அல்லவா? கடவுளான சுந்தரேஸ்வரரா அணிவித்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே அணிவித்தான்! பக்தர்கள் இதுபற்றி சிந்திக்கக் கூடாதா? அர்ச்சகப் பார்ப்பான் தாங்கள் போற்றும் கடவுளச்சிக்குத் தாலி கட்டும்போது கூச்சல் போட்டுத் தடுத்து இருக்க வேண்டாமா பக்தர்கள்?

மனிதர்களுக்குள் தான் தாலி கட்டும் சமாச்சாரங்கள் என்றால், கடவுளுக்கு அது எப்படி வந்தது? யாராவது சிந்தித்தார்களா? அப்படியென்றால் மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்மீது தனது பழக்க வழக்கத்தை மனிதர்கள் திணித்து விட்டார்கள் என்பது இப்பொழுது விளங்கிடவில்லையா?

பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங் கனார் கூறியது சரிதானே?

வருஷா வருஷம் தாலி கட்ட வேண்டுமா? போன வருஷம் கட்டிய தாலியை எவன் அடித்துக் கொண்டு போனான்? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVYeIhk

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/80150.html#ixzz31e7hzoMv

தமிழ் ஓவியா said...


12000 சந்தாக்களைத் திரட்டுவீர்!


9.5.2014 அன்று தஞ்சை வல்லத்தில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று.

80ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் (ஜூன் 2) விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டுச் சந்தாக்களைத் திரட்டுவது என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் பகுத்தறிவு - நாத்திக ஏடு ஒன்று 80 ஆண்டுகளாக நடைபெறுவது விடுதலையைத் தவிர, வேறு ஏதும் உண்டோ?

நாத்திக ஏடு என்று சொல்லும்பொழுது, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

இன்று ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினரின் நலம்; நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக் களின் நலம் (விடுதலை (19.2.1971) என்று குறிப்பிட்டார்.

இந்த நாத்திகத்தைத் தான் விடுதலை ஏடு நாளும் பரப்பி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நாஸ்திகம் - ஆஸ்திகம் என்பதற்கு மற்ற மதக்காரர்கள் சொல்லும் விளக்கத் திற்கும், இந்து மதம் கூறுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

மற்ற நாடுகளில் கடவுள் மறுப்பாளர்கள் தான் நாஸ் திகர்கள்; இந்து மதத்திலோ வேத மறுப்பாளர்கள்தான் நாஸ்திகர்கள்! இதுபற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகின்றது?

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின்றான் (மனுதர்மம் அத்தியாங்கள் - 2 சுலோகம் - 11).

இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவன் ஆகிறான் (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் -11).

பிராமணன் இந்த மனு சாஸ்திரத்தை மற்ற வருணத் தாருக்கு ஓதுவிக்கக் கூடாது (மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் - 103)
இத்தகு ஒரு சமூக அமைப்பில்தான் விடுதலை தந்தை பெரியார் அவர்களின் கைவாளாகச் சுழன்று, பெரும்பான்மையான மக்களைக் கீழ்மைப்படுத்தும் சக்திகளைச் சாய்த்தது - சாய்த்தும் வருகிறது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் வருணாசிரம தர்மத்தை வீழ்த்துவதில் முன்னணிப் படையாக இருக்கிறது.

மூடநம்பிக்கை எதிர்ப்புப் போரில் தீயாகச் சுட்டு எரித்திருக்கிறது. சமூக நீதிக் களத்தில் விடுதலை வீரன் கண்ட வெற்றியின் வீச்சு - இந்தியத் துணைக் கண்டத் தின் சகல பகுதிகளிலும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. பெண்ணடிமையை வீழ்த்துவதில் பீரங்கியாகச் செயல்பட்டிருக்கிறது. அதன் விளைச்சலை நாடெங்கும் காண முடிகிறது.

அரசியல் களத்திலும் கூட தீய சக்திகளை அடையாளப்படுத்திக் காட்டுவதிலும் விடுதலைக்குத் தனியிடம் உண்டு. மதவெறி மாய்த்து மனிதநேயம் காத்ததில் மகத்தான பங்களிப்பு விடுதலைக்கு உண்டு.

தமிழர்கள் பெற்றிருக்கும் பல்வேறு வகையான உரிமைகளுக்கும் விடுதலை அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்று அர்த்தமுள்ள வரிகளைச் சொன்னார்.

நம்மைக் கீழ்மைப்படுத்தும் - சமூக நீதிக்குக் குழி வெட்டும் ஏடுகளைத் தமிழன் தீண்டலாமா? தமிழர் உரிமைக்காக நாளும் குரல் கொடுக்கும் விடுதலையை வாங்காமல்தான் இருக்கலாமா?

விடுதலை வளர்ச்சிக்காக விடுதலையை வாங்கச் சொல்லவில்லை; தமிழர்கள் நலன்களுக்காகத்தான் விடுதலையை வளர்ச்சியை அடையச் செய்ய வேண்டும்.

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததில் விடுதலையின் பங்களிப்புச் சாதாரணமானதா? அன்றைக்கு ஆச்சாரியார் திணித்த அந்த குலக் கல்வித் திட்டத்தைப் போராடி ஒழிக்கவில்லையென்றால் தமிழர்கள் வாழ்வில் கல்வி ஒளி படர்ந்திருக்குமா?

சென்னைப் பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20.11.2010) உரையாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450; சதவீத அடிப்படையில் 89 என்று கூறியதை நினைவு கொண்டால் இந்த நிலையை எட்டிப் பிடிக்க தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கம் எப்படி எல்லாம் பாடுபட்டது? அதற்குப் போர் வாளாக விடுதலை நாளேடு எப்படியெல்லாம் சுழன்றது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்குப் பல வகைகளிலும் மதவாத இருள் சூழ்ந்து நிற்கிறது - மீண்டும் மனு தர்மத்தைக் குடியமர்த்த, கொடி ஏற்ற மும்முரமாக எழுந்து நிற்கிறது. இத்தகு கால கட்டத்தில் விடுதலை தமிழர்களின் வீட்டுக்கு வீடு ஒளிர வேண்டாமா?

எனவே தமிழர்களே, உங்களை நாடி வரும் திராவிடர் கழகத் தோழர்களிடத்தில் தாராளமாக விடுதலை ஆண்டுச் சந்தாக்களை வழங்குவீர்! அதன் மூலம் உங்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவீர்!

தமிழர் விடுதலைக்கு விடுதலை தேவை!

கழக மாவட்டத்துக்கு 200 விடுதலை ஆண்டு சந்தாக்கள் என்பது எளிதான இலக்கே! ஒரு மூச்சுப் பிடி யுங்கள் - உங்கள் இலக்கை எளிதில் எட்டி விடலாமே!

Read more: http://viduthalai.in/page-2/80151.html#ixzz31e7pe1A7

தமிழ் ஓவியா said...


பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே! - தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை


பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும், அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே - எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014

Read more: http://viduthalai.in/page-8/80149.html#ixzz31e8udRp7

தமிழ் ஓவியா said...


அரசு கோப்புகள் கன்னடமொழியில் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவேன் கருநாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


பெங்களூரு, மே 13- அரசு கோப்பு களில் கன்னட மொழியில் எழுதாமல், ஆங்கிலத்தில் குறிப்பெழுதினால் கையெழுத்து போடமாட்டேன் என்று கருநாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கன்னட வளர்ச்சி ஆணையம் கன்னட மொழி பயன்பாடு பற்றி அறிக்கை தயாரித்து இந்த அறிக்கை கருநாடகா மாநில முதலமைச்சர் சித் தராமையாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு, ஆட்சி மொழி பற்றி பொது மக்களும், அதிகாரிகளும் கொண் டுள்ள எண்ணம் முதல்வர் சித்தராமை யாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஆங்கிலம்

கன்னட மொழிக்கு ஆட்சி நிர் வாகத்தில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். எனவே அர சாங்க கோப்புகளில் கன்னட மொழி பயன்படுத்தப்படாவிட்டால் அந்த கோப்புகளை பார்வையிட்டாமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட லாம் என்று சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதுபற்றி கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கன்னடியர்கள் அல்லாத அதிகாரி கள் அனைவரும் கன்னட மொழி யைக் கற்க வேண்டும் என்றும் கடித தொடர்புகள் கன்னட மொழியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்றும் நான் கூறியுள்ளேன்.

தமிழர்கள்

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்த சில கோப்புகள் என்னிடம் வந்தன. நான் அதிகாரிகளை அழைத்து, கோப்புகள் கன்னட மொழியில் இல்லாவிட்டால் நான் அவற்றை திருப்பி அனுப்பிவிடுவேன் என்று எச்சரித்தேன். 1980 ஆம் ஆண்டுகளில் கன்னட காவலு சமிதி தொடங்கப்பட்டது. அப்போது முதல், நிர்வாகத்தில் கன் னட மொழியை பயன்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 300-க் கும் மேற்பட்ட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்களுக்கு தங்கள் மொழியின் மீது ஒரு பற்றுதல் உள்ளது. நீங்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி னால் அவர்கள் தமிழில் பதிலளிக் கிறார்கள். ஆனால் இங்கு பெங்களூருவில் நிலைமை அப்படியில்லை. நமது மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் நாம் கன்னட மொழி உணர்வை உரு வாக்க வேண்டியது அவசியமாகும். - இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/80163.html#ixzz31e9C9rIS

தமிழ் ஓவியா said...


மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி


முக நூலில் சரவணப்பெருமாள் தெரிவித்துள்ள செய்தி:

வைகோ அவர்களே உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் - பாஜக வுடன் கூட்டணி வைக்கும் முன்பே - உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஆர்.எஸ்.எஸ்.யில் அய்க்கியமாகி - ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டு இருக்கின்றனர் !

உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடி மேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் - ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.

சீலக்கம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவர். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர் களுக்கு - பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAS2enb

தமிழ் ஓவியா said...

இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா??

இலங்கை எம்.பி. கேட்கிறார்?

இலங்கையில் கடந்த கால வரலாறு தற்போது மீண்டும் திரும்புகிறது. சுற்றி வளைப்பு, கொலை, கற்பழிப்பு என்று மீண்டும் வரும் நிலையில் ஈழத் தமிழர்கள் எங்கே போவது?

- சீனித்தம்பியோகேஸ்வரன் இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAaDeGe

தமிழ் ஓவியா said...

மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆர்.எஸ்.எஸ். : காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். செயல் படுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதிக்கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. அன்றைய தினம் மாலை டில்லி வந்த நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டில்லியில் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் நாக்பூரில் உள்ளது. அங் கிருந்து தான் பாஜக தலைவர்கள் இயக்கப் படுகிறார்கள். பாஜக பிரதமர் வேட்பாளருக்கு 56 அங்குல மார்பு மட்டுமே உள்ளது.

அவரை இயக்குவது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தான். 2004, 2009 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்தது. அதே போல் இப்போதும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். என்றார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAfkNup

தமிழ் ஓவியா said...


மே 12: உலகச் செவிலியர் தினம்


பொது மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலகச் செவிலியர் தினமாக (International Nurses Day) ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினம் கொண்டாட காரணமாக இருந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் லண்டன் நகரில் 1820-ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய வாழ்க் கையைத் துவக்கினார்

அப்போது ருஷ்யா கிரிமியப்போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் காயமுற்று கவனிப்பார் இன்றி இருப் பதைக் கேள்விப்பட்டு போர் நடக்கும் பகுதிக்குச் சென்று காயமுற்ற வீரர்களுக் காக முழுநேர சேவையில் இறங்கினார். காயங்களுக்கு மருந்திடுதல், உடை மாற்றுதல், இருக்கைகளை சரி செய்தல் ஆறுதலான சொற்களைக்கூறுதல் என்று நோயாளிகளுடனேயே முழு நேரத் தையும் செலவிட ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று தொண்டாற்ற தொண்டு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கும் பயிற்சியளித்தார். போர் முடிவுற்ற பிறகு தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பியதும், பிரிட்டன் அரசு இவரின் சேவையைப் பாராட்டி கவுரப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்தின் மகாராணிக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்ற பெண்ணாக மாறினார். அரசும் பல சமூக நிறுவனங்களும் பெருமளவில் பொன்னும் பொருளும் வழங்கினர்.

இவற்றை வைத்துக்கொண்டு தரமான செவிலியர் பயிற்சிப்பள்ளி ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த செவிலியர் பயிற்சிப் பள்ளி இன்று உலகப்புகழ் பெற்ற பிளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

சர்வதேச செவிலியர் கழகம் நைட்டிங் கேல் அம்மையாரின் சேவையை உலகமே போற்றும் வகையில் 1974-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான மே 12 -ஆம் தேதியை சர்வதேச செவி லியர் தினமாக அறிவித்தது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page1/80094.html#ixzz31eArVYzP

தமிழ் ஓவியா said...


நாத்திகராக வேண்டும்

மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.

(விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page1/80093.html#ixzz31eB8dHHH

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய: தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

உடல் எடை குறைய: சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக் கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப் பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவ துடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த: இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCNmtxN

தமிழ் ஓவியா said...தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் கேரட்

கேரட்டில் உள்ள ஏ' வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு களை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானமாகும். எலும்புகள் உறுதியாகும்.

முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக வோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCVNkc1

தமிழ் ஓவியா said...

கோடை வெப்பத்தை தணிக்க உதவும் இளநீர்

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர் கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4 கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் தாதுஉப்புகள் மிக அதிக அளவிலும், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் மிக குறைந்த அளவிலும் காணப்படும்.

இளம் குரும்பைகளில் இளநீர் சர்க்கரை வகைகளில் குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சத்துகள் காணப்படு கின்றன. தேங்காய் முதிர்ச்சி அடையும் போது இந்த சத்துகள் குறைகின்றன. 6 மாத வயதுடைய தென்னை இளநீரில் 4.6 சதவீதம் சர்க்கரையும், முற்றிலும் முற்றிய தேங்காயில் 2 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. இளநீரில் உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், மக்னீசியம், குளோரின் போன்றவை உள்ளன.

அதில் பொட்டாசியம் மற்றும் தாதுஉப்புகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீர் அதிக அளவு சீராக வெளியேற உதவுகிறது. புரதத்தின் அளவு தேங்காய் முதிர்ச்சி அடையும் போது அதிகமாகிறது. இளநீரில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், அர்ஜினைன், அலனைன், சிஸ்டைன், செரின் அதிக அளவில் காணப்படுகிறது. இவை பசும்பாலில் உள்ளதைவிட அதிகம் ஆகும். இளநீரில் புரதத்தின் அளவு 0.13 சதவீதம், முதிர்ச்சி அடைந்த தேங்காய் நீரில் புரதம் 0.29 சதவீதம் உள்ளது. 8 மாத தேங்காய் பருப்பில் 6.3 சதவீதம் புரதசத்து உள்ளது.

செரிமான கோளாறுகளில் அவதியுறும் சிறு குழந்தை களுக்கு இளநீர் கைகண்ட மருந்தாகும். உடலில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் அதிகம் இளநீரில் உள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை ஆகியவற்றால் ஏற்படும் அரிப்புக்கு நல்ல மருந்து. காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம். குடலில் உள்ள புழுக்களை அழிக்கிறது. சிறுநீரக நோய்களை கட்டுப் படுத்துகிறது. முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல ஊட்டசத்து மிக்க பானமாகும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCcixm6

தமிழ் ஓவியா said...


குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


வேர்களுக்கு பழுது ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர் சித்தார்த்தன்

குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


தஞ்சை, மே 12- தஞ்சை மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் கனல் கவிஞர் துரை.சித்தார்த்தன் எழுதி தோன்றும் வெளிச்சத்தின் விழுதுகள் என்றும் உன்னோடு ஆகிய கவிதை குறுந் தகடுகள் வெளியீட்டு விழா 10.5.2014 அன்று மாலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. உரத்தநாடு மாணவி ஜெயசிறீ வரவேற்பு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் உரையாற்றினார் குறுந்தகடுகளை அறிமுகம் செய்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி உரத்தநாடு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.காந்தி, தஞ்சை நகர் மன்ற முன்னால் உறுப்பினர் இரா.ஜெயபால் வெற்றித் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் இரா.செழி யன், முத்தமிழ் முற்றம் நிறுவனர் ந.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் முனைவர் சி.செந்தமிழ்குமார், பேராசிரியர் திலீப்குமார், மண்டலத்தலைவர் வெ.ஜெய ராமன். மாநில ப.க பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத்தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், அமெரிக்கா டெக்ஸ்சஸ் பல்கலைக் கழக பேராசிரியர் பெரியார் பண்ணாட்டு மய்ய தலைவர் இலக்குவன் தமிழ், தஞ்சை பாரதி கல்வி குழுமச்செய லாளர் புனிதா கணேசன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துச் செய்தியை கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் படித்தார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறுந்தகடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கவிஞர் துரை.சித்தார்த்தன் மிகவும் துடிப்பும் உணர்ச் சியும் மிகுந்தவர் அவரின் படைப்பில் வெளிவந்துள்ள கவிதை குறுந்தகடுகளை இன்று பார்த்து மகிழ்ந்தேன். அவர் தோன்றி கவிதை பாடும் விதத்தை படக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அவர் ஒரு நெருப்பு கவிஞர், அவரோடு ஈடுகொடுத்து வாழ்க்கை நடத்தும் அவரது துணைவியார் மகேஸ்வரியைத்தான் அதிகம் பாராட்ட வேண்டும் இந்த ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத் தாலும் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் இருந்தபொழுது அவரது இல்லம் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தேன். தற்பொழுது நல்ல உடல் நலம் பெற்று இந்த குறுந்தகடுகள் வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். இந்த அளவிற்கு அவரை பாதுகாத்து உயர்த்தியுள்ள அவரது துணைவியார். மகேஸ்வரியைத்தான் பாராட்ட வேண் டும்.

கவிஞர் சித்தார்த்தன் அவர்கள் என்றும் உன்னோடு என்ற குறுந்தகடில் அவர் பல துறைகளை காதல், வீரம், கடமை என பல இருந்தாலும் கடைசியில் என்றும் உன்னோடு என்று, என்னுடன் எப்பொழும் இருப்பார் என்று உணர்த்தியுள்ளார். நமக்கெல்லாம் தலைவர் பெரியார் ஒருவர் தான். பெரியாருக்கு தொண்டர் சித் தார்த்தன் நாம் எப்பொழுதும் பெரியாரோடு இருப் போம். வெளிச்சத்தின் விழுதுகள் குறுந்தகடில் பெரிதும் என்னைப்பற்றி எழுதியுள்ளார் ஒரு மனிதனுக்கு பெரிய தண்டனை பாராட்டை கேட்டுக்கொண்டு இருப்பது தான். கவிஞர் துரை சித்தார்த்தன் வேருக்குப் பழுது ஏற்படுத்த, வேரையே சாய்க்க நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர். அவர் நல்ல உடல் நலத் துடன் வாழ்ந்து சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும் என மேலும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80101.html#ixzz31eCufnln