Search This Blog

27.5.14

எத்தனை பெரியார்கள் இன்னும் தேவையோ!

அய்டெக் தொழில் நுட்பத்தில் புரோகிதத் தொழில்!

வீட்டில் பூஜைகள் செய்வதற்கு அர்ச்சகர்களை கோயில்களிலோ, அல்லது நண்பர்கள்மூலமாகவோ தேடிப்பிடித்து நடத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது.  அந்த நிலை தற்போது மாறிவிட்டது. தொலைபேசிமூலம் அழைத்து பீசாக்களையும், கால் டாக்சிகளின் வசதி களையும் பெறுவதுபோல், வீட்டுக்கே வந்து பூஜைகள் செய்வதற்கு  அர்ச்சகர்களுக்கான நெட் ஒர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அர்ச்சகர்களை  அழைப்பதற்கு என்று தனியாக எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் சடங்கு களை செய்வதற்கு மட்டுமின்றி அடுத்த மாநிலத்துக்கும் இந்த அர்ச்சகர் நெட் ஒர்க் மூலம் பூஜைகள், சடங்குகளை செய்வதற்கு அர்ச்சகர்களை அழைக்கலாம் என்று அந்த நெட் ஒர்க்கை நடத்திவரும் அமைப்பு கூறுகிறது.

இணையத்தின்மூலமும்  (சோதிட, வேத) பூஜை சேவை செய்யப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூபாய் 500லிருந்து இருபத்திரண்டு ஆயிரம் ரூபாய்வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிமூலம் உத்தரவிட்டால் உடனே  வீட்டுக்கே டெலிவரி ஆகும் பீசா, வீட்டுக்கே வருகை தரும் கால் டாக்சிமட்டுமன்றி வீட்டுக்கே வந்து பூஜை செய்வதற்கு அர்ச்சகர்களுக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று போதும். உடனே அர்ச்சகர் வீடுதேடி வந்து விடுவார். இதற்கான இணையதளம் பிரிஸ்ட்சர்வீசஸ்.காம் என்று உள்ளது. இதன் சேவைக்கான தொலைபேசி எண்களாக 9500095649, 9600007573, 9677299388 ஆகிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான அமைப்பின் உதவி மேலாளர் ராமு கர்ணன் கூறும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் இந்த சேவையைத் தொடங்கி விட்டோம். ஒரு நாளில் குறைந்தது பத்து அழைப்புகள் வருகின்றன.  புதுமனைபுகுவிழா, பிறந்த நாள் விழா, பழைமை யான சடங்குகள் மற்றும் பிற பூஜைகள் செய்வதற்கு என்றே ஆறு அர்ச்சகர்கள் எங்களிடம் உள்ளனர் என்று கூறினார்.

சோதிடவியல் குழுவினர் மூலமும் இதேபோன்ற சேவையாக வாடிக்கையாளர்கள்  அவர்களின் பிறந்த நாளைக்குறிப்பிடும்போது, அவர்களுக்கு  ஜாதகங்களை தயாரிப்பது, அதன்மூலம் அவர்களுக்கு உள்ள தோஷங்களைக் கண்டறிந்து, பரிகாரத்துக்கான பூஜைகள், சடங்குகளும் செய்து தரப்படுகிறது. தலைமை அர்ச்சகரான எஸ்.பிரேம ராஜா கூறும்போது, பொதுமக்கள், அவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கான பூஜைகளை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், நாங்கள் அட்டவணைப் படுத்தப்பட்ட திட்டத்திலிருந்தோ, அதற்கான பொருட் களில் மாற்றம் செய்வதையோ ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று விளக்கினார்.

ராமு கர்ணன் கூறும்போது, சேவைக்காக  ரூபாய் 500லிருந்து, ரூபாய் 22ஆயிரம்  அதற்கு மேலும் கட்டண மாக பெற்றுக்கொள்ளப்படுகிறது. பூஜை நடைபெறக்கூடிய இடத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். செங்கல்லில் இருந்து, பிரசாதம் வரை அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்துதருகிறோம். அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிப் பதையும் நாங்களே செய்துவிடுகிறோம். இரண்டு நாட்களில் விழாகுறித்து கருத்துக்களையும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

இந்த அமைப்பு அதன் அர்ச்சகர் நெட் ஒர்க்மூலம் பிற மாநிலங்களிலும் பூஜைகளை நடத்துகிறது.

பிரேம ராஜா கூறும்போது.,ஆந்திரப்பிரதேசம் மற்றும் பெங்களூருவிலும் அதிக அளவில் தேவைகள் உள்ளன. வருமானம் இல்லாததால் இந்த தொழிலையே விட்டுவிட்ட அர்ச்சகர்களுக்கு பயிற்சியும் அளித்துவருகிறோம். கும்பகோணத்தில் சிலர் ஓட்டுநராகி விட்டனர். தற்போது அவர்களும் எங்களுடன் இந்தப் பணியில் இணைந்து உள்ளார்கள் என்று கூறினார்.
அர்ச்சகர்கள் சோதிடம், வேதங்கள் என்று பூஜைகளின் மூலம் இருபதாயிரம் ரூபாய் மாத வருவாய் ஈட்டி வருகின்றனர். ராமு கர்ணன் கூறும்போது,பூஜைகளை செய்வதில் நல்ல அனுபவமுள்ளவர்களை நாங்கள் தேர்வு செய்துகொள்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவையில் திருப்தி ஏற்படுகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்கிறோம். 

செல்லிடப்பேசிகள்மூலம் சேவை ஆற்றவும் எங்களிடம் திட்டம் உள்ளது. விரைவில் அதை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.

---------------------------------------தி இந்து ஆங்கில நாளிதழ், 25-5-2014

மேலே கண்ட செய்தி நேற்றைய இங்கிலீஷ் இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தி! அறிவியல் தொழில் நுட்பம் யாருக்கு, எப்படிப் பயன்படுகிறது பார்த்தீர்களா?


மற்ற நாடுகளில் அறிவியல், தொழில் நுட்பம் அறி யாமையை, மூடநம்பிக்கைகளை, சனாதனப் பழைமை களையும், பத்தாம் பசலித்தன சடங்கு சம்பிரதாயங்களின் பாசிக் குட்டைகளைத் தூர்க்கவே பயன்படும்.
ஆனால் பரந்த புண்ணிய பூமியான இந்த பாரத பூமியில், அய்டெக் (Hi-tech) சாமியார்கள் முதல் புரோகிதர் வரை எல்லாம் மாறி விட்டார்கள்!
அய்-பேடில் - தொலைபேசியில் உருவமும் குரலும் வர வசதி ஏற்பட்டதைப் பயன்படுத்தி (Skype) ஸ்கைப் மூலம் லண்டனில் கல்யாணத்தை விவாக சுபமுகூர்த்த மாக சமஸ்கிருத மந்திரங்களோடு சாங்கோபாங்கமாகக் கூறி நன்றாக வருமானம் கறக்கின்றனர்!


வெளிநாட்டான் டி.வி. கண்டுபிடித்தால் நம்மூர் டி.வி.க்களில் மஹாபாரதம், இராமாயணம் பரப்பும் பழைய பஞ்சாங்கத்தனத்திற்குப் பஞ்சமே இல்லை.

யாருக்கும் வெட்கமில்லை இங்கு.


இந்த லட்சணத்தில் பேக்கேஜ் றிPagkage - டூர் மாதிரி, பேக்கேஜ் ஏற்பாடுகள் உட்பட எல்லாம் ரெடிமேட் - உடனே 777 - Instant Coffee மாதிரி தயார்! தயார்!! என்று விளம்பரப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள் ளுகின்றனர்!


ஆனால் பார்ப்பனரல்லாதாருக்கு அர்ச்சகர் படிப்புச் சொல்லி, பாஸ் பண்ண வச்சபிறகும்கூட, அவர்கள் அர்ச்சகராகக் கூடாது; ஆச்சாரம், அனுஷ்டானம், போயிடும் - ஆகம சாஸ்திரங்களுக்கும் சனாதன சம்ப்ரதாயங்களுக்கும் விரோதமோ இல்லியோன்னு உச்சநீதிமன்றத்திற்கே சென்று வழக்குப் போட்டு ஸ்டே வாங்கி அத்திட்டத்தை கிடப்பில் போடும்படி பண்ணுறாள் அவாள்!
என்னே பக்தி! என்னே சம்ப்ரதாயம்! எத்தனை பெரியார்கள் இன்னும் 
தேவையோ!

-------------------------- ஊசி மிளகாய் 26-05-2017 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...


ராஜபக்சே வருகையைக் கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம்

இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பு விழா:

ராஜபக்சே வருகையைக் கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம்

தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டம் - ஆர்ப்பாட்டங்கள்!

பதவியேற்பு விழாவை புறக்கணித்த 5 மாநில முதலமைச்சர்கள்!


புதுடில்லி, மே 26- இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திரமோடி இன்று (26.5.2014) மாலை புதுடில்லியில் உள்ள குடிய ரசுத் தலைவர் மாளிகை யில் பதவியேற்கும் நிலையில் இவ்விழாவிவை அய்ந்து மாநில முதலமைச் சர்கள் புறக்கணித்துள்ளனர். இவ்விழாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சேவை கண்டித்து ஏற்கெனவே திராவிடர் கழகம், திமுக, திராவிடர் இயக்க தமிழர் பேரவை, மதிமுக, சி.பி.அய்., உள் ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் நேற்று டில்லியில் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட் டம் செய்தனர். தமிழகத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் மற்றும் உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டங்கள் நடை பெற்றன.

பதவியேற்பு விழாவை புறக்கணித்த 5 மாநில முதலமைச்சர்கள்!

இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி இன்று (26.5.2014) பதவி ஏற்கிறார். குடியரசு தலை வர் மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத் தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக் கிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர் களுக்கு அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் கூட்டமைப் பின் தலைவர்கள் பங் கேற்கிறார்கள்.

இது தவிர வெளிநாட்டு தூதர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள் முதல் அமைச் சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரை யுலக பிரபலங்கள் என 4 ஆயிரம் பேர் அழைக்கப் பட்டு உள்ளனர். ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...

மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைத்த செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும் என்று அவர் ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார்.

இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழா வில் அவர் பங்கேற் வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட் டார்கள் எனத் தெரிகிறது. கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வில்லை. முன் கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பதவி ஏற்பு விழாவுக்கு வர இயலாது என்று மோடியிடம் உம் மன் சாண்டி ஏற்கெனவே தெரிவித்து விட்டார் என்று உம்மன்சாண்டியின் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள்.

இதே காரணங்களுக் காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொளள்வில்லை.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி அமைச்சர் பிரதீப் அம்த பங்கேற்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடி பதவி ஏற்பு விழாவை புறக் கணித்து உள்ளார்.

டில்லியில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நரேந்திர மோடி பிரதம ராக பதவி ஏற்கும் நிகழ்ச் சிக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜ பட்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டில்லி தமிழ் இளைஞர் அமைப்பு சார் பில் டில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத் தின்போது டில்லி தமிழ் இளைஞர் அமைப்பின் அமைப்பாளர் கே. லெனின் கூறியதாவது:

தமிழ் ஓவியா said...

நரேந்திர மோடி பிரதம ராக பதவியேற்கும் விழா வில் கலந்துகொள்ள ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கத் திட்ட மிட்டுள்ளதும் டில்லிவாழ் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ராஜ பக்சேவை இந்தியாவில் நுழைவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். பிரதமர் பதவியேற்பு விழாவை தமிழ்நாட்டு எம்.பி.க்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கி றோம் என்றார் லெனின்.

சிறிவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கறுப்புக்கொடி!

மோடி பிரதமராக பதவி யேற்கும் விழாவில் ராஜ பக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிறீவில்லி புத்தூர் தாலுகாவில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி வைத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல் படத் தொடங்குவதற்கு முன்பே, இந்தியப் பிரத மரின் பதவியேற்பு விழா வில் கலந்து கொள்வ தற்காக இலங்கை அதி பருக்கு அழைப்பு விடுத் திருப்பது கெட்ட வாய்ப் பானது. இந்த செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள் ளது. எனவே ராஜபக்சே வருகையை எதிர்த்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எங்களது கண்ட னத்தைத் தெரிவித்துள் ளோம். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி பறக்கும் என்று தெரிவித்தனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டங்கள்!

தமிழ் இனப் படு கொலையாளன் ராஜபக்சே மோடி பதவியேற்புக்கு வருகை தந்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழு வதும் உணர்ச்சிப் பெருக் குடன் பல்வேறு அமைப் புகளின் சார்பில் போராட் டங்கள் நடந்து வரு கின்றன.

சட்டக் கல்லூரி மாண வர்கள் பலர், திருவள்ளூ ரில் ரயில் மறியல் போராட் டம் நடத்திக் கைதானார் கள். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட் ரல் செல்லும் ஜோலார் பேட்டை விரைவு ரயில் காலை 8.25 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலை யம் வந்தது. அப்போது திடீரென்று சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் ராஜ பக்சேவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய படி ரயிலை நோக்கி ஓடி னார்கள். ரயில் இன்ஜின் மீது ஏறி நின்றபடி போக விடாமல் மறித்தனர். ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்த மோடிக்கு எதிராக வும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சர்வதேச விசாரணைக்கு ராஜபக்சே ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இல்லாவிட்டால் இலங்கை தூதரகத்தை மூடக்கோரும் போராட்டத் தில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர் இந்தப் போராட்டம் காரணமாக ரயில் கால் மணி நேரம் தாமதமாக போனது. இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங் கள் நடந்துள்ளன. ராஜபக்சேவின் வருகை தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தாம ரைப் பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கட்சி உறுப் பினர் இல்ல விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பா.ஜ.க.வை ஆட்சி யில் அமர்த்தினால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று தமி ழகத்தில் உள்ள சில அரசி யல் கட்சித் தலைவர்கள் நம்பினார்கள். அது உண்மையல்ல என்பது இப்பொழுது அம்பலமாகி இருக்கிறது.

இதுவரை இந்திய பிரத மர் பதவியேற்பு விழாவின் போது தெற்காசிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில்லை. முதல்முறையாக இது நடந் திருக்கிறது. உண்மையில் ராஜபக்சேவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முதன்மை யான நோக்கமாகும். ராஜபக்சேவை மட்டும் அழைத்தால் பிரச்சினை யாகி விடும் என்பதால் தெற்காசிய நாடுகளின் தலைவர்களையும் அழைத்துள்ளனர்.

அய்.நா. பேரவையில் அண்மையில் ஜெனிவா வில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தால் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராஜபக் சேவை அழைத்திருப்பது ஒட்டு மொத்த தமிழர் களின் உணர்வுகளை காயப் படுத்தும் முடிவாகும். இந்த விழாவில் ராஜபக்சே பங்கேற்கக் கூடாது, அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/80991.html#ixzz32sH5xJr4

தமிழ் ஓவியா said...


யாரால் யார் கெட்டது?


நாயர் பிடித்த புலிவால் என்பார்கள்; பி.ஜே.பி. இன்று அந்த நிலையைத்தான் எட்டியுள்ளது. பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்னதாகவே வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டது அந்தக் கட்சி.

அந்தக் காலத்தில் மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும்போது மற்ற நாட்டு அரசர்களையும், சிற்றரசர்களையும் அழைத்து சாங்கோ பாங்கமாக நாடே கிடு கிடுக்கும் அளவுக்கு விழா நடத்துவார்கள். ஜனநாயக நாட்டிலோ எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தாம். இந்த நிலையில் பிற நாட்டு ஆட்சித் தலைவர்களை எதற்காக அழைக்க வேண்டும்?

இவர்களுக்கெல்லாம் வழிகாட்டி என்று கூறி இன்றளவும் பெருமையாகப் பேசப்படுகின்ற அடல் பிஹாரி வாஜ்பேயி மூன்று முறை பிரதமருக்கான பதவிப் பிரமாணம் எடுத்தாரே அப்பொழுதெல்லாம் எந்த சார்க் நாட்டுப் பிரதிநிதிகளை அழைத்தார்?

அதுவும் இலங்கை அதிபர் ராஜபக்சே என்கிறபோது - உலக நாடுகளின் மத்தியில் இனப்படுகொலையாளி என்ற விமர்சனத்துக்குச் சொந்தக்காரர்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லக் கூடாது என்று குரல் உயர்த்தியவர்களுள் பிஜேபியினரும் உண்டே! அப்பொழுதெல்லாம் இந்த ராஜ தந்திரம் முக்காடு போட்டுக் கொண்டிருந்ததா? பக்கத்து நாட்டோடு உறவு என்பதெல்லாம் ஆட்சி நாற்காலியில் உட்கார்ந்தபோதுதான் அசரிரி சொல் லிற்றோ! பாகிஸ்தான் பிரதமருக்கும் அழைப்புக் கொடுக்கப் பட்டது. நேற்று வரை பாகிஸ்தான் பற்றி பி.ஜே.பி. வட்டாரத்தின் மதிப்பீடு என்ன?

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் நன்றாகத்தான் நாக்கைப் பிடுங்குமாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

2013ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரபுக்கு கோழி பிரியாணி பரிமாறி உபசரிப்பதாக மோடி குற்றஞ் சாட்டியிருந்தார் அல்லவா! இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய இராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம், கோழி பிரியாணி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிப் பேசினார் நரேந்திர மோடி.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது குறித்து சசிதரூர் தனது ட்டுவிட்டர் சமூக இணைய தளத்தில் நவாஸுக்கு, மோடி பிரியாணி பரிமாறுவார் என எதிர்பார்க்கலாம் என்று நச்சென்று கிண்டல் அடித்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கை என்றால், மோடி வந்தால் ஈழத் தமிழர் பிரச்சினையில் விடியல் முளைக்கும் என்று வீரப்பிரதாபம் பேசிக் கொண்டிருந்த - பிஜேபியோடு கூட்டணி சேர்ந்திருந்த வைகோ போன்றவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது!

தொடக்கமே சரியில்லையே! முகத்தைத் தொங்கப் போடும் நிலைதானே! கண்ணீரும் கம்பலையுமாகக் கும்பிட்டக் கையோடு அல்லவா மோடிக்கு விண் ணப்பம் போடுகிறார்.
இவராவது பரவாயில்லை. பா.ம.க. நிறுவனர் மருத்துவரும், தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்தும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையே கண்டு கொள்ளவில்லையே!

மத்திய அமைச்சர் நாற்காலியை நோக்கி சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் பொழுது கொள்கை யாவது - மண்ணாங் கட்டியாவது!

தொடக்கத்திலிருந்து நாம் சொல்லிக் கொண்டு வந்ததுதான்; அயல் உறவுக் கொள்கையிலும் சரி, பொருளாதாரக் கொள்கையிலும் சரி காங்கிரசும், பிஜேபியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான் என்று சொன்னபொழுது எகிறிக் குதித்தவர்கள், காலங் கடந்தாவது இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஜெனிவாவில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த கால கட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்திலும் இலங்கை குறித்துத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது பற்றிக் கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டது பிஜேபி என்று காங்கிரஸ் சொன்னதே! பிகாரில் பவுத்தப் பல்கலைக் கழக விழாவுக்கு ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்ததும் பிஜேபி தானே - அதில் முன்னோடும் பெண்ணாக ஓங்கி நின்றவர் சுஷ்மா சுவராஜ்தானே!

இது என்ன? இன்னும் போகப் போக இருக்கிறது - காட்சிகள் மாறி மாறி வரும்! உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று கூறி ஒருவர் காதை இன்னொருவர் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடும் காணரும் காட்சியைக் காணத் தயாராக இருங்கள்!

Read more: http://viduthalai.in/page-2/80995.html#ixzz32sHJAHN2

தமிழ் ஓவியா said...


சிறிதும் இராது


பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது. - (விடுதலை, 10.6.1968)

Read more: http://viduthalai.in/page-2/80993.html#ixzz32sHT0q12

தமிழ் ஓவியா said...


பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்


- குடந்தை கருணா

மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருவதற்கு தமிழ் நாட்டிலும், நவாஸ் ஷெரிப் இந்தியா வருவதற்கு சிவ சேனாவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளுடன் நட்பு வளர்வதற்கு மோடி எடுத்துள்ள சிறப்பான முயற்சி இது என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்.

இதே அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தையை மன்மோகன் சிங் அரசு எடுத்தபோது அதை மோடியும், பாஜகவினரும் கடுமையாகச் சாடினர். இப்போது வெற்றி பெற்றதும், நட்பு, உறவு, அண்டை நாடு என மோடி பரிவாரங்கள் பேசுகின்றன.

தேர்தல் நேரத்தில் மோடி எப்படி எல்லாம் பேசினார்? நான் வெற்றி பெற்றால் மாநில அரசுக்கு உரிய மதிப்பு அளிப்பேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை அழைப்பதற்கு முன், தமிழக அரசோடு கலந்து பேசியிருக்க வேண் டாமா?

ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்கு காரணமான ராஜபக்சே மீது போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என பல நாடுகள் முயன்று வரும் நிலையில், தமிழக மக்கள் அதற்காக வலியுறுத்தும் நிலையில், ராஜபக் சேவை அழைக்க வேண்டிய அவசி யம் என்ன? குஜராத்தை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள், வேண்டாம், ஒரு நூறு பேர் பாகிஸ்தானில் தாக்கப்பட்டிருந்தால், மோடியின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்குமா? அதெல்லாம் இருக்கட்டும். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய மோடி, வெற்றி பெற்றதும் சொன்னாரே, சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைப்பதற்கு முன், அவரது கூட்டணியில் இருபத்தேழு கட்சிகள் இருக்கின்றனவே, அதில் தொடர் புடைய மாநிலக் கட்சிகளோடு ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமா? வேண் டாமா? தொடர்புடைய மாநிலக் கட்சி களோடும் பேசவில்லை; தொடர் புடைய மாநில அரசோடும் பேச வில்லை.

அப்படி என்றால் இப் போது அமைய உள்ள ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அல்ல; மாறாக, இது அவர்கள் முதலில் சொன்னதுபோல், மோடி சர்க்கார் தான் என்பதை, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல; கூட்டணியில் உள்ள கட்சிகளும் புரிந்து கொள்ள வேண் டும். பதவி ஏற்கும் விழாவிற்கு சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைக் கும் வழக்கம் ஏதும் இதற்கு முன்னர் எப்போதும் கிடையாது. இப்போது மோடி அரசால் ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இந்த அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது என்றால், இதன் நோக்கம், பாஜகவின் பெரும்பான் மையினவாதத்தை அண்டை நாடு களுக்கு காட்டுவதற்குத்தான் எனக் கருத வேண்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/81003.html#ixzz32sHauayB

தமிழ் ஓவியா said...

குடற்புண்ணை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்

குடற்புண் அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலி வுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை செரிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்படலாம். சிகிச்சை பின்வருமாறு:

தண்ணீர்: போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.

அருகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதிய சாப்பாடு. இதன்மூலம் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.

வாழைத்தண்டு: நோயாளிகளுக்கு பொதுவாக சிறு நீரகக்கல் அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.

கொத்தமல்லி: இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வல்லாரை: மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIOBdmf

தமிழ் ஓவியா said...

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் பார்லி

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி. குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது. இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது. பார்லியில் பீட்டாக்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட் ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டாக்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.

அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்சினைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIVBdx4

தமிழ் ஓவியா said...

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

* சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.

* சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.

* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.

* சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்.

* சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.

* சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும். * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.

Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIb4Pou

தமிழ் ஓவியா said...


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?


ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?

ஊடகங்களுக்கு அச்சுதானந்தன் கேள்வி

திருச்சூர்,மே 26- ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப் படும் ஊடகங்கள், கார்ப் பரேட்மயமாக்கலின் ஆர வாரங்களுக்கு இடையே தங்களின் முகத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

திருச்சூரில் சீனியர் ஜெர் னலிஸ்ட் ஃபாரம் (மூத்த பத்திரிகையாளர்கள் சங் கம்) மாநில மாநாட்டை யொட்டி ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சி யடைகிறதா? என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கிற்கு அனுப்பிய துவக்க உரையில் அச்சுதானந்தன் மேலும் கூறியதாவது: சர்வதேச-தேசிய-மாநில சூழ்நிலைமைகளில் ஊடக அமைப்புகள் முதலாளித் துவ-கார்ப்பரேட் நலன் களுக்கு அடிபணிந்து செயல் படுகின்ற நிலைமை உள் ளது நாட்டில் உள்ள முக் கியமான சுமார் 40 பத்திரி கைகளும் அவற்றின் துணை வெளியீடுகளும் டாடா, பிர்லா மற்றும் பெனெட், கோல்மேன் உள்ளிட்ட நான்கைந்து பெரும் ஏக போக முதலாளிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. கேரளத்திலும் பிரபல பத் திரிகைகள் இவர்களின் நலன்களைத்தான் பாதுகாக் கின்றன.

சமூக வாழ்க்கையில் நிலவும் அநீதிகளை கண்ட றியவும், அவற்றை அகற்றி வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தவும், மாற்றி அமைக் கவும் ஊடகங்கள் கட மைப்பட்டவையாகும். ஆனால், ஊடகங்கள் இன்று பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும் பிரை வேட் ட்ரீட்ஜெர்ன லிசம் (தனியார் அணுகி தனக்கா னதை சாதித்துக் கொள்ளும் இதழியல்) என்றும் குற்றச் சாட்டுக்கு ஆளாகின்றன. திருவனந்தபுரத்தில் அர சின் குடியிருப்புத்திட்டத் தில் வீடு வழங்கப்பட்ட 54 பத்திரிகையாளர்கள் ஆண் டுகள் பலவாகியும் ஒரு பைசாக் கூட கட்டவில்லை என்றுசில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளி யானது.

எல்லாவற்றையும் விமர்சிக்கின்ற நான்காவது தூண்என்று அழைக்கப் படும் பத்திரிகைகளை யார் விமர்சிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளத் தில் இரண்டு பிரபல பத்தி ரிகைகளுக்கு, மற்ற பத்திரி கைகளுக்கு வழங்கப்படு வதைவிட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தில் அரசு விளம்பரம் அளித்தது என்று தகவல் உரிமை சட் டத்தின்படி கிடைத்த தக வல் கூறுகிறது. ஊடகங் களின் பிரச்சாரங்கள் மூலம் நரேந்திரமோடி பாரதத்தின் ரட்சகர் என்று வர்ணிக்கப் பட்டார். இதுபற்றி ஊட கங்கள் மேலும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

குஜராத் இனப்படு கொலையின் பேரில் ஹிட் லருடன் ஒப்பிடும் அள வுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடியை ஊட கங்கள் எளிமையானவர் என்றும் இரக்கம் உள்ளவர் என்றும் ஏழைகளின் காப் பாளர் என்றும் வர்ணித்தன. ஊடகங்களையும் ஊடகங் களின் போக்குகளையும் விமர்சனரீதியாக பார்க் கின்ற ஒரு சமூகத்தை உரு வாக்கவேண்டும். அதுதான் ஊடகங்களின் நம்பகத்தன் மையை மீட்டெடுப்பதற் கான முக்கியமான முதல் படியாகும். இவ்வாறு அதில் அச்சு தானந்தன் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/81019.html#ixzz32sItyzJm

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கோலார் தங்கவயல், மே 27- கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சிக்பள்ளாப்பூர் அருகே இந்த விபத்து நடந்தது.

சிக்பள்ளாப்பூர் தாலுகா, ஹலயூர் கிராஸ் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெயராம் (வயது 36). இவருடைய மனைவி அம்பிகா (32). இவர்களுக்கு நயனா (11), மோனிஷா (8) என்ற 2 மகள்கள் உண்டு. 4 பேரும் ஒரு காரில் சிக்பள் ளாப்பூரில் உள்ள நந்தி கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று சென்று கொண்டு இருந்தனர். காரை ஜெய ராம் ஓட்டிச் சென்றார்.

தேவிசெட்டி ஹள்ளி கிராஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப் பளம் போல நொறுங்கி யது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினார்கள்.

இந்த விபத்தில் ஜெய ராம், அம்பிகா, மோனிஷா ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நயனா படு காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தவுடன் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சிக்பள் ளாப்பூர் புறநகர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டு நரை வலைவீசி தேடி வரு கிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/81060.html#ixzz32yJW6uYo

தமிழ் ஓவியா said...


இல்லவே இல்லை!


எல்லா மதக்காரர்களும் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது, ஒரு முடி கூட உதிராது என்று கூறுகிறார்கள். அது வெறும் வேஷம் ஆகும். அவன் அவன் முடியை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், நாவிதனிடம்தான் போகின்றான்! எனவே, 370 கோடி மக்களில் எவனும் கடவுளிடம் நம்பிக்கை உடையவன் இல்லவே இல்லை.

_ (விடுதலை, 26.4.1972)

Read more: http://viduthalai.in/page-2/81061.html#ixzz32yJjPoaX

தமிழ் ஓவியா said...


திருவாரூர் மாநாடுதிருவாரூரில் திராவிடர் விவசாய தொழிலாளர்கள் எழுச்சி மாநாடு நேற்று (26.5.2014) மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், கொள்கை முழக்கங்களோடு பேரணி முக்கியமானதாக அமைந்திருந்தது. பெரும்பாலும் திருவாரூர், நாகை மாவட்ட திராவிடர் கழக விவசாய சங்கத் தொழி லாளர்கள் இருபாலரும் பங்கு ஏற்றனர் என்பதே உண்மையாகும்.

திராவிடர் கழகப் பேரணி என்றால் ஏதோ கூட்டம் கூட்டமாகச் செல்லும் முறையில் அது அமைவதில்லை.

முறையாக அணிவகுப்பது, மாநாட்டின் நோக் கத்தை வெளிப்படுத்தும் ஒலி முழக்கங்கள் (அச்சிட்டு வழங்கப்படும்) அதில் முக்கியமாக இடம் பெறும்.

இரண்டாவதாக, மூடநம்பிக்கை ஒழிப்புக் கூர்மையுடையதாக இருக்கும்; படித்தவர்களே மூடநம்பிக்கைக் குழிக்குள் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கும் மக்கள் நிறைந்த நாட்டில், மூடநம்பிக்கையை எதிர்க்கும், மக்களுக்கு உணர்த்தும் அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இது திராவிடர் கழகத்திற்கே உரித்தான சிறப்புத் தகுதியாகும்.

பொது மக்கள் மத்தியில் இத்தகு பேரணியும் மூடநம்பிக்கை ஒழிப்பு அம்சங்களும் இடம் பெறும் போது பொது மக்களை வெகுவாக ஈர்க்கக் கூடியது மட்டுமல்ல; சிந்திக்கத் தூண்டுபவையாகவும் அமை கின்றன.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தச் ஷரத்தினைத் துல்லியமாக நூற்றுக்கு நூறு செவ்வனே செயல் படுத்துவது திராவிடர் கழகமே! சிறப்பாக திராவிடர் கழகம் நடத்தும் பேரணியில் அவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் (பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருதல், அலகு குத்திக் கார் இழுத்தல், கூரிய அரிவாள் மீது ஏறி நிற்றல் முதலியன) மிக முக்கியமானவையாகும்.

மாநாட்டைப் பொறுத்தவரை, தீர்மானங்கள் எப்பொழுதும் முக்கியமானதாக அமையும், திருவா ரூரில் நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் அந்த வகையில் இந்தக் கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

விவசாயத்தைத் தொழிலாக அறிவித்தல், காவிரி நதி நீர் பங்கீடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசியல் கண்ணோட்டமின்றி மானியங்கள், நிவாரணங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்தல், பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளி லிருந்து பாதுகாத்தல், விவசாயத்தின் துணைத் தொழிலான ஆடு - மாடுகள் பராமரிப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, விவசாயிகளுக்கு முதியோர் காப்பகங்கள், ஆண் பெண்களுக்கிடையே ஊதிய வேறுபாடு நீக்கம், தென்னக நதிகள் இணைப்பு, விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்தல் ஆகிய அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டில் மூன்றில் இரு பகுதியினரின் தொழில் விவசாயமாக இருக்கும் ஒரு நாட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே!

ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலேயே வளர்ந்து, கடனிலேயே மாள்கிறான் என்பது தொடர் மொழியாகவே இருந்து வருகிறது.

விவசாயத்தில் கூட அந்நியத் தலையீடு என்கிற அளவுக்குக் கேவலமாகி விட்டது. பாரம்பரியமாகப் பராமரிக்கப்பட்டு வந்த விதை நெல்லுக்குப் பதிலாக மலட்டு விதைகள் அறிமுகப் படுத்தப்பட்ட கொடுமை எல்லாம் உண்டு.

இவற்றை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது மீண்டும் அந்த மலட்டு விதைகளைத் தான் பயன்படுத்த வேண்டும் - உலகப் பொருளாதாரச் சூழலில் நாடுகள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட தீய விளைவுகளில் இதுவும் ஒன்று.

சில்லறை வர்த்தகத்தில்கூட அந்நிய முதலீடு என்று வருகிறபோது உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள் களுக்கான கட்டுபடியாகும் விலைகூடக் கிடைப்ப தில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழிலாக ஒதுக்கப்பட்டது இந்திய விவசாயியே!

காவிரி டெல்டா பகுதியைப் பொறுத்தவரை விவசாயத்தைத் தவிர வேறு எந்தவிதமான தொழில் வசதிகளும் கிடையாது. விவசாயத்தைத் தவிர வேலை வாய்ப்பு என்பது அரிதாகும். இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் தேவையான தொழிற்சாலைகளை உருவாக்கி, விவசாயிகளின் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி வகை செய்ய வேண்டும் என்பதே திருவாரூர் மாநாட்டுத்தீர்மானம் அடிநாத மாகக் கொண்டிருக்கிறது.

மீன் பிடி தொழிலுக்குச் செல்லாத கால கட்டத்தில் அத்தொழிலாளிகளுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படுகிறதே - அதே கண்ணோட்டம் விவசாயத் தொழிலுக்கும் தேவைப்படுகிறது. திராவிடர் விவ சாயிகள் தொழிலாளர் எழுச்சி மாநாடு இத்திசையில் பல்வேறு சிந்தனைகளைத் தட்டி எழுப்பியுள்ளது என்பதில் அய்யமில்லை.

மாநாட்டு வெற்றிக்கு அரும்பாடுபட்டு உழைத்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உள்ளிட்ட அனை வருக்கும் பாராட்டுக்கள்.

Read more: http://viduthalai.in/page-2/81062.html#ixzz32yJrtlPP

தமிழ் ஓவியா said...


பழகு முகாமின் சிறப்புகள்

பெரியார் பிஞ்சுகளின் பழகுமுகாம் சிறுவர், சிறுமியர் மற்றும் விடலை பருவத்து பிள்ளைகளிடமும் நல்லவண்ணம் முற் போக்கு எண்ணத்தை சிந்தனையை விதைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது வரும் ஆண்டுகளில் பெற்றோருக்கு பயிற்சி வகுப்புகள் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது.

10.5.2014 அன்று தாங்கள் பெரியார் பிஞ்சுகளுக்கு அறிவுரை, கருத்துரை வழங்குமுன் அவர்களை பேரன், பேத்தி களே என விளித்ததை குறிப்பிடும்போது எங்கள் பிள்ளைகளின் முகத்தில் மின் விளக்கின் ஒளிர்வை பார்க்கும்போது அவர்களின் அகமகிழ்வை அளவிட முடி கிறது. கழக கூட்டங்களுக்கு அழைத்த போது மறுத்த பிள்ளைகள், அதே பிள் ளைகள் தாத்தா சொல்லிட்டார்மா உங்கள் ஊருக்கு நான் வரும்போது நீங்கள்தான் என்னை வரவேற்கு வரனும் என்று அதனால் அப்பா என்னை அழைத்து செல்லவில்லை என்றாலும் நானே சைக்கிள் எடுத்துச் சென்று வரவேற்பு கொடுப்பேன் என்றபோது என் வாழ்விணையர் பெரு மிதத்தோடு என்னை பார்த்தார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நான் சொன்னபோது ஏற்காதவர்கள், பழகுமுகாம் சென்று வந்தபின் சொல்லும் முன்பே பயிற்சி செய்வது எனக்கு மகிழ்ச் சியை அளிக்கிறது.

பழகு முகாம்களை கழகத்தின் நாற்றங்கால்களாக்கப்பட என் உள்ளார்ந்த யோசனைகள்

குழந்தைகளின் பெற்றோர் பகுத்தறி வாளர்களாக இருந்தும் குடும்ப சுமை, பொருளாதார நெருக்கடி, இன்னும் சில காரணங்களால் குடும்ப தலைவிகள் பகுத் தறிவு பாதையிலிருந்து விலக நேரிடுகிறது ;அதற்கு குடும்ப தலைவர்களும் காரணமாக இருப்பதுண்டு. இந்நிலையிலிருந்து விடுபட மதவாதிகளுக்கு போல தொடர்ச்சியாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும் சூழ் நிலை பகுத்தறிவாளர் குடும்பங்களுக்கு சிறப்பாக பெற்றோர்களுக்கு வழங்கும் வகையில் பெற்றோர் பயிற்சி முகாம் அமைய வேண்டும். ஆண்டுதோறும் வெளியூர் சுற்றுலா சென்று தம்மை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பில்லாததாலேயே அய்யப்பா, திருப்பதி என்று ஆன்மீக சுற்றுலா செல்கின்றனர் என்பது கவனிக்க தக்கது.

முக்கியமாக பெண்கள் சமையல், துணி துவைப்பது போன்ற வேலைகள் செய்து சலித்துள்ளனர். சமையில் விடுதலைக் காகவே பல பெற்றோர்களும் பங்கேற்பர், பெற்றோர்கள் தெளிவானவர்களாக இருந்தால் பிள்ளைகள் சரியாகவே வளர்வார்கள், பெற்றோர் பயிற்சி முகாமில் சுற்றுலாவும் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

முடிந்தால் முழுநேரம் அல்லது பகுதி நேரம் பெரியார் டி.வி.அவசியமாகும். பகுத்தறிவை சிறுவர்களிடம் கொண்டு செல்லும்வகையில் பல வண்ண படக்கதை புத்தகங்களாக தந்தை பெரியார் வரலாறு, பகுத்தறிவாளர் வாழ்கையில் சுவையான நிகழ்ச்சிகள் அவர்களின் போராட்டத்தை சுவைப்பட சொல்லும் தனி படக்கதை புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும். கார்ட்டூன் குறுந்தகடுகளும் வெளியிடலாம்.
பழகு முகாம் பயிற்சி முகாம்களில் பங்கேற்கும், சிறுவர், பெற்றோருக்கு தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடுகள் அவரவர் பகுதி முக்கிய நிகழ்வுகளை குறுஞ்செய்தியாக ஒருவாரம் முன்பு ஒருமுறையும் முதல்நாள் ஒருமுறையும் நினைவூட்டல் செய்யலாம்.

பழகு முகாம் பிள்ளைகளின் வயது வரம்பு 18 ஆக்கப்பட வேண்டும்.

- செ.ரா.முகிலன், காஞ்சிபுரம்

Read more: http://viduthalai.in/page-2/81065.html#ixzz32yK0W1ne

தமிழ் ஓவியா said...


நீக்கம்-சேர்ப்புக்குப்பின் தமிழக அமைச்சர்கள் பட்டியல் புதிதாக வெளியீடு


சென்னை, மே 27- மூன்று பேர் மீண்டும் சேர்க்கப்பட் டிருப்பது, அமைச்சர் கே.பி. முனுசாமி நீக்கப்பட்டிருப் பது என சில மாற்றங்கள் செய்யப்பட்ட பின், புதிய தமிழக அமைச்சரவைப் பட் டியல் வெளியிடப்பட்டுள் ளது.

அமைச்சரவை பட்டி யல் குறித்த உத்தரவை தலை மைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட் டார். அதன் விவரம்: (பெய ரும், அவர்கள் வகித்து வரும் துறைகளும்)

பட்டியல்

முதல்வர் ஜெயலலிதா-பொதுத்துறை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பொது நிர் வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள் துறை. ஓ.பன்னீர்செல்வம்-நிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர் தல், பொதுப்பணித் துறை)

நத்தம் ஆர்.விஸ்வநாதன்- மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.வைத்திலிங்கம்-வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம்.

எடப்பாடி கே.பழனி சாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை.

பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழி லாளர் நலத் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை.

பி.பழனியப்பன்-உயர் கல்வித் துறை.

செல்லூர் கே.ராஜூ-கூட் டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை.

ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை.

பி.தங்கமணி-தொழில் துறை.

வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை.

வி.மூர்த்தி-பால்வளத் துறை.

எம்.சி.சம்பத்-வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ் ணமூர்த்தி-வேளாண்மைத் துறை.

எஸ்.பி.வேலுமணி-நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங் கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத் தத் துறை, ஊழல் தடுப்பு.

டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.

எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

எஸ்.சுந்தரராஜ்-இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை.

பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அற நிலையங்கள் துறை.

எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்.

என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை.

கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை.

முக்கூர் என்.சுப்பிரமணி யன்-தகவல் தொழில் நுட்பத் துறை.

ஆர்.பி.உதயகுமார்-வரு வாய்த் துறை.

கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை.

கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.

எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை.

தோப்பு என்.டி.வெங் கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட் டுத் துறை.

டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம்.

எஸ்.அப்துல் ரஹீம்-பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை.

சி.விஜயபாஸ்கர்-சுகா தாரத் துறை.

Read more: http://viduthalai.in/page-5/81041.html#ixzz32yKxi3w7

தமிழ் ஓவியா said...

நலிவடைந்த விவசாயம்


விவசாயம் நலிந்ததா? நலிவடையச் செய்யப் பட்டதா? என்பது முக்கிய வினாவாகும்.

நாட்டில் 69 சதவிகித மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 63 சதவிகித மக்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆவார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் ஒரு தொழிலாகக்கூட அங்கீகரிக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை!

திருவாரூரில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் மாநாட்டின் முதல் தீர்மானமே இதுகுறித்ததுதான். விவசாயத்தை ஒரு தொழிலாக அறிவித்திடுக என்பதுதான்;

விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது என்பது எத்தகைய அவலம்!

அதன் விளைவு விவசாயத் தொழிலைவிட்டு கிட்டத் தட்ட 77 லட்சம் மக்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட் டனர். நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் விவசாயிகள் இத்தொழிலை விட்டு விலகிச் செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நாட்டின் உற்பத்தியில் 30 சதவிகிதம் விவசாயத் துறையில் கிடைப்பவையாகும்.

அத்தகைய துறைக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை, 90-களில் 6 சதவிகிதமாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பேயி தலை மையில் அமைந்தபோது அது வெறும் 1.3 சதவிகிதமாக வீழ்ச்சியுற்றது.

கிராமங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் 11 சதவிகிதம்தான். விவசாயிகள் வாங்கும் பல்நோக்கு டிராக்டருக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 12 முதல் 16 சதவிகிதமாகும். ஆனால், பணக்காரர்கள் வாங்கும் சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் வட்டியோ வெறும் 7 சதவிகிதம்தான்.

ஏழை விவசாயிகள் வாங்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்திட கடும் கெடுபிடிகள்! ஆனால், பெரும் பண முதலைகளுக்கு வழங்கப்பட்ட கடனோ கோடானு கோடியாகும். அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்யாமல் வாராக் கடன் என்ற முறையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை ரூ.1.23 லட்சம் கோடியாகும்.

விஜய் மல்லையா நடத்தும் கிங் ஃபிஷர் விமான நிறுவனம் நட்டப்பட்டது என்றால், அதனைத் தூக்கி நிறுத்திட மத்திய அரசும், அரசு வங்கிகளும் ஓடோடி வருகின்றன. வங்கிகளுக்கு மட்டும் மல்லையா வைத்துள்ள கடன் பாக்கித் தொகை ரூ.7524 கோடியாம்!

தமிழ் ஓவியா said...

ஒரு காலகட்டத்தில் (1992-1993) நாட்டின் மொத்த உற்பத்தியில் 41 சதவிகிதமாக இருந்த விவசாய தொழில் 18 சதவிகிதமாக படிப்படியாக பெரும் வீழ்ச்சியை அடைந்துவிட்டது.

உலகில் பட்டினிக் குறியீட்டில் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 66 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக வங்கி தரும் புள்ளி விவரப்படி 37 சதவிகித இந்தி யர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உழலுகின்றனர். உலகில் எடை குறைந்த குழந்தைகளில் 49 சதவிகிதமும், ஊட்டச் சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டதில் 34 சத விகிதமும், உலகில் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் என்ற வரிசையில் 46 சதவிகிதமும் இந்தியாவிற்கே சொந்தமாகும்.

இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்திய விவசாய தொழில் உரிய முறையில் கவனிக்கப்படாமை தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, முக்கியமான பரிந்துரைகளை வெளியிட்டதுண்டு.

கணபதி பிள்ளை ஆணையம், கார்த்திகேயன் தலை மையிலான ஆணையம், மணி தலைமையிலான குழு, திரவியம் குழு, அரிபாஸ்கர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

1997 ஆகஸ்டு 27 இல் அய்.ஏ.எஸ். அதிகாரி - நில சீர்திருத்த ஆணையர் பெ.கோலப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு (தி.மு.க. ஆட்சியில்) நியமிக்கப்பட் டது. பலனுள்ள பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன.

திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் பெரும் பாலும் அவற்றை மய்யப்படுத்தியுள்ளன.

முப்போகம் விளைந்த கழனிகள் எல்லாம் வெறிச் சோடி கிடக்கின்றன. விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வேலை கிடைக்காத மக்கள் நகர்ப்புறங்களுக்கு நகர்கின்றனர். கடன் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் வீழ்ச்சியுற்ற விவசாயத் தொழிலை தூக்கி நிறுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

இத்தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மக்கள் ஆவார்கள். விவசாயத்தைத் தவிர வேறு தொழிலை அறியாதவர்கள்.

அரசு என்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜீவாதார தொழில்மீதும், அதில் ஈடுபடும் மக்கள் மீதும் தானே அக்கறை செலுத்தவேண்டும்.

மத்தியில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இத்துறை யில் அதன் கவனம் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை; குஜராத்தைப் பொறுத்தவரை மோடி ஆட்சியில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டனர் என்பதுதான் உண்மை.

மாநில அளவில் வளர்ச்சி வளர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கலாம். ஆனால், 123 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஏமாற்றிட முடியாது.

எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/81106.html#ixzz333wlmd5o

தமிழ் ஓவியா said...

அமைச்சராவதற்குத் தனித்தகுதி

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மதக் கலவரம் நடைபெற்றது. அந்தக் கலவரத்திற்குக் காரண மாக இருந்தவர் என்பதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். தடை உத்தரவை மீறி ஜாதிக் கூட்டத்தை நடத்தியதுதான் காரணம். ஒரு மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார். கால்நடை மருத்து வரான இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் பி.ஜே.பி.யில் இணைந்தார்.

சரி, இவருக்கு இப்பொழுது என்ன? ஒன்றும் இல்லை, மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. இவர் பெயர் பல்யான் ஜாத்.

பெயரிலேயே இவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர் என்பது ஒட்டி நிற்கிறது.

மோடி அமைச்சரவையில் இதுபோன்றவர்கள் அமைச்சராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், பி.ஜே.பி. அமைச்சரவை யில் இடம்பெற இதுபோன்ற மதம் மற்றும் ஜாதிக் கலவரக் கதாநாயகர்கள் கூடுதல் தகுதி பெற்றவர்களே!

Read more: http://viduthalai.in/e-paper/81092.html#ixzz333xvAEZR

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த முத்து

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன். 2020 இல் முக்கிய நிறுவனங்களில் மேலாண்மைப் பொறுப்புகளில் 30 சதவிகிதம் பெண்கள் இருப்பார்கள்.

- ஜப்பான் பிரதமர் ஷின்சோஅபே

பொத்தானை அழுத்துவாராம்

பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானை நம்பக்கூடாது; ஆனாலும், மோடிமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாகிஸ்தான் வழிக்கு வராவிட்டால், அணுகுண்டு பொத்தானை பிரதமர் மோடி அழுத்துவார். - உத்தவ்தாக்கரே, தலைவர், சிவசேனா

(பாகிஸ்தானிலும் பொத்தான் உண்டு என்பது இவர்களுக்குத் தெரியாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/81101.html#ixzz333yEVdWY

தமிழ் ஓவியா said...


சோவிடம் நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்


உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திரு சோ ராமசாமி அவர்கள் என்ற செய்தியைப் படித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருவாரூரிலிருந்து (26.5.2014) தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு சோவிடம் உடல்நலம்பற்றி விசாரித்தார்.

உடல்நலம் பெற்று விரைவில் திரும்பிட வாழ்த்து களைத் தெரிவித்துக்கொண்டார்.

வேறொரு மருத்துவமனையிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு இப்பொழுது மாற்றப்பட்டுள்ளார் சோ.

Read more: http://viduthalai.in/e-paper/81152.html#ixzz339ZSBT8u

தமிழ் ஓவியா said...

எங்கள் பிள்ளைகளும் சாதிப்பார்கள்!

தமிழ்நாடு முழுவதும் விசைத் தறிகளில் குழந் தைத் தொழிலாளர்களாக இருந்த 840 மாணவ - மாணவிகள் சிறப்புப் பள்ளி களில் சேர்க்கப்பட்டு, கல்வி வாய்ப்பு அளிக்கப் பட்டது. இதில் 795 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றனர். இவர் களில் 24 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற் றனர். 490 மதிப்பெண் பெற்ற அகிலாவின் பெற் றோர் இன்னும் விசைத் தறியில்தான் வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

எங்கள் பிள்ளைக ளுக்குச் சரியான வாய்ப்புக் கொடுத்தால், சாதித்துக் காட்டுவார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Za7uD8

தமிழ் ஓவியா said...

புரோகிதராக மாறிய அமைச்சர்

நாகப்பட்டினத்தில், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் - காட்பாடி கிளைக்கு 1700 சதுர அடியில் 54 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.

பூமி பூஜை என்று வந்து விட்டால் புரோகிதர் வேண் டாமா? ஏற்பாடு செய்திருந்த புரோகிதர் வரவில்லையாம்.

புரோகிதர் வரவில்லை யென்றால் அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமைச்சர் போதாதா?

மீன்வளத் துறை அமைச் சர் ஜெயபாலே அந்தப் புரோகித வேலைகளைக் கவனித்தாராம்.
அந்த நேரத்திலே அ.இ. அ.தி.மு.க. பிரமுகர் சொன் னதுதான் நல்ல தமாஷ்!

தி.மு.க. ஆட்சி என்றால் புரோகிதருக்கு வேலை இல்லை. அ.தி.மு.க. என்றால் எல்லா சடங்குகளும் உண்டு என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந் திருக்கவேண்டாமா? என்று நச்சென்று ஒரு கடி கடித் தாராம்.

கட்சிகளை விட்டுத் தள்ளுங்கள் - அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது - எந்தவித மதச் சடங்குகளுக்கும் அங்கு இடம் இல்லை என்று அமைச்சருக்குத் தெரிந் திருக்கவேண்டாமா?

அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், ஆட்சியிலும் வைத்துக் கொண்டுள்ளவர்கள் மூட நம்பிக்கைகளின் மூட்டை களாக இருக்கிறார்களே!

(வாழ்க அண்ணா நாமம்!)

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339ZgIzsv

தமிழ் ஓவியா said...

குளிர்காய்வது
யார்?

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதி பர் ராஜபக்சேவை அழைத்த விவகாரத்தில் தமிழ் மக்க ளின் உணர்வுகளைத் தூண் டிவிட்டு சில அரசியல் கட்சிகள் குளிர்காய நினைக்கின்றன. - பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பி.ஜே.பி. தலைவர், மத்திய அமைச்சர்

எந்த அரசியல் கட்சிகள் இவை? பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த ம.தி.மு.க., பா.ம.க.வையும் குளிர்காயும் பட்டியலில் சேர்த்து விட்டாரே பொன்.ராதாகிருஷ்ணன்?

தேர்தல் முடிந்த கையோடு பி.ஜே.பி.யோடு இணைய ஆசைப்படுபவர்கள் தாராளமாக இணை யலாம் என்றார் - இப் பொழுதோ இப்படிக் கூறுகிறார் - பாவம் கூட்டணிக் கட்சிகள்!

Read more: http://viduthalai.in/e-paper/81150.html#ixzz339Zlrdlo

தமிழ் ஓவியா said...


ஆனந்தமூர்த்திகளை மிரட்டுவதா?


16 ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை அமைத் தாகிவிட்டது. யார் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மோடி பிரதமர் என்பது நிதர்சனம்.

தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் நடை பெற்ற உரையாடல்கள், எதிர்விவாதங்கள் அடிப் படையில் பழி வாங்குவது என்று ஆரம்பித்தால், நாடு நாடாக இருக்காது - காடாகத்தான் மாறும். அது ஆளும் நிலையில் இருக்கும், பி.ஜே.பி.க்குத் தான் தலைவலியாகும்.

கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி. சாகித்ய அகாடமி விருது பெற்ற வரும்கூட. தேர்தலுக்கு முன்னதாக ஒரு கருத்தினை வெளியிட்டதுண்டு.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வரும் பட்சத்தில் நாட்டை விட்டே நான் வெளியேறி விடுவேன். குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் நரேந்திர மோடி. காந்தி, நேரு போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற இந்திய நாட்டை மோடி ரத்தப் பூமியாக மாற்றி விடுவார் என்று அவர் கருத்துக் கூறியது உண்மைதான்.

ஆனந்தமூர்த்தி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென், இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்கள்கூட மோடி பிரதமருக்குத் தகுதியானவர் அல்லர் என்று கூறியதுண்டு.

இவர்களால் கூறப்பட்ட சொற்களில் வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், அடிப்படையில் வேறு பாடுகள் ஏதும் இல்லை.

தேர்தல் முடிவு மோடிக்கு சாதகமாக வந்துவிட்ட தால், கருநாடக மாநிலத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் நமோ அமைப்பினர் எழுத்தாளர் ஆனந்தமூர்த்திக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனந்தமூர்த்தி பாகிஸ்தான் செல்லுவதற்கு விமான டிக்கெட் எடுத்தும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மின்னஞ்சல் வாயிலாகவும், தொலைப்பேசிகள் வாயிலாகவும் அவரை அச்சுறுத்தியும் வருகின்றனர். ஆனந்தமூர்த்தி இந்தியாவைவிட்டு வெளியேறா விட்டால், உலகத்தைவிட்டே வெளியேற்றுவோம் என்கிற அளவுக்குக் கொலை மிரட்டல்களை விட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக ஆனந்தமூர்த்தியின் இல்லத் திற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவேகவுடாவுக்கும் மிரட்டல் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

நரேந்திர மோடி பிரதமரானால் அரசியலை விட்டே விலகுவேன் என்று தேவேகவுடா கூறிவிட்டாராம். எப்பொழுது விலகப் போகிறீர்கள்? என்று மிரட்டல்கள் பி.ஜே.பி. வட்டாரத்திலிருந்து.

இந்தி நடிகர் கமால் ஆர்கான் மோடி பிரத மரானால், டுவிட்டரிலிருந்து மட்டுமல்ல, இந்தி யாவை விட்டே வெளியேறுவேன் என்று சொன்னபடி வெளியேறியும் விட்டார்.

ஆர்.எஸ்.எஸ்.பற்றி இந்து ஏட்டில் எழுதிய வித்யா சுப்பிரமணியத்திற்கு சில மாதங்களுக்குமுன் கொலை மிரட்டல் வந்ததையும் இத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இந்தியா முழுமையும் ஊடகங்களில் பணி யாற்றிய பி.ஜே.பி. மதவாத நஞ்சுக்கு எதிர்ப் பானவர்களையெல்லாம் எல்லா வகைகளிலும் நெருக்கடி கொடுத்து வெளியேற்றியதையும் கவனத்தில் கொண்டால், பாசிஸ்டுகள் இப்படித்தானே வரலாற்றில் பல பகுதிகளில் நடந்துகொண்டுள்ளனர் என்ற நினைவு வராமல் போகாது.

பி.ஜே.பி.யின் இந்த அநாகரிக செயல்பாடுகள் குறித்து பெரிய அளவில் யாரும் வாய்த் திறக்க வில்லை என்பது, நாகரிக உலகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா என்ற வினாவை எழுப்புகின்றது.

அதிகாரம் என்பது ஆபத்தான கருவி. அதனை லாவகமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதற்கு இதற்கு முன்னதாக எத்தனையோ எடுத்துக்காட்டுகளும் உண்டு.

அதுவும் ஆளும் கட்சியாகிவிட்டால், கம்பியின் மீது கண்ணாடிப் பேழையைக் கையில் ஏந்தி நடப்பதற்கு ஒப்பானதாகும்.

இன்றைக்கு ஏதோ சில காரணங்களுக்காக நிலை கெட்டு குடை சாய்ந்து எழுதும் ஏடுகள், எழுத் தாளர்கள்கூட பேனாவை எதிர்த் திசையில் பிடிக்க வெகுகாலம் ஆகாது.
அடக்கமாக இருக்கும் வரையில் நல்லது - பாதுகாப்பானதும்கூட!

Read more: http://viduthalai.in/page-2/81175.html#ixzz339a656KZ

தமிழ் ஓவியா said...


சேவை


சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. - (குடிஅரசு, 17.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/81172.html#ixzz339aSQhqV

தமிழ் ஓவியா said...


ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!


தேர்தல் பிரச்சாரத்தின்போது, அக மதாபாத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஹர்தாய் போன்ற இடங்களில் உரை யாற்றும்போது, இன்றைய பிரதமர் மோடி, ஒரு கருத்தை ஆவேசமாகக் கூறினார். கிரிமினல்கள் இப்போது அரசியலில் நுழைவதைப்பற்றி விவாதங்கள் நடை பெறுகின்றன. என்னிடம் அதற்கான நிவார ணம் உள்ளது;

நான் இந்திய அரசியலை தூய் மைப்படுத்த உறுதி பூண்டுள்ளேன். மக்களா கிய உங்களது ஆதரவுவேண்டும் என மோடி பேசினார்.

அத்துடன் அவர் தனது பேச்சை நிறுத்திக் கொள்ளவில்லை; மேலும் பேசினார். உச்ச நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டு, இந்த வழக்குகள் ஒரு ஆண் டிற்குள் முடிக்கப்படும்; அனைத்துக் கிரிமினல் களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். என்னுடைய பாஜகவினர் உட்பட யாரையும் தண்டிக்க நான் தயங்கமாட்டேன் என பேசி னார். இது சென்ற மாதம் ஏப்ரல் 15 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சு.

இப்போது, மே 26, இந்திய நாட்டின் 15 ஆவது பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும், 45 அமைச்சர்கள், காபி னெட் அமைச்சர்களாக, இணை அமைச்சர் களாக பதவி ஏற்றுள்ளனர்.

இந்த அமைச்சர்களில் 13 அமைச்சர்கள் மீது, கொலை முயற்சி, ஆட்கடத்தல், சமூகத் தில் பதற்றம் ஏற்படுத்தியது என கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் கலவரத் தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சீவ் பலி யானுக்கு, மோடி அரசில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் தொடர்ந்து பாஜகவால் முடக்கப்பட்ட நிலையில், முந்தைய காங்கிரசு அரசு, உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அவசர சட்டம் மூலம் நிறைவேற்றிட முயற்சித்த போது, இதே பாஜகவினர், மோடி உள்பட, நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது காங்கிரசு என ஒப்பாரி வைத்தனர். அதே மோடி, இன்றைக்கு என்ன செய்கிறார்? தனது முதன்மைச் செயலாளராக தொலைத் தொடர்பு கட்டுப்பாடு வாரியம் என அழைக் கப்படும் டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை நியமனம் செய்கிறார். இதில் என்ன தவறு என கேட்க லாம். டிராய் விதிப்படி, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற பின், மத்திய அரசு, மாநில அரசுகளில் எந்தப் பணியும் செய்யக்கூடாது. தனியார் நிறுவனங் களில் பணியாற்ற வேண்டும் என் றால், ஓய்வு பெற்ற தேதியில் இருந்து, இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேர லாம் என டிராய் சட்டத்தின் விதி 5(8) கூறுகிறது.

ஆனால், மோடி என்ன செய்தார்? இந்த விதியை பதவி ஏற்ற ஒரே நாளில், அவசர சட்டம் மூலம் மாற்றி விட்டார். இந்தச் சட்டத்தின்படி, மத்திய அரசு அனுமதி பெற்று, எந்த பதவிக்கும் செல்லலாம் என சட்டம் இயற்றி விட்டார். அப்படி என்ன அவசரம்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை; நாடாளுமன்றம் ஜூன் 4 ஆம் தேதி கூடும் என சொல்லப்படு கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக, அவசரம் அவசரமாக, இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுதான் மோடி மாடல்; குஜராத் மாடல்.

நாடாளுமன்றத்தில், பாஜகவிற்கு, மிருக பலம் இருந்தும், நாடாளுமன்ற ஜனநாய கத்தை குப்பையில் வீசிவிட்டு, அவசர சட்டம் மூலம், தனக்கு வேண்டியதை செய்யக்கூடிய இந்த மோடி என்கிற நமது பிரதமர் தான், உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்கு, அவசர சட்டம் கொண்டு வரலாமா? என கேள்வி கேட்டவர்.

கிரிமினல்களை அரசியலில் ஒழிப்பேன் என சொன்னவர், தனது அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேரை அமைச்சர்களாக சேர்த்துள்ளார்.

இவையெல்லாம், மோடிக்கும், பாஜக வினர்க்கும், அவரது அணியில் உள்ளவர் களுக்கும், அவர்களுக்கு வாக்களித்தவர் களுக்கும் ஞாபகம் வருகிறதோ இல்லையோ, நமக்கு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/81181.html#ixzz339aaQnDg

தமிழ் ஓவியா said...

இட ஒதுக்கீடு - 370 ஆவது பிரிவுகள் குறித்து பி.ஜே.பி. அமைச்சர்களின் கருத்துகள்

நீக்கிப் பாருங்கள் - அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிவீர்கள்!

கனல் கக்குகிறார் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

புதுடில்லி, மே 29- சிறுபான்மையினருக்கான இட ஒதுக் கீடு காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கிடும் அரச மைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவு நீக்கம் குறித்து மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிராக கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப் துல்லா கூறியதற்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நஜ்மா, முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்றும் பார்சிகள்தான் சிறுபான்மையினர் எனவும் கூறி இருந்தார். இதைக் கண்டித்து, வட இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கருத்து கூறினர்.

உ.பி.யில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத் தின் இறையியல் துறை பேராசிரியர் முப்தி ஜாஹீத்கான் கூறியதாவது:

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்பது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. ஆந்திர மாநில அரசு மீது டி.எம்.ஏ.பாய் தொடுத்த வழக்கை 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அதில், மாநில வாரியாக எடுக்கப்படும் கணக்கில் 15 சதவீதத் துக்கும் கீழ் உள்ளவர்கள் சிறுபான்மையினர்களாகக் கருதப்படுவார்கள் எனத் தீர்ப்பளித்தனர்.

தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்படி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும் சிறுபான்மையினர் ஆவர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் நம் நாட்டின் ஆறு மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர். எனவே நஜ்மா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை அமல் படுத்த முயற்சிக்கிறார். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் புறம்பானது. நஜ்மா தனது கருத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இணை அமைச்சர் கருத்து

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், டில்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்படுகிற கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் சிலர், இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 குறித்த எங்கள் (ரத்து செய்வது) நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டனர்.

இதன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிப்பதற்கு மத்திய அரசு தயார். காஷ்மீரில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்போம். இதன் மூலம் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களையும், ஏற்றுக்கொள்ளச்செய்வோம் எனக் கூறினார்.

காஷ்மீர் முதல்வர் கொந்தளிப்பு!

சிறீநகரில் நேற்று காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் எங்களுக்கே உரியது. அரசியல் நிர்ணய சபையைக் கூட்டாத வரையில், அவர்களால் (மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு) அரசியல் சாசனத்தின் பிரிவு 370-அய் நீக்க முடியாது. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைத்துக்கொள்ள அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் வழங்கி யுள்ளது. நீங்கள் மீண்டும் இந்தப் பிரச்சினையை (370-ஆவது பிரிவை நீக்குவது) எழுப்பினால், நீங்கள் அரசியல் நிர்ணய சபையை கூட்ட வேண்டும். அதன்பிறகு நாங்கள் பேசுவோம்.

பாகிஸ்தான் தரப்பு காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத்தான் இப்படி கூறுகிறார்.) இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பாரதீய ஜனதா எப்போதும் கூறி வந்துள்ளது. அங்கிருந்தும், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். ஆனால் இது கொஞ்சம் கூட சாத்தியம் இல்லாத விஷயம். யார் அரசியல் நிர்ணய சபையை கூட்டுவது?

தமிழ் ஓவியா said...


காஷ்மீர் மாநில அரசுடனான தனது உறவை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும். ஆனால் இத்தகைய செயல்பாடு, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் மத்திய அரசை அன்னியப்படுத்தி விடும். நீங்கள் மாநில அரசுடனான உறவை வலுப்படுத்த இது சரியான வழி அல்ல.

இது மாநில மக்களுக்கும், நாட்டின் எஞ்சிய பகுதி மக்களுக்கும் இடையேயான இடைவெளியை

அதிகரித்துவிடும். பாரதீய ஜனதாவின் அரசியல் நிர்ப்பந்தம் எனக்கு புரிகிறது. ஆனால் முதலில் பிற வாக்குறுதிகளில் கவனம் செலுத்துங்கள். மாநில பொருள் சட்டம் தொடர்பாகவும், அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு பற்றியும் வேண்டுமென்றே குழப்பம் உருவாக் கப்படுகிறது.

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு வருமுன், பணக்கார பஞ்சாபியர்கள் இங்கு வந்து நிலங்களை வாங்கி விடுவார்கள் என்று மக்கள் பயந்தார்கள். மக்களை காப்பாற்றுவதற்காக மாநில சட்டங்களை இங்கே மகாராஜா அமல்படுத்தினார்.

இன்றைக்கு எங்களது மாநில சட்டங்களுடன் விளையாடினீர்களேயானால், அப்படியொரு நிலை வந்தால், காஷ்மீருக்கு யாரும் வரமாட்டார்கள்.

370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசத் தொடங்கி உள்ளதாக கூறி இருக்கிறீர்கள். நானும் சம்பந்தப்பட்டவன்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக உள்ளேன். எங்கள் கட்சியில் இருந்து யாரும் உங்களுடன் பேசவில்லை. எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சு நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. பிறகு யாருடன் பேசினீர்கள்?

அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்கிப் பாருங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொன் றையும் உங்களுக்கு கூறிக்கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் செய்யுங்கள். அதன் பின் பாருங்கள்.இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

ஆரம்பித்துவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் ராம் மாதவ் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்காதா? 370 இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜம்மு- காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங் கிணைந்த பகுதியாகத்தான் இருக்கும். ஜம்மு-காஷ்மீர் என்ன, தன் பெற்றோரின் சொத்து என முதலமைச்சர் உமர் அப்துல்லா நினைத்து விட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கருத்து

இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி நேற்று கருத்து தெரிவிக்கையில், அரசியல் சாசனப் பிரிவு 370 (3) உடன் இணைந்த பிரிவு 370 (2), அரசியல் நிர்ணய சபையின் (தற்போது இது இல்லை) ஒப்புதல் இன்றி, பிரிவு 370-அய் நீக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது என கூறினார்.

காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் பொறுப் பையும் நேற்று ஏற்றுக்கொண்டார். அப்போது வந்திருந்த செய்தியாளர்கள், அரசியல் சாசனப் பிரிவு 370 விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்திருப்பது பற்றி கேள்விகள் எழுப்பினர்.

ஆனால், அவர் பதில் அளிப்பதை தவிர்த்து விட்டார். இங்கே அறிவியல் மணம் கமழ்கிறது. அறிவியல் பற்றித்தான் இங்கே பேசமுடியும். வேறு எதைப் பற்றியும் பேச முடியாது என அவர் கூறி விட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/81149.html#ixzz339bYFmaL

தமிழ் ஓவியா said...


பூமியின் நிலத்தோற்றம் மாறுகிறதா? ஏன்? எப்படி?


பூமியின் நிலத்தோற்றம் மாற்றமடைய சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற செயற்கை காரணங்கள் பல உண்டு. அவை மனிதனாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை தாண்டி பூமியின் நிலத்தோற்றத்தை பெரிதும் மாற்றி யமைப்பது நதிகளே.

தேவைக்கு அதிகமான தண்ணீரை நிலத்திலிருந்து கடலுக்கு கொண்டு செல்வது மட்டுமா நதியின் வேலை? ஒரு நிலத்தோற்றத்தை காலப்போக்கில் அரித்து தின்னும் ஆற்றலும் நதிக்கு உண்டு. அல்லது வண்டி வண்டியாக வீழ்படிவுகளை கொண்டுவந்து அந்த நிலத்தின் தோற்றத்தை அடியோடு மாற்றியமைக்கும் வல்லமையும் உண்டு.

உலகில் எல்லா பகுதிகளிலும் காணப்படும் நதிதான், இயற்கையின் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருக்கும் மற்ற குத்தகைதாரர்களை விட வேகமாகவும், வீரியமாகவும் செயல்படக்கூடியது. போட்டு வைத்த திட்டத்தை நிறை வேற்றாமல் இதற்கு தூக்கமே வராது.

எல்லா நதிகளுமே தன் சக்திக்கேற்ப பள்ளத்தாக்கு தோண்டுகின்றன. அந்த பள்ளத்தாக்குக்கு உள்ளே அரிப்பதும், சேர்ப்பதுமாக ஜனநாயக கடமையை ஆற்றிக்கொண்டே இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81185.html#ixzz339cVSqYG

தமிழ் ஓவியா said...

இள ரத்தம் பாய்ச்சி மூப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்

மூப்படைவதால் உடலில் ஏற்படும் தாக்கங்களை எதிர்காலத்திலே ஒரு நாள் நம்மால் கட்டுப்படுத்திட முடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மூப்பான சுண்டெலிகளுக்கு இளம் சுண்டெலிகளின் ரத்தத்தை செலுத்தி ஆய்வுகளை நடத்திய நிலையில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அவ்வாறாக ரத்தம் செலுத்தப்பட்ட வயோதிக சுண்டெலிகளின் மூளைத் திறனும் செயற்பாடுகளும் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இயற்கையான ரசாயனங்களின் பலனால் மூப்படைந்தவர்களின் மூளையிலும் புதிய உயிர்க்கலங்கள் உற்பத்தியாகலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் செய்யப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மனிதர்களிடத்திலும் இனி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வை வழிநடத்திய மருத்துவர் டோனி விஸ் கோரே, நேச்சர் மெடிசின் என்ற நூலில் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/81185.html#ixzz339ccBlOV

தமிழ் ஓவியா said...


புதிய மலேரியா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி


மலேரியா நோய் தாக்காமல் இருப்பதற்கான எதிர்ப்பு சக்தியை உடலில் இயற்கையாகவே பெற்றுள்ள தான்சானியப் பிள்ளைகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்க்கு புதிய தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.

மலேரியாவை உண்டாக்கும் கிருமியைத் தாக்கி அழிக்கக் கூடிய இரசாயனங்கள் இவர்களது உடலில் உற்பத்தி ஆகின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இவ்வகை இரசாயனங்களை எலிகளுக்கு செலுத்தியபோது அந்த எலிகளின் உடலிலும் மலேரியா நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளது என தம் பரிசோதனைகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பரிசோதனையை குரங்குகளிடத்தும் பின்னர் மனிதர்களிடத்தும் நடத்திப்பார்த்து, இதன் அடிப்படையில் மலேரியாவுக்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கண்டுபிடிக்க வேண்டும் என இந்த ஆய்வின் முடிவுகளை சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.

குறிப்பிட்ட இந்த குழந்தைகளின் உடலில் உற்பத்தி யாகும் நோய் எதிர்ப்பு இரசாயனம், மலேரியா கிருமியியை தாக்கி அந்தக் கிருமி நோயாகப் பரவாமல் தடுத்து விடுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனாலும் பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பின்னரே இந்த வழியில் ஒரு வெற்றிகரமான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியும் என பேராசிரியர் கர்டிஸ் தெரிவித்துள்ளார்.

கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் உருவாகிக்கி யுள்ள, தடுப்பு மருந்துதான் இதுவரையில் கண்டுபிடிக் கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்தில் அதிகம் பலன் தந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. இவ்வகையான தடுப்பு மருந்துகள் இருந்தும், மலேரியா என்பது தொடர்ந்தும் நிறைய பேரைக் கொல்லும் நோயாக இருந்துவருகிறது.

2012ஆம் ஆண்டு ஆறு லட்சம் பேருக்கும் அதிக மானோர் மலேரியாவால் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன. இதில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் சகாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81190.html#ixzz339d3yVLM

தமிழ் ஓவியா said...

நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?

அவை பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சிறு புள்ளிகளாக கறுத்த வானத்தில் தெரிகிறது. அவற்றில் இருந்து வெளிப்படும் ஒளியில் ஒரு பகுதி பூமியை சுற்றியுள்ள காற்று உள்வாங்கிகொள்வதால் நட்சத்திரம் மின்னுகிறது.

Read more: http://viduthalai.in/page-7/81190.html#ixzz339dGICPD