Search This Blog

11.5.14

சாதியைக் காப்பாற்றியது காந்தியே!-பெரியார்சாதி ஒழிய வேண்டுமென்பது இப்போது ஒரு 'பேஷன்' (நாகரிகம்) ஆகிவிட்டது. நேரு கூட வாய்ப் பறையடிப்பார் சாதி ஒழிய வேணும் என்று! ஆனால் காரியத்தில் நம்மை ஒழிக்கவே பாடுபடுகிறார். ஏனென்றால் அவர் ஒரு காஷ்மீர்ப் பார்ப்பான். அவன் உடம்பில் வடகயிறு போன்ற பூணூல் இருக்கிறது! ஏன் இந்த தமிழ்நாட்டு மந்திரிகளும் கூடத்தான் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நேரு சொல்லும் நிலைவேறு; காமராசர் சொல்லும் நிலைவேறு. காமராசர் நாடார்! அதாவது கீழ் சாதி ஆனதால் வெட்கப்பட்டுக் கொண்டு சாதி ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவர் தமிழ்நாடு முதன் மந்திரியாய் இருக்கும் வரையில்தான் மரியாதை நாளைக்கு மந்திரி பதவியிலிருந்து இறங்கினால் சாதாரண நாடார் தானே? இப்படியிருக்கும் போது சாதி ஒழிய வேண்டும் என்று தானே நினைப்பார்?

காந்தி இல்லாதிருந்தால் சாதியே ஒழிந்திருக்கும்; காந்திதான் பறையன் பறையனாகவே இருக்க வேண்டும் என்று கருதித்தான் "ஹரிஜனம்" என்று புதுப் பெயர் கொடுத்து அந்தக் கீழ்நிலையிலேயே இருக்கப் பாடுபட்டார். நான் தான் இந்தியாவிலேயே காங்கிரசில் இருக்கும் போதே காந்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனிக்கோயில், தனிக்கிணறு என்பன கூடாது என்று சொன்னேன். காந்தியால் தான் இந்நாட்டில் சாதி பாதுகாக்கப்பட்டது.


ஆகவே சாதி ஒழிப்புக்கு ஆக எல்லாவகையான முயற்சிகளையும் செய்துவிட்டு, அதிலும் முடியவில்லையானால் காந்தி படத்தை எரிப்போம்; சிலையை உடைப்போம்; சாதிக்கு ஆதாரமாக இருக்கும் கடவுளையே - பிள்ளையாரையே உடைத்தோம். இராமனையே எரித்தோம் என்றால் இந்த அன்னக்காவடி காந்தி அதைவிட பெரிதா? என்று கூறி கடவுள்களின் பித்தலாட்டங்களை விளக்கிப் பேசியும், சிறையில் கழகத்தோழர்களை டாக்டர்கள் கொடுமைப்படுத்தி சாகடிக்கும் பழி வாங்கும் தன்மையைக் கண்டித்தும், ஜனநாயக பித்தலாட்டங்களை விளக்கியும், வடநாட்டின் பிடியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ்நாடு பெறவேண்டிய அவசியத்தைப் பற்றி விளக்கியும், அடுத்து துவங்க இருக்கும் இந்தியாவின் படஎரிப்புக் கிளர்ச்சியை விளக்கியும் 2-மணி நேரம் பேசினார்கள்.

------------------------------- 25.09.1958-அன்று பரமக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: "விடுதலை", 09.10.1958

25 comments:

தமிழ் ஓவியா said...


அவசியம்

கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும். - (விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80033.html#ixzz31MgHlWwK

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவின் தீர்மானங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதிராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (9.5.2014) முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இரண்டாவது தீர்மானம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதாகும். இதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக, கழகத்தின் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒன்று மிகவும் முக்கியமானது.

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு - அதற்கு மாறாக கேரள மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியதை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் தலையிடும் செயல் என்றும் கேரளாவின் தலையில் மிக அழுத்தமாகவே குட்டியது உச்சநீதிமன்றம் இதற்குப் பிறகாவது கேரள அரசு அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் நடந்து கொள்ள முயல வேண்டாமா?

மறு சீராய்வு மனு என்றாலும் இதே உச்சநீதிமன்றத்துக்குத் தானே விண்ணப்பிக்க வேண்டும்? தொடக்கக் கட்டத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு உண்டு.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை முடக்கிடும் வகையில், இதே போன்றதொரு சட்டத்தை நிறைவேற்றி மூக்கறுபட்டதுண்டு அதற்குப் பிறகாவது கேரளா புத்திக் கொள் முதல் பெற்றிட வேண்டாமா?

உண்மை என்ன என்றால் முல்லைப் பெரியாறில் 136 அடிக்குள் தண்ணீரைத் தேக்கியதால் காலியாகவிருந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஓட்டல்களையும் கட்டடங் களையும் கேரள மக்கள் கட்டி, அவற்றை ஒரு வியாபாரத்தலமாக, வணிகப் பகுதியாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டனர். 142 அடி நீரைத் தேக்கினால் இந்தச் சட்ட விரோத கட்டுமானங்களுக்கெல்லாம் ஆபத்து வந்து சேரும்.

இன்னொரு முக்கிய காரணம் உண்டு. 1979இல் இடுக்கி அணையைக் கட்டியது கேரள அரசுக்கு மின் உற்பத்தி செய்வதே இதன் நோக்கம் ஆனால் எதிர்பார்த்த அளவு தண்ணீரைப் பெற முடியாத ஒரு சூழலில், கேரள அரசின் கண்கள் முல்லைப் பெரியாறின் மீது பாய்ந்தன. அணை பழுதாகி விட்டது என்று புரளி கிளப்பப்பட்டது.

மத்திய அரசு என்ன செய்தது? மத்திய நீர்வள ஆணையம் நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்யக் கூறியது.

அப்போதைக்கு 136 அடி தண்ணீரைத் தேக்கலாம்; அணையின் பராமரிப்புப் பணிகளுக்குப்பின் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று அறிக்கையைக் கொடுத்தது நிபுணர் குழு.

அதன் அடிப்படையில் ரூ.17 கோடி செலவு செய்து தமிழக அரசு அணையைப் பலப் படுத்தியது. அதற்குப் பிறகும்கூட கேரள அரசு அடம் பிடித்தது என்றால் - அது ஓர் அரசு என்கிற தன்மைக்குப் பொருத்த மற்றதாகவே நடந்து கொள்கிறது என்று பொருள்.

இந்தப் போக்கு நீடிக்குமேயானால் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் என்ற அமைப்பு முறையே சுத்தமாக நொறுங்கிப் போய்விடும். அதற்குப் பின் இந்தியாவும் இருக்காது. பிரிவினையை யாரும் கேட்காமலேயே பிரிவினை தானாகவே வந்துவிடும். அதைத்தான் ஒருக்கால் இந்தத் தேசியவாதிகள், கட்சிகள் விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

மூன்றாவது தீர்மானம் வேக வேகமாக தமிழ்நாட்டில் மேல் நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிடும் போக்கைப் பற்றியதாகும்.

தமிழ்நாட்டில் நிலவும் சமச்சீர்க் கல்வி முறையில் அனைவரும் தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழைக் கட்டாயம் படித்தே தீர வேண்டும். இதனைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து அந்தப் போக்கும் வேக வேகமாக நடந்து வருகிறது.

இப்படி மாறுவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இது உண்மையென்றால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் செல்லக் கூடிய அபாயம் உள்ளது.

அதனால்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதுபோலவே ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வரும் வெயிட்டேஜ் முறையை அறவே கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

+2 தேர்வைப் பொறுத்தவரை வளர்ச்சி அடையாத கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் +2 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட் டேஜ் முறை என்பது அவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்கிறபோது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தானே முக்கியம்? அதனையே முகாமைப் படுத்துமாறும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/80034.html#ixzz31MgQ5A7f

தமிழ் ஓவியா said...


குஜராத் தான் மாடல் என்றால், தமிழ்நாடு சூப்பர் மாடல்

- குடந்தை கருணா

ஜீன் டிரெட்ஜ் என்ற பொருளாதார பேராசிரியர், மோடி புளுகி வரும் குஜராத் மாடலை அம்பலப்படுத்தி உள்ளார். அவரது கட்டுரையில், இந்தியாவில் குறிப்பிடும்படியான 20 மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு வெளியிடப் பட்ட புள்ளி விவரங்களின் அடிப் படையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புள்ளிவிவரங்கள்படி, மனித வளர்ச்சி குறியீடு, குஜராத் 9-ஆவது இடம்; குழந்தைகள் ஊட்டச் சத்து, இறப்பு விகிதம், கல்வி, நோய் தடுப்பு என்ற நான்கு அளவீடுகளைக் கொண்ட குழந்தைகள், சிறுவர்கள் திறன் குறியீட்டில், குஜராத் 9-ஆவது இடம்; உணவு, வீடு, சுகாதாரம், பள்ளி, மருத்துவ வசதியை உள்ளடக்கிய வறுமையின் பல பரிணாம குறி யீட்டில் குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் நுகர்வு, வீட்டு வசதி, உடல் நலம், கல்வி, நகர்மயமாக்கல், தொடர்பு, நிதி உள்ளடக்கம் போன்ற குறியீடுகளை உள்ளடக்கிய ரகுராஜன் குழுவின் அறிக்கைப்படி, ஒட்டு மொத்த வளர்ச்சிக் குறியீட்டிலும், குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் செலவினத்தை உள்ளடக்கிய வறுமை மதிப்பீடு பற்றிய திட்டக் குழுவின் 2011-12 அறிக்கையின் படி, குஜராத் 10-ஆவது இடம்.

செயல் திறன் ஒரு பத்தாண் டுகளில் ஒரு மாநிலத்தில் எவ்வாறு முன்னேற்றம் பெற்றுள்ளது என் பதை 2000-ஆம் ஆண்டு வளர்ச்சியை ஒப்பிட்டு, அளித்த ரகுராஜன் குழு வின் அறிக்கையின்படி, குஜராத் மாநிலம் 9-ஆவது இடத்திலிருந்து, 12-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தைவிட மகாராட்டிர மாநிலம், எல்லா குறியீடுகளிலும், முன்னேறிய மாநிலமாக உள்ளது.

பின் ஏன் மகாராட்டிரா மாடல் என யாரும் குறிப்பிடுவதில்லை? குஜராத் மாடல் சிறந்தது என்று எவராவது கூறினால், தமிழ்நாடும், கேரளாவும், சூப்பர் மாடல் என அழைக்கப்படவேண்டும். பின் எவ் வாறு, குஜராத் மாடல் என மோடி யாலும், அவருக்கு சாமரம் வீசுவர் களாலும், இடைவிடாமல் சொல்லப் படுகிறது? இந்த ஒளியியல் பொய் தோற்றம், மக்களை குழப்புவதில் நரேந்திர மோடிக்கு உள்ள அசாதாரணமான திறமையும், அவருக்கு ஆதரவு தரும் சில பொருளாதார வல்லுனர்களும் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை என பேராசிரியர் ஜீன் டிரெட்ஜ் தனது கட்டுரையில் தெரி வித்து உள்ளார்.

மோடி போன்ற பொய்யுரையர்களை உணர்ந்து தான், 2000 ஆண்டு களுக்கு முன்னரே, வள்ளுவர் மெய்ப் பொருள் காண்பது அறிவு என எழுதி உள்ளார் போலும்.

Read more: http://viduthalai.in/page-2/80038.html#ixzz31MgboTqL

தமிழ் ஓவியா said...திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் 100 கோடி பேர்

குழந்தைகள் அதிகளவில் மரணமடைவதற்கு இப்பழக்கமே காரணம்!

அய்க்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல்

சென்னை, மே 10- உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளி யைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என அதிர்ச்சி தகவலை அய்.நா. வெளியிட்டுள்ளது.

எவ்வளவுதான் அறிவி யல் முன்னேறினாலும், வசதிகள் வந்தாலும் இன்ன மும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்துகின் றனர், என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித் துள்ளது.

காலரா, வயிற்றுப் போக்கு, டையோரியா, ஹெப டைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன் றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்த வெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழு வதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். அய்ந்து வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும். வருவாய் பேதங்கள் இதுபோன்ற பழக்கங்கள் தொடர்வதற் குக் காரணமாக இருக்கின் றன என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப் பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்ட மைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங் களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட் களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன என அய்.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித் துள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பல நாடுகள் இன்று அப்பழக்கத்தை கைவிட்டிருக் கின்றன.

1990களில் வியட்நாமி லும், வங்காள தேசத்திலும் மூன்றில் ஒருவர் இப்பழக் கத்தைப் பின்பற்றினர். எனி னும், தொடர்ந்த விழிப் புணர்வு நடவடிக்கை களால் 2012-இல் இப் பழக்கத்தை இந்நாடுகள் முற்றிலும் கைவிட்டிருக் கின்றன. 1990-இல் இருந் ததைவிட தற்போது திறந்த வெளியில் மலம் கழிப்ப வர்களின் எண்ணிக்கை 100 கோடியாகக் குறைந்திருக் கிறது. அந்த நூறு கோடியில் 90 சதவீதம்பேர் கிராமங் களில் வாழ்கிறார்கள்.

இன்னமும் 26 ஆப் பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் பின்பற்றப்படு கிறது. இதில் நைஜீரியா மிக மோசமாகி வருகிறது. அங்கு 1990-இல் இப்பழக் கத்தைப் பின்பற்றுபவர் கள் 23 கோடியாக இருந் தனர். ஆனால் 2012இல் 39 கோடியாக அந்த எண் ணிக்கை உயர்ந்துள்ளது என்று அய்.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

அய்.நா.வின் இந்த அறிக்கையில் இப் பழக் கத்தைப் பின்பற்றும் 60 கோடி பேருடன் முன் னிலை வகிக்கிறது இந்தியா.

இந்திய அரசு ஏழை களுக்குக் கழிப்பறை கட்டிக் கொடுக்க பல கோடிகளை செலவழித்துள்ளது. மத்தி யில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பணம் மாநிலங் களுக்குச் சென்றது. இதைச் செயல்படுத்த மாநிலங்கள் தங்களுக்கென தனி பாதையைப் பின்பற்றின. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்த்தால், அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது என்கிறார் லூயென்டிக்.

இந்தியாவில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பின்பற்றும் பெரும்பாலானவர்களிடம் கைப்பேசியும் இருக்கிறது என்பதுதான் என்கிறார் உலக சுகாதார நிறுவ னத்தைச் சேர்ந்த மீரா நீரா.

2025-க்குள் இப்பழக் கத்தை ஒழிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருப்ப தாக அய்.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80029.html#ixzz31MhVKVZG

தமிழ் ஓவியா said...


பிஞ்சுகளின் நெஞ்சையள்ளிய கவனகம் - நிகழ்ச்சி


பிஞ்சுகளின் நெஞ்சையள்ளிய கவனகம் - நிகழ்ச்சி
திருக்குறள் திலீபனுக்கு துணை வேந்தர் பாராட்டு மழை!

திருக்குறள் திலீபனுக்கு சிறப்பு

தஞ்சை, மே 10- பழகு முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர், திருக்குறள் திலீபனின் சாதனையை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம் என்று பாராட்டிப் பேசினார்.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து பழகு முகாம் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்து வருகிறது. 5.5.2014 அன்று தொடங்கி 10.5.2014 வரை நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான இந்த பழகு முகாமின் மூன்றாவது நாள் நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் ஒரு அறிமுகம்

வழக்கமான நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, காலை உணவுக்குப்பிறகு, பிஞ்சுகளுக்கு பெரியார் பற்றிய அறிமுகம் செய்து வைக்கிற வகையில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார். அதில் பெரியாரின் சிறுவயது நிகழ்வுகளை சுட்டிக்காட்டி புராண இதிகாசங்கள் அவருக்கு எப்படி அத்துபடியாயின, உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினைகளை அவருடைய நேரடி அனு பவத்தின் மூலம் அறிந்து கொண்டது. இப்படிப்பட்ட அனுப வங்களின் மூலம் எதையும், பெரியார் சிறுவயதிலேயே நுணுகி ஆராய்ந்து கேள்விக் குட்படுத்தி யதையும் சுட்டிக் காட்டிவிட்டு, ஏன் பெரியார் தேவைப்படுகிறார் என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு விடையாக, சாய்பாபாக் களையும், அவரை அம்பலப்படுத் திய பி.சி.சர்க் காரையும் பற்றிய தேவையான ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டிவிட்டு நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் சந்திர மண்டலத்திற்கு மனிதன் செல்லும் அறிவியல் மைல் கல்லை கேலி செய்ததையும் எடுத்துக்காட்டி பெரியாரின் அவசியத்தை பிஞ்சுகளின் நெஞ்சில் பதிய வைத்தார்.

முத்தாய்ப்பாக இரவு உணவின்போது விடுத்த விடுகதைக்கு விடையைக் கேட்டுப்பெற்று, பிஞ்சுகளை ஏமாற்றாமல் இன்றும் ஒரு விடுகதையை விடுத்துச் சென்றார். பிஞ்சுகளிடையே மீண்டும் விடை தேடும் படலம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி சி;யீமெண்ட் பிராய்டு அரங்கில் நடைபெற்றது.

ஒரு கோடி ஆண்டு கணக்கு... அசத்திய திருக்குறள் திலீபன்


தமிழ் ஓவியா said...

பிஞ்சுகள் அசந்து போய் தன்னை மறந்து கைதட்டி திருக்குறள் திலீபனைப் பாராட்டி மகிழ்ந்தனர். சிறுவர்கள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் இதே நிலைதான். அதாவது எண், எழுத்து, கணக்கு, பெயர், மாயக்கட்டம், வண்ணம், தொடு உணர்ச்சி, ஒலி என எட்டு வகையான செயல்களை ஒரே நேரத்தில் செய்து, அத்தனையையும் நினைவில் வைத்துக் கொண்டு சரியாக விடை கூறி அசத்தினார் திலீபன். அதைத் தொடர்ந்து, ஒரு கோடி ஆண்டு வரையிலும் பிறந்த தேதி குறிப் பிட்டால் அந்த நாளின் கிழமையைச் சொல்லி வியக்க வைத்தார்.

மேலும் திருக்குறளை எப்படிக் கேட்டாலும் எழுத்து வாரியாக தலை கீழாகக் கேட்டாலும் மிகச்சரியாகச் சொல்லி வியப்பிலாழ்த்தினார். ஒரு கோடி ஆண்டு வரையிலான பிறந்த நாளுக்கு, கிழமை சொல்லுவது இது தான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சொல்லச் சொல்ல நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பிரின்சு என்னாரெசுப் பெரியார், கணினியில் அதற்கான ஆதராங்களை உடனுக்குடன் காட்டி, திலீபனின் விடைகளுக்கு வலு சேர்த்தார்.

கணக்குப் பயிற்சி பெறும் பெரியார் பிஞ்சு

நான் தெய்வக்குழந்தையில்லை மனிதன்தான்

நிகழ்ச்சி முடிவுற்றதும் திலீபன் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார். அப்பொழுது ஒரு முக்கியமான விசயத்தை குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியில் எனது திறமையைப் பாராட்டி வியந்து நான் ஒரு தெய்வக்குழந்தை என்று குறிப்பிட்டதைச் சொல்லி நான் தெய்வக் குழந்தை இல்லை. சாதாரண மனிதன் தான் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முடியும், என்று மறுத்துச் சொன்னதைச் சொல்லி பலத்த கைதட்ட லைப் பெற்றார்.

முன்னதாக நிகழ்ச்சியைத் தொடங்கும் போதே தமிழுக்கு வணக்கத்தைச் சொல்லிவிட்டு மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்ற பெரியாரின் மகத்தான சொற்றொட ரைக் குறிப்பிட்டு தான் தொடங்கிய தன்னை ஒரு பெரியார் தொண்டன் என்றும் கம்பீரமாக சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

சர்.சி.வி. இராமன் தந்திர நிகழ்ச்சிகள்...

திருக்குறள் திலீபன் மேன்மேலும் வளர வேண்டும்

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நல்.இராமச்சந்திரன், திலீபனின் திறமைகளை பாராட்டிப் பேசினார். மேலும் அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டு பிரதிபா என்ற பெண்ணின் இதே போன்ற சாதனையை நினைவு கூர்ந்தார். ஆகவே தான் திலீபனை எண்ணி நாம் பெருமைப்படுகிறோம். அவரது திறமை மேன்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும் என்று பாராட்டி, திலீபனுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். இந்த நிகழ்ச்சி, அய்ன்ஸ்டின் அரங்கில் நடை பெற்றது. பேரா.பர்வின், சிவ.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மந்திரமல்ல தந்திரமே!

மாலை சிற்றுண்டிக்குப்பிறகு துணைத்தலைவர் கவிஞர் பிஞ்சுகளுக்கு கடவுளர் கதைகளைப் பற்றி நகைச்சுவையாக சொல்லிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சியாம், நெல்சன், கலைவாணன் ஆகியோர் இணைந்து உள்விளையாட்டரங் கில் மந்திரமா? தந்திரமா? - நிகழ்ச்சியை செய்து காட்டினர். பிஞ்சுகள் அனைவரும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு கவனித்தனர். இறுதியில் மந்திரமல்ல, அனைத்தும் தந்திரமே என்பதை செயல்முறை மூலம் விளக்கி அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் சிவ.வீரமணி, நல்.இராமச்சந்திரன், அதிரடி அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

புத்தறிவு பெற்ற பரவசத்தோடு பிஞ்சுகள் இரவு உணவை உண்டுவிட்டு தங்கள் தங்கள் கூடுகளை அடைந்து வீட்டுப் பாடத்தை எழுதிவிட்டு உறங்கச் சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/80007.html#ixzz31MiKOFwU

தமிழ் ஓவியா said...


சந்தேகம்


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தி யோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கீட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MiU6CKm

தமிழ் ஓவியா said...

சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரச்சாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா? என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் திரு. நாயக்கர், மதத்தையும், சமூகத்தையும் தூஷித்துப் பிரச்சாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லி யிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5,6 - கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகா நாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களான சுமார், 4,5 - தமிழ் சுருக் கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின் றார்கள்.

அவைகள் சர்க்கார் குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள், சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம். அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்டபிறகாவது சர்க்கார், சி.அய்.டி. ரிப்போர்ட்டுகளைப் பார்த்துப் பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக்கொன்றுமில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதிலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டிப்பிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திரு.சத்தியமூர்த்தி சாதிரிகளும் கூட, திரு.நாயக்கர் வேலூரில் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய் முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

மத விஷயம்: மதவிஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்துமதம் என்பதாக ஒன்று உண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு,. அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகியவை களே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி விதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்தமதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.

சமூக விஷயம்: சமூக விஷயங்களில் எந்த சமூகம் மற்றொரு சமூகத்தைவிட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொதுவாழ்க்கையில் மற்ற சமூகத்தைவிடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம், சமூகத்தின் சுயமரியாதைக்கு இடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லாவற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்ளுவதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் பின்வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும். நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ளவேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும். ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத்தையோ, உபயோகிக்கக் கூடாது என்பது எந்நிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31Mim9yeU

தமிழ் ஓவியா said...பழகு முகாமின் நான்காம் நாள்...

பாசம் மிகுந்த பேத்திகளே! பேரன்களே!!

உறவு சொல்லி மகிழ்ந்து, மகிழ்வித்த தமிழர் தலைவர்!

தமிழர் தலைவர் பேசாமல் பிஞ்சுகளை பேச வைத்தார்...

தஞ்சை, மே 10- திராவிடர் கழகம் ஒரு குடும்பமாக இயங்குகிறது என்ற அடிப்படையில் தமிழர் தலைவர் பழகு முகாமிற்கு வருகை தந்திருந்த பிஞ்சுகளிடம் பேசுகையில், பாசம் மிகுந்த பேரன்களே! பேத்திகளே! என்று உறவு சொல்லி அழைத்து உரையைத் தொடங்கினார்.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இணைந்து நடத்தும் பழகுமுகாம் 2014 இன் நான்காவது நாள் ஒருகூடுதல் சிறப்பைப் பெற்றிருந்தது. அந்த சிறப்பு தமிழர் தலைவர் பல்கலைக்கழக வளாகத் திற்குள் வருகை தந்திருந்தது தான்.


தமிழ் ஓவியா said...

வழக்கம் போல பிஞ்சுகள், நடைப்பயிற்சி முடிந்த பிறகு யோகா, சிலம்பம், எதோஃபிக்ஸ், கராத்தே ஆகிய பயிற்சி கனை கற்றுக் கொண்டிருந்தபோது மேற்கண்டவற்றை பார்வையிட்டவாறே தமிழர் தலைவர் துணை வேந்தர் பாண்டியன்(பிஆர்ஓ) ஆகியோர் உடன் வர நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...

மலைக்க வைத்த சரபோஜி அரண்மனை

காலை உணவு முடித்த பிறகு பிஞ்சுகளுக்கு பழகு முகாமின் சீருடை வழங்கப்பட்டது. ஏற்கெனவே கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு சுறுசுறுப்பாய் இருந்த அவர்கள் இன்னமும் அதிகமான விறுவிறுப்பாக்கி விட்டனர். அவர் களுக்கு அருகில் செல்கின்றவர்களையெல்லாம் தனது புது சீருடைகளை காட்டி, எப்படி இருக்கிறது? எப்படி இருக் கிறது? என்று கேள்வி வேறு. 8.5.2014 அன்று அவர்களின் சுறுசுறுப்புக்கு வேறொரு காரணமும் இருந்தது. வேறென்ன நீச்சல் குளம் தான் 209 பேரைக் கவனிக்க, கண்காணிக்க 30 தன்னார்வத் தொண்டர்கள் பிஎம்யு-விலிருந்து வருகை தந்திருந்த 6 பேராசிரியர்கள், உணவு கொண்டுவர 12 பேர் அவர்களுடன் 4 பணியாளர்கள், இவர்களுடன் காட்சி குழுவினர் என்று ஏறக்குறைய 60 பேர் முன்னும் பின்னும் செல்ல பெரியார் பிஞ்சுகள் ஊர்வலமாய் நடுவில் சென்றனர்.
முதலில் சரபோஜி மன்னனின் அரண்மனைக்கு சென்றது இந்த பிஞ்சுகள் படை. உள்ளே மாபெரும் கொலுமண்டபம், 400 ஆண்டுகள் வயதான 92 அடி நீளத் திமிங்கலத்தின் எலும்புக்கூட்டு சரஸ்வதி மகால் நூலகம், சரபோஜி நினைவரங்கம்... அப்பப்பா... மனித உழைப்பின் உன்னதமாக அந்த அரண்மனையின் இண்டு இடுக்கு, சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து திரும்பிய பெரியார் பிஞ்சுகள் மலைத்துப் போயினர்.

கலியாண சுந்தரமும் சிற்றுண்டி சுண்டலும்

தமிழ் ஓவியா said...

அதைத்தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி யுள்ள சிவகங்கைப் பூங்காவிற்கு அனைவரும் அழைத்து வரப்பட்டனர். ஏதோ மேலுக்கு கட்டுப்பாடுடன் இருப்பது போல எப்போ... எப்போ.. என்று காத்திருந்தனர். உரிய ஏற்பாடுகளை செய்துவிட்டு, ஆணையிட்டவுடன் நீச்சல் குளம் இரண்டுபடத் தொடங்கிவிட்டது. தயங்கியவர்களும் தானாகவே இறங்கி தண்ணீரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டனர்.

ஒரு வழியாக அனைவரையும் கரையேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. உடைமாற்றிய உடனே வயிறு கபகபவென்று பசித்தது. மதிய உணவிற்கு முன்னதாக நார்த்தங்குடி பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த கலியாண சுந்தரம் இளஞ் சூடாக அவித்த சுண்டலை தனித்தனி சிறு பைகளில் பிஞ்சுகளுக்கு அளித்து மகிழ்ந்தார். அவருடன் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் குருசெல்லமணி, கும்பகோணத்தைச் சேர்ந்த மா.சேகர் மற்றும் தமிழரசன் ஆகியோரும் இந்த அறப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து சிவகங்கைப் பூங்காவில் அமைந் துள்ள எஸ்.பெத்தண்னன் நகராட்சி கலை அரங்கில் பிஞ்சு களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிவ.வீரமணி, பேரா. பர்வின் ஆகியோர் உடனிருந்து வழிகாட்டினர்.

உள்ளத்தை கொள்ளை கொண்ட பொம்மலாட்டம்

பிஞ்சுகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட பொம்மலாட்டம்

சுற்றுலா சென்று திரும்பிய சிறிது ஓய்வுக்குப்பின் மாலை முழுவதும் விளையாடித் தீர்த்தனர். பின்னர் கலை அறப் பேரவை சார்பில் கலைவாணன் குழு நடத்திய சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்திக்காட்டப்பட்டது. அது வெறும் பொம்மலாட்டமாக இல்லாமல் ஒரு திரைப்படத் திற்குரிய சகல உத்திகளையும் பயன்படுத்திய உயிரோட்ட முள்ள காட்சிப்படமாக இருந்து, பார்ப்பவர்களை பரவசப்படுத்திவிட்டது. முக்கியமாக பெரியார் பிஞ்சுகளை ஆனந்தப்படுத்தியும் ஆரவாரப்படுத்தியும் உணர்ச்சி வயப்படுத்தியும் காட்சி களோடு ஒன்றிப்போகச் செய்துவிட்டனர். அது மட்டுமல் லாமல் மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்தும் சேர்ந்து பொம் மலாட்டத்திற்கு மேலும் மெருகு சேர்த்தது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வில் தமிழர் தலைவர், கவிஞர், போரா. தவமணி, சிவ.வீரமணி, பேரா.பர்வின், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.

பிஞ்சுகளின் அறிவுத் தாகத்திற்கு பொம்மலாட்டம் சரியான தீனி போட்டது என்றால், அடுத்து வந்த தமிழர் தலைவரின் கேள்வி பதில் வடிவிலான வகுப்பு அந்த அறிவை வெளிப்படுத்த ஒரு மேடை கொடுத்தது.

தமிழர் தலைவர் தமது உரையின் தொடக்கத்திலேயே எனது பாசம் மிகுந்த பேத்திகளே! பேரன்களே! என்று விளித்து பிஞ்சுகளின் மனதை அள்ளிவிட்டார். பிஞ்சுகளும் கைத்தட்டல்களை அள்ளிக் கொடுக்க தயங்கவில்லை. பிறகு தமிழர் தலைவர் தான் பேசாமல் பேரன்களையும், பேத்திகளையும் பேச வைத்தார்

தமிழர் தலைவர் அவர்களிடம் பெரியார் பிஞ்சு கொள்கை விவாதம்

.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அன்றில், செல்வின், பிரித்திவி, யஸ்வந்த், முக.அறிவரசி, அய்ஸ்வர்யா, கடலூர் ஆம்பல், தமிழ்மணி, கவித்தென்றல் அரக்கோணம் அறிவு மணி, செல்வபாரதி, விமல், சென்னை எழிலன் ஆகியோர் நிறைந்த சபையில் முன் எழுந்து நின்று பெரியாரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை பேசி தமிழர் தலைவரி டம் பாராட்டையும், மனம் கனிந்த பெருமிதத்தையும், வியப்பை வெளிக்காட்டும் திடீர் சிரிப்பினையும் பரிசு களாகப் பெற்றனர்.

தொடர்ந்து தமிழர் தலைவர், தந்தை பெரியாரின் வாழ்க்கையில் இடம் பெற்ற கடலூர், சிதம்பம் சம்பவங் களை பிஞ்சுகளுக்கு எடுத்துச்சொல்லி தமது உரையை நிறைவு செய்தார். அதன் பிறகு பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சூழ்ந்து கொண்டு கைகொடுப்பதும், பேசி அளவளாவியதும் அவரும் தன் பேரக்குழந்தைகளுடன் ஆனந்தத்துடன் அளவளாவியும் ஆனந்தமான காட்சிகள்.

8.5.2014 அன்றைய இரவு உணவு தமிழர் தலைவர் பிஞ்சுகளுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தார். பிஞ்சுகளும் நாளைய எதிர்பார்ப்போடு உறங்க சென்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/80008.html#ixzz31Mj1nsLA

தமிழ் ஓவியா said...


நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமியின் கொழுப்பு!


சென்னை, மே11- பாஜக பிரதமர் பதவி வேட் பாளர் நரேந்திரமோடியை பிராமணராக நியமிக் கிறேன் என்று அக்கட்சி யில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத் தப்பட்ட ஜாதியை சேர்ந்த வர் என்கிறார்; அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனதா கட் சியை கலைத்துவிட்டு சமீ பத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:' நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமி அப்பாயிண்ட் மென்ட்! எனக்கு இருக் கும் அதிகாரத்தை பயன் படுத்தி நான் நமோவை (நரேந்திரமோடி) பிராமண ராக நியமிக்கிறேன்.

அவ ருக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரைப் பின்பற் றுவோர் சிலர் பாராட்டி யும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளி யிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்ச கட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப் படுகிறது.

இதைய டுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு (?) தொடர சுப்பிர மணியசுவாமி முடிவு செய் துள்ளாராம். இது குறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள் ளார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80072.html#ixzz31SUc8wHo

தமிழ் ஓவியா said...

தேர்வில் தோல்விக்குப் பரிகாரம் தற்கொலையா?

தேர்வில் தோல்வி அடைந்த 9ஆம் வகுப்பு மாண வர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்; தன் மகன் +2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றான் என்பதற்காக தந்தை தற்கொலை என்பது போன்ற செய்திகள் வெளி வந்துள்ளன.

மதிப்பெண்கள்தான் மதிப்புக்குரியவை என்ற மன நிலையே இதற்குக் காரணம்; மதிப்பெண்களுக்கு அளவுக்கு மீறிய மதிப்புக் கொடுப்ப தால்தான் இத்தகைய பாதிப்புகள் கனமாக இருபால் மாணவர்களின் மண்டையில் மோதுகின்றன. அதுவும் 9ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்ததற்காகத் தற்கொலையாம். 14 வயது மாணவர்கள் இப்படியொரு முடிவுக்கு வருவதற்கு யார் பொறுப்பு?

பெற்றோர்களா? ஆசிரியர்களா? சக மாணவர்களா? ஒட்டு மொத்தமான சமுதாயமா? ஒவ்வொரு கல்வி நிறுவ னத்திலும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் (கவுன் சிலிங்) அமைப்பு அவசியம் என்பதைத்தான் இது எடுத் துக்காட்டுகிறது. மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தந்தையார் தற்கொலை என்பது மிகப் பெரிய அவலம்!

ஓட்டப் பந்தயத்தில் தோற்றவன் அப்பந்தயத்தில் தோற்றவனே தவிர, வாழ்க்கைக்கு உதவாதவன் ஆக மாட்டான் என்று தந்தை பெரியார் சொன்னதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகவே இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் 5 முறை தோல்வி அடைந்த நான் விடா முயற்சியால் உயர்நீதிமன்ற நீதிபதியானேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளாரே!

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVSlzZ4

தமிழ் ஓவியா said...

மீனாட்சித் திருக்கலியாணம்

அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் விழாக்கோலம் மதுரை - என்று ஒரு ஏடு 8 பத்தித் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. வைரக்கல் பதித்த தங்கத் தாலியை அம்மன் கழுத்தில் சுவாமி அணிவித்தாராம்.

இது சுத்தப் பொய், புரட்டு, பித்தலாட்டம் அல்லவா? கடவுளான சுந்தரேஸ்வரரா அணிவித்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே அணிவித்தான்! பக்தர்கள் இதுபற்றி சிந்திக்கக் கூடாதா? அர்ச்சகப் பார்ப்பான் தாங்கள் போற்றும் கடவுளச்சிக்குத் தாலி கட்டும்போது கூச்சல் போட்டுத் தடுத்து இருக்க வேண்டாமா பக்தர்கள்?

மனிதர்களுக்குள் தான் தாலி கட்டும் சமாச்சாரங்கள் என்றால், கடவுளுக்கு அது எப்படி வந்தது? யாராவது சிந்தித்தார்களா? அப்படியென்றால் மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்மீது தனது பழக்க வழக்கத்தை மனிதர்கள் திணித்து விட்டார்கள் என்பது இப்பொழுது விளங்கிடவில்லையா?

பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங் கனார் கூறியது சரிதானே?

வருஷா வருஷம் தாலி கட்ட வேண்டுமா? போன வருஷம் கட்டிய தாலியை எவன் அடித்துக் கொண்டு போனான்? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVYeIhk

தமிழ் ஓவியா said...


சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.

- (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page-2/80150.html#ixzz31e7hzoMv

தமிழ் ஓவியா said...


12000 சந்தாக்களைத் திரட்டுவீர்!


9.5.2014 அன்று தஞ்சை வல்லத்தில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று.

80ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் (ஜூன் 2) விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டுச் சந்தாக்களைத் திரட்டுவது என்று ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் பகுத்தறிவு - நாத்திக ஏடு ஒன்று 80 ஆண்டுகளாக நடைபெறுவது விடுதலையைத் தவிர, வேறு ஏதும் உண்டோ?

நாத்திக ஏடு என்று சொல்லும்பொழுது, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

இன்று ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினரின் நலம்; நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக் களின் நலம் (விடுதலை (19.2.1971) என்று குறிப்பிட்டார்.

இந்த நாத்திகத்தைத் தான் விடுதலை ஏடு நாளும் பரப்பி வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நாஸ்திகம் - ஆஸ்திகம் என்பதற்கு மற்ற மதக்காரர்கள் சொல்லும் விளக்கத் திற்கும், இந்து மதம் கூறுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

மற்ற நாடுகளில் கடவுள் மறுப்பாளர்கள் தான் நாஸ் திகர்கள்; இந்து மதத்திலோ வேத மறுப்பாளர்கள்தான் நாஸ்திகர்கள்! இதுபற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகின்றது?

வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகன் ஆகின்றான் (மனுதர்மம் அத்தியாங்கள் - 2 சுலோகம் - 11).

இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவன் ஆகிறான் (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் -11).

பிராமணன் இந்த மனு சாஸ்திரத்தை மற்ற வருணத் தாருக்கு ஓதுவிக்கக் கூடாது (மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் - 103)
இத்தகு ஒரு சமூக அமைப்பில்தான் விடுதலை தந்தை பெரியார் அவர்களின் கைவாளாகச் சுழன்று, பெரும்பான்மையான மக்களைக் கீழ்மைப்படுத்தும் சக்திகளைச் சாய்த்தது - சாய்த்தும் வருகிறது.

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் வருணாசிரம தர்மத்தை வீழ்த்துவதில் முன்னணிப் படையாக இருக்கிறது.

மூடநம்பிக்கை எதிர்ப்புப் போரில் தீயாகச் சுட்டு எரித்திருக்கிறது. சமூக நீதிக் களத்தில் விடுதலை வீரன் கண்ட வெற்றியின் வீச்சு - இந்தியத் துணைக் கண்டத் தின் சகல பகுதிகளிலும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. பெண்ணடிமையை வீழ்த்துவதில் பீரங்கியாகச் செயல்பட்டிருக்கிறது. அதன் விளைச்சலை நாடெங்கும் காண முடிகிறது.

அரசியல் களத்திலும் கூட தீய சக்திகளை அடையாளப்படுத்திக் காட்டுவதிலும் விடுதலைக்குத் தனியிடம் உண்டு. மதவெறி மாய்த்து மனிதநேயம் காத்ததில் மகத்தான பங்களிப்பு விடுதலைக்கு உண்டு.

தமிழர்கள் பெற்றிருக்கும் பல்வேறு வகையான உரிமைகளுக்கும் விடுதலை அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

அதனால்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலையே என்று அர்த்தமுள்ள வரிகளைச் சொன்னார்.

நம்மைக் கீழ்மைப்படுத்தும் - சமூக நீதிக்குக் குழி வெட்டும் ஏடுகளைத் தமிழன் தீண்டலாமா? தமிழர் உரிமைக்காக நாளும் குரல் கொடுக்கும் விடுதலையை வாங்காமல்தான் இருக்கலாமா?

விடுதலை வளர்ச்சிக்காக விடுதலையை வாங்கச் சொல்லவில்லை; தமிழர்கள் நலன்களுக்காகத்தான் விடுதலையை வளர்ச்சியை அடையச் செய்ய வேண்டும்.

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததில் விடுதலையின் பங்களிப்புச் சாதாரணமானதா? அன்றைக்கு ஆச்சாரியார் திணித்த அந்த குலக் கல்வித் திட்டத்தைப் போராடி ஒழிக்கவில்லையென்றால் தமிழர்கள் வாழ்வில் கல்வி ஒளி படர்ந்திருக்குமா?

சென்னைப் பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20.11.2010) உரையாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450; சதவீத அடிப்படையில் 89 என்று கூறியதை நினைவு கொண்டால் இந்த நிலையை எட்டிப் பிடிக்க தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் இயக்கம் எப்படி எல்லாம் பாடுபட்டது? அதற்குப் போர் வாளாக விடுதலை நாளேடு எப்படியெல்லாம் சுழன்றது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்குப் பல வகைகளிலும் மதவாத இருள் சூழ்ந்து நிற்கிறது - மீண்டும் மனு தர்மத்தைக் குடியமர்த்த, கொடி ஏற்ற மும்முரமாக எழுந்து நிற்கிறது. இத்தகு கால கட்டத்தில் விடுதலை தமிழர்களின் வீட்டுக்கு வீடு ஒளிர வேண்டாமா?

எனவே தமிழர்களே, உங்களை நாடி வரும் திராவிடர் கழகத் தோழர்களிடத்தில் தாராளமாக விடுதலை ஆண்டுச் சந்தாக்களை வழங்குவீர்! அதன் மூலம் உங்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவீர்!

தமிழர் விடுதலைக்கு விடுதலை தேவை!

கழக மாவட்டத்துக்கு 200 விடுதலை ஆண்டு சந்தாக்கள் என்பது எளிதான இலக்கே! ஒரு மூச்சுப் பிடி யுங்கள் - உங்கள் இலக்கை எளிதில் எட்டி விடலாமே!

Read more: http://viduthalai.in/page-2/80151.html#ixzz31e7pe1A7

தமிழ் ஓவியா said...


பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே! - தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை


பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும், அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே - எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே! எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014

Read more: http://viduthalai.in/page-8/80149.html#ixzz31e8udRp7

தமிழ் ஓவியா said...


மதிமுக நிர்வாகியின் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி


முக நூலில் சரவணப்பெருமாள் தெரிவித்துள்ள செய்தி:

வைகோ அவர்களே உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் - பாஜக வுடன் கூட்டணி வைக்கும் முன்பே - உங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஆர்.எஸ்.எஸ்.யில் அய்க்கியமாகி - ஆர்.எஸ்.எஸ் இளைஞர் கோடை முகாம் நடத்தி கொண்டு இருக்கின்றனர் !

உடுமலை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கெடி மேடு என்ற இடத்தில் "சீலக்காம்பட்டி தம்பு என்பவர் - ஆர் எஸ் எஸ் அமைப்பின் உதவியுடன்" விஸ்வ நேத்ரா என்ற பெரிய பள்ளியை நடத்தி வருகிறார்.

சீலக்கம்பட்டி தம்பு - மதிமுகவின் முக்கிய தலைவர் - சீலக்கம்பட்டி பஞ்சாயத்தின் தலைவர். கடந்த 20 நாட்களாக மேற்கண்ட பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் இளைஞர் களுக்கு - பயிற்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.

Read more: http://viduthalai.in/page1/80090.html#ixzz31eAS2enb

தமிழ் ஓவியா said...


மே 12: உலகச் செவிலியர் தினம்


பொது மக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், உலகச் செவிலியர் தினமாக (International Nurses Day) ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினம் கொண்டாட காரணமாக இருந்த பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் லண்டன் நகரில் 1820-ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்தார். பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய வாழ்க் கையைத் துவக்கினார்

அப்போது ருஷ்யா கிரிமியப்போரில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் காயமுற்று கவனிப்பார் இன்றி இருப் பதைக் கேள்விப்பட்டு போர் நடக்கும் பகுதிக்குச் சென்று காயமுற்ற வீரர்களுக் காக முழுநேர சேவையில் இறங்கினார். காயங்களுக்கு மருந்திடுதல், உடை மாற்றுதல், இருக்கைகளை சரி செய்தல் ஆறுதலான சொற்களைக்கூறுதல் என்று நோயாளிகளுடனேயே முழு நேரத் தையும் செலவிட ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று தொண்டாற்ற தொண்டு மனப்பான்மை கொண்ட பெண்களுக்கும் பயிற்சியளித்தார். போர் முடிவுற்ற பிறகு தனது சொந்த நாடான இங்கிலாந்து திரும்பியதும், பிரிட்டன் அரசு இவரின் சேவையைப் பாராட்டி கவுரப்படுத்தியது. இதன் மூலம் இங்கிலாந்தின் மகாராணிக்கு அடுத்த இடத்தில் புகழ்பெற்ற பெண்ணாக மாறினார். அரசும் பல சமூக நிறுவனங்களும் பெருமளவில் பொன்னும் பொருளும் வழங்கினர்.

இவற்றை வைத்துக்கொண்டு தரமான செவிலியர் பயிற்சிப்பள்ளி ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த செவிலியர் பயிற்சிப் பள்ளி இன்று உலகப்புகழ் பெற்ற பிளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம் என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

சர்வதேச செவிலியர் கழகம் நைட்டிங் கேல் அம்மையாரின் சேவையை உலகமே போற்றும் வகையில் 1974-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான மே 12 -ஆம் தேதியை சர்வதேச செவி லியர் தினமாக அறிவித்தது.

- சரவணா இராசேந்திரன்

Read more: http://viduthalai.in/page1/80094.html#ixzz31eArVYzP

தமிழ் ஓவியா said...


நாத்திகராக வேண்டும்

மூடநம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.

(விடுதலை, 12.10.1967)

Read more: http://viduthalai.in/page1/80093.html#ixzz31eB8dHHH

தமிழ் ஓவியா said...


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்


ரத்தம் எடுக்காமல் சர்க்கரை அளவு கண்டுபிடிக்கலாம்

அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர் ஜெர்மனி மருத்துவர்கள்.
சரி, கான்டாக்ட் லென்ஸ் எப்படி ரத்த அழுத்தத்தை அளக்கிறது?

2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் சென்சிமெட் எனும் ஒரு மைக்ரோ சென்சாரை கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை அளந்து சொன்னார்கள். இந்தக் கருவியின் பெயர் டிரைகர் ஃபிஸ்'. கண்ணில் அளக்கப்படும் அய்ஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்றப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப் பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொண்டே இருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால் குளுக்கோமா நோய் வந்து கண்ணைக் குருடாக்கிவிடும்.

ஆகவே, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த அளவை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு டிரைகர்ஃபிஸ் கருவி பயன்படுகிறது. இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்தத்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தைக் கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர்மனி மருத்துவர்கள் ஸ்டோட் மியாஸ்டர் மற்றும் ஜோனஸ் ஜோஸ்ட். இதற்கு கோல்டு மேன் கான்டாக்ட் லென்ஸ்' என்று பெயர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் 'சென்சிமெட்' சென்சாருடன் ஆன் டெனா, கெப்பாசிட்டர், கன்ட்ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர்க்கரை அளவை அளக்க முடியும் என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரிசோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக்கு ஒருமுறை தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த 'கூகுள் கான்டாக்ட் லென்ஸ்' இன்னும் சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும்.Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCEkgn7

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் கொண்ட
காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய: தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

உடல் எடை குறைய: சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக் கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப் பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவ துடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த: இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Read more: http://viduthalai.in/page1/80109.html#ixzz31eCNmtxN

தமிழ் ஓவியா said...தேவையற்ற கொழுப்புகளை அகற்றும் கேரட்

கேரட்டில் உள்ள ஏ' வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு களை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

பயன்கள் உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் செரிமானத்திற்கும் உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல் தடுக்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் செரிமானமாகும். எலும்புகள் உறுதியாகும்.

முதுமையில் கால்சிய இழப்பை சரிகட்ட அன்றாடம் உணவில் கேரட்டை சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலப்படும். தலைமுடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் வைட்டமின் இழப்பை சரிசெய்ய கேரட் மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக வோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

Read more: http://viduthalai.in/page1/80112.html#ixzz31eCVNkc1

தமிழ் ஓவியா said...


குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


வேர்களுக்கு பழுது ஏற்படுத்த நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர் சித்தார்த்தன்

குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை


தஞ்சை, மே 12- தஞ்சை மாவட்ட பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் கனல் கவிஞர் துரை.சித்தார்த்தன் எழுதி தோன்றும் வெளிச்சத்தின் விழுதுகள் என்றும் உன்னோடு ஆகிய கவிதை குறுந் தகடுகள் வெளியீட்டு விழா 10.5.2014 அன்று மாலை 6.50 மணிக்கு தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. உரத்தநாடு மாணவி ஜெயசிறீ வரவேற்பு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். அனைவரையும் வரவேற்று மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல் உரையாற்றினார் குறுந்தகடுகளை அறிமுகம் செய்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய துணை இயக்குநர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி உரத்தநாடு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மு.காந்தி, தஞ்சை நகர் மன்ற முன்னால் உறுப்பினர் இரா.ஜெயபால் வெற்றித் தமிழர் பேரவை துணைப்பொதுச்செயலாளர் இரா.செழி யன், முத்தமிழ் முற்றம் நிறுவனர் ந.வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் முனைவர் சி.செந்தமிழ்குமார், பேராசிரியர் திலீப்குமார், மண்டலத்தலைவர் வெ.ஜெய ராமன். மாநில ப.க பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், தஞ்சை விடுதலை வாசகர் வட்டத்தலைவர் கே.ஆர். பன்னீர்செல்வம், அமெரிக்கா டெக்ஸ்சஸ் பல்கலைக் கழக பேராசிரியர் பெரியார் பண்ணாட்டு மய்ய தலைவர் இலக்குவன் தமிழ், தஞ்சை பாரதி கல்வி குழுமச்செய லாளர் புனிதா கணேசன் ஆகியோர் பாராட்டுரை வழங் கினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துச் செய்தியை கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் படித்தார். கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டுரை வழங்கினார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறுந்தகடுகளை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

கவிஞர் துரை.சித்தார்த்தன் மிகவும் துடிப்பும் உணர்ச் சியும் மிகுந்தவர் அவரின் படைப்பில் வெளிவந்துள்ள கவிதை குறுந்தகடுகளை இன்று பார்த்து மகிழ்ந்தேன். அவர் தோன்றி கவிதை பாடும் விதத்தை படக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். அவர் ஒரு நெருப்பு கவிஞர், அவரோடு ஈடுகொடுத்து வாழ்க்கை நடத்தும் அவரது துணைவியார் மகேஸ்வரியைத்தான் அதிகம் பாராட்ட வேண்டும் இந்த ஆணாதிக்க சமுதா யத்தில் பெண்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத் தாலும் அவர்களுக்குரிய இடம் கிடைப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் இருந்தபொழுது அவரது இல்லம் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தேன். தற்பொழுது நல்ல உடல் நலம் பெற்று இந்த குறுந்தகடுகள் வெளியிடும் அளவிற்கு வந்துள்ளது கண்டு மகிழ்கிறோம். இந்த அளவிற்கு அவரை பாதுகாத்து உயர்த்தியுள்ள அவரது துணைவியார். மகேஸ்வரியைத்தான் பாராட்ட வேண் டும்.

கவிஞர் சித்தார்த்தன் அவர்கள் என்றும் உன்னோடு என்ற குறுந்தகடில் அவர் பல துறைகளை காதல், வீரம், கடமை என பல இருந்தாலும் கடைசியில் என்றும் உன்னோடு என்று, என்னுடன் எப்பொழும் இருப்பார் என்று உணர்த்தியுள்ளார். நமக்கெல்லாம் தலைவர் பெரியார் ஒருவர் தான். பெரியாருக்கு தொண்டர் சித் தார்த்தன் நாம் எப்பொழுதும் பெரியாரோடு இருப் போம். வெளிச்சத்தின் விழுதுகள் குறுந்தகடில் பெரிதும் என்னைப்பற்றி எழுதியுள்ளார் ஒரு மனிதனுக்கு பெரிய தண்டனை பாராட்டை கேட்டுக்கொண்டு இருப்பது தான். கவிஞர் துரை சித்தார்த்தன் வேருக்குப் பழுது ஏற்படுத்த, வேரையே சாய்க்க நினைப்பவர்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர். அவர் நல்ல உடல் நலத் துடன் வாழ்ந்து சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும் என மேலும் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/80101.html#ixzz31eCufnln