Search This Blog

1.5.14

மே தினம் கொண்டாடக்கூடாது எனும் ஆர்.எஸ்.எஸ்-ஏன்?


மே தினம் கொண்டாடக்கூடாது எனும் ஆர்.எஸ்.எஸ். பிற்போக்கு சக்திகளை அடையாளம் காண்பீர்!
ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை! உயரட்டும் சமதர்மக் கொடி!!

தமிழர் தலைவரின் மேதினச் சூளுரை

கழகத்தின்  பல்வேறு  அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!
மே முதல் நாளைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்றும், புராணக் கற்பனைப் பாத்திரமான விசுவகர்மா பிறந்த நாளைத்தான் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். கூறுவதை எடுத்துக்காட்டி, இத்தகைய மதவாத சக்திகள் அதிகாரத்தை பிடிக்கத் துடிப்பதன் ஆபத்தையும் கோடிட்டுக்காட்டி, மதச் சார்பற்ற ஆட்சியை அமைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி மே தினத்தில் தொழிலாளர்கள் கட மையை நினைவூட்டும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மே முதல் தேதி தொழிலாளர் தினம் என்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது - 1889 இல் அமெரிக்காவிலும், 1891 இல் ருசியாவிலும் இது கடைப் பிடிக்கப்பட்டது.

1886 மே முதல் தேதி அமெரிக்காவில் கூடி எட்டு மணிநேரம்தான் உழைப்பின் நேரம் என்று அமெரிக்கா, கனடா தொழிற்சங்கங்கள்  உலகிற்கு அறிவித்தன.
அதற்குமுன் 18 மணிநேரம், 20 மணிநேரம் உழைப்பு என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர்.

தந்தை பெரியார் கொடுத்த குரல்!

இந்தியாவைப் பொறுத்தவரை சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 1923 இல் மே தினத்தைக் கொண்டாடச் செய்தார்.

சோவியத் சென்றபொழுது அங்கு நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திலும் (1932) தந்தை பெரியார் பங்கேற்று உரையாற்றினார்.

சோவியத்து யூனியனுக்குச் சென்றுவந்த பிறகு, தந்தை பெரியார் மே தினத்தைக் கொண்டாடுமாறு அறிவித்தார்கள் (21.5.1933) தோழர்களே, என்று அனைவரையும் விளிக் குமாறு அறிக்கை வெளியிட்டார் (குடிஅரசு, 13.11.1932).
பொதுவுடைமைப் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்கிறார் ஈ.வெ.ரா. என்று கூறி, வெள்ளை அரசு, தீவிரமாகக் கண்காணிக்கும் அளவுக்கும், நெருக்கடிகளைக் கொடுக் கும் அளவுக்கும் சென்றதெல்லாம் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை உயர்ஜாதி வர்ணக் கூட்டமும், பண முதலைகளும் பின்னிப் பிணைந்தவை. காங்கிரசின் கொள்கை சோசலிசம் என்று கூறப்பட்டது. அந்த வகையில், ஆவடி மாநாடு பிரசித்தி பெற்றது.

உலகப் பொருளாதாரக் கொள்கை

பின்னர் மெல்ல மெல்ல உலகப் பொருளாதாரக் கொள் கைகளின் வலையில் சிக்கி, வறுமைக்கோட்டுக்கும்கீழ் என்கின்ற ஒன்றைக் கண்டுபிடிணீத்த வாஸ்கோடகாமாவாக இந்தியா இன்றைய தினம் இருந்து வருகிறது.
காங்கிரசின் இந்த நிலைப்பாட்டைவிட எந்த வகை யிலும் மேலானதல்ல பி.ஜே.பி.; அதற்கு அதன் இந்துத்துவா அஜண்டாதான் முக்கியம் - மற்றவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

ஆர்.எஸ்.எஸ். ஏடு எழுதுகிறது

அந்த அடிப்படையில் மே தினத்தையே ஏற்க மறுத்துக் கட்டுரை தீட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ வார இதழான விஜயபாரதம் (2.5.2014).

விசுவ கர்மா என்னும் புராண மூட நம்பிக்கைக் கற்பனைப் பாத்திரத்தின் பிறந்த நாள் ஒன்றை முன்னிறுத்து கிறது; அந்த நாள் செப்டம்பர் பதினேழாம் - அந்நாளைத் தான் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவேண்டும் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்.

திசை திருப்பும் சக்திகள்

மத்தியில் ஆட்சி வருமுன்னே இந்நிலையா என்பதை தொழிலாளர்த் தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

மே தினம் என்பது உழைப்பாளர்களின் உரிமை நாள் - இவர்கள் கூறும் நாளோ புராணக் கற்பனைப் பாத்திரம்.

சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லித் திசை மாற்றம் செய்யவில்லையா?

எதிலும் மூடத்தனமான புராண பார்வை மட்டுமல்ல, திசை மாற்றும் வேலையும்கூட!

அதுவும் செப்டம்பர் 17 என்பது - ஆரிய சனாதனத்தின் ஆணிவேரைச் சுட்டுப் பொசுக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளாயிற்றே! அவர்களுக்கு உறுத்தாதா? அதை இருட்டடிக்கும் உள்நோக்கமும் உண்டு  எனி னும், அதைவிட சிறுபிள்ளைத்தனம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது!

மதவாதக் கண்ணோட்டம்!

இன்னொரு காரணமும் உண்டு. அதனையும் தன்னை அறியாமலேயே வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது விஜயபாரதம் ஏடு.

கத்தோலிக்க சபை மே தினத்தை பரிசுத்த தந்தை ஔசேபின் திருநாளாகக் கடைப்பிடிக்கிறது என்று குறிப் பிட்டுள்ளது விஜயபாரதம். எதிலும் இத்தகு குரூர மதக் கண் ணோட்டம் என்பது ஆர்.எஸ்.எஸின் ரத்தத்தோடு பிறந்ததாகும்.

நவம்பர் 14 நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும், அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

கோகுலாஷ்டமியைத்தான் (அதிலும் புராணக் கடவுள் கிருஷ்ணன்தான் முன்னிறுத்தப்படுவதைக் கவனிக்கவேண்டும்) குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவார்கள்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர் களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. ஆனால், அதனை இந்த ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏற்பதில்லை. அதிலும் இதிகாச பாத்திரமான வியாசர் பிறந்த நாள் என்று கூறி, அதனைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவார்கள் (வியாசர் பிறந்த நாளையெல்லாம் எப்படி கண்டு பிடித் தார்கள் என்று கேட்டுவிடாதீர்கள்).

பிற்போக்குச் சக்தியை வீழ்த்த வாரீர்!

இந்தப் பிற்போக்குக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடியாய்த் துடிக்கிறது. நாட்டைக் கற்காலத்துக்குத் தள்ளிக்கொண்டு போகத் திட்டமிடுகிறார்கள்.

இவ்வாண்டு மே தினத்தில் இந்த அபாயங்களை யெல்லாம் எதிர்கொண்டு தொழிலாளர்த் தோழர்கள் தோள் தூக்கி எழுவார்களாக!

தேவை மதச்சார்பற்ற நிலை!

மதச்சார்பற்ற ஒரு நிலைதான் சகோதரத்துவத்திற்கும், சமத்துவத்திற்கும், எல்லார்க்கும் எல்லாமும் என்பதற்கான உத்தரவாதத்திற்குத் தகுதியானதாகும்.

இதனை உணர்ந்து, மதவெறியை, ஜாதி வெறியை மாய்த்து, மனிதநேயம் காக்க இந்த மே தினத்தில் சூளுரை ஏற்போம்!

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்னும் பிணி நீக்கப்பட்டு, அவர்களின் பணியை நிரந்தரப்படுத்தவும் உரியது செய்வோம்!

பங்காளிகளாக்கிட பாடுபடுவோம்!

ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை!

உயரட்டும் சமதர்மக் கொடி!!

-----------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.  சென்னை-"விடுதலை”  
30.4.2014

25 comments:

தமிழ் ஓவியா said...


மோசடிக்காரர்கள்
மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

- (விடுதலை, 20.5.1948)

Read more: http://viduthalai.in/page-2/79502.html#ixzz30QH9psMU

தமிழ் ஓவியா said...


சித்திரையில் மழையைத் தேடி...


பிற இதழிலிருந்து....
சித்திரையில் மழையைத் தேடி...

சித்திரை மாதம் 15 ஆம் நாள் தமிழ் நாடு முழுவதும்உள்ள முக்கிய கோவில் களில் மழை பெய்ய வேண்டிவருண ஜெப பூஜையை இந்து சமய அற நிலையத் துறை ஒரே நேரத்தில் நடத்தியுள்ளது. பூஜை, புனஸ்காரங்கள் செய்தது மட்டு மின்றி இசைக்கல்லூரி மாணவர்கள் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி ராகங்களைப் பாடி இசை ஆராதனை நடத் தினர் என்றும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் தண்ணீரில் ஒரு மணி நேரம் நின்று சிவாச்சாரியார்கள் வருணபூஜை செய் தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதுஒருபுறம், குடி தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் மறுபுறம். பருவகால மழை யின் அளவு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. சராசரி மழை யளவான 912 செ.மீ. கடந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்துவிட்டது.

வெப்பமயமாக்கல் அதிகரித்துக் கொண்டே வருவதால் வானிலை மாற்றம் மழையளவை கடுமையாகப் பாதிக்கிறது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப்பருவமழை சரியாகப் பெய்யாமல் பொய்த்துவிட்டது.மழை பெய்வதற்கு ஆதாரமான மரங்கள், காடுகள், வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கவனிப் பதில்லை. அவற்றை அழிக்கும் தீய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப் பதில்லை. ரியல் எஸ்டேட் என்ற பெய ரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுதல் என்ற பெயரிலும்வயல்களும் நீர் நிலைகளும் அழிக்கப்படுகின்றன. காடு களை அழித்து கழனியாக்கினான்; குளங்களை வெட்டினான்; ஏரிகள் அமைத்தான்; அணைகள் கட்டினான் என்று அரசர்கள் வரலாற்றில் படித்தவை எல்லாம் மறந்து போய் விடுகின்றன. இருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங் கள், வாய்க்கால்கள், இதர நீர்நிலைகளை தூர்வாருதல், ஆழப்படுத்துதல், கரை களை உயர்த்துதல், மழைநீர் வீணாக் காமல் சேகரித்தல் என்ற ஆக்கப்பூர்வ பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

வைகையின் கரையை உயர்த்துவ தற்காக நடந்த வேலையில் ஈடுபட்ட இறைவன் சொக்கநாதன் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்காக மன்னனிடம் பிரம்படிபட்டான் என்பது திருவிளையாடல் புராணம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ ஏனோ தானோவென்று தூர்வாருதல் உள் ளிட்ட மராமத்துப்பணிகளை செய்வ தால் ஒப்பந்ததாரர்களுக்குப் பயன் கிடைக்கலாம்; மக்களுக்குப் பயன் கிடைப்பதில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்; விண்ணின் மழைத் துளி மண்ணின் உயிர்த்துளி என்றெல் லாம் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது நல்ல செயல்தான். ஆனால் காலத்தே செய்ய வேண்டிய மரம் வளர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு போன்றவற்றை உரிய காலத்தில் நிறைவேற்றாமல் இருந்துவிட்டு கடைசி காலத்தில் யாகம் நடத்துகிறோம்.

ஜெபம் செய்கிறோம் என்று கோடிக் கணக்கில் வீணடிப்பதால் என்ன பயன்? மழைக்கஞ்சி காய்ச்சுதல், கழுதை களுக்கு கல்யாணம் செய்தல் என்று பாமர மக்கள் செய்வதற்கும் அரசின் நிர்வாகத்துக்குட்பட்ட அறநிலையத் துறை வருண ஜெபம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்? சூழும் மழை மேகங்கள் மீது வெள்ளிப்பொடி உள் ளிட்ட ரசாயனப் பொருட்களைத் தூவி மழையைப் பொழிய வைத்ததும் அதே போல தேவையில்லை என்று நினைத்த போது விமானங்கள் மூலம் மேகங் களைக் கலைத்து மழை பெய் யாமல் நிறுத்தியதும் முந்தைய சோவியத் நாட்டில் நிகழ்த்தப்பட்டது என்பது வரலாறு. கோடையில் மழைவர வாடை யிலேயே பணிகளை துவக்கிட வேண் டும். அவ்வாறு வருமுன் காக்கும் வகை யில் செயல்படுவதே சிறந்த அரசாகும்.

நன்றி: தீக்கதிர், 30.4.2014

Read more: http://viduthalai.in/page-2/79504.html#ixzz30QHI3g6h

தமிழ் ஓவியா said...


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்


மோடிக்கு பெருந்தலைவலியாக மாறும் கெஜ்ரிவால்

வாரணாசி, ஏப். 30- மோடி வாரணாசி தொகுதியில் நிற்கப்போகிறேன் என் றதும் கெஜ்ரிவால் அவரை எதிர்த்து நிற்கிறேன் என்று அறிக்கை விட்டார். அறிக்கை விட்டதும் இல்லாமல், டில்லி தேர்தல் முடிந்த கையோடு தனது பரி வாரங்களோடு வாரணாசி சென்றுவிட் டார். நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும், போட்டியிடும் பெரும்பாலானோர் பிரபலமாக இருப்பதால் கெஜ்ரிவால் வந்து பிரச்சாரம் செய்யவேண்டாம்; நீங்கள் வாரணாசியில் இருந்து முழுவது மாக மோடிக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்று அனை வரும் கூறிவிட, கெஜ்ரிவால் எந்த ஒரு தயக்கமும் இன்றி முழுமையாக பிரச் சாரத்தில் இறங்கிவிட்டார். இதுவரை 13 ஜனசபா என்ற மக்கள் அரங்க உரையை நிகழ்த்தியுள்ளார், இங்கு மக்கள் கேள்வி கேட்க இவர் பதில் அளிப்பார். இந்த 13 ஜனசபா மாத்திரமில்லாமல் பல்வேறு சாலைப் பிரச்சாரம் (ரோட் ஷோ) நடத்தியுள்ளார். இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் லட்சக்கணக்கானோர் பங்குகொண்டனர். இந்தச் செய்தி யாருக்குப் பயம் உண்டாக்குகிறதோ, இல்லையோ- பாஜகவிற்கு பெரும் கிலியை உண்டாக்கிவிட்டது. காரணம் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மிகவும் பிற்படுத்தபட்டவர் கள் இவர்களின் ஓட்டுக்கள் தான் வெற் றியைத் தீர்மானிக்கும். இதுநாள்வரை நடந்த தேர்தல்களில் சரியான எதிரி வேட்பாளர் நிறுத்தப்படாததின் காரண மாகத்தான் சொற்ப வாக்குகளில் முரளி மனோகர் ஜோஷி வெற்றிபெற்று வந்தார். ஜோஷிக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை முரளிமனோகர் ஜோஷி பெற்ற வாக்குகளின் விழுக்காடு ஒன்றும் மிகப்பெரிய அளவில் இல்லை.

இம்முறை காங்கிரசும் நேரிடையாக இல்லாமல், மறைமுகமாக கெஜ்ரி வாலை ஆதரிப்பதுபோல் தொகுதிக்கு அதிகமாக அறிமுகமில்லாத வேட் பாளரை நிறுத்தியுள்ளது. மேலும் காங் கிரசின் பிரபல தலைவர்கள் யாரும் வாரணாசிக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆகையால் காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகளைப் பிரிக் கும் என்று சொல்லமுடியாது. இந்த நிலையில் வெற்றிக்குக் காரண மான அனைத்து வாக்குகளும் கெஜ்ரி வாலுக்குச் செல்லும் சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வாரணாசி மக்களிடம் பாஜக கொஞ்சம் அதிக மாகவே கெட்டபெயர் வாங்கிக் கொண்டு வருகிறது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவானவர்களைத் தாக்குவது, பேனர்களை கிழிப்பது, பொது இடங் களில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அசிங்க மான சொற்களை உபயோகப்படுத்துவது போன்றவைகளால் வாரணாசி மக்களி டையே பாஜகமீது வெறுப்பு ஏற் பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதுபோல் கெஜ்ரிவால் தன்னை, யாரும் தரக்குறைவாகப் பேசினால் அவர்களுக்கு பூச்செண்டு களைப் பரிசாக அளியுங்கள் என்று கூற, வாரணாசியில் பல இடங்களில் பூச் செண்டுகளின் வியாபாரம் பெருகியுள் ளது. அதாவது பாஜகவினருக்கு எதிரான நிலை மக்களிடையே உருவாகி விட்டது. இன்னும் தேர்தலுக்கு சில நாள்களே இருக்கும் பட்சத்தில் கெஜ்ரிவாலின் ரோட் ஷோ மிகவும் பிரபலமாகி வருவ தால், தங்களுக்கு விழும் வெற்றிக்கான வாக்குகளை கெஜ்ரிவால் பறித்துவிடு வாரோ என பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இறுதியாக மோடி ஒருமுறை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வாரணாசி பாஜக பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மே 12 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் வாரணாசியில் நடைபெற உள்ளதால் மோடி எப்படியும் இரண்டு முறையாவது வாரணாசியில் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், அதற்கு முன்பு கெஜ்ரிவாலில் பிரச்சாரத்தில் குழப்பம் உண்டாக்கிவிடவேண்டும் என்றும் வாரணாசி பாஜக பிரமுகர்கள் முடிவு செய்துள்ளனர். மோடியின் ஊர்வலத்தில் உள்ளூர் மக்கள் இல்லை கடந்த 24 ஆம் தேதி மோடி தனது வேட்பு மனு தாக்கலின் போது பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்திக் காண் பித்தார். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாரணாசி மக்கள் பலர் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் இந்தியா வெங்கும் பலரை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். முக்கியமாக மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற பாஜக ஆட்சியாளும் மாநிலத்தில் இருந்து பெருவாரியான மக்கள் ரயில் மூலம் வாரணாசி வந்து இறங்கியுள்ளனர். ஊர்வலத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இது குறித்து வாரணாசிப்பதிப்பான ஹிந்துஸ்தான் என்ற இந்தி நாளிதழில் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு முதல் நாள் வாரணாசி ரயில் நிலையம் கும்பமேளாவிற்கு வரும் கூட்டம் போல் நிறைந்துவிட்டது, நாடு முழுவதிலும் இருந்து பல ரயில்களில் பாஜக கட்சி யினர் வந்துகொண்டு இருந்தனர். வாரணாசி மக்கள் மோடியின் ஊர்வலத்திற்கு ஆதரவு அளிக்க வில்லை என்பது வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாஜகவி னரைப் பார்த்தாலே தெரியும் என்று எழுதியுள்ளது.
(ஹிந்துஸ்தான் இந்தி நாளிதழ், வாரணாசி)

Read more: http://viduthalai.in/page-2/79506.html#ixzz30QHPptlc

தமிழ் ஓவியா said...


மேதின நன்னாளில் என் நல்வாழ்த்துக்கள் கலைஞர் மேதினச் செய்தி


மேதின நன்னாளில் என் நல்வாழ்த்துக்கள் கலைஞர் மேதினச் செய்தி

மே நாள்! மேதினி எங்கும் உழைப்பாளர் பெருமையை உரைத்திடும் திருநாள்!

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 1890 மே முதல் நாளன்று நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலி யுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப்பலி தந்து பெற்ற உரிமை வரலாற்றை நினைவுறுத்தும் நாள் இந்த மே தினம்!

இத்திருநாளில் தமிழகத்தின் வளம் பெருக்கும் தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினர்க்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்து களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

இளமைக் காலத்தில் திருவாரூர்ப் பகுதியில் ஆதிதிராவிடத் தோழர்களின் காலனிகளையும், ஏனைய விவசாயத் தொழிலாளர்களின் குடியிருப்புகளையும் சுற்றிச் சுற்றி வந்து இயக்கக் கொள்கைகளைப் பரப்பிய நான், 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழி லாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கென தனித்துறையை உருவாக்கினேன்.

தொழிலாளர் நல அமைச்சகம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டதும் அப்போதுதான்!

1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளை சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியதுடன், வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்குக் கோரிக்கை விடுத்து இந்தியா முழுவதிலும் மே தினத்திற்கு விடுமுறை விடச்செய்தது தி.மு.க. ஆட்சிதான்.

1969இல் கணபதியாபிள்ளை பரிந்துரையை ஏற்று அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயக் கூலி வழங்க வகை செய்தது தி.மு.கழக ஆட்சிதான்.


தமிழ் ஓவியா said...

பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்காக தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வகை செய்தது மட்டுமல்லாமல், பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் அவர்கள் பயன்பெறச் செய்தது தி.மு.கழக ஆட்சிதான்.
1970இல் கண்ணில் சிறியதொரு அறுவை சிகிச்சை செய்துகொண்டு நான் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற நிலையில் 16,000 தொழிலாளர்கள் கொண்ட நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலையில் ஏற்பட்ட ஊதிய உயர்வுப் பிரச்சினைக்காக, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசிப் பிரச்சினையைச் சுமுகமாக தீர்த்து வைத்து தொழிலாளர்களை மகிழச் செய்த நிகழ்வை நினைவு கூர்ந்து;

தொழிலாளர் நலன்கருதி, தொழிலாளர் நல நிதி உருவாக்கப்பட்டு; அதனை நிர்வகித்திட தொழிலாளர் நல வாரியம் ஒன்றை 1971ஆம் ஆண்டு தோற்றுவித்தது;

ஒப்பந்தத் தொழிலாளர் நலன் கருதி 1971 இல் தனியே சட்டம் கண்டதுடன், அச்சட்டத்தில் 1975ஆம் ஆண்டு மேலும் சில விதிகளை உருவாக்கி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலன் காக்க வழிவகுத்தது; 1971இல் இந்தியாவிற்கே வழிகாட்டும் வண்ணம் குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம் கண்டு, 1,73,748 விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியது தி.மு.கழக ஆட்சி என்பதால்; கம்யூனிஸ்டு கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய மணலி கந்தசாமி அவர்கள் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற
விழாவில், இந்தச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்றைக்கு ஒரு துளி இங்க் செலவில் பிரகடனப்படுத்தி விட்டார்; இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளிகள்

இன்றிரவு தங்கள் சொந்த வீட்டில் படுக்கிறோம் என்ற ஆனந்த உணர்வோடு படுப்பார்கள்; இதற்காக விவசாயத் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தத் துளிகள் கொஞ்சமல்ல - என்று கூறி என்னைப் பாராட்டிய நிகழ்வை இந்த மேதின நாளில் எண்ணிப் பெருமிதம் அடைவதுடன்; தொழி லாளர்கள் நலன் கருதி 1972லிருந்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் பணிக்கொடை வழங்கும் திட்டம் கண்டது; விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் லாரி, ஆட்டோ, வாடகை கார், தனியார் கார், பேருந்து ஆகியவற்றின் ஓட்டுநர்களுக்கும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்களுக்கும் தகுந்த நிவாரணங்கள் வழங்கி அவர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை 1972ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது;

தமிழ் ஓவியா said...

பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் துணைவியர்க்கும் தையல் பயிற்சி வகுப்புகளையும் அவர்தம் குழந்தைகளுக்காக கிண்டர் கார்டன் வகுப்புகளைக் கொண்ட நல மய்யங்களை 1972ஆம் ஆண்டிலேயே சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகரங்களில் முதன்முதல் தொடங்கியது;

நல்ல தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்குதல், தொழிலாளர்கள் மற்றும் தனி அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல், தொழிலாளர் துறை அலுவலர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் பொருட்டு 1973ஆம் ஆண்டில் தமிழ்நாடுதொழிலாளர் கல்வி நிலையம் கண்டது; பீடித் தொழிலாளர்கள் குடும்பத்தினரின் விவரங்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கி; அவர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மைய அரசு உதவியுடன் ஒவ்வொரு வீடும் ரூ. 34,000/- செலவில் கட்டப்பட ஆவன செய்தது;

1980இல் எம்.ஜி.ஆர் ஆட்சியில்...

மதுரையில் நடைபெற்ற பால்வளத் துறை ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் அனுதாப வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பால்வள நிறுவனத்தைச் சார்ந்த 1095 ஊழியர்களை 1980இல் அன்றைய எம்.ஜி.ஆர். அரசுவேலை நீக்கம் செய்திட; பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளர்களில் 1989இல் அமைந்த கழக ஆட்சியில் 370 பேருக்கும், 1997ஆம் ஆண்டில் மேலும் 427 பேருக்கும் மீண்டும் வேலை நியமனம் வழங்கியது;1990இல் கையி னால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தைத்

தமிழ் ஓவியா said...


தடுத்தது; மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர்பூங்காவிற்கு, மே தினப் பூங்கா எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்து; அந்நாளில் தியாகச் சுடர்களாய்ப் புகழ் நிறுவிய தொழிலாளர்கண்மணிகளுக்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி மே தினத்தைப் போற்றிடச் செய்தது;1997இல் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு வழங்கிய பரிந்துரை அடிப் படையில் எந்தவகைப் பாதுகாப்புமின்றி 61 வகைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த ஏழை எளிய

தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிகாணும் நோக்கில் அமைப்புசாராதொழிலாளர் நல வாரியம் அமைத்து; பல்வேறு தொழில்களுக்கும் தனித்தனி நல வாரியங்களை உருவாக்கியது;

கோலப்பன் குழு அளித்த பரிந்துரைகளின்படி, விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் செய்ததுடன்; 2000 ஆண்டில் "விவசாயத் தொழிலாளர் நலவாரியம்" அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டஉதவிகள் வழங்கிட வகைசெய்தது;

விவசாயிகள் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள்

2001இல் அமைந்த அதிமுக அரசினால் கலைக்கப்பட்ட இந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தினை 2006 இல் மீண்டும் ஏற்படுத்தி, "தமிழ்நாடு விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டம்"தொடர்ந்து பயனளிக்கத் தக்க வகையில் தனிச் சட்டம் இயற்றி, விவசாயத்தொழிலாளர் குடும்பங்களுக்குக் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி,

ஓய்வூதியம், ஈமச் சடங்கு உதவி, விபத்துக் கால இழப்பீட்டு உதவி என்பன போன்ற பல உதவிகள் வழங்கிட வகைசெய்தது; 2000-2001 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவாக்கிய தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுநர்கள் நல வாரியம் முதலான 9 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை 2001-2006 அ.தி.மு.க அரசு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியத்துடன் இணைத்ததால்;

அமைப்புச் சாராத் தொழிலாளர் வாரியம்

அந்த 9 வகை அமைப்புசாரா நல தொழிலாளர் வாரியங்களையும் 1.9.2006 முதல் மீண்டும் தனித்தனி நல வாரியங்களாகச் செயல்படும் வகையில் 2006இல் அமைந்த தி.மு.க அரசு ஆணையிட்டதுடன், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம் உட்பட மொத்தம் 35 அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்களைத் தனித்தனியே உருவாக்கி அவற்றின் மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களை உறுப்பி னர்களாகச் சேர்த்து நலத் திட்ட உதவிகளை வழங்கியது; 2001ஆம் ஆண்டில் 20 சதவீதப் போனஸ் கேட்டுப் போராடிய போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களைத் தீபாவளி என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்த அ.தி.மு.க. அரசுபோல் அல்லாமல் 2006-2011 ஆட்சி ஆண்டுகளில் தொழிலாளர்கள் கோரிக்கை வைக்காமலேயே அனைத்து வகைத் தொழிலாளர் களுக்கும் 20 சதவீதப் போனஸ் வழங்கித் தொழிலாளர் சமுதாயத்தைத் தட்டிக் கொடுத்துக் கட்டிக் காத்தது உட்பட அனைத்து வகைச் சலுகைகளையும் அளித்தது தி.மு.கழக ஆட்சிதான் என்பதை எடுத்துரைப்பதில் இந்நாளில் பெருமை அடைகிறேன்.

இலவச நிலம்

இவையல்லாமல், நிலமற்ற ஏழை விவசாயத் தொழி லாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் வழங்கியது; ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கியது; உழைப்பாளி வர்க்கம் ஓய்வு நேரங்களில் கண்டுகளிக்க இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கள் வழங்கியது; 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிவழங்கிப் பசிப்பிணி போக்கியது; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கியது எனத் தமிழகத்தில் வாழும் தொழிலாளர் சமுதாயம் நலம்பெறுவதற்குத் தேவையான மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக திகழ்ந்தது - திகழ்கிறது - என்றும் திகழும் இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதனை நினைவுபடுத்தி, தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்தி இந்த மே தின நன்னாளில் எனது நல்வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் உரித்தாக்குகிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/79508.html#ixzz30QHaShv3

தமிழ் ஓவியா said...
ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தால்
நிரந்தரம் ஆகலாம் என்பது சட்டம்!

30 ஆண்டுகள் ஆகியும், இன்னும் 240 நாள்கள் வரவில்லையா?

திருவெறும்பூர் கணேசபுரத்தில் தி.க. தொழிலாளர் அணி சார்பில் மே தினக் கூட்டம் (29.4.2014)

திருச்சி, ஏப். 30- திருச்சி - திருவெறும்பூரில் அமைந்துள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) 1964 ஆம் ஆண்டு காமராஜ் அவர்களால் தொடங்கப்பட்டது. திருச்சி மாவட்டப் புகழுக்கு இந்நிறுவனம் முக்கிய காரண மாகும். அய்ம்பதாவது பொன் விழாவைக் கொண்டாடும் இந்நிறுவனத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். இந்தியாவின் பொதுத் துறை நிறு வனங்களில், குறிப்பிடத்தக்க இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. மின்சாரம் தயாரிக்க உதவும் கருவிகளை உற்பத்தி செய்வது இந்நிறுவனத்தின் முக்கிய பணி. இந்தியாவின் மத்திய அரசாங்கம் இந்நிறுவனத்தைக் கேரள மாநிலத்தில் அமைக்க முயற்சி மேற்கொண்ட போது, அதைத் தமிழகத்தின் திருச்சியில் அமைத்தவர் காமராஜர்.

வீச்சுடன் திராவிடர் கழகம்

இவ்வாறான பல சிறப்புகளைக் கொண்ட இந்நிறு வனத்திற்குப் பிரச்சினைகளும் தொடர்ந்தே வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப் பைத் தராத நிலையில், பலரும் போராடினர். குறிப்பாகக் திராவிடர் கழகம் அதற்கான பணியைச் சிறப்பாகச் செய்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலமுறை பெல் வளாகம் வந்து பேசியிருக்கிறார். பெல் நிறுவனத்தில் செயற்படும் "திராவிடர் தொழிலாளர் கழகத்தை" யாரும் அறியாமல் இருக்க முடியாது. தொடர்ந்து வீச்சுடன் செயற்பட்டு வருகிறது.

தலைமுறை கடந்த பிரச்சினை

இந்நிலையில் சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான "ஒப்பந்தத் தொழிலாளர்கள்" இன்று வரை அதே ஒப்பந்தத்திலே நீடிப்பது, நாம் மேலே கூறிய நிறுவனப் பெருமையைக் கொஞ்சம் அசைத்துப் பார்ப்பதாய் இருந்து வருகிறது. இப்பிரச்சினைத் தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளர் கள் மற்றும் எண்ணற்ற சங்கங்கள் 30 ஆண்டுகளாய் மோதிப் பார்த்துவிட்டன. ஆனால் அதிகாரிகள் அசைவ தாய் இல்லை. இதற்கிடையில் தற்காலிகப் பணியில் இருந்த சிலர், நிரந்தரமாகவே உலகை விட்டுப் பிரிந்து போயினர். தலைமுறை கடந்த இப்பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு ? எனப் பலரும் சோர்ந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பல சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்தனர்.


தமிழ் ஓவியா said...

வழக்குத் தொடங்கியதும்! நினைத்தது நடந்ததும்! திருவெறும்பூர் பகுதித் தோழர்களைச் சந்திக்கும் போதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைக் குறித்துக் கவலையோடு கேட்பது கழகத் தலைவரின் கட மைகளில் ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து நீடிப்பதை, முறியடித்தே தீர்வது என்ற முடிவுக்கு அப்போது கழகத் தலைவர் வந்திருந்தார். உடனே வேலைகள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அறவழிப் போராட்டங்கள் அவர்களை அசைக்கவில்லை. "சந்திப்போம் சட்டப் பூர்வமாக" என முடிவு எடுத்தார். சட்டம் என்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்திற்குக் கைவந்த கலையாக இருக்குமே எனப் பலரும் பயமுறுத்தினர். வல்லுனர்களுக்கு எல்லாம் வல்லுனர்கள் இருப்பார்களே என வாதாடினர். இருந்து விட்டுப் போகட்டுமே! ஆயிரக்கணக்கான மனிதர்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்குப் பயன்படும் சட்டம், அவர்களை வாழ வைப்பதற்கு வழியா தராது? என வழக்குத் தொடங்கியது! ஆசிரியர் நினைத்தது நடந்தது ! நீதியின் குரலால் நெஞ்சம் நிறைந்தது !

தமிழ் ஓவியா said...

"முப்பது ஆண்டு கால ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே நிரந்தரம் செய்து, வாழ வழி செய்," என நீதிமன்றம் நீதி தந்தது. "நீதியின் குரல்" நிறுவனம் முழுக்க ஒலித்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று அதிரச் செய்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு சேர நெகிழ்ந்தார்கள். எல்லோ ருக்கும் மகிழ்ச்சி. அதேநேரம் அதிகாரிகள் நீதியைப் பின்பற்ற வேண்டுமே? நீதிக்கு நீதி (?) வேண்டும் என அவர்கள் மேலே மேலே போனால், இவர்கள் வாழ்க்கைக் கீழே கீழே அல்லவா போகும் எனத் தோழர்கள் கவலை கொண்டனர். உடனே தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் சங் கங்களும் ஒன்று சேர்க்கப்பட்டன. ஒப்பந்தத் தொழிலா ளர்களுடன், நிரந்தரத் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர். பெல் நிறுவனத்தில் இயங்கும் திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், அம்பேத்கர் சங்கம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், தேசியத் தொழிலாளர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், பி.எம்.எஸ் உள்ளிட்ட அனைவரும் திராவிடர் தொழிலாளர் கழகம் ஏற்பாட்டில் ஒன்றிணைந்தன. கணேசபுரம் பகுதியில் 29.04.2014 அன்று மாலை 6 மணிக்கு, 13 சங்கங்களின் சங்கமிப்பு கூடியது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மு.சேகர் தலைமை வகிக்க, ம.ஆறுமுகம் ஒருங்கிணைத்தார். மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் !

அனைத்துச் சங்கங்களும் இணைந்துத் தொடுத்த வழக்காகவே இதை நாம் கொள்வோம். நம்முடைய ஒருமித்த குரலுக்குக் கிடைத்த நீதி இது. இந்த நீதியை எடுத்துச் சென்று வெல்வது நம் கடமை. முப்பது ஆண்டு கள் உழைத்து, உழைத்துத் தம் இன்னுயிரை இழந்தவர்கள், நம் தொழிலாளர்கள். பெல் நிறுவனத்திற்கு "மகா ரத்னா" விருதைப் பெற்றுத் தந்தவர்கள் வீழ்ந்து விடக்கூடாது. முப்பது ஆண்டுகள் உழைத்தும், இன்னமும் பெல் நிறுவனச் சீருடை அணிய முடியவில்லை. தன் வீட்டில் வேலை பார்த்த, தன் ஊரில் சுற்றி வந்தப் பலருக்கும் வேலை பெற்றுத் தந்த நல்ல நல்ல அதிகாரிகள் இங்கே இருந்தனர். இன்று வெளி மாநில மக்கள் குளிர்சாதன அறையை அனுபவிக்க, மண்ணின் மைந்தர்கள் துயரத்தில் உழல்கின்றனர். மற்ற, மற்ற மாநிலங்களில் இதுபோன்று காணமுடியுமா? வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள் !

ஆண்டுக்கு 240 நாள் வேலை செய்தாலே, நிரந்தரம் ஆகலாம் என்கிறது சட்டம். 30 ஆண்டுகள் ஆகியும், 240 நாள்கள் இன்னும் வரவில்லை என்கிறது நிருவாகம். தனியார் நிறுவனங்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டாமா பொதுத்துறை நிருவாகம்? சக மனிதரின் உழைப்பைச் சுரண்டுவதும், வாழ்வை வஞ்சிப்பதும் எந்த வகையில் நியாயம்? உடல் பலம் இல்லாத, உணவு பலம் இல்லாத தொழிலாளர்களுடன் பெரிய நிருவாகம் மோத லாமா? ஏழ்மையான, உழைக்க மட்டுமே தெரிந்த நேர்மை யான மனிதர்கள் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட இனங்களில் இருந்து வந்தவர்கள். நீங்கள் அவர்கள் வேலையை அல்ல... வாழ்க்கையை நிரந்தரப்படுத்துங்கள். போராட்டமே நம் ரத்தவோட்டம் !

முப்பது ஆண்டு கால எங்களின் போராட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை, நிருவாகத் திற்கோ சிறு இழப்பும் இல்லை. எங்களை நாங்களே வற்புறுத்திக் கேட்டோம். எனினும் அதிகாரிகள் நியாயம் தரவில்லை. அதிகாரிகள் பலரும் உயர்ஜாதியில் இருக் கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களில் சிலர் நல்ல பதவிக்கு வருகிறார்கள். உயரத்திற்கு வந்ததும், அவர்களும் உயர் ஜாதியாய் மாறிப் போகிறார்கள். எனினும் போராட்டம் எங்கள் ரத்தவோட்டம் என்பதற்கிணங்க எல்லா சங்கங் களும் இணைந்தே இருப்போம். நல்லதொரு தீர்ப்பு நம்மை நாடி வந்துள்ளது. இந்த நேரத்தில் வெல்லாமல் போனால், பிறகு எப்போது? தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்த திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, தொடந்து போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

தொகுப்பு - வி.சி.வில்வம்

Read more: http://viduthalai.in/page-4/79530.html#ixzz30QHvSKnX

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் பதிப்பகத்தார் பயன்பெற்ற பயிற்சிப் பட்டறை


சென்னை ஏப். 30- இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற சென்னை புத்தகச் சங்கம நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பதிப்பகத்தாருக்கும் பதிப்பகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆலோசனைகள், புதிய உத்திகள் மற்றும் பதிப்பக தொழில் நுட்பம், விற்பனை திட்டமிடல் போன்றவை குறித்த பயிற்சிப் பட்டறை கடந்த ஏப்ரல் 21 முதல் துவங்கி 25 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகளில் நேஷனல் புக் டிரஸ்ட் இணை இயக்குநர் பரிதா நாயக், மதன் ராஜ் பென்னி குரியன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ், கோ.ஒளிவண் ணன், கே.எஸ்.புகழேந்தி, த.வேணுகோபால் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரிதா நாயக் கூறியதாவது:- இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதற்கண் என்னுடைய சென்னை புத்தகச்சங்கமத்தின் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த பயிற்சிப்பட்டறையை நாங்கள் நடத்தி வருகிறோம். சென்ற ஆண்டு பெரியார் திடலில் நடந்த சென்னை புத்தகச் சங்கமம் -2013 பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பை கண்டு இந்த ஆண்டு நாட்களை விரிவுபடுத்தி அய்ந்து நாட்களாக ஏற்பாடு செய்து நடத்தினோம். இந்த அய்ந்து நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக அதிக பட்டறிவைக் கொண்ட பதிப் பகத்துறையைச்சார்ந்த வல்லுநர்கள் மூலமும், பதிப்பகத்துறை வணிகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இவர்களின் ஆலோசனை, பட்டறிவுப் பாடங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். வரும் ஆண்டுகளிலும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம். உடனிருந்து ஒத்துழைத்த ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ், கோ.ஒளிவண் ணன் ஆகியோருக்கும் நேஷனல் புக் டிரஸ்ட் பென்னிகுரியன் மதன்ராஜ் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

இதனைத்தொடர்ந்து பேசிய சென்னைப்புத்தகச்சங்மத்தின் ஒருங்கிணைப்பாளர் வீ.அன்புராஜ் கூறியபோது கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற்றதே இந்த ஆண்டும் செயல்படுத்தும் ஆர்வத்தை தூண்டியது. வெற்றி பெற்றதே எங்களது ஆர்வத்தைக் கண்டு நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா நிறுவனமே முன்வந்து அய்ந்து நாட்களாக நீட்டித்து முழுமையாக நடத்தி தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற்றதால் முழுமையான பயிற்சிப்பட்டறை நடைபெறாதது போன்ற சிறு குறை இருந்தது. ஆனால் இம்முறை அய்ந்து நாட்கள் நடைபெற்றதன் மூலம் கலந்துகொண்ட பலரின் முகங் களில் நிறைவான நற்பயனை பெற்றதற்கான மகிழ்ச்சியைக்காண முடிகிறது. இதுவே இந்த பயிற்சிப்பட்டறையின் முதல்வெற்றியா கும். மேலும் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பதிப்பகத் துறையில் வெற்றிபெற்று சீரிய பதிப்பாளர்களாக உருவெடுக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஒத்து ழைப்பு அளித்து பயிற்சிப்பட்டறையை நடத்தித் தந்த நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இயக்குநர் சிக்கந்தர், இணை இயக்குநர் பரிதா நாயக், பென்னிகுரியன், மதன்ராஜ் ஆகியோருக்கும், உறுதுணை யாக இருந்து ஒத்துழைப்பு அளித்த கோ.ஒளிவண்ணன், கே.எஸ். புகழேந்தி, த.வேணுகோபால் மற்றும் பயிற்சிப் பட்டறை நல்ல வண்ணம் நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது உரையில் தெரிவித்தார். திரு.பென்னி குரியன் பேசும் போது பயிற்சிப்பட்டறை அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது, கலந்து கொண்ட பலரும் தங்களது அய்யங்களை ஆர்வமுடன் கேட்டனர். பதிப்ப கத்துறையில் தென் இந்தியா மிகவும் சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. முக்கியமாக சென்னை பெங்களூர் போன்ற நகரங்களாக எதிர்காலத்தில் ஆசியாவின் பதிப்பகத் துறையில் முக்கிய நகரமாக வளரும் வாய்ப்புள்ளது. ஆகையால் பதிப்பகத்துறையில் ஈடுபடுகிறவர்கள் பல்வேறு தொழில் நுணுக் கங்களை கற்றுக்கொண்டு சிறப்பான முறையில் பதிப்பகத் துறை யில் புகழ்பெற்று வளர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.புக ழேந்தி கூறும்போது:

ஒரு மரத்திற்கு வேர் மற்றும் விதை முக்கியமான ஒன்றாகும் ஆனால் அவை வெளியே தெரிவதில்லை. அது போன்றே பெரியார் சுயமரியாதை பிரச்சாரத்தின் வீ.அன்புராஜ் அவர்கள் இடைவிடாத முயற்சி மற்றும் ஊக்கத்தினால் இந்த பயிற்சிப் பட்டறை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக நடந்தது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக பயிற்சிப்பட்டறையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கலந்துகொண்ட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதான இந்த பயிற்சிப்பட்டறை வரும் காலங்களிலும் அனைவரின் ஆதரவோடு தொடரும். இந்த பட்டறையை வெற்றிகரமாக நிகழ்த்தி தந்த நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என நன்றியுரை கூறி பயிற்சிப்பட்டறையை நிறைவு செய்தார். சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற அய்ந்து நாள் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு பதிப்பகத்தின் சார்பாக அய்ம்ப திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் வீ.அன்புராஜ், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா இணை இயக்குனர் பரிதா நாயக் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பு செய்து பாராட்டினர்.

Read more: http://viduthalai.in/page-4/79531.html#ixzz30QI6iRXj

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.30- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங் கப்படும் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவி யல் பூர்வ முறையை உரு வாக்கி வெயிட்டேஜ் மதிப் பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கத் தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல் நிலைப் படிப்புக்கு 10 விழுக் காடு மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 விழுக்காடு மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 விழுக் காடு மதிப்பெண்ணும், ஆசிரி யர் தகுதித் தேர்வுக்கு 60 விழுக்காடு மதிப் பெண் ணும் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.

அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக, மேல் நிலைப் படிப்புக்கு 15 விழுக் காடு மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 விழுக்காடு மதிப்பெண் ணும், ஆசிரியர் தகுதித் தேர் வுக்கு 60 விழுக்காடு மதிப் பெண்ணும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற் றவர்களுக்கு பணி நியமனத் துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கு கிறது.

அதில், இடைநிலை ஆசிரி யர்கள் 90 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண் களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 விழுக்காடு மதிப்பெண் களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 விழுக்காடு மதிப்பெண் ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப் பெண்ணும், 50 முதல் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப் படுகிறது.

இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட் டேஜ் மதிப்பெண்கள் நிர்ண யிக்கப்படுகின்றன.

இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப் பெண்ணுக்கு மேல் எடுத்த வருக்கு வெயிட்டேஜ் மதிப் பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப் படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப் பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

மேலும், ஆசிரியர் தேர் வின் தேர்ச்சி வீதத்தில் வழங் கப்படும் 5 விழுக்காட்டை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 விழுக் காடு தளர்வு வழங்க உத்தர விட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனு தாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோ நாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலை மை வழக்குரைஞர் ஏ.எல். சோமை யாஜி ஆஜரானார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள் கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மேலும், 5 விழுக்காடு தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ் வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

மேலும், 60 லிருந்து 69 விழுக்காடு பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப் பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண் ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டு வந்தாலும் சரி. அது தொடர் பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப் படும் பழைய முறை ரத்து செய் யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/79541.html#ixzz30QIXM6hI

தமிழ் ஓவியா said...


சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குண்டு வெடிப்பு:

கண்டிக்கத்தக்கது - இதுவே கடைசியானதாக இருக்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அறிக்கை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மே தினத்தன்று (1.5.2014) காலை பெங்களூர் - கவுகாத்தி ரயில் பெட்டியில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்று அதில் ஒரு பெண் பலி; 14 பேர் பலத்த காயம் என்கிற செய்தி அதிர்ச்சிக்குரியது.

அமைதிப் பூங்காவில் இந்த நிலையா?

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கு எத் தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. பாபர் மசூதி இடிக் கப்பட்ட நேரத்தில் இந்தியா முழுவதும் கலவரங்கள் நடந்த நேரத்தில்கூட தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் வீசியதே!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் - அதுவும் தலை நகரத்தில் இப்படியொரு நிகழ்வு கண்டிக்கத் தக்கது - வெட்கப்படத்தக்கதாகும்! வேதனையும் மிகுகிறது!

அலட்சியம் ஏன்?

மூன்று நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற நிலையில் (அவரிடம் பல தகவல்கள் கிடைத்திருக்கவும் கூடும் அல்லவா!) மிகவும் விழிப்புடன் மத்திய மாநிலக் காவல்துறை புலனாய்வுத் துறை இருந்திருக்க வேண்டாமா?

குதிரை காணாமல் போன பின்பு லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்?

நாட்டில் இதற்கு முன் ஆங்காங்கு நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக் கப்படவில்லையே! இத்தகைய கால தாமதம்கூட வன் முறையாளர்களுக்கு, தீவிரவாதிகளுக்குத் தெம்பையும், உற்சாகத்தையும் ஊட்டக் கூடியவையல்லவா?

பாதுகாப்புப் போதுமானதல்ல

இரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக ஏதோ பெயரளவில் இரண்டொரு காவல்துறையினரை அமர்த்துகிறார்கள். இது போதுமானவையல்லவே!

தூங்கும் வசதியுடைய பெட்டிகள் திறந்தே கிடப்பது. தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

பொது மக்களிடம் அச்சம் ஏற்படும்

சாலைப் பயணத்தைவிட பாதுகாப்பானது - செலவு குறைவானது என்று இரயிலைத் தேர்வு செய்கிறார்கள் பொது மக்கள். அவர்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் நடந்திருப்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டே ஆக வேண்டும் வன்முறைக்கு மதமோ, நிறமோ கிடையாது. வன்முறை எங்கு, எவரால், கிளம்பினாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இதுவே கடைசியானதாக இருக்கட்டும்!

சென்னையில் நடந்த இந்தக் குண்டு வெடிப்பே இறுதியானதாக இருக்கட்டும்! காவல்துறை - பொது மக்கள் இரு தரப்பு ஒத்துழைப்பும் இருந்தால் கண்டிப்பாக இந்த வெறுக்கத்தக்க அநாகரிகச் செயலைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை!

மனிதநேயமே நாகரிகத்தின் அடையாளம்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
2.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79594.html#ixzz30bqYvVky

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் இரு சங்கராச்சாரிகள்


புதுடெல்லி, மே 2-மோடிக்கு எதிராக 2 சங்க ராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினர் ஹர ஹர மோடி என முழக்க மிட்டது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிர சாரம் மேற்கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பூரி சங்க ராச்சாரி நேற்று அளித்த நேர்காணலில் குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடி யவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட் சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார் பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

துவாரகை சங்கராச்சாரி கூறுகையில், என்னால் முடியா விட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப் பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங் கராச்சாரி உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவரது சீடர் முக்தீஸ் வரானந்த் பிரசாரம் செய் வார் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்ப தாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79593.html#ixzz30bqjgvRI

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு காகிதப் புலி: மம்தா கூற்று!

புரூலிய, மே 2- பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை "காகி தப் புலி' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர்ணித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் புரூலியா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசிய தாவது:

காகிதப் புலிக்கும், கம் பீரமான வங்கப்புலிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. மேற்கு வங்க சுந்தரவனத்தில் இருப் பவைதான் உண்மையான புலிகள்.

மதப்பிரிவினை: இந்துக் கள் மற்றும் முஸ்லிம்கள் இடையிலும், வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல் லாதோர் இடையிலும் பிரிவினையைத் தூண்டு பவர்களுக்கு பிரதமர் நாற் காலியில் அமர அரசியல் சாசனத்தின் அடிப்படை யில் எந்த உரிமையும் இல்லை.

மதச்சார்பின்மைதான் பல்வேறு மதம், நிறம், இனங்களைச் சேர்ந்தவர் களை ஒன்றிணைக்கும் சக்தி என்பதை உணர்ந்தே பாபா சாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அர சியல் சாசனத்தை உருவாக் கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.

Read more: http://viduthalai.in/e-paper/79592.html#ixzz30bqrIJu5

தமிழ் ஓவியா said...


கோடையில் இளைப்பாற்றிட்ட குளிர்தரு புத்தகச் சங்கமத் திருவிழா!


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடை பெற்றதையொட்டி ஏகப்பட்ட களே பரம்! கெடுபிடிகள் -இத்தியாதி! இத் தியாதி!

இந்த பரபரப்புக்கிடையில் ஆர வாரமில்லாத ஆக்கப் பூர்வ அறிவுத் திருவிழா - அறிவுத் தேரோட்டம் ஒன்று தலைநகர் சென்னையில் நடைபெற்றது. (உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதியையொட்டி) ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிறு இரவு 9 மணியோடு முடிவடைந்தது. அதுதான் சென்னை புத்தகச் சங்கமம் என்ற திருவிழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான தந்தை பெரியார் அறக்கட்டளை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, இணைந்து, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் இன்னும் சிலரது அரிய ஒத்துழைப்புடன் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் உலகை விழுங் கும் மனிதநேயப் பெரு விழாவாக இந்த புத்தகத் திருவிழா, நகரின் மய்யமான ராயப்பேட்டை ஓய். எம்.சி.ஏ. மைதானத்தில் விசாலமான வியத்தகு ஏற்பாடுகள் - பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு நடைபெற்றது.

210 பதிப்பகத்தார்களின் கடைகள் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல; ஆங்கில வெளியீட்டவர்களும் கடைவிரித்தனர்; கொள்பவர்களை ஈர்த்தனர். மாலை வேளைகளில் கண்ணுக்கும் காட்சிக்கும் அறிவைத் தூண்டும் அருமையான அற்புதக் கலை நிகழ்ச்சிகள், உரைகள்!

வருவோர்க்கும் வாங்குவோருக்கும் வசதியாக மருத்துவ அவசரப் பிரிவுகூட!

உணவுக் கூடங்களும் பல் வகையில்! குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் வந்தனர்; வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்!

சென்னை ஊடகங்களில் இதற்குப் போதிய விளம்பரம் கொடுக்கப்பட வில்லை; காரணம் வெளிப்படை.

இப்பொருள் இவர் வாய் கேட்டால்...?

இப்பொருள் இத்தனையது என்றால்!... எப்படி விளம்பரப்படுத்துவது? பத்திரிகா தர்மபாவங்களில் அது சேர்ந்து விடாதோ என்ற விரிந்த பார்வை; என்னே விசித்திரக் கண்ணோட்டம்!

என்றாலும் ஒரு கோடி புத்தகங்கள் - ஏராளமானோர் வருகை!

எல்லாக் கருத்து கொள்கை யாளர்க்கும் எவ்வித வேறுபாட்டுக்கும் இடமின்றி சம வாய்ப்புத் தரப்பட்டது அமைப்பாளர்களால்!

புத்தகர் விருது என்ற புதுமை வெளிச் சம் இட்டது புதுமையிலும் புதுமை!

அரிய பணிகளை புத்தகங்களைப் பரப்புவது இளைஞர்களிடம் அறிவைக் கொண்டு செல்லும் தொண்டறப் பணியை முன்னெடுத்ததாக அமைந்தது.

புத்தகர் விருதுக்கு தேர்வு செய்த நான்கு பேர்களும் புத்தகப் புத்தொளி பாய்ச்சும் பொலிவுறு வைரங்களாகும்!

1. பொள்ளாச்சி நசன்
2.. பழங்காசு ப. சீனிவாசன்
3. தி.மா.சரவணன்
4. புத்தகத் தாத்தா சண்முகவேல்

இந்நால்வர் போன்று நானிலம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, விளம்பரம் விரும்பாது எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடக்கமிகு தொண்டறப் பணி செய்யும் தூய்மையானவர்கள் ஏராளம் உண்டு.

இவ்வளவு சிறப்புகளைச் செய்த பெருமை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய அமைப்பாளர்களாக உழைப்பை சளைக்காது தந்த பதிப் பாளர்கள் எமரால்ட் கோ. ஒளி வண்ணன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கே.எஸ். புகழேந்தி, விழிகள் பதிப்பகம் உரிமையாளர் த. வேணுகோபால், பெரியார் திடல் நிர்வாகி ப. சீத்தாராமன் தலைமையில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும், பங்கேற்ற பதிப்பகத் தினர் முதல் கலை நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களே!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/79577.html#ixzz30brDFdeM

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறைப் பொதுக் கூட்டம்


சென்ற 18.4.2014 மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத் தில் உங்களை சந்திக்க மாலை 6.45 மணியளவில் வந்தேன். அதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கூட்டம் முடிந்து மேடையை விட்டுத் தாங்கள் இறங்கி வரும்பொழுதும் தள்ளுமுள்ளு ஆகி விட்டது. நெரிசல் மிகுதியால் தங் களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.

மயிலாடுதுறைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர் களைப் பற்றிக் குறிப்பிட்டவை யாவும் வரவேற்கத் தக்கவையாகும். வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டது (அதா வது மோடி பிரதமராக வேண்டும்) திடுக் கிடும் செய்தியாகும். இதை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனை வரின் தலையாய கடமையாகும்.

- சு. பாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நூல் நிலையம், மேலப்பாதி

Read more: http://viduthalai.in/page-2/79583.html#ixzz30brSuvRG

தமிழ் ஓவியா said...


சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது


பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.

இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bryRxDl

தமிழ் ஓவியா said...

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை

திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.

இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bs6awvf

தமிழ் ஓவியா said...


காரவன் படப்பிடிப்பு


இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.

மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.

அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி - அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!

மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.

(காரவன், ஏப்ரல்-1, 1977

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsqtAXw

தமிழ் ஓவியா said...

வாருங்கள், கடவுளாகலாம்!

இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.

வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt8ohRO

தமிழ் ஓவியா said...


இந்திய விஞ்ஞானியும் மூடநம்பிக்கையும்

முயன்ற காரியம் முடிய வேண்டுமென்பதற்காக கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தாயத்துக்களை அணிகின்றனர்; தேங்காய் உடைக்கிறார்கள் என்று பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஒய். நாயுடம்மா கூறினார்.

பெங்களூருவில் பல்கலைக் கழகத்தில், விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் பற்றி விரிவாக அளவிடும் போது, நாட்டில் பரவியுள்ள பலவிதமான மூடநம்பிக்கைகளின் பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயல் என்றும் குறிப்பிட்டார்.

கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று சொல்லி ஏமாற்றும் மந்திரவாதிகளையும் சோதிடர்களையும், கைரேகை பார்ப்பவர்களையும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களுக்கும் பத்திரிகைகளில் அதிக இடம் கிடைக்கிறது. அதிகமாகப் படித்தவர்கள் கூட, ஒரு செயலைத் தொடங்குமுன் நல்ல நேரம், நல்லநாள், நல்ல வாரம், பார்க்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளின் விளைவாக, சூரிய சந்திரனை ராகுவும் கேதுவும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உண்டாகின்றன என்று எண்ணுகிறார்கள். பட்டினியால் செத்தவர்களுக்கு எப்படி ஏராளமான உணவுப் பொருள்களை பார்சல் அனுப்ப முடியும் என்று டாக்டர் நாயுடம்மா கேட்டார்.

மதத்தின் பேரால் பலரைச் சிலர் சுரண்டுவதன் விளைவுதான் என்று அவரே விடையும் பகர்ந்தார். மந்திரங்களினால் தேவையான உணவுப் பொருள் களைக் கொடுக்க முடியுமென்றால், இந்த உலகம் வாழ்வதற்கு வசதியான இடமாக இருக்கும். மழை பெய்வதற்காக மழைக்காலத்தில்தான் யாகம் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

இன்றைய தினம், இந்தியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரப்படும் விஞ்ஞானக் கல்வி, பரிசோதனை செய்வதற்கேற்ற வசதிகள் இல்லாமையால் தந்திரம் (மாஜிக்) போல் தாழ்வான நிலையை அடைகிறது.

தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btHb58z

தமிழ் ஓவியா said...

அய்யா உடைத்த அட்வான்ஸ் பிள்ளையார்

1953ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் தேதி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் அதன் போர்முறைத் திட்டம் பற்றியும், பொதுவாக கழகத் தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கிக் கொண்டு வருகிறார்.

பிள்ளையாரின் பிறப்பு ஆபாசங்களை புராணத்தின் பகுதிகளில் இருந்து எடுத்துக் கூறி பிள்ளையார் உடைப்பு போராட்டம் ஏன் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் கொண்டு வந்திருந்த பெரியதும் சிறியதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகளை எடுத்து கூட்டத்தாரிடம் காண்பிக்கிறார்.

இரண்டு பொம்மைகளும் வண்ணப் பொம்மைகள். இதுபோன்ற வண்ணப் பிள்ளையார் படங்களையோ அல்லது மண் பிள்ளையார் பொம்மைகளையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை 27ஆம் தேதியன்று உடையுங்கள் என்று அய்யா கூறுகிறார்.

கூட்டம் ஆரவாரமெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து 27ஆம் தேதி பிள்ளையார் உடைப்பதற்கு அட்வான்சாக சாம்பிளாக என் கையில் உள்ள இந்த சின்ன பிள்ளையாரை இன்றைக்கு தூளாக்குவோமா? என்று கூட்டத்தை நோக்கிக் கேட்கிறார்.

கூட்டத்தினர் மகிழ்ச்சிப் பெருக்கில் உடைப்போம், உடைப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து-

சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன் என்று பக்தர்களால் கூறப்படும் பிள்ளையார் கடவுள் உடைக்கப்பட்டது மேடையிலே, மேஜையின் மேலே - புரட்சி வேந்தர், புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் தம் கையால்.

எங்கெங்கும் ஆனந்த ஒலிகள்! எக்காள முழக்கம், பந்தலெங்கும் எதிரொலித்தது. கணபதி ஒழிக! விநாயகன் ஒழிக! பிள்ளையார் ஒழிக! என்று கிளம்பிய முழக்கம் அடங்க வெகுநேரம் ஆகியது.

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btSYGiU

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் மதவெறி: சீதாராம் யெச்சூரி கண்டனம்


புதுடில்லி, மே 2-மக்கள வைக்கான இறுதிக்கட்டத் தேர்தல்கள் இன்னும் இரு வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் அதில் பெரிதாக ஆதாயம் பெறும் நோக்கில் மிக நேர்த்தியாக பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.

தலையங்கத்தில்...

இது தொடர்பாக கட்சி யின் பிரச்சார ஏடான பீப் பிள்ஸ் டெமாக்ரசி வாரப் பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதா ராம் யெச்சூரி எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட் டுள்ளதாவது:

அடுத்த இரு வாரங் களில் நடைபெற உள்ள இறுதிக்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிறைய தொகுதிகள் உத் தரப்பிரதேசம், பிகாரைச் சேர்ந்தவை.

இந்தி மொழிப் பகுதி களான இவை மக்கள வைக்கு ஏராளமான உறுப் பினர்களை அனுப்பக்கூடி யவை. வகுப்புவாதச் சக்தி களுக்கு ஆதரவாக உள் ளவை இந்தப் பகுதிகள்.

வகுப்புவாத விஷத்தை பரப்புவதும் மத ரீதியில் வாக்காளர்களை இரண் டாக பிரிப்பதும், பா.ஜ.க. வுக்கு ஆதாயத்தைத் தர லாம். ஆனால் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, வகுப்பு நல்லிணக்கத்தை இதனால் விலை கொடுத் தாக வேண்டிவரும்.

வாக்கு வங்கி அரசிய லின் மிக மோசமான அம் சமே பெரும்பான்மை இந் துக்களை ஒன்று திரட்டு வதாகும். அது நேர்த்தியாக நடைபெறப் போகிறது.

பாஜக பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடியே வங்காளத்தில் பேசும்போது, எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்

மூட்டை முடிச்சுகளு டன் போவதற்கு வங்க தேசத்தவர்கள் தயாராக இருக்கவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். வகுப்புவாதத் தாக்குத லுக்கு இந்துத்துவா ஆதர வாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே மோடி விடுத்த எச்சரிக்கையின் மறைமுக அர்த்தம்.

வங்கதேசத்தவருக்கு எதிரான முழக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனது வகுப்புவாத முழக் கம் எடுபடாத இடங்களில், தனது உண்மை முகத்தை மறைத்து வளர்ச்சிபற்றி பேசும் பாஜக, பிற இடங் களில் தேர்தல் ஆதாயத் துக்காக வகுப்பு வாதத்தை உசுப்பி வெறி ஏற்றுகிறது. இடத்துக்கு இடம் இரட்டை வேடம் போட்டு பாஜக செயல்படுகிறது. - இவ்வாறு சீதாராம் யெச்சூரிய எழுதியுள்ள தலையங்கத்தில் குறிப்பிட் டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/79557.html#ixzz30btvaKBl