Search This Blog

21.5.14

அப்பட்டமான மனுதர்ம ஆளுமை-விசித்திர திருமணத் தம்பதிகளின் விபரீத கல்யாணம்!


பார்ப்பனர்கள் எவ்வளவு ஒழுங்கக் கெட்டவர்களாயினும் அவர்களைப் பற்றித் தாழ்த்தியோ, விமர்சித்தோ மற்ற  பார்ப்பனர் குறிப்பாக அவர்கள் வசம் உள்ள ஊடகங்கள் எழுதுவதோ, பேசுவதோ, விமர்சிப்பதோ இல்லை; மாறாக, பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சமர்கள் என்றால் எவ்வளவு மோசமாக சித்தரித்து, சிறுமைப் படுத்துவதை அவர்கள் தர்மமாகவே கருதி, செயல் படுவது கண் கூடு!

இன்றும் இது அப்பட்டமான மனுதர்ம ஆளுமை என்பதைத் தவிர வேறு என்ன?

தந்தை பெரியார் கூறிய அனுபவ மொழிகள் இன்றும் பொய்த்துப் போவதில்லை.

1) காஷ்மீர்ப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரி பார்ப்பானுக்கு நெறிகட்டும்

2) நம்மாளுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டுக்குள்ளே உள்ள சாமனைத் தூக்கி வெளியில் எறிவான்; அவாளுக்குப் பைத்தியம் என்றால் அவன் வெளியில் உள்ள சாமனைத் தூக்கி வீட்டுக்குள்ளே எறிவான்!

ஊழல் பிரச்சாரத்திற்குக்கூட, நிறம் இருக்கிறதே! கறுப்பு மனிதர் என்றால் கடுமையான அக்கினி வீச்சு அனல் பிரச்சாரம்!

சிவப்பு அல்லது மஞ்சள் மனிதர் என்றால்  புனித கங்கா ஜலத்தால், பிராயச் சித்தப்படுத்தப் பட்ட புத்தவதாரங்களைப் போன்று ஒரு பிரமைப் பிரச்சாரம்.

ஒழுக்கப் போதனையைச் செய்யும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்ற பாபநாசம் பார்ப்பனர் வீட்டை விட்டு ஓடியவர்.

அதுபோல மஞ்சக்குடி அய்யர்கள் இன்று ஆனந்த சரஸ்வதிகளாகி சூத்திர முதலாளிகளும், பிறரும் அவரது காலடியில் பணத்தைக் கொட்டோ கொட்டென்று கொட்டும் நிலைமை!

காஞ்சி சங்கர மடத்தினர் எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றங்கள் - மகளிர்பால் தவறாக நடந்ததாக மகளிர் எழுத்தாளர்களே ஏடுகளில் பேட்டிகள் கொடுத்தாலும்கூட துளியும் பெருமை குன்றாத வகையில் பெரும் பிரச்சார அலைகளுக்குப் பஞ்சமா?

நாராயணதத் திவாரி என்ற உ.பி. பார்ப்பன முன்னாள் முதல் அமைச்சர், பிறகு கவர்னர் - மத்திய அமைச்சர் - இப்படியெல்லாம் பதவி வகித்தவர் - இப்போது இவர் 90 வயதில் திருமணம்நடத்திக் கொண்டார் - புதிதாக அல்ல, Retrospective Effect

முன்பிருந்தே அமுலாகும் என்று அறிவிக்கப்படும் சட்டங்கள் போல அத்திருமணம் நடந்துள்ளது தான் விசித்திரம்! இந்த மகா மகா யோக்கிய சிகாமணி நாராணதத் திவாரி கவர்னர் மாளிகையிலேயே (கடைசியாக ஆந்திரா வில்) நடத்திய கிருஷ்ண லீலைகள்பற்றி நாடே சிரிப்பாய்ச் சிரித்தது!

35 வயது மகன் இவர்தான் எனக்குத் தந்தை என வழக்குப் போட்டு, இவர் மறுத்தபிறகு, மரபு அணு சோதனை செய்த நிலையிலும் மறுத்தார்!
பிறகு அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகு வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார்!

இந்த நாராயணதத் திவாரி என்ற பார்ப்பனர் பெரும் பெரும் பதவி  வகித்த போதெல்லாம் இவரை சரிக் கட்ட இப்படி ஒரு பலஹீனத்தையே பலரும் பயன்படுத்திக் கொண்டனர்!

தமிழ்நாட்டில் முன்பு ஒரு பிரபல பத்திரிகையாளர் இவர் இதயத்தை இதன் மூலம் தான் பேச வைத்து சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வதில் புகழ் பெற்றார்!

மேலும் விவரம் மிகவும் விரசமாகும் என்பதால் இத்துடன் நிறுத்துவோமாக!

இவர் முதலில் தன் பிள்ளை இல்லை என்றவர் பிறகு  மகன் பாசம் பீறிட்ட நிலையில் ஏற்றுக் கொண்டார். என்னே ஒழுக்கம்!

பிறகு ... மகனின் தாயினைப் புறக்கணித்த நிலைமாறி, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கோ என்று திருமணம் செய்து கொண்ட வைபவத்தினைப் பத்திரிக்கைகள் படத்துடன் வெளியிட்டு மகிழ்ந்துள்ளன!

முன் தேதியிட்ட திருமண நிகழ்வைப் பாராட்டி வாழ்த்தினர் பல ஊடக ஒழுக்கங் காப்போர்!

மனுதர்மப்படி அவாள் எவ்வளவு தவறு செய்தாலும் அது ஒரு போதும் குற்றமாகாதல்லவா?

-------------------------------- ஊசி மிளகாய் 21-5-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

Read more: http://viduthalai.in/e-paper/80622.html#ixzz32J3KWHae

73 comments:

தமிழ் ஓவியா said...


அயோத்திதாசப் பண்டிதர்


ஒடுக்கப்பட்ட மக்களால் என்றென்றைக்கும் மறக்கப்பட முடியாத பெயர்.

பவுத்த நெறிக்குப் புதுக் குருதியைப் பாய்ச்சியவர் பூர்வ காலத்தில் பவுத்தர்களாய் இருந்தவர்கள் ஆதி திராவிடர்கள் என்று நிறுவியவர்.

அவர் கள் இந்துக்கள் அல்லர் என்றும் உறுதியாகக் கூறியவர்.

அண்ணல் அம்பேத்கர் பவுத்த மார்க்கத்தைத் தழுவியதற்கு ஒரு வகையில் முன்னோடியாக இருந்த வர் என்று கூடச் சொல் லலாம்.

திராவிடக் கழகம் என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி நடத்தி வந்த ஜான்ரத்தினம் அவர் களுடன் இணைந்து திரா விடப் பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கிவர் (1882).

1907 ஜூன் முதல் தேதியன்று அவர் தொடங் கிய மற்றொரு இதழ் ஒரு பைசா தமிழன் அவருக்குப் பிறகு அவரின் மகன் பட்டாபிராமன் 14 மாதங்கள் இவ்விதழை நடத்தினார்; அதற்குப்பிறகு ஒரு பைசா தமிழன் இதழை கோலார் தங்க வயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார் நடத் தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அந்தக் கால கட்டத் தில் இதழ்நடத்துவதற்கு மரண தைரியம் இருந் திருக்க வேண்டும்.

1881இல் இந்தியக் குடிமக்கள் கணக்கெடுப்பு முதன் முதலாக நடந்த போது, சாதியற்ற திராவிடர்கள், அல்லது ஆதித் தமிழர்கள் என்று பதிவு செய்யுமாறு தாழ்த் தப்பட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் என்ற சொல்லாக்கத்தை பெரியார் தான் கண்டுபிடித்தது போலவும், அந்தப் பெயரால் தமிழ் உணர்வு குன்றி விட்டது போலவும் குறுக்குச் சால் ஓட்டும் குறுக்குப் புத்திக்காரர்களின் காதுகளைத் திருகும் வகையில், சாதியற்ற திராவிடர்கள் அல்லது ஆதித் தமிழர்கள் என்று மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் குறிப்பிட்ட தன் மூலம் இரண்டும் வேறுபாடுடையதல்ல என்று ஆணி அடித்தது போலவே அறைய வில்லையா?

திராவிட மகாசபை என்று ஏன் இந்தப் பெயரில் அமைப்பைத் தொடங்கினார் என்பதையும் தமிழ்த் தேசிய தீரர்கள் தெரிந்து கொள்வார்களாக!

காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்டவர் அயோத்திதாச பண்டித ரிடம் கல்வி கற்றதால் இப்பெயரை ஏற்றார்.

இன்று அவர் பிறந்த நாள் (1845) மறைவு 1914 மே 5.

வாழ்க அயோத்திதாசர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80613.html#ixzz32J5C3HWf

தமிழ் ஓவியா said...


இன்றைய நம் கேள்வி???


தமிழ்நாடு - அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்கள்? எந்த அமைச்சருக்கு எந்த இலாகா என்பதை நூறு சதவீதம்கூட வேண்டாம் - தோராயமாக 50 சதவீதம் சரியாகச் சொல்லக் கூடியவர்கள் யாரேனும் உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/80621.html#ixzz32J5NnA4W

தமிழ் ஓவியா said...
சபாஷ்! பீகார் வழிகாட்டுகிறது!

பீகார் முதல்வராகிறார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ராம் மன்ஜி

பாட்னா, மே 20- பதவி விலகிய பிறகு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்க முடியாது என பிடிவாதமாக கூறிய நிதிஷ் குமார், தனது நெருங்கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை பீகாரின் புதிய முதல்வராக தேர்வு செய்துள்ளார். இதனால், பீகார் அரசியலில் 2 நாளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

மக்களவை தேர்தலில், பீகாரில் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் படுதோல் வியை சந்தித்தது. 40 தொகுதி களில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, நிதிஷ் குமார் முதல்வர் பதவியி லிருந்து விலகினார். கட்சி தலை வர் சரத் யாதவ்வின் நிர்பந்தத்தினால்தான் பதவி விலகியதாகவும் சர்ச்சை கிளம்பியது.

நிதிஷ்குமார் பதவி வில கியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய் வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் பாட்னாவில் நடந்தது. இதில், பெரும்பாலான எம்எல்ஏக்களும் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வேண்டும், தனது பதவி விலகல் முடிவை அவர் திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த, நிதிஷ்குமார், ஒருநாள் அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, நேற்று காலை பேட்டியளித்த கட்சி தலைவர் சரத் யாதவ், நிதிஷ்குமார் பதவி விலகியதுதான் இறுதி முடிவு. அதில் மாற்றமே கிடையாது. புதிய முதல்வர் தான் தேர்வு செய்யப்படு வார் என திட்டவட்டமாக அறிவித்தார். அதே போல, மதியம் நடந்த எம்எல் ஏக்கள் குழு கூட்டத்தில் நிதிஷ்குமாரும் தனது முடிவை மாற்றிக் கொள்ள சம்மதிக்கவில்லை. இதனால், புதிய முதல்வரை நிதிஷ்குமாரே தேர்வு செய்ய வேண்டுமென எம்எல் ஏக்கள் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார், மாலையில் புதிய முதல்வராக தனது நெருங் கிய நண்பரான ஜிதன் ராம் மன்ஜியை தேர்வு செய்து அறிவித்தார். இதற்கு, கட்சி தலைவர் சரத் யாதவ், பீகார் மாநில தலைவர் பசிஸ்தா நாராயணன் சிங் உட்பட அனைத்து தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

68 வயதாகும் ஜிதன் ராம் மன்ஜி, நிதிஷ்குமார் அமைச் சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

தலித் சமூகத்தை சேர்ந் தவர். இதைத்தொடர்ந்து, அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முதல்வர் தேர்வு செய்யப் பட்டதால், பீகார் அரசிய லில் 2 நாளாக நீடித்த வந்த குழப்பம் முடிவுக்கு வந் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80620.html#ixzz32J5WDFDH

தமிழ் ஓவியா said...


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!


இலங்கைப் போர் குற்றச் செயல்கள் விசாரணைக்கு இலங்கை அரசு இடமளித்தே ஆக வேண்டும்!

மனித உரிமை கண்காணிப்பகம் உறுதி!

ஜெனீவா, மே 20- இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர் பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப் பகம் மீண்டும் வலியு றுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக விசாரணை களை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதி யளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

யுத்தக் குற்றச் செயல் கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர் பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையா ளர் நவநீதம்பிள்ளை யிடம் தீர்மானத்தில் கோரப்பட் டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

அய்க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை யின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள் ளதாக மனித உரிமைப் பேரவையின் ஆசிய பிராந் தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தம் நிறை வடைந்து அய்ந்து ஆண்டு கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் நம்பக மானதும் பக்கச் சார்பற்றது மான விசாரணைகள் நடத் தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பேர வையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விசா ரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக் கப்பட்டவர்கள் நியாயத் திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள், ஊடகவி யலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டா ளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோ கிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்ட வில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தத்தில் உயிர் நீத்த வர்களுக்கு அஞ்சலி செலுத் தவும் இலங்கை அரசாங் கம் அனுமதி மறுத்திருந்த தாகத் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80617.html#ixzz32J5kq3pW

தமிழ் ஓவியா said...


நடத்தப்படக்கூடாது


அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரி யங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ, மற்றெதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.

- (குடிஅரசு, 29.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/80628.html#ixzz32J5y3Hbg

தமிழ் ஓவியா said...


13 சதவீதத்தினருக்குப் பிரதிநிதித்துவம் 4 சதவீதம்

16ஆம் மக்களவைத் தேர்தலில் சில அம்சங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை - கவலையுடன் சிந்திக்கப்படக் கூடியவையும் கூட!

13 சதவீத மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களுக்குக் கிடைத்துள்ள இடங்கள் 4 சதவீதமே!

பி.ஜே.பி. சார்பாக இந்தியா முழுமையும் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 7 பேர்; இந்த ஏழு பேரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்த ஏழு தொகுதிகளில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மூன்று இடங்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பிஜேபிக்கு வாக்குகள் அறவே கிடைக்காது என்ற பகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் மூன்று இஸ்லாமி யர்களைத் தேடிப் பிடித்து நிறுத்தி வைத்துள்ளனர் இதன் நோக்கம் வெளிப்படை!

எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்று சொல்லுவதில்லையா? அந்தக் கணக்கைச் சேர்ந்ததுதான் இதுவும்.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலோ, உத்தரப் பிரதேசத்திலோ, ஒரு முஸ்லீமுக்குக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அவர்கள் அறவே புறக்கணிக்கப் பட்டுள்ளனர். சிறுபான்மையினரை மாற்றாந் தாய் மனப்பான் மையுடன் அணுகும் கொள்கையைக் கொண்ட ஓர் ஆட்சியில் தங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக் கும் நாடாளுமன்றத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பது கவலை தருவதாக உள்ளது.

அதுவும் யூனிபார்ம் சிவில் கோட் கொண்டு வருவோம் என்றும், காஷ்மீர் மாநிலத்துக்கென்று பிரத்தியேக வாய்ப்புள்ள 370 ஆவது பிரிவை அகற்றுவோம் என்றும் தேர்தல் அறிக்கையிலேயே வெளிப்படுத்தியவர்களின் ஆட்சி மத்தியில் அமைந் திருக்கும்போது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை யாருக்கோ வந்தது என்ற மனப்பான்மையில் மற்றவர்கள் இருந்து விடாது, இந்துத்துவா கண்ணோட்டத்தோடு மத்திய அரசு செயல்படும் பொழுது, அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாதுகாப்பதில் கூடுதலான கவனமும், கவலையும் மற்றவர்களால் செலுத்தப்பட வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பகுதியில் பி.ஜே.பி.யின் கொள்கைதானே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) கொள்கையல்ல என்று பிஜேபியைச் சேர்ந்த சில தலைவர்கள் சொன்னதுண்டு. அதனை அவர்கள் எந்த அளவு கடைப்பிடிக்கிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.

உலகில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் முதல் மூன்று நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை முதலில் தெரிந்து கொள்வதோடு புரிந்து கொள்வது என்பது முக்கியமாகும்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக ஓர் அரசே செயல்படுகிறது என்றால் சர்வதேச அளவில் பல பாதிப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும்; வெளியில் இருக்கும் பொழுது எப்படியோ பேசலாம் எழுதலாம். ஆட்சிப் பொறுப்புக்கு வரும் பொழுதுதான், பொறுப்பின் வலி என்ன என்பது விளங்கும்.

முஸ்லீம்களாவது ஓரளவு அரசியல் தன்மை பெற்றுள்ளார்கள், கிறித்தவர்கள் அந்த நிலைக்கு இன்னும் தயாராகவில்லை என்பதுதான் உண்மை.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் கட்டளைக்கு அடி பணிந்தால், மதச் சார்பின்மை தகரக் கூடிய ஒரு நிலையை உண்டாக்கி விடும் என்பதை மறந்து விடக் கூடாது. மக்கள் பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன; அவற்றில் கவனம் செலுத்துவதுதான் ஓர் ஆட்சிக்கு புத்திசாலித்தனமானதாக இருக்க முடியும். எந்தத் திசையில் ஆட்சி நகர்கிறது என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-2/80632.html#ixzz32J68fHY8

தமிழ் ஓவியா said...


நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்


பிற இதழிலிருந்து

நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்

அன்பார்ந்த நாளைய பிரதமர் அவர்களே, இதயப்பூர்வமான வாழ்த்துக் களோடு இதை எழுதுகிறேன். முழு நேர்மையோடு இதை நான் சொல்கிறேன். இதை தைரியமாகச் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால், இந்த உயர்ந்த பொறுப்பை நீங்கள் அடைவதை பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் பிரதமராவதைப் பார்த்து லட்சக்கணக்கான மக்கள் பரவச நிலையில் இருக்கும் அதேவேளையில், மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் கலவர மனநிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீங்கள் இந்த இடத்திற்கு வரப் போகிறீர்கள் என்று சொன்னவர்களை சில நாட்களுக்கு முன்புவரை நான் நம்ப வில்லை. ஆனால், ஜவஹர்லால் நேரு உட்கார்ந்த, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்த போராட்டத்திற்குப் பிறகு மற்றொரு குஜராத்தியான மொரார்ஜி தேசாய், பின்னர் உங்கள் அரசியல் குருவான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் நீங்களும் அமர்கிறீர்கள்.


தமிழ் ஓவியா said...

அதில் நீங்கள் அமர்ந்துவிடக்கூடாது என்று விரும்பியவர்கள், நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.இத்தகைய அபூர்வமான சிறப்பிடம் உங்களுக்குக் கிடைப்பது பற்றி எனக்குள்ள பெரிய சந்தேகங்களைத் தாண்டி, உங்களது நலிவடைந்த சமூகம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருவர் இந்தியப் பிரதமராக வருவதை நான் மதிக்கிறேன். எல்லோரும் சமம் என்ற நமது அரசியல் சட்டத்தின் பிர தானமான நோக்கத்தை அது நிறை வேற்றுகிறது.

தேசம் பற்றிய மறுபார்வை

நீங்கள் தேநீர் விற்றவர் என்று கண்மூடித்தனமாகவும், ஏளனமாகவும் சிலர் பேசியபோது, எனக்கு வயிற்றைப் பிரட்டியது. தனது வாழ்வாதாரத்திற்காக தேநீர் செய்து அதை விற்றவர் இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் இதையெல்லாம் சொன்னபிறகும், திரு. மோடி அவர்களே, நீங்கள் இந்த உயர் பொறுப்பில் அமரப் போவது லட்சக் கணக்கானவர்களிடம் கலவர மனநிலையை ஏன் ஏற்படுத்தி யுள்ளது என்பதற்குள் நான் செல்ல வேண்டும். 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவா அல்லது எதிராகவா என்றுதான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது மற்ற எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா, இல்லையா..? என்பதுதான் மய்யப்பொருளாக இருந்தது. இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின்(உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 69 சதவிகித மக்கள் உங்கள் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். நமது தேசம் என்பதன் உள்ள டக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார் கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்ய வேண் டும் என்று உங்களை நான் வலியுறுத் துகிறேன்.

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையோருக்கு உறுதியளித்தல்

ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக்குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந் திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையின ருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர் தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசிமெழுகுவது ஆகிய வேலை களையும் நீங்கள் செய்யக்கூடாது.

அதை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே. அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப் படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..?நீங்கள் ஊர்வலங் களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்க வேண்டாம் திரு.மோடி அவர் களே, அவர்களுக்கு நம்பிக்கையூட் டுங்கள். வளர்ச்சி என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. குர் ஆன் ஒரு கையில், மறு கையில் லேப்டாப் என்ற வார்த்தை களிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலைகாரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சியில் உள்ளது. முன்பெல் லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர் கள் வைத்திருப்பார்கள்.

அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங் களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப் பட்டதும்தான். ஜாக்கிரதை, இந்தக் கதி தான் உனக்கு நேரும் என்பது ஜனநாயகத் தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது,

தமிழ் ஓவியா said...

திரு.மோடி அவர்களே. இதற் குரிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அது மட்டுமல்ல, அதற்கான உரிமையும், செய்ய வேண்டிய அவசியமும் கூட இருக்கிறது. சிறுபுத்தியுள்ள ஆலோசனை களைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அச்சத்தை உங்களால் போக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மை யினரும், வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மேற்கு பஞ்சாபிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர் கள் ஆகியோரும் தங்கள் மனங்களில் வடுக்களைச் சுமக்கிறார்கள். உண்மை யான அல்லது பொய்யான தூண்டுதல் காரணமாக திடீரென்று கலவரம் ஏற்படும் என்றும், அதனால் பலமடங்கு பிரதிபலன் கிடைக்கும் என்கிற அச்சமும் உள்ளது. இந்தக் கலவரத்தில் குறிப்பாக பெண்கள் தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தையும், சுரண்டலையும் தாங்கிக் கொண்டு தலித்துகள் மற்றும் பழங்குடியினர், அதிலும் குறிப்பாக பெண்கள், இருக் கிறார்கள். சிறுமைப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அமைதியின்மையை நோக்கி இழுக்கப்பட்டு, குடிமகன், மனிதன் ஆகிய தகுதிகளையே இல்லாமல் போகச் செய்கிறது.

தமிழ் ஓவியா said...

அவ்வாறு இழுக்கப்படுவதை உரக் கவும், வெளிப்படையாகவும் கவனி யுங்கள், திரு. மோடி அவர்களே. இதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதல் குரல் உங்களுடையதுதான் என்ற நம்பிக்கையை உங்களால் அளிக்க முடியும்.பன்மைத்துவம் கொண்ட குடியரசிடம் ஒற்றைத்தன்மை என்கிற மன்னரின் வார்த்தைகளைக் கொட்டும் அதிகப் பிரசங்கித்தனம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்தியா என்பது பலவகைப்பட்ட வளங்களைக் கொண்ட வனமாகும். பலவகைகளைக் கொண்ட மண்ணை வளர்த்தெடுக்கவே அது விரும்புகிறது. அதன் முன்னால், ஒரே இனம், ஒரே கலாச் சாரம் மற்றும் ஒரே கடவுள் என்பதை முன்னிறுத்தக் கூடாது. அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு, பொது சிவில் சட்டம் என்கிற பழைய மற்றும் சம்பிரதாயமான கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவை பற்றி உங்களது நிலைப்பாடு மற்றும் வடக்கு, வட மேற்கில் உள்ள இந்து அகதிகள் மற்றும் கிழக்கு, வடகிழக்கில் உள்ள இஸ்லாமிய அகதிகள் என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள உங்கள் அறிக்கைகள், நம்பிக்கையை ஏற்படுத் தாமல் அச்சத்தையே உண்டாக்கியுள்ளன.

அச்சத்தின் பிடியில் மக்கள் என்பது இந்தியக் குடியரசின் பண்பாக இருக்க முடியாது. மேலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில். நீங்கள்தான் இந்தக் குடியரசுக்கு பொறுப்பானவராக இருக் கிறீர்கள். இந்தியாவின் சிறுபான்மையினர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஒன் றோடு ஒன்று கலந்து இருப்பவர்கள். கயிற்றை யார் வேண்டுமானாலும் எரித் துக் கரியாக்கலாம். ஆனால், அதன் பிணைப்பை அறுத்துவிட முடியாது. பாரத மாதா வாழ்க என்ற முழக்கம், நிச்சயமாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கட்டாயத் தேவையான ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை மிஞ்சிவிட முடியாது. இது உங்களுக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி, திரு.மோடி அவர்களே. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான காலகட்டம் இதைத் தொடரட்டும். இந்த உலகை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நடந் தேறட்டும். உங்கள் ஆதரவாளர்கள் அதை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமானோர் நீங்கள் அதை நடத்திட வேண்டும் என்று எதிர்பார்க் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


நீங்கள் பெரும் புத்திசாலி என்பதோடு, முந்தைய தலைமுறையின் தேவையற்ற மற்றும் விருப்ப மற்ற ஆலோசனையை கண்டுகொள்ள மாட்டீர்கள். உங்கள் ஆதரவுத்தளத்தில் கைதட்டலுக்கு கைம்மாறு செய்யுங்கள். ஆனால், அதற்கு இணையாக, உங்களை ஆதரிக்காத வர்களின் நம்பிக்கையையும் மீட்டெ டுக்கும் வகையில் செயல்படுங்கள். சிறுபான்மையினர் ஆணையத்தை மீண் டும் அமைக்கும்போது, அதில் இடம் பெறவேண்டியவர்களின் பெயர்களை எதிர்க் கட்சிகளிடமிருந்தும் கேட்டு வாங்கி, அதில்மாற்றம் செய்யாமல் அவர்களையும் இணையுங்கள்.

இதே முறையை எஸ்.சி/எஸ்.டி ஆணையம், மொழிரீதியான சிறுபான்மை யினர் ஆணையம் போன்றவற்றை அமைக்கும் போதும் கடைப்பிடியுங்கள். அடுத்த தலைமை தகவல் ஆணையர், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரைத் தேர்வு செய்யும்போதும், தேர்வுக்குழுவில் உள்ள அரசு சாரா உறுப்பினர்களின் பரிந்துரைகளை, அவை பாரபட்சமாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக் கொள் ளுங்கள். நீங்கள் பலசாலி. இத்தகைய நடவடிக்கைகளை தைரியமாக எடுக்கலாம்.

தெற்கில் விழும் பள்ளத்தை கவனியுங்கள்

திரு. மோடி அவர்களே, உங்கள் கணக்கில் தெற்கில் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்தி பேசும் மாநிலம் சார்ந்த வெற்றி என்கிற பிம்பம், வடக்கு-தெற்கு என்ற பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது. தெற்கிலிருந்து ஒருவரை துணைப் பிரதமராக நியமியுங்கள். அவர் நிச்சய மாக அரசியல் வாதியாக இல்லாமல், சமூக அறிவியல் வல்லுநர், சுற்றுச்சூழல் நிபுணர், பொருளா தார அறிஞர் அல்லது புள்ளியியல் ஆய் வாளர் ஆகிய துறைகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தனது அமைச் சரவையில் சண்முகம் செட்டியார், ஜான் மத்தாய், சி.டி.தேஷ்முக் மற்றும் கே.எல். ராவ் ஆகியோரை நேரு வைத்திருந்தார். அவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள் அல்ல. ஏன். அரசியல்வாதிகள்கூட கிடை யாது.

எஸ்.சந்திரசேகர் மற்றும் வி.கே. ஆர்.வி. ராவ் ஆகியோரை இந்திரா காந்தி அமைச்சர்களாக ஆக்கினார். மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக் கப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.சுவாமி நாதன் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய இருவரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைச்சர்களாக ஏன் ஆக்கப்படவில்லை என்பதை, எனக்குள்ள அனுபவத்தில், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மரபு உள்ளது. அதை ஆரோக்கியமானது என்று கூட ஒருவர் சொல்லலாம். நியமன உறுப்பினர்களை அமைச்சர்களாக ஆக்குவதில்லை என்பதுதான் அது. ஆனால், அவசரத் தேவைகள் என்பது அவசரத் தேவைகள்தான். நமக்கு இதுவரை இருந்த மிகச்சிறந்த கல்வி அமைச்சர்களில் நியமன உறுப்பினராக இருந்து அமைச்சரான நூருல் ஹசனும் ஒருவராவார்.

ஏகாதிபத்திய மற்றும் கொள்கை ரீதியான தலைவர்களை உங்களுக்குப் பிடிக்கிறது. உங்களது போராட்டத்தில் நீங்கள் கருதுவது போலவே, மகாராணா பிரதாப் சிங்காகவே இருங்கள். ஆனால் ஆற்றுப்படுத்துதலில் அக்பராக இருங்கள். இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் இதயத்தில் சாவர்க்கராக இருங் கள். ஆனால், மனதால் அம்பேத்கராக இருங்கள். மரபணுவில் ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்றுவிக்கப்பட்ட இந்துத்துவாவை நம்புபவராக இருங்கள். ஆனால் இந்துஸ் தானத்தின் வாசிர்-இ-ஆசமாக(உருது மொழியில் பிரதமர்) இருங்கள். உங் களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதத் தினர், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.நமது தேசத்தின் உயர் பொறுப்பில் நீங்கள் அமர்கையில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துக்களோடும்,

உங்கள் சக குடிமகன் கோபாலகிருஷ்ண காந்தி

நன்றி - தி இந்து (மே 19, 2014)

தமிழில் - கணேஷ்

(கோபாலகிருஷ்ண காந்தி காந்திஜியின் பேரன், மேற்குவங்க ஆளுநராக பணியாற்றியவர்)

(நன்றி: தீக்கதிர் 20.5.2014)

குறிப்பு: சில கருத்துக்களில் நாம் மாறுபடலாம் என்றாலும், முக்கிய பிரமுகரான இவர் எழுதி யுள்ளவை சிந்தனைக்குரியவையே!

Read more: http://viduthalai.in/page-2/80636.html#ixzz32J6L4c5p

தமிழ் ஓவியா said...


திருமிகு திருவாரூர்க்கு திகு திகு எனத் திரள்வீர்!


திருவாரூர் - இயக்க வரலாற்றில் திருமிகுந்த ஊர்! எத்தனை எத்தனை மாநாடுகள் - போராட்டங்கள்! ஆர்ப்பாட்டங்கள்!

ஒரு குரல் கொடுத்தால் குடும்பம் குடும்பமாக அணி வகுத்துத் திரண்டு வரும் கருஞ்சட்டைக் கொள்கை வீரர்களின் பாடி வீடு!

தந்தை பெரியார் காலத்திலும் சரி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இக்காலக்கட்டத்திலும் சரி - காவிரி வற்றினாலும் வற்றாத பேரன்புப் பெரு மழையைப் பொழியக் கூடிய குடும்பங்கள் எத்தனை! எத்தனை!!

மாநாடுகள் மட்டுமல்ல - போராட்டங்கள் என்றாலும் மார் தட்டி வரும் மான மறவர்களின் பாசறையன்றோ!

அந்த வட்டாரத்துக்குள் சென்று வந்தாலே நமது தமிழர் தலைவர் கலகலப்பாகி விடுவார், தாய்மார்கள் வாஞ்சையுடன் பொழியும் அந்தத் தாயன்பிலே மனங்குளிர்வார்.

வரும் 26ஆம் தேதி அந்தக் கொள்கைக் குடும்பங்களைச் சந்திக்க நமது தலைவர் வருகிறார்; கழகப் பொறுப்பாளர்கள் எல்லாம் வருகிறார்கள்.

தேர்தல் திருவிழா நடந்து முடிந்தது - ஆரவாரங்கள் ஒரு பக்கம் நடக்கும் - நடக்கட்டும்!

நம் தலைமேல் விடிந்த பணிகளோ ஏராளம்...

ஜூன் மாதம் பிறக்கப் போகிறது. நமது விவசாயிகள் எல்லாம் அதனை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

எதற்குத் தெரியுமா? மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுமே! காவிரியில் ஜிலு ஜிலு வென்று தண்ணீர்ப் புரண்டு வருமே. நம் கண்மணித் தொழிலான விவசாயத்துக்கு அதுதானே தோற்றுவாய்! ஆனால் அந்த மகிழ்ச்சி மறந்து போய் எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன?

கருணையற்ற கருநாடகம் எப்படி எப்படியெல்லாம் தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது!

உச்சநீதிமன்றமே சொன்னால் என்ன? நடுவர் மன்றமே நவின்றால்தான் என்ன?

நாங்கள் நினைத்தால்தான் உங்களுக்குத் தண்ணீர்! இல்லாவிட்டால் உங்களுக்குத் தண்ணீக் காட்டுவோம் என்ற போக்கிலித்தனமான போக்கிலே அது நடந்து கொண்டு வருகிறதே!

தேசிய நீரோட்டம் பேசும் கட்சிகள் கூட நேர்மைக்குக் காயடித்து, அக்கிரமத்துக்குக் கொடியேற்று விழா நடத்தும் விதத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (19.12.1980) காவிரி நடுவர் நீதிமன்றம் தேவை என்று குரல் கொடுத்தவர் நமது கழகத் தலைவர்தானே!

தஞ்சை சரசுவதி மகாலிலே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீர் உரிமைக்காக தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புக்கு (8.10.1982) அழைப்புக் கொடுத்ததுண்டே கழகம்!

இதே திருவாரூரில்தான் எத்தனை எத்தனை மாநாடுகள்! 25.7.1983இல் திருவாரூரிலும், 16.10.1983 அன்று மன்னார்குடியிலும் விவசாயத் தொழிலாளர்கள் மாநாட்டை நாம் கூட்டவில்லையா?

25.7.1987 அன்று கீழ்வேளூரிலும், 14.8.1987 அன்று மீண்டும் இதே திருவாரூரிலும், 14.4.1988 அன்று நாகப்பட்டினத்திலும், 3.7.1988 அன்று திருமருகலிலும் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக மீண்டும் மீண்டும் திராவிடர் விவசாய தொழிலாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டினோமே!

இதே திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தவில்லையா? (22.4.1988).


தமிழ் ஓவியா said...

மறுபடியும் திருவாரூரில் உரிமைப் பேரணி நடத்தியிருக்கிறோமே! (18.7.1991).

காவிரி நீர் ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று பொறுப்பற்றுப் பேசிய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு சென்னை மீனம்பாக்கத்தில் கறுப்புக் கொடி காட்டிக் கைதானோமே! (9.11.1991).

மறுபடியும் திருவாரூர் - திருவாரூர்!! திருவாரூர்!!! வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் (30.4.1992) அதே நாளில் திருச்சி, நாகை, தஞ்சாவூரிலும் மறியல் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கருஞ்சட்டையினர் - கழகத் தலைவர் உட்பட கைது!

2002லும் (செப்டம்பர் 5) திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!

திருவாரூரில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுச்சிமிகு விவசாய மாநாடு நடைபெற்றது. 2005 பிப்ரவரி 19ஆம் தேதி - கொட்டும் மழையிலும் கோடையிடி முழக்கமிட்டு வந்தனர் பல்லாயிரக்கணக்கான விவசாய பெருங்குடி மக்கள்.

அப்பொழுதும் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இதே மானமிகு வீ.மோகன்தான்!

இப்பொழுது வரும் 26இல் நடக்க இருக்கும் மாநாட்டையும் மாவட்டத் தலைவராக இருந்து முனைப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கழகத் தோழர்களின் கட்டுக்கோப்பான ஒத்துழைப்போடு செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு மிக முக்கியமான நேரம் - மிக முக்கியமான பிரச்சினை - பருவத்தே தேவைப்படும் மழை போல தக்க பருவத்தே இம்மாநாட்டை தமிழர் தலைவர் கூட்டியிருக்கிறார். நீரின்றி அமையாது உலகு என்றார் திருவள்ளூவர், அடுத்த உலகப் போரே நீருக்காக ஏற்படும் என்றெல்லாம் கூறப்படுகிறது.

எந்த நோக்கத்தில் விவசாயம் பாவத் தொழில் என்று பார்ப்பனர்கள் மனுதர்மத்தில் எழுதி வைத்தார்களோ, அது உண்மையில் பாவப்பட்ட பஞ்சம - சூத்திர மக்களின் தொழிலாக ஆன காரணத்தால்தான் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டின் காவிரியின் பாசனப்பரப்பு 28 லட்சம் ஏக்கர்; 2000 ஆண்டில் பதினேழரை லட்சம் ஏக்கராகி, 2005இல் 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கராக இளைத்துப் போய்விட்டது. நீதிமன்ற தீர்ப்புப்படி கருநாடகம் காவிரி நீர் விவசாயப் பரப்பை 10 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது.

நீதிமன்ற ஆணையை யார் சட்டை செய்தார்கள்? பல மடங்குப் பாசனப் பரப்பைப் பெருக்கிக் கொண்டே போகிறது கருநாடகம்.
விவசாயத்தை நம்பி இனி வாழ முடியுமா என்ற கேள்வி செங்குத்தாக நம் தலைக்கு மேல் கொடு வாளாய்த் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

விவசாய வேலை இல்லை என்றால் எங்களுக்கு மரியாதையாக மாற்று வேலைக்காவது ஏற்பாடு செய் என்கிற குரல் வெடித்துக் கிளம்பிவிட்டது.

விவசாய மாவட்டங்களில் எந்தத் தொழிற்சாலை இருக்கிறது? விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு (பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களே!) வேலை வாய்ப்பும் இல்லை.

திருவாரூரில் நடக்கப்போவது ஒரு கட்சி மாநாடல்ல - ஒட்டு மொத்தமான விவசாயிகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் எழுச்சி மாநாடு!

பேரணியும் உண்டு - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றுவார்கள். சரியான வழிகாட்டுதல் அவர் உரையில் இருக்கும்.

தோழர்களே திரள்வீர்! திரள்வீர்!! நம் குரல் எட்ட வேண்டிய இடங்களுக்கு எட்டட்டும் - இலட்சியக் கடலின் பேரலையாய்ப் பொங்கி வாரீர்! வாரீர்!

- மின்சாரம் -

Read more: http://viduthalai.in/page-8/80657.html#ixzz32J7CY06c

தமிழ் ஓவியா said...


அருந்ததிய மக்கள் ஊர் திரும்ப நடவடிக்கை தேவை


மதுரை, மே 20- மேல்மங் கலம் கிராமத்தில் ஜாதி ஆதிக்கவாதிகளால் பாதிக் கப்பட்டு வெளியூர் சென்று விட்ட அருந்ததிய மக்கள் மீண்டும் ஊர் திரும்ப உரிய நடவடிக்கையை தமிழக அரசுமேற்கொள்ள வேண் டும் என்று உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

மதுரை, உத்தப்புரம் பகுதியில் நடைபெற்ற தீண் டாமைக்கொடுமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்று வந்த உண்மை அறி யும் குழுவின் உறுப்பினர் வழக்குரைஞர் ரஜினி மது ரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தலித் மக் கள் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்குச் சென்று நடைபெற்ற வன்முறைகள் குறித்து உண்மை அறிய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வரு வது ஜனநாயக மறுப்பின் மறு வடிவம் தான். ஏற் கெனவே, உத்தப்புரத்தில் தலித் மக் கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை யென தெரிந்து அவ்வூருக்கு உண்மை அறியச்சென்ற போது அனுமதி மறுத்தார் கள்.

உயர்நீதிமன்ற உத்தரவு பெற்று தான் அந்த ஊருக் குச் சென்று வந்தோம். தருமபுரி மாவட்டத்தில் நடைபெற் றது போலவே, தேனி மாவட் டம் மேல்மங்கலம் கிராமத் திலும் அருந்ததிய மக்கள் மீது திட்டமிட்டு வன்முறை நிகழ்த் தப்பட்டுள்ளது.

6 வீடுகள் முற்றிலும் எரிக் கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுவரை கிராமத்தை விட்டு வெளி யேறிய அருந்ததிய சமுதாய மக்கள் ஊர் திரும்ப வில்லை. தாக்குதல் நடத்திய வர்கள் என 20 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட் டது. ஆனால், அவர்கள் பிணையில் வெளி யே வந்து விட்டனர்.

இதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த முருகுபாண்டி என் பவர் மீது பிணையில் வெளி வரமுடி யாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுசிறை யில்அடைக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட் டவர்களுக்கு வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தின் படி நிவாரணம் வழங்கப் படவில்லை.

அரசு அவர் களுக்கு வீடுகளையும் கட்டித்தரவில்லை. அருந்த திய மக்கள் வசிக்கும் பகுதி யில் நிரந்தரமாக காவல் துறையினரின் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமைக் குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அவர்கள் மீது வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண் டும். உத்தப்புரம் பகுதியில் தொடர்ந்து தலித் மக்கள் கோவில் வழிபாட்டு உரி மைமறுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பான தெளி வான ஆணையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை வெளி யிட்டிருந்தும் அதை அமல் படுத்த மறுக்கிறார்கள்.

முத் தாலம்மன் கோவில் அற நிலையத்துறையின் நிர்வா கத்தின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். உத்தப்புரத் தில் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-8/80654.html#ixzz32J7lGhrw

தமிழ் ஓவியா said...

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்


அஞ்சல் பெட்டியே!
உன் திறந்த வாயில்
திணித்த எதையும்...
நீ செரித்துக் கொண்டதில்லை.

உன் வயிற்றைத் துடைக்க
மீண்டும் மீண்டும்
வெற்றுப் பெட்டியாய்
நிற்கிறாய்
எம் தமிழர்களைப் போல.

தாய்மொழிப் பற்று
பகுத்தறிவு
இனமானம்
தன்மானம் என
எல்லாம்தான் போட்டோம்
தமிழன் மண்டையில் பாரேன்
உன்னைப் போலவே
வெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்
எதையும் செரித்துக் கொள்ளாமல்.

நீ திறந்தவாய் மூடமாட்டாய்
கடிதங்களுக்காக.
எம் தமிழர்களும்
பொருளுக்காக
பதவிக்காக
வீணரைப் புகழ்வதற்காக
வாய் திறந்தே இருக்கிறார்கள்.

உனக்குக் கண் இல்லை
காதும் மூக்குமில்லை
வாயும்
நேரம் காட்டும்
வெளியும்தான்.

தமிழனுக்கோ
அய்ம்பொறியும் உண்டு
ஆறறிவும் உண்டு
ஆனாலும்
உன்னைப் போலவே
வாயும்
வெளியும்
உள்ள பெட்டியாய் நிற்கிறான்.

அஞ்சல் பெட்டியா நீ?
வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்
அஞ்சாமல்
வாய் திறந்தே நிற்கும்
நீயா அஞ்சல் பெட்டி

கல்லுக்கும்
உலோக, மரபொம்மைக்கும்
மாட்டுச் சாணிக்கும் அஞ்சி கும்பிட்டுக் கூத்தாடும் மனிதர்களே
முழுமூட அஞ்சல் பட்டிகள்- பொன்.இராமசந்திரன், பம்மல்

தமிழ் ஓவியா said...

அணிய வேண்டிய ஆடை!


ஜாதி, சமயமற்ற
சமுதாயம் படைப்பது
திராவிடம்!

ஜாதி, மதவெறிக்கு
மகுடம் சூட்டுவது
தமிழ்த் தேசியம்!

அம்மணமாயிருக்கும்
என்னுயிர்த் தமிழா!
ஆடையாய் நீ
அணிய வேண்டியது -
திராவிடமா?
தமிழ்த் தேசியமா?

- சீர்காழி கு.நா.இராமண்ணா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


கோயில்களில் - மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்கு முன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஒரு புரட்சி இயக்கத்தின் வரலாறு


நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம்,
8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு,
திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர் விரிவு, சென்னை-_41.
பக்கங்கள்: 256
விலை: ரூ.160


இருபதாம் நூற்றாண்டில், பத்திரிகைகள் வலிமையும் கூர்மையும் வாய்ந்தனவாக வளர்ந்தன. இதில் பார்ப்பனர்கள் தொடக்கம் முதலே புகுந்து கொண்டு தமதாக்கிக் கொண்டனர். சைவம், வைணவம் முதலிய ஷண்மதங்களைப் (ஆறு மதங்கள்) பிரிவுகளாகக் கொண்டிருந்தவர்கள் ஹிந்து என்ற பெயரால் ஆங்கிலேய அதிகாரிகளால் 1801இல் குறிக்கப்பட்டனர். அதையே இவர்களின் மதப் பெயராக்கிக் கொண்டனர். தி ஹிந்து என்ற பெயரிலேயே பார்ப்பனர் ஒருவர் பத்திரிகையைத் தொடங்கி இன்றளவும் நடத்தி வருகிறார். இந்த வலிமையான பத்திரிகை ஆயுதத்தின் துணைகொண்டு, பார்ப்பனர் அல்லாதாரைத் தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கும் அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆரிய ஆட்சி என்ற நூல் (Havell) ஹாவல் என்பவரால் எழுதப்பட்டது. மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலில் பார்ப்பனர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும் ஆபாசமான, காட்டு விலங்காண்டித்தனமான மூடநம்பிக்கைகளைப் பரப்பிடவும் முடிந்தது. மந்திரம் எல்லாவற்றையும் சாதிக்கும், போரில் வெற்றியோ தோல்வியோ மந்திர உச்சாடனத்தால் கிட்டும். தினப்படி நடக்கும் செயல்களிலும்கூட மந்திரத்தால் பலன் உண்டு என்றெல்லாம் பிரச்சாரம் செய்தனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். உலகம் கடவுளால், கடவுள் மந்திரத்தால், மந்த்ரம் பார்ப்பனர்களால். எனவே பார்ப்பனர்களே கடவுள் எனத் தகுதிபெற்றவர் என்ற பொருளில் தெய்வாதீனம் ஜெகத் சர்வம் மந்த்ராதீனம்.... எனும் பார்ப்பனரின் பாடல் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் ஏர் உழுது வேளாண் தொழிலில் ஈடுபடுவது, தாழ்வு என்கிறார்கள். ஆனால், சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம். அதனால் உழந்தும், உழவே தலை என்பது பார்ப்பனர் அல்லாதார் கொள்கை. 1921இல் தஞ்சை மாவட்டத்தில் உழவுத் தொழில் செய்த இரு பார்ப்பனர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்தவர் ஸ்மார்த்தப் பார்ப்பன மடத்தலைவர் கும்பகோணம் (காஞ்சி) மடாதிபதி சங்கராச்சாரியாரான சாமிநாதன் எனும் சந்திரசேகரேந்திரன்.


தமிழ் ஓவியா said...

மானத்தை விட்டுக்கூட உயிர்வாழலாம் என்கிறது ஆரிய ஸ்மிருதி. ஆனால் மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்தவர் தமிழர். ஏற்பது இகழ்ச்சி எனப் பிச்சை பெறுதலை இகழ்ந்தனர் தமிழர். ஆனால் உஞ்சவிருத்தி எனும் பெயரில் பிச்சை எடுத்து வாழ்வதுதான் ஆரிய தருமம். பார்ப்பனரைத் தமிழர்கள் தவறாகக் கருதிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் கடவுள் சிவனைப் பிட்சாடனர் என்றே அழைத்தனர். பிச்சாண்டி என இதனைத் தமிழர் அழைக்கச் செய்துவிட்டனர்.

மேற்குநாட்டு ஆசிரியர்கள் சிலரின் துணைகொண்டு, ஆரியர்கள் அழகான, உயரமானவர்கள் என ஜெர்மனி நாட்டவரின் உதவியால் எழுதச் செய்தனர். இட்லர் காலத்தில் ஆரிய இனமே உயர்ந்தது எனவும் ஆளப்பிறந்த இனம் எனும் தற்பெருமை கொடிகட்டிப் பறந்தது. பிரான்சு நாட்டு ஆல்பின் இனத்தார் மூலமே ஆரிய இனம் அதன் மொழியும் நாகரிகமும் அய்ரோப்பாவில் பரவியது என பிரெஞ்ச் ஆசிரியர்கள் தற்பெருமை கொண்டாடினர். அய்ரோப்பாவில் ஆக்கிரமித்து நுழைந்த ஆரியர் காட்டு விலங்காண்டிகள் என்பது இத்தாலிய ஆசிரியர் செர்ஜி என்பார் கருத்து. எப்படியோ உயர்வு கற்பித்துக் கொண்ட ஆரியர் தம் அடிபணிந்து அவர்களின் ஆச்சாரங்களையும் விழாக்களையும் மதக் கொள்கைகளையும் பின்பற்றுவதாலும் ஆரியர் ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பக்தியின் பெயரால் செல்வத்தை விரயம் செய்வதாலும் ஆரியர் ஆதிக்கம் வலுப்பெற்றது. திராவிடர் நிலை சிறுமையடைந்தது.

பார்ப்பனரை வெண்பாவால் பாடவேண்டுமாம். வெண்பா எனும் ஒண்பா இதன் சிறப்பை எடுத்துக்காட்டும். அதற்கு அடுத்த ஆசிரியப்பா அரசர்க்காம், கலிப்பா என்பது வணிகர்க்காம். சூத்திரர்க்கோ வஞ்சிப்பாவாம்! பாக்களைக் கலந்து கலம்பகம் பாடும்போது கடவுளுக்கு 100 பார்ப்பனருக்கு 95 அரசர்க்கு 90 அமைச்சருக்கு 70 வணிகருக்கு 50 உழைப்போராக இருக்கும் வெகு மக்களுக்கு 30 என்று விதித்திருக்கும் கொடுமை! ஆரியரின் மொழியல்லாத தமிழில் தமிழர் பாட்டு இயற்றுவதற்குப் பார்ப்பான் பண்ணையம் என்றால், என்ன கொடுமை! இதைக் கண்டித்தனரா புலவர் எனப்படுவோர்? பக்தியின் பெயரால், எதிர்ப்பது தெய்வ குற்றம் எனக் கூறி விட்டனர். ஆரியரும் தெய்வங்கள்தானே! எனவே எதிர்க்கத் துணிவில்லை!

பெரியார் ஒருவர்தான் எதிர்த்தார்! ஒரு கவிஞன் பாடியதுபோல அவர்தான் நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்/நாற்பது கோடி மக்களுக்குமாய் உழைத்தார்! தமிழர்நிலை உயர்வை நோக்கிச் சென்றது. தமிழர்களின் நிலை, உயர்வுகளை நோக்கிச் சென்றிடத் தந்தை பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகள் உதவின. தமிழர் உயர்ந்தனர்.

இருபதாம் நூற்றாண்டில், ஆங்கில அரசின் கீழும் பின்னர் பிற்பகுதியில் வடவர் அரசின் கீழும் தமிழ்நாடு ஆளப்பட்ட காலகட்டங்களில் 1920 முதல் தமிழ்ச் சமுதாயம் அடைந்த உயர்வுகள் எண்ணிலடங்கா. அவை நிகழ்வதற்கு நேரிடையாகவும் பின்புலமாகவும் இருந்துசெயல்பட்டு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டவர் பெரியார்.

நாடகக் கொட்டகையில் கட்டணம் செலுத்தி நாடகம் பார்க்கப் பஞ்சமர்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட சகோதரர்க்கு அனுமதி கிடையாது என விளம்பர நோட்டீசிலேயே அச்சிட்டு விளம்பரம் செய்த நிலை 1900ஆம் ஆண்டுவரை இருந்ததை மாற்றியது பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

மறவரும் வன்னியரும் 16 வயது வந்து விட்டால் காவல் நிலையத்தில் தினம்தினம் கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் குற்றச் சமூகமாகக் கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டதை ஒழித்ததும் முதன்முதலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை அமைச்சராக்கியதும் நீதிக்கட்சிதான்.

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காவும் மேம்பாட்டுக்காகவும் தனித்துறையை (லேபர் துறை) உருவாக்கி அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் வைத்ததும் நீதிக்கட்சிதான். இது இந்தியாவில் சென்னை மாகாணத்தில்தான் முதன்முதல் செய்யப்பட்டது.

பஞ்சமருக்குப் பேருந்தில் இடம் இல்லை என்று பயணச் சீட்டிலேயே அச்சிட்டிருந்த அவலத்தை 1935இல் ஒழித்து ஆணையிட்டவர் சுயமரியாதை இயக்கத் தலைவராகவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் குழுத்தலைவராகவும் இருந்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் என்பதும் வரலாறு.

பார்ப்பனர் வீடுகளில் கழிப்பறையைச் சுத்தம் செய்திட சூத்திரர்கள் பஞ்சமர்களுக்குப் பதில் நியமிக்கப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் முயற்சிசெய்த திமிர்கொண்ட நிலைகூட இருந்ததே! புரதவண்ணார் ஜாதியினர் நெல்லை மாவட்டத்தில் பகலில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை 1932ஆம் ஆண்டு வரை இருந்தது. ஒழிக்கப்பட்டதே நீதிக்கட்சியின் நிருவாகத்தில்தான்!

பகத்சிங் 1931இல் தூக்கிலிடப்பட்டபோது கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் பெரியார் மட்டுமே! காந்தியாரும் காங்கிரசும் வாயே திறக்காமல் அஞ்சிக் கிடந்தபோது பகத்சிங்கின் செயல்முறையை வெளிப்படையாக ஆதரித்து அறிவித்த அஞ்சாத நெஞ்சினர் பெரியார் ஆவார்.

இன்றைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்போல 1922ஆம் ஆண்டிலேயே ஸ்டாஃப் செலக்ஷன் போர்டு ஏற்படுத்தி, பார்ப்பனர் அல்லாதார் எல்லாப் பதவிகளிலும் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது நீதிக்கட்சி ஆட்சிதான்.

இப்படி எத்தனையோ!

அத்தனைக்கும் காரணமானவர் தந்தை பெரியார்!

ஆனால் அவருக்கான இடத்தை இந்த நாடும் பார்ப்பனர்களின் ஏடுகளும் வழங்கி முன்வரவில்லையே, ஏன்?

2,840 வளமான சதுர்வேதி மங்கலங்களைத் தானமாகப் பெற்று, விதைக்காது விளையும் கழனிகளான ஆரியம் கொட்டம் அடித்த கொடுமதியாளரின் நச்சுக் கொடுக்கை நறுக்கியவர் பெரியார்; அவரது சுயமரியாதை இயக்கம்; அவர் ஆதரித்த நீதிக்கட்சியின் நிருவாகம்! அதனால் ஏற்பட்ட அழுக்காறு காரணம்!

திருவாங்கூர் மகாராணி நன்கொடையாக அளித்த (1942இல்) ஓர் இலட்ச ரூபாயை சமக்கிருத மொழி வளர்ச்சிக்குச் செலவிடக்கூடாது எனப் போராடி மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவு செய்ய வைத்ததன் வாயிலாகப் பெரியாரின் வடமொழி எதிர்ப்பு விளங்கும்.

தமிழ் ஓவியா said...

1950இல் இந்திய ரூபாய் நாணயங்களிலும் கரன்சி நோட்டுகளிலும் இந்தி மொழி மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததை எதிர்த்துப் போராடி அகற்றச் செய்தவர் பெரியார். இந்தியை எதிர்ப்போரைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்று பார்ப்பன சத்தியமூர்த்தி பேசியபோதும் 1937இல் கட்டாய இந்தியை எதிர்த்து வென்று தமிழ்மொழி காத்தவர் பெரியார்.

சென்னையில் TNCC அலுவலகமாகிய தேனாம்பேட்டை காங்கிரசு மைதானத்தில் வ.உ.சிதம்பரனார் சிலை வைக்க முயன்றபோது பார்ப்பனரல்லாத தலைவரின் சிலையை வைக்கக்கூடாது என எதிர்த்தவர் இதே சத்தியமூர்த்தி அய்யர். பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காங்கிரசுக் கட்சியைப் பார்ப்பனர் அல்லாதார் கைப்பற்றிக் கொண்டு வந்திட உழைத்தவர் பெரியார்.

1925இல் காங்கிரசில் இருந்துகொண்டே, நீதிக்கட்சியின் அரசு கொண்டுவந்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தவர் பெரியார். இது கட்சி எதிர்ப்புச் செயலா? 1927இல் காந்தியார் சிதம்பரத்திற்கு வந்தபோது, தாழ்த்தப்பட்டோருடன் நடராசன் கோயில் உள்ளே நுழைந்து விடுவார் எனப் பார்ப்பனர்கள் கோயிலின் நான்கு கதவுகளையும் மூடிவிட்டனர். நான்கு தேரோடும் வீதிகளிலும் பழைய செருப்புகளைத் தோரணமாகக் கட்டி அவரை அவமதித்தனர். அந்த நிலையில் 1927 முதல் திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு போன்ற முக்கிய ஊர்களில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் பெரியார்.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவர் பதவி வகித்த நிலையிலும் கேரளாவில் -_ வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் தெருவில் நடக்கும் உரிமைக்காகப் போராடி, சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் எனப் பாராட்டப் பெற்றவர் பெரியார். இருந்தும்கூட அந்நிகழ்ச்சி பற்றிய வரலாற்றுக் குறிப்பில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டது காங்கிரசுக் கட்சியும் காந்தியாரும்! இதுதான் காங்கிரசின் கலாச்சாரம்!

1952 முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசை எதிர்த்துத் தோற்கடித்தவர் பெரியார். காங்கிரசு முதல் அமைச்சராக வந்த இராஜாஜி அரிசிக்கான 6 அவுன்சு ரேஷன் முறையை நீக்கினார். கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் தர சட்டம் இயற்றினார். உழவர்களின் பாதுகாப்புக்குச் சட்டங்கள் இயற்றினார் என்கிற நிலையில் அவரைப் பெரியார் ஆதரித்தார். ஆனால் அவரவர் ஜாதித் தொழிலை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர அரசுப் பணிக்கு ஆசைப்படக் கூடாது என்று 1952இல் பேசிய ஆச்சாரியார் பாதி நேரம் மட்டுமே படிப்பு, பாதி நேரம் அவரவர் ஜாதித் தொழில் கற்க வேண்டும் என்கிற கல்வித் திட்டத்தையே கொண்டு வந்தார். பெரியார் அதனை எதிர்த்துப் பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராகட்டும்; குறித்த நாளில் பார்ப்பனர் குடியிருப்புகளைக் கொளுத்துவோம். பார்ப்பனர்களைக் கத்தியால் குத்துவோம் என்ற போராட்ட அறிவிப்பை வெளியிட்டார். கால்நடைப் பிரச்சாரப் படையை அமைத்து நாடெங்கும் பிரச்சாரம் செய்து சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாளில் ஆச்சாரியார் ராஜிநாமா செய்தார் என்பது வரலாறு.

பெரியார் நிலை மாறினாரா?

தமிழர் நிலையை மாற்றினாரா?

ஆச்சாரியாரை வீட்டுக்கனுப்பி காமராஜரை முதல்வராகக் கொண்டு வந்து குலக்கல்வித் திட்டத்தினை நீக்கினார். பெரியார் காமராசரை ஆதரித்தார். ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் கூறு திருத்தப்பட வேண்டும் என்கிற பெரியாரின் கோரிக்கையை நேருவும் காமராசரும் ஏற்காத நிலையில், பெரியார் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார். இது குற்றம் என எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், புதிய சட்டம் கொண்டுவந்து திராவிடர் கழகத்தவர் 3000 பேருக்குமேல் சிறைத் தண்டனை கொடுத்தது காமராஜ் ஆட்சி என்றாலும், கல்விக்கும் பதவி வாய்ப்புகளிலும் தமிழர் இனத்திற்குக் காமராசர் ஆட்சி செய்த நன்மைகளின் காரணமாக அவர் ஆட்சியை ஆதரித்தார்.

காமராசருக்குப் பின் முதல்வராக வந்த பக்தவத்சலம் ஆட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளினால் அவரை எதிர்த்தார் பெரியார். விடுதலை நாளேட்டைப் படித்தது குற்றம் எனக் கூறி மாஜிஸ்திரேட் ஒருவரை 1965இல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தவர் இந்த பக்தவத்சலம். பெயருக்கு முன்னால் ஸ்ரீ என்றுதான் போடவேண்டும். திரு என்று எழுதக்கூடாது என்று வாதாடி ஆச்சாரியாருக்கு ஆதரவாக நின்றவர் இவர் ஒருவரே என்பது இவரது துரோக வரலாற்றின் மற்றொரு படலம். இந்தத் துரோகம் துடைக்கப்பட்டது அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் 1967இல்! பெரியார் நிலை மாறினாரா? தமிழர் நிலையை மாற்றினாரா?

1942இல் சென்னை மாநில முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வெள்ளைக்கார கவர்னரும் வைசிராயும் கேட்டுக் கொண்டபோதும் பதவிக்கு வர மறுத்தவர் பெரியார்! நீங்கள் முதல் அமைச்சராக வாருங்கள், நானும் வேண்டுமானாலும் மந்திரியாக இருந்து உங்களுக்கு உதவுகிறேன் என்று இராஜாஜி கூறியபோதும் மறுத்தவர் பெரியார்! ஒரேநாளில் 29 பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பொது வாழ்க்கையில் நுழைந்தவர் பெரியார்! பதவியை நாடாதவர். பதவியை நாடாமல், பதவியில் இருப்பவர்களிடம் வேலை வாங்கித் தம் இனத்தின் நிலையை உயர்த்திட உழைத்தவர் பெரியார்! தம் இயக்கத்தவரும் பதவியை நாடக்கூடாது என 1940இல் திருவாரூரில் நீதிக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கடைப்பிடிக்கச் செய்தவர் பெரியார்! பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917இல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச் செய்தவர் பெரியார்!

அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை, அணுகுமுறைகளை, செயல் திட்டங்களைச் (Policies) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கையாண்டார். சமூக நீதிக்காக _ பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செயல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர _ உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச் செல்வதற்காக மாற்றினாரே தவிர _ அவர் மாறவே இல்லை!

நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார். நாற்பது கோடி மக்களுக்குமாய் உழைத்தார். பிறக்கும்போதே பெரியராய்த்தான் பிறந்தார்.

தமிழ் ஓவியா said...

குறுங்கதை : சுயமரியாதை


- க.அருள்மொழி

காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு.

என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே... அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி.

இல்லைக்கா என்னால முடியாது என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிட்டாள் சரசு.

பார்வதிக்கு முகத்தில் அடித்ததுபோல் இருந்தது. அப்படி என்னதான் சொக்குப் பொடி போடுகிறாள் இந்தக் காஞ்சனா? நாலைந்து வருஷமாக காஞ்சனா வீட்டில் தொடர்ந்து வேலை செய்கிறாள் சரசு. பார்வதிக்கோ இரண்டு மாதம் கூட தொடர்ந்தாற்போல் யாரும் வேலை செய்வதில்லை.

காஞ்சனா வீட்டில் வேலை செய்துவிட்டு எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வேலைக்குப் போகும் சரசு, பார்வதியின் வீட்டுக்குப் போகமாட்டேன்கிறாள் என்பது புதிராகவே இருந்தது.

அடுத்தநாள் சரசு, காஞ்சனாவின் வீட்டுக்குள் போனதும் பார்வதியும் போனாள்.

பார்வதியை வரவேற்று உட்காரச் சொன்ன காஞ்சனா, சரசுவிற்கு வேலைகளைச் சொன்னாள். சரசு, இங்க பாருங்க, இதையெல்லாம் சுத்தம் செய்து விட்டு, இதையெல்லாம் வெளியே போட்டுடுங்க.

அந்தப் பாத்திரங்களையெல்லாம் அங்கே அடுக்கிடுங்க. காபி போட்டு உங்களுக்கு எடுத்துக்கிட்டு எங்களுக்கும் கொடுங்க என்றதும், சரிங்கம்மா சரிங்கம்மா என்று சொல்லிவிட்டு, சொன்னதையெல்லாம் வேகமாகச் செய்துவிட்டு வெளியேறினாள்.

பார்வதிக்குப் புரிந்துவிட்டது. காஞ்சனா போட்டது மரியாதைச் சொக்குப் பொடி என்று. சுயமரியாதை என்பது, தான் எதிர்பார்ப்பதையே மற்றவர்களுக்கும் தருவது.

தமிழ் ஓவியா said...

கைமேல் பலன்?


காசிக்குச் சென்று
கங்கையில் நீராடி
கங்கை நீர் கொண்டு
ராமநாதருக்கு
அபிஷேகம் செய்ய
ராமேஸ்வரம் சென்றவர்
குடும்பத்தோடு மாண்டார்
சாலை விபத்தில்!

தெய்வத்தின் திருவருள்
முன்னோர்களின் நல்லாசி
உடனே கிட்டியது
கைமேல் பலன் என்பது
இதுதானோ?

_நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

தமிழ் ஓவியா said...

சட்ட உதவி : சொத்துரிமை சில விளக்கங்கள்


- பரஞ்சோதி, நீதிபதி (ஓய்வு)

கேள்வி: அய்யா, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி என் மீது பொய் வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் மீது, எனக்கு வயது 85 ஆகி உடல்நலமும் சரியில்லாமல் இருப்பதால் அவர்கள்மீது நடைமுறையில் உள்ள நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு ரூ.5 லட்சத்திற்குப் போட்டு காலம் கடந்து அதனால் நான் இறந்துவிட்டால் என் வாரிசுதாரர்கள் மேல்படி வழக்கைத் தொடர்ந்து நடத்தலாமா? அப்படி முடியாதென்றால் விரைவு நீதிமன்றத்தில் கட்டணம் இல்லாமல் வழக்குத் தொடுக்கலாமா, எந்த கோர்ட்டில் தொடுக்கலாம். மேலும் இது சம்பந்தமாக தங்களின் மேலான கருத்துகளையும் தெரிவித்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - ஆ.முனுசாமி

பதில்: அன்புள்ள முனுசாமி அய்யா, தாங்கள் தொடுத்த மான நட்ட வழக்கு தாங்கள் 85 வயது ஆன மூத்த குடிமகன் என்பதால் உடனே முன்னுரிமை அளித்து தங்கள் வழக்கை நீதிமன்றம் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தால் உடனே நடத்த வாய்ப்பு உள்ளது. நீதிமன்றங்கள் வயோதிகர் வழக்கை உடனே நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது. தங்களுக்குப் பின் தங்கள் வாரிசுகள் வழக்கை நடத்தலாம். முன்பே வழக்கு நிலுவையில் உள்ளதாக தாங்கள் கூறியுள்ளதால் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: நான் எம்.எஸ்சி., பி.எட். படித்துள்ளேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. எனது அப்பா இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவருடைய ExServiceman Quotaஎனக்குத் தந்துள்ளார். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ExServiceman முன்னுரிமையை எனக்குப் பயன்படுத்த சான்றிதழ் திருமணத்திற்கு முன்பே பெற்றுத் தந்துவிட்டார். ஆனால், எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால் எனக்கு அந்த முன்னுரிமை செல்லுபடி ஆகுமா என்பதைத் தயவுசெய்து தெரியப்படுத்தவும். - ஏ.வாசுகி

தமிழ் ஓவியா said...

பதில்: திருமதி வாசுகி அவர்களுக்கு, தங்கள் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் வாரிசான தங்களுக்கு தந்தை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பதால் சலுகைச் சான்று பெற்றுத் தந்துள்ளார். தங்களுக்குத் திருமணம் ஆனாலும் அந்தச் சான்று பொருந்தும்.

கேள்வி: அய்யா, எனக்குத் திருமணமான மனைவி 1, திருமணம் ஆகாத வைப்பாட்டி 1. மனைவிக்கு 2 மகன்கள், 1 மகள். வயது 64, 58, 54. வைப்பாட்டிக்கு 2 மகள்கள். வயது 44, 41. மனைவியின் மகளுக்கு 1976ஆம் ஆண்டும், வைப்பாட்டி மகள்களுக்கு 1995, 1996ஆம் ஆண்டும் திருமணம் நடந்தது. பூர்வீக சொத்துக்களோடு நான் வாங்கிய சொத்துக்களும் உள்ளன. மேற்படி சொத்துக்களில் மேற்படி பெண்பிள்ளைகளுக்கு சொத்துரிமைப் பாத்தியம் உண்டா, இல்லையா என்பதைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். - ஆறுமுகம்

பதில்: அன்புள்ள ஆறுமுகம் அவர்களுக்கு, தாங்கள் சொந்தமாக தங்கள் வருவாயில் வாங்கிய சொத்து என்றால், தாங்கள் விருப்பப்பட்டவருக்கு எழுதி வைக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.

மூதாதையர் சொத்து என்றால் அது தங்கள் வாரிசுகளுக்கும் அதாவது (வைப்பாட்டி நீங்கலாக) பிள்ளைகள் அனைவருக்கும் பாகம் கோரும் உரிமை உள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு சம பங்கு (கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது) சட்டப்படி உண்டு.

கேள்வி: என் குடும்பத்தில் தந்தை, தாய், அண்ணன், அக்காள் உட்பட மொத்தம் 8 பேர். இப்போது, அண்ணன், அக்காள் மற்றும் நான் உள்ளோம். தகப்பனார் சொத்து 2 ஏக்கர் 86 சென்டு. எனது அண்ணன் இறந்துவிட்டார். 10 வருடம் சாகுபடி செய்து வாங்கிய சொத்து 2 ஏக்கர். எனது அம்மா தான் சம்பாதித்து சுயமாக வாங்கிய பவுன் 8. எனது அக்காள் (பெரியவர் உடல் ஊனம் உள்ளவர்) வாங்கியது 4 பவுன். அண்ணன் மனைவியின் பேரில் பெரியவர் வாங்கிய சொத்தையும் எடுத்துக்கொண்டார். நான் வாங்கிய 1 ஏக்கரையும் வைத்துக்கொண்டார். இப்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு 18 ஆண்டுகள் வைத்துக்கொண்டு தன்னுடைய பிள்ளை மூலமாக சாகுபடி செய்து வருகிறார். நான் பலமுறை முயற்சி செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் சொத்தும் இதுவரை வைத்திருந்ததற்கு பணமும் கிடைக்க ஆவன செய்யவும்.

- கே.ராஜேந்திரன், உமையாள்புரம்

பதில்: அன்புள்ள இராஜேந்திரன் அவர்களுக்கு, தாங்கள் தந்த விவரத்தில் தந்தை இப்போதும் வாழ்கிறாரா இல்லையா என தெரியப்படுத்தவில்லை. தாங்கள் அளித்த இதர குடும்பச் சூழலை வைத்து தங்கள் தந்தை இயற்கை எய்தியதாக அனுமானிக்கின்றோம். (தந்தை இருப்பின் மன்னிக்கவும்). தந்தை சுயமாகச் சம்பாதித்த சொத்து எனில் அதில் அவர் யாருக்கும் சொத்து எழுதி வைக்காத நிலையில் இறந்த பிறகு தாய், மற்றும் அவரின் ஆண், பெண் பிள்ளைகள் எல்லோருக்கும் இப்போது சமபங்கு உள்ளது. அதாவது, இயற்கை எய்திய தங்கள் அண்ணன் வாரிசுகளுக்கு அவரின் பங்கு பெறத் தகுதி உண்டு. தங்களின் பங்கு கேட்டு தாங்கள் சிவில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பாகப் பிரிவினை வழக்கு தாக்கல் செய்து தங்கள் பங்கைப் பெற வாய்ப்பு உள்ளது.

தமிழ் ஓவியா said...

திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் 200ஆம் ஆண்டு பிறந்த நாள்


7.5.2014 அன்று திராவிட மொழி அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பாதிரியாரின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் அளப்பரிய தொண்டு செய்தோர் தமிழ்ப் புலவர் பெருமக்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் மட்டுமல்ல, அதன் மொழிக் கூறு எப்படிப்பட்ட மூத்த, முதிர்ந்த தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட மொழிக் குடும்பம் என்பதை வெளிநாட்டிலிருந்து கிறித்துவ மத போதகர்களாக வந்தவர்களாயினும், அவர்கள் செய்த ஒப்புயர்வற்ற பணி என்றென்றும் மறக்க இயலாத ஒரு திருப்புமுனைப் பணியாகும்.

ஆராய்ச்சி அறிஞர் பெருமக்களான இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ஏக்கல் (Haeckal) பி.கயில்ஸ்(P.Giles), என்.ஆண்டர்சன், எச்.சுவீட் (H.Sweet),, பாப் (Bopp) டெயிலர் (Taylor), எப்.எம்மல் (F.Hammel) போன்ற, உலகில் உள்ள மிகப் பழைமை சார்ந்த மொழிகள் அனைத்தும், ஒரு மூலமொழியினின்றும் உண்டானவை என்றும், அந்த மூல மொழியானது குமரிக் கண்டத்தில் முதலில் பேசப்பட்ட தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியின் சொற்கள் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும் சில பலவாகக் காணப்படுவதே, தமிழ் மொழியின் பழைமைக்கும், சிறப்புக்கும் ஏற்ற, சான்றாகும் என்றும், எடுத்துக்காட்டும் சில குறிப்புக்களிலிருந்து தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதி - பக்கம் 97.

மேலும் அதே திராவிட இயக்க வரலாறு முதல் பகுதியில் நாவலர் டாக்டர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிட மொழியான தமிழைப்பற்றி கால்டுவெல் பாதிரியார் என்ற தலைப்பில் எழுதுகையில், பின்வரும் அரிய குறிப்புக்களைத் தருகிறார்கள். அதனை அப்படியே தருகிறோம்:

திராவிட மொழியான தமிழின் தனித்தன்மைப்பற்றியும், தனிச்சிறப்பியல்புகள் பற்றியும், சிறப்பாகவும், செம்மையாகவும் உலகிற்கு உணர்த்திய பெருமகனார், கால்டுவெல் பாதிரியார் ஆவார். கிருத்தவ சமய நெறியைத் தமிழகத்தில் பரப்பும் நோக்கோடு 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை தந்து, தமிழகத்திலேயே பல ஆண்டுகாலம் தங்கியிருந்து, தமிழர்களோடு நெருங்கிப் பழகியும், தமிழ் மொழியை நன்கு அறிந்தும் சிறந்து விளங்கிய கால்டுவெல் பாதிரியார் அவர்கள், ஆராய்ந்து எழுதிய திராவிட ஒப்பியல் இலக்கணம் என்னும் சிறப்பிற்குரிய ஆராய்ச்சி நூல், திராவிட மொழியான தமிழ் மொழியின் சிறப்புக் கூறியல்களைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றது.

தமிழ் ஓவியா said...

கால்டுவெல் பாதிரியார், தமிழைப் பற்றிச் சுட்டிக் காட்டியுள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:

1) திராவிட மொழிகளில், பெரும்பாலும் முதன் முதல் பயன்படுத்தப் பெற்ற மொழி, தமிழ் மொழியேயாகும்.

2) அவைகளில் தலைசிறந்த மொழியாக வளர்க்கப்பட்ட மொழியும் தமிழேயாகும்.

3) திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த கிளைமொழிகள் அத்துணைக்கும் தலைமை தாங்கும் பெற்றி தமிழ் மொழிக்கே உண்டு.

4) தமிழ்தான் திராவிடக் குடும்ப மொழிகளில் மிகத் தொன்மைக் காலந்தொட்டு, மிகச் சிறப்பாகப் பண்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் மொழியாகும்.

5) தமிழானது, பழைமையான வடிவங்களைப் பெற்று மிகுந்த வளமுடனும், வலிவுடனும் திகழும் மொழியாகும்.

6) தமிழானது வடமொழித் தொடர்பு சிறிதும் இன்றித் தனித்து நின்று வழங்கும் தன்மையைப் பெற்றதாகும்.

7) வடமொழியின் உதவி இல்லாமல், தனித்துத் தழைத்தோங்கும் தகைமை தமிழுக்கு உண்டு.

8) வடமொழிச் சொற்களைத் தன்னிடத்திலிருந்து அறவே நீக்கி விடுவதன் மூலம், தமிழ் தூய்மையானதாகவும், நடையில் உயர்ந்ததாகவும், நேர்த்தி உடையதாகவும் திகழும் தன்மையைக் கொண்டதாகும்.

9) தமிழின் இலக்கிய நடை, உலக மொழிகள் பலவற்றின் நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுச் சிறந்து விளங்குவதாகும்.

10) தமிழின் சொல்வளம், இலக்கண வடிவுகள், வகைதொகைகள் குறியீடுகள், திசைச்சொற்கள், புணர்ச் சொற்கள், வேர்ச் சொற்கள் போன்றவை வளம் பொருந்திக் காணப்படுபவைகளாகும்.

11) பிற திராவிட இன மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் தொன்மையானதாகவும், தூய்மையானதாகவும் காணப்படுவதாகும்.

12) தமிழ் இலக்கியம் தெலுங்கு, கன்னட இலக்கியங்களுக்கு மிகவும் முற்பட்டதாகும். மலையாள இலக்கியத்திற்கு மிகமிக முற்பட்டதாகும்.

13) தமிழிலுள்ள எண்ணுப் பெயர்கள், வேற்றுமை யுருபுகள், வினைவிகுதிகள் போன்றவை. பல்லூழிக்காலம் கடந்த நிலையிலும், திரிபுக்கு இடமின்றி நிலைத்தவையாக இருந்து வருகின்றன.

இவ்வாறும், இவைபோன்றும் தமிழுக்கு உள்ள சிறப்புக் கூறுபாடுகளைக் கால்டுவெல் பாதிரியார் சுட்டிக்காட்டி யிருப்பது, நமக்கெல்லாம் பெருமிதவுணர்வை அளிக்க வல்லதாகும். சங்ககால நூற் பயிற்சியும், தனித்தமிழ் உணர்ச்சியும் இல்லாதிருந்த அந்தக்காலத்தில், அயல் நாட்டாரான அவர், ஆரிய மொழியினின்றும் திராவிட மொழியைப் பிரித்துக் காட்டிய செயல், மிகவும் பாராட்டுவதற்குரியதாகும்.

பொதுவாக, ஜி.யு.போப் அவர்களின் தமிழ்த்தொண்டு, அவரது கல்லறையில் ஒரு தமிழ்த் தொண்டன் உறங்குகிறான் என்று ஆக்ஸ்ஃபோர்டு பகுதியில் உள்ளது.

அவர் மரணத்திற்குப் பிறகும் வாழும் தமிழ்த் தொண்டர் என்பதைக் காட்டவில்லையா?

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை,

தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?

என்று வினவினார் புரட்சிக்கவிஞர்!

வீரமாமுனிவர் போன்ற பெரும் இலக்கியச் செறிவாளர்கள், (இவர்களுக்கெல்லாம் சென்னைக் கடற்கரைச் சாலையில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திராவிடர் ஆட்சி - தி.மு.க. அமைச்சரவை அரசு சிலைகளை உலகத் தமிழ் மாநாட்டின்போது திறந்து வரலாறு படைத்ததே!)

அதுமட்டுமா?

ஆல்பர்ட் ஷைவட்சர் என்ற ஜெர்மானிய அறிஞர் திருக்குறளை மிகவும் பாராட்டி உலகப் புகழ் அடையச் செய்தாரே!

கில்பர்ட் சிலேட்டர் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக வந்து, பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் அதிகாரியாகவும் பணிபுரிந்தவர்.

அவரது இந்தியப் பண்பாட்டில் உள்ள திராவிட கருத்தியல்கள் (‘‘Dravidian Elements in Indian Culture’’) என்று எழுதிய நூல் ஓர் அரிய நூல்.

இந்த 20ஆம் நூற்றாண்டு, 21ஆம் நூற்றாண்டிலும், ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா (ஜார்ஜ் ஹார்ட்), கபிலசுவல் (செக்கோசுலோவேகியா) போன்ற பல பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் பணி (இன்னும் எவ்வளவு பேர்கள் உள்ளனர்) செயற்கரிய வரலாற்றுப் பணி, மிகவும் பாராட்டத்தக்கது.

அவர்களை இங்கே சிலர் மதக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கும் குள்ள மனப்பான்மையைவிட்டு, பரந்த விரிந்த உள்ளத்தோடு அவர்களது பாராட்டு விழாவை நன்றித் திருவிழாவாக (Thanks Giving Festivalநடத்துவோம், வாரீர்! வாரீர்!!

- கி.வீரமணி, ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

நாத்திக அறிவியலாளர் விக்டர் ஜே. ஸ்டெஞ்சர்

- நீட்சே

விக்டர் ஜான் ஸ்டெஞ்சர் (Victor J.Stenger) என்னும் அமெரிக்கர் ஒரு துகள் இயல்பியல் அறிவியலாளரும் (Particle Physicist), தத்துவ இயலாளரும், ஆசிரியரும், கடவுள், மத நம்பிக்கை அற்றவரும் ஆவார். துகள் இயல்பியல் அறிவியல் துறையில் ஓர் ஆராய்ச்சி அறிவியலாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இன்று புதிய நாத்திகம் என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பது மட்டுமன்றி, புகழ் பெற்ற அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியும் வருகிறார். இயல்பியல், சிறுஅளவிலான மின்காந்த ஆற்றல் இயந்திரவியல், விண்வெளி ஆய்வு, தத்துவம், மதம், நாத்திகம், போலி அறிவியல்கள் ஆகிய 12 நூல்களை இவர் எழுதி இதுவரை பதிப்பித்துள்ளார்.இவரது நூல்களுள், கடவுள் - தோல்வியடைந்த கருதுகோள் : கடவுள் என்ற ஒருவர் உண்மையில் இல்லை என்பதை அறிவியல் எவ்வாறு விளக்கிக் காட்டுகிறது?(God - The Failed Hypothesis. How Science shows that God does not exist?)’’ என்ற நூல் அதிக பதிப்புகள் விற்று சாதனை படைத்தது. அண்மையில் இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல் கடவுளும் அணுவும் : டிமோக்ரிடஸ் முதல் ஹிக்ஸ் பாஸன் வரை (God and Atom : From Democritus to the Higgs Boson)” 2013 இல் வெளியானது. ஹஃபிங்டன் போஸ்ட் (Huffington Post) என்னும் பத்திரிகைக்கு அறிவியல் கட்டுரைகளைத் தவறாமல் எழுதி வருபவர் இவர். அறிவியல் ஆராய்ச்சி, வணிக பொருளாதாரச் செயல்பாடுகள், அரசியல் முடிவுகள் எடுக்கும் நடைமுறை ஆகியவற்றின் மீதான கடவுளின் செல்வாக்கை, ஆதிக்கத்தை நீக்க வேண்டும் என்று பலமாக வலியுறுத்தி வருபவர் இவர். புகழ் பெற்ற அறிவியல் உங்களை நிலவுக்கு அழைத்துச் செல்கிறது; ஆனால் மதமோ உங்களைக் கட்டிடங்களுக்குள் செலுத்துகிறது என்ற சொற்றொடரை இவர்தான் உருவாக்கினார்.

தமிழ் ஓவியா said...

1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி பிறந்த விக்டர் ஜான் ஸ்டெஞ்சர், அமெரிக்க நாட்டின் நியூஜெர்ஸி மாநிலத்தின் பயோனி நகரின் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் வளர்ந்தார். அவரது தந்தை லிதுவேனியா நாட்டிலிருந்தும், அவரது தாய் ஹங்கேரி நாட்டிலிருந்தும் குடிபெயர்ந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஆவர்.

கல்வியும் வேலையும்: பயோனியில் அரசு பள்ளிகளில் தனது கல்வியைத் தொடங்கிய ஸ்டெஞ்சர், தற்போது நியூஜெர்ஸி தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் என்று அறியப்படும் நிவார்க் பொறியியல் கல்லூரியில் மின்பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஹக்ஸ் விமான நிறுவனத்தின் படிப்புதவித் தொகையைப் பெற்ற இவர் லாஸ் ஏன்ஜெல்சுக்குச் சென்று 1958ஆம் ஆண்டில் லாஸ் ஏன்ஜெல்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1963ஆம் ஆண்டில் இயல்பியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

ஜெர்மனியில் உள்ள ஹெய்டன்பர்க் பல்கலைக்கழகம், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு அழைப்பின் பேரில் சென்று பேராசிரியராகப் பணியாற்றியதுடன், இங்கிலாந்தில் உள்ள லூதர்போர்ட் ஏப்பிள்டன் சோதனைச் சாலையிலும், இத்தாலி நாட்டில் உள்ள பிராஸ்காட் தேசிய அணு இயல்பியல் சோதனைச் சாலையிலும், ப்ளாரன்ஸ் பல்கலைக்கழகத்திலும் அழைப்பின் பேரில் சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். தற்போது ஹவாய் பல்கலைக்கழகத்தில் இயல்பியல் எமிரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் ஓவியா said...

அறிவியலாளராக: ஸ்டெஞ்சரின் முதல் ஆராய்ச்சிக் கட்டுரை 1964இல் வெளியிடப்பட்டது தொடங்கி ஆய்வுப் பணி 2000ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெறும் வரை தொடர்ந்தது. அணுவின் மிகச் சிறிய துகள், விந்தையான துகள்கள் மற்றும் நியூட்ரினோ ஆகியவற்றின் பண்புகளை, பகுதிகளைத் தீர்மானிக்கும் ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். நியூட்ரினோ விண்வெளி ஆய்வு, மிக உயர்ந்த ஆற்றல் படைத்த காமா கதிர்கள் பற்றிய ஆய்வுகளுக்கு ஸ்டெஞ்சர் ஒரு முன்னோடியாக விளங்கினார். ஜப்பான் நாட்டில், நிலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட காமிகாண்டா சோதனையில் சோதனை இயல்பியலாளராக இவர் பங்கெடுத்துக் கொண்டதுவே ஓய்வு பெறுவதற்கு முன் இவர் மேற்கொண்ட இறுதியான ஆய்வுப் பணியாகும். நியூட்ரினோவுக்கும் எடை உள்ளது என்பதை இச் சோதனை நிலைநாட்டியது. இச்சோதனைத் திட்டத்தின் தலைவரான ஜப்பான் நாட்டு அறிவியலாளர் மாஸாடோஷி இயல்பியலுக்கான 2002ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி இயல்பியல் துறையில், குறிப்பாக விண்வெளி நியூட்ரினோக்களைக் கண்டுபிடிக்கும் பணியில் முன்னோடியாகப் பங்களித்தமைக்காக இந்த நோபல் பரிசு இவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தத்துவ ஞானியும், கடவுள் மறுப்பாளரும்: தத்துவ அடிப்படையிலான இயல்புத் தன்மை, கடவுள் மறுப்பு, நாத்திகக் கோட்பாடு ஆகியவற்றைப் பலமாக ஆதரிப்பவர் என்பதற்காகவே முக்கியமாக ஸ்டெஞ்சர் இன்றளவும் அறியப்பட்டுள்ளார். அறிவார்ந்த படைப்பாளி கடவுளே என்ற கருத்தையும், மனித இனத் தோற்றம் மற்றும் வளர்ச்சிக் கொள்கையை மறுப்பவர்களையும் கடுமையாக எதிர்ப்பவர் இவர். தன் உணர்வும், சுய விருப்பமும் இருக்குமேயானால், அறிவியல்பூர்வமாக அவை விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது இயற்கையை மீறிய ஆற்றலையோ, புரிந்து கொள்ள முடியாத தெய்வீக, ஆன்மீக ஆற்றல்களையோ வெளிப்படுத்தவோ, மெய்ப்பிக்கவோ இல்லை. சிறுஅளவிலான மின்காந்த ஆற்றல் இயலில் உள்ள குழப்பங்களின் துணையுடன் அறிவியல் ரீதியாக விளக்கப்பட முடியாத விந்தையான நிகழ்வுகள், இயற்கையை மீறிய கோட்பாடுகள் ஆகிய கற்பனைகளுக்கு வடிவம் கொடுப்பதை இவர் கடுமையாக விமர்சித்துக் கண்டித்துள்ளார். தற்கால போலி அறிவியல் துறைகளாக ஜோதிடம், வாஸ்து சாத்திரம் ஆகியவற்றின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் பல நூல்களையும், கட்டுரைகளையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

திறமை மிகுந்த சொற்பொழிவாளரான ஸ்டெஞ்சர், கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கடவுள் மறுப்பு சங்கத்தினரால் 2008 இல் நடத்தப்பட்ட உயிரினத் தோற்ற மாநாட்டில் , வில்லியம் லேன் கிரெய்க், ஹக் ராஸ், டேவிட் பார்த்தலோமி ஆகிய அறிவியலாளர்களுடனும் பங்கெடுத்துக் கொண்டு, நான்சி மார்பி, லியோனார்ட் சஸ்கைண்ட் ஆகிய கிறித்துவ மதப் பரப்புரையாளர்களுடன் கடுமையான விவாதங்கள் செய்துள்ளார். ஊரி கெல்லர் என்னும் மதப் பரப்புரையாளர் தனது அற்புத ஆற்றல்களைக் கேள்வி கேட்ட காரணத்துக்காக, 40 லட்சம் டாலர் இழப்பீடு கோரி ஸ்டெஞ்சர் மற்றும் புரமோதிஸ் பதிப்பகத்தின் மீது 1992இல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்குச் செலவுகளை ஊரி கெல்லர் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

பத்திரிகையாளராக: ஸ்கெப்டிக் என்குயரி கமிட்டியின் காலாண்டு செய்திப் பத்திரிகைக்காக உண்மை நிலையைச் சோதித்துப் பார்த்தல் என்னும் ஒரு தொடர் கட்டுரையை 1998 முதல் 2011 வரை ஸ்டெஞ்சர் எழுதியுள்ளார்.

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

புதிய சமூகம் படைக்கும் பழகு முகாம்


கழுவி விடப்பட்ட சாலைகள், குளித்துத் தலை துவட்டியிருந்த பசுமையான மரங்கள், மெல்லிய தென்றலுக்கும்கூட, தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறும் மழைச் சாரல்... இவைகளோடு குழலினிது, யாழினிது என்பதைக் காட்டிலும் இனிமையான மழலைச் செல்வங்களும் இருந்தால், எப்படியிருக்கும்! ஆம், அப்படித்தான் இருந்தது இந்தப் பழகு முகாம் _ 2014.

பெரியார் பிஞ்சு, பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து வழக்கம்போல, நான்காவது ஆண்டாக ஆறு நாட்கள் (05.05.14 _ 10.05.14) பழகு முகாமை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஒருவர் ஒருமுறைதான் கலந்துகொள்ள வேண்டும் என்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகளும் அடம் பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்து மறுபடியும் கலந்து கொள்கிறார்கள். இதுதான் பழகு முகாமின் சிறப்பு. இதனாலேயே, அதிகபட்ச எண்ணிக்கையாக 150 என்று திட்டம் செய்திருந்தும் 209 பேர் வந்து குவிந்து விட்டனர். ஏற்பாடு செய்திருந்தவர்கள் இனிய அதிர்ச்சிக்கு ஆளாகி விடுவது வழக்கமாகிவிட்டது.

இன்னும் ஒரு முக்கியமான சிறப்பு இந்தப் பழகு முகாமுக்கு உண்டு. அதாவது, இங்கு விளையாட்டைப் போல அறிவு புகட்டுவது. அறிவைப் புகட்டுவதுபோல, அவர்களுடன் பேசி விளையாடுவது என்ற இரண்டும் இங்கு உண்டு. அறிவு புகட்டுவது என்பதே பழகு முகாமைத் தவிர மற்ற இடங்களில் பொருள் வேறுபடும். இங்கு புத்தறிவு, புத்தரின் அறிவு, பெரியாரின் அறிவு பகுத்தறிவு, மனிதநேயம் என்பதுதான் பொருள்படும்.

வருகை தந்திருந்த 209 பேர்களில் ‘A’ பிரிவு (Adolescent) ‘K’ பிரிவு (Kits) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இரண்டு தரப்பினருக்கு அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் வகுப்புகள் அமைக்கப்பட்டன. முதல் நாளில் அடிப்படைப் பரிசோதனைகள் முடித்த பிறகு, பெரியார் பிஞ்சுகள் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள (சிக்மண்ட்) பிராய்டு அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வருகை தந்திருந்து பழகுமுகாமைத் தொடங்கிவைத்து பெரியார் பிஞ்சுகளோடு அளவளாவினார். அப்பொழுது அவர், ஒரு முக்கியமான தகவலைச் சொல்லி, அந்தத் தகவலுக்காக பிஞ்சுகளிடம் பலத்த வரவேற்பையும் பெற்றார். அதாவது, புவிஈர்ப்பு விசை என்ற மகத்தான அறிவியல் உண்மையை நியூட்டன் கண்டுபிடித்தது, பள்ளியில் படிக்கும்போது அல்ல. உங்களைப் போன்று இப்படி விடுமுறையைக் கழித்த போதுதான் என்று குறிப்பிட்டதும் பிஞ்சுகள் ஒரு பொறி தட்டிய உணர்வுடன் கையொலி செய்தனர். அதைத் தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர், வீ.அன்புராஜ், அதுபோல, உங்களையும் சிந்திக்கச் செய்யப்போகிறோம் என்று பிஞ்சுகளின் பொறிதட்டிய உணர்வுக்கு முத்தாய்ப்பு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா. தவமணி, பதிவாளர் எஸ்.பி.கோவிந்தராசு, புதுவை சிவ.வீரமணி, பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, பிஞ்சுகளுக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி.வீரமணி, அண்ணல் காந்தி, அறிவியல் அறிஞர் அப்துல்கலாம், கல்பனா சாவ்லா, பகுத்தறிவாளர் நேரு, அன்னை தெரசா, தாமஸ் ஆல்வா எடிசன், சட்டமேதை அம்பேத்கர் ஆகிய அறிஞர்களின் நிழல் படம் அமைந்த முகமூடி கொடுக்கப்பட்டது. அந்த முகமூடியுடனேயே 209 பேரும் மேடையேறி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


பழகு முகாமில் பிஞ்சுகளுக்கு, தங்கள் பணிகளைத் தாங்களே செய்துகொள்ளும் வாய்ப்பு வாய்த்துவிடுகிறது. இன்னது செய்ய வேண்டும், இது கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு ஒரு ஒழுக்கமாகவே கற்றுத்தரப்பட்டு விடுகிறது. விளையாடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அறிவை வளர்த்துக் கொள்வது என்பதும் தகுந்த வகுப்புகள் மூலம் உணரச் செய்யப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு உகந்த பொழுதுபோக்குகள் கூட நகைச்சுவையுடன் கூடிய அறிவு வளர்ச்சிக்கே அடிகோலுகின்றன. உலகம் என்பது வீடும் பள்ளிக்கூடமும் மட்டுமல்ல, அதையும் தாண்டி ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கின்ற புதுப்புது நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என்று புது உலகமும், நாளைய உலகம் நம் கையில் என்ற உணர்வுகளும் இயல்பாகவே உண்டாகி, பெற்றவர்களைக்கூட மறந்துவிடுவதும்கூட இங்கு வாடிக்கையாகிவிட்டது.

பழகு முகாமுக்கு வரும் ஒவ்வொரு பெரியார் பிஞ்சும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். சிலரை, தள்ளி இருந்து கவனித்தால் போதும், சிலரை பக்கத்தில்... இன்னும் சிலரை கூடவே இருந்து. இப்படிப் பலப்பல.... ஆனால், இங்கு வந்த பிறகு, ஏறக்குறைய பல குறைபாடுகள் கண்களுக்குத் தெரியாமலேயே களையப்பட்டு விடுகின்றன.

உதாரணத்திற்கு வேண்டுமானால் ஒன்றைச் சொல்லலாம். சென்னையிலிருந்து வந்திருந்த அருண்மொழிப் பாண்டியன் இளவயது பழகுமுகாம் பங்கேற்பாளர். தன்னை, தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சின்னஞ்சிறு மலர். எப்போதும் ஒருவருடைய அருகாமையை எதிர்பார்க்கும் தன்மை. எதையும், யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தளிர். அப்படிப்பட்டவர் தஞ்சையிலுள்ள சிவகங்கை பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெரியார் பிஞ்சுகள் அனைவரும் பாதுகாவலர்களுடன் (Volunteers) தண்ணீரில் இறங்கி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தபோது, இவன் மட்டும் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தான். அழக்கூட தயாராக இருந்தான்; வற்புறுத்தவில்லை. வேடிக்கை மட்டும் பார் போதும் என்று கேட்டு சம்மதிக்கச் செய்தோம். இதுதான் அவனுக்குத் தூண்டில்... சற்று நேரத்தில் மீன் புழுவைக் கடித்தது, பிறகு... வேறென்ன உயர நீர்ச்சறுக்கு, அகல நீர்ச்சறுக்கு, குறு அருவி, பெரு அருவி என்று கும்மாளம் அடித்துவிட்டு, நேரம் முடிந்து விசில் அடித்து மேலே அழைத்ததும், என்ன அதுக்குள்ள மேல வரச் சொல்றாங்க என்று கேட்டான். இதுபோல எத்தனையோ...

இந்த வயதில் மனது ஒரு சரியான நிலைக்கு வராமல் போனால், பிறகு பெற்றவர்களும் வளர்ந்த பிள்ளைகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு மாற்றாக இருக்கிறது, பழகு முகாம். நோய்நாடி நோய் முதல் நாடியாக இருக்கிறது இந்தப் பழகு முகாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் தமிழர் இனத்தின் பண்பாட்டுக்கான விதைகளாக இருக்கிறது இந்தப் பழகு முகாம்.

இந்த மாபெரும் சமூக மறுமலர்ச்சிக்கான பணியில், திராவிடர் கழகத்தின் தலைவரும் தமிழர் தலைவருமான கி.வீரமணி, பழகு முகாமின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் தொடங்கி, பிரின்சு என்னாரெசு பெரியார், பேராசிரியர் பர்வீன், சிவ.வீரமணி, உடற்பயிற்சி ஆசிரியர் ஹேமலதா மற்றும் அழகிரி, பெரியார் வலைக்காட்சி சார்பாக ஒலி, ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் PMU வாலண்டியர்ஸ், ஆசிரியர்கள், சமையல் கலைஞர்கள், ஓட்டுநர்கள் என்ற ஒரு படையே இந்தப் பழகு முகாமின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்து பணிபுரிந்துள்ளனர். இந்த ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பு வருங்காலத்திலும் தொடரும். இந்த அர்ப்பணிப்புக்கு காலம் தக்க பதில் சொல்லும்.

- உடுமலை வடிவேல்

தமிழ் ஓவியா said...

புதுப்பா : யாராலே?....


மான மிழந்தோம் ஆரியத்தால்
மதி யிழந்தோம் ஆரியத்தால்
உரிமை யிழந்தோம் ஆரியத்தால்
உணர்வை இழந்தோம் ஆரியத்தால்

சாத்திரத்திற்கும் அடிமை யானோம்
கோத்திரத்திற்கும் அடிமை யானோம்
மந்திரத்திற்கும் அடிமை யானோம்
மதத்திற்கும் அடிமை யானோம்

அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்
மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்
தன்மானம் இன மானம்
காத்தது எம் திராவிடமே

குலக் கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்தது ஆரியமே
ஆரிய நஞ்சின் ஆணவத்தை
அழித் தொழித்தது திராவிடமே

இடுப்புத் துண்டு தோளுக்கு
இடம் மாறியது திராவிடத்தால்
இட ஒதுக்கீடும் இன்றளவும்
இத மானது திராவிடத்தால்

சூத்திரன் என்றுனைச் சொன்னாலே
ஆத்திரம் கொண்டு அடிப்பாயே
சொன்னது சொன்னது யாரது?
எம் தந்தை பெரியாரே!

பெண் குலத்தைக் கோவிலுக்கு
நேர்ந்து விட்டது கொடுமையடா!
பொட்டுக் கட்டும் தேவதாசிமுறை
ஒழிந்தது திராவிடத்தால்

கோவில் நுழைவு திராவிடத்தால்
காலுக்கு செருப்பு திராவிடத்தால்
பெண்ணுக்கு உரிமை திராவிடத்தால்
பெண் கல்வியும் திராவிடத்தால்

ஆணும் பெண்ணும் சமம்
திராவிடத் தாலே திராவிடத்தால்
அச்ச மென்பது இனியில்லை
திராவிடத் தாலே திராவிடத்தால்

அம்மி மிதிக்கல அக்னியில்லை
அடிமைச் சின்னமும் பெண்ணுக்கில்லை
மணி விழா மணவிழா
யாராலே திராவிடத் தாலே

திராவிடத்தால் உயிர் பெற்றோம்!
திராவிடத்தால் எழுந் திட்டோம்!
திராவிடத்தால் வாழ்ந் திடுவோம்!
திராவிடத்தால் வீழ்ச்சி இனியில்லை!

- குடியாத்தம் ந.தேன்மொழி

தமிழ் ஓவியா said...


டாக்டர் தருமாம்பாள்


எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி? எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்? என்ற புரட்சிக்கவிஞர் பாரதி தாசனின் வீரம் கொழுந்து விட்டு எரியும் எரிமலைப் பாடல் வரிகளைப் பாடிக் கொண்டு சென்னைப் பெத்துநாயக்கன்பேட்டை யிலிருந்து பெண்கள் படை ஒன்று புறப்பட்டது.

அந்தப் படை வந்து சேர்ந்த இடம் - இந்து தியாலாஜிகல் உயர் நிலைப்பள்ளி (14.11.1938) தலைமை தாங்கிய வீராங் கனை டாக்டர் தருமாம் பாள்!

அதற்கு முதல்நாள் (13.11.1938) சென்னையில் கூடிய பெண்கள் மாநாட் டில்தான் மதிப்புக்குரிய தலைவர் ஈ.வெ.ரா.வுக் குப் பெரியார் என்ற பட்டம் பெருமையுடன் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில்தான் மறுநாள் இந்த ஊர்வலம்.

டாக்டர் தருமாம்பாள் தலைமையில், மூதாட்டி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மயிலை சிவமுத்துவின் தமக்கை யார் மலர் முகத்தம்மை யார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் அவர்களின் வாழ்விணையர் பட்டம் மாள், டாக்டர் தருமாம் பாள் அவர்களின் மரு மகள் சீதம்மாள், (மங்கை என்ற 3 வயது மகள், நச்சினார்க்கினியன் என்ற ஒரு வயது மகன் ஆகிய இரு குழந்தைகளுடன்) ஆகியோர் முதல் நாள் மறியலில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டனர். அய்வருக்கும் ஆறு வார கடுங்காவல் தண்டனை - வேலூர் சிறைக்கு அனுப் பப்பட்டனர்.

அந்த மறியல் போராட்டம் 4.9.1938 வரை தொடர்ந்தது. மொழிப் போரில் பெண் கள் பங்குகொண்டனர் என்ற வரலாற்றில் முதல் அத்தியாயத்தைப் பூக்கச் செய்தனர்.

மொழிப் போருக்குத் தலைமையேற்ற டாக்டர் தருமாம்பாள் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1959).

மொழிப்பற்று, தமிழ் இசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆசிரியர் களின் உயர்வு, விதவை கள் மறுமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, சித்த மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்த மூதாட் டியாக விளங்கினார்.

அவர் மறைந்தபோது, அறிஞர் அண்ணா எழுதி னார்:

மேலும் ஏதும் எழுத அன்னையாரைப் பிரிந்த தால் ஏற்பட்ட இதயக் குமுறல் இடம் தரவில்லை என்று எழுதினார் என் றால் அம்மையாரின் அருமை விளங்குமே! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/80680.html#ixzz32PCuRAzo

தமிழ் ஓவியா said...


பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?


பூனைக்குட்டி வெளியில் வருகிறது!

பணம் கொடுத்து செய்திகளை வெளியிடச் செய்வதா?

தடுத்திட சட்டம் தேவை என்கிறார் தேர்தல் ஆணையர் சம்பத்

புதுடில்லி, மே 21- தேர் தலின்போது, வேட்பாளர் கள் பணம் கொடுத்து, ஊட கங்களில் செய்தி வெளி யிடச் செய்வது, அபாயகர மானது. ஆனாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகளால், அந்த அபாயத்தை தடுக்க முடியவில்லை. எனவே, கடுமையான சட்ட விதி களை உருவாக்க வேண்டி யது அவசியம் என, தலை மைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறினார்.

செய்தி நிறுவனம் ஒன் றுக்கு நேர்காணலில் தலை மைத் தேர்தல் ஆணையர், சம்பத் கூறியதாவது:

நாட்டின், 16 ஆவது மக்களவைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் வெற்றி கரமாக நடத்தி முடித்துள் ளது. அதனால், நாம் நிம் மதி அடைந்துள்ளோம். இந்த தேர்தலின் போது, அரசியல் தலைவர்கள் சிலர், மக்களிடையே விரோ தத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசிய தால், அவர்களுக்கு எதிராக, முதன்முதலாக நடவ டிக்கை எடுக்க வேண்டி நேரிட்டது.

வாக்காளர்கள் பலரை, கடைசி நேரத்தில் வாக் காளர்கள் பட்டியலில் சேர்த் தது, தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என, வாக்காளர்கள் மத்தி யில், விழிப்புணர்வு பிரச் சாரம் செய்தது போன்ற வற்றால், இதுவரை இல் லாத வகையில், இந்த தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

ஊடகங்களுக்குப் பணம்

தேர்தல் நேரத்தில், ஊட கங்களுக்கு பணம் கொடுத்து, செய்தி வெளி யிடச் செய்வது, அபாய கரமான ஒன்றாக அதி கரித்து வருகிறது. சட்ட ரீதியாக, இதைக் கையாள முடியவில்லை. அதனால், பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை, மக்கள் பிரதிநிதித்துவச் சட் டப்படி, தேர்தல் குற்ற மாக்க வேண்டியது அவசி யம்.

இந்த தேர்தலின் போது, பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்வதை தடுக்க, தேர்தல் ஆணையம் முடிந்தவரை, பல நடவ டிக்கைகளை எடுத்தது. இந்த பிரச்சினையை கண் காணிக்க, மாவட்ட அள விலும், மாநில அளவிலும் குழுக்களை நியமித்தது.

பணம் கொடுத்து, 7,000 செய்திகள் வெளியிடப் பட்டது என்று உறுதி செய்யப் பட்டது. அதில், 3,000 செய் திகள் தொடர்பாக, சம்பந் தப்பட்டவர்களுக்கு, அறி விக்கை அனுப்பப்பட்டன.

இருந்தாலும், சட்டத் தில் உள்ள ஓட்டைகள் காரணமாக, இந்தப் பிரச் சினையை கடுமையான முறையில் கையாள முடிய வில்லை. பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய் வதை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் வகையிலேயே, ஆணை யத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது.

மக்களவைத் தேர்த லின்போது, வாக்குச்சாவடி களுக்கு, ஒன்பது லட்சம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சேர்ப்பதும், பின், அவற்றை வாக்கு எண்ணும் மய்யங் களுக்கு எடுத்துச் செல்வ தும் சிரமமான பணியாகும்.

அத்துடன், தேர்தல் பணியில் ஈடுபடும், 70 லட் சம் ஊழியர்களை கையாள் வதும், மத்திய, மாநில காவல் படையினரை வழிநடத்துவதும், மிகப் பெரிய வேலையாகும். ஆனாலும், அவற்றை எல் லாம், தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு விதமாக உள் ளது. ஒவ்வொரு தேர்தலின் போது, பல விதமான பிரச் சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்து டன், வாக்காளர்கள் எண் ணிக்கை அதிகரிப்பதும், பிரச்சினைகள் அதிகரிக்க காரணமாகும் என்று சமா தானம் கூறினார் தேர்தல் ஆணையர் சம்பத்.

Read more: http://viduthalai.in/e-paper/80681.html#ixzz32PD5tZuL

தமிழ் ஓவியா said...


இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகளே! - தந்தை

இலண்டன் மே 21- விடு தலைப்புலிகளின் தொலைக் காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன் றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகி யுள்ள புகைப்படத்தில் அவ ருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய குடும்பத்தி னர் கூறியிருக்கின்றனர். இந்த தக வலை இலண்டன் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ளது.

இணைய தளங்களிலும் பின்னர் உள்ளூர் பத்திரிகை களிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த் ததும், இசைப்பிரியாவுடன் இருப்பவர் தனது மகள் என்று அடையாளம் கண் டுள்ளதாக அவருடைய தந் தையார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று தமது மூத்த மகளாகிய உஷாளினி சென்றதாகவும், யுத்தம் தீவிரமடைந்து தாங்கள் இடம் பெயர்ந்து, முள்ளி வாய்க்காலுக்குச் சென்றி ருந்த போது ஒருநாள் தமது மகளைக் கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அவரைத் தம்முடன் வருமாறு கேட் டதற்கு அவர் வரவில்லை என்றும் அதன்பின்னர் யுத் தம் முடிவடைந்து தாங்கள் இடம்பெயர்ந்து செட்டி குளம் மனிக்பாம் இடைத் தங்கல் முகாமுக்கு வந்தி ருந்தபோது தமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்காத காரணத்தினால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவிடமும், மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரு மாறு கோரி முறையிட்டி ருந்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.

அண்மையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர் கள் தொடர்பில் விசாரணை நடத்திய அதிபர் ஆணைக் குழுவிலும் காணாமல் போயுள்ள தனது மகளைத் தேடித்தருமாறு தாங்கள் கோரியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் தமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள் ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப் பரண் ஒன்றினுள் தனது மகள் இருப்பதைக் கண்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அதிபர் ஆணைக்குழுவில் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடு களைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழு வினரிடம் முறையிடவுள்ள தாகவும் உஷாளினியின் தந்தையார் குணலிங்கம் தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா இராணு வத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் காணொ ளிகள் வெளிவந்து பர பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் இப் போது அவர் இராணுவ பங் கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப் படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் குறித்து இலங்கை இராணு வத்தின் சார்பில் பேசவல்ல ருவான் வணிகசூரிய அவர் களிடம் கேட்டபோது, இப் படியான படங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து கூறமுடியும் என் றும் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80682.html#ixzz32PDMmtT1

தமிழ் ஓவியா said...


எது மேலான சுதந்தரம்?


சுயமரியாதைக்காரனின் சுதந்தரம் எல்லாவற்றிலும் சுதந்தரம் இருக்கத்தக்கதாய் இருக்கும். சுதந்தரக்காரனின் சுதந்தரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்ததாக மாத்திரம் இருக்கும். - (குடிஅரசு, 18.7.1937)

Read more: http://viduthalai.in/page-2/80686.html#ixzz32PDpNUTr

தமிழ் ஓவியா said...


ஊடகங்கள், தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்?


புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஊட கம் நேர்மையாக செய்தி வெளியிடு கிறது என சொல்லுகிறார். உண்மையா? மோடி வளர்ச்சி நாயகன் என மோடியின் பிரச்சார கோஷ்டி தொடர்ந்து சொன்னதை ஊடகம் என்றைக்காவது கேள்விக்கு உட் படுத்தியுதுண்டா?

அடுக்கடுக்காக, குஜராத் மாடல் உண்மையல்ல என அரசியல் கட்சி கள் மட்டுமல்ல, அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் சொன்னதை, ஊடகங்கள் நேர்மையாக வெளிப் படுத்தினவா?

நான் ஆட்சிக்கு வந்தால், குற்றப் பின்னணி உள்ளவர்களை சிறையில் அடைப்பேன் என மோடி பேசினார்; அமீத் ஷா, முசாபர் நகர் கலவரக் குற்றவாளிகள், எடியூரப்பா போன்றோரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, இப்படி பேசுகிறீர்களே என எந்த ஊடகம் கேள்வி கேட்டது?

பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா சேர்த்த சொத்து விவரத்தை பட்டியலிட்டாரே; அதனை எந்த ஊடகமும் வெளியிடா மல் இருக்கிறீர்களே என கலைஞர் வெளிப்படையாகக் கேட்டாரே, அப்போதாவது, அந்த செய்தியை ஊடகம் வெளியிட்டதா?

ஆக, இங்கே ஊடக நிறுவனத்தின் முதலாளிகளுக்கு ஒரு அரசியல் இருக் கிறது. அதற்கு ஏற்ப செய்திகளை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக் கிறது. அதை மீறி நான் சொல்வேன் என்றால், அவர் வெளியே தள்ளப் படுவார்.

மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட சில பத்திரிகையாளர்கள். முதலாளிகளால் நீக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் தும்மினால் கூட, அது ஒரு செய்தி; உடனே, மைக்கைத் தூக்கிக் கொண்டு, மு.க. அழகிரியிடம் பேட்டி. அவரைத் தான், கட்சியி லிருந்து நீக்கிட்டாங்களே; அப்புறம் அவரிடம் பேட்டி எதற்கு?

இன்றைக்கு, அதிமுக அமைச்சர் கள் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்றைக்கு மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்ட, அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி.வேலு மணியும், 26.1..2012 அன்று, முதல்வர் ஜெயலலிதாவால், அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

கோகுல இந்திரா, சென்ற ஆண்டு பிப்ரவரி 27, 2013, அவர் வகித்து வந்த சுற்றுலாத் துறையை ஒழுங்காக கவனிக்கத் தவறியதால், இதே முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்.

இந்தச் செய்தியை, மூன்று அமைச் சர்கள் நீக்கம்; புதிய அமைச்சர்கள் நியமனம் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி கூறுகின்றன.

ஒரு ஊடகம்கூட, இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட வர்கள், ஏற்கெனவே, அமைச்சர் களாக இருந்து பதவி நீக்கம் செய்யப் பட்டவர்கள் என கூறவில்லை.

ஏற் கெனவே, அமைச்சர்களாக இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி எந்த அடிப்படையில் தரப்படுகிறது என ஜெயலலி தாவிடம், இந்த ஊடகங்கள், கேள்வி கேட்டுவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிக்கட்டும்.

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள்தான், பத்திரிக்கா தர்மம், நடு நிலை என்றெல்லாம் வாந்தி எடுக்கின்றன.

நம்மைப் பிடித்த அய்ந்து நோய்களுள் ஒன்று பத்திரிகைகள் என பெரியார் சும்மாவா சொன்னார்? அவர் காலத்தில், தொலைக்காட்சி ஊடகம் இல்லை; இருந்திருந்தால், இதையும் சேர்த்து இருப்பார்.- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/80691.html#ixzz32PED9Wm2

தமிழ் ஓவியா said...


பிகார் - திருப்பம் தருமா?

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று தோல்வியடைந்த கட்சிகள் ஆய்வில் ஏற்பட்டுள்ளன. இது இயல்பான ஒன்றே!

பிஜேபியே எதிர்பாராத அளவுக்கு சில மாநிலங்களில் வெற்றியைக் கவ்விப் பிடித்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சொல்ல வேண்டும் இந்த மாகாணங்களில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் அதிகம். இந்த மக்களுக்கான அடி நாதம் என்பது சமூக நீதியே! ஆனால் இந்தச் சமூக நீதிக் கொள்கைக்கு விரோதமான பி.ஜே.பி. வெற்றி பெற்றது எப்படி? என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

விடை எளிதானதுதான். இந்த மக்களிடையே நிலவிய பிளவும், அரசியலும்தான். இந்தப் பிளவுகளை பயன்படுத்தி ராஜ தந்திர வழிகளில் வெற்றி பெற்றுவிட்டது பா.ஜ.க., குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சி என்று கணிக்கப்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் ஒரு பக்கம்; உயர் ஜாதியோடு அக்கட்சி வைத்திருந்த கூட்டு இந்த முறை கை கொடுக்கவில்லை பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்குகளும் கிடைக்கப் பெறவில்லை.

சமாஜ்வாடி கட்சியைப் பொறுத்தவரை அதன் வாக்கு வங்கி பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை மக்களான முஸ்லிம்களும்தான்.

உ.பி.யில், மோடியின் அந்தரங்க மனிதரான அமித்ஷா உ.பி.யில் புகுந்து குறுகிய காலத்தில் மதக் கலவரத்துக்கு வழிகோலி, தம் பக்கம் குறிப்பிட்ட பிரிவினரை இழுத்துக் கொண்டார்; குறிப்பிட்ட மக்களைப் பழி வாங்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் நஞ்சைக் கக்கினார். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டு இது அரங்கேற்றம் செய்யப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

பிகாரைப் பொறுத்தவரை நிதீஷ்குமார் நல்லாட்சி நடத்தி வந்திருக்கிறார். பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், மத வெறி நாயகரான மோடியை என்றைக்குமே அவர் ஏற்றுக் கொண்ட தில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதுகூட தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வரக் கூடாது என்று கறாராகவே சொல்லி விட்டார்.

பிகாரைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நாயகரான லாலு பிரசாத், தாழ்த்தப்பட்ட மக்களின் நட்சத்திரமான ராம்விலாஸ் பஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர்களுக்கிடையே நல்லிணக்கம் கிடையாது - எல்லாம் அரசியல் அபிலாசைகள்தான் அதற்குக் காரணம். இடையிலே நெருங்கி வந்திருந்த பஸ்வானும், லாலுவும், தேர்தலில் போட்டிப் போடும் இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பிசிறினால், பஸ்வான் பி.ஜே.பி.க்கே சென்று ஆலிங்கனம் செய்து கொண்டு விட்டார்.

பிஜேபி அமைச்சரவையில் இடம் பெற்று, கடைசி நேரத்தில் மதவாத எதிர்ப்பு என்ற கொடியைப் பிடித்து வெளியேறியவர்தான் அவர். இப்பொழுது மீண்டும் முன்பைவிட தீவிரமாக மத நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பிஜேபியோடு கையிணைத்தற்கு எதிர்காலத்தில் அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

பி.ஜே.பி.யை பொறுத்த வரை - குறிப்பாக நரேந்திர மோடியின் எண்ணம் பிகாரில் நிதிஷ்குமார் கட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதாகும்.

ஆனால், வெகு புத்திசாலித்தனமான நிதிஷ் குமாரும், சரத்யாதவும் காய்களை நகர்த்தி, காங்கிரஸ் துணையுடன், நிதிஷ்குமார் தனக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம் மன்ஜியை முதல் அமைச்சராக ஆக்கி விட்டார்.

இந்தத் திருப்பத்தை எதிர்பாராத பிஜேபி வட்டாரம் திகைத்து நிற்கிறது.

பிகாரைப் பொறுத்த வரை பி.பி. மண்டல், போலோ பஸ்வான் சாஸ்திரி, கர்ப்பூரிதாகூர், லாலுபிரசாத் என்று ஒரு நீண்ட சமூகநீதியாளர் பட்டியல் உண்டு.

அப்படிப்பட்ட பிகாரில், மண்டல் காற்றால் அடையாளம் காணப்பட்ட ராம்விலாஸ் பஸ்வான் இப்பொழுது கூறுகிறார். தனித் தொகுதிகளில் 62 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்று தலித் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத் திரையைக் கிழித்து விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்.

இத்தகு மனப்பான்மையின் அஸ்திவாரத்தின் மீதுதான் பிஜேபி உயர் ஜாதி அதிகார மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது.

பிகாரில் நிதிஷ் இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட வரை முதல் அமைச்சராக்கி புதியதோர் திருப்பத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்தக் காற்று வட மாநிலங்களில் வீசட்டும்; மீண்டும் மண்டல் கொடுத்த அந்தச் சமூகநீதிக் கொடி உயரட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/80731.html#ixzz32UwKyEvc

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன


உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

- (விடுதலை, 12.10.1962)

Read more: http://viduthalai.in/page-2/80730.html#ixzz32UwTpLT6

தமிழ் ஓவியா said...


கோவில் சொத்துக்களைக் காப்பது யார்?

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் மிகப்பெரிய அளவில் மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்கள் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. தற்போது மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் மோசமான தகவல்களுடன் வந்துள்ளது. நீதிமன்றத்தால் கோவிலில் உள்ள சொத்துக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டது. 35 நாட்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் விலைமதிப்பில்லாத தங்கங்கள் திருடப்பட்டுவருவதையும், பொருட்களை கையாள்வதில் முறை கேடுகள் நடப்பதையும் குழு அறிக்கை வெளிக்கொணர்ந்தது. கோவில் நிர்வாகத்தினரையும், கேரள மாநில அரசையும் இவ்விவகாரத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் கேட்டது. அப்போது தங்கப் புதையல்குறித்த ஆய்வுக்கு போதுமான அளவில் ஒத் துழைக்காமல் கோவில் நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டது. உச்சநீதிமன்றம் மீண்டும் புதிய குழுவை அமைத்து, இடைக்கால ஏற்பாடாக கோவில் நிர் வாகத்தை எடுத்து நடத்த அறிவுறுத்தியது. இந்த முடிவால் மிகவும் கவலைப்படும் சூழல் ஏற்பட்டது. இடைக்கால நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பொறுப்பாளர் களை திட்டமிட்டுத் திருடுபவர்களைக் காட்டிலும் கீழ்த்தரமாக கோவில் நிர்வாகத்தினராலேயே மிரட்டும் நிலை ஏற்பட்டது.

சில நேரங்களில் பத்மநாபசாமிக் கோவில் நிர்வாகத்தைச் சுற்றியே கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. நீண்டகால சட்டப்போராட்டத்தில் பொதுமக்களையும் இணைத்து, 2011இல் உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக்குழு கோவிலுக்குள் உள்ள ஆறு பாதாள அறைகளில் அய்ந்து பாதாள அறைகளை சோதனை செய்ததில் எண் ணிலடங்கா பழமையான தங்க ஆபரணங் கள் இருந்துள்ளதை முதன்முதலாக பொதுமக்கள் கவனத்துக்கு வெளியு லகுக்கு வந்தது. தங்கப்புதையல் குறித்து கணக்கெடுத்து ஆவணப்படுத்தும்பணி நடைபெற்றவண்ணம் உள்ளது.

இந்த வழக்கில் 2012இல் முன்னாள் அரசு வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியம் என்பவர் நீதிமன்றத்தால் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற ஆலோ சகராக (amicus curiae) நியமிக்கப் பட்டார்.

அவருடைய இரண்டாம் அறிக் கையில், கோவிலில் தங்க ஆபரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதைக் கணக்கிடுவதில், தற்போதைய கோவில் நிர்வாகம் திருவாங்கூர் அரச குடும்பத்தினரையும் ஈடுபடுத்திட வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. கோவிலின் சொத்துக்களை எப்படிக் காப்பது என்றும், அரசின் அறநிலையத் துறை பொதுநோக்கில் உள்ளவர்கள் பத்மநாபசாமிக் கோவில் விவகாரம் மட்டுமின்றி இதர பிற விவகாரங்களிலும் சந்திக்கின்ற சவால்களையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பாக திருமலையில் சிறீ வெங்கடேசுவரா கோவிலில் உள்ள கண்ணைக்கவரும் ஆபரணங்கள்குறித்த சரியான தகவல்களை ஆந்திரப்பிரதேச நீதிமன்றம் கேட்டிருந்தது. கோவில் சொத்துக்கள் என்று இருப்பதால் அவ்வப் போது வரக்கூடிய வரவுகள் கணக்கில் கொள்வது மிகக் குறைவாகவே உள்ளது. கோவில் சொத்துக்களுக்கு வரவேண்டிய வற்றை விட்டுவிடாமல் மீட்கவேண்டும். கெட்ட வாய்ப்பாக, கோவிலை நிர்வாகம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்றவற்றில் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை இதன்மூலம் வழிபடக் கூடிய பொதுமக்கள் மீண்டும் வருவதை உறுதிசெய்யவும் தவறுகிறார்கள்.சில கோவில் நிர்வாகிகள் காலத்துக்கேற்ற மாற்றங்களை செய்வதற்கு மாறாக, நிர் வாகத்தில் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு விடாமல் காத்துவருகின்றனர். அவர்கள் மத நடைமுறைகளில் தலையிடுவதாகப் பார்க்கிறார்கள்.

விதிகளின்படி மதசார்பற்ற விழாக் களும் கோவிலில் நடத்தலாம். கோவில் பொதுவான செயல்பாடுகளுக்கு திறந்து விடப்பட வேண்டும். சிலைகளின் பெயரில் சொத்துக்களை உரிமையாக்கிவைப்பதன் பின்னணி என்ன வென்றால், அறங்காவல் குழுவில் உள்ளவர்கள், நிர்வாகிகள் கோவில் சொத்துக்களை அவர்கள் பெயருக்கு மாற்றாமல் இருப்பதற்காகவும், சொத்துக் களைத் தவறானமுறையில் கையாளாமல் இருப்பதற்காகவே ஆகும். கோவில்கள் தனியார் நிறுவனம் அல்ல. பொதுவான வழிபடுவதற்கான இடமாகும். முறையான மத ரீதியிலான கண்காணிப்புகளில் தலையீடுகள் இருக்கக் கூடாது. மதத்துக்கு அப்பால் கோவில்களில் நிர்வாகத்தில் பொதுவானவர்கள் இருக்க வேண்டும்.

-தி ஹிந்து ஆங்கில நாளிதழ், தலையங்கம் 29-4-2014

Read more: http://viduthalai.in/page-2/80747.html#ixzz32UwcfLsb

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......தங்கள் கணவன் மார்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் காளிகா - பரமேஸ்வரி அம்மன் ஆலய உண்டியலில் நேர்த் திக் கடனாக தாலியைக் கழற்றி போடலாமாம்.

கணவனை இழந்தால் தான் தாலியைக் கழற்று வார்கள்.

நம் நாட்டு ஆன்மீகத்தில் கணவன் உயிரோடு இருக்கும் போதே தாலியை அறுத் துப் போடச் சொல்லு கிறார்களே - பக்தி வியா பாரத்தில் தாலியைக்கூட உருவி விடுவார்களோ!

கடவுளின் கருணையோ, கருணை!

Read more: http://viduthalai.in/e-paper/80838.html#ixzz32afj5EyX

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


இந்து மதத்தையோ, அது சம்பந்த மான கடவுள், சாத்திரம், இதிகாசம், புராணங்களையோ, சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும், வீண் வேலையும், கடைந்து எடுத்த முட்டாள்தனமுமே யாகும். - (குடிஅரசு, _ 13.1.1945)

Read more: http://viduthalai.in/page-2/80828.html#ixzz32ag98Fjk

தமிழ் ஓவியா said...


இளைஞர்களே, இப்படியா நீங்கள் வாழ்வது? மறைவது?

நமது இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர் தேவையின்றி உயிர்ப் பலி தருகின்றவர்களாகி வருவது மிகவும் வேதனையையும் எல்லையற்ற சோகத்தையும் நம்முள் ஏற்படுத்து கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தேக்கி வைத்த ஆசைக் கனவுகள் எல்லாம், திடீர் மின்னல் தாக்கிப் பறிக்கப்பட்ட கண்ணொளி போல் ஆகி விடுகின் றனவே!

தேவையற்ற விபரீத ஆசைகளுக்கு நீங்கள் இரையாகி இழத்தற்கரிய வாழ்வை இளையர்கள் இழக்கலாமா?

இதோ இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் (23.5.2014) பக்கம் 10இல் வந்துள்ள நெஞ்சுருக்கும் செய்தி: இது கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது என் றாலும், அதிலிருந்து மற்ற அனைவரும் பாடம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக அதனை அப்படியே தருகிறோம்.

பாஸ்ட் புட், பேஸ்புக் இது இரண்டும் தான் இன்றைய இளைய தலைமுறை யினரின் அடையாளமாய் மாறிப் போயி ருக்கின்றன. முகநூலில் லைக் வாங்க ரிஸ்க் எடுத்து படம் பிடித்த மாணவர், இப்போது அந்த படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன்கள் எட்வின், காட்வின்.

இதில், எட்வின் பத்தாம் வகுப்பு படித்தார். காட்வின் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

இருவரும் நண்பர்களுடன் அருகே உள்ள கனிமங்கலம் என்ற இடத்தை சுற்றிப் பார்க்க புதன்கிழமை சென்றனர். அங்கு, ஒருவர் மாற்றி ஒருவர் முக நூலில் பதிவு செய்ய புகைப்படம் எடுத்தனர்.

அங்கிருந்த தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு சம்பவம்

கேரள மாநிலம் எருவா, வேலாத் தட்டுதரையை சேர்ந்தவர் அபிலாஷ் (32). முகநூலில் வினோதமான விஷ யங்களை படம் பிடித்து காட்டுவதில் இவருக்கு அலாதி விருப்பம். புதன் கிழமை, வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட ஆயத்த மானார்.

இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கி போனார்.

அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும்.

அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கி யுள்ளார். முகநூலில் புகைப்படம் பதிவிட ஆசைபட்டு 2 பேர் உயிரை விட்ட சம்பவம் கேரளத்தில் பரி தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- எதிலும் ஆசை வெறியாக மாறினால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்வுகளாவது தடுக்கப்பட முடி யாததாகும்.

எனவே, இளைஞர்களே எச்சரிக் கையுடன் வாழுங்கள்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/80831.html#ixzz32agKGYAe

தமிழ் ஓவியா said...

எது சோஷலிசம்? - தந்தை பெரியார்

மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சோஷலிச உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் பிறவியில் மேல் - கீழ் எனும்படியான ஜாதிபேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு ஜாதிபேத ஒழிப்பு என்ற சமுதாய சோஷலிசம் பற்றிச் சொல்லி, பிறகு பொருளாதார சோஷலிசம் பற்றி சொன்னால்தான் உணர்ச்சி உண்டாக்க முடிகிறது.

ஆகவே பொருளாதார சோஷலிசத்துக்காக வேண்டியே ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், ஜாதியை ஒழிப்பதற்கு அதன் ஆதாரமாகவுள்ள மதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம்.

மனிதரில் சிலரை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் உண்டு கொழுக்கும்படியும், மற்ற பலரைக் கீழ் ஜாதியாக்கி அவர்கள் பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாளியாய், கட்டக் கந்தையற்று குந்த குடிசையற்று இருக்கும் படி செய்தது கடவுள் என்றால் அக்கடவுளைவிட அயோக்கியன் உலகில் வேறு யார் இருக்க முடியும்? அப்படிப்பட்ட அயோக்கியக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், விடுதலை -16.9.1970

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32ai7Q4Tv

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியைத்
தடுப்பது எது?

பல நூற்றாண்டாக ஜாதி முறை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடு என்றே கருதுகிறேன். அதுவே இந்தியாவைப் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்தியது மட்டுமின்றி, அது இந்தியாவை கேவலபடுத்திக் காட்டியதுடன் வெளிநாட்டுப்படை எடுப்பாளரிடம் நம்மை அடிமைகளாக்கி விட்டது. ஏனெனில் ஜாதியே நம்மைப் பிளவுபடுத்தும் சாதனமாகும். பெரும்பாலான நமது மக்களை சாதி கேவலப்படுத்தியுள்ளது. நம்மில் சிலர்தான் இக்கேவலத்தைச் சுமத்தினர் பலர். இக்கேவலத்தை ஏற்றுக் கொண்டோம். இன்றைய உலகத்தில் ஜாதிக்கு இடமே கிடையாது. அது இன்று இருக்குமானால் நமது சோஷலிச - சமதர்ம -லட்சியத்தை நாம் அடைவதைத் தடைப்படுத்தவே செய்யும்.

இந்தியா தனது மதமவுடிகங்களை களைந்து, விஞ்ஞான பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங்களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச்சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. -ஜவகர்லால் நேரு

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiL6kUT

தமிழ் ஓவியா said...

மதத்தின் குத்துச்சண்டை!

உலகக் குத்துச்சண்டை மாவீரனாகிய முகம்மது அலியையும் மதத்தின் கொடுமை விடவில்லை. கிருஸ்துவக் குடும்பத்திலே பிறந்த அவர், தன்னை கறுப்பு மனிதன் என்று வெள்ளை இனம் இழித்துப் பழித்ததைக் கண்டு தாள முடியாமல், தன்னை முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். மதம் மாறி விட்டார் என்றதும் மதவாதிகளின் ஆத்திரம் பன்மடங்காக ஆகிவிட்டது. எப்படியும் அலியை ஒழித்துக் கட்டுவது என்று திட்டம் தீட்டினார்கள்.

வியட்நாம் போரில் அவரைக் கட்டாயமாக அமெரிக்க இராணுவத்தில் சேர உத்திரவு பிறப்பித்தனர். அலி மறுக்கவே அவர் கைது செய்யப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aiUAepX

தமிழ் ஓவியா said...

சிந்தனை முத்துகள்

பொருத்தமில்லாதவைகளைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவன் ஆதாரமின்றி பேசுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதுதான் மத நம்பிக்கை.

- ஆம்ப்ரோசுபியர்ஸ் - அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்.

சந்நியாசி என்பவன் திருத்தியும் புகழ்ந்தும் கூறப்படும் ஒரு மாண்டுபோன பாவி!

ஓர் எசமான், ஓர் எசமானி, இரண்டு அடிமைகள். ஆக மொத்தம் இரண்டே பேர் கொண்ட சமூகத்தின் நிலைமை - அதுதான் திருமணம்.

மன்னிப்புக் கேட்பது மீண்டும் தவறு செய்வதற் காகப் போடப்படும் அடிக்கல்.

சமாதானம் என்பது பன்னாட்டு விவகாரங்களில் இரண்டு போர்க்காலங்களுக்கு இடையே உள்ள ஏமாற்றுங் காலம்.
-ஜோஷ் பில்லிங்ஸ் என்னும் புனைப் பெயர் கொண்ட அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்.

மதங்கள் பைத்தியக்காரத்தனமாகப் காமச் சுவைகளையே சுற்றி வருகின்றன.
- கூர்மான்ட் ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்

குற்றமற்றவனாக இருப்பதை விட குற்றம் கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
- பெஞ்சமின் டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்.

மருத்துவன் நோயைத் தீர்க்கிறான். ஆண்டவன் நன்றியைப் பெறுகிறான்.
-பீடர்ஃபின்லே, அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்

பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்காமலேயே மத வழிபாட்டிலுள்ள அபத்தங்களை அம்பலப் படுத்தலாம்.
- அனடோல் ஃரான்ஸ் - அமெரிக்க எழுத்தாளர்

அற்புதம் என்பது காணாதவர்கள் கண்டதாகச் சொன்னதைக் கேட்பவர்கள் வர்ணிக்கும் கற்பனை நிகழ்ச்சியே.

குழந்தைக்குப் பாடம் சொல்லித் தருவதன் குறிக்கோள் - ஆசிரியர் துணையின்றி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதுதான்.

மனிதன், ஆண்டவனின் ஓர் அற்புதப் படைப்பு அப்படிச் சொல்வது யார்? மனிதன் தான்!
- எல்பர்ட்ஹப்பர்ட், அமெரிக்க எழுத்தாளர்

மதம் மனிதனை நாகரிகம் அடையச் செய்யவில்லை. மனிதன் தான் மதத்தை நாகரிகப்படுத்தி வருகிறான்.
- ராபர்ட் க்ரீன் இங்கர்சால்

என்ன பரிதாபம்! ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று யாருக்குமே தெரிவதில்லை - பிரம்மச் சாரியைத் தவிர!
- ஜார்ஜ் கோல்மன், ஆங்கில நாடகாசிரியர்

Read more: http://viduthalai.in/page-7/80807.html#ixzz32aidPwhN

தமிழ் ஓவியா said...

முதல்வர் ஜெயலலிதா

புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் பரிவுடன் செயல்படுமென் றும், தமிழகத்துடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவ தற்கு முன்னரே, இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்தச் செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தி யுள்ளது. இந்த செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்த செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்.
திருமாவளவன்

ராஜபக்சேவை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி அழைத்திருப்பது இந்தியாவில் இருக்கும் தமிழர் களின் உணர்வை புண்படுத்துவது மட்டுமின்றி நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கும் பின்னடைவை உண்டாக்கும். எனவே இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் சில கட்சி, அமைப்புகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பதாகக் கூறி, போர்க்குற்றவாளி என்று உலகத்தால் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைப்பதை இந்திய கம்யூ னிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பில் ஈடுபட்டு, பல லட்சம் தமிழர்களை கொலை செய்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் அவர். பா.ஜனதா கட்சியின் விழாவிற்கு அவரை அழைத்து இருந்தால், நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை.
ஆனால், இந்தியாவின் ஒரு பகுதியில் வாழும் தமிழர் களின் மனக்குமுறலை மறந்து, ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை கொடுத்து பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பது, தமிழர்களின் மனதை புண்படுத்தும் செய லாகும். எனவே ராஜபக்சேவை அழைப்பதன் மூலம் காங்கிரஸ் செய்த தவறையே பா.ஜனதாவும் செய்கிறது. இந்த செயல், அவர்கள் கடைபிடிக்க இருக்கும் கொள் க யின் முன்னோட்டமாகவே தெரிகிறது.

எனவே, தமிழ் மக்கள் சிந்தித்து நியாயத்தை நிலைநாட்ட உறுதிகொள்ள வேண்டும்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/80825.html#ixzz32aj7WIzp

தமிழ் ஓவியா said...

கலிலீயோ

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

Read more: http://viduthalai.in/page-1/80485.html#ixzz32akMgOeW

தமிழ் ஓவியா said...


மூட்டுவலிக்குவைத்தியம்


மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் மொசைக் தரையிலோ, வெறும் தரையிலோ, பளிங்கு கல் தரையிலோ படுத்துத் தூங்கக் கூடாது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மூட்டுவலி அதிகமாகும். ஆகவே நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கு சிறந்த மருந்து ராகிக் கஞ்சி குடிப்பதுதான்!
மூட்டுவலி உள்ளவர்கள் காரத்தைக் குறைக்க வேண்டும்; குறிப்பாக பச்சைமிளகாய் கூடாது. சாதாரண காப்பிக்கு பதில் சுக்குக் காப்பி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும். இதனால் மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத் தரையில் வெறும் காலால் நடக்கவும் கூடாது.

உளுந்து எண்ணெயை மூட்டுவலி உள்ள இடத்தில் சூடேறும்படி தேய்த்துவிட்டால் மூட்டுவலி குறையும்.

வாயுத்தொல்லை உள்ளவர்கள் அடிக்கடி முருங்கைக்காய், முருங்கைக் கீரையை உணவில் சேர்க்கக் கூடாது. * சித்தரத்தையை இடித்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்து காலை, மாலை சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டாக்டர் எஸ்.என்.முரளீதர் எழுதிய மூட்டுவலிக்கு வைத்தியம்' என்ற நூலிலிருந்து.

Read more: http://viduthalai.in/page-1/80490.html#ixzz32amKuai3

தமிழ் ஓவியா said...


தொட்டுத் தொடரும் தேவதாசி பாரம்பரியம்

கர்நாடகம் ஆந்திரா போன்ற மாநி லங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப்படுகின்றனர். இது கடவுளுக்கு அர்ப்பணிப்பு என்ற பெயரில் படிப்பறி வில்லா மக்களை ஏமாற்றி இந்த கொடூரம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் தந்தை பெரியார் தலை மையில் அன்னை முத்துலட்சுமி ரெட்டி யார் மற்றும் மூவலூர் இராமாமிர்தத்த அம்மையார் போன்றோர் நடத்திய சமூகப் போரின் காரணமாக பெண்களுக்கு ஏற்பட்ட தேவதாசி அவலம் தமிழகத் தில் இருந்து வேரோடு அழிந்துபோனது. இதற்காக இன்றும் பெண்கள் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு வாய்ப்பிழந்த பெண் நடிகை ஒருவர் தேவதாசி ஆவது அவர்களது விருப்பம் என்று ஒரு கல்வி நிலையத்தில் நடந்த கருத்தரங்கில் கூறி தேவதாசி முறை என்னவோ பெண்களுக்கு புனிதமான ஒரு சடங்கு போலவும் ஆலயங்களில் நடக்கும் புனிதப் பணியை அறியாமை காரணமாக சிலர் (பெரியார் பெயரைக் குறிப்பிடாமல்) எதிர்த்தனர். அவர்களுக்கு தங்கள் கலாச்சாரத்தில் பொறாமையும் மதத்தில் காழ்ப்புணர்வும் உண்டு என்று கூறியிருந்தார். இது அப் போது பரபரப்பான ஒன்றாக இருந்தது.

அவரின் திருவாய்மொழியை உச்சநீதி மன்றமே ஓங்கி அறைந்து தேவதாசி முறை இந்த நாட்டின் அவமானம் என்று கூறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹரப்பனல்லி தாலுகாவில் உள்ளது உத்தரங்கமல துர்கை கோவில் அடிவிமலநகரி என்ற பகுதியில் உள்ள துர்க்கை கோவிலில் இன்றும் தேவதாசி முறை நடந்து வருகிறது. இது குறித்து பல முறை அரசிற்கு தெரியப் படுத்தியும் இது கலாச்சார பழக்கம் இது திருவிழா அன்று மாத்திரம் நடக்கும் விழா வாகும். இதனால் யாரும் பாதிக்கப்பட வில்லை என கூறி நகர நிர்வாகமும் இந்த கோவில் தேவதாசி விழாவை சீரோடு சிறப்பாக நடத்தி வந்தது.

இந்த கோவிலின் முதிய தேவதாசியான உளியம்மா என்பவர் நீண்ட காலமாக இந்த பழக்க வழக்கத்திற்கு எதிராக போராடி வந்தார். ஆனால், நகர நிர்வாகம் மற்றும் பிரபலங்களின் தலையீடு காரண மாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் சோசியல் லைஃப் என்ற பொது நல அமைப்பு உளியம்மா விற்கு உதவமுன் வந்தது. நீண்ட போராட் டத்திற்கு பிறகு எஸ்.எல். பவுண்டேசன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது அதில் உதரங்கமல் துர்க்கை யம்மன் கோவிலில் நடந்து வரும் பாரம் பரிய தேவதாசி முறையையும் அதன் சின்னாப்பின்னமாகும் பெண்களின் வாழ்க்கைபற்றியும் குறிப்பிட்டிருந்தது.

சமூகத்தின் மிகவும் கொடிய பழக்க மாக இன்றும் தொடரும் இந்த அவ லத்தை அறிந்ததும், உச்சநீதிமன்றமே ஒரு முறை அதிர்ந்து போனது,தேவதாசியாக மாற்றப்படும் விழா 13.2.2014 இரவு நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றம் நீதிபதி சதாசிவம் தலைமையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இந்த மனுமீது நீதிபதி கீழ்க்கண்ட உத் தரவை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக தலைமைசெயலாளருக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் குறிப்பிடப்படுவ தாவது: இந்த நூற்றாண்டிலும் தேவதாசி முறை தொடர்கிறது என்பது இந்திய நாட்டிற்கு ஒரு அவமான சின்னமாகும். இந்த சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் இந்த சம்பவம் நடைபெறுவதை தடுத்து இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்க கூறியும், இதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றியும் விவரம் கேட் டுள்ளது.

சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மராட்டிய மாநில பொதுப் பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜகன் புஜ்பால் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறோம். சமூகத்தில் பெண்கள் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் அவலங்கள் இன்றளவும் குறைந்த பாடில்லை, இதனை களைய இன்றும் பெரியார் இந்தியா முழுவதும் தேவைப் படுகிறார் என்று கூறினார். இன்று உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்படி அவரின் வார்த்தை உண்மையானது.

Read more: http://viduthalai.in/page-1/80493.html#ixzz32amwKQ1H

தமிழ் ஓவியா said...


இவர்தான் ராஜ்நாத்சிங் ராஜ்நாத் சிங்


உத்திரப்பிரதேசம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள பஹன்புரா என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ராம்பதன் சிங். தயார் குஜராத்தி தேவி. விவ சாயக்குடும்பத்தில் பிறந்த இவர் உள்ளூரிலேயே பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் வென்றார். தன்னுடைய தந்தையாரின் சகோதரர் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அவர் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மிர்ஷாபூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டு மிர்சாப்பூர் கிளை பாரதீய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பில் அமர்ந்தார். இங்கிருந்து ராஜ்நாத் சிங்கின் அரசியல் பயணம் தொடங்கியது. 1991-ஆம் ஆண்டும் உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சியைக் கைப்பற்றிய போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது அவர் உத்திரப்பிரதேசத்தின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்திய வரலாறு தொடர்பான பாடங்களில் இந்துத்துவ அமைப்புகளின் ஆசைகளுக்கு இணங்க மாற்றம் கொண்டு வந்தார். வேதக்கணிதம் என்ற இல்லாத ஒரு கணித பாடத்தை பள்ளிகளில் கணிதப்பாடமாக சேர்க்கப்பட்டது.

2004-களுக்கு பிறகு பாஜக கட்சி தொடர் சரிவைக்கண்டு வந்தது, ஆட்சியை இழந்தது, பிரமோத் மகாஜன் கொலை, தேர்தல் தோல்வி, வாஜ்பாயின் அரசியல் சந்நியாசம் லால்கிருஷ்ண அத்வானியின் ராஜினாமா மிரட்டல் என பல பக்கங்களில் இருந்தும் கட்சிக்கு நெருக்குதல் வர பாஜக கட்சியின் தேசியத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். கட்சியை வளர்க்கும் கட்டாயத்தில் இருந்த ராஜ்நாத் சிங் கட்சி இதுவரை மேம்போக்காக கூறிவந்த இராமர் கோவில் பிரச்சினையில் தீவிரமாக இறங்கினார். ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்த பழமைவாத தலைவர்களுள் இவரும் ஒருவர். இந்திய பாடத்திட்டத்தில் பழமைவாத கருத்துக்கள் தேவை என்று கூறி பாஜக ஆளும் மாநிலங்களின் இந்தியவரலாற்றை மாற்றி எழுதவும் இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

Read more: http://viduthalai.in/page2/80902.html#ixzz32gSPgHhI

தமிழ் ஓவியா said...இட்லி வந்தது!

கன்னடத்தில்தான் இட்லி செய்யும் முறைபற்றிய குறிப்பு முதலில் கிடைத்துள்ளது. கன்னடத்தில் 10ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட லோகபரா என்ற நூலில் இட்லி பற்றியசெய்தி காணப்படுகிறது. 12ஆம் நூற் றாண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கக் கூடும் என்கிறார் பிரபல எழுத்தாளர். - எஸ்.ராமகிருஷ்ணன்


ஆறு ஆண்டுகளில்

இலங்கைத் தீவில் கடந்த ஆறு ஆண்டுகளில் 2007 முதல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை 11,531. கைது செய்யப்பட்டவர்கள் 12,229 பேர்கள், இதில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் ஆனாலும் அவர்கள் மீதான தண்டனை மட்டும் கேள்விக் குறியே!

Read more: http://viduthalai.in/page2/80903.html#ixzz32gSXXkiI

தமிழ் ஓவியா said...


மே மாத நினைவுகள்!ஓடுமாற்றின்
மணல்மேலே கல்லையிட்டு - அது
கணத்தோடு இறங்க
புணல் மேலே பொறியியலின் பாடம் சொன்ன
நம்
பாட்டனும் - சர் ஆர்தர்
காட்டனும் காட்டிய வழியில்
காவிரியின் தீரம்
சுமக்கிறது ஈரம்!
உண்ணும் உணவெல்லாம்
எண்ணும் உணர்வெல்லாம்
தந்த மகன் வாழ்க!

- சர் ஆர்தர் காட்டனு பிறந்த நாள் - 15/05

சிலர் தமிழின்
உண்மையையும்
தொன்மையையும்
தோண்டிப் புதைத்தபோது - மதத்தையும்
தாண்டி, பதைத்து போய் ஒருவன்
வெளிக்கொணர்ந்தான் - நாம்
களிக்கின்ற கன்னித்தமிழ் அவனின் கொடை
கால்டுவெல் என்னும் கனவான் வாழ்க!

- ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் - 07/05


உழைத்து
வேர்வையில் நனைந்த மக்களின்
பார்வையில் ஒரு பகலவன்!
கீழ்த்தட்டு மக்களுக்கு ஏங்கியவன் - அதனாலந்த
மேல்தட்டு வசவுகளைத் தாங்கியவன்!
மார்க்ஸ் எனும் மேதை வாழ்க!

-காரல்மார்க்ஸ் பிறந்த நாள் 05/05

தன்
விழுதுகளுக்காக - இன்னும்
அழுது சுமக்கும் ஆலமரங்கள்!
நமக்காக
தன்பால் அன்பிலாவிடினும்
தன்பால் குடித்தவன்
உயர நினைக்கும்
உயிராம் அன்னையர் வாழ்க!

- அன்னையர் தினம் 11/05

எத்தனை காலம் பொறுத்தும் - அந்த எத்தனை எதுவும் செய்ய முடியாமல்
நாமிருந்தோம்
பென்னியெனும்
கண்ணிய வானின் கனவாக - நம்
பாசன உயர்வுக்காக - அரசியல்
சாசன அமர்வு
அளித்தது தீர்ப்பு அல்ல
தமிழர்க்கான உயிர்ப்பு!
அந்த
உயிர்ப்பை மீட்டுத் தந்தோரை -நம்
உயிர் பை நிறைந்து வாழ்த்துவோம்! வாழ்க!

பொறியாளர், தி.த. சண்முகவடிவேல், தஞ்சாவூர்

Read more: http://viduthalai.in/page4/80906.html#ixzz32gTAbfGN

தமிழ் ஓவியா said...


பாகிஸ்தானின் தீப்பொறி

பஞ்சாயத்து கூடியது. அவள் வீட்டுக்கு எதிரே 400 பேர் கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவள் வீட்டுக்கும் விஷயம் அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது. காரணம், சிம்பிள். அவளுடைய சகோதரன் எதிர் கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணோடு ஓடி விட்டான். அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கதான் பஞ்சாயத்து கூடியிருந்தது.

அவளும் அப்பாவும் சமாதானம் பேச கிளம்பினார்கள். மாலை ஆரம்பித் திருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. அப்பா பேச ஆரம்பித்தார். அவர் பேச்சினை சட்டை செய்யலாமல் அந்த நாலு பேரும் அவளை அவர் கண் முன்னாலேயே தூக்கி, குடிசைக்குள் நுழைந்தார்கள்.

அப்பாவின் கதறலும் அவளின் கூக்குரலும் ஊர் முழக்க எதிரொலித்தது. கந்தலான துணி போல வெளியே வந்தாள். அவருடைய சல்வார் கமீஸ் கிழிந்திருந்தது. ஊரின் மானத்தை காத்து விட்டோம் என்று அந்த நான்கு ஓநாய்களும் காவலுக்கு நின்றிருந்த மற்றவர்களும் எக்காளமிட் டனர். வெளியே வந்த அவளை அந்த கூட்டம் நிர்வாணப்படுத்தியது. அப் பாவின் முன் நிர்வாணமாகவும், ரத்தம் கசியவும் நின்றாள். தன்னிடமிருந்த ஒரு துண்டினை அவள் உடம்பில் போர்த்தி கண்ணீர் விடுவதை தவிர எதையும் செய்ய இயலாத அவளுடைய அப்பா கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார். உடலும் உள்ளமும் அனலாய் கொதித்தது. வீட்டின் கதவை மூடுமுன் அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை பாகிஸ்தானை உலுக்கியது. அவள் முக்தாரன்பீவி அல்லது முக்தாரன் மாய், பாகிஸ்தானில் ஒரு சின்ன கிராமமான மீராவலாவில் வசித்தவர்.

முக்தாரன் சும்மா விடவில்லை. ஊடகங்களுக்கு போனார். பெண்ணு ரிமைகளை பேச ஆரம்பித்தார். பாகிஸ் தான் ஜெனரல் முஷ்ரப்பின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு மூக்கு வேர்த்து, மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப் பானது. வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானில் பெண்களின் நிலைப்பற்றி பேச அழைப்பு வந்தது.

முஷ்ரப்புக்கோ தலைவலி, பாகிஸ் தானில் பெண்களின் நிலை இதுதான் என்று மேற்கு நாடுகள் நினைத்தால் தன்னை காலி செய்து விடுவார்கள் என்று பயந்தார். இவரின் பாஸ்போர்ட்டினை முடக்கினார். முக்தாரன் அதையும் தைரியமாக எதிர்கொண்டார். வெளிநாடுகளில் வசித்த பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்தார்கள். பாகிஸ்தானின் ஊடகங்கள், பொது மக்கள், அரசு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பெருங்கூட்டமே முக்தாரனுக்கு பின்னால் எழுந்து நின்றது.

ஆனாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அரசியல் பேசின. வன்புணர்வுக்கு துணை நின்ற நான்கு பேர்மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்தன. ஆனால், ஒரு வன்புணர்வு ஆயுத மாக மாறி பாகிஸ்தானிய மனசாட்சியை நெறிக்க ஆரம்பித்திருந்தது.

முக்தாரன் மாய் பாகிஸ்தானிய பெண் குரலுக்கான முகமாக மாறியிருந்தார். 2005-இல் பாத்திமா ஜின்னா தங்க விருது கிடைத்தது. கிளாமர் வார இதழ் அதே வருடம் வுமன் ஆஃப் தி இயர் விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.

பிரிட்டிஷ் செய்தியாளர் இவரோடு பேசி எழுதிய நினைவலைகள் தேஷ்னூரி ஆங்கிலத்தில் ‘Oh! Edition’ என்று வெளியாகி உலகமெங்கும் அதிர்வினை கிளப்பியது. 2006-இல் அய்.நா.வின் பேசினார். 2006-இல் பாகிஸ்தானின் கீழ் சபை வன்புணர்வுக்கான சட்டங்களை மாற்ற முன்மொழிந்தது. 2010-இல் கனடிய பல்கலைக் கழகம் கவுரவ முனை வர் விருது கொடுத்தது.

வெந்து தணிய காட்டுக்கு ஒரே ஒரு தீப்பொறி போதும். பாகிஸ்தானில் முக்தாரன் மாய் அந்த தீப்பொறி. - நரேன்

(தினகரன் வசந்த மலர் 18.5.2014

Read more: http://viduthalai.in/page5/80909.html#ixzz32gTZIYcv

தமிழ் ஓவியா said...


வாழ்க அண்ணா நாமம்!


உடல் நலம் சிறக்க இந்து மதம் கூறும் வழிகள்
யாகம் செய்வதன் பலன்
பஞ்ச பூதங்களை வென்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்
கணபதியின் திருநாமங்கள்
மறுபிறப்பு எடுக்க வேண்டிய அவசியம்
அரச மரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா?

இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்தில் வெளிவந்த தலைப்புகள் அல்ல - செய்திகளும் அல்ல ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ராமகிருஷ்ண விஜயத்தில் வெளி வந்தவையும் அல்ல! பின் வேறு என்னவாம்! அண்ணா பெயரைக் கட்சியிலும் அண்ணா உருவத்தை கொடியிலும் பொறித்து வைத்துள்ள திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் இணைத்துக் கொள்ளும் அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ ஏடான ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆரில் வெளி வந்தவைதான் (19.5.2014) இவை! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page6/80911.html#ixzz32gUKuiNO

தமிழ் ஓவியா said...


வெள்ளைப் பூண்டு


பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப் பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.
வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்ட மின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.
தயோ சல்பினேட் எனும் உயிர்ப்பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரி விக்கின்றன.
ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..

இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும்


Read more: http://viduthalai.in/page6/80912.html#ixzz32gUXFMwz

தமிழ் ஓவியா said...


தேவை பெரியார் இயக்கம்


புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம் 3.5.2014இல் தங்களால் அமைக்கப்பட்டு, புதுவையிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளீர்கள் என்ற சேதி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல தித்திப்பாக இனிக்கிறது.

இன்றைக்கு உலக நாடுகள் பலவற் றிலே இனவெறி, மதவெறி, நிறவெறி, பதவி வெறி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளால் - உலக மனித சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன. மனிதாபிமானமற்ற இலங்கை ராஜபக்சே அரசு இன்று வரை தமிழர்களை அழிப்பதையே, குறியாகக் கொண்டு, தமிழர்களை கொன்று குவித்து வருகின்றது - இது ராஜபக்சே அரசின் இன வெறி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் யூதர்கள் - இது மதவெறி.

இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னதால், காந்தியை 1948-லே சுட்டுக் கொன்றது - பார்ப்பன - ஆரிய மதவெறி.

ஒடிசாவில் பழங்குடி மக்களின் தொழு நோயைப் போக்கும் தொண்டறத்தைச் செய்து கொண்டிருந்த, ஆஸ்திரேலியா டாக்டர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் - 1999-லே ஜீப்பில் வைத்துக் கொளுத்திக் கொன் றார்களே இந்துத்துவா பஜ்ரங்தள் கும்பல் - இது இந்து மதவெறி.

இன்றைக்கு இந்தியாவில் 93 கோடி மக்கள் சேரிப் பகுதிகளில் ஒதுக்குப்புற மாக தள்ளப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே. இது இந்து மதத்தின் சாதி வெறி. நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் கருப்பினத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது - இருட்டிய பிறகுதான் வெளியே வர வேண்டும் என்ற நீதிபதியின் உத்தர வின்படி 5 ஆண்டுகள் இந்தக் கொடு மையை அனுபவித்தனர். இது தென் ஆப் பிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் நிற வெறி. எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒரு முறை சொன்னார். ஆனால் 20.03.2012 கால கட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். (ஜூனியர் விகடன் 13.4.2014) இப்படி மோடி உண்மைக்கு மாறாகக் கூற வேண்டிய தன் அவசியமென்ன? இதுதான் பதவி வெறி!

சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகா ணத்தை தனியாகப் பிரித்து தந்து இஸ் லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் வீகர் எனப்படும் தீவிர வாதக் குழுவினர் - யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் (2.3.2014) இது தீவிரவாதம்.

இப்படி காலங்காலமாக உயிர்ச் சேதங்களும், பொருளாதார அழிவுகளும், பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இவை களையெல்லாம் மாற்றியமைக்கின்ற வழிமுறைகள் பற்றி எத்தனை நாட்டுத் தலைவர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள்? சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பதைப்பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பட்டம், பதவிக்காகவும், கோடி கோடி யாகக் கொள்ளையடித்து சொத்துக்களை குவிப்பதற்காகவும், தாங்கள் பெற்ற பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தங்களுக்குச் சாதகமான - தீய வழி முறையாக இருந்தாலும் - கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் - அதன்படி நடக் கவே சித்தமாக உள்ளார்கள். அது முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அமைச்சர்களாக இருந்தாலும் சரி.

பணம் பதுக்கி வைப்பதற்கென்றே ஒரு சுவிஸ் வங்கி வேறு. இப்படி பல கோணங்களிலே ஏராளமான களைகள் உலகளவிலே முளைத்து துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை யெல்லாம் வெட்டி, கெல்லி எறிகின்ற ஒரே களைவெட்டி - பெரியாரிசம் தான்.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவை மனிதநேயம். அந்த மனிதநேயத்தைப் பரப்புரை செய்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் கி. வீரமணியும் ஆவார்கள். உலகெங்கும் திராவிட இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். புதியதோர் உலகம் செய்வோம். அதில் மாந்தர்களை மட்டுமே காண்போம்.
கா.நா. பாலு, எடப்பாடி

Read more: http://viduthalai.in/page7/80914.html#ixzz32gUurGWC

தமிழ் ஓவியா said...


சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்


சனிக்கோளின் வளையங்களில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத பகுதி முதல் முதலாக சூரிய ஒளியை உள்வாங்கி பிரகாசித்தது. இந்தக் காட்சியை சனிக்கோளை ஆய்வு செய்ய அனுப்பிய கசினி விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. சனிக்கோளின் கடுமையான ஈர்ப்புவிசை மற்றும் அதன் வேகம் காரணமாக சனியின் நடுக்கோட் டுப்பகுதியில் பலலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அழகிய வளையங்கள் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி ஆண்டுகளாக சனிக்கோளை சுற்றி வரும் வளையங்களை பல பகுதிகளாக பிரித்து அதற்கு ஆங்கிய எழுத்து ஏ முதல் எப் வரை பெயர் சூட்டி யுள்ளனர். இதில் சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான வளையப்பகுதி இருட்டிலேயே உள்ளது. இந்தப் பகுதிக்கு பி என்று பெயர் சூட்டி அழைத்துவந்தனர். அடர்த்தியான தூசுகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ஒளியிழந்து காணப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் சனிக்கோள் 43 டிகிரி கோணத்தில் தற்போது சூரியனை நெருங்கிச் சுற்றுகிறது, இதன் காரணமாக பி வளையம் முழுவதிலும் நன்றாக சூரிய ஒளிபட்டு அந்த வளையப்பகுதி மிகவும் பிரகாசமாகத்தோற்றம் அளிக் கிறது, இதனை கசினி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

கசினி அனுப்பிய படம் குறித்து நாசா மற்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் மற்றும் இத்தாலி விண்வெளி கழகம் மூன்றும் இணைந்து ஆய்வு செய்துவருகிறது. இதுவரை தொலைநோக்கி மூல மாகவும் விண்கலன்களின் புகைப்படக் கருவிக்கும் புலனாகாத பி வளையம் தற்போது ஆய்விற்கு உகந்த சூழ் நிலையில் சூரியஒளியை உள்வாங்கி எதிரொளித்துக்கொண்டுள்ளது. இதை வைத்து வியாழனுக்கும், சனிக்கும் இடையில் சுற்றும் விண்கற்களின் பாதையில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசாவில் சூரியக்குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்

Read more: http://viduthalai.in/page7/80915.html#ixzz32gV41SVl

தமிழ் ஓவியா said...


அதிசயம் ஆனால் உண்மை புற்றுநோய்க்கு மாற்று தட்டம்மைத் தடுப்பூசி

அமெரிக்காவின் மின்னசேட்டா மாநிலம் பீக்வட் லேக்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஸ்டாஸி எர்ஹேல்ட்ஸ் (50). மல்டிபிள் மயலேமா என்ற புற்றுநோயால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தார். எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களில் ஏற்படுவதுதான் மயலேமா புற்றுநோய். எலும்பு புற்றுநோய் என்றும் அழைக் கப்படுகிறது. ரத்தப் புற்றுநோயின் ஒரு வகைதான் இது. மல்டிபிள் மயலேமா பாதிப்பால் தண்டுவடம், விலா எலும்பில் கடுமையான வலி ஏற்படும். நோய் முற்றினால் நகர முடியாமல் முடக்கிப் போட்டுவிடும். ரத்தசோகை உண்டாகும். சிறுநீரகம் பாதிக்கப்படும். நுரையீரல் தொற்று ஏற்படும். நரம்பு மண்டலம் செயலிழக்கும்.

மேற்கண்ட அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு, ஏறக்குறைய இறக்கும் நிலைக்குப் போய்விட்ட ஸ்டாஸி, ரேசஸ் டர் நகரில் உள்ள மயே கிளினிக்குக்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டார். சோதனை முயற்சியாக அவருக்கு ஆன் கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை முறையை மருத்துவர்கள் மேற் கொண்டனர். 6 மாத சிகிச்சைக்குப் பிறகு, மயலேமா புற்றுநோயில் இருந்து அவர் பூரணமாக குணமடைந்துள்ளார்.

இந்த வெற்றிகரமான சிகிச்சையை அளித்திருப்பது டாக்டர் ஸ்டீபன் ரஸல் தலைமையிலான மருத்துவக் குழுவினர். இதுபற்றி அவர்கள் கூறியிருப்பதாவது:
மிகவும் மோசமான நிலையில் இருக் கும் புற்றுநோயாளிகள் தட்டம்மை போன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்படும்போது, அவர்களது உடல்நிலையில் ஓரளவு முன் னேற்றம் ஏற்படும். வைரஸை விரட்டுவ தற்காக இயற்கையாகவே உடலில் புரோட்டீன்கள் உற்பத்தியாவதே இதற்கு காரணம். இன்டர்ஃபெரான் புரோட்டீன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டியூமர் நெக்ரேசிஸ் ஃபேக்டர் புரோட்டீன், தீய செல்களை அழிக்கும். புற்றுநோய் செல்கள் அழிந்து, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் அவர்களது உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
வைரஸ் நோய்க்கு பதிலாக, வைரஸ் கிருமிகளை நேரடியாக ஊசி மூலம் உடலில் செலுத்துவதுதான் ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை. இதுகூட பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதுதான். புற்றுநோய் தீவிரமான நோயாளிகளுக்கு எந்த வகை சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், கடைசியாக இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

1 கோடி தடுப்பூசியில் உள்ள கிருமி

ஸ்டாஸிக்கும் இந்த சிகிச்சைதான் அளிக்கப்பட்டது. தட்டம்மை தடுப் பூசிக்கு பயன்படுத்தப்படும் அதே தட்டம்மை வைரஸ் கிருமிதான் அவரது உடலில் செலுத்தப்பட்டது. 1 கோடி பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவ தற்கு எந்த அளவு தட்டம்மை வைரஸ் கிருமி தேவைப்படுமே, அந்த அளவுக்கு வீரியான கிருமிகளை அவரது உடலில் ஊசி மூலம் செலுத்தினோம். இதன் காரண மாக அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வாந்தி, மூச்சுத் திணறலும் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்ததில், இந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. அத்துடன், அவரது உடலில் இருந்த புற்றுநோய்க் கட்டிகளும் மறைந்து விட்டன. இருந்த சிற்சில கட்டிகளும் கதிர்வீச்சு மூலம் அகற்றப்பட்டுவிட்டன.

இதேபோல, தட்டம்மை கிருமியைப் பயன்படுத்தி ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை அளித்ததில் இன்னொரு மயலேமா நோயாளியும் புற்றுநோயில் இருந்து ஓரளவு விடுபட்டுள்ளார்.

ஆன்கேலிடிக் வைரேதெரபி சிகிச்சை யால் பூரணமாக குணமான முதல் நோயாளி ஸ்டாஸி என்று செல்லலாம். சம்பந்தப் பட்ட இரண்டு நோயாளிகளையும் பெருத்தவரை எங்கள் ஆராய்ச்சி வெற்றி கரமாக முடிந்துள்ளது. புற்றுநோயாளிகள் அனைவருக்கும் இந்த வகை சிகிச் சையைப் பயன்படுத்த முடியுமா, தட் டம்மை வைரஸ் கிருமியை மருந்தாகப் பயன்படுத்தி புற்றுநோயை விரட்ட முடியுமா என்பதை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இத்தகவல் மயே கிளினிக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக ஆண்டு தோறும் 16 ஆயிரம் பேர் மல்டிபிள் மய லேமா வகை புற்றுநோயால் பாதிக்கப் படுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங் இருவருமே மல்டிபிள் மயலேமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page8/80917.html#ixzz32gVIF1HU

தமிழ் ஓவியா said...


கீதா உபதேசமாம்?


எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது;
எது நடக்க வேண்டுமோ
அது நன்றாகவே
நடக்கிறது -
நடக்கும்
இதை கேதார்நாத்தில்
போய் கூற முடியுமா?
ஒரு பெண்
இரு காமவெறியர்களால்
கற்பிழந்தாள்!
அவளிடம் போய்
நீ எதைக் கொண்டு
வந்தாய்? இழப்பதற்கு?
என்று கேட்க முடியுமா?

- கவிஞர் கணக்கப்பா

Read more: http://viduthalai.in/page8/80918.html#ixzz32gVfogXC

தமிழ் ஓவியா said...


உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா? அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா?

அனைவரும் உயர் ஜாதியினர்தானா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வரப் போகும் தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்தானா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ளவர் வட மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு பார்ப்பனர்.

இவர் வேறு மாநிலத்திற்குத் தலைமை நீதிபதியாகி விரைவில் சென்று விடுவார் என்ற நிலையில், மீண்டும் நிரந்தரமான தலைமை நீதிபதியாக, பஞ்சாப் அரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் இவரும் உயர் ஜாதி பார்ப்பனர் (கவுல் என்றாலே காஷ்மீர மூலதாரமான உயர் பார்ப்பன வகுப்பு ஆகும்) அவர் இங்கே வந்து, சில மாதங்களிலேயே உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று சென்று விடக் கூடும்.

60 மொத்த நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது ஓய்வு பெற்றவர்கள் போக 43 நீதிபதிகள்தான் உள்ளனர். 17-க்கும் மேற்பட்ட பதவிகள் காலி; வழக்குகளும் அதன் காரணமாக ஏராளம் தேக்கமாகி நிற்கின்றன!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 31.

இதற்கு தற்போது காலி இடங்களில் புதிதாக 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள், இரண்டு பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகி, உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று வரவிருக் கின்றவர்கள்; மற்றும் இரு சட்ட நிபுணர்கள் என்பதால் - நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட இருப்பவர் இருவர். ஒருவர் பார்சி வழக்குரைஞர்; மற்றொருவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பார்ப்பன வழக்குரைஞர் நீண்ட காலம் டில்லியிலேயே அரசு வழக்குரைஞராகவே இருந்தவர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கர்நாடகத்தைச் சார்ந்த ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா என்ற பார்ப்பனர், இவருக்கு மூத்த வழக்குரைஞர் தகுதியை, விதிகளுக்கு விலக்கு அளித்தே இவரை குறுக்கு வழியில் உயர்த்தியது தான் இன்று இவர் இப்பதவி உயர்வுக்கும் - உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரேரணை செய்வதற்கும் அடிப்படைக் காரணமாகும்.

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களான நீதிபதிகள் தகுதியுள்ள பலர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மற்ற நீதிபதி களாகவும், அதேபோல மூத்த நீதிபதிகளாக பல தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்தும் அவர்களில் ஒருவர்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்படாதது, அரசியல் சட்டத்தின் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் வழக்குரைஞர்களிடையே குமுறல் உள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே மிகவும் காலந் தாழ்ந்து,

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து

1. ஜஸ்டீஸ் வரதராஜன் (தமிழ்நாடு)
2. ஜஸ்டீஸ் இராமசாமி (ஆந்திரா)
3. ஜஸ்டீஸ் பாலகிருஷ்ணன் (கேரளா)

வந்து ஓய்வு பெற்று விட்டனர்!

இப்போது எவரும் இல்லை! அதேபோல் பிற்படுத்தப் பட்ட சமூகத்திலிருந்து

1. ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் (தமிழ்நாடு)
2. ஜஸ்டீஸ் ப. சதாசிவம் (தமிழ்நாடு)

இவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது எவரும் இல்லை! 31 இடங்களிலும் ஆண் களும் சரி, பெண்களும் சரி எல்லாம் முற்பட்ட ஜாதியினரே!

மேலும், இப்போது நிரப்பப்படவிருக்கும் நான்கு நீதிபதிகளும்கூட உயர் வகுப்பினரே!

இதுபற்றி புதிய மத்திய அரசு, சமூக நீதிக் கண்ணோட் டத்தில் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுப்பதும்; கொலி ஜியம் என்ற முறையை மாற்றுவதுபற்றி யோசிக்கவும் முன்வர வேண்டும் என்பதே பல வழக்குரைஞர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலரின் கருத்தாகும். விடியல் ஏற்படுமா நீதித் துறையில்?

- நமது சிறப்பு செய்தியாளர்

Read more: http://viduthalai.in/e-paper/80858.html#ixzz32gVwptGG

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


இராமேசுவரத்தில் 24 புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கினால் பலவிதமான சாபங்கள், தோஷங்கள் இறைவன் அருளால் நீங்கும் என்பது அய்தீகம் என்கிறது ஓர் ஏடு!

அது என்ன அய்தீகம் அதையும் விளக்கலாமே?

தான் தப்பித்துக் கொள்ள அய்தீகத்தின்மீது பழியா?

24 புண்ணிய தீர்த் தங்கள் இருக்கும் இராமேசுவரத்தில் மருத்துவமனைகள் ஏன்?

இழுத்து மூடி விடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/80867.html#ixzz32gW658BN

தமிழ் ஓவியா said...

கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!


தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.

இதில் 90.7 சதவீத இருபால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் மேல் என்பது - எந்த அளவுக்கு நம் மக்களிடையே கல்வியின் செழிப்பு வளர்ந் திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்த சமூகத்தில், இப்படி கல்விப் பயிர் செழித்துக் குலுங்குகிறது என்பதை எண்ணும் பொழுது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.

இதற்காக உழைத்த தந்தை பெரியார் அவர்களையும் அவர் கண்ட இயக்கத்தையும் நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் முயற்சியையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்ப்போம்! நெஞ்சம் நிறைந்த பூரித்த நன்றிவுணர்வால் அவர்களை நனைப்போம்.

சமூக புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், தாம் கண்ட அறக்கட்டளையின் சார்பில் சில கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நடத்தினார்; அன்னை மணியம்மையார் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப்பிட முடியாத முயற்சியாலும், கண் துஞ்சாப் பணியாலும் கூர்த்த சிந்தனையாலும், அறிவார்ந்த திட்டங்களாலும், அக்கல்வி நிறுவ னங்களை மேலும் மேலும் (எத்தனை மேலும் என்றும் போட்டுக் கொள்ளலாம்) வளர்த்தார் - வளர்த்துக் கொண்டும் உள்ளார்; ஒரு பல்கலைக் கழகம் என்கிற அளவுக்குப் பெரியார் விதைத்த அந்தக் கல்வி வித்தினை வளர்த்து ஆளாக்கி விட்டாரே!

அழுக்காறு அற்ற நெஞ்சங்கள் வாழ்த்துகின்றன - பூரிக்கின்றன - பாராட்டுகின்றன. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகெங்கும் பரவிப் பணியாற்றுகின்றனர். இந்திய இராணுவத் துறையிலும்கூட முத்திரை பதிக்கின்றனர் என்று எண்ணும்போது நம் தலைவர் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.

உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பெயரைக் கொண்டு சென்ற அந்தப் பெற்றிதான் என்னே!

பெரியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் அனைவரின் கவனத்தையும், கருத்துகளையும் ஈர்த்துள்ளன.

எட்டு ஆண்டுகளுக்கு முன் 217 மாணவர்களுடன் பெரியார் அறக்கட்டளையால் கையகப்படுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில், இப்பொழுது படிக்கும் இருபால் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா 2500; 217 எங்கே 2500 எங்கே!

பத்து மடங்கு அதிகமாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் படையெடுக் கிறார்கள் என்றால் அதன் தன்மையின் ஆழத்தை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பரப் பினை எண்ணினால் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது.

நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றதில் மூன்றாவது இடத்துக்கு வந்த மாணவன் (கி. நவீன்ராஜ் 497/500). ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் என்று நினைக்கிறபோது, அந்த மாணவனின் பெற்றோர்களைவிட நமது தலைவரும், பள்ளி ஆசிரியர்களும், கழகத்தவர்களும் பூரிப்படைகின்றனர் - பெருமிதம் கொள்கின்றனர்.

வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில்; படிக்க வாய்ப்பற்றுக் கிடந்த அந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துவக்கினார்.

இவ்வாண்டு ஆறுபேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி அத்தனை மாணவர்களும் வெற்றி பெற் றுள்ளனர். அந்த ஆறு பேரில் மூவர் 400-க்கும் மேலாக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நாகம்மையார் இல்லத்துப்பிள்ளைகளின் நூறு சதவீத வெற்றி பெருமிதமாக இருக்கிறது.

படிப்பு பார்ப்பனர்களுக்குத்தான் வரும்; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் வரவே வராது என்று ஆக்கி வைக்கப்பட்ட மனுதர்ம காட்டை அழித்து, சமூகப் புரட்சி இந்த நாட்டில் உருவாக் கப்பட்டுள்ளது என்பதற்கு இவை எல்லாம் ஈடில்லா எடுத்துக்காட்டுகள்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்கா விட்டால் மான்யம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்த நீதிக்கட்சியை நெஞ்சார இந்த நேரத்தில் நினைப்போமாக!

தமிழ் ஓவியா said...


பெரியார் கல்வி நிறுவனங்களை நிறுவி, அடி கோலிட்ட அய்யாவையும், அன்னை மணியம்மை யாரையும், நாகம்மை இல்லத்துப் பிள்ளைகளின் அண்ணனாக இருந்த அருமைப் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களையும் எண்ணுவோம்.

இன்று பெரும் அளவு வளர்த்த எல்லோரையும் ஆச்சரியரித்தோடு திரும்பிப் பார்க்க செய்துள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர்களை மானசீகமாகக் கை குலுக்குவோம்! பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து உழைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனை வரையும் பாராட்டுவோம் - நன்றியும் கூறுவோம்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/80888.html#ixzz32gXiHsTi

தமிழ் ஓவியா said...


வரலாறுதிரும்பும்!


- கி.தளபதிராஜ்


"மோடியும் லிபரல்களின் தோல்வி யும்" என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டி ருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக "இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக் காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத் துக்கு உள்ளாயிற்று. அடக்கு முறையா கவே மாறியது" என்று சொல்லும் கட் டுரையாளர்

"பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின் மனக் குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார். மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத் தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்" என எழுதுகிறார்

மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை. நிலைமை இப்படியிருக்க இதை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின் ஆழ்மனதையே வெளிக் காட்டுகிறது. "அய்ரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் அஞ்சல் அலுவலகங்களாக மாற்றப்பட்டு விட்டன" என புலம்புகிறார் கட்டுரை யாளர். அவை மானுட சமூகத்தின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறை யால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால் இந்தி யாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!
நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத் தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.

அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை யாமே! அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா? கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது எந்த வகை அறிவு? மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?

பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெபாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே? ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில் "ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!" னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ? இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத் திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!

Read more: http://viduthalai.in/page-2/80889.html#ixzz32gXqJpjU

தமிழ் ஓவியா said...


கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/80887.html#ixzz32gYZrnmG

தமிழ் ஓவியா said...
தமிழ்நாடு மாகாண மகாநாடு

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்ப னரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.

வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZHeI7v

தமிழ் ஓவியா said...

சைவப் பெரியார் மகாநாடு

திருநெல்வேலியிலும் திருப்பாப்புலியூரிலும், சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர். அண்ணாமலைப் பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாண சுந்தரமுதலியார். கிருஷ்ணசாமிப்பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டு கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து, திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர். செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவசமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரச்சாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும், அதைப்பற்றி நாம் முன்பு எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா? அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாகப் பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன், மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZP3bju

தமிழ் ஓவியா said...

பாலிய விதவையின் பரிதாபம்

இந்து தருமத்தின் மகிமை

17.07.1929ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங்,பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.

தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5ஆவது வயதிலேயே மணம் முடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அனுமதி இல்லாமையால் பீபியா மரணப் பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்துவிட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.

பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர திட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!

- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 11.08.1929

Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZVED88