சு.சாமியே, ஓடாதே, நில் ! (7)
எத்தியோப்பியன் தனது நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் மட்டும் குறுகிய தன் இனப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான் என்றார் தென்னாட்டு லெனின் என்று போற்றப்பெற்ற டாக்டர் டி.எம். நாயர்.
இதற்கு வேறு யாரையும் தேடவேண்டாம். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சு.சாமி என்ற பார்ப்பனர் ஒருவரைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
உத்தரப் பிரதேசத்தில் கான்பூரில் இந்த சு.சாமி பார்ப்பனர் முன்னின்று பார்ப்பனர் மாநாட்டை நடத்தினார் என்றால் அவரின் பூணூல் துடிப்பைத் தெரிந்து கொள்ளலாமே!
அப்பொழுது உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி - கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து ஆட்சிப் பீடத்தில் இருந்தன. பார்ப்பனர்களுக்கு அது போதாத காலமாகக் கருதப்பட்டது. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்ததால். பார்ப்பனர் எதிர்ப்பில் சமரசத்துக்கே இடம் கொடுக்காத உருக்கு மனிதராக விளங்கினார். (இப்பொழுதுள்ள மாயாவதி அல்ல அப்பொழுது - அன்று கன்ஷிராம் என்ற கொள்கைவாதி பின்புலத்தில் பலத்தில் நின்றார்-)
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோற்றுவித்த பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் புயல் கன்ஷிராம் உருவத்தில் உ.பி.யில் சுழன்றடிக்க ஆரம்பித்தது. அதன் வெப்பத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், சு.சாமியின் முயற்சியால் ஓர் அமைப்பு அங்கு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பெயர் பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி என்பதாகும். அந்தப் பெயரால்தான் கான்பூரில் பார்ப்பனர் மாநாடு நடத்தப்பட்டது. (1995 பிப்ரவரி)
அந்த மாநாடு கூட்டப்படுவதற்கு முதுகெலும்பாக இருந்தவரே சு.சாமிதான். பல பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்களை மாநாட்டுக்குத் திரட்டிக்கொண்டு வர சு.சாமி மிகவும் பாடுபட்டார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு (8-2-1995) எழுதியது.
சு.சாமியின் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அரவிந்த் சதுர்வேதி என்னும் பார்ப்பனர்தான் உ.பி.யில் உருவாக்கப்பட்ட பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி அமைப்பாளர் என்றால் இதன் பொருள் என்ன? சு.சாமியின் ஜனதா கட்சியும் இந்தப் பார்ப்பனர் சமிதியும் வேறு வேறு அல்ல - இரண்டும் ஒன்றுதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா, இல்லையா?
இந்தப் பார்ப்பனர் சங்கம் இந்தியா முழுவதிலும் ஏற்படுத்தப்படும் என்று அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. மாநாட்டின் திறப்பாளரே சு.சாமிதான். நிறைவுரை ஆற்றுவதாக அறிவிக்கப்பட்டவர் ஆயுதப்பேர மன்னன் சந்திராசாமி.
உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர்களுக்கெல்லாம் ஒரே தலைவர் சு.சாமிதான் என்று மாநாட்டில் ஒருவர் பேசினார். அந்த அளவுக்கு சு.சாமி பார்ப்பன வெறியராவார்.
பரசுராமன் ஆயுதம் தாங்கிப் போரிட்டது போல நாமும் ஆயுதம் தாங்கிப் போராடுவோம் என்றெல்லாம் சு.சாமி முன்னின்று நடத்திய அந்தப் பார்ப்பன மாநாட்டில் வெறிக் கூச்சல் கிளப்பப்பட்டது.
இத்தகைய பார்ப்பனர் தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லுவதும், கலைஞர் அவர்களைத் தாழ்வுபடுத்திப் பேசுவதும், ஆ.இராசாவை இழிவாகப் பேசுவதும் ஆச்சரியமான ஒன்றல்ல.
இந்த சு.சாமி மீது மானமிகு கலைஞர் அவர்கள் சொன்ன விமர்சனம் மிகவும் சரியானது; ரசிக்கத் தக்கதாகும்.
இல்லஸ்டிரேட்டட் வீக்லி (9-3-1991) எனும் வார இதழுக்கு கலைஞர் அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில்தான் சொன்னார்.
ஜெயலலிதா உட்பட மற்ற எவரையும்விட, உங்களை ஒழிப்பதில்தானே சு.சாமி தீவிரமாக இருக்கிறார் - அதற்குக் காரணம் என்ன என்பது கேள்வி.
கலைஞர் மிக அருமையாக, துல்லியமாகப் பதில் கூறினார்:
என்னைப் பொறுத்தவரை அவரை ஒரு மனநோயாளி என்றே கூறுவேன் என்றாரே பார்க்கலாம். கலைஞர் அவர்கள் ஏனோதானோ என்று சொன்னதாகக் கருதி விடக்கூடாது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக பயோனீர் ஏட்டுக்கு இந்த சு.சாமி அளித்த பேட்டி ஒன்றே போதுமானது.
தமிழ்நாட்டு மக்கள் மாற்றம் ஏற்படவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஒரு தேசிய கட்சி புதிதாக உருவாக வேண்டும் என்ற ஆவல் தமிழ்நாட்டு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது! அத்தகைய கட்சி எங்கள் ஜனதா கட்சிதான். முன்னாள் அய்.ஏ.எஸ்.அதிகாரியான சந்திரலேகா தலைமையில் செயல்படும் எங்கள் ஜனதா கட்சியைத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார்கள் என்று டில்லியிலிருந்து வெளிவரும் பயோனீர் (2-4-1995) ஏட்டுக்குப் பேட்டி கொடுத்தார் இந்த சு.சாமி. இப்படிச் சொல்லியிருப்பவர் மனநோயாளியா-இல்லையா? மானமிகு கலைஞர் அவர்கள் மிகச் சரியாகத்தானே கூறியுள்ளார்?
அதே சு.சாமி ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயர் என்ன தெரியுமா? இந்துஸ்தான் முன்னணி (ஏன் இந்து முன்னணி என்று பெயர் வைக்கலாமே. அதில் என்ன முக்காடு?) இந்த முன்னணி, சு.சாமி எழுதிய ஒரு நூலையும் வெளியிட்டது. “Building a New India” (புதிய இந்தியாவின் உருவாக்கம்). இந்த நூல் வெளியீட்டு விழா 1992 ஆகஸ்டில் சென்னையில் நடைபெற்றது.
வெளியிட்டவர் யாராம்? துக்ளக் சோ ராமசாமி. பெற்றுக் கொண்டவர் . . . இந்து ஏட்டின் ஆசிரியர் ரவி.
அந்த விழாவில் இந்த சு.சாமி திருவாய் மலர்ந்ததும் முக்கியமானதுதான் - அவர்களின் அங்க மச்ச அடையாளங்களைக் காட்டக் கூடியதுதான்.
நாட்டின் இணைப்பு மொழியாக சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் (தினமணி 5-8-1992) என்றார்.
அமைப்பின் பெயர்: இந்துஸ்தான் முன்னணி
எழுதப்பட்ட நூல்: Building a New India எழுதியவர்: சு.சாமி வெளியிட்டவர்: துக்ளக் சோ பெற்றுக் கொண்டவர்: இந்து ஆசிரியர் ரவி சு.சாமி வெளியிட்ட கருத்தோ,
நாட்டின் இணைப்பு மொழியாக சமஸ்கிருதம்
பார்ப்பன இன வெறி கொண்ட பச்சைப் பார்ப்பனர், சனாதனப் பார்ப்பனர், சவுண்டிப் பார்ப்பனர் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி தேவை?
கலைஞர் அவர்கள் சு.சாமியை ‘I can only assume that he is a mental case’ என்று இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார் என்றால், கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே கூறியது ஒரு படி மேலாகும்.
கழிவறைச் சுவரில் ஆபாசப் படங்களை வரைகின்ற மனநோயாளி! என்று சு.சாமி பற்றி ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.
சீ. . . இவ்வளவு கேவலமான பிறவியை, சவுண்டியை வேறு எங்குப் போய்த்தான் பார்க்க முடியும் - தேடத்தான் முடியும்?
சு.சாமி, சோ போன்ற இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் இன்றைக்கு பார்ப்பனர்களுக்குத் தானைத் தலைவர்கள் என்றால் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாமே!
இப்போதைக்கு இது போதும். தேவைப்பட்டால் மீண்டும்.
2 comments:
மறைந்த கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே சுப்பிரமணிய சாமி பற்றிச் சொன்னதை இங்கே எழுதியிருக்கிறீர்கள்.ஹெக்டேயை ஒருமுறை கல்கி பத்திரிக்கைக்காகப் பேட்டி கண்டேன்."சுப்பிரமணிய சாமி உங்கள் மீது.." என்று நான் கேள்வியை ஆரம்பிக்கும் முன்னரே "அந்த ஆளைப்பார்த்தால் என் வீட்டு நாய் கூடக் குலைக்காது" என்றார் ஹெக்டே. கொஞ்சம் அதிர்ந்துபோன நான் "இதனை எழுதலாமா?" என்றேன். "கட்டாயம் எழுதவேண்டும். அப்படீயே எழுதுங்கள். என் வீட்டு நாய் கூட அந்த ஆளை மதிக்காது. குலைக்கிற கௌரவத்தைக்கூட அந்தாளுக்குத் தராது" என்றார். மின்சாரம் கட்டுரைப் படித்தபோது இது நினைவுக்கு வருகிறது.
அமுதவன்,
பெங்களூர்.
தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமுதவன்.
Post a Comment