Search This Blog

2.2.11

திருப்பாவை ஆண்டாளின் ஆபாசப் பாடல்கள்


திருப்பாவை

மார்கழி மாதத்தில் வைணவர்கள் திருப்பாவை என்ற ஆண்டாளின் பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தினமணி, தினமலர், போன்ற நாளேடுகள் நாள் தோறும் திருப்பாவையிலிருந்து ஒரு பாடலை வெளியிட்டும் வருகின்றன.

திருப்பாவையில் 30 பாடல்கள் உள்ளதால் ஒரு மாத காலத்திற்குச் சரியாகவே பொருந்திவிடுகிறது.

திருவில்லிப்புத்தூர் கோயிலில் உள்ள பெருமாளை பிஞ்சிலேயே பழுத்து தம் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் வெளிவந்த பாடல்களாக அமைந்துள்ளன.

19 ஆவது பாடல் குத்து விளக்கெரிய என்னும் பாடல். அதிலே ஒரு வரி வருகிறது

குத்துவிளக் கெரியக்
கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறி
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த
மலர்மார்பா வாய்திறவாய்.

கடவுள் என்றால் தந்தை - பக்தை என்பவள் மகள் - தந்தை தாய் உற வைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாடப்பட்ட காமவெறிப்பாடலுக்கு எப்படி எப்படியோ விளக்கம் கொடுத்துப் பார்க்கிறார் கள்.

அமுத நிலையம் திருப்பாவைப் பாடல்களையும், விளக்கவுரையையும் தந்துள்ளது.

அதில் ஒரு வேடிக்கை. நப்பின்னை கொங்கை மேல் என்ற வரிக்கு மட்டும் பொருள் சொல்லாமல் தப்பித்து ஓடிவிடுகிறது. கடவுள் தன் மனைவியின் மார்பகத்தில் படுத்துக்கிடந்ததையெல்லாம் ஒரு பக்தை பாடுகிறாள் என்றால், அந்தப் பக்தையின் விரக தாபத்தைத்தான் பச்சையாக வெளிப்படுத்தும்.

இவ்வளவு ஆபாசமாக ஆண்டாள் பாடல் இருப்ப தால்தான் ராஜாஜி என்ன சொல்லுகிறார்? அவை யெல்லாம் ஆண்டாள் பாடியதல்ல; அவரின் தோப்பனார் பெரியாழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அதை ஆண்டாள் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்லி, (திரி வேணி இதழ் - 1946 செப்டம்பர்) தப்பித்துக் கொள்கிறார்.

காரணம் ராஜாஜியும் வைணவர் ஆயிற்றே. ஆண்டாளின் ஆபாசப் பாடல்கள் வைணவத்திற்குக் கேவலம் என்று அவர் எண்ணியே இவ்வாறு எழுதியுள்ளார்.

இன்னொன்றும் முக்கியம் - யாதவகுல மக்கள் கவனிக்க வேண்டியது.

28 ஆவது பாடல்:

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப் பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்

என்பதில் ஆயர் குலத்தைக் குறிக்கும் பொழுது, அறிவொன்றும் இல்லாதவர் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண் டும்.

ஆனாலும் ஆயர்குலத்தோர்கள் அந்தக் கண்ணனைத்தான், ஆண் டாளைத்தான் கடவுள்களாகக் கும்பிடுகிறார்கள்.

--------------- மயிலாடன் அவர்கள் 14-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Anonymous said...

உங்கள் முயற்சிக்கி நன்றி. ஆண்டாள் திருப்பாவை என்பது கண்ணணை பற்றியோ ஆயர் குலைத்தை பற்றியோ அல்லது மார்கழி மாத நோன்பை பற்றியோ கிடையாது. அதன் உண்மை பொருள் சித்தி அடைந்தவர்கள் மூலமாகவோ அல்லது தியானத்தின் மூலமாகவோ அறியலாம். மற்றபடி தமிழ் பண்டிதர்கள் கூறும் விளக்கங்கள் குழப்பத்திற்குதான் வழி வகுக்கும். காமம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதை தமிழ் புலமையுடன் பாசுரங்களாக எழுத அசியம் இல்லை.