Search This Blog

25.2.11

திராவிட இயக்க வரலாற்றில் என்றும் பேசப்படும் தலைவர் வீரமணி

திராவிட இயக்க வரலாற்றில் என்றும் பேசப்படும் தலைவர் வீரமணி
கறுப்புடை அணிந்தவர் - ஆனால் வெள்ளை உள்ளம் மிக்கவர்


தமிழர் தலைவருக்கு விருது வழங்கிப் பாராட்டு!

ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க இந்தியர் எனும் விருது வழங்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பாராட்டப்பட்டார்.

கோவை கே.ஜி. அறக்கட்டளை கோவையில் இன்று (25.12.2011) காலை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கும் வெங்கட் சங்கரவல்லி (நிறுவனத் தலைவர் நெருக்கடி நிலை நிருவாகம் மற்றும் ஆய்வு நிறுவனம்) அவர்களுக்கும் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க இந்தியர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

கே.ஜி.பக்தவச்சலம் திராவிடர் கழகத் தலைவர் பற்றி அறக்கட்டளை நிறு வனர் டாக்டர் கே.ஜி. பக்தவச்சலம் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:

அதிகாரம் - அரிதாரம்


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை அறிமுகப்படுத் திய வெங்கட் சங்கரவல்லி ஆகிய இருவரையும் கே.ஜி. பவுண் டேசன் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். வீரமணி கறுப்பு உடை அணிந்தவர். ஆனால் வெள்ளை இதயத்தை விட மென்மையானவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பெரியாரின் உண்மைத் தொண்டர், திராவிடர் இயக் கத்தின் வரலாற்றில் என்றைக்கும் பேசப்படுகின்ற தலைவர்.

சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என என்றைக்கும் வாழ்பவர், மூச்சில், தமிழ் பேச்சில் என்றும் அடங்கா முத்துச்சரம், அவர் எழுதிய நூல்கள் 75. அதிகாரம் கோலோச்சும் உலகில் அரிதாரம் பூசாதவர். பெண்களைப் போற்றும் கண்மணி. பெண்களைக் காக் கும் வீரமணி. பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டுக் காக அல்லும் பகலும் போராடு பவர். தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப் பவன் மாமனிதன். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம்

69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றி அதை இன்றைக்கும் நிலைத்து நிற்கச் செய்த ஆற்றலாளர் வீரமணி; விருது வாங்க விரும்பாதவர், 2000 இளைய சமுதாயத்தினருக்கு - எதிரில் இருக்கும் மாணவ கண்மணிகளுக்கு புதிய எழுச்சியை உருவாக்க வாருங்கள். உங்களுடைய உரையைக் கேட்டு எங்களது மாணவர்கள் தெளிவு பெறட் டும் என்று சொல்லி தான் இந்த விழாவிற்கு அவரை அழைத்துள்ளேன்.

அறியாமை தான் இந்தியாவின் மிகப் பெரிய நோய். அந்த அறியாமை இருளில் இருந்து நமது மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உலகம் முழு வதும் இந்தப் பிரச்சாரத்தை செய்து வரும் அற்புதமான தலைவர். பெரியாரை பேசாத நாள் வீண் என்பதே வீரமணி கூற்று. எந்நாளும் எவ்விடத்திலும் பெரியாரை நினைவு கூர்ந்து அவரின் புகழைப் பரப்புபவர்.

ஆளத்தெரியாதவர்கள் ஆள்வார்கள் உலகில் எங்கெல்லாம் நல்லது நடக்கிறதோ அதை எல்லாம் வாழ்வியல் சிந்தனைகள் மூலம் வெளியிடுவார். நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அற்புதமான நூல். வாழத் தெரியாதவர்கள் உள்ள வரை ஆளத்தெரியாதவர்கள் ஆள்வார்கள். நாம் எல்லாம் சிறப்பாக வாழ்வதற்கு அறிவு பூர்வமான செய்திகளைச் சொல்லுவதற்கு வருகை தந்துள்ளார். விருதைப் பெற உள்ளார். கே.ஜி. பவுண் டேஷன் மூலம் நடத்தப் பெறும் இவ்விழாவிற்கு அவர்களை வரவேற்கிறேன்.

தமிழர் தலைவர் உரை


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமது உரையில் கூறியதாவது:

ஒவ்வொரு மனிதனின் பின் னாலும் ஒரு பெண் உண்டு; அவரவருக்கு அமையப் பெறும் வாழ்வியல் இணையர் மூலம் நிலைத்த புகழைப் பெறுகின்றனர். வாழ்விணையர் என்ற பெயர் நமது வழிகளையும் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்வதால், அவர்களுக்கு ஏற்படுகிறது.

26 ஆண்டுகளுக்கு முன்பு...


26 ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களது பேசண்ட் (கே.ஜி.மருத்துவமனையில்) நான் இதய நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன். இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அதற்கு இந்த மருத்துவமனையும், டாக்டர் கே.ஜி.பக்தவச்சலமும்தான் காரணம். அந்த நன்றி உணர்வோடுதான் இந்த விருதைப் பெற நின்று கொண் டிருக்கிறேன்.

என்னை உருவாக்கிய பெரியார் தந்த அறிவால் உழைக்கிறேன். துறவறம், இல்லறம் என்ற இரண்டை பார்த்திருப்பீர்கள். அன்பு மாணவ செல்வங்களே! பெரியார் சொன்னார். மூன்றாவது அறம் தொண்டறம். அந்தத் தொண்டறத்திற்கு இணையே கிடையாது. அந்தத் தொண்டறத்தோடு, மனிதாபி மானத்தோடு பல காரியங்களை கே.ஜி.பக்தவச்சலம் செய்கிறார்.

உயிர் பிழைத்தேன்....!


அதில்தான் உயிர் பிழைத்தேன். அந்த நன்றிக்கு வித்தாக இந்த விருதை வாங்க வந்துள்ளேன். 1952 ஆம் ஆண்டு நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மாணவன். அப்பொழுது ஆசிரியர் நாங்கள் பெற்ற மதிப்பெண்களை சொல்வதற்காக வருகை தந்த போது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர் களைத்தான் அழைப்பார். என்னை நீண்ட நேரமாக கூப்பிடவே இல்லை.

நான் கூட நினைத்தேன், எனது பேப்பர் காணாமல் போய்விட்டதோ என்று! கடைசியில் ஒரு மாடல் பேப்பர் என்று கூறி ஆசிரியர் என்னிடம் கொடுத்தார். அதில் 85 மார்க்குகள் போட்டிருந்தார். இதுதான் அன்றைக்கு முதல் மார்க்; இதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.

கடைசியில் கோல்டு மெடல் வாங்கினேன். எல்லா மாணவர்களும் அப்படித்தான். டைனமிக் இந்தியன் என்றால் துடிப்புமிக்க இந் தியன் என்று எடுத்துக் கொள்ளலாம். தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பதற்கு இணங்க கே.ஜி.மருத்துவமனை சிறப்பாக இயங்குவதற்கு டாக்டர்.கே.ஜி. பக்தவச்சலம் அவர்களே காரணம்.

இங்கே என் எதிரில் அமைந்துள்ள அய்ந்து மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் அமைவதற்கு காரணமானவர் பொறியாளர் அசோக் பக்தவச்சலம். தன்னம்பிக்கை வளர மூடநம்பிக் கையை அகற்ற வேண்டும். அந்த காலத்தில் வீட்டு வாசற்படியில் அய்ந்து அடி உயர நிலைப் படி இருக்கும் தலையில் தட்டிக் கொண்டால் உடனே பயம் வந்துவிடும்.

பெரியார் கூறினார், ஆறடி உயர மனிதர் அய்ந்து அடி வாசற்படியில் இடித்துக் கொண்டால் வருத்தப்பட என்ன இருக்கிறது? 7 அடி உயர வாசல்படி வைத்து விட்டால் அது இடிக்கிறதா பார்ப்போம் என்று பெரியார் சொன்னார். பல்லி விழுந்தால் பயப்படுகிறார்கள். பல்லி என்ன பன்மொழிப் புலவரா? கிளி ஜோசியம் சொல்லும் ஜோசியம்கூட கேட்கிறார்கள்.

தன் வாழ்க்கையைப் பற்றி கூட அதற்குத் தெரியாது. அது உன் வாழ்க்கைக்கும் பலன் கூறுகிறதா? தடம் பார்த்து நடக்கவும் வேண்டும். தடம் பதித்து நடக்கவும் வேண்டும். எங்களுக்குள்ள சிறப்பு - நாங்கள் தடம் மாறாமல் நடப்பவர்கள். நல்ல தடத்தை அடையாளம் காணுங்கள்.

முடியாவிட்டால் நல்ல தடத்தை உருவாக்குங்கள். இவ்வாறு தமது உரையில் குறிப் பிட்டார் தமிழர் தலைவர்.

--------------------”விடுதலை” 25-2-2011

2 comments:

Raja said...

உங்க தலைவரோட இளைஞன் படத்த பத்தி பெசுனப்பவே புரிஞ்சுகிட்டோம்
-Raja

அ.முத்து பிரகாஷ் said...

பேரன்பு தோழருக்கு அன்பின் வணக்கங்கள்.

நமது ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டமை அறிந்து மிக்க மகிழ்ச்சி; விருதுகளைஎல்லாம் எதிர்பாராது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்
அவர் என்றபோதிலும்.

உடலின் நோய்களை குணப்படுத்தும் நிறுவனம் அறியாமை நோயை குணப்படுத்தும் நிறுவனத்திற்கு விருது வழங்கி பெருமிதப்பட்டிருக்கிறது.

கே.ஜி. பவுண் டேஷன் நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.