Search This Blog

27.2.11

ஓங்கட்டும் இனமானம்! ஒழியட்டும் ஆரியம்!

சிறீரங்கம் -நினைவிருக்கிறதா?

-

தினமணி ஏடு ஜாதி அரசியலைப்பற்றி எழுதுகிறது. பல கட்சிகளுக்கும் இப்பொழுதுதான் தங்களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக்கிறது _ எழுதுகோல் இருக்கிறது _ கணினி இருக்கிறது _ அச்சு இயந்திரம் இருக்கிறது _ அடித்துத் தள்ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற்கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது _ என்பது தினமணியின் கருத்தா _ தினமணி வக்கீலாக இருக்கும் - வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என்பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர்களோ, சோ இராமசாமிகளோ, கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமிகளோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக்கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதித் தொலையட்டும் - நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப்புணர்வை உண்டாக்காமல் இருந்திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர்களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட காலமும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே - அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப்பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே _ அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளாதீர்கள். அது ஆபத்தில் போய் முடியும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டியிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச்சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு _ ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு காங்கிரஸ் - _ 51340 அ.தி.மு.க., -_ 48,954
திருச்சி மேற்கு காங்கிரஸ் _ 50,890
அ.தி.மு.க., _ 50,698
திருவெறும்பூர்
காங்கிரஸ் _ 56,312
அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
காங்கிரஸ் _ 41977
அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
காங்கிரஸ் _ 42,228
அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
காங்கிரஸ் --_ 50,767
அ.தி.மு.க., -_ 70,949


இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் - _ மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -_ இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகாரவாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகிறதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்பதுதான் கருஞ்சட்டை தொண்டர்களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் _ திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக்குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்கலாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக்கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் _ அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை _ நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது _ இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!

ஒழியட்டும் ஆரியம்!


---------------- மின்சாரம் அவர்கள் 26-2-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

4 comments:

விடுதலை said...

கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.

2. சேது சமூத்திர திட்டத்தை கிடப்பில் போட்ட பின்பு அதை நீக்க காருனாநிதி ஏன் இரண்டு மனிநேர உண்ணாவிரதம் கூட இருக்கவில்லை

ஜெயலலிதா யோக்கியம் என்று நான் கூற வில்லை.

உடனே அவர்கள் இப்படி சொல்லவில்லையா ?

என்று யார் மீதாவது பழிபோடுவதுதான் திராவிட பாரம்பரியமா

நடக்கபோவது தேர்தல்தான் கோடிகளை வைத்து வெற்றி பெற நினைக்கும் கருனாநிதி எந்த தகுதி உடையவர்?


திழுகாவின் செய்தி தொடர்பாளர் வேலை அய்யா கி.விரமணி விடவேண்டும்.

அல்லது 40லட்ச ரூபாய் காரை கொடுத்துவிட்டு திகவை நல்ல தோழர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் திமுகாவில் சேர்ந்துவிட சொல்லுங்கள்.

நாவில் நரம்பில்லாமல் பேசும் ஒரு பச்சை துரோகியாக அவரை நினைத்து பார்க் முடியவில்லை (ராஜா குற்றவாளி இல்லை)

நம்பி said...

//கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.//விடுதலை...said//கருனாநிதிதான் ஆரியத்தை கட்டி காப்பாத்தும் முக்கிய திரவிட விரோதி

1.சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிக்க காரணம் யார் ?
காஞ்சி காமகேடி ஜெயந்திரனை காப்பாற்றும் நோக்கத்ததோடு கட்டுகதையை எழுதிய விசுவாசியார்.//

இந்த குற்றசாட்டை ஞாநி அவர்களும் வைத்த்தார்...சாட்சிகள் பல்டி அடிப்பது வாடிக்கையான ஒன்று...அரசு செய்யவில்லை, ஆதரிக்கவுமில்லை...சங்கரமடத்தின் செல்வாக்கு அப்படி..எல்லா உயர்மட்டத்திலும் பார்ப்பன ஜாதி உள்ளே புகுந்து கொண்டு பார்ப்பனீயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது....

இதைத்தான் ஞாநி தனது பத்தரிகையில் இந்த கருத்தை வைத்தார்.... ஜெயலலிதா தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே அறிவித்துகொண்டவராயிருந்தாலும்...அவர்தான் சங்கராச்சாரியாரை கைது செய்தார் என்று மறைமுகமாக ஆதரவை தெரிவிக்கின்றனர். படுபாதக செயலை பார்ப்பனன் செய்தால் என்ன...? என்ற நிலையில் ஜெயலலிதா அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை...ஜெயலலிதா விஷயங்களை சில இடங்களில் ஜெயந்திரர் விமர்சித்தார். ஜெயலலிதா விடுத்த சங்கர மட சொத்துவிவகாரங்களில் சங்கராச்சாரியார் உடன்படவில்லை அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதானே தவிர. ஜெயலலிதாவின் நேர்மையான செயல் என்று ஒன்றுமில்லை.

சங்கர்ரமன் மூன்று முறை ஜெயந்திர ஊத்தாச்சாரி பற்றி கடிதம் அன்றைய முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவிற்கு எழுதியும் நடவடிக்கை எடுக்கவில்லை...இறுதி கடிதம் எழுதிய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை...அந்த கடிதம் எழுதிய சில நாட்களிலேயே சங்கர்ராமன் என்ற பார்ப்பனர் கொலை செய்யப்பட்டார்.

சாட்சிகள் ஜெயலலிதாவால் செல்வாக்கால் பக்காவாக உருவாக்கப்பட்டன...குற்றம் செய்தவனும் பார்ப்பனன்...எதிர்ப்பவனும் பார்ப்பனன் என்ற ரீதியில் நடைபெற்றது. இந்த கைது சம்பவத்திற்கு ஜெயலலிதாவிற்கு கெட்ட பெயர் அதாவது பார்ப்பன சமூகத்திடமிருந்து...என்ற தகவல் பரவலானவை. இதை ஈடுகட்ட அதே சாட்சிகளை பல்டி அடிக்க வைததிருப்பார். அவர் ஒருவரை எதிர்க்க எந்த சாட்சிகளையும் உருவாக்க கூடியவர்....அவருக்கு வேண்டியவராயிருந்தவர்களுக்கே இந்த நிலைமை...கஞ்சா பொட்டலத்தை போட்டா முடிஞ்சு போச்சு...இது மாதிரியெல்லாம் சட்டத்தை நம்ம இஷ்டத்துக்கு வளைப்பது தான் நேர்மையான செயலா...? செரீனா வீட்ல கஞ்சா கேஸ். மாடர்ன் டிரஸ் போட்ட பொம்பல தான் கஞ்சா விக்குமா..(விக்கறாங்க).அதுவும் மாடிவீட்டுல இருந்து கொண்டு....என்னய்ய காதுல பூ சுத்தராங்கா...உத்தரபிரசேசத்தில இது சர்வ சாதாரணம்...கஞ்சா எல்லாம் கீரை கட்டு மாதிரி தான். அது வேறு விஷயம்..

சொந்த பகைக்காவே ஊத்தாச்சாரியார் கைது செய்யப்பட்டார். அவ்வளவு தானே தவிர....வேறு எதற்கும் அல்ல.

சாட்சிகள் பல்டி அடிப்பதை அதுவும் பார்ப்பன ஆட்ட்டர்...கூலிப்படை பல்டி அடிப்பதை ஒன்றும் செய்ய முடியாது. இந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் மரணமடைந்து விட்டார். அவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள்...அந்த அதிகாரி நாத்திகவாதி என்ற அடிப்படையில் தான் வழக்கை விசாரிக்க அமர்த்தினர். இருந்தாலும் ஜெயலலிலதா காலத்திலேயே அவர் மாற்றப்பட்டார்.

நம்பி said...

//நடக்கபோவது தேர்தல்தான் கோடிகளை வைத்து வெற்றி பெற நினைக்கும் கருனாநிதி எந்த தகுதி உடையவர்?//

இதுவரை தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் யாராயிருந்தாலும் கோடிகளை வைத்து தான் வெற்றிப்பெறுகிறார்கள் என்று தீர்மானமாக சொல்லப்படுகிறது...அது நேருவாயிருந்தாலும் சரி, காமராஜராயிருந்தாலும் சரி இல்லை பார்ப்பன ராஜாஜியிருந்தாலும் சரி....ஏனென்றால் இதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை.

தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 59 லட்ச வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் காசு கொடுக்கும் அளவிற்கு எவரிடமும் பணம் இருக்கமுடியாது....முதலில் கோடி கோடியா பணம் எப்படி கொடுக்க முடியும்...வாங்கியவர் தேர்தலில் வாக்களிப்பார் என்பது எப்படி நிச்சயமாக தெரியும். அப்படியே வாங்கினால் என்ன தப்பு...மக்கள் பணம் மக்களிடமே போய் சேருகிறது. இவரிடமும் பணம் இருக்கிறது...அவரிடமும் பணம் இருக்கிறது...ஜெயலலிதா கடந்த தேர்தலில் தேர்தலை முன்வைத்தே சட்டப்பூரவமாகவே அரசு பணத்தை செலவு செயதார் எப்படி? வெள்ள பாதிப்பு என்று ஒரு மிகப்பெரிய விபத்தை உருவாக்கிவிட்டு பிறகு அனைவருக்கும் அதாவது அப்பார்ட்மெட்னட்ஸ் (அடுக்குமாடி ஏழைகள்) ஏழைகள், மாடிவீட்டு, பங்களாவீட்டு...கார்வைத்திருக்கும் ஏழைகள், ஒரு வேளை மட்டுமே சோறு சாப்பிடும் பணக்காரார்கள், பிளாட்பாரத்திலே இருக்கும் பணக்காரர்கள்...என்று (இப்படி உல்டாவா மாத்திக்கணும்) இவர்களுக்கெல்லாம் பாரபட்சமில்லாமல் கொடுத்தார் என்ன? அனைவரும் வாக்களித்தார்களா? வாங்கிவிட்டு மூன்று பட்டை பார்ப்பன நாமத்தை தான் போட்டனர்.

ஒன்னுமே மக்களுக்கு செய்யாமல் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்குவது எல்லாம் செல்லுபடியாகாது....மக்களையும் நேர்மையாக இருக்கவும்....எதையும் வாங்காதீர்கள் என்று சொல்லவும் முடியாது...நேர்மையானவர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வரையரை என்ன...? ஒருவருமே கிடையாது...என் வாய் நாறவில்லை...என்று ஒருவன் தன்னைத்தானே சொல்லிக்கொள்ள முடியும்...? உன் வாய் நாறுகிறதா இல்லையா? என்பதை அடுத்தவனால் மட்டுமே முடிவு செய்யமுடியும்....? காமராஜர் காலத்திலும் இருந்தது எல்லா காலத்திலேயும் இருந்தது...அப்போது 5 ரூபாய் கொடுத்தார்கள்...ஏழுமலையான படத்தை வைத்து கொடுத்தனர்...இப்போதும் அதே மாதிரியே கொடுக்கின்றனர். யார் எல்லோருமே....? மாற்றி மாற்றித் தான் கூட்டணி வைக்கிறார்களே...?

நீ வரி ஏய்ப்பு செய்கிறாய்...? அராசங்கத்தில் உள்ள லஞ்சங்களை குற்றம் சொல்கிறாய்...? லஞ்சத்தை விட வரி ஏய்ப்பு செய்யும் பணம் தான் அதிகம். இது லஞ்சத்தை விட அதிக குற்றம். (அதற்காக அது சரி என்ற அர்த்தமல்ல). நீ பணக்காரணாக ஆகிவிட்டாய் ஆகையால் 80 சதவீத மக்களை பற்றி கவலையில்லாமல் இலவசங்களை பற்றி குறை கூறுகிறாய். இதை உணர நீ 80 சதவீத மக்களில் ஒருவராக மாறிய பின் தான் உணர முடியும். மூட்டைத் தூக்கிப் பார் முதுகுவலி தெரியும்...தோல் வயிட்டிக்கொண்டு ரணமாக படுக்கவே முடியாமல் இருப்பவனின் வலி தெரியும். அதற்காக சாரயம் குடித்துவிட்டு வலியை மறந்து அதே ரணத்தோடு மீண்டும் அடுத்த நாள் மூட்டைத்தூக்க போகுபவர்களின் அவல நிலைமை புரியும். அதுவரை பிறரின் வாய் நற்றத்தை மட்டுமே கூறி கொண்டிருப்பாய். என்றைக்குமே உன் வாய் நற்றத்தை பற்றி கவலைப்பட்டதே கிடையாதே.... கார் கண்ணாடியை இறக்கினாத் தானே...வெளியில் நடப்பது என்ன என்பதாவது ஒரளவுக்கு தெரிந்து கொள்ளமுடியும்.

.....தொடரும்..2

நம்பி said...

...தொடர்ச்சி.2

தேர்தல்...கட்சி...கொடிகள் இதை நம்பி பல குடும்பங்கள் பல தொழிலாளர்கள் இவர்கெள்ல்லாம் இருப்பது பற்றி தெரியுமா...? பல அச்சு, சாயத் தொழிலாளர்கள் குடும்பங்கள் இருக்கின்றன...பேனரகள் வரைபவர்கள் குடும்பங்கள் இருக்கின்றன..குடியரசுத்தினம், சுதந்தர தினம் இந்த தினங்களுக்காக கொடிகளை அச்சடிக்கும் குடிம்பங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாள குடும்பங்கள் இருக்கின்றன....இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை சார்ந்து தான் இருக்கின்றன. பீடி உடல் நலத்திற்கு கேடு...சரி அந்த தொழிலை ஒழித்துவிட்டு என்ன? சாப்ட்வேர் ஹார்டுவேர் கம்பெனியில் வேலை கொடுக்கப்போறீயா...? இல்லை படிடினி கிடந்து சாக சொல்லப்போறீங்களா...? இந்த பூஷ்வாத்தன் பிதற்றல்கள் தான் இணையம் முழுவதும் இருக்கிறது.


ஒரு பொருளாதார நிபுணர் என்று சொல்லிக்கொளுள்ம் ஒரு மடையனான நபர்...வைத்த கருத்து தான்...இது தொலைக்காட்சியிலேயே ஒரு நீயா நானா கருத்தரங்கில் வந்தது...பன்னாட்டு நிறுவனங்களின் வருகையாலும் அதின் பணம் பண்ணுபவர்களாலும் பாதிக்கப்பட்டது ஏழைகள் தான்...? இது முற்றிலும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை...? ஆனால் அந்த பிரகஸ் பதி வைத்த கருத்து இது தான்...நாங்க அன்னிய செலாவனியை எடுத்து வந்து இந்தியாவுக்கு கொடுக்கிறோமே இதற்காக நகரத்தை விட்டு தள்ளி இங்கிருப்பவர்கள் போக்கீடாதா...? என்று மடத்தனமாக கருத்து வைத்தான்...இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவனுக்கு இந்தியாவில் தற்பொழுது விற்கும் அஞ்சல் அட்டை விலைக்கூட தெரியவில்லை..அஞ்சல்அட்டை விலை 10 காசோ என்னவோ தெரியவில்லை...(இவனெல்லாம் பொருளாதார நிபுணன்...இவனை பார்த்து இவனே காரித்துப்பிக்கொள்ளவேண்டும்).அந்தாள் பெயர் ''புகழேந்தி'' இந்த மாதிரி ஆட்கள் பங்கு வர்த்தகத்தக முதலீட்டிற்கு மக்களுக்கு தொலைக்காட்சியில் தினமும் ஆலோசனை கூறுகிறார்கள்...இவர்கள் பவுசு எப்படியிருக்கிறது..பாருங்கள்!...சரி அவர் விஷயத்திற்கு வருவோம்....அந்தாள் கூறிய இந்த கருத்தை கேட்டவுடன் எதிர்தரப்பில் இருக்கிற ஞாநி, பதிரிகையாளர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர்...என்ன அநநிய செலாவணி,,,நீ பணம் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை மக்களின் பணம் இன்னும் அதிகம் சுரண்டப்பட்டிருக்கும்...இது கூட தெரியவில்லையே...இன்னும் நீ அதள பாதளாத்திற்கு தான் போயிருப்பாய்...ஒருவர் படிப்பது அவர் சொந்த காசு மட்டுமே அல்ல பல மக்களின் வரிப்பணங்கள் தான்..பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள் என எல்லாமே.....இந்தியாவின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் ராணுவத்திறகு போகிறது...இந்த அந்நிய செலவாணி வருவாய் அப்படியே கூடுதலாக அங்கே போவதால் இன்னும் அதிக ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்படுகிறது. இதற்கு ராணுவ உற்பத்தியின் செலவீனங்களை கணக்கில் எடுத்தாலே போதுமானது. இதனால் சாமன்ய மக்களுக்கு எந்த பயனும் இல்லை... சாமான்ய மக்களின் பணம் தான் சாமான்ய மக்களுக்கே பயன்படுகிறது. இதை புரிந்து கொள்ளாமல் நீ வாழ வேண்டும் என்பதற்காக இங்கிருப்பவனை அவன் பூரவீகமாக வாழ்ந்த இடத்திலிருந்து அப்புறம் படுத்த சொல்லும் உம்முடைய போக்கு சர்வாதிகார மனப்பான்மை கொண்டது என்று காய்ச்சு காய்ச்சிவிட்டனர். இதை ஒரு பக்கா பார்ப்பனன் (புகைப்படம் நாமம் எல்லாம் போட்டு கொண்டு) ஒருவன் கூட இணையத்தில் இந்த போக்கத்த கருத்தை வைத்தான். வைத்துவிட்டு மூர்க்கமாக வேறு வாதாடினான்.

கோடிக்கோடியா செலவு பண்ணி..கோடி கோடியா செலவுப்பண்ணி...எல்லா கட்சிக் கரங்களும் செல்வு பண்றாங்க. பண்ணாம எந்த தொண்டனும் கொடி கட்டமாட்டார்...ஏன்? போஸ்டர் அடிச்சி ஒட்டமாட்டார்...? அது கூட தொழில் தான்....அவருக்கும் குடும்பம் குழந்தை குட்டிகள் எல்லாம் இல்லை....?..சோறு சாப்பிட தேவையில்லை...அவர்கள் குழந்தைகள் க
ல்வி பயில தேவையில்லை...எல்லாம் நீயேவா...? நீ வெறும் 18 சதவீதம் தான். அதுவும் நிரந்தரம் கிடையாது.