Search This Blog

17.2.11

பர்ப்பனீயத்திற்கு எதிரியாக இருப்பவர்கள் யார்?

அந்தக் காலத்தில் பார்ப்பனீயத்தை ஓர் அரசர் எதிர்த் தார். அவர்தான் புத்தர். இன்றும் அந்நிலை தொடர்கிறது என்றார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி.


டாக்டர் பீ.கி.அரசு குமார் எழுதிய இந்தியா விலுள்ள பிராமணர்கள் மற்றும் பிராமணீயத்தின் வரலாறு என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, நேற்று (16.2.2011) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

தமிழர் தலைவர் உரை


இவ்விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு தமது உரையில் குறிப்பிட்டதாவது:

எனக்கு முன்னாலே பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களும் பேசினார்கள். அதே போல பாதிரியார் ஜெகத் கஸ்பார் ராஜ் அவர்களும் பேசினார்கள்.

பேராயர் எஸ்றா சற்குணம், நீங்கள் எங்களுடனேயே வந்து விடலாம் என்று என்னை அழைத்தார்கள். நான் இருந்த இடத்திலேயே இருந்தால்தான் இவ்வளவு துணிச்ச லாகக் கருத்துகளைச் சொல்ல முடிகிறது.


படை வீரர்களை ஓதச் சொன்னால்...!


படை வீரர்களாக இருக்கிற எங்களைப் போய் ஓதக் கூடிய இடத்தில் உட்காரச் சொன்னால் அது நாட்டிற்கும் நல்லதல்ல. சமுதாயத்திற்கும் நல்லதல்ல. நீங்கள் வெள்ளை அங்கியை அணிந்திருந்தாலும் எதிரிகள் உங்களை கருப்பு அங்கி அணிந்தவர் களாகத்தான் பார்க்கிறார்கள்.

பிராமணீயத்தின் வரலாறு


பேராசிரியர் டாக்டர் பீ.கி.அரசு குமார் எழுதிய இந்தியாவிலுள்ள பிராமணர்கள் மற்றும் பிராமணீ யத்தின் வரலாறு என்ற நூலை ஓர் அரிய வரலாற்றைக் கொண்ட நூலாக ஓர் ஆவணத் தொகுப்பு நூலாக மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். அரசுகுமார் ஒரு நல்ல பயனுள்ள பணியை செய்திருக்கிறார். இனிவரக்கூடிய தலைமுறைக்கும் நல்ல பயனுள்ள பணியைச் செய்திருக்கிறார்.

டாக்டர் பட்டம் தரலாம்!


அவர் தேர்ந்தெடுத்திருக்கின்ற இந்தத் தலைப்பே ரொம்ப துணிச்சலான தலைப்பு. இப்படிப்பட்ட ஒரு தலைப்பில் நூலாக எழுத ரொம்ப துணிச்சல் வேண்டும். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை பக்கம் , பக்கமாக ஆதாரத்துடன் எழுதியிருக்கின்றார்.

இப்படி இந்த நூலில் பல கருத்துகளை ஆய்வு செய்து எழுதியமைக்கே ஒரு டாக்டரேட் பட்டமே கொடுக்கலாம். இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு முதலில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தவேண்டும். எங்களை இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததற்கே இன்னொரு பாராட்டுக் கூட்டம் போட வேண்டும்.

நம்முடைய செய்திகள் சரியாகச் சென்று சேராததற்குக் காரணம் என்ன தெரியுமா? இருட்டடிப்பு, திரிபு வாதம். இந்த நூலை யாருக்கு அர்ப்பணம் செய்திருக்கின்றார் அரசுகுமார்?

முதலில் தந்தை பெரியாருக்குக் காணிக்கை. அடுத்து பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் காணிக்கை. அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை என்று இந்த முப்பெரும் தலைவர்களுக்குக் காணிக்கையாக செலுத்தியிருக்கின்றார்.

சிகைச் சேதம் - சிரச் சேதம்


பார்ப்பனர்கள் குற்றம் புரிந்தால் சிகைச்சேதம்; சூத்திரர்கள் குற்றம் புரிந்தால் சிரச் சேதம். அதாவது பார்ப்பனர்களை மொட்டை அடிப்பது. தமிழர்களின் தலையை வெட்டுவது இதுதான் பார்ப்பன தர்மமாக, மனுதர்மமாக இருந்தது.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்புவரை இந்த மனுதர்மம் தான் சட்டமாக ஆட்சி செய்தது. வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டிற்கு வந்த பிறகுதான் குற்றவியல் சட்டம் வந்தது.

இதயம் பேசுகிறது பத்திரிகையின் சார்பில் என்னிடம் இருவர் பேட்டி கண்டார்கள். இன்றைக்கு அந்தப் பத்திரிகையும் இல்லை. அதன் ஆசிரியர் மணியனும் இல்லை. என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் ஏன் ஆன்ட்டி பிராமினாக இருக்கிறீர்கள்? அதாவது நீங்கள் பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் உடனே சொன்னேன் ஆமாம். நான் ஒரு ஆன்ட்டி பிராமின் தான் - பார்ப்பனர்களுக்கு எதிரானவர்தான் என்று சொன்னேன்.

பார்ப்பனீயத்திற்கு எதிரிகள்


யார் யாரெல்லாம் மனித நேயத்தை விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பர்ப்பனீயத்திற்கு எதிரியாகத்தான் இருப்பார்கள் என்று சொன்னேன். டாக்டர் அரசுகுமார் அவர்கள் இந்த நூலின் அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பாருங்கள். உடம்பில் பூணூல் தெரிகிற மாதிரியான படம். அதற்கே ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

மனுதர்மம் - மனித தர்மத்திற்கு எதிரானது


மனுதர்மம் என்பது மனித தர்மத்திற்கு எதிரானது. அன்பே சிவம் என்று சொல்லுகிறான். அவன் கையில் எதற்கு தடி, மழு, கொழு சூலாயுதம், வேலாயுதம் போன்ற ஆயுதங்கள் இருக்கின்றன? எல்லாம் திருட்டுப்பயல்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்.

வெளிநாட்டில் கறுப்பர் - வெள்ளையர் என்ற நிறபேதம் மட்டும் இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் பார்ப்பனீயத்தால் உண்டாக்கப்பட்ட வேறுபாடுகள் நாலாயிரம் ஜாதிகளைக் கொண்டது.

ஏணிப்படிக்கட்டு - ஜாதிமுறை


இதைத்தான் ஏணிப்படிக்கட்டு ஜாதி முறை என்று அம்பேத்கர் சொன்னார். பிரம்மா முகத்தில் இருந்து பிறந்தவன் பிராமணன். தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன்.

பெரியாரிடம் ஒரு பொதுக்கூட்டத்தில் துண்டுச் சீட்டு எழுதி வைத்து ஒரு கேள்வி கேட்டார்கள். கால்வரைக்கும் சூத்திரன் வந்துவிட்டான். இந்த பஞ்சமன் எங்கே பிறந்தான் என்று கேள்வி கேட்டார்கள். அவன்தான் முறைப்படி அவங்க அப்பா, அம்மாவுக்குப் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்திருப்பான் என்று தந்தை பெரியார் சொன்னார்.

இந்தப் பஞ்சமர்களுக்குக் கீழாக இன்னொரு ஜாதியை வைத்துவிட்டான். அது ஆறாவது ஜாதி அவர்கள்தான் பெண்கள்.

சுடுகாட்டிலும் ஜாதி சாவதில்லை...!


நம்நாட்டிலே மனிதன் சாகிறான். ஆனால் ஜாதி சாவதில்லை. சுடுகாட்டிலும் இது பறையன் சுடுகாடு. இது உயர்ந்த ஜாதிகாரன் சுடுகாடு என்று கல்லறை வரை ஜாதியைக் கொண்டு வந்து வைத்துவிட்டான்.

நாங்கள் கடவுள் இல்லை என்று சொல்கின்றவர்கள்தான். தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதோடு நிறுத்திவிடவில்லை. கடவுளை மற! என்று சொன்ன பெரியார், மனிதனை நினை! என்றும் சொன்னார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம்


இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகின்ற சட்டத்தை தமிழகத்திலே கலைஞர் அவர்கள் நிறைவேற்றினாலும். உச்சநீதிமன்றத்திற்குச் சென்று பார்ப்பனக் கூட்டம் அதை இழுத்துப் பிடிக்கிறது.

எனவே பார்ப்பனர்களுடைய முறைப்படி கிறிஸ்தவர்களாகிய நீங்களும் நாத்திகர்கள், நாங்களும் நாத்திகர்கள். அந்தக் காலத்திலே பார்ப்பனீயத்தை ஒரு அரசகுமாரன் எதிர்த்தார். அவர்தான் புத்தர். அதே போல இந்தக் காலத்தில் நமது டாக்டர் அரசுகுமார் பார்ப்பனீயத்தை எதிர்த்திருக்கிறார். இந்த நூலில் அவர் எழுதியிருக்கின்ற ஒரு வரியை எவராலும் மறுக்க முடியாது.

வரலாறு கங்கைக் கரையிலிருந்து என்று சொல்லுகிறார்கள். வரலாறு காவிரிக்கரையிலிருந்து தொடங்கியது என்று இதுவரை யாரும் எழுத வில்லை. அப்படி எழுத வேண்டும். இந்த வரலாற்று ஆய்வு நூல் எல்லா இடங்களிலும் பரவ வேண்டும்.

மலிவு விலையில் பரப்பவேண்டும்


இந்த நூல் மலிவு விலையில் தமிழாக்கம் செய்து வெளியிட்டு - மக்கள் மத்தியில் இந்தக் கருத்துகள் அனைத்தும் சென்றடைய வேண்டும்.

எந்த அரசாங்கத்தையும் பார்ப்பனர்கள் ஒன்று எதிர்த்து அழித்திருக்கின்றார்கள். அல்லது அனைத்து அழித்திருக்கின்றார்கள்.

குப்தர்கள் காலம் பொற்காலம் என்று சொல்லு கிறார்கள். அது பொற்காலமல்ல அது கற்காலம்.

இரண்டாவது அசோகன் - கலைஞர்!


இன்றைக்கு கலைஞர் அவர்கள் இரண்டாவது அசோகனாக மிகச் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்க கல்வி இவைகளைத் தந்து கொண்டிருக்கின்றார். இதைவிட சமதர்மம் வேறு என்ன இருக்க முடியும்? இதை விட மனித நேயம் வேறு என்ன இருக்க முடியும்?

எல்லாம் அவனவன் தலை எழுத்து, கர்ம வினைப்பயன் என்று நினைத்த காரணத்தால்தான் இந்த நாட்டிலே புரட்சி வெடிக்கவில்லை.

என்னாலேயே முடியாது!


சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் நான்கு ஜாதியை நானே உண்டாக்கினேன் என்று கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான். அவன் நினைத்தாலும் அந்த ஜாதி தர்மத்தை மாற்ற முடியாது என்று பகவானே சொல்லுகின்றான். மனித நேயத்தை எதிர்த்த தத்துவம் தான் இந்து மதமாக மாறியிருக்கிறது. மக்களின் வாழ்க்கை முறையாக ஆகியிருக்கிறது.

கம்பராமாயணத்தில் கடவுள் இராமனே பார்ப்பனர்களைத்தான் வணங்கியிருக்கிறான்.

அரசுகுமார் அவர்கள் இன்னும் இதுபோன்ற பல நூல்களை எழுத வேண்டும். இந்த நூல் பரவ நாங்கள் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருப்போம். அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் அவர்கள் பல செய்திகளைச் சொன்னார். அவர் சொன்னதையும் மனதிலே வைத்துக் கொள்வோம். இந்த நூல் நூலகங்களுக்குச் செல்ல, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்வோம்.

புதிய சிந்தனையை உருவாக்குவோம்!


ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க, ஒரு புதிய சிந்தனையை உருவாக்கத் தயாராவோம். அரசுகுமார் அவர்கள் இந்த நூலை எழுத அவருக்கு உறுதுணையாக இருந்து உதவிய அவருடைய வாழ்விணையர் சாந்தா அரசகுமார் அவர்களையும் மனதாரப் பாராட்டுகிறோம். - இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.

நூல் வெளியீடு


இந்தியாவிலுள்ள பிராமணர்கள் மற்றும் பிராமணீயத்தின் வரலாறு நூல் வெளியீட்டு விழா, 16.2.2011 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மத்திய நூலகக் கட்டடம் அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பேராசிரியர் பிருந்தாவன் சி.மோசஸ் வரவேற்றுப் பேசினார். கவிஞர் ஜே.தியாரூ தொகுப்புரை வழங்கினார்.

த.ஒ.க.ஆ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் இ.பி.பெருமாள், உரையாற்றினார்.

அடுத்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தியாவிலுள்ள பிராமணர்கள் மற்றும் பிராமணீ யத்தின் வரலாறு என்னும் ஆங்கில நூலை திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, டாக்டர் எஸ்றா சற்குணம் பெற்றுக் கொண்டார். மேடையிலிருந்த அனைவருக்கும் நூல்கள் வழங்கப் பட்டன.

அடுத்து பேராயர் எஸ்றா சற்குணம் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து ஜெகத் கஸ்பார் ராஜ் உரையாற்றினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். நூலாசிரியர் டாக்டர் பீ.கி.அரசு குமார் ஏற்புரை வழங்கினார்.

----------------------- "விடுதலை” 17-2-2011

3 comments:

நம்பி said...

இணையத்திலேயே பார்ப்பனீயத்துடன் பல பொது தளங்கள் இயங்குகிறது...ஒரு பதிவர் தன்னுடைய அரசு நிறுவனத்தின் (பாரத ஸ்டேட் வங்கி..மும்பை) பெயரை போட்டுக்கொண்டே பதவு எல்லாம் போட்டுக்கொண்டே சோவின் இந்து மகா சமுத்தரத்தை பற்றி எழுதுகிறார்..ஆரியம் என்பது மரியாதை..என்று....


சோவைப்பற்றி கோந்தி பார்ப்பனர் என்றால் கோபம் வருகிறது...அவருக்கு ஜெயலலிதா மட்டுமே சிறந்த முதலைமைச்சர்....அதில் வர்ணத்தை பற்றியும் பெண்களைபற்றியும் இழிவாக எழுதுகிறார்...பதிலுக்கு நம் பெரியாரின் எழுத்துக்களை வேறொரு பதிவாக...(தமிழ் ஒவியாவின்) பதிவுகளில் இருந்து கொடுத்தால்..சாதியை பற்றி எழுதாதே என்ற அந்த தளத்தினராலேயே குறிப்பு வைக்கப்படுகிறது. சோ எழுதிய இந்து மதத்திலேயை சாதி வந்து விடுகிறதே...வர்ணாசிரமத்தை பற்றி எழுதினாலேயே சாதி வந்து விடுமே என்றால் அதற்கு அவர்கள் வைக்கும் பதில் தான் ஆச்சரியப்படுத்தியது...

''ஒருவர் மட்டும் போதுமே''..இது என்ன ஒருதலைப்பட்சம்....ஏற்கனவே அங்கே பலர் பட்டும் படாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஆனாலும் அந்த பார்ப்பனர் மசியவில்லை...

தன்னை பற்றி ஒருவர் இழிவாக எழுதுவதற்கு சின்ன மறுப்பு கூட எழுதுவதற்கு தயங்குகின்றனர்..மறுப்பு தெரிவித்தாலும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை....அப்படி என்ன? அவ்வளவு தாழ்வுமனப்பான்மையுடன் இணையத்தில் நட்பு பாராட்டி ஆகப்போகிறது...இப்படியெல்லாம் முத்தமிழ்..தமிழ் என்ற பெயரில் பொது தளங்கள் பார்ப்பனீயத்தை வளர்க்கின்றன....திராவிடம் என்பதே வரக்கூடாது என்று கூட இணை பொது தளங்களில் பொது விதியாக வைக்கின்றன. இங்கு திராவிடம் என்பது நிலப்பரப்பு சொல்...தேர்தல் ஆணையம் அங்கிகரித்த சொல்..சாதிப்பெய்ர்கள் தான் அங்கிகரிக்கப்படாது...தீண்டாமை பொருங்குற்றம் அதை எந்த வடிவில் வெளிப்படுத்தினாலும் பெருங்குற்றம்...என்று சட்டம் இருக்கிறது..இணையத்திலும் தமிழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..பள்ளி பாடத்தின் முதல் பக்கத்திலேயே இருக்கிறது....தெரிந்தும் அதையே தடுக்கவில்லையே...என்றால் அந்த தளத்தினரிடமிருந்து பதிலிலில்லை...

(இன்னும் சில தளங்கள் பற்றி கூட பேராசிரியர் சுப.வீ ஒருமுறை தெரிவித்தார். இந்த தளங்கள் எல்லாம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது அது வேறு விஷயம். இலங்கைப்பிரச்சினையில் ஒரு பிரிவு இயக்கத்தினர் எல்லாம் பெரியார் படத்தை எடுத்துவிட்டனர். அப்படி என்றால் இவ்வளவு நாள் பெரியார் பற்றி பேசியது எல்லாம் வேஷம் என்றாகிவிடுகிறது...இதைத்தான் பேராசிரியர் சுப.வீ அவர்கள் தொலைக்காட்சியிலேயே வெளிப்படுத்தினார்.)

நம்பி said...

முதலில் நானும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..(அவர்களே வருவார்கள் என்று. காத்திருந்தேன்).....மாறாக பெரியாரின் விளக்கத்தை தான் வேறொரு கட்டுரையாக வைத்தேன்...ஆனால் தடுக்கப்பட்டது...இதுதான் பார்ப்பனீய பொது இணையங்கள். தமிழை கையெலுடுத்து கொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றன....

பாரதியார் வர்ணாசிரமத்தை ஆதரித்தார் என்று ஒரு பள்ளி ஆசிரியர் இணையத்தில் வர்ணத்தை இப்படி தன் ஆய்வாக எழுதுகிறார்...எப்படி.?..இப்படி...முதலில் உள்ள வர்ணம் (பார்ப்பனன்) என்பது ஜ.பி.எஸ்...ஜ.ஏ.எஸ் என வரும் பர்ஸ்ட் கேட்டகிரி ஜாப்...இரண்டாவது வர்ணம் என்பது (ஷத்திரியன்)..செக்கண்ட் கேட்டகிரி ஜாப்...ராணுவம்...மூன்றாவது வர்ணம் (வைஷ்ணவம்)...3 வது கேட்டகிரி ஜாப்..அதாவது கணக்கர்..கிளார்க்..டைப் ஜாப்....4 வது வர்ணம்(சூத்திரன்)...கலாசி வேலையான போர்த் கேட்டகிரி ஜாப்...அதாவது கக்கூஸ் கழுவுவது...குப்பை அள்ளுவது...டீ வாங்கி கொடுக்கும் கிளாஸ் 4 ஜாப்... என தனது ஆய்வுக்கட்டுரையாக பாரதியார் அப்போதே தீர்க்கத்துடன் எழுதினார் என்று கூறுகிறான் ஒரு ஒய்வு பெற்ற பள்ளிபார்ப்பன ஆசிரியன்..எவ்வளவு வஞ்சகத்துடன்...இதை எழுதும் பொழுதே எவ்வளவு...வன்மம் இருந்திருக்கும். அம்பேத்கருக்கு நேர்ந்த கொடுமை இந்த ஆளிடம் படித்த மாணவர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் தானே....யாருக்கு தெரியும்..?

உஷாராக அவன் இருக்கும் இடத்தை முதல் கேட்டகிரியாக வகுத்து கொண்டான்...அப்பொழுதும் அந்த மகா புண்ணியவானிடம் விவாதத்துக்கு செல்வில்லை...அவர் எப்படி சண்டைக்கு வருகிறார் தெரியுமா? அவரே வந்தார்...வருவார்...அதுதான் பெரியாரின் எழுத்து....? (பேராசிரியர் மா.நன்னன் எழுதியது) பெரியார் எழுதிய சுயமரியாதை திருமண கட்டுரைக்கு அவரே சண்டைக்கு வருகிறார்...பார்ப்பனர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று...பார்ப்பனன் நல்லவன் (எந்த காலம் வரை கெட்டவர்களாக இருந்தார்கள் அதையாவது வெளிப்படையாக கூறமுடியுமா..? அது முடியாது ) என்று வக்காலத்து வாங்கும் பொழுதே சாதிப்பற்று தெரிந்து விடுகிறது...சாதிப்பற்றுடன், சாதிவெறியுடன் இருக்கும் ஒருவர் எப்படி தன்னை நல்லவர் என்று சொல்லிக்கொள்ள முடியும். போதாக்குறைக்கு ஒட்டுமொத்த பார்ப்பன சமுதாயத்துக்கும் எப்படி வக்காலத்து வாங்க முடியும்...இணையத்திலேயே உமது ஜாதியை மறைக்க முடியவில்லையே...இவர்கள் தான் அரசியலை...உலக அரசியலை...பொருளாதாரத்தை அலசுகிறார்கள்.

‘’நீங்கள் பாரதியாரை பார்ப்பனராக காட்டிய நீங்கள் நல்ல பார்ப்பனரா...அதை போனால் போகுது என்று விட்டாலும் வம்புக்கு வந்து மாட்டிக்கொள்கிறீரே!’’ என்று ‘’இதில் முதல் கேட்கிரியை உஷராக உமது பார்ப்பன வெறிக்கு ஈடாக சமர்ப்பிக்க முயற்சிக்கிறீரே!...இந்த தொழிலை பார்ப்பனன் மட்டுமே பார்க்கவேண்டும் என்று வரையறுக்கிறீர்களா...ஏன் இந்த கேட்டகிரியில் கடைசி கேட்டகிரியில் அதாவது சூத்திரன் என்று வரும் கேட்டகரியில் உமது பார்ப்பனத்தை வைக்கத்தயாரா? என்றால் பதில் இல்லை...

நம்பி said...

மூன்று பார்ப்பனர்கள் இதை எழுதுகிறார்கள்...எப்படி? புகைப்படம் தொழில் எல்லாம் போட்டுக்கொண்டு..அதுவம் பொதுத்துறை...(சட்டப்படி இது தவறு...வேலையே போய்விடும்...) அனைத்தும் பார்ப்பன ஜாதி கட்டுரைகள்..வர்ணாசிரமத்தை முன்வைத்து எழுதபட்ட கட்டுரைகள்...அதற்கு மாற்றாக எழுதினால் ஜாதி பற்றி எழுதாதே...இன்னொருவன் எழுதுகிறான்...குலக்கல்வி ஒழித்ததினால்...எத்தனை தொழில்கள் பாதித்தது என்று தெரியுமா..? என்று கேட்பது இன்னொரு பார்ப்பனனா? அல்லது இரண்டாவது, மூன்றாவது கேட்டகிரியில் வருபவனா தெரியாது.?..அந்த நபருக்கு தன்னுடைய ஜாதி இரண்டாம் இடத்தில், மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்ற திருப்தி இருக்கலாம்...என்ன மனிதர்க்ள் இவர்கள்...? அதற்கு பதிலாக வைத்தது இதுதான்...

''நீர் எந்த குலத்தொழிலை விட்டுவிட்டு இந்த கணினித்தொழிலுக்கு வந்தீர்'' என்றால் பதிலில்லை...''நான் எந்த தொழிலை விட்டுவிட்டு உமக்கு பதிலளித்து கொண்டிருப்பதாக நினைக்கிறீர்..?..இல்லை எந்தெந்த தொழில்களெல்லாம், யார் யார் விட்டுவிட்டு வந்ததால் பாதிக்கப்பட்டது என்பதாவது தெரியுமா..? அதை வரிசைப்படுத்த முடியுமா...?

அதற்கு அவர் சற்று யோசிக்கவேண்டிய கேள்வி நிச்சயம் பதிலளிக்கிறேன் என்றார்....சற்று நன்றாகவே யோசியும்...இன்னும் நாம் திருந்தவில்லையே என்று யோசியும் என்று பதிலளித்துவிட்டேன்... இன்றுவரை பதிலளிக்கவில்லை..அந்த பதிவும் நீக்கப்பட்டது...அந்த பாரதியார் பதிவும் நீக்கப்பட்டது..உரைத்திருக்கும் என நினைக்கிறேன்...அதற்கெல்லாம் தமிழ் ஒவியா பதிவுதான் உபயோகமாயிருந்தது..நன்றி!..

இவர்கள் தான் தங்களை ரொம்ப நல்லவ...என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்....கமலகாசனைப்போல், கோராவைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட வேண்டாமா...? பாதிக்கப்பட்ட சாதிப்பிரிவிலிருந்து தான் போராடவேண்டுமா...? என்ன...?

பெரியாரிசம் என்பதே சமரசத்திற்கு உடன்படாதது... அவர் கோபித்துகொள்வார் இவர் கோபித்துகொள்வார் என்ற சமரசம் பார்த்தால் சமூக விடுதலை கிடைக்காது...நாட்டின் விடுதலையை விட சமூகத்தின் விடுதலையே முக்கியம்..என்பது பெரியாரின் வாசகம்....இவனிடம் அடிமையாக இருந்தால் என்ன? அவனிடம் அடிமையாக இருந்தால் என்ன? இரண்டும் ஒன்று தான்.

இங்கு வலைப்பதிவில் சுதந்திரமாக எழுதமுடிகிறது... இது வேறு விஷயம்...அங்கே எல்லாம்...மிகக்கடினம்...(எல்லாம் தெரிந்து கொள்வதற்காக..பயிற்சிக்காகத்தான்)