Search This Blog

13.2.11

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி? - 4

எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறுமாப்புடன் பேசும் சு.சாமியின் கீழ்த்தரப்பட்ட யோக்கியதாம்சம் எத்தகையது என்பதற்கு மேலே கண்ட எடுத்துக்காட்டுகள் போதாதா?

உண்மைகளை மறைக்கிறார். பதில் அளிக்காமல் பிடிவாதம் காட்டினார் என்று கமிஷன் கூறுகிறதே - இந்தப் பேர் வழி ஒரு நாணயமான மனுசனாக இருந்திருந்தால் உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் - பிடிவாதமாகப் பதில் சொல்ல ஏன் மறுக்க வேண்டும்? - பதுங்க வேண்டும்?

வீராதி வீரர்போல அரட்டைக் கச்சேரி நடத்துகிறாரே - கமிஷன் கேட்ட கேள்விக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் ஏன் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார வேண்டும்? விழி பிதுங்கி ஏன் திணற வேண்டும்? கவட்டிக்குள் ஏன் கவிழ்ந்து படுக்க வேண்டும்?

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் கூனிக் குறுகத்தானே வேண்டும்? வெல வெலத்துத்தானே போக வேண்டும்? - முகம் வெளிரத்தானே செய்யும்!

நியாயமாக உண்மைகளைச் சொல்லத் தவறிய காரணத்தால் - மறைத்த காரணத்தால் உள்ளே தள்ளப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு நாள் ஜெயிலில் இருந்திருந்தால் இந்தக் கோழையின் குணாதிசயங்கள் வெளிப்பட்டிருக்கும். மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அப்ரூவராக ஆசாமி மாறியிருப்பார். என்ன காரணத்தாலோ, எந்தப் பூணூல் பாசத்தாலோ, நிருவாக அமைப்பில் உள்ள பஞ்சக் கச்சங்களின் பரிவாலோ ஒவ்வொரு சமயமும் இந்த ஆள் தப்பித்துக் கொண்டு வருகிறார்.

சு.சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளராக இருந்த தோழர் வேலுச்சாமி இந்தச் சு.சாமியைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?

கூடவே இருந்தவராயிற்றே! அகம் - புறம் அறிந்தவராயிற்றே! சும்மா சூடு பிறக்கிறது வேலுச்சாமியிடமிருந்து! - அதையும் நாளை தெரிந்து கொள்ள வேண்டாமா?

----------------மின்சாரம் அவர்கள் 13-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: