Search This Blog

7.2.11

கோயில்கள் விபச்சார விடுதிகள் - காந்தியார்


திருப்பதி ஏழுமலையான் கோயில் விடுதிகளில் தங்குவோர் இனி அடையாள அட்டை காட்ட வேண்டுமாம்.

குடும்ப ரேஷன் அட்டை, நிழற்படம் உள்ள அடையாள அட்டைகளைக் காட்டினால் தான் தங்கும் விடுதிகளில் அனுமதிக்கப்படுவார்களாம் (ஆதாரம்: தினமலர் 6.2.2011)
ஏன் இந்தத் திடீர் ஏற்பாடாம்?

தங்கும் விடுதிகளில் கொலை, விபச்சாரம், சட்ட விரோதமான காரியங்கள் தடபுடலாகதங்குத் தடையின்றி நடக்கின்றனவாம். அதற்காகத்தான் இந்தக் கட்டுப்பாடாம்.

கோயில்களை விபச்சார விடுதிகள் என்றார் காந்தியார், கள்ளர் குகையென்றார் கவுதம புத்தர்.
அவர்கள் வாய்களில் சர்க்கரையைத்தான் அள்ளிப் போட வேண்டும்.

தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது அவரிடம் கேள்வி ஒன்று மெயில் ஏட்டின் சார்பில் கேட்கப் பட்டது. தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக்கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வதைப்பற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு, காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக்கூட நான் விரும்பவில்லை. ஒரு வகையில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான். கடவுள் எங்கும் இருக்கிறார். திருடர்கள் வாழும் குகைகளில்கூட இருக்கிறார். ஆனால் அதற்காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவதில்லையே! அதற்குப் பதிலாக ஆலயங்களுக்குத்தானே செல்கிறோம்? ஆலயங்களில் தூய்மையான சூழ்நிலை நிலவும் என்பதற்காகத்தானே செல்கிறோம்? அந்தப் பொருளில்தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன். அதனால்தான் அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ, அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன். இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண் படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்து சமயத்தின் நலனுக்காகவாகிலும், என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடியாது

--------------------(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586-587).

காந்தியாரின் இந்த வார்த்தைகளின் அழுத்தத்தைப் பார்க்கும் பொழுது அவர் பார்த்த அந்தச் சில கோயில்களில் திருப்பதி முக்கியமானதாகவே இருந்திருக்க வேண்டும்.

திருப்பதி விடுதிகளில் கொலை, கொள்ளை, விபச்சாரம் நடக்கிறது என்பதால் தான், தங்குவோர்க்கு நிபந்தனைகளை வைத்திருக்கிறார்கள் - காந்தியார் விபச்சார விடுதி என்று கோயில்களைச் சொன்னதற்கான காரணம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் பொருந்தி விட்டதே!

வேறு சாட்சியம் வேண் டாம், ஆனந்தவிகடனே சொன்னபிறகு வேறு மேல் முறையீடு எதற்கு?

திருப்பதிக்கு சாமி கும்பிட வர்ற காதல் ஜோடிகளை, அந்தத் தேவஸ்தான ஆட்கள் சிலர் பார்க்கிற பார்வையே சரியில்லையாம். சமீபத்தில் தேவஸ்தான விடுதியில் தங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியைச் சின்னாபின் னாப்படுத்தியிருக்காங்க ரெண்டு பேர்.

(ஆனந்தவிகடன் 25.2.2007)

காந்தியார் சொன்னது சரியாகப் போய்விட்டதா -இல்லையா?

--------- மயிலாடன் அவர்கள் 7-2-2011 “விடுதலை” ய்ல் எழுதிய கட்டுரை

2 comments:

நம்பி said...

திருப்பதிக்கு ஒருமுறை அலுவலக சுற்றுலாவுக்காக அனைத்து நண்பர்களுடன் செல்கையில் அங்கு பிரசாதம் கொடுக்கும்...பார்ப்பன பூசாரி ஒருவரை லட்டுக்காக சந்திக்க நேர்ந்தது. திருப்பதி கோயிலின் உள் பிரகாரத்தின் அருகில் தான் அந்த பிரசாதம் தரப்படும் இடம் என்பது அனைவருக்கும் தெரியும்....லட்டு என.டி.ஆர் ஆட்சிகாலத்தில் மிகத்தாரளமாக மிகப்பெரிய அளவில் கணக்கு வழக்கில்லாமல் கொடுக்கப்பட்டு வந்தது...அதன்பின் அது 5..4...3...2...1 என்ற எண்ணிக்கையாக நாளடைவில் அதுவும் சந்திரபாபு நாயுடு காலத்தில் சிறிய அளவுடன் குறைக்கப்பட்டது...ஆகையால் லட்டுக்களை தாராளமாக பெற விரும்பி அந்த பார்ப்பன பூசாரியை சந்தித்தபொழுது...அவர் வெளியே சிபாரிசில் அனைவரையும் அழைத்து வந்து அங்குள்ள ஒரு இடத்தில் அமர்ந்து எங்களுடன் வந்தவர்களுடன் ஜாலியாக அளாவளாவி விட்டு மடியில் இருந்து கஞ்சாவை எடுத்து புகைத்தார், ஏற்கனவே தண்ணி போட்டுவிட்டு தான் இருந்தார்...அதையும் அவரே குறிப்பிட்டார்...அவருக்கு தமிழ் நன்றாக தெரியும்...தமிழ் தெலுங்கு அறிந்த பார்ப்பனர் தான்....பின்பு கொஞ்ச நேரம் என்னுடன் இருங்கள்...என் டூட்டி முடிந்துவிடும்...அப்புறம் போய் லட்டை எடுத்து வந்து தருகிறேன்..என்று..கூறிவிட்டு அந்த கஞ்சா பிடித்த கையை கழுவாமல்,,,மீண்டும் சென்று பிரசாதம் வழங்கி கொண்டிருந்தார்...எங்கள் குழுவில் வந்த நண்பர்களுக்கு தாராளமாக பெரிய இலையில் எல்லா வகை பிரசாதங்களையும் வேண்டாம் என்கிற அளவுக்கு கொடுத்தார்...சில இதர பொது மக்களும் சந்தடி சாக்கில் தாராளமாகப் பெற்றுக்கொண்டனர்...சிலருக்கு ஒப்பவில்லை....என்ன இவர் கோயிலில் புனித இடத்தில் இருக்கும் இவர் இப்படி கஞ்சா, பீடி, சிகரெட், மது எல்லாம் புகைத்துவிட்டு அசுத்தமாக பூணூல் வேறு போட்டுக்கொண்டு இந்த மாதிரி செய்கிறார் என்று சில நபர்கள் முனகிக்கொண்டே... அவருக்குத் தெரியாமல் பிரசாதத்தில் கைவைக்காமல் ஒதுக்கி விட்டனர்..சிலர் கீழே போட்டு விட்டனர்...நேரில் பார்த்தபிறகு எப்படி சாப்பிட ஒப்பும்....இது பற்றி எங்கள் குழுவில் வந்த அவரின் பார்ப்பன சகோதரரிடம் கேட்டபொழுது இதெல்லாம் இங்கு சகஜம்.....மற்றவர்களுக்குத்தான் புனிதம்...சாமியெல்லாம்...இங்குள்ளவர்களுக்கல்ல...திருப்பதி மலையில் எல்லோருக்கும் அரசு குவர்ட்டர்ஸ் உண்டு....அங்கேயே தம்பதி சமேதராய், குழந்தை குட்டிகளுடன் வாழ்பவர்கள் எல்லாம் உண்டு..தண்ணி எல்லாம் தாரளமாக அடிப்பார்கள்....இங்கு நம்பிக்கையுடன் வருகின்ற யாத்திரிகர்கள் கட்டிய மனைவியை பார்ப்பது கூட அசுத்தம் என நினைப்பவர்கள். இங்குள்ளவர்களுக்கு அதுமாதிரியெல்லாம் கிடையாது... திருப்பதி ஊழியர்களின் குடும்பங்களே இங்குதான் உள்ளது...அவர்கள் எப்படி சல்லாபம் எல்லாம் வைத்துகொள்ளமால் இருக்கமுடியும்...விடுதியில் எச்சிர்க்கைப் பலகை எல்லாம் பேருக்கு எழுதிப்போடப்பட்டிருக்கும்... சல்லாபங்கள் எல்லாம் புறியக்கூடாது தண்டனை என்றெல்லாம் இருக்கும்...ஆனால் இங்கு எல்லாமே நடக்கும்...இது தெரிந்து தான் காந்தி முன்பே சொல்லியிருப்பாரோ...? லஞ்சம் வாங்குவதற்கெல்லாம் இங்கு யாரும் தயங்குவதில்லை....அரசு குறைந்த கட்டண விடுதி கூட அதிக விலைக்கு, அங்கே பணிபுரியும் ஊழியர்களாலேயே அதிக தொகைக்கு வாடகை விட்டு வசூலிக்கப்படும்...எல்லாமே அங்கே குழுவாகத்தான் செயல்படுத்தப்படுகிறது..தட்டில் விழும் காசு கூட ஒரு நாளைக்கு ஒருவர் என்ற பங்கீட்டில் வருடத்திற்கு ஒரு முறை ஒரு பார்ப்பன பூசாரி பங்கிட்டுகொள்ளலாம் என்ற இல்லீகல் எல்லாம் அங்கே சர்வசாதரணம். இது பல வருடங்களாக நடைபெறுகின்றன..கோயில் கொடியவர்களின் கூடாரமாக எப்போதிருந்தோ ஆகிவிட்டது...என்பதற்கு இதுவே சாட்சி...

பாலா said...

அப்படியே கோவிலுக்கு செல்லும் பெண்கள் எல்லாம் விலை மாதர்கள், ஆண்கள் எல்லாம் விபசாரிக்கு பிறந்தவர்கள் என்றும் சொல்லி விடுங்கள். இப்படி பேச பெரியார்தான் சொல்லி கொடுத்தாரா?