Search This Blog

4.2.11

உடலுறவு கொள்வது தான் சாமியார்களின் முக்கிய திருப்பணி!


ஈஸ்வரன் பெயரால் ஈஸ்வரன்கள்!

கடவுள், மதம் வகையறாக்களின் பெயரால் நாட்டில் நடக்கும் மோசடிகள் கொஞ்சம் நஞ்சமா? மக்களிடம் இருக்கும் அறியாமையையும், பேராசை யையும், பயத்தையும் பயன்படுத்தி புரோக்கர்கள் சாமியார் என்ற பெயரில் சுரண்டல் சாம்ராஜ்ஜி யத்தை ஜோராக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இருப்பதிலேயே பெரிய சாமியார்தான் ஜெகத்குரு சாமியார் சங்கராச்சாரியார்.இவருடைய யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்குக் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஒருவர் போதும். கொலைக் குற்றம்வரை இவர்மீது வழக்கு; பெண்கள் விடயத்தில் அப்பப்பா - இந்தக் காலியின் காமவெறி வார்த்தைக் கட்டுக்குள் அடங்கக் கூடியதல்ல. அண்மையில் இறந்துபோன அக்கிரகாரத்து எழுத்தாளர் அணுராதா ரமணன் என்ற அம்மையாரே கண்ணீரும் கம்பலையுமாகத் தொலைக் காட்சிகளில் எடுத்துரைத்தார்.

தன் எதிரேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் ஜெயேந்திர சரஸ்வதி என்று சொன்னதைவிட வேறு வெட்கக் கேடு என்ன?

பிரேமானந்தா என்னும் சாமியார் இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்குள் கிடக்கிறார். உடம்பில் இல்லாத வியாதியில்லை என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்.

குடியிருந்த வீட்டுக்கே கொள்ளி வைத்தது என்று சொல்லுவார்கள்; சதுர்வேதி என்ற பார்ப்பன சாமியார், தான் குடியிருந்த வீட்டின் தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் கடத்திச் சென்று 50 லட்ச ரூபாய் பணம் கேட்டான் என்ற சேதி கூவத்தைவிட நாறிப் போய் விடவில்லையா? பீர் சாமியார், பீடி சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார், சுருட்டு சாமியார் என்று இத்தியாதி இத்தியாதி நீண்ட பட்டியலே உண்டு. இவர்களில் பெரும்பாலும் பெண்களை மயக்கித் தம் வசப்படுத்தி உடலுறவு கொள்வது தான் இவர்களின் முக்கிய திருப்பணி.

வீட்டில் பல பிரச்சினைகள், பெண்களுக்கு வெளியில் சொல்ல முடியாத மன நிலை, குழந்தைப் பேறு இல்லை என்ற குறைபாடு, கணவன் வேறு பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிலையில் தனது ஆற்றாமை - இவைகளுக் கெல்லாம் வடிகாலாகக் காவி வேட்டி சாமியார் களைத் தேடிச் செல்லும் பரிதாப நிலை நம் நாட்டுப் பெண்களிடம் அதிகம். இதனை மிக இலாவகமாகப் பயன்படுத்தி பெண்களை நாசப்படுத்துகிறார்கள்; பெண்களுக்கோ வெளியில் சொல்ல முடியாத அச்சம்!

இவ்வளவுக்கும் மீறி தகவல்கள் வெளியில் வந்த நிலையில்தான் இந்தக் கபட சாமியார்கள் சிக்குகிறார்கள்; பிறகு கம்பிகளை எண்ணுகிறார்கள்.

கோவையில் ஈஸ்வரன் என்ற சாமியார் அண்மைக்கால வெளியீடு; வழக்கமாக சாமியார் செய்யும் வேலையைத்தான் இவனும் செய்திருக்கிறான். 5000 பேர்களுக்கு மேல் இந்தத் தடியனுக்கு வாடிக்கைக்காரர்களாம். பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, காமலீலைகளில் ஈடுபடுவானாம். இப்படி வாக்குமூலமே காவல்துறையிடம் கொடுத்திருக்கிறான்.

சோதிடம், மாந்திரீகம் என்ற பெயரிலும் சாதாரண கற்களைக் கொடுத்து, அதற்கு மாந்திரீக சக்தி என்று பொய் கூறி, ஆயிரக்கணக்கில் பணம் பறித்து இருக்கிறான். பெண்கள் கண்களுக்குப் போடுகிற மையைக் கடைகளில் வாங்கி, இது வசியப்படுத்தும் மை என்று கூறிப் பணத்தைப் பறித்து இருக்கிறான்.

இதுபோன்று சாமியார் மோசடி அம்பலத்துக்கு வந்த பிறகும்கூட, மறுபடியும், மறுபடியும் இதுபோன்ற சாமியார்களிடம் மக்கள் ஏமாறுகிறார்களே என்று நினைக்கும்பொழுதுதான் வேதனையாக இருக் கிறது.

இதுபோன்ற காவி வேட்டித் தடியர்களை விலங்கு போட்டு வீதிகளில் இழுத்துச் செல்ல வேண்டும். பொது இடத்தில் விசாரித்து, மக்கள் கேவலமாக நினைக்கும் வகையில் செய்தால்தான் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும்; சாமியார் ஆகிக் குறுக்கு வழியிலே சம்பாதிக்கலாம் என்று நினைப்பவன்களுக்கும் அச்சம் ஏற்படும்.

இந்தச் சாமியார்களைக் கண்காணிப்பதற்கென்றே காவல்துறையில் ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். பக்தி அறிவையும், ஒழுக்கத்தையும் கெடுக்கிறது என்பதை இப்பொழுதுதாவது மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!

-------------------"விடுதலை” தலையங்கம் 3-2-2011

15 comments:

Unknown said...

உங்கள் பணிசிறந்தது ஓவியரே.. அப்படியே.. ராசா கைதை பற்றியும் எழுதும்...

தமிழ் ஓவியா said...

காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

மந்திரவாதிகள் ஊரை காலி செய்துவிட்டு ஓட்டம்

கோவை செல்வபுரத்தில் ஹம்சவேணி மாந்திரீக சித்த ஜோதிட ஆராய்ச்சி மய்யம் நடத்தி வந்தவர் வி.டி.ஈஸ்வரன் பாலியல் புகாரில் சிக்கிய ஈஸ் வரன் கைது செய்யப்பட் டுள்ளார். விசாரணை யில், பல்வேறு பெண் களை மிரட்டி அவர் பாலியல் உறவு கொண் டது தெரியவந்தது.

பல்வேறு பிரச்சினை களுக்கு தன்னை நாடி வந்த பெண்களிடம், மாந்திரீகம், மை போடு தல், ராசிக்கற்களைக் கொண்டு தீர்வு காண் பதாக ஏமாற்றியது தெரியவந்தது. ஈஸ்வரன் விவகாரம் அம்பலமான தும் விழிப்படைந்த மற்ற மந்திரவாதிகள் ஊரையே காலி செய்து விட்டு ஓட்டம் பிடித் தனர்.

பலர் தலைமறைவாக இருந்து தொடர்ந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு உத்தர வின் பேரில், மாந்திரீ கத்தில் ஈடுபட்டுள்ள 65 பேரின் நடவடிக்கை களை காவல் துறையினர் தீவிரமாகக் கண்க ணித்து வருகின்றனர். போலி மந்திரவாதிகளும் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகின்றனர்

-----------"விடுதலை”4-2-2011

Unknown said...

சாமியார் என்று அனைவரையும் கூறுவது தவறு கெளதம Budha ,ஓஷோ,சத்குரு ... போன்ற மகான்கள் வாழ்கிற பூமி இது . இவர்கள் கடவுளை வைத்து போதிக்கவில்லை படைப்பின் மூலத்தை மையமாக கொண்டு பேசுகிறார்கள்.

Unknown said...

அயோக்கியர்களின் ஒரு வேடம்/ முகமூடிதான் சாமியார்! மற்றொரு வெளிப்பாடு - அரசியலர்! இங்கு சாமியார்கள் எளிய இலக்கு!உங்களைப் போன்றோருக்கு சாமியார்கள் , சுகமான சொறிவுகள்! மற்ற அயோக்கியர்களை, சீண்டிப் பாருங்கள்! துணிவிருந்தால், விடுத(தொ)லை துணையோடு!சின்னம், பின்னமாகிவிடும்!

அலைவரிசை ஊழலில், கதாநாயகனுக்கு, சொம்பு தூக்கிய, புண்ணியாத்மாக்களே! சற்று சிந்திப்பீர்!

SIDDHAR SIVA said...

தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்

தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல

தந்தைபெரியார் அவர்களை 64 வது சொல்லடிநாயனார் என்று சொல்வது மிகையாகாது

தமிழர்களின் இந்து மதத்தை மீட்டெடுத்த பெருமை ஐயா தந்தைபெரியாரையே சாரும்

மதப்பற்று இழந்து மண்ணாகக்கிடந்த தமிழனுக்கு கடவுள்மறுப்பு என்ற நீர் தெளித்து தன்மதநம்பிக்கையில் வேரூன்ற செய்தவர் தந்தை பெரியார்

தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி

அவரை வைத்தும் தி,மு,க மற்றும் தி,க போன்ற இயக்கங்கள் பணம் சம்பாரித்துக்கொண்டிருக்கிறது,

தி,க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,

தி,க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,

SIDDHAR SIVA said...

தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லி தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்டவர்கள் தான் இங்கே அதிகம்

தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல

தந்தைபெரியார் அவர்களை 64 வது சொல்லடிநாயனார் என்று சொல்வது மிகையாகாது

தமிழர்களின் இந்து மதத்தை மீட்டெடுத்த பெருமை ஐயா தந்தைபெரியாரையே சாரும்

மதப்பற்று இழந்து மண்ணாகக்கிடந்த தமிழனுக்கு கடவுள்மறுப்பு என்ற நீர் தெளித்து தன்மதநம்பிக்கையில் வேரூன்ற செய்தவர் தந்தை பெரியார்

தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி

அவரை வைத்தும் தி,மு,க மற்றும் தி,க போன்ற இயக்கங்கள் பணம் சம்பாரித்துக்கொண்டிருக்கிறது,

தி,க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,

தி,க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,

SIDDHAR SIVA said...

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் ஏன் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குல் அழைத்துச்செல்ல போராடினார்
அவர் அப்படி செய்வதிற்கு பதிலாக மக்களே கோயில்களும் அதன் உள்ளே இருக்கும் கடவுள்களும் பொய்யானவை எனவே நீங்கள் அதை வணங்கத்
தேவையில்லை என்று சொல்லியிருக்கலாமே ஏன் அவர்களை வெறும் கல் இருக்கும் கோயிலுக்குள் அழைத்துச்சென்று அவர்களையும் மூடநம்பிக்கை வாதிகளாக ஆக்கினார் தந்தை பெரியார் என்பது விளங்கவில்லை

SIDDHAR SIVA said...

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் ஏன் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குல் அழைத்துச்செல்ல போராடினார்
அவர் அப்படி செய்வதிற்கு பதிலாக மக்களே கோயில்களும் அதன் உள்ளே இருக்கும் கடவுள்களும் பொய்யானவை எனவே நீங்கள் அதை வணங்கத்
தேவையில்லை என்று சொல்லியிருக்கலாமே ஏன் அவர்களை வெறும் கல் இருக்கும் கோயிலுக்குள் அழைத்துச்சென்று அவர்களையும் மூடநம்பிக்கை வாதிகளாக ஆக்கினார் தந்தை பெரியார் என்பது விளங்கவில்லை

நம்பி said...

siva said...//தந்தைபெரியார் ஒரு ஆன்மீகவாதி//

அப்படியென்றால் நீர் நாத்திகவாதி....நோ டவுட்

siva said...//தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல//

இது பார்ப்பனவாதி பிதற்றல்...நாத்திகவாதியாக இருந்துவிட்டு எப்படி பார்ப்பனவாதியாகவும் இருக்கமுடிகிறது.

siva said...//கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் ஏன் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குல் அழைத்துச்செல்ல போராடினார்
அவர் அப்படி செய்வதிற்கு பதிலாக மக்களே கோயில்களும் அதன் உள்ளே இருக்கும் கடவுள்களும் பொய்யானவை எனவே நீங்கள் அதை வணங்கத்
தேவையில்லை என்று சொல்லியிருக்கலாமே ஏன் அவர்களை வெறும் கல் இருக்கும் கோயிலுக்குள் அழைத்துச்சென்று அவர்களையும் மூடநம்பிக்கை வாதிகளாக ஆக்கினார் தந்தை பெரியார் என்பது விளங்கவில்லை//

அதைத்தான் (மூடநம்பிக்கை ஒழிப்பு) இப்போது நீங்கள் செய்து கொணிடிருக்கிறீர்களே...கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருப்பதை ஆதராப்பூர்வமாக காஞ்சிபுர சிவலிங்க கோயில் கருவறை காம சல்லாபங்களை செல் போனிலேயே படம் பிடித்து வைத்து அனைவருக்கும் காட்டவில்லை...காஞ்சி மட சங்கரராமன் கொலையை சங்கராச்சாரியார் செய்யவில்லை...இது எதற்காக இதையெல்லாம் (முடநம்பிக்கையை) நிருபிப்பதற்காகத்தான். இவங்க (மூடநம்பிக்கை ஒழிப்பு என்று ) ரொம்ப நாளா தொண்டை கிழிய சொன்னதை செய்முறை மூலம் ஆதாரத்துடன் நிருபித்தவர்கள் தாங்கள் தான்..அதற்குத் தான் மக்கள் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

siva said...//அவரை வைத்தும் தி,மு,க மற்றும் தி,க போன்ற இயக்கங்கள் பணம் சம்பாரித்துக்கொண்டிருக்கிறது,//

நீர் என்ன கட்ட வண்டி இழுத்தா பணம் சம்பாதிச்சீர்! மணியாட்டித் தானே!....ஏமாற்றித்தானே!...கடவுள் ...பூதம்...பிசாசு..தட்ல காசு போடு என்று...

எல்லா கோயில்ல தான் பார்க்கிறோமே!...அது அதுக்கு லஞ்சமாயிற்றே, மாலை, கடவுள் கிட்ட போகனும்னா லஞ்சம், சிலை மேல் இருக்கும் மாலைக்கு லஞ்சம்...எல்லாமே கற்சிலை கடவுள் முன்னாடி தானே!

siva said...//தி,க இதுவரை என்ன செய்திருக்கிறது, இது வரை எத்தனை சாதியை ஒழித்து இருக்கிறது,//

முதிலில் நீர் சாதியை விட்டு வெளியே வந்தீரா...? அப்படி வந்திருந்தால் இந்த பதில் வைத்திருக்க முடியாதே...siva said...//தமிழ் வேறு இந்து கடவுள் வேறு அல்ல//

siva said...//தி,க தன் சொத்தை பாதுகாப்பதை மட்டுமே தனது கடமையாக கொண்டுள்ளது,//

பார்ப்பனர்கள் மட்டுமே புறத்தியா சொத்தை, உழைப்பை அபகரிப்பதில் குறியாக ரொம்ப காலமாக கொண்டுள்ளனர். மற்றவர்கள் அனைவருமே தன் சொத்தை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.

siddhar palaniappa swamigal said...

நம்பி அவர்களே முதலில் நான் ஒன்றும் பார்பனன் இல்லை சுத்தத்தமிழன்

உங்கள் வார்த்தைகள் அனைத்தும் என் கேள்விக்கு பதிலாக இல்லை
வெறும் பார்பன வெறுப்பு மட்டுமே இதில் வெளிப்படுகிறது.

எப்படியோ தி.க தன் சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பு என்பதை ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி!

ஏதேதோ சம்மந்தமில்லாமல் பிதற்றுகிறீர் இதற்கு பெயர்தான் பகுத்தறிவோ

நண்பா ஒன்றை தெரிந்து கொள் பார்ப்பனர் வருகைக்கு முன்பே இந்து மதம் இருந்தது.
அதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதை எப்படி மீட்பது என்பதைப்பற்றி யோசியுங்கள்

தமிழனுக்கு சொந்தமானது மதமும் மொழியும் தான் அதை என்றுமோ இழந்து விடக்கூடாது,

இந்துத்தமிழன் மட்டுமே மனிதனை மதித்து வணங்கக்கூடியவன்
இந்துத்தமிழன் மட்டுமே இயற்கையை வணங்கக்கூடியவன்
இந்துத்தமிழன் மட்டுமே முன்னோர்களை வழிபடக்கூடியவன்

எந்த வித நிர்பந்தமும் திணிக்கப்படாத மதம் தமிழரின் இந்து மதம்

நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இந்துத்தமிழனின் சொத்துக்கள்

அதை மற்றவர் சிதைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

தந்தை பெரியார் அவர்களுக்கு சிலைவைத்து வணங்கும் உங்களுக்கு சிலை வழிபாட்டை எதிர்க்கும் தகுதிகிடையாது.

பெரியார் சிலையின் கைஉடைக்கப்பட்டால் ஏன் கொதித்து எழ வேண்டும் உடைந்தது பெரியாரின் கையா
இல்லையே வெறும் சிலை தானே இந்த சாதாரண அறிவே உங்களுக்கு இல்லை எங்கிருந்து வரும் பகுத்தறிவு

மேடைபோட்டு இந்துக்கடவுள்களை மட்டும் கீழ்தரமாக பேசுவதுதான் பகுத்தறிவு என்றால் இந்த பகுத்தறிவு மக்களுக்கு
தேவையில்லை

மற்றமதத்தவர் மனிதனை மதிப்பதில்லை

மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் சந்திரனை வழிபடுவார்கள் ஆனால் சூரியனை வெறுப்பார்கள்
இரண்டையும் அல்லாதானே படைத்தார். இது என்ன முரண்பாடு

siddhar palaniappa swamigal said...

தமிழையே கடவுளாகப் பார்த்தவன் இந்து
கடவுளையே தமிழாகப் பார்த்தவன் இந்து

முருகன் தமிழ்க்கடவுளே பார்ப்பனக்கடவுள் அல்ல

தமிழோடு விளையாட வந்த சிவன் தமிழ்கடவுளே பார்ப்பனக்கடவுள் அல்ல

தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடியவர்கள் பார்ப்பனர்கள் இல்லை

சுத்தத் தமிழர்களே

நம்பி said...

//நம்பி அவர்களே முதலில் நான் ஒன்றும் பார்பனன் இல்லை சுத்தத்தமிழன்//

சிவா அவர்களே...தமிழன் என்று கூறுகிறீர்கள்...அப்படியானால்...கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சனை செய்ய தடுப்பதை தமிழராக இருக்கும் நீங்கள் எப்படி ஆதரிக்கிறீர்கள்.

இரண்டு இந்து மதம் தமிழர் மதம் அதன் கடவுள் முருகர் என்கிறீர்கள்.....ஆனால் நானறிந்தவரை திராவிடர்களின் வழிபாட்டில் ஆண்கடவுள்களே இருந்தது கிடையாது என்பது தான் அனைத்து ஆய்வாளர்களின் கருத்தும்.சரி அப்படியே என்றாலும் முருகனுடைய அப்பா அம்மா...அதாவது சிவன், பார்வதி இவர்கள் யார்....? ஆரியர்களா...? எப்படி தமிழ்க்கடவுளுக்கு ஆரியர் எப்படி அப்பா அம்மாவாக இருக்கமுடியும்? கடவுளையும் கொச்சைப்படுத்துகிறீர்களே...! சரி அது போனால் போகுது மனிதனை தான் கொச்சைப்படுத்தக்கூடாது அது தான் முக்கியம்.

//உங்கள் வார்த்தைகள் அனைத்தும் என் கேள்விக்கு பதிலாக இல்லை
வெறும் பார்பன வெறுப்பு மட்டுமே இதில் வெளிப்படுகிறது.
எப்படியோ தி.க தன் சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பு என்பதை ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி!
ஏதேதோ சம்மந்தமில்லாமல் பிதற்றுகிறீர் இதற்கு பெயர்தான் பகுத்தறிவோ
நண்பா ஒன்றை தெரிந்து கொள் பார்ப்பனர் வருகைக்கு முன்பே இந்து மதம் இருந்தது.
அதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதை எப்படி மீட்பது என்பதைப்பற்றி யோசியுங்கள் .//

சரி இதற்கு தாங்களே பகுத்தறிவுடன் பதில் கூறுங்களேன்... நான் கேட்டுக்கொள்கிறேன்...பகுத்தறிவு எல்லோருக்கும் தான் வேண்டும்...நான் குத்தகைக்கு எடுக்கவில்லையே...

மனித இழிவை செய்பவர்கள் யாராக இருந்தாலும்,,,,,அது பார்ப்பனராக இருந்தாலும் ஏன் தங்களாக இருந்தாலும் அரவணைக்க முடியாதே...வெறுப்பு தான் வரும். உண்மையில் வேறொன்று வரவேண்டும்.....

சரி எப்போது இந்து மதம் வந்தது...இல்லை தோன்றியது...?

அவர்கள் எப்போது வந்தார்கள் பிறகு எப்போது கையில் எடுத்துக்கொண்டார்கள்......யார்? யாரெல்லாம் கோட்டை விட்டார்கள்...?


ஒவ்வொருவரும் தன் சொத்தை தான் பாதுகாப்பார்கள்...நான் கூட அப்படித்தான் இதில் என்ன தவறு இருக்கிறது...எல்லோருமே அப்படித்தான்....நம்மை சொத்தை இந்தா எடுத்துகிட்டு போ...என்றா விட்டுவிடுவோம்...அப்புறம் எதற்கு அரசு அலுவலகத்தில் பதிய வேண்டும்.

நீங்கள் சொத்தே சேர்ப்பதில்லையா....? அவர் அந்த கட்சித் தலைவர் பெரியார் அந்த பொருப்பை அவருக்கு கொடுத்துவிட்டு போயிருக்கிறார்...அதை கேட்க பொதுக்குழு இருக்கிறது. வேண்டுமானால் நீங்களும் பொதுக்குழு உறுப்பினராக ஆகுங்கள் போய் கேள்வி கேளுங்கள். நீங்கள் எதற்கு சம்பந்தமில்லாத அதுவும் எதிர்க்கும் நபரின் (பெரியார்) சொத்துக்கு ஆசைப்படுகிறீர்கள்.

//நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இந்துத்தமிழனின் சொத்துக்கள்
அதை மற்றவர் சிதைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.//

இந்து தெலுங்கனுக்கு இதில் பங்கு கிடையாது....இந்து கேரளக்காரருக்கு.....இந்து கன்னடக் காரருக்கு......இந்து இந்திக்கராருக்கு....? எவருக்கமே இல்லையா...? தங்களுக்கு மட்டும் யார் கொடுத்தார்கள்? காஞ்சி மடத்திலா அங்கே கிட்டேயே சேர்க்க மாட்டாங்களே....தண்ணித் தெளிப்பாங்களே தீட்டு என்று....தெரியுமா தெரியாதா....?

எது கலாச்சாரம் கோயிலில் காமலீலை பண்ணுவதா...? திராவிடர்களை கோயில்களில் நுழைய விடாமல் தடுப்பதா,,,? இது எந்த ஊர் கலாச்சாரம்? எவன் கற்றுக் கொடுத்த கலாச்சாரம். தெய்வம் வந்து இது மாதிரி பண்ண சொல்லி சொல்லுச்சா...அப்படி என்றால் எங்களை எதிக்க சொல்லி சொல்லுச்சு என்று எடுத்துக்கொள்ளுமே....தமிழர் என்று சொல்லுகிறீர் முதலில் இதற்கு குரலே கொடுக்கவில்லை...அப்புறம் தானே கலாச்சாரத்தை பற்றி பேசணும்,,,,உமக்கே கலாச்சாரத்தை காக்க, வணங்க உரிமையில்லை....அப்புறம் அல்லவா இதை காப்பது பற்றி யோசிக்கமுடியும்...உண்மையிலே தமிழர் தானா,,,? அனைத்து சாதியை சேர்ந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் எல்லாம் பெரியாருக்கு மாலை போட்டு போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள், பெரியாரின் மகத்துவம் இப்போதுதான் புரிகிறது என்று கூறுகிறார்கள். பிபிசி தமிழோசையில் ஒலிக்கோப்புகளாக இருக்கிறது சென்று பார்க்கலாம். நீர் இப்போதுதான் பெரியார் எதிர்ப்பை துவங்கியிருக்கிறீர்...இதிலேயே எல்லாம் தெளிவாகிறது.....

நம்பி said...

//தந்தை பெரியார் அவர்களுக்கு சிலைவைத்து வணங்கும் உங்களுக்கு சிலை வழிபாட்டை எதிர்க்கும் தகுதிகிடையாது.//

சிலையை பார்த்தீரே அதற்கு கீழே எழுதி வைத்திருக்கிற வாசகத்தை பார்த்தீரா....கடவுள் என்பது இல்லவே இல்லை..கடவுளை கற்பித்தவன் முட்டாள்..... என்று எழுதப்பட்டிருந்ததே அதை கவனிக்கத்தவறிவிட்டீரே...இதெல்லாம் பெரியார் இருக்கும் பொழுதே வைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு தான். பெரியார் சிலையை யார் வேண்டுமானாலும் வணங்க முடியும்...வீட்டில் மூதாதையர்களின் புகைப்படங்களை வணங்குவது போல...காந்தியை வணங்குவது போல...வாழ்ந்த தலைவர்களை வணங்கலாம் அவர்கள் வழி நடக்க உறுதி பூணுவதற்காக...பெரியார் சிலையை யார் வேண்டுமானாலும் தீண்டலாம்....இந்து ஆரியக் கடவுள்களை மாதிரி எல்லாம் கிடையாது....அதற்காக உடைக்க கூடாது அப்பறம் அவருடைய தொண்டர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். இல்லாத கடவுளுக்கு வக்கலாத்து வாங்கும் பொழுது...பெண் விடுதலைக்கும், சமூக விடுதலைக்கும் பாடுபட்ட ஒருவரை எப்படி சிதைக்க, இழிவு படுத்த விடுவார்கள். பெரியார் வேண்டாம் வுடுய்யா என்று தான் இருந்திருந்தால் சொல்வார்...தொண்டர்கள் விடமாட்டார்கள்.

இப்போ நீர் உரிமையே இல்லை என்றாலும் காணாத கடவுளுக்கு சப்பைக்கட்டு கட்டவில்லையா

திரைப்பட இயக்குநர் ராமநாராயணன் தன் மூதாதையர்களுக்கு கோயில் கட்டித்தான் வணங்கி வருகிறார். தான் பிறந்த கிராமத்தில், தேனாண்டால் பிலிம்ஸ் எனபது மூதாதையரின் பெயர் தான்...அவர்கள் அவர்களை கடவுளாக நம்பி வணங்குகின்றனர் தீட்டு எல்லாம் கிடையாது. அந்த பெயரை வைத்து நிறைய படங்களை தயாரித்து 100 படங்களை இயக்கிய இயக்குநராக இருக்கிறார்.

பார்ப்பன எதிர்ப்புக்கு வக்கலாத்து வாங்கிவிட்டு பெரியார் எதிர்ப்பை அரங்கேற்றினால் எப்படி...? இது என்ன பாச மழையோ எல்லாம் வெறுப்புணர்வு தான்...இது பார்ப்பனர்களுக்கு மட்டுமே வரும்.


//மேடைபோட்டு இந்துக்கடவுள்களை மட்டும் கீழ்தரமாக பேசுவதுதான் பகுத்தறிவு என்றால் இந்த பகுத்தறிவு மக்களுக்கு
தேவையில்லை //

இதற்கு கடவுள் தான் கவலைப்பட வேண்டும்....தாங்கள் கவலைப்பட்டால் எப்படி?.....தாங்கள் கடவுளின் மொத்த கான்டிராக்ட் ஏஜென்டா...? கடவுள் அதற்கான அத்தாட்சி எதாவது கொடுத்துள்ளாரா......? மனிதனையே உரிமையுடன் இகழும்பொழுது, இழிவுப்படுத்தும் பொழுது...நீர் நம்பும் கடவுள் இவர்களை இதற்காகத்தான் அனுப்பினார்கள் என்று எடுத்துக்கொள்ளுமே.....கடவுள் தானே அனைத்தையுமே படைத்தார்....கடவுளையும் நம்பவில்லை அவர் சொன்னதின்படி நடப்பதே இல்லை, அவரைப் பார்த்து பயப்படுவதுமில்லை...

சிவாஜி டயலாக் தான் விடணும் போலிருக்கு ''எல்லாம் நடிப்பா...லதா அத்தனையும் நடிப்பா.''.... ஆனால் ஊரில் இருப்பவர்களை குறை சொல்லிக்கொண்டிருப்பது தான் வேலை.....எல்லாம் முரண்பாடான பிதற்றல்கள்.//பிற மதத்தை சேர்ந்தவர்கள் சந்திரனை வழிபடுவார்கள் ஆனால் சூரியனை வெறுப்பார்கள்
இரண்டையும் அல்லாதானே படைத்தார். இது என்ன முரண்பாடு//உமக்கு இருப்பது மதக்காழ்ப்புணர்ச்சி...உன் மதம் பெரியதா,,,என் மதம் பெரியதா...என்று வரும் சிறுபிள்ளைகள் போட்டுக்கொள்ளும் சண்டை. எல்லாவற்றிற்கும் பதிவுகள் பின்னுட்டங்கள் அவ்வப்பொழுது வைத்துக்கொண்டிருக்கிறார்கள்....நானும் பல இடங்களில் வைத்துள்ளேன்...அதே போன்று அதன் சிறப்புகளையும் தெரிவித்து கொண்டு தான் இருக்கிறோம். உம்முடையை இந்து மதத்தில் மனிதநேயமிருந்தால், ஒருவரையும் இழிவுபடுத்தவில்லை,,,ஆண் பெண் என் இருவரையும் சமமாக நடத்தப்படுகிறது, சாதி வேறுபாடுகள் இல்லை, தீண்டாமை இல்லை என்று ஆதாரத்துடன் அதை சுட்டிக்காட்டுமே...அதை விட்டு விட்டு போட்டி போட்டு கொண்டிருக்கிறீரே.....! இது எந்த வாதியின் செயல்...? எதிலும் சேர்த்துக்க முடியாது.

Unknown said...

ெெலேலோ ஐல
ஸா ஏலேலோ

Unknown said...

ஓம் நமசிவாய