சு.சாமியே, ஓடாதே, நில்! -3
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)
எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.
அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளினார். அதில் ஒரு பகுதி இதோ:
ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என்பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)
Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.
பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?
பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)
இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.
திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.
அது மட்டுமா?
ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக்காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத்தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனையும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.
1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)
2. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்விகளுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?
3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர்களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணுவப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெனவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறியதால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?
சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.
இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.
இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.
இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந்தார் தமிழர் தலைவர்.
அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!
--------------மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” 12-2-2011
2 comments:
சரி,இப்ப என்ன சொல்ல வாரீக,
ஸ்பெக்ட்ரம் அப்படிங்கர விஷயத்துல ஒரு பைசா கூட கவர்மென்ட்டுக்கு இழப்பு ஏற்படல அப்படின்னு சத்திய பிரமாணம் பன்னுரிங்களா?
ஐயா தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான்,அதில் பார்பணன் என்ற ஜாதி வித்யாசமெல்லாம் கிடையாது.உண்மைகள் வெளிவரவேண்டும் அவ்வளவே.
//ஐயா தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான்,அதில் பார்பணன் என்ற ஜாதி வித்யாசமெல்லாம் கிடையாது.உண்மைகள் வெளிவரவேண்டும் அவ்வளவே.//
வருவாய் இழப்பு எனபது கோயில் எனபதற்கு செலவிடப்படும் தொகை கூட வருவாய் இழப்பு தான்...திருப்பதியில் நிறைய வருவாய் உண்டு...ஆனால் இருக்கின்ற கோயில்களுக்கெல்லாம் வருமானம் வந்துவிடுவதில்லை...ஆனால் அதற்காக அறநிலையத்துறை அர்ச்சகர்களுக்கு சம்பளம்...பராமரிப்பு...இன்னும் இதர கும்பாபிசேக விஷயங்கள் எல்லாம் அரசு நிதியிலிருந்து தான் கொடுக்கப்படுகிறது...இது அப்பட்டமான வருவாய் இழப்பு தான்...ஆகையால் ஒரு பைசா கூட வருவாய் இழப்பு இல்லையா...? எனற கேள்வி தான விந்தையாக உள்ளது. இப்போது..சொல்லுங்கள் மேலே குறிப்பிடப்பட்ட கோயில், 1 ரூபாய் அரிசிக்கான, எண்ணெய், துவரைப்பருப்பு.....இதர அரசு திட்டங்கள் அனைத்திற்குமே... மானியம், கல்வி சாலைகள்...இதையெல்லாம் ஒப்பிட்டு விட்டு.....வருவாய் இழப்பையும் கணக்கிட்டுவிட்டு தவறு செய்தவர்கள் யார் யார்? என்று பட்டியலிடலாம்.
யார் யாரெல்லாம் இல்லை...எனபதையும் பட்டியலிடலாம்...நிச்சயம் ஒருவரும் (வருவாய் இழப்பு செய்யதவர்கள்) அதில் இருக்கமாட்டார்கள்...முன்பிருந்த ஆட்சியாளர்கள்...அது காமராசரா
யிருந்தாலும் சரி...பார்ப்பன ராஜாஜியாக இருந்தாலும் சரி....முதலில் வருவாய் இழப்பு என்பதற்கும் ஊழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது தான் விந்தை...? அதற்கு பிறகு தான் தவறு யார் செய்தாலும் தவறுதான் என்ற பதில் வரவேண்டும்.
பத்திரிகைகள் ஆங்கிலம், தமிழ் என்று வருவாய் இழப்பு வேறு, ஊழல் வேறு (ஊழல் என்பது ஒரு தனிநபர் ஆதாயம் அடைவது) என்று சுட்டிகாட்டியபிறகும் இந்த கேள்விதான் விந்தையாக உள்ளது. அதுவும் பார்ப்பனீய உள்நோக்கம் கொண்டதாகத்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அதை இந்த பார்ப்பனீய பத்திரிகைகள் மட்டுமே வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றன.
Post a Comment